Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஜோகன்னஸ் கெப்ளர்

 
keppler_2672848h.jpg
 

ஜெர்மனியை சேர்ந்த கணிதவியலாளர், வானியலாளர், ஜோதிடரான ஜோகன்னஸ் கெப்ளர் (Johannes Kepler) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஜெர்மனியின் வைல்டர்ஸ்டாட் நகரில் (1571) பிறந்தார். இவரது தந்தை ஒரு வணிகர். சிறு வயது முதலே வானியல் துறையில் ஆர்வம் கொண்டிருந்தார். 6 வயதிலேயே வான்வெளியை உற்றுநோக்கி பல விவரங்களைக் கூறுவாராம். 9 வயதில் சந்திர கிரகணம் குறித்து விளக்கியுள்ளார்.

* உள்ளூரில் உள்ள இலக்கண பாடசாலை, லியோன்பெர்க்கில் உள்ள லத்தீன் பாடசாலை, மால்ப்ரோன் குருத்துவப் பாடசாலையில் கல்வி பயின்றார். சிறந்த மாணவராக விளங்கினார். கல்வி உதவித் தொகை பெற்று தூபிங்கர் பல்கலைக்கழகத்தில் தத்துவம், இறையியல் கற்றார்.

* இறையியலாளராகப் பணியாற்ற வேண்டும் என்பதுதான் இவரது விருப்பம். ஆனால், கணிதம், வானியலில் அதைவிட அதிக ஆர்வம் கொண்டிருந்ததால், நட்சத்திரங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினார். மாணவராக இருந்தபோது சூரிய மையக் கோட்பாடு தவறு என்று வாதிட்டவர், பிறகு அதை ஏற்றுக்கொண்டார்.

* வானியலில் தான் ஆராய்ந்து அறிந்த விஷயங்களின் அடிப்படையில் ‘மிஸ்ட்ரியம் காஸ்மோகிராபிகம்’ என்ற மிகப்பெரிய வானியல் நூலை எழுதினார். இதன் பிரதிகளை தனது ஆதரவாளர்கள், பிரபல வானியலாளர்களுக்கு அனுப்பிவைத்தார். 1596-ல் இந்நூல் வெளிவந்த பிறகு, திறன்வாய்ந்த வானியலாளராக அங்கீகாரம் பெற்றார்.

* இவரது வானியல் ஆராய்ச்சிகள் குறித்து அறிந்த தைக்கோ பிராஹே என்ற வானியலாளர் தனது ஆராய்ச்சிகளுக்கு உதவுமாறு கூறினார். அவரிடம் 1600-ல் உதவியாளராக சேர்ந்தார். கிராஸ் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றினார். கோள்களின் இயக்கங்கள் தொடர்பான கோபர்நிகஸ் உட்பட பலரது கோட்பாடுகளையும் கற்றறிந்தார்.

* இரண்டாம் ருடால்ஃப் மன்னரின் அரசவைக் கணிதவியலாளராகவும், ஜெனரல் வாலன்ஸ்டைனின் அரசவை ஜோதிடராகவும் பணியாற்றினார். ‘ஆஸ்ட்ரோநோமியா நோவா’, ‘ஹார்மோனிஸ் முன்டி’ ஆகிய நூல்களில் கோள்களின் இயக்க விதிகள் தொடர்பாக இவர் கூறிய கருத்துகள் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றன. அதனால் பேரும் புகழும் பெற்றார்.

* கோள் இயக்கம் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இதுதொடர்பாக 3 விதிகளைக் கண்டறிந்தார். முதல் இரண்டு விதிகள் பிரத்யேகமாக ஒற்றைக் கோளின் இயக்கம் குறித்து இருந்தன. 3-வது விதி 2 கோள்களின் சுற்றுப்பாதைகள் குறித்த ஒப்பீடாக இருந்தது.

* அறிவியல் துறையிலும் பல குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கினார். கண்களால் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதற்கு சரியான விளக்கம் தந்தார். கிட்டப்பார்வை, தூரப்பார்வைக்கான கண்ணாடிகளைக் கண்டறிந்தார். ‘எபிடோமி அஸ்ட்ரோநோமியா’ என்ற புகழ்பெற்ற நூலை 1621-ல் வெளியிட்டார்.

* தொலைநோக்கி வேலை செய்யும் விதத்தை விளக்கினார். முதன்முதலில் ‘சாட்டிலைட்’ என்ற வார்த்தையை உருவாக்கியவர். நட்சத்திரங்களின் தொலைவைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார். கிறிஸ்து பிறந்த ஆண்டை கணக்கிட்டுக் கூறினார்.

* கணிதவியலாளர், கோட்பாட்டு வானியற்பியலாளர், அறிவியல் ஜோதிடர் என்று பன்முகப் பரிமாணம் கொண்ட ஜோகன்னஸ் கெப்ளர் 59-வது வயதில் (1630) மறைந்தார். கோள்களைக் கண்டறியும் நாசாவின் தொலைநோக்கிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வெறிநாய் கடிக்கு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்த லூயி பாஸ்டர் பிறந்த தின பகிர்வு!

