Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

அம்மாடியோவ்!

 

p32a.jpg

துருப்பிடிச்ச கக்கூஸும், தகரடப்பா பெட்டியும்தான் இந்திய ரயில்வேயின் அடையாளம்னு நினைச்சுடாதீங்க. இதோ, இந்தியாவில் ஓடிக்கொண்டிருக்கும் சொகுசு ரயில்களில் சில!

மஹாராஜா எக்ஸ்பிரஸ்

p32b.jpg

2010-ல் பயன்பாட்டுக்கு வந்த, மும்பையில் இருந்து டெல்லிக்குச் செல்லும் சொகுசு ரயில் இது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘உலகின் சிறந்த சொகுசு ரயில்கள்’ பட்டியலில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இடம் பிடிப்பதோடு, நான்காவது இடத்தில் இடம்பெற்றிருக்கிறது மஹாராஜா. தனித்தனி அறை, டிவி, வைஃபை, ஜெயின் உணவுகள், மன்னர்கள் கால உணவுகள்... என ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் இருக்கும் வசதிகளைவிட இதில் இன்னும் ஏராளம். ரயிலில் இருக்கும் ‘அரண்மனை செட்டப்’ பெட்டியில் மதுவும் கிடைக்கும். டிரெயினில் போறவங்களை ‘பேசஞ்சர்’னு சொல்வோம். இந்த வண்டியில் ஏறுகிறவர்களை ‘விருந்தினர்கள்’ என்றுதான் அழைக்கிறது இந்திய ரயில்வே. ஏன்னா, இந்தியாவிலேயே அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும் ரயில் இதுதான். சரி டிக்கெட் எவ்ளோ? குறைந்த பட்சம் இரண்டு லட்சம் ரூபாய். அதிகபட்சம் 16 லட்சம் ரூபாய். கிறுகிறுனு வருதா?

பேலஸ் ஆன் வீல்ஸ்

p32c.jpg

p32d.jpg

விதையா சொல்லணும்னா, ‘ஒரு அரண்மனை ஊர்ந்து செல்கிறதே?’னு ஆரம்பிக்கலாம். இதுவும் உலகின் சிறந்த பத்து சொகுசு ரயில்களில் ஒன்று. பத்து பெட்டி இருக்கும். ‘என்ன வேணும் உங்களுக்கு? எல்லாமே இங்கே இருக்கு’னு சொல்கிற மாதிரி, உலகின் எல்லாவிதமான உணவு வகைகளையும் சாப்பிடலாம். டெல்லியில் இருந்து கிளம்பி, ஏழு நாட்கள் இந்தியாவைச் சுத்திட்டு, மறுபடியும் டெல்லிக்கே திரும்பிவிடுw ம். மே, ஜூன், ஜூலை தவிர மற்ற மாதங்களில் இயக்கப்படுகிறது இந்த சொகுசு ரயில். மூணு பேர் ஷேர் பண்ணிக்கிட்டா ஒரு தொகை, இரண்டு பேர் ஷேர் பண்ணிக்கிட்டா ஒரு தொகை, தனியா போறதுக்குப் பெரும் தொகைனு விதம்விதமான பேக்கேஜ் இருக்கு. உடனே ஆளைத் திரட்ட ஆரம்பிச்சுடாதீங்க பாஸ். இதிலும் டிக்கெட் விலை ‘சிங்கிள் டிஜிட்’ லட்சங்களில் ஆரம்பிச்சு, டபுள் டிஜிட் லட்சங்களில் முடியும்!

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ்

p32e.jpg

p32f.jpg

ராஜஸ்தானில் ஏழு நாட்கள் ரவுண்ட் அடிக்கும் சொகுசு ரயில். ராஜஸ்தானில் இருக்கும் முன்னாள் சமஸ்தானங்களைச் சுற்றிப் பார்க்கலாம். முக்கியமான இடங்களைச் சுற்றிப்பார்க்க டிரெயின்ல இருந்து இறங்கினதுமே, இலவச வண்டிகள் வரிசைகட்டி நிற்கும். அதாவது, காலைத் தரையில்கூட வைக்க வேண்டாம். ராஜஸ்தான் சமஸ்தானங்கள் தவிர, வாரணாசி, கஜுரோஹோ போன்ற இடங்களுக்கும் விசிட் அடிக்கும் இந்த வண்டியில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணம் 45,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதிகபட்ச கட்டணம், ‘கிறுகிறு’னு வருமே... அந்தத் தொகைதான்!

கோல்டன் சாரட்

p32g.jpg

p32h.jpg

பெங்களூரில் இருந்து புறப்பட்டு கபினி, பந்திப்பூர், மைசூர் உள்ளிட்ட ஊர்களைச் சுற்றிவிட்டு மீண்டும் பெங்களூருக்கே திரும்பிவிடும். ஹைதர் காலத்துக் கட்டடக்கலை பாணியில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். ‘கையேந்தி பவன்’ பாணி, ‘காஸ்ட்லியான ஹோட்டல்’ பாணி... என இரண்டு வகையான உணவகங்கள் உள்ளே இருக்கின்றன. சரக்கு அடிக்கலாம், ஆஸ்பத்திரியில் ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாம், ஜிம்முக்குப் போய் ஆம்ஸ் ஏற்றலாம்... எல்லாம் எங்கேனு தலையைச் சொறியாதீங்க. இங்கேதான்! அக்டோபர் முதல் மார்ச் வரை இயங்கும் இந்த ரயிலில், எட்டு நாள் பயணத்துக்குக் கட்டணம் 1,50,000 ரூபாயில் தொடங்குகிறது. இதுதவிர, டெக்கான் ஒடிஸி, ஃபேரி குயின் என இன்னும் சில சொகுசு ரயில்களும் இந்தியாவில் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

நமக்கு தட்கல்ல டிக்கெட் கிடைக்கிறதே பெரும்பாடா இருக்கு!

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
வாகனத் தொடரணி காத்திருக்க, உகண்டா ஜனாதிபதி வீதியோரத்தில் அமர்ந்து தொலைபேசியில் உரையாடியது ஏன்?: இணையத்தில் பரவும் புகைப்படம்
 

உகண்­டாவின் ஜனா­தி­பதி யோவேரி முசே­வேனி வீதி ஓரத்தில் கதிரையொன்றில அமர்ந்து தொலை­பேசி மூலம் உரை­யாடிக் கொண்­டி­ருந்­த­போது பிடிக்­கப்­பட்ட புகைப்­படம் சமூக வலைத்­த­ளங்­களில் “வைர­ஸாகி” வரு­கி­றது.

 

 

உகண்டா ஜனா­தி­பதி யோவேரி முசே­வேனி கிராமப்­ புறத்­தி­லுள்ள வீதி­யொன்­றுக்கு அருகில் கதி­ரையில் அமர்ந்து தொலை­பே­சியில் உரை­யா­டு­வதும் சற்று தொலைவில் அவரின் வாகனத் தொட­ரணி காத்­திருப்பதும் அப்­பு­கைப்­ப­டத்தில் பதி­வா­கி­யுள்­ளது.

 

உகண்டா அர­சாங்க ஊட­கத்­துறை அதி­கா­ரி­யான டொன் வொனி­யாமா இப்­பு­கைப்­ப­டத்தை பேஸ்­புக்கில் வெளி­யிட்­டி­ருந்தார். சுமார் 30 நிமிட நேரம் ஜனா­தி­பதி முசே­வேனி தொலை­பே­சியில் உரை­யா­டி­னா­ரென வொனியாமா தெரிவித்துள்ளார். 

 

வாக­னத்­தி­லேயே அமர்ந்து உரை­யா­டாமல் எதற்­காக வீதி­யோ­ரத்தில் கதிரை போட்டு அமர்ந்து ஜனா­தி­பதி முசே­வேனி உரை­யா­டினார் என்­பது தெரி­ய­வில்லை. 

 

17984_Uganda2.jpg

ஆனால், இப்­பு­கைப்­படம் சமூக வலைத்­த­ளங்­களில் வேக­மாக பரவி வரு­கி­றது. ஜனா­தி­பதி முசே­வேனி தொலை­பே­சியில் உரை­யாடும் காட்­சியை வேறு பல புகைப்­ப­டங்­களில் பொருத்தி டுவிட்­டரில் பலர் வெளி­யிட்­டுள்­ளனர். 

 

71 வய­தான யோவேரி முசே­வேனி 5 ஆவது தட­வை­யா­கவும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று கடந்த மே மாதம் மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

1798473.jpg

 
metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

புதிய அவதாரத்தில் டோனி (படம் இணைப்பு )

 

இந்திய கிரிக்கெட் அணித் தலைவரும் விக்கெட்காப்பாளருமான மகேந்திர சிங் டோனி தனது புதிய அவதாரத்தை தனது மகளுடன் இணைந்து உத்தியோகபூர்வ பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

dhoni.JPG

வழமையாகவே தனது சிகையலங்காரத்தால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ள மகேந்திர சிங் டோனி, தற்போது தனது தாடி அமைப்பிலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ளார்.

13726849_1765191337037421_89061850183937

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

கலக்கல் கேர்ள்ஸ்!

 

p35.jpg

மாடல்ஸ் தெரியும். சூடோ மாடல்ஸ் (pseudo models) தெரியுமா? எந்த விதப் பயிற்சியும் பெறாமல் மாடலிங் செய்யும் இளமையான தோற்றத்தில் உள்ள அழகான பெண்களை சூடோ மாடல்ஸ் என்றழைக்கின்றனர். 2000-த்தின் பின்னிறுதியில் இந்தக் கலாசாரம் ஹாங்காங் நகரில் பிரபலமடையத் தொடங்கியது. தற்போது இத்துறையில் கலக்கிக்கொண்டிருக்கும் சூடோ மாடல்கள் பற்றிப் பார்ப்போம்.

ஜீனா ஹோ

p35b.jpg

ஏழு வயதில் ஜீனா ஹோவின் குடும்பம் பெய்ஜிங்கில் இருந்து ஹாங்காங்கிற்கு இடம்பெயர்ந்தது. 19 வயதாகும்போது மிஸ் ஆசியா கேம் ஷோவில் கலந்துகொள்ள வந்த இவர்மீது மீடியாவின் கவனம் பதிந்தது. அதன்பின் பல தொலைக்காட்சிகளிலும், விளம்பரங்களிலும் சூடோ மாடலாக வலம் வரத் துவங்கினார். தாராளமயமாக்கல் கொள்கையை சினிமாவிலும் இவர் விட்டுவைக்கவில்லை. அனைத்துப் படங்களிலும் தாறுமாறான கவர்ச்சிக் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து, சீன இளைஞர்களின் உறக்கம் கெடுத்து வருகிறார்.

ஜானிஸ் மேன்

p35c.jpg

ஹாங்காங்கைச் சேர்ந்த முக்கியமான மாடல்களில் ஒருவர். 14 வயதில் மாடலிங்கில் ஈடுபடத் துவங்கிய இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தனது முதல் படத்தில் நடிக்கத் துவங்கியபோது இவருக்கு வயது 19. சினிமா, டி.வி சீரியல், விளம்பரங்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை. ஆசியாவைச் சேர்ந்த பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரத் தூதுவராக இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கிரிஸ்ஷி சாவ்

p35d.jpg

சூடோ மாடல்களின் சூப்பர்ஸ்டார் இந்த கிரிஸ்ஷி சாவ். 15 வயதுவரை ஃபாஸ்ட்புட் கடை ஒன்றில் உதவியாளராகப் பணிபுரிந்துவந்த இவர், ‘கேம் கேர்ள்’ என்ற போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அன்று தொடங்கியது இவரது மாடல் வாழ்க்கை. அழகு என்பது இறைவனின் கொடை. அதை ஏன் மறைக்க வேண்டுமென்பது இவர் பாலிசி. யாஹூவில் அதிகம் தேடப்பட்ட புகைப்படத்திற்குச் சொந்தக்காரராகத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் (2009 முதல் 2012 வரை) இடம்பிடித்தார். நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் இன்றுவரை ஹாட் மாடலாகவும் வலம் வருகிறார்.

டாடா சென்

p35e.jpg

27 வயதாகும் டாடா 2010-ம் ஆண்டில் ஃபர்ஸ்ட் இம்ப்ரெசன் என்ற தனது முதல் போட்டோ ஆல்பத்தை வெளியிட்டுப் பிரபலமடைந்தார். மாடலாக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தற்போது சரமாரியாகத் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். நம் ஊர் நடிகைகள் போல பல விளம்பரங்களிலும் தலைகாட்டி வருகிறார். ‘வல்கேரியா’ என்ற திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டைப் பெற்றது. சிறந்த துணைநடிகை விருதையும் இப்படத்திற்காக வென்றார்.

vikatan

  • தொடங்கியவர்

இ - வேஸ்ட் பயங்கரம்!

கார்க்கிபவா

 

p26a.jpg

டைசியாக நீங்கள் ஒரு புதிய மொபைலை வாங்கியது எப்போது, இந்த நொடி உங்கள் வீட்டுக்குள் எத்தனை மொபைல்கள் இருக்கின்றன, அதில் எத்தனை மொபைலை  நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினரோ பயன்படுத்துகிறீர்கள்?

நாம் பயன்படுத்தாத மின்னணுப் பொருட்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் டெரா பைட் அளவுக்கு உயர்ந்துவிட்டது. இந்தியா ஓர் ஆண்டுக்கு 18 லட்சம் டன் மின்கழிவுகளைக் கொட்டுகிறது. 2018-ம் ஆண்டில் இது 30 லட்சம் டன்னாக உயரும். அதைவிட அதிர்ச்சித் தகவல்... பல லட்சம் டன் மின் கழிவுகளை மற்ற நாடுகளில் இருந்து, நாம் இறக்குமதி செய்கிறோம். குப்பையை எதற்கு இறக்குமதி செய்யவேண்டும்?

