Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

அமைதியுடன் கற்பதற்கு அனுமதியுங்கள்
 
 

article_1472446062-u,9%5B.jpgஒருவர் அறிஞர், மேதாவியாக உருவாகுவதற்கு அவரது ஆசிரியர், பெற்றோர் மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது.

அமைதியான சுற்றுச் சூழலும் முக்கிய காரணமாகும். எதிர்வீட்டுச் சண்டை, சதா ஒலிபெருக்கிகளின் பலத்த ஓசை போன்ற அமைதியற்ற சூழல் மாணவர்களை மட்டுமல்ல, சாதாரணமான சகல பிரஜைகளையும்; திக்குமுக்காட வைக்கின்றது.

சுற்றுப்புறத்தில் அல்லது வெளியே வாசம் செய்யும் சிலர், கல்வி கற்பவர்களைக் கண்டால் பிடிக்காத நபர்களைப் போல் விஷத்தைக் கக்குவார்கள். உதவி புரியாத உபத்திரவவாதிகள் இவர்கள்.

பொறாமையற்ற, பரந்த மனப்பான்மையுடைய நல்ல இதயம் கொண்டோர் வாழும் இடம் தூய்மையுடன் துலங்கும். பிள்ளைகள் அமைதியுடன் கற்பதற்கு அனுமதியுங்கள்.  

 

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தேசிய விளையாட்டு தினம்: பிராட்மேன், ஹிட்லர் பாராட்டிய தயான் சந்த்… #HBDDhyanChand

daya1.jpg

இந்தியா சுதந்திரம் அடையாததற்கு முன்பே இந்தியா சார்பாக வீரர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். அதில் ஹாக்கி விளையாட்டில் பங்கேற்று தன் தலைமையில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்று தந்தவர் தான் இந்த தயான் சந்த். இவரை பலரும் அறிந்திருப்பீர்கள். இவருடைய தலைமையில் இந்தியா ஹாக்கி விளையாடிய காலத்தை இந்திய ஹாக்கியின் பொற்காலம் என்றே கூறுகின்றனர். அவரைப் பற்றி பலரும் அறியாத சில விஷயங்கள் இதோ!

சந்த் என்பது இவரது இயற்பெயர் அல்ல, அவருடைய நன்பர்கள் அவருக்கு அளித்த பெயர். இவர் தன் 16வயதில் இந்தியப் போர்ப்படையில் சேர்ந்தார். பகல் பொழுதில் வேலை, இரவில் விளையாட்டுப் பயிற்சி. நிலவு வரும் வேலையில் பயிற்சி செய்வதால் இவரை இவரது நன்பர்கள் சந்த் என்று அழைத்தனர். சந்த் என்றால் ஹிந்தியில் நிலவு என்று அர்த்தம்.

இவரது காலத்தில் இந்தியா அசைக்க முடியாத அணியாக திகழ்ந்தது. தன் அசாத்தியமான ஹாக்கி பந்தை கையாலும் திறனைக் கண்டு இவரை தீ விஸார்ட்(The Wizard)-மந்திரவாதி என்று அழைத்தனர். இவர் தன்னுடைய சர்வதேச போட்டிகளில் 400 மேற்ப்பட்ட கோல்களை அடித்துள்ளார்.

1928ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் சந்த் 14 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்தியா அந்த ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற செய்தியை ஒரு நாளிதல் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டது “This is not a game of Hockey, but magic. Dhyan Chand is, in fact the magician of Hockey”. இதன் தமிழ் அர்த்தம் “இது ஹாக்கி விளையாட்டல்ல, மாயாஜாலம். தயான் சந்த் இந்த ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி”. 

1932ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அமெரிக்காவை 24-1 மற்றும் ஜப்பானை 11-1 என்று வீழ்த்தியது. இதில் தயான் சந்த் 12 கோல்கள் மற்றும் அவருடைய சகோதரர் ரூப் சிங் 13 கோல்கள் அடித்தனர். உலகம் இவர்களை “ஹாக்கி இரட்டையர்கள்” என்று அழைத்தது.

d1sds.jpg

 

இவர் இவ்வளவு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருந்தாலும் சந்த்தை பொருத்தவரையில் எது சிறந்த போட்டி என்று கேட்டால் கல்கத்தா கஸ்டம்ஸ் மற்றும் ஜான்சி ஹீரொஸ்-கு இடையே 1933ஆம் ஆண்டு நடந்த பெய்டன் கோப்பை இருதிப் போட்டியே என்று அவரே கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “அந்த நாட்களில் கல்கத்தா அணி மிகப் பெரிய அணி. ஷௌகட் அலி, ஆசாத் அலி, கிலௌட் டீஃஹோல்ட்ஸ், சீமன், மொசின் போன்ற பெரிய வீரர்கள் இருந்தார்கள். எங்கள் அணி மிகவும் இளம் அணி. ரூப் சிங், இஷ்மாயில் தவிர சிறந்த வீரர்கள் யாரும் இல்லை. ஆனால் எங்கள் அணி “செய் அல்லது செத்து மடி” என்ற மனப்பான்மை கொண்ட வீரர்கள் இருந்தார்கள். இது ஒரு பெரிய ஆட்டம், திருப்பங்கள் நிறைந்து இருந்தன, ஒரு சிரு வாய்ப்பு எங்களுக்கு வெற்றியை அளித்தது.கல்கட்டா அட்டம் சிறப்பு, எங்களுடைய கோல்கள் அவர்களுடைய கருனையில் கிடைத்தது. திடீரென நான் பந்தை கொண்டு உள்ளே சென்றேன். பந்தை இஷ்மாயிலுக்கு அடித்தேன். அவர் ஜெஸ்ஸி ஓவென்ஸ் வேகத்தில் சென்றார். ஒரு சிரு குழப்பம் எதிர் அணியில். அதை தனக்கு சாதகமாக மாற்றிய இஷ்மாயில் கோல் அடித்தார். எங்கள் அணி வெற்றி பெற்றது” என்று கூறினார்.

1935ஆம் ஆண்டுஆஸ்திரேலியாவின் ஒரு தலைசிறந்த கிரிக்கட் வீரர் டான் பிராட்மன் சந்த்-ஐ அடிலைடு மைதானத்தில் சந்தித்தார். அப்போது சந்த்-ஐ அவர் “இவர் கிரிக்கட்டில் ரன்கள் சேர்ப்பது போல ஹாக்கியில் கோல்கள் அடிக்கிறார்” என்று புகழாரம் சுட்டினார்.

ஹிட்லர் கண்டு வியந்த மனிதர் தான் தயான் சந்த். நாம் அனைவரும் ஹிட்லரை கண்டு வியந்திருப்பொம்,ஆனால் ஹிட்லரே தயான் சந்த்-ஐ கண்டு வியந்துள்ளார். அது 1936ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக். இறுதிப் போட்டியில் ஜெர்மனியுடன் மோதியது, இந்தியா. ஆவலுடன் இறுதிப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார் ஹிட்லர். இந்தியா வெற்றி பெற்றது. தயன் சந்த் அருமையாக விளையாடினார். தயான் சந்த்-இன் ஆட்டத்தை கண்டு வியந்த ஹிட்லர் அவருக்கு மேஜர் பதவி, ஜெர்மனி நாட்டுரிமை, மற்றும் பல சலுகைகளை அளித்தார். அவர் நினைத்திருந்தால் ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் பணிவாக மறுத்துவிட்டார்.

na1.jpg

 

கோல்கள் பல குவித்த தயான் சந்த்-இன் சுயசரிதையான “கோல்!” என்ற புத்தகத்தை 1952ஆம் ஆண்டு மெட்ராஸில்( தற்போதைய சென்னை) ஸ்போர்ட்ஸ் & பாஸ்டைம் வெளியிட்டது.

ஒருமுறை சந்தின் ஹாக்கி மட்டையில் காந்தம் உள்ளதா என்று உடைத்துப் பார்த்தனர் அதிகாரிகள். அதற்கு பதில் கூறும் விதமாக அடித்த ஆட்டத்தில் ஒரு கத்தடியை கொண்டு ஹாக்கி விளையாடினார். அதிலும் கோல்கள் அடித்தார்.
தயான் சந்த் 3ஆம் அக்டோபர் 1979ஆம் ஆண்டு இறந்து போனார். ஆனால் அவர் இறந்த பிறகு கூட இன்றைய வரைக்கும் ஹாக்கியில் ஒரு ஜாம்பவானாகவே திகழ்கிறார். மேலும் இவரது பிறந்தநாளை தேசிய விளையாட்டு தினமாக அறிவித்தது இந்திய அரசு. மேலும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, துரோனாச்சாரியா விருது மற்றும் பத்ம புஷன் விருது ஆகிய விருதுகள் வழங்கி சிறப்பித்துள்ளது.

vikatan

  • தொடங்கியவர்

திங்கட்கிழமையை உற்சாகமாகத் துவக்க உதவும் 4 GIF-கள்..! #MondayMotivation

இன்று திங்கள் கிழமை. நாம் உச்சபட்ச உற்சாகத்துடன் வேலையை துவங்க வேண்டிய நாள். இந்த நான்கு விஷயங்களை மனதுக்குள் சொல்லிக்கொண்டு பின்னர் வேலையை தொடங்குங்கள்.

