Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p35.jpg

dot.png ஓர் ஊரின் கலாசாரம், பெருமை, அங்கே உள்ள மக்களின் உணர்வுகள்... இவை எல்லாவற்றையும் தெரிந்துகொள்வதற்காக, இந்த வருடம் முழுக்க `இயர் ஆஃப் டிராவல்' பிளான் போட்டு, அமெரிக்காவைச் சுற்றிவர இருக்கிறார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க். அதன் தொடக்கமாக டெக்ஸாஸ் சென்ற மார்க், அங்கு ரோடோ விளையாட்டைப் பார்த்து ரசித்து ஸ்டேட்டஸும் தட்டியிருக்கிறார்.  ரோடோ என்பது அமெரிக்காவில் நடக்கும் ஜல்லிக்கட்டு போன்ற ஒரு விளையாட்டு. அலங்காநல்லூருக்கு வாங்க மார்க்!

p35b.jpg

dot.png  அமெரிக்காவின்  45-வது அதிபராகப் பதவியேற்றிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே நம் ஊர் அரசியல் பாணியில் அதிரடித்தார் ட்ரம்ப். முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் கனவுத் திட்டமான `மருத்துவக் காப்பீடு' திட்டத்தை ரத்துசெய்தார். இதைவிடவும் சிறப்பான இன்ஷுரன்ஸ் திட்டம் என்னிடம் இருக் கிறது. அதை விரைவில் அறிவிப்பேன்' எனச் சொல்லியிருக்கிறார்.  அதிபர் பதவி முடிந்து வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறிய ஒபாமா தனது கடைசி உரையில், `மக்கள் உழைப்பையே எப்போதும் முதலீடாக எடுத்துக்கொள்ள வேண்டும். கடுமையான உழைப்பு இல்லாமல் எதுவுமே நடக்காது. இங்கு தனி நபரால் எந்த மாற்றமும் வந்துவிடாது. `நாம்’ என்னும் ஒற்றுமையே எல்லாவற் றையும் சமாளிக்க, சாதிக்க உதவும்' எனப் பேசியிருக்கிறார். பை பை ஒபாமா!

p35a.jpg

dot.png `பிரேமம்’, `கொடி’ படங்களின் நாயகி அனுபமா பரமேஸ்வரன் இப்போது ஸ்மைலிகளாகப் பூத்துச் சிலிர்க்கிறார். தெலுங்கில் ராம் சரண் தேஜாவுக்கு ஜோடியாக நடிக்கப்போகிறார் என்பதுதான் மகிழ்ச்சிக்குக் காரணம். `ஆர்யா’, `ஆர்யா-2’ உள்பட பல ஹிட்களைக் கொடுத்த சுகுமார் இயக்கத்தில், அனுபமா கிராமத்துக் கிளியாக நடிக்க இருக்கிறார். அழகுலு!

dot.png `அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன். அமைதியைத் தொடருங்கள். அன்புடன்...' என வீரேந்திர ஷேவாக் தமிழில் எழுதிய ஒரு வரி ட்வீட், அவரது வாழ்நாளின் அதிகபட்ச மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. `கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு ட்விட்டரில் இயங்குவதுதான் என் மிகப்பெரிய பணி. ஒலிம்பிக்கின்போது நான் எழுதிய ட்வீட்கள், பல ஆயிரம் லைக்ஸ் மற்றும் ரீட்வீட் செய்யப்பட்டன. ஆனால், தமிழில் எழுதிய இந்த ட்வீட்தான், 50 ஆயிரத்துக்கும் மேல் லைக்ஸ் மற்றும் ரீட்வீட்ஸ் அள்ளியிருக்கிறது. தமிழர்களுக்கு நன்றி. உங்கள் போராட்டம் வென்றுவிட்டது' என ஃபீலாகியிருக்கிறார் ஷேவாக். லைக்ஸ்... லைக்ஸ்!

p35c.jpg

dot.png தெலுங்குத் தேசத்தின் மோஸ்ட் வான்டட் பேச்சுலர் `பாகுபலி’ பிரபாஸ். `எப்ப கல்யாணம்... எப்ப கல்யாணம்?’ எனத் துளைக்கும் மீடியாவைப் புன்னகைகளால் சமாளித்துக் கடக்கிறார். பிரபாஸ் சரியாகப் பதில் சொல்ல மாட்டார் என மீடியா, அவரது பெரியப்பாவும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணம் ராஜுவிடம் இதே கேள்வியைக் கேட்க அவர், ` ‘பாகுபலி - 2’ ரிலீஸுக்குப் பிறகு, அம்மா காட்டும் பெண்ணுக்குத் தாலி கட்டுவார்’ எனச் சொல்லியிருக்கிறார். 38 வயதினிலே!

p35d.jpg

dot.png `நான் எப்போதுமே சொந்தக் காலில் நிற்க ஆசைப்படுகிறேன். குழந்தை பெற்றுக்கொள்வதைத் தவிர வேறு எதற்கும் எனக்கு ஆண் துணை தேவை இல்லை. குழந்தைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நிறையக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அதனால் நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன். அதுவரை எனக்கு யாரும் என் வயதை நினைவுப்படுத்திக் ்கொண்டிருக்க வேண்டாம்’ என அதிரடிப் பேட்டி தட்டியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. கெத்து கேர்ள்!

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இப்படியும் ஒரு ஸ்மார்ட் ஃபோன்

Soap Washable Smartphone

ஜப்பானின் Kyocera நிறுவனம் சோப்பால் கழுவக் கூடிய rafre என்ற ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்த உள்ளது. கை ஈரமாக இருக்கும் பொழுதோ அல்லது கையில் க்ளவுஸை அணிந்திருக்கும் பொழுதும் கூட இந்த ஸ்மார்ட் ஃபோனை பயன்டுத்தலாம். மொத்தம் மூன்று நிறங்களில் இந்த ஃபோன் அறிமுகப்படுத்தப்படுகிறது. மார்ச் முதல் இந்த ஃபோன் விற்பனைக்கு வருகிறது. 2GB RAM, 16GB மெமரி, 13MP ரியர் கேமரா, 3,000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 7.0 ஆப்ஸன்களுடன் இந்த ஃபோன் வருகிறது.

  • தொடங்கியவர்

பிரேதங்களை எடுத்து, மேக்கப் போட்டு, அழகுபடுத்தும் பண்டிகை: இந்தோனேசியாவில் விசித்திரம்

இறந்த உறவினர்களை தோண்டியெடுத்து அந்த சடலத்தை மீண்டும் கழுவி, குளிப்பாட்டி, புத்தாடை உடுத்தி, ஒப்பனை செய்து, அழகுபார்க்கும் வினோத பண்டிகை இந்தோனேஷியாவில் பல நூற்றாண்டு காலமாக கொண்டாடப்படுகிறது.

 
பிரேதங்களை எடுத்து, மேக்கப் போட்டு, அழகுபடுத்தும் பண்டிகை: இந்தோனேசியாவில் விசித்திரம்
 
ஜகர்தா:

இந்தோனேஷியாவின் சுலவேசி தீவுப்பகுதியில் வசித்து வரும் தோஜாரன்ஸ் இன மக்கள், வெளிஉலகத்துக்கு மட்டுமல்ல, இந்தோனேஷிய நாட்டுக்கே பரீட்சியப்படாதவர்கள். இவர்களைப் பற்றிய முழு விவரம் அந்நாட்டு மக்களுக்கே தெளிவாக தெரியாது.

தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தங்களது உறவினர்கள் யாரும் இறந்துவிட்டால், அவர்களது உடலை தோண்டி எடுத்து, அதற்கு புதிய ஆடை உடுத்து, அழகு சாதனங்களால் ஒப்பனைகள் செய்து தங்களது அன்பினை இம்மக்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.

6E9AC2CF-0BFF-4521-A9FC-9D38A7E14082_L_s

ஒருவர் இறந்து 3 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இங்குள்ள மக்களுக்கு இறப்பு என்ற ஒன்று கிடையாது. நாங்கள் அனைவரும் எப்போது ஒற்றுமையுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் என்பதற்காகவே ‘மானேனே’ என்றழைக்கப்படும் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மேலும், இந்தப் பண்டிகை மிக முக்கியமான பண்டிகை என்பதால், இந்த மங்களகரமான நாளில் தோஜாரன்ஸ் இனத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் உறவினர்களுக்குள்ளேயே திருமணமும் செய்து கொள்கின்றனர். வேற்று இனத்தவர்களுடன் எவ்வித தொடர்பையும் வைத்துக்கொள்ள இவர்கள் விரும்புவதில்லை.

588DF8D1-9A11-42FB-B34B-7723990EF0F0_L_s

இந்தப் பண்டிகை நாளன்று, கல்லறை மற்றும் மரப்பொந்துகளில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் உறவினர்களின் உடல்களை தோண்டி எடுத்து, குளிப்பாட்டி, சீவி முடித்து, பவுடர் உள்ளிட்ட ஒப்பனைப் பொருட்களால் அழகுப்படுத்தி, அந்தப் பிரேதங்களுடன் அன்றைய நாளை செலவிட்டு மகிழ்கின்றனர்.

B3055547-047B-4CD8-9A70-7001DF29243A_L_s

அப்போது, இறந்தவர்களுக்கு மிகவும் பிடித்தமான மது, சிகரெட், பன்றி இறைச்சி போன்றவை படையலாக இடப்படுகின்றன. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் இந்த பண்டிகை சமீபகாலமாக மேற்கத்திய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

சென்னையில் திரண்ட 'இரும்பு' மனிதர்கள் (புகைப்படத் தொகுப்பு)

 
 

சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் சனிக்கிழமை காலை மாநில அளவிலான பாடி பில்டிங் எனப்படும் கட்டுடல் காட்சிப் போட்டி நடைபெற்றது. அதில், பங்கேற்ற போட்டியாளர்கள் குறித்த புகைப்படத் தொகுப்பு.

சென்னையில் திரண்ட இரும்பு மனிதர்கள் (புகைப்படத் தொகுப்பு)

சென்னையில் திரண்ட இரும்பு மனிதர்கள் (புகைப்படத் தொகுப்பு)

சென்னையில் திரண்ட இரும்பு மனிதர்கள் (புகைப்படத் தொகுப்பு)

சென்னையில் திரண்ட இரும்பு மனிதர்கள் (புகைப்படத் தொகுப்பு)

சென்னையில் திரண்ட இரும்பு மனிதர்கள் (புகைப்படத் தொகுப்பு)

சென்னையில் திரண்ட இரும்பு மனிதர்கள் (புகைப்படத் தொகுப்பு)

சென்னையில் திரண்ட இரும்பு மனிதர்கள் (புகைப்படத் தொகுப்பு)

BBC

  • தொடங்கியவர்

ஜனாதிபதியின் ஃபேஸ்புக் கவர் படம் என்ன தெரியுமா?

டெல்லியில் ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற குடியரசு தினவிழா அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பங்கேற்க மொத்தம் 28 மாநிலங்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து இருந்தன. அதில் இருந்து 17 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்கள் மட்டுமே அலங்கார ஊர்தி அணிவகுப்பில் கலந்துகொள்ளத் தேர்வு செய்யப்பட்டன.

president_fb_00338.PNG

முதல் பரிசு அருணாச்சலபிரதேசத்திற்கும், இரண்டாம் பரிசு திரிபுராவிற்கும், மூன்றாம் பரிசு தமிழ்நாடு மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும் கொடுக்கப்பட்டன. மூன்றாம் பரிசு பெற்ற தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தியானது, தமிழ்நாட்டின் தலைசிறந்த நாட்டுப்புற நடனங்களுள் ஒன்றான கரகாட்டத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தின் பாரம்பரிய இசைக்கருவிகளான தவில், நாதஸ்வரம் இசையுடன் அந்த  ஊர்தி வலம் வந்தது.

republic_00386.jpg

குலசேகரம் தசரா விழாவைப் பிரதிபலிக்கும் காளி உருவமும் ஊர்தியில் இடம்பெற்றிருந்தது. இவ்வலங்கார ஊர்தியில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட அம்மன் சிலை முன்பு 12 பெண் நடனக் கலைஞர்களும், 6 ஆண் நடனக் கலைஞர்களும் பங்கேற்று, கிராமியப் பாடலுக்கேற்றார்போல் நடனமாடியது பார்வையாளர்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்து, மகிழ்வித்தது. 

