Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழையான வரலாற்று நூல்களால் தவறான வழி நடக்கும் சிங்கள இனம்

Is Mahavamsa a True story or is a a mythical story? 3 members have voted

  1. 1. Precentage

    • 10%
      1
    • 25%
      0
    • 45%
      1
    • 75%
      0
    • 100%
      1

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தனியரான ஜி.சி மென்டிஸ் வின்சன் சிகள - சிங்கள என்று அழைக்கப்படும் நாட்டுப் பெயர்கள.; ஜாதகக் கதைகளுக்குப் புனைந்து வழங்கப்பட்ட ஐதீகமேயாகும் எனக் கூறியுள்ளார். இவற்றை நிருபிக்கத்தக்க சான்றுகளில்லை என்கிறார் பௌத்த சிங்கள அறிஞர் எஸ்.பி.எவ் சேனாரெத்தினா இவர் ஒரு மானிடவியளாளராவார்.

ஷஷபுத்த சமயம் ஏற்படுத்திய முதல்மையானசெல்வாக்கினால் ஈழம் சம்பந்தமான நீண்ட காலமாக பௌத்த இலக்கியமும் மொழியும் சம்பந்தமான ஆய்வு, அவற்றுக்கான பொருள் தேடலுமே கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சாசன தொல்லியல் சான்றுகள் போன்ற இதர சான்றுகள் பௌத்த இலக்கியக் கண்ணோட்டத்தில் அணுகப்பட்டன. அல்லது முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டன. இத்தகைய அணுகுமுறையின் பயனாகவே வரலாற்று ஆசிரியர்கள் ஈழத்தின் வரலாற்றைப் பெரும்பாலும் முழுமையாக தீவவம்சம், மகாவம்சம் போன்ற பாளி இலக்கியங்களின் அடிப்படையில் படைத்துள்ளார்கள். இவ்விலக்கியங்கள் எத்தகைய பயனுடையவையாக இருப்பினும் மிகவும் பழமை வரலாற்றை அணுகும்போது ஐதீகப் பாங்குடையவையாகவே இருக்கின்றன என இலங்கையில் 1970ம் ஆண்டு அகழ்வாய்வு மேற்கொண்ட அமெரிக்க மானிடவாய்வாளர் விமலா பேக்ளே கூறியுள்ளார். 1969ல் அனுராதபுரத்திலும் 1970ல் கதிரோடை பொன்னரிப்பு ஆகிய இடங்களில் விமலாபேக்ளே தலைமையில் நடந்த தொல்பொருள் ஆய்வுகளின் படி அவை அனைத்தும் பெருங்கற் கால நாகரிகமாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

எல்லாமாக பாளி நூல்கள் கூறும் முப்பது மையங்களில் ஆய்வுகள் இடம் பெற்றன. அதுபோல் திராவிடர்கள் வாழ்ந்த, வாழும் தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகம் போன்ற பகுதிகளிலும் இவ்வாய்வுகள் நடைபெற்றன. இவை இரண்டையும் ஒப்பு நோக்கிய போது இவை இரண்டும் ஒரே மாதிரியைக் கொண்ட பெருங்கற்கால கலாசாரமாகும் என உறுதி செய்துள்ளார்கள்.

விஜயனும் அவன் தோழர்களும் இருந்து வந்ததாக மகாவம்சம் கூறும் இடங்களாக நம்பப்படும் இந்தியாவின் வடகிழக்கு வடமேற்குப் பகுதிகளில் இன்று வாழும் மக்களின் இரத்தத்தையும் ஈழத்தில் இன்று வாழும் சிங்களவரின் இரத்தத்தையும் ஆய்வு செய்த மரவணுவாய்வாளரான அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த கேர்க்" இந்திய வடமேற்கு - இந்திய வடகிழக்கு வாழ் மக்களினதும் சிங்களவரினதும் இரத்தத்தில் எவ்வித தொடர்புமில்லை. ஆனால் ஈழத்து சிங்களவரின் இரத்தம் வடகீழ் வங்காளிகளினதும் தென்னிந்திய தமிழர்களின் இரத்தத்தோடும் மிகமிகப் பொருத்தமாக இருக்கிறது என உறுதி செய்துள்ளார். இதை பௌத்த சிங்கள மானிடவியலாளரான கலாநிதி விஜயசுந்தராவும் ஆதரித்துள்ளார். ‘சிங்கள மயமாக்கம் என்பது பௌத்தத்தோடு ஒன்றிணைந்த கலாசாரப் படர்ச்சியாகும் எனப் பேராதனைப்பல் கலைக்கழகத் தொல்லியல்த் துறைப் பேராசிரியர் கசிந்த குணதிலகா கூறியுள்ளார்.

