Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
Vikatan EMagazines Foto.
 

* பழங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும்?

* பழங்களைக் கடித்துச் சாப்பிடுவதே சிறந்தது. முன் பற்களில் மட்டும் கடித்து உடனே விழுங்கிவிடக் கூடாது. அனைத்துப் பற்களிலும் பழங்கள் படுமாறு நன்றாக வாயில் அரைத்து விழுங்க வேண்டும்.

*ஆப்பிள், பேரிக்காய், கொய்யா போன்றவற்றை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். மென்று சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.

*பழங்களை ஜூஸாக அருந்துவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். உடல் நலம் குன்றியவர்கள், பழங்களைச் சாப்பிட மறுக்கும் குழந்தைகள், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், முதியவர்கள் ஜூஸாகச் சாப்பிடலாம்.

*பழங்களை ஜூஸாக்கும்போது, நார்ச்சத்துக்கள் அகன்றுவிடும். மேலும், நுண்ஊட்டச் சத்துக்களும் கிடைக்காது.

*பழங்களை நறுக்கிச் சாப்பிட விரும்புபவர்கள், பெரிதாக நறுக்கிச் சாப்பிட வேண்டும். சிறியதாக நறுக்கிச் சாப்பிடக் கூடாது.

*பழங்களின் விதைகளை நேரடியாக விழுங்கக் கூடாது, எனவே, பப்பாளி, ஆப்பிள், திராட்சை முதலான பழங்களில் இருக்கும் கொட்டைகளைத் துப்பிவிட வேண்டும்.

***** எப்போது சாப்பிட வேண்டும்?******

* பொதுவாக, பழங்களை உணவுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.

* உணவுடன் சேர்த்துச் சாப்பிடும்போது, பழங்கள்தான் முதலில் ஜீரணம் ஆகும். உணவு, அரை மணி நேரம் கழித்துத்தான் ஜீரணம் ஆகும். இதனால், செரிமான மண்டலம் பாதிக்கப்படும்.

சா ப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிடுவது தவறான பழக்கம். ஆரம்பகட்டத்தில் எந்தவிதத் தொந்தரவுகளும் வராது. தினமும் உணவு உண்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது தொடர்ந்தால், படிப்படியாகச் செரிமான மண்டலம் பாதிப்படையும்.

* உணவு உண்பதற்கு முன்னர் பழங்களைச் சாப்பிட வேண்டும். பழங்களைச் சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகு, உணவு உட்கொள்வது நல்லது.

* நன்றாகப் பசிக்கும்போது பழம் சாப்பிடுவது உடனடி எனர்ஜி தரும். அதன் பின்னர் அரை மணி நேரம் கழித்து உணவைச் சாப்பிடலாம்.

*ஓர் உணவு வேளைக்கும் இன்னொரு உணவு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் பழங்களைச் சாப்பிடுவது மிகவும் நல்லது.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

டிசம்பர் 24: நோபல் பரிசு பெற்ற எழுத்தாளார் ஹரோல்ட் பிண்டர் மறைந்த நாள் இன்று.

இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் சிறந்த நாடகாசிரியர் மற்றும் கவிஞருமாவார். 2005 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றவர்.

12375095_659064584196087_589902860856530

  • தொடங்கியவர்

ஜப்பானில் நீருக்கடியில் ஒரு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
===================================================
டோக்யோவில் உள்ள மீன் காட்சியகத்தில், கிறிஸ்துமஸ் தாத்தா போல உடையணிந்த ஊழியர்கள், அங்கிருந்த மீன்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை அளித்தனர்.

குட்டிமீன்களை ஒருசேர வரவழைத்து நீருக்கடியில் ஒரு கிறிஸ்துமஸ் மரத்தையும் உருவாக்கியுள்ளனர். இதை பார்க்க வந்த குழந்தைகள் உற்சாகமடைந்தனர்.

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

கர்ப்பிணி தாயின் உயிரை காப்பாற்றிய 3 வயது சிறுமி: நெகிழ்ச்சி சம்பவம்

 

இங்கிலாந்தில் 3 வயது சிறுமி ஒருவர், தனது கர்ப்பிணி தாயின் உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

England%20child.jpg

இங்கிலாந்தின் நைல்சியா நகரில் வசித்து வரும் கேத்ரின், 27 என்பவருக்கு 3 வயதில் எம்மா பசார்டு என்ற பெண்குழந்தை உள்ளது.

இந்நிலையில் மீண்டும் கருவுற்றிருந்த கேத்ரினுக்கு பிரசவவலி ஏற்பட்டடு சுயநினைவை இழந்து கீழே விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆண் குழந்தையை பெற்றெடுத்த அவரால் சுயநினைவுக்கு திரும்ப இயலவில்லை, மேலும் நஞ்சுக்கொடி கிழிந்துவிட்டதால் அவர் மேலும் உடல்வலிக்கு ஆளாகியுள்ளார்.

இந்த நிலையில், இவருடைய மகள் எம்மா, அவசர சேவையின் தொலைபேசி எண்ணான 999-ஐ தொடர்பு கொண்டுள்ளார். மறுமுனையில் பேசிய, தொலைபேசி அழைப்புகளை கையாளும் அதிகாரி சாரக் மோரீஸ்என்பவர், எம்மாவிடம், குழந்தை பிறந்துவிட்டடதா, என்ன குழந்தை, இருவரும் நலமாக இருக்கிறார்களா, உங்கள் வீட்டின் முகவரி என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 

England%20child%201.jpg

அப்போது சிறுமி எம்மா, குழந்தை பிறந்துவிட்டது, ஆண் குழந்தை, அது அம்மாவின் குழந்தை, கிறிஸ்துமஸ்க்காக வருகை தந்துள்ளது என்று அந்த அதிகாரியிடம் மிகத்தெளிவாக பதிலளித்துள்ளார். சுமார் 11 நிடங்கள் வரை தொடர்ந்து இந்த உரையாடலில், எம்மா தனது தாய் மற்றும் புதிதாக பிறந்த குழந்தையின் நிலைகள் பற்றி எடுத்துரைத்துக் கொண்டே இருந்துள்ளார்.

