Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

சுமேரியர் கால சுவையான பீர் தயாரித்த ராணுவ வீரர்!

beer01.jpg

ஜெருசலேம்: பைபிள் காலத்திற்கும் முந்தைய சுமேரியர் கால சுவையான பீர் ஒன்றை ராணுவ வீரர் ஒருவர் தயாரித்துள்ளார்.

பைபிள் காலத்திற்கும் முன்பு வாழ்ந்த சுமேரியர்கள், தானியங்களைக் கொண்டு புளிப்பு சுவை கொண்ட புதுவித பானத்தை (பீர்) தயாரித்து, முதன்முறையாக உலகிற்கு அறிமுகம் செய்தனர். ஆனால், தற்போது அந்த பீர் நடைமுறையில் இல்லை.

இந்நிலையில், ராணுவ வீரர் ஒருவர் அதேபோன்ற தானியங்களைக் கொண்டு, அதே சுவையுடன் கூடிய பீரை தயாரித்துள்ளார். இது பல்வேறு தரப்பினரிடம் பாராட்டை பெற்றுள்ளது.

ஜெருசலேமைச் சேர்ந்த ராணுவ வீரர் குத்மேன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக தனக்கு தேவையான பீரை தயாரித்து பயன்படுத்தி வந்தார். இதையடுத்து, அவருக்கு சுவையான பீர் தயாரிப்பதிலும் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து, சுமேரியர்கள் கால சுவையான பீர் ஒன்றை தயாரித்துள்ளார்.

இதற்காக குத்மேன், சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய சிறப்பு கோதுமையை போன்று மரபணு கோதுமையை விதைத்து, பல மாதங்கள் உழைத்து அறுவடை செய்துள்ளார். அதனுடன் ஹாப்ஸ், ஈஸ்ட் மற்றும் தண்ணீர் சேர்ந்து, பீர் ஒன்றை தயாரித்துள்ளார்.

இந்த பீர், சுமேரியர்கள் காலத்து பீர் போன்று புளிப்பு சுவையுடன் இருந்திருக்கிறது. மேலும், இவர் விளைவித்த கோதுமையில் இருந்து 16 லிட்டர் பீர் கிடைத்திருக்கிறது.

குத்மேன் தயாரித்த பீர் குறித்து தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அதேப்போன்ற பீரை தயாரித்து தங்களுக்கும் தருமாறு ஏராளமானோர் குத்மேனிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், ''தற்போது தான் தயாரித்திருக்கும் பீரை விற்பனை செய்யவோ அல்லது அதற்கான சூத்திரத்தை பகிர்ந்து கொள்வதற்கோ  தாம் தயார் இல்லை'' என குத்மேன் தெரிவித்துள்ளார்.

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
சந்திப்புக்கள் சுவாரஸ்யமானவை
 

article_1465961505-images-%281%29.jpgநல்ல சந்திப்புக்கள் சுவாரஸ்யமானவை. சிலரைக் கண்டாலே, அவரை ஏன் சந்தித்தோம் எனக் கூறுபவர்களும் உண்டு.

சந்திப்புக்களில் பலவகையுண்டு. எங்களால் விரும்பப்பட்ட, ஏற்கெனவே கண்ட சந்திப்பு, பொது நிகழ்ச்சிகளின் போது கிடைத்த நட்பு, பயணங்களின் போது என்றுமே தெரிந்திராதவர்களினூடான தொடர்பு, ஊடகங்களினூடாக ஏற்படும் நல்ல நட்பு, பேஸ்புக் மற்றும் இணையத்தளங்கள் வாரியாக ஏற்படும் தொடர்புகள் எனப் பலவாகும்.

இவைகள் எல்லாமே, எங்கள் மனதில் நீங்காத சந்திப்புக்களாக இருக்கலாம். ஒருமித்த கருத்துக்களுடன் மனதையொருவர் தொட்டுவிட்டால், அது நல்ல சந்திப்புத்தான்.

பல கோடி மக்களைக் கொண்ட உலகில், நல்ல ஒரு சிலரையாவது இணைக்கும் சந்தர்ப்பங்களைக் கைவிட வேண்டாம்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜிம்பாப்வே போலீசாரிடம் தனது வித்தையை காண்பித்த டோணி

 

ஹராரே: ஜிம்பாப்வேயில் இருக்கும் கேப்டன் டோணி அந்நாட்டு போலீசாரின் பைக்கை ஓட்டியுள்ளார். கூல் கேப்டன் டோணிக்கு கார்கள், பைக்குகள் என்றால் மிகவும் பிடிக்கும்.

அதிலும் குறிப்பாக அதிவேக பைக்குகள் என்றால் டோணிக்கு உயிர். அவரிடம் 20 அதிவேக பைக்குகள் உள்ளன. ஓய்வு நேரத்தில் சப்தமில்லாமல் பைக்கை எடுத்துக் கொண்டு ராஞ்சியின் தெருக்களில் செல்வார்.

இது ராஞ்சி மக்கள் அறிந்ததே. டோணி தான் பைக்குடன் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

Dhoni rides a bike in Zimbabwe

டோணி தற்போது ஜிம்பாப்வேயில் உள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று டோணி தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் டோணி ஜிம்பாப்வே போலீசாரின் கவாசாகி பைக்கை பார்த்ததும் அதை ஓட்டிப் பார்க்கும் ஆசை பிறந்துள்ளது. இதையடுத்து போலீசாரிடம் அந்த பைக்கை வாங்கி ஒரு ரவுண்ட் வந்துள்ளார்.

போலீசாரின் பைக்கில் அமர்ந்தபடி எடுக்கப்பட்ட புகைப்படத்தை டோணி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

oneindia.tamil

  • தொடங்கியவர்
Vikatan EMagazines Foto.
 
·

ஜூன் 15: உலக காற்று தினம்!
global wind day

காற்றாற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

** சிறுவயதில் இப்படி தான் அறிமுகம் ஆனது
இந்த காற்று!!**

கருப்புசாமி என்றார் தாத்தா!!
கண்ணுக்கு தெரியாத ஒன்று என்றார் அப்பா!!
O2, CO2 என்று அறிவியல் சொன்னார் ஆசிரியர்!!
சிப்ஸ் பாக்கெட்டில் இருக்கும் என்றான் சிறுவன்!!

காற்றை தேடினேன்
தொழிற்சாலையிலிருந்து கருப்பாய் ஒரு காற்று!!
வாகனத்திலிருந்து புகையாய் ஒரு காற்று!!

என் ஊரில் காற்று மாசுபட்டு விட்டதாம்
புகை கக்கும் காரில் வந்து கொடுத்தனர்
ஒரு ஜோடி முக கவசம்!!

என் பங்குக்கு
ஏசி, ஃபிரிட்ஜ், கார் என் வாங்கி
நானும் கொஞ்சம் காற்றுக்கு
கருப்பு கலரடித்தேன்!!

இப்போது கேன் வாட்டர் வாங்கி தண்ணிர்
குடிப்பது போல்
இன்னும் சில வருடங்கள் கழித்து
காற்று பை வாங்கி கழுத்தில்
மாட்டி கொள்வேன்!!

நாளைய தலைமுறை நம்மிடம்
காற்று என்ன என்று கேட்டால்
கருப்பாய் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும்
என்று தான் கூறவேண்டி இருக்கும்...

ஆன்லைன் தளங்களில்
இது ஸ்ட்ராபெரி ஃப்ளேவர் காற்று என விற்றாலும்
ஆச்சர்யபடுவதற்கில்லை!!

அமேசான் காடுகளிலிருந்து பெறப்பட்ட காற்று
என அதையும் அடைத்து வைத்து
விற்க வைத்து விடாதீர்கள்!!

vikatan

  • தொடங்கியவர்

13422388_1063238430391517_74529683882626

 
கென்யா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை வீரருமான மொரிஸ் ஒடும்பேயின் பிறந்தநாள்
Happy Birthday Maurice Odumbe
  • தொடங்கியவர்

13417451_10154698716369578_2971643050837

  • தொடங்கியவர்
தற்கொலைகளைத் தடுப்பதற்காக தனியாக 40,000 கிலோமீற்றர் தூரம் மோட்டார் சைக்கிள் சவாரியில் ஈடுபட்ட இந்திய யுவதி சனா இக்பால்
 

1733566.jpgஇந்தியாவைச் சேர்ந்த யுவதி சனா இக்பால், தற்கொலை களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வுப் பிரசாரங் களுக்காக இந்தியாவில் பல பாகங்களிலும் தனியாக சுமார் 40,000 கிலோமீற்றர் தூரம் மோட்டார் சைக்கிள் சவாரியில் ஈடுபட்டு தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.


27 வயதான சனா இக்பால், ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர்.

 

உளவியலில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். திருமணம் செய்து சில மாதங்களிலேயே அவரும் கணவரும் பிரிந் தனர்.

 

குறை மாத பிரசவத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தை யின் தாய் இவர். ஒரு காலத்தில் இவரும் மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டிருந்தார்.

 

ஆனால் இப்போது இவர் மற்றவர்களுக்கு உதவுகிறார். இந்நிலையிலேயே அவர் சுமார் 40,000 கிலோமீற்றர் தூரம் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். கடந்த நவம்பர் 23 ஆம் திகதி கோவாவில் இருந்து அவர் இப் பயணத்தை ஆரம்பித்தார்.