16402750_986793351420646_793234669647432

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தமிழகத்தின் ஊர்தி சென்ற போது அதை மிகுந்த உன்னிப்பாக கவனித்தார். எழுந்து நின்று கைதட்டி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். குடியரசு தினவிழா முடிந்த பிறகு, நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் ஜனாதிபதிக்கு குடியரசு தின வாழ்த்துகளைப் பொதுமக்கள் தெரிவித்தனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது அணிவகுப்பில் கலந்துகொண்ட முப்படையினர், மாநிலங்கள் சார்பில்  அலங்கார ஊர்தி அணிவகுப்பில் கலந்துகொண்டவர்கள் ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், தமிழக அலங்கார ஊர்தியில் வந்த கலைஞர்கள் தன்னுடன் எடுத்துக்கொண்ட படத்தை கவர்  பிக்சராக வைத்துள்ளார். 

.vikatan

குடியரசு தின விழா: தமிழக அலங்கார ஊர்திக்கு 3-வது பரிசு!

tamilnadu tableau

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநில சிறப்புகளை எடுத்துரைக்கும் விதத்தில் ஊர்திகள் அணிவகுத்து வந்த. அதில், தமிழகத்தை சிறப்பிக்கும் வகையில் கரகாட்டத்தை மையமாக வைத்து அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திக்கு 3-வது பரிசு வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்துடன் இந்த பரிசை பங்கிட்டு கொள்கிறது தமிழகம். முதல் இடத்தை அருணாச்சல பிரதேச மாநிலம் பெற்றுள்ளது. 2-ம் இடத்தை திரிபுரா பெற்றது.

  • தொடங்கியவர்

 

 

126p11.jpg

அன்புடன் சேவாக்!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றபின் பல்வேறு விஷயங்களில் தான் தெரிவிக்கும் கருத்துகளால் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார் அதிரடி நாயகன் வீரேந்தர் சேவாக். சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்துக்கு தமிழில் வாழ்த்து கூறிய சேவாக்கின் ட்வீட் வைரலானது. `அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன். அமைதியைத் தொடருங்கள். அன்புடன்' என்ற அவரது ட்வீட் நெட்டிசன்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சில நாட்களில் 55,000 பேர் லைக் செய்ததோடு, 27,000 பேர் அந்த ட்வீட்டைப் பகிர்ந்தனர். தேசிய அளவிலான ட்ரெண்டில் @virendrashwag பெயர் இடம்பெற்றதோடு, தமிழக மக்கள் மனதிலும் சேவாக் இடம்பிடித்தார். லவ் யூ சேவாக்!


126p2.jpg

இளைஞர்களின் வெற்றி!

சென்னை மெரினா கடற்கரை உட்பட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டங்கள்தான் கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தின் ட்ரெண்டிங் டாபிக்காக இருந்தது. இளைஞர்களின் போராட்டத்தை அடுத்து அவசரச்சட்ட முன்வரைவு, தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து, பிப்ரவரி 5-ம் தேதி மதுரை அவனியாபுரத்திலும், பிப்ரவரி 2-ம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழக மக்களின் இந்தப் போராட்டம் உலக அளவில் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இதனைக் கொண்டாடும் விதமாக #jallikattuforever #nandrigalkodi போன்ற டேக்குகளில் நெட்டிசன்கள் தங்களது வெற்றிக்களிப்பைக் ஷேர் செய்ததில், தமிழக அளவிலான ட்ரெண்டில் முன்னிலை பெற்றன. #ஜெய் ஹோ!


126p3.jpg

சர்ச்சை நாயகன்!

சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்து நெட்டிசன்களிடம் அடிக்கடி வாங்கிக்கட்டிக் கொள் வதை வழக்கமாக வைத்திருப்பவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. சில மாதங்களுக்கு முன்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிக் கூறிய கருத்துகளால், ரஜினிகாந்த் ரசிகர்கள் ராம் கோபால் வர்மாவை ட்விட்டரில் தாளித்தெடுத்தனர். இந்நிலையில் மெரினாவில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்தைக் கேலி செய்யும் விதமாக, `1000 காளைகளால் துரத்தவிட்டு, அதன்பின்னர் ஜல்லிக்கட்டுப் பற்றி போராட்டக்காரர்களிடம் கருத்துக் கேட்க வேண்டும்' என்று இவர் செய்த ட்வீட், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் சில திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் எதிர்வினையாற்றியதில், #RGV @RGVzoomin பெயர் ட்ரெண்டில் இடம்பெற்றது. கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல!


126p4.jpg

கலக்கிய இந்திய கிரிக்கெட் அணி!

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டித் தொடர் கடந்த வாரம் நடந்து முடிந்தது. டெஸ்ட் தொடரைப் போல் ஒருநாள் தொடரிலும் இங்கிலாந்தை வொய்ட் வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியது. ஆனால், கடைசிப் போட்டியில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தொடரை வென்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட தொடராக இது அமைந்தது. மொத்தம் 2,090 ரன்கள் இரு அணிகளாலும் ஸ்கோர் செய்யப்பட்டது. ஆறு இன்னிங்ஸ்களிலும் 300 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் ட்ரெண்டில் #IndVsEng டேக் முன்னிலை வகித்தது. கமான் இந்தியா!


126p5.jpg

மனிதி வெளியே வா!

சமூகத்தில் பெண் குழந்தை களுக்கு சமத்துவம் கிடைக்கவும், வாய்ப்புகள் வழங்கப்படவும் வேண்டுமென்பதை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 24-ம் தேதி தேசியப் பெண் குழந்தைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தினத்தை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என மல்யுத்த வீராங்கனை கீதா போகட் வெளியிட்ட வீடியோ முன்னரே வைரல் ஆனது. பிரதமர் மோடி உட்பட பல்வேறு பிரபலங்களும் இத்தினத்தன்று தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்ததில் #NationalGirlChildDay ட்விட்டர் ட்ரெண்டில் முதலிடம் பிடித்தது. நெட்டிசன்களும் தங்கள் சகோதரிகளைப் பற்றி பெருமிதமாக எழுதிய ட்வீட்கள் காண்போரை நெகிழச் செய்யும்படியாக இருந்தன. வாவ்!


126p6.jpg

பதக்க மங்கை சாய்னா!

இந்தியாவின் நட்சத்திர பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் சமீபத்தில் நடந்து முடிந்த, மலேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பேட்மின்டன் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இறுதிப்போட்டியில் மலேசிய வீராங்கனையை 22-20, 22-20 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் சாய்னா. இப்போட்டி நடந்து முடிந்த சிறிது நேரத்திலேயே ட்விட்டர் ட்ரெண்டில் @nsaina ஆதிக்கம் செலுத்தினார். கடந்த வருடம் காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற்ற பின், சாய்னா வெல்லும் முதல் தொடர் இது. சமீபத்தில் நடந்து முடிந்த பிரீமியர் பேட்மின்டன் லீக்கின் அரை இறுதிப் போட்டியில், சக இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவிடம் தோல்வியைத் தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆல் தி பெஸ்ட் சாய்னா!

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜனவரி 29
 

article_1422506998-Railway.jpg1814: ரஷ்;யாவையும் பிரஷ்யாவையும் பிரீயென்னே யுத்தத்தில் பிரான்ஸ் தோற்கடித்தது.

1834: அமெரிக்காவில் தொழிலாளர் கிளர்ச்சியை அடக்குவதற்கு ஜனாதிபதி அன்ட்ரூ ஜக்ஸன் முதல் தடவையாக இராணுவத்தை பயன்படுத்தினார்.

1916: முதலாம் உலக யுத்தத்தில் பாரிஸ் நகரம் மீது ஜேர்மனிய ஸெப்பளின்களின் மூலம் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.

1918: சோவியத் யூனியனுக்கு எதிராக உக்ரேனில் கிளர்ச்சி ஏற்பட்டது.

1940: ஜப்பானின் ஒசாகா நகரில் மூன்று ரயில்கள் மோதிக் கொண்டதால் 181 பேர் பலி.

1996: அணுவாயுத பரிசோதனைகளை பிரான்ஸ் நிறுத்திக்கொள்வதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜக் சிராக் அறிவித்தார்.

2001: இந்தோனேஷியாவில ஜனாதிபதி அப்துர் ரஹ்மான் வாஹிட்டை இராஜினாமா செய்யக்கோரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

2005: 1949 ஆம் ஆண்டின்பின் முதல் தடவையாக சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆப்ரிக்காவின் சிறந்த புகைப்படங்கள்

ஆப்ரிக்க கோப்பைக்கான கால்பந்து போட்டியில் டோகோ தேசிய கால்பந்து அணி திங்கள்கிழமை நடத்தியதொரு பயிற்சியை நின்று பார்க்கும் கபோன் தொழிலாளர்கள்

ஆப்ரிக்க கோப்பைக்கான கால்பந்து போட்டியில் டோகோ தேசிய கால்பந்து அணி திங்கள்கிழமை மேற்கொண்ட பயிற்சியை கவனிக்கும் கபோன் தொழிலாளர்கள்

மருத்துவமனை சேவைகளில் குழப்பங்கள் உருவாக காரணமான ஊதியப் போராட்டம் தொடர்கையில், நூற்றுக்கணக்கான கென்ய மருத்துவர்களும், அவர்களது ஆதரவாளர்களும் நைரோபியின் மத்தியில் வியாழக்கிழமை நடத்திய போராட்டம்.

ஊதிய உயர்வு கோரி நூற்றுக்கணக்கான கென்ய மருத்துவர்களும், அவர்களது ஆதரவாளர்களும் நைரோபியின் மத்தியில் வியாழக்கிழமை நடத்திய போராட்டம்.

துனிஷியாவின் டேஸியுரில் நடைபெற்ற கலாசார நிகழ்வான ஒயாஸிஸ் பண்டிகையின் கடைசி நாளான வெள்ளிக்கிழமையன்று, லிபியாவின் கிராம குழுவை சேர்ந்த ஒருவர் அவருடையே மோதிரத்தை காட்டுகிறார்.

துனிஷியாவின் டேஸியுரில் நடைபெற்ற கலாசார நிகழ்வான ஒயாஸிஸ் பண்டிகையின் கடைசி நாளான வெள்ளிக்கிழமையன்று, லிபியாவின் கிராம குழுவை சேர்ந்த ஒருவர் அவருடையே பாரம்பரிய மோதிரத்தை காட்டுகிறார்.

ஞாயிற்றுக்கிழமையன்று தனாகில் பள்ளத்தாக்கிலுள்ள உப்பளத்தில் கையால் எடுக்கப்பட்ட உப்பை சுமந்து செல்லும் எத்தியோப்பிய ஒட்டகங்கள். பூமியிலுள்ள மிகவும் வெப்பமான மற்றும் மிகவும் விருந்தோம்பலற்ற இடங்களில் ஒன்றில் நடைபெறும் பழைய வர்த்தகம் இதுவாகும். An

ஞாயிற்றுக்கிழமையன்று தனாகில் பள்ளத்தாக்கிலுள்ள உப்பளத்தில் கையால் எடுக்கப்பட்ட உப்பை சுமந்து செல்லும் எத்தியோப்பிய ஒட்டகங்கள். பூமியிலுள்ள மிகவும் வெப்பமான மற்றும் வாழ்வதற்கு மிகவும் சவாலான இடங்களில் ஒன்றில் நடைபெறும் பழைய வர்த்தகம் இதுவாகும்.

மொராக்கோவின் பகுதிகளில் குளிர் அதிகரித்து காணப்படுகையில், வெள்ளிக்கிழமையன்று இஃப்ரானே நகரத்தில் பனியில் நடந்துசெல்லும் மனிதர். .

