Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Featured Replies

எல்லாமே மூன்று எழுத்து

 

எல்லா இடத்திலும் பின்பற்று …

எல்லோர் இடத்திலும் செலுத்து …

நீயும் ஞானியாவாய் ….

அன்பு ….!!!

 

#######

 

உறவுகளிடம் சிக்கி தவிக்கும்….

உதறிவிட்டால் வாழ்க்கை வெறுக்கும்…

இதுவும் ஒரு அழியாத கல்லறைதான் …

பாசம் …..!!!

 

#######

 

உள்ளவன் இல்லாதவனுக்கும் ….

இருப்பவன் அனைவருக்கும் ….

வற்றாத ஊற்றாய் கொடுக்கணும் …

கருணை ….!!!

 

########

 

இல்லாதவன் இருப்பதுபோல் …

இருப்பவன் பிரபல்யத்துக்காகவும்

மாறி மாறி போடுவது ….

வேசம் …..!!!

 

#########

 

சந்தித்தால் வேதனையை தரும்

சந்திக்காமல் சாதித்தவர்கள் இல்லை

சிந்தித்து செயல்பட வைக்கும் கருவி

தோல்வி ….!!!

 

#########

 

நெருங்கும் போது கைவிட்டவரும் ….

கையில் கிடைத்த போது மமதையும் ….

தோல்வியை சந்தித்தால் கிடைப்பதும் ..

வெற்றி ….!!!

 

#########

 

நான் நானாக இல்லாமல் இருக்க

அவள் அவளாக இருக்காமல் ..

வாட்டி வதைப்பது இந்த …..

காதல் ….!!!

 

#########

 

நாவுக்கு எப்போதும் அழகு …

மேடைக்கு எப்போதும் தேவை …

நாணயத்தை எடுத்து காட்டும் ….

பேச்சு …..!!!

 

##########

 

இருந்தால் உயிர் என்கிறார்கள்

நின்றால் சவம் என்கிறார்கள் …

உள் வெளியாக ஓடித்திரியும்

மூச்சு ……!!!

 

#########

 

ஆரம்பம் இருந்தால் நான் இருப்பேன்

என்னை அடையும் வரை அலைச்சல் …

கிடைத்தவுடன் மகிழ்ச்சியாகும் …

முடிவு …..!!!

  • தொடங்கியவர்
காதலின் படிமுறை
 
 
காதல் அரும்பு
************************
கூட்டத்தில் நெரிந்து
கொண்டு கூத்தாடி  போல்நின்றேன் 
நீ பார்த்த பார்வையில் உறைந்து போனேன்  
அந்த கணமே
அரும்பியது காதல் மொட்டு 
உன் மீது ஊமை காதல் .
 
++
காதல் ஏக்கம்
************************
மீண்டும் எப்போது சிந்திப்போம் ..மீண்டும் ..?
நேற்று நடந்தது விபத்தா ?விளையாட்டா ?
தினம் தினம் ஏங்கி ஏங்கி நாட்கள் 
கூட வருடம் போல் நகர்ந்தது …………!
 
++
காதல் மலர்வு
**************************
காதல் என்பது இறைவன் இணைப்பு ..!
விதியும் மதியும் இணைவதால் ஏற்படும் பிணைப்பு
மீண்டும் ஒரு முறை வந்தது அந்த வசந்தம்
இம் முறை விளையாட்டு அல்ல உறுதி …!
 
++
காதல் வாழ்க்கை
****************************
தினம் தோறும் தனியே உணவு அருந்தியதில்லை
தினம் தோறும் தனியே உறங்கியதில்லை
தினம் தோறும் தனியே வெளியே செல்லவில்லை
இதல்லாம் நடக்கிறது என் கற்பனையில் ………!
 
++
காதல் வலி
**********************
சந்திக்கும் நேரம் சறுக்கினால் சண்டை இடுவாய்
சற்று நேரம் ஊமையாகி என்னை உறயவைப்பாய்
முள் வினாடி கம்பி முள்போல் குத்தியோடும்
உனக்கும் விளங்கும் காதல் வலிக்குதான் என்று
 
++
காதல் ஊடல்
***********************
வலி அதிகரித்தால் தான் ஊடல் அதிகரிக்கும்
வலிக்கும் ஊடலுக்கும் \”நேர்கணிய தொடர்பு \”
ஊடலின் உச்சம் நீ தந்த முத்தம்
குளிக்கக்கூட வில்லை முத்தம் கரையுமென்று 
 
++
காதல் தோல்வி
************************
குறுக்கிட்டது நமக்கிடையில் மூன்றாவது தலை
நம் தலையை தனித்தனியாய் பிரித்துவிட்டது
குற்றுயிரும் குறைஉயிருமாய் பலநாள்இருந்தோம்
என்னவென்றாலும் செய்து தொலை என்றது மூன்றாம் தலை ……!
 
