Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அக்குபங்சர் சிகிச்சை முறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அக்குபங்சர் சிகிச்சை முறை – கேள்விகளும், பதில்களும்....  
 

அக்குபங்சர்

அக்குபங்சர் சிகிச்சை முறை – கேள்விகளும், பதில்களும். 

வலைதளத்தில் இருந்து உங்களுக்காக தொகுத்து கொடுத்துள்ளேன் 

அக்குபங்சர் என்றால் என்ன? 

சித்தர்கள் வளர்த்த வர்ம அறிவியலுக்குச் சீன மக்களின் பங்களிப்பு அக்குபங்சர். சீனாவின் சித்தர்களாகிய தாவோ ஞானிகளின் உண்மைகளை உள்வாங்கிய தமிழர்களின் அறிவியல் அக்குபங்சர். 

மெல்லிய மயிரிழை போன்ற ஊசிகளைக் கொண்டு அகிலத்தின் ஆற்றல்களை நம் உடலுக்குப் பெற்றுத்தரும் அற்புத அறிவியல் மருத்துவம். 

அக்குபங்சர் முறையில் நோய்களை கண்டறிவது எப்படி? 

இது தனக்கே உரித்தான நோயறியும் முறைகளைக் கொண்டது. வர்ம மருத்துவம் போல் தனிச் சிறப்பான நாடி அறிதல் முறைகள் இதில் உள்ளது. 

மக்கள் தங்கள் நீண்ட கால அனுபவத்தால் – நோய் வருவதற்க்கு முன்பே, அது உருவாகும் சூழலை உணர்ந்து, நோயை அந்த நிலையிலேயே முழுமையாகத் தீர்க்கும் நுட்பங்களை தொகுத்து வைத்துள்ளனர். நோய் தீர்க்கும் மருத்துவரை விட நோய் வராமல் தடுக்கும் மருத்துவரையே மக்கள் போற்றினர். சீன நாட்டில், ஒரு ஊரில் நோய்கள் வந்து மக்கள் அவதிப்பட்டால் அந்த ஊர் அக்குபங்சர் மருத்துவர்களுக்கு அரசின் உதவிகள் குறைக்கப் பட்டு – நோய்க்கு காரணம் மருத்துவரின் திறமைக் குறைவாக எண்ணப்பட்டது. 

எத்தனை ஊசிகள் போடுவீர்கள் – ஊசிகள் வலியைத் தருமா? 

ஒன்று அல்லது இரண்டு ஊசிகள் தான் போடப்படும். 

உறுதியாக வலியே இருக்காது. ஊசி போட்டதை உணர முடியாத அளவு மிக மென்மையாக இருக்கும். ஊசி போடும் போது உடலில் ஏதோ வைக்கப் பட்டது போன்ற உணர்வு தான் இருக்கும். 

சிகிச்சைக்கு எவ்வளவு காலம் தேவைப்படும்? 

நோய்க்கான காரணத்தை அறிய ஒன்றிரண்டு நிமிடங்கள் ஆகலாம்.. 

சில விநாடிகள் உடலில் ஊசிகள் இருந்தால் போதுமானது. விநாடிகளுக்குள் சிகிச்சை முடிந்துவிடும். 

சுகம் பெற எவ்வளவு காலம் ஆகும்? 

பொதுவாக முதல் சிகிச்சை முடிந்த உடனே நோயின் தீவிரம் குறைந்து உடல் மனம் சுகம் பெறுவதை உணர முடியும். உடலும், மனமும் லேசாகி நம்பிக்கை பெறுவீர்கள். 

நோய் வந்ததற்கான காரணம் அறிந்து அதைச் சீர்படுத்துவதற்கான பழக்கவழக்கங்களை – சிந்தனைகளை மருத்துவரிடம் கலந்து விரிவாகப் பேசி அறிந்து கொள்ளலாம். 

துன்பத்துக்குக் காரணமான பழக்கவழக்கங்கள் சிந்தனை முறைகளைத் தவிர்த்துவிட்டு நன்மை தரக்கூடிய வழிகளை மேற்கொண்டால் உடன் சுகம் கிடைக்கும். 

