Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைமுடி உதிர்வு பிரச்சினைக்கு தீர்வு - டாக்டர். சிவஞான சுந்தரம்

Featured Replies

66hairloss_working.jpg

இளம் வயதினர் முதல் நடுத்தர வயதினர் வரை சகலரும் பொதுவாக கவலைப்படும் ஓர் விடயம் தலைமுடி உதிர்வு அதிலும் அண்மைய நாட்களில் பெண்களை விட ஆண்களே அதிகம் கவலைப்படுகின்றனர்.
 
காரணம் தலைமுடி என்பது ஒருவரது பால் வேறுபாட்டை வெளிக்காட்டும் ஆளுமை மற்றும் கம்பீரத் தன்மை என்பதனை மற்றவருக்கு தெரியப்படுத்தும் ஊடகமாகவும் அமைகிறது என்கிறார் வைத்தியர் சிவஞான சுந்தரம். இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: 
 
பொதுவாக  நம்மில் பலர் தமது பற்களுக்கு கொடுக்கும் கவனிப்பையே தமது தலைமுடிக்கு கொடுக்கின்றனர்.
 
அதாவது பல்வலி வரும்வரை அவர்கள் தமது பற் சுகாதாரம் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை அதை போல் தான் தலைமுடி அதிகம் உதிரத் தொடங்கும் வரை தலை முடியின் பராமரிப்பை பற்றியோ அதன் நிலையைப் பற்றியோ அதிக கவனம் செலுத்துவதில்லை.
 
இது கவலைக்குரிய விடயமாகும். எனவே அனைவரும் தம்மால் முடிந்த வரை தமது அறிவு  நிலைமைக்கேற்ப முடி உதிர்வதற்கான காரணத்தை அறிந்து அதன்படி செயற்பட்டால் தலைமுடி உதிர்வு என்ற பிரச்சினைக்கு நிரந்த தீர்வை அவர்களாகவே பெற்றுக்கொள்ள முடியும். 
 
எம்மிடம் சிகிச்சைக்கு வரும் பலர் தலைமுடி உதிர்வால் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.  எனவே, நாம் சிகிச்சைக்கு மேலதிகமாக மன நல ஆலோசனைகளையும் அவர்களுக்கு வழங்குகின்றோம்.
 
அத்துடன், சிகிச்சைக்கு பின்னரும் தேவைப்படும் ஆலோசனை களையும் வழங்கி வருகின்றோம்.
 
பொதுவாக தலைமுடி உதிர்வென்பது ஒரு சாதாரண விடயம். உதிரும் முடிகளின் எண்ணிக்கை வழமையைவிட அதிகமாக இருக்கும்போது மற்றுமே அதற்குரிய சரியான காரணத்தை கண்டறிந்து அதற்கு சிகிச்சை முறையை தெரிவுசெய்து கொள்ள முடியும்.
 
தலைமுடி நடுதல் முதல் இயற்கை வழிகளில் முடிவளர்ச்சியை தூண்டுதல் வரை பல்வேறு சிகிச்சை முறைகளும் பலவிதமான இயற்கை மற்றும் செயற்கை பாவனை பொருட்களும் நடைமுறையில் உள்ளன.
 
நமது சிகிச்சை நிலையத்தில் எவ்வித பக்க விளைவுகளுமற்ற இயற்கை முறை மூலமான சிகிச்சையே நாம் வழங்கி வருகின்றோம். 
 66anagen.jpg
நமது தலைமுடி இரண்டு பகுதிகளைக் கொண்டது. வெளியில் தெரியும் முடியானது கடினமான புரதத்தாலான காட்டின் (Keratin) எனும் பதார்த்தத்தால் அமையப்பட்டுள்ளது.  
 
இது மூன்று படைகளில் ஆன இரத்த கலங்களைக் கொண்ட அமைப்பாகும். இதனால் தான் முடி வெட்டும் போது வலி உணர்வு தெரிவதில்லை. 
 
மற்றைய பகுதி தோலினுள் அமையப்பெற்ற மயிர் கால் என்று அழைக்கப்படும் (Hair Follicle) ஆகும். இது நேரடியாக இரத்தத்தின் மூலம் போசனையைப் பெற்று வரும் உயிருள்ள அமைப்பாகும்.
 
