Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தரின் சிந்தனையை மறந்தது இலங்கை

Featured Replies

மகிந்தரின் சிந்தனையை மறந்தது இலங்கை

[02 - December - 2006] [Font Size - A - A - A]

மனிதப்பண்புகள், நாகரிகம் என்றால் என்னவென்று புரியாத நிலையில் கீழ்மட்ட நோக்கங்களும், சிந்தனைகளும், செயற்பாடுகளும் மிகுந்து விட்ட நமது நாடு, நமது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் வரலாறு கொண்டதாகப் பெருமை பேசும் இலங்கைத் திருநாடு. இதை எண்ணும் போது வேதனையும், வெறுப்பும், விரக்தியுமே மேலோங்குகின்றன.

அசோக சக்கரவர்த்தியின் மகனான மகிந்தனால் இலங்கைக்கு கி.மு. 237 ஆம் ஆண்டில் புதிய பண்பட்ட சிந்தனை புகுத்தப்பட்டது. அது பேணிக்காக்கப்படுகின்றது என்று கூறுகின்றார்கள். நாட்டில் தற்போது நடப்பவற்றையும் மகிந்தவின் சிந்தனையையும் ஒப்பிட்டுப்பார்த்தால் உண்மை புரியும்.

கலிங்கப் போரில் வெற்றி கொண்டபின் வீணாக யுத்தத்தால் உயிர்கள் பலியாகின்றன என்பதை உணர்ந்து வேதனைப்பட்ட அசோகச் சக்கரவர்த்தி யுத்தத்தை வெறுத்து அறம்போதிக்கும் புத்தரின் வழியைப் பின்பற்றித் தனது பிள்ளைகளான மகிந்தனையும், சங்கமித்தையையும் புத்த துறவிகளாக்கி அறம் போதிக்க இலங்கைக்கு அனுப்பியதாக வரலாறு சொல்கின்றது. அதையே மகாவம்சமும் சொல்கின்றது. தேவநம்பியதீசன் என்ற அரசன் மிகிந்தலையில் மான் வேட்டையாட வில்லைத் தயார் செய்தவேளை "தீஸா நிறுத்து" என்று தடுத்து கொலை செய்வது பாவம் என்று மகிந்தன் அறம் போதித்த நாளே இலங்கையில் பௌத்த சமயம் முதன் முதலில் போதிக்கப்பட்ட நாளாகும்.

மகிந்தனின் அறச்சிந்தனை பரப்பப்பட்ட அந்த நோன்மதி நாளை இன்றும் கொண்டாடுகின்றது இந்த நாடு. கொலையைத் தடுத்து அறத்தைப் புகட்டியதன் மூலம் இலங்கையின் பண்பாட்டிற்கு, வாழ்க்கை நெறிக்கு புது வழிகாட்டியதாகப் பெருமை பேசும் இந்தநாட்டில் மகிந்தரின் சிந்தனை மறுக்கப்பட்டுவிட்டது. நாளும், பொழுதும் கொலைகள் நடக்கின்றன.

காவியுடைதரித்து, கொலை வெறியைத் தடுத்த மகிந்தரின் சிந்தனை இன்று கைவிடப்பட்டுவிட்டது என்று கூறினால் அது தவறல்ல. இலங்கையை புனித பூமியாக ஆக்க முயன்றார், போதனை செய்தார் மகிந்தர் அன்று. இன்றோ இலங்கை கொலைக்களமாக, சுடுகாடாக அல்லவா விளங்குகின்றது.

மகிந்தரின் சிந்தனையை மறந்ததால் நாடு அலங்கோலமாகிவிட்டது. எல்லாவித தீய சிந்தனைகளும், செயற்பாடுகளும் நிறைந்து விட்டது. பஞ்சமாபாதகங்கள் தலைவிரித்தாடுகின்றன.

மகிந்தரின் சிந்தனையைப் போற்றியவர்கள் தினமும் பஞ்சசீலங்களைப் பின்பற்றுவதாக உறுதியெடுப்பது வழக்கமாக இருக்கின்றது.

உயிர்களைக் கொல்லமாட்டேன், பிறருக்குரியவற்றைக் களவமாடமாட்டேன். பொய் சொல்ல மாட்டேன். மது அருந்த மாட்டேன். தவறான காம இச்சைகளுக்கு ஆட்படமாட்டேன் என்பதே அந்த ஐந்து சீலங்களாகும். இன்றும் பக்திபூர்வமாக குறிப்பிட்ட அந்த பஞ்சசீலங்களையும் கடைப்பிடிப்போம் என்று புத்தபிரானின் திருவுருவின் முன்னிலையில் சத்தியம் செய்து பாளிமொழியில் உறுதி எடுப்பது நாளாந்தம் நடைபெறுகின்றது. சமய விழாக்களிலும் குறிப்பிட்ட சுலோகங்களுக்கு முதன்மை இடமளிக்கப்படுகின்றது.