 

அப்போது அவர் 5 மாத குழந்தையின் தாயாக இருந்தார். இந்தியாவின் 83 நகரங்களுக்கு அவர் பயணம் செய்தார். இப்பயணத்தின் போது மன அழுத்தங்கள், தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவது தொடர்பாக இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் அவர் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

 

1733563.jpg

 

சுமார் 7 மாத கால மோட்டார் சைக்கிள் பயணத்தின் பின்னர்  கடந்த 12 ஆம் திகதி அவர் ஞாயிறன்று, ஹைதரபாத்திலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார். பெரும் எண்ணிக்கையானோர் அவரை வரவேற்பதற்குத் திரண்டிருந்தனர்.


இது தொடர்பாக சனா இக்பால் கூறுகையில், '38,000 கிலோமீற்றர் தூரம் நான் பயணித்தேன். இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்க ளுக்கும் நான் சென்றேன். அது மிக சுவாரஷ்யமான அனுபவம்.

 

1733565.jpg

 

நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் எனக்கு உதவியளித்தனர். அவர்கள் சமூகத்துக்காக ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என விரும்புபவர்கள்' எனத் தெரிவித்தார்.


இப் பயணத்துக்கு முன்னரும் மன அழுத்தங்கள், தற்கொலை எண்ணங்களிலி ருந்து விடுபடுவது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டு வந்தவர் இவர்.


1733564.jpg

 

'இரு தெரிவுகள் உள்ளன. முதலாவது ஒரு பிரச்சினை குறித்து கலந்துரை யாடுவது. ஆனால், ஆக்கபூர்வமாக எதையும் செய்யாமலிருப்பது. அதில் எதிர்மறையான விடயங்களை சுட்டிக்காட்டுவது மாத்திரமே நடைபெறும்.

 

இரண்டாவது, பிழைகளை மக்கள் திருத்துவது. இவற்றில் இரண்டாவதையே நான் தெரிவு செய்தேன். மோட்டார் சைக்கிகள் செலுத்துவது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த சவாரி மூலம் பலருக்கு நன்மை கிடைத்தால் அது நல்லதுதானே என நான் எண்ணினேன்' எனவும் சனா இக்பால் தெரிவித்துள்ளார்.


1733562.jpg

 

சனாவின் தந்தையும் தாயும் சட்டத்தரணிகள். மூன்று சகோதரிகளில் மூத்தவர் சனா. தனது திட்டம் குறித்து தனது தாயாரிடம் கூறியபோது, தான் எதிர்பார்த் ததைப் போலவே அவர் அதிர்ச்சியடைந்தார் என சனா இக்பால் தெரிவித்து ள்ளார்.

 

1733561.jpg

 

'எமது தந்தை சில வருடங்களுக்கு முன் காலமானார். இந்நிலையில், இப் பயணம் குறித்து தாயார் அவ்வளவு மகிழ்ச்சியடைவில்லை. ஆனால், இப்போது என்னைப் பற்றி அவர் மிகவும் பெருமிதம் அடைந்துள்ளார்' என்கிறார் சனா இக்பால்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆப்பிள் நிறுவனத்தின் 'ஆப்ஸ்' வடிவமைப்பாளர் 9 வயது சிறுமி!

S2.jpg

புத்தகத்தை சுமந்து கொண்டு பள்ளி செல்லும் வயது சிறுமி, ஆப்பிள் நிறுவனத்தின் செயலி வடிவமைப்பாளர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்புவதற்கு சற்றுக் கடினம்தான் என்றாலும் உண்மை அதுதான். அன்விதா விஜய்,  ஒன்பது வயதே ஆன இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்தச் சிறுமி,  ஆப்பிள் நிறுவனத்தின் செயலி வடிவமைப்பாளராக ஆகியுள்ளார்.
 

S3.jpg

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த வருடத்திற்கான செயலி வடிவமைப்பாளர் கருத்தரங்கான WWDC 2016,  சான்பிரான்சிஸ்கோவில்  நடைபெற்றது. அதில் மிக வித்தியாசமான நிகழ்வு என்னவென்றால் சிறு வயதான அன்விதா விஜய் கலந்து கொண்டு சபையையே வியப்பில் ஆழ்த்தியதுதான். இந்த வருட தொழில் கருத்தரங்கில் இது ஒரு மிகப்பெரிய கருத்தரங்கு. மொத்தம் 350 பேர் கலந்துகொண்ட இதில்,  120 பேர் மாணவர்கள். அதிலும் 18 வயது நிரம்பியவர்கள். இவர்களில் மிகவும் சிறுவயதில் செயலி வடிவமைப்பாளராகி சாதனை படைத்துள்ளார் அன்விதா விஜய். ஐ-போன் மற்றும் ஐ-பேடிற்கான செயலி வடிவமைப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அன்விதா செயலி வடிவமைப்பாளராவதற்காக தனியாக எந்த ஒரு கல்லூரிக்கோ அல்லது நிறுவனத்திற்கோ செல்லவில்லை. யூடியூப்  மற்றும் இன்டெர்நெட்டிலேயே இதனை கற்றறிந்துள்ளார்.

இது பற்றி அன்விதா விஜயிடம் கேட்ட போது,"ஒரு சிறிய பொறி என் மனதில் தட்டியதால் இது போன்று செயலி வடிவமைப்பில் ஆர்வம் எனக்கு வந்தது. இதற்காக நான் கடினமாக உழைத்தேன். முதலில் சற்று சிரமமாக இருந்தது. ஆனால் அது,  சவாலை சந்திக்கிற ஒரு மகிழ்வை எனக்கு அளித்தது. செயலி கட்டமைப்பில் பல உள்கூறுகள் உள்ளன. அதில் ப்ரோட்டோடைப்பிங்,வடிவம், வயர் ஃப்ரேமிங், பயனர் இன்டர்பேஸ் வடிவம்,கோடிங் மற்றும் டெஸ்டிங் ஆகியவை அடங்கும்.

எவ்வாறு புரோகிராமிங் செய்வது என்பதை முற்றிலும் இண்டர்நெட்டிலேயே கற்றுக்கொண்டேன். என்னுடைய இளைய சகோதரியின் செய்கையால் ஈர்க்கப்பட்டு  நிறைய ஐடியாக்கள் கிடைத்தன. இதனால் குழந்தைகளுக்கான பிரத்யேக செயலிகள் வடிவமைக்கப்பட்டன.  இதில் 100 வகையான ஒலிகள் மற்றும் ஒளிரும் அட்டைகள் உள்ளன. இவை பல வகையான விலங்குகள் பெயர் மற்றும் அவற்றின் ஒலிகளை அறிய முடியும்."என்றார்.

குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் வகையில் நிறைய செயலிகளை இவர் வடிவமைத்துள்ளார். உலகம் முழுதும் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் செயலி வடிவமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் அனுமதி, சின்னஞ்சிறு வயதில் இவருக்கு கிடைத்திருப்பது பாராட்டத்தக்கது. கடந்த வருடம் நடைபெற்ற கருத்தரங்கை காட்டிலும் இம்முறை கலந்து கொண்ட பெண்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு கணிசமாக உயர்ந்துள்ளது. இதில் 22% பெண்கள் மொத்தமாக கலந்து கொண்டனர். இதில் அமெரிக்கர்கள் மற்றும் ஆசிய ஆண்கள்தான் அதிகம். அந்த நிறுவனத்தின் வைஸ் பிரசிடண்ட் ஸகாட் லில்லி,  கூடிய விரைவில் உலக அளவில் இந்த கருத்தரங்கு விரிவுபடுத்தப்படும் என தெரிவித்துள்ளார்

 

இவரை போன்று சாதிப்பதில் ஆர்வமாக  உள்ள இளைய தலைமுறையினர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

vikatan

  • தொடங்கியவர்

விளம்பரம் பண்ணு, ரொமான்ஸ் பண்ணு!

