Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
விமான வர்ணங்கள்...
 
 

article_1468218980-a.jpg

உலகின் மிகப் பெரிய இராணுவ விமானக் கண்காட்சி கடந்த 08ஆம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களாக அமெரிக்காவில் இடம்பெற்றது. இதனைக் கண்டு கழிப்பதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 150,000க்கும் அதிகமான மக்கள் வருகை தந்திருந்தனர்.

article_1468218987-b.jpg

article_1468218993-c.jpg

article_1468218999-d.jpg

article_1468219005-e.jpg

article_1468219011-f.jpg

article_1468219016-g.jpg

article_1468219023-h.jpg

article_1468219029-i.jpg

article_1468219036-j.jpg

article_1468219042-k.jpg

article_1468219049-l.jpg

article_1468219084-m.jpg

article_1468219090-n.jpg

article_1468219095-o.jpg

article_1468219102-p.jpg

article_1468219108-q.jpg

article_1468219115-r.jpg

article_1468219122-s.jpg

http://www.tamilmirror.lk

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
அன்னப் பறவைகள் கணக்கெடுப்பு
 

இங்­கி­லாந்தின் தேம்ஸ் நதியில் அன்­னப்­ப­ற­வை­களை கணக்­கெ­டுக்கும் வரு­டாந்த நட­வ­டிக்­கையில் உத்­தி­யோ­கத்­தர்கள் ஈடு­பட்­டி­ருப்­பதை படங்­களில் காணலாம்.


180702016-07-18T130513Z_1426069885_LR1EC

 

180702016-07-18T130513Z_1868042020_LR1EC

 

பிரிட்­டனில் திறந்த வெளி­களில் காணப்­படும் அடை­யா­ள­மி­டப்­ப­டாத அன்னப் பற­வைகள் பிரித்­தா­னிய அரசர், அர­சிக்­கு­ரி­யவை எனும் பாரம்­ப­ரியம் கடந்த 900 ஆண்­டு­க­ளாக பின்­பற்­றப்­ப­டு­கி­றது.

 

180702016-07-18T135053Z_41024455_S1AETQH

 

இப்­ ப­ற­வை­களின் எண்­ணிக்கை வரு­டாந்தம் கணக்­கி­டப்­ப­டு­கின்­றன. இந் நடவடிக்கை சுமார் ஒரு வார காலம்  நீடிக்கப்படவுள்ளது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
Vikatan EMagazines Foto.
 

ஜூலை 20: ஹாலிவுட் அதிரடி நாயகன் புரூஸ் லீ நினைவு தினம் இன்று - சிறப்பு பகிர்வு

தன் அப்பாவை போலவே திரையில் நடித்துக்கொண்டு இருந்தான் இளவயதிலேயே அந்த சிறுவன். சீக்கிரமே குங் பூ கற்றுத்தேறிய அவன் தெருக்களில் மற்ற பிள்ளைகளோடும் ,போலீஸ் உடனும் தொடர்ந்து வம்புக்களில் ஈடுபடுவதை அவர் தந்தை கவலையோடு பார்த்தார். அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். வயிற்றுப்பிழைப்புக்கு அங்கே குங் பூ சொல்லித்தந்து கொண்டிருந்தார் லீ. அப்பொழுது வோங் ஜாக்மான் எனும் அனுபவம் மிக்க குங்பூ வீரர் “ஆசியர் அல்லாதவர்களுக்கு ஏன் குங் பூ சொல்லித்தருகிறாய்” என்று கேட்க ,”கலை எல்லாருக்கும் பொதுவானது தானே ” என அந்த இளைஞன் திருப்பிக்கேட்டார். “அப்படியில்லை ! வலியவன் சொல்வதை தானே உலகம் கேட்கும் ?

நாமிருவரும் சண்டை போடுவோம். நான் வென்றால் நீ குங் பூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் ; நீ வென்றால் நான் குங் பூ என்கிற பெயரைக்கூட இனிமேல் உச்சரிக்க மாட்டேன் ! என்னோடு சண்டையிடு என்னோடு சண்டையிடு ” என்றார் அவர்.

இளைஞன் இணங்கி சண்டையிட்டார். அனல் பறந்த சண்டையில் வேகம் மிகுந்த இவர் வென்றுகாட்டினார். அவரை வென்றதும் முன்னமே சொன்னபடி வோங் ஜாக்மான் குங் பூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொண்டார். ஆனால், அது எண்ணற்ற கேள்விகளை அந்தப் பையனின் மனதில் விளைத்தது. ஹாங்காங்கில் மிகப்பெரும் குத்துசண்டை வீரனாக இருந்து நொடியில் பலரை நாக்கவுட் செய்த தான் அதிக நேரம் எடுத்து ஜாக்மான் உடன் மோதியது அவரின் பாரம்பரிய குங்பூவின் மீதான ஈர்ப்பை மங்கச்செய்தது.

தானே இன்னும் பல மாற்றங்களை உருவாக்கினார். அவர் படித்த தத்துவம் அவருக்கு அதீத அமைதியை தந்தது, எவ்வளவு பெரிய சண்டையையும் எளிமையாக வென்றார். “நீர் போல அமைதியாக ஓடிக்கொண்டு ,சலனமற்று இருக்கிறேன் ,மூங்கிலை போல வளைந்து கொள்கிறேன்.ஆழ்ந்த அமைதி என்னை எப்பொழுதும் வழி நடத்துகிறது” என்ற அவர் டிவி ஷோக்களில் கலக்கிய பின் சீட்டின் முனைக்கே கொண்டுசெல்லும் சண்டைகாட்சிகள் மூலம் ஹாலிவுட்டில் கலக்கினார்.

புரூஸ் லீ ஒரு கவிஞர் என்பதை தாண்டி ஒரு தீர்க்கமான தத்துவ ஞானம் மிக்கவராக இருந்தார் என்பதே சரி. “எதிரி என்று ஒருவன் இல்லவே இல்லையே ; எல்லாமே பிம்பங்கள், பிரதிபிம்பங்கள். அவற்றை நொறுக்கிவிட்டால் போதும். எதிரிகள் என்று யாருமில்லை என உணர்வீர்கள் !” என்றார் அவர்.

ஜென் அவரைத் தொடர்ந்து செலுத்தியது. பேரமைதி அவரிடம் குடிகொண்டு இருந்தது,ஒரு முறை சீன இளைஞன் ஒருவன் ஹோட்டலில் வம்புக்கு இழுத்துக்கொண்டே இருந்தான், லீ அமைதியாகவே இருந்தார் “ஏன் இப்படி ?” என்று கேட்ட பொழுது ,”நான் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். அதை மற்றவர்கள் திருட விடமாட்டேன் !” என்று மட்டும் சொன்னார். வீரம் என்பது சண்டை போடுவதில் மட்டுமில்லை ; யாருடன் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என உணர்ந்து நடப்பதிலும் இருக்கிறது.

நிறைய ஜென் கதைகள் சொல்லும் லீக்கு மிகவும் பிடித்த கதை ஒன்று உண்டு. கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி வந்த இளைஞனிடம் நிரம்பிய தேநீர் கோப்பையை மீண்டும் ஊற்றி நிறைக்க முயல்கிற செயலை செய்து “வெறுமையாக இருக்கிற பொழுது தான், அறிதலைக்கடந்து உணர்தலை நோக்கி நகர்கிற பொழுது தான் நீ ஜென் ஆகிறாய் !” என்கிற ஆழ்ந்த தத்துவம் இருப்பதை உணர்த்திய அந்தக்கதை மிகவும் பிடிக்கும் . மனம் விரும்புவதை உடல் செய்ய இந்த அறிதல் முக்கியம் என்பார் புரூஸ் லீ. அதுவே அவரின் அசரவைக்கும் சண்டைக்காட்சிகளுக்கு அடிப்படை.

நம்பினால் நம்புங்கள் புருஸ் லீக்கு உடலில் குறைபாடு ஒன்றிருந்தது. அவரின் வலது கால் இடது காலை விட நான்கு சென்டிமீட்டர் உயரம் குறைவு. ஆனால்,உங்கள் தலையில் ஒரு நாணயத்தை வைத்தால் அதை உங்கள் தலைமுடியைக்கூட அசைக்காமல் அவரால் எடுக்க முடியும். கேட்ட பொழுது ,”நாணயம் மட்டும் தான் என்னுடைய கண்களில் தெரியும். அதில் மூழ்கிப்போவது தானே குங்பூ !” என்றார்

அவரின் வேகம் எந்தளவுக்கு இருந்தது என்றால் ஒரு காட்சிக்கு நொடிக்கு இருபத்தி நான்கு பிரேம்கள் அவரின் வேகத்தை பிடிக்க போதாமல் கூடுதலாக பத்து பிரேம்கள் தேவைப்பட்டன ! இருந்தாலும் அதை ஆழ்ந்த அமைதியோடு செய்கிற சமநிலை புரூஸ் லீக்கு இருந்தது.

அவர் பட்டப்படிப்பு படித்தது தத்துவத்தில் என்பது அவரின் ஆழ்ந்த தேடலை உணர்த்தும் . முப்பத்தி மூன்று வயதில் இறந்து போனாலும் இன்னமும் ஆக்ஷனில் தொட முடியாத உயரத்தில் இருக்கும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள அத்துணை பாடங்கள்.

அவரின் ஒரு கவிதை தான் அவரின் வாழ்வானது :

மேற்கே காற்றை
எல்லாம் தங்கமயமாக்கி
கதிரவன் கரடுமுரடான மலையில் கரைகிறான்கரைந்துருகும் பனித்துளிக்கு
வெகுதூரம் தள்ளி
மலையுச்சியின் மீது
தங்க டிராகன்
தனித்து தன் கனவுகள்
வெளிச்ச மேற்கில் தேய, மறைய
சலனமில்லாமல் நிற்கிறது !

vikatan

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: 'கபாலி' டிக்கெட்டும் பேங்க் லோனும்!

 

 
 
kabali1_2938163f.jpg
 

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் 'கபாலி' படத்தின் முதல் நாள் டிக்கெட்டுக்கு கடுமையாக போட்டி நிலவி வருகிறது. பல்வேறு திரையரங்குகளில் அதிகமான விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரசிகர்கள் குறைகூறியுள்ளனர்.