மின்கழிவுகளில் இருந்து உதிரிப்பாகங்களைப் பிரித்தெடுத்து அதை மறுசுழற்சிக்கு உட்படுத்துவது உண்டு. அப்படிச் செய்வதில் பல ஆபத்துகள் இருக்கின்றன. சில சமயம் கதிர்வீச்சுகள்கூட இதில் சாத்தியம். தேவையான பொருட்களைப் பிரித்தெடுத்த பின்னர், எதற்குமே பயன்படாத பொருட்களை மண்ணில்தான் கொட்ட வேண்டும். அது சுற்றுச்சூழலுக்குக் கேடு. அதனால் முன்னேறிய பல நாடுகள்  தங்கள் தேசத்து மின்கழிவுகளை சட்டத்துக்கு விரோதமாக நம் நாட்டுக்குள் கொட்டிவிடுகின்றன. அதைப் பிரித்தெடுக்கும் ஆபத்தான வேலையையும், அந்த மின்கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதகங்களையும் நம் தலையில் சுமத்துகின்றன. `அட்டிரோ’ என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டும்தான் முறையாக உரிமம் பெற்று மின்கழிவுகளை இறக்குமதி செய்கிறது. மற்ற எல்லா இறக்குமதிகளுமே இல்லீகல்தான்.

மின்கழிவுகள் என்றதும் ஹாலிவுட் ஸ்டைலில்  பூமியை அழிக்கநினைக்கும் வேற்றுக் கிரகவாசிகளின் சதித்திட்டம் என நினைக்க வேண்டாம். நாம் தூக்கி எறியும் ரிமோட், மொபைல் சார்ஜர்கள், கேபிள்கள் தொடங்கி எல்லா தேவையற்ற மின் மற்றும் மின்னணுப் பொருட்கள்தான் மின் கழிவுகள்.

p26b.jpg

p26c.jpg

நாம் உருவாக்கும் மற்றும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மின் கழிவுகள்,  டெல்லிக்கு அருகில் இருக்கும் சீலாம்பூர் நகருக்குத்தான் வருகின்றன. இது இந்தியாவில் மின் கழிவுகளைக் கையாளும் மிகப்பெரிய இடம். சிறியதும் பெரியதுமாக 3,000 மின்கழிவுக் கடைகள் இங்கே இருக்கின்றன. உலகம் முழுவதும் உருவாகும் மின் கழிவுகளில் 70 சதவிகிதம் சீலாம்பூருக்குதான் வருகின்றன. இன்னும் முறைப்படுத்தப்படாத இந்தத் தொழிலால் இந்தியா முழுக்க ஒரு லட்சம் பேர் பிழைக்கிறார்கள். அதில் சீலாம்பூரில் மட்டும் 30,000 பேர்.

சீலாம்பூர் பகுதியில் வேலைசெய்வர்களில் பெரும்பாலோர் பதின்ம வயதினர். பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லாமல் தினம் 200-300 ரூபாய் வருமானத்துக்கு குழந்தைகளும் இளைஞர்களும் இங்கே வேலைசெய்கிறார்கள். இவர்களின் தலைமுடிகூட தங்கம்போல் மின்னுகின்றன. அதற்குக் காரணம் இந்த நகரின் காற்றில் கலந்திருக்கும் காப்பர். இவர்களின் வேலை, பிளாஸ்டிக் பொருட்களில் இருக்கும் காப்பரைப் பிரித்தெடுப்பது மட்டும்தான். அதன் பின்னர் அவை காட்டுப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவதாகச் சொல்கிறார்கள். பெரும்பாலான மின்கழிவுகளில் இருக்கும் பாதரசம், ஈயம், கேட்மியம் போன்றவை விஷத்தன்மை உடையவை. இவற்றை மண்ணில் கொட்டுவதும், பூமிக்குள் புதைப்பதும் சுற்றுச்சூழலுக்குத் தீங்கானது.

சீலாம்பூரில், குடும்பம் குடும்பமாக சர்க்யூட் போர்டுகளில் இருந்து தங்கத்தையும், காப்பரையும் பிரித்தெடுக்கிறார்கள். ஆம்... அதிர்ஷ்டம் இருந்தால், சில மின்னணுப் பொருட்களில் இருந்து தங்கம்கூட கிடைக்கலாம் என்கிறார்கள். ஒரு மதர்போர்டைப் பார்த்தாலே, அது ஜப்பானில் தயாரித்ததா, சீனாவில் தயாரித்ததா என இந்த ஊர் குழந்தைகள்கூடச் சொல்லிவிடுகிறார்கள். சீனப் பொருட்களைவிட ஜப்பான் பொருட்களில் தங்கமும் நல்ல காப்பரும் கிடைக்கும் என்பது சீலாம்பூர் கண்டுபிடித்த ரகசியம். தங்கத்தையும் காப்பர் கம்பிகளையும் எடுத்த பிறகு ஒட்டுமொத்த யூனிட்டையும் எரிக்கிறார்கள். பிளாஸ்டிக் உருக, எஞ்சியிருக்கும் மெட்டல்களை விற்று காசாக்குகிறார்கள்.

மின்கழிவுகளைக் கையாள்வது எளிது அல்ல. பல குழந்தைகளின் கைகள் தினம் தினம் பிளாஸ்டிக் பொருட்களால் ரத்தத்தைப் பார்க்கின்றன. சில மின்கழிவுகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் உயிரையே பறிக்கலாம். 2010-ம் ஆண்டு சீலாம்பூர் அருகே இருக்கும் மாயபுரி என்ற இடத்தில் நடந்த கதிர்வீச்சு விபத்தில் ஒருவர் இறந்துபோனார். பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இன்னமும் வேலைக்குத் திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள்.

p26d.jpg

இதுபோன்ற சம்பவங்களுக்குப் பிறகு இந்திய அரசு விதிகளை இறுக்கியிருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவது, குறைந்தபட்ச ஊதியம், பாதுகாப்பு வசதிகள் போன்றவற்றை அரசு தீவிரமாகக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறது. முறைப்படுத்தப்பட்ட மின்கழிவு நிறுவனங்கள் நிறைய வந்துவிட்டன. இவர்களால், சாதாரண வியாபாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆபத்தான இந்தத் தொழிலை முறைப்படுத்துவது முக்கியம். அதே சமயம், அதை கார்ப்பரேட் வசம் முழுமையாக ஒப்பட்டைப்பதும் ஆபத்தில் முடியலாம். அடுத்து வரும் ஆண்டு களில் ராட்சச வேகத்தில் வளர விருக்கும் இந்தத் துறையை கூடுதல் கவனத்தோடு அரசு கவனிக்க வேண்டும். மின்கழிவு நிறுவனங்களைச் சீரிய இடைவெளியில் அரசு கண்காணித்து உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். அவர்களின் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வலியுறுத்தப்பட வேண்டும்.

மின்கழிவுகளில் இருந்து தங்கம் கிடைப்பதும் தகரம் கிடைப்பதும் அவரவர் அதிர்ஷ்டம் என்கிறார்கள் சீலாம்பூர்வாசிகள். அரசு என்ன எடுக்கப்போகிறது என்பதுதான் இப்போதைய கேள்வி!


p26e.jpg

திக மின்கழிவுகள் கொண்ட இந்திய மாநிலங்கள் பட்டியலில் மஹாராஷ்டிராவுக்கு முதல் இடம். தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நகரங்கள் பட்டியலில் டெல்லி, மும்பை, பெங்களூ ருக்கு அடுத்த இடத்தில் சென்னை இருக்கிறது. சென்னைக்கு அருகில் ஒரகடத்தில் மின்கழிவுகளைக் கையாளும் மிகப்பெரிய தொழிற்சாலை உள்ளது. இதைப் போல குறைந்தபட்சம் 10 தொழிற்சாலைகள் தமிழகத்துக்குத் தேவை என்கிறார்கள்!

vikatan

  • தொடங்கியவர்

தோற்றவர்களின் கதை - 11

சுசி திருஞானம்தொடர்

 

p18a.jpg

ஹென்றி ஃபோர்ட்

ஹென்றி ஃபோர்ட் - கார் வடிவமைப்பின் பிதாமகன்; பிரமாண்டமான ஆலைத்தொழில் சிந்தனைக்கு வித்திட்ட மாமேதை; பிரான்சைஸிங் முறையில் உலகின் முதலாவது பலமான வணிக நெட்ஒர்க்கை உருவாக்கிய முன்னோடி; பல லட்சம் தொழில் முனைவோருக்கு முன்மாதிரி!

அவரது மாபெரும் வெற்றி சாம்ராஜ்யம், படுதோல்விகள் என்ற அடித்தளத்தில் இருந்து உருவானது. தோல்விகளை வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றும் உத்தியை, பெரும் அவமானங்களுக்கு இடையே அவர் கற்றுக் கொண்டார். “எனது தோல்விகளும் அவை தந்த வேதனையும், இரும்பைப் போன்ற மன உறுதியை வளர்த்துக்கொண்டு முன்னேற எனக்கு உதவின” என்று பின்னாட்களில் குறிப்பிட்டார் ஹென்றி ஃபோர்ட். 

அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாநிலத்தில் ஒரு விவசாயப் பண்ணைப் பகுதியில் 1863-ம் ஆண்டில் பிறந்தார் ஹென்றி ஃபோர்ட். 15 வயதில் அவருக்கு ஒரு கைக்கடிகாரத்தைப் பரிசாகக் கொடுத்தார் அவரது தந்தை. அதனைப் பலமுறை தனித்தனிப் பாகங்களாகக் கழற்றி மாட்டுவதை அவர் வேடிக்கை விளையாட்டாகக் கொண்டிருந்தார். பொறியியல் சிந்தனை அவரது நாடி நரம்பெல்லாம் பரவியிருந்தது.

16 வயதில் டெட்ராய்ட் தொழில் நிறுவனம் ஒன்றில் பயிற்சிப் பொறியாளராக வேலையில் சேர்ந்தார். பின்னர் பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் நடத்திவந்த எடிசன் எலெக்ட்ரிக் கம்பெனியில் 40 டாலர் மாதச் சம்பளத்துக்கு, பொறியாளராக வேலையில் சேர்ந்தார்.

குதிரை வண்டிகளும், ரயில் வண்டிகளும் மட்டுமே போக்குவரத்து வாகனங்களாகக் கோலோச்சிவந்த காலகட்டம் அது. ஒருநாள், எரிவாயுவால் இயங்கும் மோட்டாரைக் கவனித்த ஹென்றி ஃபோர்ட், இதை அடிப்படையாக வைத்து குதிரையில்லாத கார் வண்டியை உருவாக்கினால் போக்குவரத்து முறையில் ஒரு புரட்சியை உருவாக்கிவிடலாம் என்று கனவு கண்டார். இந்தக் கனவு அவரைத் தூங்கவிடாமல் செய்தது.

தனது வீட்டின் பின்புறத்தில் சிறு தொழிற்கூடத்தை உருவாக்கிய ஹென்றி ஃபோர்ட், கசோலின் கார் வண்டியை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கினார். எடிசன் எலெக்ட்ரிக் கம்பெனியில் இரவில் வேலைபார்த்த ஹென்றி ஃபோர்ட், பகலில் சிறிதுநேரம் மட்டுமே தூங்கிவிட்டுப் பின்னர், தனது மோட்டார் கார் வடிவமைப்பு வேலைகளில் மும்முரமாக ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

‘‘ஏன்டா... உன் நேரத்தை வீணடிக்கிறாய்?’’ என்று வசைபாடினார் தந்தை. ‘‘வாழ்க்கையைச் சுகமாக வாழத் தெரியாதவன்’’ என்று நகையாடினர் நண்பர்கள்.  எதையும் காதில் வாங்காமல் தனது முயற்சிகளைத் தொடர்ந்தார் ஹென்றி ஃபோர்ட். பல தோல்விகளுக்குப் பின்னர், ஒரு சிலிண்டர் கசோலின் மோட்டார் என்ஜினை உருவாக்கினார் ஃபோர்ட்.  இதனை மேலும் செம்மைப்படுத்தி, 1896-ம் ஆண்டில், ‘குவாட்ரிசைக்கிள்’ என்று அழைக்கப்பட்ட குதிரையில்லா கார் வண்டியை வடிவமைத்துவிட்டார். எத்தனாலால் இயக்கப்பட்ட இரண்டு சிலிண்டர் இன்ஜினும், மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகமும் அந்த நான்கு சக்கர வண்டியின் சிறப்புகள்.

அடுத்த 2 ஆண்டுகளுக்குள், மேலும் மேம்படுத்தப்பட்ட குவாட்ரிசைக்கிள் கார் வண்டியை உருவாக்கினார் ஹென்றி ஃபோர்ட். அதேபோன்ற வண்டிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையைப் பெரிதாக உருவாக்க வேண்டும் என்பது அவரது ஆசை. அதற்காக, எடிசன் கம்பெனி வேலையிலிருந்து விலகிவிட்டார்.

p18b.jpg

சொந்தத் தொழிலுக்கான நிதி திரட்டுவதற்காக, பல செல்வந்தர்களைச் சந்தித்து உதவி கோரினார். அவமானங்களே பரிசாகக் கிடைத்தன. ‘‘இதுவரை இல்லாத புதிய தொழிலில் முதலீடு செய்து நஷ்டப்பட விரும்பவில்லை’’ என்பதுதான் அனைவரின் பதில். டெட்ராய்ட் நகர மேயர் மூலமாக வில்லியம் மர்பி என்ற தொழிலதிபரைச் சந்தித்து, தனது தொழில் திட்டத்தை விளக்கினார் ஹென்றி ஃபோர்ட். அவரைத் தனது குவாட்ரிசைக்கிள் வண்டியில் ஏற்றிக்கொண்டு 100 கிலோமீட்டர் பயணம் செய்து காட்டினார். திருப்தி அடைந்த வில்லியம் மர்பி, தொழிலுக்கான ஒரு பகுதி நிதியைத்  தர ஒப்புக்கொண்டார். மீதிப் பணத்தைப் பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாகத் திரட்டிய ஹென்றி ஃபோர்ட், 1899-ம் ஆண்டில் ‘டெட்ராய்ட் மோட்டார் கம்பெனி’ என்ற தனது சொந்தக் கம்பெனியைப் பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கினார்.