ண் AXE பாடி ஸ்ப்ரே அடித்துக்கொண்டு ரோட்டில் நடந்து சென்றால், அழகான பெண்கள் மயங்கிப் பின்னால் வருவார்கள் என நம்பி ஸ்ப்ரே பாட்டில் நெளிய நெளியப் பீய்ச்சியடித்துப் பதறவைக்கும் இளைஞர்களும், முரட்டுத்தனமான ரொமான்ஸ் விளம்பரங்களைப் பார்த்து ‘நண்டு மார்க்’ லுங்கிகளைக் கேட்டு வாங்கி அணியும் ஆண்களும் நடமாடும் சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அப்போ நாங்க மட்டும் யாராம்? என மிச்சமுள்ளவர்களும் களத்தில் குதித்தால் என்னவாகும்? இதோ உங்களுக்காக உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக...

p38a.jpg

‘எனது காலணி; எனது பெருமை’ என காஜல் அகர்வால் ஒரு நிமிடத்திற்குப் பேசியதற்குப் பதிலாக, வி.கே.சி செப்பல்கள் அணிந்தால் காதலரோ அல்லது கணவரோ உங்கள் கால் தரையில் படாமல் உங்களைத் தூக்கிக்கொண்டே செல்வார்கள் எனக் காட்டியிருந்தால், பெண்கள் போட்டி போட்டு வாங்கியிருப்பார்கள்.

p38b.jpg

என்.எஸ் பெருங்காயத்தில் அமேசான் காட்டிலிருக்கும் அரிய வகை மூலிகைகளின் லேகியங்கள் கலந்து உடலைப் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ளும் எனச் சொன்னால் ஆண்களே ஆர்டர் செய்து வாங்கி வருவார்களே.

p39a.jpg

அமிதாப் பச்சனையே கண்கலங்க வைத்து ‘நம்பிக்கை... அதுதானே எல்லாம்’ என ஃபீல் பண்ணியதற்குப் பதிலாக, நகை வாங்கிக் கொடுத்தால் உங்கள் மனைவி அன்போடு இருப்பார் என உண்மையையே எளிமையாகக் காட்டினால் விளம்பரச் செலவையும் கட்டுப்படுத்தலாம். இந்த விஷயங்களெல்லாம் ஊர் உலகத்துக்கு இன்னும் தெரியாமலா இருக்கிறது?

p39b.jpg

ஆச்சி மசாலாவில் சமைத்தால் உங்கள் கணவர் அதன் வாசத்திலேயே வசியமாகி உங்களைச் சுற்றிச் சுற்றி வருவார் எனக் காட்சிப்படுத்தினால், எல்லா வீட்டு கிச்சனிலும் ஆச்சி மசாலா ஃபேவரிட் ஆகிவிடும். ஆனால், பார்ப்பதற்குதான் மல்லிகைப்பூ சென்ட் விளம்பரம் போலவே இருக்கும்.

அதனாலென்ன..? மசாலா விளம்பரத்திலேயே மசாலா இல்லைனா எப்படிங்க?

p39c.jpg

சங்கர் சிமென்ட் கொண்டு வீடு கட்டினால், வீட்டுக்குள் வசிப்பவர்கள் எப்போதும் ரொமான்டிக் மூடிலேயே இருப்பதாக விளம்பரம் எடுக்கலாம். பொம்மீஸ் நைட்டிகள் தத்துவமும் இதையேதான் சொல்கிறது. ‘கண்ணாடியைத் திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்?’ என்கிறீர்களா? பூமெக்ஸ் பனியன் போட்டாலே விரட்டி விரட்டிக் காதலிக்கிறதா காட்டுகிற கொடூர உலகம் பாஸ் இது!

vikatan

  • தொடங்கியவர்

எரிக் எரிக்சன்

 
eric1_2895200f.jpg
 

ஜெர்மனியை சேர்ந்த உளவியல் பகுப்பாய்வாளர் எரிக் எரிக்சன் (Erik Erikson) பிறந்த தினம் இன்று (ஜூன் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஜெர்மனியின் ஃபிராங்பர்ட் நகரில் (1902) பிறந்தார். தந்தை பங்கு வர்த்தகத் தரகர். சில காரணங்களால், இவர் பிறப்பதற்கு முன்பே பெற்றோர் பிரிந்தனர். தாய் ஒரு மருத்துவரை மணந்தார்.

* தன்னை வளர்த்து வருபவர், பெற்ற தந்தை இல்லை என்பது சிறிது காலத்துக்குப் பிறகு இவ ருக்கு தெரிந்தது. இதனால் குழப்பம் அடைந்தவருக்கு, தனது அடையா ளத்தை தேடும் ஆர்வம் ஏற்பட்டது. இதுபற்றி ‘ஐடென்டிடி கன்ஃபியூஷன்’ என்ற கட்டுரையை எழுதியுள் ளார்.

* இளம் பருவத்தில் ஏற்பட்ட இந்த அனுபவம் பிற்காலத்தில் பாரம்பரியம், அடையாளம் பற்றிய ஆய்வுகளுக்குத் துணையாக இருந்தது. பள்ளிப் பருவத்தில் வரலாறு மற்றும் மொழிகளில் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் மருத்துவராக வேண்டும் என்பது வளர்ப்புத் தந்தையின் விருப்பம். அதற்கு மாறாக, கலைகளில் தேர்ச்சி பெற ஃப்ளாரன்ஸ் சென்றார்.

* யூத இனத்தவர் என்பதால் பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டார். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஜெர்மனி, இத்தாலியில் கண்போன போக்கில் சுற்றினார். அப்போது தன் சொந்த அப்பா, இனம், மதங்கள் குறித்து பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை தனக்குள்ளே தேடினார்.

* வியன்னாவில் உள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. உளவியல் பகுப்பாய்வு துறையில் நாட்டம் ஏற்பட்டதால், வியன்னாவில் உளவியல் பகுப்பாய்வு பயிலகத்தில் பயின்றார். குழந்தை உளவியல் பகுப்பாய்வு, மான்டிசோரி கல்விமுறையில் தேர்ச்சி பெற்றார்.

* ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பிறகு அங்கு வசிக்க முடியா மல் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் சென்றார். அங்கும் நிலைமை சரியில்லாதால், குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறி னார். பாஸ்டனில் குழந்தை உளவியல் நிபுணராகப் பணியாற்றினார். பின்னர் மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் பணிபுரிந்தார்.

* ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். குழந்தை உளவியல் மருத்துவத்திலும் ஈடுபட்டார். கலிபோர்னியா பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, சான்பிரான்சிஸ்கோ உளவியல் நிறுவனத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

* சான்பிரான்சிஸ்கோவில் குழந்தைகள் உளவியல் பகுப்பாய்வு மருத்துவமனை தொடங்கினார். உளவியல் மேம்பாட்டின் பல்வேறு நிலைகள், உளவியல் மானுடவியல் இடையிலான தொடர்புகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஹார்வர்டில் மனிதவள மேம்பாட்டுத் துறை பேராசிரியராக 10 ஆண்டுகாலம் பணிபுரிந்தார். பதவி ஓய்வு பெற்ற பிறகும், ஆராய்ச்சிகள் மற்றும் நூல்கள் எழுதும் பணியைத் தொடர்ந்தார்.

* ‘குழந்தைகளை முறையாகப் பராமரிப்பதும், வளர்ப்பதும் சமுதாய வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது’ என்று வலியுறுத்தினார். மனித வாழ்வில் சமுதாயம் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும் ஆய்வு செய்தார். தனது ஆய்வுகள் குறித்து பல கட்டுரைகள், நூல்களை எழுதினார்.

* இந்தியாவில் சில காலம் தங்கியிருந்து, காந்திஜி பற்றி ‘காந்திஸ் ட்ரூத்’ என்ற நூலை எழுதினார். இந்நூலுக்காக இவருக்கு ‘புலிட்சர்’ பரிசும், அமெரிக்க தேசியப் புத்தக விருதும் கிடைத்தன. உளவியல் பகுப்பாய்வு தொடர்பாக இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த எரிக் எரிக்சன் 92-வது வயதில் (1994) மறைந்தார்.

tamil.thehindu

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தோற்றவர்களின் கதை - 2

சுசி திருஞானம்தொடர்

 

p30a.jpg

ங்கிலாந்து ராணியைவிடப் பெரிய கோடீஸ்வரப் பெண்மணி அவர். எழுத்தின் மூலமாக மட்டுமே 6,000 கோடி ரூபாய்க்கும் மேலாகச் சம்பாதிக்க முடியும் என நிரூபித்த உலகின் முதல் பில்லியனர் எழுத்தாளர் அவர்.

ஆனால், ஒரு காலத்தில் கணவனைப் பிரிந்து கைக்குழந்தையுடன் வாழும் தாய்மார்களுக்கு அரசாங்கம் தரும் சொற்ப உதவித்தொகையில் வாழ்க்கை நடத்திய பெண் அவர். மிகவும் அவமானகரமான, அடுக்கடுக்கான தோல்விகளால் புடம்போடப்பட்ட மனிதர் அவர்.

அவரது ஹாரி பாட்டர் வரிசைப் புத்தகங்கள் 40 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளன. 75-க்கும் மேற்பட்ட மொழிகளில் அவரது கதைகள் வாசிக்கப்படுகின்றன. எழுத்துலகில் மட்டுமல்ல... திரையுலகிலும் ஹாரி பாட்டர் படங்கள் வசூலை வாரிக்குவித்துள்ளன. இன்று, ஜே.கே.ரவுலிங் பற்றி தெரியாதவர்கள் உலகில் குறைவு.அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கூறினார்: “நாம் தோல்விகளைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. தோல்விகள் தவிர்க்க முடியாதவை என்ற உண்மையைப் பற்றிப் பேசுவதில்லை. நான் வாழ்க்கையில் தோல்வி மேல் தோல்வி அடைந்து நொந்துபோயிருந்த நேரத்தில், வாழ்க்கையில் ஓரளவு வெற்றி பெற்ற யாராவது என்னிடம் வந்து, ‘நீ பல தோல்விகளைச் சந்தித்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும்’ என்று சொல்லியிருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.”

