Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொழூஉப் புகுத்தல் - 01

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெளிந்தேன் தெரியிழாய்! யான்

பல் கால் யாமம் கான் யாற்று 

அவிர் மணல் தண் பொழில்

அல்கல் அகல் அறை

ஆயமொடு ஆடி

முல்லை குருந்தோடு முச்சி வேய்ந்து

எல்லை இரவு உற்றது

இன்னம் கழிப்பி 

அரவுற்று உருமின்

அதிரும் குரல் போல்

பொரு முறண் நல் ஏறு நாகு

உடன் நின்றன

பல் ஆன் இன நிரை

நாம் உடன் செலற்கே! ----- (முல்லை கலி - 113)

 

பொருள்: மாடு மேய்க்கும் சிறுமிகள் இரவு வந்தது அறியாமல் காட்டு ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களையும் அவர்களது ஆடு மாடுகளையும் அழைத்துச் செல்லப் பயிற்சி பெற்ற இளம் போர்க் காளைகள் பலமுறை தாமாகக் காத்திருந்தன.

 

 

https://app.box.com/s/nzsfr1yks2pqa42m4feoap5k9nevi6oj

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாங்கு அரும் பாட்டம்

கால் கன்றோடு செல்வேம்

எம் தாம்பின் ஒரு தலை பற்றினை

ஈங்கு எம்மை முன்னை

நின்றாங்கே விலக்கிய

எல்லா!நீ

என்னையே முற்றா அ விடு

விடேன் தொடிய செல்வார்த்

துமித்து எதிர் மண்டும்

கடுவய நாகு போல் நோக்கித் 

தொழு வாயில் நீங்கிச் 

சினவுவாய் மற்று

 

- முல்லைக்கலி - 116: 1-7.

 

பொருள்:-

  • எலேய்! கயிற்றைப் பிடித்து இழுக்கிறாய், முன்னே நின்று தடுக்கிறாய், என்னைப் போக விடு !
  • விடாமல் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்தால்
  • கொல்லேறு எதிரில் வந்து உன்னைத் துவைத்துவிடும்.
  • நீ வருத்தப்பட்டுச் செல்ல நேரிடும் என்று மிரட்டுகிறாள் ஒரு பழந்தமிழ்ச் சிறுமி.

 

https://app.box.com/s/vhvbk66cu83lntz5fzp05devtrecww4n

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலி திரை ஊர்ந்து

தன் மண் கடல் வெளவலின் 

மெலிவு இன்றி மேல் சென்று

மேவார் நாடு இடம் படப்

புலியொடு வில் நீக்கிப் 

பகழ் பொறித்த கிளர் கெண்டை

வலியினான் வணக்கிய

வாடாச் சீர்த் தென்னவன்

தொல் இசை நட்ட குடியோடு தோன்றிய

நல்லினத்து ஆயர்

ஒருங்கு தொக்கு எல்லாரும்....

புரிய புரிபு புகுத்தனர்

 

(முல்லைக்கலி-104:1-7)

 

பொருள்:-

 

உலக உருண்டையின் வாழ்நாளைப் புதுப்பிக்கவே தனது மண் கடலுள் போவதைத் தேர்வு செய்த தென் பாண்டிய மன்னன், உயிர்களுக்குப் பாதிப்பு இல்லாமல் வட புலத்தில் குடியமர்த்தினான். மீண்டும் தென்பாண்டியர் தனியரசை நாட்டவே சேர சோழர்களை வலிமையினால் ஒடுக்கினான். பாண்டியர் கொடி வழித் தொல்குடி மரரபுகளைப் பேணிக்காத்திடவே ஆயர்கள் ஒன்று கூடி தொழூ உப் புகுத்தனர். 'தொழூ உப் புகுத்தல்' என்பது தமிழ்ப்புத்தாண்டின் அடையாளமும் ஆகும்.