கார் தயாரிப்பு என்ற தொழிலே புதியதாக இருந்த அந்தக் காலகட்டத்தில், தேவைப்பட்ட உதிரிப் பாகங்கள் கிடைப்பதில் தாமதமாகின. திறன்பெற்ற ஊழியர்கள் கிடைப்பதிலும் சிக்கல். எதிர்பார்த்த வேகத்தில் கார் தயாரிப்பு நடக்கவில்லை. முதலீடு செய்தவர்கள் உடனடி லாபத்தை எதிர்பார்த்தனர். ஹென்றி ஃபோர்ட்க்கு கடும் நெருக்கடி. வேறு வழியின்றி, தொடங்கி இரண்டு ஆண்டு முடிவதற்குள் டெட்ராய்ட் மோட்டார் கம்பெனி மூடப்பட்டது.

கம்பெனி மூடப்பட்டபோதும், பந்தயக் கார்களைத் தயாரித்து, தேவைப்படுவோருக்கு விற்றுவந்தார் ஹென்றி ஃபோர்ட். தோல்வியில் இருந்து கற்ற பாடங்களுடன் மீண்டும் கார் தயாரிப்பு கம்பெனி தொடங்கலாம் என்ற ஆர்வம் அவருக்கு வந்தது. முதலீட்டாளர்கள் பலரையும் சந்தித்து நிதி உதவி கோரினார். ஏற்கெனவே அவரது கம்பெனி மூடப்பட்டதை அறிந்திருந்த அவர்கள், ‘‘முடியாது’’ என்ற பதிலையே  கொடுத்தனர். தொடர் தோல்விகளே மிஞ்சின.

முதல் முறை நிதி உதவி அளித்த வில்லியம் மர்பியை சந்தித்து, மீண்டும் நிதி உதவி தருமாறு வேண்டுகோள் விடுத்தார் ஹென்றி ஃபோர்ட். முதலில் மறுத்த மர்பி, தொடர் வேண்டுகோள்களுக்குப் பின்னர், ‘நிபந்தனைகளுடன் நிதி உதவி’ தருவதாக ஒப்புக் கொண்டார். 1901-ம் ஆண்டில், ‘ஹென்றி ஃபோர்ட் கம்பெனி’ என்ற பெயரில் புதிய கார் உற்பத்தி ஆலையைத் தொடங்கினார் ஹென்றி ஃபோர்ட். என்ன வகையான கார்களுக்கு முன்னுரிமை என்பதில் மர்பியுடன் சர்ச்சை ஆரம்பித்தது. இருக்கிற கார் டிசைனை வைத்து அவசர அவசரமாக கார்களை உற்பத்தி செய்ய வலியுறுத்தினார் மர்பி. மேம்படுத்திய வலிமையான கார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் ஹென்றி ஃபோர்ட். கடுப்பான மர்பி, புதிய ஆலோசகர்களை ஆலைக்குள் கொண்டுவந்தார். ஆலோசகர்களின் தலையீடுகளால் வெறுத்துப்போனார் ஹென்றி ஃபோர்ட். ஒரே வருடத்தில் ஹென்றி ஃபோர்ட் கம்பெனியும் மூடப்பட்டது.

எல்லா இடங்களிலும் அவமானமே மிஞ்சியது. ஹென்றி ஃபோர்ட் பெயரைக் கேட்டாலே நிதி நிறுவனங்கள் முகம் சுளித்தன. ஆனால், ஹென்றி ஃபோர்ட்க்கு இதுவரை இல்லாத தன்னம்பிக்கை உருவாகி இருந்தது. ஒரு கார் தயாரிப்பு கம்பெனி எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதை இரு பெரும் தோல்விகளில் இருந்து பாடமாகக் கற்று வைத்திருந்தார் அவர். தோல்வியைத் தோற்கடிக்கும் உறுதியுடன் மீண்டும் களம் இறங்கினார் ஹென்றி ஃபோர்ட். பல மாதங்கள் முயற்சிக்குப் பின்னர் அலெக்சாண்டர் மால்கம்சன் என்ற பெரும் தொழிலதிபரிடம் தனது திட்டத்தை எடுத்துரைத்து அவரது  நம்பிக்கையைப் பெற்றார்.

‘ஃபோர்ட் மோட்டார் கம்பெனி’ என்ற பெயரில் மூன்றாவது கம்பெனியைத்  தொடங்கிய ஹென்றி ஃபோர்ட், இந்த முறை தனது அனுபவப் பாடங்களையெல்லாம் ஒன்று திரட்டி வெற்றிக்காக வெறியுடன் உழைத்தார். வாடிக்கையாளர்கள் விரும்பும் அழகிய கார் வடிவமைப்புக்கு முதல் முக்கியத்துவம் அளித்தார். குறைவான எடையும், அதிகமான திறனும் கொண்ட கார்களைத் தயாரித்து அளிக்க, உலகின் மிகப் பெரிய உற்பத்தித் தொடர் ஆலையை உருவாக்கினார். நல்ல சம்பளம் கொடுத்ததால், திறன்மிக்க ஊழியர்கள் அவரைத் தேடி வந்தனர். நிதி முதலீடு செய்தவர்கள் உற்பத்தியில் தலையிடாமல் பார்த்துக்கொண்டார்.

p18.jpg

கார் விற்பனை சூடுபிடித்தது. எனினும், கார்களை வாங்கிச் சென்றவர்கள் நிறையப் புகார்கள் கூறினார்கள். எந்த ஊரிலிருந்து புகார் வந்தாலும் அந்த ஊருக்கு உடனடியாகப் பயிற்சிபெற்ற மெக்கானிக்குகளை அனுப்பி சரிசெய்துகொடுத்தார். வாடிக்கை யாளர்களின் விருப்பு வெறுப்புகளை மெக்கானிக்குகள் மூலமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார். உலைக்கூடத்தில் தானே களம் இறங்கி, குறைகள் வராத கார் வடிவமைப்பை உருவாக்கினார். 

விளைவு? 1904-ம் ஆண்டுக்குள் உலகின் நம்பர் ஒன் கார் தயாரிப்பு நிறுவனமானது ஃபோர்ட் மோட்டார் கம்பெனி. அவரது வடிவமைப்பில் உருவான T மாடல் என்ற பிரபலமான மாடல் கார்கள் உலகச் சந்தையில் முதலிடம்  பிடித்தன. 100 ஆண்டுகளுக்குப் பின்னரும் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாகத் தொடர்கிறது ஃபோர்ட் மோட்டார் கம்பெனி. ஹென்றி ஃபோர்ட் அடைந்த இமாலய வெற்றிகளைப் பற்றி இன்றும் உலகம் பேசுகிறது.

தனது படுதோல்விகளையும், வேதனைகளையும் வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றிய அந்த மேதையின் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “தோல்வி குறித்து அவமானப்பட எதுவுமில்லை. தோல்வி என்பது, கூடுதல் புத்திசாலித்தனத்துடன் மீண்டும் முயற்சிசெய்து முன்னேறுவதற்கான ஒரு வாய்ப்பு.’’

(இன்னும் வெல்வோம்)

vikatan

  • தொடங்கியவர்

வில்லேஜ் விஞ்ஞானிகள்!

 

p92a.jpg

ம்மில் பலரும் பேச்சுவாக்கில் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்ன்னு சொல்லிருப்போம். ஆனா விஞ்ஞானத்தோடயே வீம்பா விளையாடுற அளவுக்கு வில்லேஜ்ல சில விசயங்களைக் கண்டுபிடிச்சிருக்காங்க. இப்படிக்கூட பண்ண லாமானு அசரவைக்கும் சில கண்டுபிடிப்புகள்.

பீஸ் போன பல்பைக் கவுத்து, விஷேச வீட்ல பன்னீர் தூவுற மாதிரி குலுக்கினா அறுந்துபோன டங்க்ஸ்டன் இழை சில சமயம் ஒட்டிக்கும். பழையபடி பல்பைப் பயன்படுத்தலாம். ஆயிரம் தடவை பல்பு வாங்கி பல்பைக் கண்டுபிடிச்ச எடிசனே இதெல்லாம் யோசிச்சிருக்க மாட்டார்.

p92b.jpg

ஆல் அவுட் தீர்ந்துபோச்சுனா அடுத்த லிக்விட் வாங்க கடைக்கு ஓடுறது நம்ம பழக்கம். ஆனா காலியான லிக்விட் கன்டெய்னர்ல, கொஞ்சம் மண்ணெண்ணெய், ப்ளஸ் கற்பூரத்தை உடைச்சுப்போட்டு மாட்டிவிட்டுப் பயன்படுத்தலாம்னு கண்டுபிடிச்சது நம்மாளுங்கதான்.

p92g.jpg

துபாய்ல வேணும்னா ஒருதடவை யூஸ் பண்ணினதை அப்படியே தூக்கிப்போடலாம். ஆனா நம் ஊர்ல தேய்ஞ்சுபோன பழைய சைக்கிள் கிராங்க் ஆர்மைக் கூட தூக்கிப்போடாம பட்டறையில் கொடுத்து, ஒருபக்கம் ஷார்ப் பண்ணி தேங்காய் எடுக்கிற கம்பியா யூஸ் பண்ணுவாங்க.

p92c.jpg

டூத்பேஸ்ட்டைத் தடவி கொஞ்சநேரம் கழிச்சுக் கழுவி எடுத்தா எப்பேர்பட்ட விரிசல் விழுந்த சி.டி-யும் ஸ்ட்ரக் ஆகாம ஓடும்னு கண்டுபிடிச்சு உலகத்துக்குச் சொன்னதே தமிழன்தான்னு சொன்னா நம்பவா போறீங்க!

p92e.jpg

தீர்ந்துபோன ஒரு லிட்டர் வாட்டர்கேன் அடிப்பாகம் முழுக்க ஓட்டைபோட்டு மூடி இருக்கிற பக்கத்தைக் குழாய்ல மாட்டிட்டா, சிம்பிளான ஷவர் ரெடி. இதுக்குப்போய் ஆயிரக்கணக்குல செலவழிக்க முடியுமா பாஸ்!

p92d.jpg

பைக் ஸ்பீடோமீட்டர்ல 80-வது முள்ளுக்குப் பக்கத்துல குழந்தை போட்டோவை டேப் போட்டு ஒட்டி வெச்சுருப்பாங்க. அதுதான் வில்லேஜ் விஞ்ஞானிகளோட ஸ்பீட் கன்ட்ரோலர். எல்லாத்துலேயும் சென்டிமென்ட்டைக் கலந்துட்றாங்க.

p92f.jpg

கேபிள் கனெக்சன் ஊருக்குள்ள வந்த அடுத்த நாள், சேஃப்டி பின்னால குத்திவிட்டு ஃப்ரீயா கேபிள் பார்க்க முடியும்னு கண்டுபிடிச்சதும் நம்ம பயகதேன்.

டூவீலர்ல பின்சீட்டைத் தூக்கிட்டு பலகை மாட்டி லக்கேஜ் கொண்டுபோறதுனு இன்னும் பல கண்டுபிடிப்புகளைப் போற போக்குல கண்டுபிடிச்சு காப்பிரைட் பத்திக் கவலையே படாம யூஸ் பண்ணிட்டு இருக்காங்க.

vikatan

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

 

p221.jpg

திருட்டு

வீடு திறந்து கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டான் திருடன்!
 
- சி.சாமிநாதன்


p224.jpg

குரோதம்

``என் ஃப்ரெண்ட்கிட்ட ரப்பர் கேட்டேன், தரவே இல்லை. அவனை ஆள் வெச்சுக் கொல்ல என்ன செலவாகும்பா?!''

- கோவை.நா.கி.பிரசாத்


p2221.jpg

 

விளையாட்டு

ஸ்போர்ட்ஸ் கடையில், ஊழியரிடம் குழந்தை கேட்டது, ``அங்கிள், இங்கே வீடியோ கேம்ஸ் எல்லாம் கிடைக்காதா?''

- வெ.சென்னப்பன்


p223.jpg

கடை அடைப்பு

“வீட்டுக்கு பத்தே கால் மணிக்கு வர்ற மனுஷன், இப்ப எல்லாம் பத்தே முக்கால் மணிக்கு வர்றார். கேட்டா, `பக்கத்துக் கடையை மூடிட்டான்'கிறார்!”

- அஜித்


p225.jpg

அன்பு

“யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. கடன், அன்பை முறிக்கும்” என்ற பாட்டியிடம் பேத்தி கேட்டாள், “அன்பு, கடனை முறிக்காதா பாட்டி?”

- ஜோஷனா


p226.jpg

ஃபேஸ்புக் அப்டேட்

புத்தம்புது காரை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்று ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்‌டேட் செய்வதற்குள், கார் முன்பு நின்று சிலர்  செல்ஃபி எடுத்துக்கொண்டு, அவரவர் புரொஃபைல் பிக்சராக போஸ்ட் செய்தனர்!

- சாய்ராம்


p229.jpg

தகவல் தொழில்நுட்பம்

``ஏன் லேட்?''

``வழியில ஒரு ஆக்ஸிடன்ட், பைக்கும் லாரியும்...''

``என்னாச்சு?''

``வீடியோ எடுத்திருக்கேன்.

வாட்ஸ் அப் பண்றேன்!''

- அன்புக்கரசி ராஜ்குமார்


p227.jpg

கடமை

``பேஷன்ட் கண் முழிச்சுட்டாரு'' என, நர்ஸ் சொன்னவுடன் வாக்குமூலம் வாங்க ஓடி வந்தார்  இன்ஸ்பெக்டர்!

- வேம்பார் மு.க.இப்ராஹிம்


p228.jpg

பிச்சை

ஒவ்வொரு காசாக, பாகனுக்குப் பிச்சை போட்டது கோயில் யானை!

- சி.சாமிநாதன்


p220.jpg

படிப்படியா...