இங்கிலாந்து நாட்டில் 1965-ம் ஆண்டில் பிறந்த ஜே.கே.ரவுலிங், சின்ன வயதிலேயே புத்தகங்களை தேடித்தேடி வாசிப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார் . அவரது எழுத்து ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அவரது பள்ளி ஆசிரியர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வழிகாட்டினர். 1982-ம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதிய ஜே.கே.ரவுலிங், தேர்வில் நிராகரிக்கப்பட்டார். அவமானத்தில் கூனிக் குறுகிப்போன ஜே.கே.ரவுலிங், வீட்டைவிட்டு வெளியில் வருவதைப் பல நாட்கள் தவிர்த்தார்.

பின்னர் தன்னைத்தானே தேற்றிக்கொண்ட அவர், எக்ஸட்டர் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கத் தயாரானார். தனக்குள் இருந்த எழுத்தாற்றல் ஆர்வம் காரணமாக ஆங்கில இலக்கியம் படிக்க அவருக்கு அதிக ஆசை. மிகப் பெரிய எழுத்தாளர்களின் வரிசையில், தன்னைக் கருதிய ஜே.கே.ரவுலிங், தன்னை முழுநேர எழுத்தாளராகவே மனதுக்குள் கற்பனை செய்து வந்திருந்தார். தனது ஆர்வத்தை அவர் தயங்கியபடி சொன்னபோது, ஏழ்மையான பின்னணி கொண்ட அவரது பெற்றோர், ‘‘ஆங்கில இலக்கியம் சோறு போடாது. பிரெஞ்சு மொழி படித்தால் ஓர் அலுவலக உதவியாளர் வேலையாவது கிடைக்கும்’’ என்று வாதிட்டனர்.

p30.jpg

வேறு வழியின்றி எக்ஸட்டர் பல்கலைக்கழகத்தில், பிரெஞ்சு மற்றும் செவ்வியல் இலக்கியப் படிப்பில் சேர்ந்தார். சில நாட்களிலேயே தனக்குப் பொருத்தமில்லாத படிப்பில் சேர்ந்ததை நினைத்து நொந்துபோனார். பி.ஏ பட்டம் பெற்ற பின்னர் லண்டன் மாநகருக்குச் சென்ற ஜே.கே.ரவுலிங், ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பில் ஆராய்ச்சி உதவியாளர் பணியில் சில மாதங்கள் செயல்பட்டார். அங்கு அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் வித்தியாசமானவை. அப்போது கொடுங்கோலாட்சி நடந்த நாடுகளில் இருந்து தப்ப முயன்றவர்களும், தப்பி வந்தவர்களும் எழுதும் அதிர்ச்சிகரமான கடிதங்களைப் படித்துக் குறிப்பெடுத்து வந்தார். மனிதர்கள் எத்தனை மோசமான சித்ரவதைகளை அனுபவிக்கிறார்கள் என்பதை அறிந்து மனம் பதைபதைத்தார். அவர் எழுதிய நாவல்களில் இடம்பெற்ற சில அதீதச் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வேலையில் அவர் சந்தித்த அனுபவங்கள் அடிப்படையிலானவை.

ஒருமுறை லண்டனுக்குச் செல்வதற்காக மான்செஸ்டர் ரயில் நிலையம் சென்றார். ரயில் வர 4 மணி நேரம் தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. காத்திருந்த வேளையில், அவருக்கு ஒரு புத்தம் புதிய சிந்தனைக் கீற்று பளிச்சிட்டது. மந்திரஜாலப் பள்ளி ஒன்றில் படிக்கும் ஹாரி என்ற சிறுவனைப் பற்றிய காட்சிக் கதைச் சித்திரம் அது. ஒரு முழு நீளத் திரைப்படம்போல் உருவான அந்தக் கதைச் சித்திரம் அவருக்குள் புதிய உணர்வலைகளை எழுப்பியது. வீட்டுக்கு வந்த உடன் அதனைப் பக்கம் பக்கமாக எழுதத் தொடங்கிவிட்டார்.

அவர் தனது பிரமாண்டமான ஹாரிபாட்டர் நாவலை எழுதத் தொடங்கிய நேரத்தில், அவரது அம்மாவின் உடல் நலம் மோசமானது. தன்னை உயிருக்கு உயிராக நேசித்து, அரவணைத்துப் பாதுகாத்துவந்த தனது தாயாரின் மறைவு ஜே.கே.ரவுலிங்கின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டது. அவரால் வேலைக்கும் செல்ல முடியவில்லை, எழுத்துப் பணியையும் தொடர முடியவில்லை.

ஒரு மாற்றத்துக்காக போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள போர்டோ நகருக்குச் சென்ற ஜே.கே.ரவுலிங், அங்கு ஆங்கில ஆசிரியராக இரவு நேரப் பணியில் சேர்ந்தார். பகலில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதித் தள்ளினார். அங்கு, தான் சந்தித்த, தன்னைவிட வயதில் குறைந்த இளைஞர் ஒருவரை மணந்துகொண்டார். மகள் பிறந்தாள். மண வாழ்க்கை நீடிக்கவில்லை. கணவரால் துன்புறுத்தப்பட்டு, துரத்தப்பட்டார். மீண்டும் இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்தார்.

இங்கிலாந்திலும் உதவுவதற்கு யாரும் இல்லை. தந்தை மறுமணம் செய்துகொண்டு போய்விட்டார். தங்கையாலும் பெரிய உதவி செய்ய முடியவில்லை. பழைய நண்பர்கள் சிலர் சிறிதளவு பண உதவி செய்திட முன்வந்தபோதும், அதனை கைநீட்டி வாங்க மனம் இடம் கொடுக்கவில்லை. கணவனைப் பிரிந்து கைக்குழந்தையுடன் வாழும் தாய்மார்களுக்கு அரசாங்கம் தரும் சொற்ப உதவித்தொகைக்கு விண்ணப்பித்து, தனது கைக் குழந்தையுடன் போராட்ட வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

மற்ற குழந்தைகள் நிறைய விளையாட்டுப் பொருட்களோடு உற்சாகமாக விளையாடுவதைப் பார்க்கும் போதெல்லாம், தன் குழந்தைக்கு எதுவுமே தர முடியவில்லையே என்ற ஏக்கம் அவரது மனதை வலிக்கச் செய்தது. ஏமாற்றங்களும், சுய பச்சாதாபமும் அவரது மனநிலையைப் பாதிக்கத் தொடங்கியிருந்தன. அவரது குழந்தைக்கு ஒரு சிறிய விளையாட்டுப் பொம்மையை சமூகநலத் துறை ஊழியர் ஒருவர் இலவசமாக வழங்கியபோது, அதனைப் பிடுங்கி குப்பைத்தொட்டியில் போடும் அளவுக்கு அவர் மன அழுத்தத்தில் இருந்தார்.

மன அழுத்தத்தின் உச்சத்தில், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தனக்கு எழுந்ததாகவும், மருத்துவச் சிகிச்சைக்குப் பின்னர் மன அழுத்தம் குறைந்ததாகவும் அவர் பின்னாட்களில் தெரிவித்து உள்ளார். வறுமையுடன் போராட்டம் ஒருபுறம் இருக்க... துரத்தியடித்த கணவர், 
ஜே.கே.ரவுலிங்கையும் குழந்தையையும் தேடி இங்கிலாந்து வந்துவிட்டார். போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்ட அவரால் பெரும் தொந்தரவுகள். அவரிடம் இருந்து மணவிலக்கு பெற ஜே.கே.ரவுலிங் பெரும்பாடு படவேண்டியிருந்தது.

இத்தனைச் சோதனைகளுக்கு இடையிலும், ஜே.கே.ரவுலிங்கை நம்பிக்கை இழக்காமல் வைத்திருந்தது, அவரது எழுத்துப் பணி மட்டுமே. குழந்தையை எடுத்து வெளியில் சுற்றிவிட்டு, அந்தக் குழந்தை தூங்கும் நேரமெல்லாம் எழுதுவதை வழக்கமாக்கிக்கொண்டார். பூங்காவிலோ, காப்பி கடையிலோ, வீட்டிலோ, வீதியிலோ, எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் எழுதித் தள்ளினார்.

p30b1.jpg

“வீடில்லாமல், பணம் இல்லாமல், கணவர் இல்லாமல், கைக்குழந்தையுடன் வாழ்ந்த அந்த நாட்களில் எனது வாழ்க்கை இருள்மயமானதாக இருந்தன. தோல்விகள் என்னைச் சூழ்ந்து நின்றன. அந்தத் தோல்விகள், என்னிடம் இருந்த தேவையற்றவை அனைத்தையும் பறித்து எறிந்து விட்டன. எதை எனது வாழ்க்கையின் தவப் பணியாக நினைத்தேனோ, அதில் மட்டுமே எனது முழு சக்தியையும் ஒன்றுகுவிக்கும்படி, தோல்விகள் என்னை விரட்டின”  என்று பின்னாட்களில் குறிப்பிட்டார் ஜே.கே.ரவுலிங்.

