Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

சிறு தீவினையும், சுற்றுலா விடுதியையும் 7000 ரூபாவுக்கு வாங்கிய அதிர்ஷ்டசாலி!

 

சிறு தீவினையும், சுற்றுலா விடுதியையும் 7000 ரூபாவுக்கு வாங்கிய அதிர்ஷ்டசாலி!

பசுபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள மைக்ரோனீசியா நாட்டைச் சேர்ந்த சிறு தீவினையும் அங்குள்ள சுற்றுலா விடுதியையும் வெறும் 49 டொலர்களைக் கொடுத்துப் பரிசாகப் பெற்றுள்ளார் ஜோஷூவா எனும் நபர்.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலிருந்து 3,800 கி.மீ. தொலைவில் உள்ள பசுமையான தீவில் ( island of Kosrae) குகைகள் நிறைந்த குன்றுகள், நீர்வீழ்ச்சிகள் காணப்படுகின்றன.

இந்த அழகிய தீவை 1992 இல் டக்ளஸ் பெய்ட்ஸ், அவரது மனைவி ஸாலி பெய்ட்ஸ் ஆகியோர் வாங்கி, அங்கு சுற்றுலா விடுதியொன்றை அமைத்தனர்.

சுமார் 25 வருடங்களில் அப்பகுதியை வெற்றிகரமான சுற்றுலாத்தலமாக மாற்றினர்.

சம்பாதித்தது போதும் என்று முடிவு செய்த அந்த தம்பதியர், அதனை விற்க முடிவு செய்தனர்.

பணத்தை நேசிப்பவரைவிட, தீவு வாழ்க்கை, இயற்கையை நேசிப்பவருக்கு அதை விற்க முடிவு செய்து, ஒரு லொட்டரித் திட்டத்தை அறிவித்தனர்.

ஒரு டிக்கட் விலை 49 டொலர்கள் (7000 ரூபா) என நிர்ணயிக்கப்பட்டது.

தீவுப் பரிசை வெல்ல 150 நாடுகளில் 75,485 பரிசுச் சீட்டுகள் விற்பனையாகின.

அவுஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜோஷுவா என்ற நபருக்கு பரிசுக் குலுக்கலில் அதிர்ஷ்டம் அடித்தது.

ஜோஷுவா என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது முழு விபரங்கள் வெளியிடப்படவில்லை.

http://newsfirst.lk

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

13876703_1195139100538934_11138069030284

ஜேர்மன் உதைபந்தாட்ட அணிவீரர். 1990 இல் உலக கிண்ணத்தை வென்ற அணியில் இருந்தவர்.

1996 இல் ஐரோப்பிய கிண்ணத்தை வென்ற அணித்தலைவர்..

தற்சமயம் அமெரிக்காவின் உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளர்.

Happy Birthday, Jürgen Klinsmann!

 

  • தொடங்கியவர்
உள்ளம் விரிந்தால் செருக்கு சுருங்கி ஒடுங்கும்
 
 

article_1469769382-euyiu.jpgசெருக்குடன் சனங்களை நோக்குபவர்களை விருப்பத்துடன் எவருமே நெருங்க மாட்டார்கள்.   

ஆற்றல்கள், வலிமை, செல்வம் இவற்றுடன் அறிவாளியாக இருப்பவர்கள் கூட செருக்குடன் உலா வருகின்றார்ககள்.   

செருக்குடையவர்கள் தங்களைத் தாங்களே தரக்குறைவாக நடத்துபவர்கள் ஆவார். ஆனால், துஷ்டர்கள்முன் தன்னை நிலைநிறுத்தும் வீரன் செருக்குடன் அவர்களை அடக்கி ஒடுக்குதல் தவறு அல்ல.

எல்லாச் சமயங்களிலும் அநியாயம், அட்டகாசம் செய்பவர்கள் முன் பணிவுடன் பேசமுடியாது. பணிவை இத்தகையோர் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.   

எத்தகைய உயர் பதவிகளை வகிப்பவர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட எத்தரத்தில், மேம்பட்ட நிலையில் உள்ளவர்கள் கூட செருக்குடன் மக்கள் முன் நிற்கமுடியாது.   

பதவிக்குரிய ஆளுமையுள்ளவர்கள் பணிவுடனேயே பழகுவார்கள். உள்ளம் விரிந்தால் செருக்கு சுருங்கி ஒடுங்கும்.   

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆறு வயது அயத் சாய்கின் மழலைக் குரலை இதுவரை 20 லட்சம் பேர் கேட்டிருக்கிறார்கள்..! #TheVoiceIndiaKids

 

 

  • தொடங்கியவர்

ஜூலை 31: ஜே.கே.ரௌலிங் பிறந்த தின சிறப்பு பகிர்வு!
J.K.Rowling

விண்டர்போர்ன் கிராமத்தின் மிக்கேல் பள்ளியில் படித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்பிரட் டன், அன்பானவர். அவரின் மீதான மரியாதையின் காரணமாகவே, ஹாரி பாட்டர் கதையில், அல்பஸ் டம்பிள்டோர் கதாபாத்திரத்தை உருவாக்கினார்.

இளமைப் பருவத்தில், தன் குட்டித் தங்கை டயானாவுக்கு நிறையக் கதைகள் சொல்வார். இதற்கு, ஆலிஸின் அற்புத உலகம் தூண்டுகோல் எனவும் குறிப்பிடுவார்.

பள்ளிக் காலத்தில், படிப்பில் முதல் மாணவி. பின், போர்ச்சுக்கல் நாட்டில் ஒரு பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருந்தார். அங்கே இருந்த போது, காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஒரு பெண் குழந்தை பிறந்தது. குறுகிய காலத்தில் விவாகரத்து ஆனது. அப்போதுதான் கதை எழுதும் ஆர்வம் மீண்டும் துளிர்த்தது.

வறுமையில் வாட நேர்ந்த காலம் அது. ஆனாலும், தன் குழந்தைக்குக் கதை சொல்லும் ஆசை போகவில்லை. அவரின் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டது நான்கு மணி நேரம் தாமதமாக வந்த லண்டன் தொடர்வண்டி. அந்த நேரத்தில் அசை போட்டதில் உருவானதுதான், ஹாரி பாட்டர்.

ஹாரி பாட்டர் நாவலை எழுத ஆரம்பித்தபோது, ஒழுங்கான இடம் கிடையாது, பசியால் வாடி, மன உளைச்சலுக்கு உள்ளானார். காபி கடைகளில் உட்கார்ந்து, பழைய டைப்ரைட்டரில் அடித்தே கதையை முடித்தார். அதைப் பல பதிப்பாளர்களிடம் கொண்டுபோய் நீட்ட, அவர்கள் நிராகரித்தனர். லண்டனின் மிகச் சிறிய பதிப்பு நிறுவனமான ப்ளும்ஸ்பரி, 1,000 பிரதிகளுக்கு 2,250 பவுண்டு தருவதாக ஒப்புக்கொண்டது. நாவல் வந்த வேகத்திலேயே விற்றுத் தீர்ந்தது.

இவரின் உண்மையான பெயர், ஜோன்னே. இவரின் தந்தை பெயர், ரௌலிங். இடைப் பெயர் என்று ஒன்று இல்லை. பெண்ணின் பெயரோடு புத்தகம் வந்தால், இளைஞர்கள் நூலை வாங்க மாட்டார்கள் எனப் பதிப்பகம் கருதியது. ஆகவே, இவர் பாட்டியின் பெயரைச் சேர்த்து, ஜே.கே.ரௌலிங் என மாற்றியது.

உலகத்தின் பணக்காரப் பெண்களில் ஒருவராக உருவெடுத்தார் ரௌலிங். ஆனால், அந்த இடத்தில் தொடர்ந்து நீடிக்கவில்லை. காரணம், அவரின் அம்மா மல்டிபிள் ஸ்கிலாராசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார். அவரின் மரணத்தால் பாதிக்கப்பட்ட ரௌலிங், ஒரு கோடி பவுண்ட் பணத்தை, அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காகத் தானம் செய்தார். இதோடு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்ற, தன் சொத்தில் பெரும் பகுதியைத் தந்துவிட்டார்.

நம்பிக்கை இழந்து அவர் தவித்த காலங்கள் பற்பல. அதனால், தன் கதையில் நம்பிக்கையைச் சாப்பிடும் தீய சக்திகளை உருவாக்கினார். மிக எளிமையானவர்கள் எதையும் சாதிக்க இயலும் என்பதை உணர்த்தவே ஹாரிபாட்டர் கதாபாத்திரத்தை உருவாக்கினார்.

இவருக்குப் பிடித்த கதைத் தொகுப்பு, நார்னியா கதைத் தொடர். அதில் உள்ள கதைகளைத் தொடர்ந்து படித்து, தன் கற்பனை ஆற்றல் விரிந்ததாகச் சொல்வார். ‘தி ஸ்மித்ஸ்’ எனும் இசைக் குழுவின் பாடல்களை விரும்பிக் கேட்பார். ஒவ்வொரு முறையும் ஹாரி பாட்டர் நாவலை வெளியிடும்போது அதைப் படித்துக் காண்பித்து குழந்தைகளைப் பரவசப்படுத்துவார்.

ஹாரி பாட்டர் இறுதிப் பாகத்தின் கதையை ரொம்பவே பத்திரமாகக் காப்பாற்றினார். அதன்\ முடிவு என்ன என உலகமே யோசித்துக்கொண்டு இருந்தபோது, விமானத்தில் பதிப்பாளரைப் பார்க்க அமெரிக்காவுக்கு சென்றார். கதையின் அச்சை சோதிக்க வேண்டும் என சொல்லி அதிகாரி கேட்க, தர மாட்டேன் என அடம் பிடித்து ஜெயித்தார். ஹாரி பாட்டர் கதைகளை எழுதி முடித்த பின், மூத்தவர்களைக் கவரும் நாவல் ஒன்றை எழுத உள்ளதாக அறிவித்தார். அதிலும் எல்லாத் தரப்பினரையும் பரவசப்படுத்தும் அம்சங்கள் இருக்கும் என்கிறார்.

 

 
Vikatan EMagazines Foto.
vikatan
 
  • தொடங்கியவர்
அகதிகளுக்காக தமது காற்சட்டைகளை வழங்கும் நட்சத்திரங்கள்
 

ஹொலிவூட் நடிக நடி­கை­யர்கள், பாட­கிகள், மொடல்கள் உட்­பட பலர் அக­தி­க­ளுக்­காக  தமது காற்­சட்­டை­களை ஏலத்தில் விற்­பனை செய்­வ­தற்கு வழங்­கி­யுள்­ளனர்.

 

பிர­ப­லங்கள் அணிந்த காற்­சட்­டை­களை ஏலத் தில் விற்­பனை செய்து அக­தி­க­ளுக்கு உத­வு­தற்­கான புதிய அமைப்­பொன்று ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளது.

 

18284Untitled-2.jpg

 

ஜீன்ஸ் ஃபோர் ரிபி­யூஜீஸ் (அக­தி­க­ளுக்­கான ஜீன்ஸ்) என இந்த அமைப்பு அழைக்­கப்­ப­டு­கி­றது.

 

இந்த ஏல விற்­ப­னையின் மூலம் கிடைக்கும் நிதி அக­தி­க­ளுக்­கான சர்­வ­தேச குழு (ஐ.சி.ஆர்.) எனும் அமைப்­புக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

 

புகழ்­பெற்ற விஞ்­ஞானி அல்பேர்ட் ஐன்ஸ்­டீ­னினால் 1933 ஆம் ஆண்டு ஸ்தாபிக்­கப்­பட்ட அமைப்பு ஐ.சி.ஆர். ஆகும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 

 

ஜீன்ஸ் ஃபோர் ரிபி­யூஜீஸ் திட்டம் அறி­விக்­கப்­பட்­ட­வுடன் ஹொலிவூட் நடி­கைகள் ஷெரோன் ஸ்டோன், எம்மா வட்ஸன், ஈவா லோங்­க­ரியா, பாடகர் எல்டன் ஜோன்ஸ், பாடகி லில்லி அலன், மொடல்கள் கேட் மோஸ், கிளோ­டியா ஷிஃபர், எலே மெக்பேர்சன், விக்டோரியா பெக் காம் உட்பட பலர் தமது காற்சட்டைகளை வழங்கியுள்ளனர்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

லுட்விக்: நோயாளிகளுக்கு உதவும் சுட்டிப் பையன்!

ROB_1.jpg

ல்சைமர் என்னும் நரம்புச்சிதைவு நோய் ஏற்பட்டால் நினைவு தவறும், வாய் குழறும், கை, கால்களை உபயோகிக்க இயலாது. தினசரி வேலைகளைச் செய்து கொள்ள முடியாது. அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அபேசியா என்னும் மூளை பாதிப்பு நோயும் உடனிருக்கும். அதேபோல் டிமென்சியா என்னும் மனநலக் கோளாறு  ஏற்பட்டால், நினைவுப் பிரச்னை, அதிகரிக்கும்  குழப்பநிலை, ஆர்வமின்மை, மனச்சோர்வு  ஆகியன ஏற்படும். 2050 களில் இந்நோயின் தீவிரம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கிறது மருத்துவ உலகம். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே வரமாய் வருகை தந்திருக்கிறான் லுட்விக்.
 
முள்ளம்பன்றித் தலையும், பச்சைக் கண்களுமாய் சிறுசிறு முக பாவனைகளுடன் 102 செ.மீ உயரமுள்ள குட்டி ரோபோ பையன்தான் லுட்விக். லுட்விக் விட்ஜென்ஸ்டீன் எனும் தத்துவ ஞானியின் நினைவாக  லுட்விக் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது இவனுக்கு. கனடாவின் டொரன்டோ பல்கலைக்கழகமும் மிட்டாக்ஸ் என்ற தன்னார்வ அமைப்பும் இணைந்து இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

நார்த் யார்க்  நகரத்திலுள்ள அல்சைமர் மற்றும் டிமென்சியா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவரும் ஒன் கென்டில் என்ற சிறப்பு இல்லத்தில் லுட்விக் முதல் முறையாக களமிறக்கப்பட்டான். அவனை வைத்துச் செயல் விளக்கம் அளித்தனர். விநாடிக்கு 28 செ.மீ வரை நடக்கும் வல்லமை கொண்ட இவனுடன்  இரண்டு கேமராக்கள் இருக்கும்.

ROB_2.jpg 

நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் பத்து நோயாளிகளுடன் இவனை வைத்துப் பரிசோதனை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் லுட்விக் அவர்களுக்கு வீட்டு வேலைகளைச் செய்து கொடுத்தும், அவனால் பேச்சுக்களைச் சரியாய் உணர முடியவில்லை. எனவே மேலும் சில முன்னேற்றங்களுக்குப் பிறகு பேசுவதைப் புரிந்து கொள்வது, அதற்குப் பதிலளிப்பது போன்ற திறன்களை அவனுள் உட்புகுத்தினர்.

