Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைத்துலக உறவுகளை வென்றெடுப்பது குறித்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக உறவுகளை வென்றெடுப்பது குறித்து

கா.சிவபாலன்

a735f916-01b4-48cb-b60e-3617ad03bcd91.jp

அண்மைக்காலமாக தமிழ் அரசியல்வாதிகள் ஆய்வாளர்களின் பேச்சுக்களை, கட்டுரைகளை அவதானிக்கும்போது அடிப்படையில் பல பிழைகளை (fundamentally flawed) காணக்கூடியதாக இருக்கிறது.

அரசியல்வாதிகளின் பேச்சில் தளம்பல் நிலையும், தாங்கள் கொண்டுள்ள கொள்கையில் அல்லது அவர்களின் அல்லது அவர்களைப் பின்பற்றுவோரின் முயற்சியில் பிழைகளும், சரியோ பிழையோ அவற்றை அடைவதற்காண வழிகளை சரியாக கூறமுடியாமையையும் காணலாம்.

எழுத்தாளர் எஸ்.பொ. அவர்கள் தன்னுடைய எழுத்தில் பிழை காணும் ஒரு விமர்சகரைப்பற்றி பேசும்போது, 'நான் 200 சிறுகதைகளை பெற்றவள், 4 நாவல்களை பெற்றவள், 8 குறுநாவல்களை பெற்றவள், எனக்கு இந்த இரும்பூரில் (Birmingham) தமிழ் படித்த துரும்பன், இவற்றில் எதனையுமே பெறாதவள் எப்படி பிள்ளை பெறுவது என்று சொல்லுகிறான்', என்று கூறுவார் (எண்ணிக்கையில் பிழை இருக்கலாம்). அவர் கூறுவதுபடி பார்த்தால், ஆண் ஒருவர் மகப்பேறு வைத்தியராக இருக்க முடியாது. ஆனால் விமர்சகர் ஒருவர் எழுத்தாளர் ஒருவரின் படைப்பில் பிழை கண்டுபிடிப்பதை மட்டுமே செய்யாமல் முன்னேற வழியையும் சொல்ல வேண்டியது அவசியமானதே. ஆய்வாளர்கள் சிலரும் எங்கள் அரசியல்வாதிகள் போலவே வழிகாட்ட முடியாதவர்களாகவோ அல்லது விரும்பாதவர்களாக நமக்கேன் வம்பு என்றே இருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை எடுத்துக்கொண்டால் அவர்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்தையும், தந்தை செல்வாவையும் மறந்து இன்னமும் தாங்களே பல குறைகளைக் கண்ட யாப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தையும் அல்லது மிகவும் நீர்த்துப்போன சமஷ்டியையும் பற்றியே பேசுகிறார்கள் – அதுவும் இருவர் மட்டுமே கூட்டமைப்பு முழுமைக்கும் எங்கும், எப்போதும் குரல் கொடுக்கிறார்கள். பேச்சாளர்களாக. தலைவர் தனது இந்திய விசுவாசத்துக்கு ஏற்ப தன் நோக்கையும், வழியையும் வடிவமைத்துக் கொண்டிருக்க, நடுத்தர வயது சட்டத்தரணியும், பேச்சாளரும் அண்மைக்காலத்திலேயே அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டவர், அதுதான் தமிழர்கள் பின்பற்றவேண்டிய வழிபோல் பேசுகிறார்.

இவர்களிலும் பார்க்க அடிப்படையில் சரியாக வட்டுக்கோட்டை தீர்மானத்தை பின்பற்றும் அதேவேளை அரசியல் யாப்பின் 6ஆம் திருத்தத்தினால் அப்படியே எடுத்துரைக்க முடியாமல் அடக்கி வாசிக்கும் த.தே.ம.மு. இளம் தலைவரும் தமது முதலாளித்துவ அரசியல் பாரம்பரியத்தை அடியொற்றி அனைத்துலக (மேற்குலக என்று வாசிக்கவும்) நாடுகளையே எமது நேசநாடுகள் என இன்னமும் நம்பியிருக்கிறார். சில வேளைகளில் குறை கூறினாலும்கூட.

