Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பான் கீ மூன் எதற்காக மைத்திரிபாலவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார்?

Featured Replies

இலங்கைக்கு மேலும் அதிகமான வளங்கள் ஒதுக்கப்படும் பான் கீ மூன்:-

Banki%20moon_CI.jpg

கடந்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன், இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடிய விடயம் தொடர்பாக செய்தி வெளிவந்தது. 

இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் அமர்வில் தாம் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. 

எனினும் பான் கீ மூன் எதற்காக மைத்திரிபாலவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார்? என்ற கேள்விக்கு ஊடகம் ஒன்று பதில் அளித்துள்ளது. 

இதன்படி செப்டெம்பர் மாத மனித உரிமைகள் பேரவை அமர்வின் முன்னர் இலங்கையில் பொதுத்தேர்தல் நடத்தப்படுமா? என்பதை உறுதிசெய்து கொள்வதற்காகவே பான் கீ மூன், மைத்திரியுடன் பேசியுள்ளார். 

இதன்போது செப்டெம்பரில் தெரிவு செய்யப்பட்ட புதிய பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளுடன் தாம் அமர்வில் பங்கேற்கவுள்ளதாக மைத்திரி குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை அமரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியும் இலங்கையில் உடனடி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, இலங்கை தொடர்பான ஐ,நா அறிக்கை தாமதமாகியுள்ளமை குறித்து ஐ,நா விளக்கம் அளித்துள்ளது.

இலங்கைக்கு மேலும் அதிகமான வளங்கள்ஒதுக்கப்படும் பான் கீ மூன் :-

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்காக, ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதியத்தினூடாக இலங்கைக்கு மேலும் அதிகமான வளங்கள் ஒதுக்கப்படும் என, ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போதே அவர் இதைத் தெரிவித்ததாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு செப்டெம்பரில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வின் போது, நியூயோர்க்கில் வைத்து ஜனாதிபதியைச் சந்திக்க ஆவலமாக உள்ளதாகவும் பான் கீ மூன் இதன்போது தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், அமைச்சின் பேச்சாளர் திருமதி மஹிஷினி கொலன்னே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120751/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.