``இனிமேல் நீ குடிக்கவே கூடாது'' என்று சொன்ன டாக்டரிடம் நோயாளி விஸ்வநாதன் சொன்னார், ``படிப்படியாக் குறைச்சிடுறேன்!”

vikatan

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p68a.jpg

dot1.jpg அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள லோட்டஸ் ஆசிரமத்தில் ஓய்வில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார். சச்சிதானந்த சுவாமிகளால் தொடங்கப்பட்ட இந்த ஆசிரமத்துக்கு `பாபா' பட சமயத்தில் இருந்து சென்று வருகிறார் ரஜினி. செல்போன், இன்டர்நெட் என இந்த ஆசிரமத்துக்குள் தகவல்தொடர்பு சாதனங்கள் எதற்கும் அனுமதி கிடையாது. முழுக்க முழுக்க அமைதியும் யோகாவும் நிறைந்த இந்த 600 ஏக்கர் ஆசிரமத்துக்குள்தான் ஃபுல் சைலன்ஸில் இருக்கிறார் ரஜினி. அமைதிடா... ஆனந்தம்டா!

dot1.jpg தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகவைத்து எடுக்கப்பட்டுவரும் `MS Dhoni: The Untold Story' திரைப்படம் செப்டம்பர் 30-ம் தேதி ரிலீஸ். படத்தின் லேட்டஸ்ட் போஸ்ட்டர் ஒன்று, தோனியின் பிறந்த நாளான ஜூலை 7-ம் தேதி வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. தோனியாக சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிக்க, சாக்‌ஷியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். தோனியின் அப்பா அனுபம் கெர். படத்தில் யுவராஜ் சிங் கேரக்டரும் உண்டு என்பதுதான் ட்விஸ்ட். தாதாவுக்கும் ஒரு பயோபிக் ப்ளீஸ்!

dot1.jpg  ரிட்டையர் ஆகிவிட்டாலும் நான் இன்னமும் கேட்ச் பிடிப்பதில் கில்லிதான் என நிரூபித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன். 150 அடி உயரத்தில் இருந்து போடப்பட்ட பந்தை கேட்ச் பிடித்து கின்னஸ் சாதனைப் படைத்திருக்கிறார். முதலில் 100 அடி உயரத்தில் இருந்து போடப்பட்ட பந்தை கேட்ச் பிடித்தார் நாசர் உசேன். அடுத்து உயரம் 150 அடிக்கு இன்கிரீஸ் ஆக... அதையும் பிடித்துவிட 400 அடி உயரத்தில் இருந்து பந்து போடப்பட்டது. ஆனால் மிக உயரத்தில் இருந்து பறந்துவந்த பந்தை அவரால் கேட்ச் பண்ண முடியவில்லை. இருந்தாலும் 150 அடி உயரமே பெரிய சாதனைதான் பாஸ் என கின்னஸ் டீம் சான்றிதழ் கொடுத்துவிட்டது. கேட்சர் உசேன்!

dot1.jpg  ஸ்பெயினின் பாம்ப்லோனா நகரில் அதிரிபுதிரியாக நடந்திருக்கிறது காளை விரட்டும் விழா. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம்கொண்ட சாலையில் காளைகள் அவிழ்த்துவிடப்படும். சாலையில் தறிகெட்டு ஓடும் காளைகளை அடக்குபவர்தான் வின்னர். முதல் நாளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காளைகளை அடக்க முயற்சிசெய்ய, இரண்டு பேரை முட்டித்தள்ளி கடுமையாகத் தாக்கியிருக்கிறது ஒரு காளை மாடு. மொத்தம் ஒன்பது நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழாவைக் காண உலகம் முழுக்க இருந்து ஆயிரக்கணக்கில் பார்வையாளர்கள் திரண்டிருந்தனர். மெமரீஸ் ஆஃப் ஜல்லிக்கட்டு!

dot1.jpg  நீங்கள் உட்கார்ந்திருக்கும் காபி ஷாப்பில், அழகான குழந்தை ஒன்று யாருமற்று வந்து உங்கள் அருகில் அமர்ந்தால் என்ன செய்வீர்கள்? ஒரு சிறு முயற்சி எடுத்தேனும், குழந்தையைப் பெற்றோரிடம் கொண்டுசேர்ப்போம். சரி, இதுவே அழுக்குச் சட்டையுடன் இருக்கும் குழந்தை என்றால். காபி ஷாப்பினுள் விட மாட்டார்கள் என்கிறீர்களா? அதைத்தான் யுனிசெஃப் நிறுவனம் ஒரு வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்கள். அனனோ என்கிற ஆறு வயது சிறுமியை, இரு வேடங்களில் இப்படிச் செல்லவைத்து இருக்கிறார்கள். ஒருகட்டத்தில், வீடியோவில் நடிக்க முடியாமல் அனனோ விலகிவிடுகிறார். `ஏன் எனத் தெரியவில்லை. அழுக்காகச் செல்லும்போது என்னை எல்லோரும் வெளியே போகச் சொல்லித் திட்டினார்கள்' எனச் சோகமாகச் சொல்லியிருக்கிறார் அனனோ `காக்காமுட்டை' கான்செப்ட்!

dot1.jpg  கடந்த ஜூன் 4-ம் தேதி ஜூபிடர் கிரகத்துக்கு, ஜூனோ என்ற விண்கலனை அனுப்பி சாதனை செய்திருக்கிறது அமெரிக்காவின் நாசா. அடுத்த 20 மாதங்களில் 37 முறை ஜூபிடரை வலம்வர இருக்கிறது ஜூனோ. ஆகஸ்ட் 5-ம் தேதி 2011-ம் ஆண்டு ஆரம்பித்த பயணத்தை, தற்போதுதான் நிறைவுசெய்ய ஆரம்பித்திருக்கிறது ஜூனோ. அதென்ன ஜூனோ? கிரீக் இதிகாசத்தின்படி, ஜூபிடர் என்னும் கடவுளின் மனைவி பெயர் ஜூனோ. மீண்டும் ஜூனோ!

p68b.jpg

dot1.jpg   `உட்தா பஞ்சாப்' சென்சார் சர்ச்சைக்கு அடுத்து, அனுராக் காஷ்யப் தயாரிப்பில் வெளிவர உள்ள அடுத்த படத்துக்கும் சென்சார் போர்டு பிரச்னை எழுந்துள்ளது. நவாஸூதின் சித்திக்கி, ஸ்வேதா திவாரி நடிக்க அனுராக் காஷ்யப் தயாரித்துள்ள படம் ‘ஹரம்கோர்’. ‘இது ஆசிரியருக்கும் மாணவிக்கும் இடையிலான காதல் படம். அடிப்படை கதையே தவறாக இருக்கிறது என்பதோடு, பல வசனங்கள் தவறாக உள்ளன’ என, தணிக்கைச் சான்றிதழ் அளிக்க மறுத்துள்ளது சென்சார் கமிட்டி. இதனால் மீண்டும் ரிவைஸிங் கமிட்டிக்குச் செல்ல முடிவெடுத்திருக்கிறார் அனுராக் காஷ்யப். நூற்றுக்கு நூறு ரீமேக்கா?

p68c.jpg

dot1.jpg  நாகார்ஜூனாவின் வாரிசு நாகசைத்தன்யாவுக்கு விரைவில் திருமணம். மணப்பெண் சமந்தா.  ஆனால், இருவருக்கும் திருமணம் இப்போதைக்கு இல்லை; 2018-ம் ஆண்டில்தான். இந்த ஜோடியின் காதலுக்கு இருவீட்டாரும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதால் இந்த ஆண்டு இறுதியில் நிச்சயதார்த்தம் மட்டும் உண்டு. சமந்தா ரசிகர்கள் யாரும் உடனே சோக எமோட்டிகான் போட வேண்டாம். விரைவில் இரண்டு தமிழ்ப் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். கலர்ஃபுல் கப்புள்ஸ்!

vikatan

  • தொடங்கியவர்

ஆடிப்பிறப்பு!

ஆடிப்பிறப்பு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:-

 

 
ஆடிப்பிறப்பு என்ற பண்டிகை தமிழ் சமூகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். குறிப்பாக ஈழத் தமிழர்கள் இந்தப் பண்டிகையை தமது கலாசார, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கொண்டாடி வந்துள்ளார்கள். அன்றைய நாளில் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும்தான் சிறப்பு உணவுகள். இந்த உணவுகள்தான் ஆடிப்பிறப்பு பண்டிகை கொண்டாட்டத்தின் அடையாளங்கள். இந்த உணவுகள் ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு உணவுகள். இம்முறையும் ஆடிப்பிறப்பை ஒட்டி ஈழத்தில் பல வீடுகளில் கூழ்காய்ச்சி, கொழுக்கட்டை அவித்து கொண்டாடினாலும் இதையெல்லாம் கொண்டாட முடியாத நிலையிலும் பல வீடுகள்வெளித்துக் கிடக்கின்றன என்பதே சோகமானது. 
 
சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை தொடக்கம் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலம் எனப்படும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். பின்னர், சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலம். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயணத்தின் ஆரம்ப தினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது. வானியல், அறிவியல் பின்புலத்தை கொண்ட இந்தப் பண்டிகை இயற்கைசார்ந்த வழிபாடாகவும் பரிமாணம் பெறுகிறது. 
 
தமிழகத்தில், இந் நாளில்  விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தலும் உற்றார், உறவினர்களுக்கு இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணலும் வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது.  ஆடி மாதத்தில் ஆற்றுநீர் வளமுள்ள தென்னாட்டு மக்கள் காவிரி போன்ற ஆற்றங்கரைகளில் சித்திரான்னம் உண்டு படகோட்டம் போன்ற கேளிக்கைகளில் பங்குபற்றும் இந்த நாளை 'ஆடிப்பெருக்கு' என்றும் ஆடி 18 என்றும் அழைத்து பண்டிகையாகக் கொண்டாடுவர்கள். தற்காலத்திலும் தமிழகத் தலைநகர் சென்னையில் ஆடிப்பெருக்கு கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. 
 
ஆடி விதை தேடி விதை
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
ஆடி ஆவணி ஆன புரட்டாதி
காடி தோய்த்த கனபனங் காயத்தைத்
தேடித் தேடித் தினமும் புசிப்பவர்
ஓடி யோடி யுலகெலாம் பீச்சுவர்
 
இப்படி தமிழக பழைய பாடல்களில் எழுதப்பட்டுள்ளமை தமிழகத்தில் ஆடிப்பிறப்பிற்குள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.
 
ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை... என்ற பாடல்தான் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஆடிப்பு நாளில் நினைவுக்கு வரும். இந்தப் பாடசாலை ஈழப் புலவர்களில் ஒருவரான நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடியுள்ளார். ஆடிப்பிறப்புக்கு ஒரு காலத்தில் விடுமுறைகள் விடுக்கப்பட்டுள்ளன. அந்தளவு முக்கியமான நாளாக ஆடிப்பிறப்பு அமைந்துள்ளது. அதாவது தை முதல் நாளையும் ஆடி முதல் நாளையும் ஈழத்தவர்கள் கொண்டாடுகின்றனர். ஒரு ஆண்டின் தொடக்கத்தையும் அரை ஆண்டின் தொடக்கத்தையும் கொண்டாடுகின்றனர். இங்கு முதல் அரையாண்டு தேவர்களுக்குரியதென்றும் இறுதி அரையாண்டு பிதிர்களுக்கு உரியது என்றும் ஒரு ஐதீகம் இருக்கிறது. 
 
ஆடிப்பிறப்பன்று, வானவேடிக்கைகள், வோர்னில் விழகாக்கள், களியாட்ட நிகழ்வுகள், பட்டம் விடுதல் முதலிய நிகழ்வுகளில் ஈழத்தவர்கள் ஈடுபட்டதாக மூதாதையர்களின் நினைவுக்குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படுகிறது. சிறுவர்களும் முதியவர்களும் இணைந்து கூடிக் கொண்டாடி மகிழும் ஒரு நிகழ்வாக ஆடிப்பிறப்பு காணப்படுகிறது. நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்ற பாடல் ஆடிப்பிறப்பின் கொண்டாட்டம், களியாட்டம், பண்பாட்டு முக்கியத்துவம், கலாசார செழிப்பு என்று பல்வேறு முக்கிய அம்சங்களை வெளிப்படுத்துகிறது.
 
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
 
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
 
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தௌ;ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
 
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
 
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
 
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே
 
குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே
 
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
 
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
 
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
- நாவாலியூர் சோமசுந்தரப் புலவர்
 
இப்போது ஆடிப்பிறப்புக்கு விடுமுறை இல்லை. ஆடிப்பிறப்பு என்று மாத்திரம் வெறுமனே எமது நாட்காட்டிகள் நினைவுபடுத்துகின்றன. இப்போது விடுமுறையற்ற ஆடிப்பிறப்பு மாத்திரம் வருவதில்லை. விடுதலையற்ற ஆடிப்பிறப்புத்தான் வருகிறது. விடுதலை பெறாத இனத்தின் எல்லாப் பண்டிகைகளும் கொண்டாடும் தன்மையை இழக்கின்றன. அத்துடன் கூடியிருந்தவர்களை இழந்து, கூடியிருந்தவர்களுக்காக காத்திருக்கும் துயரச் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ள ஈழத்தில் இந்த ஆடிப்பிறப்பு வேதனையை தோற்றுவிக்கும் நாளாகவும் ஆகிவிட்டது. 
 
ஆடிப்பிறப்புக்கு விடுமுறை வழங்கப்பட்ட செயற்பாடு ஏன் வழக்கொழிந்தது? தற்போது ஆடிப்பிறப்பின் போது கொண்டாட்ட நிகழ்வுகளை பாடசாலைகளிலும், பொதுஇடங்களிலும் வடமாகாண பண்பாட்டு திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. எனினும் ஆடிப்பிறப்பு போன்ற பண்பாட்டு முக்கியத்துவம் மிக்க தினங்களை விடுமுறை தினங்களாக்க வேண்டும். வடகிழக்கில் இந்த நடைமுறையைக் கொண்டுவருவதன் மூலம் காயப்பட்ட ஈழ மக்கள், தமது பாரம்பரிய பண்பாட்டு தினங்களை கொண்டாடி உளத்தை மகிழச்சிக்கு உள்ளாக்க முடியும். 
 
