Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
“கொலம்பியமோடா” பெஷன் ஷோ
 

கொலம்­பி­யாவின் மெடலின் நகரில் “கொலம்­பி­ய­மோடா” பெஷன் ஷோ கடந்த வாரம் நடை­பெற்­றது.

 

149814734-01-02---Copy.jpg

 

149814737-01-02.jpg

 

149814778-01-02.jpg

 

தென் அமெ­ரிக்­காவில் வரு­டாந்தம் நடை­பெறும் மிகப் பெரிய பெஷன் ஷோ இது­வாகும்.

 

149829247-01-02.jpg

 

149_Untitled-5.jpg

 

பல்­வேறு நாடு­களைச் சேர்ந்த ஆடை வடி­வ­மைப்­பா­ளர்­களின் ஆடை­களை பல நாடு­களின் மொடல்கள் காட்சிப்படுத்தினர்.

 

149_Untitled-6.jpg

 

149_Untitled-7.jpg

 

.metronews.lk/

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வைரல் போட்டோஸ் #BestOfToday #ViralPhotos

ஹிலரி கிளின்டன் போட்டியிட அம்மாதான் காரணமென்று எம்.எல்.ஏ ராமு பேசியதுதான் இன்று ஹிட்!

1n.jpg

 

ஜனதா கேரேஜ் படக்குழுவினருடன் சமந்தா..

2n.jpg

 

லண்டனில் டாப்ஸி... பொண்ணுக்கு நேத்து 'ஹேப்பி பர்த்டே' வேற... வாழ்த்துக்கள்!

3n.jpg

 

ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு கிளம்பியாச்சு... #சச்சின்

4n.jpg


இயக்குநர் பா.ரஞ்சித் உடன் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

5n.jpg


டேனியல் கார்டன் என்ற புகைப்படக்காரர் பொலிவியாவில் 'பால் வீதி'யை  படம் பிடித்திருக்கிறார்..

6n.jpg


உலகின் மிகப்பெரிய கலைத் திருவிழாவான 'ஃபிரின்ச்'  -இல் பங்கேற்று அசத்தும் நடனக்கலைஞர்கள்.

7n.jpg


சீனாவில் உள்ள துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும் படகுகளின் ஏரியல் வியூ

8n.jpg


மகளுடன் ஒரு ஜாலி வாக்...#அக்ஷய்குமார்

9n.jpg


கௌதம் மேனன் ஹீரோயின்ஸ்!  த்ரிஷாவுடன் மஞ்சிமா மோகன்.

10n.jpg


தனது மகளுடன் சுரேஷ் ரெய்னா!

11n.jpg


ப்ரோ கபடி இறுதிப் போட்டியில் தேசியகீதம் பாடும் ரித்திக் ரோஷன்..

12n.jpg


ஹிலரி கிளின்டன் வேடத்தில் wwe ஜான் சீனா...

13-n.jpg

 

vikatan

  • தொடங்கியவர்
Vikatan EMagazines Foto.
 

ஆகஸ்ட் 2: நம்மை எல்லாம் ஹலோ சொல்ல வைத்த அறிவியல் அறிஞர் அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்லின் நினைவு தினம் இன்று. - சிறப்பு பகிர்வு

இன்றைக்கு உலகின் எந்த மூலையில் உள்ள யாருடன் வேண்டுமானாலும் நொடிப்பொழுதில் பேசுவது இயல்பாகிப்போன ஒரு நிகழ்வு; காரணம் தொலைபேசி. இதன் தந்தை கிரகாம் பெல்.

ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரோவில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தார். கொஞ்ச நாட்கள் மட்டுமே பள்ளியில் தங்கிப்படித்தார் .பின் வீட்டிலேயே பாடம் கற்றார் .இவருடைய தந்தை, குரல் உறுப்புப் பயிற்சியிலும், பேச்சுத் திருத்த முறையிலும், செவிடர்களுக்கு கல்வி கற்பிப்பதிலும் ஒரு வல்லுநராகத் திகழ்ந்தார்.அவரின் வழியொற்றி செவித்திறன் அற்ற மற்றும் பேசும் திறன் இழந்தக்குழந்தைகளுக்கு பாடம் எடுத்து சாதித்தார். அவர்களில் பலரை பேச வைக்கும் முயற்சியிலும் சாதித்து காட்டினார்.

அப்படி பாடம் சொல்லபோன இடத்தில் மேபல் எனும் பெண்ணிடம் காதல் பூண்டார் . அவரின் அப்பா செய்த நிதியுதவியில் தொலைபேசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டார் .பின் தன் உதவியாளர் வாட்சனுடன் சேர்ந்து ஒரு முனையில் பேசுவதை வேறு முனையில் கேட்க வைக்கும் கருவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் சாதித்தும் காட்டினார்.

பாஸ்டனில் மேல் தளம் மாறும் கீழ்த்தளத்துக்கு இடையே ஒயரின் மூலம் இணைப்பு கொடுத்திருந்தார்கள். வாட்சன் கீழ்த்தளத்தில் இருந்தார். கிரகாம்பெல் மேலிருந்து பேசினார். அப்பொழுது ஒரு பக்கம் கேட்க மட்டுமே முடியும். "மிஸ்டர் வாட்சன்! இங்கே வாருங்கள்..." எனக் குரல் கேட்க உற்சாகமாக மேலே ஓடினார் -அது தான் முதன்முதலில் தொலைபேசியில் ஒலித்த வார்த்தை - அங்கே மேலே போன பொழுது பெல்லின் உடம்பில் அருகிலிருந்த அமிலம் பட்டிருந்தது. "நான் உங்களின் குரலைக்கேட்டேன்!"என சொன்னதும்தான் தாமதம். அமில எரிச்சல் எல்லாம் பறந்து போக இவரை கட்டியணைத்து கொண்டார் பெல்.

எனினும் இவர் பதிவு செய்ய கொஞ்சம் சுணக்கம் காட்டினார்; இவர் பதிவு செய்ய வெண்டிய கோப்புகள், கருவிகளை விட்டுவிட்டு தொடர்வண்டியில் ஏறும் பொழுது அதை கெஞ்சும் பார்வையோடு அவரின் இதய நாயகி மேபல் கையில் திணித்தார் .வண்டி புறப்பட்டுவிட்டது .அவர் போன அதே நாளில் எலிஷா கிரே எனும் நபரும் வந்து இருந்தார்.பின் எலிஷா விட்டுக்கொடுக்க கிரகாம் பெல்லின் கருவி டெலிபோன் ஆனது. எனினும் அவர் போனில் அழைக்க பயன்படுத்தியது கப்பல்களில் பயன்படுத்தப்படும் அஹோய் எனும் வார்த்தையை தான்; ஹலோ என மாற்றியது எடிசன் தான். உலகம் முழுக்க பிறரின் குரலை கேட்டு பதிலளிக்கும் முறைக்கான முதல் விதையை ஊன்றிய கிரகாம் பெல்லின் நினைவு தினம் இன்று.

vikatan

  • தொடங்கியவர்

ஸஃபால்க் கடற்கரையில் ஆச்சரியப்படுத்தும் நீர்தாரை (புகைப்படத் தொகுப்பு)

 

சனிக்கிழமை அன்று தோர்பென்ஸ் வட்டத்திலுள்ள ஸஃபால்க் கிராமத்தின் கடலின் மேலே நீர் சுழன்று எழும்பி ஏற்பட்ட நீர்தாரை ஆச்சரியமூட்டும் காட்சியை வழங்கியது.

160801185554_waterspout_626x470__nocredi

 

காற்று சுழன்று வீசி சூறாவளி ஏற்படுவது போன்று நீர் சுழன்று மேலெழுவது தான் நீர்தாரை. இதனை தோர்பனெஸ் மற்றும் அல்டிபர்க்கை சுற்றிய கடற்கரையில் இவ்வாறு சுழன்று எழுவதை பார்க்க முடிந்தது.

160801184638_waterspout_624x351__nocredi 

லெஸ்டனை சேர்ந்த ஜாக்கி பட்லர் சிஸ்வெல் கடற்கரையில் தன்னுடைய செல்ல நாய் குட்டியோடு நடந்தபோது இதனை கண்டு அதிசயித்து போனார்.

160801184536_waterspout_624x351__nocredi 

நீர்தாரை என்பது ஒரு சூறாவளிதான். ஆனால், அது நீர் மேல் அடிக்கின்ற சூறாவளி என்று பிபிசி வானிலை கணிப்பாளர் டான் கோலே தெரிவத்திருக்கிறார்.

160801184757_waterspout_624x351__nocredi

 

இரண்டுமே காற்றின் சுழலில் தான் தொடங்குகிறது. அந்த காற்றின் சுழல் தரையை நோக்கி மோதினால், அது சூறாவளி, நீரில் மோதினால் நீர்தாரை.

160801185644_waterspout_626x470__nocredi 

சனிக்கிழமையன்று, வடமேற்கு திசையில் நிலப்பகுதியில் வீசிய காற்று, வடகடல் பகுதியிலிருந்து கிழக்குப் பகுதியில் வீசிய கடல் காற்றில் இணைந்தது.

காற்றின் இந்த சுழலின்போது வேறுபட்ட துருவங்கள் சந்திக்கிறபோது, காற்று வேகமாக மேலெழும்பி மழையை உருவாக்கலாம். சில நேரங்களில், சுழல் மேகங்களையும் உருவாக்கும்.

BBC

  • தொடங்கியவர்
பொய் பகருபவர்கள் மேடையேறக் கூடாது
 

article_1470108861-medai.jpgநாவன்மை உடையவர்கள் உண்மையை மட்டுமே பேசவேண்டும். இத்தகையவர்கள்தான் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்களாகவும் மாறவும் கூடும்.

பேச்சாளர்களின் உரையை மக்கள் இரசிப்பதுடன், அவற்றை நம்புகின்றார்கள். எனவே, மக்களின் நம்பிக்கையை வலுவாக்க உண்மையையே பேச வேண்டியது முக்கியமான அம்சமாகும். பொய் பகருபவர்கள் மேடையேறக் கூடாது.  பேச்சுக்கள் பற்பல தலைப்புகளுடன் இருப்பதால் சொல்லப்பட்ட தலைப்பிலிருந்து விலகாமல் பேசுதல் அவசியம். ஆன்மிகம், இலக்கியம் விஞ்ஞானம் எனப்பட்ட விடயங்களில் அந்தந்தத் துறைசார் அறிஞர்கள் பேச்சுகளைப் பாமரர்களும் புரியும்படியாகக் கூறினால் அதுவே சிறப்பு.

தெரியாத விடயங்களை மேடையில் பேச முனைந்தால் அவமானம்தான் மிஞ்சும். மக்களை ஈர்த்துக் கொள்ளுதல் சாதாரண விடயம் அல்ல‚ எனவே கவர்ச்சியான மொழிநடையில் விடயதானங்களை நுட்பமாகப் புகுத்துதல் வேண்டும்.