மொராக்கோவின் பகுதிகளில் குளிர் அதிகரித்து காணப்படுகையில், வெள்ளிக்கிழமையன்று இஃப்ரானே நகரத்தில் பனியில் நடந்துசெல்லும் நபர்.

செவ்வாய்கிழமையன்று மொராக்கோ ஐவரி கோஸ்டை தோல்வியடைய செய்து, நாடுகளுக்கு இடையிலான கோப்பையின் காலிறுதி கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற வெற்றி கொண்டாட்டங்கள் ரபாத்தின் தெருக்களில் இடம்பெற்றன.

செவ்வாய்கிழமையன்று மொராக்கோ, ஐவரி கோஸ்டை தோல்வியடைய செய்து, நாடுகளுக்கு இடையிலான கோப்பையின் காலிறுதி கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற வெற்றி கொண்டாட்டங்கள் ரபாத்தின் தெருக்களில் இடம்பெற்றன.

சனிக்கிழமையன்று லைபீரியாவில் ஜனநாயக மாற்றத்திற்கான எதிர்க்கட்சி கூட்டணியால் நடத்தப்பட்டதொரு மன்ரோவியா பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அக்டோபர் மாதம் நடைபெறுகின்ற லிபியாவின் அதிபர் தேர்தலில் முன்னாள் கால்பந்து வீரர் ஜார்ஜ் வியா, சார்லஸ் டெய்லரின் முன்னாள் மனைவியோடு போட்டியிட இருக்கிறார்.

சனிக்கிழமையன்று லைபீரியாவில் ஜனநாயக மாற்றத்திற்கான எதிர்க்கட்சி கூட்டணியால் நடத்தப்பட்ட மன்ரோவியா பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அக்டோபர் மாதம் நடைபெறுகின்ற லிபியாவின் அதிபர் தேர்தலில் முன்னாள் கால்பந்து வீரர் ஜார்ஜ் வியா, சார்லஸ் டெய்லரின் முன்னாள் மனைவியோடு போட்டியிட இருக்கிறார்.

வெள்ளை மாளிகையில் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற ஒரு நாளுக்கு பின்னர், உலக அளவில் பெண்களின் போராட்டங்கள் நடைபெற்றன. தென் ஆப்ரிக்க நகரான டர்பனின் தெருக்களிலும் இந்த போராட்டம் நடைபெற்றது.

வெள்ளை மாளிகையில் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற ஒரு நாளுக்கு பின்னர், உலக அளவில் பெண்களின் போராட்டங்கள் நடைபெற்றன. தென் ஆப்ரிக்க நகரான டர்பனின் தெருக்களிலும் இந்த போராட்டம் நடைபெற்றது.

அதிபர் தேர்தலுக்கு பிறகு உருவான குழப்பங்களுக்கு பிறகு இறுதியில், 22 ஆண்டுகள் காம்பியாவை ஆண்டு வந்த யாக்யா ஜாமே நாட்டைவிட்டு வெளியேறியதை தொடர்ந்து, அவருடைய சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

அதிபர் தேர்தலுக்கு பிறகு உருவான குழப்பங்களுக்கு பிறகு இறுதியில், 22 ஆண்டுகள் காம்பியாவை ஆண்டு வந்த யாக்யா ஜாமே நாட்டைவிட்டு வெளியேறியதை தொடர்ந்து, அவருடைய சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

http://www.bbc.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகத்துக்கு ஐந்து சவால்கள்!

மருதன்

 

டொனால்ட் ட்ரம்ப்பின் வருகையோடு பிறந்திருக்கிறது 2017. சர்வதேச அரசியல் எந்தப் பாதையை நோக்கிச் செல்கிறது என்பதற்கு ட்ரம்ப்பின் வருகை மிக முக்கியமான குறியீடு. 2017-ம் ஆண்டில்  உலகம் மிக முக்கியமான ஐந்து பிரச்னைகளைச் சந்திக்க இருக்கிறது. எதிர்காலம் என்பது இறந்த காலத்தின் தொடர்ச்சியே என்பதால், சென்ற ஆண்டின் தீர்க்கப்படாத பிரச்னைகள் அனைத்தும் இந்த ஆண்டு மேலும் பலம்பெற்று, நம்மை அச்சுறுத்தும். இந்த அச்சுறுத்தலைப் போக்க என்ன வழி?

p52.jpg

போரும்... சமாதானமும்...

‘வரலாறு காணாத கிரிமினல் தாக்குதல்கள் சிரியாவின் மீது நடத்தப்பட்டுள்ளன’ என ஒப்புக்கொள்கிறது ஐ.நா சபை. சிரியாவின் மிகப் பெரிய நகரம் அலெப்போ முற்றிலும் சீரழிக்கப்பட்டுள்ளது. `தி எக்கனாமிஸ்ட்' குறிப்பிடுவதைப்போல் அழிக்கப்பட்டதன் மூலம் பிரபலம் அடைந்த ஒரு பிரதேசமாக அலெப்போ இன்று மாறியிருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப் பட்டிருக்கிறார்கள்; காணாமல் போயிருக்கிறார்கள். மனிதர்களோடு சேர்ந்து ஆயிரம் ஆண்டுகால இஸ்லாமியப் பாரம்பர்யமும் அழிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு இடங்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டுள்ளன.

ஏன் இந்த அழிவு ஏற்பட்டது? எதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் இறக்க வேண்டும்?  இதற்குக் காரணம் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதமா அல்லது ஆளும் ஆசாத் அரசாங்கமா அல்லது அவர்களுக்கு உதவுவதாகச் சொல்லி போர் விமானங்களை அனுப்பி, மேலும் அழிவைத் துரிதப்படுத்திய ரஷ்யாவா, அல்லது மூவருமா? இந்தக் கேள்விகளைச் சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு ஓர் அடிப்படை உண்மையை ஒப்புக்கொள்வோம். சிரியா, நம் கண் முன்னால் அழிந்திருக்கிறது. நம் கண் முன்னால் அலன் குர்தியின் குழந்தை உடலை, கடல் அலைகள் கொண்டுவந்து தள்ளியிருக்கின்றன. நம் கண் முன்னால் ஒரு தேசம் அழிந்திருக்கிறது.

நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து சிரியாவை ஏமாற்றியிருக்கிறோம். 2016-ம் ஆண்டு நமக்குப் போதித்திருக்கும் அச்சுறுத்தும் உண்மை இதுதான். உலகம் மூர்க்கமானது. எப்போதும், எங்கும் போர் மூளலாம். கழுத்தை அறுத்துக் கொல்லும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகள் மட்டும் அல்ல, ஜனநாயகத்தை உயர்த்திப்பிடிக்கும் அரசாங்கங்களாலும் அப்பாவி மக்களைப் பாரபட்சம் இன்றி கொல்லமுடியும் என்பதை அலெப்போ நிரூபித்திருக்கிறது. மேற்கத்திய நாடுகள் மேலானவை, ஜனநாயகம், மனித உரிமைகள் போன்ற மாண்புகளை உயர்த்திப்பிடிப்பவை எனும் நம்பிக்கையை அலெப்போ உடைத்து எறிந்திருக்கிறது. அலெப்போவின் அழிவுக்குக் காரணம் ‘நமக்கு என்ன?’ என்னும் மனநிலை. ‘எங்கோ, யாருக்கோ நடைபெறும் அநீதி என்னையும் என் குடும்பத்தையும் பாதிக்காது’ என்னும் சமாதானம். இந்தச் சமாதானம் போரையும் அழிவையும்தான் ஏற்படுத்தும் என்பதை 2016-ம் ஆண்டு உணர்த்துகிறது. இந்த மனநிலையை இந்த ஆண்டாவது உதறித்தள்ள முடியுமா?

p53a.jpg

பெருகும் வேலிகள்

அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல உலகத்துக்கே  ட்ரம்ப்பின் வெற்றி என்பது சுயநலத்தின் வெற்றி. நான் ஏன் மற்றவர்களுக்காகப் பாரம் சுமக்க வேண்டும் என்னும் சலிப்பின் வெற்றி. என் வளம், என் நாடு, என் எல்லை என்னும் தேசியப் பெருமிதத்தின் வெற்றியும்கூட.

ஐரோப்பிய யூனியனிடம் இருந்து துண்டித்துக்கொண்டதன் மூலம் பிரிட்டன் தெரிவித்திருக்கும் செய்தி, ட்ரம்ம்பின் செய்தியோடு ஒன்றிப்போகிறது. ‘உங்களுக்கு லாபம் கிடைக்காத எந்தக் கூட்டமைப்பிலும் நீங்கள் அங்கம்வகிக்கத் தேவை இல்லை. மற்றவர்களுடன் உங்கள் செல்வத்தைப் பகிர வேண்டிய அவசியம் இல்லை.’ `உலகமே ஒரு கிராமம்’ என்பது உலகமயமாக்கலின் முழக்கம் என்றால், பிரெக்ஸிட்டின் முழக்கம் அதற்கு நேர் எதிரானதாக இருக்கிறது. அரசியல்வாதிகள் மட்டும் அல்ல, மக்களில் ஒரு பெரும் பகுதியினரும்கூட நாம் நன்றாக இருந்தால் போதும் எனும் மனநிலையைத் தழுவிக்கொண்டதையே பிரெக்ஸிட் உணர்த்துகிறது. இந்த உணர்வை அரசியல் ஆதாயங்களுக்காக அரசியல்வாதிகள் மேலும் வளர்த்து எடுப்பார்கள். பிரெக்ஸிட் மாடலை நாமும் பின்பற்றுவோம் என மற்ற நாடுகளும் யோசிக்கும். புத்தாண்டின் ஆகப் பெரிய சவால் இதுதான். நாம் மேலும் மேலும் வேலிகளை உருவாக்கிக்கொண்டே போகப்போகிறோமா அல்லது பாலங்கள் அமைக்கப் போகிறோமா?

p52a.jpg

கூர்மை அடையும் ஏற்றத்தாழ்வுகள்

அரசின் தலையீடு சிறிதும் இன்றி சந்தை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்னும் நியோ லிபரல் சித்தாந்தம் 80-களில் ஆரவாரத்துடன் உயர்த்திப்பிடிக்கப்பட்டது. மக்களுக்கான பொதுச்சேவைகளை அரசு குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும், பொதுத் துறை நிறுவனங்களுக்குப் பதிலாகத் தனியார்களையே அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வாதிட்டனர். பிரிட்டனில் மார்கரெட் தாட்சரும் அமெரிக்காவில் ரொனால்ட் ரீகனும் இந்த வழிமுறைகளை ஏற்று, புதிய நியோலிபரல் பொருளாதார அமைப்பை நிறுவினார்கள். இந்தப் பொருளாதாரக் கொள்கையைப் பெரும்பாலான உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுவிட்டன.

ஆனால், சமீபத்திய பல ஆய்வுகள் இரண்டு உண்மைகளை விரிவான புள்ளிவிவரங்களோடு உணர்த்துகின்றன. முதலாவது, நியோலிபரல் கொள்கை வளத்தைவிட வறுமையையே உலகில் அதிகம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. இரண்டாவது, மேல் மட்டத்தில் உள்ளவர்களுக்குச் சாதகமாகவும் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு எதிராகவும் நியோலிபரல் பொருளாதாரம் இயங்குகிறது. குறிப்பிட்ட சில பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியை ஒட்டுமொத்தத் தொழில் துறையின் வளர்ச்சியாகக்கொள்ள முடியாது. சில முன்னேறிய நாடுகள் ஈட்டிய வளத்தைக்கொண்டு நியோலிபரல் பொருளாதாரத்தைக் கடைப்பிடிக்கும் எல்லா நாடுகளும் வளம்பெற்றுவிட்டதாகச் சொல்ல முடியாது. செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதை இடதுசாரிகள் மட்டும் அல்ல, பில் கேட்ஸ், வாரன் பஃபெட் தொடங்கி பல பெரும் பணக்காரர்களே ஒப்புக்கொள்கிறார்கள். நிக் ஹானெவர் எனும் அமெரிக்கத் தொழில்முனைவோர் சமீபத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார்... ‘ஒரே ஒரு சதவிதம் பேர் மட்டும்தான் கற்பனைக்கும் எட்டாத அளவுக்குப் பெரும் செல்வம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். மீதம் உள்ள 99 சதவிகிதம் பேர் அவர்கள் மீதான தீராத வெறுப்புடன் இருக்கிறார்கள்'. எனில், அரசாங்கம் யாருக்காகச் செயல்பட வேண்டும்? மிகப் பெரும்பான்மையினரான 99 சதவிகித மக்களுக்காகவா அல்லது ஒரு சதவிகிதத்தினருக்காகவா? ஏற்கெனவே கூர்மை அடைந்திருக்கும் ஏற்றத்தாழ்வைச் சரிசெய்ய அரசாங்கங்கள் என்ன செய்ய உத்தேசித்திருக்கின்றன?

p53aa.jpg

அதிகாரமும்... அலட்சியமும்...