பண்டிகை நாட்களில் மனதில் பெரும் மகிழச்சியோடு, உறவுகள் கூடியிருப்பதுதான் மகிழச்சியையும் கொண்டாட்டதையும் புது தொடக்கத்தையும் தருகிறது. பண்பாட்டு அழிப்புக்களுக்கும் கலாசார நெருக்கடிகளுக்குள்ளும் தள்ளப்பட்டுள்ள ஈழத் தமிழ் இனம் ஆடிப்பிறப்பு போன்ற பாரம்பரிய பண்டிகை தினங்களை தொடர்ந்து கொண்டாடி தமது கலாசார, பண்பாட்டு தடத்தை வலுப்படுத்த வேண்டும். அதேநேரம், விடுதலையற்ற சனங்களாக, பண்பாட்டு - கலாசார அழிவுப் பொறிகள் சூழப்பட்ட சனங்களாக வாழும் ஈழத் தமிழ்கள் ஆடிப்பிறப்புக்களை அழுத்தம் நிறைந்த மனதோடுதான் கடந்து செல்கிறார்கள் என்பதையும் இந்த நாளில் எடுத்துரைக்க வேண்டும். 
 
குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்
 
globaltamilnews
  • தொடங்கியவர்
ஆண்களை காட்டிலும் பெண்கள் ஏன் அதிகம் அழுகிறார்கள் தெரியுமா?

 

alugai.jpg


அவ்வப்போது கண்ணீர் விட்டு அழும் நபர்களா நீங்கள்? உங்கள் கைகளைக் கொடுங்கள். அழுகை நல்லது என்றே ஆராய்ச்சிகள் கூறுகிறது. நம்முடைய நரம்பு மண்டலத்திலுள்ள பாராசிம்பதட்டிக் சிஸ்டம் அழுகையின் போது அசைக்கப்படுகிறது.

இந்த சிஸ்டம் அசைக்கப்ட்டாலே நமக்கு அமைதி (Relaxation) கிடைக்கும். அதாவது நிம்மதியைத் தருகிற, மன அழுத்தத்தைக் குறைக்கிற நரம்புகளை உணர்ச்சி தட்டி எழுப்பும். தொடர்ந்து OPIODS என்கிற இரசாயன வஸ்துவை நமது கண்ணீர் தட்டி எழுப்புகிறது.

மேலும் நம்முடைய சந்தோஷத்தைத் தூண்டுகிற இயற்கை இரசாயனங்களையும் சுரக்கவைக்கிறது.

மற்றும் ஆக்ஸிடாசின் (Oxitocin) என்ற ஹார்மோனை கண்ணீரானது சுரக்க வைக்கிறது.

இது நம்பிக்கை ஊட்டும் அல்லது சந்தோஷத்தை தரும் நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது. இதெல்லாம் மருத்துவரீதியான நன்மைகள்.

ஆகையினால்தான் அழுகைக்குப் பிறகு ஒரு பெரிய விடுதலை உணர்வு, பிரச்சினையிலிருந்து வெளிவந்த உணர்வு கிடைக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக அழுகை நாம் நினைத்த காரியத்தை சாதிக்க வைக்குது பார்த்தீங்களா?

அது பெரிய விஷயமா இல்லையா? அவ்வப்போது சிந்தும் கண்ணீருக்கு இவ்வளவு நன்மைகள் இருக்குது. ஆனால் அடிக்கடி அழுபவர்களுக்கு உடல் ரீதியான சில பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் சக்தி வீணாகி பலவீனமடையவும் வாய்ப்புண்டு.

பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா?
இதற்கு காரணம் ஆண்களை விட பெண்களின் இளகிய மனம் தான். மனதளவில் ஆண்களை விட பெண்கள் மிகவும் மென்மையானவர்கள்.

சின்ன, சின்ன பிரிவுகள் மற்றும் உணர்ச்சி ரீதியான விஷயங்களுக்கு கூட பெண்கள் அழுதுவிடுகின்றனர்.

ஆண், பெண் கண்ணீர் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக கண்ணீர் சிந்துகின்றனர்.

மேலும், சராசரியாக ஒரு ஆண் அழும் நேரம் 5 நிமிடத்திற்கும் குறைவு. ஆனால், பெண்கள் அழும் நேரம் 15-24 நிமிடங்கள் ஆகும்.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

கேம்களின் காதலன் ஜான் ஹாங்க்! - போக்கிமான் கோ உருவான கதை

pokimonvc2.jpg

 

றிமுகமான ஒரே வாரத்தில் கோடிக்கணக்கான டவுன்லோட்கள். ட்விட்டரை மிஞ்சிய ஆக்டிவ் யூஸர்ஸ், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப்பை மிஞ்சிய ஆவரேஜ் யூஸர் டைம் என ராட்சஷனாய் வளர்ந்து நிற்கிறது Pokemon Go விளையாட்டு. ஆக்மென்டெட் ரியாலிட்டி கேமான இதை,  கட்டை விரல் கரைய கரைய விளையாடித் தீர்க்கிறார்கள் ஸ்மார்ட்போன் பெருமக்கள். இந்தியாவில் இன்னும் ரிலீஸாகவே இல்லை. ஆனாலும் ஆயிரக்கணக்கான மொபைல்களில் இதன் apk ஃபைல் இருப்பதே இந்த மோகத்திற்கான சாட்சி. க்ளாஷ் ஆஃப் க்ளான்ஸ், கேண்டி க்ரஷ் போன்ற விளையாட்டுகளை எல்லாம் லாங் ஜம்ப்பில் தாண்டி சிங்கநடை போடும் இந்த வெற்றி, ஏதோ ஒரே நாளில் கிடைத்ததல்ல. இதற்கு பின்னால் இருப்பது 20 ஆண்டுகால அசாத்திய உழைப்பும் ஒரு பெயரும்... ஜான் ஹாங்க்!

தீராக்காதல்!

 ஜான் ஹாங்கிற்கு சிறு வயது முதலே வீடியோ கேம்களின் மீது தீராக்காதல். படித்துக் கொண்டிருந்தபோதே 1996-ல் தன்னுடைய முதல் கேமான Meridian 59-ஐ உருவாக்கினார். MMO (massively multiplayer online game) வகை கேம் அது. கம்ப்யூட்டருடன் விளையாடுவதை விட உயிரும் உணர்வுமான இன்னொரு மனிதனுடன் விளையாடுவது அதிக த்ரில் தருவதை உணர்ந்தார் ஜான். அடுத்த நான்காண்டுகளில் அவரின் கவனம் வேறுபக்கம் திரும்பியிருந்தது. இந்த முறை அவர் காதல் கொண்டது பூமியின் மீது. பூமியின் மொத்த பரப்பையும் மேப்பிங்கில் கொண்டுவர விரும்பினார். தன்னுடைய கேமை 3DO என்ற நிறுவனத்திற்கு விற்றுவிட்டு, அடுத்த கனவை நோக்கி பயணிக்கத் தொடங்கினார்.

pokimonvc1.jpg



உலகை மாற்றியமைத்த முயற்சி!

2000-ம் ஆண்டு 'Keyhole' என்ற நிறுவனத்தை தொடங்கினார் ஜான். விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பூமியின் வரைபடங்களோடு பொருத்தி ஒரு 3D உலக வரைபடத்தை உருவாக்கும் 'பாகுபலி' முயற்சி இது. அதில் ஓரளவிற்கு வெற்றியும் அடைந்தார். இவரின் இந்த வித்தியாச முயற்சிகள், இணைய உலகின் ஜம்போ யானையான கூகுளின் கவனத்திற்கு சென்றன. தன் பிரம்மாண்ட முயற்சிக்கு பெரிய அளவிற்கு முதலீடு தேவை என்பதை ஏற்கெனவே உணர்ந்திருந்த ஜான்,  தனது நிறுவனத்தை கூகுளோடு இணைத்தார். ஜானின் திறமை + கூகுளின் நிதி மற்றும் தொழில்நுட்பம் = கூகுள் எர்த். இந்த நூற்றாண்டின் இணையற்ற தொழில்நுட்ப பாய்ச்சல் இப்படித்தான் உருவானது. அந்த தரவுகளையும், தொழில் நுட்பத்தையும் வைத்து 2004-2010 காலகட்டத்தில் கூகுள் மேப்ஸ், கூகுள் ஸ்ட்ரீட் வியூ ஆகிய செயலிகளை உருவாக்கினார் ஜான். 

மீண்டும் ஒரு காதல் கதை!

இந்த காலகட்டத்தில் கேம்கள் மீதான காதல் மீண்டும் ஜானுக்குள் தலைதூக்கியது. பழைய MMO ஸ்டைலோடு, தற்போதைய ஜி.பி.எஸ் வசதிகளை இணைத்து கேம்களை உருவாக்கினால் என்ன என அவருக்குத் தோன்றியது. உடனே ஒரு குழுவை ஒருங்கிணத்தார். 2010-ல் Niantic என்ற நிறுவனத்தை தொடங்கினார். கூகுளின் நிதியுதவியோடு தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இது.

அந்த நிறுவனம் முதலில் உருவாக்கிய செயலி Field Trip. பயணத்தின்போது நீங்கள் கடக்கும் முக்கிய இடங்களைப் பற்றிய விவரங்களை தரும் செயலி இது. அடுத்து அவர்கள் உருவாக்கியது Ingress என்னும் கேம். 2012-ல் உருவான Ingress இந்த நிறுவனத்தின் முதல் ஆக்மென்டெட்,  ரியாலிட்டி கேம். இன்றைய போக்கிமானின் முன்னோடி!

முட்டாள்கள் தின ஸ்பெஷல்!

ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினத்தை முன்னிட்டு கூகுள் ஏதாவது ரகளைகள் செய்யும். அந்த வகையில் 2014-ல்,  'போக்கிமான் சேலஞ்ச்' என்ற புதுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. உலகம் முழுவதிலும் பயணப்பட்டு அதிக போக்கிமான்களை கண்டுபிடிப்பவர்களுக்கு 'ஸ்பெஷல் தீபாவளி பரிசு காத்திருக்கிறது' என்ற ரீதியில் ஒரு விளம்பரம் வெளியிட, அது அதிரிபுதிரி ஹிட்.

இதை சட்டென பிடித்துக்கொண்ட ஜான், நிஜமாகவே அப்படி ஒரு கேமை வெளியிட முடிவு செய்தார். ஏறக்குறைய அதே நேரத்தில் கூகுள் 'ஆல்பபெட்' நிறுவனத்தை தொடங்கும் முயற்சியில் இருந்தது. கூகுள் நிதியுதவி செய்யும் எண்ணற்ற ஸ்டார்ட் அப்களில், Niantic நிறுவனத்திற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தரப்படுவதாக குரல்கள் வேறு எழுந்தன. இவை அனைத்தும் சேர்ந்து ஜானை, கூகுளில் இருந்து வெளியேற வைத்தது.

pokimonvc3.jpg


ஜான் இப்போது The Pokemon Company என்ற ஜப்பானிய நிறுவனத்தோடு ஜோடி சேர்ந்தார். போக்கிமான் படைப்புகளின் மொத்த உரிமையும் இந்த நிறுவனத்திடம்தான் இருந்தன. அவற்றின் உதவியோடு முந்தைய கேமான Ingress-ல் இருந்து திரட்டப்பட்ட தரவுகளையும் இணைத்து Pokemon Go-வை உருவாக்கியது Niantic.  

தொடங்கியது ஒரு வரலாறு!

பீட்டா வெர்ஷனைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வெளியானது Pokemon Go. முண்டியடித்து வந்த கூட்டத்தால் சர்வர் க்ராஷ் ஆக, பிற நாடுகளில் அறிமுகப்படுத்தும் திட்டத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தது Niantic. இரண்டு நாட்களுக்கு முன் ஐரோப்பாவில் அறிமுகமாகி சக்கை போடு போடுகிறது. அடுத்த குறி ஆசியாதான்.

 இந்த ஒரு வாரத்தில் The Pokémon Company-ன் தாய் நிறுவனமான Nintendo-வின் பங்குகள் 50 சதவீதம் வரை உயர்ந்திருக்கின்றன. இன்னும் உயரக்கூடும் என கணிக்கிறார்கள் வல்லுநர்கள். ஆப் ஸ்டோரில் அதிவேகத்தில் முதலிடம் பிடித்த கேம், குறைந்த நேரத்தில் அதிக ஸ்மார்ட்போன்களில் தரவிறக்கம் செய்யப்பட்ட கேம் என எக்கச்சக்க ரெக்கார்ட்கள். எல்லாப் புகழும் ஜானுக்கே.

 

'ஒரே நாளில் கிடைத்த வெற்றியல்ல இது. ஏராளமானவர்களின் இருபதாண்டு கால உழைப்பினால் கிடைத்த வெற்றி. ஒன்றை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த அளவிற்கான இமாலய வெற்றியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது எங்கள் மீதான பொறுப்பை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த விளையாட்டின் மேல் சொல்லப்படும் சில குறைகளை சீக்கிரமே களைந்து எங்களை மீண்டும் நிரூபிப்போம்!' - இவ்வளவு பரபரப்பிற்கும் ஜான் ஆற்றிய சிம்பிள் எதிர்வினை இது. 

vikatan

  • தொடங்கியவர்
 

article_1468576729-KDM_3823.jpg

'The Wedding Show' எனும் திருமண ஆடை அலங்கார கண்காட்சி, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதிவரை நடைபெறுகின்றது. முற்பகல் 10 மணிமுதல் இரவு 8 மணிவரை இக்கண்காட்சியை பார்வையிடலாம்.

article_1468576745-KDM_3826.jpg

article_1468576756-KDM_3827.jpg

article_1468576766-KDM_3829.jpg

article_1468576775-KDM_3848.jpg

article_1468576784-KDM_3846.jpg

article_1468576798-KDM_3861.jpg

article_1468576806-KDM_3900.jpg

article_1468576813-KDM_3877.jpg

article_1468576823-KDM_3858.jpg

article_1468576833-KDM_3915.jpg

article_1468576842-KDM_3910.jpg

article_1468577244-KDM_3923.jpg

article_1468577262-KDM_3919.jpg

article_1468577272-KDM_3910.jpg

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நௌக்கட்டா... அப்ப நெய்யப்பம் இல்லியா?

