Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழருக்கான விடிவு என்பது.. வெறும் கானல் நீராகிவிடுமா? ஓர் சிறு அரசியல்-இராணுவ ஆய்வு! -மு.வே.யோகேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழருக்கான விடிவு என்பது.. வெறும் கானல் நீராகிவிடுமா? ஓர் சிறு அரசியல்-இராணுவ ஆய்வு! -மு.வே.யோகேஸ்வரன்

9
np-1615-04-620x287.png

2009 இல் புலிகள் மீது இலங்கை அரசப் படைகள் நடாத்திய இன அழிப்பு நடவடிக்கை என்பது, இலங்கை மட்டும் நடாத்திய இன அழிப்பு நடவடிக்கை என்று எவனாவது சொன்னால் அவனுக்கு மண்டையில் மசாலா இல்லை என்றுதான் அர்த்தம்.

கடந்த 35 வருடங்களாக இலங்கை என்னும் இனவாத நாடு…புலிகளை அழிக்க போட்ட திட்டங்கள் ஒன்றா இரண்டா? ஆனால், அழித்தார்களா புலிகளை? இல்லை..அவர்களைப் பொறுத்தவரை அது பகல் கனவாக இருந்தது..

புலிகளின் இராணுவ பரிணாம வளர்ச்சியை நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும், புலிகளை இலங்கையாலோ அல்லது இந்தியாவாலோ தனித்து நின்றோ,அல்லது சேர்ந்தோ ஒருபோதும் அழிக்க முடியாது என்று..அதற்கு சாட்சியாக 1987 முதல் 3 வருடங்கள், இலங்கையில் நிலை கொண்டிருந்த சுமார் இரண்டு இலட்சம் இந்தியப் படைகளே சாட்சி ஆகும்..ஒரு வல்லரசுக்கு ஒப்பான நாடு.. ஆள்,அம்பு சேனைகளை மிக,மிக அதிக அளவில் கொண்ட நாடு,பாகிஸ்தான்,பங்களாதேஷ்,போன்ற நாடுகளில் யுத்தம் நடாத்தி, வென்ற நாடு,சீனாவோடு மிக காத்திரமாக மோதிய நாடு..இப்படி பட்ட இந்திய நாட்டின் பொறுக்கி எடுக்கப் பட்ட திறமை மிகு படைகளையே

புறமுதுகிட்டு ஓடச் செய்த தீரப் புலிகளை..இலங்கை திடீர் என்று 2009 இல் வெல்வது என்பது நடக்க கூடிய செயலா? இல்லை..கனவில் மட்டுமே நடக்க கூடிய ஒன்று இது!

பின்னர் என்ன நடந்தது அங்கே?..இராமாயாணம் உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் கூட,அங்கே நேருக்கு நேர் மோதி வாலி’ என்னும் மா பெரும் வீரனை-ஓர் ஒப்பற்ற இராவணனின் படைத் தளபதியை கொல்ல முடியாது என்ற காரணத்தினால் ,சதியால்..சகுனித் தனத்தினால்..மட்டுமே மறைந்திருந்து அவனது கவனத்தை திசை திருப்பி கொன்றவன்தான் இராமன் ஆகும்..இராமாயணம் உண்மை என்போரால் கூட இதை ஏற்றுக் கொள்ள முடியாது..யுத்த தர்மத்துக்கு மாறான ஓர் அயோக்கியச் செயல் இது..

அதை இராவணன் புரியவில்லை..புரிந்தவன் இராமன்தான்..அன்றே ஆரம்பித்துவிட்டது(இராமாயணம் உண்மை என்றால்) ..எம்மினத்தின் மீதான வடக்கர்களின் துட்டத் தனம்.சதி..அழிப்பு !

ஆனால்,இராமாயணம் உண்மை என்றே வைத்துக் கொண்டால்.. இராவணனின் அளவற்ற திறமைகளும் உண்மைதான்..

இராவணன் சீதையை இந்தியாவின் எங்கோ ஓர் வடக்கின் பகுதியில் இருந்து எப்படி கொண்டு வந்தான்? நாங்கள் சொல்லவில்லை நீங்கள்தான் சொல்கிறீர்கள்..புஷ்பக விமானத்தில் கொண்டு வந்தான் என்கிறீர்கள்..எனவே..இராமாயணம் உண்மை என்றால் கூட அப்போதே இராவணனிடம் பறக்கும் வானூர்தி இருந்துள்ளது என்பது உண்மையா? அதை நீங்கள்தான் சொல்கிறீர்கள்..நாங்கள் அல்ல..ஆனால்..அப்படிப் பட்ட இராவணனை வென்று வர இராமனால் வானில் பறந்து செல்ல முடியவில்லை..தெற்கில் பாலம் ஒன்றை போட்டே,அவனும் அவனது படைகளும் சென்றதாக சொல்கிறீர்கள்..இன்றும் கூட அந்தப் பாலத்துக்கு பால் அபிசேகம் செய்கிறீர்கள்..இது இராமனை உங்களுக்கு நினைவூட்டலாம்..தப்பில்லை….ஆனால்,இது எங்களுக்கு இராவணனின் அதி உன்னத திறமையை ஒவ்வொரு கணமும் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது..என்பதை மறந்து விடாதீர்கள்!