அவனை ரிமோட் உதவியுடனும் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். எதிரே இருப்பவர்கள் பேசும் விதத்தை வைத்தே அவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள், என்பதை கணித்துவிடுவான். உரையாடலை எழுத்துக்களாய் மாற்றும் திறமையிலும் லுட்விக் வல்லவன். இப்போது லுட்விக் அல்சைமர் நோயாளிகளின் உற்ற நண்பனாகி இருக்கிறான்.

லுட்விக்கைப் பற்றி அதன் தயாரிப்புக்குழுவினைச் சேர்ந்த விஞ்ஞானி Dr. பிராங்க் ரூட்சி கூறும்போது, "தற்சமயம் கனடாவில் கணிசமான மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில வருடங்களில் இது இன்னும் உயரும். எனவே லுட்விக்கின் சேவை நமக்குத் தேவை என்றாகி விடும். எங்கள் பல வருட ஆராய்ச்சியின் முதல் படியே இந்தச் சுட்டிப் பையன்" என்கிறார்.
 
இந்த லுட்விக் ரோபோவை ரோபோகிண்ட் என்னும் நிறுவனம்,  3000 டாலர் மதிப்பில் விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லுட்விக்கின் வருகைக்குக் காத்திருக்கிறது கனடா...      

vikatan

  • தொடங்கியவர்
போலந்தில் உலக இளைஞர் தின விழா
 

கத்­தோ­லிக்க திருச்­ச­பையின் உலக இளைஞர் தின விழா போலந்தின் கிராகோவ் நகரில் நடை­பெ­று­கி­றது.

 

148805092-01-02.jpg

 

1482016-07-26T165125Z_62550561_D1BETRVHI

 

உலகின் பல்­வேறு நாடு­களைச் சேர்ந்த மக்கள் இவ் ­வி­ழாவில் பங்­கு­பற்­று­கின்­றனர்.

 

1482016-07-26T164453Z_1055188959_D1BETRV

 

148811066-01-02.jpg

 

இந் ­நி­கழ்­வு­களின்  உத்­தி­யோ­க­பூர்வ ஆரம்ப வைப­வத்­துக்கு முன்­ன­தாக அங்கு திரண்­டி­ருந்­த­வர்கள் பாடல்­களைப் பாடியும் நட­ன­மா­டியும் மகிழ்ந்­தனர்.

 

1986 ஆம் ஆண்டு முதல் கத்­தோ­லிக்க உலக இளைஞர் தினம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது.

 

148811079-01-02.jpg

 

இம் ­முறை குடி­யேற்­ற­வா­சி­களை வர­வேற்­பதை ஊக்­கு­விக்கும் நோக்­குடன் போலந்தில் நடை­பெறும் விழாவில் கலந்­து­கொள்­வ­தற்­காக பாப்­ப­ரசர் முதலாம் பிரான்­சிஸும் நேற்று போலந்­துக்குச் சென்றார்.

 

148811084-01-02.jpg

 

148811162-01-02.jpg

 

148812155-01-02.jpg

 

எதிர்வரும் 31 ஆம் திகதிவரை இவ் விழா நடைபெறவுள்ளது.

metronews

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பேசும் படம்: உற்றுப் பார்த்த சிறுத்தை!

 

birdnew1_2952520f.jpg
 

தான் ஒரு தேர்ந்த காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் இல்லை என்று தன்னடக்கத்துடன் கூறும் ரவிராஜாவின் கூற்றைப் பொய்யாக்குகின்றன, அவர் எடுத்திருக்கும் ஒளிப்படங்கள். கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர், பரபரப்பான பணி வாழ்க்கைக்கு இடையே காட்டுயிர்களை ஒளிப்படம் எடுப்பதன் மூலம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார். காட்டுயிர்களைத் தேடித்தேடிப் படமெடுக்கும் தன் சிறு வயது கனவு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்தான் உயிர்பெற்றது என்கிறார் ரவிராஜா.

பறவைகள் தந்த புரிதல்

பள்ளிச் சிறுவனாக இருந்தபோது வீட்டில் லவ் பேர்ட்ஸ், வண்ணக் கிளிகள் ஆகியவற்றை வளர்த்திருக்கிறார். ஓரளவு விவரம் தெரிந்ததும் பறவைகளையும் உயிரினங்களையும் செல்லப் பிராணிகள் என்ற போர்வையில் கூண்டுகளில் அடைத்து வைப்பது தவறு என்பது புரிந்தது.

bird_2_2952524a.PNG

சிரிப்பான் வகைப் பறவை

“பறவைகளையும் உயிரினங்களையும் அவற்றின் இயல்பான வாழிடத்திலிருந்து பிரிப்பது தவறு என்று உணர்ந்த பிறகுதான், அவற்றின் மீதான ஆர்வம் அதிகரித்தது. கல்லூரிப் படிப்பை முடித்ததும் பறவைகள் குறித்த புத்தகங்களைப் படித்து நிறைய தெரிந்துகொண்டேன்” என்று சொல்லும் ரவிராஜா, காட்டுயிர்களைப் படம் எடுப்பதற்காகவே பல்வேறு பகுதிகளுக்கும் பயணப்படுகிறார்.

இயற்கையைச் சிதைக்க வேண்டாம்

ஒளிப்படம் எடுப்பதற்குப் போதிய பயிற்சி தேவை என்பதால், தன் நண்பர் ஒருவரிடம் ஒளிப்படக் கருவிகள், அவற்றின் நுட்பம் குறித்தெல்லாம் முதலில் கேட்டறிந்துகொண்ட பிறகே களத்தில் கால் பதித்தார். அனுபவமும் பயிற்சியும் ஒளிப்படக் கலையில் நேர்த்தியைக் கூட்டின. ஊட்டி, வால்பாறை, பவானி, கர்நாடகம், ராஜஸ்தான், டெல்லி, உத்தராகண்ட் ஆகிய இடங்களுக்குச் சென்று காட்டுயிர்களைப் படமெடுத்திருக்கிறார். இப்படிப் படங்கள் எடுக்கிறபோது காட்டுயிர்களையும் அவற்றின் வாழிடங்களையும் எந்த வகையிலும் தொந்தரவு செய்வதில்லை என்கிறார்.

“ஒரு முறை திருச்சூரில் ஏரிக்கு அருகே பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு கழுகு, நீர்க்காகத்தை வேட்டையாடி இரையாக்கிக் கொண்டிருந்தது. இயற்கையின் பரிபூரணமே இந்த உணவுச் சங்கிலியில்தானே இருக்கிறது! கழுகை எந்த விதத்திலும் இடையூறு செய்யாமல் போதுமான தொலைவில் நின்று படம் எடுத்தேன். தங்களுக்கு நல்ல படம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பலரும் பறவைகளின் கூடுகளையும் உயிரினங்களின் பொந்துகளையும் கலைத்துவிடுகிறார்கள். சில நேரம் குஞ்சுகளையும் தொந்தரவு செய்கிறார்கள். உயிரினங்களுக்கு இது எத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை” என்று வருத்தம் தெரிவிக்கிறார் ரவிராஜா.

ravi_2952479a.png

ரவிராஜா

அவதானிப்பு தந்த புரிதல்

“கர்நாடகத்தில் உள்ள கபினிக்கு அருகே ஒரு காட்டில் படமெடுப்பதில் ஆழ்ந்திருந்தபோது, சிறுத்தையொன்று மரத்திலிருந்து இறங்கி வந்ததைக் கடைசி நேரத்தில்தான் உணர்ந்தேன். அது என்னை உற்றுப் பார்த்த நொடிகள் அற்புதமானவை” என்கிறார் ரவிராஜா.

பறவைகளையும் விலங்குகளையும் இப்படி அவதானிப்பதன் மூலமாகச் சுற்றுச்சூழல் குறித்த புரிதல் இவரிடம் அதிகரித்திருக்கிறது. இயற்கை செழிக்கும் பெரும்பாலான ஏரிகள் பிளாஸ்டிக் கழிவால் நிரம்பியிருப்பதைப் பற்றி கவலை தெரிவிக்கும் இவர், சூழலியல் பாதுகாப்பில் ஒவ்வொருவரும் அக்கறையுடன் ஈடுபட வேண்டும் என வலியுறுத்துகிறார்.

bird3_2952525a.PNG

“நிறைய பேர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி பேசுகிறார்கள். காடுகளை அழிப்பதற்கு எதிராகவும் குரல்கொடுக்கிறார்கள். பெரும்பாலும் பேச்சோடு நின்றுவிடுகின்றன. எதையுமே செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தால் மட்டுமே, உலகில் எஞ்சியிருக்கும் காட்டுயிர்களைப் பாதுகாக்க முடியும்” என முடிக்கிறார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

கங்கைக்கொரு கீதம்!

 

 
 
ganga_2950998f.jpg
 

‘மிலே சுர் மேரா தும்ஹாரா’ - 1988-ல் சுதந்திர தினத்தன்று வெளியிடப்பட்டது இந்த இசை வீடியோப் பதிவு. இதற்கு நிகரான தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது தூய கங்கைத் திட்டத்திற்காக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் ‘நமாமி கங்கே கீதம்’.

இந்த கீதத்தை முழுக்க முழுக்கத் தயாரித்து இயக்கியவர்கள் மூன்று தமிழ் இளைஞர்கள் என்பது நாம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய விஷயம். ‘திருச்சூர் பிரதர்ஸ்’ என்று அழைக்கப்படும் கிருஷ்ணா மோகன், ராம்குமார் மோகன் எனும் இரண்டு இளைஞர்கள் கர்நாடக இசையில் கலக்கிக் கொண்டிருப்பவர்கள். இயக்குநர் கவுதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணி செய்தவர் தீபிகா சந்திரசேகரன். இந்த மூவர் கூட்டணிதான் ஒன்றரை ஆண்டுகள் உழைத்து ‘நமாமி கங்கே கீதத்தை’ உருவாக்கி இருக்கிறது.

இவர்களுக்கு இப்படியொரு யோசனை எப்படித் துளிர்த்தது? கீதத்தின் விஷுவலைசேஷன் மற்றும் கிரியேட்டிவ் இயக்குநர்களில் ஒருவருமான திருச்சூர் பிரதர்ஸின் ராம்குமார் மோகன் அதை விவரித்தார். “செப்டம்பர் 2014-ல் அமெரிக்கா சென்றிருந்த நமது பிரதமர் மோடி அங்கே, கங்கையின் புனிதம் பற்றியும் அது மாசுபடுத் தப்பட்டுக் கிடப்பது பற்றியும் பேசினார். கங்கையை எப்படியாவது தூய்மைப்படுத்திவிட முடியாதா என்ற ஆதங்கம் அவரது பேச்சில் இருந்தது. அந்த உரைதான் எங்களை நமாமி கங்கே கீதம் இசைக்க வைத்தது.

தேசத்திற்காக ராணுவ வீரர்கள் தங்களை அர்ப்பணித்துக்கொள்வதுபோல இந்தியர்கள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு விதத்தில் இந்த தேசத்திற்கான தங்களது பங்களிப்பைச் செய்யத் தாமாக முன்வரவேண்டும். அப்படித்தான், ‘நமாமி கங்கே’ திட்டத்தை பிரதமர் அறிவித்தபோது, இதற்காக நாமும் எதையாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எங்களை முன்னோக்கித் தள்ளியது. நமக்குத் தெரிந்த இசை மொழி யில் ஏதாவது செய்தாலென்ன என்று யோசித்தோம். அதில் பிறந்தது தான் நமாமி கங்கே கீதம்’’ என்றார்.

இரண்டே நாளில் நமாமி கீதத்தின் இசை வடிவத்தை உருவாக்கிய திருச்சூர் சகோதரர்கள், அடுத்து, தங்களது திரைத்துறை நண்பரான தீபிகா சந்திரசேகரனின் கூட்டணியோடு இசைக்கு ஏற்ற காட்சி அமைப்புகளைப் படம்பிடிக்கக் கிளம்பினார்கள். வாராணசியில் ஆண்டு தோறும் ‘தேவ் தீபாவளி’ கொண்டாடப்படும். அப்போது, கங்கைக் கரையில் ஐந்து லட்சம் விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள். முதல் கட்டமாக அந்த நிகழ்வையும் வாராணசியின் பிற கங்கைப் பகுதிகளையும் படம் பிடித்து மாதிரி வீடியோப் பதிவு ஒன்றை உருவாக்கியது திருச்சூர் பிரதர்ஸ் குழு.

அடுத்த கட்டமாக நகர்வதற்கு முன்பாக, இதை அரசின் பங்களிப்போடு செய்தால் என்ன என்ற கேள்வி மூவர் மனதிலும் உதிக்கிறது. உடனே, தாங்கள் எடுத்த மாதிரி வீடியோவோடு தங்கள் மனதில் உள்ள யோச னையையும் மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினார்கள். அதிகமில்லை.. பதினைந்தே நாளில் பதில் வந்தது. ‘உங்களது தீம் எங்களுக்குப் பிடித்திருக்கிறது. இதையே இன்னும் விசாலமாக ஒட்டுமொத்த கங்கையையும் காட்சிப்படுத்தும் விதமாக ஒரு வீடியோ பதிவைத் தயார் செய்யுங்கள்’ என்று சொன்னது மத்திய அரசு.

இந்தச் செய்தி மூவருக்கும் மகிழ்வின் எல்லையைத் தொட்டுக்காட்டியது. நமாமி கங்கே கீதத்தைத் தயாரித்து முடிப்பதற்கான ஒட்டுமொத்தச் செலவையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என பாரத ஸ்டேட் வங்கி சொன்னது. பிறகென்ன.. கங்கை உற்பத்தியாகும் உத்தராகண்டின் ‘கோமுக்’ நோக்கிப் புறப்பட்டது திருச்சூர் பிரதர்ஸ் குழு.

ganga2_2951002a.png

கங்கை நதி

“இசைக் கலைஞர்களையும் சேர்த்தால் எங்கள் குழுவில் மொத்தம் 60 பேர். இதில் களத்துக்குப் போய் காட்சிகளைப் படம்பிடித்து வந்த குழுவில் சுமார் 30 பேர் இருந்தார்கள். உத்தராகண்டில் தொடங்கும் கங்கை நதி ஐந்து மாநிலங்களில் வளைந்தோடி வங்கத்தில் கலக்கிறது. வீடியோப் பதிவைப் பார்ப்பவர்கள், ‘இவ்வளவு மோசமாகி விட்ட கங்கையை இனிமேல் ஒன்றுமே செய்ய முடியாது’ என்று நினைக்கக் கூடாது. நாமும் கைகோர்த்தால் கங்கையைத் தூய்மைப்படுத்தி விடலாம்’ என்ற எண்ணம் அவர்களுக்குள் உதிக்கவேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். இதற்காக ஐந்து மாநிலங்களிலும் கங்கையின் முக்கியப் பகுதிகளுக்குச் சென்று காட்சிகளைப் படம்பிடித்தோம்” என்கிறார் கிருஷ்ணா மோகன்.

