Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கல் - புத்தாண்டு - தமிழ் தேசியம் - புரிந்து கொள்வோம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் - 2015

நாள் : 05.02.2015 (ஐந்தாம் பதிவு)

 

            ஆங்கில ஆண்டு 2015க்கு இணையான தமிழ் ஆண்டின் இரண்டாவது முழு நிலவு 03.02.2015 அன்று தோன்றியது. தமிழ் ஆண்டுக் கணக்குப்படி சரியாக மூவைந்தான் முறை முற்ற 42வது நாளில் அமைந்தது அந்த முழு நிலவு.

 

24.12.2014    ஆண்டின்   1-வது நாள்

04.01.2015    முழு நிலவு 12-வது நாள்

03.02.2015    முழு நிலவு 42-வது நாள்

 

            இதுவரை தோன்றியுள்ள இந்த இரண்டு முழு நிலவுகளும் முறையே சரியாக 30 நாட்கள் இடைவெளியில் தோன்றின. இவற்றைப் போலவே இந்த ஆண்டின் மிச்சம் உள்ள 10 முழு நிலவுகளும் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் வரையிலும் 30 நாட்களின் இடைவெளியைச் சரிவரக் காப்பாற்றுமேயானால் மொத்த ஆண்டு நாட்களின் எண்ணிக்கை 360 என்பதில் ஐயமில்லை.

            ஆனால் தற்போது ஆண்டுச் சரிவு நிகழ்வதால் அதற்கு வாய்ப்பு இல்லை. உயிர்களின் முயற்சியால் திருத்தம் மேற்கொள்ளாமல் இயற்கை தானாகவே தன்னைத் திருத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்க இயலாது.

            மாந்தர்கள் மட்டுமின்றி பிற உயிரினங்களும் இதனில் விழிப்போடு இருப்பதாகக் கருதினால் திருந்தியமையும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை.

            மாந்தர்கள் மாந்த அறிவை முழுமையாகத் துலக்குவதில் ஈடுபட்டுத் தெளிவு பெறுவதே முதல் தேவை. இந்த ஆண்டின் மூன்றாவது முழு நிலவு 05.03.2015-ல் முறையாக வரவேண்டும். பிந்த வாய்ப்பு இல்லை. முந்த வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு முந்தினால் இந்த ஆண்டில் ஒருநாள் குறைவதைக் கணக்கில் கொள்ள வேண்டும். 

            தஞ்சைப் பெரிய கோயிலில் 360 நாட்களில் ஆண்டுச் சுழற்சியை ஒழுங்குசெய்த மன்னன், 12 திங்களிலும் திருத்தமாடுதல் என்ற செயலைச் செய்ததாகச் கல்வெட்டுக்; சான்றுகளின் வழியே அறிய முடிகிறது.

            தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டும் முன்பாகவே தனது 16-வது ஆட்சியாண்டில் சதய விழாவாகிய தனது பிறந்த நாளை யோக முறைப்படி கணித்து அறிந்து கொண்டாடியிருக்கிறான். அவன் பிறந்த நாள் வைகாசிச் சதயம். ஆண்டு பிறப்பது தைச் சதயம். தஞ்சைப் பெரிய கோயிலில் ஆட்டைப் பெரிய திருவிழா எடுக்கப்பட்ட நாள் தைச் சதயம். தையில் மட்டும்தான் சதயம் திங்களின் முதல் நாளில் வரும். புற 11 சதயங்களும் திங்களின் இடைநாட்களில் வரும். இவற்றை நன்கு கணித்து அறிந்து தனது ஆசான் கருவூராரின் உதவியோடும், சதயத்தில் பிறந்த தனது மனைவி ஒருத்தியோடும் மேலும் 8 யோகியருடன் சதய நாட்களைக் கட்டுப்படுத்தி ஒவ்வொரு சித்திரையிலும் முறையாகத் திருத்தமாடி வைகாசிப் பெரிய திருவிழாவாகிய தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறான்.

            ஒரு வேளை சித்திரைக்குள் திருத்தமாடிட இயலவில்லையென்றால் வைகாசியில் சதய விழாவைக் கொண்டாடியிருக்கமாட்டான். தைச் சதயத்தை அறிவிக்கக் கடிகையார் என்றொரு பிரிவினரையும் 240 சிவயோகியர்களையும் பிரித்துவிட்டிருக்கிறான்.

            ஆனால் தற்போது தஞ்சைப் பெரிய கோயிலில் ஆரிய வைதீக நடைமுறைப்படியும் அதன் பஞ்சாங்கத்தின்படியும் ஐப்பசிச் சதயநாள் கொண்டாடப்படுகிறது. ஐப்பசிச் சதயத்தில் மராட்டிய சரபோஜி குடும்பத்தாருள் எவரேனும் பிறந்தனரா? அதனைத்தான் பரம்பரை அறங்காவலர் திரு பான்சுலே கொண்டாடுகிறாரா என்பது ஆய்வுக்கு உரியது. மன்னன் இராசராசனுக்குப் பிறகு இன்றளவும் தஞ்சைப் பெரிய கோயிலில் தொடர்ந்து கீழ்கண்ட வேலைகள் நடந்து வருகின்றன.

