Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகம்: அதிரவைக்கும் இளவயது கர்ப்பங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேரளா மாநிலத்துக்கு சுற்றுலா சென்ற ஆத்தூரைச் சேர்ந்த மாணவிகள் 260 பேர், நான்கு பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பஸ் தமிழக எல்லையை தொட்டபோது, மாணவி ஒருவர் தனக்கு வயிறு வலிப்பதாக சொல்கிறார். உடனடியாக அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பஸ் நிறுத்தப்படுகிறது.

கழிப்பறை சென்ற மாணவி, அரை மணி நேரமாகியும் திரும்பவில்லை. திடீரென கழிப்பறையிலிருந்து அலறல் சத்தம் வர... அதிர்ந்த மாணவிகள் கழிப்பறை நோக்கி ஓடினர். அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார் மாணவி. அருகில் பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடக்க, மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அந்த மாணவிக்கு திருமணமாகவில்லை என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம்.

இந்த மாணவியும், இவரது பக்கத்து ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். எல்லை மீறிய நிலையில் கர்ப்பமடைந்தார். கர்ப்பத்தை எப்படி கலைப்பது என தெரியாமல் விட, கழிப்பறையில் பிரசவிக்கும் நிலையை எட்டி விட்டார். கர்ப்பம் தரித்து உடலில் மாற்றங்கள் தெரிய துவங்கிய போது, 'எனக்கு வயிறு வலிக்கிறது. வயிற்றில் கட்டி இருப்பதாக டாக்டர் சொன்னார். சில மாதங்களில் சரியாகி விடும்' என சொல்லியிருக்கிறார் அந்த மாணவி.

இதை அப்போது நம்பிய மாணவியின் பெற்றோர், திருமணமாகாத நிலையில் மகளுக்கு குழந்தை பிறந்ததால் கதறி அழுதனர். கோவை அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவம் இது. இது ஏதோ ஒரு மாணவிக்கு மட்டும் நிகழ்ந்தது என்று கருத முடியாது. அந்தளவுக்கு சமீப காலங்களாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இளம்பெண்கள் கர்ப்பம் அடைவது மிகவும் அதிகரித்துள்ளது. உடலுறவு மற்றும் அதன் பின்விளைவுகள் என எதுவும் தெரியாமலேயே இவர்கள் பாலுறவில் ஈடுபட்டு, சங்கடங் களை அனுபவித்து வருவது சமூகத்தின் முன் பல கேள்விகளை முன் வைக்கிறது. பாலியல் கல்வியின் தேவையை அதிர்ச்சியுடன் சொல்கிறது.

இளம் வயது கர்ப்பம் காரணங்கள்

"கருக்கலைப்பு செய்ய முன்வருபவர்களில் பள்ளி, கல்லூரி மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் 13 வயது முதல் 16 வயது வரையிலான பள்ளி மாணவிகளும் இருக்கின்றனர். பல நேரங்களில் தங்கள் காதலர்களுடன் வந்து கருக்கலைப்பு செய்ய வருகின்றனர். ஆனால் அது முடியாதபோது இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி விடுகின்றன," என்கின்றனர் மருத்துவர்கள்.

sex%20education%20500%201.jpg

இது போன்ற இளம் கர்ப்பங்களுக்கு இதுதான் காரணம் என ஒன்றை மட்டும் நாம் சொல்லி விட முடியாதபடி காரணங்கள் பரவி கிடப்பதாக சொல்கின்றனர் உளவியல் மருத்துவர்கள். "எதிர்பாலினருடன் நெருங்கி பழகும் வாய்ப்புகள், இணையத்தின் ஊடாக பாலியல் சார்ந்த எழுத்துக்களையும், காட்சிகளையும் எளிதாக அணுகும் வாய்ப்பு, பாலியல் சார்ந்த உள்ளடக்கத்தை கொண்ட திரைப்படங்கள், குழந்தைகளுடன் பெற்றோர்கள் நேரத்தை செலவழிக்காதது என இளம் கர்ப்பங்களுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதில் மிக முக்கியமானது பாலியல் சார்ந்த கல்வி இல்லாதது தான்.