1. நான் எந்தவொரு வேலையையும் சிறப்பாகச் செய்வேன் :- எந்தவொரு வேலையும் உயர்ந்ததோ, தாழந்ததோ கிடையாது. செய்யும் தொழிலே தெய்வம் என்பதால், நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அதை சிறப்பாகச் செய்யும்போது நீங்கள் வாழ்வில் வளர்ச்சியடைவதை யாராலும் தடுக்க முடியாது. இப்போதைக்கு உங்களை விட இன்னொருவர் உங்களது வேலையை சிறப்பாகச் செய்துவிட முடியாது. அதே சமயம், நீங்கள் இன்னும் சிறப்பாக வேலையைச் செய்யக் கூடியவர். எனவே உங்களது பெஸ்ட்டை நீங்கள் தான் வெளிக் கொணர வேண்டும். nothing is impossible - man

 

shia labeouf motivation just do it

2. எல்லாமே சாத்தியம் :- உங்கள் மீது மட்டுமே வேலைச் சுமை இறக்கி வைக்கப்படுகிறது என நினைக்காதீர்கள். பனிச்சுமை என்பது சில சமயங்களில் தவிர்க்க முடியாது. அதற்காக சோர்ந்துவிடாதீர்கள். உங்களுக்கு எந்தவொரு சோதனை வந்தாலும் அதனை சாதனையாக மாற்றும் திறன் இருக்கிறது. உங்களது திறனை உலகுகுக்காட்டும் வாய்ப்பாக இதனை பாருங்கள். எல்லாமே சாத்தியம் என்பது மட்டும் உங்களது மனதில் பதிந்துவிட்டால் இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரமே.you are doing a great job very great job - lady

Veep HBO veep motivation selina meyer julia louis-dreyfus

 

 

3. முயற்சியை கைவிடாதீர்கள்:- எல்லா ஜாம்பவான்களும் அவரவரது வேலைகளில் பல்வேறு சாவல்களை சந்தித்து தான் வெற்றிபெற்றிருக்கிறார்கள். நீங்கள் உங்களது வேலையை மிகச்சிறப்பாகச் செய்யும் போது உங்கள் மீது பலர் கல்லெறியலாம். ஆனால் நீங்கள் அதற்கெல்லாம் சோர்ந்து  விடக்கூடாது. உங்களது முயற்சியை நீங்கள் தொடர வேண்டும். ஏனெனில் உங்களுக்காகத் தான் வெற்றி தேவதை மலை உச்சியில் காத்திருக்கிறாள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். don't give up - bike

Red Bull fail work crash motivation

 

 

 

4. கனவு காணுங்கள் : - அப்துல்கலாம் சொன்னது தான். கொஞ்சம் டெம்பிளேட்டாக இருந்தாலும் இது தான் முக்கியம். கனவு காண்பதை எப்போதும் கைவிடாதீர்கள். டெஸ்லாவுக்கோ, எடிசனுக்கோ மின்சாரம் என்பது சாத்தியம் என தோன்றியிருக்காவிட்டால் இந்நேரம் நமக்கு விளக்கு வெளிச்சமே இருந்திருக்காது. கம்பியில்லா மொபைல் சாத்தியமில்லை என விஞ்ஞானிகள் நினைத்திருந்தால் இந்நேரம் மொபைலில் நீங்கள் இந்த கட்டுரையை படித்துக்கொண்டிருக்க முடியாது. எனவே அவுட் ஆஃப் தி பாக்ஸ் யோசியுங்கள். உங்களது கற்பனைச் சிறகுக்கு சுதந்திரம் கொடுங்கள்.உங்கள் கனவு தானாக அதுவே நனவாகாது. நீங்கள் தான் உழைக்க வேண்டும். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும் அது சாத்தியப்படும். ஏனெனில் நீங்கள் ஒரு வாழும் லெஜெண்ட் அல்லவா.

motivation

 

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆகஸ்ட் 29: பாப் உலகின் மன்னன் "எம்.ஜெ" மைக்கேல் ஜாக்சன் பிறந்த தின சிறப்பு பகிர்வு..
14102291_1214337795291675_59147809516302

 

"தன்னுடைய நடனத்தாலும் இசையாலும் 40 வருடங்களுக்கு மேல் இந்த உலகையே கட்டிவைத்திருந்த "மைக்கேல் ஜாக்சன்" பிறந்த தினம் இன்று."

"நம்ம ஊர்ல துருதுருன்னு இருக்க பசங்களையோ, கால் ஒரு இடத்துல நிக்காம ஆடுற பசங்களப் பாத்து எல்லாரும் கேட்குற ஒரே கேள்வி..இது தான்.."மனசுல என்ன பெரிய மைக்கேல் ஜாக்சன்னு நினைப்போ?". இந்த மாதிரி பேச்சுகளைத் கேட்டிராமல் எந்த ஒரு நடன கலைஞர்களும் தன்னுடைய லட்சியத்தை அடைந்திருக்க மாட்டார்கள். நடனம் மீது காதல் கொண்டிருக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் இவர் நிச்சயம் ரோல் மாடலை இருந்திருப்பார். பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்டவர்.

'மைக்கேல் ஜோசப் ஜாக்சன்' என்ற இயற் பெயரை விட "கிங் அஃப் பாப்" (பாப் இசையின் மன்னர்) என்றும் "எம்.ஜெ" என்றும் உலகில் உள்ள அனைத்து ரசிகர்களாலும் செல்லமாக அழைக்கப்பட்டார். தன்னுடைய திறமைக்கு எந்த அளவு முக்கியத்துவம் தந்தாரோ, அந்த அளவிற்கு தன்னுடைய தோற்றத்துக்கும் முக்கியத்துவம் தந்தவர். ஜாக்சன் உடுத்தும் உடைகளுக்கும்,அவரது தொப்பிக்கும் ஒரு தனி ரசிகர் கூட்டமும் உண்டு.

தன் சகோதரர்களுடன் சேர்ந்து ஜாக்சன்-5 என்ற பாண்டு இசைக்குழுவில் பணியாற்றினார். 'அப்பல்லோ' தியேட்டரில் ‘ஜாக்சன் 5’ குழுவின் முதல் ஆல்பத்தை அந்நாளில் மிகவும் பிரபலமான 'டயானா ராஸ்' எனும் பாடகி வெளியிட்டார். பின்னர், டயனா ராஸ் மைக்கேலுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்.இந்த நிகழ்ச்சியே ஜாக்சனின் இசைப்பயணத்துக்கு திருப்பு முனையாக அமைந்தது. அதன் பின் ஜாக்சன் உலகப் புகழ் பெற்ற பாடகராக மாறினார். ஒன்பது வயதிலேயே ஜாக்சன் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.

தன்னுடைய தீவிரமான உழைப்பாலும், இசையின் மீது கொண்ட காதலாலும் 80-களில் புகழின் உச்சியில் இருந்தார். 1982-ல் வெளிவந்தக் ஜாக்சனின் 'திரில்லர்' அல்பம் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசை ஆல்பங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இன்று வரை இருக்கிறது. பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த 'பாப்' புதிய நடனத்தில் அவர் புதிய புரட்சியே செய்து காட்டினார். ஜாக்சன் படைத்த 'ரோபாட், மூன்வாக்' போன்ற நடன வகைகளும் இவரால் பிரபலமானது.

இவரது, நடனத்தாலும் இசையாலும் பல இசை வகைகள் இந்த உலகத்தையே ஆடவைத்தது. பல சமூக சேவைகளுக்கு உலக முழுவதிலும் கச்சேரிகளை நடத்தி நிதியுதவியும் செய்துவந்தார். "காட் டு தி தேர், ஆப் தி வால், திரில்லர், பேட், டேஞ்சரஸ், ஹிஸ்டரி" போன்ற இவரது ஆல்பங்கள் அனைத்தும் உலகம் முழுதும் பெரும் வரவேற்பை பெற்றன.

"திரில்லர்" இசை ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை ‌பெற்றது. ஒட்டு மொத்த உலகத்தையும் ஜாக்சனை திரும்பி பார்க்க வைத்தது இந்த ஆல்பம். பல கிராமி விருதுகளையும், அமெரிக்க இசை விருதுகளையும் வாங்கியுள்ளார் ஜாக்சன் .கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் வாங்கியுள்ளார்.75 கோடி ஆல்பங்கள் விற்றதற்காகவும், 13 கிராமி விருதுகள் பெற்றும் இரண்டு முறை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார் மைக்கேல் ஜாக்சன். ‘ப்ளாக் அண்ட் ஒய்ட்’ என்ற விடியோ ஒரே நேரத்தில் 27 தேசங்களில் ஒளிபரப்பப்பட்டது. 50 கோடி பார்வையாளர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தார்கள்.இன்றுவரை இதுவே உலக அளவில் அதிகப் பார்வையாளர்கள் பார்த்த நிகழ்ச்சியாகும். இது அத்தனையும் ஜாக்சனின் சில சாதனைகள் தான். தன்னுடைய திறமையின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் 'மைக்கேல் ஜாக்சன்' எனும் ஒரு சரித்திரம் தூண்டுகோளாய் எப்போதும் அமைந்திருக்கும்.

தன்னுடைய நடனத்தாலும் இசையாலும் 40 வருடங்களுக்கு மேல் இந்த உலகையே கட்டிவைத்திருந்த "மைக்கேல் ஜாக்சன்" பிறந்த தினம் இன்று.

vikatan

14141905_1114704695244890_35843073303019

  • தொடங்கியவர்

ஒலிம்பிக் போட்டியின்போது வரையப்பட்டது; கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது 560 அடி அகல சுவர் ஓவியம்

 

 
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் வரையப்பட்டுள்ள மிக நீளமான சுவர் ஓவியத்தை பார்த்துக்கொண்டே செல்லும் பொதுமக்கள். கோப்பு படம்: கெட்டி இமேஜஸ்
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் வரையப்பட்டுள்ள மிக நீளமான சுவர் ஓவியத்தை பார்த்துக்கொண்டே செல்லும் பொதுமக்கள். கோப்பு படம்: கெட்டி இமேஜஸ்

பிரேசிலில் ஒலிம்பிக் போட்டிகளின் போது 560 அடி அகலம் கொண்ட சுவரில் வரையப்பட்ட ஓவியம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

‘எட்னியாஸ்’ என்று அழைக்கப் படும் இந்த ஓவியம், ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள ஒலிம்பிக் நெடுஞ்சாலையில் உள்ள கை விடப்பட்ட நிலையில் உள்ள ஒரு கிடங்கின் சுவர் மீது வரையப் பட்டது. இந்த ஓவியத்தை வரைய பிரேசில் நாட்டைச் சேர்ந்த எடுவர்டோ கோப்ரா தலைமை யிலான குழுவினர் 45 நாட்கள் எடுத்துக்கொண்டனர்.

ஒலிம்பிக் சின்னத்தில் உள்ள 5 வளையங்களைக் குறிக்கும் வகையில், பல்வேறு கண்டங் களைச் சேர்ந்த 5 பழங்குடியின மக்களின் முகங்களை பிரதிபலிக் கும் வகையில் தெளிப்பு பெயின்ட் (ஸ்பிரே பெயின்ட்) மூலம் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.

குறிப்பாக, நியூகினியாவின் ஹுலி, எத்தியோப்பியாவின் முர்சி, தாய்லாந்தின் கயின், ஐரோப்பிய யூனியனின் சுபி மற்றும் அமெரிக்காவின் தபஜோஸ் ஆகிய 5 இனத்தவர்களின் ஓவியம்தான் சுவரில் வரையப்பட்டுள்ளன.

51 அடி உயரம் 560 அடி அகலம் கொண்ட சுவரில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியம் 3 கி.மீ. தூரம் வரை நீள்கிறது. இந்த ஓவியத்தை வரைய, 180 பக்கெட் அக்ரிலிக் பெயின்ட், 2,800 ஸ்பிரே பெயின்ட் கேன்கள் மற்றும் 7 ஹைட்ராலிக் லிப்ட்கள் பயன்படுத்தப்பட்டன.