அவசர ஊர்தியுடன் புறப்பட்ட ஊழியர்கள், எம்மாவின் வீட்டினை அடைந்து தாயையும், குழந்தையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஊழியர்கள் வீட்டிற்கு செல்லும்வரை, தொலைபேசி அழைப்புகளை கையாளும் அதிகாரி எம்மாவுடன் உரையாடிக் கொண்டே இருந்துள்ளார்.

இரண்டு வார சிகிச்சைக்கு பின் கேத்ரின் மற்றும் குழந்தையும் நலமாக உள்ளனர். சிறுமி எம்மாவின் தைரியத்தையும், புத்திசாலித்தனத்தையும் அதிகாரி மோரீஸ் பாராட்டியுள்ளார்.
http://www.vikatan.com/news/world/56795-three-year-old-girl-save-pregnant-mother.art

  • தொடங்கியவர்

என்ன துணிச்சல்..

  • தொடங்கியவர்
2015-12-25

631varlaru.jpg336: இத்­தா­லியின் ரோம் நகரில் நத்தார் கொண்­டா­டப்­பட்­ட­மைக்­கான முதல் ஆவணத் தட­யங்கள் பின்னர் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

 

800 : சார்­லமேன் புனித ரோமப் பேர­ர­ச­னாக முடி­சூ­டினார்

 

1000 : ஹங்­கேரிப் பேர­ரசு முதலாம் ஸ்டீபனின் கீழ் கிறிஸ்­தவ நாடாக உரு­வாக்­கப்­பட்­டது.

 

1066 : முதலாம் வில்­லியம் இங்­கி­லாந்தின் மன்­ன­னாக முடி­சூ­டினார்.

 

1741 : அண்டர்ஸ் செல்­சியஸ் தனது செல்­சியஸ் வெப்­ப­மா­னியைக் கண்­டு­பி­டித்தார்.

 

1758 : ஹேலியின் வால்­வெள்ளி ஜொகான் பாலிட்ச் என்னும் ஜேர்­ம­னி­யரால் அவ­தா­னிக்­கப்­பட்­டது.

 

1868 : அமெ­ரிக்க உள்­நாட்டுப் போரில் ஈடு­பட்ட அனைத்து கூட்­ட­மைப்புப் படை­வீ­ரர்­க­ளுக்கும் பொது மன்­னிப்பை அமெ­ரிக்க ஜனா­தி­பதி அண்ட்ரூ ஜோன்சன் அறி­வித்தார்.

 

1914 : முதலாம் உலகப் போரில் ஜேர்­ம­னிக்கும் பிரித்­தா­னி­யா­வுக்கும் இடையில் கிறிஸ்மஸ் தினத்தில்  போர்­நி­றுத்தம் நடை­மு­றைக்கு வந்­தது.

 

1926 : ஜப்­பானின் டாயீஷோ மன்னன் இறந்தார் அவரின் மகன் ஹிரோ­ஹிட்டோ அர­ச­னானார்.

 

1932 : சீனாவின் கான்சு நகரில் 7.6 ரிச்டர் பூகம்பம் ஏற்­பட்­டதில் 70,000 பேர் இறந்­தனர்.

 

1941 : இரண்டாம் உலகப் போரில் ஹொங்கொங் மீதான ஜப்­பானின் முற்­றுகை ஆரம்­ப­மா­யிற்று.

 

1947 : சீனக் குடி­ய­ரசின் அர­சி­ய­ல­மைப்பு நடை­மு­றைக்கு வந்­தது.

 

1968 : கூலி அதிகம் கோரி போராட்­டத்தில் ஈடு­பட்ட 42 தலித் மக்கள் தமிழ்­நாட்டில் கீழ்­வெண்­மணி கிரா­மத்தில் உயி­ருடன் தீயிட்டு படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

 

1977 : இஸ்ரேல் பிர­தமர் பெகின், எகிப்­திய ஜனா­தி­பதி அன்வர் சதாத்தை சந்­தித்தார்.

 

1979 : சோவியத் ஒன்­றியம் ஆப்­கா­னிஸ்­தானில் தனது படை­களை பெரு­ம­ளவில் இறக்­கி­யது.

 

1989 : ருமே­னி­யாவின் கம்­யூ­னிச ஜனா­தி­ப­தி­யான நிக்­கொலாய் செய்­செஸும் அவ­ரது மனைவி நிகோலா செய்­செ­யஸ_ம் மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்டு சுட்டுக் கொல்­லப்­பட்­டனர்.

 

1991 : சோவியத் யூனியன் தலைவர் பத­வியில் இருந்து மிக்கைல் கொர்­பச்சோவ் ராஜி­னாமா செய்தார்.

 

1991 : சோவியத் ஒன்­றி­யத்தில் இருந்து யுக்­ரைன்  வில­கி­யது.

 

632Untitled-4.jpg2005: மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம் தேவா­ல­யத்தில் ஆரா­த­னை­யின்­போது சுட்­டுக்­கொல்­லப்­பட்டார். 

