Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விவகாரத்தில் ஏனைய விடயங்களிலும் ஐ.நா. கவனம் செலுத்த வேண்டும்: அலென் றொக்ஸ்

Featured Replies

(ஞாயிற்றுக்கிழமை, 3 டிசெம்பர் 2006, 16:29 ஈழம்) (ந.ரகுராம்)

இலங்கை விவகாரத்தில் படைகளில் சிறார் சேர்க்கப்படுவதை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் ஏனைய மனிதாபிமான விடயங்கள் குறித்தும் பரவலான பார்வையை ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்த வேண்டும் என்று அதன் சிறப்புத் தூதுவர் அலென் றொக்ஸ் தெரிவித்துள்ளார்.

படைகளில் சிறார் சேர்க்கப்படுதுடன்இ சிறார் கொல்லப்படுவது, அவர்களுக்கான மனித உரிமைகள் மறுக்கப்படுவது போன்றவை குறித்து ஐ.நா கவனம் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

சிறிலங்காவுக்கு கடந்த நவம்பர் மாதம் வருகை மேற்கொண்ட றொக்ஸ், சிறிலங்கா பாதுகாப்புப் படையின் பாதுகாப்பில் உள்ள பகுதிகளில் குழந்தைகள், சிறார்களின் நிலைமை குறித்து பார்வையிட்டார்.

சிறிலங்கா துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் சிறார்களைப் படையில் சேர்ப்பதற்கு பாதுகாப்புப் படை உதவுகிறது என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது அவர் தெரிவித்தார்.

நேரடி சாட்சியங்களும், கடத்தப்பட்ட சிறார்களின் குடும்பங்கள் தந்த தகவல்களுக்கு தமது ஆய்வுக்கு ஆதாரமாக உள்ளதையும் அவர்குறிப்பிட்டார்.

அனைத்து நிலைகளிலும் ஆயுதப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சமனான கவனிப்பும், பராமரிப்பும் அளிக்க வேண்டும். சிறார்கள் படையில் சேர்க்கப்படுவது தவிர, சிறார்களைக் கொல்வது, பாலியல் வன்முறைக்குட்படுத்துவது, கடத்தப்படுவது மற்றும் பாடசாலைகள் மருத்துவமனைகளுக்கு எதிரான தாக்குதல்கள், குழந்தைக்களுக்கு மனிதாபிமான உரிமைகள் மறுக்கப்படுவது என ஏனைய அனைத்து வன்முறைகள் பற்றியும் பாதுகாப்பு மன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

நன்றி : புதினம்.கொம்

ஈழத்திலிருந்து

ஜானா

ஐ.நா பாதுகாப்பு சபையில் இலங்கை சிறார்களின் நிலைக்கு நடவடிக்கை எடுக்குக - அலன் ரொக்.

இலங்கையில் போரில் சிறார்கள் பயன்படுத்தப்படுதல் என்றவிடயத்துடன் சிறார்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமான அவலத்தை சமமாக கருதி ஐக்கிய நாடுகள் சபையை நடவடிக்கை எடுக்கும்படி ஐநா சபையின் சிறப்புத் தூதுவர் திரு.அலென் ரொக் கோரிக்கை விடுத்தள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் இலங்கைக்கு விஐயம் செய்த இவர் இராணுவ கெடுபிடிகளால் மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டுருக்கும் தமிழ்பிரதேசமான வாகரைக்கு சென்று பார்வையிட்டு திரும்பியமை தெரிந்ததே.

அப் பயணத்தின் பின் அவர் வெளியிட்ட அறிக்கையில் தங்களிடம் உள்ள மிக நம்பகமான சான்றுகள் மூலம் சிறீலங்கா அரசபடைகள் சிறுவர்கள் ஆயுதப்படைகளில் இணைக்கப்படுவததில் பங்குபற்றுவதோடு துணைபுரிந்தும் வருகின்றன என குறிப்பிட்டிருந்தார்.

திரு.ரொக் அவர்கள் கடத்தப்பட்ட குடும்பங்களைச்சேர்ந்தவர்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.