“எந்த கண்டத்தைச் சேர்ந்தவ ராக இருந்தாலும் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த ஓவியத்தை வரைந்தேன்” என்கிறார் கோப்ரா.

tamil.thehindu.

  • தொடங்கியவர்

முடியாததென்ற ஒன்று இல்லை! - ஊக்கம் தரும் ஓர் உண்மை வரலாறு! #MustRead #MondayMotivation

Karoly%20young.jpg

இவர் பெயர் கரோலி டக்கா(க்)ஸ். Karoly Takacs.

புடாபெஸ்டில் பிறந்தவர். ஹங்கேரி ராணுவத்தில் சார்ஜெண்டாக பணியாற்றிவந்தார். 

rsz_karoly%20right.jpg

பிஸ்டல் ஷூட்டிங்கில், இவர் அத்தனை பிரபலம். ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பிஸ்டல் ஷூட்டிங்கில் மெடல் வெல்வதே லட்சியமாக வைத்திருந்தார்.

karoly%20hungary.jpg

உலகத் தரம் வாய்ந்த பிஸ்டல் ஷூட்டராக இருந்த இவர், 1936ல் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியவில்லை. சார்ஜெண்ட்கள் கலந்து கொள்ளக்கூடாது என்ற விதி காரணமாக பங்கேற்க இயலவில்லை. அதன்பிறகு அந்த விதி தளர்த்தப்பட்டது. 1940ல் டோக்கியோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் முனைப்புடன் தீவிர பயிற்சிகளில் ஈடுபடுகிறார்.

ஆனால்....  

Great-War_2847980b.jpg

1938.. ஒரு ராணுவப் பயிற்சியின்போது, வெடிகுண்டு வெடித்து இவரது வலதுகை பறிபோகிறது.

ஒரு மாதம் மருத்துவமனையில். பேரிழப்பு. வெளியே வருகிறார். அதன்பிறகு சிலகாலம் யார் கண்ணிலும் படவில்லை.

main_900.jpg

1939. ஹங்கேரியன் நேஷனல் பிஸ்டல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும் இடத்துக்குச் செல்கிறார். நண்பர்கள் அனைவரும் கட்டியணைத்துக் கொள்கின்றனர். வலது கை இழந்ததற்கு வருத்தத்தையும், வாழ்த்த வந்ததற்கு நன்றியையும் சொல்லிக் கொண்டிருந்தனர் நண்பர்கள். இவர் தீர்க்கமான குரலில் சொல்கிறார். 

நான் வாழ்த்த வரவில்லை. உங்களோடு போட்டிபோட வந்தேன்!

அப்போதுதான் அவர்களுக்குத் தெரிகிறது. யாருக்கும் தெரியாமல்.. வருடம் முழுவதும் இடதுகையில் ஷூட் செய்யப் பயிற்சி செய்துகொண்டிருந்திருக்கிறார் என்பது.

karoli_b_160616.jpg

நடக்கிறது போட்டி. இடது கையால் ஷூட் செய்து போட்டியிடுகிறார் கரோலி. வெற்றி பெறுகிறார். ஆம்..  இழந்த கையைப் பற்றி மறந்து.. இருந்த கையால் பயிற்சி பெற்று அந்த சாம்பியன்ஷிப்பை வென்றார்.

ஒலிம்பிக் கனவு? அதை அணையாமல் அப்படியே வைத்திருந்தார். 1940 ஒலிம்பிக்கில் போட்டியிட நினைக்கிறார்.

மறுபடி ஒரு தடை.. ஆம்..

WW%202%20two.jpg

இரண்டாம் உலகப்போர் காரணமாக 1940 ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை. தளரவில்லை. 1944ல் நடைபெறும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வோம் என்று பயிற்சியைத் தொடர்கிறார். ம்ஹும். 1944 ஒலிம்பிக்கும் நடைபெறவில்லை.

அடுத்த ஒலிம்பிக் 1948தான்.

olympic.jpg

1938, தனக்கு 28 வயதிருக்கும்போது ஆரம்பித்த கனவு. 1948-ல் 38 வயது. புதிய புதிய போட்டியாளர்கள். இளம் போட்டியாளர்கள். என்ன செய்யலாம் என்ற கேள்வியே இல்லை கரோலிக்கு. அடுத்த நான்கு வருடங்களும் விடாமல் பயிற்சி மேற்கொள்கிறார். வருகிற இளைஞர்களுக்குத் தான் எந்த விதத்திலும் குறைந்துவிடக்கூடாது என்று முனைப்போடு பயிற்சி மேற்கொள்கிறார்.

1948 ஒலிம்பிக் லண்டனில் நடைபெறுகிறது. 

 

 OlympicModernPentathlonAtBisleyForPistol

உலகின் மிகச்சிறந்த வீரர்கள் எல்லாம் கலந்து கொண்ட அந்தப் போட்டியில், ஒரே கை.. அதுவும் இடது கையால் ஷூட்டிங் செய்கிறார் கரோலி டக்காக்ஸ். அந்தப்போட்டியில் அர்ஜெண்டினாவின் கார்லோஸ் என்ரிக்யூவும் களத்தில் இருக்கிறார். கார்லோஸ் உலக நம்பர் ஒன் சாம்பியன்.  கார்லோஸை இவரால் ஜெயிப்பது கடினம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  போட்டி முடிகிறது. வெற்றியாளரை அறிவிக்கிறார்கள். 

195%20Shooting%20Result.jpg

ஆம். புள்ளிப்பட்டியலில் முதலிடம். கரோலி 25 மீட்டர் ராபிட் ஃபயர் பிஸ்டல் ஷூட்டில் வெல்கிறார். தங்கம்!

உலகே திரும்பிப் பார்க்கிறது. அதோடும் விடவில்லை. அவர்.. அடுத்த 1952-ல் ஃபின்லாந்தின் ஹெல்சின்கியில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் கலந்து கொள்கிறார். போட்டி போடுகிறார். தங்கம் வெல்கிறார். ஆம்.. தங்கம்!!

Karoly%20t.jpg

தொடர்ந்து அந்தப் பிரிவில் இரண்டு முறை தங்கம் வென்றவர் என்ற சாதனையைச் செய்கிறார் கரோலி.

அதற்குப்பிறகும் பல போட்டிகளில் கலந்து கொள்கிறார்.

800px-Tak%C3%A1cs_K%C3%A1roly_preparing_

 

olympic%20the%20man%21.jpg 

 

இப்ப சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்... என்னால இது முடியல.. அது முடியல-ன்னு... உங்களுக்கு எதாவது புகார்கள் இருக்கிறதா?

vikatan

  • தொடங்கியவர்

வீட்டை தாவரவியல் பூங்காவாக மாற்றிய மாடலிங் பெண்!

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்... இயற்கையை நேசிக்கவேண்டும் என்று மேடைக்கு மேடை பேசுபவர்களைப் பார்த்திருப்போம். இதில் எத்தனைப் பேர் சொன்னதைக் கடைப்பிடித்துவருகிறார்கள் என்று நம்மால் சொல்லமுடியாது. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த 26 வயது சம்மர் ரேய்னே ஓக்ஸ் (Summer Rayne Oakes) எனும் பெண் புதிய முயற்சியைச் செய்திருக்கிறார்.  மாடலிங் செய்துவரும் இவர் மாடி தோட்டம் போடுவதுபோல வீட்டுக்குளேயே தோட்டத்தை உருவாக்கலாம் என்று நிரூபித்துக்காட்டியுள்ளார்.

 

1.jpg

2.jpg

4.jpg

7.jpg

8.jpg

10.jpg

11.jpg

காடுகளை அழித்து கட்டடங்களைக் கட்டிவரும் இந்தக் காலத்தில் ரேன் ஓக்ஸ் தன் வீட்டையே மினி காடாக மாற்றியிருக்கிறார். வீட்டின் உள்ளே செடி வளர்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டால் ஒன்றிரண்டு செடிகளை வளர்ப்போம். ஆனால் இவர் தன் வீட்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தாவரங்களை வளர்த்து, பராமரித்துவருகிறார். காட்டிற்குள் சென்றால் மூலிகை வாசனை வருவதுபோல இவர் வீட்டின் உள்ளே நுழைந்தாலே மூலிகை வாசனை மூக்கைத்துளைக்கும். படுக்கை அறைகள், சமையல் அறை, வராண்டா, பால்கனி என பாத்ரூமைக் கூட விட்டுவைக்கவில்லை எங்குப் பார்த்தாலும் செடி, கொடிகளோடு வீடு நிரம்பி இருக்கும்.

நியூயார்க் நகரைச் சேர்ந்த ரேன் ஓக்ஸ் சுற்றுச்சூழல் பற்றிய பட்டப் படிப்பை முடித்து, அதன் தொடர்பான துறையிலேயே வேலையைச் செய்துவந்தார். 14-வது வயதில் இருந்தே மாடலிங்கில் ஆர்வம் காட்டிவருவதால், வேலையை விட்டுவிட்டு முழு கவனமும் மாடலிங்கில் செலுத்திவருகிறார் ரேன் ஓக்ஸ். தான் எப்படி இருந்தாலும் சுற்றுச்சூழலை நேசிப்பதை விட்டுவிட வில்லை. சென்ற வருடம்தான் வாங்கிய அப்பார்ட்மெண்ட் வீட்டை, குட்டி தாவரவியல் பூங்காவாக மாற்றி, அக்கம் பக்கத்தினரை ஆச்சர்யப்பட வைத்துள்ளார். இதில் மூலிகை, காய்கறிகள், பழங்கள் எனப் பலவிதமான தாவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

உங்கள் அழகின் ரகசியம் என்னவென்று கேட்டால், வீட்டில் வளர்க்கும் ஃப்ரெஷ் ஆன காய்கறிகளும், பழங்களும்தான் காரணம் என்கிறார். தான் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தினமும் மூன்று மணிநேரம் வீட்டில் உள்ள செடிகளைப் பராமரிக்க நேரம் ஒதுக்கி விடுகிறார். நாமும் வீட்டில் வளர்த்த ஃப்ரெஷ் காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொண்டால் ரேய்னே ஓக்ஸ் போல அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கமுடியும்.

இந்த ஹை டெக் விவசாயிக்கு ஒரு சல்யூட் போடுவோமா?!

vikatan

  • தொடங்கியவர்

 

ஹவாய் எரிமலையில் செவ்வாய் அனுபவம் - காணொளி

செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை அனுபவம் எப்படியிருக்கும் என்று அறிவதற்கான வழமைக்கு மாறான ஒரு பரிசோதனையை விஞ்ஞானிகள் குழு ஒன்று முடித்திருக்கிறது.