காட்சிகள் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகப் பிரபல ஒளிப்பதிவாளர்கள் தினேஷ் கிருஷ்ணன், பிரேமல் ராவல் ஆகியோரின் கேமராக்களைக் கொண்டுபோய் களத்தில் நிறுத்தியிருக்கிறார்கள். இமயமலையை ஒட்டிய பகுதிகளை ஹெலிகாப்டரில் பறந்து சென்று தொட்ட இந்தக் குழுவினர், கங்கை உற்பத்தியாகும் ‘கோமுக்’ பகுதிக்கு 20 கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டிய சவாலையும் எதிர்கொண்டார்கள்.

கங்கை நதி இந்துக்களுக்கோ வடஇந்தியர்களுக்கோ மட்டும் சொந்தமானதல்ல. இந்தியர்கள் அனைவரும் போற்றிக் கொண்டாட வேண்டிய புனித நதி அது என்பதை, நமாமி கங்கே கீதத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். 6.12 நிமிடங்கள் கண்களைக் குளிரவைக்கும் நமாமி கீதத்தில் 40 விநாடிகள் வரும் நடனக் காட்சியில் இந்தியாவின் நான்கு திசைகளிலும் பிரபலமான நடனக் காட்சிகளை அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இதற்காக 60 நடனக் கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

“மழை, வெள்ளம், கடுமையான தட்பவெட்பச் சூழல் இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு இந்தக் காட்சிப் பதிவை உருவாக்கி இருக்கிறோம். ஒலி, ஒளிப் பதிவுகள் சர்வதேசத் தரத்தில் கையாளப்பட்டுள்ளன. நாங்கள் உருவாக்கிய இந்த கீதத்திற்கு அரசு அளித்த அங்கீகாரமும் மக்கள் தந்திருக்கும் வரவேற்பும் ஒன்றரை வருட உழைப்பு தந்த களைப்பை எல்லாம் போக்கிவிட்டன’’ என்கிறார் தீபிகா சந்திரசேகரன்.

deepika_2950995a.png

தீபிகா சந்திரசேகர்

திருச்சூர் சகோதரர்களின் நமாமி கங்கே கீதம் ஜூலை 7-ல் ஹரித்துவாரில் நடந்த விழாவில் முறைப்படி வெளியிடப்பட்டது. கடந்த இருபது நாட்களுக்குள் முகநூல் மற்றும் ‘யூ டியூப்’ வழியாகப் பத்து லட்சம் பேர் வரை நமாமி கீதத்தைப் பார்த்து ரசித்திருக்கிறார்கள் என்று சொல்லும் ராம்குமார் மோகன், “குட்லக் திருச்சூர் பிரதர்ஸ் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானே ட்விட்டர் வழியாக எங்களுக்கு வாழ்த்துச் சொல்லி இருக்கிறார்’’ என்கிறார் பெருமிதத்துடன்.

thirupur_2950996a.png

'திருச்சூர் பிரதர்ஸ்'

‘இவ்வளவு மோசமாகி விட்ட கங்கையை இனிமேல் ஒன்றுமே செய்யமுடியாது’ என்று நினைக்கக் கூடாது. நாமும் கைகோர்த்தால் கங்கையைத் தூய்மைப்படுத்தி விடலாம்’ என்ற எண்ணம் அவர்களுக்குள் உதிக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். இதற்காக ஐந்து மாநிலங்களிலும் கங்கையின் முக்கியப் பகுதிகளுக்குச் சென்று காட்சிகளைப் படம்பிடித்தோம்

tamil.thehindu

  • தொடங்கியவர்
மனசு சாய்ந்திடும் பக்கம் சாய்தல் கூடாது
 
 

article_1469590390-yutri.jpgஇழக்கத் தயாரானவர்கள் அழவே மாட்டார்கள். எல்லாமே யதார்த்தம் - எதுவுமே எந்நேரத்திலும் நடக்கும் என்று மனமார உறுதியுடன் வாழ்க்கையின் ஒவ்வொரு கணங்களையும் எதிர்கொள்பவர்களுக்கு சோகம் என்பது பெரிதாகத் தாக்காது.

நாம் எல்லோருமே சமானியமான மனிதர்கள்தான். ஆசாபாசத்துடன் வாழ்ந்தே வருகின்றோம். எனவே எதனையும் சந்திக்கத் தயாராகும் நிலையினை உருவாக்குவது எளிதுமல்ல‚

ஆயினும் சின்னச் சின்ன விஷயங்களுக்காக சலனம், சஞ்சலத்தை விலக்கி வாழப் பழகவேண்டும். இதுவே எம்மைப் படிப்படியாக மாற்றியமைத்துப் பக்குவப்படுத்தி வைக்க உதவும்.

மனசு சாய்ந்திடும் பக்கம் சாய்தல் கூடாது. அறிவை ஸ்திரமாக்குதல் மேலானது. நிறைவான வாழ்விற்கு இதுவே வழி‚

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

"கையை விட்டுப் போன" பணம் 10 ஆண்டுக்குப் பின் திரும்ப வந்தது !

 

உங்களில் பலர் பண நோட்டுகளில் விளையாட்டாக உங்கள் கையெழுத்தைப் போட்டு புழக்கத்தில் விட்டிருப்பீர்கள் . எத்தனை பேருக்கு அவ்வாறு அவர்கள் கையெழுத்து போட்ட பண நோட்டுகள் திரும்ப வந்து சேரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது ?

தனது பதின்ம வயதில் விளையாட்டாக கையெழுத்து போட்ட ஒரு 10 பவுண்டு நோட்டு மீண்டும் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தனக்கே வந்து சேர்ந்த ஆச்சரியத்தை ஒரு பிரிட்டிஷ் இளைஞர் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்.

160129135651_a_sterling_pound_note_624x3
 

இங்கிலாந்து பிரதேசமான ஸ்டாஃப்ஃபோர்ட்ஷயரில் வசிக்கும் அலெக்ஸ் கேம்ப்பெல் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு 10 பவுண்டு நோட்டில் விளையாட்டாக தன் கையெழுத்தைப் போட்டு புழக்கத்தில் விட்டார்.

இப்போது அவரது நண்பர் ஒருவர் லண்டனில் உள்ள தானியங்கி பணம் தரும் இயந்திரத்திலிருந்து பணம் எடுத்தபோது, அவர் கையெழுத்திட்ட அந்த 10 பவுண்டு நோட்டு மீண்டும் வந்தபோது அவர் ஆச்சரியமடைந்தார்.

பொதுவாக இது போல ஒருவர் கையைவிட்டு போன அதே நோட்டு மீண்டும் அவர் கைக்கே வருவதற்கான வாய்ப்புகள் புள்ளிவிவரயியல் ரீதியாக மிகவும் சொற்பமே என்று கருதப்படுகிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு புள்ளிவிவரயியலாளர் ஒருவர் கூறுகையில், பொதுவாக கரன்சி நோட்டுகள் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதால், ஒரு நோட்டு சில ஆண்டுகளுக்குப் பின் புழக்கத்தில்கூட இருப்பதற்கான வாய்ப்பு என்பது 0.1 சதவீதம்தான் என்று கூறினார்.

எப்படியோ, "கையை விட்டுப் போன பணம்" திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் போலும் அந்த பிரிட்டிஷ்காரர் !

BBC

  • தொடங்கியவர்
 
 
 
Vikatan EMagazines Foto.
 

ஆகஸ்ட் 1: உலக தாய்ப்பால் தினம் இன்று.

தாய்ப்பாலைவிட நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட சிறந்த உணவோ மருந்தோ குழந்தைகளுக்கு வேறு எதுவுமே இல்லை என்பதை வலியுறுத்தும் தினமாக கொண்டாடப்படுகிறது

 

தாய்மை வரம் என்றால் தாய்ப்பால் வரப்பிரசாதம். கருத்தரித்த நாள் முதல் அந்த சிசுவிற்காகவே தாயின் உடலும் மனமும் பழக்கப்படுகிறது. இயற்கையான பிரசவம் என்றால் அரை மணி நேரத்திற்குள்ளும், அறுவை சிகிச்சை என்றால் ஒன்றரை மணி நேரத்திற்குள்ளும் தாய்ப்பால் புகட்ட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் அதன் ஸ்பரிசத்தைத் தேடும் தாயும், அவளின் பால் வீச்சத்திற்கு, கதகதப்பிற்கு ஏங்கும் குழந்தையின் துடிப்பையும் எந்த மெசின்களாலும் கண்டறிய முடியாது. அன்பையும் நேசத்தையும், ஆரோக்கியத்தையும் குழைத்து மார்பில் அணைத்தபடி தன் குழந்தைக்கு கலப்படமற்ற பால் புகட்டும் ஒரு தாயின் மன அமைதி வேறெதில் கிடைக்கப் போகிறது.

மார்பில் சுரக்கும் மாமருந்து!

mother%20milk200.jpgதாய்மை இந்த தேசத்தின் ஆகச் சிறந்த அழகு. சிலருக்கு வாய்க்கிறது. பலருக்கு வாய்க்காமல் போகிறது. அந்த ஒரு சிலரும், நடைமுறை விசயங்களை தொலைகிறபோதுதான், நினைவூட்டு நாட்கள் அவசியமாகிறது. உலகத் தாய்ப்பால் வாரம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் ஒன்று முதல் ஏழு தினங்கள் கொண்டாடப்படுகிறது.

யுனெஸ்கோவும், உலக சுகாதார நிறுவனமும் பிரபஞ்சத்தின் மத்தியில் நின்றுகொண்டு தாய்ப்பால்… தாய்ப்பால் எனத் தலையில் அடித்துக் கதறுகிறது. மருத்துவமனைகள், ஆட்சியர் அலுவலகங்கள், சமுதாயக் கூடங்கள், கல்லூரிகள், பள்ளிகள் எனக் களமிறங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தச் சொல்கிறது. AAP எனச் சொல்லப்படும் THE AMERICAN ACADEMY OF PAEDIATRICS உம் தாய்ப்பால் புகட்டுதலை மிகத் தீர்க்கமாக வலியுறுத்துகிறது. நாம் என்ன செய்கிறோம், இதெற்கெல்லாமா நோட்டீஸ் கொடுப்பீர்கள் சே... எனச் சலித்துக்கொண்டு துண்டுச்சீட்டுகளைச் சுருட்டி தெருவோரம் வீசிவிட்டுப் போகிறோம். ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால் புரியும். ஒரு தாயிடம், அவள் குழந்தைக்கு, அவள் பாலை புகட்ட, அவளிடமே கெஞ்சிக் கொண்டிருப்பது எத்தனை அபத்தம் என்பது. இது உலகளாவிய உணர்வுப் பிரச்னை.

பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் என்பதற்குள் அடக்கிப் பார்க்கிற விசயமாகத் தெரியவில்லை. எந்தச் சூழலுக்குள்ளும் சிக்காத தாய்க்கும் சேய்க்குமான பேரன்பாகத்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு குழந்தை என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமான ஒப்பந்தம் என்று எப்படிச் சுலபமாகக் கடந்து போய்விட முடியும். இந்தச் சமூகத்தின் துளிர். தேசத்தின் அடையாளம் அல்லவா. அப்படியானால் அதை எப்படி ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க வேண்டும். தாயிலிருந்துதான் துவங்க வேண்டும் இந்த பங்களிப்பு.

2015-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் ஐந்து தாய்மார்களில் நான்கு பேர் தாய்ப்பால் கொடுப்பதில்லை என்ற பேரதிர்ச்சியை யுனெஸ்கோ முன்வைக்கிறது. கல்வியில் மிகவும் பின் தங்கிய சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் கூட ஐம்பது சதவீதம் பேர் தாய்ப்பால் புகட்டுகின்றனர். ஆனால், தமிழகத்தில் 18.8% குறிப்பாகச் சென்னையில் 7% தாய்மார்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதாகப் புள்ளிவிவரங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

தாய்மை வரம் என்றால் தாய்ப்பால் வரப்பிரசாதம். கருத்தரித்த நாள் முதல் அந்த சிசுவிற்காகவே தாயின் உடலும் மனமும் பழக்கப்படுகிறது. இயற்கையான பிரசவம் என்றால் அரை மணி நேரத்திற்குள்ளும், அறுவை சிகிச்சை என்றால் ஒன்றரை மணி நேரத்திற்குள்ளும் தாய்ப்பால் புகட்ட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் அதன் ஸ்பரிசத்தைத் தேடும் தாயும், அவளின் பால் வீச்சத்திற்கு, கதகதப்பிற்கு ஏங்கும் குழந்தையின் துடிப்பையும் எந்த மெசின்களாலும் கண்டறிய முடியாது. அன்பையும் நேசத்தையும், ஆரோக்கியத்தையும் குழைத்து மார்பில் அணைத்தபடி தன் குழந்தைக்கு கலப்படமற்ற பால் புகட்டும் ஒரு தாயின் மன அமைதி வேறெதில் கிடைக்கப் போகிறது.

அம்மாவிற்கும் குழந்தைக்குமான உளவியல் ரீதியானத் தீண்டல், அரவணைப்பு, பாதுகாப்பு போன்ற அனுசரனைகளை எப்படி செயற்கைப் பாலில் எதிர்பார்க்க முடியும். ஊர் கூடித் தேர் இழுக்குறீர்களே? அப்படி என்னதான் இருக்கிறது தாய்ப்பாலில் என்ற கேள்வியை முன் வைத்தால் இவைகள்தான் பதில். குழந்தை பிறந்து முதல் இரண்டு நாட்கள் சுரக்கும் ‘கொலாஸ்ட்ரம்’  எனும் சீம்பாலில் தான் குழந்தைக்கு நோயை அண்டவிடாத ஆண்டிபாடிஸ் தடுப்பு மருந்து இருக்கிறது. குழந்தைக்கு ஆறு மாதங்கள் கண்டிப்பாகத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு ஒரு வருடமாவது தாய்ப்பாலுடன் சேர்ந்த இணை உணவு அவசியம். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் நரம்பு மண்டலத்திற்கும் வலு சேர்க்கக் கூடிய, எளிதில் செரிக்கும் புரதம், கொழுப்பு, கால்சியம், இரும்பு, மாவுச்சத்து இவைகளோடு வைட்டமின்களும் தாய்ப்பாலில் அதிகம் நிறைந்துள்ளன.