ண்ட்ராய்டு நிறுவனம், தன் அடுத்த அப்டேட்டிற்கு நௌக்கட் என பெயர் வைத்து இருக்கிறது. ஒவ்வொரு அப்டேட்டிற்கும், கூகுளின் ஆண்ட்ராய்டு நிறுவனம், தின்பண்டங்களின் பெயரைத்தான் வைக்கும். இந்த அப்டேட்டிற்கு, N என சொல்லிவிட்டு , பெயரை நீங்களே வைக்கலாம் என அறிவித்தது கூகுள்.
தென் இந்தியர்கள் பலரும் தேர்வு செய்த பெயர் நெய் அப்பம்.

இப்படி N எழுத்தில் ஆரம்பித்து போட்டியில் பங்குபெற்ற சில தின்பண்டங்கள் இங்கே...

Nanaimo-bar.jpg

 

natillas.jpg

 

NeeTart.jpg

 

NEYYAPPAM.jpg

 

Nonepareils.jpg

 

Nonnevot.jpg

 

Norman-tart.jpg

 

Nougat.jpg

- vikatan

  • தொடங்கியவர்

13700157_663782040438804_270402062298282

 

தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்!

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று: ஜூலை 17
 

article_1437109456-Flight.jpg1918: ரஷ்ய மன்னர் 2 ஆம் நிக்கலஸும் அவரின் குடும்பத்தினரும் போல்ஸ்விக் கட்சியின் உத்தரவின்பேரில் கொல்லப்பட்டனர்.

1973: ஆப்கானிஸ்தான் மன்னர் மொஹமட் ஸாஹிர் ஷா வெளிநாடுசென்றிருந்தபோது ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

1976: கிழக்கு திமோர், இந்தோனேஷியாவின் 27 ஆவது மாகாணமாக இணைக்கப்பட்டது.

1976: தென்னாபிரிக்காவுடன் நியூஸிலாந்து தொடர்புகளை பேணி வருவதை ஆட்சேபித்து கனடாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை 25 ஆபிரிக்க நாடுகள் பகிஷ்கரித்தன.

1976: நிக்கரகுவாவில் கிளர்ச்சியாளர்கள் தலைநகரை கைப்பற்றினர். ஜனாதிபதி அனஸ்டாசியோ டேபேய்ல் நாட்டைவிட்டு தப்பிச்சென்றார்.

1996: நியூயோர்க் நகரில் இடம்பெற்ற விமானவிபத்தில் 230 பேர்பலியாகினர்.

1998: பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட சுனாமியினால் 3183 பேர் பலியாகினர்.

1998: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான சாசனம் அங்கீகரிக்கப்பட்டது.

2006: இந்தோனேஷியா, ஜாவாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோகொல்லப்பட்டனர்.

2006 - இந்தியா சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தேவாடா மாவட்டத்தில் எர்ராபோரே நிவாரண முகாம் மீது தீவிரவாதிகள்  நடத்திய தாக்குதலில் 30பேர் கொல்லப்பட்டனர்.

2007: பிரேஸிலில் இடம்பெற்ற விமான விபத்தில் 199 பேர் பலி.

2014 - ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த மலேசியா எயர்லைன்ஸ் விமானம், 17 உக்ரைனின் தோனெத்ஸ்க்கில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த 298பேரும் கொல்லப்பட்டனர்.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒலிம்பிக் கில்லிகள்!

எம்.குமரேசன்

 

p56a.jpg

லகின் உச்சபட்ச விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிவிட்டது பிரேசில். ரியோ டி ஜெனீரோ நகரில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது 31-வது ஒலிம்பிக் போட்டி. ஒலிம்பிக் போட்டியை நடத்தும் முதல் தென் அமெரிக்க நகரம் ரியோதான். ஒலிம்பிக் போட்டிகளை காண்பதற்காக மட்டுமே சுமார் ஐந்து லட்சம் பேர் பிரேசிலுக்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்
படுகிறது.

p56j.jpg

ரியோ ஒலிம்பிக்கில், 186 நாடுகளைச் சேர்ந்த 10,500 தடகள வீரர்கள் பங்கேற்கின்றனர். முதல்முறையாக கொசோவாவும் தெற்கு சூடானும் ஒலிம்பிக் கோதாவுக்குள் குதிக்கின்றன. இதுதவிர, நாடு இல்லாத வீரர்-வீராங்கனைகளும் ஒலிம்பிக் கொடியின் கீழ் முதன்முறையாகப் பங்கேற்கின்றனர். மொத்தம் 28 விளையாட்டுப் பிரிவுகளில் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. இதில் ரக்பியும் கோல்ஃபும் ஒலிம்பிக்குக்கு அறிமுகங்கள்.

ரியோ ஒலிம்பிக்குக்கான டிக்கெட்டை, அமெரிக்காவைச் சேர்ந்த கிராஃபிக் டிசைன் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் 90 சதவிகித டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. தொடக்க விழாவுக்கான குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை 730 ரூபாய் தொடங்கி அதிகபட்சம் 87 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டிருக்கிறது.

p56g.jpg

ஒலிம்பிக் போட்டிகளில், அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும்தான் பதக்கங்கள் வெல்வதில் கடுமையான போட்டி இருக்கும். ஆனால், கடந்த நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவுக்கு சீனாதான் கடுமையான சவால்விடுகிறது. இந்த முறையும் அமெரிக்கா, சீனா இடையேதான் போட்டாபோட்டி இருக்கும். அமெரிக்கர்கள் தடகளத்தில் அசத்தினால், சீனர்கள் ஜிம்னாஸ்டிக்கில் பதக்கத்தை அள்ளிக்கொள்வார்கள். ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் ரஷ்ய தடகளச் சங்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், இந்த முறை ரஷ்யா அதிகாரபூர்வமாக ஒலிம்பிக்கில் இல்லை. ஆனால், புகாருக்கு உள்ளாகாத ரஷ்ய வீரர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

See Also: பதற்றத்தில் பிரேசில்!

முதல்முறையாக 100-க்கும் அதிகமான வீரர்களுடன் ஒலிம்பிக் போட்டிக்குச் செல்கிறது இந்தியா. ஹாக்கி, பளுதூக்குதல், குத்துச்சண்டை, பாட்மின்டன் போன்ற விளையாட்டுக்களில் இந்த முறை இந்தியாவுக்குப் பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இந்தியாவின் சூப்பர் ஸ்டார்களைப் பார்ப்பதற்கு முன்பாக, ஒலிம்பிக்கைக் கலக்க இருக்கும் இன்டர்நேஷனல் ஸ்டார்களைப் பற்றிய மினி டேட்டா!

p56d.jpg

மைக்கேல் ஃபெல்ப்ஸ்

ஒலிம்பிக்கின் சூப்பர் ஸ்டார், அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ். 2004-ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் தொடங்கி 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் வரை மூன்று ஒலிம்பிக்களிலும் 22 பதக்கங்கள் வென்று ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கம் வென்ற வீரர் என்ற சாதனையுடன் முதல் இடத்தில் இருக்கிறார் ஃபெல்ப்ஸ். 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளோடு ஓய்வுபெறுவதாக அறிவித்த ஃபெல்ப்ஸ், இரண்டே ஆண்டுகளில் முடிவை மாற்றிக்கொண்டு 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயாராக இருக்கிறார். இந்த முறையும் ஃபெல்ப்ஸ் ஆறு பிரிவுகளில் பங்கேற்க தகுதி பெற்றிருக்கிறார். இதனால் ஃபெல்ப்ஸின் தனிநபர் பதக்கக் கணக்கு யாராலும் எட்டிப்பிடிக்க முடியாத இடத்துக்குச் சென்றுவிடும் என எதிர்பார்க்கலாம்.

கேட்டி லெடக்கி

19 வயதான இந்தக் குட்டிப்பெண்தான் 400, 800, 1,500 மீட்டர் நீச்சல் போட்டிகளில் உலக சாதனைப் படைத்திருக்கும் நம்பர் ஒன் வீராங்கனை. லண்டன் ஒலிம்பிக்கில் 15 வயது பெண்ணாக 800 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற லெடக்கி, இந்த முறை கலந்துகொள்ளும் அத்தனை பிரிவுகளிலுமே பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உசேன் போல்ட்

ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் ரேஸ்தான் பரபர க்ளைமாக்ஸ். இந்த முறையும் 100 மீட்டர் ரேஸை வென்று உலகின் வேகமான மனிதன் என்னும் சாதனையைத் தொடரும் திட்டத்தில் இருக்கிறார் ஜமைக்காவின் உசேன் போல்ட். ஆனால், அவரது போதாதகாலம் தொடைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான தசைப் பிடிப்பால் மனிதர் அவதிப்படுகிறார். தற்போது சிகிச்சைக்காக ஜெர்மனியில் தங்கியுள்ளார். `ஜூலை 22-ம் தேதி நடைபெற உள்ள லண்டன் அனிவர்ஸரி விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தகுதிபெறுவேன்' என அறிவித்திருக்கிறார் போல்ட். ஒலிம்பிக்கில் உசேன் போல்ட் பங்கேற்கவில்லை என்றால், 100 மீட்டர் ஓட்டமே சுவாரஸ்யத்தை இழந்துவிடும். உசேன் போல்ட் இல்லையென்றால், அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லின் 100 மீட்டரில் தங்கம் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டில் இவர்தான் 100 மீட்டர் ஓட்டத்தை 9.80 விநாடிகளில் கடந்துள்ளார்.

p56e.jpg

ஸ்டீபன் கிப்ரோச்சி

மாரத்தானில் தொடக்கம் முதல் இறுதி வரை சளைக்காமல் ஓடி, பதக்கம் வெல்பவர்கள் கென்யா ரன்னர்ஸ். ஆனால், லண்டன் ஒலிம்பிக்கில் மராத்தான் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார் உகாண்டா வீரர் ஸ்டீபன் கிப்ரோச்சி. இந்த முறையும் கிப்ரோச்சிக்குத்தான் தங்கம் எனக் காத்திருக்கிறது உகாண்டா.

p56c.jpg

டிருனேஷ் டிபாபா

மகளிர் மாரத்தானைப் பொறுத்தவரை, எத்தியோப்பிய வீராங்கனை டிருனேஷ் டிபாபாதான் ராணி. பீஜிங் ஒலிம்பிக்கில் டிபாபாவின் தங்க வேட்டை ரியோ வரை தொடர இருக்கிறது. ஐந்து ஆயிரம் மீட்டர் ரேஸில் உலக சாதனைப் படைத்திருக்கும் டிபாபா, மூன்று ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிறார். லண்டன் ஒலிம்பிக்கில் 10 ஆயிரம் மீட்டர் ரேஸில் தங்கம் வென்ற டிபாபா, இந்த முறையும் 10 ஆயிரம் மீட்டர் பிரிவில் தங்கத்துக்காகக் களம் இறங்குகிறார். இந்த முறை கைக்குழந்தையுடன் டிபாபா ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார் என்பதுதான் ஹைலைட்.

p56b.jpg

சிமியோன் ஃபைல்ஸ்

சைனீஸ் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளுக்குச் சவால்விடுக்க, அமெரிக்கா உருவாக்கிய வீராங்கனைதான் சிமியோன் ஃபைல்ஸ். சீனாவில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப்பில் நான்கு பிரிவுகளில் தங்கம் வென்றவர் ஃபைல்ஸ். இந்த ஒலிம்பிக்கில் ஆல்ரவுண்ட் பிரிவு ஜிம்னாஸ்டிக்கில் தங்கம் வெல்வதே 19 வயது சிமியோனின் இலக்கு.

p56h.jpg

லிடியா கோ

ஒலிம்பிக்கில் முதன்முறையாக சேர்க்கப்பட்டிருக்கும் கோல்ஃபின், நம்பிக்கை நட்சத்திரம் லிடியா கோ. 19 வயதே ஆனா  லிடியா கோதான் தற்போதைய உலக சாம்பியன். கொரியாவைச் சேர்ந்தவர் என்றாலும், இவரது பெற்றோர் சிறுவயதிலேயே நியூஸிலாந்துக்குக் குடிபெயர்ந்து விட்டனர். இதனால் லிடியா ஒலிம்பிக்கில் நியூஸிலாந்து நாட்டுக்காகப் பங்கேற்கப்போகிறார்.

p56f.jpg

ஷெல்லி ஆன் ஃப்ரேசர்

ஷெல்லிதான் லேடி உசேன் போல்ட். இவரும் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர்தான். 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கம், அடுத்து லண்டன் ஒலிம்பிக்கிலும் தங்கம் எனத் தொடர்ந்து இரண்டு முறை 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். `இந்த ஒலிம்பிக்கிலும் 100 மீட்டரில் ஷெல்லிக்குத் தங்கம் என்கிறார்கள்' முன்னாள் தடகள வீரர்கள். ஷெல்லி தங்கம் வென்றால், `100 மீட்டர் ஓட்டத்தில் ஹாட்ரிக் தங்கம் வென்ற ஒரே வீராங்கனை' என வரலாற்றிலும் இடம்பிடிப்பார்!

vikatan

  • தொடங்கியவர்

13512182_1058427064243625_18089184226023

பெஷனாம் !!

கந்தலானாலும் கசக்கிக்கட்டு என்ற காலம் போய்,
கந்தலாடையை கடையில் வாங்கிக் கட்டும்
காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.!!

  • தொடங்கியவர்

13735582_1082924735089553_23733113948295

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பிறந்தநாள் இன்று

உணர்வுள்ள கிராமத்து மண்வாசனை திரைக்காவியங்களை திரைக் கண்முன் காட்டிய
அசாத்திய திரைக் கலைஞர். திரைப்பட துறையில் முத்திரை பதித்த இந்த முதன்மைக் கலைஞன் பத்ம ஸ்ரீ விருதையும் தனதாக்கிக் கொண்டார்

திரையுலகில் புதுமை நட்சத்திரங்களையும் அறிமுகம் செய்து வெள்ளித்திரையில்
எல்லோர் மனங்களையும் வென்றவர்.தான் வகுத்த தனிப்பாணியில் திரைக்காவிய கதையின் வேர்களை வெளிச்சம் போட்டுக்காட்டிய வெற்றி நாயகன்.