  • தொடங்கியவர்

எந்திரி ராசாத்தி!

 

ம்மில் பலருக்கும் அலாரம் வைத்துவிட்டு, குறிப்பிட்ட நேரம் தாண்டியும் அசந்து தூங்கிவிடுகிற பழக்கம் உண்டு. இவர்களைப் போன்றவர்களுக்காகவே சில புதுவிதமான அலாரம்கள் சந்தைக்கு வந்திருக்கின்றன.

நேரத்தை ஓடிப்பிடிங்க!

p12.jpg

இந்தியரான கெளரி நந்தா என்ற பெண்மணி வடிவமைத்த கடிகாரம் தான் ‘கிளாக்கி'. ஸ்நூஸ் பட்டனை மணிக்கனக்கான ­­  நேரத்துக்கு இஷ்டத்துக்குத் தட்டி சரியான நேரத்தில் எழ முடியவில்லை என நொந்து கொண்டவர்களுக்கானது இது. இந்தக் கடிகாரத்தில் ஒருமுறை ஸ்நூஸ் செய்யலாம். அடுத்த முறை எழுந்திருக்காவிட்டால் இதன் இருபுறங்களிலும் இருக்கும் சக்கரம் சுழல ஆரம்பித்து, அறையின் ஏதாவது ஒரு மூலையில் ஓடி ஒளிந்துகொள்ளும். கடிகாரத்தைக் கண்டுபிடித்து ஸ்நூஸ் பட்டனைத் தட்டும்வரையில் அலாரம் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும். மேலிருந்து கீழே விழுந்தாலும் உடைந்துவிடாத வகையில் இந்தக் கடிகாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேத்து போட்டிருந்த சட்டையைத் தேடுற ஆளுங்களுக்கு இது கண்டிப்பா செட் ஆகாது பாஸ்.


இது ‘வொர்க் அவுட்’ ஆகும்!

p12a.jpg

உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நினைப்பவர் களுக்கான அலாரம் இது. காலையில் எழ நினைக்கும் நேரத்தை செட் செய்துவிட்டால், அலாரம் அடிக்கும். இதில் என்ன புதுமைனு கேட்கிறீர்களா? அங்கேதான் விஷயமே! மற்ற கடிகாரங்களைப் போல இதில் எளிதில் ஸ்நூஸ் செய்துவிட்டு உறங்கிவிட முடியாது. டம்பெல் போன்றிருக்கும் இந்தக் கடிகாரத்தை, படுக்கையிலிருந்து எழுந்து 30 தடவை கைப்பயிற்சி செய்தால் மட்டுமே அலாரம் நிற்கும். காலை சரியான நேரத்துக்கு எழுந்த மாதிரியும் ஆச்சு, உடற்பயிற்சி செய்த மாதிரியும் ஆச்சு. கைப்பயிற்சி எண்ணிக்கையை நாமே தேர்வு செய்துகொள்ளலாம் என்பது கூடுதல் வசதி. ‘இனிமே டெய்லி இரண்டு தடவை குளிப்பேன். காலையில் சரியா எக்சர்சைஸ் பண்ணுவேன்’ என்பது போன்ற ஜனவரி 1-ம் தேதி உறுதியெடுக்கும் பார்ட்டிகளுக்கானது இது. ஏய், தப்பிக்கவா பார்க்கற!


நேரம் விலைமதிப்பற்றது பாஸ்!

p12b.jpg

நம்நாட்டு நடைமுறைக்கு கொஞ்சமும் சரிப்பட்டு வராது என்றாலும் இந்தக் கடிகாரத்தின் அடிப்படை சுவாரசியமானது. 'நேரம் பொன் போன்றது' எனப் பொன்மொழி கேள்விப்பட்டிருப்போம். இந்த அலாரம் கடிகாரம் உணர்த்துவது அதைத்தான். உறங்குவதற்கு முன் இதில் பண நோட்டுகளை அடுக்கிவிட வேண்டும். அலாரம் அடிக்கும்போது குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டியும் எழாவிட்டால் இதில் வைக்கப்பட்ட பணமானது ஒவ்வொன்றாகக் கிழிக்கப்படும். பணம் கிழிக்கப்படும் ஓசை கேட்டால் யார்தான் நிம்மதியாக உறங்க முடியும்? இதுதான் இந்த அலாரம் கடிகாரத்தின் கான்செப்ட். சங்கமே அபராதத்துலதான் ஓடிட்டுருக்கு. நடமாடும் அலாரமான அம்மா அருகில் இல்லாதவர்களுக்குதான் இந்தப் பிரச்னையெல்லாம். போங்க தம்பி... போங்க போங்க.


குறி வெச்சு அடிங்க!

p12c.jpg

இந்த ‘லேசர் கன்’ வகை கடிகாரங்களைப் பயன்படுத்தினால் தூக்கத்திலிருந்து எழுவது மிக உறுதி. உறங்கிக்கொண்டிருக்கும்போது லைட் ஆன் செய்தாலே எழுந்துவிடுபவர்கள் பலர். இந்தக் கடிகாரத்தை வடிவமைத்தவர்கள் அதற்கும் ஒரு படி மேலே போயிருக்கிறார்கள். அதாவது குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் அடிக்கும்போது, லேசர் ஒளியைப் பாய்ச்சும் துப்பாக்கியின் மூலம், இலக்கின் மையத்தில் சரியாகக் குறிவைத்து சுட வேண்டும். இல்லாவிடில் அலாரத்தின் ஒளி மொத்த ஊரையே கூட்டிவிடும். நான்லாம் பயங்கரமா தூங்குவேன் பாஸ். இதெல்லாம் வேலைக்கு ஆகாதுனு சொல்றவங்க, இதை மேலும் கடினமாக்க லேசர் துப்பாக்கியை வேறு இடத்தில் வைத்துவிடலாம். இதன் மூலம் அதைத் தேடி எடுப்பதில் தூக்கம் போவது நிச்சயம். பேச்சுலர் ரூமுக்கெல்லாம் இது செட்டாகுமா பாஸ்?!


அதிரடி விரும்பிகளுக்கு மட்டும்!

p12d.jpg

‘பேவ்லாக்’ அலாரம். கடிகாரத்தில் எழுப்பிவிட ஒலியெல்லாம் இல்லை. வாட்ச் போன்று கையில் கட்டிக்கொள்ளக்கூடிய இது மொபைல் அப்ளிகேஷன் மூலமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அலாரத்தை செட் செய்துவிட்டு இதைக் கையில் கட்டிக்கொண்டால் போதும். சரியான நேரத்தில் நாம் எழுந்திருக்க கையில் அதிர்வை ஏற்படுத்தும். இது போதாது என்பவர்கள் `Zap' தேர்ந்தெடுத்தால், கையில் மிதமான எலக்ட்ரிக் ஷாக் அடிக்கும். அந்த அதிர்ச்சியானது நம்மை எப்பேர்பட்ட உறக்கத்தில் இருந்தும் எழுப்பிவிடும் எனக் கூறுகிறார்கள் இதை வடிவமைத்தவர்கள். சாதாரண மனுஷனுக்குதான் ஷாக் அடிக்கும். நரசிம்மாவைத் தொட்டா கரண்ட்டுக்கே ஷாக் அடிக்கும். ஆங்!

vikatan

  • தொடங்கியவர்

 

கடலடியில் காணப்படும் சித்திரங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன?

  • தொடங்கியவர்
Top Model of World 2016 போட்டியில் இலங்கையின் விஸ்னா பெர்னாண்டோ மூன்றாமிடம்
 

1887414054109_1774174796196365_616769581உலகின் சிறந்த மொடல் 2016 ( Top Model of the World 2016 ) அழகுராணி போட்டியில் இலங்கையின் விஸ்னா பெர்னாண்டோ மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

 

ஜேர்மனியின் பிரேமன் நகரில் இப்போட்டி நடை பெற்றது. கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில், பல்கேரியாவைச் சேர்ந்த மார்கா கூப்பர் Top Model of the World 2016 பட்டத்தை வென்றார்.

 

புவர்ட்டோ ரிக்கொவின் பிரான்செஸ்கா டோரா இரண்டாமிடத்தையும் இலங்கையின் விஸ்னா பெர்னாண்டோ 3 ஆம் இடத்தையும் பெற்றனர்.

 

பிரேஸிலின் இமானுவேல் கொஸ்டா 4 ஆம் இடத்தையும் தாய்லாந்தின் அஞ்சனா ஆர்கிளோம் 5 ஆம் இடத்தையும் பெற்றனர்.

 

25 வயதான விஸ்னா பெர்னாண்டோ 2015 தெரண மிஸ் ஸ்ரீலங்கா போட்டி களில் புவி அழகுராணி போட்டிக்கான மிஸ் ஏர்த் ஸ்ரீலங்கா 2015 அழகுராணி யாக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

18874_visna-fernando.jpg

 

18874_Margo-Cooper.jpg

 

18874_Untitled-10.jpg

 

18874_14088532_1776571059290072_33942095

 

18874_14051802_657004757795286_926289580

 

18874_Untitled-1.jpg

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஓகஸ்ட் - 30

 

1791 : இங்­கி­லாந்தின் பண்­டோரா என்ற கடற்­படைக் கப்பல் அவுஸ்­தி­ரே­லி­யாவில் மூழ்­கி­யதில் 4 கைதிகள் உட்­பட 35 பேர் பலி­யா­கினர்.

 

1813 : அமெ­ரிக்கப் பழங்­குடி கிறீக் இனத்­தவர், அல­பாமா மாநி­லத்தில் ஆங்­கி­லேயக் குடி­யே­றிகள் நூற்­றுக்­க­ணக்­கா­னோரைக் கொன்­றனர்.

 

1835 : அவுஸ்­தி­ரே­லி­யாவில் மெல்பேர்ன் நகரம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

798melbourne.jpg1918 : ரஷ்ய போல்ஸ்விக் தலைவர் விளா­டிமிர் லெனின், ஃபான்யா கப்லான் என்­ப­வனால் சுடப்­பட்டு, படு­காயம் அடைந்தார்.

 

1941 : இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் லெனின்­கிராட் மீதான தாக்­குதல் ஆரம்­ப­மா­யிற்று.

 

1945 : பிரித்­தா­னி­ய­ரி­ட­மி­ருந்து ஹொங்­கொங்கை ஜப்பான் கைப்­பற்­றி­யது.