மனிதர்கள் கொத்துக் கொத்தாக நோய்களில் செத்துப்போவது கடவுள் தரும் தண்டனை எனப் பலகாலம் நம்பிக்கொண்டு இருந்தனர் மக்கள். ராபர்ட் ஹூக் நுண்ணுயிரிகளை மைக்ராஸ்கோப்பில் கண்டிருந்தாலும் நோய்களுக்கு இந்தக் கண்ணுக்கு தெரியாத ஜீவன்கள் காரணம் என யாரும் நினைக்கவில்லை.


திராட்சைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒயின் சீக்கிரம் கெட்டுப்போனது . விடாது ஆய்வு செய்தார் பாஸ்டர். நொதித்தலுக்குக் காரணமான நுண்ணுயிரிகளைக் கண்டறிந்தார். நோய்களைப் பரப்பும் நுண்ணுயிரிகளைக் கண்டறிந்து நுண்ணுயிரி கோட்பாட்டை வெளியிட்டார். நொதித்தல் செயலுக்கு இந்த நுண்ணுயிரிகளே காரணம் என்றும் அவற்றைக் கண்ணால் காண முடியாது, மைக்ராஸ்கோப் கொண்டே அவற்றைக் காண முடியும் என்றும் சொன்னார்.

louispaster.jpgகுறிப்பிட்ட வெப்பநிலையில் வாழும் அவற்றைக் கட்டுப்படுத்த வெப்பநிலையை மாற்ற வேண்டும் என்றும் சொன்னார். பாலை கெடாமல் காக்க நன்றாகச் சூடாக்கி உடனடியாகக் குளிர வைக்கும் [பாஸ்சரைசேஷன்] இவர் உருவாக்கியதே .

வெறிநாய்க்கடி மிகப்பெரிய சிக்கலை அக்காலத்தில் உண்டு செய்திருந்தது. வெறிநாய் கடித்தால் அந்த நாயை போலவே நடந்து கொண்டு, நீருக்கு பயந்து ஒடுங்கி இருந்து பரிதாபமாக மக்கள் இறந்து போனார்கள். 'நன்றாகப் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சூடுபோட்டு சதையைக் கொத்தாக வெட்டி எடுத்தல்' என ரத்தம் உறைய வைக்கும் முறைகள் அந்த நோயை குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்டன. ஒன்றும் நடக்கவில்லை.

பாஸ்டர் பல நாய்களின் பின்னர் உயிரை பணயம் வைத்துத் திரிந்தார். அவற்றின் எச்சிலில் இருக்கும் கிருமிகளே நோய்க்குக் காரணம் என்று உணர்ந்தார். நாயின் உமிழ் நீரை தானே உறிஞ்சி, மருந்தாகப் பயன்படுத்தி, நாய்க்கடியால் தாக்கப்பட்டுப் பதினான்கு இடங்களில் கடிபட்டிருந்த ஜோசஃப் மிஸ்டர் என்கிற ஒன்பது வயது சிறுவனின் உடலில் செலுத்தி, பதினான்கு நாட்களில் அவனைக் குணப்படுத்தினார். ராபிஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி உருவானது.

மருத்துவர்கள் கையுறை அணிவது, அறுவை சிகிச்சை கத்திகளை ஸ்டெரிலைஸ் செய்வது ஆகியவற்றையும் இவர் வலியுறுத்தினார். உயிர் இழப்பை இதனால் அதிக அளவில் தடுக்க முடிந்தது .

ஆந்த்ராக்ஸ் நோயும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. கால்நடைகள் மொத்தமாகச் செத்து விழுந்தன. அந்த நோயை உண்டாக்கும் கிருமிகளைக் கொன்று, மீண்டும் அவற்றை மிருகங்களின் உடம்பில் செலுத்தி சாதித்தார் பாஸ்டர். ஐரோப்பா முழுக்கப் பட்டுபுழுக்கள் செத்துக்கொண்டு இருந்தன. நோய் வாய்ப்பட்ட பட்டுப் புழுக்களைப் பிரித்து வையுங்கள் என்று அவர் சொன்ன யோசனையை ஏற்றுக்கொண்ட பட்டு உற்பத்தி மையங்கள் தப்பித்தன. இத்தாலி தேசத்து பட்டு உற்பத்தி நிறுவனத்துக்கு இவரின் பெயரையே சூட்டினார்கள்.

இவர் ஓயாமல் ஆய்வில் மூழ்கி உலகை மறந்திருந்தார். இது எந்த அளவுக்குப் போனது என்றால் இவரைத் திருமண நாளன்று இவரைக் காணவில்லை. எங்கெங்கும் தேடிப்பார்த்தார்கள். ஆளை கண்டுபிடிக்க முடியவில்லை. ஓடிப்போய் விட்டார் என்று எண்ணிக்கொண்டு இறுதி முயற்சியாக அவரின் ஆய்வகம் நோக்கி போனார்கள். அங்கே கூலாக ஆய்வு செய்து கொண்டிருந்தார். “உனக்கு இன்னைக்கு கல்யாணம்!” என்று சொல்லி இழுத்துக்கொண்டு போனார்கள். தன்னலம் மறந்து மற்றவர்களுக்காக உழைத்தவர் அவர்.

http://www.vikatan.com/news/article.php?module=news&aid=36635&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

  • தொடங்கியவர்

1238162_659965580772654_1376527772074871

டிசம்பர் 27: 1956 ஆம் ஆண்டு இதேநாளில்தான் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

  • தொடங்கியவர்

ஆரோக்கியத்துக்கு 6 பழக்கங்கள்!