சிகிச்சைகளுக்கு இடையிலான கால இடைவெளி எவ்வளவு? 

தேவை இருந்தால் மட்டும், வாரத்துக்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை சிகிச்சை எடுப்பது நல்லது. இடைவெளி அதிகம் இருப்பது நல்லதே. 

உடல் தன்னை குணப்படுத்திக் கொள்ளும் காலத்தில், நோயிலிருந்து விடுபடுபவரின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த வினாக்களுக்கு தகுந்த முறையில் பதில் கொடுப்பதும், மென்மையான முறையில் சுகம் பெற உதவுவதும் மருத்துவரின் கடமை. அதற்காக எப்பொழுது வேண்டுமானாலும் மருத்துவரை அணுகலாம். 

ஆங்கில மருத்துவத்தின் சோதனைக் குறிப்புகளை எடுத்துவர வேண்டுமா? 

தேவையில்லை. நமது மருத்துவம் உயிராற்றலுக்கு உதவி செய்து, 

உடலையும், மனதையும் நலம் பெறச் செய்வது. 

உயிராற்றலுக்கு எதிரான உடலின் சத்திகளை அறியாத ஆங்கில மருத்துவ முறையும – அதன் நோயறியும் முறையும் பயனற்றது. எனவே வேறு எந்த சோதனைக் குறிப்புகளும் தேவையே இல்லை. 

உங்களிடம் வரும் முன் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டுவந்தவர்கள் உங்களிடம் சிகிச்சை பெற்றபின் மருந்து, மாத்திரைகளைத் தொடரலாமா? 

சிந்தியுங்கள். 

நமக்குள் இருக்கும் சத்திதான் நம்மை காத்து வருகிறது. நம் உடல் தன்னைத்தானே காத்துக்கொள்ள தகுதி படைத்ததாக இறைவனால் வடிவமைக்கப் பட்டது. நமது அறிவால் நமது உடல் சத்திக்கு, அதன் தேவை அறிந்து உதவுவதையே மருத்துவம் என்கிறோம். 

இப்போதைய நவீன அறிவியல் உயர் தொழில் நுட்பம் மற்றும் மருத்துவம் வணிக நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உதாரணத்துக்கு ஆங்கில மருத்துவம் மனித நேயமற்றதாகவும், வாழும் உயிர்ச்சூழலை அழிப்பதாகவும் இருக்கிறது. வணிகர்களால் வழிநடத்தப்படும் ஆங்கில மருத்துவ முறை மனிதகுலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் நோயுண்டாக்கி, அதில் பிழைப்பவர்க்காக உள்ளது. 

உடல் மற்றும் மனம் பற்றிய அடிப்படை அறிவற்ற (உடல் சத்திகள் பற்றி தெரியாத) மருத்துவ முறைகளை புறக்கணியுங்கள். அதன் மருந்துகளையோ, சோதனைகளையோ, பத்தியங்களையோ தவிருங்கள். 

போலி மருத்துவ முறைகளில் இருந்து விடுபட்டு, மக்களால் – மக்களுக்காக உருவாக்கப்பட்ட மருத்துவங்களை அடையாளங்கண்டு அவற்றைப் பயன்படுத்துங்கள் நன்மை உண்டாகும். இந்த அடிப்படையில் அஞ்சரைப்பெட்டியையும், வீட்டின் அருகில் உள்ள எளிதில் கிடைக்கும மூலிகைகளையும் பயன்படுத்தும் முறைகளை உங்கள் பெற்றோரிடம் நலம் நாடும் சுற்றத்தாரிடமும் அறிந்து பயன்படுத்துங்கள் நலம் பெறுவீர்கள். 

நோய் குணமாகிவிட்டது என எப்படித் தெரிந்துகொளவது? 

மிக எளிது. 

உடல் துன்பம் நீங்கி உடலும் மனமும் உழைச்சலின்றி இருப்பதை உணர்ந்தால் போதும். மனிதனின் உணர்வுகளை விட சிறந்த நோயறியும் கருவிகள் இல்லை. 

