Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரியின் ஆதரவு எமக்கே - சுசில் பிரேம்ஜெயந்த

Featured Replies

president-maithripala-sirisen.jpg

நல்லாட்சி பற்றி பேசும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் தமது ஆறு மாதகாலத்தில் இருந்த நல் லாட்சியையும் அழித்து விட்டது. எமது தலைவர் மஹிந்தவை விமர் சிக்கும் தகுதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை. எம்மை விமர்சிக்க முன்னர் ரணிலும் அவரது கூட்டமும் தம்மை தாமே கண்ணாடியின் முன்னால் விமர்சித்துக்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேம்ஜெயந்த தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற எமது தலைவர் மைத்திரிபால சிறிசேனவே தூணாக இருந்தார். அவரே இம்முறை எமக்கு முழுமையான ஆதரவினை வழங்குகின்றார். ஆகவே எமது வெற்றி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தகுதியான கட்சியாக தயாராகியுள்ளது. இம்முறை எம்முடன் இடதுசாரிக் கட்சிகள், தொழித் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் உள்ளடங்கலாக 262 வேட்பாளர்கள் நாட்டில் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் வெற்றிலை சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்றனர்.

இம்முறை ஐக்கிய தேசியக் கட்சிக்கு எம்முடன் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது. ஏனெனில் இந்த ஆறுமாத காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது. மக்களை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்தும் அவர்களால் தக்கவைக்க முடியாது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பொது அணியினர் 62 இலட்சம் வாக்குகளை பெற்றனர்.

மஹிந்த தலைமையிலான நாம் 57 இலட்சம் வாக்குகளை பெற்றோம். ஆனால் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்தத் தொகையினை நெருங்கக் கூட முடியாது. ஏனெனில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பொது அவர்களுடன் அவர்களின் வெற்றிக்காக முக்கிய பங்கினை செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய முக்கிய பங்காளிக் கட்சிகள் இம்முறை தனித்து களமிறங்குகின்றன.

அதேபோல் கடந்த முறை ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற அல்லது போட்டியிடாது அரசாங்கத்தை அமைக்க முக்கிய தூணாக இருந்ததே எமது தலைவர் மைத்திரிபால சிறிசேனதான். அவரே இம்முறை எமக்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றார். ஆகவே எமது வெற்றி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலில் நாம் பத்து மாவட்டங்களில் வெற்றி பெற்றோம். அவர்கள் 12 மாவட்டங்களில் வெற்றிபெற்றனர்.

இம்முறை நிலைமை அப்படி அமையாது. இம்முறை பத்து இலட்சம் வாக்குகளை முன்னணியில் வைத்துக்கொண்டே நாம் தேர்தலில் களமிறங்குகின்றோம். ஆகவே இலகுவாக எம்மால் வெற்றிபெற முடியும்.

மேலும் நல்லாட்சி, ஜனநாயக வாதம் பற்றி இந்த அரசாங்கம் பேசி மக்களை ஏமாற்றுகின்றது என்பதற்கு நாம் தகுந்த காரணங்களை முன்வைப்போம். குறிப்பாக எம்மை திருடர் கூட்டம் என விமர்சித்து நாட்டில் ஜனநாயகம் பலப்படுத்தப்படுவதன் மூலம் நல்லாட்சியை உருவாக்குவதாக ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஆனால் மத்திய வங்கி ஆளுநர் விடயத்திலும் மத்திய வங்கிக் கொள்ளை தொடர்பிலான குற்றச்சாட்டின் போதும் இவர்களால் தகுந்த காரணங்களை முன்வைக்க முடியவில்லை. சுயாதீனம் பற்றி பேசியவர்களே இன்று தேர்தல் வியாபாரத்துக்காக அரச சொத்துக்களையும் உடைமைகளையும் பாவிக்கின்றனர்.

வெளிவிவகார அமைச்சின் வாகனங்களை பயன்படுத்தி தமது தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர். இதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளது. அரசாங்க பணத்தை தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்துகின்றனர்.

நிதி அமைச்சின் மூலம் இலஞ்சம் வழங்கப் படுகின்றது. இவைகளை பிரதமர் ரணில் கண்டுகொள்ளவில்லையா அல்லது மூடி மறைக்கின்றாரா என்ற சந்தேகம் எமக்குள்ளது. நல்லாட்சி பற்றி பேசும் கூட்டணியில் எவரிடமும் நல்லாட்சிக்கான கொள்கை இல்லை. இங்கிருந்து வெளியேறி இன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்திருக்கும் ஒரு சிலருக்கு இது விளங்கிக்கொள்ள முடியாது.

இவர்கள் தமது அரசியல் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். இவர்களை நினைத்து எம்மால் பரிதாப்பப்பட மட்டுமே முடியும். அதேபோல் எம்மை மோசடிக்காரர்கள் என விமர்ச்சிக்க பிரதமர் ரணிலுக்கு எந்தத் தகுதியும் இல்லை.

மஹிந்த ராஜபக் ஷவை விமர்சிக்க முன்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் எதனோல் கார்களையும், கொள்ளைக்காரர்களையும், கொலைகாரர்களையும் ரணில் திருத்த வேண்டும். எம்மை விமர்சிக்க கையை நீட்ட முன்னர் ரணிலும் அவரது திருடர் கூட்டமும் தம்மை கண்ணாடியின் முன்னாள் பார்த்து விமர்சித்துக்கொள்ள வேண்டும்.

இம்முறை நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையில் பலமானதொரு தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளோம். எமது முதல் கூட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது கட்சியின் தலைவர் உள்ளிட்ட அனைத்து முக்கிய உறுப்பினர்களையும் ஒன்றிணைக்க நாம் எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

http://www.virakesari.lk/articles/2015/07/15/மைத்திரியின்-ஆதரவு-எமக்கே

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.