Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Pen….. People….. Performances

Featured Replies

Dr.Ajay Joshi இனுடைய நூல் பல்வேறு நிலைகளில் முக்கியத்துவ முடையதாக இருக்கின்றது"

pen1_CI.png

 

Pen….. People….. Performances எனும்  Dr.Ajay Joshi இனுடைய நூல் பல்வேறு நிலைகளில் முக்கியத்துவ முடையதாக இருக்கின்றது.

அரங்கு நாடகம் ஆற்றுகைகள் குறித்த பல்வேறு தகவல்கள், குறிப்பாக இந்தியாவின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அரங்க நிகழ்வுகளின் பதிவுகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

நிகழ்வுகளின் பதிவுகளோடு பங்குபற்றுனர்களது பகிர்வுகளும் காத்திரமான மதீப்பீடுகள் சிலவுமாக அமைந்துள்ள இந்நூல்இ வழமையான ஆவணப்படுத்தல் அல்லது பதிவு முறைமைகளிலிருந்து விலகி நிகழ்விற்கேற்ப எளிமையாகவும் இயல்பாகவும் சுவாரஷியமாகவும் தகவல்களை பரிமாறி நிற்கின்றது.

இந்நூல்இ ஒருபுறம் சமகால உலக அரங்கப்போக்குகளோடு எமது சூழலின், பிரதேசங்களின் முன்னெடுப்புக்களை ஒப்பிட்டுப்பார்க்கவும், அந்த ஓட்டத்துடன் இணைத்துப் பார்க்கவும் வழியேற்படுத்துகின்றது, மறுபுறம் எமது அரங்க முன்னெடுப்புக்கள் அவற்றின் பதிவுகளது பலம், பலவீனம் குறித்த மதிப்பீடுகளை மேற்கொள்ளவும் துணை செய்கின்றது.

இந்நூலில் இலங்கையில் முன்னெடுக்கப்படுவதான இரு வகை அரங்க முன்னெடுப்புக்கள் குறித்த விபரங்கள் அவ் அரங்க முன்னெடுப்பாளர்களுடனான நேர்காணல்கள் வழி பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவை ஜனகரலிய மொபைல் தியட்டர்; (janakaralia mobile theatre)  குறித்த  பராக்கிரம நிரியல்லவுடனான நேர்காணல் மற்றையது வ்ளக் வொக்ஸ் தியட்டர் (Black box theatre)  குறித்த ஆ.சபீருடனான நேர்காணல்.

ஜனகரலிய மொபைல் தியட்டரின் உருவாக்கம், முன்னெடுப்புக்கள் சமகால நிலவரம் குறித்த தகவல்களை பொதுவாகப் பதிவு செய்துள்ள பராக்கிரம நிரியல்லவுடனான நேர்காணலில் இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழக அரங்க முன்னெடுப்புக்கள் குறித்த தகவல்களும் பகிரப்பட்டுள்ளன.

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நடன நாடகத்துறையுடன் இணைந்து 'மிருட்ஷ கடிகம்' எனும் நாடகத் தயாரிப்பில் ஈடுபட்டமை மற்றும் நாடகத்துறை மாணவர்களுக்கான களப்பயிற்சிகள சிலவற்றை சு.வி.அ.கற்கைகள் நிறுவக நடன நாடகத் துறையின் ஏற்பாட்டில் நடாத்தியமை ஆகிய பின்புலத்தில்; பராக்கிரம நிரியல்ல இத்துறையின் அரங்கச் செயற்பாடுகள் மீதான சில மதிப்பீடுகளை முன்வைத்துள்ளார்.

பராக்கிரம நிரியல்லவினது தனிப்பட்ட கருத்துப் பகிர்வாக இது இருக்கின்றபோதும் ஒரு பல்கலைக்கழகம் சார்ந்த அதுவும் கிழக்கிலங்கையின் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு இடத்தின், துறையின் அத்துறை சார் ஆசிரியர் மாணவர்களது முன்னெடுப்புக்கள் குறித்த பகிர்வாக அமைகின்ற நிலையிலும் இலங்கையில் அறியப்பட்ட அரங்கச் செயற்பாட்டாளர் ஒருவரது பகிர்வாக அமைந்துள்ள நிலையிலும் அச்சில் வெளிவந்துள்ளதும் வெளியுலகிற்கும் பரவலடையத்தக்க வாய்ப்பைக் கொண்டுள்ளதுமான ஒரு தொகுப்பில் பகிரப்பட்டுள்ள கருத்தாடல் என்ற நிலையிலும் இது மிகுந்த கவனிப்பிற்குரியதாகின்றது.

இங்குஇ நவீன மற்றும் சமகால அரங்கப் போக்குகள், முறைமைகள் அரங்கில் அதன் பிரயோகம் குறித்த அறிவும் திறனும் கிழக்குப்பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு போதியளவு இல்லை என்பதாகவும், சமகால உலக நிலவரங்களோடு ஒத்திசைந்து போகும் அப்பார்வையுடன் பயணிக்கும் மனோபாவம் அற்றிருப்பதாகவும் மாறாக பராம்பரியமான தமது சமூக அரங்குகளை அதன் இயங்குநிலையில் பயில்வதிலேயே இறுக்கமாக இருப்பதாகவும் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

மேலும் இந்த மனோபாவமே இலங்கைத் தமிழ் அரங்க வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்றும் கூறும் பராக்கிரம நிரியல்ல அவர்கள் நாட்டில் நடைமுறையிலிருந்த முரண்பாடுகள் உலக நிலவரங்களை அறிவதற்கும் பின்பற்றுவதற்குமான வாய்ப்புக்களை தடுத்துள்ளதாக நம்பிக்கையும் தெரிவிக்கின்றார்.