குழந்தைக்கு வரும் ஊட்டச் சத்துக் குறைபாடுகளில் இருந்து இவை காப்பதோடு டையாபடிஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களை அண்டவிடாமல் தடுக்கும் எனவும் மருத்துவம் கூறுகின்றது. அத்துடன் தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டம் கர்ப்பத்தடைக்கான நாட்களாகவும் கருதப்படுகிறது. பிட்யூட்டரியில் சுரக்கும் ஆக்ஸிடோஸின், கருப்பையை சுருங்கச்செய்து பிரசவக் காலத்து உதிரப் போக்கிலிருந்து தாயைக் காக்கிறது. தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு மார்பகப் புற்று மற்றும் சினைப்பை புற்றுநோய் வரும் தன்மையும் தடுக்கப்படும் என்கிறது இந்திய மருத்துவக் கழக ஆராய்ச்சி.

Pregnant200.jpgஎத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் தாய்க்கும் மகனுக்கும், தாய்க்கும் மகளுக்குமான அன்பைத் தகர்க்க முடியுமா? பிரசவத்தின்போது குழந்தை இறந்து, பால் கொடுக்க முடியாமல் அவதிப்படும் ஒரு கிராமத்து தாயின் மார்பகத்தில் இருந்து, ஒருவார காலம் தன்னியல்பாக வழிந்தோடும் நெகிழ்ச்சியை, மல்லிகைப் பூக்கள் கொண்டு கட்டுப்படுத்தும் அவளின் உயிர் வலியை நகரத்தின் எந்த அழகுநிலையம், மஸ்காரா போட்டு மறைக்கும்.

என் குழந்தை என் ரத்தம், என் உணர்வு என்கிற நிலையில் தன்னுள் சுரக்கும் உணவை தன் ஜீவனுக்கு ஊட்டி உயிர்த்தெழச் செய்பவள்தானே தாய். குழந்தை பிறந்தபிறகு கொடுக்கும் மருந்துக் குழம்பும் பத்தியச் சாப்பாடும் நான் தாயாகி விட்டேன் என்கிற உன்னதத்தை அவளுக்குள் கிளர்த்திவிடுமே. பாலில் வேகவைத்த பூண்டு, திருக்கை மீன் குழம்பு, சுறாப்புட்டு, வெண்டைக்காய் வதக்கல் எனப் பால் சுரக்கும் டிப்ஸ்களும், மாம்பழம் மாந்தம், பலாப்பழமா கூடவே கூடாது குழந்தைக்கு ஆகாது எனக் கடிந்து கொள்ளும் பாட்டிகளுக்கும்,  இன்றைய இளம் தாய்கள் சொல்கிற பதில், நாங்கள் வேலைக்குச் செல்கிறோம். இதெல்லாம் சரிப்பட்டு வராது என்பதுதான்.

அரசு வேலைக்குச் செல்பவர்களுக்கு அரசாங்கம், அதிகப் படியான பேறுகால விடுமுறைச் சலுகைகள் வழங்குகிறது. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களும் காரணம் சொல்கிறார்கள். எங்களுக்கு ஓரிரு மாதங்கள்தான் விடுமுறை. பிரெஸ்ட் பீடிங்கா... நோ சான்ஸ் என்கிறார்கள். மனம் புறக்கணிக்கிறபோது அறிவியல் அவசரமாக ஆட்கொள்கிறது. அம்மாக்களே அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் என்ற பதட்டத்தில், பிரெஸ்ட் பம்ப்புகள் மூலம் தாய்ப்பாலை எடுத்து குளிர்சாதனப் பெட்டிகளில் பதப்படுத்தி குழந்தைகளுக்கு கொடுக்கலாம் எனக் கண்டுபிடித்து விட்டார்கள். அறை வெப்ப நிலையில் 8 மணி நேரமும் பிரீசரில் 24 மணிநேரமும் வைக்கலாம். மேலும் 20’c-இல் மூன்று மாதங்கள் வரை கூடப் பதப்படுத்தி அதன் தன்மை மாறாமல் குழந்தைக்கு கொடுக்கலாம் என்கிறார்கள். ரத்த வங்கி போல தாய்ப்பால் வங்கியும் மெல்ல நடைமுறைக்கு வருகிறது.

இத்தனை இணக்கமான சூழல் இருந்தும், நஞ்சேறிய பவுடர்களை கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி தரிசான வாரிசுகளை உருவாக்கி வருகிறோமே ஏன்? வெளியில் சொல்ல முடியாத அந்த நெருடலில்தான்  குழந்தைகளின் இறப்பு விகிதம் கூடிக்கொண்டே போகிறது. தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்து விடும் என இன்றைய இளம் பெண்கள் கங்கணம் கட்டிவிட்டார்கள். எத்தனை வேதனை இது. இந்த அறியாமையை எப்படி போக்குவது என்பதில் மருத்துவம் உறைந்து நிற்கிறது.

போர்க்களத்தில் போரிட்டு வீர மரணம் எதிர்கொள்ளும் தருவாயில், வீரர்களின் உயிர் பிழைக்க தங்கள் மார்பகக் காம்புகளைப் பிழிந்து பால் ஊட்டிய சங்க இலக்கியத் தாய்களின் ஈரப்பதம் எங்கே போயிற்று. தாய்ப்பால் என்பது தாயிடமிருந்து குழந்தைக்கு கடத்தப்படும் கொழ கொழப்பான ஏதோ ஒரு திரவம் அல்ல. அது தாயின் அன்பு, அவளின் பாசம், ஊறிக்கிடக்கும் அவளது அறிவு, மடைமாற்றம் செய்யப்படும் மூதாதையரின் குணம். இப்படி அணு அணுவாய் அனுபவித்து குழந்தைக்குத் தாயாகி மகிழும் நிலையான அழகைவிட, நிறப்பூச்சுகளில் மயங்கி, சுருக்கம் விழக் காத்திருக்கும் நீர் வற்றிய வெற்றுத் தோல் எப்படி அழகாகும். அழகின் அறியாமையை பெண்கள் அறிந்துகொண்டால்தான்  ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.

எத்தனை புள்ளி விவரங்களைக் கோடிட்டாலும், தாய்மை அளப்பறியது. தன்னிலை உணர்தல் அழகு. இளம்பெண்கள் அதை முதலில் தீர்மானிக்க வேண்டும். ஆதிக் கிழவிகள் விட்டுச் சென்ற தாயன்பின் எச்சத்திலேனும், குழந்தை பிறந்ததும் மருத்துவமனைக்கு உங்களைப் பார்க்க வரும் நண்பர்களின் உறவினர்களின் கைகளில் இருக்கும் செயற்கை பால் டப்பாக்களையும், பால் புட்டிகளையும் மறுத்துவிடுங்கள்.

உங்கள் குழந்தைக்கு நீங்கள் உணர்வுப் பால் புகட்டும் அன்னியோன்யத்தை தோழிகள் நெக்குருகப் பார்க்க வேண்டும். அவர்கள் மகள்களை மகன்களை ஓடிச்சென்று மார்போடு அணைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தாயின் மார்பில் சுரக்கும் வாஞ்சையால் மட்டுமே தாய்பால் புகட்டும் உள்ளொளி ஒளிரும். என் குழந்தையின் எதிர்காலத்திற்காகத்தான் உழைக்கிறேன் என இரவும் பகலுமாய் பட்டினிப்போட்டு விட்டு ஆளாய் பறக்குறீர்களே. உங்கள் மார்பில் ஊறும் ஒரு சொட்டுப் பாலையேனும் அந்தக் குழந்தையின் நாவில் ஊற்றி நனைத்து விட்டுப் போங்கள். உங்களை மட்டுமே நம்பிக் கண் விழித்த பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுங்கள். வீட்டிற்கு மட்டுமல்ல இது நாட்டிற்குச் செய்யும் சேவையும் கூட.

vikatan

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p106a.jpg

facebook.com/mahesh.subramanian.180:

பெங்களூரின் முக்கிய வீதிகளில், அவ்வப்போது ஒரு நபர் பீட்சா மற்றும் மேக்ஸ் போன்ற பெரும் துணி நிறுவனத்தின் விளம்பரம் பதித்த, மின்விளக்குப் பொருந்திய பலகையை முதுகில் சுமந்து செல்வதைப் பார்க்க முடிகிறது. மார்கெட்டிங்குக்கு எத்தனையோ வழிகள் இருக்கும்போது, இப்படி எல்லாமா ஒரு மனிதனைக் காட்சிப்பொருள் ஆக்குவது? உட்கார்ந்து யோசிப்பார்கள்போல... புதுப்புது வழிகளைத் தேடி. என்றைக்கு உயிருள்ள மனிதனை resource என விளிக்க ஆரம்பித்தார்களோ, அன்றே அவனுக்கான சுயம் போனது!

twitter.com/sss_offl: இனிமேல் `Silence Please’னு போர்டு வைக்கிறதுக்குப் பதிலா, `WIFI பாஸ்வேர்டு’ எழுதிவெச்சா போதும்.குனிஞ்ச தலை நிமிரவே மாட்டாங்க!

twitter.com/naaraju: ஒரு கடையில, நாமதான் 'முதல் போணி'னு தெரிஞ்சா கடைக்காரய்ங்களைவிட நமக்குத்தான் அநியாயத்துக்குப் பதறுது!

twitter.com/Im_sme:  ஒரு நிமிஷ Gif வீடியோவையே forward பண்ணி பார்க்கிற அளவுக்குப் பொறுமை இழந்துபோயிருக்கோம்!

twitter.com/arattaigirl:  இனி சில நாட்களுக்கு பலரது உரையாடல்கள் இந்தவிதமாகத் தொடங்கும், `எப்படி இருக்கீங்க, வீட்ல எல்லாம் சௌக்கியமா, `கபாலி’ பாத்தாச்சா?'!

twitter.com/nithya_shre:  `அண்ணா’ எனச் சொல்லி பல கட்சிகள் வளர்ந்துள்ளன; பல காதல்கள் அழிந்துள்ளன!

twitter.com/mpgiri: எல்லாம் தெரிந்த பரமாத்மாவுக்கே தெரியாதது ஒன்று உண்டு என்றால், அது... இலையில் ஊற்றிய ரசம் எந்தப் பக்கம் செல்லும் என்பதுதான்!

twitter.com/MrElani: வேட்டி கட்டிக்கிட்டு பைக் ஓட்டுறதைவிட மானம்கெட்ட பொழப்பு வேற எதுவும் இல்லை. `பாகுபலி’ தமன்னாவோட  துப்பட்டா மாதிரி ரெண்டு பக்கமும் பறக்குது!

twitter.com/srivishiva: குழந்தையின் காய்ச்சலுக்கு, குடும்பமே துவண்டுவிடுகிறது!

twitter.com/twittornewton: திருநீறு கையில் வாங்கினால், கையைத் துடைக்கணும்னுட்டு டைரக்டா அர்ச்சகர்கிட்டேயே நெத்தியைக் காட்டிப் பூசச் சொல்லிவிடுகிறான் மகன். # strategy.

p106b.jpg

twitter.com/ChutiiPaiyan: ஒரு #selfie எடுக்கவே 99 போட்டோ டெலிட் பண்ணவேண்டியிருக்கு. அப்போ வாழ்க்கையில ஜெயிக்க எவ்வளவு விஷயங்கள அழிக்க வேண்டியிருக்கும்!

twitter.com/senthilgs81: தன் வீட்டைத் தவிர மற்ற எல்லா இடங்களும் குப்பைத்தொட்டிதான், நம்ம ஆளுங்களுக்கு!

twitter.com/skpkaruna : நூறு வருஷங்கள் ஆகியும் இன்னமும் டெஸ்ட் மேட்ச் ரிக்கார்டுகள் செய்ய ஏதேனும் இருக்கு! #கோஹ்லிதான் வெளிநாட்டில் 200 அடித்த முதல் கேப்டனாம்!

twitter.com/navi_n:  `நாம் ஜெயிப்பது’, `எதிரி தோற்பது’ என வெற்றி இரண்டு வகைப்படும்!

twitter.com/teakkadai:கட்டும் சேலைக்கு மேட்ச்சாக, பெண்கள் தினமும் தங்கள் மொபைல் கேஸை மாற்றிக்கொண்டிருக்கும் வரை பூமி பூப்பூப்பதை நிறுத்தாது!

twitter.com/skpkaruna:  `அந்த மூன்று லாரிகளின்’ பதிவெண்களும் மோட்டார் பைக் எண்களாம் # அப்போ... பைக்ல அவ்வளவு பணத்தைக் கொண்டுபோயிருக்க முடியாதுனு கேஸை முடிங்கப்பா!

twitter.com/CGunaraja:

ஆசிரியர் : சீனப் பெருச்சுவர் ஏன் அதிசயங்களில் ஒன்று?

மாணவன்: ஏன்னா சைனாக்காரன் தயாரிப்பிலே அதுதான் சார்  ரொம்ப நாளா உருப்படியா இருக்கு!

twitter.com/twittornewton: `நம்மால் முடியாது’ என நினைப்பது தன்னம்பிக்கைத் துரோகம்!

twitter.com/iMaandiyar: டேய்... அது என்னங்கடா அடுத்தவன் காலை மிதிச்சுட்டு, உங்கள் கையில முத்தம் குடுத்துட்டுப் போறீங்க :(

p106c.jpg

twitter.com/chevazhagan1: டாஸ்மாக் பார்ல போன் வந்ததும் ஒருத்தன் தனியா போய்ப் பேசுறான்னா, போன் பண்ணது ஒண்ணு பொண்டாட்டியா இருக்கணும்; இல்ல மேனேஜரா இருக்கணும்!

facebook.com/navishsenthilkumar:

`தலைக்கு மேலே பிள்ளையைத் தூக்கக் கூடாது’ என பெரியவர்கள் சொல்லிவைத்தது எல்லாம் மடமை என நினைத்திருந்தேன். அது முற்றிலும் உண்மை மக்கா. அனுபவித்தவன்தான் சொல்லி வைத்திருக்கிறான். தலைக்கு மேலே தூக்கிப் பிடிக்கும்போது சரியாக வாயில் உச்சா போய்விடுகிறார்கள்!

facebook.com/VignaAchuthan:

``கவனிச்சீங்களா... டெரக்கோட்டா ஜூவல்லரி இப்ப ஃபேஷன் இல்ல... எல்லாம் சில்க் த்ரெட்தான் போடறாங்க.’’

``பட்டுப்புடவையில முன்ன மாதிரி மஸ்டர்ட் பார்டர் வர்றது இல்லைபோல.’’