அக்குபங்சர் சிகிச்சையில் பக்கவிளைவுகள் உண்டா? 

உயிர் ஆற்றலை உணர்ந்து அறிந்து, அதற்கு உதவும் அக்குபங்சர் சிகிச்சையில் நன்மை மட்டுமே உண்டு. 

பக்க விளைவு எனும் பேச்சுக்கே இடமில்லை. 

அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது திடீரென சுரம், தலைவலி, காய்ச்சல் வந்தால் மருத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாமா? 

தேவையே கிடையாது. கூடாது. 

நமது உடலில் தேங்கும் கழிவுகள் சரிவர வெளியேற்றாமல், கழிவுகள் தேங்குவதே நோயாகும். அக்குபங்சர் சிகிச்சைக்குப்பின், உடல் சத்தி பலம் பெற்று கழிவுகளை வெளியேற்றும் போது ஏற்படும் அதிர்வுகள், அதற்க்கு உதவியான நிகழ்வுகளே சுரம், காய்ச்சல் வலி ஆகியவை ஆகும். துன்பங்கள் சிறிது நேரத்தில் தானே சுகம் தரும். 

அக்குபங்சர் மருத்துவரின் ஆலோசனைகளின் படி, அந்த வெளியேற்றும் ஆற்றல்களுக்கு உதவினால்; விரைவில் நோய் நீங்கிச் சுகம் பெறுவீர்கள். 

குறிப்பாக எந்த வயதினர் அக்குபங்சர் சிகிச்சை பெறலாம்? 

கருவில் உள்ள குழந்தை முதல் கடைசிகால முதியவர் வரை எல்லா வயதினரும் நலம் பெறலாம். கருவில் உள்ள குழந்தைக்காகத் தாய்க்கும, பிறந்த குழந்தைகளுக்கும் மென்மையான தொடலே போதும்; ஊசி வைக்கத் தேவையில்லை. 

பல நோய்கள்-துன்பங்கள் உள்ள நோயாளி தனித்தனியே தன் துன்பங்களுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா? 

அக்குபங்சர் முறையில் நோய்கான காரணங்களை கண்டறிந்து சுகமளிக்கும் போது அப்பொழுது இருக்கும் அனைத்து நோய்களும் தீருவதோடு பிற்காலத்தில் வர இருந்த பல நோய்களும் சேர்ந்தே சுகமாகும். அக்குபங்சர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றபின்- நீங்கள் அவரிடம் சொன்ன தொல்லைகள் மட்டும்ல்ல, நீங்கள் குறிப்பிடாத பல நோய்களும் உங்களை விட்டு நீங்கி இருப்பதை உணருவீர்கள் நண்பரே. 

மன நோய்களை குணப்படுத்த முடியுமா? 

உடலும், மனமும் வேறு வேறல்ல உடல் சத்திகளைச் சீராக்கும் போது அல்லது எண்ணத்தை சீராக்கும் போது உடலும், மனமும், உயிரும் சுகம் பெறும். 

மன நோய்களுக்கும் மூளைக்கும் சம்மந்தமில்லை என்பதை அறியுங்கள். 

பரம்பரை நோய் – குடும்ப நோய்கள் தீருமா? 

படைப்பாற்றல் ஒன்று போல் ஒன்றைப் படைப்பதில்லை. ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா‘ எனும் பெரியோரின் வார்த்தைகள் உணமையே. நமது உடலியற்கையை மீறிய தவறான அறிவால் – பழக்கவழக்கங்களால் நோய்கள் வருகின்றன. இரவு 9 மணிக்கு மேல் விழித்துப் படிப்பது, படம் பார்ப்பது, வேலை செய்வது உடலுக்குக் கெடுதியே. அதிகாலையில் தலைகுளிக்காமல் இருப்பதும் கெடுதியே. மாப் பண்டங்கள் அதிகம் சேர்ப்பது கெடுதியே. இதுவெல்லாம் செய்யும் குடும்பத்தில் உள்ள உறுப்பினர் அனைவரும் சைனஸ், சீரணக்கோளாறு, மலச்சிக்கல் போன்ற பல துன்பத்தில் உழலுவர் தாங்கள் தவறு செய்து விட்டு இறைவனைக் குறைசொல்லிக் கொண்டு இருப்பதை விட -மீண்டும் தவறுசெய்யாமல் இயற்கை விதிகளைக் கடைப்பிடித்தால் குடும்பத்தினர் உருவாக்கிய நோய்கள் தீரும். 