இம்மயிர்களின் அமைப்புடன் சீபம் எனும் பதார்த்தத்தை சுரக்கும் சீபச் சுரப்பிகள் காணப்படுகின்றன. இது மயிர்களின் பளபளப்புக்கு காரணமான எண்ணெய் பசையை வழங்குகின்றது.
 
சராசரியாக சிசு வளர்ச்சியின் 22ஆம் வார காலப் பகுதியின் அளவில் ஒருவரது தலைமுடிக்கான  (Hair Follicle) எனும் முடி கலன்கள் தோன்ற ஆரம்பித்து விடும்.
 
கிட்டத்தட்ட இந்நிலையில் 5 மில்லியன் அளவான முடிகால்கள் உடல் முழுவதும் தோன்றிவிடும். ஒருவரின் வாழ்நாளில் மீண்டும் முடிகால்கள் தோற்றம் பெறுவது கிடையாது. 
 
முடியின் வளர்ச்சி வேகம் தலையில் கிட்டத்தட்ட  (3- 4 – mm) அளவில் நாளொன்றுக்கு இருக்கும். அதாவது ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 6 அங்குலம் வளர்ச்சி இருக்கும் பொதுவாக மற்ற பாலூட்டி இனங்களுடன் ஒப்பிடும் போது மனிதனுக்கு மட்டும் எவ்வித காலநிலை வேறுபாடுகளும் தலைமுடியின் வளர்ச்சியில் பங்கு கொள்வதில்லை. 
 
முடியின் வளர்ச்சி நிலை மூன்று படி நிலைகளில் நடைபெறும்.  அவை Anagen, Catagen மற்றும் Telogen. பொதுவாக ஒருவருக்கு எவ்வேளையும் இம்மூன்று படி நிலைக்கு உட்பட்ட முடி காணப்படும். 
 
Anagen  நிலையில் தான் தலை முடியின் வளர்ச்சி தங்கியுள்ளது. இந் நிலையில் முடி வேகமாக வளர்கின்றது.
 
பொதுவாக ஒவ்வொரு 28 நாட்களுக்கு  ஒரு சென்ரி மீற்றர் அளவு முடியின் வளர்ச்சி இருக்கும். ஒருவருக்கு இவ்வளர்ச்சி நிலை நீடித்து இருப்பின் முடியின் வளர்ச்சி வேகம் அதிகமாக இருக்கும். அதிக நீண்ட கூந்தல் அமையப் பெற்றவர்களுக்கு Anagen   நிலை நீண்டதாக இயற்கையில் அமையப் பெற்றிருக்கும்.
 
Telogen  நிலையில் பொதுவாக 25 – 100 வரையான முடி உதிர்வு  சாதாரணமாக நடைபெறும். முடியின் வளர்ச்சி நிலையில்  Telogen  நிலை நீண்டிருப்பின் முடி உதிர்வு அதிகமாக இருக்கும். 
 
எனவே, இதிலிருந்து சகலரும் இலகுவில் விளங்கிக் கொள்ள முடியும். முடி வளர்வதும் முடி உதிர்வதும் என்ற செயற்பாடுகள் இயற்கையில் நிகழும் சாதாரண செயற்பாடு.
 
எனவே, இவ் இயற்கை செயற்பாட்டை இச் சமநிலையில் சரியாக நடைபெற நாம் சில விடயங்களை முடி உதிர்வு என்ற பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்.
 
முடி உதிர்வை தடுக்க பின்பற்ற வேண்டிய விடயங்களை அடுத்தவாரம் விபரிக்கிறேன்.
 
(தொடரும்...) 
 மேலதிக விபரங்களுக்கு: 
 வைத்தியர் எஸ்.சிவஞானசுந்தரம்
 136 B சென்.ஜேம்ஸ் வீதி,
 கொழும்பு - 15
  077-  3084556  
  011- 2521297
 

http://metronews.lk/medical.php?medical=66&display=0#sthash.9Ggnq9aw.dpu

தலைமுடி உதிர்வை தடுக்க சில உணவு முறைகள் - வைத்தியர் எஸ்.சிவஞானசுந்தரம் 

பொது­வாக தலை­மயிர் உதிர்­வ­தற்கு பல காரணங்கள் உள்­ளன.
 