 

1963 : அமெ­ரிக்க, சோவியத் யூனியன் தலை­வர்­க­ளுக்கு இடை­யி­லான நேரடி துரித தொலை­பேசி சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

1974 : குரோ­ஷி­யாவில் இடம்­பெற்ற ரயில் விபத்தில் 153 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1984 : டிஸ்­க­வரி விண்­வெளி ஓடம் தனது முத­லா­வது பய­ணத்தை ஆரம்­பித்­தது.

 

1991 : சோவியத் ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரி­வ­தாக அஸர்­பைஜான் அறி­வித்­தது.

 

1995 : பொஸ்­னிய சேர்­பிய படை­யி­ன­ருக்கு எதி­ராக நேட்டோ படை­யினர் தாக்­கு­தலை ஆரம்­பித்­தனர்.

 

1999 : கிழக்குத் தீமோர் மக்கள் இந்­தோ­னே­ஷி­யா­விலி­ருந்து பிரி­வ­தற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தனர்.

 

2003 : பாரென்ட்ஸ் கடலில் ரஷ்ய நீர்­மூழ்கிக் கப்­ப­லொன்று மூழ்­கி­யதால் 9 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

2013 : பாகிஸ்­தா­னி­லி­ருந்து கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்து சுமார் 131 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கவனச்சிதறலை தவிர்க்கலாம். எப்படி? #MorningMotivation

unnamed%20%281%29.jpg

சமீபத்தில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மின்டன்  ஒற்றையர் பிரிவில் வெள்ளி வென்று சரித்திர சாதனை படைத்திருந்தார் பி.வி சிந்து. அதன் பின்னர் சிந்துவின் பயிற்சியாளர் கொடுத்த ஒரு பேட்டி வைரல் ஹிட் அடித்தது. சிந்துவிடம் இனி அவரது  மொபைல் ஒப்படைத்துவிடுவேன், ஐஸ்க்ரீமும் சாப்பிட அனுமதி உண்டு  எனச்சொல்லியிருந்தார். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கும், மொபைல், ஐஸ்க்ரீமுக்கும் சம்பந்தம் இருக்கிறது. அது தான் கவனச்சிதறல். 

நாம் ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும்போது நிச்சயம் நம்மை நிலைகுலைய வைக்கும் விஷயங்கள் நடக்கும். அந்த விஷயங்களை ஒருவன் எப்படி கையாளுகிறார் என்பதை பொறுத்ததுதான் வெற்றி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் கவனச்சிதறல் என்பது வெவ்வேறாக இருக்கும். எனினும் பொதுவாக தற்போதைய தலைமுறையை  பொறுத்தவரையில் கவனச்சிதறல்களை தடுக்க  மூன்று  விஷயங்களை செய்ய வேண்டும் என்கிறார்கள் மனோத்தத்துவ நிபுணர்கள். 

1. கேட்ஜெட் கவனம்  :- 

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் முதல் அத்தனை  பேரும்  மொபைலுக்கும், சமூக வலைத்தளங்களுக்கும் தான் அடிமையாகிக் கிடக்கிறார்கள். மொபைலை பயன்படுத்தாமல் இருப்பதோ, சமூக வலைத்தளங்களில் அக்கவுண்ட்டை மூடிவிடுவதோ இதற்கு தீர்வு கிடையாது.  எந்த நேரத்தில் எதைச்செய்ய வேண்டும் என தெளிவு இருந்தால் போதுமானது.  காலையில் எழுந்தவுடன் நீங்கள் மொபைலில் தான் கண்விழிக்கிறீர்களா? வாட்ஸப், பேஸ்புக்கில் என்ன நோட்டிபிக்கேஷன் வந்திருக்கிறது என பார்த்துவிட்டுத்தான் படுக்கையை விட்டு எழுகிறீர்களா? நீங்கள் கொஞ்சம் அபாயக்கட்டத்தில் தான் இருக்கிறீர்கள். உங்களது வேலைக்கு  அவசியமின்றி தகவல் தொழில்நுட்பத்தை எல்லை மீறி பயன்படுத்துவது சரியல்ல. நீங்கள்  மொபைல், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றுக்கு அடிமையாகி இருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்.  கேட்ஜெட் சாதனங்களை ஒட்டிக்கொண்டே வாழாமல் இயல்பாக இருக்க பழகுங்கள். மொபைல் மற்றும் சமூக வலைத்தளங்களை அளவாய் பயன்படுத்தும்போது உங்களது பெர்பார்மென்ஸ் உயர்த்துவதை நீங்கள் கண் கூட பார்க்க முடியும். தினமும் எக்கச்சக்க நேரம் உங்களுக்கு கிடைப்பதை நீங்களே உணர முடியும். கருவிகளுடன் உறவாடுவதை விட உங்களுக்கு பிடித்த உறவுகளுடன் நேரம் செலவழியுங்கள்.

உங்களுக்கு ஒரு சவால். 

இன்றில் இருந்து நீங்கள்  தினமும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் தொடர்ந்து பத்து மணி நேரமாவது மொபைலையும், சமூக வலைத்தளங்களையும் பார்ப்பதில்லை என முடிவு செய்துவிடுங்கள். படுக்கைக்கு செல்லும் ஒரு மணி நேரம் முன்னர் மொபைலில் நோண்டுவதை நிறுத்தி விடுங்கள். பின்னர் காலையில் எழுந்து காலை கடன்களை முடிக்கும் வரை அவசர, அவசியமின்றி  மொபைலையே பார்க்காதீர்கள்.

 

2. உணவு :-

உணவுக்கும் மூளைக்கும் நிறைய தொடர்பு உண்டு.  குறைவாகச் சாப்பிட்டாலும் பசி இருக்கும், நிறைவாகச் சாப்பிட்டாலும் வயிறு முழுக்க உணவு இருக்கும். எனவே எப்போதும் அளவாகச் சாப்பிடுங்கள். வார இறுதி நாட்களில், ஓய்வு நேரங்களில் விருப்பம் போல சாப்பிடுங்கள். அஜீரணம் ஏற்படுத்தும், உணவுப் பொருள்களை சாப்பிடுவதை முடிந்தவரை தவிருங்கள். அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளை தொடாதீர்கள். உங்களது உடலுக்கு, வயிறுக்கு உபாதை ஏற்படுத்தாமல் எந்த உணவு செரிக்குமோ அதைச் சாப்பிடுங்கள். நாம் சரியாகச்  சாப்பிடாமல் போனாலோ, அதிகமாகச் சாப்பிட்டாலோ நாம் எந்தவொரு வேலையையும் ஒழுங்காகச் செய்ய முடியாது. இதெல்லாம் சின்ன விஷயம் என நினைத்து கடந்துவிடாதீர்கள். 

 

3. உறக்கம் : -

அளவுக்கு மீறிய உறக்கம், அளவுக்கு குறைவான உறக்கம், முறையற்ற நேரத்தில் உறக்கம் என எல்லாமே தவறு தான். இயற்கையோடு இயைந்தது நமது உடல். இயற்கைக்கு மாறாக நாம் உறங்கும்போது நமது உடலில் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். உடலை போட்டு படுத்தி எடுப்பதை தவிருங்கள்.  இரவு தான் வேலை செய்யப்பிடிக்கும் என்றால்  தவறில்லை, ஆனால் அதற்கு தகுந்தார் போல  மருத்துவர்களை கலந்தாலோசித்து உறங்கும் முறை,  வாழ்வியல் முறை எல்லாவற்றையும் மாற்றிக்கொள்வது அவசியம். ஏ.ஆர்.ரஹ்மான் இரவு நேரத்தில் கம்போஸிங் செய்வார் என்பதால் வலுக்கட்டாயமாக உங்கள் உடலில் உள்ள சர்காடியன் ரிதத்தை மாற்ற முயற்சிக்க வேண்டாம். பொதுவாக  இரவு 9-11 மணிக்குள் உறங்கி காலை 5-7 மணிக்குள் எழுந்திருப்பது நல்லது. உறக்கம் சரியாக இல்லையெனில் உடலில் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல விஷயங்கள் பாதிக்கப்படும், இதனால் மூளை செயல்பாட்டின் திறனும் குறையும். இதனால் எந்தவொரு விஷயத்திலும் முழு கவனத்தை செலுத்த முடியாது. எனவே ஓயாமல் உழைப்பதை விட நன்றாக சாப்பிட்டு, நன்றாக ஓய்வெடுத்து உழையுங்கள். வெற்றிகளை அனுபவியுங்கள்.  

vikatan

  • தொடங்கியவர்

உலகின் மிகப் பெரிய விமானங்கள் இவைதான்..!

90.jpg

நம்மில் பெரும்பாலானோருக்கு விமானம் என்பதே அத்தனை சிலிர்ப்பை கொடுக்க கூடியது. பள்ளி நாட்களில் ஆசிரியர் மும்முரமாக வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது. விமான சத்தம் கேட்டு ஓடிப்போய் பார்த்தவர்கள் நிறைய பேர் இருப்போம். இன்றைய தேதியில் உலகின் மிகப்பெரிய விமானங்கள் எவை என தெரியுமா?

 மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டோனோவ் ஏ என் - 225 மிரியா பற்றியும்  மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர் பஸ்-380 பற்றியும் சில தகவல்கள்.

 

1234.jpg


அன்டனோவ் ஏ.என்225 மிரியா : 

 சோவியத் கூட்டமைப்பில் செயல்பட்டு வந்த அன்டோனோவ் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த வகை விமானங்கள் 1988 முதல் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. சரக்குகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவே இந்த வகையிலான விமானங்கள் வடிவமைக்கப்பட்டன. சோவியத் ராணுவத்திற்கும் பெருமளவில் பயன்பட்டு வந்தது. உலகிலேயே மிகவும் அதிகமான எடை கொண்ட விமானம் இது தான். சரக்குகள் இல்லாமல் இதன் மொத்த எடை 2,85,000 கிலோ கிராம். அன்டோனோவ் ஏ என்225 விமானத்தின் மொத்த நீளம் 275 அடிகள். இதன் உயரம் தோராயமாக 59 அடி . ஒரு விமானத்தில் மொத்தம் ஆறு என்ஜின்கள், 32 சக்கரங்கள் விமானத்தில் உள்ளன. இந்த விமானத்தின் இறக்கைகளின் நீளம் மொத்தம் 290 அடிகள். மிரியா என்பதற்கு உக்ரைன் மொழியில் 'கனவு' என்று அர்த்தம்...! 