அமெரிக்கா,  ஐரோப்பா, ஆசியா என பல இடங்களில் வலதுசாரிகள் பலம்பெற்றுவிட்டனர். இராக்கில் முதலாளித்துவம் நிலைபெற்றுவிட்டது. ரஷ்யாவில் இருப்பது ஒரு வகையான கேங்ஸ்டர் முதலாளித்துவம். மத்திய ஆசியாவில் உள்ள அதிபர்கள் எல்லாம் கிட்டத்தட்ட வாழ்நாள் ஆட்சியாளர்களாக நிரந்தரமாக நாற்காலியில் அமர்ந்திருக்கின்றனர். முடியாட்சி, நிலப்பிரபுத்துவச் சிந்தனையுடன் அலட்சியமாகச் செயல்பட்டும் ஆட்சியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஜனநாயக உணர்வுகளுக்கும் லிபரல் சிந்தனைகளுக்குமான வெளி முன்னெப்போதைக் காட்டிலும் இப்போது குறைந்துவருகிறது. ஜனநாயகம் என்பதற்கான பொருளே இன்று முற்றிலுமாகத் திரிந்துவிட்டது. பாகிஸ்தானும் இராக்கும் ஆப்கானிஸ்தானும் சிரியாவும் ஜனநாயக, குடியரசு நாடுகள் என்றுதான் தங்களை அறிவித்துக்கொள்கின்றன. டொனால்ட் ட்ரம்ப் ஜனநாயகம் தேர்ந்தெடுத்த ஓர் அதிபர். ஜனநாயக முறையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படிதான் பிரெக்ஸிட் நடைபெற்றிருக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டில் உள்ளவர்கள் கூடிப் பேசி விவாதித்துதான் இன்னொரு ஜனநாயக நாட்டின் மீது குண்டுகளைப் போடுகிறார்கள். எனில், ஜனநாயகம் என்பதன் பொருளை இவர்கள் எவ்வாறு அர்த்தப்படுத்துகிறார்கள், மக்களாட்சி என்பதை இவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்... இந்தக் கேள்விகளுக்கு இந்த ஆண்டாவது நாம் தெளிவான விடைகளைக் கண்டறிய வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதாலேயே ஒரு பிரதமர் அல்லது அதிபர், தான் நினைத்ததை எல்லாம் செய்துவிட முடியாது. பெரும்பான்மை வாக்குகள் பெற்ற ஒருவர் சர்வாதிகாரியாக மாறிவிட மாட்டார். ஆனால், இன்று பல ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தை இப்படித்தான் புரிந்துவைத்திருக் கின்றனர். என்ன வேண்டுமானாலும் செய்வதற்கான அதிகாரத்தை, தேர்தல் வெற்றி உங்களுக்கு அளித்துவிடவில்லை என்பதை, ஆட்சியாளர்களுக்கு மக்கள் அழுத்தமாக உணர்த்த வேண்டும். அதற்கு ஒரு வழிதான் இருக்கிறது. போராடுவதற்கான வலுவை வளர்த்துக்கொள்வது.

அதிகரிக்கும் வெறுப்பு அரசியல்

ட்ரம்ப்பின் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்காவில் இன, நிற, வர்க்கப் பாகுபாடுகள் மேலும் கூர்மையடையும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.  அதற்கான தெளிவான அறிகுறிகள் சென்ற ஆண்டு இறுதியிலேயே தெரிந்துவிட்டன.  அமெரிக்காவில் மட்டும் அல்ல பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா, இந்தியா... போன்ற பல நாடுகளிலும் பாகுபாடுகள் அதிகரித்துவருகின்றன. இங்கு உள்ள அரசாங்கங்கள் அனைத்தும் பெரும்பான்மை மக்களின் அரசாங்கமாகச் செயல்பட்டுவருவதும், இந்த நிலை ஏற்பட்டதற்கு ஒரு காரணம். சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை அகற்றுவதற்குப் பதிலாக அவற்றை மேலும் வளர்த்து எடுத்து அரசியல் ஆதாயம் அடைந்துவருகிறார்கள் அரசியல் தலைவர்கள். டொனால்ட் ட்ரம்ப் ஓர் உதாரணம் மட்டுமே. தங்களுடைய வெற்றிக்கு அவர்கள் வெறுப்பு அரசியலை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். பாதிப்பு எப்போதும்போல் மக்களுக்குத்தான். இந்த நிலை மாற, பெரும்பான்மை வாதத்தையும் வெறுப்பு அரசியலையும் முறியடிப்பதற்கான வழிமுறைகளை நாம் உடனடியாகக் கண்டறிய வேண்டும்!

vikatan

  • தொடங்கியவர்

சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் நிச்சயதார்த்தம் - வைரல் போட்டோஸ்

நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் இன்று ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் இனிதே நடந்து முடிந்துள்ளது. குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் சமந்தா கிரிஷா பஜாஜ் டிசைன் செய்த சேலையை அணிந்திருந்தார். திருமண தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நிச்சயதார்த்த போட்டோக்கள் செம வைரல். 

Samantha - Chaitanya

Samantha-Chaitanya

Samantha-chaitanya

Samantha-Chaitanya

vikatan

  • தொடங்கியவர்

இப்படியும் ஒரு வினோதம்: ‘பீட்சா’வை காதலித்து திருமணம் செய்த பெண்

பீட்சாவை காதலித்து அதையே ஒரு பெண் திருமணம் செய்த வினோத நிகழ்ச்சி நடந்துள்ளது.

 
இப்படியும் ஒரு வினோதம்: ‘பீட்சா’வை காதலித்து திருமணம் செய்த பெண்
 
லண்டன்:

தனது வாழ்க்கையில் ஏதாவது ஒரு வினோதம் நிகழ்த்த வேண்டும் என்ற ஆசை பெரும்பாலானோருக்கு இருக்கும். ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ‘பீட்சா’ என்றால் கொள்ளை பிரியம்.

பல வகையான ‘பீட்சா’க்களை சாப்பிட்டு ருசி பார்த்த அவர் அதையே திருமணமும் செய்து கொண்டார். அந்த இளம் பெண்ணின் பெயர் கிறிஸ்டினா வாக்னர் (18).

‘பீட்சா’ மீது அளவுக்கு அதிகமாக பிரியம் கொண்ட கிறிஸ்டினாவுக்கு அதன் மீது காதல் ஏற்பட்டது. எனவே பீட்சாவையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த அவர் தனது பாட்டியின் திருமண உடையை எடுத்தார்.

அதை எடுத்து அணிந்து தன்னை புது மணப்பெண் ஆக்கி கொண்டார். இந்த விவரத்தை தனது நெருங்கிய நண்பரும், புகைப்பட கலைஞருமான மெர்சி ஹாரிசிடம் தெரிவித்தார்.

உடனே அவர் கிறிஸ்டினா வீட்டிற்கு விரைந்து வந்தார். அதை தொடர்ந்து திருமண உடையுடன் பீட்சாவை கையில் ஏந்தியபடியும், கடித்து சுவைத்தபடியும் போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுத்தார்.

பீட்சாவை தான் திருமணம் செய்து கொண்டதாகவும் அதை கணவராக ஏற்றுக் கொண்டதாகவும் ‘பேஸ்புக்’ கில் தகவல் வெளியிட்டார். பல போட்டோக்களையும் உடன் பிரசுரித்து ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

 

கிளிக் - தொழில்நுட்ப காணொளி

தென் கொரியாவில் காலதாமதமாக வெளியான போக்கிமோன் கோ விளையாட்டு, செயற்கை அறிவை பயன்படுத்தி புகைப்படங்களை கொண்டு தோல் புற்றுநோயை அடையாளம் காணலாம் என்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி உள்ளிட்ட காணொளி

  • தொடங்கியவர்

விநோத சிற்பங்கள், வித்தியாசமான கட்டிடங்கள்

கட்டிடக் கலையும் சிற்பக் கலையும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. தொடக்க காலக் கட்டிடங்கள் பலவற்றிலும் சிற்பங்களின் பங்கு முக்கியமானவை. மேற்கில் தேவாலயங்களிலும், கோட்டைகளிலும் சிற்பங்கள் அதிக அளவில் உண்டு. நம்முடைய நாட்டிலும் கோயில் கட்டிடக் கலைகளில் சிற்பங்களைப் பிரித்துப் பார்க்க முடியாது. இன்றைய நவீன காலகட்டத்தில் சிற்பங்களின் பயன்பாடு கட்டிடங்களில் இல்லாமல் ஆகிவிட்டது. இந்தச் சூழலில் விநோதமான சிற்பங்களைக் கொண்ட கட்டிடங்களைக் குறித்த ஒளிப்படத் தொகுப்பு:

collage_3124209f.jpg

 

attack_3124212f.jpg

blue_bear_3124211f.jpg

 

buddha_3124210f.jpg

cone_3124208f.jpg

crazy_3124207f.jpg

dog_3124206f.jpg

ripley_3124204f.jpg

gandhi_3124205f.jpg

tamil.thehindu.

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...
ஜனவரி 30

 

1648 : நெதர்லாந்துக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் உடன்பாடாகியது.


1649 : இங்கிலாந்தின் முதலாம் சார்ள்ஸ் மன்னன் தூக்கிலிடப்பட்டார்.


1649 : இரண்டாம் சார்ள்ஸ் தன்னை இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் மன்னனாக அறிவித்தார். எனினும் எவரும் அவரை மன்னனாக அங்கீகரிக்கவில்லை.


1820 : எட்வர்ட் பிரான்ஸ்ஃபீல்ட் , அந்தார் டிக்காவில் தரையிறங்கினார்.


1835 : ஐக்கிய அமெரிக்கக் ஜனாதிபதி அண்ட்ரூ ஜக்ஸன் கொலை முயற்சியில் இருந்து தப்பித்தார்.


1889 : ஆஸ்திரியாவின் இளவரசர் ருடோல்ஃப் தனது காதலியுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.


1933 : அடொல்ஃப் ஹிட்லர் ஜேர்மனியின் அதிபராக (சான்ஸ்லர்) பதவியேற்றார்.


1943 : இரண்டாம் உலகப் போர்: உக்ரேனில் லேத்திச்சிவ் என்ற இடத்தில் யூதர்கள் ஆயிரக்கணக்கில் நாசிகளால் கொல்லப்பட்டனர்.


1945 : இரண்டாம் உலகப் போரின்போது பால்ட்டிக் கடலில் ஜேர்மன் அகதிகளுடன் சென்றுகொண்டிருந்த வில்ஹெல்ம் கூஸ்ட்லொஃப் என்ற பயணிகள் கப்பல் சோவியத் நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கப்பட்டதில் அதில் பயணம் செய்த சுமார் 9,500 பேர் கொல்லப்பட்டனர்.


894varalaru-30-01-2017.jpg1948 : இந்திய தேசபிதா மகாத்மா காந்தி  நாதுராம் கோட்சேயினால் டில்லியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.