அதிக விலை டிக்கெட் விற்பனை குறித்து ட்விட்டர் தளத்தில் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ட்விட்டரில் கொட்டப்பட்ட பல பதிவுகளில் இருந்து ஒரு சிறு தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Sushima Shekar

₹2500க்கு கபாலி டிக்கெட் வாங்கினேன் என்றான் மகன். அந்தப் பணத்தில் நம் கால் ஏக்கர் நிலத்துக்கு விதை நெல் வாங்குவேனே என்றார் அந்த ஏழை விவசாயி

சேட்டு

கபாலி டிக்கெட் 600ருவாய் என்று சொன்ன அந்த இளைஞனிடம் பரவால அதே ரஜினி தான நான் படையப்பா போட்டு பார்த்துக்கிறேன் என்றார் அந்த ஏழை விவசாயி

புதியவன்

பியூஸ் பிரச்சனை முடியாம நாங்க கபாலி பாக்க மாட்டோம்னு சொன்னா போதும், தாணு நேரடியா தலையிட்டு அந்த பிரச்சனைய முடிச்சிடுவார்.

DOOM லார்டு

தியேட்டர்ல கபாலி படம் பாக்கும் போது கத்தாதிங்க !!! லேப்டாப்ல பாக்கும் போது கஷ்டமா இருக்கும் ://

ஜாக் ஸ்பேரோ

மாதகடைசியில் #கபாலி படத்தை ரிலீஸ்செய்து என்னைபோன்ற நடுத்தர ரசிகர்களை தவிக்கவிட்ட தானுக்கு பாடம் புகட்டியாக வேண்டும்

புகழ்

ரஜினிக்கும்..ரஞ்சித்துக்கும் இது ஒரு "நாயகனாக" அமைந்திட விருப்பம்..#கபாலி

எமகாதகன்

கபாலி படத்திற்காக தொழிலாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் நிறுவனங்கள் தொழிலாளர்களின் PF&PENSION போராட்டத்திற்கு விடுப்பளிக்காதது ஏன்

குழந்தை கபாலி

கபாலி மாஸ் ஹிட் ஆனா ரஜினிதான் காரணமாக இருக்க முடியும். அதே படம் சொதப்பிட்டா, ரஞ்சித் மட்டுமே முழு காரணமாக இருக்க முடியும். #எஸ்கேப்பிசம்

கந்தா

கபாலி டிக்கெட் வேனுமா 2500ரூபாய் என்ற உதவியாளரிடம் அடேங்கப்பா அந்த காசுல ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிடுவேனே என்றார் காமராசர்

வேலை & அரசியல் தகவல்

சமூக வலைதளங்களில் "கபாலி" குறித்து கருத்து சொல்லக்கூடாது-னு உயர்நீதிமன்றம் உத்தரவு போடும்-னு காத்துக்கிட்டிருக்கோம்!

திமிரு பிடிச்சவன்

கபாலி படத்துக்கும் மட்டும் திடீா் திடீா்னு நீதிபதி தீா்ப்பு தெரிவிக்கிம்போது உள்ளுா் லோக்கல் பஞ்சாயத்து நாட்டாமை நம்மபக்கம் என குறிக்கிறது

மக்களின்பதிவர்எழிலன்

ரசிகர்கள் விரும்பியே அதிக கட்டணம் கொடுப்பதால் #கபாலி படத்தை தடை செய்ய முடியாது - நீதிபதி | ரசிகர்கள் விரும்பியே திருட்டு விசிடி வாங்குவதால்..

கலப்படமான நல்லவன்

கபாலி First Day பாக்கபோறவன் ரெண்டே விதம் தான்✌ ஒருத்தன் 700 ரூபாய்ல பாக்றவன்.. இன்னொருத்தன் 700MPல பாக்குறவன்

NARAYANAN THIRUPATHY

'கபாலி' பட ரிலீஸை 22ம் தேதி தேசிய விடுமுறை? முகநூல் ஆர்வலர்கள் கோரிக்கை?

அருணாசலம்

தியோட்டர்களில் சிறப்பு காட்சி கபாலி டிக்கெட் 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது! # அது சரிப்பா... டிக்கெட் ஒண்ணு நாலாயிரமா? எட்டாயிரமா?

Sathiya Kumar S

ஓசியா கபாலி டிக்கெட் கிடைக்கவில்லை எனில் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறுவழியில்லை!!! ஓபனிங் ஷோ பாக்காமல் ஒரு தமிழனா எதுக்கு சார் உயிரோடு இருக்கனும்!!

Anisha Anu

கபாலி டிக்கெட் 300 ரூபாயா? என்ன அநியாயம்..ஒரு ஆயிரம் இரண்டாயிரம் வச்சாத்தானே ஒரு கெத்து

Kevin Bala

இனி மேல் கபாலி டிக்கெட் வாங்கிட்டனு ஓரு குருப்பு டிக்கெட்டோட போட்டோ போடுவானுங்க... அத நெனச்சா தான் வெருப்பா இருக்கு...

Bala Trichy

கபாலி டிக்கெட் 1500 ரூபாய்.

ஒரு மூட்டை அரிசி எடுத்துப் போட்டா 1 மாசத்த தள்ளிரலாம்...கறியா எடுத்தாலும் 3 நாள் சாப்பிடலாம்... நல்லதா ஒரு பேன்ட், சர்ட் எடுத்துக்கலாம்... பெட்ரோல் போட்டா 1 மாசத்த தள்ளிரலாம்... ரீசார்ஜ் பண்ணா 3 மாசத்த தள்ளிரலாம்..போங்கப்பா..

Sri Ranga Raja

கபாலி என்ற சினிமா படம் வெளியாவதற்கு முன்பாகவே ஏதோ தமிழ்நாட்டின் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது போல் தமிழ்நாடு இளைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். படம் வெளியாவதற்கு முன்பாகவே டிக்கெட் விலை 500,1000 என்று தகவல் வருகிறது.

திருட்டு விசிடியில் படம் பார்க்காதீர்கள் என்று சொல்லும் நடிகர்களே, உங்களுக்கு தைரியமும், சமூக பொறுப்பும் இருந்தால் தியேட்டர் உரிமையாளரிடம் டிக்கெட் விலையை அரசு நிர்ணயித்தப்படி கொடுக்கச் சொல்ல முடியுமா?

சில மாதங்களுக்கு முன் கடை கடையாக சென்று திருட்டு விசிடியை ஒழிப்பேன் என்று சொன்ன விஷால் அவர்களே, உங்களால் தியேட்டரின் முறையான டிக்கெட் கட்டணத்தை நடைமுறைக்குக் கொண்டு வர முடியுமா? நீங்கள் சரியாக இருங்கள்; மக்களாகிய நாங்களே திருட்டு விசிடியை ஒழிப்போம்..

Ram Kumar

நா வந்துட்டன்னு சொல்லு; திரும்பி வந்துட்டன்னு சொல்லு..! கபாலி டிக்கெட் 600 ரூபான்னு சொன்னதும் டிக்கெட்டுக்கு காசு இல்லாம அப்டியே திரும்பி வந்துட்டன்னு சொல்லு.... கபாலி டா... காசு இல்லடாஆ..

Imdhadu Rahman

போற போக்க பாத்தா "கபாலி" பட டிக்கெட் வாங்க SBI, ICICI, HDFC பேங்கெல்லாம் லோன் கொடுப்பாங்க போல!!!போதும்பா உங்க அட்ராசிட்டி.

தென்காசி கு.அருணாசலம்

கபாலி டிக்கெட் 2000 ரூபாய்க்கு விக்குதாம்! பார்லிமென்ட்லே இது பற்றி யாராவது கேள்வி கேட்பாங்களா?

ஜி எச் ஃபாரிஸ்

கலைப்புலி தாணு அவர்களுக்கு...

அரசாங்கம் நிர்ணயித்த 120 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்ய சொல்லுங்கள். பைக் பார்க்கிங் 50, கார் பார்க்கிங் 100 போன்ற கொள்ளையைக் கட்டுப்படுத்துங்கள். 10 ரூபாய் பெறாத பாப்கார்னை 100 ரூபாய்க்கு விற்கிறார்கள்; அதைக் கேளுங்கள். இதையெல்லாம் தட்டிக்கேளுங்கள். இந்த தொல்லைகள் இல்லையென்றால் மக்கள் விரும்பி திரையரங்கம் வந்து சினிமா பார்ப்பார்கள்

Chandru

கபாலி டிக்கெட் முன்பதிவு தொடங்கியது... இணையதள சேவை முடங்கியது.

tamil.thehindu.

  • தொடங்கியவர்

சொல்வனம்

ஓவியம்: ராஜ்குமார் ஸ்தபதி

 

p60a.jpg

விளையாட வந்த மழை!

பள்ளி முடித்து வீடு திரும்பிய
இரு சிறுமிகள் பாட்டில் தண்ணீரை
ஒருவர் மீது ஒருவர் தெளித்துக்கொண்டே வர
கலகலப்பில் தெருவே நனைந்துகொண்டிருந்தது 
அவ்வழியே வந்த ஒரு நாய்க்குட்டியும் 
தப்பவில்லை இவர்களின் தெளிப்பு விளையாட்டில்
அலுவல் சுமைகளை சற்றொப்ப மறந்து
பரவசத்தோடு அவ்வழி கடந்தபோது 
திடீரென மழை பெய்யத் தொடங்கியது
அது மேலும் வலுத்து காற்றைக் கூட்டிக்கொண்டு
சிறுமிகளின் பாதையில் ஓடிக்கொண்டிருந்தது!

- சுஜய் ரகு


மிச்ச உலகத்தில்...

குளிர் போத்திய ஓர் இரவில்
கட்டிலகல போர்வையைப் போத்தச் சொன்னவன்
குளிருக்கு இதமான அன்போடு
`அம்மா உள்ளே வா' என்கிறான்
பிறகு `அப்பா உள்ளே வா' என்கிறான்
பாதுகாப்பாய் பொம்மைகளை இழுத்தணைத்துக்கொண்டவன்
‘குட்டி நாய் பாவம், உள்ளே கூப்டுக்கலாம்’ என்கிறான்
சமாதானத்திற்குப் பிறகு உறங்கியவன்
`குட்டி நாய் வா... காக்கா வா...
ஆடு வா... பூச்செடி வா' எனக்
கனவில் பினாத்திக்கொண்டே உறங்கத் தொடங்குகிறான்
அவன் அணைத்துப் போத்தியதுபோக
மிச்சமிருக்கும் உலகில்தான்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்!