வீட்டில் சதா முடங்கிக் கிடப்பதைவிட, பொது நிகழ்ச்சிகளில் சிறந்த சொற்பொழிவுகளைக் கேட்டு மகிழ்க‚ நல்ல பேச்சு ஆச்சரியகரமான இன்பம் அளிக்கும்.    

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வேலை செய்யும் இடத்தில் இந்த 6 வாக்கியங்களை பயன்படுத்தாதீர்கள்! #DailyMotivation

talk1.jpg

நீங்கள் சிறப்பாக வேலை செய்பவராக இருக்கலாம். ஒழுக்கம் உட்பட அனைத்திலும் ‘அட.. நம்பர் ஒன்யா இவன்’ என்று பேர் வாங்கி இருக்கலாம்.  ஆனால் நீங்கள் பயன்படுத்தும் இந்த ஆறு வாக்கியங்கள், நிர்வாகத்துக்கு உங்கள் மீதான நம்பிக்கையைக் குறைக்கும்.  அவை என்னென்ன தெரியுமா?

1. ‘இது முடியாது’ அல்லது ‘இதனைச் செய்வது கடினம்’

புதிதாக நிர்வாகம் ஒரு திட்டத்தை செயல்படுத்தலாம் என ஆலோசனை கேட்கும் போது. செய்ய முடியாது அல்லது அதனை செயல்படுத்துவது கடினம் என்று கூறாதீர்கள். ஒருவேளை உண்மையிலேயே அந்தத் திட்டம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்றால், அதிலுள்ள சிரமங்களைப் புரிந்து கொண்டு அதனை உங்கள் அலுவலகத்துக்கு ஏற்றவாறு மாற்றி, எப்படி செய்தால் அந்தத் திட்டம் வெற்றி பெறும் என யோசியுங்கள். ஆரம்பிக்கும் போதே முடியாது என்ற‌ வார்த்தையை பயன்படுத்துவதை நிர்வாகம் எப்போதும் விரும்பாது.

2. இது என் வேலை அல்ல

தனிப்பட்ட ஒருவரோ அல்லது ஒரு  துறையோ சில காரணங்களால் இயங்க முடியாமல் போகும் போது அந்த வேலையை உங்களிடம் அளித்தால், ‘இது என்னுடைய வேலை அல்ல; இதனை நான் செய்ய மாட்டேன்’ என்று கூறாதீர்கள். உங்களுக்கு அந்த வேலை தெரிந்ததால் - அல்லது அதை உங்களால் செய்ய முடியும் என்று நிர்வாகத்திற்கு உங்கள் மீது நம்பிக்கை இருப்பதால்தான் - அந்த வேலை உங்களுக்கு அளிக்கப்படுக்கிறது. இதுபோன்ற நேரங்களில் வாய்ப்புகளை வீணாக்காமல், சிறப்பாக முடிக்க பழகுங்கள்.

talk2.jpg

3. இது சிறப்பாக இல்லை!

ஓர் அணி, ஏதோ ஒரு வேலையைச் செய்து அதனை அறிக்கையாக அளிக்கும் போது, இந்த வேலை சிறப்பாக இல்லை. இதில் இந்த விஷயங்கள் இல்லை என்று கூறாதீர்கள்.  அதில் உள்ள குறைகளை அவர்களுக்கு பரிந்துரைகளாக அளிக்க முயற்சி செய்யுங்கள். இது அந்த அணிக்கு உத்வேகத்தை அளிப்பதுடன், உங்களது தலைமை பண்பையும் பிரதிபலிக்கும் விதமாக அமையும்.

4. இல்லை என்று துவங்காதீர்கள்!

நீங்கள் பங்கேற்கும் முக்கியமான மீட்டிங்குகளையோ அல்லது தனிப்பட்ட உரையாடல்களையோ, இல்லை என்ற வார்த்தையோடு ஆரம்பிக்காதீர்கள். உதாரணமாக ஒருவர் ஒரு செயலை எப்படி செய்யலாம் என்று கேட்கும் போது ''இல்லை, இதை இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை வழங்காமல், இந்தச் செயலை இப்படிச் செய்யலாமே’ என வழங்குங்கள். அவருக்கும் உடனடி வெறுப்பு வராமல் இருக்கும். உங்கள் கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

talk3.jpg

5. நாம் இப்படி செய்வதில்லை

அலுவலகத்தில் புதிய முயற்சியை ஒருவர் செய்கிறார் என்றால், அதனை என்ன என்று கவனியுங்கள். அது புதிதாக உள்ளது என்பதற்காக ''இது போன்ற விஷயங்களை நாம் செய்வதில்லை'' என்று கூறி புதுமைகளை மறுத்துவிடாதீர்கள். எல்லா விஷயங்களுமே புதிதாக யாரோ ஒருவர் உருவாக்கிய விஷயம் தான் எனபதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

6. அவர் சரியில்லை, அவர் சோம்பேறி, நிறுவனத்தைப் பிடிக்கவில்லை!

ஒரு நபரை ‘அவர் சரியில்லை’ என்றோ அல்லது ‘அவர் சோம்பேறித்தனமாக இருக்கிறார்’ என்றோ விமர்சிக்காதீர்கள்  தனிப்பட்ட மனிதர்களை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. உயரதிகாரியாக இருந்தாலும், தனக்குக் கீழ் பணிபுரிபவர்களின் வேலையை மட்டுமே விமர்சிக்க முடியும். அதேபோல் நிறுவனத்தைப் பிடிக்கவில்லை என்று விமர்சித்துவிட்டு பணிபுரியாதீர்கள்.  என்னதான் நீங்கள் சிறப்பாக பணிபுரிந்தாலும், இவர் விருப்பமில்லாமல் பணிபுரிகிறார் என்ற மனநிலையையே அது உருவாக்கும்.

vikatan

  • தொடங்கியவர்

தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்த வெளிநாட்டு ஜோடி

FDfdfd.jpg

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜோடி ஒன்று தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இச் சம்பவம்  திருகோணமலை திருக்கோணேஸ்வரா் ஆலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றுள்ளது.sfsfsf.jpg

virakesari

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று.....

ஓகஸ்ட் - 03

 

1492 : மேற்குத் திசை வழியாக சென்று இந்தியாவை அடைவதற்கான முயற்சியாக, ஸ்பெயினை விட்டு கொலம்பஸ் புறப்பட்டார்.

 

782varalaru1.jpg1492 : ஸ்பெயினில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.

 

1645 : முப்பதாண்டு போர்: ஜேர்மனியில் ஆலர்ஹைம் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் புனித ரோமப் பேரரசுப் படைகளைத் தாக்கி வெற்றி பெற்றனர்.

 

1783 : ஜப்பானில் அசாமா எரிமலை வெடித்ததில் 35,000 பேர் கொல்லப்பட்டனர்.

 

1858 : இலங்கையின் முதலாவது ரயில்பாதை நிர்மாணப் பணியை ஆளுநர் சேர் ஹென்றி வோர்ட் ஆரம்பித்து வைத்தார்.

 

 1860 : நியூஸிலாந்தில் இரண்டாவது மாவோரி போர் ஆரம்பமானது.

 

1936 : ஜேர்மனியின் பேர்லின் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டத்தில் அமெரிக்க கறுப்பின வீரரான ஜெஸி ஒவென்ஸ் முதலிடம் பெற்றார். இந்த ஒலிம்பிக் போட்டிகளில் அவர் மொத்தமாக 4 தங்கப் பதக்கங்களை வென்றார்.

 

1914 : முதலாம் உலகப் போரில் பிரான்ஸ் மீது ஜேர்மனி போர் தொடுத்தது.

 

782varalaru2.jpg1940 : இரண்டாம் உலகப் போரில்,  பிரித்தானிய சோமாலிலாந்து மீது இத்தாலி போர் தொடுத்தது.

 

1949 : ஐக்கிய அமெரிக்காவில் தேசிய கூடைப்பந்து சங்கம் அமைக்கப்பட்டது.

 

1960 : பிரான்ஸிடம் இருந்து நைஜர் சுதந்திரம் பெற்றது.

 

1975 : மொரோக்கோவில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 188 பேர் கொல்லப்பட்டனர்.

 

1990 : காத்தான்குடியில்  பள்ளிவாசலில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 147 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

 

2005 : மௌரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் ஜனாதிபதி மாவோயா ஊல்ட் தாயா, பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

 

2005 : ஈரானிய ஜனாதிபதியாக மஹ்மூத் அஹ்மடிநெஜாத் தெரிவானார்.

 

2010 : பாகிஸ்தானின் கராச்சி நகரில் இடம்பெற்ற வன்முறைகளினால் 85 பேர் கொல்லப்பட்டனர்.

 

2014 : சீனாவின் யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 617 பேர் கொல்லப்பட்டனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
எருமைகளுக்கான ஓட்டப்போட்டிகள்
 

தாய்லாந்தின் சோன்புரி மாகாணத்தில் எருமைகளுக்கான ஓட்டப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

 

18362135553585_14700065226531n.jpg

 

வருடாந்தம் நடைபெறும் இப்போட்டிகளை பார்வையிடுவதற்கு பெரும் எண்ணிக்கையான சுற்றுலா பயணிகளும் திரண்டிருந்தனர்.

 

18362homekanpurnewsphoto73a5951_thumb.jp

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தர்பூசணி தினத்தை கொண்டாடுவது எப்படி? #WatermelonDay

Breyerslogo2009.png

ன்று என்ன தினம்? ஆகஸ்ட் 3 என்கிறீர்களா...? இன்றைக்கு தர்பூசணி தினம்! ஆம்..  தென்னாப்பிரிக்காவில் பிறந்த தர்பூசணியைக் கொண்டாடும் பொருட்டு உருவாக்கப்பட்டதே தர்பூசணி நாள்.

USA வில் இந்த தினத்தை முன்னிட்டு, விடுமுறை அளிக்கப்படுகிறது. Colorado வில் முதல்முறையாக தர்பூசணி நாள் கொண்டாடப்பட்டது. 1878 ம் ஆண்டு, G. W. Swink என்பவர், 25 பேருடன் இணைந்து தர்பூசணி நாளைக் கொண்டாடினர். சில ஆண்டுகளில், ஏறத்தாழ 12,000 பேர் தர்பூசணி நாளைக் கொண்டாடத் தொடங்கினார்கள். இதனால், தர்பூசணிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதாம்!