1956:  அமெரிக்க கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த மார்ட்டின் லூதர் கிங்கின் வீட்டின் மீது குண்டுவீசப்பட்டது.


1959: டைட்டானிக் போன்றே மூழ்கடிக்கப்பட முடியாத கப்பல் என கருதப்பட்ட ஹான்ஸ் டெஹடோவ்ட் எனும் கப்பலும் தனது முதல் பயணத்தில் பனிப்பாறையில் சிக்கி மூழ்கியது. அதில் பயணம் செய்த 95 பேரும் உயிரிழந்தனர்.


1964 : தென் வியட்நாமில் ஜெனரல் நியுவென் கான், இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.


1972 : வட அயர்லாந்தில் விடுதலைப் போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட 14 பேர் ஐக்கிய இராச்சிய துணை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


1972 : பொதுநலவாய அமைப்பிலிருந்து பாகிஸ்தான்  விலகியது.


1994 : பியோத்தர் லேக்கோ சதுரங்க ஆட்டத்தில் உலகின் முதலாவது வயதில் குறைந்த கிராண்ட் மாஸ்டர் ஆனார்.


2000 : கென்யாவின் விமானம் ஒன்று அத்திலாந்திக் சமுத்திரத்தின் ஐவரி கோஸ்ட் அருகில் வீழ்ந்ததில் 169 பேர் கொல்லப்பட்டனர்.


2003 : ஒரு பாலினத் திருமணத்தை பெல்ஜியம்  சட்டபூர்வமாக்கியது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

திங்கட்கிழமையை உங்களுக்குப் பிடித்த நாளாக மாற்ற வேண்டுமா? #MondayMotivation

முதலில் முகத்தில் சிறு புன்னகையை உதிருங்கள். பின்பு, இதைப் படிக்கத் தொடங்குங்கள். இன்று "திங்கட்கிழமை"

"வாரத்தின் எந்தக் கிழமை உங்களுக்குப் பிடிக்காது? "  என்ற கேள்விக்கு நம்மில் பலர் சொல்லும் விடை நிச்சயம் "திங்கட்கிழமை" என்பதாகத் தானிருக்கும். சிரிக்கும் ஸ்கூல் குழந்தைகளானாலும் சரி, முறைக்கும் ஆபிஸ் அங்கிள்களாக இருந்தாலும் சரி, "திங்கள்" அவர்களின் வெறுப்புப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும். ஆனால், அந்த ஒரு நாளை மட்டும் சிறப்பாக கடந்துவிட்டால், அந்த வாரமே அழகாகும் வாய்ப்பிருக்கிறது. சின்ன சின்ன விஷயங்களின் மூலம் உங்கள் திங்களை நீங்கள் அழகாக்கலாம்...

திங்கட்கிழமை சிரிப்போடு அழகாக்குங்கள்

 

ஞாயிறு இரவும், திங்கள் காலையும் :

மற்ற நாட்களைவிடவும் ஞாயிற்றுக் கிழமை சீக்கிரமாக தூங்கிவிடுங்கள். அது திங்கள் காலை சோர்வில்லாமல் நீங்கள் எழ உதவிடும். காலையில் சீக்கிரமே எழுந்து உங்கள் செல்லப்பிராணியோடு ஒரு செல்ல நடை, யோகாசனம் என அந்த நாளை தொடங்கலாம். சண்டே நேரத்துல தூங்குன்னு மண்டே சொல்றீங்களேனு நீங்கள் சொல்வது கேட்கிறது... அடுத்த சண்டே ஃபாலோ பண்ணுங்க பாஸூ!

நல்ல எண்ணங்கள், நல்ல செயலுக்கு வித்திடும் : 

கடந்த வாரம் ஏற்பட்ட எதிர்மறையான எண்ணங்களை நினைப்பதை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களை மட்டுமே நினைத்துப் பாருங்கள்.காலையை நேர்மறையான எண்ணத்தோடு துவங்கினால் அந்த நாள் முழுவதுமே உற்சாகமாக செய்லபட முடியும். ஆல் ஈஸ் வெல்.. ஆல் ஈஸ் வெல்!

அழகான திங்கட்கிழமை

குறைவாக திட்டமிடுங்கள் :

இதைச் செய்வோம்.. அதைச் செய்வோம் என்று மனசு மிக உற்சாகமாக பல திட்டங்கள் போடும். நோ... நோ.. Slow and steady wins the race! ஆம்... மற்ற நாட்களை விடவும் திங்கட்கிழமைகளில் குறைவாக திட்டமிட்டு பணியாற்றுங்கள்.கடினமான வேலைகளை முடிந்த அளவு குறைத்துக்கொள்ளுங்கள். அன்றைய வேலைகளை மட்டும் எளிதாக திட்டமிட்டால் திங்கட்கிழமைகளை எளிதாக கடக்கலாம்.

அழகான ஆடைகள், அட்டகாசமான திங்கள் :

உங்களுக்குள் ஒரு உத்வேகத்தை உருவாக்குவதில் நீங்கள் அணியும் ஆடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அதனால்தான், "ஆள்பாதி ஆடைபாதி" என சொல்வார்கள். அன்றைய தினம் நீங்கள் அணியும் ஆடைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த நிறத்தில் ஆடைகளை அணியுங்கள். 

மற்றவர் முகத்திலும் புன்னகையை உருவாக்குங்கள்: 

நண்பர்கள்,உறவினர்கள்,உடன் பணிபுரிபவர்கள் என யாராக இருந்தாலும்,  அந்த நாளில் ஒரு முறையாவது அவர்களின் முகத்தில் புன்னகையை உருவாக்க முயலுங்கள். அவர்களின் மகிழ்ச்சி உங்கள் வேலைப்பளுவை குறைத்து சுறுசுறுப்பாக வேலை செய்ய உதவும்.

உற்சாகமான திங்கட்கிழமை

வேலைகளை தள்ளிப்போடாதீர்கள்: 

அந்த வாரத்திற்கான வேலைகளை கூடுமானவரை வெள்ளிக்கிழமைகளில் முடித்து விடுங்கள். இல்லையென்றால், முடிக்காத வேலைகளை திங்கட்கிழமை மொத்தமாக செய்ய வேண்டியிருக்கும். அதனால் அன்றைய வேலையை அன்றே முடித்துவிடுங்கள்.

வாரத்தின் இறுதியை கொண்டாடுங்கள்:

ஞாயிற்றுக்கிழமைகளை குடும்பத்தினரோடு கொண்டாடுங்கள். நண்பர்களோடு அந்த நாளை செலவழியுங்கள். அன்றைய தினம் அலுவலகம் தொடர்பான வேலைகளை முற்றிலுமாய் தவிர்த்தால் தேவையில்லாத டென்ஷனை குறைக்கலாம். முழு ஆஃபீஸும் இப்போதெல்லாம் வாட்ஸ் அப்லயே நடக்குது பாஸ்... எங்க முடியுது என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. சண்டே அவரை காண்டாக்ட் பண்றது கஷ்டம்.. ஃபேமலியோட இருப்பார்’ என்று சொல்லும் வண்ணம் நீங்கள் உங்களை காட்டிக் கொள்ள வேண்டும்! யு கேன்! 

அப்புறமென்ன... இந்த நாளை மகிழ்ச்சியாய் தொடங்கிடுங்கள்!!!

vikatan

  • தொடங்கியவர்

46 வருடங்களை போன்சாய் மரங்களுக்காக செலவிட்ட போன்சாய் ஆர்வலர்!

போன்சாய்     

 மேலும்  போன்சாய் மரங்கள் படங்களை காண

சுமார் 1300 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த சீன மக்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமெனில் அவர்களுக்கு போன்சாய் மரங்களை அன்பளிப்பாக கொடுத்தால் போதும். சீனர்களுக்கு போன்சாய் மரங்கள் என்றால் அளவில்லாத விருப்பம். அக்காலக்கட்டத்தில் சீனர்களின் மிக உயர்ந்த பரிசு பொருளாக இந்த மரங்களே இருந்து வந்திருக்கிறது. பல வருடங்கள் இயற்கையான முறையில் பெரிய மரங்களை சிறியதாக்கி தொட்டியில் வளர்க்கும் மரங்களே போன்சாய் மரங்கள். நமது ஊரில் உள்ள ஆல மரம், அரச மரங்களைக்கூட இந்த முறையில் சிறிய மரமாக்கி வளர்க்கலாம். சுருக்கமாக சொல்லப்போனால் ஒரு மரத்தின் முதுமையான தோற்றத்தை சிறிய உருவத்தில் பெற வைக்கும் முறை. வருடங்கள் பல கடந்த போதும் இன்றளவும் இம்மரங்கள் அனைவராலும் விரும்பப்படும் கலையாகும்.

bonsai

 மேலும்  போன்சாய் மரங்கள் பற்றிய படங்களை காண

போன்சாயின் பிறப்பிடம் சீனாவாக இருந்தாலும் இந்த கலை ஜப்பானியர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த கலை பிற்காலங்களில் ஜப்பானிய கலையாகவே மாறிப்போனது. பல வருடங்களாக ஜப்பானிலேயே முடங்கி இருந்த இந்தக் கலை ஜென் புத்த மதத்தினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்று உலகம் முழுவதும் போன்சாய்க்கலை பரவி எல்லா மக்களுக்கும் பிடித்ததாக மாறியிருக்கிறது. 

bonsai

 மேலும்  போன்சாய் மரங்கள் பற்றிய படங்களை காண

 "நம் இந்தியாவில் இக்கலைகளுக்கெல்லாம் முன்னரே வாமண விருட்சம் எனும் குட்டை மரங்கள் இருந்தது" என தனது பேச்சை தொடங்குகிறார், ரவீந்திரன். தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலைப் பூர்விகமாகக் கொண்டவர். கடந்த மூன்று வருடங்களாக தக்கலையில் உள்ள பத்மநாதபுரம் அரண்மனை அருகே தனது "நிக்கி போன்சாய் பூங்கா" என அந்த மரங்களுக்காகவே தனியாக தோட்டம் அமைத்துள்ளார். அவருடன் பேசிக்கொண்டே பூங்காவிற்குள் நுழைந்தோம். பூங்காவுக்குள் நுழைந்தவுடன் நம் கண்களை நிறைத்தது போன்சாய் மரங்களால் பின்னப்பட்ட பசுமை வலைதான். ரவீந்திரன் போன்சாய் பற்றிய தனது தேடலை பகிர்ந்து கொண்டார். "500-க்கும் மேற்பட்ட வகைகளை கொண்டு 1000-க்கும் மேற்பட்ட  மரங்கள் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஓர் தேடலை நோக்கி நகர்வதுபோல, என்னுடைய தேடல் போன்சாய் மரங்களாகவே இருந்தது. 20 வயதில் ஆரம்பித்த என்னுடைய தேடலானது 66 வயதாகியும் இன்றும் ஓயவில்லை" என்றவர் தொடர்ந்தார்.

bonsai

 மேலும்  போன்சாய் மரங்கள் பற்றிய படங்களை காண

"சிறு வயதிலிருந்தே செடி வளர்ப்பது என்றால் எனக்கு அவ்வளவு இஷ்டம். என்னுடைய கல்லூரி காலத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மலர் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அங்கே நான் பல்வேறு செடிகளை பார்த்து கொண்டே கடந்தபோது ஒரு சிறிய தொட்டியும், அதில் வளர்க்கப்பட்டிருந்த குட்டையான மரமும் கண்ணில்பட்டது. இது என் மனதை பெரிதும் கவர்ந்தது. அதை பற்றி அங்கே பேராசிரியர் ஒருவரிடம் கேட்டபோது, 'இது தான் போன்சாய் எனும் ஜப்பானிய கலை' என்று சொல்லி என்னை ஆச்சிரியப்படுத்தினார்.