++
காதல் வெற்றி
***********************
காதலின் வெற்றி காதல் திருமணம் ..!
வாழ்நாள் முழுவதும் -உன் சுவாசத்தில் 
என் இதயம் இயங்குயது தான் …!
காதல் வெற்றி …
 
++
காதல் கைமாற்றம்
******************************
காதலில் வெற்றிகண்ட காதலர் நாம்
நம் குழந்தை காதலித்தால் எப்படி ? தடுப்பது ?
அப்படி தடுத்தால் காதல் எப்படி ? வளர்வது ?
நம் குழந்தையும் காதல் திருமணம் தான்
 
++
காதல் மரணம்
************************
உள்ளத்தால் வரும்காதல் மரணம் வரை இருக்கும்
இந்த உண்மை நமக்கும் பொருந்தும்
தொல்லையில்லாமல் சோடியில்ஒன்று மடிந்தது
பூ விழுந்தால் காம்பு மிஞ்சுமா ? 
அதுவும் விழுந்தது
 
++
நீ காதலில் எந்த நிலை ....?
  • தொடங்கியவர்

என் ஊரை காணவில்லை

நான்கு திசையும் வயல்கள்

நாலாபுற‌மும் குளங்கள்

ஊர் மத்தியில் அம்மன்

ஆலயம் எல்லை புறத்தில்

வீர‌ பத்திரர்

பைரவர்

அய்யனார் ஊரை காக்கும்

கடவுள்களாய்…..!!!

 

சிறு படகுடன் நிறைந்த‌

கடற்கரை தொலைதூரத்தில்

உடைந்த‌ கட்டுமரங்களும்

ஆங்காங்கே சிதறிகிடக்கும்

வரையறுக்கப்பட்ட‌ குடிசைகள்

கிராமிய‌ பண்பாட்டை

மாற்றாத‌ வாழ்க்கை முறை….!!!

 

மாலை நேரத்தில் ஆலமரத்தடி

அறிவு தாத்தாக்களின் மன்றம்

மழைக்கு கூட‌ பாடசாலை

பக்கம் ஒதுங்காதவர்கள்

புராணக்கதையிலும்

உலக‌ நடப்பிலும்

படிக்காதமேதைகள்…….!!!

 

பச்சை மரமொன்றில்

பழங்கள் எதுமில்லை

கறுப்பாய் ஒரு கனி

அதன் பெயர் தேன் கூடு

அதற்கு ஒரு கல்லால் எறிந்து

தேனிகலைக்கும்போது

தலை தெரிக்க‌ ஓடும் சிறார்கள்….!!!

 

இத்தனையும் அனுபவித்து சுவைத்த‌

அற்புத‌ மனிதன் நான்

காலம் கடந்து என் பிள்ளையுடன்

என் ஊருக்கு போனேன் கனவுகளுடன்

அம்மன் கோயில் இராஜ‌ கோபுரத்தை

காணவில்லை ‍சிறு கூடாரத்துக்குள்

முடங்கி இருந்தால் என் தாய்

காவல் தெய்வங்கள் இருந்த‌

கால‌ சுவடியை கூட‌ காணவில்லை ……!!!

 

என் கனவு மட்டும்

தவுடு பொடியாகவில்லை

என் ஊரும் தவுடு பொடியாகிவிட்டது

ஆலமரம் கூட‌ அங்கவீனமாய்

கிளைகள் உடைந்த்த‌ நிலையில்

வீடுகள் எல்லாம் துப்பாக்கி

துளையால் அரிதட்டானது

ஓடி விலையாடிய‌ வயலுக்குள்

இறங்க‌ விரும்பினேன் அருகில்

ஒரு பலகை ..கவனம்

வெடிக்கும் இறங்காதீர் இறங்காதீர்….!!!

 

என் ஊரை காணவில்லை

என் உறவுகளை காணவில்லை

ஓடி விளையாடிய‌ என் நண்பர்களை

ஓரிரு இடங்களில் புகைப்படத்தில் பார்த்தேன்

இது கவிதை இல்லை நான் நேரில்

கண்ட‌ அனுபவித்த‌ துன்பங்கள்

தூரத்தில் என் பழைய‌ நண்பன்

ஓடி வந்து கட்டிப்பிடித்தான்

முடியவில்லை அவனால்

ஒரு கை இல்லை …….!!!