 

2012: ரஷ்­யாவில் இட்­பெற்ற விமான விபத்தில் 27 27 பேர் உயிரிந்தனர்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=632#sthash.COmHAbIr.dpuf
  • தொடங்கியவர்

HAPPY CHRISTMAS

  • தொடங்கியவர்

உலகை விலை பேசிய சிரிப்புக்கு சொந்தக்காரர் சார்லி சாப்ளின்!

 

charlin%20cahplin%20250.jpg டிச. 25- சார்லி சாப்ளின் நினைவு நாள்

றுக்கமான கோட்டும், அதற்கு மாறான பாண்டும், டூத் பிரஷ் மீசையும், கிழிந்த தொப்பியும், பொருத்தமில்லாத ஷுக்களும், வாத்து நடையுமாக என்று நாம் கூறும் போதே நம் கற்பனை கண்கள் முன்பாக சார்லி சாப்ளின் தோன்றிவிடுகிறார். இந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்த சாப்ளின் செல்லுலாயிடில் அப்படி என்ன விந்தையைத்தான் செய்து விட்டார்?

லண்டனில் ஒரு ஏழைக் குடும்பத்தில் 1889-ல் பிறந்த சாப்ளினின் இளமைக்காலம் அவ்வளவு மகிழ்ச்சியூட்டுவதாக அமையவில்லை. 1910ல் அமெரிக்காவுக்கு சென்ற சாப்ளின், ஹாலிவுட்டின் தெருக்களில் காசில்லாமலே வலம் வந்த நிலையில், மெக்சன்னட்டின் நாடக குழுவில் சேர்ந்து புகழ்பெற தொடங்கினார்.

அதன்பிறகு 1914-ல் முதன் முதலாக,  அனாதையான நாடோடி 'டிரெம்ப்' (TRAMP) பாத்திரத்தில் தோன்றி ரசிகர்களின் நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற்றார். அதைத் தொடர்ந்து 1940 வரை ஏறத்தாழ 25 வருடங்கள் அந்த வேடத்திலேயே உலகை சிரிப்புக் கடலில் ஆழ்த்தினார்.

டிரெம்ப் (TRAMP), தி கிட் (Thekid), கோல்ட் ரஷ் (Gold Rush), சர்க்கஸ் (Circus), சிட்டி லைட்ஸ் (City lights), மாடர்ன் டைம்ஸ் (Modern Times), தி கிரேட் டிக்டெட்டர் (The great Dictator) ஆகிய திரை உலக இதிகாசங்களை தன் காமிராவினால் படைத்தார். அவர் தானே நடித்து, தயாரித்து இயக்கிய இந்த படங்கள், அமெரிக்கர்களை மட்டும் அல்ல; அகிலம் முழுவதும் உள்ள அனைவரையும் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தன. அவரது கால்கள் சுழன்றபோது ஓராயிரம் கண்கள் சுழன்றன.

உலக சபையில் நகைச்சுவையை சங்கீதமாக வாசித்தவர். திரையில் சாப்ளின் பிரச்னைகளில் சிக்கி சுண்ணாம்பாகும் போது ரசிகர்கள் சிரித்துக்கொண்டிருப்பார்கள். பார்வையாளர்கள் உச்சுக் கொட்டும் போது சாப்ளின் சிரித்துக்கொண்டிருப்பார். இது அவரது படங்களில் நாம் காணும் விசித்திரம்.

charlin%20cahplin%20600%201.jpg

40 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்தபோதும், அவர் அந்த நாட்டின் குடியுரிமையை பெறவே இல்லை. அவருக்கு 1972-ல் சிறப்பு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. நமது இந்திய அரசாங்கம்கூட அவரது தபால் தலையை வெளியிட்டு ஒரு கலைஞனுக்கு செய்ய வேண்டிய மரியாதையை செய்து முடித்தது.

சாப்ளினின் தாக்கம்

இந்த ஒப்பற்ற கலைஞனின் தாக்கம் பெரும்பாலான நடிகர்களிடம் இருந்ததை எவரும் மறுக்க முடியாது. ஏனென்றால் இவர் போட்ட, போன சாலைகளில்தான் திரை உலக காமிராக்கள் பயணம் செய்கின்றன.

charlin%20cahplin%20600%202.jpg

சாப்ளினின் பொன்வாசகங்கள் சில:

* டாக்கி  (பேசும் சினிமா) வந்ததும் நடிப்புக்கலை செத்து விட்டது.

* உலக பணக்காரர்களின் வரிசையில் நானிருந்த போதும் என்னால் ஏழையாகத்தான் சிந்திக்க முடிகிறது. பணம் இடையில் வந்தது. ஆனால் ஏழ்மை என் ரத்தத்தில் ஊறியது.

* ரஷ்யாவுக்கு நான் சென்று வந்ததால் என்னை கம்யூனிஸ்டா எனக் கேட்கிறார்கள். மனிதநேயத்துடன் வாழ நான் கம்யூனிஸ்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

  • தொடங்கியவர்

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..! Xmas சிறப்பு பகிர்வு...

 

xmas என்று கிறிஸ்துமஸ் விழாவை குறிக்கத்துவங்கி ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கிறிஸ்து + மாஸ் தான் கிறிஸ்துமஸ். கிரேக்கத்தில் x என்கிற எழுத்தே கிறிஸ்துவை குறிக்கும் அதைக்கொண்டு xmas என்று சுருக்கி அழைக்கிறார்கள் இன்றுவரை.