1.         வாய்க்கட்டு

2.         மறித்துக் கட்டுதல்

3.         குத்தல்

4.         நேர்வாசல் எடுத்தல்

மேற்கண்டவை தவிரவும் பன்றிச் சிலையை வைத்து சண்டி ஓமம் செய்தல் போன்ற செயல்கள் தொடர்ந்து வருகின்றன.

தஞ்சைப் பெரிய கோயிலைக் காப்பதும் தமிழர் மரபறிவின் வழிப்பட்ட புத்தாண்டு அறிவைக் காப்பதும் ஒரு வகையிலான செயல்களே.

திருத்தமாடுதல் என்பதே நாளடைவில் தீர்த்தம் ஆடுதல் என்று ஆகிவிட்டதா? அல்லது தீர்த்தமாடுதல் என்பது கல்வெட்டுக்களில் திருத்தமாடுதல் என்று திரிந்துவிட்டதா என்பது ஆய்வுக்குரியது.

எப்படியாயினும் பச்சைத் தண்ணீருக்குத் தீர்த்தம் என்ற சொல்லை உருவாக்கியவர்களின் மனச்சான்றுதான் உண்மையை அறிந்திருக்கும். ஆண்டு நாட்களைத் திருத்தும் நடைமுறையை மறைக்கவே தீர்த்தம் கொண்டுவரப் பட்டிருந்ததால் அது தமிழர்களுக்கு மிகப் பெரிய இழப்பு ஆகும்.

கல்வெட்டு

            சித்திரைச் சதயந் திருத்தமாடி வரும்

            பெருந் திருவிழாவிற்கு..... இறையிலியாக

            செய்து குடுத்த எயினங்குடி நிவந்தம்

            (திருவாரூர் மாவட்டம் - திருப்புகலூர் - வர்த்த மானீசுவரர் சிவன் கோயில் கல்வெட்டு) ஆய்வாளர் : தில்லை கோவிந்தராசன், பள்ளித் தலைமையாசிரியர், பொந்தியாகுளம்.

 

            இந்தக் கல்வெட்டிலும், அருகில் உள்ள காட்சிச் சிற்பத்திலும் உள்ள நபர்களில் பெண் நீங்கலாகப் 10 பேர் உள்ளனர். 10 ஒ 24 ஸ்ரீ 240 பேர் ஆண்டுச் சுழற்சியை தஞ்சைப் பெரிய கோயிலில் ஒழுங்கு செய்துள்ளனர்.

(காண்க மாநாகன் இனமணி : 1 – 50 )

            இப்போது நம்மால் செய்ய முடிவது எல்லாம் முழு நிலவு நாட்களின் இடைவெளியில் ஏற்படும் சீர்மைச் சிதைவு எவ்வாறு நேர்கிறது என்பதை நேர்மையாகப் பதிவு செய்வது தான்.

            அதே வேளையில் தமிழர்கள் தங்களைப் புத்தாண்டுப் புரிதலுக்குத் தகவமைத்துக் கொள்ளுதலும் ஒரு வகையில் திருத்தமாடுதல்தான்.

            இமையோர் இளங்கொடி

            தன் திறம் உரைத்த தகைசால் நன்மொழி

            தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்!

                                                                        (சிலம்பு – வரந்தருகாதை – 183 – 85 )

            திருத்தகு நல்லீர் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. மரபு வழிப்பட்ட மொழிப் போராளிகளின் தேவார திருமுறைகளும், நாயன்மார்கள் காப்பாற்றிய திருப்பதியம், திருமுறை, திருநெறி, திருத்தளி, திருக் கற்றளிகளும், அயன்மை இன அரசுகளிடமிருந்து தமிழர்களின் அறிவு மரபைத் தனித்துத் தக்க வைத்துக் கொள்ளவே வடிவமைக்கப்பட்டன என்று கருதலாம்.

            இது போன்ற முயற்சிகளில் திருவாய்மொழி சேராது. மன்னனின் அரசாணையைக் குறிக்கப்பயன்பட்ட இச்சொல், பொருள் மாற்றம் செய்யப்பட்டு என்று வழங்கப்பட்டதோ அன்றே பழைய திருநெறி மரபுகள் அனைத்தும் முற்றாகப் புதைக்கப்பட்டன. புத்தாண்டுப் புரிதலையும் சேர்த்து. சிறீ என்ற சொல் உருவானது. அது ஒற்றைச் சொல்லாக வருடம் என்பதனைக் குறிக்கும் குறியீடாகவும் கையாளப்பட்டது. அனைத்தையும் பறிகொடுத்தாயிற்று. புதைத்தவனும் மறந்துவிட்டான்.