- நா.திங்களன்


வீடு

மேல்தட்டு உறவினர்
வீட்டுக்கு வரும்போது
இயல்பு மாறுகிறது வீடு
அதிகப்படுத்திய மின்விசிறி
அளவான ஒலியுடன்
சம்பிரதாயமாய் தொலைக்காட்சி
போலியான முகம்
பொய்யான சிரிப்புடன்
வரவேற்கிறது வீடு
விசாரிப்புகளைத் தொடர்ந்து
அளவோடு தொடர்கிறது
ஒப்பனையுடன் உரையாடல்
எல்லாம் சரியாய்
நடக்கவேண்டுமென
திட்டமிடுகிறது மனம்
நாகரிகப் பேச்சுக்கள்
நயமான பதில்களோடு
கழிகின்றன நிமிடங்கள்
விடைபெறும்போது
நம்முடன் சேர்ந்துகொண்டு
பெருமூச்சு விடுகிறது வீடு!

- மணிகண்டபிரபு


அடையாளம்

`கால்கள்
தாங்கித் தாங்கி நடப்பார்.
கண் பார்வை குறைவு.
மனநிலை
சற்று சரியில்லாதவர்' என
காணாமல்போன தாத்தாவைக்
கண்டுபிடிக்க ஏதுவாய்
தொலைக்காட்சியில்
அடையாளம் சொன்னார்கள்.
இந்த அடையாளங்களுக்காகத்தான்
தொலைக்கப்பட்டார்
அந்தத் தாத்தா!

- தீபக் தாமஸ்

vikatan

  • தொடங்கியவர்
Vikatan EMagazines Foto.
 

ஜூலை 20: உலக சதுரங்க நாள் இன்று.

1924 ஆம் ஆண்டு ஜூலை 20 இல் உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு பாரிஸ் நகரில் நிறுவப்பட்டது. ஜூலை 20 ஆம் நாளை அனைத்துலக சதுரங்க நாளாக 1966 ஆம் ஆண்டில் இக்கூட்டமைப்பு அறிவித்தது.

  • தொடங்கியவர்

வைரல் படங்கள் #Bestofyesterday

ஃபாக்ஸ் ஸ்டார் அலுவலகத்தில் கபாலி ரிலீஸைக் கொண்டாடும் ஊழியர்கள்...

R1.jpg

 

அமெரிக்கா ஃபீனிக்சில் திங்கள் இரவு பெய்த மழையை படம் பிடித்த காட்சி...

R2.jpg

 

இந்த வருடத்தின் மிக அதிக உஷ்ணமான நாள் நேற்று என்று அறிவிக்கப்பட்டது.

R3.jpg

 

கபாலி லீவ் லெட்டர் என்று ட்ரெண்ட் ஆனது.

R4.jpg

 

ரியோ ஒலிம்பிக்கிற்கு செல்லும் இந்திய வீராங்கனைகளை உற்சாகப்படுத்த,  திங்களன்று இரவு சல்மான்கானும், ஏ.ஆர்.ரஹ்மானும் அவர்களுடன்  உரையாடி வாழ்த்து தெரிவித்தனர்.  சல்மான் நடிப்பில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் சுல்தான் படம்,  நேற்று 500 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

R5.jpg

 

டியர் ஜிந்தகி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது.

R6.jpg

 

டெய்லி மார்னிங் டென்னிஸ் பிராக்டிஸ்!

R7.jpg

 

'திக்க' தெலுங்கு படத்தின் டைட்டில் சாங்கை தனுஷ் பாடியிருக்கிறார்.

R8.jpg

 

பழ கருப்பையா தி.மு.கவில் இணைந்தார்.

R9.jpg

 

போக்கிமான் பிக்காச்சு கிடைக்கும் இடத்தில், ஒரு சிறுமி ஸ்னாக்ஸ் கடையே போட்டிருக்கிறார்...

R10.jpg

 

நமது ரசிகர்கள் ''குட்டித்தல'' பிறந்தநாளை ட்ரெண்ட் ஆக்கியது போல, மகேஷ்பாபு மகள் சித்தாராவின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.


R11.jpg

 

மிஸ்டர் வேர்ல்டாக ஹைதராபாத்தைச் சேர்ந்த ரோஹித் கந்தேல்வால் (Rohit Khandelwal) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

R12.jpg

 

அமெரிக்கா  ரிபப்ளிக் (குடியரசு கட்சி) தேர்தல் மாநாட்டில் பேசிய மிலெனியா ட்ரம்ப்,
2008 ம் ஆண்டு மிச்செல் ஒபாமா பேசியதை அப்படியே காப்பி அடித்ததாக சர்ச்சை ஆகியுள்ளது.

R13.jpg

 

தனது ரசிகர் அனுப்பிய கேக்கிற்கு நன்றி தெரிவித்து, ஷாருக் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

R14.jpg

 

ஹர்பஜன் சிங், மாற்றுத்திறனாளிகளின் கிரிக்கெட் டீமிற்கு உடைகளை ஸ்பான்சர் செய்திருந்தார். இதனை யுவராஜ் சிங் அவர்களுக்கு வழங்கினார்.
R15.jpg

vikatan

  • தொடங்கியவர்

நாட்டுக்கொரு பாட்டு - 15: பேர் சொல்லும் பேருந்துப் பாட்டு!

 
____________2939144f.jpg
 

ஆஸ்திரேலியா ஒரு தீவு தேசம். ஒரு கண்டமும்கூட. பல அரிய வகை விலங்குகள் இருக்கும் அழகான தேசம். ‘கங்காரு' தேசம் என்றும் சொல்லிவிடலாம்.

ஆங்கிலேயர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏறத்தாழ 250 உள்ளூர் மொழிகள் இங்கு பேசப்பட்டுவந்ததாகக் கூறுகிறார்கள். சிறிய ஆறு பகுதிகள் இணைக்கப்பட்டு 1901 ஜனவரி 1-ல் ஆஸ்திரேலியா உருவானது. ‘ஆஸ்திரேலியா' என்றால் லத்தீன் மொழியில் ‘தெற்குப் பகுதி' என்று பொருள்.

1788-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி பிரிட்டிஷ் கப்பல்கள் சிட்னி துறைமுகத்துக்கு வந்தன. ஆளுநர் ஆர்தர் ஃபிலிப் பிரிட்டனின் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நாளே ஆஸ்திரேலிய தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.

___________2_2939146a.jpg

ஆஸ்திரேலியாவின் தேசிய கீதத்தை எழுதி இசையமைத்தவர், ஸ்காட்லாந்தில் பிறந்த பள்ளி ஆசிரியர் பீட்டட் டோட்ஸ் மெக்கார்மிக். இவர் 21 வயதில் சிட்னிக்கு வந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம், உள்ளூர் சர்ச்சுகளில் சமூகப் பணி செய்துவந்தார்.

அப்படி வேலை செய்யும்போது வாய் விட்டு சத்தமாகப் பாடுவது அவரது வழக்கம். ஒரு முறை அவர் பாடியதை சர்ச் பாதிரியார் கேட்டு, அவரை சர்ச் இசைக் குழுவில் சேர்த்துவிட்டார். ஒரு முறை கண்காட்சி அரங்கம் ஒன்றுக்கு சென்றார் மெக்கார்மிக். அங்கே பல நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கென தேசிய கீதம் இல்லாததால் வருத்தமடைந்தார்.

___________1_2939145a.jpg

வீட்டுக்குப் பேருந்தில் திரும்பியபோது, பாடல் ஒன்றை எழுத ஆரம்பித்தார். வீட்டுக்கு வந்ததும் அந்தப் பாடலுக்கு இசையும் அமைத்தார். 1878 சிட்னியில் நடந்த ‘ஹைலேண்ட் சொசைட்டி' விழாவில் இந்தப் பாடல் பிரபலம் ஆனது. கொஞ்சம் பாடல் திருத்தப்பட்டு 1901-ல் 10 ஆயிரம் பேர் பாடினார்கள். இந்தப் பாடலை தேசிய கீதமாக ஏற்பது குறித்து 1977-ல் பொதுமக்களிடம் பொதுக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதன்படி இந்தப் பாடல் ஆஸ்திரேலியாவின் தேசிய கீதமாக 1984-ல் அறிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய கீதம் இப்படி ஒலிக்கும்:

ஆஸ்திரேலியன்ஸ் ஆல் லெட் அஸ் ரிஜாய்ஸ்

ஃபார் வி ஆர் யங் அண்ட் ஃப்ரீ

வி ஹேவ் கோல்டன் ஸாயில், அண்ட் வெல்த் ஃபார் டாயில்

அவர் ஹோம் இஸ் கிர்ட் பை ஸீ

அவர் லேண்ட் அபௌண்ட்ஸ் இன் நேச்சர்ஸ் கிஃப்ட்ஸ்

ஆஃப் பியூட்டி ரிச் அண்ட் ரேர்

இன் ஹிஸ்டரிஸ் பேஜ், லெட் எவரி ஸ்டேஜ்

அட்வான்ஸ் ஆஸ்ட்ரேலியா ஃபேர்

இன், ஜாய்ஃபுல் ஸ்ட்ரெய்ன்ஸ் தென் லெட் அஸ் சிங்

அட்வான்ஸ் ஆஸ்ட்ரேலியா ஃபேர்.

பினீத் அவர் ரேடியண்ட் சதர்ன் க்ராஸ்

வி வில் டாய்ல் வித் ஹார்ட்ஸ் அண்ட் ஹேண்ட்ஸ்

டு மேக் திஸ் காமன்வெல்த் ஆஃப் அவர்ஸ்

ரினௌண்ட் ஆஃப் ஆல் தி லேன்ட்ஸ்

ஃபார் தோஸ் ஹூ ஹேவ் கம் அக்ராஸ் தி ஸீஸ்

வி ஹேவ் பௌண்ட்லெஸ் ப்ளெய்ன்ஸ் டு ஷேர்

வித் கரேஜ் லெட் அஸ் ஆல் கம்பைன்

டு அட்வான்ஸ் ஆஸ்ட்ரேலியா ஃபேர்

இன், ஜாய்ஃபுல் ஸ்ட்ரெய்ன்ஸ் தென் லெட் அஸ் சிங்

அட்வான்ஸ் ஆஸ்ட்ரேலியா ஃபேர்.

