Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

13987645_1099644193417607_49860808802972

இலங்கையின் அழகி..
பொலிவூடில் கலக்கும் கதாநாயகி ஜாக்குலின் பெர்னாண்டஸின் பிறந்தநாள்
Happy Birthday Jacqueline Fernandez

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

திமிங்கிலத் திருவிழா!

 
weal_2966208f.jpg
 

திமிங்கிலம் என்றாலே பலருக்கும் பயம்தான் வரும். ஆனால், ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள ஒரு நாட்டில் திமிங்கிலம் என்றால் திருவிழாதான் ஞாபகத்துக்கு வருமாம். அப்படி என்ன திருவிழா என்றுதானே நினைக்கிறீர்கள்? அந்தத் திருவிழாவின் பெயர் திமிங்கிலத் திருவிழா! எந்த நாட்டில் இந்தத் திருவிழா நடைபெறுகிறது தெரியுமா? தென் ஆப்ரிக்காவில்!

தென் ஆப்ரிக்காவில் வெஸ்டர்ன் கே என்ற மாகாணம் உள்ளது. இங்கே உள்ள தெற்குக் கடற்கரையில் ஹெர்மானஸ் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்குதான் ‘திமிங்கிலத் திருவிழா’. ஹெர்மானஸ் திமிங்கிலத் திருவிழா (Hermanus whales festival) என்ற பெயரில் நடக்கும் இந்தத் திருவிழா உலகப் புகழ் பெற்றது. ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாத இறுதியில் இந்த விழா நடைபெறுகிறது.

weal1_2966207a.jpg

திமிங்கிலங்கள் தங்களின் இனப்பெருக்கக் காலத்தில் ஹெர்மானஸ் வளைகுடாவுக்கு வந்துவிடுகின்றன. அந்தச் சமயம் கடற்கரைக்கு மிகவும் அருகில் திமிங்கிலங்கள் வரும். பொதுவாக ஆழ்கடலில் வாழும் திமிங்கிலங்கள் உலகில் வேறு எங்குமே இந்த அளவுக்குக் கரையை நெருங்கி வருவதில்லை. இப்படிக் கரைக்கு வரும் திமிங்கலங்களை வரவேற்பதற்காக ‘கன்றுகள் விழா’ என்ற பெயரில் அப்பகுதி மக்கள் விழா எடுத்தார்கள். அந்த விழா பெயர் மாறி இப்போது உலக அளவில் புகழ்பெற்றுவிட்டது.

இந்தத் திருவிழாவின்போது ஆப்ரிக்க மக்கள் ஆடி, பாடி மகிழ்கிறார்கள். உலகின் பல்வேறு நாடுகளில் ‘திமிங்கலத் திருவிழாக்கள்’ நடைபெற்றாலும், ஹெர்மானஸ் நகரத் திருவிழாவுக்கு மட்டும் வரவேற்பு அதிகம்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p35a.jpg

* ஹாலிவுட் இயக்குநர் கிரிஸ்டோஃபர் நோலனின் அடுத்த படம் `டன்கிர்க்'. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பிரான்ஸில் போரிட்டுக்கொண்டிருந்த ஜெர்மனி படையிடம் இருந்து, பிரிட்டனின் 3,38,226 வீரர்கள் தப்பி வந்த நிகழ்வுதான் `டன்கிர்க் எவாக்குவேஷன்'. படத்தின் டீஸர், ஆன்லைனில் வைரல் ஹிட். இன்னொரு க்ளாசிக்கை எதிர்பார்க்கலாம்!


p35b.jpg

* `மத்திய அரசின் கூட்டங்களில், மாநிலப் பெயர்களின் ஆங்கில அகரவரிசைப்படிதான் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும். எப்போதும் மேற்கு வங்காளம்தான் கடைசி. இதனால் மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும்' என, முதன்முறை ஆட்சிக்கு வந்தபோதே அறிவித்திருந்தார் மம்தா பானர்ஜி. ஆனால், முதல் ஐந்தாண்டு ஆட்சியில் அது முடியவில்லை. இப்போது மீண்டும் பெயர் மாற்றத்தைக் கையில் எடுத்திருக்கிறார். இனி ஆங்கிலத்தில் `பெங்கால்' என்றும், பெங்காலியில் `பாங்கா' அல்லது `பாங்க்லா' என்றும் அழைக்க வேண்டும் என அறிவித்துள்ளார். ஆங்கிலப் பெயர் ஓ.கே, பெங்காலிப் பெயர்தான் `செம ஃபன்னி' என ஆன்லைனில் அடித்துத் துவைத்துவிட்டது வைரல் சமூகம். கேளிக்கை பாய்ஸ்!


p35c.jpg

* டோலிவுட்டின் ட்ரெண்டிங் ஃபிலிம் `பெல்லி சூப்புலு'. மிகச் சிறிய பட்ஜெட்டில் புதுமுக நடிகர்களைவைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தை நியூவேவ், நெக்ஸ்ட் ஜென் என ஆளாளுக்குப் புகழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஒரு சின்ன கல்யாண கலாட்டா, அதற்கு நடுவில் நடக்கும் ஒரு காதல் என க்யூட் ஒன்லைன், ட்ரீட்மென்ட்தான் பக்கா க்ளாஸ் என ராஜமௌலி தொடங்கி எல்லோரும் புகழ்கிறார்கள். படம் கலெக்‌ஷனிலும் கில்லி. ரீமேக் இயக்குநர்கள் கெட் ரெடி!


* கமலா சுரையா எழுதிய `என் கதை' சுயசரிதைப் புத்தகம், மிக முக்கியமான படைப்பு. புரட்சிகரமாகவும்  பெண் விடுதலைக்காகவும் தொடர்ந்து எழுதிவந்தவர் கமலா. இறுதிக் காலத்தில் முஸ்லிம் மதத்துக்கு மாறிய அவருடைய `என் கதை' திரைப்படமாகிறது. அதில் கமலா சுரையாவாக நடிக்கப்போவது வித்யாபாலன். படத்தை இயக்கப்போகிறவர் இயக்குநர் கமல். வெயிட்டிங்!


*  ரியோ ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெறுவதற்கு முன்னரே ஒரு சாதனையைப் படைத்து அசத்தியிருக்கிறார், கனடாவின் கால்பந்து வீராங்கனை ஜனைன் பெக்கி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் லீக் சுற்று ஆட்டத்தில் போட்டி தொடங்கிய 19-வது விநாடியிலேயே கோல் அடித்து மிரட்டினார். `அது கனவுபோல இருக்கிறது. ஆஸ்திரேலிய வீராங்கனைகள், அவர்கள் பக்கமாகப் பந்தைத் தள்ளி, வார்ம்அப் செய்துகொண்டிருந்தார்கள். ஆட்டம் தொடங்கிய சில விநாடிகளிலேயே நான் துணிந்து அந்தப் பக்கம் வருவேன் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. கோல் விழுந்தது' என சிலிர்க்கிறார் 22 வயதான பெக்கி. வாவ்... இன் செகண்ட்ஸ்!


p35d.jpg

* நடுக்கடலில் வீடு கட்டிக்கொள்வதுதான் இப்போ செலிபிரிட்டி ட்ரெண்ட். துபாயில் நடுக்கடலில் மண்ணைக் கொட்டி மேடாக்கி, அங்கே பனைமர வடிவில் ஒரு தீவை உருவாக்கிவைத்திருக் கிறார்கள். இங்குதான் ஐஸ்வர்யா ராய் வீடு வாங்கியிருக்கிறார். சகல வசதிகளும்கொண்ட இந்த வீட்டின் விலை 54 கோடி ரூபாய். ஷாரூக், சல்மான், மோகன்லால், ஸ்ரீதேவி எனப் பலரும் இங்கே வீடு வாங்கிவிட்டார்கள். செலிபிரிட்டி தீவு!


p35e.jpg

*  பள்ளியில் படிக்கும் ஒபாமா மகள் நடாஷா, இப்போது வேலைக்குப் போகிறார். விடுமுறையில்தான். மார்த்தாஸ் வைன்யார்டு தீவில் நான்சி என்ற உணவகத்தில் வெயிட்டராக வேலைக்குச் சேர்ந்துவிட்டார் நடாஷா. சிம்பிள் வாழ்க்கை வாழ ஆசைப்பட்டாலும், அமெரிக்க அதிபர் மகளை சும்மா விட்டுவிட முடியுமா? பல கோடி மதிப்புள்ள காரில் ஆறு பாதுகாவலர்களுடன் வேலைக்குப் போகும் நடாஷாவுக்கு, கஸ்டமர்கள் வருவதற்கு முன்னரே டேபிளைச் சுத்தப்படுத்தி அழகுபடுத்துகிற வேலை. அவர் வேலைசெய்யும் ஹோட்டலிலும் செக்யூரிட்டிகள் கண்ணும் கன்னுமாகக் கண்காணிப்பில் இருக்கிறார்கள். சினிமா சீன்டா!


p35f.jpg

* ப்கானிஸ்தானின் போர் பதற்றம் சூழ்ந்த... கட்டுப்பாடுகள் நிறைந்த காபூல் நகரைச் சேர்ந்த ஓவியர், ஷம்ஸியா ஹசானி. பெண்கள் வெளியில் செல்வதற்கே பலவிதத் தடைகள் விதிக்கப்படும் ஆப்கானில், மிகத் தைரியமாகத் தன்னுடைய கருத்துக்களை ‘கிராஃபிட்டி’ சுவர் ஓவியங்கள் மூலமாகப் பதிவிட்டுவருகிறார். பெண்ணியத்தை வலியுறுத்தும் ஓவியங்கள்தான் இவர் ஸ்பெஷல். `ஒரு பெண்ணாக போரால் ஏற்படும் பாதிப்புகளையும், பெண்களுக்கான சுதந்திரத்தையும் ஓவியங்களாக எடுத்துச் சொல்வது சிறிய அளவிலாவது சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்’ என்கிறார் ஷம்ஸியா. வாழ்த்துகள் ஷம்ஸியா!


p35g.jpg

* `தோனியின் சீக்ரெட் லவ் ட்ராக்தான் `எம்.எஸ்.தோனி - தி அன்டோல்டு ஸ்டோரி' படத்தின் ஹைலைட்' என்கிறது படக் குழு. தோனி தன் டீன் ஏஜ் காலத்தில் பிரியங்கா ஜா என்கிற பெண்ணைக் காதலித்திருக்கிறார். அந்தக் காதலில் இருந்தபோதுதான் இந்திய ஏ அணியில் விளையாட தோனிக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. காதலி தந்த உற்சாகத்தில் சிறப்பாக ஆடி, கங்குலியின் கவனம் பெற்று இந்திய அணிக்குள் நுழைந்தார் தோனி. ஆனால், அவர் வெளிநாட்டில் விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக சாலைவிபத்தில் சிக்கி பிரியங்கா ஜா மரணம் அடைந்திருக்கிறார். காதலியின் மரணத்தால் துவண்டுபோய் ஒரு வருடம் கிரிக்கெட் ஆட முடியாமல் இருந்தார் தோனி. அதில் இருந்து மீண்டு இந்திய கேப்டனாகி இரண்டு உலகக் கோப்பைகளைப் பெற்றுத்தந்த தோனியின் காதலியாக படத்தில் நடித்திருப்பவர் யார் என்பது மட்டும் சஸ்பென்ஸாம். படம் செப்டம்பர் 30-ம் தேதி ரிலீஸ். பெய்ன்ஃபுல் கேப்டன் கூல்!

vikatan

  • தொடங்கியவர்

எல்லாப் புகழும் ரியோவுக்கு!

 

 
rio_2966189f.jpg
 

ரியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இந்த நேரத்தில், பிரேசில் நாட்டைப் பற்றியும் ரியோ டி ஜெனிரோ நகரத்தைப் பற்றியும் இன்னும் கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்துகொள்வோமா?

ரியோ பெருமைகள்

# பிரேசில் தமிழகத்தைப் போல 65 மடங்கு பெரியது. மிக முக்கியமான வளரும் நாடு.

# தன்னுடைய காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்களைக் காட்டிலும் ரியோ மிகவும் அற்புதமானது' என்று பரிணாமவியலின் தந்தை சார்லஸ் டார்வின் ரியோ டி ஜெனிரோ பற்றிக் கூறியுள்ளார்.

piley_2966194a.jpg

# ரியோவில் 90 கிலோ மீட்டர் நீளத்துக்குக் கடற்கரை இருக்கிறது. சார்லஸ் டார்வின் ரியோவைப் பற்றிக் கூறியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

# 1815 முதல் 1821 வரை பிரேசிலின் தலைநகரமாக இருந்துள்ள ரியோ, போர்ச்சுகல் நாட்டுக்கும் தலைநகராக இருந்திருக்கிறது. போர்த்துகீசிய இளவரசர் ஆறாம் ஜான் தாய்நாட்டிலிருந்து தப்பி, தன் அதிகார வர்க்கத்தினருடன் ரியோவில் குடியேறியதே இதற்குக் காரணம்.

# பூமிப்பந்தின் மேற்பகுதியை வடக்கு அரைக்கோளம், கீழ்பகுதியை தெற்கு அரைக்கோளம் என்று பிரித்தால், தெற்கு அரைக்கோளத்தில் அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் நகரம் ரியோதான்.

# ‘ரியோ கார்னிவல்' எனப்படும் உலகப் புகழ்பெற்ற மாபெரும் கேளிக்கைத் திருவிழா, ஈஸ்டர் தவக்காலம் தொடங்குவதற்கு முன்பு மார்ச் மாதத்தில் ஆண்டுதோறும் ரியோவில் நடைபெறுகிறது.

# உலகின் மிகவும் பழமையான மின்சார டிராம் ரயிலான ‘சான்டா தெரசா டிராம்' ரியோவில் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது.

# புகழ்பெற்ற பிரேசில் நீலக்கிளிகளைப் பற்றிய 'ரியோ' என்ற அனிமேஷன் படத்தை இயக்கிய கார்லோஸ் சால்டானா, ரியோ நகரத்தைச் சேர்ந்தவர்தான். புகழ்பெற்ற 'ஐஸ் ஏஜ்' அனிமேஷன் படங்களின் மூன்று பாகங்களையும் இவர் இயக்கியுள்ளார்.

பிரேசிலும் விளையாட்டும்

rio1_2966190a.jpg

# ஒலிம்பிக் போட்டிகள் தென்னமெரிக்கக் கண்டத்தில் நடைபெறுவது இதுவே முதன்முறை. ரியோவையும் சேர்த்து, பூமிப்பந்தின் கீழ் அரைக்கோளத்தில் (தெற்கு) உள்ள நகரங்கள் இதுவரை மூன்று ஒலிம்பிக் போட்டிகளை மட்டுமே நடத்தியுள்ளன. எஞ்சிய 25 ஒலிம்பிக் போட்டிகள் மேல் அரைக்கோளத்தில்தான் (வடக்கு) நடந்துள்ளன.

# கைப்பந்தாட்டம், படகு செலுத்தும் போட்டிகளில் பிரேசில் நாடு அதிக ஒலிம்பிக் பதக்கங்களை வென்றிருக்கிறது.

# இந்த முறை ஒலிம்பிக் தொடக்க விழாவும் நிறைவு விழாவும் நடைபெறும் இடம் ரியோவில் உள்ள மரகானா மைதானம். இங்கேதான் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளும் நடைபெற்றுள்ளன. 1950-ல் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்காக மரகானா மைதானம் கட்டப்பட்டது. இந்த மைதானத்தில் இரண்டு லட்சம் பேர் உட்கார முடியும்.

# பிரேசிலில் மற்ற விளையாட்டுகளைவிட கால்பந்து மிகமிகப் பிரபலம். இதுவரை ஐந்து கால்பந்து உலகக் கோப்பைகளை பிரேசில் வென்றுள்ளது. பிரேசிலின் மிகப் பிரபலமான கால்பந்து வீரர்கள் பீலே, ரொனால்டோ, ரொனால்டினோ. இப்போது நெய்மார்.

 

rio2_2966192a.jpg

tamil.thehindu

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: ஒலிம்பிக்கில் இந்தியாவும் ம.ந.கூ.வும்!

 

 
11_2967976f.jpg
 

இணையத்தில் ரியோ ஒலிம்பிக் போட்டிகள் குறித்தும், அதில் இந்தியாவின் பங்களிப்பைப் பற்றியும், இந்தியர்கள் விளையாட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் பற்றி நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

maggi gee

இந்தியர்கள் தங்கம் வாங்கினால் அது அக்ஷய த்ருதியை. அமெரிக்கர்கள் தங்கம் வாங்கினால் அது ஒலிம்பிக்.

MECHANICAL ❤ENGINEER ‏

ஒலிம்பிக் தரவரிசை பட்டியலில் கடைசி இடத்தில் இந்தியா முதலிடம்..#முரண்

priya

நாட்டு பேர் போட்டுக்க முடியாத குவைத் கூட ஒரு தங்கம் வாங்கிருச்சு போல. #ஒலிம்பிக்

ராகவன்

ஒலிம்பிக்ல பதக்கம் வெல்லாதது கூட வருத்தமா இல்லைடா!! அஜித், விஜய வச்சு மொக்க ஒலிம்பிக் மீம சுத்தி சுத்தி போட்டு சாவடிக்குறது தான் தாங்க முடில.

ஆந்தைகண்ணன் ‏

கோவில் வடிவேல் நிலைமை வந்துடும் போல நமக்கு.

இந்த பதக்கம் எங்க ரெடி பன்னது :-(

Sree

ஒலிம்பிக் - நமக்கு எதுக்குடா வம்பு? இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போய்டணும்...

oly1_2967972a.jpg

ராஜ்மோகன்

ஒலிம்பிக்'ல வைல்ட் கார்ட் ரவுண்ட் இருந்த இந்தியா ஜெயிச்சி இருக்கும். இத சொன்னா நம்மளை...