என் ஆர்வம் கட்டுக்கடங்காமல் போகவே எனது தேடலை ஆரம்பித்தேன். என்னுடைய முதல் போன்சாய் மரமாக ஆலமரம் ஒன்றை வளர்க்க ஆரம்பித்தேன். என்னுடைய அரைகுறை அறிவை கொண்டு ஆலமரம் வளர வளர அதன் கிளைகளை வெட்டிவிட்டுக் கொண்டே இருந்தேன். வருடங்கள் செல்ல போன்சாய் பற்றிய புத்தகங்களை வாசித்தும், அது சார்ந்த வகுப்புகளில் கலந்து கொண்டு முழுமையான அனுபவத்தை பெற்றுக் கொண்டேன். என் முதல் மரம்தான் எனக்கு எப்பவுமே ஸ்பெஷல். இன்று வரை அது என்னுடன் பயணிக்கிறது. ஒரு ஆலமரத்தில் தொடங்கிய என் பயணம் பல மரங்களாக மாறியிருக்கிறது. ஒரு கட்டத்தில் என் தோப்பில் இடம் கூட இல்லாமல் போனது.

bonsai

 மேலும்  போன்சாய் மரங்கள் பற்றிய படங்களை காண

 "பூங்கா அமைக்கலாம் என்ற யோசனை தோன்றியது. பின் பல்வேறு முயற்சிகளால் பூங்காவும் சாத்தியமானது. பூங்கா தொடங்கி 3 வருடங்கள் ஓடிவிட்டது. என்னுடைய 66 வருட வாழ்கையில் கிட்டத்தட்ட 46 வருடங்களை இக்கலைக்காகவே செலவழித்திருக்கிறேன். செலவழித்த வருடங்களுக்கு ஏற்ப பல்வேறு விருதுகளையும் தட்டி இருக்கின்றன இங்குள்ள போன்சாய் மரங்கள். இங்கு 30 வயதிற்கும் மேற்பட்ட போன்சாய் மரங்கள் இருக்கின்றன. இக்கலையை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது ஆசை. போன்சாய் குறித்து இன்று இந்தியா முழுவதும் வகுப்புகளும் எடுத்து வருகிறேன். நம் இந்திய நாடு மித வெப்ப மண்டல சூழ்நிலையை பெற்றுள்ளதால் அதற்கு தகுந்த மர வகைகளை தேர்ந்தெடுப்பது நலம். பின் தட்டையான தொட்டியில் குறைந்தது 3 முதல் 4 வருடங்கள் வரை வளருங்கள். மரமானது வளர வளர முறையாக வெட்டிவிடுங்கள். இதற்கிடையில் முறையான போன்சாய் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். பயிற்சியும் பொறுமையுடன் கூடிய தொடர்ச்சியான மரங்களின் பராமரிப்பும் உங்களை சிறந்த போன்சாய் வல்லுனராக மாற்றும். தன்னுடைய இலக்காக நம் ஊர்களின் மரங்களையும் போன்சாய் முறைக்கு இயற்கையாக ஒத்து வர வைப்பதுதான்" என்கிறார் மகிழ்ச்சியுடன்.

vikatan

  • தொடங்கியவர்

'பிரபஞ்ச அழகி 2017' மிட்டனரேவை ஜெயிக்க வைத்த அந்த 3 விஷயங்கள்!

'பிரபஞ்ச அழகி' போட்டியின் இறுதிச்சுற்றில் தேர்வான ஹைதி, தாய்லாந்து, ஃபிலிப்பைன்ஸ், கொலம்பியா, கென்யா மற்றும் ஃப்ரான்ஸ் என ஆறு தேசங்களின் அழகிகள் மேடைக்கு அழைக்கப்படுகிறார்கள். அது கேள்வி, பதில் நேரம்.

மிஸ் யுனிவர்ஸ் மிட்டனரே

''இன்று உலகெங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன அகதிகளின் துயரங்கள். உலக நாடுகளுக்கு அவர்களை ஏற்றுக்கொள்ளும் பொறுப்பு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? அல்லது ஒவ்வொரு நாட்டுக்கும் தங்கள் நாட்டின் எல்லையை மூடிக்கொள்ள உரிமை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?"

''உலக நாடுகள், தங்கள் நாட்டின் எல்லைகளை மூடிக்கொள்வது அல்லது திறந்துவிடுவது பற்றி அவர்கள் முடிவெடுத்துக்கொள்ளலாம். ஐரோப்பாவில் நாங்கள் திறந்த எல்லைகளையே கொண்டுள்ளோம். ஃபிரான்ஸில், எங்களால் முடிந்தளவுக்கு அதிகபட்ச உலகமயமாக்கலை நிகழ்த்தவே நாங்கள் விரும்புகிறோம். எந்தளவுக்கு மக்களை ஏற்றுக்கொள்ள முடியுமோ அந்தளவிற்கு நாங்கள் செய்கிறோம். இப்போது எங்களின் எல்லைகள் திறந்தே இருக்கின்றன. ஒருநாள் அகதிகளின் நிலை மாறும். நன்றி!"

மிஸ் யுனிவர்ஸ் மிட்டனரே

'மிஸ் யுனிவர்ஸ் 2017' பட்டத்தை வென்ற ஃப்ரான்ஸ் நாட்டு அழகி ஐரிஸ் மிட்டனரேவிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர் தந்த பதிலும் இதுதான். ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மிட்டனரே ஃப்ரென்சில் பதிலளிக்க, அது அரங்கில் மொழிப்பெயர்க்கப்பட்டது. ஸ்விம்சூட், ஈவினிங் கவுன், கேள்வி - பதில் நேரம், ஃபைனல் லுக் உள்ளிட்ட நான்குகட்ட தேர்வுகளைத் தாண்டி, 86 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்ட போட்டியில் வெற்றியை வசப்படுத்தியிருக்கிறார்  மிட்டனரே. ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மனிலாவில் நடந்த 65வது 'பிரபஞ்ச அழகி'ப் போட்டியில் ஹைதி நாட்டைச் சேர்ந்த ராக்வல் பெலிசியர் இரண்டாவது இடத்தையும், கொலம்பியா நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியா டோவர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.


மிட்டனரே

மிட்டனரே, பாரீஸை சேர்ந்தவர். டென்டல் சர்ஜரி மாணவி. இப்போது தனக்குக் கிடைத்திருக்கும் இந்தப் புகழ் வெளிச்சத்தை தன் துறைக்கான விழிப்பு உணர்வுக்குப் பயன்படுத்தப்போவதாகக் கூறியிருக்கிறார் இந்த மிஸ்.


மிட்டனரே

'மிஸ் கொலம்பியா' டோவர் நேற்று இரவு நிகழ்வின்போது, 'மிஸ் யுனிவர்ஸ்' நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஸ்டீவ் ஹார்வேயின் சென்ற வருட சொதப்பலைப் பற்றிப் பேசி கலகலப்பாக்க, அதனாலேயே அவர் நடுவர்கள், பார்வையாளர்கள் என்று எல்லா தரப்பினரின் கவனத்தையும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக ஈர்த்து ஸ்கோர் செய்தார். சென்ற வருடம் இறுதி மணித்துளியில், தொகுப்பாளர் ஸ்டீவ் ஹார்வே ஃபிலிப்பைன்ஸ் நாட்டு அழகி வென்றதை, கொலம்பியா நாட்டு அழகி வென்றதாக மாற்றி அறிவித்து, பின்னர் மன்னிப்புக் கேட்டு, மீண்டும் சரியாக அறிவித்து என... 'பிரபஞ்ச அழகி' நிகழ்வைவிட, அவரின் சொதப்பல் அப்போது டாப் டாபிக் ஆனது குறிப்பிடத்தக்கது.

நடுவர்கள் குழுவில், இதற்கு முன் 2011, 1994 மற்றும் 1993ம் ஆண்டு 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் வென்ற முன்னாள் பிரபஞ்ச அழகிகள் உட்பட, ஆறு பேர் இடம்பெற்றிருந்தனர்.


மிஸ் யுனிவர்ஸ் மிட்டனரே

இறுதியில் ஃபேஷன் உலகம் எதிர்பார்த்திருந்த அந்த மொமன்ட். தற்போதைய 'மிஸ் யுனிவர்ஸ்' பியா வர்ட்ஸ்பாச்  'முன்னாள்' ஆகி, தன் கிரீடத்தை மிட்டனரேவுக்கு சூட்ட...  அவர் நம்பவே முடியாத ஆச்சர்யத்துடனும் சந்தோஷத்துடனும் கண்ணீருடனும் அதை சூடிக்கொண்டார். 20 வயதுகளில் ஒரு பெண் சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கு தந்த உழைப்பும் முயற்சியும்தான், வருடா வருடம் இந்த கிரீடத்துடன் நாம் பார்க்க நேரிடும் அந்த ஆனந்தக் கண்ணீருக்குப் பின் இருக்கும் காரணங்கள்.

ஃபேஷனுக்கு பெயர் போன ஃப்ரான்ஸ் நாடு, இறுதியாக 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் வென்றது 1953ம் ஆண்டு. 63 வருடங்கள் கழித்து, இப்போது அந்த வெற்றியை தன் நாட்டுக்கு எடுத்துச் செல்கிறார் மிட்டனரே. அவரின் பெர்சனல் பக்கங்களின் அழகு, சிங்கிள் அம்மாவின் மகளாக வளர்ந்து இன்று உலகையே தன்னை கவனிக்க வைத்திருக்கும் அவரின் பாஸிட்டிவிட்டி. தன் மூன்று வயதில் தன் தாயும், தந்தையும் பிரிந்துவிட்ட சூழலை எதிர்கொண்ட கடந்தகாலம் மிட்டனரே உடையது. தன் தாயுடன் வளர்ந்த அவருக்கு மாடலிங் துறையில் ஆர்வம் வர, அதன் உச்சங்களான 'மிஸ் ஃப்ரான்ஸ் 2016', 'மிஸ் யுனிவர்ஸ் 2017' தொடும்வரை அவரை அழைத்துவந்திருக்கிறது அந்த இளம் பெண்ணின் அர்ப்பணிப்பு. ஆம்... அழகு மட்டுமே பெற்றுத் தந்த வெற்றி அல்ல இது. அவரின் தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் அதில் சம பங்குண்டு.

ஆஸம் கேர்ள்!
 

 

 

 

 

.vikatan.

  • தொடங்கியவர்

 

ஸ்மார்ட்போனை புற்றுநோய் கண்டறியும் ஸ்கேனராக மாற்றலாம்

செயற்கை அறிவை பயன்படுத்தி புகைப்படங்களை கொண்டு தோல் புற்றுநோயை பயிற்சி பெற்ற மருத்துவர்களை போல,அடையாளம் காண முடியும் என ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

  • தொடங்கியவர்

மனநிலை பாதிக்கப்பட்டவர் என கிண்டல்: 'பத்மஸ்ரீ 'வென்று பதிலடி தந்த முதியவர்!

 

 

மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று மக்களால் கிண்டல் செய்யப்பட்டவர் 'பத்மஸ்ரீ' விருதை வென்று அசத்த, இப்போது அவரைக் கிண்டலடித்தவர்கள் மரியாதை நிறைந்த கண்களுடன் உற்று நோக்குகின்றனர்.

பத்மஸ்ரீ  வென்ற முதியவர்

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரெட்டிப்பள்ளி என்ற கிராமத்தில் வசிப்பவர் தாரிப்பள்ளி ராமையா (வயது 70). காலையில் எழுந்ததும் சைக்கிளை எடுத்துக் கொள்வார் ராமையா. சைக்கிள் முழுவதும் விதைகளும், மரக்கன்றுகளும் நிறைந்து காணப்படும். சைக்கிள் போய்கொண்டே இருக்கும். மரங்கள் இல்லாத தரிசு நிலத்தைக் கண்டால் மட்டுமே சைக்கிள் நின்று விடும். 

பின்னர் ராமையா அங்கே சில நாட்கள் முகாமிடுவார். கிராமத்தை, தனது மனைவியைக் கூட மறந்து விடுவார். கையோடு கொண்டு வந்த, மரக்கன்றுகளை குழி தோண்டி நடுவார். பல கிலோ மீட்டர் தொலைவு சைக்கிளிலேயே சென்று அந்த மரக்கன்றுகளுக்காக தண்ணீர் கொண்டு வருவார். அந்த மரக்கன்றுகள் தானாக வளரத் தொடங்கிய பின்னரே அந்த இடத்தை விட்டு ராமையா நகர்வார். 