அண்மைக்காலங்களில் ஈழத்துக்கு விஜயம் செய்த வியட்நாமிய ஜனாதிபதி நாடாளுமன்ற முன்றலில் இருக்கும் மரணித்த இலங்கைப் படைவீரனின் சிலைக்கு அஞ்சலி செய்ததைப்பற்றி எழுதும்போது ஒரு தமிழ் ஆய்வாளர் சேக்ஸ்பியரின் et tu Brutus? நீயுமா வியட்நாம்? என்று தமது கட்டுரையில் விழித்து எழுதுகிறார். எமது தமிழ் அரசியல்வாதிகள் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஒருவர்கூட, வியட்நாம், கியூபா, உருகுவே, பலஸ்தீனம் போன்ற நாடுகளுடன், நாடற்ற தேசங்களான குர்தீஷ், தீபேத், போன்ற எம்மைப் போன்ற நிலையில் உள்ளவர்களுடன் அல்லது எம்மைப்போன்று இனஅழிப்புக்கு உள்ளான ஆர்மேனியா போன்ற நாடுகளுடன் எம் பிரச்சனைகளை அவர்களை அணுகி விளங்கப்படுத்தியுள்ளனரா? அவர்களுடன் தொடர்புகளை உருவாக்கி அதனைப் பேணிவருகின்றனரா? பின்னர் எப்படி வியட்நாம் ஜனாதிபதி அரச படைவீரர்களின் சிலைக்கு அஞ்சலி செய்ததை நாம் கேள்விக்குட்படுத்தலாம்? இவர்களெல்லாம் உண்மையில் எங்களின் நேசசக்திகளாக அல்லவா இருக்க வேண்டியவர்கள். அவர்களை இலங்கை அரசின் பக்கம் செல்லவிட்டது நமது பிழையல்லவா?

ஜெனிவாவில் ஜ.நா. மனித உரிமைகள் மன்றில் (UNHCR) அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் 'தமிழர்' என்ற சொல் எங்குமே பாவிக்கப்படவில்லை. சிறுபான்மையினர் என்ற சொல்லே பாவிக்கப்பட்டது. அதிலிருந்தே அவர்களுக்கு எம் பிரச்சனையின்மீது எவ்வித அக்கறையுமில்லை என்பது தெரியவேண்டுமே. அவர்கள் அக்கறை எல்லாம் இந்தியா அடங்கலாக ஆட்சிமாற்றத்தின் மீதே இருந்தது. அதற்கு நம் நாட்டில் சீனாவுக்கிருந்த வகிபாகம் (China Factor) முக்கியமானது. அதன்படியே ஆட்சிமாற்றத்தை கொண்டுவந்தனர். இனஅழிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய பின்னர், 'ஏன் இப்பொழுது இத்தீர்மானத்தை நிறைவேற்றினீர்கள்?- மௌனம் காத்திருக்கவல்லவா வேண்டும்', என்கின்றனர் வடமாகாண சபை முதல்வரை சந்தித்த அமெரிக்க, இங்கிலாந்துப் பிரதிநிதிகள். பிரேரணையை நிறைவேற்றியவர்கள் ஜனநாயக முறையில் வடமாகாண தமிழ் மக்களால், பெருந்தொகையான வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்கள். அதில் ஒரு சிங்களப் பிரதிநிதியும், இருமுஸ்லிம் பிரதிநிதிகளும் கூட பிரேரணைக்குச் சார்பாக வாக்களித்திருந்தார்கள்.

இதிலிருந்தே அனைத்துலகம் (மேற்குலகம்) எம்மைத் தங்கள் நலனுக்காக பகடைக்காய்களாக உபயோகிப்பது தெரிகிறதல்லவா? தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் 'அனைத்துலகத்திற்கு எடுத்துரைப்போம், அனைத்துலகத்துக்கு எடுத்துரைப்போம்' என்பது சரியானதல்லவே. முதலில் தங்கள் நாட்டை எம்பக்கம் அவர்கள் திருப்ப வேண்டும். இல்லாவிட்டால் அத்தனை கோடி தமிழர்கள் அங்கிருந்து என்ன பயன்? இவர்களை-மேற்குலகை- எப்படி நம் தமிழ் அரசியல்வாதிகள் நேசநாடுகள் எனக் கூறுகின்றனர்? இவர்களுக்கு எமது ஆய்வாளர்கள் சரியான வழியை எடுத்துக்கூற வேண்டும். எமது உண்மையான நேசநாடுகள் யாரென எடுத்துக்கூற வேண்டும். சற்றுக்காலம் எடுக்குமென்றாலும் மாறிவரும் அரசியல் போக்கில் வெகுவிரைவில் முக்கிய இடத்தை வகிக்கப்போகிற சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் எமது உறவை ஏற்படுத்தி, எமது நிலையை எடுத்துக்கூறி, ஒடுக்கப்பட்ட எம்பக்கமே பொதுவுடமைக் கொள்கையும், ஏகாதிபத்தியத்துக்கு எதிரானவர்களுமான அவர்களுடைய உதவியும், சார்பு நிலையும் இருத்தல் வேண்டும் என எடுத்தியம்ப வேண்டும்.

