Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல்மைரா: பாலைவனத்தின் பழம்பெரும் வெனிஸ்

Featured Replies

150515093245_palmyra_syria_promo_624x351

பல்மைரா: பாலைவனத்து வெனிஸ் என்று பாராட்டப்படும் நகர்
 
பல்மைரா நகரைப் பார்ப்பவர்களுக்கு முதலில் எழும் சந்தேகம் இந்த பாலைவனத்தின் மத்தியில் நீண்ட நெடிய தூண்களும், கலைநயமிக்க தோரணவாயில்களும் எப்படி வந்தன என்பது. பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் இந்த வழியாகச் செல்ல நேர்ந்த பயணிகள் தாங்கள் பார்த்த காட்சியைக் கண்டு மீண்டும் மீண்டும் பிரமித்தனர். சிரியாவின் பாலைவனத்தின் மத்தியில் பாழடைந்த பழம்பெரும் நகரம். மத்திய தரைக்கடலுக்கும் யுப்ரடிஸ் நதிக்கும் இடையிலான வழியில் சரிபாதி தூரத்தில் பல்மைரா அமைந்திருக்கிறது.
பாலைவனத்தின் மத்தியில் இப்படியொரு செல்வச்செழிப்பு மிக்க பழம்பெரும் நகர் எப்படி உருவானது என்று வியப்பவர்களுக்கான பதில்--பாலையை ஒட்டிய பேரீச்சமர பசுஞ்சோலையின் எல்லையில் இது அமைந்திருக்கிறது.
 
மத்திய தரைக்கடலைப்பயனபடுத்திய வர்த்தகர்கள் தங்கி இளைப்பாறும் இடமாகவும், தங்கள் வழிப்பயணத்துக்குத் தேவையான தண்ணீரை நிரப்பிக்கொள்ளும் இடமாகவும்தான் ஆதியில் பல்மைரா உருவானது. இந்த பகுதியெங்கும் வளர்ந்து நிற்கும் பேரீச்சம்பழ மரங்களின் பெயரான பல்மைரா என்பதே இந்த நகரின் பெயராகவும் அமைந்துவிட்டது.
எங்கோ ஒரு பாலைவனத்தின் மூலையில் பல்மைரா அமைந்திருந்தாலும் மத்திய கிழக்குப்பிராந்தியத்தின் சரித்திரத்தில் இதற்கு அதிமுக்கிய இடம் உண்டு.
 
வர்த்தகர் உருவாக்கிய சாம்ராஜ்ஜியம்
 
150521125754_palmyra_1_624x351_c_nocredi
இருபெரும் சாம்ராஜ்ஜியங்களை எதிர்த்து வளர்ந்தது பல்மைரா
 
இந்த நகரின் தோற்றம் ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக துவங்குகிறது. ரோம சாம்ராஜ்ஜியத்தின்கீழ் படிப்படியாக வளர்ந்த பல்மைரா, கிறிஸ்து பிறந்த பிறகு மூன்றாம் நூற்றாண்டில் ரோம சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து தனி சாம்ராஜ்ஜியம் அமைக்கும் அளவுக்கு வளர்ந்த்து. பல்மைராவின் சாம்ராஜ்ஜியம் என்பது துருக்கியில் துவங்கி எகிப்துவரை படந்து வளர்ந்தது.
 
ரோமப்பேரரசன் அவ்ரெலியனை எதிர்த்து போரிட்ட பல்மைராவின் பேரரசி செனோபியாவின் கதை மிகவும் பிரசித்திபெற்றது. ஆனால் அந்த அளவுக்கு அதிகம் தெரியாத கதை ஒன்றும் உண்டு. அது சாசேனிய பெர்சிய பேரரசையும் பல்மைரா எதிர்த்து போரிட்டது என்பது பலருக்கும் தெரியாது.
 
மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில் சாசேனியர்கள் ரோமப்பேரரசை கைப்பற்றி அதன் பேரரசன் வலேரியனைக் சிறைப்படுத்தியபோது பல்மைரியர்கள் தான் அவர்களை போரில் வீழ்த்தி யூப்ரடீஸ் நதியை தாண்டி புறமுதுகிட்டு ஓட வைத்து ரோமானியப் பேரரசை மீட்டுக்கொடுத்தனர்.
அதன்பிறகும் பல நூற்றாண்டுகள் கிழக்கே சரிந்துவந்த தனது செல்வாக்கைத் தூக்கி நிறுத்த ரோமப்பேரரசு, பல்மைரியர்களைத்தான் நம்பவேண்டியிருந்தது.
 
பல்மைராவின் தனித்துவம்
 
மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் மிகப்பெரும் சாதனை பல்மைரா. அந்தக்காலத்தில் இருந்த ரோமப்பேரரசின் மற்ற நகரங்களைப் போன்றதல்ல பல்மைரா.
 
