Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

கடலலைகள் என் மென்மையான

கால்களை நனைத்த போதுதான்

என் அருகில் நீ இருப்பதை

நான் உணர்ந்தேன்- அதுவரையில்

நீ என்னருகில் கைகோர்த்து

காதோரம் கதைபேசியதும்

என்னால் உணரமுடியல்லையே

நான் என்ன செய்ய- என்றும்

என் நினைவில் நம்

இன்ப இரவின்

நினைவு சின்னமான

சின்ன குழந்தையே...!

  • Replies 1.9k
  • Views 182k
  • Created
  • Last Reply

குழந்தை மனம் பெண்களுக்கு-அடக்

கொஞ்சும் பொம்மைகள்

நாமவர் கண்களுக்கு..

இந்த உண்மையைச் சொன்னதால்

ஒரு வம்பிருக்கு..-இந்த

பொம்மையின் சாவி

அவள் கையிலிருக்கு..

அவள் பொம்மையல்ல

அவள் ஓர் நங்கை

அவளை நீ வணங்கு ஏனெனில்

அவள் ஓர் அணங்கு

அவள் என்று

அன்று உரைத்த

என் உதடு....

இன்று

அன்பே

ஆருயிரே

என்றுழைக்கிறதே

ஏன்....???

வீங்கிய முட்டிய

உன்

நினைவுகள்

என் இதயத்தில்...

தினம் தினம்

ஏதோ

பேசுகிறதே

ஏன்...???

உன்னோடு

மட்டும்

எனக்கேன்

இத்தனை பாசம்....???

புரியவில்லை

ஏன்

அன்பே....???

அன்பே..அன்பே...அன்பே..

உன்னில் ஆசை கொண்டேனே..

முன்பே..முன்பே..முன்பே..

அதைச் சொல்லிப்பார்த்தேனே..

இது ஏகாந்தத்தானோ..என்னை

ஏமாற்றும் மானோ..

காதல் சொல்லாமல்..கொள்ளாமல்.

உள்ளே வந்து உயிரைக்கொள்கிறதே..

கண்ணாடி முன்னாடி வெகுநேரம்..

உன்னைக் காணாமல் ஏக்கங்கள் மனதோரம்.

பெண் கடைப்பார்வை கடன் கேட்டுத்

தவிக்கின்ற தண்டனையேன் தந்தாய்..

நீ சிலை போல அசையாமலிருக்கின்றாய்..

நான் சிதையேறும் முடிவோடு வாழ்கின்றேன்..

சின்னஞ்சிறு புன்னகை சிந்திவிடு அன்னமே..

கன்னமிடுமெண்ணங்கள் கைவிடுவேன் திண்ணமே..

காதல் கொண்டேனே...நான் காதல் கொண்டேனே..

நூறு றாத்தல் பேரழகை நெஞ்சுக்கூட்டில் ஏற்றிக்கொண்டேனே..

சுமைகூட சுகமாகும்.. சொந்தமாய் விடு..என் சொந்தமாய்விடு..

சுமை சுமையாய்

தூக்குகிறேன்

என் சுமைகள்

குறைப்பதற்கு...

இருந்தும் இன்னும்

குறையவில்லை

உழைத்த பணம்

பத்தவில்லை...

சுமைகளையே

நானும் இன்னும்

சுமை சுமையாய்

சுமக்க வேண்டும்...

கூலி வேலை

செய்து நானும்

என் கூலிகளை

கொடுத்துவிட்டேன்...

இன்னும் எனக்கு

குடும்பத்தில

தரவில்லையே

இன்னும் கூலி....

கஞ்சல் உடையோடு

தினம் காலத்தையே

ஓட்டுகிறேன்...

என்னோடு

உழைப்பவங்க

எப்படியோ வாறங்களே

நான் மட்டும்

ஏனோ இப்படியே வாறனே....???

என் கஸ்ரம்

தீரவில்லை

என் சுமையும்

குறையவில்லை....

இன்னும் நான்

சுமக'கின்றேன்...

சுமை சுமையாய்

சுமைகளையே...

சுமைகளையே இரட்டிப்பாய்

உன்னிடம் தந்தான்..-பாவம்

அவளை சுமந்திடு

எனவந்து என்னிடம்

சொன்னான்...ஒத்தைவழிப்

போகையிலே..

ஓர் நாள்

கேட்டேன்..

"அன்பே.. சுமையாய்த்

தெரியவில்லையா-நான்

சுமக்க வழிகளில்லையா"

சீறிய பாவை

சினந்து சொன்னாள்..

"தீய நினைவுகளால்..

நீ பெருஞ் சுமைதாங்கியாய்க்

கிடக்கிறாய்..-மனக்

கழிவை இறக்கு..என்

சுமை நானே..

சுமக்கிறேன்"என்று

பாவிமகள் நான்

சொல்லக்கேட்டாளா

யாரோ உதவாதவாதவனை

உதவிக்கு கேட்டு..

இன்னும் சுமைகளைக்

கூட்டிக்கொண்டாள்.

யாரோ

என்றென்னை

யாரு கேட்பது...???

