Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்த வடுக்கள் ஆறாத நிலையில் தமிழர் வாழ்கின்றனர்

Featured Replies

article_1436758530-aa.JPG

யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்கள் ஆறாத நிலையில் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்  ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு நகரில் சனிக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'தமிழ் மக்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்தவர்களாக, அபிலாஷைகள் நிறைவேற்றப்படாதவர்களாகவும் வாழ்கின்றார்கள்.  'ஏனைய சமூகத்தவர்களை போன்று தமிழ் மக்களும்  சமமான உரிமையை பெற்று வாழவேண்டும். அதையே தமிழ் மக்களும்  விரும்புகின்றனர். தமிழ் மக்களுக்கான சமத்துவம், சமவாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையிலேயே சுயநிர்ணம் நாடி அவர்கள்  தங்கள்  குரலை ஒலிக்கச்செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்' என்றார். 'பல்வேறுபட்ட பாதிப்புக்களையும்  சுமந்து வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும். இந்த சூழ்நிலையில் முக்கியமான ஒரு தேர்தலாக  நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.  இந்தத் தேர்தலை  தமிழ் மக்கள் சரியாக பயன்படுத்தவேண்டும். அத்துடன்,  தமிழ் மக்களின் உரிமைகளை பெறவும் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காகவும் நாம் செயற்படவேண்டியுள்ளது' எனவும் அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/150139#sthash.cwClysvw.dpuf

  • தொடங்கியவர்

யுத்தப் பாதிப்புக்குள்ளான இளைஞர், யுவதிகளின் வாழ்வு கட்டியெழுப்பப்படும் -

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றியடைந்தால்,  கடந்த யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான இளைஞர், யுவதிகளின் வாழ்வை கட்டியெழுப்புவதுடன், எதிர்கால சிறார்களின் கல்வி முன்னேற்றத்துக்கு  அர்ப்பணிப்புடன் சேவையாற்றவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்  கல்குடாத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்  எஸ்.எஸ்.அமல் தெரிவித்தார்.

செங்கலடியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆதரவாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'வடக்கு, கிழக்கு மக்களின் தெரிவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே உள்ளது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்றது' என்றார்.   

'35 வருடகால யுத்தம் காரணமாக தமிழ் இளைஞர், யுவதிகள் எந்த சுதந்திரத்தையும் அனுபவிக்கமுடியாத நிலையிலிருந்தனர். தற்போது  எமது இனம் முன்னேற்றப் பாதையில்  நகரவேண்டிய காலகட்டத்தில் உள்ளது. இதை  அனைவரும் உணர்ந்துள்ள நிலையில்,  இதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுக்கவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/150142#sthash.VGUAwGiv.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.