 

gardening%20keerthana.jpgரோக்கியத்துக்கு 6 பழக்கங்களை பட்டியலிடுகிறார் சென்னையைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் கீர்த்தனா. அவை.....

1. மனதை லேசாக்குங்கள்

மனதைப் பொறுத்துதான் நோய்களின் வீரியம் அதிகரிப்பதும் குறைவதும். மனதை ஆரோக்கியமாக மாற்றும் வித்தையைத் தெரிந்து கொண்டால் நோயை எளிதில் குணப்படுத்தி விடலாம். உடல் உறுப்புகளை வலிமை படுத்தினால் உணர்வுகள் சரியாகிவிடும்.

புத்துணர்வும் கிடைக்கும். ஹெல்தி உணவு, சுவாசம், தோற்ற அமைப்பு (posture) போன்றவை சரியாக இருந்தால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்துவிடும். மனம் ஆரோக்கியம் பெற அமைதியான சூழல், அளவான, ஆழ்ந்த தூக்கம் அவசியம்.

asnams.jpg 2. தியானம் பழகுங்கள்

பிரபஞ்சத்திலிருந்து நேரடியான ஆற்றலை ஈர்க்கும் சக்தி தியானத்துக்கு உண்டு. இது நம் உடல் மற்றும் மனதை மேம்படுத்தும். தியானம் செய்யத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடனே எந்நேரமும் இருக்கும் சுவாசத்தைக் கவனிக் கலாம். காலை வேளையில் அடிவயிற்றிலிருந்து வெளிவரும் மூச்சுச் செல்லும் பாதையைக் கவனிக்கலாம். நாளடைவில் எண்ண ஓட்டங் கள் குறைந்து மூச்சை கவனிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். இதுவே தியானம் செய்த பலனை கொடுத்துவிடும்.

3. உணவுக்கு மதிப்பளியுங்கள்

உண்ணும் உணவுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். டிவி பார்த்துக் கொண்டே என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது தெரியாமலேயே சாப்பிடுவது சரியான முறையல்ல.

தரையில் உட்கார்ந்து உணவை ரசித்து ருசித்து மென்று சாப்பிட தொடங்கினால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமக்குப் பலத்தைத் தரும்.

gardening%20left.jpg உண்ணும் போது கறிவேப்பிலை, மிளகு, தக்காளி போன்றவற்றைத் தூக்கி எரிந்துவிட்டு சாப்பிடுவது சரியான உணவுப் பழக்கம் அல்ல. தூக்கி எறிவதற்காக எந்தப் பொருளும் சமையலில் சேர்ப்பது கிடையாது. அனைத்தையும் சாப்பிடவே உணவு சமைக்கப்படுகிறது.

4. தன்னை நேசிக்கத் தொடங்குங்கள்

நம்மை நாமே விரும்புவதும், அக்கறையோடு நேசிக்கவும் தொடங்குங்கள். மற்றவர்களிடம் அன்பு செலுத் தி அரவணைப்பது போலத் தங்களின் மேல் அக்கறை கொண்டு சரிவரப் பராமரித்துக் கொள்வதும் நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவியாகும். உடலும் மனமும் மகிழ்ச்சி அடையும். மன அழுத்தம், மன சோர் வுக்கான தீர்வு வெளியில் அல்ல நம்மிடமே இருக்கிறது. உடலுக்குத் தரும் முக்கியத்துவத்தை மனதுக்கும் தந்து அதற்கு என்ன தேவை என்பதைப் புரிந்து கொண்டு பூர்த்தி செய்யுங்கள்.

5. உடலுழைப்பை உருவாக்குங்கள்

gardening%20right%202.jpgஉடலுழைப்பு சார்ந்த வேலை இன்று பலருக்கும் இல்லை. ஆதலால், உட லுழைப்பை நாமே உருவாக்கலாம்.

காலை, மாலை உடற்பயிற்சி செய்வது, கீழே உட்கார்ந்து சாப்பிடுவது, அருகில் இருக்கும் கடைக்கு நடந்து செல்லுவது, வீட்டுப் படிகளில் ஏறி இறங்குவது, வீட்டை சுத்தப்படுத்துவதில் மெஷின்களைப் பயன்படுத்தாமல் இருப்பது, உடலுழைப்புக்கு என விடுமுறை நாட்களை ஒதுக்கி வைப்பது என உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடலாம்.

6. உணவுப் பழக்கத்தைச் சீராக்குங்கள்

காலை உணவை தவிர்த்தல், ஒரு வேளை தானே என்று துரித உணவுகளைச் சாப்பிடுதல், ஆரோக்கியத்தைப் புறந்தள்ளிவிட்டு, சுவைக்கு அடிமையாதல், அடிக்கடி விரதம் இருத்தல், சுகாதாரமற்ற உணவை உட் கொள் ளுதல் போன்ற பழக்கங்களைத் தவிர்க்கலாம்.

பசித்த பிறகு சாப்பிடும் பழக்கத்தைத் தொடங்கலாம். அனைத்து உணவுகளையும் அளவாக எடுத்துக் கொள்வது நல்லது. எப்போதும் டிரீட், பார்ட்டி போன்றவற்றை மதிய வேளையில் வைத்துக் கொள்ளுங்கள். இரவில், டின்னர் பார்ட்டியை தவிருங்கள்.