கொஞ்சம்

நினைத்துப் பார்

என்னையா

உனக்கு தெரியவில்லை....??

எப்படி தெரியும்

உனக்கு...??

நீதானே

எனை தூக்கி

எறிந்து போனாய்...

உனக்கு எப்படி

முடிகிறது

இப்படி

பொய் சொல்ல....???

சொல்ல நினைத்த கதையெல்லாம்

சொல்லாமல்ச் சிரிக்கிறேன்..-நீ

சொன்னதைக் கேட்டதால்..

சொல்லவரும்போது ஒரு பல்லி

சொன்னதென.. என் கதையை

சொல்லாமலிருந்தேன்-நீ

சொன்ன கதை கேட்டு.. நான்

சொல்லவந்ததை இனி எந்தநாளிலும்

சொல்லமுடியாதென புரிந்து கொண்டேன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை சொல்லி தூங்க

வைத்தது அந்தக் காலம்

கதை கட்டியே தூக்கில் தொங்க

வைத்தது இந்தக் காலம்

கதையோடு கதையாக கதையே

வாழ்க்கையாகிப்போன வாழ்விற்கு

யார் அத்தாட்சி

அத்தாட்சி பத்திரத்தை

ஆதரம்மாய் கேட்கிறியே

அன்றுன்னை காதலிக்கையில்

அடி பாவி ஏனோ கேட்கலயோ...???

அகதியாய் வந்து நானும்

அகதியாய் இருக்கின்றேனே -பிறப்பு

அத்தாட்சி பத்திரத்திற்கு

எங்கு நானும் போவேண்டி....???

கள்ள பெயர் கொடுத்து

களவாய் நானும் இருக்கேண்டி

காளை என்னில் இன்று

கலங்கம் பொய்கிறாய் ஏனடி....???

வீடு இடிஞ்சு போட்டுதடி

வீட்டுகள்ள எதுவுமில்லை

நாடு போக முடியவில்லை

நம்ம கைய்யில் ஏதுமில்லை...

இன்று என்னால் முடியாதடி

சத்தியமாய் நம்பிடடி

என் வயசு உண்மையடி

என்னவளே நம்பிடடி.....!!!

நம்பிடடி நம்பிடடி

என ..ஆண்கள்

போடும் நாடகங்கள்..

ஆகாதய்யா...

ஆகாது

வேலை..வேலை

என்று..

வேறெங்கொ

போவதுவும்..

வீட்டில் இருப்பவளை..

வேலைக்காரியாய்..

நடத்துவதும்.

ஆகாதய்யா...

ஆகாது

அடுக்களைக்கு மட்டுமவள்

ஆளென்று நினைத்துக் கொண்டு

நீயாடும் ஆட்டங்கள்

ஆகாதய்யா...

ஆகாது

எதிர்த்தேதும் பேசிவிட்டால்..

கைநீட்டும்

கணவனாய்..

ஆனதெல்லாம்..

ஆகாதய்யா...

ஆகாது

ஆண்கள் ஆன

உங்களையோ

எப்படி நாங்கள்

நம்பிடவோ....,,???

கட்டியவள் வீடிருக்க

களவாட போறிகளே

கள்ளத்தனம் ஆடிவந்து

கனிந்த மொழிகள் பேசுவீக....

எத்தனையோ துரோகமதை

எங்களுக்கு இழைக்கிறிக

எம்மை தேடி யாரும் வந்த

ஏனோ சண்டை மூட்டிறீக....???

சந்தேக சொல்லோடி

சந்தோசத்தை கெடுக்கிறீக

சமதானம் பேசி பின்னர்

சாந்தமாக வாழிறீக....

என்ன செய்வோம்

நாங்கள் இன்று

பெண்களாக

பிறந்து விட்டோம்...

பொறுத்துதானே

போக வேண்டும்

ஆண்கள் உங்களை

நம்ப வேண்டும்....!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்பவேண்டும் என்றே அருந்ததி

நட்சத்திரம் தனை நாசுக்காய் காட்டி

நாட்கள் பலவாய் இணைந்து

நாடகம் ஆடி நம்பியவளுக்கு

நம்பிக்கை துரோகம் செய்தவரை

நல்லவர் என்று எப்படி நம்புவது

நாகத்துக்கு வாயில் தான் விடம்

நம்பியவனுக்கோ உடலெங்கும் விஷம்

வேண்டும் எந்தன் அன்னை வயிற்றில்

மீண்டும் பிள்ளையாக - நான்

கொண்ட கோவில்.. மண்ணில்

வணங்கும் தெய்வம் யாவும் தாயே

ஈன்றபொழுதில் பெருதுவக்கும்

இன்பம் தராப்பிள்ளை-இவன்

உன்னருகே இல்லையம்மா நீ

கன்றிழந்த அன்னை.

நோய்கள் சேர்ந்த வயதில்

தாயே உன்னைத் தனியேவிட்டேன்..-ஈரம்

காயமறுக்குதம்மா நிறையச்

சேய் அழுதுவிட்டேன்..

