Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படுவதனை ரணில் தடுத்தார்? தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படுவதனை பிரதமர் ரணில் விக்ரமசிஙக் தடுத்து நிறுத்தினார் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்வது குறித்து சட்ட மா அதிபர் திணைக்களம் பிரதமரின் ஆலோசனையை கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்து விசாரணை செய்வதனை தவிர்ந்த ஏனைய அனைத்து விசாரணைகளையும் செய்யுமாறு ரணில் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்பட்டால் அது தற்போதைய அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதனால் கைது செய்வதனை தவிர்ந்த ஏனைய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கோரியுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ, முன்னாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் சோமதிலக்க திஸாநாயக்க, ரக்னா லங்கா நிறுவனத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எகொடாவல மற்றும் அவன்ட் க்ரேட் கடற்பாதுகாப்பு நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மஞ்சுள யாபா ஆகியோரின் கடவுச் சீட்டுக்களை தற்காலிக அடிப்படையில் முடக்கவும் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கவும் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான ஆயுதங்களை எவ்வாறு தனியார் நிறுவனமொன்றுக்கு கோதபாயராஜபக்ஸ வழங்கினார் என்பது பற்றிய விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

கடந்த அரசாங்க பாதுகாப்பு அமைச்சில் முக்கிய பதவி வகித்து வந்த தமயந்தி ஜயரட்ன நியூசிலாந்துக்கு சென்றுள்ளார்.

தமயந்தியின் கடவுச்சீட்டை முடக்குவதற்கு காவல்துறையினர் முயற்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்படுவதற்கு முன்னதாகவே தமயந்தி நாட்டை விட்டுத் தப்பிச்சென்றுவிட்டார்.

இவ்வாறு நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு உள்ளக உதவிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவன்ட் க்ரேட் நிறுனத்திற்கு ஆயுதங்களை வழங்குவது குறித்தரவுகளை தமயந்தியே பிறப்பித்தார் என தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு தரப்புக்களுக்கு அரசாங்கத்திற்கு சொந்தமான ஆயுதங்களை வாடகைக்கு விடும் ஏகபோக உரிமையை அவன்ட் க்ரேட் தனியார் நிறுவனம் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொடுக்கல் வாங்கல்களின் மூலம் பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரச்சாரத்திற்கான பணம் மற்றும் வாகனங்களை இந்த நிறுவனம் வழங்கியுள்ளது.

அவன்ட் க்ரேட் நிறுவனத்தின் தலைவர் நிஸாங்க சேனாதிபதி, கோதபாய ராஜபக்ஸவின் நெருங்கிய நண்பர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் வாடகைக்கு விடப்பட்டமை மற்றும் விற்பனை செய்யப்பட்டமை குறித்து முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் கப்பில ஹெந்தவித்தாரணவிடமும் விசாரணைந டத்தப்பட உள்ளது.

சேனாதிபதியுடன் ஆளும் கட்சியினர் சிலர் பேணி வரும் தொடர்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சேனாதிபதியின் கடவுச் சீட்டு முடக்கப்பட்டிருந்த நிலையில் நைஜீரிய செல்ல அனுமதிக்குமாறு நிஸ்ஸங்க நீதிமன்றில் கோரியிருந்தார்.

எனினும் இந்தக் கோரிக்கைக்கு காவல்துறையினர் எவ்வித எதிர்ப்பையும் வெளியிடவில்லை.

நைஜீரியாவி;ற்கு செல்ல அனுமதிக்குமாறு நிஸாங்க கோரியிருந்தார்.

இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு கடவுச்சீட்டை மீள வழங்கியது.

2014ம் ஆண்டு நிஸாங்க, நைஜீரியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.

முன்னாள் கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல், ஜகத் ஜயசூரிய, தமயந்தி ஜயரட்ன மற்றும் கப்பில ஹெந்தாவித்தரன ஆகியோர் நிஸாங்கவுடன் நைஜீரியாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

கோதபாயவுடன் நிஸாங்கவிற்கு காணப்படும் நட்பு காரணமாக, உத்தியோகபூர்வ குழுவொன்றை அழைத்துச் செல்வதனை எவரும் எதிர்க்கவில்லை.

இலங்கையில் காணாமல் போன ஆயுதங்கள் நைஜீரியாவின் போகோ ஹாராம் தீவிரவாதிகளின் கைகளுக்கு சென்றதா என்பது குறித்து இலங்கை நைஜீரிய அரசாங்கங்கள் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளன.

நிஸாங்க சேனாதிபதியின் கடவுச்சீட்டை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர் திலக்க மாரப்பன மற்றும் தற்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ ஆகியோர் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய நிறைவேற்றுப் பேரவையில் கடவுச்சீட்டு மீள வழங்க அனுமதி அளித்தமை குறித்து ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117416/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.