புதிய பாரதீ

கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு என நினைக்கும் இந்திய மக்கள் இருக்கும் வரை... ஒலிம்பிக் பதக்கம் பகல் கனவுதான்.

|வி ழு து க ள்| ‏

#IPL-க்கு சியர்ஸ் சொன்னவங்கதான் இன்னிக்கி ரியோ ஒலிம்பிக் பத்தியும் பேசுறாங்க. #நகைமுரண்

Udayakumar Sree

ஒலிம்பிக், ஆஸ்கார், புக்கர், செவாலியே - இவையெல்லாம் எந்தமாதிரியான மோகம் என்று தெரியவில்லை. 75 வயசுல மூணாவது கால் தேவைப்படாம நடந்தா அது வீரம். 90 வயசுல கொள்ளு பேத்திக்கு சீர் செஞ்சா அது பெருமை. மத்ததெல்லாம் வெறும் மயக்கம். ‪#‎நாஞ்சொன்னது‬

கோவை காதர் ‏

மற்ற நாடுகள் அவர்களுடைய வீரர்களுக்கு நிறைய ஊக்கம் மற்றும் சலுகை அளிக்கிறார்கள் நமது இந்திய நாட்டில் உண்டா?! #ஒலிம்பிக்_2016

*

படிச்சா சம்பளத்தோட வேலை கிடைக்கும்!

விளையாடுனா எவன்யா சம்பளம் தருவான் !

இதுவே நமது விளையாட்டை பற்றிய புரிதல்!

ashok ‏

படிக்கிற நேரத்துல என்ன விளையாட்டு வேண்டி கெடக்கு... போடா போ.. படி .. என்ற வார்த்தைகளை தாண்டி தான் ஒருவன் ஒலிம்பிக்ல வரணும்.

சித்ரா தேவி ‏

நான் ஸ்கூல் படிக்கிறப்ப பி.டி பீரியட கடன் வாங்கி, கணக்கு சாரும் இங்லீஷ் சாரும் பாடம் நடத்தாம இருந்திருந்தா நான் கூட ஒலிம்பிக்ல ..

MR.விவசாயி

நாங்க எட்டாவது படிக்கும் போது கிணத்துல விழுந்த ஒரு பையன காப்பாத்துனோம். நீங்க வாங்குற ஒலிம்பிக் மெடலவிட அது எங்களுக்கு பெருசு... #விவசாயி

பாலா ‏@baamaran

ஒலிம்பிக் தீபத்தை கோன் ஐஸ் என நினைத்த வெள்ளந்தி பால்யம் கடந்திருக்காமலே இருந்திருக்கலாம்!

ரமேஷ்

ஸ்கூல் படிக்கும் போது விளையாட வாங்கடானு கூப்டா... படிக்கணும்னு சொல்லி ஓடுன பயலுகலாம், இப்ப ஒலிம்பிக் பத்தி பேசிட்டு அலையுறாங்க...!

இர்பான் கான்

கெட்ட செய்தி: ஒலிம்பிக் விளையாட்டுல இந்தியா இதுவரை எந்த பதக்கமும் வாங்க வில்லை!

நல்ல செய்தி: நம்ம பங்காளி பாகிஸ்தானும் இதுவரை ஒன்னுமே...

Sangeeth

ப்ளஸ் டூ ரிசல்ட் ஒன்றுக்காக, பல ஒலிம்பிக் மெடல்களை தியாகம் செய்த நாடுதான் நம் நாடு..

★ இந்தியன் ★ ‏@SeLFiShEnGiNeeR

இந்தியா பெயரை ஒலிம்பிக் பதக்க பட்டியலில் தேடும்போது மக்கள் நல கூட்டணிக்கு சப்போர்ட் பண்ணிட்டு எலெக்சன் ரிசல்ட் பார்த்த அதே ஃபீல்...

Mugil Siva

இந்தியாவின் ஒவ்வொரு தோல்விக்குப் பின்னணியிலும் ஏகப்பட்ட‘இறுதிச்சுற்று’கதைகள் இருக்கின்றன. ‪#‎ரியோ2016‬

R Velumani Tirupur

நீங்கள் நோகாமல் பதிவுகள் போட்டுக் கொண்டிருந்த போது அவர்கள் கடும்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். குறையாவது சொல்லாமலிருங்கள் போதும். ‪#‎ஒலிம்பிக்‬

suresh

எதிர்நீச்சல், இறுதிசுற்று படங்களை பாக்கும் போது வர்ற ஒருவித ஈர்ப்பு அதோடயே போயிடுது, அதை ஒலிம்பிக் வரை கொண்டு போகணும்.

லோக்கலு

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நடக்கற போட்டி பேருதான் ஒலிம்பிக்.

ரோபோ 3.0

ஒலிம்பிக் போட்டியில் வெற்றிவாய்ப்பை மட்டுமே இழந்த வீரர்களுக்கு வாழ்த்துக்கள். தோல்வியாகக் கருதாமல் சிறந்த அனுபவ நிகழ்வாக எண்ணுங்கள்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

குகைக்குள் வாசம்!

சீனாவின் Guizhou மாகாணத்தில் உள்ள Zhongdong கிராமத்தில், இயற்கையாகவே அமைந்த பெரிய மலைக் குகையில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகிறார்கள். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6,000 அடி உயரத்தில் இருக்கும் இந்தக் குகையைச் சென்றடைய ஒரு மணி நேர ஆகும்.

அந்தக் குகையில் ஒரு பள்ளிக்கூடமும் இருந்துள்ளது. அதை சீன அரசாங்கம்2011-ல் மூடிவிட்டது. இங்குள்ள சிறுவர்கள் 2 மணி நேரம் நடந்துபோய், வேறொரு பள்ளியில் படிக்கிறார்கள். இந்த குகையில் வசிப்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சாலை மற்றும் சில வசதிகளை ஏற்படுத்த சீனா அரசாங்கம் திட்டமிட்டுவருகிறது.

13912582_760278660741345_125862198758190

13895017_760278664074678_702973225304168

13906894_760278657408012_664178534531551

13895227_760278714074673_616629019480806

13901397_760278724074672_455887625815492

 

  • தொடங்கியவர்

13909285_1099612866754073_77179636552640

Wrestling விளையாட்டில் சிறுவர், இளையோர் அனைவரையும் எப்போதும் கவர்ந்த ஹல்க் ஹோகனின் பிறந்தநாள் இன்று.
எப்போதும் கட்டுமஸ்தான உடல் அழகு கொண்ட அழகான தாத்தா இவர்.
Happy Birthday Hulk Hogan

  • தொடங்கியவர்
பிரேஸிலில் 'மிஸ் பம் பம்' அழகுராணி போட்டி
 

பிரே­ஸிலில் சிறந்த பின்­ன­ழகு கொண்ட பெண்­க­ளுக்­கான அழ­கு­ராணி போட்டி நடை­பெ­று­கி­றது.

 

1542.jpg

 

1543.jpg

 

1541.jpg

 

'மிஸ் பம் பம்' என அழைக்­கப்­படும் இப்­ போட்­டியில் பிரே­ஸிலின் 27 மாநி­லங்­களில் இருந்தும் நூற்­றுக்கும் அதி­க­மானோர் இப்­ போட்­டி­க­ளுக்கு விண்­ணப்­பித்­தி­ருந்­தனர்.

 

1544.jpg

 

1545.jpg

 

பிரே­ஸிலின் ரியோ நகரில் கடந்த திங்­க­ளன்று சில வீதிகள் ஒலிம்பிக் சைக்­கி­ளோட்டப் போட்­டி­க­ளுக்­காக மூடப்­பட்­டி­ருந்­தன.

 

1546.jpg

 

1547.jpg

 

அதே­வேளை பிரே­ஸிலின் சாஓ பௌலோ நகரில் இந்த அழ­கு­ராணி போட்­டியில் பங்­கு­பற்றும் யுவ­தி­களின் வீதி உலா­வுக்­காக சில வீதிகள் மூடப்பட்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

15466.jpg

 

பெல்­ஜி­யத்தின் தலை­நகர் பிர­சல்ஸில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற பாரம்­ப­ரிய விழா­வொன்றில் விநோத ஆடை அலங்­கா­ரங்­க­ளுடன் கலந்­து­கொண்ட சிலரை படங்­களில் காணலாம்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p99d.jpg

twitter.com/gpradeesh: சில குருப்பெயர்ச்சிப் பலன்கள்ல, டாஸ்மாக்ல கூலிங் பியர் கிடைக் காதுன்ற மாதிரி ரொம்ப டீப்பா அலசுறாங்க!

twitter.com/Kozhiyaar: `நம்ம குடும்பத்துக்குனு சமூகத்துல ஒரு மரியாதை இருக்கு' எனச் சொல்லப் பட்டே நம்மில் பாதி கனவுகள் கண்களுக்குள்ளேயே பொசுக்கப் படுகின்றன!

twitter.com/ilayakaanchi: எப்புடியும் `உருப்படப்போறது இல்லை'னுதான் சொல்லப்போறீங்க. அதை ஏன்டா `சுக்கிரன் 7-ம் வூட்ல, சனி உங்க வூட்ல'னு சுத்தி வளைக் கிறீங்க? #குரு பெயர்ச்சி!

twitter.com/saattooran: அவ்வளவு டி.வி தொடர்களையும் அலுக்காமல் பார்த்துவிட்டு, மனதைப் பாதித்துக்கொள்ளாமல் என் அம்மாவால் எப்படி நிம்மதியாகத் தூங்க முடிகிறது?!

twitter.com/chithradevi_91: `பள்ளி நாளை விடுமுறை'னு சொல்லி சர்குலர் நோட்டுல சைன் போடுறப்ப, பசங்ககூட சேர்ந்து `ஓ'னு கத்தணும்போல இருக்கு #டீச்சரா இருக்கிறது எவ்ளோ கஷ்டமப்பா!

twitter.com/Endhirapulavan: பிச்சை போட்டாக்கூட செல்ஃபி எடுத்துப்போடுற சமூகத்துலதான் நாம வாழ்ந்துட்டு இருக்கோம்னு நினைக்கும்போது, முதல்ல ஒரு செல்ஃபிஸ்டிக் வாங்கணும்னு தோணுது!

p99b.jpg

twitter.com/PandiShankar: `பறவையோட குணமே பறக்கிறதுதான்டா. பறக்கவிடு, வாழ்வா... சாவானு அது முடிவுபண்ணட்டும்'னு கோழிக்கடைக் காரன்கிட்ட சொன்னா, அவன் மொறைக் கிறான்!

twitter.com/arattaigirl: ஆறிப் போயிட்டா... மேகி, ஒரு மண்புழுக் கூட்டம்!

twitter.com/HaridiBaby: கழுதைகிட்ட 100 ரூபா நோட்டைக் கொடுத்தா, அப்படியே சாப்பிட்டுடும். அதுக்குத் தெரியாது அதுல மூணு கொயர் பேப்பர் வாங்கிச் சாப்பிடலாம்னு!

twitter.com/mrithulaM: `உன்கூட ஒருநாள் வாழ்ந்தா போதும்'ங்கிறதுல மட்டும் இப்ப பல காதலர்கள் தெளிவா இருக்காங்க!

twitter.com/arattaigirl: பிள்ளையாருக்குப் பொண்ணு கிடைக்காததுக்குக் காரணம், உம்ம்மா கொடுக்க முடியாதுங்கிறதாத்தான் இருக்கும்!

twitter.com/pshiva475: பதிமூணு வருஷம் ஒழுங்கா வேலைசெஞ்சதுக்கு அப்புறம்தான் புரிஞ்சது, பட்டம் வாங்கினப்பவே அதை ஏன் சுருட்டிக் கொடுத்தாங்கன்னு!

twitter.com/Keerthu_: பிடிச்ச விஷயம் எல்லாம் மாறிட்டே இருக்கு. பட் பிடிக்காத விஷயம்தான் அப்படியே இருக்கு!

p99a.jpg

twitter.com/Kozhiyaar: `அந்தப் பொண்ணு அழகா இருக்குல்ல?' எனக் கேட்டுவிட்டு, நாம் என்ன சொல்கிறோம் என உற்றுநோக்குவார்கள். ஆண்களே... உஷார்!

twitter.com/vandavaalam: லீவுல இருக்கிற, மேனேஜர்கிட்ட லீவு கேட்கிறதுக்கே யோசிக்க வேண்டியிருக்கு #என்னா வாழ்க்கை!

twitter.com/thoatta: எவ்வளவு ஆயில் ஃபுட் சாப்பிட்டும் சிக்ஸ்பேக்கில் ஆஞ்சேநேயர், துக்களியூண்டு கொழுக்கட்டைக்கே தொப்பைப் போட்டுவிட்டார் பிள்ளையார்!

facebook.com/santhosh.narayanan.319:

நவீனச் சொற்களை தமிழ்ப்படுத்துவது நல்லது தான். ஆனால், `பிளாஸ்டிக்’ என்ற வார்த்தையை `நெகிழி' எனத் தமிழ்ப்படுத்தி நாமே ஏன் அதை அங்கீகரித்து/உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அது `பிளாஸ்டிக்’ என்ற சொல்லுக்காக நமது சூழலியலுக்கு அந்நியமாகவே இருந்து அப்படியே காணாமல் போவதுதானே நல்லது. ‪#மொழி சூழலியல்!‬

facebook.com/bhopathy:

நாய் குரைச்சா, ஓடவோ... கல் எடுக்கவோ வேணாம்; செல்போன் எடுத்து நோண்டுங்க. இந்த நாய் ஃபேஸ்புக் பார்க்க ஆரம்பிச் சுருச்சு. இனி நாம என்ன குரைச்சாலும் கண்டுக் காதுன்னு நாய் விட்டுட்டுப் போயிடும்.

facebook.com/ramjiyahoo:

மொபைல் டேட்டா பேக்கில் யூடியூப் பார்த்தால், கொலைக் குற்றத்தில் நான் ஈடுபட்டதுபோல் பார்க்கின்றனர் சுற்றியுள்ள நண்பர்கள் - இந்திய DNA மாற, இன்னும்
20 வருடங்கள் ஆகும்போல!

p99c.jpg

facebook.com/guru.shree.16:

பிரேசில் பார்க்கணும்னா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பாருங்க. # சைக்கிள் ரேஸ். ஊரைச் சுத்திக் காட்டுறாங்க. எவ்ளோ மரம்!

1.jpg

facebook.com/bhopathy:

வருஷத்துல 364 நாட்கள் சண்டைப் போட்டுட்டு, கரெக்ட்டா `Friendship Day'ல விஜய்-அஜித்துக்கு வாட்ச் கட்டுற போட்டோவைத் தேடி எடுத்துப் போட்டுடுறாய்ங்க!

vikatan

  • தொடங்கியவர்

குப்பையில் என்ன இருக்கு?

 

நம் பைக் சாவி, ஐ.டி கார்ட் மாதிரி ஏதாவது முக்கியமான பொருள் தொலைஞ்சு போச்சுனா வீட்டையே கவுத்துப்போட்டு தேடியும் கிடைக்காட்டி, கடைசியா குப்பைத்தொட்டியில் அதைக் கண்டுபிடிப்போம். தொலைஞ்ச பொருள் ரொம்ப முக்கியமானதுனா ‘காதலன்’ படத்துல வர்ற பிரபுதேவா மாதிரியோ, ‘எந்திரன்’ பட வில்லன் மாதிரியோ குப்பைக் கிடங்கு வரைப் போய் தேடலாம். ஆனா உலகத்தில் சிலர், அந்தப் பொருள் என்ன மதிப்பாகும்னு தெரியாமல் குப்பைத்தொட்டியில் போட்டுட்டு வாழ்நாள் முழுக்க ஃபீல் பண்ணிருக்காங்க. அவங்களைப் பற்றி சுவாரசியமான சில பிட்ஸ்.

p46a.jpg

ஆப்பிளுக்கு எப்பவும் மவுசு:

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள், 1976-ம் ஆண்டு தனது நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘ஆப்பிள்-1’ என்ற கம்ப்யூட்டரை வெளியிட்டது. டைப்ரைட்டிங் மெஷின்போலத் தோற்றமளித்த இதன் அப்போதைய மெமரி வெறும் நான்கு கிலோபைட். தேவைப்பட்டால் இந்த மெமரியை 8 அல்லது 48 கிலோபைட்டுக்கு அதிகரித்துக்கொள்ளலாம். இத்துடன் ஒரு குட்டி மானிட்டர் இணைக்கப்பட்டிருக்கும். அன்றைக்கு இதன் சந்தை மதிப்பு 666.66 அமெரிக்க டாலர்கள்தான். ஆனால் கடந்த நான்கு வருடங்களாக இது லட்சக்கணக்கான தொகைக்கு ஏலம் போகிறது. கடந்த ஆண்டு மே மாதம், மறைந்த தனது கணவரின் பொருட்களை சிலிக்கான் வேலியில் உள்ள குப்பை மறுசுழற்சி மையத்தில் அளித்திருக்கிறார் வயதான ஒரு பெண்மணி. வந்த குப்பைகளை ஆராய்ந்த அந்நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ச்சி. ஆப்பிள்-1 கம்ப்யூட்டரும் அதில் இருந்திருக்கிறது. ஏலத்தில் இது 2,00,000 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையானது. அந்நிறுவனத்தின் விதிகள்படி ஏலத்தில் விற்பனையாகும் பொருளின் மதிப்பில் பாதி அதை அளித்த உரிமையாளருக்கு அளிக்கப்படும். ஆனால் ஆப்பிள்-1 கம்ப்யூட்டரைக் கொண்டுவந்த அந்த வயதான பெண்மணி சிசி டி.வி-யில் பதிவாகியிருந்தும் இன்றுவரை அடையாளம் காணமுடியவில்லை.

p46.jpg

எழுதிப்போடலாம்ல:

மாடர்ன் ஆர்ட் எனப்படும் நவீன ஓவியங்களைப் புரிந்துகொள்வதில் பலருக்கும் சிக்கல் இருக்கும். இத்தாலி மியூசியத்தில் கண்காட்சி ஒன்று நடந்தபோது அந்த இடத்தை சுத்தம் செய்யும் வேலைக்கு வந்தார் லாரன்ஸோ ரோக்கா என்ற பெண்மணி. ஒரு இடத்தில் காட்போர்ட் மற்றும் செய்தித்தாள்களால் ஆன இரு குப்பைத்தொட்டிகள் இருப்பதைப் பார்த்த அவர், கடமையே கண்ணாக அதைச் சுத்தம் செய்து குப்பையோடு குப்பையாக அள்ளிச் சென்றுவிட்டார். திரும்பிவந்து பார்த்த ஊழியர்களுக்கு பின்னர்தான் விஷயம் புரிந்தது. அது அமெரிக்காவைச் சேர்ந்த பால் பிரான்கா என்ற நவீன ஓவியர் சுற்றுப்புறச் சூழல் குறித்து பார்வையாளர்கள் இடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்த உருவாக்கிய படைப்பு. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு சுமார் பத்து லட்சம் ரூபாய். குப்பையோட குப்பையா போன இது எங்கு தேடியும் இதுவரை கிடைக்கலை.