பாடலின் உத்தேச பொருள்:

ஆஸ்திரேலியர்கள் நாம் அனைவரும் மகிழ்ச்சி கொள்வோம்.

ஏனெனில், நாம் இளைமையானவர்கள்; சுதந்திரமானவர்கள்.

நம்மிடம் பொன் போன்ற மண் உண்டு; உழைப்பதற்கு செல்வம் உண்டு.

நமது நிலம், கடலால் இணைக்கப்பட்டு இருக்கிறது.

நமது நிலம், இயற்கையின் வெகுமதிகளால் நிரம்பி இருக்கிறது.

வளமையான அபூர்வமான அழகாலும்.

சரித்திரத்தின் பக்கங்களில் ஒவ்வொரு நிலையிலும் நியாயமான ஆஸ்திரேலியா முன்னேறட்டும்.

சந்தோஷமான பிரயாசைகளில் நாம் பாடுவோமாக

நியாயமான ஆஸ்திரேலியா முன்னேறட்டும்.

ஒளிவீசும் நமது தெற்கு சந்திப்புக்குக் கீழே

நமது இதயங்களாலும் கரங்களாலும் கடுமையாக உழைப்போம் -

இந்த நம்முடைய ‘காமன்வெல்த்'ஐ

எல்லா நிலங்களிலும் கீர்த்தி வாய்ந்ததாய் செய்ய

கடல்களைக் கடந்து வந்தவர்களுக்குப் பகிர்ந்துகொள்ள, எல்லையில்லா சமவெளிகளைக் கொண்டுள்ளோம்.

துணிவுடன் நாம் எல்லாரும் ஒன்று சேர்வோமாக

நியாயமான ஆஸ்திரேலியாவை முன்னேற்றுவதற்கு;

மகிழ்ச்சியான பிரயாசைகளில் நாம் பாடுவோமாக.

நியாயமான ஆஸ்திரேலியா முன்னேறட்டும்.

___________3_2939147a.jpg - மெக்கார்மிக்

(தேசிய கீதம் ஒலிக்கும்)

tamil.thehindu

  • தொடங்கியவர்

விநோத உலகம்: சிவப்புக் கடற்கரை!

  • ____________2_2939137g.jpg
     
  • _____________2939136g.jpg
     

உலகின் மிக அழகான, கண்கவர் கடற்கரை எது தெரியுமா? சீனாவின் பன்ஜின் கடற்கரைதான்! கண்களுக்கு எட்டிய தூரம் வரை சிவப்புக் கம்பளத்தால் போர்த்தப்பட்டிருப்பதுபோல இந்தக் கடற்கரை காட்சியளிக்கும்! இதற்குக் காரணம், கடற்கரை முழுவதும் வளர்ந்திருக்கும் சிவப்புக் கடற்பாசிகள்.

பன்ஜின் நகரில் ‘லியாவோஹி’ ஆறு கடலில் கலக்கும் இடத்தில் கழிமுகம் உள்ளது. தண்ணீருடன் கூடிய சதுப்பு நிலப் பகுதியாக இது இருக்கிறது. ஜனவரி முதல் மார்ச் வரை மற்ற கடற்கரைகள் போலவே காட்சியளிக்கும்.

ஏப்ரல் இறுதியில் வசந்த காலத்தில் பச்சை வண்ணத்தில் கடற்பாசிகள் முளைக்கின்றன. 3 மாதங்களுக்குப் பிறகு, கோடைக்காலத்தில் பாசிகள் அடர் சிவப்பு வண்ணமாக மாறிவிடுகின்றன. ஆகஸ்ட் முதல் அக்டோபர்வரை உலகின் அழகிய கடற்கரையாகக் காட்சியளிக்கிறது!

____________4_2939140a.jpg

நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடற்பாசிகள் இளஞ்சிவப்பு நிறத்தை அடைகின்றன. குளிர் காலத்தில் கடற்பாசிகள் காய்ந்துவிடுகின்றன. 3 மாதங்களில் மீண்டும் கடற்பாசிகள் புதிதாக உருவாகிவிடுகின்றன.

இயற்கையிலேயே கடற்பாசி சிவப்பாக மாறிவிடுவதாகச் சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். வேறு சில ஆய்வாளர்கள் இந்தக் கடற்கரை மண்ணிலுள்ள உப்பும் காரத்தன்மையுமே சிவப்பு நிறத்தைத் தருகிறது என்கிறார்கள்.

பன்ஜின் சிவப்புக் கடற்கரை 51 சதுர மைல் தூரத்துக்குப் பரவியிருக்கிறது. இந்தத் தனித்துவம் மிக்க அழகிய கடற்கரையை அரசாங்கம் மிகக் கவனமாகப் பாதுகாக்கிறது. அதனால் மிகக் குறைவான இடத்தை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு அனுமதிக்கிறார்கள். சீனாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒவ்வோர் ஆண்டும் வருகிறார்கள்.

சூழலுக்குத் தீங்கிழைக்காமல் பார்ப்பதற்காக 6,500 அடி நீளத்துக்கு மரப்பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பாலத்தின் மீது நடந்து சென்று சிவப்புக் கடற்கரையை ரசிக்கலாம். புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம். சில இடங்களில் சிவப்புப் பாசிகளுக்கு இடையே தண்ணீர் ஓடுகிறது. அங்கே படகுச் சவாரியும் நடைபெறுகிறது.

____________1_2939138a.jpg

சிவப்புக் கடற்கரை நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு அடைக்கலமும் அளிக்கிறது. இங்கே 400 வகையான விலங்குகள் வசிக்கின்றன. 250 வகை பறவைகள் வாழ்கின்றன. கிழக்கு ஆசியாவிலிருந்தும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகள், சிவப்புக் கடற்கரையில் தங்கி, குடும்பம் நடத்துகின்றன. முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, குடும்பத்துடன் கிளம்புகின்றன. இங்கே பறவைகளுக்குத் தேவையான மீன், புழு, பூச்சிகள் போன்ற உணவுகளுக்குப் பஞ்சமில்லை.

இந்தச் சிறப்புமிக்க சிவப்புக் கடற்கரை மனிதர்களின் நடவடிக்கைகளால் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தது. இந்தப் பகுதியில் சீனாவின் மிகப் பெரிய எண்ணெய்க் கிடங்கு, கடல் உணவுத் தொழிற்சாலைகள் போன்றவை இருந்தன. அவற்றின் கழிவுகள் கலந்ததால் சூழலியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 1988-ம் ஆண்டு சிவப்புக் கடற்கரையின் மகத்துவம் உணர்ந்து, சுற்றுச்சூழலைக் காக்கும் விதமாகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இங்கே வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்கள்.

அதிகாலை சூரிய உதயத்தின்போதும் மாலை சூரியன் மறையும்போதும் சிவப்புக் கடற்கரை அற்புதமான அனுபவங்களைத் தரும். உலகின் அபூர்வக் கடற்கரையான பன்ஜின் சிவப்புக் கடற்கரை மனிதர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத இடங்களில் ஒன்று!

____________3_2939139a.jpg

tamil.thehindu

  • தொடங்கியவர்
ஒரு கொலை...
 

article_1468156941-1.jpg

கடும் பசி கொண்ட சிங்கம், ஒரு வகை இனத்தைச் சேர்ந்த மானை வேட்டையாடிக் கொல்லும் காட்சியை, புகைப்படக் கலைஞர் ஒருவர், தென் ஆபிரிக்காவில் எடுத்துள்ளார்.

article_1468156957-2.jpgarticle_1468156964-3.jpg

article_1468156971-4.jpg

article_1468156980-5.jpg

article_1468156989-6.jpg

article_1468156995-7.jpg

article_1468157002-8.jpg

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
1969 : சந்திரனின் தரையில் முதல் தடவையாக மனிதர்கள் நடந்தனர்
 

வரலாற்றில் இன்று...

ஜுலை - 21

 

கிமு 356 : ஏழு உலக அதி­ச­யங்­களுள் ஒன்­றான கிரேக்க ஆர்ட்­டெமிஸ் கோயில் தீவைத்து அழிக்­கப்­பட்­டது.

 

365 : மத்­தியதரைக் ­க­டலில் ஏற்­பட்ட பாரிய பூகம்பம் கார­ண­மாக எகிப்தின் அலெக்­ஸாண்ட்­ரியா நகரம் அழிந்­தது. கிறீஸ், சைப்­பிரஸ், சிசிலி ஆகி­ய­வற்றின் கரை­யோ­ரங்­க­ளிலும் பாரிய சேதங்கள் ஏற்­பட்­டன.  45,000 இற்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­தனர். 

 

1545 :  ஆங்­கிலக் கால்­வாயில் வைட் தீவில் முதல் தட­வை­யாக பிரெஞ்சுப் படைகள் தரை­யி­றங்­கின.

 

774varalru.jpg1718 : ஒட்­டோமான் பேர­ர­சுக்கும் வெனிஸ் குடி­ய­ர­சுக்கும் இடையில் உடன்­பாடு ஏற்­பட்­டது.

 

1774 : ரஷ்­யாவும் ஒட்­டோமான் பேர­ரசும் தமது ஏழு ஆண்டுப் போரை முடி­வுக்குக் கொண்­டு­வந்­தன.

 

1831 : பெல்­ஜி­யத்தின் முத­லா­வது மன்னர் லெப்பால்ட் ஐ முடி சூடிய நாள்.

 

1907 : அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநில கரை­யோ­ரத்தில் இரு கப்­பல்கள் மோதிக்­கொண்­டதால் 88 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1944 : இரண்டாம் உலகப் போர்: அமெ­ரிக்கப் படைகள் குவாமில் தரை­யி­றங்கி ஜப்­பா­னியப் படை­க­ளுக்கு எதி­ராகத் தாக்­கு­தலை ஆரம்­பித்­தனர் (ஓகஸ்ட் 10 இல் இது நிறை­வ­டைந்­தது).

 

1954 : ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்­டாகப் பிரிக்­கப்­பட்­டது.

 

1961 : நாசாவின் மனி­தரை விண்­ணுக்கு அனுப்பும் திட்­டத்தில் இரண்­டா­வது பயணம் மேர்க்­கு­ரி-­ரெட்ஸ்டோன் 4. கஸ் கிரிசம் என்­பவர் விண்­வெ­ளிக்குப் பய­ணித்தார்.