தனது முழு சக்தியையும் திரட்டி ஹாரிபாட்டர் முதல் பாகத்தை எழுதி முடித்தார் ஜே.கே.ரவுலிங். தனக்கு முழு திருப்தி ஏற்படும்வரை அதனை மெருகேற்றி, மிகுந்த நம்பிக்கையோடு பதிப்பகத்துக்கு அனுப்பிவைத்தார். ‘பதிப்பிக்கத் தகுந்ததல்ல’ என்ற குறிப்புடன் திருப்பி அனுப்பப்பட்டது ஹாரிபாட்டர் நாவல்.  11 பதிப்பகங்கள் நிராகரித்த அந்த நாவலை, மனம் தளராமல் 12-வது பதிப்பகத்துக்கு அனுப்பி வைத்தார் ஜே.கே.ரவுலிங்.

ஹாரிபாட்டர் நாவலின் பிரதியை ப்ளூம்ஸ்பரி பதிப்பாசிரியர் படிக்கத் தொடங்கியபோது, அவரது 8 வயது மகளும் அதனைப் படிக்கத் தொடங்கினார். அந்தச் சிறுமி, அடுத்தடுத்த அத்தியாயங்களைப் படிக்கத் தருமாறு தனது அப்பாவிடம் கெஞ்சியபோது அந்த நாவல் குழந்தைகளைக் கவரும் என்று பதிப்பாசிரியர் புரிந்துகொண்டார்.

ஜே.கே.ரவுலிங்கை அழைத்து பதிப்பு ஒப்பந்தம் போட்டார். எதிர்பாராத மாபெரும் வரவேற்பைப் பெற்றன ஹாரிபாட்டர் நாவல்கள். தொடர் தோல்விகளைத் தாங்கிக்கொண்டு மனம் தளராமல் உழைத்த ஜே.கே.ரவுலிங்குக்கு வெற்றி மேல் வெற்றி.

ஜே.கே.ரவுலிங் ஒருமுறை மாணவர்களிடம் பேசியபோது குறிப்பிட்டார்: “உங்களில் யாரும் நான் சந்தித்த அளவுக்கு மோசமான தோல்விகளைச் சந்திக்கப் போவதில்லை. ஆனாலும் தோல்விகள் தவிர்க்க முடியாதவை என்பதையும், அவை வாழ்க்கையின் இயல்பான பகுதி என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தோல்விகளைக் கண்டு அச்சப்பட வேண்டாம்.”

(இன்னும் வெல்வோம்)

vikatan

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: கோலி சச்சினாகலாம், தோனியாகலாமா?

w_2889205f.jpg

wa1_2889207a.jpg

wa2_2889208a.jpg

wa3_2889209a.jpg

wa5_2889211a.jpg

wa6_2889212a.jpg

wa7_2889213a.jpg

wa8_2889214a.jpg

tamil.thehindu

  • தொடங்கியவர்
13406974_505556446303631_797080788685091
 

செந்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவு தினம் இன்று எம் தமிழ் இனத்தையும் சைவத்தையும்  வளர்த்த பெருமை இவரையே சாரும்.

‪#‎தெல்லிப்பளை‬ துர்க்கா தேவஸ்தானத்தை அமைத்து எத்தனையோ அநாதரவற்ற சிறுவர்களின் வாழ்வில் ஓளியேற்றிய பெருந்தகை.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

அநியாயங்கள் என்றுமே நியாயமாகாது

article_1465874783-o;jip;.jpgஉலகின் பழங்காலத்துக் கதைகளிலிருந்து, இந்தக் காலத்துக் கதைகள் வரை, கதாநாயகர்களும் வில்லன்களும் வந்து கதைகளைச் சுவாரஸ்யப்படுத்துவர்.

ஆனால், மக்கள், வில்லன்களின் அடாவடித் தனங்களை வெறுப்பார்கள். வில்லன் என்றாலே, பொல்லாத கெட்டவன் என்று நோக்கப்பட்டது.

ஆனால் இன்று மக்களில் சிலர், நிஜமான வில்லன்களையே கதாநாயகர்களாக எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள். துணிச்சலுடன், மக்கள் விரோதச் செயல்களைச் செய்பவர்களையே வீர புருஷனாக ஏற்றுக்கொள்வது காலத்தின் கொடுமைதான்.

உலகின் பாவங்கள் அதிகரித்து, தர்மத்துக்குச் சோதனைகள் வந்தால், இறைவனே நேரில் வருவார் என ஆன்மிகவாதிகள் சொல்லி வருகின்றனர். கடவுளின் வருகையினை மக்களும் எதிர்பார்க்கின்றனர். அநியாயங்கள் என்றுமே நியாயமாகாது.

உண்மை சேய்மையில் இல்லை. பிரபஞ்சத்துடன் இணைந்துள்ளது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
2010 : பூட்டானில் புகைத்தல் பொருட்களுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டது
 

வரலாற்றில் இன்று...

ஜுன் - 16

 

1745 : பிரித்­தா­னியர் கேப் பிறெட்டன் தீவை பிரெஞ்சுப் படை­க­ளிடம் இருந்து கைப்­பற்­றினர். இது தற்­போது கன­டாவின் ஒரு பகு­தி­யாகும்.

 

1779 : பிரித்­தா­னியா மீது ஸ்பெயின் போரை அறி­வித்­தது. ஜிப்­ரால்டர் மீதான முற்­றுகை ஆரம்­ப­மா­னது.

 

749bhutan1.jpg1871 : பிரித்­தா­னிய பல்­க­லைக் ­க­ழக சட்­டத்தின் மூலம், சமய பாட சோத­னைகள் இன்றி, கேம்­பிரிட்ஜ், ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு மாண­வர்கள் சேர்க்­கப்­ப­டு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டனர். 

 

1819 : இந்­தி­யாவின் குஜ­ராத்தில் இடம்­பெற்ற 8.0 ரிச்டர் அளவு நில­ந­டுக்­கத்தில் 2000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1883 : இங்­கி­லாந்தில் விக்­டோ­ரியா அரங்கில் இடம்­பெற்ற நெரி­சலில் சிக்கி 183 சிறு­வர்கள் கொல்­லப்­பட்­டனர்.

 

1897 : ஹவாய் குடி­ய­ரசை ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுடன் இணைக்கும் உடன்­பாடு எட்­டப்­பட்­டது.

 

1911 : ஐ.பி.எம். நிறு­வனம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1911 : விஸ்­கொன்ஸின் மாநி­லத்தில் 772 கிராம் விண்கல் வீழ்ந்­ததில் களஞ்­சியம் ஒன்று சேத­ம­டைந்­தது.

 

1940 : லித்­து­வே­னி­யாவில் கம்­யூ­னிஸஆட்சி உரு­வா­னது.

 

1955 : ஆர்­ஜென்­டீ­னாவில் ஜனா­தி­பதி ஜூவன் பெரோனை ஆட்­சி­யி­லி­ருந்து அகற்றும் நோக்­கத்தைக் கொண்­டி­ருந்த ஆர்­ஜென்­டீன கடற்­ப­டையைச் சேர்ந்த கடும்­போக்கு விமா­னி­களால் பெரோ­னுக்கு ஆத­ர­வான ஆர்ப்­பாட்டக் காரர்கள் மீது குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டதால் 364 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

749ibm1.jpg1963 : உலகின் முத­லா­வது  விண்­வெளி வீராங்­கனை ரஷ்­யாவின் வலன்­டீனா டெரெஷ்­கோவா வஸ்தோக் 6 விண்­க­லத்தில் பய­ண­மானார்.

 

1976 : தென் ஆபி­ரிக்­காவில் சுவெட்­டோவில் 15,000 கறுப்­பின மாண­வர்கள் நடத்­திய ஆர்ப்­பாட்­டத்தின் போது காவற்­து­றை­யினர் நடத்­திய துப்­பாக்கிச் சூட்டில் 566 மாண­வர்கள் கொல்­லப்­பட்­டனர்.

 

1964 : லியோனிட் பிரெஷ்னேவ் சோவியத் ஒன்­றி­யத்தின் தலை­வ­ரானார்.

 

1983 : யூரி அந்­தி­ரோப்பொவ் சோவியத் ஒன்­றி­யத்தின் தலை­வ­ரானார்.

 

1994 : சீன விமானம் TU-154 புறப்­பட்டு 10 நிமி­டங்­களில் வெடித்­ததில் 160 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

2010 : பூட்­டானில் புகை­யிலை மற்றும் புகைத்தல் பொருட்­க­ளுக்கு முற்­றாக தடை விதிக்­கப்­பட்­டது.

 

2012 : சீனாவின் முதல் விண்­வெளி வீராங்­கனை லியூ யங் உட்­பட மூவரைக் கொண்ட ஸென்ஸோ விண்கலத்தை சீனா விண்வெளிக்கு அனுப்பியது.

 

2014 : களுத்துறை மாவட்டத்தின் பேருவளை, தர்கா, டவுன், அளுத்கமை, வெலிப்பன்ன பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய வன்முறைகள் இடம்பெற்றன.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நாங்கள் எல்லோரும்
எதற்கு அதிகம் அடிமைப்பட்டிருக்கிறோம் தெரியுமா?

  • தொடங்கியவர்

மரங்களில் ஓர் அதிசயம்!

 
 
tree_2895229f.jpg
 

ஆப்பிரிக்காவை அடையாளப்படுத்திக் காட்ட வேண்டும் என்றால் பாவோபாப் மரங்களைக் காட்டினால் போதும். அந்த அளவுக்கு உலகப் புகழ்பெற்றது பாவோபாப்.