p46b.jpg

புரியாத புதிர்:

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாசிப்படை, ‘எனிக்மா’ என்ற தந்திபோன்ற கருவியின் மூலம் போர் தாக்குதல் விவரங்களையும், உளவுத் தகவல்களையும் ரகசியக் குறியீடுகள் மூலமாகப் பரிமாறிக்கொண்டது. மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களால் இந்த வகைச் செய்திகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த எனிக்மா குறியீடுகளைக் கண்டறியும் முயற்சியில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மூன்று ரகசிய எழுத்துக்கலை அறிஞர்கள் வெற்றிபெற்றனர். இதற்காக இவர்கள் ஒரு கருவியை வடிவமைத்தனர். பாம்ப் (Bombe) எனப் பெயரிடப்பட்ட இந்த மெஷினால் பிரிட்டிஷ் தனது நேசப்படைகளுடன், நாசிப்படையின் தாக்குதல் தொடர்பான செய்திகளைப் பரிமாறிக்கொண்டது. இதனால் நாசிப்படையின் பல திட்டங்கள் முறியடிக்கப்பட்டன. இந்தக் கருவி கண்டுபிடிக்காவிட்டால் இரண்டாம் உலகப்போரானது மேலும் 10 ஆண்டுகள் வரை நீடித்திருக்கலாம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். மேலும் தற்போதைய கணினியின் அடிப்படை இந்த மெஷின்தான் என்றும் கருதப்படுகிறது. இப்பேர்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கருவியின் சில பாகங்கள் 10,000 டாலர்கள் அளவுக்கு விலை போனது. ஆனால் இது எப்படி குப்பைக்கு வந்தது என்பது இன்றளவும் புதிராக உள்ளது.

p46c.jpg

குப்பைத்தொட்டி நாயகன்:

ஹாரிபாட்டர் நாவல் படைக்காத சாதனைகளே இல்லை எனலாம். சாதாரண நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்துவந்த இதன் நாவலாசிரியர் ஜே.கே.ரெளலிங், இங்கிலாந்து அரசக்குடும்பத்தை விட பணக்காரியாக உயர்ந்தார். இந்த நாவல்களைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்கள், இதுவரை வெளியான மொத்த ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வசூலை ஜஸ்ட் லைக் தட், ஓவர்டேக் செய்தன. ஹாரிபாட்டர் வரிசையின் முதல் நாவலான ‘ஹாரிபாட்டர் அண்ட் தி பிலாசபர்’ஸ் ஸ்டோன்’ எழுதி முடித்தபோது ரெளலிங்கை, நைஜல் ரெனால்ட்ஸ் என்ற இங்கிலாந்து பத்திரிகையாளர் முதன்முறையாக பேட்டி எடுத்தார். அந்தச் சந்திப்பின்போது மரியாதை நிமித்தமாகப் பெற்ற அந்தப் புத்தகத்தைப் படித்த நைஜல், இதெல்லாம் கண்டிப்பா ஃப்ளாப்தான் எனக் குப்பைத்தொட்டியில் வீசி எறிந்தார். பிறகு இந்தப் புத்தகம் கண்டறியப்பட்டு ஏலத்தில் 50,000 பவுண்டுக்கு (அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.49 லட்சத்து 50,000 ரூபாய்) விற்பனையானது!

vikatan

  • தொடங்கியவர்
 

தோற்றவர்களின் கதை - 18

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சுசி திருஞானம்தொடர்

 

p30b.jpg

சே குவாரா

னிதகுல வரலாற்றிலேயே மிக அதிகமான இளைஞர்களை வசீகரித்த மந்திரச்சொல் சே குவாரா. உலகிலேயே அதிகப் பிரபலமான புகைப்படம், கியூப புகைப்பட நிபுணர் ஆல்பர்டோ கோர்டாவால் எடுக்கப்பட்ட சே குவாராவின் புகைப்படம். இன்றைக்கும் கோடானுகோடி டீஷர்ட்களில் காணப்படும் கம்பீரமான தாடி முகம் சே குவாராவின் முகம்தான். எல்லை கடந்த மனிதநேயமும், அணைபோட முடியாத உத்வேகமும் சே குவாராவின் இரு பெரும் பண்புகள்.

மருத்துவரான சே குவாரா, எங்கெல்லாம் மனிதகுலம் ஒடுக்குமுறைக்கு உள்ளானதோ அங்கெல்லாம் சென்று மக்களைத் திரட்டிப் போராடிய சோசலிசப் புரட்சியாளர். எத்தனை தோல்விகள் வந்தபோதும், ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக ஆபத்தின் விளிம்பில் நின்று ஆண்டுக்கணக்காகப் போராடியவர்.  

தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் 1928-ம் ஆண்டு பிறந்தார் சே குவாரா. தந்தை சமதர்ம சிந்தனையாளராக இருந்ததால், விடுதலை வேட்கைகொண்ட தலைவர்கள் பலர் அவர்களது வீட்டுக்கு அடிக்கடி வந்துசென்றனர். வாழ்க்கை முழுவதும் ஆஸ்துமா நோய், சே குவாராவுக்குப் பெரும் தொந்தரவைக் கொடுத்தது. துன்பத்துக்குத் துன்பம் கொடுக்கும் துணிச்சல்கொண்ட சே குவாரா, அந்த நோயைப் பொருட்படுத்தாமல் நீச்சல், கால்பந்து, சைக்கிளிங், ரக்பி எனப் பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார்.

பாப்லோ நெருடா, வால்ட் விட்மன் போன்ற மகா கவிஞர்களின் கவிதைகளைத் தேடித்தேடி வாசித்தார். ஹெச்.ஜி.வெல்ஸ், ராபர்ட் ஃப்ராஸ்ட், ஜவஹர்லால் நேரு, காரல் மார்க்ஸ், லெனின் போன்றோரின் நூல்களை இரவு பகலாகப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். புத்தர், அரிஸ்டாட்டில், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், நீட்ஸே, சிக்மண்ட் ஃப்ராய்டு போன்றோரின் கருத்துகளை ஆழமாகப் படித்து, ஆய்வுசெய்து தன் கைப்பட நீண்ட குறிப்புகளாக எழுதிவந்தார். பின்னாட்களில் அவரைக் கொல்வதற்காக உலகம் முழுவதும் தேடி அலைந்த உளவு அமைப்பான சி.ஐ.ஏ., ‘லத்தீன் அமெரிக்கர்களில் மிகத் தீவிரமான வாசிப்பாளர் சே குவாரா’ என்று பதிவுசெய்து வைத்திருந்தது.   

மருத்துவம் படிப்பதற்காக பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் சே குவாரா. விந்தைமிகு உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால் படிப்பில் விடுப்பு எடுத்துக்கொண்டு, 2 பெரும் பயணங்களை மேற்கொண்டார்

சே குவாரா. 1950-ம் ஆண்டில், ஒரு சைக்கிளில் மோட்டார் எஞ்சினைப் பொருத்திக்கொண்டு 4,500 கிலோமீட்டர் பயணம் செய்து அர்ஜென்டினாவின் கிராமப்புறங்களைச் சுற்றிப்பார்த்தார். பின்னர், தனது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து, தென் அமெரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்தார். சிலி, பெரு, கொலம்பியா, வெனிசுலா போன்ற நாடுகளின் காடுகள் மற்றும் கிராமங்களை அருகில் சென்று கவனித்தார்.  

பெருநாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த சான் பாப்லோ தொழுநோயாளர் குடியேற்றத்தில் சில வாரங்கள் தங்கியிருந்தார்

சே குவாரா. அங்கிருந்த டாக்டர் ஹியூகோ பெஸ்ஸியுடன் அவர் இரவு பகலாக விவாதித்தார். நிர்க்கதியான ஏழைகளின் துயர்துடைக்கப் பாடுபடுவது என்ற தன் வாழ்க்கைக் குறிக்கோளை இங்குதான் அவர் உருவாக்கிக் கொண்டார். இந்தப் பயணத்தின்போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி, ‘தி மோட்டார் சைக்கிள் டைரீஸ்’ என்னும் தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். இன்றுவரை, மிக அதிகம் விற்பனையாகும் நூல்களில் அதுவும் ஒன்று.

1953-ம் ஆண்டில், மருத்துவப் படிப்பை முடித்துப் பட்டம் பெற்றபோதும், சே குவாராவின் நாட்டம் முழுவதும், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்பதிலேயே இருந்தது. 

கியூபாவின் பிற்போக்கு அரசாங்கத்துக்கு எதிரான கெரில்லா யுத்தத்தில் மிக முக்கியப் பங்காற்றினார். கியூப காடுகளில் இருந்தபடி குழுக்களாக வெளியேறித் தாக்கும் கெரில்லா போர் முறையை அவர் உருவாக்கினார். கெரில்லா யுத்தம் அன்றைய ஆட்சியாளர்களை நடுங்கவைத்தது. காடுகளில் இருந்தபடி சே குவாரா ஒருங்கிணைத்து உருவாக்கிய வானொலி, பிற்போக்காளர்களுக்குக் கிலியை ஏற்படுத்தியது.

கியூப புரட்சி வெற்றிபெற்று, காஸ்ட்ரோ அதிபரானபோது, அந்த நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் சே குவாரா முக்கியப் பங்காற்றினார். கியூபா நாட்டின் தூதராக எகிப்து, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பயணம் செய்தார். அப்போதைய இந்தியப் பிரதமர் நேரு, பேரனைப்போலத் தன்னை அன்புடன் நடத்தியதாகவும், கியூப புரட்சியின் சிரமங்களை அக்கறையுடன் கேட்டுத் தெரிந்துகொண்டதாகவும் சே குவாரா குறிப்பிட்டார். இந்தியாவில் வறுமையும் செல்வச் செழிப்பும் அருகருகே நிலவுவதைக் கூர்ந்து கவனித்த சே குவாரா, ‘‘இந்தியா வேற்றுமைகளின் நாடு’’ என்று குறிப்பிட்டார்.

p30a.jpg

1964-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் சே குவாரா நிகழ்த்திய உரை மிகவும் பிரசித்த மானது. அமெரிக்க மண்ணில் இருந்தபடியே அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கையை எதிர்த்து முழங்கினார் சே குவாரா. ‘‘அநீதி எங்கு நடந்தாலும் அதற்கு எதிராக உன் மனது துடிக்கிறது என்றால், நீ என் தோழன்’’ என்ற அவரது குரலானது நாடுகள், எல்லைகளைக் கடந்து எல்லா இடங்களிலும் இன்றும் எதிரொலிக்கிறது.

கியூபா, ஒரு கட்டத்தில் ரஷ்யா சொல்வதைக் கேட்கும் நாடாக மாறிவிட்டதாக எண்ணி மனம் வருந்தினார் சே குவாரா. ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும், சே குவாராவுக்கும் கருத்து வேறுபாடு என்ற சர்ச்சைகள் வெளியாகின. காங்கோ மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு உதவுவதற்காக 1965-ல் கியூபா நாட்டைவிட்டு வெளியேறினார் சே குவாரா.

அந்த நாடுகளில் கடுமையான வறுமையும் அடக்குமுறையும் இருந்தபோதும், புரட்சிக்குத் தயாரான நிலையில் மக்களின் மனநிலை இல்லை. இதனால் சே குவாராவின் கெரில்லா படைக்கு அடுத்தடுத்த தோல்விகள் ஏற்பட்டன. ‘உலகிலேயே ஆபத்தான மனிதன் சே குவாரா’ என்று கணித்த சி.ஐ.ஏ., அவரைக் கொல்வதற்காகப் பெரும்பணம் செலவிட்டது.

1967-ம் ஆண்டில், பொலிவியா நாட்டில் சி.ஐ.ஏ தூண்டுதலின்படி சே குவாரா கைதுசெய்யப்பட்டு, எந்தவித விசாரணையும் இன்றி சுட்டுக் கொல்லப் பட்டார். அவரது மரணத்துக்குப் பின், சே குவாரா உலகிலுள்ள எல்லாப் புரட்சி இயக்கங்களி னாலும் கொண்டாடப்படும் மாவீரனாகிவிட்டார். 

p30.jpg

வாழ்க்கையில் லட்சிய வெறி இருக்க வேண்டும் என்று அவர் இளைஞர்களிடம் வலியுறுத்தி வந்தார். சே குவாராவின் புகழ்பெற்ற மேற்கோள் இதுதான்: ‘‘ஒருவன் தனது வாழ்க்கை குறிக்கோளுக்காக, உயிரைக் கொடுத்து உழைக்கத் தயாராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட உத்வேகம் தரும் குறிக்கோள் ஒருவனிடம் இல்லை என்றால், அது வாழ்க்கையே இல்லை.’’

(இன்னும் வெல்வோம்)

vikatan

  • தொடங்கியவர்
 
  •  
  •  

உலகின் பரபரப்பான 10 நொடிகள் எப்படி இருக்கும் தெரியுமா..?

3.jpg

'ஒருவேளை உங்களுக்கு ஒலிம்பிக், ஃபிஃபா வேர்ல்ட் கப் இது ரெண்டுல ஏதாவது ஒண்ணை கவர் பண்ற வாய்ப்பு கிடைச்சா நீங்க எதை  விரும்புவீங்க? ' - சென்னை நேரு மைதானத்தில், சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியின் இடைவேளையின்போது, இந்த கேள்வியைக் கேட்டார் ஒரு ஆங்கில நிருபர். " ஃபுட்பால் வேர்ல்ட் கப்"  என பதில் சொன்னேன். ‘என்னைக் கேட்டா,  ஒலிம்பிக்கைதான் சூஸ் பண்ணுவேன். ஏன்னா அதான் பினாக்கிள். இல்லையா...’ என மீண்டும் அவரே தொடர்ந்தார்.

ஒலிம்பிக் 100 மீட்டர் ஃபைனல் எல்லாம் நேர்ல பாக்குற த்ரில் இருக்கே. ப்ப்ப்ப்பா... ஒலிம்பிக்ல மத்த எந்த ஈவன்ட்டுக்கும் அவ்வளவு கூட்டம் வராது. ஆனா, 100 மீட்டர் ஃபைனல்ஸ் நடக்குறப்ப, ஸ்டேடியமே நிரம்பி வழியும். அவ்வளவு நேரமும் ஒரே கூப்பாடா இருக்கும். ஆன் யுவர் மார்க் சொன்னதும்,  ஒரு பின் டிராப் சைலன்ட் இருக்கும் பாருங்க... 50,000 பேர் இருக்குற இடம் திடீர்னு அமைதியானா எப்படி இருக்கும்?

அதுவரைக்கும் சைலன்ட்டா இருந்த கூட்டம்,  பிளேயர்ஸ் ஓட ஆரம்பிச்சதும், 'ஓ....' ன்னு கத்தும். அதெல்லாம நேர்ல அனுபவிச்சாதான் புரியும். டி.வியில எத்தனை பாயின்ட் வால்யூம் கூட்டி வச்சி பாத்தாலும் அந்த ‘த்ரில்’ வராது. 2008-ல பீஜிங் ஒலிம்பிக்ல இதை நேர்ல பார்த்தேன்."-  அவர் சொல்லச் சொல்ல, எச்சில் விழுங்க கேட்டுக் கொண்டிருந்தேன். உடனடியாக மனம், ரியோ டீ ஜெனீரோவில் 100 மீட்டர் பந்தயம் நடக்கவுள்ள மரக்கானா மைதானத்தில் ஒரு டிக்கெட் கிடைக்குமா என ஏங்கியது.

பத்து செகண்டில் முடிந்துவிடக் கூடிய அந்த போட்டிக்குத்தான் எத்தனை எதிர்பார்ப்பு, எத்தனை எத்தனை ஆர்ப்பரிப்பு. 100 மீட்டர் ஓட்டப் பந்தயம்போல எளிதான விதிமுறைகள் கொண்ட விளையாட்டு வேறு எதுவும் இல்லை. ‘ஆன் யுவர் மார்க் செட்’ சொல்லி முடிந்து, துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் 100 மீட்டர் தூரம் ஒரே நேர் கோட்டில் வேகமாக ஓட வேண்டும். அவ்வளவுதான் ரூல்ஸ்.

ரியோ ஒலிம்பிக்கில் பல்வேறு பிரிவுகளில் 306 தங்கப் பதக்கங்கள் வழங்கப்படும். இந்த எல்லா தங்கத்தையும்விட, ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் வெல்லும் தங்கம் பெரிது. அதனால்தான் இந்த தங்கத்தை அடுத்தடுத்து இரண்டு முறை வென்று, ஹாட்ரிக் வெல்லக் காத்திருக்கும், ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட்டுக்கு மின்னல் வேக மனிதன், சூப்பர்மேன் ஆஃப் தி வேர்ல்ட் ஸ்போர்ட்’ என்ற பெயர்.

இந்தமுறை அந்த பட்டத்தை வெல்லப்போவது யார்? இந்த சீசனில்  ஃபார்மில் இருக்கும் அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லின், போல்ட்டுக்கு நெருக்கடி கொடுப்பாரா? இந்த கேள்விகளுக்கு, ஆகஸ்ட் 15 காலை 6.55 மணிக்கு விடை தெரிந்துவிடும். பந்தயம் துவங்கும் முன் முந்தைய சாதனைகளுடன், தன் பெயரை அறிவித்ததும் வீரர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சி, அவர்களின் ஆயத்தம், அந்த நொடி நேர நிசப்தம் இதையெல்லாம் மிஸ் செய்து விடாதீர்கள்

vikatan

  • தொடங்கியவர்

பெண்கள் தங்கள் மொபைலில் பதிந்திருக்க வேண்டிய 10 ஆப்ஸ்!

KV_1.jpg
1. சேஃப்டி பின்:
 
இந்த ஆப் முழுவதும் பர்சனல் செக்யூரிட்டியை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. இது அவசர எண் பதிவு, திசை வழிகாட்டல் என பல அம்சங்களை உள்ளடக்கியது. இதில் பாதுகாப்பான இடங்களைப்  பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த ஆப் ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பானிஷ் என மூன்று மொழிகளில் கிடைக்கிறது. நமக்கு ஏற்ற மொழிகளை இதில் பதிவிறக்கம் செய்யலாம்.
 