  • தொடங்கியவர்

டிசம்பர் 27: உருது கவிஞர் மிர்சா காலிப் பிறந்த தினம் இன்று.

அவரின் புகழ்பெற்ற கவிதை:

ஒரு நூறு பரம்பரைகளாக என்
முன்னோர்கள் போர் வீரர்களாய்
இருந்திருக்கிறார்கள்
பெருங் கெளரவ அந்தஸ்தை
பெறுவதற்கு பொருட் பாடல்
நானெழுதத் தேவையில்லை

1935270_659964834106062_2015962724015124

  • தொடங்கியவர்

முதன்முதலில் தேசிய கீதம் பாடப்பட்ட தினம் - சிறப்பு பகிர்வு

 

டிசம்பர் 27: முதன்முதலில் தேசிய கீதம் பாடப்பட்ட தினம் இன்று ...

தாகூர் இயற்றியதே ஜன கண மன என்கிற நம் தேசிய கீதம் .ஐந்து பத்திகள் கொண்ட இதில் ஒரு பத்தியை மட்டுமே நாம் பாடுகிறோம் .உண்மையில் இதை எழுதிய காலத்தில் வங்கப்பிரிவினை அமலில் இருந்தது .அந்த வலியோடு இந்த தேசம் ஒன்று என வலியுறுத்த தாகூர் இப்பாடலை tagore.jpgஇயற்றினார் .  ஆங்கிலேயர் ஆட்சிகாலம் வரை 'god save the queen' என்கிற பாடலைத்தான் பாடிக்கொண்டு இருந்தார்கள்.

தேசிய கீதம் முதன்முறையாக 1911-ம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. அந்த மாநாடு ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு வரவேற்பு அளித்து இயற்றப்பட்ட பாடல் இது என்கிற கருத்து சில பேரால் சொல்லப்பட்டது உண்மையில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்று அதே மாநாட்டில் ராம்புஜ் சவுத்திரி என்பவர் ஓர் இந்திப் பாடலைப் பாடினார். அந்தப் பாடலையும் தாகூரின் பாடலையும் வேறுபடுத்தி அறிந்துகொள்ளாத
'ஸ்டேட்ஸ்மேன்’, 'இங்கிலிஷ்மேன்’ போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள், இரண்டு பாடல்களுமே மன்னரை வாழ்த்திப் பாடியதாக தவறாக தகவல் வெளியிட்டன.

அந்த  கூட்டத்தில் தாகூரே கம்பீரமாக அதைப்பாடினார் .(தாகூர் சிறந்த கவிஞர் மட்டும் அல்ல நல்ல இசை வல்லுனரும் கூட !அவரின் பாடல்கள் இன்று வரை ரவீந்திர சங்கீதத்தில் இசைக்க பட்டு வருகின்றன !). அந்த பாடல் வங்காளி மொழியில் எழுதப்பட்டாலும் சாது பாஷா எனும் சமஸ்க்ருத வார்த்தைகள் அதிகம் பயின்று வருகிற நடையில் அப்பாடல் எழுதப்பட்டது .இந்த பாடலை பாடியவாறே விடுதலை போராட்ட வீரர்கள் போராட்டங்கள் நடத்தினார்கள் ! அதனால் , இந்த பாடலை பாடுவதற்கு ஆங்கிலேய அரசாங்கம் தடை விதித்தது . இந்த பாடலை 1919 இல் ஜேம்ஸ் கசின்ஸ் எனும் ஐரிஷ் கவிஞர் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மடனபள்ளி பெசன்ட் தியோசபிக்கல்  கல்லூரியில் பாடினார்.அதை தொடர்ந்து அங்கே இருந்தவர்கள் பிரார்த்தனை பாடலாக பட ஆரம்பித்து விட,தாகூர் அந்த பாடலை தானே ஆங்கிலத்தில் "The Morning song of india "என்கிற பெயரில் மொழிபெயர்த்து ,ஜேம்ஸ் கசின்சின் மனைவுடன் இணைந்து இசையும் அமைத்தார் .

தாகூரின் ஜன கன மண எனும் இப்பாடல் 1943 இல் நேதாஜி அவர்களால் உருவாக்கப்பட்ட  இந்திய தேசிய படையின் தேசிய பாடலானது .ஜனவரி 24 அன்று 1950 ஆம் வருடம் இப்பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது . இன்று அப்பாடல் நூறு ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக நம் தேசபக்தியின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறது

என் பொன் வங்கமே என்கிற பொருளில் தாகூர் வங்கப்பிரிவினையின் பொழுது எழுதிய அமர் சோனா பங்களா 1971 இல் வங்காளதேசத்தின் தேசிய கீதமானது .

  • தொடங்கியவர்

தயவு செய்து குப்பைகளை வீதியிலோ கடலிலோ வீசி எறியாதீர்கள். பாவம் அப்பாவி உயிர்கள் படும் வேதைனையை பாருங்கள். இந்த காணொளியில் ஆமையின் நாசித்துவாரத்தை அடைத்துள்ள ஒரு பிளாஸ்டிக் குழல் (straw) அகற்றப்படுவதையும் ஆமை அனுபவிக்கும் வேதனையையும் காணலாம்.

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று.....

டிசம்பர் - 28

 

633varalaru-28-12-2015.jpg1065 :  லண்­டனில் வெஸ்ட்­மின்ஸ்டர் தேவா­லயம்  திறந்­து­வைக்­கப்­பட்­டது.

