Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

குற்றப்பத்திரிகை படம் அனுமதி


Recommended Posts

பதியப்பட்டது

குற்றப்பத்திரிகை படம் திரையிட ஐகோர்ட் அனுமதி

சென்னை, டிச.1:

"குற்றப்பத்திரிகை" படத்தை திரையிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கை பின்னணியாகக் கொண்டு 1993ல் உருவான படம் "குற்றப்பத்திரிகை". இதில் ராம்கி, ரோஜா நடித்துள்ளனர். ஆர்.கே. செல்வமணி இயக்கியுள்ளார்.

இப்படத்துக்கு அனுமதி அளிக்க மத்திய தணிக்கைக் குழு மறுத்தது. இதையடுத்து படத் தயாரிப்பாளர் ரவியாதவ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சில காட்சிகளை நீக்கிவிட்டு "ஏ" சான்றிதழ் அளித்து படத்தை வெளியிடலாம் என்று நீதிபதி முருகேசன் தீர்ப்பளித்தார்.

இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய தணிக்கைக் குழு மேல் முறையீடு செய்தது. அதில் "தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக படம் உள்ளது". எனவே இப்படத்தை திரையிடக்கூடாது என குறிப்பி ட்டது. இதையடுத்து இப்படத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதி சந்துரு பார்த்தனர். இம்மனு மீதான தீர்ப்பை அவர்கள் நேற்று அளித்தனர். படத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பகுதிகளை நீக்கியுள்ளனர்.

மேலும் இதில் நீக்க வேண்டிய காட்சிகள் ஏதும் இல்லை. எனவே படத்தை திரையிட அனுமதி அளித்து, தணிக்கைக் குழுவின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்கிறோம். மத்திய தணிக்கைக் குழு, 4 வாரத்துக்குள் படத்துக்கு "ஏ" சான்றிதழ் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தனர்.

நன்றி தினகரன்

Posted

"13 ஆண்டு போராட்டத்துக்கு தீர்வு"

சென்னை, டிச.1:

"குற்றப்பத்திரிக்கை" படத்தை ரிலீஸ் செய்யலாம் என நீதிமன்றம் தீர்ப்பு கூறியதன் மூலம் 13 ஆண்டு போராட்டத்திற்கு தீர்வு கிடைத்திருக்கிறது என இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் இயக்குனர் செல்வமணி நேற்று கூறியதாவது: 91ம் ஆண்டு இந்த படத்தை தொடங்கினோம். 93ல் முடித்து தணிக்கைக்கு விண்ணப்பித்தோம். படத்திற்கு சான்றிதழ் தர தணிக்கைக் குழு மறுத்தது. 94ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தோம். 13 ஆண்டு போராட்டத்தின் பலனாக, படத்தில் எந்ததவறான காட்சிகளும் இல்லை, படத்தை திரையிடலாம் என இப்போது நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டாம் எனவும் தணிக்கைக் குழுவுக்கு நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.

படத்தில் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி தருவது போன்ற காட்சி, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து போலீஸ் அதிகாரிகள் முன்பாகவே ஓடிப்போவது போன்ற காட்சி உட்பட 4 காட்சிகளை தணிக்கைக் குழு வெட்டச் சொன்னார்கள்.

அந்த காட்சிகளைக் கூட வெட்ட வேண்டாம் என நீதிமன்றம் கூறிவிட்டது. தவறான தகவல்களை யாரோ சொல்வதால்தான் காங்கிரஸ் கட்சி படத்தை எதிர்க்கிறது.

ஒரு வரலாற்று உண்மையைத்தான் பதிவு செய்திருக்கிறேன். நான் யாருக்கும் எதிரி இல்லை. சென்சார் சான்றிதழ் கிடைத்த அதே நாளில் படம் ரிலீஸ் ஆகும்.

இவ்வாறு செல்வமணி கூறினார்.

நன்றி தினகரன்

Posted

'குற்றப்பத்திரிக்கை'க்கு விடுதலை!

நீண்ட காலமாக ரிலீஸ் பண்ண முடியாமல் தவித்து வந்த குற்றப்பத்திரிக்கை திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்து படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என சென்சார் போர்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படம் குற்றப்பத்திரிக்கை. ஆர்.கே.செல்வமணி இதை இயக்கினார். இப்படம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்து வந்ததால் பல ஆண்டுகளாக படத்தை வெளியிட முடியவில்லை.

இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய வசதியாக சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் படத் தயாரிப்பாளர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் சமீபத்தில் குற்றப்பத்திரிக்கை படத்தை ஒரு திரையரங்கில் வைத்து பார்த்தனர்.

மேலும், தயாரிப்பாளர் தரப்பில் வழங்கப்பட்ட சி.டி. ஒன்றையும் நீதிபதிகள் பார்த்தனர்.

இதைத் தொடர்ந்து குற்றப்பத்திரிக்கை படத்தை திரையிட நீதிபதிகள் அனுமதி அளித்தனர். மேலும் இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது.

இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கி படத்தைத் திரையிட அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் பிறப்பித்த உத்தரவை தள்ளுபடி செய்யக் கோரிய தணிக்கை வாரியத்தின் மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பின் மூலம் 'குற்றப்பத்திரிக்கை' திரைப்படம் மக்கள் முன் 'தாக்கல்' செய்யப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இத்தீர்ப்பு குறித்து இயக்குநிர் ஆர்.கே.செல்வமணி கூறுகையில், கடந்த 1991ம் ஆண்டு படத்தை ஆரம்பித்து 1992ம் ஆண்டு எடுத்து முடித்தோம். ஒரு குழந்தை பிறப்பதற்குக் கூட 10 மாதங்கள்தான் ஆகும். ஆனால் அதையும் தாண்டி 14 ஆண்டுகள் ஆகி விட்டது இப்படத்தை வெளியிட.

இப்படம் காங்கிரஸ் கட்சிக்கு எதிரானதல்ல. இப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் கருணாநிதிக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது குறித்து எனக்குத் தெரியாது. நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை.

நீண்ட காலத்திற்கு முன் எடுக்கப்பட்ட படம் என்றாலும் கூட இந்தக் காலத்திற்கும் பொருத்தமான வகையில் இப்படம் இருக்கும். தணிக்கை சான்றிதழ் கிடைத்து விட்டால் ஒரே நாளில் கூட படத்தை வெளியிட நாங்கள் தயாராக உள்ளோம் என்றார் செல்வமணி. http://thatstamil.oneindia.in/specials/cin...ani_061201.html

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.