அக்குபங்சர் நாடிப்பரிசோதனையில் நோயின் தன்மைகளை எவ்வாறு அறிகிறீர்கள்-சிகிச்சை அளிக்கிறீர்கள்? 

நமது உடலில் நிலம், நீர், நெருப்பு, காற்று, மற்றும் ஆகாயம் ஆகிய 5 மூலகங்களின் சத்திகள் உடலின் முக்கியக் கருவிகளாம் இதயம், இதய உறை, சிறுகுடல், முக்குழி வெப்ப பகுதி, மண்ணீரல், வயிறு, நுரையீரல, பெருங்குடல், சிறுநீரகங்கள், சிறுநீர்ப் பை, கல்லீரல், பித்தப் பை வாயிலாக உடலின் அனைத்து உறுப்புகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது. 

இந்த முக்கிய கருவிகள் மற்றும் உடல் அனைத்தும் சீராக இயங்க மேற்கண்ட 5 மூலக சத்திகளின் ஒத்திசைவு தேவை. இவற்றுள் ஏதேனும் ஒரு மூலகத்தில் ஏற்படும் பலவீனம் மற்றவற்றைப் பாதிக்கும் இதனுடைய விளைவே உடல், மன நோய்கள், 

இந்த மூலகங்கள் மிகினும், குறையினும் நோய்செய்யும். 

முக்கிய உறுப்புகளின் 5 மூலக சத்தியின் நிலையை நாடிப்பரிசோதனை முறையால் கண்டுணர்ந்து மூலகங்களின் தன்மையில் ஏற்பட்ட ஏற்ற தாழ்வை அகிலங்களின் படைப்பு சத்தியின் உதவியோடு சீர் செய்வதே அக்குபங்சர் முறையாகும். 

இரத்த அழுத்த நோயை குணப்படுத்த முடியுமா? 

இரத்த அழுத்தம் என்பது நோயல்ல. உடலின் தேவையறிந்து இதயம் செயல் படுவது நன்மைக்கே. இவ்விதமான செயல்பாடு இல்லையேல் உடல் நடைபிணமாகி விடும். 

இரத்தக் கொதிப்பு என்பது தான் நோய் இது பிற மனிதர்களை உயர்வாகவோ, தாழ்வாகவோ நினைப்பதால் வருவது இதை தவிர்க்க பிற மனிதர்களையும் உயிர்களையும் நமக்குச் சமமாக நேசிக்கப் பழக வேண்டும். 

சர்க்கரை நோயைத் தீர்க்க முடியுமா? 

சர்க்கரை நோய் என்பது மிக எளிய சீரணக் கோளாறே, இதை சரிசெய்ய உணவை நன்கு சுவைத்துச் சாப்பிடுதலே போதுமானது. பொருந்திய உணவை நன்கு சுவைத்துச் சாப்பிட நோய் தீரும், 

‘நொறுங்கத் தின்றால் நூறு வயது‘ என்பர் பெரியோர். 

மருந்து வணிகர்களின் முட்டாள்த்தனமான அளவுக் கணக்கில் மாட்டிக் கொண்டால் அது அவர்களுக்கு வருவாயையும் உங்களுக்கு நோயையும் தரும். 

அறுவைச் சிகிச்சை பற்றி என்ன சொல்றீங்க, இது நவீன மருத்துவத்தின் சிறப்பல்லவா? 