ஏர் பஸ் ஏ380 : 

 உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஏர் பஸ் ஏ380. ஏர் பஸ் விமானம் பிரான்ஸ் நாட்டின் ஏர் பஸ் நிறுவன தயாரிப்பாகும். ஏர் பஸ் விமானத்தில் ஒரே நேரத்தில் சுமாராக 600 பயணிகள் பயணிக்க முடியுமாம். மொத்தம் நான்கு என்ஜின்கள் செயல்படுகின்றன.
அதில் இரண்டு இன்ஜின்கள் மட்டுமே விமானம் தரையிறங்கும் பொழுது செயல்பாட்டில் இருக்குமாம். போயிங் ரக விமானங்களுக்கு போட்டியாக தயாரிக்கப்பட்டதே ஏர் பஸ் 380 ரக விமானங்கள். தோராயமாக 580 டன்கள் எடை கொண்டது ஏர் பஸ் விமானம். ஏர் பஸ் விமானங்கள் அதிகபட்சமாக 40,000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டதாகும். சூப்பர் ஜம்போ ரக விமானங்கள் என்றழைக்கப்படும் 
இவற்றை எல்லா ஓடுபாதைகளிலும் தரையிறக்க முடியாது. அதற்காக வடிவமைக்கப்பட்ட விமான ஓடுதளங்களில் மட்டுமே தரையிறக்க முடியும். டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் 
இந்த வகை விமானங்களை தரையிறக்குவதற்கான ஓடுதளங்கள் உள்ளன.

 

வான்வெளியை ஆளும் பெரும் ராசாளிகள் இவை...!    

vikatan

  • தொடங்கியவர்

 

Jaffna Boy

  • தொடங்கியவர்
 
 
Bild zeigt 1 Person , Brille
 

ஆகஸ்ட் 30: அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளரும், தொழிலதிபருமான வாரன் பஃபெட் பிறந்த தினம் இன்று (1930)

பங்கு சந்தையில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் உதாரணமாக கட்டுவது வாரன் பஃபெட்டைதான்.

வாரன் பஃபெட்: 5 முதலீட்டு ரகசியங்கள்!

1 பங்குச் சந்தை முதலீடு, ரியல் எஸ்டேட் மாதிரி!

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் தொகையை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதுபோல நினைத்துக்கொள்ள வேண்டும். ரியல் எஸ்டேட்டில் போடும் பணம் குறுகியகாலத்திலேயே லாபம் சம்பாதித்துத் தரும் என எதிர்பார்க்க மாட்டோம். அதுபோலத்தான் பங்குச் சந்தையும். குறுகியகாலத்தில் சில ஏற்றஇறக்கங்கள் வந்தாலும், நீண்ட காலத்தில் லாபம் தரக்கூடியமாதிரி பார்த்துக்கொள்வது அவசியம்.

2 குறைந்த விலை - வாங்கு; அதிக விலை - விற்றுவிடு!

என் பண்ணை அருகில் இருப்பவர் தினமும் தனது நிலத்தை விற்கப்போவதாகச் சொல்கிறார். சொல்லும் விலை மிகக் குறைவாக இருந்து, என்னிடம் கொஞ்சம் உபரிப் பணம் இருந்தால், உடனே அதை வாங்கிவிடுவேன். அவர் சொல்லும் விலை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தால் என் பண்ணையை விற்றுவிடுவேன். பங்குச் சந்தையிலும் இதைத்தான் செய்ய வேண்டும்.

3 நேர விரயம் தவிர்க்க செய்தி சேனல் ஆஃப்!

பரந்துபட்ட பொருளாதாரம் பற்றிய கருத்துகள், மேக்ரோ பொருளாதாரம், தொழில் மற்றும் பங்குச் சந்தை கணிப்புகளை எப்போதும் கவனித்துக்கொண்டிருப்பதால் நேரம்தான் விரயம் ஆகும்.

இவை உண்மையில் முக்கியம் வாய்ந்த உங்களின் கருத்தை மாற்று வதாக இருக்கும். எனவே, மேக்ரோ செய்தி தொலைக்காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

4 ஊக வணிகம் வேண்டாம்... உற்பத்தி திறனில் கவனம்!

விளையாட்டு மைதானத்தில் கவனம் செலுத்தும் விளையாட்டு வீரர்கள் மட்டும்தான் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். ஸ்கோர் போர்டில் கவனம் செலுத்துபவர்கள் ஒருபோதும் ஜெயிக்க மாட்டார்கள்.

எனவே, முதலீட்டாளர்கள் ஊகத்தின் அடிப்படையில் பங்கின் விலை உயருமா, இல்லை இறங்குமா என்பதைக் கவனிப்பதற்குப் பதில் சொத்தின் எதிர்கால உற்பத்தித் திறனில் கவனம் செலுத்துவது சாலச் சிறந்த யோசனையாக இருக்கும்!

5 உடனடி லாபத்துக்கு உடனே சொல்லுங்க 'நோ’!

உடனடி லாபம் கிடைக்கும் என்று யாராவது உங்களிடம் வாக்குறுதி அளித்தால், உடனடியாக 'நோ’ என்று சொல்லிவிடுங்கள். மதில்மேல் பூனைபோல உட்கார்ந்துகொண்டு, அந்தப் பக்கம் குதிக்கலாமா, இந்தப் பக்கம் குதிக்கலாமா என்று மனத்தை அலைபாயவிடாமல், உறுதியாக இருந்திடுங்கள்.

vikatan

  • தொடங்கியவர்

 

“விளையாட்டாய் சம்பாதிப்பது எப்படி?“ - காணொளி
பார்த்து ரசியுங்கள்.

  • தொடங்கியவர்

14088501_1115873921794634_75355905915515

நடிகை ரிச்சா பலோட்டின் பிறந்த நாள் இன்று
Happy Birthday Richa Pallod

  • தொடங்கியவர்

சிரிப்பு மருத்துவர் கலைவாணர் என்.எஸ்.கே நினைவு தின சிறப்பு பகிர்வு!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவுநாள் இன்று (ஆகஸ்ட் 30). நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர்

டென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும்,கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் சேர்ந்து அதைவிட்டு ஓடியதற்காக காவல் நிலையம் போக வேண்டிய சூழல் எல்லாம் உண்டானது.

nskrishnan.jpg

நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கலைவாணர். அதையும் தன் முதல் படத்திலேயே தானே எழுதிக்கொண்டார். அப்படம் சதி லீலாவதி. பூனா சென்ற பொழுது மதுரம் அவர்களின் நகையை விற்று பணமில்லாமல் இருந்த படக்குழுவினரின் பசியை தீர்த்த என்.எஸ்.கேவுக்கும் அவருக்கும் காதல் பூத்தது. முதல் திருமணத்தை மறைத்துவிட்டார் கலைவாணர். பின் அதைப்பற்றி கேட்டதும் ,”அவனவன் ஆயிரம் பொய் சொல்றான் நான் ஒரு பொய் சொல்லித்தானே கல்யாணம் பண்ணினேன் !” என்றாரே பார்க்கலாம்

திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட அவனுக்கு சோறு போட்டு இவன் என் நாடக கம்பெனி ஆள் என்றவர் என்.எஸ்.கே. இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே துவங்கி வைத்தார்.

அண்ணா காஞ்சியில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவரை எதிர்த்து நின்று மருத்துவரைப்புகழ்ந்து நெடுநேரம் பேசி விட்டு,”இப்படிப்பட்ட மருத்துவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பிவிட்டால் யார் உங்களுக்கு சேவை செய்வார்கள் ? அண்ணாவுக்கு ஓட்டுப்போடுங்கள் !” என்றார் என்.எஸ்.கே.

என்.எஸ்.கே தான் எடுத்த படத்தில் எம்.ஆர்.ராதாவை வில்லனாக போடாமல் போய் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார் செய்துகொண்டிருந்த விஷயம் தெரிந்து என்.எஸ்.கே நேரிலே வந்து ,”ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன் ;உன்னை நான் இப்படி நடி அப்படி நாடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ?அதான் போடலை என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னைச்சுட சொன்னார் ராதா .

என்.எஸ். கே லக்ஷ்மிகாந்தன் வழக்கில் சிறை சென்று மீண்ட பின் நடித்த படங்களிலும் மின்னினார். அதே சமயம் தியாகராஜ பாகவதரால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியவில்லை. சிறை மீண்ட பின் அவருக்கு கலைவாணர் பட்டத்தை பம்மல் சம்பந்த முதலியார் வழங்கினார்

என்.எஸ். கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர். ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம் அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்ட பொழுது அவர் சொன்னபடியே தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள் திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் கலைவாணர். “நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி

நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும். இதில் என்ன தப்பு ? என்று சினிமாவால் மக்கள் பாழ்படுகிறார்கள் என்கிற பெரியாரின் விமர்சனத்துக்கு பதில் சொன்னார்.

அக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதி விட பெரியாரிடம் இது குறித்து கருத்து கேட்டார்கள் .

” தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு ” என்றது வரலாறு

ஒன்றுமே இல்லாமல் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்னர் கலைவாணர் கடைசி சொத்தான வெள்ளி கூஜாவையும் தனது திருமணம் என்று சொன்ன தொழிலாளிக்கு தந்துவிட்டு தான் இறந்து போனார்

14079911_1215224635202991_87609722523446

vikatan

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p35a.jpg

* உலகையே உலுக்கியிருக்கிறது 5 வயது சிறுவன் ஓம்ரான் தாக்னீஷின் புகைப்படம். உள்நாட்டுப் போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் சிரியாவில், கடந்த வாரம் குவாட்ரிஜ் என்ற பகுதியில் நடந்த விமானத் தாக்குதலில் பல கட்டடங்கள் சேதமடைந்து தரைமட்டமாகின. அதில் ஒரு கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன்தான் ஓம்ரான் தாக்னீஷ். தலையில் இருந்து ரத்தம் கொட்ட, அழுகையோ, சத்தமோ இன்றி அமைதியாக வெறித்துப்பார்த்தபடி ஆம்புலன்ஸ் நாற்காலியில் உட்கார்ந்திருந்த அந்தச் சிறுவனின் பார்வை, கொடூர போருக்கு மௌனசாட்சியாகியிருக்கிறது. திருந்துங்க மக்களே!


