Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்:அனைத்து சட்டவிரோத செயற்பாடுகளும் ஒரு மாதத்தில் ஒழிக்கப்படவேண்டும்! நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தல்

Featured Replies

யாழ்ப்பாணத்தில் அனைத்து சட்டவிரோத செயற்பாடுகளும் ஒரு மாதகாலத்தில் ஒழிக்கப்படவேண்டும்! பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தல் 
 
Ilancheliyan%203556.jpg
 
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் திடீரென அதிகரிப்பதற்குக் காரணமென்ன என கேள்வியெழுப்பியுள்ள வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற அனைத்து சட்டவிரோதச் செயற்பாடுகளும் ஒரு மாத காலத்தில் சட்டத்தின் துணைகொண்டு ஒழிக்கப்பட வேண்டும் என வடமாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.
 
வீதிகளில் சண்டித்தனம் செய்வோர், ரவுடித்தனத்தி;ல் ஈடுபடுவோர், கோஸ்டிகளாக மோதிக்கொள்பவர்கள், வாள் வெட்டுக்களில் ஈடுபடுபவர்கள் என, பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற அனைத்து நபர்களையும், உடனடியாகக் கைது செய்து நீதவான் நீதிமன்றங்களில் முற்படுத்துமாறு இந்த உயரதிகாரிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
 
யாழ்ப்பாணத்தில் பல அடாவடித்தன நடவடிக்கைள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதனால், அனைத்து அடாவடித்தன நடவடிக்கைகளையும் சட்டத்தின் துணைகொண்டு, உடனடியாக ஒழிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை அந்த அதிகாரிகளுக்கு நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அதற்காக, வீதிகளில் பெண்கள், மாணவிகளைப் பின்தொடர்ந்து இம்சிப்பவர்கள், சந்திகளில் கூடிநின்று, பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்களை, தண்டனை சட்டக் கோவையின் கீழான அலைந்து திரிபவர்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் கைது செய்வதுடன், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் வகையிலும் வீதிகளில் கூடி நின்று அடாவடித்தனம் செய்பவர்களை தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் கைது செய்து நீதிவான் நீதிமன்றங்களில் முற்படுத்துமாறும் நீதிபதி பொலிஸ் உயரதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி அறிவுறுத்தியுள்ளார்.
 
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைப் பழகத்தைத் தூண்டுகின்ற பான் பராக், மதன மோகனம், லேகியம் போன்ற போதையூட்டுகின்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் வியாபாரிகளை மிகவும் அவதானத்துடன் கண்காணிக்குமாறும், அவர்கள் விற்பனை செய்யும் பொருள்களை இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, அவசியம் ஏற்படின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி பொலிஸாருக்கு வழிகாட்டியுள்ளார்.
 
மாலை 6 மணிக்குப் பின்னர் பெண்கள் வேலைக்கு அனுமதிக்கப்படுவதில்லை. தாதியர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றார்கள். இந்த நிலையில் 6 மணிக்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புக்களை நடத்துகின்ற அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களையும் அழைத்து, உரிய சட்ட ரீதியான விளக்கங்களை வழங்கி, மாலை 6 மணிக்குப் பின்னர் மாணவ மாணவிகளுக்கு பிரத்தியேக வகுப்புக்கள் நடத்துவதைத் தவிர்க்குமாறும், அதனையும் மீறிச் செயற்பட்டு, ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் இடம்பெறுமானால், அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்துமாறும் நீதிபதி பொலிஸ் உயரதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
 
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதிகளில் உள்ள மதுபான சாலைகள் நேரம் கெட்ட நேரத்தில் திறந்து, நேரம் பிந்தி பூட்டுவதும், அடாவடித்தனங்களில் ஈடுபடுபவர்களுக்கு முக்கிய இடமாகவும், முக்கிய காரணமாகவும் இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி இத்தகைய மதுபான சாலைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
 
ஆலயங்கள், சமய நிறுவனங்கள் மற்றும் பாடசலைகளுக்கு அருகில் உரிய அனுமதிபபத்திரம் பெற்றுச் செயற்பட்டு வருகின்ற மதுபானசாலைகளின் பெயர்ப்பட்டியல்களையும் விவரங்களையும் திரட்டி, இவற்றுக்கு சட்ட வரம்பு எல்லைகளுக்கு முரணாக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி, பொலிஸ் மா அதிபர் ஊடாக, மதுவரி ஆணையகத்திற்கு அனுப்பி, உள்ளக நிர்வாக நடைமுறைகளின் மூலம் சீர்செய்யுமாறும் நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.
 
தமிழ் மக்களினதும், தமிழ் சமூகத்தினதும், முக்கியமான விடயங்களான கல்வி, பெண்களின் கௌரவம், மற்றும் அவர்களின் பாதுகாப்பு என்பவற்றைப் பாதிக்கின்ற செயற்பாடுகள் அவர்களின் உணர்வுகளைத் தூண்டி விடுவதாக அமையும். உணர்வுபூரவமான இந்த விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து, அத்தகைய செயற்பாடுகளை முளையிலேயே கிள்ளி எறிவதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால், ஒரு மாத காலத்தில் யாழ்ப்பாணம் அமைதிப் பூங்காவாக மாற்றம் பெறும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ் உயரதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
 
யாழ்ப்பாணத்தில் சட்டத்தையும் ஒழங்கையும் நிலைநாட்டுவதற்காக எற்கனவே தாங்கள் எடுத்துள்ள சட்ட நடவடிக்கைகள் தடுப்புச் செயற்பாடுகள் பற்றி வடமாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நீதிபதிக்கு விளக்கமளித்தனர்.
 