 

பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜா
இயக்குநர் பாரதிராஜா

தமிழ் சினிமாவின் ‘திருப்புமுனை’ இயக்குநர் என போற்றப்படும் பாரதிராஜா (Bharathiraja) பிறந்தநாள் இன்று (ஜூலை 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* தேனி அல்லி நகரில் (1941) பிறந்தவர். இயற்பெயர் சின்னச்சாமி. சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்தார். பெரியவர்களுடன் சேர்ந்து வேட்டைக்குச் செல்வதில் இவருக்கு அலாதி ஆசை. சிறு வயதிலேயே புத்தகம் படிக்கும் ஆர்வமும் பற்றிக்கொண்டது.

* விளையாட்டுப் பருவம் முடிந்ததும், நாடகம் எழுதுவது, இயக்குவது, நடிப்பதில் கவனம் திரும்பியது. ‘ஊர் சிரிக்கிறது’, ‘சும்மா ஒரு கதை’ ஆகிய நாடகங்களை எழுதி, அவ்வப்போது திருவிழா மேடைகளில் அரங்கேற்றினார். சுகாதார ஆய்வாளராக சிறிது காலம் பணிபுரிந்தார்.

* சினிமா மோகத்தில், அரசு வேலையை உதறிவிட்டு, சென்னைக்குப் புறப்பட்டார். உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, தாய் மட்டும் ஆசி கூறி அனுப்பிவைத்தார். மேடை நாடகம், வானொலி நிகழ்ச்சி, பெட்ரோல் பங்க் என பல்வேறு வேலைகளை செய்துகொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடினார்.

* சென்னையில் இளையராஜா, கங்கை அமரன், ஆர்.செல்வராஜ் ஆகியோர் ஆரம்ப காலத்தில் ஒரு சிறிய வீட்டில் இவருடன் சேர்ந்து தங்கியிருந்தவர்கள். இவரது நண்பர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மூலம் திரையுலக அறிமுகம் கிடைத்தது. இயக்குநர் பி.புல்லையாவிடம் உதவியாளராக சேர்ந்தார். பின்னர் பிரபல கன்னட இயக்குநர் புட்டண்ணாவிடம் சேர்ந்து சினிமா நுணுக்கங்களைக் கற்றார்.

* 1978-ல் இவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான ‘16 வயதினிலே’, தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல். அதுவரை ஸ்டுடியோவுக்குள் மட்டுமே சுழன்ற கேமராக்களை, கிராமங்களை நோக்கிப் படையெடுக்க வைத்தார். முதல் திரைப்படத்திலேயே மாபெரும் வெற்றியை சாதித்துக் காட்டியவர்.

* தொடர்ந்து இவர் இயக்கிய ‘சிகப்பு ரோஜாக்கள், ‘கிழக்கே போகும் ரயில்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘கருத்தம்மா’ உள்ளிட்ட திரைப்படங்கள், தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த படைப்புகள்.

* தமிழ், தெலுங்கு, இந்தியில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பாக்யராஜ், ராதிகா, மணிவண்ணன், நெப்போலியன், நிழல்கள் ரவி, விஜயசாந்தி, ரோகிணி, கவுண்டமணி, கார்த்திக், ரேவதி உள்ளிட்ட பலரை அறிமுகம் செய்தவர்.

* ‘தாஜ்மஹால்’, ‘கருத்தம்மா’, ‘அல்லி அர்ஜுனா’ ஆகிய படங்களைத் தயாரித்தார். சிறப்பாக ஓவியம் வரைவார். காட்சி அமைப்புகளை வரைந்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு ஓவியத் திறன் பெற்றவர்.

* இவரது ‘முதல் மரியாதை’ படம் 1986-ல் தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தன் தாய் கருத்தம்மாவின் பெயரில் வெளிவந்த படத்துக்கான தேசிய விருதை தன் தாயையே பெற்றுக்கொள்ள வைத்தார். பத்மஸ்ரீ, 6 முறை தேசிய விருதுகள், 3 முறை மாநில அரசு விருதுகள், ஆந்திரப் பிரதேசத்தின் ‘நந்தி’ விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

* தனது நீண்டகால கனவுத் திரைப்படம் என இவர் குறிப்பிடும் ‘குற்றப் பரம்பரை’ வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். ‘இயக்குநர் இமயம்’ என போற்றப்படும் பாரதிராஜா இன்று 75-வது வயதை நிறைவு செய்கிறார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

13708361_1178974515494670_70474279382636

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இது எமோஜிக்களின் உலகம் #WorldEmojiDay

 

e2.jpg

"கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில" என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டார் திருவள்ளுவர். அப்போது இருந்தே வாய்ச் சொற்களுக்கான தேவை என்பது குறைந்து கொண்டு தான் வருகிறது. இப்படி யாராவது கட்டுரை எழுத ஆரம்பித்தாலே, இப்போதெல்லாம் தூக்க மோடுக்கு டீன்ஸ் சென்று விடுகிறார்கள்.

காதலை சொல்ல, வேண்டாம் என மறுக்க, சாப்பிட்டாச்சா என கேட்க, 'மிஸ் யூ'வில் ஆரம்பித்து 'கிஸ் யூ' வரை, எல்லாமே தற்போது எமோஜி மயம் தான். எமோஷன்களுக்கும், வார்த்தைகளுக்கும் எமொஜி என இருந்த நாட்கள் போய், சினிமா புதிர்கள், 'லவ் யூ ஹனி' என எல்லாவற்றிலும் எமொஜி தனது அதிகாரத்தை நிலைப்படுத்தி இருக்கிறது.

e1.jpg

எமொஜிகள் வருவதற்கு முன்னர், கீபோர்டில் இருக்கும் குறிகளை வைத்தே ( :-) , ;-) ) குறீயிடு கண்டுபிடித்துக் கொண்டு இருந்தோம். அதற்குப் பிறகு, 2011-ல் தான் மொபைல்களில் பிரபலமானது எமொஜி. இன்று முகத்தின் ரியாக்‌ஷன் எமொஜிகள் மட்டும் 23 இருக்கிறதாம்.

இவை அல்லாது மிருகங்கள், உணவு வகைகள் என எல்லாமே எமொஜி தான். அங்கிகரிக்கப்பட்ட எமொஜிக்கள் மட்டும் 1,851 இருக்கின்றன என்கிறது, யுனிகோட் கன்சோர்ட்டியம். அவ்வளவு ஏன், லண்டனில் இருக்கும் ஒரு உணவகத்தில், மெனு கார்டு முழுக்க எமொஜிக்கள் மட்டும் தான் இருக்குமாம் https://www.instagram.com/p/BH1tAA2gCga/

e3.jpg

எல்லாவற்றையும், சினிமாவாக மாற்றும் ஹாலிவுட்டின் கைகளில் இருந்து எமொஜிக்களும் தப்பவில்லை. எமொஜிக்களை வைத்து திரைப்படம் ஒன்றை தயாரித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு நாடும், எந்த எமொஜியை அதிகம் ட்விட்டரில் பயன்படுத்தி இருக்கிறார்கள் என ஒரு சர்வே எடுத்து இருக்கிறார்கள். இந்தியர்கள் எந்த எமொஜியைத் தெரியுமா அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள்?. வேறென்ன வணக்கம் தான்.

இன்று ஏன், எமொஜி புராணம் என்கிறீர்களா? இன்று உலக எமொஜி தினமாம்!

vikatan

  • தொடங்கியவர்

 

p88a.jpg

இது போர்ச்சுகல் நேரம்

தீப்பொறி பறக்க நடந்த யூரோ 2016 கால்பந்து இறுதிப் போட்டியில் 1-0 என்ற கணக்கில் ஃப்ரான்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது போர்ச்சுகல். போர்ச்சுகல் அணியின் ஈடெர் 109-வது நிமிடத்தில் அடித்த கோல்தான் போர்ச்சுகலின் வெற்றிக்குக் காரணம். வரலாற்றில் முதன்முறையாக யூரோ கோப்பையை வென்றுள்ளது போர்ச்சுகல். உலகெங்கும் பலர் கண்டுகளித்த போட்டி, #Euro2016Final என்ற டேக்கில் உலக ட்ரெண்ட் அடித்தது. ஒரிஜினல் வெற்றி!

ஜூனோ ராக்ஸ்

p88c.jpg

ஜூப்பிடர் கிரகம் தோன்றிய விதம், அதன் உள்ளே இருக்கும் தனிமங்கள், அதன் வளிமண்டலம், காந்தமண்டலம் குறித்து ஆராய்வதற்காக 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ஏவப்பட்டது ஜூனோ. ஐந்து ஆண்டு பயணத்தின் முடிவில், ஜூப்பிடரைச் சென்று அடைந்து இருக்கிறது ஜூனோ. உலக அளவில் #juno என்ற வார்த்தை ட்ரெண்ட் செய்தது. அதென்ன ஜூனோ என்கிறீர்களா? கிரேக்க புராணப்படி, ஜூப்பிடரின் மனைவி பெயர் ஜூனோவாம். இனி, ஜூப்பிடரும் நிம்மதியா இருக்க முடியாதா?

கலக்கிய வில்லியம்ஸ் சகோதரிகள்

p88b.jpg

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள், கடந்த சில நாட்களாக நடந்து வந்தன. ஆண்கள் பிரிவில் பட்டத்தை ஆண்டி முரே வென்றார். பெண்கள் பிரிவில் வில்லியம்ஸ் சகோதரிகள் கலக்கினார்கள். செரினா, வீனஸ் ஜோடி இரட்டையர் பிரிவிலும், பெண்கள் பிரிவில் செரினாவும் கோப்பையைக் கைப்பற்றினர். இது செரினாவின் ஏழாவது விம்பிள்டன் வெற்றி. கறுப்பினத்தவரான செரினா, அமெரிக்காவில் தொடரும் நிறவெறிப் பிரச்னைகளுக்குத் தன் வெற்றிகளால் பதில் அளித்து இருக்கிறார். #wimbledon என்பது உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. கறுப்பழகி!

பிறவிக்கலைஞர்கள்

p88d.jpg

நம் ஊரில் அதிகப் பாடகர்கள், தங்கள் பாடும் திறமையை வெளிப்படுத்துவதே பாத்ரூமில்தான். சமயங்களில் ஒரிஜினல் பாடலைவிட, அது நன்றாக இருக்கவும்  வாய்ப்புகள் உண்டு. இவர்கள் ஒரு வகை என்றால், கையிலேயே டி.ஆர் போல் இசையமைப்பவர்கள் வேறு லெவல். #BornMusician என்ற டேகில், தங்கள் வீட்டில் இருந்தபடியே பலர் இசையமைத்து பாடல் வெளியிட்டுத் தங்கள் திறமையை ட்விட்டரில் வெளிப்படுத்தினார்கள். புதுராகம் படைப்பதாலே...

இது கர்நாடகா கிளை

p88e.jpg

ட்விட்டரில் பெரும்பாலும், அந்தந்த மாநில ரசிகர்கள், அவர்களின் ஆதர்ச நாயகன்களுக்கு ஏதாவது ட்ரெண்ட் செய்துகொண்டு இருப்பார்கள். விஜய், அஜித் ரசிகள் அதிலும் வேற லெவல். #VijayFansKarnataka என்ற பெயரில், கர்நாடகத்தில் ‘தெறி’ படம் ஹிட் போன்ற வாசகங்களை ஷேர் செய்துகொண்டார்கள். எப்படி பாஸ் இப்படிலாம்?

இது டேக்லைன் அட்ராசிட்டி

தற்போதெல்லாம் சினிமாத் தலைப்புகளைவிட, அதற்குக் கீழ் எழுதும் டேக்லைன்தான் குபீர் சிரிப்பு ரகமாக இருக்கிறது. தலைப்பு தமிழில்தான் வைக்க வேண்டும் என்பதால், டேக்லைனில், என்னவெல்லாமோ எழுதி வைக்கிறார்கள். ஜாலியாகப் பெயர்களுக்கு டேக்லைன் வைத்தால், என ஆரம்பிக்கப்பட்டதுதான் #SouthMovieName டேக். அதில் சில,  சல்மான் - ஒன்றும் அறியாதவன்; அர்னாப் - தேசத்திற்கு தெரிந்தாக  வேண்டும். இது வட இந்தியர்கள் அடித்த  ட்ரெண்ட் என்பதால், தமிழ் நடிகர்கள் தப்பித்தார்கள். நாம அடுத்த வாரம் நடத்துவோம்!

சிறப்பு

p88f.jpg

‘கபாலி’ பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் ட்ரேட்மார்க் ட்விட்டர் வார்த்தை மகிழ்ச்சி என்றால், ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் ட்ரேட்மார்க் ட்விட்டர் வார்த்தை ‘சிறப்பு’. அவரது அடுத்த படமான ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ பற்றிய செய்திகளை தினந்தோறும் ட்விட்டரில் அப்டேட் செய்து வருகிறார். ஒரு பாடல் முடிந்துவிட்டது, தினமும் ஷூட்டிங் நடக்கிறது என்பதையெல்லாம் பார்த்தால், சிம்புதான் ஹீரோவா, இல்லை வேறு யாரோவா என்கிற ரீதியில் செல்கிறது.  #AAAShootWentSirappu என்பதையே ட்ரெண்ட் ஆக்கினர் சிம்பு ரசிகர்ஸ். இன்னும் சிறப்பாகட்டும்!

vikatan

  • தொடங்கியவர்

தோசைக்கார நண்பா!

 

p54a.jpg

திண்டுக்கலுக்குப் பிரியாணி, மதுரைக்குப் பரோட்டா, சென்னைக்கு சிக்கன் ரைஸ்... இப்படி ஊருக்கு ஒரு சாப்பாடு ஃபேமஸா இருக்கும். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், திருக்குமார் கந்தசாமி என்பவரது தோசைக்கடைதான் ஃபேமஸோ, ஃபேமஸ்!