சிங்கள மயமாக்கும் திட்டமிட்ட சித்தாந்தத்தின் நோக்கில் அன்று தென்னிந்திய மக்கள் ஈழத்தின் கலாசாரத்தை தம்மயமாக்க எடுத்த முயற்சியை பௌத்த சங்கத்தினரும் அரசர்களும் தடுக்க முயன்றதன் பலனே தங்களை வட இந்திய பௌத்த கலாசாரத்துடன் இணைக்க முற்பட்டமையாகும். ஆனால் உண்மையாகவே மரவணுவாய்வுப்படி சிங்களவரின் இரத்தம் வட இந்தியரை விடத் தென்னிந்தியத் தமிழரின் இரத்தத்தோடு மிக நெருங்கிய தொடர்புடையதாகக் காணப்படுகிறது என கேம்பிரிஜ் பல்கலைக்கழக மானிடவியலாளர் கொன்னிங்காமிசர் கூறியுள்ளார்.

அடுத்து சூளவம்சத்தை நோக்குவோம். சூளவம்சம் மாவீரன் பராக்கிரமபாகுவைக் கதாநாயகனாகக் கொண்டு எழுதப்பட்ட நூலாகும். இந்நூலும் மகாவம்சத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதொன்று. பராக்கிரமபாகு சிங்களவனுமல்லன், பௌத்தனுமல்லன். மன்னன் என்ற வகையில் மக்களில் ஒரு பிரிவினர்கள் ஆதரித்த சமயத்திற்கு அதன் வளர்ச்சிக்கு உதவியும் ஒத்தாசையும் வழங்கினானே ஒழிய அவன் பௌத்தனல்ல. அவன் முழுக்க முழுக்கத் தமிழ் பரம்பரையைச் சேர்ந்த பாண்டிய இளவரசன். இவன் கி.பி 1140 - 1173 வரை அரசாண்டான். இவனின் ஆட்சி மொழி தமிழ்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கலிங்க வம்சத்தைச் சேர்ந்த முதலாவது விஜயபாகு கி.பி 1054ல் பொலநறுவைக்கு அரசனாக்கப்பட்டான். அவன் சோழர்களால் கொலை செய்யப்பட்ட மானவர்ணனின் மகள் திலகசுந்தரியை மணம் செய்தான். இந்த விஜயபாகுவின் தங்கை மித்தா. இவள் பாண்டிராசா என்னும் பாண்டியனை மணந்தாள். மித்தாவுக்கும் பாண்டிராசா தம்பதிகளுக்கும் மானாபர்ணன், கீர்த்திஸ்ரீமேகன், ஸ்ரீபல்லவன் என மூன்று குழந்தைகள் பிறந்தார்கள்.

விஜயபாகுவின் மகள் இரத்தினவள்ளியை மித்தாவின் மூத்தமகன் மானாபர்ணன் மணம் முடித்தான். இவன் யாழ்ப்பாணத்தில் சிங்க நகரில் ஆட்சி செய்தான். இவர்களின் மகனே பராக்கிரமபாகு. தாயும் தந்தையும் சைவர்கள் - தமிழர்கள். அவன் பல சைவக் கோயில்களைப் புதுப்பித்தும் புதிதாகக் கட்டியது போல தன் குடிகளில் பௌத்தர்கள் வழிபட விகாரையும் கட்டினான்.