இப்படி தெலுங்கானா மாநிலம் முழுவதும் சுமார் ஒரு கோடி மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளார் ராமையா. அதாவது தெலுங்கானாவில் மூன்றில் ஒருவருக்காக ராமையா மரக்கன்றுகளை நட்டுள்ளார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பல நாட்கள் தனது வீட்டுக்கும் கிராமத்துக்கும் போகாமல் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் ராமையாவுக்கு, அந்த கிராம மக்கள் வைத்த பெயர் என்ன தெரியுமா...' மனநிலை பாதிக்கப்பட்டவர்'.

சதா... மரமும் மரக்கன்றுகளுடனும் திரிந்ததால், கிராம மக்கள் ராமையாவை இப்படித்தான் கருதினர். எப்போதாவது விருதுகள் அதற்கு தகுதியானவர்களைத் தேடி வரும்.  இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்குரியவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட போது, அதில் தாரிப்பள்ளி ராமையாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இப்போது கிராம மக்கள் ராமையாவை மரியாதை நிறைந்த கண்களுடன் உற்று நோக்குகின்றனர். தன்னலம் கருதாமல் மரக்கன்றுகள் நட்டதற்காக இப்போது ராமையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. 

ரெட்டிப்பள்ளியில் ஒரு சிறிய வீட்டில்தான் ராமையா வசிக்கின்றார். வீடு முழுவதும் மரக்கன்றுகள் ஆங்காங்கே இறைந்து கிடக்கின்றன. சுற்றுச்சூழலை காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் பேனர்கள் சுற்றி காணப்படுகிறது. அவரது சைக்கிளும் கூட மரங்கள் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகளைத் தாங்கிக் கொண்டுதான் அவருடன்  பயணிக்கிறது. ராமையா, சைக்கிளில் பயணிக்கும் போது, இவரது கழுத்தைச் சுற்றி, ஸ்கார்ப் போல பேனர் சுற்றப்பட்டிருக்கும். அதில், 'மரக்கன்றுகளை காப்பாற்றுங்கள்.. உங்களை அது காப்பாற்றும்' என்றும் எழுதப்பட்டிருக்கும். திருமண வீடு, புதுமனை புது விழா என எந்த விழா நடந்தாலும் ராமையா சார்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்படுவதும் வழக்கமாக இருக்கும். 

தெலுங்கானா மாநிலத்தையே பசுமையாக மாற்றிக் கொண்டிருக்கும் ராமையா படித்ததோ 10ம் வகுப்பு வரைதான். ஆனாலும் சுற்றுச்சூழல் குறித்து பத்திரிகைகளில் எந்த கட்டுரை வந்தாலும் அதனை சேகரிப்பதும் ராமையாவின் வழக்கம். விருது வென்றது குறித்து ராமையா இவ்வாறு கூறுகிறார்,'' பத்மஸ்ரீ விருது வென்றிருப்பது எனது பொறுப்பை இன்னும் அதிகரித்திருக்கிறது. இவருக்கு விருதா...? என்று இப்போது பலரும் புருவத்தை உயர்த்துகின்றனர். அப்படியாவது மரக்கன்றுகள் நடுவதன் அவசியத்தை மக்கள் உணர்ந்து கொண்டால் நல்லதுதான். என்னைப் பார்த்தாவது மரக்கன்றுகளை நடத் தொடங்குவார்கள். என்னைப் பொறுத்த வரை பூமியில் மரங்கள் இல்லாத பகுதியே இருக்கக் கூடாது. ஒவ்வொரு மரமும் பூமியை காப்பாற்றுவதற்கான அச்சாரம்.. நான் வைத்த, எந்த மரக்கன்றுகளும் வளராமல் போனதில்லை. அப்படி மரக்கன்றுகள் வளராமல் போனால், நான் எனது வாழ்க்கையை இழந்ததற்கு சமம்'' என்கிறார். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

இது ஒரு ‘பிரபஞ்ச சக்தி மசாஜ்’ !

ராஜஸ்தானின் புஷ்கரில் பாபா சென் என்பவர் முடி திருத்தம் மற்றும் மசாஜ் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய மசாஜ் செய்யும் முறை மிகவும் பிரபலம். அதன் காணொளி தொகுப்பு.

  • தொடங்கியவர்

ஜெர்மனியின் அதிபராக ஹிட்லர் பதவியேற்ற நாள்: 30-1-1933

ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கிய அடால்ப் ஹிட்லர் 1933-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் ஜெர்மனி நாட்டின் அதிபராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் தலைவர் ஆனார். அன்றுமுதல் தன்னுடைய இறப்பு வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஹிட்லர் ஜெர்மனியின் பியூரர் என்று அழைக்கப்பட்டவர். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர்

 
ஜெர்மனியின் அதிபராக ஹிட்லர் பதவியேற்ற நாள்: 30-1-1933
 
ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கிய அடால்ப் ஹிட்லர் 1933-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் ஜெர்மனி நாட்டின் அதிபராக நியமிக்கப்பட்டார்.

பின்பு 1934-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் தலைவர் ஆனார். அன்றுமுதல் தன்னுடைய இறப்பு வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஹிட்லர் ஜெர்மனியின் பியூரர் என்று அழைக்கப்பட்டவர். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினின் ஹிட்லரின் நாசிக் படைகள் வீழ்ச்சியுற்றது. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:

1882 - 32-வது அமெரிக்க குடியரசு தலைவர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பிறந்த தினம்
1874 - ஆன்மிகவாதி இராமலிங்க அடிகளார் மறைந்த தினம்
1889 - ஆஸ்திரியாவின் இளவரசர் ருடோல்ஃப் தனது காதலியுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
1945 - இரண்டாம் உலகப் போர்: பால்டிக் கடலில் வில்ஹெல்ம் கூஸ்ட்லொஃப் என்ற பயணிகள் கப்பல் சோவியத் நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கப்பட்டதில் அதில் பயணம் செய்த 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
1964 - ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது.
1976 - தமிழ்நாட்டில் மு.கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.
2000 - கென்யாவின் விமானம் ஒன்று அட்லாண்டிக் கடலில் ஐவரி கோஸ்ட் கரையில் வீழ்ந்ததில் 169 பேர் கொல்லப்பட்டனர்.
2003 - பெல்ஜியம் சமப்பால் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது.
 
  • தொடங்கியவர்

சிங்கம்-புலிக்கு பிறந்த சிங்கப்புலி குட்டி!

Liger Czar

தெற்கு ரஷ்யாவில் இருக்கும் ஒரு உயிரியில் பூங்காவில், சீசர் எனும் ஆண் சிங்கத்துக்கும் ப்ரின்சஸ் எனும் பெண் புலிக்கும் ஒரு சிங்கப்புலி குட்டி (Liger) பிறந்துள்ளது.

அறிதுனும் அறிதாகத்தான் இதைப்போல் சம்பவம் நிகழும். சிங்கத்தின் ரோமமும், புலியின் வரிக்கோடுகளுடனும் இந்தக் குட்டி பிறந்துள்ளது. பிறந்த 2 மாதமேயாகும் இந்த லிகருக்கு தற்போது ஆட்டுப் பால் கொடுக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி உயிரியல் பூங்காவின் இயக்குநர், 'இதைப் போன்ற சம்பவங்கள் காட்டில் நடக்க வாய்ப்பில்லை. உயிரியல் பூங்காவில்தான் நடக்கும். சாரை போன்ற லிகர்கள் உலகில் 23தான் இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். எனவே இது அறிதினும் அறிதான நிகழ்வு என்று குறிப்பிடலாம்.' என்று கூறியுள்ளார்.  

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ட்ரம்பின் முடிவால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த சோகம்!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உத்தரவின்பேரில் ஈராக், சிரியா, ஏமன், சூடான், லிபியா, சோமாலியா உள்ளிட்ட 7 நாடுகளின் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரேச்சல் அட்ரியான் என்னும் நர்ஸ், 2013 -ம் ஆண்டு பணிநிமித்தமாக ஈராக் சென்றுள்ளார். அப்போது ஈராக் சன்னி முஸ்லீமான ஹோகர் அமீனை ரேச்சல் சந்திக்க, இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் திருமணம் முடித்துள்ளனர். அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் குடியேற இவர்கள் விரும்பினர். 

தற்போது ரேச்சல் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு பிப்ரவரி இரண்டாம் தேதி குழந்தை பிறக்க இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அமீன் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க தூதரகத்தில் அமெரிக்காவில் குடியேற விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார். இஸ்லாமியர் என்பதால் இவருக்கு நேர்முகத் தேர்வு, உடல் பரிசோதனை என மற்ற மதத்தினர்களைக் காட்டிலும் கெடுபிடிகள் கூடுதலாகவே இருந்தன. எல்லா கட்டத்தையும் வெற்றிகரமாகத் தாண்டிய அமீன், மனைவியின் பிரசவகாலத்தில் அமெரிக்கா செல்லத் திட்டமிட்டிருந்த வேளையில், ட்ரம்ப் 7 இஸ்லாமிய நாட்டு மக்கள் அமெரிக்க வர தடை விதித்துள்ளார். இந்த தடை உத்தரவால் அமீனால் பிரசவத்தின் போது மனைவியின் அருகில் இருக்க முடியாமல் போய்விட்டது. ஏற்கனவே ட்ரம்பின் இந்தத் தீர்மானத்துக்கு பல தரப்பினர் பலத்த எதிர்ப்பை காட்டிவரும் நிலையில்,ரேச்சல்- அமீனின் கதை  சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

asfsa_00030.jpg

http://www.vikatan.com

கிரிக்கெட் லீகில் கவனம் செலுத்துவேன்: அப்ரிதி

முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிதி,  நடக்கவிருக்கும் கிரிக்கெட் லீகில் கவனம் செலுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார். ''இதுவரை எனக்குத் தெரிந்த கிரிக்கெட் அனைத்தையும் ஆடி முடித்துவிட்டேன். இப்போது நான் மகிழ்ச்சியுடன் லீக் ஆட்டத்தை ஆடலாம் என்று முடிவு செய்துள்ளேன். அதே சமயம் பாகிஸ்தானை சரியான வழியில் கொண்டு செல்ல சர்ஃப்ராஸ் அஹமத் போன்ற திறமையான கேப்டன் தான் சிறந்த தேர்வு. என்னால் முடிந்த ஆதரவை அவருக்கு அளிப்பேன்'' என அப்ரிதி கூறியுள்ளார். 

Shahid-Afridi-of-Pakistan-celebrates-his

 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஜனவரி - 31

 

1606 : இங்­கி­லாந்து மன்னன் முதலாம் ஜேம்­ஸுக்கு எதி­ரா­கவும் நாடா­ளு­மன்­றத்­துக்கு எதி­ரா­கவும் சதி முயற்­சியில் இறங்­கி­ய­மைக்­காக கய் ஃபொக்ஸ் என்­பவர் தூக்­கி­லி­டப்­பட்டார்.

 

1747 : பால்­வினை நோய்­க­ளுக்­கான முத­லா­வது மருத்­துவ நிலையம் லண்­டனில் லொக் மருத்­து­வ­ம­னையில் நிறு­வப்­பட்­டது.

 

1876 : அனைத்து இந்­தியப் பழங்­கு­டி­களும் அவர்­க­ளுக்­கென அமைக்­கப்­பட்ட சிறப்பு இடங்­க­ளுக்கு செல்­லு­மாறு ஐக்­கிய அமெ­ரிக்க அரசு உத்­த­ர­விட்­டது.

 

1891 : போர்த்­துக்­கலை குடி­ய­ர­சாக்­கு­வ­தற்­கான கிளர்ச்சி ஏற்­பட்­டது.