கிறிஸ்துமஸ் மரம் இயேசு பிறப்பதற்கு முன்னரே வந்துவிட்டது ; பனிக்காலங்களில் பிறந்தநாளை கொண்டாட இந்த மரங்களை பயன்படுத்துகிற பழக்கம் இயேசு பிறப்பதற்கு முன்னமே இருந்துள்ளது.

லாட்வியா நாட்டில் கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிக்க துவங்கினார்கள் ; ஜெர்மனியின் மார்டின் லூதர் அதில் மெழுகுவர்த்தி ஏற்றினார். ஆல்பர்ட் என்கிற ஜெர்மானிய இளவரசரை மணந்து கொண்ட விக்டோரியா மகாராணி இங்கிலாந்துக்கு இந்த கிறிஸ்துமஸ் மரத்தை கொண்டு போக அங்கே இருந்து உலகம் முழுக்க பரவியது. இந்த மரத்தில் மின்விளக்குகள் வைக்கும் பழக்கத்தை கொண்டு வந்தது எடிசனின் உதவியாளர் எட்வர்ட் ஜான்சன். கிறிஸ்துமஸ் மரத்தை சாப்பிடலாம் ; அதன் முட்கள் வைட்டமின் சி நிறைந்தது.

xmas2vc2.jpg

 

கிறிஸ்துமஸ் உண்மையில் டிசம்பர் இருபத்தைந்து அன்று கொண்டாடப்பவில்லை மார்ச் 28,நவம்பர் 18 என்று மாறி மாறி கொண்டாடிக்கொண்டு இருந்தார்கள். போப் ஒன்றாம் ஜூலியஸ் தான் எல்லாரும் டிசம்பர் இருபத்தைந்து அன்று கொண்டாடும் பழக்கத்தை கொண்டு வந்தார் இது நடந்தது 350 A.D. !

கிறிஸ்துமஸ் தாத்தா செயின்ட் நிகோலஸ் துருக்கி நாட்டில் இருந்தவர் ; ஏழை எளியவர்களுக்கு உதவியவர். ஒரு முறை ஏழைப்பெண்கள் மூவருக்கு தங்க நாணயங்களை வீட்டு புகைப்போக்கி வழியாக அவர் போட.அதன் நினைவாக ஏழைகளுக்கு பரிசளிப்பது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. ஜப்பானில் கிறிஸ்துமஸ் தாத்தா இல்லை ; பாட்டி தான். பாட்டிகள் தாத்தாவை விட அன்பானவர் என்கிறார்கள் இவர்கள்.

ஸ்பெயினில் கிறிஸ்துமஸ் அன்று பெரிய லாட்டரி போட்டி நடக்கும் ; ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மரம் பிடுங்கும் போட்டிகள் உண்டு பல்கேரியாவில் மரத்தை அடுப்பெரிக்க கொண்டு வந்து கொண்டிருக்கும் பொழுது எல்லாரும் அதன் மீது சோளத்தை எறிந்து கொண்டாடுவார்கள். நார்வே நாட்டில் நம்மூர் மாட்டு பொங்கல் மாதிரியே பசுக்களை கவனிப்பார்கள். போலந்தில் இயேசுவுக்கு என்று ஒரு தனி மேஜை ; தனி சாப்பாடு.

நெதர்லாந்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு ஒரு உதவியாளர் உண்டு ; பெயர் ப்ளாக் பெட்டி. குறும்பு செய்யும் பிள்ளைகளை மூட்டையில் பிடித்துப்போவது தான் இவரின் வேலை. நல்ல வேலை நாம எல்லாம் அங்கே பிறக்கலை.

xmas2vc1.jpg

 

கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாளுக்கு பாக்ஸிங் நாள் என்று பெயருண்டு. அன்றைய தினத்தில் இங்கிலாந்தில் வசூலிக்கப்பட்ட பணத்தை பாக்ஸ்களில் இருந்து பிரித்து கொடுப்பதை சர்ச்சுகள் வழக்கமாக வைத்திருந்தன என்பதால் இப்பெயர். அன்று நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் யார் வெல்வார் என்று பெரிய எதிர்பார்ப்பே இருக்கும்.

முதல் உலகப்போர் சமயத்தில் கிறிஸ்துமஸ் துவங்கதற்கு கொஞ்ச நாள் முன்னர் ஜெர்மனிய வீரர்கள் கரோல் பாடல்கள் பாடி இங்கிலாந்து வீரர்களை வாழ்த்தினார்கள். முதலில் போர் தந்திரமோ என்று எண்ணிய இங்கிலாந்து வீரர்கள் பின்னர் நம்பி கைகொடுக்க அமைதியாக கிறிஸ்துமஸ் விழாவை போர்க்காலத்தில் கொண்டாடினார்கள் இரு நாட்டு வீரர்களும்.

ஜிங்கில் பெல்ஸ் எனும் கிறிஸ்துமஸ் பாடல் உண்மையில் கிறிஸ்துமஸ் நிகழ்வுக்காக எழுதபட்டது இல்லை. அது நன்றி அறிவிக்கும் நாளுக்காக பியர்பான்ட் என்பவர் தன்னுடைய மாணவர்கள் பாடுவதற்காக எழுதினார் எல்லாருக்கும் பிடித்து போய் அது கிறிஸ்துமஸ் பாடலாகி விட்டது.

கிறிஸ்துமஸ் அன்று ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு ஸ்வீட். பிரான்ஸ் தேசத்தில் பூசணி கேக்,ஸ்வீடனில் ஆடு வடிவத்தில் இருக்கும் ஜிஞ்சர் பிஸ்கட்,இங்கிலாந்தில் உலர் பழங்களில் செய்யப்படும் புட்டிங் இப்படி நீளும் அந்த சுவையான பட்டியல்.