அதற்காக அவன் பௌத்தனோ அல்ல சிங்களவனோ அல்ல. அவன் இந்த நாட்டின் மன்னன். பராக்கிரமபாகு பற்றி குயசசயச (பார்ரர்) என்னும் வரலாற்று ஆசிரியர் இவன் தன் குடிகளை எல்லோரையும் சமமாகவே மதித்து ஆட்சி செய்தான். சகிப்புத் தன்மை இவனைப் பொறுத்தவரை ஒரு பலவீனம் அல்ல. நியாயபூர்வமான தத்துவ ரீதியான ஒரு சிந்தனையின் வெளிப்பாடு. எனவே பராக்கிரமபாகு பௌத்தனோ சிங்களவனோ அல்ல தமிழன்.

பண்டைக் காலத்தில் இலங்கையை ஆண்டவர்கள் நாகர், இயக்கர் என்ற திராவிடர். பின்னர் கலிங்கர் - பாண்டியர், சேரர், சோழர் அனைவரும் தமிழர் சைவர்கள் கலிங்கத் தமிழரசன் பரம்பரையே பாகு என முடியும். அரச பரம்பரையாகும். தீசன் என முடியும் அரச பரம்பரை நாகர் பரம்பரையாகும். அரசர்கள் சைவத்தையும் பௌத்தத்தையும் சமனாக ஆதரித்தார்கள். ஒரு சிலர் சைவத்தின் வெறியனாகவும் சிலர் பௌத்தத்தின் வெறியனாகவும் அதிகாரத்தைத் தக்க வைக்க சூழ்நிலைக்கு ஏற்ப ஆண்டர்கள். அன்னியர் வரும்வரை ஆட்சிமொழி தமிழாகும்.

இன்று இலங்கையில் சிங்களத்தையும் தமிழையும் பேசுவோர் அன்று இலங்கையில் வாழ்ந்த ஆதிக்குடிகளான நாகர், இயக்கர்களின் வாரிசுகளாகும் எனப்பௌத்த சிங்கள வெறியரும் இலங்கையின் முன்னாள் தொல்பொருள் ஆணையாளருமான எஸ். பரணவிதான கூறியதே சரியான சரித்திரம். அதை விடுத்து பிழையான தப்பான சிங்களப் புராணங்களின் தவறான வழிகாட்டலே இன்றைய இலங்கையை இனவெறிக் கொலைக் களமாக்கியுள்ளது.

ஆரியக் குடியேற்றம் என்னும் கதை ஆதாரமற்றது. இலங்கையிலும், இந்தியாவிலும் புத்தசமயம் அறிமுகம் செய்யப்பட்ட போது இரு இடங்களிலுமிருந்தவர்கள் ஒரே புதிய கற்கால நாகரிகத்திற்கு உட்பட்டவர்கள் என 1980ல் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தென்னாசிய கருத்தரங்கில் உரை ஆற்றிய சிங்களப் பேராசிரியர் கஸந்த குணதிலக்க கூறினார்.

பூர்வீகச் சிங்களவரில்; பெரும்பான்மையினர் திராவிடரும் சிறுபான்மையோர் மதக நாட்டினருமாவார். சிங்களவரின் நடை உடை பாவனைகள் முதலியன தமிழர் பழக்கவழக்கங்களை ஒத்திருக்கின்றன. இவர்களின் மொழி தமிழ் மொழியும், மதக நாட்டு மொழியும் கலந்த ஒன்று என்று அறிஞர் எஸ்.பிறிற்றோ கூறுகிறார். சிங்களவர் திராவிட மக்கள் கணத்தைச் சேர்ந்தவர்கள் என பேராசிரியர் ஹேக்கல் தானெழுதிய (Pedigree of MAN) என்னும் நூலில் கூறியுள்ளார். எனவே இந்த உண்மைகளை உண்மையான வரலாற்றை உணர்ந்த பின்பு தப்பான தவறான முற்றும் பிழையான ஐதிகங்களின் ஒட்டு மொத்த நூல்களை வரலாற்று மூலமாகக் கொள்வது சிங்கள இனத்தின் வரலாற்று வறுமையைக் காட்டுகிறதே ஒழிய அவை வரலாறல்ல.

thanks to : www.battieelanatham.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.