வண்டிச்சத்தம் கேட்டதுமே, குல்பி ஐஸுக்கு அடம்பிடிக்கும் குழந்தைகள் மாதிரி இந்த தோசைக்கடை திறந்ததுமே கியூவில் நின்று ஆர்டர் கொடுக்கிறார்கள் வாடிக்கையாளர். வாஷிங்டன் ஸ்கொயர் பார்க்கில் இருக்கும் திருக்குமாரின் தோசைக் கடைக்கு கல்லூரி மாணவர் களில் இருந்து அமெரிக்க அரசியல் பிரபலங்கள் வரை வாடிக்கையாளர் கள். யாருய்யா இவரு?

இலங்கைத் தமிழரான திருக்குமார் கந்தசாமிக்கு ஆறு சகோதரர்கள், ஒரு சகோதரி. சொந்த பந்தங்களுக்குச் சோறு ஆக்கிப்போட்டே சமையலைக் கற்றுக்கொண்டவர், கொழும்பு அருகே டிராவல் ஏஜென்ஸியும் நடத்தி யிருக்கிறார். காதலித்த பெண்ணை 18 வயதிலேயே கரம்பிடித்தவர், அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அண்ணன், தங்கைகள் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா என வெவ்வேறு ஊருக்குக் குடியேறிவிட்டார்கள். சிறுவயதிலேயே பாட்டி சுடும் தோசைமீது பாசம் அதிகமாம். அதுக்கு? ‘தோசையை உலகம் விரும்பும் உணவாக மாற்றாமல் ஓய மாட்டேன்’ என்று 2001-ல் களமிறங்கியவர்தான், இதோ, 15 வருடங்களாக அசராமல் தோசை சுட்டுக்கொண்டிருக்கிறார்.

p54b.jpg

‘‘நாலுபேருக்கு நல்ல சாப்பாடு போடுறது நல்ல வேலைதானே? அதனாலதான் இந்த ஐடியா. குறைவான விலை. நிறைவான தரம். ஒன்லி வெஜிடேரியன் என நான் சமைச்சுக் கொடுக்கிற தோசை எல்லோருக்கும் பிடிக்குது. நான் சுடுற வட்ட தோசை உலகை இணைக்கட்டுமே’’ எனச் சிரிக்கும் திருக்குமார் கந்தசாமிக்கு, ‘தோசா மேன்’ என்று செல்லப்பெயர் கொடுத்து அழைக்கிறது வாஷிங்டன். இவரது கடையைப் பற்றிய செய்தியைப் பத்திரிகை ஒன்றில் படித்துவிட்டு, லண்டனில் இருந்து ஃபிளைட் பிடித்துவந்து சாப்பிட்டுச் சென்றாராம் ஒருவர். 2007-ல் சாலையோர உணவங் களிலேயே ‘சிறந்த சமையல் கலைஞர்’ என்று பாராட்டு பெற்றிருக்கிறார் இந்த தோசை மனிதன். போதாதா... இன்னும் எகிறியிருக்கிறது, வாடிக்கையாளர் கூட்டம். கலிஃபோர்னியா, ஜப்பான் உள்ளிட்ட சில இடங்களில் இவருக்கு ரசிகர் மன்றமே இருக்காம் பாஸ்! எனவேதான், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்... என சமூக வலைதளங்களிலும் தெறிக்கவிடுகிறார் திருக்குமார்.

p54c.jpg

மனைவி பெயர் ரஜினி. மகள் பெயர் சஜினி. இருவரும் இவருக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காமல், அன்பாக ‘ஆல் தி பெஸ்ட்’ என்று ச்சியர்ஸ் சொன்னதால்தான், இவ்வளவு புகழும் எனத் தன்னடக்கமாகத் தலையைக் கவிழ்க்கும் திருக்குமாரின் கடையில் தோசை விலை ஆறு டாலர். ஸ்பெஷல் தோசையின் விலை ஏழு டாலர். நம்ம ஊரில் தண்ணியைத் தெளித்து வட்டமாக இழுத்துவிடும் ‘அவசர தோசை’ மாதிரி இல்லாமல், எண்ணெய் ஊற்றுவதில் இருந்து பொறுமையாகப் பொடி தூவித் திருப்பிப் போடுவது என திருக்குமார் தோசை சுடும் ஸ்டைலைப் பார்த்தாலே நாக்கில் ஊறுகிறது நீர்!

vikatan

  • தொடங்கியவர்

விசில் அடிக்கும் கீரி!

 
keeri_2803101f.jpg
 

கீரி இனத்தைச் சேர்ந்த சிறிய பாலூட்டி விலங்கு ‘பாலைவனக் கீரி. ஆங்கிலத்தில் இதை மீர்கட் ( Meerkat) அல்லது சூரிகேட் ( Suricate) என்று சொல்வார்கள். இதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போமா?

>> ஆப்ரிக்காவின் போட்ஸ்வானா நாட்டில் உள்ள கலகரி பாலைவனம், நமீபியாவின் நமிப் பாலைவனம், தென்மேற்கு அங்கோலா மற்றும் தென் ஆப்ரிக்காவில் இந்தப் பாலைவனக் கீரிகள் அதிகம் காணப்படுகின்றன.

>> கூட்டமாக வாழும் இயல்புடையவை பாலைவனக் கீரிகள். 20 முதல் 50 கீரிகள் ஒன்றாகச் சேர்ந்து வாழும்.

>> ஆண் கீரிகள் 730 கிராம் எடையும், பெண் கீரிகள் 720 கிராம் எடையும் இருக்கும்.

>> இதன் உடல் 25-35 செ.மீ. நீளம் வரையும், வால் 17-25 செ.மீ வரையிலும் இருக்கும். தனது இரண்டு கால்களையும் பயன்படுத்தி நிமிர்ந்து நிற்கும்போது சமநிலையில் இருக்க வால் பெரிதும் பயன்படுகிறது. வலுவாக இருக்கும் 4 விரல்கள், 2 செ.மீ. நீளத்தில் தோண்டி இரையைத் தேடிச் சாப்பிட உதவுகின்றன. வளைந்த நகங்கள் மரம் ஏறவும் உதவுகின்றன.

>> பல்லி, பாம்பு, சிலந்தி, தேள், முட்டை, சிறிய பாலூட்டிகள் மற்றும் சிறிய பறவைகளை இவை விரும்பிச் சாப்பிடும்.

>> ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் கால்களை உயர்த்தித் தூக்கி அசைக்கும். பிறகு விசில் சத்தம் எழுப்பி கூட்டத்தை எச்சரிக்கும். ஒவ்வொரு ஆபத்துக்கும் ஒவ்வொரு விதமாக சமிக்ஞை கொடுக்கும்.

>> குட்டிகள் பிறந்த கொஞ்ச நேரத்திலேயே தேவையான இரையைத் தானாகத் தேடிக் கொள்ளும்.

>> இள மஞ்சள், பழுப்பு மற்றும் பிரவுன் நிறங்களில் இவை காணப்படும். பாலைவனக் கீரிகளின் காதுகள் பூனையைப் போலவும், மூக்கு கூர்மையாகவும் இருக்கும்.

>> பாலைவனக் கீரிகள் 12 முதல் 14 ஆண்டுகள்வரை உயிர் வாழக்கூடியவை.

tamil.thehindu

  • தொடங்கியவர்

வித்தியாச வில்லேஜ்!

 

த்தனையோ வித்தியாசமான கிராமங்களை நமக்கு கோலிவுட் அறிமுகப் படுத்தியிருக்கிறது. அதையும் தாண்டி நிஜத்திலேயே வித்தியாசமான கிராமங்கள் சில.

‘மழை’வாழ் கிராமம்:

p60a.jpg

கின்னஸ் ரெக்கார்டின்படி உலகில் மிக அதிகமாக மழை பெய்யும் இடமாக மேகாலயாவில் உள்ள மாசின்ரம் (Mawsynram) கிராமம் இடம் பெற்றுள்ளது. இந்தக் கிராமத்திற்கு 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சோராவை (சிரபுஞ்சிதாங்க) இரண்டாம் இடத்திற்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது. வங்கதேசத்திலிருந்து வரும் குளிர்ந்த காற்றின் ஈரப்பதம் இங்குள்ள மலைத்தொடர்களில் மோதி மழை ஏற்படுத்துவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வருடம் முழுவதும் மழை பொழிவதால், மூங்கில் மற்றும் வாழையிலையைப் பயன்படுத்தி ஆளுயரக் குடையுடன் வலம் வருகின்றனர் இங்குள்ள காசி இனமக்கள். மேலும் மலைகளுக்கிடையே கடக்க ரப்பர் மரங்களின் வேர்களைப் பின்னி  இயற்கைப் பாலத்தையும் இவர்கள் ஆங்காங்கே உருவாக்கியுள்ளனர். ‘கயல்’ ஆனந்தியை இப்பாலங்களில் ஒன்றில் நடக்கவிட்ட புண்ணியம் பிரபு சாலமனுக்கே சேரும்.

டிஷ்யூம் கிராமம்

p60b.jpg

த்திய சீனாவில் உள்ள தியான்சு மலைப்பகுதியில் உள்ளது 123 (அட!) குடியிருப்புகள் கொண்ட கங்ஷி டாங்க் (Ganxi Dong) கிராமம். நம்மூர் டான்கள் கத்தி, கடப்பாரையைத் தூக்கிக்கொண்டு இங்கு சென்று தங்களின் வீரத்தைக் காண்பித்தால், அவர்கள் கதி அவ்வளவு தான். காரணம் இந்தக் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் குங்ஃபூ உள்ளிட்ட சீனாவின் பழங்காலத் தற்காப்புக் கலைகள் பலவற்றில் கை  மற்றும் கால் தேர்ந்தவர்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே அனைவரும் தற்காப்புக்கலை கற்பது இங்கு காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மலைப்பகுதியில் இந்தக் கிராமம் அமைந்துள்ளதால் வனவிலங்குகளிடமிருந்தும், எதிரிகளிடமிருந்தும் தற்காத்துக்கொள்வதற்காக தற்காப்புக்கலை கற்றுத் தரப்படுவதாகக் கூறப்படுகிறது.

சாலையே இல்லாத கிராமம்

p60c.jpg

‘நெதர்லாந்தின் வெனிஸ்’ என்றழைக்கப்படுகிறது ஜிதூர்ன் (Giethoorn) கிராமம். இந்தக் கிராமத்தில் சாலைகளே கிடையாது. கார்கள் அனைத்தும் கிராமத்திற்கு வெளியில்தான் நிற்க வேண்டும். கிராமம் முழுக்க நான்கு கிலோமீட்டர் தூரமுள்ள கால்வாய் ஓடுகிறது. குட்டி குட்டித் தீவுகள் அடங்கிய இந்தக் கிராமத்தில் 180-க்கும் மேற்பட்ட அழகான பாலங்கள் உள்ளன. இவற்றின் வழியாகவும், சிறிய படகுகள் வழியாகவும் மட்டுமே இந்தக் கிராமத்தில் பயணிக்க முடியும். வெனிஸ் நகருக்கு நிகரான அழகுடன் காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக இது கருதப்படுகிறது. குறிப்பாக சீனாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரையிலான சுற்றுலாப்பயணிகள் இந்தக் கிராமத்திற்கு விசிட் அடிக்கின்றனர்.

கதவுகளே இல்லாத கிராமம்

p60d.jpg

காராஷ்டிராவில் உள்ளது சனி சிங்கனாப்பூர் (Shani Shingnapur) கிராமம். இந்தக் கிராமத்தில் திருட்டு நடந்தால், சனிபகவான் கடுமையாகத் தண்டிப்பார் என்ற நம்பிக்கை காரணமாக, வீடுகளிலிருந்து வங்கிகள் வரை எதற்கும் கதவு கிடையாது. 2011-ம் ஆண்டில் இங்கு தனது கிளையைத் திறந்த யூகோ வங்கி, நாட்டில் முதன்முதலாக கதவுகளின்றி செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு முன்னேற்பாட்டிற்காக பணம் மற்றும் நகைகள் மட்டும் தினமும் மாலை லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. சமீபத்தில்தான் பெண்களின் நலன் கருதி வீட்டில் திரை பயன்படுத்தவே ஆரம்பித்துள்ளனர் இந்தக் கிராம மக்கள்.

இரண்டு சூரிய கிராமம்

p60e.jpg

த்தாலியில் இரண்டு மலைகளுக்கு இடையில் உள்ள பள்ளத்தாக்கில் உள்ளது விகனெல்லா (Viganella) கிராமம். மலையின் உயரம் காரணமாக நவம்பர் முதல் பிப்ரவரி வரை பனிக்காலத்தில் இந்தக் கிராமத்தில் பல நூற்றாண்டுகளாக சூரிய ஒளி விழுவதில்லை. 2006-ம் ஆண்டு இக்கிராமத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் ஒருவரும், டிசைனரும் இணைந்து இதற்கு ஒரு மாற்றைக் கண்டுபிடித்தனர். அருகே இருக்கும் மலை ஒன்றில் சுமார் 1,100 மீட்டர் உயரத்தில் 1.1 டன் எடைகொண்ட 40 சதுரமீட்டர் அளவிலான கண்ணாடியை ஒரு லட்சம் யூரோக்கள் செலவில் ஏற்படுத்துவதுதான் அந்த மாற்று. கணினி உதவியுடன் இந்தக் கண்ணாடி சூரியனின் திசைக்கேற்ப, தானே நகர்ந்துகொள்ளும்படி இதை அவர்கள் உருவாக்கினர். சூரியனின் ஒளி இதில் பட்டு பிரதிபலித்து கிராமத்திற்கு வெளிச்சம் தந்தது. 185 குடும்பங்களே இருந்த அந்தக் கிராமத்திற்கு தற்போது இதனால் இரண்டு சூரியன்கள். இத்தாலி சினிமாத் துறையினரின் ஷூட்டிங் ஸ்பாட்டாக இந்தக் கிராமம் தற்போது மாறியுள்ளது.

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.