            புத்தாண்டின் முதல் நாளும், கழுநீர் பொங்குதலும், முன்னோர் படையலும், தொழூஉப் புகுத்தலும், சதய நாள் கூடி வருதலும், 360 நாளின் கணக்கு சரியாகத் தொடங்கப்படுதலும், மன்னவனின் கொற்றக்குடை நிழல் பொருந்த அமைதலும், அறநெறி வழுவாத செங்கோல் நிமிர்வும், ஆண் மென்மேலும் ஆணாதலும், பெண் மென்மேலும் பெண் ஆதலும், இன்ன பிற அனைத்தும் வானவியல் அடிப்படையில் தமிழோடு தொடர்புடைய தைப்பாவைப் பிறப்பு நாளும், மாறாப் பண்பின் மரபு வழிப்பட்டன என்று தமிழின் 41 செவ்விலக்கியங்களும் ஏராளமான அகச் சான்றுகள் தந்து அழுத்தமாகப் பேசுகின்றன. இவற்றை அலசி ஆராய்ந்து வகைப்படுத்த வேண்டிய பொறுப்பில் இக்காலத் தமிழ்த் தலைமுறையினர் உள்ளனர்.

            பொங்கல், பொங்கர் என்ற சொற்கள் பழந்தமிழில் பொக்கையான நுரை, மற்றும் மழைநீரைப் பொலிந்தபின் கலைந்து செல்லும் வெண்முகில், ஆகியவற்றைக் குறிக்கின்றன. இதற்கு நேர் எதிர் தூமம் என்பது. ஊலக உருண்டை தூமம் எடுப்பதை யானைகள் அறியும். பொங்கல் வெண்புகை எடுப்பதை மாந்தர் அறிவர். தூமம் எனப்படுவது பூமியின் பூப்புக்கு ஒப்பாகும். பூமி என்ற சொல் பழந்தமிழில் வழக்கொழிந்தது. ஆயினும் சிலம்பில் உள்ளது. அது பூப்பி என்றே அழைக்கப்பட்டு திரிந்திருக்கலாம். எச்சொல்லிலும் தலைப்பு எழுத்து மயங்கினால் தமிழ் அச்சொல்லைப் புறக்கணித்துவிடும். பூப்பி மயங்கிப் பூமியாகிப்பின் காணாமல் போனாள் என்று கருதலாம்.

            நறை என்ற சொல் எந்த ஒரு முழுச் சுற்றிலும் அதன் நிறைவைக் குறிக்கிறது. முழுமையின் அறிகுறியாகத் தோன்றும் மணம் நாற்றம் என்றும், அந்த நாளில் கழுநீர் மணம் நாற்ற உணவாகும் என்றும் தெரிகிறது. அந்த நிறைவின் மணத்தினை எதிர்பார்த்து தமிழரின் முன்னோரது நினைவு அலைகள் தமிழ் சார்ந்த கோட்பாடுகளின் அடிப்படைகளோடு வடிவமைக்கப்பட்டுள்ளன என்று கருதிடலாம்.

            கடும் புனல் சாஅய்ப் பெயல் உலந்து

            எழுந்த பொங்கல் வெண்மழை  (நெடுநல்வாடை – 18, 19)

            எதிர் செல்வெண்மழை பொழியும் திங்களில்  (முல்லைப் பாட்டு - 100)

            நறை வலம்செய விடாஅ நிறுத்தன ஏறு  (முல்லைக்கலி – 10-31)

            நெடியோன் தலைவன் ஆக மாசு அற விளங்கிய யாக்கையர்

            சூழ் சுடர் வாடாப் பூவின்     இமையா நாட்டத்து

நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு

மாற்று அரு மரபின் உயர் பலி கொடுமார் ( மதுரைக்காஞ்சி – 455-59)

            நெடியோன் என்பான் பாண்டியர் மரபினன். தமிழ்ப் புத்தாண்டுத் தொழில்நுட்பம் அனைத்தும் பாண்டியர்களால் வடிவமைக்கப்பட்டது. பிறகு மூவேந்தர்களோடு பகிர்ந்து கொள்ளப்பட்டது. கோத்தொழிலும், வேத்தியல் படையும், செவ்வியல் கலைகளும், மரபிலக்கணங்களும் அவ்வவற்றின் வழியே வகைதொகை செய்யப்பெற்றன. பிறகு எளிதாகப் பார்ப்பனர்களால் கொள்ளையடிக்கப்பட்டன.

            தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கத்தின் உரிய நாள் என்பது பலர் புகழ் ஞாயிறு என்று போற்றப்பட்ட தை முதல் நாள் என்றும், அது முருகனின் ஆறு முகங்களுள் முதல் முகம் என்றும், அதுவே கிழமைப் பெயர்களுள் ஞாயிறு என்பதும், அது உயிரினப் பேராண்மையின் குறியீட்டுச் சொல் என்பதும் தமிழ் அறிஞர்களால் முறையாக விரித்துப் பேசப்பட வேண்டிய பொருண்மைகளாகும். அவையெல்லாம் விரைவில் வெளிவர இருக்கும் துப்பு திங்களிதழில் அலசப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

            03.02.2015-ல் கடந்து சென்ற முழு நிலவானது தமிழ் ஆண்டுக் கணக்கின்படி மாசி முழு நிலவு ஆகும்.

 

            மழை நீங்கிய மா விசும்பில்

            மதி சேர்ந்த மகவெண் மீன்

                                                (பட்டினப்பாலை – 34, 35)

            கரிகாலனுடைய அரண்மனையில் தோன்றிய மாசி முழு நிலவின் அருகில் ஒரு வெண்மீன் சேர்ந்து வந்தது என்று தெரிகிறது. ஆண்டு நாட்களை அரசன் கட்டுப்படுத்திய காலத்தில் அது நிகழ்ந்திருக்கலாம்.

            தற்போது ஆண்டுச் சரிவு நீடிப்பதால் அந்த மீன் சற்று விலகித் தெரியலாம். கடந்த 03.02.2015-ல் தோன்றிய முழுநிலவுக்கு அருகில் சற்றுத் தள்ளிப் பளிச்சென்று ஒருமீன் இணைந்து சென்றது. ஒரு வேளை ஆண்டுச் சீர்மை திருத்தப்பட்டால் அந்த மீன் நிலவுக்கு மிக அருகாமையில் தோன்றலாம்.

            பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்பழ 12 முழு நிலவுகளிலும் 12 மறை நிலவுகளிலும் தைப்பூசம் மற்றும் புரட்டாசியின் உத்திரட்டாதி தவிரப் பிற 22 நாட்களுக்கும் நட்சத்திரங்கள் தனியே கிடையாது. அவற்றின் முதல் நாள் என்ன அடையாளமோ அதுவெ நீடிக்கும். அசுவதி, பரணி போன்றவை நட்சத்திரங்கள் கிடையாது. நட்சத்திரங்கள் விண்மீன்களும் கிடையாது. விண்மீன் என்ற சொல்லே பழந்தமிழில் இல்லை. வானத்து மீன் இருக்கிறது. விண்ணில் முழு நிலவும் விண்செலல் மரபின் ஐயரும் மட்டும் உலவுகின்றனர். (திருமுருகு-107)

            பஞ்சாங்கம் குறிப்பிடும் ஒவ்வொரு நாளுக்கான நட்சத்திரங்கள் எவையும் வானத்து மீன்கள் கிடையாது. அவை வளிமண்டல இயக்கத்தையும் மூச்சுக்காற்றையும் குறிக்க யோகியர் பயன்படுத்திய குறியீட்டுச் சொற்கள். அவற்றுள் சதயம் என்பது தைத்து இறுக்கம் செய்வது ஆகும்.

            பட்டினப்பாலை குறிப்பிடும் மக மீன் ஒரு வானத்து மீன் ஆகும். இந்த மக மீன் அங்கும் இருப்பதால் குழப்பம் அடையக் கூடாது. பழங்காலத்தில் அகவர் என்றொரு பிரிவினரே நாளின் தன்மையை உற்றறிந்து அரசர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். அதற்காகப் பெரும் பரிசில் பெற்றுள்ளனர்.

            ஒரு தண்ணீர்த் தொட்டிக்குள் தவற விட்ட குழந்தையைக் கையைப் பிடித்துத் தூக்கினால் கைமட்டும் வராது. குழந்தையும் வரும். அது போல வரலாற்றின் ஆழ்துளைக்குள் தவறி விழுந்த தமிழ்க் குழந்தையின் ஓர் உறுப்பு கைக்குக் கிடைத்தாலும் தமிழர்கள் குழந்தையைத் தவறவிடக் கூடாது. அந்தப் புரிதலை உருவாக்கவே திங்கள் இதழாக வெளிவரவிருக்கிறது. துப்பு.

            பழந்தமிழின் ஏதாவது ஒரு அறிவுத் துறையைத் தூய்மை செய்து வெளியில் எடுத்தால் முழுத் தமிழும் குழந்தையைப் போல வரும். தாங்கி வரவேற்கத் தமிழ்த் தேசிய அரசு தேவை. தமிழ்ப் புத்தாண்டு அக் குழந்தையின் தலை போன்றது.

            மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் துப்பின் வழியே வல்லுநர்களைத் தேடுகிறது.

 

                                               

                                                

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.