``இப்ப புடவையை சாதாரணமா வாங்கிட்டு ப்ளவுஸை கிராண்டா தைச்சுக்கிறாங்க இல்லைங்க?’’

``ஐ.டி ஆசாமியைக் கல்யாணம் பண்ணிண்டா ஒரு நல்லது... நமக்கு முன்னாடி அவங்களுக்கு நரைச்சுடும்.’’

அவர்: ``ஏம்மா... எல்லாம் கவனிக்கிற, மேடையில பொண்ணு-மாப்பிள்ளையப் பார்க்க மாட்டியா? மண்டபம் மாத்தி வந்து உட்கார்ந்திருக்கோம்!''

facebook.com/raghavan.pa:

நாலாவது ரீல் ஓடும்போது நைஸாக ஏசியை நிறுத்தும் தியேட்டர்காரனைப்போல் நடுராத்திரி பவர்கட் செய்கிறான் மின்வாரியன்.

facebook.com/mani.pmp.5:

ஒரு கிராமம் நகர்மயமாதலின் முதல் படி, ஊரில் ஒரு காம்ப்ளெக்ஸ் கட்டுதலே!

p106d.jpg

facebook.com/VignaAchuthan:

நாய் வளர்ப்பவர்கள் தங்கள் அதீதப் பிரியத்தால், `ஜிம்மி, உங்கக்கா வந்திருக்கா பாரு' என்கிறார்கள், நாம் உள் நுழைந்ததும்.

facebook.com/uma.gowri.98:

அமைதிப்பூங்காவே இப்படியாக இருப்பின், ரண பூமி எப்படியாக இருக்கும்?

Whatsapp: ஒரு வாக்கியத்தை ஆரம்பிக்கும்போதே மனைவிகள் மனநிலையை கெஸ்பண்ணலாமே!

‘‘ஏங்க... அத்தை சொன்னாங்க...’’

‘‘ஏங்க... உங்கம்மா சொன்னாங்க...’’

vikatan

  • தொடங்கியவர்

13882552_1190783634313758_43592201524502

ஆகஸ்ட் 1: உலக சாரணர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

  • தொடங்கியவர்
பரசூட் இல்லாமல் 25,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை படைத்த ஸ்கை டைவிங் நிபுணர்!
 

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஸ்கை டைவிங் நிபுணரான லூக் அய்கின்ஸ் பராசூட் உதவியில்லாமல் 25,000 அடி (7,600 மீற்றர்) உயரத்திலிருந்து குதித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

 

18314jump.jpg

 

ஸ்கை டைவிங்கில் ஈடுபடுபவர்கள் பல்லாயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானங்களிலிருந்து பரசூட் உதவியுடன் குதித்து பறந்தவாறு கீழிறங்குவது வழக்கம்.

 

இச் சாகசத்தில் ஈடுபடுபவர்களின் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்கு பரசூட் அத்தியாவசிய சாதனமாக கருதப்படுகிறது.

 

ஆனால், லூக் அய்கின்ஸ் பரசூட்டைப் பயன்படுத்தாமல் 25,000 அடி உயரத்திலிருந்து குதித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

 

18314Skydiver-Luke-Aikinsfdf-d.jpg

 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சிமி சமவெளியில் நேற்று முன்தினம் இச் சாகசத்தை அய்கின்ஸ் நிகழ்த்தினார். விமானமொன்றி லிருந்து 25,000 அடி, 7,600 மீற்றர் உயரத்திலிருந்து பரசூட் உதவியில்லாமல் குதித்த லூக் அய்கின்ஸ் மணித்தியாலத்துக்கு 193 கிலோமீற்றர் (120 மைல்) வேகத்தில் தரையை அடைந்தார்.

 

லூக் அய்கின்ஸ் நேரடியாக தரையில் விழவில்லை. பாரிய வலையொன்றின் மீது அவர் குதித்தார். விமானத்திலிருந்து குதித்து 2 நிமிடங்களில் அவர் மேற்படி வலையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

18314Luke-Aikins23.jpg

 

அய்கின்ஸின் மனைவி மற்றும் குடும்பத்தினரும் இவ் வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த சாதனையை நேரில் பார்வையிட்டனர்.

 

42 வயதான லூக் அய்கின்ஸ் விமான மற்றும் ஹெலிகொப்டர் விமானி யாவார். ஸ்கை டைவிங்கில் மிகுந்த அனுபவம் கொண்டவர் லூக் அய்கின்ஸ், தனது 25 வருடகால தொழிற்சார் வாழ்க்கையில் சுமார் 18,000 தடவைகளுக்கு மேல் அவர் ஸ்கை டைவிங்ல் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

 

18314Luke-Aikins99.jpg

 

ஸ்கை டைவிங்கில் தேர்ச்சி பெற்ற ஒருவருடன் இணைந்து மேற்கொள்ளப் படும் ஸ்கை டைவிங்கில் ஈடுபடுவது Tandem Jump என அழைக்கப்படுகிறது.

 

தனது 12 ஆவது வயதில் முதல் தடவையாக இத்தகைய ஸ்கை டைவிங்கில் ஈடுபட்ட லூக் அய்கின்ஸ் 16 ஆவது வயதில் முதல் தடவை யாக தனியாக ஸ்கை டைவிங்கில் ஈடுபட்டார்.

 

18314Skydiver-Luke-Aikinsfd-f.jpg

 

லூக் அய்கின்ஸின் தாத்தா 2 ஆம் உலக யுத்தத்தில் பங்குபற்றி வீடு திரும்பி யவுடன் ஸ்கை டைவிங் பயிற்சிப் பாடசாலை ஒன்றை ஆரம்பித்தார்.

 

வர்களின் குடும்பத்தில் 3 ஆவது தலைமுறையாக லூக் அய்கின்ஸ் ஸ்கை டைவிங்கில் ஈடுபடுகிறார். நேற்று முன்தினம் புதிய சாதனை படைத்தவுடன் அது தொடர்பில் லூக் அய்கின்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், 'அது ஏறத்தாழ பறப்பதைப் போன்று இருந்தது.

 

18314Untitled-1.jpg

 

அது நம்ப முடியாதது. நான் சொல்ல விரும்பும் வார்த்தைகள் எனது வாயி லிருந்து வெளிவர முடியவில்லை. இவர்கள் (அய்கின்ஸின் குழுவினர்) அனைத்தும் நடைபெறுவதை உறுதிப்படுத்தி விட்டார்கள்' என்றார்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஓ உலக இளைஞர்களே... கேர்ள் ஃப்ரெண்டே சரணம்! #Girlfriends Day

 

NI_4.jpg

ன்று உலக கேர்ள் ஃப்ரெண்ட் தினமாம். அவனவன் அனுபவிக்கும் கொடுமைகளில் இந்த தினத்தை கொண்டாடவா மனசு வரும்? இன்டக்ரல் கால்குலஸ் கணக்குகள் கூட புரிந்துவிடும். ஆனால் இந்த கேர்ள் ஃப்ரெண்டை சமாளிக்கும் வித்தை மட்டும் அவ்வளவு எளிதில் வசப்படாது. ஆட்கள் வேறு என்றாலும் கதைகள் ஒன்றுதான், என்பதால் உலக ஆண்களின் துயர் துடைக்க இந்த டிப்ஸ். ஃபாலோ பண்ணுங்க. ஹேப்பியா இருங்க.

* முதல் பிரச்னையே வாட்ஸ்-அப் லாஸ்ட் சீனில்தான் தொடங்குகிறது. 'நான் தூங்குனதுக்கு அப்புறமும் ஏன் ஆன்லைன்ல இருந்த?, ஏன் லாஸ்ட் சீன் ஹைட் பண்ண? போன்ற கேள்விகளை எல்லாம் சமாளிக்கவே முடியாது. இதற்கு பயந்து ஹைக் மெசஞ்சருக்கு ஜாகை மாறினால் அங்கும் வந்து, 'என்னை ஏன் ஃபேவரைட்டா மார்க் பண்ணல? என பிராணனை வாங்குவார்கள். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி, 'நோக்கியா' பேஸிக் மாடலிடம் சரணடைவதுதான். எவ்வளவு நேரம் பேசினாலும் சூடாகாது, கோபத்தில் தூக்கி எறிந்தாலும் கல்லு போல கிண்ணென இருக்கும் என இதில் பல பக்க பலன்கள் வேறு இருக்கின்றன.  

* பேய் வருவதற்கு நான்கைந்து அறிகுறிகள் இருப்பது போல சண்டை வருவதற்கும் அறிகுறிகள் இருக்கின்றன. அவற்றில் முதல் அறிகுறி, தென்படும்போதே உஷாராகிவிட வேண்டும். பேச்சுவாக்கில், 'சார்ஜ் கம்மியா இருக்கு, இந்த நெட்வொர்க் வேற கண்டெயினர் காசு மாதிரி காணாம, காணாம போயிடுது' என அவ்வப்போது எடுத்துவிட்டுக் கொண்டேயிருங்கள். சண்டை முற்றும் நொடியில் சட்டென கட் செய்து தப்பித்து விடலாம். எப்படியும் கொஞ்ச நேரத்தில் அந்தப்பக்கத்து புயல் கரை கடந்துவிடும். அப்புறம் போன் செய்து, 'நான்தான் அப்பவே சொன்னேன்ல சார்ஜ் இல்லனு, அதான் கட்டாயிடுச்சு' என சொல்லி சமாதானமாகிவிடுங்கள்.

NI_1.jpg

* அடிக்கடி ஹோட்டலுக்கு செல்ல வேண்டியது இருக்கும். ஆனால் பில்லை அவர்களை கட்டச் சொல்ல நம் கெத்து இடம் தராது. இதனால் நம் புண்ணியத்தில் ஹோட்டல் முதலாளி இன்னொரு கிளையே திறந்துவிடுவார். இதிலிருந்து தப்பிக்க, 'இந்த டிரஸ் உனக்கு செமையா இருக்கு, இதுக்கே நீ ட்ரீட் தரணும்', 'ஆபிஸ்ல இன்னிக்கு 8 மணிநேரம் வேலை பாத்தீயா? வாவ், இதுக்காகவே நீ ட்ரீட் தரணும்' போன்ற பிட்களை அடிக்கடி போடுங்கள். மாசக் கடைசியில் அதை சொல்லி நம் செலவைக் குறைக்கலாம்.

* படமோ, அவுட்டிங்கோ கண்டிப்பாக நாம் சொன்ன நேரத்துக்கு போய் ஆஜராகப் போவதில்லை. நம் நேரத்துக்கு அன்றைக்கென பார்த்து நம் கேர்ள் ஃப்ரெண்ட் வரும் சாலைகள் எல்லாம் சமத்துவ மக்கள் கட்சி போல வெறிச்சோடி இருக்கும் என்பதால் அவர்கள் கரெக்ட் டைமிற்கு வந்து கடுகடுத்துக் கொண்டிருப்பார்கள். சரி, திட்டு வாங்கிக் கொள்ளலாம் என அசால்ட்டாக செல்லாதீர்கள். 'வர்ற வழியில் உனக்கு பிடிச்ச பானிபூரி பார்சல் வாங்கிட்டு வந்தேன்' என சொல்வதற்கு வசதியாக எதையாவது வாங்கி அவர்கள் கையில் திணித்து விடுங்கள்.

* நம்மவர்கள் நிறைய பேர் செய்யும் தவறு இது. வீக்கெண்ட் பார்ட்டிக்கு எப்படியும் அந்தப்பக்கம் அனுமதி கிடைக்காது. 'நான் முக்கியமா, பார்ட்டி முக்கியமா? போன்ற உபரிக் கேள்விகள் வேறு. இதிலிருந்து தப்பிக்க, இந்த வாரம் ஒரு முக்கியமான கான்ஃபரன்ஸ் இருக்கு, ரிவ்யூ மீட்டிங் இருக்கு' என முன்பே சொல்லிவிடுங்கள். அப்புறம் பார்ட்டியிலும் கை, காலை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் 'உற்சாக' மிகுதியில் எதையாவது அனுப்புவோம். காலையில் அதை வைத்து மூன்றாம் உலகப்போர் நடக்கும். இதனால் முன்பே ஃப்ளைட் மோடுக்கு பறந்துவிடுவது உத்தமம்.

NI_5.jpg

* பொசஸிவ்னெஸ் - இரண்டு பக்கமும் குத்தும் கத்தி இது. வேறொரு பெண்ணிடம் பேசுவதைக் கண்டால், அவர்கள் முகம் கட்டாயம் தக்காளிப் பழமாகிவிடும். அதிலிருந்து தப்பிக்க, 'நீ போட்டுருக்கிற இந்த கலர் உன்னை விட என் ஆளுக்குதான் செமையா இருக்கும்னு அவகிட்ட சொன்னேன்மா' போன்ற பிட்டுகளை போடுங்கள். 'ஏண்டா இப்படி அபாண்டமா பொய் பேசுற?' என உங்கள் மனசாட்சி காறித் துப்பும்தான். அட, துடைச்சு போட்டு போங்க பாஸ்!

* நீங்கள் கால்ஷீட் நிரம்பி வழியும் சினிமா ஸ்டாராகவே இருந்தாலும் சரி, மணிக்கணக்கில், மைல்கணக்கில் அவர்களோடு திரிந்து ஷாப்பிங் செய்தே ஆகவேண்டும். அந்த நேரத்தில் காட்டுத்தனமாக போர் அடிக்கும். இதிலிருந்து தப்பிக்க லேட்டஸ்ட்டாக ஒரு உபாயம் இருக்கிறது. போக்கிமான் கோ விளையாட தொடங்கிவிடுங்கள். பிக்காச்சுவை பிடித்தமாதிரியும் ஆச்சு, பிடித்தவர்களோடு நடந்த மாதிரியும் ஆச்சு.

* 'நான் உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்' என அந்தப்பக்கத்திலிருந்து மெசேஜ் வந்தால் நீங்கள் அவர்களிடம் சொல்லாத ஏதோ ஒரு விஷயம் அவர்களுக்கு தெரிந்துவிட்டதென்று அர்த்தம். உடனே 'நான் எல்லாம் ரொம்ப உத்தமனாக்கும்' என சீன் போடாதீர்கள். கண்ணை பார்த்து கபக்கென பிடித்துவிடுவார்கள். 'என் கஷ்டம் என்னோட போகட்டும், நீ சிரிச்சாதான் அழகா இருப்ப, இதெல்லாம் சொல்லி உன்ன அழ வைக்க விரும்பல' போன்ற விக்ரமன் பட டயலாக் எல்லாம் அள்ளிவிடுங்கள். அவுட் டேட்டட்தான். ஆனாலும் ஒர்க் அவுட் ஆகும். சும்மாவா சரவணன் மீனாட்சி ஹிட் ஆவுது?

