Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வீர்களா இல்லையா? பாராளுமன்றத்தில் பா.அரியநேத்திரன்

Featured Replies

ariam_CI.jpg

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வீர்களா இல்லையா? தெளிவான பதிலை தாருங்கள் இனியும் ஏமாற்ற வேண்டாம் என பாராளுமன்றத்தில் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

அரசின்100 நாள் வேலைத்திட்டம் தொடர்பான விவாதம் (10/06/2015) இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது மேலும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அரியம் தற்போதய ஐனாதிபதி மைத்திரி அவர்களை ஐனாதிபதியாக தெரிவாவதற்கு முழு ஆதரவும் எமது வடகிழக்கு மக்களையுமே சாரும் வெற்றியீட்டிய பின் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என பலமுறை எம்மால் கேட்கப்பட்ட போதும் இதுவரை குறைந்த்து ஒருவர் கூட விடுதலை செய்யப்பட வில்லை காலத்தை இழுத்தடுத்து.

மகிந்தவின் ஆட்சியைப் போன்று மீண்டும் நாம் ஏமாற்றப் படுகின்றோம். எனவே தெளிவான பதில் எமக்கு தேவை அதாவது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வீர்களா? இல்லையா ஐனாதிபதிக்கு பொதுமன்னிப்பு வழங்கூடிய அதிகாரம் உண்டு ஆனால் அவரும் எம்மை  ஏமாற்றுகிறார். விடுதலைக்கு பதிலாக இன்னும் கைது செய்வதையே காணமுடிகிறது .

இந்த நல்லாட்சிக்குப் பின் மத்தியகிழக்கு நாடுகளில் கடமைபுரிந்து நாடு திரும்பும்  எமது  இளைஞர்கள் மற்றும் புலம்பெயர் உறவு கள் இதுவரை 17 பேர் கைது செய் யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நல்லாட்சியில் வடகிழக்கு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை மறுபடியும் கொலைசம்பவமும் பாலியல் பலாகாரமும் இடம்பெற்றுள்ளது மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேசத்தில் மண்டூர் கிராமத்தில் பட்டப்பகலில் அரச உத்தியோகத்தரான ச.மதிதயன் என்பவர் அஅவரின் வீட்டில் வைத்து கடந்த மாதம் 26ம்திகதி சுட்டுக் கொல்லப்பட்டார் இரண்டு வாரங்கள் கடந்தும் இதுவரை அந்த கொலை தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை இதுதானா நல்லாட்சி? நான் இங்கு உரையாற்றிக்கொண்டு இருக்கும் போது இன்றுகாலையில் பட்டிப்பளை பிரதேச பிரிவில் உள்ள பன்சேனை நெல்லிக்காட்டில் தமது வயலுக்கு சென்ற கொக்கட்டிச்சோலையை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராசதுரை 62வயது யானைத் தாக்குதலால் மரணமாகியுள்ளார் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான் கரை பகுதியில் இதுவரை 20க்கு மேற்பட்டவர்கள்  யானைதாக் புதலால் உயிர்இழந்தும் 350க்கு மேற்பட்ட வீடுகள் உடைக்கப்பட்டும் பல இலட்சம்பெறுமதியான விவசாய தோட்டங்களும் உள்ளீடுகளும் அழிக்கப் பட்டும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடுகள் இழப்பீட்டு தொகைககள் வழங்கப்பட வில்லை.

இது கடந்ந மகிந்தவின் கொலையாட்சியிலும் இல்லை மைத்திரியின் நல்லாட்சியிலும் இல்லை. வடகிழக்கில் உள்ள பல நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் இன்று வேலகேட்டு போராட்டங்களை நடாத்துகிறார்கள் அவர்களை இந்த நல்லாட்சியும் ஏமாற்றுகிறது குறிப்பாக எனது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2011, 2012 காலப் பகுதியில் உரியநேரத்திற்கு பரீட்சை பெறுபேற்றை பல்கலைகழக நிர்வாகம் அனுப்பத் தவறியமையால் சுமார் பல நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் பாதிப்படைந்து மன உழைச்சலுடன் உள்ளனர் இவர்களின் காலப் பகுதியில் பட்டம் முடித்த ஆயிரக் கணக்கான பட்ட தாரிகள் வேலை செய்யும் போது இவர்கள்மட்டும் வேலை இல்லாமல் இருப்பது எந்த வகையில் பொருந்தும் இது தொடர்பாக நாம் பலமுறை சுட்டிக்காட்டியும் இந்த நல்லாட்சியும் அவர்களை புறக்கணிப்பதை அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும்.

திருமலை சம்பூர் மக்களின் காணிதொடர்பாக கடந்த கொலை ஆட்சியிலும் இநத நல்லாட்சியிலும் எத்தனையோ தடவைகள் எடுத்து கூறுயும் இறுதியாக கடந் தமாதம்820ஏக்கர் விடுவிக்க நல்லாட்சி ஐனாதிபதி மைத்திரி அவர்கள் உரிய முறையில் அதனை விடுவிக்க ஒப்பம் இன்டபோதும் தற்போது அங்கு மக்கள் குடியேறமுடியாத வாறு படையினர் தடுத்துள்ளனர் "சாமிவரங்கவடுத்தாலும் பூசாரி வரங் கொடுக்காத நிலையே உள்ளது" சம்பூர் மக்கள் கடந்த 8 வருடங்ளுக்கு மேலாக அகதிகளாக பரிதாப வாழ்கையை நடாத்துகின்றனர் இவர்கள் சிங்கள மக்களாக இருந்தால் இன்று காணிகளை கையளித்து இருப்பீர்கள்  தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்குஒரு நீதிதான் நல்லாட்சியிலும் என்னால் காண முடிகிறது. தற்போது 20வது அரசியல் சட்டமூலத் தை அவசரமாய் பாராளு மன்றத்தில் நிறை வேற்றுவதன்மூலம் சிறுபான்மையான தமிழ், முஷ்லிம், மலையக மக்களின் பிரதிநித்துவத்தை குறைப்பதை தமிழ்  தேசிய கூட்டமை பினராகிய நாம்  ஒருபோதும் ஏற்க மாட்டோம் எனவும் அரியம் தெரிவித்தார்

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120734/language/ta-IN/article.aspx

 

 
அப்படி யாருமே இல்லை என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துவிட்டது.எம்மால் இனி என்ன செய்ய முடியும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.