Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சித் தலைவர் யார்? முறையாக அறிவிப்பு வந்தால் உண்மையாக செயற்படுவோம்! இரா.சம்பந்தன்

Featured Replies

எதிர்கட்சித்தலைவராக இருப்பதற்கு முறையாக அறிவிக்கப்பட்டால் நாம்ட உண்மையாகச்ஹ செயற்படுவோம் எமது செயற்பாடுகள் அனைவரையும் திருப்திப்படுத்தும் நேர்மையுடையதாக இருக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பாக சம்பந்தன் கொழும்பு ஊடகமொன்றுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த செவ்வாயக்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் கட்சித் தலைவர்களை அழைத்து பேச்சுநடத்தும் வகையில் என்னை அழைத்துப் பேச்சு நடத்தினார். இதன்போது எதிர்க்கட்சி தலைவர் விவகாரமும் பேசப்பட்டது.

தற்பொழுது பாராளுமன்றத்தில் ஐ.ம.சு.முன்னணி, ஐ.தே.கட்சி, த.தே.கூட்டமைப்பு, ஜ.ம.முன்னணி ஆகிய நான்கு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.இந்தநிலையில் இரு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன.

அந்தவகையில் இரு பிரதான கட்சிகளில் ஒன்று எதிர்க்கட்சியாக இருக்கமுடியாது. அடுத்து பெரும்பான்மை கட்சிக்கே எதிர்க்கட்சி பதவி வழங்கப்பட வேண்டும். இவ்விடயம் தொடர்பில் நானும் சபாநாயகரும் பேசிக்கொண்டோம்.

எதிர்க்கட்சிப் பதவி த.தே. கூட்டமைப்புக்கு வழங்கப்படுமானால் அது குறித்து ஆச்சரியப்படவோ, வழங்கப்படாவிட்டால் கவலைப்படவோ போவதில்லை எவ்வாறெனினும் நாம் உண்மையாகச் செயற்படுவோம் என்றார்.

இதேவேளை தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து எதிர்க்கட்சியை உருவாக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும், இது தொடர்பில் சபாநாயகரிடமும் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளோம் எனவும் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹஸன் அலி அவர்கள், எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு சம்பந்தன் அவர்களே பொருத்தமானவர் என்றும் தற்பேபாது அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நாம் பூரண ஆதரவை வழங்குவோம் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்து அரசாங்கம் அமைத்திருப்பதால் பாராளுமன்ற விதிமுறைப்படி தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென சம்பிக்க ரணவக்க அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதனிடையே சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு நியமிக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என ஐ.ம.சு. முன்னணியின் மாற்றுக்குழு உறுப்பினர்களான வாசு, விமல், தினேஷ், கம்மன்பில ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தேசிய அரசாங்கம் அமைக்க நாம் ஆதரவளித்தாலும் தான் எதிர்க்கட்சி தலைவர் பதவியிருந்து விலகப் போவதில்லை எனவும் தாம் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தவே அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டோம் என்றும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவில்லையெனவும் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற விவகாரத்துக்கு எதிர்வரும் 7ம் திகதி முடிவு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.tamilwin.com/show-RUmtyETZSUkr4F.html

Edited by Surveyor

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.