மரம் குண்டாகவும், கிளைகள் வளர்ந்தும் வளராதது போலக் காணப்படும் வித்தியாசமான உருவ அமைப்பைக் கொண்ட மரம்.

அமெரிக்காவின் மடகாஸ்கரில் 6 இனங்கள், ஆப்பிரிக்காவில் 2 இனங்கள், ஆஸ்திரேலியாவில் ஓர் இனம் என 9 இனங்கள் இருக்கின்றன. இந்தியாவிலும் இலங்கையிலும் ஓரிரு இடங்களில் இந்த மரங்களைப் பார்க்க முடியும்.

treeeee_2895230a.jpg

5 மீட்டர் முதல் 30 உயரம் வரை வளரக்கூடியவை. சுற்றளவு 10 மீட்டர் முதல் 20 மீட்டர் வரை இருக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் வாழக்கூடிய மரங்கள் இவை. பழங்காலத்தில் இவை மிகமிகப் பெரிய மரங்களாக இருந்திருக்கின்றன.

ஜிம்பாப்வேயில் ஒரு மரத்தைக் குடைந்து, 40 மனிதர்கள் அதில் வசித்திருக்கிறார்கள் என்றால் மரத்தின் அளவைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

வருடத்தில் 9 மாதங்கள் பாவோபாப் மரங்களில் இலைகளே இருக்காது. அதனால் மரத்தைத் தலைகீழாக நட்டு வைத்தது போலத் தோற்றத்தில் இருக்கும். மரத்தின் உட்பகுதி 15 மீட்டர் வரை மென்மையான நார்களால் நிரம்பியிருக்கும்.

அதில் சுமார் 1,20,000 லிட்டர் தண்ணீர் வரை சேமித்து வைத்திருக்கும்! தண்ணீர் சரிவரக் கிடைக்காத காலத்தில் உயிர் வாழ இந்தச் சிறப்பைப் பெற்றிருக்கின்றன. ஆப்பிரிக்க மக்கள், பாவோபாப் மரத்தில் சிறிய துளையைப் போட்டுத் தண்ணீரை எடுத்துக்கொள்வார்கள்.

ஆப்பிரிக்கக் கலாச்சாரத்தில் பாவோபாப் மரங்களை வெட்ட அனுமதி இல்லை. மரம் பட்டுப் போனாலோ, ஏதோ விபத்தில் சாய்ந்தாலோ, சிறிய கிளைகளிலிருந்து புதிய மரங்கள் துளிர்த்து வளர்ந்துவிடும். இதனால் பாவோபாப் மரங்களுக்கு மரணமே இல்லை என்றும் சொல்வதுண்டு.

treee_2895231a.jpg

பாவோபாப் மரத்தின் பட்டைகள் மற்ற மரங்களைப் போல இருப்பதில்லை. சாம்பல், இளஞ்சிவப்பு நிறங்களில் பளபளப்பாக இருக்கும். 20 ஆண்டுகளில் மரம் பூக்க ஆரம்பிக்கும். நல்ல பருவநிலை இருந்தால் ஆண்டு முழுவதும் பூக்கும்.

மிகப் பெரிய வெள்ளைப் பூக்கள் இரவு நேரங்களில் மலரக்கூடியவை. பூக்களின் நறுமணத்தை நாடி வெளவால்களும் பூச்சிகளும் படையெடுத்து வருகின்றன.

இவற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. 24 மணி நேரத்தில் பூக்கள் உதிர ஆரம்பித்துவிடுகின்றன. பழுப்பு வண்ணமாக மாறிய பூக்கள் துர்நாற்றத்தை வீசுகின்றன.

காய் 6 மாதங்களுக்குப் பிறகுதான் பழமாக மாறும். பெரிய இளநீர் அளவுக்குப் பெரியதாக இருக்கும். தடித்த ஓட்டின் மீது பச்சை முடிகள் படர்ந்திருக்கும். கோகோ விதை போலப் பழத்துக்குள் ஏராளமான விதைகள் இருக்கும்.

பழத்தில் டார்டாரி அமிலம், மக்னீசியம், பொட்டாசியம், ஆரஞ்சுப் பழத்தில் இருப்பதை விட 6 மடங்கு வைட்டமின் சி சத்துகளும் இருக்கின்றன. பழத்தை நீரில் கலந்து பருகினால் புத்துணர்வு கிடைக்கும். மனிதர்களைப் போலக் குரங்குகளும் இவற்றை அதிகம் பயன்படுத்திக்கொள்கின்றன.

பழத்துக்குள் சிறுநீரக வடிவில் கறுப்பு விதைகள் காணப்படும். இவற்றை வறுத்து, பொடி செய்து காபி போலவும் குடிக்கிறார்கள்.

பாவோபாப் மரத்தின் இலைகளை வேக வைத்தும் சாப்பிடுகிறார்கள். இலைகள், பட்டைகள், பழங்கள், விதைகளிலிருந்து பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

மரத்தின் பட்டைகளிலிருந்து கயிறு, மிதியடி, கூடை, காகிதம், துணி, இசைக்கருவிகள், தண்ணீர் புகாத தொப்பிகளையும் செய்கிறார்கள்.

உயிரினங்களுக்கு அதிக அளவில் அடைக்கலம் அளித்துப் பாதுகாக்கின்றன பாவோபாப் மரங்கள். இவற்றின் கிளைகளில் பறவைகள் கூடு கட்டி வசிக்கின்றன.

குரங்குகளும் வெளவால்களும் பழங்களை உண்கின்றன. யானைகள் இவற்றிடமிருந்து தண்ணீரை உறிஞ்சிக்கொள்கின்றன.

சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் மனிதர்களால் பாவோபாப் மரங்கள் அழிந்துவருகின்றன. இதனால் எண்ணிக்கையில் இவை குறைந்து வருகின்றன.

நீண்ட ஆயுளும் பிரம்மாண்டமும் கொண்ட இந்த அதிசய மரங்களைப் பாதுகாக்க வேண்டியது மனிதர்களின் கடமை அல்லவா?

tamil.thehindu

  • தொடங்கியவர்

13412185_1063888856993141_49129148942950

பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் மிதுன் சக்கரபோத்தியின் பிறந்தநாள்
Happy Birthday Mithun Chakraborty

  • தொடங்கியவர்
குளிர்சாதனப் பெட்டி இயங்கவில்லை என டுவிட்டரில் தன்னிடம் முறையிட்டவருக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அனுப்பிய பதில்
 

நிறு­வ­ன­மொன்­றி­ட­மி­ருந்து தான் கொள்­வ­னவு செய்த குளிர்­சா­த­னப்­பெட்டி சரி­யாக இயங்­க­வில்லை என இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவரா­ஜிடம் நபர் ஒருவர் டுவிட்டர் மூலம் முறைப்­பாடு செய்­த­துடன், இது குறித்து கவனம் செலுத்­து­மாறும் கோரிக்கை விடுத்தார்.

 

173522f6fsusma-swaraj_15062016_R25_CMY.jஅந்­ந­ப­ருக்கு சுஷ்மா சுவராஜ் அளித்த பதில் இணை­யத்தை கலக்கி வரு­கி­றது.
“வெங்கட்” எனும் டுவிட்டர் பாவ­னை­யாளர் ஒரு­வரே மேற்­படி கோரிக்­கையை முன்­வைத்­தி­ருந்தார்.

 

இது தொடர்­பாக அவர் வெளி­யிட்ட முதல் டுவிட்டில், நிறு­வ­ன­மொன்­றிடம் தான் வாங்­கிய குளிர்­சா­தனப் பெட்டி செய­லி­ழந்­து­விட்­டா­கவும் அதை மாற்­றீடு செய்­வ­தற்கு அந்­நி­று­வனம் மறுப்­ப­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார்.

 

இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் , உணவு, பொது விநி­யோக மற்றும் நுகர்­வோர் விவ­கார அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் ஆகி­யோரின் டுவிட்டர் கணக்­கு­க­ளையும் அந்­நபர் இதில் இணைத்­தி­ருந்தார். 

 

அதை­ய­டுத்து குளிர்­சா­த­னப்­பெட்­டியை தானே பழு­து­பார்த்­துக்­கொள்­வ­தற்கு மேற்­படி நிறு­வனம் நிர்ப்­பந்­திக்­கி­றது என மற்­றொரு டுவிட்டை  அவர் அனுப்­பினார். அதன்பின், இவ்­வி­டயம் தொடர்பில் கவனம் செலுத்­து­மாறும் அமைச்­சர்­க­ளிடம் அந்­நபர் கோரினார். 

 

அதை­ய­டுத்து, இந்­திய  வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மேற்­படி நப­ருக்கு பதில் அனுப்பத் தீர்­மா­னித்தார்.

 

17352_08.jpg

 

“சகோ­த­ரரே, குளிர்­சா­தனப் பெட்டி விவ­கா­ரத்தில் நான் உங்­க­ளுக்குஉதவ முடி­யாது. துன்­பப்­படும் மக்­களின் விவ­கா­ரங்­களில் நான் பிஸி­யாக உள்ளேன்” என அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரிலேயே பதில் அளித்தார். “அந்த குளிர்சாதனப் பெட்டி எப்படியோ, ஆனால் அமைச்சரின் பதில் மிக “கூலானது” பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒற்றுமையின் வலிமை...
 