இதனையடுத்து, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பிராந்திய பொலிஸ் அதிகாரிகள், அவர்களுக்குக் கீழ் பணியாற்றுகின்ற பொலிஸ் அதிகாரிகள், தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள், மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இந்த அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் வழங்கி, இந்த மாவட்டங்களில் சமூக விரோதச் செயற்பாடுகளை ஒரு மாத காலத்தில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று நீதிபதி இளஞ்செழியன் வடமாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
 
http://www.malarum.com/article/tam/2015/06/10/10474/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html#sthash.M1AN9pkj.dpuf
 
 

 

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை: நீதிபதி இளஞ்செழியன் கடும் எச்சரிக்கை! -

 

ஹெரோயின், அபின், மோபின் போன்ற போதைப் பொருட்களை உடைமையில் வைத்திருந்தார் மற்றும் அதனை விற்பனை செய்தார் என குற்றவாளியாகக் காணப்படுபவர் யாராக இருந்தாலும், அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். ஒரு கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தார் மற்றும் விற்பனை செய்தார் என குற்றம் சுமத்தி சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில், குற்றம்சாட்டப்பட்டவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து,

இதுவரையில், அவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்கான கைரேகை அடையாளப் பதிவு இல்லாததையும் கவனத்திற் கொண்டு, அவருக்கு 30 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து தீர்ப்பளித்தபோதே நீதிபதி இளஞ்செழியன் இவ்வாறு எச்சரித்துள்ளார்.தண்டப்பணத்தைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

அதேவேளை, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டபோது, அவருடைய உடைமையில் இருந்து பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட ரொக்கப்பணம் 75 ஆயிரம் ரூபாவையும் அரசுடைமையாக்கி, அதனை அரசிறைக்குச் செலுத்தும்படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் தீர்ப்பில் போதைப் பொருளானது, சமூகத்தின் இறுக்கமான கட்டுப்பாடுகள் நியதிகளைத் தகர்த்தெறிந்து, ஒரு சமூகத்தையே அழிக்க வல்லது.அதன் காரணமாகவே. அத்தகைய தீய சக்தியைக் கொண்டுள்ள போதைப் பொருளை சிறிய அளவில்தானும், உடைமையில் வைத்திருப்பதும், அதனை விற்பனை செய்வதும், பாரதூரமான குற்றமாகக் கருதி அதற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் போதைவஸ்து கட்டளைச் சட்டம் கடுமையான விதிகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

நீதிபதி இளஞ்செழியன் இந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மிகச் சிறிய அளவாகக் கருதப்படுகின்ற 2 கிராம் ஹெரோயின், மோபின் அல்லது அபின் போன்ற ஏதாவது ஒரு போதைப் பொருளை ஒருவர் உடைமையில் வைத்திருந்தால் அல்லது விற்பனை செய்தால் அந்த நபர் மேல் நீதிமன்றம் ஒன்றில் குற்றவாளியாகக் காணப்படும் பட்சத்தில் அவருக்கு மரண தண்னை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

இரண்டு கிராம் எடைக்கும் குறைவாக மில்லி கிராம் அளவில் ஹெரோயின், மோபின், அபின் போன்ற போதைப் பொருளில் ஏதாவது ஒன்றை உடைமையில் வைத்திருந்தால் அல்லது விற்பனை செய்தால் கடூழியச் சிறைத் தண்டனையும் தண்டப்பணமும் விதிக்கப்படும்.

போதை வஸ்து கட்டளைச் சட்டத்தின்படி கைது செய்யப்படுபவர்களுக்கு நீதிவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்படமாட்டாது. அதனால் அவர்கள் அங்கு வெளியில் வரமுடியாது. விசாரணைக்காலம் முடியும் வரையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என்று சட்டம் விதந்துரைக்கின்றது.

போதை வஸ்து கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே மேல் நீதிமன்றத்தில் பிணைகோரி மனு தாக்கல் செய்ய முடியும்.கஞ்சா அல்லது கனபிஸ் உடைமையில் வைத்திருந்தமை அல்லது விற்பனை செய்தமைக்கு கடுழியச் சிறைத் தண்டனை அல்லது தண்டப்பணம் விதிப்பதற்கு மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சமூகத்தை முழுமையாகப் பாதுகாக்கும் நோக்கத்தில், பலவீனமான சக்திகளாக கருதப்படுகின்ற மாணவர்கள் வேலையற்ற நிலையில் உள்ள இளைஞர்கள் போன்றவர்களைப் பாதுகாப்பதற்காகவே, போதை வஸ்து கட்டளைச் சட்டம் இறுக்கமான விதிகளையும் கடுமையான தண்டனைகளையும் பிரகடனப்படுத்தியிருக்கின்றது.

எனவே, போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு போதை வஸ்து கட்டளைச் சட்டத்தின்படி மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதித்து கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என நீதிபதி இளஞ்செழியன் எச்சரித்துள்ளார்.

- See more at: http://www.canadamirror.com/canada/44356.html#sthash.V7iVxnhX.dpuf

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.