ஆங்கில மருத்துவத்தில் உடல் சத்திகளை பற்றித் தெரியாமல் –நோய்க்குக் காரணம் தெரியாமல் மருந்து கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள் இவர்களது முறைகள் உடல் இயற்க்கைக்கு மிக எதிரானதாக உள்ளது. தங்கள் ஆணவத்தாலும், அறியாமையாலும் இயல்பாக குணமாவதைத் தடுத்து விடுவதால் நோய் முற்றிப்போய் உடல் உறுப்புகள் சேதமடைய ஆரம்பித்து விடுகின்றது. 

இந்த நிலையிலும் நோய்கான காரணத்தை அறியாமல் உறுப்புகள் அகற்றுவதில் தனது திறமையைக் காட்டிக்கொண்டுள்ளார்கள். நோய்க்கு காரணம் அறியாமல் எத்தனை உறுப்புகளை வெட்டி எடுத்தாலும், மாற்றினாலும் நோய் வளர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பது அவர்களிடம் போகும் மனிதர்களுக்கும் தெரிவதில்லை. வீணாக காசு பணத்தையும், உடல் நலத்தையும் இழந்து ஊனமடைகிறார்கள். 

து போல் தான் அப்பண்டிஸ் வீக்கமும், அழற்சியும் மிக எளிய முறையில் உடன் சரிசெய்யக் கூடியதை, தங்கள் அறியாமையால் – பண ஆசையால் வளர்த்து, அறுத்து எறிந்து விடுகிறார்கள். 

சீரணக் கோளாறுகளை சரிசெய்யத் தெரியாமல் அதனால் வரும் குடல் வால் வீக்கத்தை – குடல் வாலையே அறுத்து எறிந்து விடுகிறார்கள். 

பலநேரங்களில், ஒன்று அறுத்தால் ஒன்று இலவசம் என்பது போல் ஆங்கில மருத்துவர்கள் சொல்வதற்க்குச் சிறிதும் சிந்திக்காமல்த் தலையாட்டி (அதற்கான தனிக் கட்டணத்தையும் கொடுத்தே), குடல் வாலை – சினைப்பையை, கர்ப்ப பையை அறுத்துக் கொள்பவர்களும் (செலவை மிச்சப் படுத்துகிறார்களாம்) இருக்கிறார்கள். இந்த மனிதர்களை நினைக்கும் போது மிகவும் நெஞ்சு பொறுக்குதில்லை. 

பெண்களுக்கு கர்ப்ப பை நோய்களுக்கு மருத்துவம் பார்க்கத் தெரியாமல் கர்ப்ப பையையே அறுத்தெறிந்துவிட்டு நோயைக் குணப்படுத்தி விட்டதாக கூறுகிறார்கள். ஓர் உறுப்பை உடலை விட்டு நீக்கி ஊனமாக்கிவிட்டு நோயைக் குணப்படுத்திவிட்டோம் என்பது சரியா? நோய்க் கூறுகள் உடலை விட்டு நீங்காத நிலையில் – நோயின் தீவிரம் அதிகமாகி மற்ற உறுப்புகளையும் வெகு சீக்கிரம் பலவீனப்படுத்தி விடுமல்லவா? சிந்தியுங்கள். 

மூட்டுகளில் வலியால் அவதிப்படுபவர்களிடம், மூட்டுகள் –எலும்புகள் தேய்ந்து விட்டதாக கூறிப் பலகாலம் வலிமாத்திரை கொடுத்தும் பின் அறுவை சிகிச்சைக்குத் தூண்டுகிறார்களே, இதை அக்குபங்சரில் சரி செய்ய இயலுமா? 

சிந்தியுங்கள். எலும்புகள் மூட்டுகள் எந்தக் காலங்களிலும் தேய்வதில்லை. அது உயிரோட்டமுள்ளது. 