 

1612 : இத்­தா­லிய விஞ்­ஞா­னி­யான கலி­லியோ கலிலி நெப்­டியூன் கோளைக் கண்­டு­பி­டித்தார்.

 

1836 : தெற்கு அவுஸ்­தி­ரே­லியா, அடிலெய்ட் ஆகி­யன அமைக்­கப்­பட்­டன.

 

1836 : மெக்­ஸி­கோவின் சுதந்­தி­ரத்தை ஸ்பெயின் அங்­கீ­க­ரித்­தது.

 

1879 : ஸ்கொட்­லாந்தில் டண்டீ என்ற இடத்தில் ரயில் மேம்­பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்­ததில் அதில் சென்­று­கொண்­டி­ருந்த தொட­ருந்து விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 75 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1885 : இந்­தி­யாவின் வழக்­க­றி­ஞர்கள், அறி­வி­ய­லா­ளர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் 72 பேர் இந்­திய தேசிய காங்­கிரஸ் கட்­சியை ஆரம்­பிப்­ப­தற்கு பம்­பாயில் கூடினர்.

 

1895 : பிரான்ஸின் லூமி­யேர சகோ­த­ரர்கள் பாரிஸ் நகரில் தங்கள் திரைப்­ப­டங்­களை முதன்­மு­த­லாகப் பொது­மக்கள்  கட்­டணம் செலுத்தி பார்ப்­ப­தற்கு திரை­யிட்­டனர்.

 

1908 : இத்­தா­லியின் சிசிலி தீவில் பூகம்பம் ஏற்­பட்­டதில் 75,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1929 : நியூ­ஸி­லாந்தின் கால­னித்­துவ காவற்­து­றை­யினர் ஆயு­த­மின்றிப் போராட்­டத்தில் ஈடு­பட்ட சமோ­வாவின் 11 பேரைச் சுட்டுக் கொன்­றனர். இது சமோ­வாவின் விடு­தலை இயக்­கத்­துக்கு தூண்­டு­த­லாக அமைந்­தது.

 

1930 : மகாத்மா காந்தி, பேச்­சு­வார்த்­தை­க­ளுக்­காக பிரித்­தா­னியா சென்றார்.

 

1958 : கியூ­பாவின் சாண்டா கிளாரா நகர் மீது சே குவேரா போர் தொடுத்தார்.

 

1972 : வட­கொ­ரிய பிர­தமர் கிம் இல் சுங் அந்­நாட்டின் முத­லா­வது ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்றார்.

 

1981 : அமெ­ரிக்­காவின் முத­லா­வது சோத­னைக்­குழாய் குழந்தை எலி­சபெத் கார் வேர்­ஜீ­னி­யாவில் பிறந்­தது.

 

1989 : அவுஸ்­தி­ரே­லியா, நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்தில் நியூ­காசில் நகரில் ஏற்பட்ட 5.6 அளவை நில­ந­டுக்கம் கார­ண­மாக 13 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1994 : விடு­தலைப் புலி­களின் உப தலை­வர்­களில் ஒரு­வ­ரான கோபா­ல­சாமி மகேந்­தி­ர­ராஜா இந்­திய அமை­திப்­ப­டை­யுடன் இணைந்து புலி­க­ளுக்­கெ­தி­ராக சதி செய்தார் என்ற குற்­றச்­சாட்­டின்­பேரில் அவ­ருக்கு புலி­களால் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.

 

2005 : இரண்டாம் உலகப் போரில் இழைத்த குற்­றங்­க­ளுக்­காக ஜோன் டெம்­ஜான்ஜுக் என்­பவரை யுக்­ரே­னுக்கு நாடு கடத்த ஐக்­கிய அமெ­ரிக்­காவின் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.

 

2006 : எதி­யோப்­பிய மற்றும் சோமா­லிய அரசத் துருப்­பு­க­ள் சோமா­லியா தலை­நகர் மொக­டி­சுவை கிளர்ச்­சி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து மீளக் கைப்­பற்­றின.

 

2007 : நேபா­ளத்தின் இடைக்­கால நாடா­ளு­மன்றம் நாட்டை குடி­ய­ர­சாக அறி­வித்து மன்­ன­ராட்­சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

 

2009 : பாகிஸ்தானின் கராச்சியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 43 பேர் உயிரிழந்தனர்.

 

2014 : இந்தோனேஷியாவின் எயார் ஏசியா பிளைட் 8501 விமானம் ஜாவா கடலில் வீழ்ந்ததால் விமானத்திலிருந்த 162 பேரும் உயிரிழந்தனர்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=633#sthash.UVfBd1DA.dpuf
  • தொடங்கியவர்

'பெரியவர்களின் உலகத்துக்கும் குழந்தைகளின் உலகத்துக்கும் என்ன வித்தியாசம்?''