a735f916-01b4-48cb-b60e-3617ad03bcd94.jp

அண்மையில் நான் சந்தித்த தென் ஆபிரிக்க அரசியல்வாதி ஒருவர், ஏ.என்.சி(ANC) யைச் சேர்ந்தவர் ஒருவிடயத்தை எடுத்துக் கூறினார். தங்கள் போராட்டத்தின் போது தங்கள் வாழ்நாளில் தங்கள் உரிமைகள் தங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாதிருந்ததாக. ஏனெனில் டி.கிளார்க்கிற்கு (De Klerk), அப்போதைய தென் ஆபிரிக்க ஜனாதிபதிக்கு, வெள்ளை இனத்தினரை பெரும்பான்மை கறுப்பு இனத்தினருக்கு (தங்களுக்கு) அவர்களின் உரிமையைக் கொடுக்கும்படி கூறும் திராணி இருக்கவில்லை என்று. ஆனால் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக பொருளாதாரத் தடை, ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்ற தடை, கிறிக்கட் டெஸ்ட் போட்டிகளில் பங்குபெறத் தடை போன்றவை வரத்தொடங்க, முக்கியமாக பொருளாதாரத் தடை வர, அவர் இன்னமும் அவர்களுக்குரிய ஜனநாயக உரிமைகளைக் கொடுக்காவிட்டால் தாங்கள் உலக அரங்கில் தனிமைப்படுவோம் என வெள்ளை இனத்தினருக்கு துணிவாகக் கூறியதாகவும், அதேவேளையில் பெரும் வெள்ளை இன வர்த்தகர்களும் தங்கள் வியாபாரத்தில் தாக்கம் ஏற்பட களவாக (on the sly) டி.கிளார்க்கை சந்தித்து கறுப்பு இன சுதந்திரத்திற்கான பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தும்படியும் கூறியதாகவும், இது தங்களுக்கு விரைவில் சுதந்திரத்தினைக் கொண்டு வந்ததாகவும் கூறினார்

ஆனால் மேற்கு நாடுகள் எங்களுக்காக இந்த தடைகளை இலகுவில் கொண்டுவரப் போவதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நம்மவர் எடுத்த முயற்சிகள் பெரிதாக பயன் அளிக்கவில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் இப்போழுது பணிப்பெண்களாக பணிபுரியும் பெண்களே இலங்கைக்கு மிகப் பெரிய அளவில் அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். யு.எஸ். டாலர் ஆறு(6) பில்லியன் இவர்கள் மூலம் இலங்கைக்குக் கிடைக்கிறது. முன்னர் தேயிலை, பின்னர் உடைகள் (garments) விற்பனையில் இருந்து இப்பொழுது பணிப்பெண்கள் மூலமான அந்நியச் செலாவணியே இலங்கையை தக்கவைக்கும் மூச்சுக்காற்றாக இருக்கிறது. ரஷ்யாவும் நிறைய தேயிலையை வாங்குகிறது.

சீனா, ரஷ்யா, மத்திய கிழக்கு அரபு நாடுகளை எம்பக்கம் திருப்புவது கடினமானதே. அவர்கள் மூலம் பொருளாதாரத்தடையைக் கொண்டுவர நீண்டகால முயற்சி தேவைப்படும். எனினும் நாம் நமது போராட்டத்தில் வெற்றி பெறுவதானால் முதலில் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்பொழுது நாம் போகும் பிழையான பாதையில் எவ்வளவு வேகமாக ஓடினலும்கூட எமது இலக்கை அடையப்போவது இல்லை. நாங்கள் நாடும் நாடுகள் தங்கள் சுயநலத்திற்காகவே எங்களைப் பகடைக்காய்களாக பாவிக்கின்றார்கள் என்பதை நாம் உணர வேண்டும். இதனால் நாம் அவர்களுடனான தொடர்பை முற்றாகத் துண்டிக்கவேண்டும் என்று நான் கூறவில்லை. அது சரியான இராஜதந்திர வழியுமல்ல. அவர்களுடனான தொடர்பை பேணும் அதேவேளை, மேற்குறிப்பிட்டவர்களினுடனான தொடர்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=a735f916-01b4-48cb-b60e-3617ad03bcd9

அருமையான பதிவு கிருபன்
 
நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.