Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திசைதிருப்பப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Featured Replies

திசைதிருப்பப்படும் கூட்டமைப்பு

தமிழ் மக்களின் நேரிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுத வடிவம் வெற்றிமேல் வெற்றிகளைப் பெற்று விடுதலை என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறிச் சென்ற காலகட்டத்தில் தமிழ் மக்களின் ஜனநாயகக் குரலாக எமது தேசியத் தலைவர் வே. பிரபாகரனால் உருவாக்கப்பட்டது தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு. எனவே இதை இந்திய உளவு நிறுவனத்தின் கையாட்களிடமோ மஹிந்த ராஜபக்சவின் குடும்ப நண்பர்களிடமோ கையளிக்க முடியாது. இது என்றும் தமிழ் மக்களின் உரிமைக்குரல் எந்த ஒரு மேலாதிக்க சக்திகளுக்கும் விலைபோகாது ஒலிக்க வேண்டும் எனப்படும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இலங்கைத் தமிழ் மக்கள் எந்த ஒரு சரணடைவாளர்களுக்கும் விற்றுவிடத் தயாரில்லை.

ஆனால் 2010 இலங்கையின் சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொண்டமை இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான அமெரிக்காவின் முதலாவது முன் வரைவைத் தமிழ் மக்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என தமிழர் தரப்புக்கு அழுத்தம் கொடுத்தமை கடந்த மார்ச்மாதம் வெளியிடப்படவிருந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியிடப்படுவது ஒத்திவைக்கப்பட்டமையை வரவேற்றமை போன்ற தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது பெரும் கசப்புணர்வை கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். எனவே ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற ஆரம்பித்தது.

அதேவேளையில் விடுதலைப்புலிகளின் ஜனநாயக் குரலாக உருவான தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவறான நபர்கள் கைப்பற்றி தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை மழுங்கடிக்கும் ஆயுதமாக அதைப் பாவிக்க அனுமதிக்கலாமா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

நாம் விரும்பியோ விரும்பாமலோ அப்படி ஒரு நிலையை உருவாக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையால் சில நகர்வுகள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் விருப்பு வாக்குகளில் ஒன்றைத் தனக்கு வழங்கும்படி கேட்பதுடன் மற்ற இரு விருப்பு வாக்குகளையும் மாவை சேனாதிராஜாவுக்கும், சுமந்திரனுக்கும் வழங்கும்படி கோரவேண்டுமெனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியலில் தாங்கள் நீக்கப்படாமல் இருப்பதற்காக நியாயமான சிந்தனைப் போக்குடைய வேட்பாளர்கள் கூட இந்த நிபந்தனைக்கு உட்படவேண்டிய நிர்ப்பந்தம் எழுந்தது.

இதன் காரணமாக முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் நேர்மையும் இன உணர்வும் கொண்ட விலைபோகமுடியாத வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் படி தமிழ் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.ஒவ்வொரு வேட்பாளர்களின்,ஆதரவாளர்களும் ஒரு வாக்கைத் தமது வேட்பாளர்களுக்கும், ஏனைய இரு வாக்குகளையும் சுமந்திரனுக்கும் மாவைசேனாதிராஜாவுக்கும் வழங்கும்போது அவர்கள் இருவரும் ஏனையோரைவிடப் பலமடங்கு அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெறுவார்கள்.

இங்குதான் பெரும் ஆபத்தின் அடித்தளமே உருவாகின்றது. அதாவது சுமந்திரன் தனக்குத் தமிழ் மக்கள் அதிக வாக்குகளால் ஆணை வழங்கிவிட்டனர் எனக் கூறிக்கொண்டு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நோக்கங்களைத் திசைதிருப்பி ஒரு திருப்தியற்ற இனப்பிரச்சனைத் தீர்வை ஏற்றுக்கொள்ளும் நிலைமைக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பே உருவாகும்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மறைமுகமாகவே சர்வதேச அளவில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை முன்கொண்டுசெல்ல தனக்கு சுமந்திரன் அவசியம் தேவை எனப் பகிரங்கமாகப் பொதுக்கூட்டத்தில் தெரிவித்ததை நாம் கவனத்தில எடுக்காமல் விடமுடியாது. எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு விலைபோகக்கூடிய தந்திரசாலிகளின் தடத்தில் பயணிக்கும் ஒரு அமைப்பாக மாறி விடுவதைத் தமிழ் மக்கள் அனுமதிக்கமுடியாது. அப்படி நாம் அனுமதித்தால் அது நாம் எமது தலைவனுக்கும், எமது மாவீரர்களுக்கும், எமது போராளிகளுக்கும் செய்யும் துரோகமாகும்.

ஆவேசமான மேடை உரைகளும், எதிரியுடன் சமரச சல்லாபமும் என்ற அமிர்தலிங்கம் பாணி அரசியல் சாணக்கியம் வேண்டாம்.

நாம் எமது இலட்சியத்திற்காக உயிர்விலை கொடுத்தவர்கள். சிலுவை சுமந்து வேதனை அனுபவிப்பவர்கள். எனவே எம்மை எவரும் ஏமாற்ற அனுமதிக்கக்கூடாது.
எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை அதன் இலட்சியப் பாதையிலிருந்து திசைதிருப்பும் எந்த ஒரு நடவடிக்கையையும், எந்த ஒரு நபரையும் நிராகரித்து முன்செல்வது எமது முக்கிய கடமையாகும்.

http://tamilleader.com/?p=50619

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.