2. ரக்‌ஷா:
 
KV_2.jpg
இதில் உங்களுக்கு நெருங்கியவரின் எண்ணை பதிந்து வைத்து விட வேண்டும். நீங்கள் ஆபத்தான தருணத்தில் இருந்தால், கொடுக்கப்பட்டிருக்கும் பட்டனை அழுத்தினால் போதும், அவர்களுக்கு அலர்ட் மெசேஜ் செல்லும். அதாவது அந்த குறிப்பிட்ட நபருக்கு தகவல் சென்று சேர, வால்யூம் பட்டனை மூன்று நொடிகள் அழுத்தினால் போதும், அவருக்கு அலர்ட் சென்று சேரும்.
 
3. ஹிம்மாட்:
 
டெல்லி போலீஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த ஆப். இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்தவுடன் டெல்லி போலீஸ் வெப்சைட்டில் தேவைப்படும் தகவல்களைப் பதிய வேண்டும். பதிவு நிறைவு செய்தவுடன் உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும். இந்த எண்ணை டைப் செய்து உங்களுடைய பதிவை உறுதி செய்து கொள்ளலாம். 
 
எதிர்பாராத விதமாக பிரச்னைகள் ஏற்படும் போது SOS Alert இந்த ஆப் வழியாக, இருக்கும் இடத்தின் விபரத்தோடு, ஆடியோ மற்றும் வீடியோ பதிவானது டெல்லி போலீஸாருக்கு தெரிவிக்கப்படும்.
 
4.பெண்கள் பாதுகாப்பு:
 
KV_4.jpg
நீங்கள் ஆபத்தான ஒரு இடத்திலோ அல்லது சூழ்நிலையிலோ மாட்டிக் கொண்டால், நீங்கள் ஏற்கெனவே பதிவு செய்திருக்கும் எண்ணுக்கு, நீங்கள் இருக்கும் இடத்தின் முகவரியானது கூகுள் மேப் மூலம்  டைப் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுவிடும். மேலும், உங்களின் எதிரில் இருக்கும் இரண்டு படங்களையும் எடுத்து, சர்வருடன் தானாக இணைப்பட்டு குறிப்பிட்டுள்ள நபருக்கு அனுப்பிவிடும். இதில், மூன்று பட்டன்கள் இருக்கின்றன. சூழல்களைப் பொறுத்து அந்த பட்டன்களை அழுத்துவதன் வாயிலாகச் செய்தியானது உங்களின் நெருங்கியவருக்குச் சென்று விடும். அதைப் பொறுத்து உங்களைக்  காப்பாற்றும் முயற்சியினை அவர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
 
5. ஸ்மார்ட் 24X7
 
KV_5.jpg
பல மாநிலங்களின் போலீஸாருடன் இணைக்கப்பட்டிருக்கிறது இந்த ஆப். முக்கியமாகப் பெண்கள் மற்றும் முதியோருக்கு இது பெருமளவில் உதவுகிறது. இந்த ஆப் வாயிலாக பேனிக் அலர்ட்டானது அவரச காலத்தில் அனுப்பப்படும். இந்த ஆப்பில் பேனிக் பட்டனுடன், வாய்ஸ் மற்றும் அந்த இடத்தின் படங்கள் என அனைத்து தகவல்களும், ஒரு சேர குறிப்பிட்டுள்ள நபருக்குச் சென்றுவிடும். எந்த மாதிரியான உதவிகள் வேண்டும் என்பதைப் பொறுத்து பட்டன்களை தட்டி, சப்மிட் கொடுத்து விட்டால் உங்களுக்கான உதவியானது உங்களைச் சார்ந்தவரிடமிருந்து வரும்.
 
6. ஷேக் 2 சேஃப்டி:
 
KV_6.jpg
மிகவும் சுலபமாகப் பயன்படுத்தக் கூடிய ஆப் இது. அவசர காலத்தில் ஸ்மார்ட்போனை ஷேக் செய்தால் போதும் அல்லது பவர் பட்டனை நான்கு முறை அழுத்தினாலே நீங்கள் பதிவு செய்துள்ள நபருக்கு உங்களுடைய 'உதவி தேவை' என்ற செய்தியானது சென்று விடும். லாக் ஸ்கிரீனுடன் இதனை பதிவு செய்து கொள்ளலாம். உங்களைத் தவிர மற்றவரும் இந்த எண்ணைப் பார்த்துவிட்டு அவருக்குப் பதிலளிக்கலாம். இதற்கு இன்டர்நெட் கனெக்‌ஷன் தேவையில்லை. விபத்து, பாலியல் தொந்தரவு, கொள்ளை, இயற்கை சீரழிவு போன்ற காலங்களில் பெரும் உதவியாக இருக்கும்.
 
7. என் பில்:
 
KV_7.jpg
குழந்தைப்பேறுக்காக காத்திருக்கிறீர்களா?... உங்களுக்கே உங்களுக்கான ஆப் தான் இது. மாதவிடாயின் போது எவ்வளவு உதிரப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. எப்பொழுது நீங்கள் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுது, நீங்கள் மருத்துவரைப் பார்க்க வேண்டும். எந்தெந்த நாட்களில், என்னென்ன மாதிரியான சிம்டம்ஸ் இருக்கும் என அவ்வப்போது உங்களுக்கு தகவல் சொல்லிவிடும் இந்த ஆப்.
 
8. சிடோர் ஸ்குவாட்:
 
KV_8.jpg
பெண்களுக்குப் பெரிய பிரச்னையே டாய்லெட் பிரச்னைதான். பயணம் செய்யும் இடங்கள் அல்லது புது இடங்களில் ரெஸ்ட் ரூம் எங்கே இருக்கிறது என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டிவிடும், இந்த ஆப். உங்களுக்கு அருகாமையில் உள்ள ரெஸ்ட் ரூம்களை பயன்படுத்தியவர்களின் கமெண்ட்ஸ் அனைத்தையும் காண்பித்து விடும் என்பதால் உங்களுக்கு சிரமம் கொடுக்காமல் நல்ல ரெஸ்ட்ரூம்களை உங்களுக்குக் கண்டுபிடித்து தந்து விடும். ஸோ, கூலாகப் பயணம் செய்யலாம்.  
 
9.ஒ.பி.ஐ:
 
KV_9.jpg
எந்த கலர் நெயில் பாலிஷ் உங்களது உடல் நிறத்திற்கு ஏற்றவாறு இருக்கும் என்பதை உங்களுக்குக் காட்டிவிடும் இந்த ஆப். இந்த ஆப்பின் கேமரா வாயிலாக உங்கள் விரலை படம் எடுத்தால்,  எந்த கலர் உங்களுக்கு கச்சிதமாக இருக்கும் என்பதற்கான ஆப்ஷன்களை காட்டிவிடும். அதற்கு பிறகு என்ன...? உங்களுக்கு ஏற்ற நெயில் பாலிஷ்களை தேர்ந்தெடுக்கும் நேரத்தை மிச்சப்படுத்தலாமே..?
 
10. மிண்ட்:
 
KV_10.jpg
பட்ஜெட்டை எப்படி மெயின்டெயின் செய்வது என்று தெரியவில்லை. எழுதி வைக்கவோ, நினைவில் வைக்கவோ நேரம் இல்லை என்பவர்களுக்கு இந்த ஆப் ஒரு வரப் பிரசாதம். இதில் உங்களுடைய பேங்க் அக்கவுன்ட் மற்றும் கிரடிட் கார்ட் போன்ற தகவல்களைப் பதிவு செய்து, உங்களுடைய செலவுகளை டைப் செய்து பதிவு செய்து கொண்டே வந்தால், ஒவ்வொரு மாதத்திலும் நீங்கள் செய்திருக்கும் செலவு கணக்கினை துல்லியமாக காண்பிக்கும். கடந்த மாதம் எவ்வளவு செலவாகியிருக்கிறது. இந்த மாதம் எவ்வளவு செலவு என்பதையும் உங்களுக்கு கம்பேர் செய்து  காண்பித்து விடும்.

vikatan

  • தொடங்கியவர்

 

Jaffna Boyக்கு அவரது ஆண்டி பெர்லியிடமிருந்து அலைபேசி அழைப்பு வருகின்றது. ஆண்டி சொன்ற விடயத்தை கேட்டு அதிர்ச்சியுடன் கடற்கரை வீதியில் நடந்துச் செல்கிறார்.

அங்கு காதல் பற்றிய விடயமொன்றை அறிந்து கொள்கிறார் அது என்னவென்றால்... அதனை வீடியோவில் பாருங்கள்

 

  • தொடங்கியவர்

 

ஒலிம்பிக் வாசிப்பு: ஒலிம்பிக் பார்ப்பதற்கு ஒரு கைடு!
 
india2016_2969507d.jpg

பரபரப்பாக நடந்துகொண்டிருக்கின்றன ஒலிம்பிக் போட்டிகள். எந்த ஸ்போர்ட்ஸ் சேனலைத் திறந்தாலும், ஒவ்வொரு சேனலிலும் ஒவ்வொரு விளையாட்டை ஒளிபரப்புகிறார்கள். எதைப் பார்க்க, எதை விட என்று பலரும் குழம்பலாம். அந்தப் பலரில் சிலர், ஒலிம்பிக் போட்டிகளைப் பார்ப்பது இது முதன்முறையாகக்கூட இருக்கலாம்.

கவலையை விடுங்கள். உங்களுக்காகவே வந்திருக்கிறது 'ஹவ் டு வாட்ச் தி ஒலிம்பிக்ஸ்' எனும் புத்தகம். பிரபல விளையாட்டுச் செய்தியாளர்கள் டேவிட் கோல்ட்ப்ளாட், ஜானி ஆக்டன் மற்றும் பால் சிம்ப்ஸன் ஆகியோர் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள். 'ப்ரொஃபைல் புக்ஸ்' பதிப்பக வெளியீடான இது, சமீபத்தில் வெளியாகியுள்ளது.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் தோற்றம், தொடக்க நிகழ்ச்சிகளின் வரலாறு, பதக்க விழாவின் பாரம்பரியம், போட்டி முடிவு நிகழ்ச்சிகளின் ‘ஹைலைட்' போன்ற விஷயங்களுடன், ஒலிம்பிக் போட்டியில் விளையாடப்படும் 31 வகை விளையாட்டுக்களின் தோற்றம், அவற்றின் முக்கியத்துவம், அவை ஒலிம்பிக்கில் இணைக்கப்பட்ட கதை, அந்தப் போட்டிகளின் விதிமுறைகள், போட்டியின்போது கடைப்பிடிக்கப்படும் சில நுணுக்கங்கள் என இந்தப் புத்தகம், விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருக்கும் ஒரு ‘ரெடி ரெஃபரன்ஸ்' ஆக அமைந்திருக்கிறது என்று சொன்னால், அது மிகையில்லை.

olympic_2969510a.png

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள், ‘நாம் எப்படி ஒலிம்பிக்ஸ் போட்டிகளைப் பார்க்க வேண்டும்?' என்ற கேள்விக்கு ஐந்து விஷயங்களைப் பட்டியலிடுகிறார்கள்.

அதில் முதலாவது, ‘எந்த விளையாட்டை எதற்காகப் பார்க்க வேண்டும்?' என்ற புரிதல் நமக்கு அவசியம் என்கின்றனர். அதாவது, உங்களுக்குத் தடகளப் போட்டிகளைப் பார்ப்பதில் ஆர்வம் உண்டா? அப்படியென்றால், ஜெஸ்ஸி ஓவென்ஸ் பற்றித் தெரியுமா? உசைன் போல்ட் செய்த சாதனை குறித்து நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? 1968-ம் ஆண்டு மெக்ஸிகோ ஒலிம்பிக்கில் நிகழ்ந்த ‘ப்ளாக் பவர் சல்யூட்' ஏற்படுத்திய விளைவுகள் என்ன என்பன போன்ற விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது அந்தப் போட்டிகளை நீங்கள் தொலைக்காட்சியில் பார்க்கும்போது, நல்ல புரிதலுடன் விளையாட்டைப் பார்ப்பீர்கள்.

இரண்டாவது, ‘நீங்கள் விரும்பும் விளையாட்டு தோன்றிய கதையைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்'. ஏன்? உதாரணத்துக்கு உங்களுக்கு ‘ரக்பி' விளையாட்டு மிகவும் பிடிக்கும் என வைத்துக்கொள்வோம். அந்த விளையாட்டு இந்த ரியோ ஒலிம்பிக்ஸில் ‘ரக்பி 7' என்ற பெயரில் ஏன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருந்தால், அந்த விளையாட்டின் போக்கு உங்களுக்குப் பிடிபடும். இங்கிலாந்தில் உள்ள ‘ரக்பி' எனும் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த வில்லியம் வெப் எல்லிஸ் என்ற 16 வயதுச் சிறுவன், கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மைதானத்திலிருந்து அந்தப் பந்தைத் தூக்கிச் சென்றுவிட்டான். அப்படி உருவானதுதான் ‘ரக்பி' விளையாட்டு. பின்னாளில் அந்தச் சிறுவனின் பெயரிலே ‘ரக்பி உலகக் கோப்பை' போட்டிகள் நடைபெற ஆரம்பித்தன. இப்படியான வரலாற்றைத் தெரிந்து வைத்துக்கொண்டு ஒரு விளையாட்டை நீங்கள் அணுகினால், அந்த விளையாட்டை நீங்கள் பார்க்கும்போது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

மூன்றாவதாக, 'ஒரு விளையாட்டின் அடிப்படை விதிகளையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்'. எதற்காக? உதாரணத்துக்கு உங்களுக்கு வில் வித்தைப் போட்டியைக் காண்பதில் ஆர்வம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் ‘ஃபாஸ்ட்' எனும் வார்த்தை அவ்வப்போது பயன்படுத்தப்படும். அப்படி என்றால் என்ன? ‘ராபின் ஹுட் ஷாட்' என்றால் என்ன? அதற்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் எத்தனை? இப்படியான சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொண்டால், அந்த விளையாட்டின் சூட்சுமம் உங்களுக்கு விளங்கிவிடும்.

நான்காவதாக, ‘ஒரு விளையாட்டின் நெளிவு சுளிவுகளை நாம் அறிந்திருக்க வேண்டும்' என்கிறார்கள் ஆசிரியர்கள். அது ஏன்? உதாரணத்துக்கு பாட்மின்டன் போட்டியை எடுத்துக்கொள்வோம். டென்னிஸ் விளையாட்டில் ஒரு வீரர் செய்யும் ‘சர்வ்'தான் அந்த விளையாட்டு வீரருக்கான புள்ளிகளைப் பெற்றுத் தருவதில் முக்கியமானதாக இருக்கும். ஆனால் இறகுப்பந்துப் போட்டியில் ‘சர்வ் இஸ் நாட் கிங்', அதாவது ‘சர்வ்' அவ்வளவு முக்கியமானதல்ல என்று சொல்லப்படுகிறது. எதனால் அப்படி என்று நீங்கள் தெரிந்துகொண்டால், அந்தப் போட்டியை நீங்கள் இன்னும் புரிந்துகொண்டு ரசிக்க முடியும்.

ஐந்தாவதாக, ‘ஒரு விளையாட்டு, எப்படி ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டது' என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, துப்பாக்கிச் சுடுதல் போட்டி முன்பு எவ்வாறு விளையாடப்பட்டது? ஒலிம்பிக் போட்டியில் அது சேர்க்கப்பட்டவுடன், அந்த விளையாட்டு விதிகளில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் என்ன என்பன போன்ற விஷயங்களைத் தெரிந்துகொண்டால், நீங்கள் பார்க்கும் அந்த விளையாட்டு நிச்சயம் அர்த்தமுள்ள பொழுதுபோக்காக இருக்கும்.

1_2969527a.jpg

இந்தப் புத்தகம் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒரு கையேடாக மட்டுமல்லாமல், விளையாட்டுத்துறை தொடர்பான ஒரு பொது அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கிறது என்று சொன்னால், அது முற்றிலும் உண்மை. ஹேப்பி ஒலிம்பிக்ஸ்!

 

Tamil thehindu

  • தொடங்கியவர்

உசேன் போல்ட்டின் பிரத்யேக ஸ்டைலுக்கான காரணம் தெரியுமா?

837761231.jpg

உலகின் அதிவேக மனிதர் உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று ஹாட்ரிக் ஒலிம்பிக் சாதனை படைத்துள்ளார். உசேன் போல்ட் என்றதுமே அவரது ஃபேவரைட் மூவ் தான் அனைவருக்கும் நினைவில் வரும் அதற்கு பின்னால் உள்ள‌ காரணம் தெரியுமா? 

2008ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற போது இந்த ஃபேவரை மூவ்வுடன் போஸ் கொடுத்தார். அடுத்த இரண்டு முறை வென்ற போதும் இதே போஸ் கொடுத்து மக்களை குதூகலத்தில் ஆழ்த்தினார். 

212644182.jpg

இந்த மூவ் குறித்து அவர் கூறியிருப்பது ஜமைக்காவின் பிரபல மியூஸிக் ஆல்பமான டான்ஸ்ஹாலின் ''To Di World'' -ல் இடம் பெற்ற மூவ். அது எனக்கு பிடித்திருந்ததால் அதை நான் செய்தேன். நான் எப்படி செய்யும் போது உலக மக்களுடன் இணைந்திருப்பதாய் உணர்கிறேன் என்றும், மக்கள் இதனை விரும்பாவிட்டால் இதனை நான் நிறுத்திவிடுவேன் என்றும் கூறியுள்ளார். 