* உத்தரப்பிரதேசத் தேர்தல் வேலைகள் ஆரம்பித்ததில் இருந்தே காங்கிரஸுக்கு அடிமேல் அடி விழுகிறது. 2014-ம் ஆண்டு தேர்தலில் மோடி வெற்றி, பீகாரில் நிதிஷ்குமார் வெற்றிக்கு ஆலோசகராகச் செயல்பட்ட பிரஷாந்த் கிஷோர்தான் இப்போது காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆலோசகர். அவரின் சாய்ஸ்படிதான் ஷீலா தீட்ஷித் உ.பி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், ஷீலா தீட்ஷித்துக்கு உத்தரப்பிரதேசத் தலைவர்கள் ரெட் ஃபேஸ் காட்ட, அவரும் உடல்நிலைப் பிரச்னையால் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. இதற்கு இடையே சோனியாவுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் சோர்ந்துபோயிருக்கிறது காங்கிரஸ். ராகுல்ஜி... கமான்!


p35b.jpg

* பாலிவுட்டின் பயோபிக் ட்ரெண்ட், இப்போது கேரளாவுக்கும் பரவியிருக்கிறது. ஓவியர் பத்மினியின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது. பெண் ஓவியர்களே இல்லாத 1960-களில் சென்னை கவின்கலைக் கல்லூரியில் படித்து உலகப் புகழ்பெற்ற ஓவியங்களைத் தீட்டிய பத்மினி, தனது 29-வது வயதில் பிரசவிக்கும்போதே இறந்துபோனர். காலம் கடந்தும் போற்றப்பட்டும் பத்மினியின் வாழ்க்கை வரலாற்றில், பத்மினியாக அனுமோல் நடித்திருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வருகிறது. இன்ஸ்பைரிங்!


p35c.jpg

* ஒலிம்பிக் பரபரப்புகளைத் தாண்டி கடந்த வாரம் ஆன்லைனில் ஹிட் அடித்தவர் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி. `கபாலி' பட போஸ்டரில் `ஸ்டைலா... கெத்தா...' ரஜினி உட்கார்ந்தி ருக்கும் அதே போஸில் தோனியும் ஒரு போட்டோ க்ளிக்கி இன்ஸ்டாகிராமில் போட, படம் செம வைரல். `தலைவரைப் போல போஸ் கொடுக்க ட்ரை பண்ணியி ருக்கேன்' என்ற தோனியின் கமென்ட்டுக்கு, `தல... நீயும் தலைவர் ஃபேனா?', `ரஜினி பஸ் டிக்கெட் கலெக்டராக இருந்தவர். நீங்க ட்ரெய்ன் டிக்கெட் கலெக்டர்' என பதில் கமென்ட்டுகள் குவிய, கேப்டன் செம ஹேப்பி. சூப்பர் ஸ்டார்ஸ்!


p35e.jpg

பெண் அரசியல்வாதிகளில் பிரேமலதா விஜயகாந்த், பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இருவருமே செம தோஸ்த்.இருவரின் வீடுமே அருகருகில் இருப்பதால், அடிக்கடி சந்தித்து அரசியல் மேட்டர்களை அப்டேட்டிக் கொள்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல், தொண்டர்களைப் பெருக்க புதுப்புது ஐடியாக்களைப் பிடிப்பதுதான் இருவருக்குமே ஹாபி. நண்பேன்டா!


p35d.jpg

புதிய ஹீரோயின்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில் சல்மான் கான் வேட்டைக்காரர். கத்ரீனா கைஃப், ஹஸல் கீச், சோனாக்‌ஷி சின்ஹா, ஸரீன் கான் வரிசையில் அடுத்ததாக சீன நடிகை ஜூஜூவை நடிக்க அழைத்துவந்திருக்கிறார் சல்மான். கபீர்கான் இயக்கும் `டியூப்லைட்' படத்தில் சல்மானைக் காதலிக்கப்போவது ஜூஜூ. சீனாவின் ஹாட் ஸ்டார். ஹாலிவுட் சீரியல்களிலும் நடித்திருக்கும் ஜூஜூவுக்கு, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள். ஹூவான் யிங்!


* பாலிவுட்டின் லேட்டஸ்ட் ஃப்ளாப் ஸ்டார் ரன்பீர் கபூர். கத்ரீனாவுடனான காதல் தோல்வியால், படப்பிடிப்புகளில் ரன்பீர் சரியாகக் கலந்துகொள்வது இல்லை. `தொடர்தோல்வி களால் துவண்டுபோயிருக்கிறேன். நடிகர்கள் எவ்வளவு பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்கள் என்பது இப்போதுதான் புரிகிறது. என் பெற்றோருக்குப் பிறகு என்னை அதிகமாக ஊக்கம் தந்து உற்சாகப்படுத்தியவர் கத்ரீனா கைஃப். நான் அவரை ரொம்ப மிஸ் பண்றேன்' என ரன்பீர் ஃபீலாகியிருக்கிறார். காதல் வளர்த்தேன்!

vikatan

  • தொடங்கியவர்

பேசும் படங்கள்: இது குரங்கின் மனக்குரல்

 

 
p_2991107f.jpg
 

9_2991092a.JPG

எனக்கு டிரெஸ் எடுக்க 5 நிமிஷம் தான் ஆச்சு.. இவங்க எடுக்க 3 மணி நேரம்.. ஹும்!

8_2991094a.JPG

இன்னும் நல்லா சிரிங்க பாஸ்!

6_2991095a.JPG

தோள் கொடுப்பான் தோழன்னு நான் சொன்னேன்ல!

5_2991096a.JPG

கைதான்... ஃபேன் இல்லாட்டி என்ன? கை தான் மெத்தை மாதிரி இருக்கே!

3_2991097a.JPG

தம்பீ.... பக்கத்துல இருக்க என்னை விட்டுட்டு, போன்ல எதுக்கு குரங்கு படத்தை பாக்கற?

23_2991099a.JPG

காதுகிட்ட வாயை வெச்சு இப்படி ரகசியம் சொல்றது எல்லாருக்கும் வாய்க்காது!

19_2991102a.JPG

உம்ம்மா... என்னா அழகு நானு!

10_2991104a.JPG

இதோ, ஹெல்மெட் வாங்கிட்டு வந்துடறேன்னு போன மனுஷனைக் காணோமே!

tamil.thehindu

  • தொடங்கியவர்

ஜாக் லூயி டேவிட்

 
ஜாக் லூயி டேவிட்
ஜாக் லூயி டேவிட்

உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு ஓவியர்

உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு ஓவியர் ஜாக் லூயி டேவிட் (Jacques Louis David) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் (1748) பிறந்தார். இவர் 9 வயது சிறுவனாக இருந்தபோது, இரும்பு வியாபாரியான தந்தை ஒரு மோதலில் கொல்லப்பட்டார். கட்டிடக் கலை நிபுணர்களான மாமன்களிடம் வளர்ந்தார். அவர்கள் இவரை நன்கு படிக்க வைத்தனர்.

*அம்மா, மாமாக்கள் கூறியபடி, கட்டிடக் கலை பயின்றார். தனிமை விரும்பியான இவருக்குப் படிப்பில் அதிக கவனம் செல்லவில்லை. இவரது ஆர்வம் முழுவதும் ஓவியம் வரைவதில்தான் மையம் கொண்டிருந்தது.

*தூரத்து உறவினரும், ஓவியருமான ஃபிராங்கோயிஸ் பவுச்சரிடம் ஓவியம் பயின்றார். பின்னர், இன்னொரு ஓவியரான ஜோசஃப் மரி வியென்னிடம் சேர்ந்தார். அவர் கூறியபடி, சரித்திரச் சம்பவங்களை ஏராளமாக வரைந்தார்.

*17 வயதில் தொடங்கிய இவரது ஓவியப் பயணம் நாளுக்கு நாள் மெருகேறியது. 6 ஆண்டுகளில் பிரான்ஸின் சிறந்த ஓவியரானார். ஓவியத் துறையில் மிக உயர்ந்ததான ‘பிரிக்ஸ் டி ரோம்’ விருது பெறும் போட்டியில் 3 முறை தோல்வியைத் தழுவி, 4-வது முறை அந்த விருதை வென்றார்.

*பிரெஞ்ச் அகாடமி இயக்குநராகப் பதவி ஏற்கச் சென்ற ஆசிரியருடன் இவரும் ரோம் நகருக்கு சென்றார். அங்குள்ள சிற்பங்கள், உலகப் புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகள் ஆகியவை இவருக்குள் பல புதிய சாளரங்களை திறந்துவிட்டன. ரோமின் அழகிய காட்சிகள், கட்டிடங்களை ஓவியமாக வரைந்தார்.

*பாரிஸ் திரும்பிய பிறகும், ஏராளமான ஓவியங்களை வரைந்தார். அவற்றையும், ஏற்கெனவே ரோமில் வரைந்த ஓவியங்களையும் மக்களின் பார்வைக்கு வைத்தார். அவை மகத்தான வரவேற்பை பெற்றன. 1784-ல் இவர் வரைந்த ‘ஓத் ஆஃப் ஹொராட்டி’ என்ற ஓவியம் பிரான்ஸின் முன்னணி ஓவியராக இவரை உயர்த்தியது. ஓவியம் கற்க இவரிடம் ஏராளமான மாணவர்கள் சேர்ந்தனர்.

*கடமை, தேசப்பற்று, விடுதலைப் போராட்டம் ஆகியவற்றை கருவாகக் கொண்டு இவர் தீட்டிய ஓவியங்கள் அரசியல் முக்கியத்துவம் பெற்றன. பிரெஞ்சுப் புரட்சியின் ஆரம்பகட்டத்தில், மக்களிடம் இவை மாபெரும் எழுச்சியை ஊட்டின.

*மக்கள் இயக்கத்தில் இணைந்து பல பதவிகளை வகித்தவர், பல இடங்களில் எழுச்சிமிக்க உரையாற்றினார். இதனால், ஆட்சியாளர்களின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். ஒருமுறை கில்லட் வெட்டுக் கத்திக்கு பலியாகும் ஆபத்தில் இருந்து உயிர்த் தப்பினார்.

*பிரிட்டன் செல்வந்தர் ஒருவருக்காக மாவீரன் நெப்போலியன் ஓவியத்தை வரைந்தார். நெப்போலியன் தொடர் வெற்றிகளைக் குவிக்க, அவரது வீரத்தால் டேவிட் கவரப்பட்டார். தன் புகழைப் பரப்பவும், ராணுவத்துக்கு மக்கள் ஆதரவைத் திரட்டவும் இவரது ஓவியங்கள் பயன்படும் எனக் கருதிய நெப்போலியன், அரசின் தலைமை ஓவியராக இவரை நியமித்தார்.

*நெப்போலியன் வீழ்ச்சி அடைந்தபோது, ஆட்சியாளர்களால் இவருக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட்டது. நாட்டைவிட்டு வெளியேறி பிரஸல்ஸ் சென்றார். இறுதிவரை அங்கேயே வாழ்ந்தார். உலக ஓவிய வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த ஜாக் லூயி டேவிட் 77-வது வயதில் (1825) மறைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

ஸ்டார்ட் மியூஸிக்!