150521125955_palmyra_6_624x351_v_nocredi
மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் வரலாற்றுப் பெருமைகளில் ஒன்று பல்மைரா
 
காரணம் இந்த நகரம் கலை ரீதியிலும் கலாச்சார ரீதியாகவும் தனித்தன்மை கொண்டிருந்தது. மற்ற நகரங்களில் நிலச்சுவாந்தார்கள் தான் அந்த நகரின் அனைத்து அம்சங்களையும் நிர்ணயித்தனர். ஆனால் பல்மைராவில் வர்த்தகர்களே அந்நகரின் அரசியல் அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தினர். தமது பாலைவனத்தை கடக்கும் வர்த்தகர்களின் பொதிகள் சுமந்த வண்டித்தொடரணிகளை பாதுகாப்பதில் இவர்கள் தனிக்கவனம் செலுத்தினார்கள்.
 
வெனிஸ் நகரம் எப்படி உலக வர்த்தக கட்டமைப்பின் ஒரு அங்கமாக உருவாகி வளர்ந்ததோ, அதேபோல வர்த்தகத்தால் வளர்ந்தது பல்மைரா. வெனிஸுக்கு கடல் வழி வாணிபம் என்றால், பல்மைராவுக்கு பாலைவனத்துப் பாய்மரக்கப்பல்களாக இருந்தவை ஒட்டகங்கள்.
 
அதுமட்டுமல்ல, பல்மைராவுக்கும் கடல்வழிவாணிகத்துக்கும் தொடர்பு இருந்ததையும் தொல்லியல் சான்றுகள் காட்டுகின்றன. பல்மைரா நகரவாசிகள் யூப்ரடிஸ் நதியில் பயணித்து வளைகுடாவுக்குச் சென்று அதன் வழியாக இந்தியா முதல் எகிப்தின் செங்கடல் வரை கடல்வழி வாணிபம் செய்தனர்.
கீழைத்தேய நாடுகளில் அவர்கள் வாங்கி வர்த்தகம் செய்த அரும்பொருட்களில் கிடைத்த மிகப்பெரிய செல்வத்தைப் பயன்படுத்தி, தங்களின் சொந்த ஊரில் மிகப்பிரம்மாண்டமான கலைநயமிக்க மாளிகைகளைக் கட்டினார்கள்.
 
150521125821_palmyra_2_624x351_v_nocredi
வர்த்தகத்தால் வந்த செல்வமெல்லாம் வான்முட்டும் கட்டிடங்களாக வளர்ந்தன
 
இன்றுவரை பத்திரமாக பாதுகாக்கப்பட்டிருக்கும் பல்மைரைனிய கடவுளர்களுக்கான பிரம்மாண்டமான கோயில்கள், நெடுந்தூண்களைக் கொண்ட ராஜவீதிகள், திறந்தவெளி கலையரங்கம் போன்றவையெல்லாம் பல்மரைனியர்களின் கலைஉணர்வுக்கும், கட்டிடக்கலை நிபுணத்துவத்துக்கும் சான்றுகளாக நிலைத்து நிற்கின்றன.
 
வரலாற்றுக்கு வந்திருக்கும் ஆபத்து
 
பல்மைராவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தனித்துவ அடையாளத்துடனான கலாச்சாரம் நிலவியதை வெளிக்கொணர்ந்திருக்கின்றன.
 
பல்மைரேனியர்கள், அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த கிரேக்கம் அல்லது லத்தீன் மொழி வரி வடிவங்களுக்கு பதிலாக, தங்கள் கட்டிடங்களின் முகப்பில் செமெடிக் மொழி மற்றும் எழுத்துவடிவங்களைக் கொண்டு அலங்கரித்தார்கள்.
பல்மைரா தனக்கேயுரிய கலைவடிவங்களையும், கட்டிடக்கலையையும் உருவாக்கிக் கொண்டது. பல்மைரா நகரவாசிகளின் அலங்காரம் மற்றும் அவர்களின் கட்டிடங்களின் அலங்காரங்களை கவனிக்கும்போது அவர்களிடம் கீழைத்தேச நாடுகளின் தாக்கமும் மேற்கத்திய நாடுகளின் தாக்கமும் இணைந்தே காணப்பட்டன.
பல்மைராவின் கல்லறைகளில் புதைக்கப்பட்டிருந்த பாடம்செய்யப்பட்ட சடலங்கள் சீனத்துப் பட்டுத்துணியால் சுற்றப்பட்டிருந்தன.
 