 

 

via GIPHY

இதற்கு சமூக வலைதளங்களில் இதனை நாங்கள் பெரிதும் விரும்புகிறோம். நீங்கள் இதனை தொடர வேண்டும் என்று பலர் பகிர்ந்துள்ளனர்

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்


ஹாப்பி பர்த்டே ''மிஸ்டர் க்ளாஸிக்'' சந்தர்பால்

வினோதமான பேட்டிங், மூன்று ஸ்டெம்புகளையும் காட்டி ஆடினாலும் ஒருவரை ஆட்டமிழக்கச் செய்வது கடினம், பந்துகளை தரையோடு பவுண்டரிக்கு விரட்டுவது ஒரு கலை. அதனை சிறப்பாக செய்பவர்; இதனையெல்லாம் அசால்ட்டாக  செய்து காட்டியவர்  வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிவ் நாராயண் சந்தர்பால். அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு கிளாசிக் கிரிக்கெட்டரான இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

1974ம் ஆண்டு கயானாவில் பிறந்த சந்தர்பால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தலைசிற‌ந்த வீரர்களில் ஒருவராக விளங்கினார். லாரா, ரிச்சர்ட்ஸ் வரிசையில் மிகவும் பேசப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர். மிகப்பெரிய ஜாம்பவான்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரு சமயத்தில் அனைவருமே ஒய்வு பெற்றபோது, ஒற்றை ஆளாக வெஸ்ட் இண்டீஸின் நடு வரிசையை சமாளித்தவர் ஷிவ் நாராயண் சந்தர்பால். 

ஒரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்த வேண்டும் என்றால் சந்தர்பாலை அவுட் ஆக்கினால் போதும் என மற்ற அணிகள் உத்திகளை வகுக்கும் அளவுக்கு அணியின் தவிர்க்க முடியாத வீரர் இவர். தனி ஒரு ஆளாக அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் கில்லி.

இவரது பேட்டிங் ஸ்டைல் மற்ற வீரர்களிடமிருந்து வித்தியாசமானது. மூன்று ஸ்டெம்புகளையும் காட்டி ஆடுவது, ஆட்டத்தை துவங்கும் போது ஸ்டெம்பை எடுத்து மைதானத்தில் சிறிய அடையாளமிட்டு அந்த ஸ்டெம்பை மையப்படுத்தி ஆடுவது என சர்வதேச கிரிக்கெட்டின் ஸ்டைலிஷ் ப்ளேயர்களில் ஒருவர். நீண்ட நாட்கள் இவரது கன்னத்தில் இருந்த டாட்டூவும் இவரது ஸ்டைல்களில் ஒன்று. 

Advertisement

இவரை மிகச் சிறந்த டெஸ்ட் ப்ளேயர் என்று கூறுவர். அதற்கேற்றார்போல் 2002ம் ஆண்டு ஆன்டிகுவா டெஸ்டில் இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருந்தவர். அதில் 510 பந்துகளை சந்தித்து 11 மணிநேரம் களத்தில் இருந்து நான்காவது டெஸ்ட்டை ட்ரா செய்தார். இந்திய கேப்டன் கங்குலி, சந்தர்பாலை அவுட் செய்ய முடியாமல் தவித்ததற்கு சாட்சி, விக்கெட் கீப்பர் அஜய் ராத்ரா உட்பட 11 போரையும் பந்துவீச வைத்ததுதான். அணியின் அனைத்து வீரர்களும் பந்து வீசியும் சந்தர்பாலை வீழ்த்த முடியவில்லை. அடுத்த வருடமே 69 பந்துகளில் ஆஸிக்கு எதிரான டெஸ்ட்டில் சதமடித்து தன்னால் விரைவாக ரன் குவிக்க முடியும் என்பதை நிரூபித்தார். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டின் விரைவான சதத்தை பதிவு செய்தவர்களில் 4ம் இடத்தில் உள்ளார்.

ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் என போட்டியின் வடிவத்துக்கு ஏற்ப தன்னை மாற்றி ஆடும் திறமை கொண்டவர் சந்தர்பால். சர்வதேச வீரர்கள் அனைவரும் தடுமாறும் இந்திய, இலங்கை, பாகிஸ்தான் ஆடுகளங்களில் அசால்ட்டான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் சந்தர்பால். குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு உதவும் இந்திய ஆடுகளங்களில் மேட்ச் வின்னராக இருந்தவர் அவர். 2008ம் ஆண்டு ஆஸிக்கு எதிரான டெஸ்ட்டில்  பிரட் லீ வீசிய பந்து சந்த்ரபாலின் ஹெல்மெட்டை தாக்கியது. அதிலிருந்து மீண்டு அதே இன்னிங்க்சில் சதமடித்தார். 

அதே தொடரில் டெஸ்ட் வரலாற்றின் மிகப்பெரிய ரன் சேஸான 418ல் சதமடித்து அணியை வெற்றி பெற வைத்தவர் சந்தர்பால்தான். இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10 ரன் தேவைப்பட்டபோது சமிந்தா வாஸ் பந்தை சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி த்ரில் வெற்றி பெற வைத்தவர் இவர்.

இவரது கடைசி ஒருநாள் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மறக்க முடியாத சம்பவங்கள் நிறைந்தது. 2011ம் ஆண்டு உலக கோப்பை காலிறுதி போட்டி. பாகிஸ்தானுடன் தோற்று வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் டாப் ஸ்கோர் சந்தர்பால் தான். கடைசி டெஸ்ட் போட்டியில் சந்தர்பால் டக் அவுட் ஆகியதும் அவரது இன்னிங்ஸில் அழியாத இடம் பிடித்தவை. லாராவை முந்த 86 ரன்கள் தேவை என்ற போது  இறுதி வாய்ப்பு அளிக்காமல் சந்தர்பாலை ஓரங்கட்டியது வெஸ்ட் இண்டீஸ் அணி.
 
இன்னும் ஒரு டெஸ்ட் ஆடியிருந்தால் லாராவை 'ஓவர் டேக்' செய்திருப்பார். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சம்பள பிரச்னையில் சிக்கித் தவித்தபோது அணியில் இருந்த ஒரே சீனியர் இவர்தான். ஆனாலும் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் இவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கி கெத்தான வழியனுப்புதலை செய்திருக்க வேண்டும்.

இத்தனை திறமைகள் கொண்ட க்ளாஸிக்கான வீரருக்கு இன்று பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

 

தோற்றவர்களின் கதை 

சுசி திருஞானம்தொடர்

முகமது அலி

குத்துச்சண்டைப் பயிற்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் வெறுத்தேன். ஆனால், எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். முயற்சியைக் கைவிட்டுவிடாதே. இப்போது கஷ்டப்பட்டால், மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் உலக சாம்பியன் என்ற பெருமை யுடன் வாழலாம்.’’  

குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த முகமது அலி, பயிற்சியின்போது மரண வலியைச் சந்தித்தபோது எல்லாம் மேற்சொன்ன வரிகளைத் தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டார். குத்துச்சண்டை மேடையில் மட்டுமல்ல, சமூக அரசியல் களத்திலும் அவர் வலிமிகுந்த தாக்குதல்களை எதிர்கொண்டார். பர்கின்சன் நோய் எனப்படும் மறதி நோய் அவரை 32 ஆண்டுகளாக வதை செய்தது. பயிற்சியின்போது காட்டிய அதே மனஉறுதியுடன் கடைசிவரை போராடும் சாம்பியனாகவே அவர் வாழ்ந்தார். 

அமெரிக்காவின் தென் பகுதி மாகாணமான கென்டக்கியில் 1942-ம் ஆண்டு முகமது அலி பிறந்தார். காசியஸ் க்ளே என்பது அவரது இயற்பெயர். அவருடைய மூதாதையர்கள், ஆப்பிரிக்க - அமெரிக்கக் கறுப்பின அடிமை களாக வாழ்ந்தவர்கள். முகமது அலி சிறுவனாக இருந்தபோது ஒரு கடையில், தாகத்துக்குத் தண்ணீர் கேட்டார். கறுப்பின அடிமைச் சிறுவனுக்குத் தண்ணீர்தர முடியாது என்று வெள்ளைக்கார கடைக்காரர் துரத்திவிட்டார். அந்தச் சம்பவம், அவர் மனதில் ஆழப் பதிந்தது. நிற ஒடுக்குமுறைக்கு எதிராகவும், அனைத்துவித ஒடுக்குமுறைகள் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் ஆக்ரோஷமாகக் குரல்கொடுப்பது, கடைசிவரை அவரது இயல்பாக இருந்தது. 

முகமது அலி 12 வயது சிறுவனாக இருந்தபோது அவருடைய சைக்கிள் திருடப்பட்டுவிட்டது. முகமது அலி, புகார் அளிக்கக் காவல் நிலையம் சென்றார். சைக்கிளைத் திருடியவனை, நேரில் கண்டால் அவனை அடித்து நொறுக்கிவிட விரும்புவதாக போலீஸ்காரர்களிடம் தெரிவித்தார். சிறுவனின் ஆக்ரோஷத்தைக் கவனித்த ஜோ மார்ட்டின் என்ற போலீஸ்காரர், குத்துச்சண்டை பயிற்சி பெறுவதற்கு முகமது அலிக்கு வழிகாட்டினார். அமெச்சூர் வீரராக உருவெடுத்தார் முகமது அலி. 105 அமெச்சூர் போட்டிகளில் களம் இறங்கிய முகமது அலி, 5 முறை மட்டுமே தோல்வி கண்டார். 1960-ம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில், 18 வயதே ஆன முகமது அலி தங்கம் வென்று சாதனை படைத்தார். 

ரோம் ஒலிம்பிக்கில் இருந்து அமெரிக்கா திரும்பிய முகமது அலி, தனது நண்பருடன் ஒரு ஹோட்டலுக்குச் சென்றார். முகமது அலிக்கும் அவரது நண்பருக்கும் சேவை செய்யமுடியாது என அங்கு பணியில் இருந்த வெள்ளைக்காரப் பெண் ஆணவமாகப் பதில் அளித்தார். இதனால், கடும் கோபமடைந்த முகமது அலி, எதிர்த்து வாதிட்டதுடன், தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஓகியோ நதியில் வீசியதாகத் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்காகத் தங்கப்பதக்கம் வாங்கிய தன்னை நிற பேதம் காட்டி அவமானப்படுத்தும் அமெரிக்கத் தேசத்தின் நிலைமை குறித்து வேதனைப்படுவதாக முகமது அலி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். நிறவெறி மீதான தனது கோபத்தைக் குத்துச்சண்டைப் போட்டிகளில் காட்ட முடிவெடுத்த முகமது அலி, அதே ஆண்டில் தொழில்முறைக் குத்துச்சண்டை வீரராக உருவெடுத்தார். பின்னர், களமிறங்கிய அனைத்துப் போட்டிகளிலும் ஆக்ரோஷமாக எதிராளியைத் தாக்கினார். தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நடந்த 19  குத்துச்சண்டை போட்டிகளில் அவர் ஒருமுறைகூடத் தோற்கவில்லை. 15 முறை நாக் அவுட் வெற்றி. 

20-வது போட்டி, உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியாக அமைந்தது. அந்தப் போட்டியில், உலகின் மிக ஆபத்தான வீரராக அறியப்பட்ட உலக சாம்பியன் சோனி லிஸ்டனை, 22 வயதே ஆன முகமது அலி எதிர்கொண்டார். இந்தப் போட்டியின் 7-வது சுற்றில், ‘டெக்னிக்கல் நாக்-அவுட்’ முறையில் வெற்றி பெற்ற முகமது அலி, உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். கூடியிருந்த மக்கள் முன்பாக, ‘‘நான் யாராலும் வெல்லப்பட முடியாத உலக சாம்பியன். நானே உலகின் மாவீரன்’’ என்று தன்னம்பிக்கையுடன் முழக்கமிட்டார்.  

அமெரிக்காவில் நிலவிவந்த நிறவெறிக்கு எதிராக குரல்கொடுத்த மால்கம் எக்ஸ் என்ற தலைவரின் மீது தான் கொண்ட அபிமானத்தால், காசியஸ் க்ளே என்ற தனது பெயரை, க்ளேசியஸ் எக்ஸ் என்று சிறிதுகாலம் மாற்றிக்கொண்டார். கறுப்பின மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான போராட்ட வடிவமாக மதமாற்றம் கருதப்பட்ட காலகட்டத்தில், தனது பெயரை முகமது அலி என்று பின்னர் மாற்றிக்கொண்டார். ‘‘கிளே என்ற பெயர் அடிமை முறையை நினைவுபடுத்துகிறது. ‘முகமது அலி’ என்றால் கடவுளின் அன்புக்குரியவர் என்று பொருள். எனவே, எல்லோரும் என்னை முகமது அலி என்றே அழையுங்கள்’’ என்றார்.

1967-ம் ஆண்டு நடந்த வியட்நாம் போரில், அமெரிக்கப் படையினருக்காகப் போரிட முகமது அலி மறுத்ததால், 5 ஆண்டுகாலம் சிறை, 10,000 டாலர் அபராதம், சாம்பியன்ஷிப் பட்டம் பறிப்பு, குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கத் தடை என இன்னல்களைத் தந்தது அமெரிக்க அரசு. இதனால், முகமது அலியின் வருமான வாய்ப்புகள் அடைக்கப்பட்டு, அவர் பெரும் கடனாளி ஆகிவிட்டார். ஆனாலும், அவர் தனது நிலைப்பாட்டில் இருந்து துளியும் மாறவில்லை. தான் மிகவும் நேசித்த குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க முடியாமல் மூன்றரை ஆண்டு காலம் ஒதுங்கியிருந்தார். சிறைத் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்த முகமது அலி, நீதிமன்றத்தில் மட்டுமின்றி மக்கள் மன்றத்திலும் தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துவைத்துப் போராடினார்.  

முகமது அலியின் கருத்து அமெரிக்க மக்களின் கருத்தாக மாறியது. வியட்நாம் போரிலிருந்து அமெரிக்கா பின்வாங்க நேரிட்டது. முகமது அலியிடம் பறிக்கப்பட்ட விருதுகள் மீண்டும் தரப்பட்டன. தடை நீங்கி மீண்டும் களம் கண்ட முகமது அலியிடம் சற்றும் வேகம் குறையவில்லை. மொத்தம் 61 முறை ஹெவி வெய்ட் குத்துச்சண்டை போட்டிகளில் களமிறங்கிய முகமது அலி, அவற்றில் 56 போட்டிகளில் வெற்றி பெற்றார். இதில் 37 முறை நாக்-அவுட் முறையில் வென்றார். வரிசையாக மூன்று முறை உலக சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தினார்.

1980-ல் தமிழ்நாடு அமெச்சூர் குத்துச்சண்டை சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக சென்னையில், காட்சி குத்துச்சண்டை போட்டி நடத்தப்பட்டது. அதில் முகமது அலியும், முன்னாள் ஹெவி வெயிட் சாம்பியனான ஜிம்மி எல்லிஸும் மோதினர். அதற்காக சென்னை வந்த முகமது அலிக்கு முதல்வர் எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தன்னைக் காண கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களைக் கண்டு முகமது அலி நெகிழ்ச்சியடைந்தார்.

அடுத்த சில ஆண்டுகளில் அவரது பேச்சில் நடுக்கம் உருவானது. குத்துச்சண்டையின்போது, பலமுறை தலையில் அடிபட்டதால், முகமது அலிக்குத் தலையில் ரத்த உறைவு ஏற்பட்டு பக்கவாதம் தாக்கியது. பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட அலி, ஓரிரு மாதங்கள்கூடத் தாங்கமாட்டார் என மருத்துவர்கள் கூற, அதையும் சவாலாக ஏற்று, வாழ்ந்துகாட்டினார் அலி. உடல் நலிவுற்றபோதிலும், கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது, சமூக சேவையில் ஈடுபடுவது என தனது கடைசிக் காலத்திலும் பரபரப்புடனே செயல்பட்டார் முகமது அலி. மரணத்துடன் நடந்த போட்டியில், மரணத்தை பலமுறை நாக்-அவுட் செய்த முகமது அலி, கடந்த ஜூன் மாதம் காலமானார். 

மிகவும் பின்தங்கிய சூழலில் பிறந்து, உலகின் மாவீரனாக மாறியது எப்படி என்ற கேள்விக்கு, முகமது அலி இப்படிப் பதிலளித்தார்: ‘‘நான் ஒரு சாதாரண மனிதன். எனக்கு நானே தன்னம்பிக்கையை அளித்துக்கொண்டேன். நான் உலக சாம்பியன் என்று மீண்டும் மீண்டும் எனக்குள் மந்திரம்போல் சொல்லிவந்தேன். இந்த மந்திர உச்சாடனத்தால் எனது நம்பிக்கை உயர்ந்தது. நம்பிக்கையும் வெறித்தனமான உழைப்பும் ஒன்றுசேரும்போது, நம்பிய இலக்கு நம் கைவசமாகிறது.’’

(இன்னும் வெல்வோம்)

Vikatan

  • தொடங்கியவர்


ஃபர்ஸ்ட் டேட்... பெஸ்ட் டேட் ஆக இருக்க வேண்டுமா? #DateEthics

முதல் காதல் மட்டுமல்ல, நமக்கு பிடித்தவர்களுடன் செல்லும் முதல் டேட்டிங்கும் மறக்க முடியாத அனுபவம்தான். ஆனால் அது மனதில் நிற்க வேண்டிய அனுபவமா அல்லது மறக்க வேண்டிய அனுபவமா என்பது நீங்கள் நடந்து கொள்ளும் முறையில்தான் இருக்கிறது.

முதல் அவுட்டிங் குறித்த உங்கள் டென்ஷனை, பி.பியை குறைக்க இதோ சில டிப்ஸ். என்ஜாய் மக்களே...!

 

* எங்கே சந்திக்கப் போகிறீர்கள் என்பது மிக முக்கியம். சினிமா, பார்ட்டி என எக்கச்சக்க இடங்கள் இருந்தாலும், பெஸ்ட் சாய்ஸ் ரெஸ்ட்டாரன்ட்கள்தான். காரணம், இந்த முதல் சந்திப்பில்தான் உங்களை பற்றி அவரும், அவரைப் பற்றி நீங்களும், நிறைய பேசித் தெரிந்து கொள்ள வேண்டியது இருக்கும். அதற்கு, எந்த இடைஞ்சலும், கவனச்சிதறலும் இல்லாமல் இருப்பது முக்கியம். எனவே இரைச்சல் இல்லாத ரெஸ்ட்டாரன்ட்டை செலக்ட் செய்து செல்வதே பெஸ்ட்.