* டீம் டின்னர், டீம் அவுட்டிங் எல்லாம் போனாலும் அவர்களோடு பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இதிலிருந்து தப்பிக்க, 'படத்துல மழையில ஆடுற மஞ்சிமா மோகனை பாக்குறப்போ உன்ன பாக்குற மாதிரியே இருக்கு.( மனசாட்சி - த்தூ! த்தூ! த்தூ!), அந்த க்ரில் சிக்கனை உன் கையால சமைச்சு சாப்பிட்டிருந்தா சொர்க்கமா இருந்திருக்கும்' (இந்த பொழப்புக்கு... - இதுவும் அதே மனசாட்சிதான்) போன்ற செட்டப்களை கைவசம் வைத்திருங்கள். யூஸ் ஆகும்.

NI_3.jpg

* 'நான் யாரு உனக்கு?, என்னை எவ்வளவு பிடிக்கும்?' - இந்த ரெண்டு கேள்விகளும் அதிமுக கட்சிப்பதவி போல, அடிக்கடி வந்து போகும். மற்ற விஷயங்களை கூட மன்னித்துவிடுவார்கள். இந்தக் கேள்விகளுக்கு சுமாரான பதில் சொன்னால் கும்பிபாகம்தான். எனவே வெட்டியாய் இருக்கும் தருணங்களில் இவற்றுக்கான பதிலை வெரைட்டியாய் யோசித்து லிஸ்ட் போட்டுக்கொள்ளுங்கள். கேட்கும் நேரத்தில் படக்கென பதில் சொல்லி பச்சக்கென இதயத்தில் இடம்பிடித்துவிடலாம்.

பி.கு - இந்த கேள்விகளுக்கு கூகுள் எல்லாம் பதில் சொல்லாது. தேடிப் பாத்தாச்சு. ஸோ, உங்க மூளையே உங்களுக்கு உதவி.

vikatan

  • தொடங்கியவர்

p102a.jpg


p104a.jpg

p104b.jpg

விடைகள்

1. கோபிநாத் 2. ஜெயலலிதா 3. சுரேஷ் ரெய்னா 4. விஷால்


வார்த்தையை வட்டமிடுக!

p108a.jpg

1. அடக்குனா அடங்குற ஆளா நீ?

2. இவரு கேங்ஸ்டர் படம்ன்னா கோட் போடுவாரு. வரிசையில் நின்னுதான் ஓட்டுப் போடுவாரு.

3. அப்பா பேரைப் பின்னாடி சேர்த்துக்கிட்ட இந்த நடிகைதான் தளபதியோட அடுத்த படத்துல கதாநாயகி.

4. அப்பா, அம்மா வெச்ச பேர் இருக்கு. சாதிப்பேர் எதுக்குனு சொன்ன பனிமலர் இவங்க.

5. கரன்ட்டும் இவரும் ஒண்ணு. ரெண்டுமே தூக்கி அடிச்சிரும் பார்த்துக்கோங்க.

6. மொத்த தமிழ்நாட்டையும் கன்ஃபியூஸ் பண்ணிவிட்ட அந்த 570 கோடி கன்டெய்னர் பிடிபட்ட ஊர் எது?

7. பிரசாரம்னா பேச மட்டும்தான் செய்யணுமா? பாடவும் செய்யலாம். அந்த நாலு எழுத்து சூப்பர் சிங்கரேதான்.

8. பரீட்சைக்கு அனுப்புற மாதிரி, தன்னோட மகனுக்கு பேனா வாங்கித்தந்து பிரசாரத்துக்கு அனுப்பிச்ச நான்கு எழுத்துத் தலைவர்.

9. நம்ம ஊர்க்கார கிரிக்கெட்டர். பவுலிங்னா சுழட்டிப் போடுவாரு. பேட்டிங்க்ல சுழட்டி அடிப்பாரு.

10. போங்க தம்பி. இந்தத் தடவை ஒலிம்பிக்கை நடத்துறதே நாங்கதான்னு கெத்து காட்டும் நாடு எது?


விடைகள்:

1. கபாலி, 2. அஜித்குமார், 3. கீர்த்தி 4. பார்வதி, 5. விஜயகாந்த், 6. திருப்பூர் 7. ஸ்டாலின், 8. ராமதாஸ், 9. அஸ்வின் 10. பிரேசில்


 உங்க ஞாபகசக்திக்கு ஒரு சவால். இந்த நட்சத்திரங்களை காலத்தைக் கணித்து வரிசைப்படுத்துங்கள் பார்க்கலாம்

p110a.jpg

p110b.jpg

p110c.jpg

p110d.jpg

விடைகள்:

பிரபு சாலமன் பட நாயகிகள்: ‘மைனா’ அமலாபால், ‘கும்கி’ லட்சுமி மேனன் , ‘கயல்’ ஆனந்தி, ‘தொடரி’ கீர்த்தி சுரேஷ்

ஜேம்ஸ் பாண்ட் ஹீரோக்கள்: ரோஜர் மூர், டிமோத்தி டால்டன், பியர்ஸ் ப்ராஸ்னன், டேனியல் க்ரெய்க்

நடிகர் சங்க தலைவர்கள்: ராதாரவி, விஜயகாந்த், சரத்குமார், நாசர்

எண்ணிக்கை: தனி ஒருவன், இருவர், மூன்று பேர் மூன்று காதல், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்


பின்வரும் படங்களைப் பார்த்து அதற்குப் பொருத்தமான காமெடி வசனங்களை சரியாகக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்... 

p114a1.jpg

p114b.jpg

விடைகள்:

1. ஹலோ... துபாயா... என்னுடைய பிரதர் மார்க் இருக்காரா?
2. அன்னைக்குக் காலையில ஆறுமணி இருக்கும். கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சு. என் பொண்டாட்டி குளிச்சுப்புட்டு தலை நிறையப் பூ வெச்சுட்டு என்னை வந்து உசுப்புனா...
3. ஐ யம் ஸ்பீக்கிங். நோ கிராஸ் ஸ்பீக்கிங்.
4. ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி.

-விக்கி


 

 p122.jpg


p123.jpg


 இரண்டு படங்களுக்கும் இடையே உள்ள  10 வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள்!

p124a.jpg

p124b.jpg

விடைகள்:

1.பெண்ணின் ஹேர்பின், 2. கடிகார முள், 3. பூனையின் வால், 4. சிறுவனின் சாக்ஸ், 5. சிறுவனின் நாக்கு, 6. வாழைப்பழம், 7. அலமாரியில் பொம்மை, 8. அலமாரி கைப்பிடி, 9.அலமாரி தட்டு டிசைன், 10. தட்டில் பிஸ்கட்


சினிமா  மாரத்தான்!

சினிமா சம்பந்தப்பட்ட இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லுங்க பாஸ்...

p126a.jpg

red-dot10.jpg கமல்ஹாசன், அம்பிகா, லிஸி இணைந்து நடித்த திரைப்படத்தின் பெயர் என்ன?

red-dot10.jpg ‘டேவிட்’ திரைப்படத்தில் விக்ரமோடு இணைந்த நடித்த ஹீரோ யார்?

red-dot10.jpg ஜீவா நடித்த ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தின் இயக்குநர் யார்?

red-dot10.jpg ராம் என்ற கதாபாத்திரத்தில் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் நடித்த நடிகர் யார்?

red-dot10.jpg ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் கதாபாத்திரம் பெயர் என்ன?

red-dot10.jpg பிரசன்னாவுடன் ‘முரண்’ படத்தில் இணைந்து நடித்த நடிகர் யார்?

red-dot10.jpg சேரன் இயக்கிய ‘பாண்டவர் பூமி’ படத்தின் ஹீரோ யார்?

red-dot10.jpg ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அருண்விஜய் யாருக்கு வில்லனாக நடித்தார்?

red-dot10.jpg ‘ரெட்டை ஜடை வயசு’ படத்தில் அஜித் கதாபாத்திரத்தின் பெயர் என்ன?

red-dot10.jpg ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் என்ன?

red-dot10.jpg ‘குட்டி’ திரைப்படத்தின் ஹீரோ யார்?

red-dot10.jpg தனுஷ் - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவான திரைப்படம் எது?

red-dot10.jpg ‘அனேகன்’ படத்தின் வில்லன் யார்?

red-dot10.jpg ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் யார்?

red-dot10.jpg ‘காளை’ திரைப்படத்தில் சிம்பு கதாபாத்திரத்தின் பெயர் என்ன?

red-dot10.jpg ஜீவானந்தம், கதிரேசன் என இரட்டைவேடங்களில் நடித்த ஹீரோ யார்?

red-dot10.jpg நடிகர் விஜய்யை ரசிகர்கள் எவ்வாறு அழைப்பார்கள்?

red-dot10.jpg ‘தளபதி’ படத்தில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஹீரோ யார்?

red-dot10.jpg ‘மூன்று முகம்’ படத்தில் போலீஸாக வரும் ரஜினியின் பெயர் என்ன?

red-dot10.jpg ‘அலெக்ஸ்பாண்டியன்’ திரைப்படத்தின் ஹீரோ யார்?

red-dot10.jpg நடிகர் சூர்யாவுக்கு, நடிகர் கார்த்தி என்ன முறை வேண்டும்?

red-dot10.jpg ‘தம்பி’ திரைப்படத்தின் ஹீரோ யார்

red-dot10.jpg மாதவன் - பாவனா இணைந்து நடிந்து திரைப்படத்தின் பெயர் என்ன?

red-dot10.jpg ஆர்யாவிற்கு காதல் மன்னன் பட்டம் கொடுத்த நடிகர் யார்?

பதில் கண்டுபிடிக்கணும்னு சோறு, தண்ணி இல்லாம உட்கார்ந்து யோசிச்சுட்டு இருக்காதீங்க. இந்த ஒவ்வொரு கேள்விக்கான பதிலும், அந்தக் கேள்விக்கு அடுத்த கேள்வியிலேயே இருக்கு! கடைசி கேள்விக்கான பதில் முதல் கேள்வியில் இருக்கு!

-ப.சூரியராஜ்



p128.jpg


p129.jpg


 

குறுக்கெழுத்து புதிர்...

p134.jpg

இடமிருந்து வலம்

1.பாகுபலியைக் கொன்றது யார்? (5 எழுத்துக்கள்)

8.‘பிரேமம்’ படத்தில் நிவினுக்கு விபூதி அடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் என்ன? (3)

13.கேலி, கூத்து, கிண்டல், கலாய் நிறைந்த ஜாலியான வார இதழ் (4)

14.டி.ஆரிடம் இருந்து பிரிக்க முடியாதது... (2)

16.ஜானி டெப் கடற்கொள்ளையனாக நடித்த திரைப்படம். ‘பைரேட்ஸ் ஆஃப் .........’ (5)


வலமிருந்து இடம்

4.தில்லுக்கு .... (3)

5.அனுஷ்கா சர்மாவின் காதலன் (3)

6.ஒரு .... ஒரு கண்ணாடி (2)

7.ஆட்டின் கால்களைக் கொண்டு சமைக்கப்படும் உணவு (2)

10.‘பாகுபலி’ படத்தில் காளகேயர்கள் பேசும் மொழி (4)

12.மோடிக்குப் பிடித்த வாகனம் (4)

17........., முன்னேற்றம், அன்புமணி (4)


மேலிருந்து கீழ்

1.கடலில் தூக்கிப் போட்டாலும் இப்படி மிதக்க வேண்டும். (6)

2.இதில் டீ, காபி, பால், ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்றவற்றை ஊற்றிக் குடிக்கலாம் (4)

3.பழம் நழுவி ...... காத்திருந்தார்

கருணாநிதி (5)

4.விஜய் நடித்த படம் (5)

9.டாஸ்மாக்கில் சரக்கு ..... (5)

11. ..... குரு, தெய்வம் (4)

12.கார்த்திக் அமைத்த கூட்டணி...(4)


கீழிருந்து மேல்

15.மகிழ்ச்சி (3)

விடைகள்:

இடமிருந்து வலம்: 1.கட்டப்பா, 8.மலர், 13.டைம்பாஸ், 14.தாடி, 16.கரீபியன்

வலமிருந்து இடம்: 4.துட்டு, 5.கோஹ்லி, 6.கல், 7.பாயா, 10.கிலிக்கி, 12.விமானம், 17.மாற்றம்

மேலிருந்து கீழ்: 1.கட்டுமரம், 2.டம்ளர், 3.பாலில் விழ, 4.துப்பாக்கி,  9.கிடைக்கும், 11.மாதாபிதா, 12.விடியல்

கீழிருந்து மேல்: 15.கபாலி

- ப.சூரியராஜ்


 p136.jpg

விடை:

இந்தப் படத்தில் எந்தத் தவறும் இல்லை. சும்மாதான் பாஸ்!


மு.க.ஸ்டாலின் நாற்காலியை அடைய வழிகாட்டுங்களேன்!

p137.jpg


 

 குழப்புதா?

ணையத்தில் சில புகைப்படங்கள் திடீரென வைரல் ஆகி நம் தலைமுடியைப் பிய்த்துக்கொள்ள வைத்திருக்கும். ஒரு வாரத்திற்கும் மேலாக அனைவரையும் விவாதத்திற்கு உள்ளாக்கிவிட்டு, புகைப்படத்தை வெளியிட்டவர்களே இறுதியில் இதுகூடத் தெரியலையா என பதிலைத் தெரிவித்திருப்பார்கள். அப்படி நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்திய சில புதிர்ப் புகைப்படங்கள். கண்டுபிடியுங்களேன்!

p140a.jpg

p140b.jpg

p140c.jpg

p140d.jpg

விடைகள்:

1. விலங்கியல் அறிவியலாளர்கள் எல்லாம் இந்தக் குழப்பத்தைத் தீர்க்க பக்கம் பக்கமா முடிவுகளை வெளியிட்டாங்களாம். உண்மையில் அந்தப் பூனை படியில் இறங்கத்தான் செய்யுதாம்!

2. சிலருக்கு நாலஞ்சு பேர் தெரிஞ்சிருக்குமே? போட்டோவில் இருக்கிறது அக்கா தங்கச்சினு ரெண்டே பேர்தான். கண்ணாடிப் பிரதிபலிப்பு ஹெவியா குழப்பிருச்சு!

3. நெயில்பாலீஷைக் கவனிச்சா தெரியும். இடுப்பில் இருக்கிறதுதான் அந்தப் பெண்ணோட கை!

4. மிஸ்டர் பிளாக்கிதான் முன்னாடி இருப்பது. டபுள் கலர் ட்ரவுசர் போட்டு நம்மைக் குழப்பிட்டார்!