 

(அனுபவ‌ கவிதை)

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
தொழிலாளர் தினம் ......!!!
 
உழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....
உழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....
உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....
ஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....
உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர்....!!!
 
களைப்பில் உழைப்பின் முதுகு ....
கேள்விக்குறியாய் வளைந்தது ....
சளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....
அடக்கப்பட்டனர், ஒதுக்கபட்டனர் ....
திருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....!!!
 
தூங்கியவர்கள்  விழித்து கொண்டனர் ....
திரட்டி கொண்டனர் தம்பலத்தை .....
நுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....
நிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....
வெடித்தது தொழிலாளர் போராட்டம் .....!!!
 
நோக்கம் நிறைவேறும்வரை  ......
உக்கிரமானது சர்வதேசப் புரட்சி......
உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....
உழைக்கும் நேரம் எட்டுமணியாக .....
உரிமையை போராடி வென்றனர்.....!!!
 
போராடி வென்ற தொழிலாளர் தினம் .....
பேச்சளவில் இன்று சட்டத்திலும் ...
சிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...
மனத்தால் உழைப்பின் புனிதத்தை ...
உணரும் நாள் என்று உதயமாகிறதோ ....
அன்றே உண்மைதொழிலாளர் தினம் ......!!!
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
காதல்
எல்லோருக்கும் வரும்
எனக்கு போய்விட்டது 
+
sms கவிதை
 
-------
 
பூக்கள் வாசனைக்காக 
பூக்கவில்லை 
தன் வாழ்க்கைக்காக 
பூக்கிறது - காதலும் 
அப்படித்தான் ....!!!
+
sms கவிதை
 
------
 
நீ காதலிக்காது
விட்டாலும் எனக்கு
காதல் வந்திருக்கும்
உன்னை பற்றிய 
கவிதை ...!!!
 
+
sms கவிதை
 
-------
 
கவிதைக்கு கற்பனை.....
வேண்டும் -உன்னை....
நினைத்தால் கற்பனை.....
வரமுன் கண்ணீர் ....
வருகிறது ....!!!
+
sms கவிதை
 
-------
 
காத்திருப்பது காதலுக்கு 
அழகுதான் -ஆனால் 
இதயத்துக்கு வலி ...!!!
+
sms கவிதை
 
  • தொடங்கியவர்
நீ போகும் பாதை உன் பாதை ....!!!
 
இளைஞா...  இளைஞா....
தமிழ் இளைஞா காத்திடு காத்திடு 
நம் பண்பை போற்றிடு போற்றிடு ...
தமிழ் தாயை பேணிடு பேணிடு ...
தமிழன் வரலாற்றை- தமிழன் ...
வெல்வான் தமிழன் வெல்வான் ....
உலகம் ஒருநாள் நிச்சயம் பார்க்கும் .....!!!
 
(இளைஞா...  இளைஞா....)
 
உன்னிலிருக்கும் உன்னத திறனை ....
உன் எண்ணத்தால் திறந்துவிடு .....
உன்னை நீயே ஏளனப்படுத்தும் .....
உன் எண்ண தீயால் எரித்துவிடு ....
போகும் பாதையை தேடாதே ....
நீ போகும் பாதை உன் பாதை ....!!!
 
(இளைஞா...  இளைஞா....)
 
ஆலம் விழுது மண் நோக்கி விழும் ...
எண்ண விழுதை விண் நோக்கி எறி ....
ஆண்டவன் சாட்டி ஒதுங்கும் -நீ 
அடங்கியிருக்கும் சங்கிலியை உடை ....
நாளை என்பது சோம்பேறியின் சொல் ....
இன்றே என்பது வீரனின் செயல் .....!!!
 
(இளைஞா...  இளைஞா....)
  • 1 month later...
  • தொடங்கியவர்

உதிர்ந்து கொண்டிருக்கும் காதல்

 

உயிரே ....
என்னிலிருந்து - நீ 
விலகுவது புரிகிறது .....
அழுவதற்கு அசிங்கப்பட்டு ....
இருட்டறைக்குள் அழுகிறேன் ....
சாப்பிடுவதுக்கு விருப்பம் இன்றி ...
சாப்பிட்டவன் போல் நடிக்கிறேன் ....!!!