 

https://app.box.com/s/1zjv3vpfknbrtx91da7fud99sgxusdrh

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீறு எடுப்பவை

நிலம் சாடுபவை

மாறு ஏற்றுச் சிலைப்பவை

மண்டிப் பாய்பவையாய்த்

துளங்கு இமில் நல் ஏற்று

இனம் பல

களம் புகும் மள்ளர்

வனப்பு ஒத்தன

(முல்லைகலி- 106:11-14)

 

பொருள்:-

 

தமிழர் மரபில் வீரர்களைக் காளையர் என்று அழைப்பதும், காளைகளை வீரர்கள் என்று அழைப்பதும் வழக்கம். புழுதி கிளப்பி போருக்கு அழைக்கும் காளைகளும், கீழ்ப்பாய்ச்சல் குணம் கொண்டு பதுங்குவோரைக் குறி வைக்கும் காளைகளும், பெண்களின் குலவை ஒலிக்கும், வீரர்களின் செய்கைக்கும் எதிர்வினையாகக் குரல் கொடுக்கும் காளைகளும், கூட்டத்தின் மீது திடும் எனப் பாயும் காளைகளும் ஆகத் திமில் பொலிந்த காளைகள் பலவும் வகை வகையான போர் வீரர்களைப் போல அழகு பொருந்தி காணப்பட்டன.

 

தமிழர்களுக்கு என ஒர் அழகியல் கோட்பாடு இருக்கிறது. அதில் ஆண்மை, வீரம், பெருமிதம் போன்ற பண்புகளின் குறியீடாகக் காளை வடிவம் போற்றப்படுகிறது. நான்கு அகவை உடைய காளைக்கு உடற்கூறு அளவை இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. இன்றும் காளைகள் அதன்படியே இருக்கின்றன. தமிழர்கள் தான் தேய்ந்து போய்விட்டனர்.

 

https://app.box.com/s/8hhmjdi974jplu29qll1orhybuaheube

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெரிந்துகொள்ள வேண்டியது:

 

1. நாம் அறிந்தபடி தென்குமரி, லெமூரியா, குமரிக்கண்டம் ..... இன்னும் பல பெயர்கள் கொண்ட இன்றைய கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்த நிலப் பகுதியை பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்தனர்.

2. குமரிக் கண்டம் கடலுக்குள் மூழ்கப் போவதை முன் கூட்டியே அறிந்தனர். அன்று இருந்த இந்த தொழில் நுட்பம் இன்றைய தமிழனிடத்தில் இல்லை. தொழில் நுட்பத்தை மீட்டெடுக்க முடியும் தமிழனுக்கென்று தனி அரசு அமையும்போது.

3. ஒரு உயிர் சேதம் இல்லாமல் அந்தக் காலத்திலேயே பாண்டிய மன்னன் நாட்டின் அத்தனை பேரையும் வடக்கே நகர்த்தியுள்ளான். 

4. இந்த நகர்வுதான் சிந்து சமவெளி நாகரீகமாக, மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகமாக பரிணமித்துள்ளது. 

5. தெற்கெ இருந்துதான் தமிழன் வடக்கே நகர்ந்துள்ளான். 

6. இன்றைய ஆரிய ஆய்வாளர்களின் கூற்றுப்படி வடக்கே இருந்து தமிழன் தெற்கே பெயரவில்லை. (எ.டு - ஐராவதம் மகாதேவன்)

7. மேற்படி ஆய்வுகள் இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டும். வாய்மை வெல்லும்.

8. தொழூ உப் புகுத்தல் என்று இலக்கியத்தில் காணப்படுவது நாம் 2014 வரை தமிழ் நாட்டில் (தமிழ் கூறு நல்லுலகில் - மற்ற இடங்களிலும்) கொண்டாடி வந்த  ஜல்லிக்கட்டு, சல்லிக்கட்டு, ஏறுதழுவல் என பல்வேறு பெயர்களில் தமிழர் திருநாள் பொங்கலை ஒட்டி கொண்டாடி வந்த நிகழ்வு. இந்திய அரசும், உலக அரசுகளும் இணைந்து (PETA எனும் இலுமினாட்டிகள்) இதனை 2015-ஆம் ஆண்டு நிறுத்தி வைத்துள்ளன. அதனை நீக்கக் கோரி இன்றைய தமிழக முதல்வர் தில்லியில் உள்ள திரு. மோடி தலைமையிலான இந்திய அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால் அதனை இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ஆக இந்தியாவில் உள்ள தமிழர்கள் அடிமையாகத்தான் உள்ளனர் என இந்திய அரசு, தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு தெளிவாக கூறியுள்ளது. ஆக இந்திய அரசு இலுமினாட்டிகளுக்கு அடிமையாக உள்ளது என்பதனையும் வலிந்து கூறியுள்ளனர்.