வருடங்கள் ஓட ஓட தர்பூசணி தினம் தவறாமல் கொண்டாடப்பட்டு, தற்போது உலகில் பல நாடுகளில் தர்பூசணி தினம் கொண்டாடப்படுகிறது. இன்று நாமும் தர்பூசணி பற்றி சில தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

தர்பூசணியைப் பற்றி நமக்குத் தெரிந்தது என்ன? அது கோடை காலத்தில் அதிகம் விளையும் ஒரு பழம். இனிப்பாக, அதிக விதைகளுடன் இருக்கும். நீர் சத்து அதிகம். அநேகமாக இவ்வளவுதான் நமக்கு தெரியும். ஆனால், தர்பூசணி பற்றி நமக்குத் தெரியாத சில பல தகவல்களின் தொகுப்பு இதோ...

√ உலகிலேயே சீனாதான் அதிக அளவு தர்பூசணிகளை விளைவிக்கிறது.


√தர்பூசணி Pepo எனும் பெர்ரி வகை குடும்பத்தைச் சார்ந்தது.

√ Oklahomaவின் தேசியக் காய் தர்பூசணி!


√ முன் காலங்களில், வெகுதூரம் பயணம் செல்பவர்கள் நீருக்குப் பதிலாக தர்பூசணி பழங்களைச் சுமந்து செல்வார்களாம்.

√ உலகில் இதுவரை 1,200 வகை தர்பூசணிக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


√  டயட்டில் இருப்பவர்கள் தாராளமாக சாப்பிடலாம்.


நன்மைகள்

√ காய் மற்றும் கனி வகைகளுக்கு அடர் சிவப்பு நிறத்தைக் கொடுப்பது Lycopene. 6 mg தர்பூசணியில் 4 mg தக்காளியில் உள்ளது போல 1.5 மடங்கு அதிக லைக்கோபீன் உள்ளது. ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் லைக்கோபீன், பக்கவாதம் (Stroke) ஏற்படுத்துவதையும் குறைக்கிறது. அதுமட்டுமல்லாமல், புற்றுநோயைத் தடுக்கும் (anti-cncer activity) வேலையையும் லைக்கோபீன் செய்கிறது. பெண்களில் சினைப்பை புற்று நோய் வராமல் தடுக்கிறது லைக்கோபீன். அதனால், லைக்கோபீன் அதிகமுள்ள உணவுகளை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

√ l-citrulline எனும் ஒரு வகை அமினோ அமிலம் தர்பூசணியில் உள்ளதால், தசை வலிகளைக் குறைக்கும் தன்மை தர்பூசணிக்கு உண்டு.

√ இதுதவிர, தர்பூசணியில் அதிகளவு இரும்புச் சத்து, வைட்டமின் சி, பி6, ஏ, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்தும் உள்ளது.

√ தர்பூசணியில் 92-93% வரை நீர், நீர், நீர் மட்டுமே! அதனால்தான் இதன் பெயர் தண்ணீர்பழம். தர்பூசணி, நீர்ச்சத்து மிகுந்த பழம் என்பதால், உடலுக்கு மிகவும் நல்லது.

√ தர்பூசணியில் சதைப்பகுதியில் உள்ள சத்தைவிட அதிகளவு அதன் வெண்ணிற அடிப்பகுதியில் உள்ளது. அதை அப்படியே உண்ணலாம், இல்லை கூட்டு போலச் சமைத்து சாப்பிடலாம்.

√ தர்பூசணியின் விதையும் உடலுக்கு மிகவும் நல்லது. அதை வறுத்து உண்ணலாம். இனிப்பு பதார்த்தங்களில், முந்திரி பிஸ்தா போல இந்த விதைகளையும் வறுத்து போடலாம்.

இவ்வளவு விஷயங்களை உள்ளடக்கிய தர்பூசணியின்(!) தினத்தை எப்படிக் கொண்டாடுவது? கடைக்குச் சென்று ஒரு துண்டு தர்பூசணி சாப்பிடுங்கள். இல்லை, ஒரு தர்பூசணி ஜூஸ், சாலட் என ஏதாவது ஒரு வகையில் தர்பூசணியை சாப்பிடுங்கள்

இனிய தர்பூசணி தின வாழ்த்துக்கள்..!

vikatan

  • தொடங்கியவர்

பிரமிக்க வைக்கும் பஸ் சேவை.! (வீடியோ இணைப்பு)

 

 

 

சீனா முதன் முறையாக வாகன நெரிசலை குறைப்பதற்கு புதிய வாகனமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

 

குறித்த வாகனத்தில் 1500 பேர் வரை பயணிக்க முடிவதுடன் இதன் அடியில் பிற வாகனங்கள் பயணிக்க முடியும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

குறித்த பஸ் சேவை மூலம் எதிர்காலத்தில் சீனாவின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தலாம் என சீனா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

அசத்தல் 'மீம்' வழியில் குருப் பெயர்ச்சி பலன்கள்!

 
p_2957097h.jpg
 

ராசிபலன்கள் குறித்த பதிவுகளுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம். அதேபோல அன்றாட நிகழ்வுகளைக் கலாய்த்து பதிவிடும் மீம்களுக்கும் நிறைய ரசிகர்கள் உண்டு. இவை இரண்டையும் இணைத்தால் என்ன ஆகும்?

குருப் பெயர்ச்சி பலன்கள் (அனைவருக்கும் புரியும் வகையில்) என்ற பெயரில் அனைத்து ராசிகளுக்கும் உரிய பலன்களை மீம்களாக வெளியிட்டுள்ளது கிச்சடி என்னும் ஃபேஸ்புக் பக்கம். இதில் ஒவ்வொரு ராசிக்கும் பலன்களோடு அதற்கேற்ற சினிமா காட்சியின் புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.

பதிவிட்டு இன்னும் ஒரு நாள் கூட முடியாத நிலையில், அவற்றுக்கு 4,000 லைக்குகளும், 18,000 ஷேர்களும் கிடைத்துள்ளன.

உங்கள் ராசிக்கான பலன்களை நீங்களும் மீம் வழி அறிய....

2_2957088a.jpg

3_2957087a.jpg

4_2957084a.jpg

5_2957082a.jpg

6_2957083a.jpg

7_2957081a.jpg

8_2957080a.jpg

9_2957079a.jpg

10_2957090a.jpg

11_2957091a.jpg

12_2957092a.jpg

13_2957093a.jpg

 

tamil.thehindu

  • தொடங்கியவர்

வைரல் படங்கள் #BestOfToday #ViralPhotos

செல்ஃபி ஸ்பெஷலிஸ்டான oppo மொபைலுடன் தமன்னா...

 11.jpg


'ரெமோ' டீம் ஃபேர்வெல்! - இன்றுடன் படப்பிடிப்பு முடிவடைந்தது.

2.jpg


ஒலிம்பிக் பிராக்டீஸ் முடிஞ்சுது! #சானியா

3.jpg


இந்திய ஹாக்கி டீமுடன் சானியா...

5.jpg


கோலியின் கனவு நனவானது!

6a.jpg


கூல் ஹர்பஜன்...

7.jpg


ஒலிம்பிக் விழாவில் குழந்தைகளுடன் உசேன் போல்ட்

8.jpg


துபாயில் விபத்துக்குள்ளான விமானம்

9.jpg


கிரிஸ் கெயில் தனது மகளுடன்...

10.jpg


பாகிஸ்தானில் உள்ள  ஹுசைனி பாலம். உலகின் மிக ஆபத்தான பாலங்களில் இதுவும் ஒன்றாம்.

111.jpg


மியான்மரில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது

12.jpg


கஜகஸ்தானில் international army games விழாவில் வானில் சாகசம் புரியும் கலைஞர்கள்!

13.jpg

 

vikatan

  • தொடங்கியவர்

தோற்றவர்களின் கதை - 16

சுசி திருஞானம்தொடர்

 

p30a.jpg

பாகிஸ்தானின் இரும்புப் பெண்மணி’ என்று போற்றப்படும் இளம் ஓவியர் முனிபா மஸாரி. ஆசியாவின் முதல் சக்கர நாற்காலி மாடலிங் பெண்மணி. பாகிஸ்தான் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர். உலகின் 100 வலிமைமிக்க பெண்மணிகளில் ஒருவராக முனிபா மஸாரியை, பி.பி.சி தொலைக்காட்சி தேர்வு செய்திருக்கிறது. முனிபா மஸாரியின் வாழ்க்கைக் கதையைக் கேட்கும் எவருக்கும் தன்னம்பிக்கையும் உத்வேகமும் ஊற்றெடுக்கும்.

பாகிஸ்தானில் 1987-ம் ஆண்டு பிறந்தவர் முனிபா மஸாரி. 2007-ம் ஆண்டில் பெரும் விபத்தில் சிக்கினார். அப்போது அவருக்குத் திருமணமாகி சில காலமே ஆகியிருந்தது. ஓவியக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். தனது சொந்த ஊருக்கு காரில் பயணம் செய்துகொண்டிருந்தார். டிரைவர் சில நொடிகள் தூங்கிவிடவே, வேகமாகச் சென்ற கார் பள்ளத்தில் பாய்ந்து உருண்டது. முனிபா மஸாரியின் கால்கள் துண்டாகி விழுந்தன. கை, கழுத்து, முதுகுத்தண்டு எனப் பல இடங்களில் அவருக்கு எலும்புகள் முறிந்தன. கிட்டத்தட்ட உயிர்போகும் நிலைமை.

ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. ஒரு ஜீப்பில் அவரைத் தூக்கிவைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, ‘‘முதல் உதவிகூடச் செய்ய முடியாது - கொண்டுபோய் விடுங்கள்’’ என்று கூறிவிட்டனர். அடுத்து ஒரு பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். அங்குள்ள மருத்துவர்களும், ‘‘அவர் சிறிது நேரத்தில் இறந்துவிடுவார் - கொண்டுபோய் விடுங்கள்’’ என்றனர். மூன்றாவது மருத்துவமனையில், அவரைச் சேர்த்துக்கொண்டு சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். இரண்டு பெரிய ஆபரேஷன்களும் மூன்று சிறிய ஆபரேஷன்களும் செய்யப்பட்டன.

‘‘நான் உண்மையிலேயே இரும்புப் பெண்மணிதான். என் உடலின் பல இடங்களில் உலோகக் கம்பிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன’’ என்று தன் வேதனையை வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார் முனிபா மஸாரி.    

இரண்டு ஆண்டுகள் மருத்துவமனைப் படுக்கையில் வலிமிகுந்த வாழ்க்கை. கால்கள் துண்டிக்கப்பட்டுவிட்டன. முதுகுத்தண்டிலும் கைகளிலும் அறுவைச்ச்ிகிச்சை செய்யப்பட்டி ருந்தது. பல் துலக்க முடியாது, தலைமுடியைச் சரி செய்ய முடியாது. விபத்து நிகழ்ந்ததிலிருந்து அத்தனை வலியையும் பொறுத்துக்கொண்டு அவர் ஒரு சொட்டுக் கண்ணீர்கூட விடவில்லை.