உன்னோடு பேசிய நிமிடங்கள் ....
உன்னோடு நடந்த வீதிகள் ....
உனக்காய் உன்னை வரைந்த ஓவியம் ....
எனக்கென எதையும் செய்யாமல் ...
உனக்காக வாழ்ந்த வாழ்க்கை .....
அத்தனையும் வீணாக போனது ....
கவலையில்லை -காதலும் ....
இல்லாமல் போய்விட்டதே ....!!!

உனக்காக ஒரு கவிதை எழுத ...
எழுதுகருவியை எடுக்கிறேன் ...
மறுக்கிறது கருவி எழுத மாட்டேன் ....
ஈரமுள்ள இதயத்துக்கே  கவிதை ....!
உனக்காக இறுதி ரோஜாவை ....
பறித்தேன் - உதிர்ந்து விழுந்தது ...
உன்னைப்போல் இரக்கமற்று ....!!!

  • 7 months later...
  • தொடங்கியவர்

காதலை காயப்படுத்தாதே

என்னை 
காயப்படுத்துவதாய் ....
நினைத்து காதலை ....
காயப்படுத்தாதே ....!!!

இத்தனை நாள் ...
பத்திரமாய் இருந்த நீ 
இப்படி இதயத்தை ....
காயப்படுத்துகிறாய் ....!!!

சிறையில் இருந்து ...
தப்புவதற்காக கைதி ....
சிறை சாலையை ...
சேதப்படுத்துவதுபோல்....
என் இதயத்தை 
சேதபப்டுத்தி இருகிறாய் ,,,,!!!

நான் ஒரு மூடன் ....
நீ காதலோடு இருகிறாய் ...
என்ற கற்பனையில் ...
வாழ்ந்து விட்டேன் ...
சற்று ஜோசித்திருந்தால் ...
நானே உன்னை விடுத்தலை ....
செய்திருக்கலாம் ....!!!

போகட்டும் விட்டுவிடு ....
காதல் என்றாலும் தப்படும் ...
காதலை  காயப்படுத்தாதே ...!!!

  • 1 month later...
  • தொடங்கியவர்

எனக்குள் இருவர்

 

எனக்குள் இருவர் .....
ஒருவர் ஆசான் ....
மற்றவர் கவிஞர் ......!!!

நிர்ணயிக்கப்பட்ட கல்வியை   ....
வடிவமைக்கபட்ட பாடத்தை ....
பக்கங்கள் ஒன்றும் விடாமல் ....
பக்குவமாய் படித்து பட்டதாரியாகி  .....
கற்பித்தலை தொழிலாக ...
எடுத்த ஆசான் ஒரு வடிவம் .....!!!

காண்பதெலாம் வாழ்க்கையாக்கி .....
காண்பதெல்லாம் காதல் கொண்டு ....
உண்மையோடு சில பொய்களை ....
உலகம் விரும்பும் வகையில் ....
உருவாக்கி கவிதை வடிவில்  ....
கவி எழுதுவதை கடமையாக ....
கொண்ட கவிஞன் ஒரு வடிவம் ....!!!

சமூகத்தை துப்பபரவாக்கி ....
வாழ்வதற்கு மனத்தை வளமாக்கும் ...
ஆசானாக தொழிற்படுவதா ....?
மனதை துப்பரவு செய்து .....
வரிகளை வடிவங்களாக்கி ....
வாழ்கையை வசந்தமாக்கும் .....
கவிஞனாக்கும் கடமையை ....
செய்வதா ....?
எனக்குள் இருக்கும் இருவரின் ....
போராட்டம் இதுதான் ....!!!

உண்மையை மட்டும் படித்து ....
கற்பனையில் வாழும் ஆசான் ....!
உவமைகளை உண்மையாக்கி ....
பொய்யான உலக வாழ்க்கையை....
கோடிட்டு காட்டும் கவிஞன் ....!
உனக்கும் பிறருக்கும் முடிந்தவரை ....
உதவி செய்யும் மனிதனே ...
மனிதம் உடையவன் ...
ஆசானாக இருந்தாலும் சரி ....
கவிஞனாக இருந்தாலும் சரி ....
எனக்கும் இருப்பவன் ஒருவனே ....!!!


 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

அர்த்தமுள்ள கவிதைகள் ....!!!

ஒவ்வொரு மனிதனும் ....
அதிஷ்டத்தோடு பிறக்கிறான் ....
கண்டு கொள்ளும் அறிவை .... 
ஒருசிலரே பெற்றுள்ளனர் ...!!!