9. முன்னாள் தமிழக முதல்வர் திரு. கருணாநிதியும் கடிதம்தான் எழுதினார், நேற்றைய முதல்வர் திருமதி ஜெயலலிதாவும் கடிதம் தான் எழுதினார், இன்றைய முதல்வர் திரு. பன்னீர் செல்வமும் கடிதம்தான் எழுதினார். பலன்......?????? சிந்தியுங்கள்.

10. ஒடுக்கப்படும் தமிழினத்துக்கு விடிவு இல்லையா????? ஓ ஐ.நா வே என்ன செய்கிறாய் ?. ஐ.நா.வே இதில் தலையிட்டு தமிழர்களுக்கு நீதி வழங்கு. உலகமே!!! தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.

 

அன்றைய பாண்டியன் தன் நாட்டை அழிய விடாமல் காத்திருக்க முடியும். ஆனால் உலகின் பெரும்பகுதி அழிவுக்குள்ளாயிருக்கும் எனவேதான் தன் நாட்டை கடலுக்கு இரையாகக் கொடுத்து உலகத்தைக் காத்திருக்கிறான் பாண்டிய மன்னன்.  அதனைத்தான் தமிழர்கள் இன்றும் - உலகத்தைக் காப்பது தமிழர்களால் மட்டுமே முடியும். புரிந்து கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

https://app.box.com/s/rx6a5ok57tyi97qbuggm12zn8lzlebbg

 

முள் எயிற்று ஏஎர் இவளை பெறும்

இது ஓர் வெள் ஏற்று எருத்து அடங்குவான்

ஓள் இழை வாருறு கூந்தல் துயில் பெறும்

வை மருப்பின் காரி கதன் அஞ்சான் கொள்பவன்

ஈர் அரி வெரூ உப் பிணை மான் நோக்கின் நல்லாள்

பெறூஉம் இக்குரூஉக்கண் கொலை ஏறு கொள்வான்

வரிக்குழை வேய் உறழ் மென் தோள் துயில் பெறும்

வெம் துப்பின் சேஎய் சினன் அஞ்சான் சார்பவன்

என்று ஆங்கு அறைவனார் நல்லாரை

ஆயர் முறையினால் 

நாள் மீன்வாய் சூழ்ந்த மதி போல

மிடை மிசைப் பேணி

நிறுத்தார் அணி

 

(முல்லைக் கலி 104: 18-28)

 

பொருள்: 

 

இந்தக் காளையை அடக்கினால் இந்தப் பெண் கிடைப்பாள், அந்தக் காளையை அடக்கினால் அந்தப் பெண் கிடைப்பாள் என்று சுட்டிக் காட்டு வெளிப்படையாக அறிவிப்பு செய்து பாதுகாப்பான மேடைகள் மீது இளம் பெண்களை அணி அணியாக நிறுத்தினர்.

 

ஆயர் முறை என்பது புல் இனத்து ஆயர், புகர் இனத்து ஆயர், கோவினத்து ஆயர், குடம் சுட்டு ஆயர், பொதுவர் என்ற வகைமையாக இருக்கலாம். முழு நிலவைப் போலப் பளிச்செனத் தெரியுமாறு வெற்றிப் பரிசாக வாகை சூடவிருக்கும் மகளிரை உயர்ந்த மேடைகளில் நிறுத்தி ஊர் அறிய மணமகனை முடிவுச் செய்தனர்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

https://app.box.com/s/pvlgz89zdidtzsbghzoa9ojjn6ugnfze

 

தொழீ இ இ! காற்றுப் போல் வந்த 

கதழ் விடைக் காரியை

ஊற்றுக் களத்தே அடங்கக் கொண்டு

அட்டு அதன் மேல் தோன்றி

நின்ற பொதுவன் தகை கண்டை

ஏற்று எருமை நெஞ்சம்

வடிம்பின் இடந்து இட்டுச்

சீற்றமொடு

ஆர் உயிர் கொண்ட ஞான்று

இன்னன் கொல் கூற்று

என உட்கிற்று என் நெஞ்சு

 

(முல்லைக் கலி 103: 40-45)

 

பொருள்:-

 