* உங்களை நீங்கள் எவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கிறீர்கள், என்பது மிக முக்கியம். அதற்கேற்றார் போல உடை உடுத்துங்கள். அதை செலக்ட் செய்வது மிக சுலபம். சில உடைகளை அணியும்போதே 'இந்த டிரஸ் உனக்கு செமையா செட் ஆகுதே' என கண்ணாடி பார்த்து நீங்களே சொல்லிக் கொள்வீர்கள்தானே. அந்த ஆடைதான் பெஸ்ட் சாய்ஸ். கவனம், ரொம்ப பார்மலாய் இல்லாமல், ரொம்ப கேஷுவலாய் இல்லாமல் செமி பார்மலில் செல்வது சேஃப். காரணம், உங்கள் ஜோடியின் ரசனை பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாதே, கூட்டத்தில் 'நான் இங்கதான் இருக்கேன் பாரு' எனக் காட்டும் பளீர் வகையறா காஸ்ட்யூம்களை தவிர்க்கவும்.

* நீங்கள் ஆபிஸுக்கே அசால்ட்டாய் செல்லும் ஆளாய் இருக்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் பங்ச்சுவாலிட்டி மிக முக்கியம். குறித்த நேரத்தில் அங்கு இருப்பவர்களுக்கு எக்ஸ்ட்ரா மதிப்பெண்கள் கிடைக்கும். எனவே, மற்ற கமிட்மென்ட்களை எல்லாம் நேரத்தோடு முடித்துவிட்டு பிளான் செய்து கிளம்புங்கள். காரணம், 'காத்திருத்தல் சுகம்' எல்லாம் காதல் வந்தபின்தான். இப்போது இல்லை.

* ரெஸ்ட்டாரன்ட்டில் நீங்கள் எப்படி அமர்கிறீர்கள், என்பது மிக முக்கியம். முதல் சந்திப்பிலேயே பக்கவாட்டில் அமர்வதை தவிருங்கள். எதிர் எதிரே அமருங்கள். முகத்தோடு முகம் பார்த்து அமர்ந்து பேசுவதுதான் எவர்க்ரீன் ஐடியா. பேசும்போது கண்களை அலைபாய விடாதீர்கள். எதிரில் இருப்பவரின் கண்ணைப் பார்த்து பேசுங்கள். இந்த மொத்த பிராசஸிலும் மிக முக்கியமானது இது.

 

* பேச்சை எப்படி தொடங்குவது, என தயக்கம் இருக்கும்தான். சின்ன ஐடியா. 'இந்த டிரஸ் நல்லா இருக்கு, 'It suits you' போன்ற காம்ப்ளிமென்ட்களோடு தொடங்குங்கள். இதைச் சொல்லும்போது மெல்லிய புன்னகையை தவழ விடுங்கள். அது இருவரின் இறுக்கத்தையும் உடைக்க உதவும். ஆனால், கவனம் - பாராட்டுகிறேன் பேர்வழி என அளவுக்கு மீறி அசடு வழியாதீர்கள். இருவருக்கும் பிடித்த பொதுவான விஷயங்களைப் பற்றி பேசுங்கள். எதிரில் இருப்பவர் கவனம் உங்கள் மேல் இல்லையென்றால் நீங்கள் போரடிக்கிறீர்கள் என அர்த்தம். உடனே டாபிக் மாற்ற வேண்டியது அவசியம். நான், எனது என அதிக சுயபுராணம் வேண்டாம். நடுநடுவே வாய்க்கு ஓய்வு கொடுத்து காதுக்கு வேலை கொடுங்கள்.

* பேச்சின் நடுவே அவ்வப்போது ஜாலியாய் ஏதாவது சொல்லி சிரிக்க வையுங்கள். நிஜ வாழ்க்கையில் ஆக்‌ஷனை விட ஹியூமருக்குதான் வேல்யூ அதிகம். அவர்கள் சொல்வதற்கும் சிரியுங்கள். பிறரை கிண்டல், கேலி செய்வதன் மூலம் எதிரில் இருப்பவரை சிரிக்க வைக்க முயற்சி செய்யாதீர்கள். ஓவர் ஹியூமர் உடலுக்கு நல்லதல்ல.

* ரெஸ்ட்டாரன்ட்டில் இருக்கிறீர்கள்தான்; அதற்காக வெயிட்டர் மெனு கார்டு கொடுத்தவுடன் வாங்கி, மளமளவென ஆர்டர் செய்யாதீர்கள். மெனுவை வாங்கி, எதிரில் இருப்பவரிடம் கொடுத்து 'யுவர் சாய்ஸ்' என ஜென்டிலாய் சொல்லுங்கள். அவர் சொல்லி முடித்ததும், 'இங்கே இந்த குறிப்பிட்ட ஐட்டம் சூப்பராக இருக்கும்' என சஜஸ்ட் செய்யுங்கள். அதை தெரிந்து கொள்ள இருக்கவே இருக்கிறது ஸொமேட்டோ. உணவு வகைகளை ஷேர் செய்து சாப்பிடுங்கள். அள்ளி அமுக்காதீர்கள். உரையாடல்களின் நடுவே கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பிடுங்கள்.

* ரொமான்டிக் தருணங்களை குலைக்கும் மிகப்பெரிய ஸ்பாய்லர் நம் மொபைல்தான். எனவே உள்ளே செல்லும்போதே மொபைலை சைலன்ட் மோடில் போட்டு விடுங்கள். நெட்டை ஆஃப் செய்துவிடுங்கள். எந்த காரணத்திற்காகவும் மொபைலை பாக்கெட்டில் இருந்து எடுக்க வேண்டாம். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெளியுலக விஷயங்கள் அதுபாட்டுக்கு நடந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், இந்தக் காட்சியில் நீங்கள்தான் ஹீரோ/ஹீரோயின் என்பதை மறந்து விடாதீர்கள்.

* பில் செட்டில் செய்வதில் தயக்கம் வேண்டாம். அது உங்களைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்களை விதைக்கக் கூடும். எனவே கேஷுவலாய் பில் பே செய்து விடுங்கள். நீங்கள் கொடுப்பீர்கள் என அவரும், அவர் கொடுப்பார் என நீங்களும் தயங்குவது தர்மசங்கடம். 'இவ்ளோ காசுக்கு வேற எங்கேயாவது சாப்பிட்டிருக்கலாம்' போன்ற கமென்ட்கள் வேண்டாம்.

* கிளம்பும்போது, 'இந்த மீட் நல்லா இருந்தது' என ஒரு காம்ப்ளிமென்ட்டை தட்டிவிடுங்கள். 'போற வழியிலதானே எனக்கும் வீடு. சேர்ந்தே போகலாமா?' எனக் கேட்டுப் பாருங்கள். சிலருக்கு இது பிடிக்கலாம். சிலருக்கு பிடிக்காமலும் போகலாம். பிடித்திருந்தால் யோகம் உங்களுக்கு. மறுத்தால் வற்புறுத்தாமல் வழியனுப்பி விடுங்கள்

Vikatan

  • தொடங்கியவர்

6 கண்டங்கள், 44 நாடுகள்... உலகம் சுற்றும் இளம்பெண்ணின் நேரடி அனுபவம்!

ஒரே ஒரு கேமராவுடன் 44 நாடுகள், 6 கண்டங்கள் என தனியே பயணத்தை மேற்கொண்டுள்ளார், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த அலிசா ரமோஸ்.

யாரையும் துணைக்கு அழைத்துச் செல்லாமல் தனியே இத்தனை நாடுகள் மற்றும் கண்டங்களைச் சுற்றி வந்திருக்கிறார். அலிசா, தான் சென்று வந்த நாடுகளின் படங்கள் மற்றும் அவற்றின் குறிப்புகள் குறித்து எழுத தனியே பிளாக் ஆரம்பித்து, அதில் படங்களைப் பதிவேற்றி எழுதி வருகிறார். உலகத்தில் பலரும் பயணம் செய்து வந்தாலும், அது பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. ஆனால், இவர்தான் உலகின் பயணத்தில் வெற்றி பெற்ற பெண் என்கிற பெயரையும், புகழையும் தக்க வைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இணையதளங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் இவருக்கு, இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 60,000 க்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள்.

இந்தப்பயணத்தை தனியே அவர் மேற்கொண்டதற்கான காரணத்தையும் கூறுகிறார்...

Advertisement

" என்னுடன் தோழிகள் யாராவது வருவார்களா என பெரிதும் எதிர்பார்த்து பல வருடங்கள் காத்திருந்தேன். ஆனால், யாரும் என்னுடன் வரத் தயாராக இல்லை. ஏதோ ஒரு விதத்தில் பயணம் செய்ய பயந்தார்கள். அவர்களுக்காக என்னுடைய கனவையும், உறுதியையும் நான் தளர்த்திக் கொள்ள விரும்பவில்லை.

எனவேதான் இறுதியாக யாருடைய துணையையும் எதிர்பார்க்காமல் நானாக, தனியே பயணப்பட்டேன். என்னுடைய முதல் பயணத்தை தென் ஆப்பிரிக்கா நோக்கி தொடர்ந்தேன். இதற்காக, ஆறு மாதங்கள் அங்கே ஃப்ரீலான்ஸராக, பாலிவுட்டில் ஜூனியர் விளம்பரத் தூதராக தொடர்ந்து பணிபுரிந்தேன். அங்கேயே எழுதுவதற்கான வாய்ப்பும் கிடைத்தது. அதுதான் நான் பிளாக் ஆரம்பிப்பதற்கு உதவியாகவும் இருந்தது. நான் என்னுடைய பிளாக்கில்,  'தனியொரு பெண்ணாக இந்த நாட்டிற்கு பயணம் செய்கிறேன்' என்று எழுதியிருந்தேன். இதற்காக பலரும் தவறான கேள்விகளையும், அர்த்தங்களையும் எடுத்துக் கொண்டு, என்னிடம் தவறாக நடக்க முற்பட்டார்கள். பல நாடுகளுக்கு தனியே பயணம் செய்ய நேரும் போது, பெண்களுக்கே உண்டான நெருக்கடியான சூழலை நான் சந்திக்க நேர்ந்தது. பல இரவுகளை அழுகையோடும், பயத்தோடும் கழிக்க வேண்டியிருந்தது. ஆனால், எக்காரணம் கொண்டும் பின் வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த நான்,  எனக்குப் பிடித்ததை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்கிற நம்பிக்கையை  எப்போதும் கொண்டிருந்தேன். அதுதான் என்னை இயக்கிக் கொண்டும் இருந்தது.  

இந்தியாவிற்குச்  சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன் என்று என் நண்பர்களிடம் சொன்னபோது, தவறான விஷயங்களையே பலரும் சொன்னார்கள். ஆனால், நான் இந்தியா வந்து பல இடங்களைச்  சுற்றிப் பார்த்தபோது, 'ஆசிய நாடுகளிலேயே இந்தியாவைப் போன்ற சுற்றுலாத்தலம் வேறு ஏதும் இல்லை' என்றே சொல்வேன். 'அந்த அளவுக்கு கலாசாரத்தையும், வாழ்க்கைக்கான பல விஷயங்களையும் இந்தியா பின்பற்றி வருகிறது' என்றே சொல்வேன். மனசாட்சியோடு சொல்லவேண்டுமானால்...என்னை மிகவும் கவர்ந்த நாடு இந்தியா!

 

இந்தியாவில் டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர், புஷ்கர், ஜோத்பூர், உதய்ப்பூர், மும்பை மற்றும் கோவா என பல இடங்களைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன்.  இப்படி பல இடங்களை சுற்றினாலும் ராஜஸ்தானை எனக்கு மிகவும் பிடித்த இடமாக நினைக்கிறேன். ஜெய்ப்பூர் சென்றபோது எனக்கு அங்கிருந்த அரண்மனை மிகவும் கவர்ந்தது. முதன் முதலில், அப்படி ஒரு அரண்மனையை ஜெய்ப்பூரில்தான் பார்க்கிறேன். அங்குள்ள கலைநயம்  என்னை மிகவும் கவர்ந்தது. ஜெய்ப்பூர் மக்கள், தங்களின்  லைஃப் ஸ்டைலில், ஒவ்வொன்றிலும் கலை நயத்தைப் பிரதிபலிக்கிறார்கள். அங்கே நான் வளையல்களை வாங்கினேன். ஒவ்வொரு நாட்டிலும் மொழி, மதம் என பல வித்தியாசங்கள் இருக்கும். இங்கு எனக்கு மிகவும் பிடித்தது சேலை. இங்குதான் சேலை எப்படி கட்டுவது என்று தெரிந்து கொண்டேன். அதே போல உணவு வகைகளிலும் வித்தியாசம்  காட்டியிருக்கிறார்கள் இந்தியர்கள். எனக்கு இங்குப் பிடித்த உணவு 'பன்னீர் பட்டர் மசாலா வித் கார்லிக்', நாண், மசாலா டீ, ஸ்வீட் லஸ்ஸி போன்றவை.

இப்படி தனியாக என்னைப் போன்று பயணம் செய்ய நினைப்பவர்கள் செய்யவேண்டியது, தனியாகவே  செல்ல முடிவெடுத்துவிட்டால் அந்த இடத்தைப் பற்றி வெப்சைட்டில் பார்த்து,  படித்து தெரிந்து கொள்ளுங்கள். பயணம் புரிய நினைக்கும் பெண்கள் முதலில் பார்க்கவேண்டியது சேஃப்டி. அந்த சமயம் பயணத்தின் போது ஒரு பெண்ணாக மிகவும் பயந்தேன். தனியாகப்  பயணம் செய்திருப்பவர்கள் எழுதியிருக்கும் அனுபவங்களை முதல் படித்து தெரிந்து கொள்ளுங்கள். பயணம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தால் அதன் மீது விருப்பம் இருந்தால், 'ஜஸ்ட் டூ இட்' என்கிறார் அலிசா.

Vikatan

  • தொடங்கியவர்

விண்ணைத் துளைக்கும் ஸாராவின் அம்புகள்!

   

ரியோ ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா, மரகானா மைதானம். ஒவ்வொரு நாட்டுக்கும் பெருமை சேர்த்த வீரர்களும் வீராங்கனைகளும் பெருமிதம் பொங்க தங்கள் நாட்டுக் கொடியை ஏந்தியபடி வந்துகொண்டிருந்தனர். அவர்களைவிடவும் கூடுதல் பெருமிதத்துடன் கொடியை ஏந்திவந்தார் அந்தப் பெண். அவர், இரானைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனை ஸாரா நெமாத்தி. அவர் வந்துகொண்டிருந்தது சக்கர நாற்காலியில்.

ஒலிம்பிக் போட்டியில் கொடியை ஏந்திச் செல்லும் இந்தக் கௌரவம், அவருக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால்தான் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். கட்டுப்பாடுகள் மிகுந்த இஸ்லாமிய நாடான இரானின் சார்பில் பாராலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கம் வென்றவர் ஸாரா.

பாராலிம்பிக் போட்டிகளின் வில்வித்தைப் பிரிவில் துல்லியமாக இலக்கைத் துளைத்த சாதனையையும் அவர் புரிந்துள்ளார். விளையாட்டு வழியாகப் பெண்களுக்கான அதிகாரத்தை வென்றெடுத்ததற்கான அடையாளமாக ஐ.நா. தூதுவராகவும் ஸாரா அறிவிக்கப்பட்டுள்ளார்.

முடங்காத கனவு

இன்றைக்கு அவர் ஒரு மாற்றுத்திறன் வீராங்கனைதான் என்றாலும், ஒலிம்பிக் போட்டிகளில் சாதாரணமானவர்களுடன் போட்டியிடவே ஸாரா நெமாத்தி விரும்பினார். கால்கள் முடங்குவதற்கு முன், தேக்வாண்டோவில் பிளாக் பெல்ட் தகுதி பெற்ற வீராங்கனை அவர்; இரான் தேசிய அணிக்கும் தகுதி பெற்றிருந்தார். ஒலிம்பிக் தேக்வாண்டோ போட்டிகளில் பங்கேற்பதே அவரது கனவாக இருந்தது.

திடீரென ஒரு அசம்பாவிதம் குறுக்கிட்டது. 18 வயதில் நேரிட்ட கார் விபத்தில் ஸாரா படுகாயமடைந்தார். முதுகெலும்பு அடி வாங்கியது, இரண்டு கால்களும் முடங்கிப் போயின. அதற்குப் பிறகு தேக்வாண்டோ பற்றி நினைப்பது சாத்தியமில்லாமல் போனது.

“ஒரு பியானோ கலைஞருக்குக் கைகள் எவ்வளவு அவசியமோ, அப்படித்தான் தேக்வாண்டோ வீராங்கனைக்குக் கால்களும்” என்று கூறிய அவரே, பெரும் மனஉறுதியுடன் அந்தத் துயரத்தைக் கடந்தார்.

கால்கள் முடங்கியதால் தன் ஒலிம்பிக் கனவுகளை ஸாரா முடக்கிக் கொள்ளவில்லை. விளையாட்டைத் துறக்க அவர் தயாராக இல்லை.

வலிமை தந்த வில்

“அந்த அசம்பாவிதம் நடந்த பிறகு மனம் தளர்ந்துவிடக் கூடாது, என் குடும்பத்துக்காக வாழ்ந்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். எனக்குள் இருந்த விளையாட்டை மீட்டெடுக்கப் பேராற்றல் தேவைப்பட்டது. அதை நான் கைகொள்ள மேற்கொண்ட முயற்சிகளின்போது, அனுபவித்த துயரத்தைப் பார்த்து அப்பாவும் அம்மாவும் ரொம்பவே கலங்கிப் போனார்கள். இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு, நம்பிக்கையுடன் செயல்படத் தொடங்கினேன். வில்வித்தைப் போட்டிகளில் பங்கேற்பது என்ற முடிவுக்கு வந்தேன்.

அப்போது நான் பேசாமல் முடங்கி யிருக்கலாம். ஆனால், வாழ்வதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நான் ஆசைப்பட்டேன். வலிமையின் அர்த்தத்தை வில்வித்தை என் மனதில் ஏற்றியது” என்று தான் மீண்ட கதையைச் சொல்கிறார்.

துணிச்சலான பங்கேற்பு

வில்வித்தைப் போட்டிகளில் அவர் பயிற்சி பெற ஆரம்பித்து ஆறே மாதங்களில் சாதாரணமானவர்களுடன் போட்டியிட்டுத் தேசிய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். சர்வதேச அளவிலும் சாதாரணமானவர்களுடன் துணிச்சலாக வில்வித்தைப் போட்டிகளில் ஸாரா பங்கேற்க ஆரம்பித்தார்.