 

1964 : சிங்­கப்­பூரில் மலே இனத்­த­வர்­க­ளுக்கும் சீனர்­க­ளுக்கும் இடையில் கல­வரம் மூண்­டதில் 23 பேர் கொல்­லப்­பட்டு பலர் காய­ம­டைந்­தனர்.

 

1969 : அப்­பலோ 11 விண்­க­லத்தில் சென்ற நீல் ஆம்ஸ்ட்ரோங்,   சந்­தி­ரனில் காலடி பதித்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றார். அவ்­விண்­க­லத்தில் பயணித்த எட்வின் அல்ட்­ரினும் சந்­தி­ரனில் நடந்தார்.

 

1972 : வட அயர்­லாந்து தலை­நகர் பெல்­பாஸ்ட்டில் இடம்­பெற்ற 22 தொடர் குண்­டு­வெ­டிப்­பு­களில் 9 பேர் கொல்­லப்­பட்டு 130 பேர் படு­கா­ய­ம­டைந்­தனர்.

 

1977 : நான்கு நாட்கள் நீடித்த லிபி­ய -­எ­கிப்­திய போர் ஆரம்­ப­மா­னது.

 

2007 : ஹரி பொட்டர் தொடர் நாவலின் 7 ஆவதும் இறு­தி­யு­மான பாக­மான ஹரி பொட்டர் அன்ட் டெத்லி ஹல்லோவ்ஸ் வெளி­வந்து 24 மணித்­தி­யா­லங்­களில்  1.5 கோடி பிர­திகள் விற்­ப­னை­யா­கின. உலகில் மிக வேக­மாக விற்­ப­னை­யான நாவல் இது. 

 

2008 : நேபா­ளத்தின் முதல் ஜனா­தி­ப­தி­யாக ராம் பரன் யாதவ் தெரி­வானார்.

 

2012 : துருக்­கியைச் சேர்ந்த ஏர்டன் இயூரிக் என்பவர் தோணி, படகு, சைக்கிள் போன்ற மனித சக்தியினால் இயங்கும் போக்குவரத்துச் சாதனங்களை மாத்திரம் பயன்படுத்தி உலகை சுற்றிவந்த முதல் மனிதரானார்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
வாழ்க்கையின் வெற்றிக்கு………

வாழ்க்கையின் வெற்றிக்கு………

 

மனிதன் சுகத்தை மட்டுமே விரும்புகின்றான். ஏனெனில் அவனுக்கென ஒரு கஷ்டம் வரும் போது அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் மனிதன் அங்கலாய்த்துக்கொண்டிருப்பான்.

download (1)

பிறந்த நொடியிலிருந்து சந்தோஷமாகவும் வசதி வாய்ப்புடனும் மாத்திரம் வாழ்ந்து செத்து மடிந்தவர்கள் எவரும் கிடையாது. அதேபோல கஷ்டத்தையும் கண்ணீரையும் மாத்திரம் அனுபவித்து வாழ்ந்தவனும் எங்கும் கிடையாது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

மிருகங்களை விட மனிதர்கள் கேவலமானவர்கள் என்று அனைவரும் கூறுவதுண்டு. ஆனால் மனிதனுடன் ஒப்பிடுகையில் மிருகங்கள் எந்தவொரு பாவத்தையும் செய்வதில்லை. ஒரு நாளைக்கு மனிதன் 9 புண்ணியங்களை செய்தால் 90 பாவங்களை செய்கின்றான். பாவங்களை செய்யவேண்டுமா என்று யோசித்து பாருங்கள்.

businessman-479573_640

அந்த பாவத்தை செய்வதால் நமக்கு நன்மை கிட்டும் என்று எண்ணினால் அது தவறு. ஏனெனில் நல்லது நடப்பதற்காக பாவம் செய்கின்றோம் என்று எண்ணி அதை செய்தால் அதனால் ஏற்படும் கர்ம வினை ஜென்மம் முடியும் வரை நம்மை தொடரும் என்பதை அறிந்திருக்கவேண்டும்.

பிரச்சினைகளை கண்டு சோர்ந்து விடக்கூடாது. முயற்சி செய்யுங்கள். உங்களது அனைத்து முயற்சிகளும் தீர்ந்து போகும்பட்சத்தில் கடவுளின் கருணை தொடங்கும். அதற்கு இந்த 7 வழிகளை கடைபிடியுங்கள்

** எப்போதும் செயற்றிறனுடன் செயற்படுங்கள். உங்கள் வாழ்க்கையில் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் நீங்களே சாட்சி, நீங்களே பொறுப்பு என்று உறுதிகொள்ளுங்கள். எப்போதும் உயிர்ப்புடன் செயற்படுங்கள். இது உங்களை முன்னோக்கி பயணிக்க வைக்க உதவும்.

download

** உங்களது வாழ்க்கையில் நீங்கள் என்னவாக நினைக்கின்றீர்கள் என்று ஒரு முடிவு எடுக்கும் முன்னர் ஒரு திட்டத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். எடுக்கும் முடிவு இறுதியில் சரியானதாக முடியும் என்று நம்பிக்கை வையுங்கள. அப்படி நம்பிக்கை இல்லாவிட்டால் திட்டத்தை மாற்றுங்கள். எப்போதும் தளர்ந்து போகாது திட்டங்களை முன்னெடுங்கள்.

** நீங்கள் முதலில் செய்யவேண்டும் என்று நினைக்கும் அல்லது கட்டாயம் செய்யவேண்டும் என்ற விடயத்தை முன்தள்ளிப் போடுங்கள். பின்தள்ளிப் போட்டால் வாழ்க்கை தாழ்வடையும். உதாரணத்துக்கு இன்று ஒரு மணித்தியாலம் தூங்கி எழும்பலாம் என்று நினைத்தாலும் அந்த ஒரு மணித்தியாலத்தில் செய்யவேண்டிய முக்கியமான வேலை பின்தள்ளிப்போகும். அதற்கு இடமளிக்காதீர்கள்.

success-and-happiness-400x294

** அனைவரும் வெற்றியடையவேண்டும் என்று எண்ணுங்கள். யாராலும் இந்த வேலையை செய்யமுடியும் என்று எண்ணுங்கள். ஒரு வேலையை அனைவரும் பகிர்ந்து செய்தால் சிறிய நேரத்தில் பெரிய சாதனையை செய்யலாம். யாரையும் ஒதுக்கி வைக்காதீர்கள். கூட்டாக சேர்ந்து முயற்சித்தால் அனுபவமும் அதிகரிக்கும்.

** ஒருவிடயத்தை பற்றி மற்றையவர்கள் மத்தியிலோ அல்லது ஒரு தனிநபரிடமோ பேசுவதற்கு முன்னர், எதிரில் இருப்போர் அல்லது இருப்பவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்று செவிமடுங்கள். செவிமடுத்த பின்னர் உங்களுடைய எண்ணத்தை வெளிப்படுத்துங்கள். இதன்மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளமுடியும்.

success-538725_640

** ஒன்றிணையுங்கள். ஒருவரை பற்றி மற்றொருவர் கேலி கூறினாலோ குறை கூறினாலோ காது கொடுக்காதீர்கள். முடிந்தால் தனிப்பட்ட நபர் பற்றி பேசும் போது கதைக்குரியவர் இல்லாதபோது அவரை பற்றி பேச வேண்டாம் என்று கூறுங்கள்.

** முடிந்தளவு நல்லதை நினையுங்கள. முடியாவிடின் உங்களுக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்துக்கொள்ளுங்கள். அனைவருடனும் ஒன்றாக இருக்க முயற்சியுங்கள்.

** உங்களது எண்ணங்களை கூர்மைப்படுத்துங்கள். அனைவரும் சமமானவர்கள் என்று உணருங்கள். ஏழை, பணக்காரன், சாதி, மதம் என்று பார்க்காதீர்கள். அவ்வாறு செய்பவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். கேட்காவிடின் அவர் போக்கில் விட்டுவிடுங்கள். வாழ்க்கையை சமநிலையாக பராமரியுங்கள்.

onlineuthayan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜூலை 21: நடிகர் சிவாஜி நினைவு தினம்....
Sivaji Ganesan

* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!

* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!

* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத்
தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!

* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!

* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'

* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!

* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!

* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின்
புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!

* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில்
மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!

ஆனந்தவிகடன்/சிவாஜி 25ல் இருந்து..

 
Vikatan EMagazines Foto.

vikatan

  • தொடங்கியவர்
பலூன் மூலம் தனியாக உலகை சுற்றி வரும் மனிதர்
 

180922016-07-12T065637Z_48570414_S1AETPCரஷ்­யாவைச் சேர்ந்த ஒரு வர் பலூன் மூலம் தனி­யாக உலகை சுற்­றி­வரும் பய­ணத்தை மேற்­கொண்­டுள்ளார்.

 

65 வய­தான பெடோர் கொனி­யுகோவ் எனும் இவர், இப் ­ப­ய­ணத்­தின்­போது உறை­ய­வைக் கும் குளிர், உறக்­க­மின்மை போன்ற நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுத்­துள்ளார்.


அவரின் ஒட்­சிசன் முக ­மூ­டி­மீது ஐஸ் படியும் அள­வுக்கு குளி­ரான சூழலில் இவர் பய­ணத்தை மேற்­கொள்­கிறார்.

 

எனினும், உலகை சுற்­றி­வரும் பய­ணத்தில் அரைப்­ப­கு­தியை பெடோர் கொனி­யுகோவ் கடந்­துள்ளார் என அவரின் மகன் ஒஸ்கார் கொனி­யுகோவ் நேற்று புதன்­கி­ழமை தெரி­வித்­துள்ளார்.


அவுஸ்­தி­ரே­லி­யாவின் வட பகு­தி­யி­லி­ருந்து கடந்த 12 ஆம் திகதி இப் ­ப­யணத்தை பெடோர் கொனி­யுகோவ் ஆரம்­பித்தார்.