இலங்கைத் தமிழ் அரங்க முன்னெடுப்புக்களுடனும் முன்னெடுப்பாளர்களுடனும் ஓரளவேணும் தொடர்பினை வைத்துள்ள இலங்கையின் தென்பகுதியைச் சேர்ந்த அரங்கவியலாளர்கள் சிலருள் ஒருவராக அறியப்பட்டுள்ளதற்கும் அப்பால்  பராக்கிரம நிரியல்ல அவர்களுக்கு கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தினதும் கிழக்கின் தமிழ்ப் பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் அரங்க நடைமுறைகளுடனும் ஓரளவு பரிச்சயம் அல்லது அறிதலும் உள்ளது.

இந்நிலையில் அவரால் பகிரப்பட்டுள்ள மேற்படி கருத்துக்கள் ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றன. இத்தகைய கருத்துக்கள் குறித்து உரையாடல்களை மேற் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகின்றன.

அரங்கை ஒரு கலையாகவும் கல்வித்துறையாகவும் வாழ்க்கை முறைமையாகவும் கொண்டு கடந்த 10 வருடங்களுக்கு மேலாகச் செயற்பட்டு வரும் ஒருவர் என்கின்ற நிலையிலும் கிழக்குப்பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் அரங்கச் செயற்பாடுகளை அறிந்து அதன் முன்னெடுப்பாளர்களுள் ஒருவராகவும் உள்ளவர் என்ற நிலையிலும் பராக்கிரம நிரியல்ல அவர்களது மேற்படி கருத்துக்கள் மீதான அடிப்படையான சில கேள்விகள் அல்லது சந்தேகங்கள் என்னுள் எழுந்துள்ளன. இவை மேலும் உரையாடல்களுக்கும் உரியவையாகின்றன. அதாவது பராக்கிரம நிரியல்ல அவர்கள்,

    நவீன அல்லது சமகால அரங்க முறைமைகள் முன்னெடுப்புக்கள் அரங்கில் அவற்றின் பிரயோகம் பற்றிய அறிவு கிழக்குப் பல்கலைக் கழகத்தின் அரங்கத்துறையினருக்கு இல்லை என்பதான கருத்தை எவ்வாறுஇ எதனடிப்படையில் அல்லது எந்த அளவு கோலின் பிரகாரம் முன்வைக்கின்றார்?

    நவீனம் என்பதை எத்தகைய வரைபில் அல்லது  வரையறையிலிருந்து பார்க்கிறார்? 

    சமகால உலக அரங்க நிலவரங்களைப் புரிந்த நிலையில் அதனுடன் பயணிக்கத்தக்க மனோபாவம் இங்குள்ள விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இல்லை என்பதான கருத்தை எத்தைகைய புரிதலில் அல்லது மனோபாவத்தில் அவரால் முன்வைக்க முடிந்துள்ளது?

    சமகால உலக நிலவரங்கள் குறித்த தமது புரிதலிலிருந்து பார்த்ததன் அல்லது கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சமகால நாடக அரங்கச் செயற்பாடுகள் குறித்த சரியான புரிதலின்மையாலும் அச்செயற்பாடுகளின் வழி அவற்றை அறிய முற்படாமல் போனதாலும் வெளிப்பட்ட கருத்தாக இவை இருக்குமோ?

    தமிழ் அரங்க வளர்ச்சி குறித்த கரிசணை பாராட்டுக்குரியது எனினும், தமிழ் அரங்க வளர்ச்சி அதற்கான இடையூறுகள் பற்றிப் பேசும்; பராக்கிரம நிரியல்ல அவர்கள் தமிழ் அரங்க வளர்ச்சி என்று எதைச் சொல்கிறார்? எந்தக் கருத்தாக்கத்தில் வளர்ச்சிப் பற்றி பேசுகிறார்? வளர்ச்சிஇ வளர்ச்சியின்மையை மதிப்பிட அவர் கையாண்டுள்ள கருவிகள் எவை?

    பாரம்பரியம், பண்பாடு, அடையாளம் என்பதான வழமையான கருத்தாடல்களுக்கும் அப்பால் சமகால உலகச் சவால்களை காத்திரமான வழிகளில் எதிர்கொள்வதற்கும் தொடர்ந்து பயணிப்பதற்குமான வளமான சாத்தியப்பாடுகளை பாரம்பரிய அரங்குகள் வழங்குகின்றன என்ற புரிதலின் அடிப்படையில் சமூக இயங்கு நிலையில் அவற்றைப் பயில்வதன் அவசியம் பலராலும் பல நிலைகளிலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இச்சூழ்நிலையில் தம் பாரம்பரிய சமூக அரங்குகளை பயில்வதில் கிழக்குப் பல்கலைக்கழக சமூத்தினர் இறுக்கமாக இருக்கின்றனர்இ உலக நிலவரங்களை விளங்கிக் கொள்வதற்கும் ஒத்திசைந்து போவதற்குமான மனோநிலை இல்லாமலிருப்பதற்கு மேற்படி பயில்வே காரணமாக இருக்கின்றது என்பதாக பராக்கிரம நிரியல்ல முன்வைக்;கும் கருத்து முரணாக இருக்கிறதல்லவா? 

த.விவேகானந்தராசா.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119315/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.