நான்கரை ஆண்டு கடுமையான பயிற்சிகளுக்குப் பிறகு 2012 லண்டன் பாராலிம்பிக் போட்டிகளில் வில்வித்தையில் வென்ற தங்கப் பதக்கம், அவரது பெருமையை உலகுக்கு எடுத்துரைத்தது. அடுத்ததாக, ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு முறைப்படி தகுதி பெற்றார். அதை அங்கீகரிக்கும் வகையில் நாட்டுக் கொடியை ஏந்திச் செல்லும் கௌரவத்தை இரான் அவருக்கு வழங்கியது. விபத்து நடைபெற்று 13 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது ஒலிம்பிக் கனவு நனவானது.

இதில் பதக்கம் ஏதுமின்றி அவர் வெளியேறிவிட்டாலும், அடுத்த மாதம் பிரேசிலில் நடைபெற உள்ள பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். நடப்பு பாராலிம்பிக் ரிகர்வ் பிரிவு வில்வித்தை சாம்பியன் அவரே. அவரைத் தவிர, ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வேறு யாரும் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை.

களம்கண்ட திருமணம்

ஸாராவின் திருமணமும் பாராலிம்பிக் விளையாட்டுக் களத்தில் நடைபெற்றது, மிகவும் பொருத்தமானதுதான். லண்டன் பாராலிம்பிக் போட்டிகளில் அவர் தங்கம் வென்ற பிறகு, இரான் வில்வித்தை வீரர் ரோஹம் ஷஷாபியுடன் லண்டன் ஒலிம்பிக் கிராமத்தில் சக வீரர், வீராங்கனைகள் குழுமியிருக்க திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

முதுகுத்தண்டுக் குறைபாடு உடையவர் களுக்கான சங்கத்தில்தான் அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டார்கள். தங்கள் காதலையும் விளையாட்டு வாழ்க்கையையும் அங்கேதான் அவர்கள் கண்டெடுத்தார்கள். ரோஹம் அடிப்படையில் ஒரு எலெக்ட்ரீஷியன். 2001-ல் வேலைக்களத்தில் இருந்தபோது, கீழே விழுந்த ஒரு பெரிய கோல் அவரது முதுகுத்தண்டைப் பதம் பார்த்தது. அந்த விபத்துதான் ரோஹம்மையும் வில்வித்தை வீரராக்கியது.

“எந்தப் பிரச்சினை வந்தாலும் இருவரும் சேர்ந்து எதிர்கொண்டால், அதை நிச்சயம் தகர்த்துவிடலாம் என்றுதான் நாங்கள் மாறிமாறி சொல்லிக்கொள்வோம். வில்வித்தையைப் பொறுத்தவரை நான் அதிர்ஷ்டசாலி. மற்ற வில்வித்தை வீராங்கனைகள் கணவருடன் இணைந்து பயிற்சி பெறவோ, கூடுதல் நுட்பங்களைத் தெரிந்துகொள்ளவோ முடியாது. ஆனால் ரோஹம் உலகச் சாம்பியன் எனும்போது, எனக்கு வேறு என்ன வேண்டும்?

வாழ்க்கையிலோ உடலிலோ நேரும் எந்தவொரு சிக்கலுக்கும் நாம் முடங்க வேண்டியதில்லை. மகிழ்ச்சிக்கான பாதை பல வாசல்களைக் கொண்டது. அது எதுவெனத் தேர்ந்தெடுப்பது நம் முயற்சியை மட்டுமே பொறுத்தது” - பொருத்தமாக முடிக்கிறார் ஸாரா.

யார் முதல் இரான் பெண்?

கட்டுப்பாடுகள் மிகுந்த இஸ்லாமிய நாடான இரானின் கொடியை ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக ஏந்திச் சென்ற பெருமையை வில்வித்தை வீராங்கனை ஸாரா நெமாத்தி பெற்றிருப்பதாக, கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. அந்தச் செய்தி முற்றிலும் தவறு.

ஒலிம்பிக் போட்டிகளில் இரான் நாட்டின் கொடியை ஏந்திச் சென்ற முதல் பெண், துப்பாக்கி சுடும் வீராங்கனை லிடா ஃபாரிமன். 1996 அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தப் பெருமையை அவர் பெற்றார். அது மட்டுமல்ல இரானில் 1979-ம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற முதல் பெண்ணும் அவர்தான்

Tamil.thehindu

  • தொடங்கியவர்

ஒலிம்பிக் வெற்றியாளர்கள் பதக்கத்தை செல்லமாக கடிப்பது ஏன்?- ஒரு சுவையான தேடல்

   

மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகள் பதக்கத்தை கடிக்கும்போது | படம்: ஏ.எஃப்.பி.

ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள், வீராங்கனைகள் பதக்கம் பெற்ற கையோடு, அதை வாயில் செல்லமாக கடித்தபடி ஒரு போஸ் கொடுப்பர். இப்படி அவர்கள் பதக்கத்தை கடிப்பது ஏன்?

இந்தக் கேள்வி நம்மில் பலருக்கும் தோன்றியிருக்கும். அதன் விளைவாக மேற்கொள்ளப்பட்ட கேள்விக்கு என்ன பதில் முயற்சியில் தெரிந்துகொண்டது என்னவென்றால்...

"அதாவது நாம் குழந்தையாக இருக்கும்போது எந்தப் பொருள் கையில் கிடைத்தாலும் அதை முதலில் வாயில்தான் வைப்போம். ஒலிம்பிக் பதக்கம் கையில் கிடைத்தவுடன் நாம் மீண்டும் குழந்தையாகிவிடுகிறோம்...."

ஆனால், இதுவல்ல நிஜம். இப்படித்தான் பரவலாக ஒரு கற்பிதம் உலா வருகிறதாம்.

இந்த 'பதக்கக் கடிப்பு' சம்பிரதாயத்துக்குப் பின்னால் எந்த பாரம்பரியமும் இல்லை என்பதே உண்மையிலும் உண்மை எனக் கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

நவீன ஒலிம்பிக் விளையாட்டில்தான் இந்த பழக்கம் ஆரம்பித்திருக்கிறது.

இது தொடர்பாக சிஎன்என் தொலைக்காட்சிக்கு ஒலிம்பிக் வரலாற்று ஆய்வாளர்களின் சர்வதேச கூட்டமைப்பின் தலைவர் டேவிட் வேலச்சின்ஸ்கி கூறும்போது, "இது முழுக்க முழுக்க விளையாட்டு புகைப்படக்காரர்களின் ஆர்வ வெளிப்பாடு. பதக்கத்தை கடிப்பது போன்ற புகைப்படம் ஆகச்சிறந்ததாக இருக்கும் என்பது அவர்களது கணிப்பு. அதை நல்லபடியாக வியாபாரம் செய்யலாம் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு.

எனவேதான் ஒலிம்பிக் மைதானங்களின் பதக்கக் கடிப்பு புகைப்படங்கள் புகைப்படக்காரர்களின் கட்டாய பழக்கமாகிவிட்டது. எந்த ஒரு விளையாட்டு வீரரும் தானாகவே தனது பதக்கத்தை கடிப்பார் என நான் நம்பவில்லை" என்றார்.

ஒலிம்பிக் பதக்கங்கள் சுத்தமான தங்கம், வெள்ளி, வெண்கல உலோகங்களால் எவ்வித கலப்படமுமின்றி செய்யப்படுவதால் அவற்றை அழுத்திக் கடித்தால் பல்வரிசையிம் தடம் பதிந்துவிடும் என்பது கூடுதல் தகவல் என்று சுவையான தேடலுக்கு விடை கொடுக்கிறது ஹபிங்டன் செய்தி வலைதளம்.

  • தொடங்கியவர்

உங்கள் பாக்கெட்டில் ஒரு உளவாளி! # Smartphone Alert

                              

 நம்முடைய உலகம் நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. இணைய வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களின் வருகைக்கு முன்னர் வரை,  பெரும்பாலும் தகவல் பரிமாற்றத்திற்காகவே சாதாரண போன்கள் பயன்பட்டு வந்தன. ஆனால் தற்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் வருகைக்கு பின்னர், இணையம் மட்டுமல்ல, மனிதனின் அன்றாட தேவைகளை தீர்த்துக்கொள்ளும் ஒரு அத்தியாவசியமான பொருளாக ஸ்மார்ட்போன்கள் மாறியிருக்கின்றன. நீங்கள் பாக்கெட்டில் வைத்திருக்கும் ஒவ்வொரு ஸ்மார்ட் போனும் ஒரு உளவாளி என்றால் நம்புவீர்களா நீங்கள்?

 

ஸ்மார்ட்போனை நாம் உபயோகப்படுத்த ஆரம்பிக்கும்போது தேவையான செயலிகளை (ஆப்ஸ்) பதிவிறக்கம் செய்கிறோம். இந்த செயலிகள் அனைத்தும் நம்பகத்தன்மை வாய்ந்ததா என்றால் கேள்விக்குறிதான். நாம் உபயோகப்படுத்தும் ஒருசில செயலிக்கு நாம் அனுமதி (I agree) கொடுத்த பின்னரே ஸ்மார்ட்போனில் 'இன்ஸ்டால்' செய்ய முடியும். என்றாவது 'Terms& Conditions-ஐ நாம் முழுதாகப் படித்துப் பார்த்திருக்கிறோமா? 'I agree' கொடுப்பதற்கு முன்னர் நாம் யாரும் அதை படித்து பார்ப்பதில்லை. அதில் சில செயலிகள், நமது ஸ்மார்ட்போனில் இருக்கும் புகைப்படங்களையும், ஸ்மார்ட்போன் பயணம் செய்யும் இடங்களையும்  அறிந்துகொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டு இருக்கும். இவை நமது தனிப்பட்ட தகவல்களை, இன்னொரு நிறுவனத்திற்கு அனுப்புகின்றன.

 

                                    


தற்போது ஆண்ட்ராய்டு மொபைல் செயலிகள் மூலம், ஒருவரை எளிதாக உளவு பார்க்கும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,  அவர்கள் உருவாக்கிய ஆண்ட்ராய்டு செயலியைக் கொண்டு மொபைல் போனின் இருப்பிடம் மற்றும் பயணிக்கும் இடங்கள் ஆகியவற்றை உளவு பார்க்க முடியும் என நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

 

இந்த ஆய்வு குறித்து பேசிய நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் குவேரா நோபிர், " கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களைப் பதிவிறக்கும் பிளே ஸ்டோரில், 25 அமெரிக்க டாலர்கள் பணம் செலுத்தி, எந்தவொரு நபரும் ஒரு செயலியை மக்களின் பயன்பாட்டுக்காக பதிவேற்ற முடியும். அந்த செயலிகளின் நம்பகத்தன்மை குறித்து பயன்படுத்துவோர் யாரும் சோதிப்பதில்லை. எனவே ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும் போது அதன் நம்பகத்தன்மை குறித்து, சிந்தித்து முடிவெடுப்பது சிறந்தது" என்று சொல்கிறார். மேலும், இதுபோன்ற ஆண்ட்ராய்டு செயலிகள் மூலம் ஒருவரின் அனுமதியின்றி கேமிரா மூலம் கண்காணிக்க முடியும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

ஒரு செயலியை பதிவிறக்கும்போது அதன் நம்பகத்தன்மை குறித்து தீவிரமாக ஆலோசித்து, அதன் தேவை இருந்தால் மட்டுமே இன்ஸ்டால் செய்யலாம். இல்லையெனில் அவற்றை தவிர்ப்பது நல்லது

Vikatan

  • தொடங்கியவர்


இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால்... ஒவ்வொரு நாளும் இனிய நாளே! #DailyMotivation

நாம் மாற வேண்டும்.
.
.
.
.
.
.
.
.

 

இந்த மூன்று வார்த்தைகளை  கொண்ட வாக்கியத்தை  படித்தவுடன் நாம என்னடா தப்பு பண்ணுனோம், நம்மள எதுக்கு மாற சொல்றாங்க, நாம ஜாம் ஜாம்னு நல்லாதானே இருக்கோம்னு உங்கள் மனசுல தோன்றியதா?  கையக் குடுங்க பாஸ்! நீங்க இந்த கட்டுரையை அவசியம் படிச்சே ஆகணும்.  சரி என்னதான் சொல்றானுங்கனு பாப்போம்னு படிக்க ஆரம்பிச்ச குரூப்பா நீங்க? உங்களுக்கும் வாழ்த்துக்கள் பாஸ், நீங்க கட்டுரையை படிச்சு முடிச்சதும் நல்லா இருந்ததுன்னு ஃபீல் பண்ணுனீங்கனா கண்டிப்பா ஷேர் பண்ண மறந்துடாதீங்க.

சரி விஷயத்துக்கு வருவோம். செல்ஃப் டெவலப்மென்ட் என்பது  தன்னை தானே மெருகேற்றிக் கொள்ள வேண்டிய விஷயம். பணம் சம்பாதி, புகழைச்சேர், குடும்பத்தை கவனி... இத்யாதி இத்யாதிகளை எல்லாம்  தாண்டி தன்னை நேசித்தல் என்பது தான் மனித இனத்துக்கு மிகவும் முக்கியமான விஷயம். தன்னை நேசிக்காத மனிதனால் வாழ்ந்த...வாழுகின்ற...வாழப்போற   வாழ்க்கைக்கு ஒரு முழுமையே இருக்காது. நாம ஒரு பைக் வாங்குறோம்னு வச்சுக்குவோம், அதுக்கு இரண்டு மூணு மாசத்துக்கு ஒருதடவையாது சர்வீஸ் விட்டு பைக்க சுத்தம் பண்ணினா தானே மீண்டும் சிறப்பா ஓடும். ஆனா நம்ம வாழ்க்கைல நம்மை பற்றிய நேர்மையான சுய மதிப்பீடை நாம செஞ்சுருக்கவே மாட்டோம், நம்ம கிட்ட என்ன பிளஸ், எது மைனஸ்ன்னு நம்மில் பாதி பேருக்கு தெரியாது.விளைவு ஒரு கட்டத்தில் எது செஞ்சாலும் நிம்மதியில்லைனு ஒன்னு சாமியார் காலிலோ இல்ல லட்சக்கணக்கில்  பீஸ் வாங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமோ பலர் மாட்டிக்கொள்கிறார்கள். நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள, நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் முக்கியமான ஐந்து டிப்ஸ் இங்கே.

 1. லாங்க்வேஜ மாத்துங்க ப்ரோ : -

 

பொதுவா  நம்ம  மூளை 'அலார்ட்டாய்க்கடா ஆறுமுகம்' மோடுல தான்  பெரும்பாலும் இருக்கும்.  படிக்கட்டுல ஏறும்போது, பைக்ல போகும்போது, வெயில்ல ரொம்ப நேரம் நிக்கும்போதுன்னு  எப்பவுமே  நம்ம மூளை அலர்ட்டா வேலை பாத்துகிட்டு தான் இருக்கும்.  இதெல்லாம் ஏன்னு கேட்டா டிசைன் அப்பிடி.  மனிதனுக்கு பொதுவாக பாதுகாப்பு உணர்வு ரொம்பவே அதிகம். இதனால்  டிஃபன்ஸிவ் மோட்ல தான் பெரும்பாலானவர்கள் சுத்துகிறார்கள். யாரைப் பார்த்தாலும்  தன்னையறியாமல் பயம், நடுக்கம் எல்லாம் வந்துரும். குறிப்பா அலுவலகத்தில் சிலர் மேலதிகாரிகளை பார்த்தாலே நடுங்குவார்கள், ஒரு சிலர் போலீசாரை பார்த்தாலே இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிட‌ணும்டா தம்பின்னு ஒதுங்கிச்செல்வார்கள். இது எல்லாமே நம்மகிட்ட நெகட்டிவ் மைண்ட்செட் இருக்குங்கிறத தெளிவாக கட்டம் போட்டு காட்டிக்குடுத்துடும். யாரைப் பாத்தாலும் முகத்துக்கு நேராப் பாத்து கண்களை பார்த்து பேசுறதுக்கு முதலில் கத்துக்கணும். எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும் சரி,  மனச்சோர்வை உடலில் காண்பிக்கவே கூடாது. கம்பீரமும், மிடுக்கும் நமது மனச்சோர்வை உடைத்து நம்மை புத்துணர்ச்சியடையச் செய்யும்.


2. குறிக்கோள் வை ! அதை நோக்கி ஓடு!

ரஜினிகாந்த் ஒரு மேடையில்  பேசும்போது இப்படிச்சொன்னார்.  "இன்னிக்கு நாம இருக்குற நிலைமைக்கு காரணம் நேற்று நாம செஞ்ச வொர்க். நேற்றைய உழைப்பின் பயனை இன்னிக்கு அடைஞ்சிட்டு இருக்கோம். இன்னிக்கு நாம எப்படி உழைக்கிறமோ அதோட பயனை தான் நாளை அனுபவிக்க போறோம். எனவே எதிர்காலத்தை குறித்து கவலைப்படாதே. எதிர்காலம் உன் கையில்" என்றார். இதை அப்படியே நாமளும் பின்பற்றலாம். நாம வாழ்க்கையில் எந்த வயசுல எந்த ரேஞ்சுல எந்த எடத்துல இருக்கணும்னு முடிவு பண்ண வேண்டியது நாமதான். குறிக்கோளை நாம  அடைகிறோம், அடையவில்லை என்பது பிரச்னை இல்லை. ஆனால் குறிக்கோளை நோக்கி  ஒடினோமா என்பது தான் கேள்வி. அது மட்டும்தான் மன திருப்தியை தரும்.

குறிக்கோள்  என்றவுடனே வீடு கட்ட வேண்டும், 45 வயதில் கோடீஸ்வரனாக வேண்டும் என்பது தான் என நினைத்து, மை கோல் ஈஸ்னு ஒரு டைரில எழுதி வீட்டுல எங்கயாச்சும் தூக்கிப்போட்டுட கூடாது பாஸ். பெரிய குறிக்கோள் என்பது இருக்க வேண்டியது தான் ஆனால் குட்டிக்குட்டி குறிக்கோளும் அவ்வப்போது இருக்க வேண்டும்.  ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிடுவது, மாதம் ஒரு புத்தகம் படிப்பது, பிடித்த இடத்துக்கு டூர் செல்வது, கிடார் கற்றுக்கொள்வது,  போட்டித் தேர்வில் பாஸாவது, ஐம்பது  பரோட்டாவை ஒரே நேரத்தில் சாப்பிடுவது என எப்போதும் சின்னச் சின்ன குறிக்கோள்களை வைத்து அதனை அடைய பழகுங்கள். அதுவே உங்களுக்கு பெரிய குறிக்கோளை அடைய பெரும் மன வலிமையைத்தரும்.


3. ரிலாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள் : -

நமக்கு மிகப்பெரிய எதிரி யார் தெரியுமா? ஸ்ட்ரெஸ் தான். உடலையும், மனதையும் ஒரு சேர இது பாதிக்கும். ஸ்ட்ரெஸ்ஸை போக்க ஒரே வழி ஆன்டி ஸ்ட்ரெஸ் விஷயங்களை கண்டுணர்ந்து செய்வது தான். நமது சமூகத்தில் ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்றால் நண்பர்களுடன் கூட சேர்ந்து  குடிப்பது, சிகரெட் பிடிப்பது, தியேட்டருக்கு செல்வது, உணவகம் செல்வதுதான் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. இவையெல்லாமே தற்காலிக நிவாரணிகள்  மட்டுமே. தவிர, இவற்றில் சில உடலுக்கு கேடானவையும்கூட. உங்களை ஏதாவதொரு புது செயலில் ஈடுபடுத்தும் போது தான்  மன அழுத்தம் முற்றிலுமாக நீங்கும். ஓவியம் வரைவதோ, சுற்றுலா செல்வதோ, எழுதுவதோ, கார் ஓட்டுவதோ எதாவது ஒரு நல்ல விஷயம்.. அது உங்களுக்கு பிடிப்பதாக இருக்க வேண்டும்... அதைச் செய்யுங்கள். அவை தரும் அனுபவம் உங்களை ஊக்கமூட்டுவதாக இருக்க வேண்டும். உங்களுக்கான ஆரோக்கியமான ஸ்ட்ரெஸ் பஸ்டர் எதுவென்பதை  முடிவு செய்ய வேண்டியதும்  கண்டுணர வேண்டியதும் நீங்கள் தான்.


4. கிரியேட்டிவாக இருங்கள் :-

உங்களுக்குள்ளே நிச்சயம்  ஒரு பிரமாதமான கிரியேட்டர் இருக்கிறார் பாஸ். சின்ன சின்ன விஷயங்களுக்கும் கிரியேட்டிவாக யோசியுங்கள். உங்கள் ரூமையோ, வீட்டையோ குட்டிக் குட்டி கிரியேட்டிவ் விஷயங்களால் அழகாக்குங்கள். உங்களுக்குள் ஒரு கவிஞரோ, திரைக்கதை ஆசிரியரோ, கதாசிரியாரோ இருந்தால் அதை வெளியே கொண்டு வாருங்கள். கையில் கிடைக்கும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் சரி அதை வித்தியாசமாக எப்படி பயன்படுத்தலாம் என்பதை யோசியுங்கள். படிப்பிலோ, வேலையிலோ, பிசினஸிலோ கிரியேட்டிவ் விஷயங்களை புகுத்துபவர்கள் தான் பின்னாளில் வெற்றியாளர்களாக உருவாகிறார்கள்.கிரியேட்டிவில் நல்ல கிரியேட்டிவ், கெட்ட கிரியேட்டிவ் என ஒன்றும் கிடையாது எனவே பயப்படாமல் உங்கள கற்பனைச்  சிறகை விரியுங்கள்.


5. நீங்கள் ஏன் வாழவேண்டும்?

 நாம எதுக்கு உயிர்வாழறோம், நமக்கு என்ன தேவை,  நம்முடைய குறிக்கோள் என்ன..  போன்ற பல கேள்விகளுக்கு நமக்கே சரியான பதில் தெரியாது. எது உங்களுக்கு  நிம்மதியை தரும் என்றொரு கேள்வியை யாரிடம் கேட்டாலும் ஒரு லிஸ்ட் அடுக்குவார்கள்.  ஆனால் நிஜத்தில் அவை கிடைத்திட்டாலும் அவர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள் என்பது தான் நிதர்சனம். சரி இதற்கு எது சரியான தீர்வு என்கிறீர்களா? ‘பிடித்ததை செய்.. பிடித்தமாதிரி வாழ்!’ என்பது தான் பதில்.

எல்லாரும் படிக்கிறார்கள், பத்தாவதில் ஸ்டேட் பர்ஸ்ட் எடுத்து, பன்னிரெண்டாவதில் 199  கட் ஆப் வாங்கி மருத்துவமோ, பொறியியலோ சேர்ந்து அங்கே  எந்நேரமும் படித்து பிறகு நான்கு அல்லது ஐந்து இலக்கங்களில் சம்பளம் வாங்குகிறார்கள், கார் பங்களா என செட்டில் ஆகிறார்கள். வருடம் இரண்டு வெளிநாட்டு டூர் செல்கிறார்கள், ஃபாரின் சரக்கு அடிக்கிறார்கள் என இன்னொரு நபரின் வாழ்க்கையை பார்த்து காப்பி அடித்து வாழ வேண்டாம். உங்களுக்கு ஐரோப்பாவை சுற்றுவதோ, காசியில் திரிவதோ, இமயமலை ஏறுவதோ, முனைவர் பட்டம் வாங்குவதோ, ராணுவத்தில் சேருவதோ, சமூகத்துக்காக உழைப்பதோ எது பிடிக்குமோ அதைச் செய்யுங்கள். அதற்கு தெளிவாக திட்டமிடுங்கள், அதற்கான உழைப்பை கொட்டுங்கள். மனது முழுக்க வேறொரு ஆசையை நிறைத்துக்கொண்டு போலி வாழ்க்கையை வாழ்வதில் எந்த அர்த்தமும் கிடையாது என்பதை உணருங்கள்.  சேஃப்டியாக  வாழ வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு  இன்னொருவரின் விருப்பத்துக்கு உங்கள் உடலை ஊடகமாக தராதீர்கள். அது எந்தக் காலத்திலும் மன நிம்மதியை தராது.

 

Vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

தோற்றவர்களின் கதை - 20

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

தோற்றவர்களின் கதை - 1தோற்றவர்களின் கதை - 2தோற்றவர்களின் கதை - 3தோற்றவர்களின் கதை - 4தோற்றவர்களின் கதை - 5தோற்றவர்களின் கதை - 6தோற்றவர்களின் கதை - 7தோற்றவர்களின் கதை - 8தோற்றவர்களின் கதை - 9தோற்றவர்களின் கதை - 10தோற்றவர்களின் கதை - 11தோற்றவர்களின் கதை - 12தோற்றவர்களின் கதை - 13தோற்றவர்களின் கதை - 14தோற்றவர்களின் கதை - 15தோற்றவர்களின் கதை - 16தோற்றவர்களின் கதை - 17தோற்றவர்களின் கதை - 18தோற்றவர்களின் கதை - 19தோற்றவர்களின் கதை - 20தோற்றவர்களின் கதை - 20

சுசி திருஞானம்தொடர்

ஜி.டி.நாயுடு

'இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்பட்ட மகத்தான கண்டுபிடிப்பாளர் ஜி.டி.நாயுடு. கோவை மாநகரம் இன்றும் தொழில்முனைப்புக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது என்றால், அதற்கான விதைகளைப் போட்டவர்களில் முக்கியமானவர் ஜி.டி.நாயுடு. மோட்டார் வாகன மேம்பாடு, கேமரா, வானொலி, விவசாயம் எனப் பல துறைகளில் பிரமிக்கத்தக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர் அவர்.  

ஆரம்பப் பள்ளி மட்டுமே படித்திருந்த ஜி.டி.நாயுடு, பல தோல்விகளைத் தாண்டி இந்தியாவின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளராகப் பரிணமித்தார். அவரைப் போன்ற ஒரு கண்டுபிடிப்பாளர் மேலை நாடுகளில் பிறந்திருந்தால், அரசுத் தலைவர்களுக்கு இணையான மரியாதையும், ஆதரவும் கிடைத்திருக்கும். ஆனால், தகுதியற்ற நடிகர்களைத் தலையில்வைத்துக் கொண்டாடும் நமது நாட்டில், அவரைப் போன்ற நிஜமான கதாநாயகர்களுக்கு  அவமரியாதையும், புறக்கணிப்பும்தான் பரிசாகக் கிடைத்தது.   

ஜி.டி.நாயுடு என்று அழைக்கப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு, 1893-ம் ஆண்டில் கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் ஒரு விவசாயியின் மகனாகப் பிறந்தார். ஆரம்பப் பள்ளிக்கு சிறிதுகாலமே சென்று வந்தார். எழுதப் படிக்க கற்றுக்கொண்ட பின்னர், அவர் தனக்கு விருப்பமான நூல்களைத் தானே வாங்கிப் படித்து, தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார்.

இளம் வயதில், தன் கிராமத்திலுள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்கள் சிரமப்படுவதைப் பார்த்த அவர், அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தப் போராட்டம் செய்ய வழிகாட்டினார். கோவையிலிருந்த ஒரு தொழிற்சாலையில் சிறிது காலம் வேலைபார்த்தார் ஜி.டி.நாயுடு. அதன்பிறகு, நண்பர்களிடம் கடன் பெற்று, திருப்பூரில் பருத்தித் தொழிலில் இறங்கினார். விரைவில் லட்சாதிபதி ஆனார். பின்னர், தான் சம்பாதித்த பணத்தை பம்பாய்க்குக் கொண்டுசென்று, பெரிய அளவில் பருத்தி வியாபாரம் தொடங்கினார். அங்கிருந்த பருத்தித் தரகர்களுடன் போட்டிபோட முடியாமல் முதல் மொத்தத்தையும் இழந்து, வெறுங்கையுடன் ஊர் திரும்பினார்.

தோல்வியிலும் மனந்தளராத ஜி.டி.நாயுடு, அப்போது லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டேன்ஸ் துரை என்ற வெள்ளைக்காரரிடம் வேலைக்குச் சேர்ந்தார். ஜி.டி.நாயுடுவின் திறமையையும், அர்ப்பணிப்பையும் பார்த்து வியந்த ஸ்டேன்ஸ் துரை, அவரிடம் ஒரு பேருந்தைக் கடனாகக் கொடுத்து உதவினார். தானே முதலாளியாகவும் தொழிலாளியுமாக இருந்து முதன் முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கினார் ஜி.டி.நாயுடு. பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்தைத் தயாரித்து, பயன்படுத்தினார்.

இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்தது, கோவை பீளமேட்டில் உள்ள அவரது நேஷனல் எலெக்ட்ரிக் ஒர்க்ஸ் என்ற தொழிற்சாலைதான். தொழில் துறையில் அவர் படைத்த சாதனைகள் ஏராளம். மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஓர் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அதனால், அவருடைய பேருந்துகளின் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. எஞ்சின் ஓடிக்கொண்டு இருக்கும்போதே அதன் அதிர்வுகளைச் சோதித்து அறிவிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். 

புகைப்படக் கலைஞர்களின் பாராட்டைப் பெற்ற டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க உதவும் ஒரு கருவி, உலகத் தரம் வாய்ந்த முதல் மின்சவரக் கத்தி, வெறும் 70 ரூபாய் விலையில் ஐந்து வால்வுகள் கொண்ட ரேடியோ, ஓட்டுப்பதிவு எந்திரம், மண்ணெண்ணெயால் இயக்கப்படும் காற்றாடி, இரும்புச் சட்டத்தில் உள்ள வெடிப்புகளைக் கண்டறியும் கருவி, விநோத உருவம் காட்டும் கண்ணாடி பிளேட்கள், காசைப் போட்டதும் பாடும் தானியங்கி இயந்திரம் என ஏராளமான கண்டுபிடிப்புகளைச் செய்த மேதை அவர். 

ஜி.டி.நாயுடு போட்டோ கலையிலும் அதிக விருப்பம் உள்ளவர். காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர், காமராஜர்  போன்ற தலைவர்களை அரிய புகைப்படங்களாக அவரே எடுத்தார். 

1936-ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றுக்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. தமிழகத்தில் பிளேடு ஆலையை அமைக்க அவர் முயற்சி எடுத்தார். அதற்குத் தேவையான எஃகை நார்வே நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய அவர் பெரும் பாடுபட்டார். ஆனால், பிரிட்டிஷ் அதிகாரிகள் ஏற்படுத்திய கெடுபிடிகளால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

தனது கண்டுபிடிப்புக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்க ஓர் அமெரிக்க நிறுவனம் முன்வந்தபோதும், பணத்தை வாங்கிக் கொள்ளாமல் தனது கண்டுபிடிப்புக்கான உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார் அவர். ‘‘அமெரிக்க நிறுவனத்திடமிருந்து 10 லட்சம் ரூபாயை வாங்கி,  இங்கிருக்கும் ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் ரூபாய் வரி செலுத்துவதைவிட, அதனை இலவசமாகக் கொடுப்பதே மேல்’’ என்று விளக்கம் கூறினார் ஜி.டி.நாயுடு. 

அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராக ஜி.டி.நாயுடு இருந்தபோதும், அவரது சொத்தில் 90 சதவிகிதத்தை வரியாகச் செலுத்துமாறு பிரிட்டிஷ் அரசு நிர்பந்தம் செய்தது. அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது. கோபமுற்ற  

ஜி.டி.நாயுடு, “நன்றியில்லாத அரசாங்கத்துக்குக் கொடுப்பதைக் காட்டிலும் எதுவுமே செய்யாமல் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன்” என்று சபதமெடுத்தார். 1938-ம் ஆண்டு 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்துகளைக் கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார். 

சுதந்திரத்துக்குப் பிறகும், ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசு ஊக்கம் அளிக்கவில்லை. இந்தியர்கள் யாராயிருந்தாலும் தனது கண்டுபிடிப்புகளை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அவர் பகிரங்க அறிக்கைவிட்டார். இருப்பினும், அவரது உயர்ந்த நோக்கத்தை மத்திய, மாநில அரசுகள் மதிக்கவில்லை. அவரது தொழில் முயற்சிகளுக்குக் கெடுபிடிகள் தொடர்ந்தன. வெறுத்துப்போன ஜி.டி.நாயுடு, 1953-ல் சென்னைக் கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி, பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள்  முன்னிலையில் ரேடியோக்களையும் பல விஞ்ஞான கருவிகளையும் உடைத்து பரபரப்பை உண்டாக்கினார்.

தொழில் மேதையான ஜி.டி.நாயுடு, விவசாயத் துறை ஆராய்ச்சியிலும் வல்லவர். போத்தனூரில் 40 ஏக்கர் பரப்பளவில் விவசாய ஆய்வுப் பண்ணை ஒன்றை அமைத்தார். நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், பொறியியல் மாமேதை  விஸ்வேஸ்வரய்யா உள்பட பல அறிஞர்கள் அங்கு வந்திருந்தனர். பூசணிக்காய் அளவுக்குப் பெரிதாகக் காய்க்கும் பப்பாளி, 1,000 காய்கள் கொண்ட வாழைத்தார்,  விதைகளில்லா நார்த்தங்காய், விதைகளில்லா ஆரஞ்சுப் பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. சோளச்செடிகளுக்கு ஊசிமூலம் மருந்து செலுத்தி, நட்ட சிறிதுகாலத்திலேயே 26 கிளைகளுடனும், 39 கதிர்களுடனும், 18 அடி உயரத்துக்கு வளரச் செய்தார். 11 அடி உயரம் வளர்ந்து காய்த்துக் குலுங்கிய அவரது அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்று ஜெர்மானியர்கள் பெயர் சூட்டி கெளரவித்தனர். ஆயினும், இந்திய அரசாங்கம் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை.

‘‘வெறும் 2,500 ரூபாய்க்கு ஒரு சிறிய காரை தயாரிக்க முடியும்’’ (அந்தக் காலத்தில்!) என்றார் ஜி.டி.நாயுடு. அதற்கான புளூ பிரிண்டை மத்திய அரசுக்கு அனுப்பினார். அது மட்டும் நடந்திருந்தால், இந்திய கார்கள் உலகச் சந்தையைக் கலக்கியிருக்கும். குறைந்த செலவில் குறுகிய நேரத்தில் வீடு கட்டும் திட்டம் ஒன்றையும் நாயுடு தயாரித்தார்.   தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவுக்குத் தேவை என்று, பலமுறை வலியுறுத்தினார். 1945-ல் ஆர்தர் ஹோப் காலேஜ் ஆஃப் டெக்னாலஜியைத் தொடங்கி, 1949-ல் அதை அரசாங்கத்துக்குத் தானமாகத் தந்தார். சாதனைமேல் சாதனைகள் படைத்த ஜி.டி.நாயுடு, தனது 80-வது வயதில் காலமானார். 

ஒரு நாட்டின் எதிர்கால முன்னேற்றம் அந்த நாட்டு இளைஞர்களின் தரத்தைப் பொறுத்தே அமைகிறது என்று ஜி.டி.நாயுடு நம்பினார். ‘‘இன்றுவரை நான் படித்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கையைப் பற்றி மட்டும் உங்களுக்குக் கூற விரும்புகிறேன். விஞ்ஞானம்,பொறியியல் ஆகிய துறைகளைப் பற்றிய 18 ஆயிரம் புத்தகங்களும், உளவியல் தொடர்புடைய 3 ஆயிரம் நூல்களும் எனது நூலக அறையில் இருக்கின்றன. அவற்றை ஆழ்ந்து படித்ததின் மூலம்தான் ஓரளவுக்கு நான் அறிவு பெற்றேன். நீங்களும் இளம் வயதிலேயே அறிவு வேட்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்’’ என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

1953-ம் ஆண்டு மதுரைக் கல்லூரியில் உரையாற்றியபோது அவர் இளைஞர்களுக்குக் கூறினார். ‘‘நம்பிக்கை, தைரியம், நேர்மைக்காகப் போராடும் குணம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். உயர்வான குறிக்கோளும், அறிவுத் தாகமும், அதற்கேற்ற உழைப்பும் இருந்தால் உங்களால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்.’’

(இன்னும் வெல்வோம்)

Vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.