'சீனக் கதை இது. ஐந்து வயதுச் சிறுவன் ஒருநாள் தன் அம்மாவிடம் கேட்டான், 'அம்மா, வாழ்க்கையின் ரகசியம் என்ன?’ அம்மா சொன்னாள், 'எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் கண்ணா!’ அன்று அவன் பள்ளிக்குச் சென்றபோது, ஆசிரியை 'நீங்கள் வளர்ந்து என்ன ஆகப்போகிறீர்கள்?’ என்று கேட்டார். ஒரு பையன் டாக்டர் என்றான். இன்னொரு பையன் இன்ஜினீயர் என்றான். விதவிதமான பதில்களில் விதவிதமான விருப்பங்கள் தொனித்தன. ஆனால், அந்தச் சிறுவன் மட்டும் 'நான் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறேன்’ என்றான். ஆசிரியை கோபமாக, 'உனக்குக் கேள்வி புரியவில்லை’ என்றார். சிறுவனோ, 'டீச்சர், உங்களுக்கு வாழ்க்கை புரியவில்லை’ என்றான்!''

5667_1045135598878563_258048220631206353

  • தொடங்கியவர்

கடிகாரம் முதல் கார் வரை வியாபார சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ரத்தன் டாடா!

 

 “உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால், அதைக் கொண்டு கட்டடம் எழுப்புங்கள்!" - இதைச் சொல்லியவர் இந்தியாவில் மட்டுமே காலூன்றியிருந்த ஒரு வியாபார குழுமத்தை உலகெங்கும் எழுப்பி, அக்குழுமத்தையே உலக சந்தையில் இந்தியாவின் அடையாளமாய் மாற்றிய ரத்தன் நாவல் டாடா.

நம் உணவில் உப்பாய், தேநீராய், நம் கையில் கடிகாரமாய், நம் செல்போனில் சிம் கார்டாய், நம் வீட்டுத் தூணில் இரும்பாய், நாம் பயணிக்கும் காராய், நம் டிவியில் டி.டி.எச்சாய், நாம் அணியும் நகையாய் ஒவ்வொரு இடத்திலும் கால் ஊன்றி தடம் பதித்த டாடா சன்ஸின் தலைவர் ரத்தன் டாடாவின் பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றிய சிறப்புகள் இதோ...

 1937ல் சூரத் நகரில் நாவல் டாடா-சுனூ தன்மதியருக்குப் பிறந்த டாடா,  தனது நிர்வாக மேல்படிப்பை ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் 1975ல் முடித்தார். அவர் அங்கு மேற்படிப்பை முடித்தவுடனேயே மிகப்பெரிய நிறுவமான IBMல் அவருக்கு வேலை கிட்டியது. ஆனால் இந்தியாவில்தான் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு தாய்நாட்டிற்கே திரும்பினார். தனது குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில் 1961ல் பணியிலமர்ந்தார் ரத்தன் டாடா. சொந்த நிறுவனமாய் இருந்தாலும் அடிப்படையான சிறிய பொறுப்புகளையே செய்து வந்தார் அவர். அதனால் உழைப்பின் அருமையை அறிந்திருந்தார். 30 வருடம் டாடா குழுமத்தின் பல்வேறு முன்னேற்றங்களுக்கு பங்காற்றிய ரத்தன் டாடா,  1991ல் டாடா குழுமங்களின் தலைவராக, நிறுவனரும் அன்றைய தலைவருமான ஜே.ஆர்.டி டாடாவால் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு நடந்ததெல்லாம் உலகமே வியந்த அசுர வளர்ச்சி.

ambani_vc1.jpg



உலகையே தன்வயப்படுத்தினார்

அதுவரை இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றாக இருந்த டாடா குழுமத்தை உலகின் பார்வைக்கு எடுத்துச் சென்றார். “சிறிய முன்னேற்றங்கள் பற்றி யோசிப்பது எனக்குப் பிடிக்காது” என்பார் டாடா. “எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகப்பெரிதாய் அனைவரும் வியக்கும் வகையில் இருக்க வேண்டும்” என்று கூறுவார். அப்படித்தான் மிகப்பெரிய அடிகளை உலக மார்க்கெட்டில் எடுத்து வைத்தது டாடா குழுமம். உலகின் ஒவ்வொரு நாட்டிலும்,ஒவ்வொரு சந்தையிலும் தனக்கான வாய்ப்புகளை கண்டறிந்தார். இரும்பு, மென்பொருள், கெமிக்கல், தேநீர், கார்கள் என அனைத்துத் துறையிலும் அசுர வளர்ச்சி கண்டது இந்நிறுவனம். இவர் பொறுப்பேற்ற பின் டாடா குழுமம் கால் வைக்காத துறை இல்லை என்றே சொல்லலாம்.

ஆண்டுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய மென்பொருள் நிறுவனம் என்ற சாதனையைப் படைத்தது டாடா குழுமம். சொகுசுக் கார்களைத் தயாரிப்பதில் வல்லுநர்களான லேன்ட்ரோவர், ஜாக்குவார் ஆகிய கம்பெனிகளின் இந்திய உரிமையை 2008ல் வாங்கினார் டாடா. இது ஆட்டோமொபைல் உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இந்திய கார்களுக்கு வெளிநாட்டில் மிகப்பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்தினார். கோரஸ் என்ற உலகின் மிகப்பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனத்தை டாடா வாங்க,  உலகின் முன்னனி இரும்பு உற்பத்தியாளராய் உருப்பெற்றது டாடா ஸ்டீல்ஸ். உலகமயமாக்கலால் பல நிறுவனங்கள் இந்தியாவிற்குள் காலடியை எடுத்து வைக்க,  உலக சந்தையில் சத்தமின்றி தன்னிகரற்ற ஒரு இடத்தைப் பெற்றது டாடா குழுமம். தற்போது இந்நிறுவனத்தின் வருவாயில் 65% வெளிநாடுகளிலிருந்துதான் ஈட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பொருளாதார வளர்ச்சியில் இவரது பங்கீட்டைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு, 2010ல் பத்மபூஷன் விருதும், 2008ல் பத்மவிபூஷன் விருதும் வழங்கி கௌரவித்தது.