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

p74a.jpg

றுதிவரை பேச்சுலராகத்தான் வாழ்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஆஸ்கர் நாயகன் லியானார்டோ டிகாப்ரியோ. 41 வயதான டிகாப்ரியோ, தனது 21-வது கேர்ள் ஃப்ரெண்டாக டேனிஷ் மாடல் நினா அக்டாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். மாலிபு பீச்சில், இருவரும் ஹாயாக இருக்கும் காட்சிகள்தான், தற்போதைய இணைய வைரல். விருதெல்லாம் மச்சம்பா!

p74b.jpg

மெரிக்கப் பாடகி கேடி பெர்ரியை டேட்டிக்கொண்டு இருந்தார் பாப் பாடகர் டிப்லோ. என்ன லடாய் ஆனதோ தெரியவில்லை. 2015-ம் ஆண்டு இறுதியில் இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது 37 வயதான அமெரிக்க நடிகை கேட் ஹட்சனை டேட்டுகிறாராம் டிப்லோ. டிப்லோ இதைத் தீவிரமாக மறுத்தாலும், அதெல்லாம் இல்லை இருவரும் டேட்டிங் செல்கிறார்கள் என அடித்துச் சொல்கிறது ஹாலிவுட். ரெண்டுலேயும் கேட் வர்றதால் இருக்குமோ?

p74c.jpg

ல படங்களில் நடித்து இருந்தாலும், ‘கிராவிட்டி’ படத்திற்குப் பின் வேற லெவலில் ரீச் ஆனார் சாண்ட்ரா புல்லக். 51 வயதான சாண்ட்ரா, சிங்கிளாக இருந்தாலும் 50 வயதான புகைப்படக் கலைஞர் ப்ரையான் ரேண்டலை டேட்டிக்கொண்டு இருக்கிறார். ஆனால், இவரைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டாம் என சாண்ட்ராவிற்கு அறிவுரை சொல்கிறாராம் அவரது ஆசிரியர்.  இன்னுமா ஆசிரியர் பேச்செல்லாம் கேட்கறீங்க?

p74d.jpg

‘டிவிலைட்’ படங்களின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் கிறிஸ்டென் ஸ்டீவர்ட். 26 வயதான ஸ்டீவர்ட் ஒரு சிறந்த நடிகையாக மாறுவதற்காக, அவர் நடித்த படக்காட்சிகளையெல்லாம் மீண்டும் மீண்டும் பார்ப்பாராம். ஒரு படத்தையாவது எழுதி, இயக்க வேண்டும் என்பதுதான் ஸ்டீவர்ட்டின் ஆசையாம். நாங்களும்தான் மீண்டும் மீண்டும் பார்க்கிறோம்!

vikatan

  • தொடங்கியவர்
 

வரலாற்றில் இன்று...

ஓகஸ்ட் - 02

 

1610 : ஹென்றி ஹட்சன் தனது கடற் பய­ணத்தின் போது கன­டாவின் தற்­போ­தைய ஹட்சன் குடாவை அடைந்தார்.

 

1790 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் முதல் தட­வை­யாக மக்கள் தொகைக் கணக்­கெடுப்பு இடம்­பெற்­றது.

 

1798 : பிரெஞ்சுப் நைல் நதிப் போரில் பிரான்ஸை பிரித்­தா­னியா வெற்றி கொண்­டது.

 

1870 : உலகின் முத­லா­வது சுரங்க ரயில் சேவை லண்­டனில் தொடங்­கப்­பட்­டது.

 

1903 : ஒட்­டோமான் பேர­ர­சுக்கு எதி­ராக மசி­டோ­னி­யர்­களின் கிளர்ச்சி தோல்­வியில் முடிந்­தது.

 

781varalaru---Iraq.jpg1914 : ஜேர்­ம­னியப் படை­யினர் லக்­ஸம்­பேர்கை முற்­று­கை­யிட்­டனர்.

 

1916 : முதலாம் உலகப் போர்: லிய­னார்டோ டாவ்­வின்சி என்ற இத்­தா­லியப் போர்க்­கப்பல் ஆஸ்­தி­ரி­யா­வினால் மூழ்­க­டிக்­கப்­பட்­டது.

 

1918 : முதலாம் உலகப் போரை அடுத்து சைபீ­ரி­யா­வுக்கு தனது படை­களை அனுப்­பப்­போ­வ­தாக ஜப்பான் அறி­வித்­தது.

 

1931 : இரா­ணுவ வேலை­களை நிரா­க­ரிக்­கு­மாறு விஞ்­ஞா­னி­க­ளுக்கு ஐன்ஸ்டைன் அழைப்பு விடுத்தார்.

 

1932 : பொசித்­திரன் (இலத்­தி­ரனின் எதிர்த்­து­ணிக்கை) கார்ல் அண்­டர்சன் என்­ப­வரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

 

1934 : அடோல்ஃப் ஹிட்லர் ஜேர்­ம­னியின் அதி­ப­ரானார் .

 

1939 : அணு ஆயு­தத்தை தயா­ரிக்க அறி­வு­றுத்­து­மாறு ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பிராங்­கிளின் ரூஸ்­வெல்ட்­டுக்கு கடிதம் எழு­தினர்.

 

1943 : போலந்தில் திரெ­பி­லிங்கா வதை முகாமில் நாஸி­க­ளுக்கு எதி­ராகக் கிளர்ச்சி இடம்­பெற்­றது.

 

1945 : இரண்டாம் உலகப் போர்: தோல்­வி­ய­டைந்த ஜேர்­ம­னியின் எதிர்­காலம் குறித்து விவா­தித்த நட்பு அணி நாடு­களின் பொட்ஸ்டாம் மாநாடு நிறை­வ­டைந்­தது.

 

1947 : ஆர்­ஜென்­டீ­னா­வி­லி­ருந்து சிலியை நோக்கிச் சென்ற விமா­ன­மொன்று மலைப்­ப­கு­தியில் விபத்­துக்­குள்­ளா­னது. இதன் சிதை­வுகள் 50 வரு­டங்­களின் பின்­னரே கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

 

1968 : பிலிப்­பீன்சில் கசி­குரான் என்ற இடத்தில் இடம்­பெற்ற பூகம்­பத்தில் சிக்கி 270 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1973 : பிரிட்­டனின் “மான்” தீவில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் இடம்­பெற்ற தீ விபத்தில் 51 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1980 : இத்­தா­லியில் ரயில் நிலை­யத்தில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 85 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1985 : அமெ­ரிக்­காவில் இடம்­பெற்ற விமான விபத்தில்  137பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1989 : யாழ்ப்­பாணம் வல்­வெட்­டித்­து­றையில் இந்­திய இரா­ணு­வத்­தினர் துப்­பாக்கிச் சூடு நடத்­தி­யதில் 63 பொதுமக்கள் கொல்­லப்­பட்­டனர்.

 

1989 : 1972 ஆம் ஆண்டின் பின் பொது­ந­ல­வாய அமைப்பில் பாகிஸ்தான் மீண்டும் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­டது.

 

1990 : குவைத்தின் மீது ஈராக் படை­யெ­டுத்­தது.

 

1998 : இரண்டாவது கொங்கோ யுத்தம் ஆரம்பமாகியது.

 

2014 : சீனாவின் ஷாங்காய் நருக்கு அருகில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் 146 பேர் உயிரிழந்தனர். மேலும் 114 பேர் காயமடைந்தனர்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆகஸ்ட் 2: தமிழ் மொழியின் தூதர் என்று அறியப்பட்ட சேவியர் தனிநாயகம் பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு
 

13895243_1191537967571658_83079321150638

உலகத்தமிழ் ஆராய்ச்சி கழகத்தை (International Association for Tamil Research, IATR) பல்வேறு தமிழறிஞர்களோடு இணைந்து நிறுவினார். முதல் உலகத்தமிழ் மாநாட்டை கோலாலம்பூரில் மலேசிய அரசின் உதவியோடு வெற்றிகரமாக அடிகள் நடத்தினார். அந்த அமைப்பே எட்டு உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தியது. அதிலும் நான்கு உலகத்தமிழ் மாநாடுகள் அடிகளார் வாழ்நாள் காலத்திலேயே நடந்தது.

தாய்லாந்தில் தங்கியிருந்த பொழுது அங்கே மன்னரின் முடிசூட்டு விழாவின் பொழுது பாடப்படுவது திருவெம்பாவை பாடல் என்பதை கண்டறிந்து உலகுக்கு சொன்னார்.

ஆகஸ்ட் 2: தமிழ் மொழியின் தூதர் என்று அறியப்பட்ட சேவியர் தனிநாயகம் பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு

சேவியர் தனிநாயகம் அடிகள் எனப்படும் தமிழ் மொழியின் தலைமகனின் பிறந்தநாள் இன்று. இலங்கையில் உள்ள இலங்கையில்  உள்ள காம்பொன் ஊரில் ஹென்றி ஸ்ரனிஸ்லால், சிசில் இராசம்மா வஸ்தியா பிள்ளை தம்பதிக்கு முதல் பிள்ளையாக நூற்றியொரு ஆண்டுகளுக்கு முன்னர் xavierthinayagam1.jpgபிறந்தார். கல்லூரிக்கல்வியை ஆங்கில வழியில் படித்து முடித்த அவர். இவரின் இயற்பெயர் ஸ்டானிஸ்லஸ் சேவியர் என்றாலும் பின்னர் தமிழ் மீது கொண்ட பற்றால் சேவியர் தனிநாயகம் என்று மாற்றிக்கொண்டார். இலங்கையில் இருந்த திருச்சபை அவரை இத்தாலி போய் படிக்க அனுமதிக்காமையால் மலங்காரச் திருச்சபையில் இணைந்து திருவனந்தபுர மறைமாவட்டத்தில் பாதிரியாராக பணியாற்றினார். அங்கே இருந்தபடி    The Carthaginian Clergy என்கிற தலைப்பில் இறையியலில்  முனைவர் பட்டம் பெற்றார். வடக்கன்குளத்தில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த அவர் குருசாமி என்பவரிடம் தமிழ் பயின்றார்.

அவருக்கு லத்தீன், ஸ்பானிஷ், பிரெஞ்சு,ஜெர்மன், போர்த்துகீஸ் முதலிய பல்வேறு மொழிகளில் தனித்த புலமை இருந்தது. ஆனாலும்,தன்னுடைய அன்னைத்தமிழின் இலக்கியங்களில் தேர்ச்சி பெறவேண்டும் என்கிற எண்ணம் அவரை செலுத்தியது. அண்ணாமலைப்பல்கலையில் அவர் முதுகலை படிப்பில் இளங்கலையை பயிலாமலே  இணைய  அண்ணாமலை செட்டியார் அனுமதி கொடுத்தார்.   முப்பத்தி இரண்டு வயதில் தமிழ் மொழியை முறையாக அவர் பயின்று இன்பமுற்றார். எம்.லிட் பட்டத்திற்காக சங்க இலக்கியத்தில் இயற்கை என்கிற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தார். ரிக் வேதப்பாடல்களை படித்துவிட்டு ,"இந்தப்பாடல்களை விட சங்க இலக்கிய பாடல்கள் பல மடங்கு அற்புதமானவை !" என்று மெய்சிலிர்த்து சொன்னார்.

  1948 ஆம் ஆண்டு  தமிழ் இலக்கியக் கழகத்தை  தூத்துக்குடியில் நிறுவி பல்வேறு தமிழ் நூல்களை பதிப்பித்தார். அங்கே "Tamil Culture" என்ற ஆங்கிலக் காலாண்டிதழை வெளியிட்டார். தமிழின் பெருமையை உலகறிய செய்ய எண்ணிய அவர் பிற மொழிகளில் தமிழ் பற்றி வந்திருக்கும் குறிப்புகளை  'Reference Guide to Tamil Studies" என்ற நூறுக்கு சற்றே கூடுதலான குறிப்புதவி நூலில் ஆயிரத்தி முன்னூற்றி முப்பத்தி ஐந்து பிற மொழி நூல்களில் வழங்கி வரும் குறிப்புகளை பதிவு செய்தார்.  ஒன்பது வருடங்கள் இலங்கையில் தமிழ் பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் லண்டன் பல்கலையில் தமிழ் இலக்கியம் வழியாக கல்வியியல் என்கிற தலைப்பில் ஆய்வு செய்து இரண்டாம் முறையாக முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் மலேசியாவில் உள்ள பல்கலையில் இந்தியத்துறையில் தலைவராக இணைந்து தமிழ் பேராசிரியாக பணியாற்றினார். அப்பொழுது தான் உலகம் முழுக்க இருக்கும் தமிழறிஞர்களை இணைத்து உலகத்தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று முனைந்தார். தமிழக அரசின் உதவியைக் கோரினார். அப்பொழுதைய பக்தவச்சலம் அரசு பெரிய ஈடுபாடு காட்டாமையால்  உலகத்தமிழ் ஆராய்ச்சி கழகத்தை  (International Association for Tamil Research, IATR)  பல்வேறு தமிழறிஞர்களோடு இணைந்து நிறுவினார்.  முதல் உலகத்தமிழ் மாநாட்டை கோலாலம்பூரில் மலேசிய அரசின் உதவியோடு வெற்றிகரமாக அடிகள் நடத்தினார். அந்த அமைப்பே எட்டு உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தியது. அதிலும் நான்கு உலகத்தமிழ் மாநாடுகள் அடிகளார் வாழ்நாள் காலத்திலேயே நடந்தது.


xavierthinayagam.jpg"இலத்தீன் சட்டத்தின் மொழியென்றால்,பிரெஞ்சை ராஜதந்திரத்தின் மொழி என்போம் என்றால்,ஜெர்மன் அறிவியலின் மொழி மற்றும் ஆங்கிலம் வாணிகத்தின் மொழி என்றால் தமிழ் பக்தியின் மொழி !" என்று முழங்கிய அடிகளார் தமிழின் பண்டைய இலக்கியங்கள் எப்படி வடமொழி இலக்கியங்களை போல அல்லாமல் சமயச்சார்பற்று விளங்கின என்பதை நிறுவினார். தமிழ் மொழியையும் அதன் இலக்கியச் செறிவையும்  ஜப்பான்,சிலி,பிரேசில்,அமெரிக்கா முதலிய நாடுகளில் இருநூறு சொற்பொழிவுகள் மற்றும் பாடம் எடுத்தல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தினார்.  தாய்லாந்தில் தங்கியிருந்த பொழுது அங்கே மன்னரின் முடிசூட்டு விழாவின் பொழுது பாடப்படுவது திருவெம்பாவை பாடல் என்பதை கண்டறிந்து உலகுக்கு சொன்னார்.