தோழி! காற்றைப் போல விரைவாக வந்த அந்த இளம் காளையை வாடிவாசலில் அடக்கி நிறுத்திய அந்தப் புதியவனைப் பார்! எருமை மீதேறி வந்து உயிர்களைக் கொல்லும் கூற்றுவனைப் போன்று தோன்றி நெஞ்சம் பதற வைக்கிறான் என்று வியக்கிறாள் ஒரு தமிழ்ப்பெண். அதாவது, அவனைத் தேர்வு செய்யலாமா? என்று வினவுவதாகக் கருதலாம். அவள் 'தேவலாம்' என்றால் தேர்வு செய்யலாம் என்று எடுத்துக் கொள்வாள் போலும்!.

 

அறிந்து கொள்ள வேண்டியது:

1. தொழூ உப் புகுத்தல் பெண் பார்க்கும் படலத்துடனும் தொடர்புடையது.

2. தொழூ உப் புகுத்தல் தமிழர்களின் வாழ்வியலோடு தொடர்புடையது

3. தொழூ உப் புகுத்தல் வெறும் விளையாட்டல்ல

4. தொழூ உப் புகுத்தல் மிருகவதை செய்வதல்ல

5. தொழூ உப் புகுத்தல் காளைகளை மனிதர்கள் புரிந்து கொள்ளச் செய்தது

6. தொழூ உப் புகுத்தல் என்பது காளைகளையும் மனிதர்களையும் இணைத்தது

7. தொழூ உப் புகுத்தல் என்பது, குளிர் அறைகளில் உட்கார்ந்து கொண்டு எதனையும் புரிந்து கொள்ளாமல் பேசும் இன்றைய மக்களுக்குப் புரியாததில் ஆச்சரியமில்லை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

https://app.box.com/s/34rl99s7w1r69gvap0xr3v3m2yovviex

 

 

இரிபு இரிபு அதிர்பு அதிர்பு

இகந்து உடன் பலர் நீங்க

அரிபு அரிபு இறுபு இறுபு

குடர் சோரக் குத்தித் தன்

கோடு அழியக் கொண்டானை

ஆட்டித் திரிபு உழக்கும்

வாடில் வெகுளி எழில் ஏறு கண்டை

இஃது ஒன்று

வெருவரு தூமம் எடுப்ப

வெகுண்டு திரிதரும் 

கொல்களிறு போன்ம்

 

(முல்லைக்கலி  104: 39-44)

 

பொருள்:-

வீரனை, அவனது வயிற்றில் குத்திக்குடல் சரியத் தனது கொம்புகளில் சுமந்து கொண்டு இங்கும் அங்கும் திரியும் காளையைப் பார்க்கும்போது, வானில் புகை அழல் தோன்றும் கால் ஆண் யானை பாதை தடுமாறி இங்கும் அங்குமாக அலைவது போல இருக்கிறது என்று குறிப்பிடுகிறாள் ஒரு தமிழ்ப்பெண். ஆண் யானைகள் உலகம் சுழல்வதை அறியும். உலக உருண்டையின் ஆட்டை நிமிர்வதையும் சரிவதையுமம் அறியும். பரிப்பு மண்டலம் இயங்குவதையும் நீரோட்ட பாதைகளையும் அறியும். அவ்வகையில் ஆண்டுச்சரிவு ஏற்படும்போது ஏற்படும் 'தூமம்' பற்றியும் அறியும் என்று பழந்தமிழர் அறிந்திருந்தனர்.

 

அறிந்துக்கொள்ள வேண்டியது:-

 

1. யானைகள் உலக பருவ மாற்றங்களைத் துல்லியமாக கணிக்கும் சக்தி நிறைந்தவை. அதனால்தான் தமிழ் அரசர்கள் அதனைப் பயன்படுத்தினர்.

2. யானைகள் தடம் மாறி ஊருக்குள் வருவது - பருவ மாற்ற கேடுக்கு அறிகுறி

3. தொழூஉப் புகுத்தல் என்பது தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்தது

4. காளைகள் தமிழர்களின் வாழ்க்கை

5. இன்று அரசுகள் கோர்ட் தீர்ப்புகளினால் தமிழர்களையும் காளைகளையும் பிரித்து, காளைகளை இறைச்சிக்காக கொடுக்கும் ஈனமான வேலைகளைச் செய்கிறது.

