Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தல் 2015: தென்னிலங்கை நிலைமை

Featured Replies

 
ஜனாதிபதித் தேர்தல் 2015: தென்னிலங்கை நிலைமை

37 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இம்முறைத் தேர்தலில் ராஜபக்ஷவுக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்துவருகிறார் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன.

தேர்தல் நெருங்க நெருங்க போட்டி கடுமையாவதுடன், வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்தபடி உள்ளன.

சுமார் ஒன்றரைக் கோடி வாக்காளர்களைக் கொண்ட இலங்கையில், சிங்கள கிராமப் புறங்கள் நிறைந்த நாட்டின் தென்பகுதி ராஜபக்ஷவுக்கு சாதகமான பகுதியாகவே கருதப்பட்டுவருகிறது.

குறிப்பாக, மகிந்த ராஜபக்ஷவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் அவர் மேற்கொண்டிருக்கும் உட்கட்டமைப்பு வசதிகள் காரணமாக, அப்பகுதியில் வசிப்பவர்கள் அவருக்கே வாக்களிப்பார்கள் என்று மகிந்த தரப்பு நம்புகிறது.

தற்போதைய அரசாங்கத்தின் பிரதி அமைச்சரான பிரபா கணேசன், கிராமப்புற வாக்குகள் அனைத்தும் அரசாங்கத்துக்கே கிடைக்கும் என்கிறார்.

ஆனால், மகிந்தவுக்கு எதிரான அதிருப்தி வடக்கு கிழக்கில் இருந்து உருவானதாக கருதுவது தவறு, உண்மையில் மாற்றத்திற்கான வேட்கை தெற்குப் பகுதியில் இருந்துதான் துவங்கியது என்கிறார் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான டாக்டர் குமரகுருபரன்.

150102170300_maithripala_attack_pelmadulஎதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரசாரக் கூட்டம் மீது வெள்ளியன்று தாக்குதல் நடத்தப்பட்டது

கொழும்பு நகரில் வசிக்கும் தமிழர்களைப் பொறுத்தவரை, தற்போதைய ஆட்சிக்கு எதிரான மன நிலையையே கொண்டிருக்கிறார்கள்.

கொழும்பு நகரில் ஆங்காங்கே தென்படும் பேனர்களைத் தவிர, தேர்தல் தொடர்பான பரபரப்பை அதிகம் காண முடியவில்லை. ஆனால், அங்கிருந்து தெற்கு நோக்கிச் செல்லச் செல்ல தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பல சிறிய பிரசாரக் கூடாரங்களைக் காண முடிந்தது.

வாதுவ போன்ற சிஙகள மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததை பெரிய விடயமாக மக்கள் கருதுகிறார்கள்.

வேறு சிலரைப் பொறுத்தவரை, மஹிந்த நல்ல மனிதராக இருந்தாலும், அவர் உடன் இருப்பவர்கள் சரியானவர்கள் இல்லை என்று கருதுகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்னர், வன்முறைக்கு உள்ளான அளுத்கம, பேருவளை போன்ற பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம் மக்களை பொறுத்தவரை தற்போதைய ஜனாதிபதி மீது கடுமையான அதிருப்தி வெளிப்படுகிறது.

கடந்த சில நாட்களில் இலங்கையின் முக்கிய முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் சில நாட்களுக்கு முன்புதான் எதிர்க்கூட்டணி வேட்பாளருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

ஆனால், இந்தப் பகுதி மக்களைப் பொறுத்தவரை ஜூன் மாதம் நடந்த வன்முறைச் சம்பவம்தான் பெரும் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாக்கெட் மீட்டிங் என்று கூறப்படும் சிறுசிறு கூட்டங்களை எதிர்கட்சிக் கூட்டணி நடத்திவருகிறது.

இந்தக் கூட்டங்களில் பௌத்த பிக்குகள் சிறிசேனவுக்கு ஆதரவாக பேசுகிறார்கள்.

ஜனாதிபதி மகிந்தவின் கோட்டையாகக் கருதப்படுவது அவரது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டை.

கொழும்பு நகரிலிருந்து அம்பாந்தோட்டைக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அதிவேக நெடுஞ்சாலை, வாகன ஓட்டிகளுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த எக்ஸ்பிரஸ் சாலையை அடைவதற்கு முன்பாக வரும் தங்கல்ல, ஹுன்கமா போன்ற பகுதிகளில் மஹிந்தவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தேர்தல் அலுவலங்கள் நிறைய கண்ணில் படுகின்றன.

இந்தக் கூட்டணியிலிருந்து சமீப காலமாக பல தலைவர்கள் வெளியேறிவரும் நிலையில், தங்கல்ல போன்ற இடங்களில் முன்பு வைக்கப்பட்ட பேனர்களில் இருக்கும் ஜனாதிபதியின் படம் திரைகளின் மூலம் மூடப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

தெற்கு மாகாணத்தில் பெரும்பகுதி வாக்காளர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தங்களுக்குக் கை கொடுக்கும் என நம்புகிறது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி.

எனினும், தங்களின் கடுமையான தேர்தல் பிரசாரமும், ஆளும் கூட்டணியிலிருந்து தலைவர்கள் தொடர்ந்து வெளியேறிவருவதும் தங்களுக்கு சாதகமாக அமையும் என நம்புகிறார்கள் சிறிசேன முகாமைச் சேர்ந்தவர்கள்.

இந்த இருவித நம்பிக்கைகளுடன் இம்முறை ஜனாதிபதி தேர்தல் களைகட்டியிருக்கிறது.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/01/150103_election_south

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.