 

180922016-07-12T064639Z_1435447432_S1AET

 

56 மீற்றர் (118 அடி) உய­ர­மான இந்த பலூன் ஹீலியம் மற்றும் வெப்­ப­வாயு மூலம் இயங்­கு­கி­றது. இந்த பலூனில் தொங்கும் 2 மீற்றர் (6 அடி, 7 அங்­குலம்) நீளமும் 2 மீற்றர் உய­ரமும் 1.8 மீற்றர் (5 அடி 11 அங்­குலம்) அக­லமும் கொண்ட கார்பன் பெட்­டி­யொன்றில் பெடோர் கொனி­யுகோவ் தங்­கி­யுள்ளார்.


180922016-07-12T064839Z_368088474_S1AETP

 

இப்­ ப­யணம் ஆரம்­ப­மாகி 12 தினங்­களில், அதா­வது எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை அவர் மீண்டும் அவுஸ்­தி­ரே­லி­யாவை வந்­த­டைவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

 

திட்­ட­மிட்­ட­படி இப் ­ப­யணம் நிறை­வ­டைந்தால் ஒரு புதிய சாத­னை­யாக அமையும். அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஸ்டீவ் பொசெட் 2002 ஆம் ஆண்டு 13 நாட்களில் பலூன் மூலம் உலகை சுற்றி வந்தமையே தற்போதைய சாதனை யாகும்.

 

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13692684_1085484308166929_27730231329447

இலங்கையின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ரவீந்திர புஷ்பக்குமாரவின் பிறந்த தினம்.

1996இல் உலக சம்பியனான இலங்கை குழுவில் இவரும் ஒரு அங்கத்தவர்.

  • தொடங்கியவர்

சுவரோவியம்!

 

p70a.jpg

ம் ஊர் பக்கம் வெட்டியா ஓரு குட்டிச்சுவர் இருந்தாலே அதில் அரசியல் விளம்பரம் பண்ணி அலப்பறை பண்ணுவோம். அதுலேயும் ‘மெட்ராஸ்’ படத்தில் வருவது மாதிரி கொஞ்சம் பெரிய சுவராக இருந்தால், அவ்ளோதான் அட்டி அட்டியா பிரிஞ்சு அடிச்சுக்கிட்டு சாவோம்.

p70b.jpg

p70c.jpg

p70d.jpg

p70e.jpg

ஆனால், பிரான்ஸில் நம்மை மாதிரி இல்லை. ஊருக்குள் வெள்ளை அடிச்சு வெட்டியா இருந்த சுவர்களில் ஓவியங்கள் வரைஞ்சுருக்காங்க. அது அரசியல்வாதிகளின் ஓவியமோ, அடுப்புக் கரிகளின் கிறுக்கல்களோ இல்லை. அனைத்துமே அழகான வண்ண ஓவியங்கள். பார்ப்பதற்கு அச்சு அசலாக கண்கட்டு வித்தை காட்டும் இந்த ஓவியங்களை வரைவது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓவியக்கலைஞர் பேட்ரிக் காமெஸியும் மற்றும் அவரது குழுவினரும்தான். இவர் வரைந்த சுவர் ஓவியங்கள் உலகம் முழுவதும் வைரலாக, அந்தக் குழுவையே பாராட்டு மழையால் நனைத்து வருகின்றனர். சூப்பர் பாஸ்!

 

vikatan

  • தொடங்கியவர்

சுண்டெலியை உயிருடன் சாப்பிடும் இளைஞர்

சமீபத்தில் சமூக வலை தளங்களில் ஒரு வினோதமான வீடியோவினால் விலங்கு நல ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில் இளைஞர் ஒருவர் ஒரு பீயர் குடித்துக்கொண்டு உயிருடன் இருக்கும் சுண்டெலியை குச்சியால் குத்தி பிடித்தபடி கடித்து சாப்பிட்டார்.

Man-swigs-back-a-beer-before-eating-live

அதன் பிறகு அடுத்த சுண்டெலியை எடுத்து கடித்து சாப்பிடும் முன்பு சோயா மொச்சை குழம்பை ருசிக்கிறார். அப்போது அவரிடம் சிக்கிய சுண்டெலி உயிர் தப்ப ‘கீச் கீச் என ஒலி எழுப்புகிறது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அந்த வாலிபர் குடிபோதையில் சுண்டெலியை கடித்து சாப்பிட்டு ருசித்தபடியே பீயர் அருந்துகிறார்.

Man-swigs-back-a-beer-before-eating-live

இந்த வீடியோ சீனாவில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து சிறிது நேரத்தில் அந்த வீடியோ தடை செய்யப்பட்டது.

virakesari

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கேம் உலகின் கபாலி!

கார்க்கிபவா, பா.விஜயலட்சுமி

 

p36a.jpg

லகம் முழுவதும் மக்கள் அதிக நேரத்தைச் செலவிடும் இடம் ஃபேஸ்புக்கும் ட்விட்டரும்தான் என்கிறீர்களா? கொஞ்சம் அப்டேட் ஆகிக்கொள்ளுங்கள். சென்ற மாதம் ட்விட்டரைவிட அதிக நேரத்தைத் தின்றிருப்பது ‘போக்கிமான் கோ’. சக்திமானுக்கு கஸின் பிரதர் மாதிரி தெரியும் இது, ‘ஆக்மென்டட் ரியாலிட்டி’ வகையைச் சேர்ந்த ஒரு மொபைல் கேம்.

நிஜ உலகின் மீது ஒரு டிஜிட்டல் லேயரைச் சேர்ப்பதுதான் ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம்.

ஓர் உதாரணம் பார்ப்போம்.

p36d.jpg

ஒரு பைக் இருக்கிறது. அதை மொபைல் வழியாகப் பார்க்கும்போது ஓர் உருவம் பைக்கின் மீது அமர்ந்திருக்கும். இதில் பைக் நிஜம். அதன் மீது அமர்ந்திருக்கும் உருவம் பொய். படு கிக்கான இந்த காம்பினேஷன்தான் ஆக்மென்டட் ரியாலிட்டியின் பலம். இதை வைத்துத்தான் `போக்கிமான் கோ' கேம் அப்ளிக்கேஷன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

`போக்கிமான் கோ' விதிகள் எளிமையானவை. உங்கள் மொபைலில் இந்த கேம் இன்ஸ்டால் செய்ததும், உங்கள் இருப்பிடத்தை ஜி.பி.எஸ் மூலம் குறித்துக்கொள்ளும். உங்களுடைய பெயரை அதில் வரும் வெர்ச்சுவல் மனிதனுக்குச் சூட்டிக்கொள்ளலாம். அந்த வெர்ச்சுவல் மனிதன், நிஜ உலகில் இருக்கும் பூச்சிகளைத் தேடிப் பிடிக்க வேண்டும். அந்தப் பூச்சிகளுக்குத்தான் `போக்கிமான்' என்று பெயர். உங்களைச் சுற்றி எங்கெல்லாம் போக்கிமான்கள் இருக்கின்றனவோ அந்த இடங்கள் நீலநிற பாக்ஸுகளாகத் தெரியும். அந்த நீலநிற பாக்ஸை க்ளிக் செய்தால் அந்த இடம் எது என்பதை படத்துடன் லொக்கேஷனையும் காட்டும். இனி கோழி பிடிப்பதுபோல போக்கிமான்களை நிஜ உலகில் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டால் `Gotcha' என்கிறது இந்த ஆப்.  அதாவது `பிடிச்சுட்டேன்டா டேய்..!' என அர்த்தம்.

p36c.jpg

ஜி.பி.எஸ் மூலமாக உங்களுடைய வெர்ச்சுவல் விளையாட்டுத்தளம் நிஜ உலகோடு கனெக்ட் செய்யப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட கூகுள் மேப்பில் வழி கண்டுபிடித்துப் பயணம் செய்வதுபோலத்தான்.

போக்கிமானைப் பிடிக்க பயிற்சி தரும்  இடங்களை இந்த விளையாட்டில் ‘ஜிம்’ எனக் குறிப்பிடுகிறார்கள். ஒரு ஜிம், உங்களுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து வேலைபார்க்கும் நண்பனுக்குப் பின்புறம் இருக்கலாம்; இல்லை... நீங்கள் பெசன்ட் நகரில் இருக்கிறீர்கள் என்றால், அங்கு இருக்கும் கட்டணக் கழிவறையின் பின்புறம் ஒளிந்து கொண்டிருக்கலாம். வெற்றுக்கண்களால் பார்த்தால் அவை தெரியாது. செல்போன் கேமரா என்னும் மூன்றாவது கண் மூலமாக மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

p36b.jpg

போக்கிமான் கோ இன்னும் அதிகாரபூர்வமாக இந்தியாவுக்கு வரவில்லை. ஆனால், ஆண்ட்ராய்டில்தான் எல்லாமே சாத்தியம் ஆயிற்றே! அதன் `APK' எனப்படும் இன்ஸ்டாலேஷன் ஃபைல் இணையம் எங்கும் கிடைக்கிறது. அதை நிறுவி போக்கிமான்களைத் துரத்த ஆரம்பித்துவிட்டார்கள் இந்தியர்கள். பெரும்பாலும் கோயில்கள், தேவாலயங்கள் போன்ற இடங்களில்தான் நிறைய போக்கிமான்கள் கிடைக்கின்றன.