உண்மை அதிஷ்டம் ....
ஒருவன் தன்னை தானே ....
உணர்வதுதான் .....
நிறை குறை இரண்டையும் ....
சமமாக தூக்கி பார்க்கும் ....
திறன் கொண்டவன் ....!!!
அதிஷ்டசாலி ....!!!

^
அர்த்தமுள்ள கவிதைகள்- 01 ....!!!
கவிப்புயல் இனியவன் 
 

  • 1 month later...
  • தொடங்கியவர்

காதல் சோகக்கவிதை

 

காதலின் ஆழம் ....
கண்நீர்விடும்போது ....
மற்றவரும் சேர்ந்து ....
கண்ணீர் விடுவதில்லை ....!!!

உயிர் விட்டு போகும் .....
உடலுக்காக விடும் ....
கண்ணீரை விட கொடுமை ...
உயிராய் காதலித்தவர் ,,,,
விட்டுப்பிரியும்போது ....
ஓரக்கண்ணில் வடியும் ...
சிறுதுளி கண்ணீர் ....!!!

^
காதல் சோகக்கவிதை 
கே இனியவன் 

  • தொடங்கியவர்

தேர்தல்


-----------
மெய்யும் பொய்யும் ....
தேர்தலில் போட்டியிட்டன ....
மெய்யின் ஆதரவாளர்கள் ....
மிகக்குறைவு -பொய்யின் ...
ஆதரவாளர்களோ .....
குவிந்து செறிந்து பரந்து ...
காணப்பட்டன .....!!!

பொய்யின் தேர்தல் ...
பிரச்சாரத்தில் பேச்சுகள் ....
தூள் பறந்தது கைதட்டல் ....
வானை பிழந்து சென்றன ....
ஆதரவாளர்கள் உங்கள் ஆட்சியே ...
எங்களுக்கு வேண்டும் .....
நீங்கள் இல்லாத ஆட்சி .....
எங்களுக்கு வேண்டவே வேண்டாம் ....
என்று கோஷமிட்டனர்.....!
மெய்யின் பிரச்சாரத்தில்....
ஆங்காங்கே ஒருசிலர் ......!!!

தேர்தல் முடிவு வெளியானது .....
பொய் கட்சி அமோக வெற்றி ...
மெய் கட்சியினர் கட்டு பணத்தை ...
இழந்தனர் .எதிர் கட்சியே இல்லாமல் ....
பொய் கட்சியினர் அரசை அமைத்தனர் ....
மெய் கட்சி தலைவர் சிறையில் ....
அடைக்கப்பட்டார் ......!!!

பொய்களே அரச கொள்கையானது ....
லஞ்சமே தேசிய தொழிலானது ....
உண்மை பேசியோர் சிறையில் ....
அடைக்கப்பட்டனர் - லஞ்சம் ...
கொடுக்க மறுத்தோர் நாக்கு ....
அறுக்கப்பட்டது - மெய் பேசியோர் ...
பொய்பேசியோர் வீடுகளில் ....
உயிர் பிச்சை கேட்டு கெஞ்சினர் ......!!!

பொய் பேசாத தனியார் நிறுவனங்கள் ....
லஞ்சம் கொடுக்காத நிறுவனங்கள் ....
அரசை புகழ்ந்து பேசாத நிறுவனங்கள் ....
அரசுடமையாக்கப்பட்டன .......!
பொய் பேசும் அண்டைநாடுகளுடன் ....
வலுவான ஒப்பந்தம் போட்டனர் ....
தலைவர்கள் கை குலுக்கினர் ....
ஆட்டம் போட்டனர்  சென்றனர் .....!!!

அரசின் இலவசத்திட்டங்கள் .....
பொய் சொல்வோருக்கு அதிகரித்தது ....
மறந்து போய் மெய் சொன்னவர்களுக்கு .....
இலவச திட்டங்கள் நிறுத்தப்பட்டன ....
துரோகிகளாக தனிமைபடுத்தப்பட்டனர்....!
மெய் கட்சி தலைவரை சிறையில் ....
பொய்கட்சி பிரமுவர்கள் சந்தித்தனர் ....
ஒரே ஒரு பொய் சொல் உன்னை ....
விடுதலை செய்கிறோம் என்றனர் ....
என்றோ ஒருநாள் விடுதலை ...
கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ....
மெய் கட்சி சிறையில் வாடியது ....!!!


 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.