கிறிஸ்துமஸ் தீவு என்றொரு தீவுக்கு பெயர் - கிறிஸ்துமஸ் தினத்தன்று 1643-இல் வில்லியம் மைனர்ஸ் எனும் மாலுமியால் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த தீவுக்கு இப்படி ஒரு பெயர்.

நியூட்டன்,ஜின்னா,வாஜ்பாய்,மதன் மோகன் மாளவியா,இசைக்கலைஞர் நௌஷாத் அலி எல்லாரும் இதே தினத்தில் பிறந்தவர்கள்..!

  • தொடங்கியவர்

டிசம்பர் 25: ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினம் இன்று

12391069_1042309775827812_44396045324227

 

* இந்திய சுதந்திர வரலாற்றின் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று *

ராணி வேலு நாச்சியாரின் வீரக்கதை. வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு போதிக்கப்பட்ட வீர வரலாறு, ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றியது மட்டுமே. ஆனால், ஜான்சி ராணியின் சுதந்திரப் போராட்டத்துக்கு 85 ஆண்டுகள் முன்பே நடந்தேறிய வீர வரலாறு... தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியாருடையது!

ராமநாதபுர மன்னர் செல்லமுத்து சேதுபதி யின் ஒரே செல்ல மகளாகப் பிறந்த வேலு நாச்சியார், அரண்மனையில் ஆண் வாரிசு இல் லாத குறை இல்லாமல் வீர விளையாட்டு களான சிலம்பம், குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில் வித்தை முதலான வீரக்கலைகளில் பயிற்சி பெற்றார். போர் பயிற்சிகளுடன் ஃபிரெஞ்சு, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். 16 வயதானபோது சிவகங்கையின் மன்னரான முத்துவடுகநாதரை மணந்தார். 1772-ம் ஆண்டு நடந்த காளையார்கோயில் போரில் முதுவடுகனாதரையும் வேலு நாச்சியாரின் மகளான கௌரி நாச்சியாரையும் கொன்றனர் வெள்ளையர்கள். கொதித்து எழுந்த வேலுநாச்சி யார், தனது அரசை மீட்க சூளுரைத்தார்.

தனது தளவாய் தாண்டவராயன் பிள்ளையையும் சேனாபதிகள் மருது சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு குறுநில மன்னர்களை ஒன்று சேர்த்து போராட பல இடங்களுக்குச் சென்றார். தளவாய் தாண்டவராயன் பிள்ளை, வேலு நாச்சியாரின் சார்பாக சுல்தான் ஹைதர் அலிக்கு மடல் ஒன்றை எழுதினார். அந்த மடலில்... 5,000 வீரர்கள் கொண்ட காலாட்படையும் 5,000 வீரர்கள் கொண்ட குதிரைப்படையும் கேட்டிருந்தார். இதையடுத்து, வேலு நாச்சியாரை நேரில் அழைத்த ஹைதர் அலி, அவரின் உருதுப் புலமையைக் கண்டு வியந்தார். வேலு நாச்சியார் கேட்டவண்ணம் படைகளைக் கொடுத்து அனுப்பினார்.

படைகளைப் பெற்ற வேலு நாச்சியார், வெள்ளையர்களை வெல்வதற்கான உத்திகளை வகுத்தார். தனது படைகளை தானே முன்னின்று நடத்தினார். சேனாபதிகளான மருது சகோதரர் கள், உற்ற துணையாக இருந்து படைகளுக்குத் தலைமை தாங்கினர். குதிரை வீரர்கள், காலாட்படை வீரர்கள் மற்றும் பீரங்கிப்படை யோடு... திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்ட வேலு நாச்சியார், காளையார் கோயிலை கைப்பற்றினார்.

இறுதியாக, சிவகங்கை நகரைக் கைப்பற்றத் திட்டமிட்டு, சின்னமருது, பெரியமருது, தலைமை யில் படை திரட்டப்பட்டது. வெள்ளையரின் ஆக்கிரமிப்பில் இருந்த சிவகங்கை அரண்மனையில் விஜயதசமி, நவராத்திரி விழாவுக்காக மக்கள் கூடினர். அதில் பெண்கள் படை, மாறுவேடத்தில் புகுந்து செல்ல வியூகம் அமைத்தார் நாச்சியார். குயிலி என்ற பெண்ணை தற்கொலைப்படையாக அனுப்பினார். குயிலி தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். உலகிலேயே முதன் முதலாக மனித வெடிகுண்டாக ஒரு பெண்ணை வேலு நாச்சியார் அனுப்பியது, பிற்கால தற்கொலைப் படைகளுக்கு முன்னோடியாக அமைந்தது.

கோட்டையை நோக்கி முன்னேறிய வேலு நாச்சியாரை தடுக்கும் எண்ணத்துடன் ஆற்காட்டு நவாப் வெள்ளையர்களுடன் படை எடுத்து வந்தபோது, வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களும் அப்படைகளை வென்று சிவகங்கையை அடைந்தனர். இறுதி யில் வென்றார் வீரமங்கை! தன் கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும், தளபதி பான் ஜோரையும் வேலு நாச்சியார் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது! இத்தனையையும் அவர் சாதித்தது... தன்னுடைய ஐம்பதாவது வயதில்!