எமது உடலில் உள்ள ஹோர்­மோன்­க­ளான antrogen மற்றும்  Estrogen என்­ப­வற்­றுக்­கி­டை­யே­யான வேறு­பாடு அதி­க­மாக இருப்­பது ஒரு காரணம். 
 
இதற்கு தகுந்த சிகிச்சை தேவைப்­படும். அதைத்தவிர தைரொ­யிட்டு   (Thyroit) சுரப்பியின் மித­மிஞ்­சிய செயற்­பாடு அல்­லது அதிகுறை­வான செயற்­பா­டுகள் இரண்டும் உடல் நலத்தை மற்­று­மின்றி முடி உதிர்­வ­திலும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும். 
 
நாம் பாவிக்கும் சில நோய்­க­ளுக்­கான மருந்­துகள் கூட தலை­முடி உதிர்வில் பங்கு கொள்­கின்­றன என்­பது சில­ருக்கு ஆச்­ச­ரி­ய­மாக இருக்கும்.
 
உதா­ர­ண­மாக குருதி உறை­தலை தடுக்கும் மருந்­துகள், குடும்பக்கட்­டுப்­பாட்­டுக்கு பாவிக்கும் வில்­லைகள், உயர் குருதி அழுத்­தத்­திற்கு பாவிக்கும் மருந்­துகள் மற்றும்   steroid   என்­ப­வற்றின் பக்க விளை­வுகள் முடி உதிர்­வுக்கு கார­ண­மாக அமையும்.
 
மித­மிஞ்­சிய அளவில் எடுக்கும் விற்­றமின் ஏ யும் இதற்கு ஒரு காரணம்.
 
இவ்­வாறு மருந்­து­களால் ஏற்­படும் முடி உதிர்வை, எடுக்கும் மருந்­து­களை முறைப்­படி பயன்­ப­டுத்­து­வதால் தவிர்த்­துக்­கொள்ள முடியும். 
 
முடி உதிர்வை பின்­வரும் வழி­களை கடை­பி­டிப்­பதன் மூலம் தவிர்த்துக் கொள்ளலாம். 
 
v சுகா­தா­ர­மான தலை­முடி பரா­ம­ரிப்பு

v சீரான தலை முடி பரா­ம­ரிப்பு

v ஆரோக்­கி­ய­மான உணவு, உறக்கம்

v சீரான மன­நலம்
 
தலை­மு­டியை நன்கு பரா­ம­ரிக்­கவும் தலை­மு­டியின் வளர்ச்சி வேகத்தை அதிகபடுத்­தவும் சில குறிப்­புகள்.
 
உங்கள் தின­சரி உணவில் கட்­டாயம் பழ­வ­கை­க­ளையும் மரக்­கறி வகை­க­ளையும் கீரைவகைகளையும் சேர்த்­துக்­கொள்­வ­துடன், இறைச்சி மற்றும் மீன் வகை­களும் உள்­ள­டங்­கு­வது அவ­சி­ய­மாகும்.
 
காரணம் தலை­முடி கெரட்டின் எனும் புர­தத்தால் அமை­யப்­பட்­ட­தொன்று என்­பதால் நாம் அதி­க­ளவு புரத உண­வு­களை உட்­கொள்­வது அவ­சி­ய­மா­கி­றது.
 
உதா­ர­ண­மாக கோழி, மீன், முட்டை, சோயா வகைகள் பீன்ஸ் போன்­ற­வற்றை கூறலாம். இவ்­வ­கை­யான உண­வுகள் ஆரோக்­கி­ய­மான முடி வளர்ச்­சிக்கு தேவை­யான கெரட்டின் எனும் புரத மூலக் கூறு­களின் உரு­வாக்­கத்­திற்கு கார­ண­மாக அமை­கி­ன்றன. 
 