ஆபாச தளங்களுக்கு முக்கிய பங்கு

தகவல் தொழில்நுட்பத் துறையின் அதிவேக வளர்ச்சியால் இளம் வயதிலேயே வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. அவர்களின் வாழ்க்கைமுறைகளும் அதிகரிக்கும் இளம் கர்ப்பங்களுக்குக் காரணம்.  ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு சில வசதிகளை செய்து கொடுக்கிறது. அதே வசதியை நாம் தவ றான திசையிலும் பயன்படுத்தும் போக்குகள் அதிகரித்து வருகின்றன. அதில் ஒன்றுதான் இணையத்தில் பாலியல் சார்ந்த தேடல்கள். இணையத்தை பயன்படுத்துவோரில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பாலி யல் காட்சிகள், எழுத்துகளை கொண்ட இணைய தளங்களை பார்வையிடுவதாக சொல்கிறது புள்ளி விவரங் கள்.

sex%20education%20rightt.jpgஇணையதளங்களில் பாலியல் குறித்து  தவறான பல விஷயங்கள் விரவிக் கிடக்கின்றன. பதின் பருவத்தினரை தூண்டி, அவர்களது வேட்கையை திருப்திப்படுத்தவே இந்த தளங்கள் உதவுகிறது. முதலில் இது போன்ற படங்களை பார்ப்பது என்றால் உங்களுக்கு அதற்கான கருவிகள் தேவைப்பட்டன. பின்னாளில் இன்டர்நெட் சென்டர்களுக்கு சென்றால் பார்க்க முடியும் என்ற நிலை உருவானது. பின்னர் இது வீடுகளுக்கு பரவி, இப்போது கையில் வைத்திருக்கும் செல்போன்களிலேயே பார்த்துக்கொள்ளும் சூழலை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர்கள் மட்டுமல்ல.. குழந்தைகள் கூட இந்த படத்தை பார்க்க வாய்ப்புகள் உள்ளது.

இணைய தளங்களில் ஆபாச படங்களை பார்க்க துவங்கும் சராசரி வயது 11, 12 என வெளிவரும் புள்ளிவிவரங்கள் இதையே உணர்த்துகின்றன.

இதனால் அதிக லாபம் சம்பாதிக்கும் வலை தளங்களாக இது போன்ற தளங்களே உள்ளன. இந்த காட்சி களை பார்க்கும் பதின்பருவத்தினர் அதை நோக்கி தூண்டப்படுகின்றனர். அதுதான் மேற்சொன்ன சம்பவங் களுக்கு காரணமாகிறது. இணையத்தை எந்த நாட்டிலும் தடை செய்து விட முடியாது. இதற்கு அடிமையா வதன் தீங்குகளை இளைஞர்களிடம் விளக்கினாலே போதுமானது.  பாலியல் தொடர்பான போதுமான கல்வியையும் வழங்குவதன் மூலம், இது போன்ற தளங்களின் தீயவிளைவுகளை உணர்த்தி, அதை தவிர்க்க செய்ய முடியும்.

பாலியல் கல்வி தீர்வை தரும்?

sex%20education%20right.jpg2007 ஆம் ஆண்டு மத்திய அரசு பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொண்டது. ஆனால் சரியாக முன்வைக்கப்படாததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. எய்ட்ஸ் நோய் பரவலாக பரவி வந்த கால கட்டத்தில், எச்.ஐ.வி., எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக பாலியல் கல்வி அவசியம் என முன்வைக்கப்பட்டது. இளம் கர்ப்பங்களைத் தடுப்பதும் கூட இந்த திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

ஆனால் பாலியல் கல்வியை பள்ளிகளில் அறிமுகப்படுத்த கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பாலியல் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டால் மேற் கத்திய கலாச்சாரத்தை கொண்டு வந்து விடும் என பழமைவாத அமைப்பு கள் குரல் எழுப்பின. 'இது விழிப்புணர்வை ஏற்படுத்தாது. மாறாக பாலியல் உணர்வுக்கு வடிகாலாக மாறி விடும்' என எச்சரித்தன. இதனால் துவங்கிய வேகத்தில் கிடப்பில் போடப்பட்டது பாலியல் கல்வி திட்டம்.