நமது இயல்பற்ற பழக்கவழக்கங்களால், நமது உடலில் உள்ள நெருப்பாற்றல் அதிகமாகி, காற்று மூலகத்தினைப் பலவீனமாக்குவதால் – நீர்மூலகங்கள் தன்னிலை இழந்து பாதிக்கப்படுகின்றன. இந்த நிலையிலேயே மூட்டுவலிகள் உருவாகின்றது. நமக்குள் உள்ள சத்தியை சரிசெய்ய மீண்டும் நமது பழக்கவழக்கங்களை சீராக்குதல் அவசியம். நமது முன்னோர்கள் நமது பழக்கவழக்கங்களை சீராக்கக் கூறும் வழிகளை கடைப்பிடிக்கவும். 

அக்குபங்சர் முறையில் 5 மூலகங்களின் ஏற்றதாழ்வை சரிசெய்வதன் மூலம் உடன் 

சுகம் பெற முடியும். பழக்கங்களை சீராக்கினால் மிக விரைவில் முழுமையான நலம் பெறுவீர்கள். 

மாதவிடாயின் போது சிகிச்சை எடுத்துக்கொள்ளலாமா? 

தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். நமது இயல்பற்ற பழக்கங்களால், மாதாந்திர தூய்மைப்படுத்தலின் போது ஏற்படும் எந்த ஒரு துன்பத்தையும் அக்குபங்சர் சிகிச்சை மூலம் சீர் செய்யலாம். 

சுகமான பேறுகாலம் அக்குபங்சர் மூலம் சாத்தியமா? 

உறுதியாக. சுகமான – நலமான குழந்தைப்பேற்றுக்கு அக்குபங்சர் வழிகாட்டுகிறது. 

இறையச்சத்தோடு, படைப்பாற்றலிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு 3வது, 6வது, 9வது மாத காலங்களில் சிறுநீரக சத்தியோட்டப் பாதையின் K 9 புள்ளியை மிக மென்மையாக சில வினாடிகள் jojJJJjபட்டும்படாமல் தொடுவதன் -தூண்டுவதன் மூலம் கால் வீக்கங்களை குறைக்கலாம், கழிவுகள் சுகமாக நீங்கும், கர்ப்ப பை தன்னிலையில் உறுதி பெறும், குழந்தை நலமாக வளரும், தாய் தந்தையர்களின் நோய் குழந்தைகளைத் தொடராது காக்கும், சுகமாக பேறுகாலம் இருக்கும். இது உறுதி. 

அக்குபங்சர் வலிகளை மட்டும் நீக்கும் மருத்துவம் என்கிறார்களே? 

அக்குபங்சர் நோய்களை முழுமையாக நீக்கும் மருத்துவம். இதன் விதிகளை கடைப்பிடித்தால் நோய்கள் வாராது காக்கும் மருத்துவமும் ஆகும். 

கைகால் எலும்பு முறிவிற்கு அக்குபங்சரில் தீர்வுண்டா? 

அக்குபங்சரின் தாயான வர்ம மருத்துவத்திலும், இறைவழி மருத்துவத்திலும் தீர்க்க முடியும். 

நீர் மூலகத்தின் திரட்சியே எலும்பு. எனவே உறுதியாக தீர்க்க முடியும். 

வலிப்பு நோய்களை அக்குபங்சரால் குணப்படுத்த முடியுமா? 

வலிப்பு நோய் மூளையின் நோயல்ல. நமது முக்கியக் கருவிகளின் செயல்பாட்டில் ஏற்படும் தடைகளால் உருவாகும் விளைவுதான் வலிப்பு. நாடிப் பரிசோதனையால் எந்த உறுப்பின் சத்தி மாறுபாட்டால் வலிப்பு ஏற்பட்டது என அறிந்து சத்தியோட்டத்தை சீராக்குவதன் மூலம் வலிப்பை மிக எளிதில் குணப்படுத்தலாம். 

அக்குபங்சரின் அணுகுமுறைக்ள எந்த வகையில் ஆங்கில மருத்துவத்தில் இருந்து வேறுபடுகிறது? 

அக்குபங்சரின் மூலமான வர்ம மருத்துவம் நமது உடலில் 20க்கும் மேலான சத்தியோட்டங்கள் உள்ளதென்கிறது. 