சிவகங்கைச் சீமையை மீட்டு, 1780-ம் ஆண்டு முதல் 1789-ம் ஆண்டு வரை ராணியாக மக்கள் போற்ற ஆட்சி புரிந்தார் நாச்சியார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளையர்களை வென்று முடி சூட்டிய ஒரே ராணி, வீரமங்கை வேலு நாச்சியார். அவரது சுதந்திரப் போராட்ட தியாகத்தை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய அரசு 2008-ம் ஆண்டு தபால் தலை ஒன்றை வெளியிட்டது.

நம் குழந்தைகளுக்கு ஃபிரான்ஸ் நாட்டின் ஜோன் ஆஃப் ஆர்க் மற்றும் வடநாட்டின் ஜான்சி ராணியின் கதைகளையே சொல்லி வளர்த்த நாம், நம் மண்ணில் தோன்றி பெருமை சேர்த்த வேலு நாச்சியாரின் கதையையும் சொல்லி வளர்ப்போம். பட்டுக்கோட்டையார் பாடியது போல், வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைக்காமல், வீரக்கதையை சொல்லி வளர்ப்பது நமக்கும் நம் மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் தானே!

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப், ட்விட்டர் கலக்கல்

 
title_2670833f.jpg
 

1_2670840a.jpg

2_2670839a.jpg

3_2670838a.jpg

4_2670837a.jpg

5_2670836a.jpg

t_2670834a.jpg

 
  • தொடங்கியவர்
ஃபஷன் பக்கின் ஆடை அணிவகுப்பு
 

article_1450446905-IMG_6003.JPG

 

article_1450446915-IMG_6020.JPG

article_1450446923-IMG_6120.JPG

article_1450446931-IMG_6124.JPG

article_1450446939-IMG_6186.JPG

article_1450446947-IMG_6438.JPG

article_1450446975-IMG_9938.JPG

article_1450446983-IMG_9981.JPG

article_1450446966-IMG_9913.JPG

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

38 ஆண்டுகளுக்குப் பிறகு முழுநிலவு கிறிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர் 25ம் தேதி) தோன்றவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதுபோன்ற அரிய நிகழ்வு இனி 2034ம் ஆண்டுதான் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பொதுமக்கள் இந்த அரிய நிகழ்வை தவற விடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது. மேலும் நடப்பாண்டின் கடைசி பௌர்ணமியாகவும், குளிர்காலத்தின் தொடக்கத்தில் தெரியும் முதல் பௌர்ணமியான இது `முழு குளிர் நிலவு' என்று அழைக்கப்படுகிறது. கடைசியாக 1977ல் கிறிஸ்துமஸ் தினத்தன்று இது போல முழுநிலவு தோன்றியதாக நாசா தெரிவித்தது.

995774_746960852105412_73567973781195341

  • தொடங்கியவர்

 12410582_1079011552118085_36086007290566

Alastair Cook இன் பிறந்த நாள்

  • தொடங்கியவர்

உங்க டீ யில பால் இருக்கா?

 

”நீங்க குடிக்கறதெல்லாம் டீயே கிடையாது. அது வெறும் சர்க்கரை தண்ணீர். உண்மையான டீயில் பாலோ சக்கரையோ சேர்க்கக் கூடாது. அப்படி சேர்த்தால் அதோட ஒரிஜினல் குவாலிட்டியே போயிரும்” என்று சொல்கிறது கோவையில் இயங்கிவரும் ஒரு கேட்ரிங் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் நிறுவனம். 

tea%20cup%20600%201%281%29.jpg

கோவை அவினாசி ரோட்டில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் அந்நிறுவனம் 'கேடீ' திருவிழா, அதாவது ‘கேக் மற்றும் டீ’ திருவிழாவினை நடத்தியது.

ஹைபிஸ்கஸ் கிவி, மாஸ்கோ, ஹரி சாய், கிளாஸிக் இங்கிஷ்லேஃப், இயர்ல் க்ரே , பேரடைஸ் இலேண்ட்- என்னடா இதெல்லாம்-னு யோசிக்கறீங்களா? தினமும் காலை மாலை –னு விரும்பி குடிக்கிற டீ-யோட வகைகள். இது மாதிரி, டீ-ல கிட்டத்தட்ட 45 வெரைட்டீஸ் வெச்சு ,”டீ-ல இவ்ளோ டைப்ஸ் இருக்கும்போது , ஏன் ஒரே டீ குடிச்சிட்டு இருக்கீங்க?, வந்து ஒரு கை பாருங்க”,னு கண்காட்சி நடத்துறாங்க ஏ.கே.ஜி   கல்லூரியின் மாணவர்கள்.

cake%20600%202.jpg

உலகத்திலேயே டீ தயாரிப்புல இந்தியாதான் இரண்டாவது இடம். ஆனா நமக்கு இஞ்சி டீ, லெமன் டீ , பிளாக் டீ , க்ரீன் டீ ,இத தவிற வேற தெரிஞ்சிருக்க வாய்பில்லை. ஆனா உலகத்துல கிட்டத்தட்ட 45 வெரைட்டி டீ இருக்கு. ஒயிட் டீ, மில்லீங் கிரின் டீ ,ஓலாங் டீ, ஃபளவர் டீ, ப்ளூமிங் டீ-ன்னு ஒவ்வொன்னும் ஒவ்வொரு டேஸ்ட். ஒவ்வொரு ட்ரெடிஷன்.

cake%20600%201%281%29.jpg

இன்னொரு முக்கியமான விஷயம். இங்கு வழங்கப்பட்ட எந்த தேநீர் வகைகளிலும் சக்கரையோ, பாலோ கலக்கல. சர்க்கரைக்கூட நாம வேணும்னா கலந்துக்கலாம். ஆனா பாலுக்கு ஸ்ட்ரிக்ட்லி நோ. ஒரு முறை இந்த வகை தேநீர்களுக்கு நாக்கு பழக்கப்பட்டுவிட்டால், அப்புறம் இந்த டீயை விடமாட்டீங்கனு சர்டிஃபிகேட் வேற குடுக்குறாங்க.

cake%20600%203.jpg

தேநீர்வகை மட்டும்தானா, கேக் எங்கப்பா-னு கேக்குறீங்களா?, இருக்கவே இருக்கு தாஜ்மஹால், நாடாளுமன்றம், ஈஃபில் டவர், இன்னும் பல பில்டிங்ஸ். அட நிஜமாதாங்க, கேக்கினாலேயே இந்த பில்டிங் எல்லாம் செஞ்சிருக்காங்க அந்த காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்.