உடல் வலியைவிட, தான் நம்பிய மனிதர்கள் தன்னைவிட்டு விலகிப்போன வலி அவரை அதிகம் காயப்படுத்தியது. அப்பா, அவரைவிட்டுச் சென்றுவிட்டார். கணவர், விவாகரத்து செய்துவிட்டார். பார்க்க வருகிறவர்கள் ஆறுதல் சொல்வதாக நினைத்து வேதனைப்படுத்தினார்கள்.

விரக்தியில் தற்கொலை எண்ணம் அவருக்குள் தலைதூக்கியது. தனக்குள் சிந்தித்துப்பார்த்த முனிபா மஸாரிக்கு, ஒருநாள் திடீரென யதார்த்த நிலைமை சுளீரென உரைத்தது. ‘‘என் வாழ்வில் இல்லாத மனிதர்களை நம்பிப் புலம்புவதைவிட என் மீது இன்னும் நம்பிக்கை வைத்திருப்பவர்களை நினைத்துப் பெருமைப்பட வேண்டும் என முடிவெடுத்தேன். செயல் இழந்த உடல் உறுப்புகளைப் பற்றிக் கவலைப்படுவதைவிட, தேறிவரும் உடல்நிலை குறித்து நம்பிக்கைகொள்ள முடிவெடுத்தேன்’’ என்று முனிபா குறிப்பிடுகிறார்.   

p30b.jpg

அவரது கை ஓரளவு இயங்க ஆரம்பித்தது. அவரது ஓவியத் திறமை பற்றி அறிந்த மருத்துவர் அதைத் தொடரச் சொன்னார். பேப்பரைத் தூக்குவதற்குக்கூட நடுங்கிய கைகளால் எப்படி ஓவியம் வரைவது என்று முனிபா மஸாரி தயங்கினார். அம்மாவும், சகோதரர்களும் உற்சாகப்படுத்தினார்கள். தூரிகையைத் தொட்டதுமே முனிபா மஸாரியின் வாழ்க்கை மீண்டும் வண்ணமயமாக மாற ஆரம்பித்தது. உடல் வலிகளை மட்டுமின்றி, மனவலிகளையும் காணாமல் செய்துவிட்டன முனிபா மஸாரி வரைந்த வண்ணமயமான ஓவியங்கள்.

ஓர் இணையதளத்தில் எழுதும் வாய்ப்பு வந்திருப்பது பற்றித் தனது சகோதரர்களிடம் பகிர்ந்துகொண்டார் முனிபா மஸாரி. ‘‘இனிமேல் உன் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. உனது வெற்றி, மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக மாறும்’’ என்று அவர்கள் மனதார வாழ்த்தினார்கள்.

முனிபா மஸாரிக்கு எழுதும் வாய்ப்புத் தந்த இணையதளமே, அவரது 25 ஓவியங்களை வாங்கிக்கொண்டது. எழுதுவதும், படம் வரைவதும் வருமான வாய்ப்பாகவும் மாபெரும் அங்கீகாரமாகவும் மாறியதால், முனிபாவின் தன்னம்பிக்கை உயர்ந்தது. வேகமாகப் பிரபலம் அடைந்தார் முனிபா. பள்ளிகள், கல்லூரிகளில் அவரைப் பேசுவதற்கு அழைத்தனர். ‘டெட் எக்ஸ் இஸ்லாமாபாத்’ பேச்சரங்கத்தில் தனது வாழ்க்கைக் கதையை அற்புதமான ஆங்கிலத்தில் அவர் பேசியபோது, உலகின் தலைசிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளர்களில் ஒருவராக அவர் உயர்ந்தார். தொலைக்காட்சித் தொகுப்பாளராகக் கலக்கிவரும் முனிபா மஸாரி, மாடலிங் துறையிலும் கால் பதித்துவிட்டார்.

p30c.jpg

‘‘பேசும் இடங்களிலோ, அடுத்தவர்கள் முன்பாகவோ நான் அழுததே இல்லை. எனினும், ஒவ்வொரு நாள் இரவும் நான் கண்ணீர்விடுகிறேன். எனக்காக அல்ல... என் கண்ணீர். வலியோடு போராடும் சாதாரண மக்களை நினைத்து நான் அழுகிறேன். எனது வலியைத் தாங்கிக்கொள்ளவும், எனது திறமைகளை வளர்த்து, முன்னேறவும் வழிகாட்டிய கடவுள், ஆதரவற்று வலியில் வாடும் சாதாரண மனிதர்களுக்கும் வழிகாட்ட வேண்டும் என்று தினமும் பிரார்த்தனை செய்கிறேன்’’ என்கிறார் முனிபா மஸாரி.

சாவின் விளிம்புவரை சென்று திரும்பிய சாதனைப் பெண் முனிபா மஸாரி, இளைஞர்களுக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடம் இதுதான்: ‘‘என்னை உயர்த்த நான் மட்டுமே மெனக்கெட வேண்டும் என்பதை எப்போது நான் புரிந்துகொண்டேனோ, அந்தக் கணம்தான் எனது வாழ்க்கையில் வசந்தம் வந்தது. அதையே உங்களுக்கும் சொல்கிறேன். வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் சிறுசிறு தோல்விகளுக்காக அழுதுகொண்டிருக்க வேண்டாம். சோதனைகளைச் சாதனைகளாக மாற்ற உத்வேகம்கொள்ளுங்கள். கதாநாயகர்களை வெளியே தேடாதீர்கள். அந்தச் சக்தி உங்களுக்குள் இருக்கிறது.’’

(இன்னும் வெல்வோம்)

vikatan

  • தொடங்கியவர்
ஒலிம்பிக் வரவேற்பு நடனம்
 

1512016-08-01T175541Z_1619978133_RIOEC81

 

1512016-08-01T175824Z_472168930_RIOEC811

 

1512016-08-01T211904Z_1159571507_S1BETSZ

 

பிரே­ஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ நகரில் நடை­பெ­ற­வுள்ள ஒலிம்பிக் போட்­டி­களில் பங்­கு­பற்றும் வீர வீராங்­க­னைகள் ரியோ நக­ருக்குச் செல்ல ஆரம்­பித்­துள்ள நிலையில், ரியோ ஒலிம்பிக் கிரா­மத்தில் கடந்த ஞாயிறு, திங்கள் தினங்­களில் நடை­பெற்ற வர­வேற்பு நிகழ்­வு­களில் கலை­ஞர்கள் நட­னமா­டு­வ­தையும் ஈரான், அயர்­லாந்து நாடு­களின் போட்­டி­யா­ளர்கள் சிலரையும் படங்களில் காணலாம்.

 

151841403-01-02.jpg

 

151842698-01-02.jpg

 

151845629-01-02.jpg

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

லியான் யூரிஸ்

 
urisleon_2957140f.jpg
 

லியான் யூரிஸ் - அமெரிக்க நாவலாசிரியர்

உலகப் புகழ்பெற்ற 'எக்ஸோடஸ்' நாவலை எழுதிய அமெரிக்க எழுத்தாளர் லியான் யூரிஸ் (Leon Uris) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் யூதக் குடும்பத்தில் (1924) பிறந்தார். தன் நாய் இறந்த துயரத்தை இவர் தனது 6-வது வயதில் ஓரங்க நாடகமாக எழுதியதாகக் கூறப்படுகிறது. பால்டிமோரிலும், வர்ஜீனியாவின் நார்ஃபோல்க் நகரிலும் பள்ளிக்கல்வி பயின்றார்.

* இவருக்கு 17 வயதானபோது, பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தகர்த்தது. உடனடியாக அமெரிக்க கடற்படையில் சேர்ந்தார். தெற்கு பசிபிக் பகுதியில் பணியாற்றினார். ஓய்வுபெற்ற பிறகு, ஒரு பத்திரிகையில் பணியாற்றினார்.

* ஓய்வு நேரங்களில் பல இதழ்களுக்கு கட்டுரைகள் எழுதினார். 1950 முதல், எழுதுவதில் முழு நேரத்தையும் செலவிட்டார். தனது போர்க்கால அனுபவங்களை கருவாகக் கொண்டு, விற்பனையில் சாதனை படைத்த 'பாட்டில் க்ரை' நாவலை எழுதினார்.

* வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தில் சேர்ந்து உதவி திரைக்கதை ஆசிரியராகப் பணியாற்றினார். போரை அடிப்படையாகக் கொண்டு 'தி ஆங்க்ரி ஹில்ஸ்' என்ற நாவலை உருவாக்கினார். இதுவும் மகத்தான வெற்றி பெற்று பரபரப்பாக விற்பனையானது.

* யூதர்கள் பற்றி ஒரு நூல் எழுத முடிவு செய்தார். அதற்கான ஆய்வுகளுக்காக தனது திரைக்கதை உரிமைகளை விற்றும், பத்திரிகைகளில் எழுதியும் பணம் திரட்டினார். உலகப் புகழ்பெற்ற தனது 'எக்ஸோடஸ்' நூலுக்காக 2 ஆண்டுகள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நீண்ட பயணம் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கானோரை நேரில் சந்தித்து, தகவல் திரட்டினார்.

* இந்த நூல் 1958-ல் வெளியானதும், உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் அதிகம் விற் பனையாகும் புத்தகங்களின் வரிசையில் தொடர்ந்து 19 வாரங்கள் முதலிடம் வகித்தது. லட்சக்கணக்கான பிரதிகள் விற்றன.

* யூதர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, அநியாயங்களை இந்நூல் படம்பிடித்துக் காட்டியது. இதில் வரும் கதாபாத்திரங்கள் நம்முடன் வாழ்வது போலவே தோன்றும் அளவுக்கு வசீகரமாக எழுதியுள்ளார் என உலகமே இவரை போற்றிக் கொண்டாடுகிறது. 'மாஸ்டர் ஸ்டோரிடெல்லர்' என்று போற்றப்பட்டார்.

* ஏறக்குறைய 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு, வசூலில் சாதனை படைத்தது. ஒரு டஜனுக்கும் மேற்பட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ஏறக்குறைய எல்லா மொழிகளிலுமே வெற்றிபெற்றது.

* தொடர்ந்து எழுதியும் திரைப்படங்களில் பணிபுரிந்தும் வந்தார். 1967-ல் இவரது 'டோபாஸ்' நாவல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. இவர் எழுதிய 'மிலா 18', 'ஆர்மகடான்: எ நாவல் ஆஃப் பெர்லின்', 'ரிடம்ப்ஷன்', 'மிட்லா பாஸ்' என அனைத்து நாவல்களும் பெரும் வரவேற்பை பெற்றன. 'தி ஹஜ்' நாவல், மத்தியக் கிழக்கு நாடுகளின் வரலாற்றை எடுத்துக்கூறியது.