ஆனால், நடைமுறையில் ஒன்றுமே கடைப்பிடிக்கப்படுவதில்லை. கொலை செய்ய மாட்டேன் என்று உறுதியுரை கூறி சத்தியம் மேற்கொள்பவர்கள். கொலை வெறிக்குத் தூபம் போடுவதும் கொலை செய்வது தவறல்ல என்று விளக்கமளிப்பதும் மகிந்தரின் சிந்தனையின்பாற்பட்டதல்ல.

அதேபோன்று, பொய் கூறமாட்டேன் என்று புனிதரின் திருவுருவின்முன் மலர்வைத்து வணங்கிவிட்டு வந்த அடுத்தகணமே வாயில் வந்ததெல்லாவற்றையும் கூறுவதைக் காணலாம். உண்மை எங்கே என்று தேடிக் கண்டுபிடிக்க முடியாதது மட்டுமல்ல. நம்பவே முடியாதவைகளையும் கூறிவருவதை, மக்களைக் குழப்பி வருவதைக் காணலாம்.

மது அருந்த மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டு நேராக மதுபானக் கடைகளுக்குச் செல்பவர்களும், சமயப்பிரசங்கங்களில் மது அருந்தாதே என்று போதனை செய்யும் போதே மதுவை அருந்துபவர்களையும் பலர் அறிவர். பாடசாலைகள் ஆரம்பிப்பதைவிட மதுசாலைகள் திறந்து வைப்பில் நமது நாடு முதன்மை வகிக்கின்றது.

பிறருக்குரியதைக் களவாக எடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்பவர்கள், பிறரது சொத்துகளை உடைமைகளை, உரிமைகளை ஏன் உயிர்களைக் கூட எடுத்து விடுகின்ற அவலம் நிறைந்த நாடாக நம் நாடு விளங்குகின்றது. பிறருக்குரியதைத் தட்டிப்பறிப்பது, அழித்து ஒழிப்பது, கிடைக்கவிடாமல் தடுப்பது, நிம்மதியாக வாழ முடியாமற் செய்வது இதுபோன்ற எத்தனையோ மகிந்தரின் சிந்தனைக்குப்புறம்பான செயற்பாடுகள் நடக்கின்றன.

தவறான காம இச்சைக்குள்ளாக மாட்டேன் என்ற உறுதியுரை எந்தளவு கடைப்பிடிக்கப்படுகின்றது? தினமும் வெளியாகும் செய்திகள் அருவருப்பாக உள்ளன. தந்தை மகள் உறவுக்கோ, பேரன் பேத்தி உறவுக்கோ ஆசிரிய மாணவ உறவுக்கோ துறவி பக்த உறவுக்கோ மதிப்பளிக்காத சம்பவங்கள் பல நிகழ்கின்றன.

அண்மையிலே பசுவுடன் வல்லுறவு புரிந்த ஒருவனின் செய்தி வெளிவந்தது. காலையிலே உறுதியுரை. அன்றே மிருகத்துடன் வல்லுறவு. குருனாகலை நீதிமன்றம் விசாரித்து குற்றவாளியாகக் கண்டு சிறைத்தண்டனையும் வழங்கியுள்ளது.

மகிந்தரின் சிந்தனையை மறந்து, மனித குலம் வெறுக்கும் செயற்பாடுகள் மெலெழுந்து விட்டன. அன்று அதாவது கி.மு. 237 இல் இந்நாட்டில் புகுத்தப்பட்ட மகிந்தரின் சிந்தனைக்கு புத்துயிர் கொடுத்து அதன் வழி செயல்பட்டால் இந்நாட்டில் நிலவும் அவலங்கள் பல அகல வழியேற்படும். மகிந்தரின் சிந்தனைகளுக்கு இடமளித்து நாட்டிலே அமைதி காண வழிகான முன்வரப்போவது யாரோ?

http://www.thinakkural.com/news/2006/12/2/...s_page16454.htm

மன்னிக்கவேண்டும்-----வைப்பாட்டிக்கு பிறந்த காசியப்பன் பதவிமோகத்தால் பெத்த தகப்பனாகிய தாதுசேனனை சுவருக்குள் வைத்து கட்டிவிட்டு ஆட்சியை பிடித்தவன்.

இலங்கையில் கல்கிசை முதல் அம்பாந்தோட்டை வரை சிறுவர்களை வைத்து பாலியல் வியாபாரம் செய்பவர்கள்.கிராமபுறங்களில் உள்ள மதவழிபாட்டுத்தலங்களில் வாசனை சவற்கார துண்டுகளை கொடுத்து ஏமாற்றி பருவமே அறியாத சிறுமிகளை பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய மதத்தலைவர்கள்........இப்படியானவர

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.