ஆனால்..இராமன் கடவுள் அவதாரம் என்று வேறு சொல்கிறீர்கள்..எது உண்மை? இராமாயணம் உண்மையா?..அல்லது இராமன் கடவுள் அவதாரம் என்பது உண்மையா?..இரண்டுமே உண்மை என்றால் ஏன் இராமனால் பறந்து சென்று இலங்கைக்கு போக முடியவில்லை?..சீதையை இறைவனிடம் இருந்து,உடனடியாக காப்பாற்ற முடியவில்லை? ..கடவுள் அவதாரம் கொண்ட அதீத திறமை கொண்ட இராமனால் ஒரு பாக்கு நீரிணையை கூட பாலம் போடாமல் கடக்க முடியவில்லையே? ஏன்…?

எனவே, இராமாயணம்.உண்மை அல்ல.. இராமனின் திறமைகளும் உண்மை அல்ல…இராமாயணம் .உண்மை எனில், இராவணனின் அதி உன்னத திறமைகளும் உண்மைதான்..போரில் மிகச் சிறந்த வாலி போன்ற தளபதிகளை கொண்டவன்தான் இராவணன்..சிறந்த வானூர்திகளை கொண்டு இருந்தவனும் கூடத்தான்..அதுபோல்தான் சிறந்த படைகளைக் கொண்டிருந்தவர்தான் பிரபாகரனும்..சிறந்த கடற் படையையும்..மிகச் சிறந்த வான் படையையும் கொண்டிருந்தவர்தான் பிரபாகரனும்..

அன்று சீதையை காரணம் காட்டி எப்படி சதியால் இராவணனை அழிக்க நினைத்தீர்களோ,அப்படித்தான் இன்றும் அதி உன்னத படை பலத்தையும்,வான் படையையும் கொண்ட பிரபாகரனின் படைகளையும் அழித்தீர்கள்..நீங்கள் மட்டுமா?.இல்லை!.உங்களுடன் எதேச்சாதிகார அமெரிக்கா .பிரிட்டன் ,பிரான்ஸ்..சீனா போன்ற வல்லரசுகளையும் இணைத்துக் கொண்டீர்கள்.அதற்கு துணையாக இஸ்ரேல்..கியூபா..பாகிஸ்தான்..பங்களாதேஷ்..ஜப்பான்..மலேசியா

..ரஷ்யா.ஆபிரிக்க நாடுகள்..இந்தோனேசியா…நைஜீரியா..அரபு நாடுகளில் சில…ஏன்? கனடா..கூடத்தான்….இல்லை! கூட்டிக் கொடுக்க ஓர் ஐ.நா.சபையைக் கூட சேர்த்துக் கொண்டீர்கள்?.இல்லை என்றால், இந்தப் பேமாரிகள்’..நாலரை இலட்சம் தமிழ் மக்கள் வன்னியில்,2009 ஏப்ரல்- மே மாதம்.. பட்டினி கிடந்து, சிங்கள இனவாதப் படைகளால்.யுத்த தர்மத்துக்கு மாறாக, இரசாயன ஆயுதங்களாலும்,கொத்துக் குண்டுகளாலும் அழிக்கப் பட்டுக் கொண்டிருந்தபோது,வவுனியாவில் நின்று கொண்டு இலங்கை அரசுக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்திருப்பார்களா?…பின்பேன் புலிகளை மேற்படி நாடுகள் பயங்கர வாதிகள் பட்டியலில் இன்றுவரை வைத்திருக்க வேண்டும்?..ஈழ ..

விடுதலைப் போராட்டம் என்பது பயங்கர வாதமா? அப்படி என்றால் சிங்கள இனவாதிகள் 1958இல் 1977இல்..1983 இல் நடாத்தியது..ஆயிரக் கணக்கான தமிழர்களை கொன்று குவித்தது… என்ன வாதம்?..முடக்கு வாதமா?

20 நாடுகளுக்கு மேல் ஒன்று சேர்ந்து ஏன் அழித்தீர்கள்? புலிகள்- -தமிழர்களை வளர விட கூடாது ..விட்டால் உலகின் வல்லரசுகளுக்கே தண்ணீர் காட்டி விடுவார்கள் என்றுதான் மேற்படி நாடுகள் பயந்தன..நீங்கள் . கோழைகள்..புலிகளின் வான் ஊர்திகள் உங்கள் நாட்டு ஒய்யார மாளிகைகள் மேல்..உங்கள் நாட்டு படைகள் மேல்….உங்கள் நாட்டு சர்வாதிகாரிகள் மேல் குண்டு வீசிக் கொன்று விடக் கூடும் என்றுதான் புலிகளை அழிக்க முன் வந்தீர்கள்..இதுதான் உண்மை..ஆனால், புலிகளுக்கு அந்த எண்ணம் ஒருபோதும் இருக்கவில்லை..புலிகளுக்கு எப்போதும் இலங்கைதான் எதிரி என்று அப்போது புலிகள் நம்பினார்கள்..ஆனால்..நீங்களும்..என்பதை முழுமையாக உணர்த்தி விட்டீர்கள் 2009இல்..!

எனினும் ஒரு நாள் புலியின் கடைசி மயிர் கூட உயிர் கொண்டு.. முளைத்து.. பீனிக்ஸ் பறவைகள் போல்.. நெருப்புக்குள் இருந்து பறந்து வந்து உங்களை அழித்து..,,தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத் தரும் என்பதை மறக்காதீர்கள்..நாங்கள் மடிந்துபோன உயிரின் வலிகளை கொண்டவர்கள்தான்.ஆனால் முடிந்து போன வரலாற்றை கொண்டவர்கள் அல்ல!..எங்கள் வரலாற்றை மீண்டும் எழுத.. இன்னும்,இன்னும் பிரபாகரன்கள் பிறந்துவந்து, தொடர்வார்கள்..

அதை மட்டும் மறந்து விடாதீர்கள்..

தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்..!

http://www.velichaveedu.com/16151939/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.