* போர்கள், போரின் விளைவுகள், நாடுகளின் வரலாறு, போர் அனுபவங்கள் பற்றியே இவரது பல படைப்புகள் இருந்தன. தன் படைப்புகள் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த லியான் யூரிஸ் 79-வது வயதில் (2003) மறைந்தார். இவரது கட்டுரைகள், நாவல்கள், கையெழுத்துப் பிரதிகள் ஆகியவை டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஹாரி ரான்சம் மையத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

tamil.thehindu

  • தொடங்கியவர்

 

உண்மையின் ஓசை உலகெங்கும் கேட்கும்!
 

article_1470200054-iui68.jpgஉண்மையான சத்திய வாழ்வில் நம்பிக்கையுடைய பேச்சாளர்கள் எவருக்கும் அச்சப்படாமல், உள்ளதை உள்ளபடி உரை செய்வார்கள்.

தெரியாத உண்மைகளை மக்களிடம் சொல்லி அவர்களை விழிப்படையச் செய்வதில் ஏது தவறுண்டு ஐயா?

எமது முன்னோர்கள் செவி வழி மூலம் அறிந்த இலக்கிய, ஆத்மீக உன்னதப் படைப்புகளையே நாம் இன்று நூல்கள் வழியாகப் படிக்கின்றோம். அவை ஏடுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தன.  உள்ளதை உள்ளவாறு தமது ஞானத்தினூடாக மக்கள் மத்தியில் சொல்லி வந்துள்ளமையினால் அறநூல்கள், ஆன்மீக இலக்கியங்கள் பழைமையின் செல்வங்களாக என்றுமே அழியாமல் எம்முன்னே விழிப்பூட்டி வருகின்றன.

எனவே, பேசுவதில் உண்மை துலங்கினால் அவை என்றும் வாழும் என்பதை பேச்சாளர்களும் அறிஞர்களும் உணர வேண்டும்.

உண்மையின் ஓசை உலகெங்கும் கேட்கும்!

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இவ்வளவு ஜாலியாக, ஓர் அமெரிக்க அதிபரா! ##HappyBirthdayObama

barack-obama-family-photos-white-house-i

6 அடி, 2 அங்குல உயரம். ஒல்லியான உடல்வாகு, இவரது பேச்சு எல்லாரையும் வசியப்படுத்தும், இவர் பேசினால் தன்னம்பிக்கை ததும்பும். இப்படிப்பட்ட புகழுக்கு உரிய ஒருவர் நிச்சயம் ஒரு பேராசிரியராக இருக்க வேண்டும் என்றால் ஆம் இவர் பேராசிரியர் தான். 12 ஆண்டுகள் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சிறந்த பேராசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்ட  பாரக் ஹூசைன் ஒபாமா தான் அமெரிக்க அதிபராக 8 ஆண்டுகள் மக்கள் மனதில் அழியாத இடம் பிடித்த ஒபாமா!  தொடர்ந்து 12 ஆண்டுகள் ‘சிறந்த பேராசிரியரா’கத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்கு உரியவர்!

அமெரிக்கா ஹவாய் மாகாணத்தின் ஹோனோலுலுவில் 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி பிறந்தார். ஹார்வர்டு மற்றும் கொலம்பியா பல்கலைகழகங்களில் பட்டம் பெற்றார். சிகாகோ சட்டப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்றபோது அறிமுகமான மிஷேலைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். மலியா, நடாஷா (எ) சாஷா என்று இரண்டு தேவதைகளுக்கு தந்தையானார்.  1997ம் ஆண்டு இலினோய்ஸ் மாகாணத்தின் செனட் உறுப்பினரானார். அங்கு ஹெல்த் கேர் சட்ட திருத்தங்களை கொண்டு வந்தார். 2004ம் ஆண்டு இந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு அமெரிக்க செனட் பதவிக்கு போட்டியிட்டார். அதிலும் வெற்றி பெற்ற ஒபாமா 2008ம் ஆண்டு ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர்.

அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒபாமா 2009ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். நான் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவ‌ன் என்றெல்லாம் கூறாமல் சாமானிய அமெரிக்கர்களின் பிரச்னைகளான ஊதிய உயர்வு, மருத்துவச் செலவு, கல்விவசதி போன்றவற்றை மேம்படுத்துவேன். மாற்றம் வேண்டும் அதனை ஏற்படுத்தும் நம்பிக்கை என்னிடம் உள்ளது என்று உரை மூலம் தன்னை மக்களின் அதிபராக நிலைநிறுத்தி கொண்டார் ஒபாமா.

 இன்று வரை தேர்தல் பிரசாரங்களில் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிற.  ஹோப், எஸ் வீ கேன் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒபாமாவின் தேர்தல் பிரசாரங்களில்தான் முதலில் அறிமுகமானது.  பிரசார நேரங்களில் ஈராக் போரை ஆதரித்து பேசிய குடியரசு கட்சியை, ‘அமெரிக்கா போரை விரும்பும் நாடு அல்ல!’ என்று ஒற்றை வரியில் காலி செய்தார். தொடர்ந்து இவரின் பேச்சுகளில் நம்பிக்கை அதிகரித்தது மக்களுக்கு. அப்படித்தான் அமெரிக்காவில் பிறக்காத, கருப்பர் இன தலைவர் ஒருவர் அமெரிக்க அதிபரானார். ஒபாமா அதிபராகப் பதவியேற்றபோது, வாஷிங்டனில் 2.4 டிகிரி செல்சியஸ் குளிரையும் மீறி, 20 லட்சம் பேர் திரண்டார்கள். கிளிண்டன் இரண்டாவது முறை பதவியேற்றபோது, 50 ஆயிரம் பேர் நேரில் கூடியதே அதுவரையிலான சாதனையாக இருந்தது.

ஒபாமா அதிபராக பதவியேற்றதும் பிரசாரங்களில் சொன்ன விஷயங்களை படிப்படியாக செய்யத் துவங்கினார். ஈராக்கிலிருந்து படிப்படியாக படைகளை திரும்ப பெற்றது;  ஒபாமா ஹெல்த் கேர் என்ற மருத்துவ வசதிகளை வழங்கியது; அனைத்து நாடுகளுடன் நல்ல நட்புறவு என்பதில் துவங்கி பருவ நிலை மாற்றத்துக்கான முதல் குரலை எழுப்பி உலகையே பருவநிலை மாற்றத்துக்காக முக்கிய முடிவுகளை எடுக்கச் செய்தது வரை, பல விஷயங்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார்.

நான்கு வருடங்கள் அதிபராக அமெரிக்கர்களின் மனதில் நன்மதிப்பை பெற்றார் ஒபாமா, அமெரிக்கர்களின் மனதுக்கு மிகவும் பிடித்தவர் ஒபாமா என்பது தான் அவரை 2012ம் ஆண்டு தேர்தலில் அவரை மீண்டும் அதிபராக்கியது.  அந்தத் தேர்தலை நம்மிலிருந்து துவங்குவோம் என்ற வீடியோவோடு துவங்கினார் ஒபாமா.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரங்களில் அவரது மனைவி மிச்சேல் ஒபாமாவின் பங்கு அளப்பரியது. 2008ம் ஆண்டு ஜனநாயக கட்சியின் மாநாட்டில் மிச்சேல் ஆற்றிய, ''ஏன் என் க‌ணவரை அதிபராக்க வேண்டும்?'' என்ற உரை அமெரிக்க தேர்தல் பிரசார வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.  2012ம் ஆண்டு இரண்டாவது முறையாக அதிபராக்கப்பட்ட போதும் ''ஒரே நாடு, ஒரே மக்கள். கருப்பு, வெள்ளை பேதம் இங்கு இல்லை'' என்று முழங்கினார் ஒபாமா.

ஒபாமா விமர்சனங்களுக்கு சளைக்காத நபர். தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை தைரியமாக எதிர் கொண்டு தனது செயல்களால், அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஒபாமா, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். ஆனால், நியூஸ் வீக் பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் இவர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என 12 சதவிகித அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். இவரது கைக்கடிகாரம் மூலம், அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. அவருக்கு ரகசியத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் என்று ஒரு தகவல் உண்டு.

'ஒபாமாவுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறது' என்று குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, 'உண்மையான அன்புக்காக சிறு வயதில் ஏங்கியவன் நான். போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து மீண்டவன்!' என்று இவர் தனது சிறு வயது நினைவுகளை மனம் திறந்து பகிர்ந்துகொண்டது அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் இவருக்கு பெரிய அளவில் மதிப்பை ஏற்படுத்தியது.

2009-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது. "அந்தப் பரிசுக்கு ஒபாமா தகுதியானவரா என்பது ஒருபுறம் இருக்கட்டும்... இந்தப் பரிசை அளித்ததன் மூலம் அமெரிக்கர்களைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டது நோபல் கமிட்டி. பதவி ஏற்ற ஒன்பதே மாதங்களில் அவருக்கு அளிக்கப்பட்ட இந்த அங்கீகாரம் மிகவும் பிரமாண்டமானது!' என தலையங்கம் எழுதியது அமெரிக்காவின் மனசாட்சியான 'தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்' பத்திரிகை.

அமெரிக்காவை நடுங்க செய்த 9/11 தாக்குதலை நடத்திய ஒசாமா பின்லேடனை வீழ்த்தி, சர்வதேச தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்காவால் சரியான பதிலடி கொடுக்க முடியும் என்பதையும் உணர்த்தினார் ஒபாமா.

ஒபாமா  அமெரிக்க அதிபர் என்பதை தாண்டி அன்பானவர் என்பதற்கு பல உதாரணங்கள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பூங்காக்களில் அமெரிக்க சிறுவர்களுடன் உரையாடுவது,  கடிகாரத்தில் வெடிகுண்டு தயாரித்தான் என்பதற்காக கைது செய்யப்பட்ட சிறுவனை ‘அஸ்ட்ரானமி நைட் டின்னரு’க்கு அழைத்து, ‘நீ எப்போது வேண்டுமானாலும் வெள்ளை மாளிகைக்கு வரலாம்!’ என அன்பு காட்டியது என்று ஒபாமாவின் இன்னோரு முகத்தைக் காட்டும் செயல்கள் பல. அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில் ஒபாமா வெள்ளை மாளிகைக்குள் செய்த சேட்டைகளின் புகைப்படத்தொகுப்பும் நெட்டில் வைரல். ‘அமெரிக்க அதிபரானால் என்ன நானும் ஒரு மனிதன்தான்’ என்று  இருந்த இவரது இந்தக் குறும்புகள் இளைஞர்கள் மத்தியில் லைக்ஸ் அள்ளியது.

இப்போதும் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தி, ‘ ட்ரம்ப் இந்த பதவிக்கு தகுதியற்றவர். உங்களுக்கு யார் அமெரிக்காவை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுவார்களோ அவருக்கு வாக்களியுங்கள்!’ என கூறுகிறார். வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதைக்கூட நகைச்சுவையான வீடியோ மூலம் பதிவு செய்கிறார் பராக் ஒபாமா.