  • தொடங்கியவர்

இனி அந்த விரல்கள் 'அவுட்' சொல்லாது!
 

கிரிக்கெட் அம்பயர்களில் பலராலும் மிகவும் ரசிக்கப்பட்டவர் நியூசிலாந்தை சேர்ந்த பில்லி பவுடன். தனது வித்தியாசமான சைகைகளால் ஈர்த்த அவர் இனி சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மாட்டார். நியூஸி., அம்பயர் பேனல் அவருக்கு விடை கொடுக்கிறது. காரணம், ஆர்த்ரைட்டிஸ் வாதத்தால் அவரது விரல்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன

13435390_1956370611256006_32368164083896

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

dot13.jpg  எவர்ஆஃப்டர் என்ற பெயரில் இசைக் குழுவைத் தொடங்கியிருக்கிறார் மடோனா செபாஸ்டியன். ஐந்து பேர் கொண்ட இந்த இசைக் குழுவில், மடோனாதான் லீட் பாடகர். `நடிகை என்பதைவிட பாடகர் என்பதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நடிக்கும் படங்களில் நானே பாட வேண்டும் என்பதுதான் என் ஆசை. அது விரைவில் நிறைவேறும்' என்கிறார் மடோனா. பாட்டுன்னாலே மடோனாதான்!


p58a.jpg

dot13.jpg  `இந்திய சினிமா, ஆங்கிலப் படங்களுக்கு இணையாக எடுக்கப்படவில்லை என்றால், ஹாலிவுட் படங்கள் இந்திய மார்க்கெட்டைக் காலி செய்துவிடும்' என எச்சரித்திருக்கிறார் அமிதாப் பச்சன். `நான் அமெரிக்கா சென்றிருந்தபோது ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளர் என்னைச் சந்தித்து, இந்திய சினிமா மார்க்கெட் பற்றி புள்ளி விவரங்களோடு பேசினார். `நம் ஊர் சினிமா வியாபாரம் பற்றி இவ்வளவு விஷயங்கள் தெரிந்துவைத்து இருக்கிறார்களே!' என ஆச்சர்யப்பட்டேன். அப்போது அவர் `இந்திய சினிமா மார்க்கெட்டை எதிர்காலத்தில் ஹாலிவுட் படங்கள் ஆக்கிரமிக்கும்' என்றார். அவர் சொன்னது இப்போது நடந்து கொண்டிருக்கிறது. முன்னர் எல்லாம் இந்தியப் படங்கள் திரைக்கு வரும்போது ஹாலிவுட் பட வசூல் பாதிக்கும் என அந்தப் படங்களை வெளியிடாமல் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பார்கள். ஆனால் தற்போது, இந்தி படங்களோடு சேர்த்து ஹாலிவுட் படங்களையும் திரைக்குக் கொண்டுவருகிறார்கள். இந்தப் போட்டியைத் தாக்குப்பிடிக்க வேண்டுமானால், இந்தியப் படங்களின் தரம் உலகத்தரத்துக்கு இணையாக இருக்க வேண்டும்' என்கிறார் அமிதாப் பச்சன். தரம் முக்கியம் மக்களே!


dot13.jpg எய்ட்ஸ், புற்றுநோய் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளைவிட சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள்தான் இந்தியாவில் அதிகம். கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் சாலை விபத்துக்களால் உயிரிழந்திருக்கிறார்கள். 1 மணி நேரத்துக்கு 17 பேர், ஒரு நாளைக்கு 400 பேர் உயிரிழக்கிறார்கள். நாட்டிலேயே அதிக அளவில் தமிழகத்தில்தான் கடந்த ஆண்டு  69,059 சாலை விபத்துக்கள் நடந்திருக்கின்றன. நகரங்களின்படி டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னையில்தான் 886 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. மரண சாலைகள்!


p58b.jpg

dot13.jpg `பிரேமம்' படத்துக்கு அடுத்து தெலுங்கில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் `அ ஆ' முடித்த கையோடு, `பிரேமம்' தெலுங்கு வெர்ஷனில் நடித்து முடித்திருக்கிறார் அனுபமா பரமேஷ்வரன். தமிழில் தனுஷ் நடிக்கும் `கொடி' படத்தின் ஹீரோயினும் இவர்தான்.   `நிறையப் படங்கள் என்பதைவிட நல்ல படங்களில் நடிக்க மட்டுமே ஆசைப்படுகிறேன். அதனால் நான் நடிக்கும் படங்கள் குறைவாகவே இருக்கும்' என்கிறார் அனுபமா. தெளிவு பொண்ணு!


p58c.jpg

dot13.jpg இந்தியாவுக்காக இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில்குமார், 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இல்லை.  74 கிலோ எடைப் பிரிவில் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து நர்சிங் யாதவ் தகுதிபெற்றார். ஆனால், நர்சிம் வெற்றிபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில், காயம் காரணமாக சுஷில்குமார் கலந்துகொள்ளவில்லை. `நான் மீண்டும் உடல்தகுதி பெற்று விட்டேன். எனக்கும் நர்சிங் யாதவுக்கும் இடையே தகுதிப் போட்டியை நடத்தி, அதில் வெற்றி பெறுபவரையே ஒலிம்பிக்குக்கு அனுப்ப வேண்டும்' என்கிற சுஷில்குமாரின் கோரிக்கையை, மல்யுத்த சம்மேளனும் டெல்லி உயர் நீதிமன்றமும் நிராகரித்துவிட்டன. கடந்த முறை இந்திய அணிக்குத் தலைமை யேற்று சென்ற சுஷில்குமாருக்குப் பதிலாக, இந்த முறை துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தலைமையேற்க இருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!


dot13.jpg  `வறுமையில் வாடும் ஆப்பிரிக்க நண்பர்களுக்கு, ஒரு லட்சம் கோழிகளை வழங்க இருக்கிறேன்' என்கிறார் உலகின் பெரும்பணக்காரர் பில்கேட்ஸ். `கோழி வளர்ப்பு என்பது, எளிமையானது. இதற்கு பெரிய அளவில் முதலீடு தேவை இல்லை; பராமரிப்புச் செலவும் கிடையாது. பெரும்பாலான கோழிகள் கிடைத்ததைச் சாப்பிட்டு உயிர் வாழ்பவை. ஒரு விவசாயி ஐந்து கோழிகள் வளர்க்கிறார் என்றால், அவற்றை நன்கு பராமரித்தால் அடுத்த மூன்று மாதத்தில் அவை நாற்பது கோழிக்குஞ்சுகளைப் பொரிக்கும். ஒரு கோழிக்குஞ்சின் விலை ஐந்து டாலர் என்று வைத்துக் கொண்டாலும், ஆண்டுக்கு ஆயிரம் டாலர் வரை கிடைக்கும். அதனால் கோழி வளர்ப்புதான் இன்றைய தேதியில் நல்ல லாபம் தரும் தொழில்' என பிசினஸ் டிப்ஸ் கொடுத்திருக்கிறார் கேட்ஸ். சிக்கன் ப்ளான் செம!


p58d.jpg

dot13.jpg  கால்பந்து உலகின் எவர்கீரின் ஜாம்பவான் பீலேவின் 2000-க்கும் மேற்பட்ட பொருட்கள், லண்டனில் ஏலம் விடப்பட்டிருக்கின்றன. கோல்டன் பூட், உலகக்கோப்பை மாதிரி, பதக்கங்கள், பாஸ்போர்ட் எனக் கிட்டத்தட்ட எல்லா பொருட்களையுமே ஏலம்விட்டிருக்கிறார்கள். இந்திய மதிப்பில் அவர் பயன்படுத்திய ஷூ மட்டும் 6 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. நெருப்புடா!


p58e.jpg

p58f.jpg

dot13.jpg `பாகுபலி-2' படத்துக்காக ஹார்ஸ் ரைடிங் கற்றுவருகிறார் தமன்னா. `பாகுபலி' முதல் பாகத்தில்  போர் வீராங்கனையாக நடித்திருந்தாலும் தமன்னாவுக்கு ரொமான்ஸ் காட்சிகளே அதிகம். ஆனால், இரண்டாவது பாகத்தில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் அவதாரமெடுக்கிறார் தமன்னா. இதற்காக குதிரையேற்றம், வாள் சண்டை என, தீவிர ஆக்‌ஷன் பயிற்சிகளில் இறங்கிவிட்டார் தம்மு.ஆக்‌ஷன் பேபி!

p58g.jpg

vikatan

  • தொடங்கியவர்

தலைவா..!!! - இதோ நெருப்புடா டீஸர்
 

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அந்த 8 மணி இதோ. 'நெருப்புடா' என தாடி வைத்த முகம் அனல் கிளப்புகிறது... பயமா.. ஹாஹாஹா என தலைவர் சிரிக்க தெறிக்க விட்டிறுக்கிறது டீஸர். அந்த பழைய ஹேர் ஸ்டைல், மீசையில்லாத சூப்பர் ஸ்டார் என இது தலைவர் மேனியா. 'வந்துட்டேன்னு சொல்லு' என்ற அந்த க்ளைமாக்ஸ் ப்ப்பா.. வெயிட் பண்ணாம பார்த்துடுங்க

 

  • தொடங்கியவர்

நாட்டுக்கொரு பாட்டு - 9 : ஒரு வல்லரசு தேடிய கீதம்!

 
king_2886104f.jpg
 

ஒரு நாட்டுக்குத் தேசிய கீதம் எவ்வளவு முக்கியமானது? அதை அடிக்கடி மாற்ற முடியுமா? உலகில் அதிக முறை மாற்றப்பட்ட ஒரு தேசிய கீதம் உள்ளது. அது எந்த நாட்டினுடையது தெரியுமா? ரஷ்யா!