ஆசிய மொழிகளிலேயே முதலில் அச்சடிக்கப்பட்ட நூல் வெளியான மொழி தமிழ் என்பதை கார்த்திலியா  (1556),தம்பிரான் வணக்கம் (1578), கிறிஸ்தியானி வணக்கம் (1579) முதலிய அரிய அச்சு நூல்களின் மூலப்பிரதிகளை தேடிக்கண்டெடுத்து பதிப்பித்து நிரூபித்தார். தமிழின் ஆய்வுமுறையில் வரலாறு, பண்பாடு, ஒப்பிலக்கியம், மொழியியல் ஆகியவற்றை இணைத்து ஆய்வு செய்யும் போக்கை ஏற்படுத்தியதில் அவர் முன்னோடியாக இருந்தார். தன்னுடைய இறுதிக்காலத்தில்  ஈழத்தந்தை செல்வா நினைவுப் பேருரை நிகழ்த்தினார். அதில்  "தமிழ் மக்கள் இத்துணை நூற்றாண்டுகளாகத் தழுவிய சமயங்கள் பல. ஆயினும் எச் சமயத்தைச் சார்ந்தாலும் தாம் தமிழ் மக்கள் என்று தமிழர் பண்பாட்டையும் கொள்கைகளையும் அவர்கள் கடைபிடித்தே வந்தனர், இன்றும் கடைபிடித்தே வருகின்றனர்''. என்று பெருமை பொங்க சொன்னார். 'உலகெங்கும் உலாவும் தமிழ் மொழியின் தூதர்' என்று அறியப்பட்ட தனிநாயகம் அடிகளை நினைவில் நிறுத்துவோம்.

vikatan

  • தொடங்கியவர்

அலுவலக மீட்டிங்: இந்த 5 விஷயங்களைக் கட்டாயம் கவனியுங்கள்!

meet2.jpg

லுவலகத்திலோ அல்லது அலுவலக வேலையாக வெளியிடங்களிலோ, மீட்டிங் என்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக மாறிவிட்டது. இது போன்ற 'மீட்டிங்' களில் பெரிய சவாலே, நாம் எப்படி பேசுவது, எதை முதலில் பேசுவது, அவசியமான நேரங்களில் குறுக்கீடு செய்யலாமா என்ற பல கேள்விகள்தான் மனதில் ஓடும். இந்த சிக்கலான குழப்பத்திற்கிடையே நம்மை அங்கு நிரூபிக்கவேண்டிய கட்டாயம் அந்த நான்கு சுவர்களுக்குள் அவசியமானதாகும். அலுவலகத்தில் மீட்டிங்கின்போது இந்த 5 விஷயங்களை கடைபிடித்தால் பெரும்பாலான மீட்டிங்குகள் உங்கள் வசமே இருக்கும்.

எதைப் பேசப் போகிறீர்கள்?

பல விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்ற அழுத்தம் முக்கியமான மீட்டிங்களில் இடம் பெறும். ஆனால் பதட்டத்தில் எதை முதலில் பேசுவது என தெரியாமல் எதாவது ஒரு விஷயத்தில் ஆரம்பித்து எங்கேயோ கொண்டுபோய் முடித்துவிடுவோம். இதனை சமாளிக்க, மீட்டிங் ஹாலுக்குள் செல்லும் முன் பேச வேண்டிய விஷயங்களை ஒரு சிறிய தாளில் குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு முறை வரிசைப்படுத்துங்கள். இதைத்தான், இந்த வரிசையில்தான் பேசப்போகிறேன் என்ற நம்பிக்கையோடு பேசுங்கள். மொத்த மீட்டிங் நேரத்தில் உங்களுடைய பேச்சு 10% நேரம்தான் என்பதில் உறுதியாக இருங்கள். அதற்கு மேல் நீங்கள் பேசினால் உங்கள் கருத்துக்கள் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தாது. உங்களிடம் கேள்விகள் முன் வைக்கப்படும்போது அதற்கு எளிமையாக பதிலளியுங்கள்.

அதிகம் கேளுங்கள்!

மீட்டிங்கில் இரண்டு விதமான நபர்கள் இருப்பார்கள். ஒருவர் உடலளவில் மீட்டிங்கில் இருப்பவர், இன்னொருவர் முழு கவனத்தோடு இருப்பவர். நீங்கள் இரண்டாவது நபராக இருங்கள். உங்களுக்கு தேவைப்படாத விஷயம் என்றாலும் மற்றவர் சொல்லும் விஷயத்தைக் கேளுங்கள். அவர்களது பேச்சில் உங்களுக்கான ஏதாவது ஒரு விஷயம் இருக்கும். மேலும் மற்ற நபர்களும் உங்களைக் கவனிக்க இது உதவும்.

meet.jpg

குறுக்கீடு செய்யலாமா?

ஒருவர் பேசும் போது குறுக்கிட்டுப் பேசுவதை தவிருங்கள். ஆனால் ஒரு விஷயம் தவறான கருத்தாக முன் வைக்கப்படுகிறது என்றால், மிகவும் மரியாதையாக அதில் குறுக்கிட்டு அதனைத் தவறானதாகக் குறிப்பிடாமல் கூறாமல், அதற்கான சரியான விளக்கத்தை அளிக்க முயற்சி செய்யுங்கள். வேறு யாராவது இதனைச்  சுட்டிக்காட்டுவார்கள் என இருப்பதை விட தானாக முன் வந்து சுட்டிக் காட்டுவதையே நிர்வாகம் விரும்பும். அதேபோல் ஒருவர் பேசும் போது அவர் முன் வைக்கும் கருத்தை விமர்சிப்பதோ, நேரடியாக இது தவ‌று என்பதையோ கூறி மீட்டிங்கில் இருக்கும் நபரைச்  சங்கடத்துக்கு உள்ளாக்காதீர்கள்.

செல்போன் வேண்டாம்!

உங்களுக்கு தொடர்பில்லாத விஷயங்கள் பேசப்படும்போது கான்ஃப்ரன்ஸ் ஹாலில் செல்போன் பயன்படுத்துவது, கேம் விளையாடுவது போன்ற விஷயங்களைச்  செய்யாதீர்கள். அது சில முக்கியமான பிரசன்டேஷன்களின் போது இருட்டாக உள்ள அறையில் தனியாகத் தெரியும். மேலும் உங்கள் மீது உள்ள நல்ல எண்ணம் பாதிக்க வாய்ப்புள்ளது. அதனால் பொதுவாக மீட்டிங்கில் செல்போன் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.

80:20 விதியை கடைபிடியுங்கள்!

ஒவ்வொரு மீட்டிங்கிலும் மேலாண்மை தத்துவமான 80:20 விதியைக் கடைபிடியுங்கள். ஒரு முக்கியமான மீட்டிங்கில் நீங்கள் பேசும் 20 சதவிகிதக்  கருத்துக்கள் 80 சதவிகிதம் பேருக்கு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மொத்த மீட்டிங்கும் உங்களது 20 சதவிகிதப் பேச்சை மையப்படுத்தியே இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். குறைவாகப் பேசி உங்கள் கருத்தைப் பற்றி அதிகமாக விவாதிக்க வையுங்கள்.

vikatan

  • தொடங்கியவர்
1,000 ரூபா­வுக்கு வாங்­கப்­பட்ட பழைய கதி­ரையில் 1,000,000 ரூபா பெறு­ம­தி­யான வைரங்கள்
 

18341chr-4.jpgபிரிட்­டனில் 5 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்­க­ளுக்கு (சுமார் 1000 ரூபா) வாங்­கப்­பட்ட கதி­ரை­யொன்றில் 5000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 10 இலட்சம் ரூபா) பெறு­ம­தி­யான வைரங்கள் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­ததைக் கண்டு ஒரு தம்­ப­தி­யினர் இன்ப அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்.

 

ஏஞ்­சலா மில்னர் பிரவுண் (50) அவரின் கண­வ­ரான அன்­கஸும் (47) 10 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இக் ­க­தி­ரையை ஏல விற்­ப­னை­யொன்றில் 5 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்­க­ளுக்கு வாங்­கி­யி­ருந்­தனர்.

 

 பின்னர் அக்­ க­தி­ரைக்கு புதிய குஷன் போடு­வ­தற்கு வச­தி­யில்­லாமல் பல வரு­டங்­க­ளாக அதை வீட்டின் பரணில் வைத்­தி­ருந்­தனர்.

 

இந்­நி­லையில், அண்­மையில் இக் ­க­தி­ரையை புதிய குஷன் வேலை­களைச் செய்­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­போது அக் ­க­தி­ரைக்குள் வைர மோதிரம் மற்றும் காத­ணிகள் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தமை தெரிய வந்­தது.

 

18341chr-2.jpg

 

இவற்றின் பெறு­மதி 5000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்த நகைகள் 1900 ஆம் ஆண்டில் தயா­ரிக்­கப்­பட்­டவை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

இது தொடர்­பாக ஏஞ்­சலா பிரவுண் கூறு­கையில், “அக் ­க­திரை மிக மோச­மான நிலையில் இருந்­தது.

 

18341chr-3.jpg

 

அதை எனது கணவர் பரணில் வைத்தார். கடந்த 6 வரு­டங்­க­ளாக அது அங்­கேயே இருந்தது. அண்மையில் அதை செப்பனிடுவதற்கு முடியுமா என்று பார்ப்பதற்காக வெளியே எடுத்தோம்.

 

அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வைரங்களை எனது கணவர் கண்டு பிடித்தார்.

 

18341chr-1.jpg

 

ஆனால், அதை என்னிடம் உடனடியாக கூறாமல், எமது திருமண ஆண்டு நிறைவு விழாவின்போது வைர நகைகளை எனக்குப் பரிசளித்து வியக்க வைத்தார்” எனத் தெரிவித்துள்ளார்.           

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13686715_1745126949079844_17796034434520

காசுக்கு பல பெயர்கள்

  • தொடங்கியவர்

பார்க்கலாம்...படிக்கலாம்... ரசிக்கலாம்!

 

p62a.jpg

லகம் முழுவதும் பல பழைய கட்டடங்கள் பொதுவாக இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புதிதாகக் கட்டடங்கள் கட்டப்படும். ஆனால் விதிவிலக்காக சில இடங்கள் அழகிய புத்தக நிலையமாக வடிவமைக்கப்பட்டுப் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

கல்வியே கடவுள்!

ஹாலந்தின் மாஸ்ட்ரிக்ட் நகரில் உள்ளது போலார் புத்தகக்கடை. 700 வருடப் பழமையான கத்தோலிக்க சர்ச்சினை, சைக்கிள்களை நிறுத்தும் இடமாகப் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது. பின்னர் கட்டடக்கலை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இது நவீன வசதிகளுடன் புத்தகக்கடையாக மாற்றப்பட்டது. உலகின் அழகான புத்தகக் கடைகளில் ஒன்றாக இது தேர்ந்தெடுக்கப் பட்டதோடு, வடிவமைப்புக்காக பல விருதுகளையும் வென்றுள்ளது. சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ஏழு லட்சம் பார்வையாளர்கள் இங்கு பார்வையிடுகின்றனர்.

கரைச்சுக் குடிக்கிறாங்க!

p62b.jpg

மெக்ஸிகோவில் உள்ள ‘எல் பெண்டுலோ’ உணவகமும், நூலகமும் இணைந்த கலவையாக உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான உணவை ஆர்டர் செய்துவிட்டு இங்கிருக்கும் பலதரப்பட்ட புத்தகங்களை வாசித்து மகிழலாம். புத்தக வாசிப்பில் ஆர்வம் உடையவர்களை வசீகரிப்பதற்காக இந்த ஏற்பாட்டை அந்நிறுவனம் முதன்முதலில் செய்தது. மெக்ஸிகோவில் உள்ள இதன் மிகப்பெரிய கிளையானது உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது.

பொழுதைப் போக்கலாம்!

p62c.jpg

நம் ஊரில் பழைய திரையரங்குகள் திருமண மண்டபங்களாகவோ அல்லது மால்களாகவோ மாற்றம் அடையும். ஆனால் அர்ஜென்டினாவில் பழைய திரையரங்கு ஒன்று புத்தகக்கடையாக மாற்றப்பட்டு உலகம் முழுவதும் பல வாசிப்பாளர்களை ஈர்த்து வருகிறது. ‘எல் அடெனியோ கிராண்ட் ஸ்ப்ளென்டிட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புத்தகக் கடைக்கு வருடத்திற்கு 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை புரிகின்றனர்.  ஏழு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனையாகிறது. 90 வருடப் பழமையானத் திரையரங்கை, அற்புதமான வேலைப்பாடுகளோடு நவீனப்படுத்தி புத்தகக் கடையாக மாற்றியுள்ளனர். இது மிக அழகான கடையாக கார்டியன் பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஆழமான வாசிப்பு!

p62d.jpg

p62e.jpg

சீனாவின் நாஞ்சிங்க் நகரில் உள்ளது ‘அவன்ட் கார்டே’ புத்தக நிலையம். குண்டுவீச்சிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பயன்படுத்தப்பட்ட பதுங்குக்குழி பின்னர் வாகனங்கள் பார்க்கிங் செய்யும் இடமாக மாற்றப்பட்டது.  பின்னர் மேலும் சில மாற்றங்களுடன் நிலத்தின் அடியில் புத்தக நிலையமாக செயல்பட்டு வருகிறது. 4,000 சதுர அடிப்பரப்பில் அமைந்துள்ள இந்த புத்தக நிலையம், 2013-ம் ஆண்டு சி.என்.என். செய்தி நிறுவனத்தால் உலகின் மிக அழகான புத்தக நிலையங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

கம்முன்னு கெட!

p62f.jpg

இங்கிலாந்தின் ஆலன்விக் நகரில் பயன்பாட்டில் இல்லாத பழைய ரயில்நிலையம் ஒன்று, பார்ட்டர் புக்ஸ் என்ற பெயரில் பழைய புத்தகங்களுக்கான கடையாக 1991-ம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது. இந்தக் கடையானது இந்நகருக்கு வருகை புரியும் சுற்றுலாவாசிகளில் 40 சதவிகிதம் பேரை ஈர்த்து முக்கிய சுற்றுலாத்தலமாக செயல்பட்டு வருகிறது. வாசகர்கள் தங்களிடம் இருக்கும் பழைய புத்தகத்தைக் கொடுத்துவிட்டு இங்கிருக்கும் பழைய புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளவும் முடியும். இரண்டாம் உலகப்போரின் போது இங்கிலாந்து அரசால் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்படாத ‘கீப் காம் அண்ட் கேரி ஆன்’ என்ற போஸ்டர் இங்கு கண்டறியப்பட்டு விளம்பரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. இன்றுவரை இணையத்தில் ‘கீப் காம்’ என்ற போஸ்டர்கள் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதற்கு இந்தப் புத்தகக்கடைதான் காரணம் என்பது கூடுதல் செய்தி.

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.