`உட்கார்ந்த இடத்தில் வீடியோ கேம் விளையாடுகிறார்கள்' என்பதுதான் இந்தத் தலைமுறையினர் மீது வைக்கப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டு. அதைத் தகர்ந்தெறிந்திருக்கிறது போக்கிமான் கோ. ஆனால், இதிலும் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. ஒருகட்டத்தில் எது நிஜம், எது பொய் என்பதே நமக்குப் புரியாமல் போகலாம். கனவு உலகில் வாழ்ந்துகொண்டே நிஜத்தை உணர முடிவதால் நம் வாழ்க்கைமுறையே மாறிப்போகும். நாம் நிஜம் என நினைப்பது பொய்யாகலாம்; பொய் என நினைப்பது நிஜமாகலாம்.

p36e.jpg

போக்கிமான்களைத் தேடிச் சென்று பலர் சிக்கல்களில் சிக்கியச் சம்பவங்களும் நடந்துள்ளன. அமெரிக்காவில் டீன்ஏஜ் பெண் ஒருவர் தண்ணீரில் கிடைக்கும் ‘வாட்டர் போக்கிமானை'த் தேடி நதிக்கரையில் நடந்திருக்கிறார். எதுவும் கிடைக்கவில்லை என்றதும் மொபைலைப் பார்த்தபடியே ஆள் நடமாட்டம் அற்ற பகுதி வரை சென்றுவிட்டார். போக்கிமானைத் தேடியவரின் கண்களில் மூன்று அடி தண்ணீரில் மிதந்த பிணம் ஒன்று கண்களில் பட்டிருக்கிறது. போலீஸ் அவரை விசாரிக்க, போக்கிமானைத் தேடி வந்ததாக கேஷுவலாகச் சொல்லியிருக்கிறார். இன்னொரு சம்பவத்தில், தனது பாஸ் அறையில் இருந்த போக்கிமானைப் பிடிக்க அவருக்குத் தெரியாமல் அறைக்குள் நுழைந்தவரை எச்சரித்திருக்கிறது அவரது நிர்வாகம். நாம் விளையாடியபோது அபிராமபுரம் போலீஸ் ஸ்டேஷனில் அடுத்த போக்கிமான் இருப்பதாகக் காட்டியது. திரும்பி வந்துவிட்டோம்.

p36f.jpg

மொபைல் வழியே பார்த்தால்தான் போக்கிமான் தெரியும் என்பதால், காரில் செல்லும்போது மொபைல் வழியே பார்த்துக்கொண்டே ஓட்டுகிறார்கள். இப்படி, வெளியான சில நாட்களிலேயே போக்கிமான் அடிக்‌ஷன் உச்சத்தை எட்டியிருக்கிறது.

p36g.jpg

டெம்பிள் ரன் விளையாட்டு பிரபலமான போதே கையை வளைத்து வளைத்து விளையாடியவர்கள் நாம். நிஜமா, பொய்யா எனத் தெரியாத போக்கிமான்களைத் தேடித் தேடி, நம்மைத் தொலைத்துவிடக் கூடாது. அதுதான் முக்கியம்!


ஜாக்பாட் மேன்!

நின்டெண்டோ என்ற நிறுவனம்தான், 1995-ம் ஆண்டில் `போக்கிமான்' என்ற கேமை அறிமுகப்படுத்தியது. அதன் அப்டேட்டட் வெர்ஷன்தான் `போக்கிமான் கோ'. கடந்த ஒரு வருடமாகவே 25 சதவிகிதச் சரிவைச் சந்தித்துவந்த நின்டெண்டோ பங்குகள், ஒரே வாரத்தில் 30 சதவிகிதம் (கிட்டத்தட்ட 9 பில்லயன் டாலர்) வரை உயர்ந்திருக்கிறது. ஒரே காரணம், போக்கிமான் கோ.


படமாகிறது போக்கிமான்!

கதைக்காகக் காத்திருந்தால் அது கோலிவுட். ஏதேனும் ஒரு நிகழ்வுக்காகக் காத்திருப்பதுதான் ஹாலிவுட். போக்கிமான் போன்ற விஷயத்தை விட்டுவிடுவார்களா? லெஜெண்ட்ரி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம், அதற்குள் போக்கிமானை அடிப்படையாகக்கொண்டு படம் தயாரிக்க முன்வந்திருக்கிறது. நின்டெண்டோ நிறுவனம், இன்னும் அதற்கு விலை சொல்லவில்லை. என்ன சொன்னாலும் லெஜெண்ட்ரி பிக்சர்ஸ் கவலைப்படப்போவது இல்லை. ஏனெனில், போக்கிமான் ரீச் வேற லெவல்.


போக்கிமான் சுவாரஸ்யங்கள்!

தூரத்தை கிலோமீட்டரிலோ அல்லது அதைக் கடக்க தேவைப்படும் நேரத்திலோ குறிப்பிடுவது வழக்கம். அமெரிக்க உனவுவிடுதி ஒன்று `Two pokestops away' என விளம்பரப்படுத்தியுள்ளது.  போக்கிமான் ஜிம்கள்தான் இனி லேண்ட்மார்க் ஆகும் என்கிறார்கள்.

ஒவ்வோர் ஊரிலும் போக்கிமான் ரசிகக் குழு ஆரம்பித்துவிட்டார்கள். சென்னையில் போக்கிமான்களை தேடி `போக் வாக்' என ஒரு நடைபயணமே சென்றிருக்கிறார்கள்.
 
FREE WIFI தந்து கஸ்டமர்களை இழுத்த வியாபார நிறுவனங்கள்  `எங்கள் இடத்தில் நிறைய போக்கிமான்கள் இருக்கின்றன' எனச் சொல்லும் நாட்கள் விரைவில் வந்துவிடும்.

பெரும்பாலும் கோயில்களிலும் சர்ச்களிலும் நிறைய போக்கிமான்கள் இருப்பதால், பக்திமான்கள் பெருகிவருகிறார்கள்.


கவனமா விளையாடுங்க!

1) போக்கிமான் கோ விளையாட உங்கள் மொபைலில் இன்டெர்நெட் மற்றும் ஜிபிஎஸ் எப்போதும் ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும். கேமராவும் தேவை என்பதால் பாட்டரி விரைவில் தீர்ந்துவிடும். மொபைல் நெட்டும் அதிக அளவில் செலவாகலாம். இதை எல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்.

2)  குழந்தைகளுக்கு போக்கிமான் விளையாட்டை அறிமுகப்படுத்தினால், அவர்கள் அதைத் தேடி பல இடங்களுக்குச் செல்லலாம். குழந்தைகளின் கவனம் மொபைலிலே இருக்கும். அதனால் விபத்துக்கள் அதிகம் நடக்கும் வாய்ப்பு உண்டு.

3) எனக்கு போக்கிமான் இருக்கும் இடம் தெரியும் என சோஷியல் மீடியாவில் யாராவது வலை விரிக்கலாம். அறிமுகம் இல்லாதவர்களுடன் இது தொடர்பாகப் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.

4) போக்கிமான் கிடைத்துவிட்ட குதூகலத்தில் அந்த இடத்தில் இருப்பவரை மறந்துவிடாதீர்கள்.இதுவரை பல ஆயிரக்கணக்கான பேர் எதிரில் இருப்பவரை கவனிக்காமல் இடித்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

vikatan

  • தொடங்கியவர்

13708258_1085481781500515_37530608936725

இளம் நடிகர் பரத்தின் பிறந்தநாள் இன்று...
 

  • தொடங்கியவர்
'ஸ்த்ரீ உத்சவ்' பெஷன் கண்காட்சி
 

இலங்கை - இந்திய நட்புறவுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஸ்த்ரீ உத்சவ்” (Sthree Utsav) பெஷன் கண்காட்சி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

 

1421.jpg

 

1422.jpg

 

1423.jpg

 

1425.jpg

 

1426.jpg

 

1424.jpg

 

இந்நிகழ்வில் நவீன பெஷன் ஆடைகளை அணிந்து காட்சிப்படுத்திய மொடல்களையும், பார்வையாளர்கள் சிலரையும் படங்களில் காணலாம்.

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மின்சார மீன்!

 
  • fish_2939184g.jpg
     
  • fish1_2939183g.jpg
     

ஆழ்கடலில் பலவிதமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. விதவிதமான மீன்கள் நீந்தி வருகின்றன. அதில் திருக்கை மீனும் ஒன்று. வித்தியாசமான உடலமைப்புடன் காணப்படும் திருக்கை மீன்களிடம் மட்டும் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளதாக உயிரியலாளர்கள் கூறுகிறார்கள். அவற்றில் ‘மின்சாரத் திருக்கை’கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை.

எல்லா திருக்கை மீன்களையும் போல இதுவும் தட்டை வடிவில் உள்ள மீன்தான். ஆழ்கடலில் மட்டுமே வாழும். இதன் வால் உடலைவிட கொஞ்சம் நீளமாக இருக்கும். மற்ற திருக்கைகள் வாலாலும் உடலாலும் நீந்தும் என்றால், மின்சாரத் திருக்கைகள் வாலால் மட்டுமே நீந்தக்கூடியவை. இவை மெதுவாகவே நீந்தக்கூடியவை. ஒரு அடியிலிருந்து ஆறு அடி நீளம் வரை வளரக் கூடியவை.

பொதுவாக ஆழ்கடலுக்குள் மணலில் உடலைப் புதைத்துக்கொண்டு இவை மறைந்திக்கும். திடீரென்று தாக்கி இரையைத் தின்பதுதான் திருக்கைகளின் சிறப்பு. இவற்றின் கண்கள் தலையின் மேல்பகுதியில் இருப்பது வேட்டைக்கு வசதியாக இருக்கிறது. ஆனால், இரையைத் தின்பதற்கு இந்த உடலமைப்பு வசதியாக இருப்பதில்லை. இதைச் சமாளிக்கத்தான் இந்தத் திருக்கைகள் தங்கள் உடலில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றிருக்கின்றன.

மின்சார திருக்கைகளின் தலையில் இரு பக்கங்களிலும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான உறுப்புகள் உள்ளன. இவற்றிலிருந்து சுமார் 8 வோல்ட் முதல் இருநூறு வோல்ட் வரையிலும்கூட மின்சாரம் உற்பத்தியாகுமாம். இரைகளைப் பிடிக்கவும் பெரிய உயிரினங்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்கவும் மின்சாரத் திருக்கைக்கு இந்த மின்சாரமே பலமுள்ள ஆயுதமாக உள்ளது.

tamil.thehindu

  • தொடங்கியவர்

நீல நிறத்தில் சூரியன்!

 
 
blue_2904097f.jpg
 

சூரியனை ஒரு பெரிய பந்துபோல் கற்பனை செய்துகொண்டால் 10 லட்சம் பூமிப் பந்துகளை அதற்குள் நிரப்பிவிடலாம். இவ்வளவுக்கும் சூரியன், சராசரி அளவுள்ள நட்சத்திரமாகவே கருதப்படுகிறது.

******

சூரியக் குடும்பத்தில் திரவ நிலையில் தண்ணீர் இருக்கும் ஒரே கோள் நாம் வாழும் பூமிப் பந்து மட்டுமே.

******

பூமிப் பந்தின் அனைத்துக் கடற்கரைகளில் உள்ள மணல் துகள்களின் எண்ணிக்கையைவிடவும் அதிகமாகப் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் குவிந்துகிடக்கின்றன. குறைந்தபட்சமாக என வைத்துக்கொண்டால்கூட 10 லட்சம் கோடி நட்சத்திரங்கள்.