 

சைக் கச்சேரிகள்னா ‘என் ஃபாதர் வாசிக்க, என் மம்மி ஆட, நானும் எங்க அண்ணனும் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க... ஒரே கூத்தா இருக்கும்’னு வடிவேலு சொன்னதுதான் நமக்கு ஞாபகம் வரும். ஆனால், மில்லியன் கணக்கான மக்கள் வருடாவருடம் மொத்தமாக ஒரே இடத்தில் கூடி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். உலகின் மிகப் பிரபலமான சில இசைத் திருவிழாக்கள் இவை...

எலெக்ட்ரிக் டெய்சி கார்னிவெல்:

p44c.jpg

EDC என அழைக்கப்படும் இந்த இசைத் திருவிழா 1990-களில் தொடங்கப்பட்டு, 2008-ம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சி பிரபலமானதையடுத்து பிரேசில், ஜப்பான், மெக்ஸிகோ, யூ.கே எனப் பல நாடுகளிலும் இந்த இசைக்கச்சேரி நடைபெறுகிறது. மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றதால் முன்பு இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழா தற்போது மூன்று நாட்களாக நடத்தப்படுகிறது. சுமார் நான்கு லட்சம் பேர் இந்த இசைத் திருவிழாவில் பங்குபெற்று ஆடிப்பாடி மகிழ்கிறார்களாம். மகிழ்ச்சி!


p44d.jpg

டுமாரோலேண்ட்: பெல்ஜியத்தில் நடைபெற்றுவரும் இந்த இசைத் திருவிழாவிற்கான டிக்கெட்டுகள் அனைத்துமே அறிவிப்பு வெளியிடப்பட்ட சிலமணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்திருக்கின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த இந்த ஆண்டிற்கான டுமாரோலேண்ட் இசை நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்க ஐந்து லட்சம் பேர் கூடியிருப்பதைப் பார்த்து நிகழ்ச்சி அமைப்பாளர்களே ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டனராம். ஒரே மேடையில் நூறுக்கும் மேற்பட்ட பாடகர்களும், இசைக் கலைஞர்களும் பங்கேற்பது இந்த நிகழ்வின் சிறப்பம்சம். சிறந்த இசை நிகழ்ச்சிக்கான விருதுகளையும் அள்ளிக் குவித்திருக்கிறது டுமாரோலேண்ட்.


p44e.jpg

சம்மர் ஃபெஸ்ட்:  விஸ்கான்சினில் நடைபெற்றுவரும் சம்மர் ஃபெஸ்ட் இசைக்கச்சேரி 1999-ல் உலகின் மிகப்பெரிய இசைக்கச்சேரி எனும் கின்னஸ் சாதனையைப் படைத்தது. நாட்டின் பொருளாதாரத்துக்கு உதவும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியில் உணவு, விற்பனைப் பொருட்கள், இரவுகளில் வானவேடிக்கைகள் என எல்லா வியாபாரமும் களைகட்டும். ஆண்டுதோறும் கோடைகாலத்தில் பத்துப் பதினைந்து நாட்கள் திருவிழா போல நடைபெறும் இந்த நிகழ்வில் சராசரியாக ஒன்பது லட்சம் பேர் கலந்துகொள்கிறார்களாம். வெயிலு வெளுக்குமே பாஸ்..!


p44.jpg

மாவாஸின்: மொராக்கோவில் நடைபெறும் இந்த ‘ராக்’ இசைவிழாவுக்கு ஒவ்வொரு வருடமும் கூட்டம் மொத்தம் மொத்தமாய் எத்தும். சில பொதுவான நல்ல கருத்துகளை மையமாக வைத்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த இசைவிழாவின் இன்னொரு புதுமை, அந்த நாட்டின் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதி உதவியைப் பெற்று இதை நடத்தி வருவதுதான். 2009-ல் நடந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்த துயரச் சம்பவமும் நிகழ்ந்துள்ளது. நல்லதுக்கே காலம் இல்லை அப்பத்தா..!


p44a.jpg

ராக் இன் ரியோ: பிரேசிலின் ‘ரியோ-டி-ஜெனிரோ’வில் நடைபெறும் (ஒலிம்பிக் நடக்கப்போற அதே இடம்தான்) இந்த இசைநிகழ்ச்சிக்கு கட்டுக்கடங்காத கூட்டம் அள்ளும். ‘சிட்டி ஆஃப் ராக்’ என இதற்கென 2.7 மில்லியன் சதுர அடி பரப்பளவில் ஓர் இடம் நிர்மாணிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களால் சில சாதனைகளும் நிகழ்த்தப்பட்டன. 2011-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வின்போது ‘மெக் டொனால்ட்ஸ்’ நிறுவனம் ஒரே நாளில் 58,000 பர்கர்களை விற்று கின்னஸ் சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது. நாலு மில்லியன் ப்ளாஸ்டிக் கப்புகளைப் பயன்படுத்திய சுற்றுச்சூழலுக்கு எதிரான சர்ச்சைக்குரிய நிகழ்வாகவும் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது ‘ராக் இன் ரியோ’. பாட்டுக் கேட்க வந்தீங்களா? பர்கர் திங்க வந்தீங்களாடா டேய்..?


சன்பர்ன் திருவிழா:

p44b.jpg

இதுதான் ஆசியாவின் மிகப்பெரிய எலெக்ட்ரானிக் இசைத் திருவிழா. கோவாவில் நடைபெறும் இந்த இசைக்கச்சேரிக்கு நாடு முழுவதும் இருக்கும் இசைப்பிரியர்கள் ரசிகர் களாக இருக்கிறார்கள். சைலேந்திர சிங் என்பவர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துகிறார். அங்கே செல்வதற்காக டூரிஸ்ட் கிளப்புகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த விழாவில் வருடந்தோறும் உலகின் சிறந்த டிஸ்க் ஜாக்கிகளை அறிமுகப்படுத்துவது இந்நிகழ்வின் சிறப்பம்சம். சன்பர்ன் திருவிழா விரிவடைந்து இப்போது இலங்கை, துபாய் போன்ற நாடுகளிலும் நடைபெறு கிறது. ஜெய் ஹோ பாட்டுப் பாடுவீங்களா..?

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஓகஸ்ட் - 31

 

1422 : ஆறாம் ஹென்றி 9 மாத வயதில் இங்­கி­லாந்தின் மன்னன் ஆனார்.

 

1886 : தென் கரோ­லி­னாவில் சார்ள்ஸ்டன் நகரில் பூகம்­பத்­தினால் 100 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1897 : தோமஸ் எடிசன் முத­லா­வது திரைப்­படம் காட்டும் கரு­வி­யான கினெட்­டஸ்­கோப்­புக்­கான காப்­பு­ரிமம் பெற்றார்.

 

799princess-diana-768.jpg1919 : அமெ­ரிக்க கம்­யூனிஸ்ட் கட்சி அமைக்­கப்­பட்­டது.

 

1920 : போலந்தில் கமரோவ் என்ற இடத்தில் சோவியத் போல் ஷெவிக்­கு­க­ளுடன் இடம்­பெற்ற போரில் போலந்து வெற்றி பெற்­றது.

 

1942 : மேற்கு யுக்ரைன், டெர்­னோப்பில் என்ற இடத்தில் காலை 4:30 மணிக்கு 5,000 யூதர்கள் பெல்செக் என்ற நாஸி வதை­மு­கா­மிற்கு அனுப்­பப்­பட்­டனர்.

 

1957 : ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து மலாயா கூட்­ட­மைப்பு விடு­தலை பெற்­றது.

 

1962 : ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து ட்ரினிடாட் டொபாக்கோ விடு­தலை பெற்­றது.

 

1968 : கார்ஃபீல்ட் சோபர்ஸ் கிரிக்கெட் போட்­டி­யொன்றில் ஒரு ஓவரில் 6 ஆறு ஓட்­டங்­களை எடுத்து சாதனை புரிந்தார்.

 

1978 : இலங்­கையில் நிறை வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி ஆட்சி முறையை அறி­மு­கப்­ப­டுத்­திய 1978 ஆம் ஆண்டின் அர­சியல் யாப்பு வெளி­யி­டப்­பட்­டது.

 

1986 : அமெ­ரிக்­காவின் கலி­போர்­னி­யாவில் இரு விமா­னங்கள் வானில் மோதிக்­கொண்­டதில் 67 பேர் வானிலும் 15 பேர் தரை­யிலும் கொல்­லப்­பட்­டனர்.

 

1986 : சோவியத் ஒன்­றி­யத்தின் பய­ணிகள் கப்­ப­லான "அட்­மிரல் நகீமொவ்" கருங்­க­டலில் மற்­றொரு கப்­ப­லுடன் மோதி­யபின், மூழ்­கி­யதில் 423 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1991 : சோவியத் ஒன்­றி­யத்தில் இருந்து பிரி­வ­தாக கிர்­கிஸ்தான்  அறி­வித்­தது.

 

1994 : ஐரியக் குடி­ய­ரசு இரா­ணுவம் போர்­நி­றுத்­தத்தை அறி­வித்­தது.

 

1997 : பிரித்­தா­னிய இள­வ­ரசி டயானா, அவரின் காதலர் டோடி அல் பயாத், மற்றும் கார் சாரதி ஹென்றி ஆகியோர்  பாரிஸில் இடம்­பெற்ற கார் விபத்தில் கொல்­லப்­பட்­டனர். 

 

1998 : வட கொரியா தனது முத­லா­வது செய்­ம­தியை ஏவி­யது.

 

1999 : ஆர்­ஜென்­டீ­னாவின் பியூனர்ஸ் அயர்ஸில் பய­ணிகள் விமானம் ஒன்று விமான நிலை­யத்தில் இருந்து புறப்­ப­டு­கையில் விபத்துக்­குள்­ளா­கி­யதில் 65 பேர் கொல்லப்பட்டனர்.

 

2005 : ஈராக்கின் பாக்தாத் நகரின் அல் ஆயிம்மா பாலத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 1,199 பேர் கொல் லப்பட்டனர்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆகஸ்ட் 31: கல்வியாளர் மரியா மாண்டிசோரி பிறந்த தினம் இன்று.

14203387_1216054771786644_10935936847289

 

இத்தாலியைச் சேர்ந்த இவர் கல்வியாளர் மட்டுமல்ல மனோதத்துவ மருத்துவரும் கூட. இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி ஜனவரி 6, 1907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார்.

இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழுவதும் பயன்படுத்த துவங்கினர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார். பின்னாளில் 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினார்.

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.