Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமுதினிப் படகு கோரப்படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு லண்டனில்

Featured Replies

Kumuthini_CI.jpg

 நெடுந்தீவு குமுதினிப் படகு கோரப்படுகொலை இடம்பெற்று நாளையதினத்துடன் 30 ஆண்டுகள் ஆகின்றன. ஈழத்தமிழர்களின் மனதில் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்துக்குப் பின்னர் மீண்டும் ஒரு பழிதீர்க்கும் படலமாக மிகப்பெரிய இனப்படுகொலையாக 1985 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நடுக்கடலில் நடத்தப்பட துயரச் சம்பவமே குமுதினிப் படகுப் படுகொலையாகும். அந்த அனர்த்தத்தில் உயிர் தப்பியவர்களுக்கு இன்றையவரையிலும் உயிரைக் கிலிகொள்ளவைக்கும் சம்பவமாகவே அது அமைந்தது.

அன்றைய நாள் 65 பயணிகளுடன் நெடுந்தீவில் இருந்து புங்குடுதீவு குறிகாட்டுவான்துறை நோக்கி வந்துகொண்டிருந்த குமுதினிப் படகை நடுக்கடலில் வழிமறித்த இலங்கை கடற்படையினர் அதிலிருந்த ஆண்கள், பெண்கள்,மாணவிகள், குழந்தைகள், வயதானவர்கள் என எந்தவித பாகுபாடுமற்று மிகக்கொடூரமாக கண்ட கோடரிகளால் வெட்டியும் குத்தியும் அடித்தும் 36 பேரை படுகொலை செய்தனர். ஏனைய பயணிகள் குற்றுயிரும் குலையுயிருமானார்கள்.

நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த குமுதினிப் படகை கண்டவர்கள் புங்குடுதீவு கரைக்கு இழுத்துவந்து படுகாயமடைந்தவர்களை வைத்திய சாலைகளில் அனுமதித்தனர். குமுதினி கோரத்தாண்டவத்தில் 7 மாதக் குழந்தை முதல் 70 வயது வயோதிபப்பெண் உட்பட 36 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 28 பேர் படுகாயங்களுக்குள்ளானார்கள்.

தமிழர்களால் மறக்க முடியாத குமுதினிப் படகு படுகொலையில் உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூரும் அஞ்சலி நிகழ்வு பிரித்தானியாவில் நாளை சைவ முன்னேற்றச்சங்க மண்டபம் சலிஸ்பரி வீதி மனோர்பார்க் ஈஸ்ட்ஹாம் (E12 6AB) என்ற இடத்தில் நடைபெறுகின்றது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119754/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

குமுதினிப் படகு கோரப்படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு லண்டனில் இடம்பெற்றது

 

நெடுந்தீவு குமுதினிப் படகு கோரப்படுகொலை இடம்பெற்று இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகின்றன. ஈழத்தமிழர்களின் மனதில் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்துக்குப் பின்னர் மீண்டும் ஒரு பழிதீர்க்கும் படலமாக மிகப்பெரிய படுகொலையாக 1985 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நடுக்கடலில் நடத்தப்பட துயரச் சம்பவமே குமுதினிப் படகுப் படுகொலையாகும். 

 
இந்த வகையில் தமிழர்களால் மறக்க முடியாத குமுதினிப் படகு படுகொலையில் உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூரும் அஞ்சலி நிகழ்வு பிரித்தானியாவில் இன்று சைவ முன்னேற்றச்சங்க மண்டபத்தில் இன்று  நடைபெற்றது.
 
நெடுந்தீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்… இந்த நிகழ்வில் கருத்து வெளியிட்ட சங்கத்தின் தலைவர் நடராசா ராசேந்திரம் வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசனின் முயற்சியால் இந்திய அரசின் உதவியின் கீழ் 150 பேர் பயணிக்கும் பயணிகள் படகு நெடுந்தீவு கூட்டுறவுச் சங்கத்திடம் கையளிக்கப்பட உள்ளதாக  அறிவித்தார். இதனை அங்கு சமூகமளித்திருந்த பலர் வரவேற்று கரகோசித்ததுடன் அமைச்சர் ஐங்கரநேசனிற்கு நன்றியும் தெரிவித தனர்...
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.