உட­லுக்கு தேவை­யான கொழுப்பு உண­வுகள் முக்­கி­ய­மாக   Omega_3 அதி­க­முள்ள கொழுப்பு உண­வுகள் ஆரோக்­கி­ய­மான உட­லுக்கும் மற்றும் முடிக்கும் அவ­சி­ய­மாகும்.
 
மித­மிஞ்­சிய கொழுப்பு உண­வு­களை தவிர்ப்­பது உடல் நலத்­திற்கு நல்­லது. 
இரும்பு (Iron)  மற்றும் zine அதி­க­முள்ள உண­வுகள் தலை­மு­டியின் வளர்ச்­சிக்கு பெரிதும் அவ­சி­ய­மாகும்.
 
இரும்­புச்­சத்­தா­னது உடலின் சகல பகு­தி­க­ளுக்கும் தேவை­யான ஒட்­சி­சனை கொண்டு செல்ல அவ­சி­ய­மா­கி­றது.
 
 zine  விற்றமின் இறந்த உடற்கலங்­களை புதுப்­பிப் ­ப­தற்கு அவ­சி­ய­மா­கி­றது.
 
அது மட்டு மன்றி மயிர் கால்­களை சுற்றி உள்ள மயிர்­களின் பள­ப­ளப்­புக்கு கார­ண­மான எண்­ணெயை சுரக்கும் எண்ணெய் சுரப்­பி­களின் செயற்­பாட்டை சீராக செயற்­பட வைக்­கின்­றது.  
 
zine அதி­க­முள்ள உண­வு­க­ளா­னவை, வறுத்த தானியம் மற்றும் பருப்பு வகைகள், நிலக்­க­டலை, கொக்கோ அதிகம் உள்ள சொக்லெட் (Dark Chocolate) பூச­ணிக்காய் போன்ற­வற்றை கூறலாம்.
 
வறண்ட சருமம் உள்­ள­வர்­க­ளுக்கும், வறண்ட தலை­மயிர் உள்­ள­வர்­களும்  zine அதிக பயன்­ப­டுத்­த­வேண்டும். 
 
இரும்­புச்­சத்தின் செயற்­பாட்­டுக்கு விற்­றமின் C யின் சேர்க்கை அவ­சி­ய­மாகும் எனவே இரும்­புச்­சத்து உள்ள உண­வு­க­ளுடன் விற்­றமின் C அதி­க­முள்ள உணவுகளையும் சேர்த்­து­க்கொள்­ள­வேண்டும்.
 
எனவே, முடிந்த வரை ஆரோக்­கி­ய­மான உண­வு­வ­கை­களை தகுந்த அளவில் நாம் உட்­கொண்டு வந்தால். உடல் நலம், ஆரோக்­கி­ய­மான, அமை­தி­யான மன நலத்­திற்கு கார­ண­மாக அமையும். 
 
தலை­முடி பரா­ம­ரிப்பு பற்றி பார்க்கும் போது மித­மிஞ்­சிய அழகு சாத­னங்­களும் அடிக்க­டி ­மாற்­றிக்­கொள்ளும் முடி அலங்­கா­ரங்­களும் தலை­மு­டிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
 
பொது­வாக அழகு நிலை­யங்­களில் பாவிக்கும் தலை முடி­களை சீராக்கும் பதார்த்­தங்கள், இர­சா­யன கல­வை­யா­கவே அதிகம் இருக்கும். இவற்றை முறை தவறி பயன்­ப­டுத்­து­வ­தாலும், அள­வுக்கு அதி­க­மாக பயன்­ப­டுத்­து­வ­தாலும் முடியின் தடிப்பு குறைந்து மெல்­லிய  மயிர்­க­ளாக மாறு­வது மட்­டு­மின்றி முடி உதிர்­வுக்கும் கார­ண­மாக அமையும். 
 
அடிக்­கடி தலை முடியை உலர்த்­து­வ­தற்கு செயற்கை வெப்­பத்தை பயன்­ப­டுத்­து­வதும் மித­மிஞ்­சிய வெப்­பமும் தலை­முடி உதிர்­வுக்கு கார­ண­மாகும்.
 
எனவே முடிந்­த­ளவு தலை­மு­டியை உலர்த்­து­வ­தற்கு மின்­சார உப­க­ர­ணங்­களை பயன்­ப­டுத்­து­வதை தவிர்ப்­பது நல்­லது. 
 