அக்குபங்சர் 5 மூலகங்களின் சத்திகளைச் சீராக்குவதனை அடிப்படையாக கொண்டு உடல் சத்திகளைச் சீராக்குகிறது. மேலும் அகிலத்தின் உயிராற்றலை உடல் தேவைகளுக்கு பெற்றுத் தந்து நமது சத்தித் தேவைகளை முழுமையாக்குகிறது. 

நமது புலன்களுக்கு அப்பாற்பட்ட மறைவான ஞானங்களை – அடிப்படையாக கொண்டது வர்ம மருத்துவம். வர்ம மருத்துவத்தின் வழியில் வந்ததே அக்குபங்சர் மருத்துவம் ஆகும். தமிழர் அறிவியலோடு அக்குபங்சர் சித்தாந்தங்கள் இணையும் போது அக்குபங்சரின் வீச்சு மிக சிறப்பாகியுள்ளதை உணருகிறேன். 

ஆங்கில மருத்துவத்திற்கும் இறை ஞானங்களுக்கும் சம்மந்தமில்லை. ஆங்கில மருத்துவம் – மனித அறிவின் சிறுமையை – கீழ்மையைக் குறிக்கும் ஒரு கெட்ட குறியீடே. உடல் சத்திகளைக் குறித்தோ – அகிலத்தின் சத்திகளைக் குறித்தோ எந்தப் பார்வையும் இல்லாதது. இது குறித்து ஒப்பிட்டுப் பார்க்க ஒன்றுமில்லை. உயிராற்றலின் நன்மையான செயல்களை நோயெனக் கருதும் மனித அறியாமையின் உச்சம் தான் ஆங்கில மருத்துவம். 

வணிகர்களின் அடிமையாகிப்போன சிந்திக்க மறந்த மனிதர்கள் – முட்டாளின் கையில் கத்தியையும கொடுத்துவிட்டார்கள் தலையையும் கொடுத்துவிட்டார்கள் என்பதே ஆங்கில மருத்துவம் குறித்த எனது கருத்து. 

இவ்வளவு சிறப்பான அக்குபங்சர் முறை – ஏன் இன்னும் மக்களிடம் பிரபலமடையவில்லை? 

சிந்திக்க தெரிந்த மக்களிடம் நல்ல மருத்துவ முறைகள் ஏராளம் நடைமுறையில் உள்ளது. 

தற்போதய உலகைக் பார்க்கும் போது – மனித அறிவின் கீழ்மையை உணர்த்தவும், இறைவழியில் திருப்பவும் படைப்பாற்றல் முடிவு செய்துவிட்டதாகவே கருதுகிறேன். 

பெரும்பான்மையான மனிதர்களைப் பாருங்கள் எங்கு பார்த்தாலும் சுயநலமும், வன்முறையும், அதனால் வரும் தீமைகளும், தான் எனும் அகம்பாவத்தால் கண்களை இழந்து, 

தானே அழியும் மக்கள் கூட்டம் பிறரையும் அழிக்கத்துடிப்பதை பாருங்கள். 

நிலத்தையும், நீரையும், நெருப்பையும், காற்றையும், விண்ணையும் தாங்க முடியாத அளவு மாசு படுத்திவிட்ட மனிதன் தன்னை இன்னும் அறிவுள்ளவன் என பெருமைப்பட்டுக் கொள்வதைப் பாருங்கள். 

தாங்கள் போகும் பாதை அழிவைத்தரும் எனத் தெரிந்தும்; என்ன வேகம் பாருங்கள். 

இதே நிலையில், நலமாக வாழ மிக எளிய வழிகளைக் காட்டும் ஞானமடைந்தவர்களுக்கும் பஞ்சமில்லை இவ்வுலகில். 

எனக்கு, நலம் பெற வேண்டும் எனும் எண்ணத்தைத் தவிர – வேறு எந்த நுட்பத்தையும், முயற்சிகளையும் தேவையற்றதாக்கியுள்ளான் இறைவன். எல்லா புகழும் இறைவனுக்கே.

 
 

http://eluthu.com/view-ennam/6185

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.