உலகை உறையவைத்த நானோ

ambani_vc2.jpg

அனைத்து முன்னனி கார் நிறுவனங்களும் கோடிகளில் கார்களைத் தயாரித்துக்கொண்டிருக்க, மாற்றுத் திசையில் பயணித்தார் டாடா. சாமானிய மனிதனும் நான்கு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்று கருதினார். அதனால் உதித்ததுதான் ‘டாடா நானோ’ திட்டம். வெறும் ஒரு லட்ச ரூபாய்க்கு கார்கள் வெளிவரும் என்று டாடா நிறுவனம் அறிவித்தபோது உலகமே கேலி செய்தது. தரம் குறைவாயிருக்கும், சிறு அடிபட்டாலும் கார் நொறுங்கிவிடும் என பழித்தனர். இது நிச்சயம் சாத்தியமில்லை என்று அனைவரும் சொல்ல, அனைத்தையும் பொய்யாக்கி இந்திய சாலைகளில் நானோவை கம்பீரமாய் வலம்வர வைத்தது டாடா நிறுவனம். விலை முன்பு  சொல்லப்பட்டதை விட சற்றுக் கூட இருந்தாலும் (1.25 லட்சம்) , உலகின் மிகவும் குறைந்த விலை கார் என்ற பெருமையை தனதாக்கியது நானோ. விலை குறைவு என்றாலும் தரத்தில் எந்தக் குறையும் இல்லாமல் வெற்றிகரமான மாடலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது நானோ. உலகின் அனைத்து கார் கம்பெனிகளும் டாடாவிற்கு தலை வணங்கின.

பாகிஸ்தானியர் முகத்தில் அறைந்தார்

மும்பை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட தாஜ் ஹோட்டல்களும் டாடா நிறுவனத்திற்கு சொந்தமானவையே. அவற்றை சரிசெய்வதற்காக பொது டெண்டர் விடப்பட்டபோது பாகிஸ்தானைச் சார்ந்த இரு பெரும் நிறுவனங்கள் அவற்றிற்கு விண்ணப்பித்திருந்தன. அந்த டெண்டெரை தனதாக்கும் பொருட்டு அந்நிறுவனங்களைச் சார்ந்த இருவர் டாடாவைப் பார்க்க அவர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். பாகிஸ்தானியர்கள் என்பதால் அவர்களை வெகுநேரம் காக்கவைத்த டாடா, பின்னர் அப்பாயின்ட்மென்ட் இன்றி யாரையும் பார்க்க முடியாது என்று மறுத்துவிட்டார். அவர்கள் இருவரும் அன்றைய தேதியில் அமைச்சராய் இருந்த ஆனந்த் ஷர்மாவை அணுக, டாடாவிடம் இதுபற்றி பேசியுள்ளார் அமைச்சர். அதற்கு டாடா அளித்த பதில் நம்மை மெய்சிலிர்க்கச் செய்யும். “உங்களுக்கு வேண்டுமானால்  இது கூசாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு அது அவமானம்” என்று டாடா கூற, அதிர்ந்து போனாராம் அமைச்சர்.

ambani_vc3.jpg

ஒருசமயம் டாடா சுமோ கார்கள் வேண்டுமென்று பாகிஸ்தான் அரசு,  மிகப்பெரிய ஆர்டர் ஒன்றை டாடா நிறுவனத்திற்குத் தர, ‘பாகிஸ்தானுக்கு ஒரு கார் கூட கொடுக்க முடியாது’ என்று ஆர்டரை நிராகரித்தார் டாடா. பணம்தான் முக்கியம் என்று பலரும் அறத்தை மீறிச் செயல்பட்டாலும் பணத்தை விட தாய்நாடுதான் தனக்கு முக்கியம் என்று கருதுபவர் டாடா. இளைஞர்கள் பலருக்கும் தொழில் நுணுக்கங்களை பயிற்று வருகிறார். சரியாக 3 ஆண்டுகள் முன்பு, இதே நாளில் சைரஸ் மிஸ்டிரியை டாடா குழுமத்தின் தலைவராக நியமித்துவிட்டு அப்பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்றார் ரத்தன் டாடா. மிகவும் சாந்தமான மனிதர். ஆதரவற்ற குழந்தைகளுக்கும், மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கும் தனது தொண்டு நிறுவனம் மூலமாக பல உதவிகளைச் செய்து வருகிறார். எதையும் நேரடியாகப் பேசுவார் டாடா.