 

1915 : முதலாம் உலகப் போரில் ரஷ்­யா­வுக்­கெ­தி­ராக ஜேர்­மனி  பாரி­ய­ளவு நச்சு வாயுவைப் பயன்­ப­டுத்­தி­யது. 

 

895varalaru-31-01-2017.jpg1937 : சோவியத் ஒன்­றி­யத்தில் ட்ரொட்ஸ்கி ஆத­ர­வா­ளர்கள் 31 பேர் தூக்­கி­லி­டப்­பட்­டனர்.

 

1943 : 2 ஆம் உலகப் போரின்­போது ஜேர்­ம­னிய இரா­ணு­வத்தின் உயர் அதி­கா­ரி­களில் ஒரு­வ­ரான பீல்ட் மார்ஷல்  பிரெட்ரிக் பௌலஸ் சோவியத் படை­க­ளிடம் சர­ண­டைந்தார்.

 

1944  : இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் வச­மி­ருந்த மார்ஷல் தீவு­களில் அமெ­ரிக்கப் படைகள் தரை­யி­றங்­கின.

 

1946 : யூகோஸ்­லா­வி­யாவில் சோவியத் முறை­யி­லான அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப்­பட்டு அந்­நாடு பொஸ்­னியா ஹேர்­ச­கோ­வினா, குரோ­ஷியா, மக்­கெ­டோ­னியா, மொண்­டெ­னே­குரோ, சேர்­பியா மற்றும் சில­வே­னியா என ஆறு குடி­ய­ர­சு­க­ளாகப் பிரிக்­கப்­பட்­டது.

 

1958  : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் வெற்­றி­க­ர­மான முத­லா­வது செய்­மதி எக்ஸ்­பு­ளோரர் 1 விண்­ணுக்கு ஏவப்­பட்­டது.

 

1961 : நாசாவின் மேர்க்­கு­ரி-­ரெட்ஸ்டோன் 2 விண்­கலம் ஹாம் என்ற சிம்­பன்சி ஒன்றை விண்­ணுக்குக் கொண்டு சென்­றது.

 

1968 : வியட்நாம் போரில் வியட் கொங் படைகள் சாய்கொன் நகரில் அமெ­ரிக்க தூத­ரா­ல­யத்தைத் தாக்­கின.

 

1968 :அவுஸ்­தி­ரே­லி­யா­விடம் இருந்து சுதந்­திரம் பெறு­வ­தாக  நவுறு,  பிர­க­டனம் செய்­தது.

 

1980 : குவாத்­த­மா­லாவில் ஸ்பெயின் தூத­ரா­லய முற்­று­கையில் 39 பேர் உயி­ருடன் தீயிட்டுக் கொல்­லப்­பட்­டனர்.

 

1995 : மெக்­ஸி­கோவின் பொரு­ளா­தா­ரத்தை ஸ்திரப்­ப­டுத்­து­வற்­காக  2000 கோடி டொலர் கடன் வழங்­கு­வ­தற்கு அமெ­ரிக்க ஜனா­தி­பதி பில் கிளிண்டன் அனு­ம­தித்தார்.

 

1996 : கொழும்பில் இலங்கை மத்­திய வங்­கியின் மீது தமி­ழீழ விடு­தலைப் புலி­களால் நடத்­தப்­பட்ட குண்டுத் தாக்­கு­தலில் 86 பேர் கொல்லப்­பட்டு 1,400 பேர் வரை படு­கா­ய­ம­டைந்­தனர்.

 

2000 : அமெ­ரிக்­காவில் பசுபிக் சமுத்­தி­ரத்தில் விமா­ன­மொன்று வீழ்ந்­ததால் 88 பேர் பலி­யா­கினர்.

 

2003 : அவுஸ்­தி­ரே­லியா, நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்தில் ரயில் ஒன்று தடம்­பு­ரண்­டதில் சாரதி உட்­பட 7 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

2009 : கென்­யாவில் எண் ணெய் கசி­வொன்­றை­ய­டுத்து இடம்பெற்ற தீவிபத்தில் 113 பேர் உயிரிழந்தனர்.

 

2010 : உலகில் 200 கோடி டொலர் வசூலித்த முதல் திரைப்படம் என்ற பெருமை யை 'அவதார்' பெற்றது.

 

2013 : மெக்ஸிகோவில் 214 மீற்றர் உயரமான கட்டட மொன்றில் ஏற்பட்ட வெடிப் புச் சம்பவத்தினால் 33 பேர் உயிரிழந்தனர்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வெற்றி பெற ஜெஃப் சாண்டர்ஸ் சொல்லும் 10 சூத்திரங்கள் என்ன தெரியுமா? #MorningMotivation

வெற்றி, 


 
''வாழ்வின் குறிக்கோள் வெற்றி. அந்த வெற்றியைப் பெற, சில ஒழுங்குபடுத்தப்பட்ட பழக்கவழக்கங்கள் தேவையாக இருக்கின்றன. சாதனையாளர்களிடம் காணப்படும் இந்தப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினால், வெற்றி நிச்சயம் உங்கள் வாசலையும் தட்டும்'' என்று சொல்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப் சாண்டர்ஸ். சிறப்பான சுயமுன்னேற்ற உரையாளர்.  வெற்றிக்காக அவர் வட்டமிட்டுக் காட்டும் 10 மந்திரங்கள் இங்கே!  

1. சிந்தியுங்கள்! 

சாதனையாளர்கள் தினமும் சிந்திப்பார்கள். மனித மூளை மிகவும் ஆற்றல்மிக்க ஒன்று. எனவே நோக்கத்துடன் சிந்திக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். துறை சார்ந்த சிரமமான காரியங்களில், உங்களை நீங்களே ஒரு கடினமான கேள்வி கேட்டு, அதற்கான பதிலைக் கண்டடைய வேண்டும். இதன் மூலம் சவால்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதற்கான தீர்வு இருந்தே தீரும் என்கிற நம்பிக்கை பிறக்கும்.

2. மனதிற்குப் பிடித்த உடற்பயிற்சி! 

உடற்பயிற்சி என்றவுடன், சிக்ஸ் பேக், எய்ட் பேக் மற்றும் ஸீரோ சைஸுக்காக உழைப்பது மட்டுமேயல்ல.  நீச்சல், சைக்ளிங், தோட்ட வேலைகள், நாய்க்குட்டி உடன் விளையாடுவது என உடல், மனம் இரண்டுக்கும் புத்துணர்வு தரக்கூடிய ஓர் எளிய பயிற்சியைத் தேர்வு செய்து, அதை தினமும் மேற்கொள்ளுங்கள்.  

3. சீக்கிரம் எழுந்தால்..!

அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன் எழுந்திரிக்க வேண்டியதில்லை என்றாலும் சற்று முன்னர் எழுந்தால் நீங்கள் செய்யப்போகும் வேலையில் தெளிவும் படைப்பாற்றலும் சற்றே அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், விடிகாலை எழும் பழக்கமுள்ளவர்கள் ஆக்கவளம் கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சீரான தூக்கப்பழக்கம் மிகவும் முக்கியமான ஒன்று. 

4. ஆரோக்கிய உணவு!

நம் ஆரோக்கியம், நாம் உண்ணும் உணவுகளையே பெரிதும் சார்ந்திருக்கிறது. உங்கள் மனத் தெளிவு, உணர்ச்சிகள், சக்தி, சுறுசுறுப்பு அனைத்தையும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அமைப்பதற்கான ஆற்றலைப் பெற, ஆரோக்கிய உணவு மிகவும் அவசியம்.

5. அத்தியாவசியங்களுடன் மட்டுமே வாழ்ந்திருங்கள்!

உங்கள் அலுவல் மேசையில் தேவையில்லாமல் குவிந்துகிடக்கும் பொருட்களைக் கழித்துவிட்டால், மிச்சமிருப்பது அத்தியாவசியங்கள் மட்டுமே. அந்த அவசியத் தேவைப் பொருட்களை தரமானவையாக வாங்குங்கள். மற்றவர்களிடம் உங்களுக்கான மரியாதையைப் பெற்றுக்கொடுப்பது, குணம் மட்டுமல்ல உடைமைகளும்தான். குப்பைக்கு நடுவில் அமர்ந்திருக்கும் ஊழியரைக் காணும் கண்களிடம் மதிப்பிருக்காது. 

6. அவசியமற்ற கருத்துகளுக்கு காது கொடுக்காதீர்கள்! 

உங்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட முடிவுகள், எப்போதும் நீங்கள் எடுக்கும் முடிவுகளாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் கருத்துக் கேட்டு சிக்கலாக்கிக்கொள்ளாமல் சிறந்த, தெளிவான முடிவுகளை எடுங்கள். வெற்றியாளர்கள் முற்போக்கான உறவுகளை எடுத்துச் செல்வதில் மிகவும் திறமையானவர்கள். ஏனெனில், அவசியம் இல்லாத கருத்துகளை அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை.

7. இன்று மட்டுமே நிஜம்!

நேற்று என்பது இன்றில்லை. நாளை என்பதில் நிஜமில்லை. இரண்டுமே நினைவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் வெளிப்பாடுதான். எனவே நீங்கள் வாழவேண்டியது இன்று, இந்த நொடி மட்டுமே. இன்றைய தினத்தை எவ்வாறு சிறப்பாக முடிப்பது என்ற யோசனை மட்டுமே தேவை. அந்தச் சிந்தனை மட்டுமே செய்யும் செயல்களில் கவனத்தைக் கொண்டுவரும். எதிர்காலத்தைப் பற்றிய பயத்தையும் கடந்த காலத்தின் வருத்தங்களையும் கணக்கில் கொள்ளாமல் தெளிவாகச் செயல்படுபவர்களே வெற்றியாளர்களாகக் கருதப்படுகிறார்கள். 

8. பணி நேர்த்தி அவசியம்!

உங்களின் வாட்ஸ்அப் இன்பாக்ஸ் முதல் மெயில் இன்பாக்ஸ் வரை அனைத்திலும், தினமும் வரும் மெஸேஜ்களை முழுவதுமாக ஓபன் செய்து, அதற்கான பதிலை அன்றே அனுப்பிவிடுதலை முடிந்தவரை கடைப்பிடியுங்கள். அன்றைய வேலையை அன்றே முடிக்கப் பழகிவிட்டாலே, பணி நேர்த்தி கைகூடிவிடும். 

9. உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்!

எந்தத் துறையாக இருப்பினும், யாராக இருப்பினும் வெற்றியடைய சுயமுன்னேற்றம் மிகவும் முக்கியமான ஒன்று. கற்கும் பாடங்களில் இருந்தும் அனுபவங்களில் இருந்தும் உங்களை நீங்களே வளர்த்துக்கொள்ள வேண்டும். அதிர்ஷ்டத்தை எண்ணி உட்கார்ந்திருக்காமல், 'என் வெற்றி எனக்கானது. என் உழைப்பைச் சார்ந்தது. அதற்கு என்னை நானே முன்னேற்றிக்கொள்வது முக்கியம்' என்று நினைக்க வேண்டும். இதை நடைமுறையில் கொண்டுவர, ஒரு நல்ல சுயமுன்னேற்றப் புத்தகத்தைத் தேர்வு செய்து வாசிக்க ஆரம்பிக்கலாம்.  

10. அச்சம் தரும் விஷயங்களை தினமும் முயலுங்கள்! 

வெற்றியாளர்களுக்கும் மற்றவர்களுக்குமான ஒரே வித்தியாசம்... தங்கள் பயம், துயரம் எதையும் பொருட்படுத்தாமல் அடுத்த நிலையை நோக்கி முன்னேறிக்கொண்டே இருப்பது. பயம், பதற்றம், சந்தேகம் இவை அனைத்தும் எல்லோருக்கும் இருப்பவையே. ஆனால் இதுபோன்ற எதிர்மறை விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல் இலக்கை நோக்கி பயணம் செய்பவர்கள் மட்டுமே வெற்றியாளர்கள் ஆவார்கள்.'' 

மூவ் ஆன்!

vikatan.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.