உந்தன் குரல் கேட்கையில் இங்கு

எந்தன் மனம் துடிக்கும்..-என்னைத்

தந்த தாயின் துயரம் அது

நினைந்து மனம் வெடிக்கும்..

விஷம் கொண்ட நாவுக்கு

அசைந்தாடும்..மனிதா..-நீ

விலை போன பின்னாலே

மனிதம் அல்லல்களுறுதா...

அகம்பாவம் அது பாவம்

சொன்னேனே அன்று

அதைக்கேட்காமல் பாழ்

மனமே அழுக்கானாயின்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனமே மனமே

மனதுக்குள்ளும் பூகம்பங்கள்

மணலில் போட்ட பூக்களாய்

மனமும் அடிக்கடி வாடிப்போய்

மயக்கம் தான் கண்டிடுதே

மயங்கிவிட்ட மனதோடு

மானசீகமாய் பேசிப்பார்

காற்றாய் மனம் லேசாகும்

மலர்களாய் மனம் மலரும்

மயக்கங்கள் தூர விலகிடும்

விலகிடும் பனித்திரையாலே

பூங்காவனம் கண்டேனே

வண்ணப்பூக்களைப்

பிரசவிக்கும்..புதுவுலகமே..

பட்டாம்பூச்சிகள் யாவும்

இறக்கை விரிந்து பறக்குதே..

வசந்தகாலமிது..மாலை நேரமிது..

பொன்னந்தி வான் தெரிகிறதே..

சிரிக்கும் பூக்களில் இந்த

வண்ணச்சாயங்களை

கொட்டியது யாரோ...

பச்சையிலைகள் பழுத்து

விழுந்து கம்பளம்விரிக்கிறதே..

நீலவானம் நிறங்கள் மாறி

உறங்கப்போகிறதே..

வெள்ளிவிளக்குகள்..மெல்ல

முழித்து காவல் காக்கின்றதே..

மின்மினிப்பூச்சிகள்

கண்ணெதிர் நின்று..

நடனமாடுதே

காதோரம் ஜில்வண்டு

ஒன்று..கானம் பாடுதே..

தென்றல் மெல்ல

கைகள் கொண்டு

தூங்கச் சொல்கிறதே..

மெல்ல மெல்ல

தூங்குவேனா..

மேலும் சுகம் வாங்குவேனா..

Edited by vikadakavi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுகம் தாயின் அணைப்பில்

கண்மூடி தூங்குவதில் சுகம்

பெய்யும் மழையில்

கண்மூடி நனைவதிலும் சுகம்

மலர்களின் வாசமதை

கண்மூடி சுவாசிப்பதிலும் சுகம்

இசைமழையை மறந்து

கண்மூடி ரசிப்பதிலும் சுகம்

எத்தனை சுகம் இருப்பினும்

ஆண்டன் முன்னாடி நின்று

கண்மூடி துதிப்பதிலும் ஒர் சுகம்

மனதிலும் ஒர் ஆத்மதிருப்தி

ஆத்ம திருப்தி வேண்டின்-மன

அழுக்கெறிந்து விடுக..

ஆழ்ந்த துயில் வேண்டின்-நின்

ஆசைகளைக் களைக..

ஆறும் அமைதி வேண்டின்-உள

எரிச்சல்களை எறிக

ஆக நிம்மதி நெஞ்சில் வர-ஒரு

சாமியாய் ஆயிடுக.. :rolleyes:

கல்லறையில் தூங்கும் போதும்

ஏன் அங்கு இல்லை?

நிம்மதி

Edited by elakkiyan

கல்லறையில் பூத்த பூக்கள்

பாவப்பட்டவையல்ல..

புனிதமானவை..ஏனென்றால்..

அவை இப்போதுதான்..

நிஜத்தை பரிணமிக்கின்றன..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூக்கள் தூவி அர்ச்சிக்கப்படும் கல்லறைகள்

நிஜத்தின் பின்னால் சாதனைகள் படைத்தே

தூங்கும் சரித்திர நாயகர்கள்

உதிர்வின் உயிர்ப்பில் சாகா வரம்

பெற்றுவிட்ட கார்த்திகை மலர்கள்

மலர்கள் சூடிய

கூந்தல் காட்டில்..

என் வாசம்..

சயனம் தந்த

மணித்துளிகள்...

சந்தோஷம்..

கண்மலர்களால்..

காது நீவி..

இதழ் தொட்டால்..

பாறை கனியும்.

பாதமலர்கள்

கையிலேந்தி..

சேவகம் செய்ய

ஜீவமோட்சம்..

அன்பு மேவி

அணைக்கும்போது

அது ஒன்றே போதும்.. :blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சேவகம் செய்தே

மனம் குளிர்கிறதே

எங்கிருந்தோ வந்தான்

கண்ணணுக்கு சேவகனாய்

பாரதி தந்த பாடலாய்

பாரதிக்கண்ணம்மாவாய்

கவி பல படைத்திட்ட

பாரதியின் பாடல்

மெய்யினை மறக்கவைக்கின்றதே

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.