நேற்று நடந்த கூட்டத்தில் கூட சிங்கப்பூரின் நான்கு மொழிகளில் வணக்கம் கூறி தன்னை உலகத் தலைவனாக அடையாளப்படுத்தி கொள்கிறார்.

அமெரிக்கா பல அதிபர்களை சந்தித்துள்ளது. கருப்பு இனத்தவர், விமர்சனங்கள், சர்ச்சைகள் என பல விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களின்  அதிபராக வலம் வரும் ஒபாமா நல்ல அதிபர் என்பதையும் தாண்டி உலக அரசியல் தலைவர்கள், இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் இருக்கிறார்.

 


8 ஆண்டுகால அதிபர் வாழ்க்கையில் வெள்ளை மாளிகையில் ஒபாமாவின் மகிழ்ச்சியான தருணங்கள்

obama1_070516090318.jpg

obama5_070516090314.jpg

obama12_070516090257.jpg

obama14_070516090257.jpg

obama647_070516091452.jpg

obama16_070516090257.jpg

obama7_070516090314.jpg

 

vikatan

  • தொடங்கியவர்
 

வரலாற்றில் இன்று...

ஓகஸ்ட் - 04

 

70 : ரோமர்­களால் ஜெரு­சலேம் நகரில் இரண்­டா­வது கோயில் அழிக்­கப்­பட்­டது.

 

1578: மொரோக்­கர்கள் போர்த்­துக்­கீ­சரை போரில் வென்­றனர். போர்த்­துக்கல் மன்னன் செபஸ்­டியான் போரில் கொல்­லப்­பட்டார்.

 

1704 : ஆங்­கில, டச்சுக் கூட்­டுப்­ப­டை­க­ளினால் ஜிப்­ரால்ட்டர் கைப்­பற்­றப்­பட்­டது.

 

783varalru-04-08.jpg1789 : பிரான்ஸில் நில­மா­னிய முறையை ஒழிக்க அந்­நாட்டு சட்­ட­சபை உறுப்­பி­னர்கள் உறு­தி­மொழி எடுத்­தனர்.

 

1824 : ஒட்­டோமான் பேர­ர­சுக்கும் கிரேக்­கர்­க­ளுக்கும் இடையில் கொஸ் என்ற இடத்தில் போர் இடம்­பெற்­றது.

 

1902 : தேம்ஸ் ஆற்றின் கீழாக கிரீனிச் நடை சுரங்கம் அமைக்­கப்­பட்­டது.

 

1906 : சிட்­னியில் மத்­திய ரயில் நிலையம் திறக்­கப்­பட்­டது.

 

1914 : முதலாம் உலகப் போர்: பெல்­ஜி­யத்தின் மீது ஜேர்­மனி படை­யெ­டுத்­தது. இதன் கார­ண­மாக ஐக்­கிய இராச்­சியம் ஜேர்­ம­னியின் மீது போரை அறி­வித்து உலகப் போரில் முதன் முறை­யாகக் குதித்­தது.

 

1916 : முதலாம் உலகப் போரில் ஜேர்­மனி மீது லைபீ­ரியா போர் தொடுத்­தது.

 

1936 : கிரேக்க தள­பதி இயோனிஸ் மெட்­டாக்சஸ், நாட்டின் நாடா­ளு­மன்­றத்தைக் கலைத்து தன்னை நாட்டின் தலை­வ­னாக அறி­வித்தார்.

 

1946 : வடக்கு டொமி­னிக்கன் குடி­ய­ரசில் ஏற்­பட்ட பூகம்பம் கார­ண­மாக 100 பேர் கொல்­லப்­பட்டு 20,000 பேர் வீடு­களை இழந்­தனர்.

 

1964 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் மனித உரிமை ஆர்­வ­லர்­க­ளான மைக்கல் ஷ்வேர்னர், அண்ட்ரூ குட்மன், ஜேம்ஸ் சானி ஆகியோர் மிசி­சிப்­பியில் இறந்து கிடக்கக் காணப்­பட்­டனர். இவர்கள் ஜூன் 21 இல் காணாமல் போயி­ருந்­தனர்.

 

1975 : மலே­ஷியா தலை­நகர் கோலா­லம்­பூரில் ஜப்­பா­னிய செம்­ப­டை­யினர் ஏ.ஐ.ஏ. கட்­டடத்தைத் தாக்கி அமெ­ரிக்கத் தூதுவர் உட்­பட 50 பேரைப் பணயக் கைதி­க­ளாகப் பிடித்­தனர். பின்னர் இப்­ப­ணயக் ­கை­தி­களை விடு­வித்து சிறைக்­கை­தி­க­ளா­யி­ருந்த தமது 5 தோழர்­க­ளுடன் லிபி­யா­வுக்குப் பய­ண­மா­யினர்.

 

1984 : அப்பர் வோல்ட்டா ஆபி­ரிக்கக் குடி­ய­ர­சா­னது "புர்­கினா பெசோ" எனப் பெயர் மாற்றம் பெற்­றது.

 

1991 : "ஓசி­யானோஸ்" என்ற கிரேக்க கப்பல் தென்­னா­பி­ரிக்­காவில் மூழ்­கி­யது. இக்­கப்­ப­லி­லி­ருந்த  571 பய­ணி­களும் காப்­பாற்­றப்­பட்­டனர்.

 

2006 : "அக் ஷன் ஃபெய்ம்" (பட்­டி­னிக்கு எதிரான அமைப்பு) எனும் பிரெஞ்சு அரச சார்பற்ற அமைப்பின் 17 பணியாளர்கள் மூதூரில்  கொலை செய்யப்பட்டனர்.

 

2007 : நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப் பட்டது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

 

p54b.jpg

காதல். சொன்னதுமே மனசு குஷியாகிவிடுகிற விஷயம்தான். காதல் கடிதம் எழுதிக் காதலிக்க ஆசைப்படும் அப்பாவிகளுக்காகவே இருக்கிறது ‘பெஸ்ட் லவ் லெட்டர் ரைட்டர்’ என்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன். பேனாவையும், பேப்பரையும் தூக்கிட்டுத் திரியாம, அப்ளிகேஷனை ஓப்பன் பண்ணுங்க!

p54a.jpg

பெயருக்குதான் ‘லவ் லெட்டர் ரைட்டர்’ அப்ளிகேஷனே தவிர, இதில் நாம் விரல் வலிக்க டைப் பண்ணிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய பெயரைப் பதிவுசெய்து, அதில் கேட்கும் சில விபரங்களைப் பூர்த்தி செய்தால் போதும். நம்முடைய ரசனைக்குத் தகுந்த மாதிரி, ‘மானே தேனே’ மாடல்களோ, ‘அன்புள்ள டயானா’ வகை வாக்கியங்களோ, ‘மாமா... ஐ லவ் யூ’ வகை எழுத்துகளுமாக அலங்கரிக்கும். பொறுமையாகப் படித்துப்பார்த்துப் பொருத்தினால் இனிக்க, மணக்க ஒரு காதல் கடிதம் ரெடி. ஏனெனில், இந்த அப்ளிகேஷனில் 90 சதவிகிதம் நாம் டைப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. தவிர, காதலிக்குப் பிடித்த நிறம், எமோஜி, பூக்கள், பிடித்த வாசகங்கள்... என அலங்கரிக்கலாம். இப்படியாக, ‘லவ் லெட்டர்’ என்ற பெயரில் ஆயிரம் அப்ளிகேஷன்கள் உலவினாலும் இந்த அப்ளிகேஷன் கொஞ்சம் ஸ்பெஷல் என்பது, நீங்கள் காதல் கடிதம் தீட்ட ஆரம்பிக்கும்போதே புரியும். மடமடவென தட்டிக்கொண்டிருக்காமல், நறுக் சுறுக்கென ‘ஐ லவ் யூ’ சொல்ல ஆசைப்படுபவர்களுக்கு ‘அவசர லவ் லெட்டர்’களும் இதில் உருவாக்கிக்கொள்ளலாம்.

p54.jpg

காதலை நேரில் சொல்லத் தயங்குபவர்கள், உருவாக்கிய கடிதத்தை ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி வைக்கலாம். காதலைச் சொல்ல இருப்பவர்கள் மட்டுமல்ல, காதலித்துக்கொண்டிருக்கிற, கல்யாணம் முடிந்து குழந்தை குட்டிகளோடு செட்டில் ஆனவர்களும், அடிக்கடி இதன்மூலம் காதல் கடிதங்களைத் தீட்டி அன்பை அதிகரிக்கச் செய்யுங்கள் என்பது அப்ளிகேஷனைக் கண்டுபிடித்தவர்களின் தாழ்மையான வேண்டுகோள்.

பின்குறிப்பு : ஒரு லெட்டரை ஒரே நேரத்தில் பலருக்கும் அனுப்பி, நேரத்தை மிச்சப்படுத்திக்கொள்ளும் வழி இருந்தாலும், மாட்டிக்கொள்ளும் சாத்தியங்கள் டெக்னாலஜியில் அதிகம் என்பதால், இந்த விஷயத்தை மட்டும் கொஞ்சம் பொறுமையாகப் பரிசீலனை செய்து முடிவெடுத்துக்கொள்ளவும்.

டவுன்லோடு லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.appsbuilder449522

 

vikatan

  • தொடங்கியவர்

சீனாவில் கண்ணாடியிலான நடைபாதை தொடக்கம் (புகைப்படத் தொகுப்பு)

 

சீனாவில் உள்ள டியான்மென் மலைப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வண்ணமாக கண்ணாடியிலான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கள்கிழமை முதல், இந்த கண்ணாடி நடைபாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளனர்.

160803024804__chinas_glass_bridge_624x41

 சீனாவின் கண்ணாடி பாலம் அமைக்கும் தாகத்தில் விளைந்த புதிய வரவு இது

 

160803024847__chinas_glass_bridge_624x41

ஹுனான் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள , இந்த கண்ணாடி நடைபாதை, திங்கள்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டது.

 

160803024953__chinas_glass_bridge_624x35

 

 ஃபோட்டோ எடுக்கவும், செல்பி எடுக்கவும் இதை விட வேறு அற்புதமான இடம் கிடைக்குமா? 160803025016__chinas_glass_bridge_624x35

 

 அச்சம் காரணமாக சுவரில் கைவைத்தவாறு மெதுவாக முன்னேறும் சுற்றுலாவாசிகள்

160803025057__chinas_glass_bridge_624x35

 

 கண்ணாடி பாலத்திலிருந்து கீழே பார்ப்பது அச்சமும், திரில்லும் நிரம்பிய அனுபவம்

160803025137__chinas_glass_bridge_624x35

 

4600 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த நடைப்பாதை, இயற்கை அழகை கண்டு களிக்க சிறந்த இடமாகும்.