'உண்மையில் பாலியல் கல்வி என்பது அறிமுகப்படுத்தப்பட்டால், இளம் வயது கர்ப்பங்களை பெருமளவில் குறைக்க முடியும். பதின் பருவத்தினருக்கு பாலியல் கல்வி தொடர்பாக பல சந்தேகங்கள் உள்ளன. ஆனால் அவர்களின் பிரச்னைகள், சந்தேகங்கள் குறித்து பேச அவர்களுக்கு யாரும் இல்லை. இதனால்தான் பாலி யல் சார்ந்த எதுவும் தெரியாமல், சில காட்சிகளின் மூலமாக தூண்டப்பட்டு சிறு வயதிலேயே சிறுமிகள் கர்ப்பம் தரிக்கின்றனர்.

sex%20education%20right%202.jpgபாலியல் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டால், பதின் பருவத்தினர் பாலியல் உறவுகளில் ஈடுபடுவது குறையும். பாலியல் உறவில் ஈடுபடும் குறைந்த அளவிலான பதின்பருவத்தினரும் போதுமான அறிவுடன் அதில் ஈடுபடுவார்கள். எனவே பாலியல் கல்வி ஒன்றுதான் இது போன்ற இளவயது கர்ப்பங்களை குறைக்கும். ஆனால் பாலியல் கல்வி முழுமையான கல்வியாக இருக்க வேண்டும்.

எங்களை பொறுத்தவரை 'பாலியல் கல்வி' என்பதே அவசியமற்றது என நினைக்கிறோம். அதுதான் எதிர்ப்புக்கு வித்திடுகிறது. இதை வேறு பெயரில் அறிமுகப்படுத்தினால் எதிர்ப்பும் இருக்காது," என்கின்றனர் மருத்துவர்கள்.

பெற்றோர் அலட்சியமும் ஒரு காரணம்

பெற்றோர்களின் கவனமின்மையும் இதற்கு ஒரு முக்கிய காரணம். மனிதனாய் பிறந்த யாருக்கும், இயற் கையின் உந்துதலில் ஒரு கட்டத்தில் உடல்ரீதியான ஈர்ப்பு உருவாகும். அதை மாற்ற முடியாது. அப்போது அவர்களுக்கு அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது பெற்றோர்களின் கடமை. ஆனால் பெற்றோர்கள் ஒன்று இதை கண்டுகொள்வதே இல்லை அல்லது பாலியல் விஷயங்கள் தொடர்பாக எதிர் மறையாக பேசுகின்றனர். இதில் எதுவாகினும் பெற்றோர்கள் பாதுகாப்பற்ற உடலுறவுக்கான வழிகளை  குழந்தைகள் தேடத் தொடங்கிவிடுகின்றனர்.

sex%20education%20500%202.jpg

இள வயது கர்ப்பம் என்பது  அந்த சிறுமி அல்லது மாணவியின் உடல்நிலையையும் பெருமளவில் பாதிக்கும். "இளம் பருவத்தில் கர்ப்பம் அடைவதற்கு உடல் பக்குவமாக இருக்காது. வயது முதிர்ந்தவர்களே பிரசவத்தின் போது பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் நிலையில், மாணவிகளும், சிறுமிகளும் கர்ப்பமடைந்தால் அவர்களுக்கு அது பெரும் சிக்கலை ஏற்படுத்தும். குழந்தை பிறக்கும்போது இதனாலேயே பல சிக்கல்களும் ரத்தப்போக்கும் ஏற்படும். சமயங்களில் தாய்க்கும், குழந்தைக்கும் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

இது மட்டுமில்லாமல் இளம் வயது கர்ப்பம் அதிகப் பதற்றம் மற்றும் சிறுநீரகக் கோளாறு போன்ற பிரச் னைகளையும் உருவாக்கும்.  புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்ப்புகளும் அதிகம்," என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

பதின்பருவ உடலுறவு என்பது நிறைய சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இவற்றை பதின் பருவத்தினர் உணர்ந்து கொள்ளச் செய்திடல் வேண்டும்!

-ச.ஜெ.ரவி
  

 

http://www.vikatan.com/news/article.php?module=news&aid=39133

  • கருத்துக்கள உறவுகள்

தனது பிள்ளை கர்ப்பவதியாக இருப்பதை பெற்றோர் எப்படி அறியாமல் இருந்தார்கள்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.