அப்போது தேவாலயங்களில் பிரபலமாக ஒரு பாடல் இருந்தது. அந்தப் பாடலே சோவியத் யூனியனின் தேசிய கீதமாக இருந்தது. சரியாக 200 ஆண்டுகளுக்கு முன்பு, 1816-ல் முதன் முதலில் தேசிய கீதத்தை அமைத்துக்கொண்டார்கள். 1833-ல், அப்போதைய இளவரசர் அலெக்ஸைல் வால்வ் இசை அமைத்த பாடல், மன்னர் முதலாம் நிகோலஸுக்குப் பிடித்துப் போனது. அதுவே தேசிய கீதம் ஆனது.

பிப்ரவரி புரட்சியைத் தொடர்ந்து மார்ச் 1917-ல், ஒரு பிரெஞ்சு பாடலையொட்டி ஒரு பாடல் இயற்றப்பட்டது. அது அதிகாரபூர்வமற்ற முறையில் இசைக்கப்பட்டது.

சில மாதங்கள் கழித்து 1917 அக்டோபரில் ‘ஆஹாவென்று எழுந்தது யுகப் புரட்சி!' (நன்றி: பாரதியார்) 'ல இன்டர்னேஷனலி...' என்று இன்றும் பலராலும் போற்றப்படுகிற சர்வதேசப் புரட்சிகர சோசலிசப் பாடல், தேசிய கீதம் ஆனது. இது, 1944-ம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 1944 முதல் 1956 வரை அலெக்ஸாண்டர் அலெக்ஸ் ஆன்ட்ரோவ் இசையமைப்பில் செர்ஜி மிக்கால் கோவ் & கேப்ரியல் எல்-ரெஜிஸ்டான் இணைந்து எழுதிய ஒரு பாடல் தேசிய கீதமானது. 1953-ல் ஜோச ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு, அவரால் கொண்டுவரப்பட்ட பாடலின் வரிகள் நீக்கப்பட்டன.

1956-ல் இசை வடிவம் மட்டும் பின்பற்றப்பட்டது. 1970-ல் கவிஞர் மிக்கால்கோவ், முந்தைய பாடலில் சில திருத்தங்களைச் செய்துகொடுத்தார்.

1977-ல் இது ஏற்கப்பட்டது. அந்தப் பாடல் மீண்டும் தேசிய கீதமானது. 1991-ல் உள்நாட்டில் அரசியல், பொருளாதாரக் குழப்பங்கள் ஏற்பட்டன. சோவியத் யூனியன் சிதறியது.

மாநிலங்கள் எல்லாம் தனித்தனியே பிரிந்து போயின. ‘ரஷ்யா' என்ற மாநிலம் தனி நாடாக மாறியது. முன்பு சோவியத் யூனியனில் இருந்தாலும், பல மாநிலங்களுக்கும் தனித்தனியே கீதம் இருந்தது. ரஷ்யாவுக்கு மட்டும் இல்லாமல் இருந்தது.

இதன் பிறகு மிகைல் க்லிங்கா இசை 1993-ல் ஏற்கப்பட்டது. அந்த இசைக்கு ஏற்பப் பாடல் வரிகளை எழுதி அனுப்புமாறு பொதுமக்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது.

வந்தவை எதுவுமே சரியில்லை. அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. ‘சரி, வார்த்தைகளே வேண்டாம்; இசை மட்டுமே இருந்து விட்டுப் போகட்டும்' எனச் சொன்னார் அதிபர் விளாதிமிர் புடின்.

2000-ம் ஆண்டில் சிட்னியில் ஒலிம்பி போட்டி நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக ரஷ்ய விளையாட்டு வீரர்கள் அதிபர் புதினைச் சந்தித்தார்கள். ‘சர்வதேசப் போட்டிகளின்போது, வார்த்தைகள் இல்லாத தேசிய கீதம் பாடுவது எங்களுக்கு உற்சாகத்தைத் தரவில்லை' என்று புதினிடம் புகார் செய்தனர்.

உடனே அதை ஏற்றுக்கொண்ட அதிபர், தேசிய கீதப் பாடலைத் தேர்வு செய்யுமாறு தேசிய கவுன்சிலில் கேட்டுக்கொண்டார். மீண்டும் போட்டி அறிவிக்கப்பட்டது. ஆறாயிரத்துக்கும் அதிகமாகப் பாடல்கள் வந்தன. அவற்றில் 20 பாடல்கள் தேர்வு செய்யப்பட்டு இசையமைக்கப்பட்டன.

2008 டிசம்பர் 8 அன்று ரஷ்ய நாடாளுமன்றத்தில், தேசிய கீதத்தை ஏற்றுக்கொள்வது தொடர்பாக வாக்கெடுப்பு நடந்தது. இதில் 381 - 51 என்ற கணக்கில் வாக்கெடுப்பு வெற்றி பெற்றது. மிகால்கோவ் எழுதி, அலெக்ஸான்ட்ரோவ் இசை அமைத்த பாடல் தேசிய கீதமானது.

2000-ம் ஆண்டு டிசம்பர் 30, அன்று முறையாக ரஷ்ய தேசிய கீதம் பாடப்பட்டது. எப்படி ரஷ்யத் தேசிய கீதம் ஒலிக்கும்?

ரொசீயா - ஸ்வாஷ்செனேயா நாஸா டெர்சாவா

ரொசீயா - லுபீமயா நாஷா ஸ்ட்ரனா

மொகூசயா வொல்யா வேலிகாய ஸ்லாவா

த்வோயோ தோஸ்தோயன்யே நா வ்ஸே வ்ராம்னா

ஸ்லாவ்ஸ்யா ஓலேசெஸ்ட்வா நாஸே ஸ்வபோத்னாயே

ப்ரட்ஸ்கி நராடாவ் சொயூஸ் வொகாவா

ப்ரேட்காமி டான்யா முத்ரோஸ்த் நரோதன் யா

ஸ்லவ்ஸ்யா ஸ்ட்ரானா மிகாட் இம்ஸ்யா தோபா

ஒட் யுஸ்னி மொரே தோ பாலியார்ன கோ யா

ரஸ்கிலிஸ் நஸி லேசா இ பொயா

ஒட்ன டி நா ஸ்வதே ஒட்ன டி தகாயா

க்ரனி மாயபோ கோம்ராட்னயா ஜெமிலா

ஸ்லாவ்ஸ்யா ........ இம்ஸ்யா தோபா (மீண்டும் 2வதுபத்தி)

ஷிரோகி ப்ரொஸ்டார் யா மெஷீட்டி இ லியா டிஸ்னி

க்ரடூஷியே நம் ஒட்ரி வாயுத் கொடா

நம் சிலூ டயாட் நஷாவர் னோஸ்த் ஒசீனே

தக் பீலோ தக் யேஸ்தீ தக் புடெட் சேட்கா.

ஸ்லாவ்ஸ்யா ........... இம்ஸ்யா தோபா (2வது பத்தி)

தமிழாக்கம்

ரஷ்யா - நமது புனித தாய் நாடு.

ரஷ்யா - நமது நேசத்துக்குரிய தேசம்.

வலிமையான மனவுறுதி, மாபெரும் மகிமை

இவை (யாவும்) எப்போதுக்குமான நமது பாரம்பரியம்.

மகிமையோடு இரு - எமது சுதந்திர தந்தை நாடே!

பழமை வாய்ந்த சகோதர மக்களின் ஒற்றுமை.

முன்னோர்கள் தந்த, மக்களின் மதி நுட்பம்.

மகிமையோடு இரு என் நாடே! உன்னை எண்ணிப் பெருமையுறுகிறோம்.

தென் கடல்களிலிருந்து துருவ நிலங்கள் வரை

எங்கள் வயல்களும் வளங்களும் விரயிருக்கின்றன.

உலகில் தனித்தன்மையுடன் நிற்கிறாய் - நீ மட்டுமாய்

இறைவனால் பாதுக்கப்பட்ட, பூர்வீக பூமி.

விரிந்த கனவு, அகன்ற வாழ்க்கை

வருங்காலங்களில் எங்களுக்காகத் திறக்கின்றன.

தந்தை நாட்டின் மீதான விசுவாசம் எங்களுக்கு வலிமை சேர்க்கின்றது.

இப்படித்தான் - இருந்தது; இருக்கின்றது; இருக்கும்.

(தேசிய கீதம் ஒலிக்கும்)

tamil.thehindu

  • தொடங்கியவர்

சாப்பிடாமல் எவ்வளவு நாட்கள் உயிர் வாழ முடியும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.