அடிக்­கடி தலை­மு­டியை சீப்பால் சீவு­வதால் தலை முடி வளரும் என கூறப்­பட்­டாலும், மித­மிஞ்­சிய அழுத்­தத்தை முடிக்கு கொடுக்கும் போது தலை­மு­டியின் மயிர்க்­கால்கள் வெளியே இழுக்­கப்­ப­டு­கி­ன்றன.
 
இச்­செ­யற்­பாடு காலப்­போக்கில் முடி உதிர்­வுக்கு கார­ண­மாக அமைந்து விடும்.
 
மிக­மிக முக்­கி­ய­மான விடயம் தலை முடி நனைந்த நிலையில் சீப்பால் சீவு­வதும் அழுத்தி துடைப்­பதும் முடி உதிர்வை அதி­கப்­ப­டுத்தும்.
 
தலை முடி ஈர­மாக இருக்கும் நிலையில் அதன் உறுதி தன்மை குறை­வதால் இலகுவில் பாதிப்­ப­டைய வாய்ப்­புண்டு.
 
தலை முடியில் அதிக அழுத்தம் கொடுக்கும் விட­யங்­களில் கூடிய கவனம் எடுப்­பது நல்­லது.
 
குறிப்­பாக, இறப்பர் நாடாக்­களை கொண்டு தலை முடியை இழுத்து கட்டும் போதும் மேல­தி­க­மாக கிளிப் வகை­களை அழுத்­த­மாக முடியை இழுத்து செருகும் போதும் தேவை­யற்ற அழுத்­தத்­திற்கு தலை­முடி உட்­ப­டு­கி­றது.
 
இம் மித­மிஞ்­சிய அழுத்தம் தலை­முடி உதிர்வை ஏற்­ப­டுத்தும்.
தலை­மு­டியை கழுவும் போது கூடுதல் கவனம் செலுத்தல் வேண்டும்.
 
உங்கள் தலை­மு­டியின் எண்ணெய் தன்­மைக்கு ஏற்ப கிழ­மைக்கு 3 தொடக்கம் 4 தடவைகள் shambo அல்­லது Conditioner பயன்­ப­டுத்­தலாம்.
 
இவற்றை அதி­க­மாகப் பயன்­ப­டுத்தும் போது இவை தலைமுடியில் இயற்­கை­யாக உள்ள எண்ணெய்த் தன்­மையை உறிஞ்சி எடுத்துக் கொள்ளும்.
 
இதனால் வறண்ட தலைமுடியாக மாறுவதுடன் தலை முடி உதிர்வும் அதிகமாகும்.
 
v இரவு நித்திரைக்கு போகும் முன் தலையை இதமாக மாசாஜ் செய்து கொள்ளுங்கள்.
v தலைமுடி ஈரமாக உள்ள நிலையில் கூடிய கவனம் எடுக்கவும்.

v குறைந்தளவான வெப்பத்தை தலைமுடி உலர்த்த பயன்படுத்தவும். 

v ஆரோக்கியமான  உணவில் அதிக நாட்டம் எடுங்கள்.

v Steroid  மருந்துகளை வைத்திய ஆலோசனை இன்றி தொடர்ந்து பாவிப்பதை தவிருங்கள்.

v இரசாயனம் சேர்க்கப்பட்ட தலைமுடி சீராக்கிகளை தவிர்த்து இயற்கை மூலிகைகளை பயன்படுத்தவும்.
 
மேலதிக விபரங்களுக்கு: 
 வைத்தியர் எஸ்.சிவஞானசுந்தரம்
 136 B சென்.ஜேம்ஸ் வீதி,
 கொழும்பு –- 15
  077- – 3084556  
  011- – 2521297
 
http://metronews.lk/medical.php?medical=67&display=0#sthash.0nMdYeS0.dpuf

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Fotolia_12464056_XS.jpg

 

கொட்டக்கூடாத இடத்திலை கொட்டி...:(
முளைக்கக்கூடாத இடத்திலையெல்லே முளைக்குது....:shocked:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.