160803025204__chinas_glass_bridge_624x35

 

 இந்த பாலத்தின் உறுதியை பரிசோதிக்க நடந்த முயற்சி

 

160803025231__chinas_glass_bridge_624x35

 

பெரிய சுத்தியலால் கண்ணாடி பாலம் உடைபடுகிறதா என்று சோதனை செய்யப்படுகிறது.

BBC

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

p42a.jpg

* 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் அகதிகள் அணி இடம்பெறுகிறது. சிரியா நாட்டைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான யஸ்ரா மிர்தினியின் வீடு, கடந்த ஆண்டு உள்நாட்டுப் போரில் தாக்குதலுக்கு உள்ளானது. உயிர்பிழைத்து சகோதரியுடன் வெளியேறிய யஸ்ரா, துருக்கி வந்தார். அங்கு இருந்து படகு மூலம் கிரீஸ் நாட்டுக்குச் செல்வதுதான் திட்டம். 7 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய படகில் 18 பேர் பயணிக்க, நடுக்கடலில் படகு மூழ்கத் தொடங்கியது. நீச்சல் வீராங்கனையான யஸ்ரா தன் சகோதரியுடன் நான்கு மணி நேரம் கடலில் நீந்தியபடியே படகை மீட்டுக்கொண்டுவந்து கரை சேர்த்தார். இப்போது ஜெர்மனியில் வசிக்கும் யஸ்ராவை, அகதிகள் அணிக்காகத் தேர்ந்தெடுத்தது ஒலிம்பிக் கமிட்டி. 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் கலந்துகொள்ளும் யஸ்ரா, நிச்சயம் பதக்கம் வெல்வார் என எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது அகதிகள் அணி. எதிர்நீச்சலடி!


p42b.jpg

* ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் 70–வது சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி ஐ.நா சபையின் பொது அரங்கில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில், இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். 1966-ம் ஆண்டு, அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.நா சபையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி கலந்துகொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார். அதன் பிறகு இன்னொரு தமிழரான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மட்டுமே இசை நிகழ்ச்சி நடத்த அழைப்புவிடுக்கப்பட்டிருக்கிறது. ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில், ஐ.நா சபையில் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள இருக்கின்றனர். ரக்கா ராஜ்ஜியம்!


* வீட்டில் போக்கிமான் கோ விளையாடுவதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் அப்லோடிக்கொண்டே இருக்கிறார் அனுஷ்கா ஷர்மா. `பிக்காச்சுக்களைப் பிடிக்கிறது செம இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கு. முதல் பிக்காச்சுவைப் பிடிச்ச `கோட்ச்சா' ஃபீலை மறக்கவே முடியாது. ஆனால், போக்கிமான் விளையாடும்போது கவனமா இருங்க பாய்ஸ். எங்கேயாவது தொலைஞ்சுடாதீங்க' என அனுஷ்கா ஸ்டேட்டஸ் தட்ட, அதற்கு வீடியோ மீம்ஸ் போட்டு ஷாரூக் கான் பதில் போட, அமிதாப் பச்சனோ `போக்கிமான்னா என்னப்பா... ஒண்ணும் புரியலியே'வென ட்வீட்டி இருக்கிறார். அச்சா கிதர்!


p42d.jpg

* `இதுவரைக்கும் கோபிநாத்தாகவே நடிக்கச் சொன்னதாலதான் நடிச்சேன். காரணம், நான் நடிக்கிறது ஸ்கிரீன்ல எப்படி வரும்கிற பயம் எனக்கு உண்டு. ‘திருநாள்’ டைரக்டர் ராம்நாத் தந்த நம்பிக்கையில போலீஸ் ஏ.எஸ்.பி-யாவே நடிச்சுட்டேன். இங்கிலீஷ்ல ‘ஃபைண்டிங் யூ’னு சொல்வாங்க. அப்படி என்னை நானே கண்டுபிடிக்க இந்தப் படம் உதவியிருக்கு' என்கிறார் `நீயா? நானா?' கோபிநாத். இதற்குக் கிடைக்கும் வரவேற்பை பொறுத்துத்தான் சினிமாவைத் தொடர்வதா... வேண்டாமா என்ற முடிவை எடுப்பாராம். டு பி... ஆர் நாட் டு பி!


p42c.jpg

* டென்னிஸ் வீராங்கனை அனா இவானோவிச்சைத் திருமணம் செய்த கையோடு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர். 2014-ம் ஆண்டு உலகக்கோப்பையை ஜெர்மனி வெல்லக் காரணமாக இருந்தவர் கேப்டன் பாஸ்டியன். ஆனால், யூரோ கோப்பையில் பிரான்ஸ் அணியிடம் 2-0 எனத் தோல்வியடைந்தது பாஸ்டியனை மிகவும் பாதிக்க, திடீர் ஓய்வு. `வீட்டுக்காக வாழ விரும்புகிறேன். நாட்டுக்காக விளையாடியது போதும்.என் புது மனைவியோடு நிம்மதியாக வாழ ஆசைப்படுகிறேன்' என்கிறார். லிவ் யுவர் லைஃப் மச்சா!


லியோனார்டோ டிகாப்ரியோ (41) மீண்டும் ரொமான்ஸ் மூடுக்குத் தாவியிருக்கிறார். 24 வயதான டென்மார்க் மாடல் நினா அக்டால் லேட்டஸ்ட் லவ் லேடி. கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அக்டாலுடன் வந்த லியோனார்டோ, இரண்டு மாதங்களாக அக்டாலுடன் இன்பச் சுற்றுலாவில் இருக்கிறார். ஜேக் ரிட்டர்ன்ஸ்!


* ஆகஸ்ட் 25-ம் தேதியோடு, இந்திய ஜனாதிபதியாக நான்கு ஆண்டுகளை நிறைவுசெய்கிறார் பிரணாப் முகர்ஜி. 340 ஏக்கரில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை, பசுமை மாளிகையாக மாற்றியிருக்கிறார். 2,500 பேர் பணியாற்றும் இந்த மாளிகையில் சோலார் திட்டம், இயற்கை எரிவாயுத் திட்டம், ஆர்கானிக் எரிகுச்சி என இயற்கையான பல திட்டங்கள் மாளிகைக்குள் இயங்குகின்றன. அடுத்த ஆண்டு ஓய்வுபெறுவதற்குள் முழுமையான பசுமை மாளிகையாக ஜனாதிபதி மாளிகையை மாற்ற வேண்டும் என வேலைகளை வேகப்படுத்திவருகிறாராம் பிரணாப். நேச்சுராலஜி!

vikatan

  • தொடங்கியவர்

எதையும் மறக்க முடியாமல் வாழ்கிறார்! - இப்படியும் ஒரு இளம்பெண்

BSA_1.jpgலகில் ஒவ்வொருவரும் ஒருவிதம். அதில் ஆஸ்திரேலியாவில் வாழும் இளம்பெண் பெக்கி சர்ரோக் புதுவிதம். தன்னுடைய வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் அவரும் மறப்பதில்லை. இது அவருக்கு வரமா அல்லது சாபமா என்று தெரியவில்லை. அவருடைய ஸ்பெஷாலிட்டி 'ஹாரி பாட்டர்'. ஆம், 'ஹாரி பாட்டர்' புத்தகங்களில் உள்ள ஒவ்வொரு வரியையும் அப்படியே அவர் மனப்பாடமாக ஒப்புவிக்கிறார்.

அவர் குறித்த தகவல்கள் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருப்பதாக அவரிடம் பழகிப்பார்த்தவர்கள் சொல்கிறார்கள். இளம்பெண் பெக்கி சர்ரோக்கிடம், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது அவர் ஹாரி பாட்டர் புத்தகத்தை கரைத்து குடித்தது போல வரி மாறாமல் சொல்லி இருக்கிறார் பெக்கி சர்ரோக். இதைக்கேட்டு பேட்டி எடுத்தவர் திகைத்துப் போய் விட்டார். இதன் பிறகே அவரது புகழ் பிரபலமடைந்திருக்கிறது.

 

யார் இந்த பெக்கி சர்ரோக்?

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனைச் சேர்ந்த பெக்கி சர்ரோக்கிற்கு ஹைலி சுப்பீரியர் ஆட்டோபயா கிராபிகல் மெமரி (ஹெச்எஸ்ஏஎம்) என்ற வித்தியாசமான நோயால் இருப்பதால்தான் இப்படி  தன் வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வையும் துல்லியமாக நினைவு வைத்திருக்கிறார் என்கிறார்கள் மருத்துவர்கள். தற்போது 26 வயதாகும் சர்ரோக், 'ஹாரி பாட்டர்' புத்தகத்தின் தீவிர ரசிகை. ஹாரிபாட்டர் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள வரிகளை, வார்த்தை மாறாமல் அப்படியே சொல்லி கேட்பவர்களை திக்குமுக்காட வைக்கிறார்.

அந்த புத்தகத்தில், ஒரு வரியை படித்தால் அதன் பிறகு உள்ள அனைத்தையும் அப்படியே அவர் சொல்கிறார். 17-வது அத்தியாயம் எனச் சொன்னதும் அதனை முதல் வார்த்தையிலிருந்து வார்த்தை மாறாமல் அப்படியே ஒப்புவிக்கிறார். ஹாரி பாட்டரின் முதல் பாகம் மட்டுமல்ல, 7 புத்தகங்களையும் அப்படியே ஒப்புவிக்க அவரால் முடிகிறது.

harrypotter6000.jpg

ஒரு தமிழ் சினிமாவில் நடிகர் விவேக்குக்கு அடுத்தவர்கள் மனதில் நினைப்பது தெரிவதைப் போல, எந்திரன் படத்தில் நடிகை ஐஸ்வர்யராய்க்கு உதவும் ரோபா ரஜினி போல, நிஜ உலகில் 'ஹாரிபாட்டர்' பெக்கி சர்ரோக்  வித்தியாசமான பெண்மணியாக வாழ்ந்து வாழ்கிறார்.

vikatan

  • தொடங்கியவர்

ஒலிம்பிக்ஸ்: அற்புதமான தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு)

 

கெட்டி இமேஜஸ் குழுவின் உறுப்பினரான பிரபல புகைப்பட நிபுணர் எல்சா காரிசன், ரியோவில் நாளை துவங்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பணியாற்ற, 40 சிறப்பு விளையாட்டு புகைப்பட நிபுணர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முந்தைய ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், தன் மனம் கவர்ந்த சில புகைப்படங்களை காரணங்களோடு பட்டியலிட்டுள்ளார். அவை நீங்கள் ரசிப்பதற்காக:

160803095737_pic_gal_olympics_1_976x549_

 

 2004 ஒலிம்பிக்ஸ்: மகளிர் வாள்வீச்சு போட்டி பிரிவில் தங்கம் வென்ற ஹங்கேரியின் டிம்மையா நாகி

இந்தப் புகைப்படத்தை நன்கு உற்று பாருங்கள். தங்கம் வென்ற மகிழ்ச்சியில் அந்தரத்தில் பறக்கும் டிம்மையா நாகியும், அவர் அணியினரும், வெற்றியின் மகிழ்ச்சியை, அனுபவத்தை நமக்கு கற்றுத் தருவது போல உள்ளது இந்த புகைப்படம்.

