Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மது, புகைத்தல் பாவனையால் சீரழியும் வட பகுதி இளைஞர் சமுதாயம்

Featured Replies

9502_1_thumb_anti_drugs_.png?14367637306

வடமாகாணத்தில் மதுபானம் மற்றும் புகைத்தல் பாவனை அதிகரித்திருக்கும் நிலையில், 2015 ஆம் ஆண்டு 4.5 மில்லியன் லீற்றர் மதுபானத்தை எமது மாகாண  குடிமக்கள் நுகர்ந்துள்ளனர். மேலும் புகைத்தல் பாவனையில் 42.9 வீதமாக இலங்கையின் 25 மாவட்டங்களில் முதலாமிடத்தில்  யாழ்.மாவட்டம் இருக்கின்றது. இந்நிலையில் போதைப் பொருட்கள், மதுபானம், புகைத்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்தவேண்டிய கடப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம்.

பாடசாலைகளிலும் இளைஞர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை  ஏற்படுத்துவதன் ஊடாகவும் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தொடர்பாடலை வளர்ப்பதன் ஊடாகவுமே வடக்கில் போதைப்பொருள் கட்டுப்பாடு சாத்தியமாகுமென நேற்று ஞாயிற்றுக்கிழமை  யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கில்  மதத் தலைவர்கள், பொலிஸார் மற்றும் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டினர்.

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் மாதத்தையொட்டி நடைபெற்ற இந்நிகழ்வில்  புனித சவேரியர் குருத்துவ கல்லூரியின் விரிவுரையாளர் அருள்திரு வி.ரவிராஜ் கருத்துத் தெரிவிக்கையில்;

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் யுத்தத்தின் சத்தம் என பேசிக் கொண்டிருந்த நாம் இன்று சத்தமில்லா யுத்தம் என பேசிக் கொண்டிருக்கிறோம். ஆம், உண்மையில் சத்தமில்லாத யுத்தமே இப்போது நடைபெறுகின்றது. யாழ்ப்பாணத்தில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் லீற்றர் மதுபானம் விற்பனையாகின்றது. 2002 ஆம் ஆண்டு 1 மில்லியன் லீற்றர் மதுபானம் அருந்திய நாம் 2013 ஆம் ஆண்டு 2 மில்லியன் லீற்றர் மதுபானத்தையும் 2015 ஆம் ஆண்டில் ஆறு மாதங்களில்  4.5 மில்லியன் லீற்றர் மதுபானத்தை அருந்துகிறோம் என்றால் எங்கள் சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கின்றது? 2007 ஆம் ஆண்டு 29 வீதமாக இருந்த மதுபான விற்பனை அனுமதி தற்போது 81 வீதமாக மாறியிருக்கின்றது.  

இந்த அனுமதிகளை யார் கொடுக்கிறார்கள்? திருகோணமலை, வவுனியா ஆகிய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் போர் நடைபெற்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நான் மேலே குறிப்பிட்ட சத்தமில்லாத யுத்தம் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.

மதுபானம் மற்றும் புகைத்தல் பாவனை தொடர்பில் எஸ்.கௌதமன் விளக்கமளிக்கையில்;

இலங்கையில் மதுபானம் அருந்துவோரில் 14 தொடக்கம் 20 வயதிற்குட்பட்டவர்கள் 57.9 வீதமாக உள்ளார்கள். புகைத்தல் பாவனையில் இலங்கையின் 25 மாவட்டங்களில் யாழ்ப்பாணம் 42.9 வீதமாக முதல் நிலையில் உள்ளது. இந்நிலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் மாங்குளம் பொலிஸ் நிலையம், வடமாகாண புகையிரதப் பாதை அமைப்பு ஆகியவற்றுக்கு நிதி உதவி வழங்கியது.

மேலும் வட, கிழக்கில் புகையிரதப் பாதை   அமைக்கப்பட்ட பின்னர் புகைத்தல் பொருள் விற்பனை நிறுவனம் வழங்கிய ஊடகப் பேட்டி ஒன்றில் 9.48 வீதம் தமக்கு வருமானம் அதிகரித்துள்ளதாகவும் 7.22 வீதமாக தங்கள் பங்குகள் விலை உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றது. இந்நிலையில் பல பக்கங்களிலிருந்து பல்வேறு சக்திகளுடன் போதைப்பொருள் மற்றும் மதுபான எதிர்ப்புக்கான போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்கவேண்டியிரு க்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

 யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன்  அங்கு கருத்துத் தெரிவிக்கையில்;

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறவேண்டும். போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டத்தில் பொலிஸார், மக்கள், அரசாங்க அதிகாரிகள் தமக்கிடையில் இரகசியமான ஒரு தொடர்பாடலை வளர்ப்பதன் ஊடாக குற்றவாளிகளை அடையாளப்படுத்தி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.  

யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தேவநேசன் கருத்துத் தெரிவிக்கையில்;

பாடசாலைகளில் மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டல் செயற்றிட்டத்தை நாம் முன்னெடுத்து வருகின்றோம். மேலதிகமாக உளவியல் ரீதியான ஆற்றுப்படுத்தல்களையும் நாம் மேற்கொள்கிறோம். சில சந்தர்ப்பங்களில் பாடசாலை மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுகின்றார்கள். இது முறையற்ற ஒன்றாகும். தண்டிக்கப்படுவதற்கும் ஒரு முறை இருக்கின்றது. எனவே இவ்வாறான நிலைமைகளின் போது அது தொடர்பில் எமக்கு தெரியப்படுத்தலாம். மேலும் பருத்தித்துறை, இளவாலை, மாதகல் பகுதிகளில் பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கைகள் நடத்தப்படுவதன் ஊடாக கடல்வழியாக வரும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்தலாம் என்றார்.

யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்,

அநேகமான குற்றங்களுக்கு மதுபானமே அடிப்படையாக இருந்துள்ளது. இந்நிலையில் குற்றவாளிகளை எமது புலனாய்வாளர்களின் ஒத்துழைப்புடனேயே கைது செய்கின்றோம். எனவே பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.

வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவன் கருத்துத் தெரிவிக்கையில்;

தென்னாபிரிக்காவிலிருந்து வந்த அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் போருக்குப் பின்னர் எந்தவொரு சமூகமும் இரு வழிகளை தேர்ந்தெடுக்கும். அதில் ஒரு வழி சமய வழி. மற்றைய வழி மதுபானம், போதைப் பொருட்கள் கொண்ட வழியாகும். இதில் நாம் இரண்டாம் வழியை தேர்ந்தெடுத்திருக்கின்றோம். இந்நிலையில் மதுபான விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு பலர் கோரிக்கை விடுக்கின்றார்கள். அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது என்றார். இக்கருத்தாடலில் கலந்து கொண்ட சமயத் தலைவர்கள் இளைஞர்களை சமய வழியில் ஈடுபடுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

 http://www.thinakkural.lk/article.php?local/sq4erssxlj2749d37b3ca37115000aftaz06b2bfdeaa12647e3bb1c9fyloo#sthash.b9M0ZVAs.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.