6. காளைகள் மறைந்தபின் காளைகளை உருவாக்க 'அறிவியல் வழி' திட்டங்களுக்காக பலகோடி ஒதுக்கி பதுக்கும் வேலைக்குத் தான் இது அச்சாரமிடுகிறது.

7. தமிழர்களே விழிப்பாயிருங்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

https://app.box.com/s/g4259o9zhzltraqgzas13kvdzn5rdkj6

 

 

இடைப் பாய்ந்து எருத்தத்துக் கொண்டானொடு எய்தி

மிடைப் பாயும் வெள்ளேறு கண்டைகா வான் பொரு வானத்து

அரவின் வாய் கோள் பட்டுப் போதரும் பால்மதியும் போன்ம்

 

(முல்லைக்கலி 105: 46-49

 

பொருள்:

 

காளையோடு உடன் பாய்ந்து கழுத்தைத் தொற்றிக் கொண்ட வீரனை உதறாமல் சுமந்து கொண்டே மேடை மீது பாயும் வெள்ளைக் காளையைப் பார். அரவு தீண்டிய முழு நிலா வானில் நீந்துவதைப் போல இருக்கிறது என்று ஒப்பிடுகிறாள் ஒரு பெண். பழந்தமிழ் இலக்கியங்களில் முழு நிலவை அரவு தீண்டுதல் என்பது பிழையாகப் பார்க்கப்படுகிறது. அரவு தீண்டிய நிலவு 'கோள்பட்டு மூளியாகும் என்றும், அது எவ்வாறு எல்லாம் தோன்றும் என்ற செய்திகள் உள்ளன. அது இயற்கை நிகழ்வு என்றோ வரவேற்கத்தக்கது என்றோ செய்திகள் இல்லை. கோள் நிலை தடுமாறுவதால் ஏற்படும் பிழையென்றும், ஆண்டு நாட்களின் பிறழ்வைச் சுட்டிக்காட்டும் அறிகுறி என்றும், அது மாந்த முயற்சியால் நீக்கப்பட்டது என்றும் வியந்து பேசும் இலக்கியங்கள், அதற்கான 'துப்பு' தமிழர் அறிவு மரபுக்கு உண்டு என்பதில் பெருமிதம் கொண்டுள்ளன.

 

நாம் அறிய வேண்டியது:

 

1. முழு நிலாவன்று (பௌர்ணமி) கிரகணம் நிகழ்வது நாட்டுக்கு நல்லதல்ல

2. அப்படியானால் அதனை நாம் சரி செய்ய முடியும்

3. அதற்கான வழிகள் - தமிழர்களுக்குத் தெரியும் (தெரியாதவர்கள் பழந்தமிழ் இலக்கியங்களைத் தோண்டிப் பார்க்கவும்.

4. இன்று வரை நம் கையில் கிடைக்காத பழந்தமிழ் இலக்கியங்கள் சங்கர மடங்கள், திருப்பதி போன்ற கோயில்கள், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்சு போன்ற அந்நிய நாடுகளில் சுவடிகளாக, பதிப்பிக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டும், படாமலும் நிறைய இருக்கின்றன. அவைகள் புதுப்பிக்கப்பட்டு ஆய்வுகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

5. தமிழ் இலக்கியங்கள் சும்மா தமிழ் நயத்திற்கானவை மட்டுமல்ல. அவைகள் நுட்ப நூல்கள். அவைகளைப் புரிந்து கொள்ள நுட்ப அறிவு நமக்கு வேண்டும். அது தமிழர்களிடம் உண்டு.

6. தொழுப் புகுத்தல் என்பது சும்மா - ஏரு/ ஏறு தழுவல், சல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு......மட்டுமல்ல. அது ஒரு சிறந்த நுட்பங்கள் கொண்ட மா பெரிய நுட்பவியல் நிகழ்வு

7. அதனைத் தமிழர்கள் புரிந்து கொண்டார்களோ, இல்லையோ தமிழர் அல்லாதோர் புரிந்து கொண்டதால்தான் நாட்டு மாடுகளையும், தமிழரையும் பிரிக்கும் சதி, அழிக்கும் சதி செவ்வனே நடக்கிறது. தமிழர்களே சதியைப் புரிந்து கொண்டு இப்போதாவது இதிலிருந்து மீளும் வழி காண்பாயா??????

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.