சின்ன குழந்தைகள் முதல் பெரியவங்க வரை கண்காட்சியை ரசிச்சி பாத்தாங்க. பார்க்க மட்டும்தானா? சாப்பிடறதுக்கு? அதுக்கும் இருக்கு, விதவிதமான கேக் வெரைட்டீஸ் விற்பனைக்கு வெச்சிருக்காங்க. ரசிக்கலாம்...ருசிக்கலாம்.

  • தொடங்கியவர்

10628846_659497704152775_867114380311309

டிசம்பர் 26: தமிழ்த் திரைப்பட நடிகை
சாவித்திரி நினைவு தினம் இன்று...

  • தொடங்கியவர்

பாலாவின் "தாரை தப்பட்டை" தீம் மியூசிக்
இளையராஜாவின் அற்புதமான இசையை கேட்டு பாருங்கள்

  • தொடங்கியவர்

10291349_747725008695663_698764618625330

  • தொடங்கியவர்

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜீசஸ் ஆர்டிஸ் (Jesuso Ortiz), அன்றாட உபையோகிக்கும் பொருள்களைக்கொண்டு உருவாக்கிய ஓவியங்கள்...

10527522_659798767456002_491757932957441

995357_659798944122651_33628459597543391

1918351_659798910789321_6018024848868742

10302037_659798884122657_318117267739534

10351896_659798867455992_914586549496071

1936278_659798850789327_4489470770125200

1272_659798840789328_667165798177104558_

10174905_659798820789330_941005533883456

3000_659798804122665_3001702942905626167

1915093_659798764122669_4891062831384957

10464084_659798797455999_422700969610987

  • தொடங்கியவர்

10338776_1043905925668197_38454683030069

டிசம்பர் 26: கணினியின் தந்தை என கருதப்படும் சார்ல்ஸ் பாபேஜ் பிறந்த தினம் இன்று.. (1791)

  • தொடங்கியவர்

என்னை உறிஞ்சினால்... உன்னை உறிஞ்சுவேன்!
‪#‎26டிசம்பர்2004‬

அன்று காலையில் சூரியன் உதயம்
நன்றாக தான் இருந்தது!
அழகாய் உதித்த சூரியனும் எதும் சொல்லவில்லை!

தரையில் எறும்புகள் வழக்கத்திற்கு மாறாக
வேகமாய் ஊர்ந்துள்ளன!
பறவைகள் கூட்டம் ஒன்று
பதட்டத்தில் கத்தியுள்ளது!

தெருநாய்கள் வேகமாய் குரைத்துள்ளன!
கடைசியாய் கடலும் நீரை உள்வாங்கி
நுரைத்து போயுள்ளது!
இவையெல்லாம் இயற்கையின் அதிசயம் என்று
விவரம் புரியாமல் பார்த்தான்!

கடலின் நடுவே
நின்று கொண்டிருக்கும் வள்ளுவருக்கும்!
அமர்ந்திருக்கும் விவேகானந்தருக்கும்!
படுத்திருக்கும் எம்ஜிஆர், அண்ணாவிற்கும்
கூட தெரிந்திருக்கலாம்!
இது அதிசயமில்லை ஆபத்து என்று!

கடலுக்கு நடுவே கற்கள் நகர்கிறதாம்!
இடத்தை நிரப்ப மனித சதைகள்
கேட்டது ஆழி!

ஆழிக்கு அருகில் ஆழ்துளை போட்டது
காரணம் இல்லையாம்!
நான் பல் துலக்கும் போது ஏற்பட்ட அதிர்வு தான்
காரணம் என்று பட்டாம்பூச்சி விளைவு கூறுகிறது
என்றனர் படித்த மேதைகள்!

யார் என்ன சொன்னாலும்
டிசம்பர் 26,2004 யாரும் சொல்லவில்லை
கடல் காவு வாங்கும் என்று!

பத்து வருடம் தாண்டியும்!
இறந்த மனிதனின் குரலும்!
மனிதனை இழந்தவர் குரலுமாய்
கேட்கிறது பல லட்சம் கதறல்கள்!

நம்மை படைத்தாய் கூறப்படும் கடவுள் தொடங்கி
நாம் படைத்த செயற்கைகோள் வரை
எதுவும் சொல்லவில்லை!
ஆழிப்பேரலைகள் ஊரை வாரி செல்லும் என்று!

கடைசியாய் கடல் சொன்னது புரிந்தது!
நீ என்னை உறிஞ்சினால்
நான் உன்னை உறிஞ்சுவேன் என்றது!

981244_659749344127611_63841591401977520

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

1633_1043903582335098_314342319536422409

டிசம்பர் 26: தோழர் நல்லக்கண்ணு பிறந்த நாள் - சிறப்பு பகிர்வு

"புத்தகப் பிரியர். நவீன இலக்கிய நூல்கள், சிறு பத்திரிகைகள் வரை விரிந்த வாசிப்பு. 4,000 புத்தகங்கள் கொண்ட நூலகமே வீட்டில் உண்டு. சமீபத்தில் படித்த புத்தகம், பழ.நெடுமாறன் எழுதிய 'பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்’.