******

ஒவ்வோர் ஆண்டும் பூமியின் விண்வெளிக்குள் கார் அளவுள்ள விண்கல் நுழைந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், அது தரையை வந்தடைந்து நம் தலையில் முட்டுவதற்கு முன் எரிந்து சாம்பலாகிக் காற்றில் கலந்துவிடுகிறது.

******

பூமிப் பந்தைச் சுற்றி மனிதர்கள் கைவிட்ட விண்வெளிக் குப்பைகள் வட்டமிட்டுச் சுழன்று கொண்டிருக்கின்றன. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் பாகங்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கும்போது கைவிடப்பட்ட ஸ்பானர்கள் என ஐந்து லட்சம் பொருட்கள் இப்படிச் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

******

மனிதர்கள் இதுவரை அறிந்ததிலேயே மிக உயரமான மலை வெஸ்டா எனப்படும் விண்கல்தான். இது 22 கி.மீ. உயரம் கொண்டது. அதாவது பூமியின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தைப்போல ஐந்து மடங்கு உயரம்.

******

வால் நட்சத்திரங்கள் என்பவை 450 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியக் குடும்பம் உருவானபோது விடுபட்ட எச்சங்கள்தான். இவற்றில் மணல், பனிக்கட்டி, கார்பன் டைஆக்சைடு நிரம்பியிருக்கிறது.

******

வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் கோள்களின் மேல் மனிதர்கள் நடக்க முடியாது. ஏனென்றால், அந்தக் கோள்களின் மேற்பரப்பு திடமாக இல்லை.

******

ஒரு விமானத்தில் புளூட்டோவுக்குப் போவதாக வைத்துக்கொண்டால், போய்ச் சேர 800 ஆண்டுகள் ஆகும்.

******

மாலையில் சூரியன் மறையும்போது ஆரஞ்சு சிவப்பு நிறத்தில்தான் நமக்குத் தெரியும். சிவப்பு கோளான செவ்வாயில் சூரியன் மறைவு நீல நிறத்தில் இருக்கும்.

நீல நிறத்துல நா அழகா இருக்கேன்ல!

tamil.thehindu

  • தொடங்கியவர்

 

ஒரு பொருள் வாங்கக் காரணம் என்ன?

  • தொடங்கியவர்
ஏதுமறியாதவர்கள் மீதும் வலிந்து பிரச்சினைகள் புகுத்தப்படுகின்றன
 
 

article_1468987569-page7-cartoon_Kanaga.வீணான பழிச் சொல்லையும் தண்டனைகளையும் ஏற்பது போல மனச் சுமைகள் வேறில்லை. ஏதுமறியாதவர்கள் மீதும் வலிந்து பிரச்சினைகள் புகுத்தப்படுவதுமுண்டு.

எச்சரிக்கை உணர்வுடன் இருந்தாலும் ஏதோ ஒரு விதமாக துன்பங்கள் சிலரைத் துவைத்தெடுத்து விடுகின்றன.

உண்மையாக வாழ்ந்தாலும் வருகின்ற வேதனைகளை அழிப்பது எப்படி? சமூகம் சில சமயங்களில் தெளிவில்லாத பயணத்தையே நாடுகின்றது. சரி, பிழை பற்றித் திரும்பிப் பார்ப்பதில்லை. சாட்சியங்களும் சூழ்ச்சி செய்து விடுவதுண்டு. நீதியின் பார்வை தீட்சண்யமானது. நீதிவழிவிட்டுத் தவறியோரை அது விடாமல் துரத்தும். அவச் சொல் பேசுபவர்களை அவல வாழ்க்கைக்குள் தள்ளிவிடும்.

இத்தகையோர் விலகாத இருட்டுக்குள் கருகிப் புரள வேண்டியதுதான். நல்லவர்களுக்கு துன்பங்கள் தோல்வியல்ல‚ காலம் கலகத்தின் பின்னர் தெளிவைத் தந்துகொண்டுதானிருக்கின்றது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நீங்களும் கபாலி ஆகலாம்! - #SelfBranding #DailyMotivation

kabalivc1.jpg

பாலி என்ற வார்த்தைக்கு பின்னால், 'வைரல்' என்ற வார்த்தை ஒளிந்தே இருக்கிறது போல. ஒரு மாதமாக இணையத்தை ட்ரெண்டாக்கும் ஒரே விஷயம் கபாலியாக மட்டுமே இருக்கும். இதற்கெல்லாம் காரணம் ரஜினி எனும் ஒரு பிராண்ட்.

ஒருவேளை ரஜினி இல்லாமல் இந்த படத்தை பார்த்தால் இவ்வளவு ட்ரெண்டில் இந்த படம் இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். ரஜினி எனும் தனி மனிதனால் தன்னை இவ்வளவு பெரிய பிராண்டாக வளர்த்துக் கொள்ள சில குணங்களை தன் இயல்பாக ஆக்கிக் கொண்டிருப்பார். அந்தக் குணங்களை நாமும் பழகிக் கொண்டால், நம் துறையில் நாம் நிச்சயம் ‘கபாலி’ ஆகலாம்.
ஆனால், அதற்காக சினிமாக்களில் வருவது போல திடீரென ஒரு நபர், ஒரே பாடலில் பிரபலமாகிவிட முடியாது. அதற்கு மிகப் பெரிய செயல்முறை இருக்கிறது. உங்கள் துறையில், உங்களைச் சுற்றியுள்ள சமூகத்தில் உங்களை ஒரு பிரபலமாகக் காட்ட பின்வரும் இந்த விஷயங்கள் கைகொடுக்கும்.


மாற்றம்!

முதலில் உங்களைச் சுற்றி உள்ளவர்கள் வைத்திருக்கும் டெம்ப்ளேட் விஷயங்களை மாற்றுங்கள். 'நீங்கள் எதையும் தாமதமாக செய்பவர்' என்று உங்கள் அலுவலகம் நினைத்தால், அதனை உடைத்து வேகமாக செய்யப் பழகுங்கள். நீங்கள் எப்போதும் சாதாரண உடையில் வருபவர் என்றால்' கொஞ்சம் ஃபார்மலாக மாறுங்கள். நீங்கள் சில விஷயங்களுக்கு சரிப்பட மாட்டீர்கள் என்று சொல்லி வைத்திருந்தால், அதனை தனியாக செய்தாவது, உங்களை அந்த வேலைக்கு நீங்கள் சரியானவர் என நிரூபியுங்கள். இப்படி எல்லாம் மாறியபின், உங்கள் அலுவலகம் உங்களை உற்றுநோக்கத் துவங்கும். மாற்றம்தான் இந்த செயல்முறையின் முதல் படி.

வேகம்!

நீங்கள் பார்க்கும் வேலையில் உங்களுக்கு ஒரு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதனைச் செய்ய உங்களுக்கு சாதாரணமாக ஆகும் நேரத்தை 10 சதவிகிதமாவது குறைத்து, வேகமாக இலக்கை எட்டுங்கள். உதாரணமாக, உங்கள் நிறுவனம் உங்களிடம் 30 நாட்களில் தரும் இலக்கை 25 நாட்களில் முடித்தால், மீதமுள்ள 5 நாட்களில், உங்கள் உழைப்பு அனைத்தையுமே உங்களை பிராண்டிங் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு பிடித்த, நாட்டமுள்ள விஷயங்களை செய்யத் துவங்குங்கள் அது உங்களின் மற்றொரு முகத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.

kabalivc2.jpg



தாக்கம்!

உங்களைப் பற்றிய விஷயங்கள் யாருக்கும் தெரியாமல் அப்படியே இருந்தாலோ அல்லது உங்களது துறையை நிர்வகிப்பவருக்கு மட்டும் தெரிந்தாலோ, அது உங்களை நீங்களே ஒரு பிராண்டாக மாற்ற உதவாது. உங்களைச் சுற்றியுள்ள இடங்களில் ஏற்கெனவே பிரபலமாகவோ அல்லது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்ற நிலையிலோ இருப்பவர், உங்களைப் பற்றிய ஒரு நல்ல விஷயத்தை பிரபலப்படுத்துமாறு சில வேலைகளை செய்யுங்கள். அது உங்கள் திறமையைத் தாண்டிய, பாராட்டுப் பெற தகுதியான வேலையாக இருக்க வேண்டியது அவசியம். இவர்களால் உங்கள் பிராண்ட் வேல்யூ உயரும் வகையில் அந்த வேலைகள் அமைந்தால், தானாகவே உங்கள் மீது ஒரு பிரபலம் என்ற இமேஜ் உருவாகும்.

உங்களை மறந்துவிடுங்கள்!

இந்த மாற்றத்துக்கான செயல் முறையில், நான் என்ற வார்த்தையை கிட்டத்தட்ட மறந்துவிடுங்கள். நாம் என்ற‌ வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துங்கள். உங்கள் வேலை வெற்றி அடைந்தால் அதனை செய்த அனைவருக்கும் இடமளியுங்கள். அதில் பணிபுரிந்த அனைவரையும் தனித்தனியே பாராட்டுங்கள். தோனி எந்த ஒரு வெற்றி பேட்டியிலும் ''நான்'' என்ற வார்த்தையை பயன்படுத்தியதே இல்லை.

தொடர்ச்சி!

செல்ஃப் பிராண்டிங் என்பது ஒரு தொடர்ச்சியான செயல் முறை. இதனை ஒரு மாதம் செய்வோம் என்று செய்துவிட்டு, விட்டுவிடக் கூடாது. சில தகுதிகளை ஒருவர் வளர்த்துக் கொள்ள, அவர் அதனைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்தால்தான் நீங்கள் ‘இன்ஃப்ளுயென்ஸ்’ செய்யும் மனிதனாக மாற முடியும்.

இப்படி செய்தால் உங்களைப் பற்றிய 'பிராண்ட் இமேஜ்' தானாகவே உயரும். உங்கள் துறையில் நீங்கள் தான் கபாலி. நீங்கள் சொல்லும் விஷயங்கள் இணையத்தில் வைரலாகிறதோ இல்லையோ, உங்கள் குழுவில் வைரல் ஹிட் அடிக்கும். உங்கள் கருத்துகள் செயல்முறைக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.

இப்போது சொல்லுங்கள் நீங்களும் கபாலிதானே! இனிமேல் உங்களை யாராவது பிரபலம் என்றால் கெத்தாக கூறுங்கள்... 'மகிழ்ச்சி!'

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.