Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலத்தடி நீரினில் கழிவோயில் விவகாரம்! பாடையிலேற்ற பாடுபடும் அமைச்சர்கள்!!

Featured Replies

வலிகாமம் பகுதியினில் கழிவு ஓயில் கலந்த நிலத்தடி நீர் தொடர்பான விடயத்தை கிடப்பினில் போட சதிகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

நிலத்தடி நீர்; தொடர்பான சுகாதாரக் கலந்துரையாடல் நேற்று யாழ் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர். இ. தேவநேசன் தலைமையில் நடைபெற்றிருந்தது. இக்கலந்துரையாடலில் கழிவு எண்ணெயினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சார்ந்த சுகாதார வைத்திய அதிகாரிகள், ஏனைய தொடர்புபட்ட வைத்தியர்கள் மற்றும் மேற்பார்வைப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.பதிவு இணைய செய்திகள்

நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கான சுகாதாரக் கல்வி அறிவூட்டல் நடவடிக்கைகள் சுகாதார அமைச்சரிடமிருந்தான அனுமதி என்ற போர்வையில் இழுத்தடிக்கப்பட்டு வருவதுடன் இன்னமும் முறையாக முன்னெடுக்கப்படாமை சுகாதார வைத்திய அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. தமது பிரதேசங்களில் மக்களுக்கான சுகாதாரக் கல்வி அறிவூட்டலுக்கான சகல அதிகாரங்களும் தமக்கு இருக்கின்ற போதிலும் வேண்டும் என்றே காலம் கடத்தப்படுவதாக விசனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிபுணர் குழுவினர் என்று ஒரு குழுவினர் ஆராய்ச்சிகள் செய்து வருகின்ற போதிலும் தற்போது அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் எவ்வித முறையான ஆராய்ச்சிகளும் செய்யப்படாததுடன் இவ்வாறான நிலையில் நிபுணர் குழுவின் முடிவுகள் எவ்வாறு முழுமையானதாகக் கருத முடியும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
 
பல்வேறு காலப் பகுதிகளில் நடாத்தப்பட்ட நீர்ப் பரிசோதனைகள் மூலம் பெறப்பட்ட பெறுபேறுகளில் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இருந்த போதிலும் தற்போது கூறப்படும் எண்ணெய் இல்லை என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. மேலும் ராடார் பரிசோதனை தொடர்பாக பூரண விளக்கமின்றித் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் ராடாருக்கும் நிலத்தடி நீருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற வாதத்துடன் முடிவுக்கு வந்திருந்தது.பதிவு இணைய செய்திகள்
 
தற்போது நீர்விநியோகமானது பெரும்பாலும் பருத்தித்துறைப் பகுதியில் உள்ள தொண்டமானாறுப் பகுதியில் உள்ள நீர்த் தாங்கியில் இருந்து பெறப்படுவதாகக் கூறப்பட்டாலும் இது தொடர்பான எந்தவிதமான சுகாதாரக் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தற்போது நடாத்தப்படுவதில்லை. இது தொடர்பாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்ட போது அறிக்கை மட்டும் பெற்றுக் கொள்ளுதல் போதுமானது என பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அவர்களினால் தெரிவிக்கப்பட்டது.
 
முன்பு நடைபெற்று வந்த செயலணிக் கூட்டமானது தற்போது நடைபெறுவதில்லை எனவும் நிபுணர் குழுவினரின் அறிக்கையானது பல்வேறு வழிகளிலும் தாமதிக்கப்பட்டுவருவதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டது. சுகாதாரக் குழுக் கூட்டமானது பல்வேறு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதிலும் மிகநீண்ட காலத்தின் பின்னர் கூட்டப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். http://www.pathivu.com/news/40541/57//d,article_full.aspx

வட பகுதியில் நிலத்தடி நீர் விவகாரம் ஒரு கிறிஸ் பூதம் என்றுதான் எனக்கு தெரிகின்றது.தமிழ் மக்களை ஏதொ ஒரு வித பயத்துடன் வைத்திருக்கத்தான் இப்படியான சதி வேலைகள் நடை பெறுகின்றன.பாலியல் வல்லுறவு கொலைகள் யாவுமே இதே பாணியில் தான் நடை பெறுகின்றது.ஆகவே ஒருசில கிணறுகளில் கட்டம் கட்டமாக எண்ணைப் பதார்த்தம் கலக்கப் படுகின்றது.என்று தான் நான் கருதுகின்றேன்.எனக்கு ஒரு சிலரது தனிப்பட்ட கருத்துக்கள் தெரிந்திருக்கின்ற படியால் இப்படி எழுதினேன்.அக்கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும் முடியாது.மன்னிக்கவும்.

வட பகுதியில் நிலத்தடி நீர் விவகாரம் ஒரு கிறிஸ் பூதம் என்றுதான் எனக்கு தெரிகின்றது.தமிழ் மக்களை ஏதொ ஒரு வித பயத்துடன் வைத்திருக்கத்தான் இப்படியான சதி வேலைகள் நடை பெறுகின்றன.பாலியல் வல்லுறவு கொலைகள் யாவுமே இதே பாணியில் தான் நடை பெறுகின்றது.ஆகவே ஒருசில கிணறுகளில் கட்டம் கட்டமாக எண்ணைப் பதார்த்தம் கலக்கப் படுகின்றது.என்று தான் நான் கருதுகின்றேன்.எனக்கு ஒரு சிலரது தனிப்பட்ட கருத்துக்கள் தெரிந்திருக்கின்ற படியால் இப்படி எழுதினேன்.அக்கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும் முடியாது.மன்னிக்கவும்.

குடும்ப அமைப்புடைய தமிழ் ஈழ சமூகத்தை அரசாங்கம் சார்ந்த சிறி லங்கா பிச்சைக்கார அமைப்பாக மாற்ற நீர், இயற்கை வளம், இளையோரை தாக்கி முப்பது வருடத்திற்கு சிதைவு நடவடிக்கைகைகளை தொடர்ந்து செய்வார்கள். எமது ஊரை காப்பது எமது பொறுப்பு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.