 

160803095843_pic_gal_olympics_2_976x549_

 1948 லண்டன் ஒலிம்பிக்ஸ்: மகளிர் 100 மீட்டர் ஓட்ட பிரிவில் வெற்றி பெற்ற நெதர்லாந்தின் ஃபானி பிளாங்கர்ஸ்

1948 காலகட்டத்தில் இருந்த குறைந்தளவு தொழில்நுட்ப வசதி, புகைப்பட கருவிகளை கொண்டு எடுக்கப்பட்ட இந்த நுட்பமான புகைப்படத்தில், வீராங்கனைகளின் பரபரப்பு தருணங்களை காணலாம்.

160803100011_pic_gal_olympics_3_976x549_

 

 வண்ண மயமான இந்த ஒலிம்பிக் தொடக்க விழாவை வார்த்தைகளினால் வேறு விளக்க வேண்டுமா?

இந்த வண்ணமயமான தொடக்க விழா புகைப்படம் , 2000 சிட்னி ஒலிம்பிக்ஸ் போட்டியின் போது எடுக்கப்பட்டது.

160803100154_pic_gal_olympics_4_976x549_

 

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்று ஆர்பரிப்புடன், உலகின் வேகமான மனிதன் உசேன் போல்ட்

உசேன் போல்ட் முகபாவத்தை பாருங்கள். வெற்றி, ஆக்ரோஷம், சாதனை உணர்வு எல்லாம் கலந்த ஒரு பரவச நிலை நிரம்பிய இந்த புகைப்படத்தை எடுத்தவருக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.

160803100324_pic_gal_olympics_5_976x549_

 

 தங்கள் அணியின் வெற்றியை கொண்டாடும் பிரேசிலின் மகளிர் வாலிபால் வீராங்கனை நடாலியா பெரேரியா

பிரேசில் வீராங்கனையின் வெற்றி புன்னகையையம், தோல்வியால்துவண்டுள்ள ரஷ்ய வீராங்கனைகளின் சோகத்தையும் ஒருசேர படம் பிடித்துள்ளது, இந்த புகைப்படத்தின் சிறப்பம்சம்.

160803100516_pic_gal_olympics_6_976x549_

 

1996 ஒலிம்பிக்ஸ்: காயமடைந்தாலும் தங்கம் வென்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை கெர்ரியை தாங்கி பிடித்திருப்பவர் அவரின் பயிற்சியாளர்

1996 அட்லாண்டா ஒலிம்பிக்ஸில் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படம், தருணம் இதுவென கூறலாம். உனக்கு நான் இருக்கிறேன் என்று வீராங்கனையை தாங்கி பிடித்துள்ள பயிற்சியாளர் பேலா வெகுவாக பாராட்டப்பட்டார்.

 

160803100736_pic_gal_olympics_7_976x549_

 2012 ஒலிம்பிக்ஸ்: லண்டன் ஒலிம்பிக் மைதானத்தில் பறந்த சிவப்பு அம்புகள்

ஓவ்வொரு ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவும், முந்தைய ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவை விட சிறப்பாக இருக்கும். லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் நடந்த இந்த வான வேடிக்கை, மைதானத்தில் மட்டுமின்றி, நகரையே ஒலிம்பிக்ஸ் உணர்வில் மூழ்கடித்தது.

 

160803100909_pic_gal_olympics_8_976x549_

1968 ஒலிம்பிக்ஸ்: நீளம் தாண்டுதலில் அமெரிக்காவின் பாபி பியமன் உலக சாதனை நிகழ்த்திய தருணம்

1968 ஒலிம்பிக்ஸ் போட்டியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் மிகவும் சிறப்பானது என்று பெயர் பெற்றுள்ளது. டெலிஃபோட்டோ லென்ஸ்கள் மூலம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், இதனை போல பல புகைப்படங்கள் பிற்காலத்தில் எடுக்க தூண்டுகோலாக அமைந்தது.

 

160803101053_pic_gal_olympics_9_976x549_

 2012 ஒலிம்பிக்ஸ்: மகளிர் 3 மீட்டர் ஊஞ்சல் நீச்சல் பலகை போட்டி பிரிவில் பங்கேற்ற அமெரிக்காவின் கிறிஸ்டினா லூகாஸ்

நீரின் அழகையும், நீரில் பாய்ந்த வீராங்கனையை சுற்றிலும் இதய வடிவில் உருவான நீர் வடிவ அழகையும் நீச்சல் குளத்தில் முன்னரே வைக்கப்பட்ட ரிமோட் புகைப்பட கருவி படம்பிடித்துள்ளது.

 

160803101215_pic_gal_olympics_10_976x549

 இது ஒற்றையர் போட்டியா,? இரட்டையர் போட்டியா?

இரட்டையர் டென்னிஸ் போட்டிகளை புகைப்படம் எடுக்கும் போது, புகைப்பட ஃ பிரேமுக்குள் இரண்டு வீரர்களும் இருப்பது அவசியம், இல்லையெனில், அது ஒற்றையர் டென்னிஸ் ஆட்டம் போல தோன்றும். காத்திருந்து மிகவும் அபூர்வமாக எடுத்த இந்த புகைப்படத்தின் அழகைப் பாருங்கள்!

BBC

  • தொடங்கியவர்

நாட்டுக்கொரு பாட்டு - 17: யூதர்களின் நம்பிக்கைக் கீதம்!

 

 
is_2957144f.jpg
 

இஸ்ரேல் ஓர் அழகான நாடு. செங்கடலின் வட கரையில் அமைந்துள்ள மத்திய கிழக்கு நாடு இது. இந்த நாட்டைச் சுற்றி லெபனான், சிரியா, ஜோர்டான், எகிப்து மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் உள்ளன.

டெல் அவீவ் இந்த நாட்டின் முக்கிய வணிக நகரம். தலைநகராகிய ஜெருசலத்தை இஸ்ரேல் முழு உரிமை கோரினாலும், சர்ச்சைக்குரிய பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ்தான் இருந்தது. 1948 மே 14 அன்று விடுதலை பெற்றுத் தனி நாடாக அறிவிக்கப்பட்டது இஸ்ரேல். தனி நாடாக 1949-ம் ஆண்டு மே 11 அன்று அங்கீகரிக்கப் பட்டது. உலகில் யூதர்களுக்கான தனி நாடாக இது விளங்குகிறது.

‘சியான்' என்றால்..?

கல்வி, சுகாதாரம், பொருளாதாரத்தில் சிறந்து விளங்கிவருகிறது இந்த ‘சியான்' (Zion) தேசம். அதென்ன சியான்? ஜெருசலேம் குன்றின் மீது ‘டேவிட்' அரண்மனையை நிர்மாணித்த இடமாகும். இது கடவுளின் நகரம் என்று போற்றப்படுகிறது. தற்போது, இந்த ‘சியான்' குன்று, சர்வதேச அரங்கில் சர்ச்சைக்குரிய பகுதியாக இருக்கிறது.

உக்ரைன் நாட்டில், சொலோசிவ் என்ற ஓர் இடம் உள்ளது. இதைக் கவிஞர்களின் நகரம் என்று சொல்வார்கள். அங்கு பிறந்த யூதக் கவிஞர் நஃப்தலி ஹெர்ஸ் இம்பர் இயற்றிய ‘ஹிப்ரூ' மொழிப் பாடல்தான் இன்றைய இஸ்ரேல் நாட்டின் தேசிய கீதம்.

flag_2957146a.png

இஸ்ரேல் நாட்டின் தேசிய கொடி

பத்து வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கிய இவர், இந்தியாவுக்கும் வந்திருக்கிறார்.

உமர் கயாம் கவிதைகளை ‘ஹிப்ரூ'வில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். இவர் ‘நம்பிக்கை' என்ற பாடலை 1878-ம் ஆண்டு எழுதினார். 1886-ம் ஆண்டு ‘பர்க்காய்' (காலை நட்சத்திரம்) என்ற தனது முதல் புத்தகத்தை வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் இந்தப் பாடல் இடம் பெற்றது.

பிறகு சில ஆண்டுகளில் இது ‘சியான்' இயக்கப் பாடலாகப் பிரபலமானது. சியான் காங்கிரஸ், இப்பாடலைத் தங்களுடையதாக்கிக்கொண்டது. 1948-ல் அறிவிக்கப்படாமலேயே இந்தப் பாடல் தேசிய கீதமாகப் பாடப்பட்டது. சுமார் 50 ஆண்டுகளைக் கடந்த பிறகு 2004-ம் ஆண்டில்தான் நம்பிக்கைப் பாடல் இஸ்ரேலின் தேசிய கீதமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இப்பாடல் 9 பத்திகளைக் கொண்டது. ஆனால், 2 பத்திகள் மட்டுமே கீதத்தில் இடம் பெற்றுள்ளன. இப்பாடலுக்கு இசையமைத்தவர் சாமுவேல் கோஹன். ஆனால், ருமேனியா நாட்டில் கேட்ட பாடலையொட்டி இதற்கு இசை அமைத்ததாக கோஹன் குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் தேசியகீதம் இப்படி ஒலிக்கும்:

கோல் ஓட் பாலவேவ் பெனீமா

நஃபே..ஷ் யஹா...தி ஹாம்லியா

உல்ஃபா..ட்டல் மீஸ்ரா... காடிமா

ஆயின் லெட்..ஸீயான் ட்ஸோஃபியா

ஓட் லா.. அவ் தா டிக்வ தே...னு

ஹா..த்திக்வா பாட் ஷெ..னோட் அல்ப்பயிம்

லிஹ்யோட் ஏம்.. சோஃப்ஸி பார்ட்ஸனு...

ஏ..ரேட் ஸீயான் வே.. ரூ...ஷ்லி..யேம்.

இப்பாடலின் உத்தேசத் தமிழாக்கம்:

எதுவரை இதயத்துக்கு உள்ளே

ஒரு யூத ஆத்மா ஏங்குகிறதோ (அதுவரை)

கிழக்கின் முடிவுகளை நோக்கி

‘சியான்' மீது விழி குத்திட்டு நோக்கும்.

நாம் இன்னமும், நம்பிக்கை இழக்கவில்லை;

(இது) ஈராயிரம் ஆண்டு நம்பிக்கை.

சுதந்திரமான தேசமாகும் நமது பூமி -

‘சியான்' மற்றும் ஜெருசலத்தின் பூமி!

(தேசிய கீதம் ஒலிக்கும்)

tamil.thehindu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.