150516141001_palmyra_statue_624x351_gett
தனக்கென தனித்த கலை கலாச்சாரம் கொண்டது பல்மைரா
 
ஆபத்தின் விளிம்பில் அரியதொரு சரித்திரம்
 
ஆனாலும் கூட, ஒப்பீட்டளவில் பல்மைரா குறித்து நமக்கு மிகவும் குறைவான தகவல்களே தெரியும்.
காரணம் பல்மைராவின் மிகச்சிறிய பகுதியே அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும், இந்த பிரதேசத்தின் தொல்லியல் சான்றுகள் பூமியின் ஆழத்தில் புதையுண்டு போய்விடவில்லை. நிலத்திற்கு அடியில் மேம்போக்காக தோண்டினாலே அதை வெளிக்கொண்டுவரமுடியும். அதனாலேயே, அதை யாரும் கொள்ளையடித்துச் செல்ல முடியும் என்கிற ஆபத்து நிலவுகிறது.
சிரியாவில் இருக்கும் எத்தனையோ வேறு இடங்களைப் போலவே தற்போதைய மோதல்களின்போது பல்மைராவிலும் சந்தேகமில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.
 
அதேசமயம், இராக்கில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் நடந்துகொண்டதை வைத்துப் பார்க்கும்போது, பல்மைரா நகர் அவர்களின் வசமானால், இந்த ஒட்டுமொத்த நகரும் திட்டமிட்டு கொள்ளையடிக்கப்பட்டு அழிக்கப்படும் என்று அஞ்சுவதற்கான காரணங்கள் இருக்கின்றன.
ஒருவேளை அப்படி நடந்தால், இந்த வேதனைமிக்க மோதலில், மத்திய கிழக்கின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் முக்கியமான அத்தியாயம் அதில் மேலும் ஒரு பலியாடாவாகும்.
 
150520192254_syria_palmyra_624x351_epa.j
ஈராயிரம் ஆண்டு வரலாறு இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கும் என்று கவலை
 
பின்குறிப்பு: இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் கைகளில் பல்மைரா நகர் எபோது வேண்டுமானாலும் விழுந்துவிடக்கூடும் என்கிற அச்சம் உலக அளவில் அதிகரித்துவருகிறது. இந்த பின்னணியில், உலக அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படும், பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமான, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை மிக்க பல்மைரா நகரின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து வார்விக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கெவின் புட்சர் பிபிசிக்கு எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழ் வடிவம்.
 

 

  • தொடங்கியவர்

இஸ்லாமிய அரசு வசம் சிரியாவின் பால்மெய்ரா நகர்

 

சிரியாவில் பாலைவன நகரான பால்மெய்ராவை கைப்பற்றியதை அடுத்து, இஸ்லாமிய அரசு அங்கு நாட்டின் அரைவாசிக்கும் அதிகமான பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சிரியாவின் செயற்பாளர்கள் குழு ஒன்று கூறியுள்ளது.

 

 
150521052332_palmyra_city_syria_512x288_
நகரின் தொல்பொருட் பகுதி
 
அரசாங்க ஆதரவு படைகளிடம் இருந்து தற்போதுதான் அவர்கள் மக்கள் செறிந்துவாழும் ஒரு நகரை நேரடியாக கைப்பற்றியுள்ளனர்.
தொல்பொருட்கள் நிறைந்த இடத்துக்கு பெயர் போனது இந்த நகரம். ஆகவே அவை இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளால் அழிக்கப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
அந்த தொல்பொருட் பகுதிக்குள் தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாக தெரிகிறது. ஆனால், அவர்கள் அதனை இதுவரை அழிக்கத் தொடங்கியதாக தெரியவில்லை என்று சிரியாவின் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் என்ற அமைப்பு கூறியுள்ளது.
 
  • தொடங்கியவர்

பல்மைரா நகரில் உள்ள அரியவகை பறவையினத்துக்கு ஆபத்து

 

150525095844_a_small_breeding_colony_of_

நொதெர்ன் பால்ட் இபிஸ்
 
சிரியாவின் பாரம்பரிய நகரான பல்மைராவை இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள மிக அரிதான பறவையினம் ஒன்று அழிந்துபோகும் அபாயம் உள்ளதாக பறவைகள் பற்றிய ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
 
நொதெர்ன் பால்ட் இபிஸ் என்ற கறுப்பு நிறமான இந்தப் பறவை நீண்ட, வளைந்த அலகினைக் கொண்டது.
2002-ம் ஆண்டில் இந்தப் பறவை பல்மைரா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டபோது, சிரியாவின் அரசாங்கம் அந்தப் பறவைகள் பெருகுவதற்கான பாதுகாப்பை வழங்கியிருந்தது.
கடந்த வாரம் ஐஎஸ் ஆயுததாரிகள் நகரை கைப்பற்றியபோது, கூடுகளில் இருந்த இந்த மூன்று பறவைகளை கைவிட்டு அவற்றின் காவலர்கள் சென்றுவிட்டனர்.
அந்தப் பறவைகளுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.
 
நாலாவது பறவை இப்போது எங்கிருக்கிறது என்பது தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு ஆயிரம் டாலர் பணப்பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கூட்டில் அடைக்கப்பட்டிருக்காத இந்தப் பெண் பறவை, குளிர்காலத்தில் அவை தங்கியிருக்கும் எதியோப்பியாவிலிருந்து அண்மையில் தான் சிரியாவுக்கு திரும்பியிருந்தது.
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.