ஒருவரது எழுத்து பிடித்தால், உடனே அவருடன் தொலைபேசிப் பாராட்டுவார். எந்த ஊருக்குப் போனாலும் அங்கு உள்ள இலக்கிய நண்பர்களுடன் ஒரு சந்திப்பு உண்டு.

மாற்றுக் கருத்துகளையும் விமர்சனங்களையும் மனம் திறந்து கேட்பார். அவருடைய கருத்தையும் நிதானமாக, மனம் நோகாமல்... ஆனால், ஆணித்தரமாகச் சொல்லிவிடுவார். இவர் கோபப்பட்டு இதுவரை யாரும் பார்த்தது இல்லை.

வண்ணச் சட்டைகளையும் விரும்புவார். மோசமான சில அரசியல்வாதிகள் வெள்ளை உடை போட்டு, நாமும் போட வேண்டி இருக்கிறதே என்பது அடிக்கடி அவர் உதிர்க்கும் ஆதங்க வார்த்தைகள்.

நல்ல திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பார். 'அன்பே சிவம்’, 'அங்காடித் தெரு’, 'உச்சிதனை முகர்ந்தால்’ - சமீபத்திய ஆண்டுகளில் இவர் பார்த்த படங்கள். பாரதிராஜா, கமல்ஹாசன், மனோரமா ஆகியோர் பிடித்தமான கலைஞர்கள்.

நல்லகண்ணுவுக்கு இரண்டு பெண்கள். மூத்த மகள் காசிபாரதி, கணவருடன் கோவில்பட்டியில் வசிக்கிறார். இரண்டாவது மகள் டாக்டர் ஆண்டாள், வேலூரில் வசிக்கிறார். பேரன், பேத்திகளுடனான சந்திப்பில் 'குழந்தை’ நல்லகண்ணுவைக் காணலாம்.

தோழர்கள் இவரின் பிறந்த நாளை (டிசம்பர் 26) எளிமையாகக் கொண்டாடுவார்கள். ஆனால், அவர் எதையுமே பொருட்படுத்துவது இல்லை.

நாத்திகவாதி. ஆனால், திருமணங்கள் கோயில்களில் நடந்தாலும் சரி, சர்ச்களில் நடந்தாலும் சரி, சங்கடப்படாமல் சென்று வாழ்த்துவார்.

காரில் செல்ல நேரும்போது கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் பாடல்களைக் கேட்டுக்கொண்டே பயணிப்பது பிடிக்கும்.

ரஷ்யா, ஜெர்மனி, சீனா, இலங்கை ஆகிய நாடுகளுக்குக் கட்சி சார்பில் சென்றுள்ளார். அப்போது கட்சி சார்பில் கோட் தருவார்கள். அணிந்துகொள்வார். அதோடு, அந்த கோட்சூட் கதை முடிந்துபோகும்.

அரசுக் குடியிருப்பில் 6,000 வாடகையில் குடி இருக்கிறார். சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்தில்கூட சொந்த வீடு கிடையாது. மனைவியின் ஓய்வூதியம், கட்சியின் உதவித்தொகை 4,000-ல் வீட்டுச் செலவுகளைக் கவனித்துக்கொள்கிறார்.

அவ்வளவு சீக்கிரம் உணர்ச்சிவசப்படாதவர், சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ஹரி மாரடைப்பால் இறந்தபோது, கேவிக் கேவி அழுதுவிட்டார். ஒரு மகனைப் போல அய்யாவிடம் பழகியவர் ஹரி.

பயணங்களில் தோழர்கள் வாங்கித் தருகிற உணவைத்தான் உட்கொள்வார். முன்பு விரும்பிச் சாப்பிட்ட கத்தரிக்காய், மீன், கருவாடு ஆகியவற்றை இப்போது தள்ளிவைத்து இருக்கிறார்.

இணையத்தில் ஈடுபாடு இல்லை. ஃபேஸ்புக்கில் உறுப்பினர் இல்லை. ஏன்? செல்போன்கூட முழுமையான பரிச்சயம் கிடையாது. அழைப்பு வந்தால் பேசுவார். அவ்வளவுதான் தெரியும்.

இன்டர்மீடியட் படிப்பை முழுவதுமாக முடிக்காமல் கட்சியில் நுழைந்தவர் நல்லகண்ணு. ஹோசிமின்தான் இவரது ரோல் மாடல். இதை ஒரு பேட்டியில் அவரே சொல்லி உள்ளார்.

எல்லோருக்கும் 'தோழர் நல்லகண்ணு’. தோழர்களுக்கு 'ஆர்.என்.கே.’

யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேச மாட்டார். எந்தக் கட்சித் தலைவர் மீதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது.

ஒருமுறை சிறையில் இருந்தபோது 'அன்னமே, ரஞ்சிதமே’ என்று எதார்த்தமாக கவிதை எழுதி இருக்கிறார். ரஞ்சிதம் அம்மாளுடன் நல்லகண்ணு அவர்களின் திருமணம், கட்சி பார்த்து நடத்திவைத்தது. அம்மையாரை அவர்கள் வீட்டில் செல்லமாக அழைப்பதும் 'அன்னம்’ என்றுதான்

  • தொடங்கியவர்

கரணம் தப்பினால் மரணம்

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

1622600_1231500150199727_739489495086681

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.