"நீங்கள் ஏன் கல்யாணம் செய்துகொள்ளவில்லை?" எனக்கேட்டதற்கு “4 முறை கல்யாணம் செய்யும் நிலைக்குச் சென்று, கடைசியில் அது நிறைவேராமல் போனது. எனக்கு 4 காதல் தோல்விகள் உள்ளது” என்று சிரித்துக்கொண்டே வெளிப்படையாகச் சொன்னார் டாடா. ஆனால் அவையெல்லாம் அவரது சிந்தனையை சிதறடிக்கவில்லை. அவரது தொலைநோக்குப் பார்வைகளை சிதைக்கவில்லை. முன்னற்றம் என்பதை மட்டும் மூச்சாய்க் கொண்டு, இன்று வரை அம்முன்னேற்றத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார் டாடா. உலக சந்தையில் இந்தியாவிற்கு ஓர் அந்தஸ்ததை ஏற்படுத்திக் கொடுத்ததிலும், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் டாடா குழுமத்தின் பங்கும்,  ரத்தன் டாடாவின் பங்கும் அளப்பறியது. 

“என்னால் இறக்கை விரித்து பறக்க முடியாத நாளே, என் வாழ்க்கையின் சோகமான நாள்” என்பார் ரத்தன் டாடா.

அவரது சிறகுகள் இன்னும் பல்லாண்டு காலம் பல இடங்களில் விரிந்து பறக்கட்டும்!

http://www.vikatan.com/news/miscellaneous/56878-ratan-tata-birthday-special.art

  • தொடங்கியவர்

இசைத்துறையில் புதுமைகளைச் செய்துவரும் ஸ்மிதாவின் அடுத்த பாடல் “பாஹா கிளிக்கி”. பாகுபலி படத்திற்காக

இப்பாடலின் சிலவரிகள் இதோ,

“பாஹா கிளிக்கி
 ராஹா கிளிக்கி
 பிப்பி ஃபிலிஃபி ஜிவ்லா க்ரோக்கி
 ஊனோ தூவோ மூவோ ச்சாவோ
 டம்பாடம்பா பூகோ கிளிக்கி”  :grin:

 

  • தொடங்கியவர்

புத்தாண்டுக் கொண்டாட்ட விநோதங்கள்

 
01NEW_YEAR_2264451_2670743h.jpg
 

புத்தாண்டு என்றதும் நள்ளிரவுக் கொண்டாட்டமும், வாணவேடிக்கையும் வாழ்த்துப் பரிமாற்றங்களும் நினைவுக்கு வரலாம். அமெரிக்காவின் நியூயார்க் நகரச் சதுக்கம், பாரிஸ் ஈஃபெல் கோபுரம், ஆஸ்திரேலியாவில் சிட்னி துறைமுகம் ஆகியவை புத்தாண்டுக் கொண்டாட்ட‌த்திற்கான புகழ் பெற்ற இடங்களாக இருக்கின்றன என்பதும் தெரியும். ஆனால் உலகம் முழுவதும் புத்தாண்டு எத்தனை விதமாகக் கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா?

அதாவது பல நாடுகளில் புத்தாண்டை வரவேற்க விதவிதமான வழக்கங்கள் கொண்டிருக்கின்றனர் தெரியுமா? இப்படி ஒவ்வொரு நாட்டிலும் புத்தாண்டு தொடர்பாக உள்ள விநோதமான கொண்டாட்ட வழக்கங்களை 'தி லிட்டில் திங்ஸ்' இணையதளம் பட்டியலிட்டுள்ளது:

இதன்படி தென்னமெரிக்க நாடான ஈக்வேடாரில் புத்தாண்டுக்கு முந்தைய இரவில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்களின் உருவ பொம்மைகளை எரிக்கின்றனராம். இதன் மூலம் கடந்த ஆண்டின் தீமை ஒழியும் என்பது நம்பிக்கையாம். இதேபோல சுவிட்சர்லாந்து நாட்டில் தரையில் ஐஸ்கிரீமை சிந்துகின்றனராம். இது அதிர்ஷ்ட‌த்திற்கு வழி வகுக்கும் என்பது நம்பிக்கையாம்.

ஸ்பெயின் நாட்டில் அனைவரும் தொலைக்காட்சி முன் அல்லது பொதுச் சதுக்கங்களில் கூடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்போது சிவப்பு உள்ளாடை அணிந்து கையில் ஒரு கோப்பைத் திராட்சைப் பழங்களையும் வைத்திருப்பார்கள். புத்தாண்டு மணி 12 முறை ஒலிக்கும் போது 12 திராட்சகளை விழுங்கினால் ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் நீடிக்குமாம்.

டென்மார்க்கில் புத்தாண்டு பிறக்கும்போது நாற்காலியிலிருந்து குதிப்பதையும், பக்கத்து வீட்டில் தட்டை வீசுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் மூலம் நட்பு தழைக்கும் என்பது நம்பிக்கை. எஸ்டோனியா நாட்டில் 7, 9 மற்றும் 12 எண்கள் ராசியானவையாக கருதப்படுவதால் இத்தனை முறை சாப்பிட முடிந்தால் அதிர்ஷ்டம் உண்டாகுமாம்.

  • தொடங்கியவர்

34zei9v.jpg

  • தொடங்கியவர்

p20a.jpg

p20b.jpg

p20c.jpg

p20d.jpg

  • தொடங்கியவர்

05-1393999292-peruvudaiyarkovil-slide1.j

ஆயிரமாண்டு அதிசயம்!!! 1000 ஆண்டுகளை கடந்து நிற்கும் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலின் எழில் கொஞ்சும் கம்பீரத் தோற்றம்.

 
  • தொடங்கியவர்

கோவையில் அமைகிறது படுத்துக் கொண்டே படம் பார்க்கும் தியேட்டர்!

 

கோவையில் படுத்துக் கொண்டே படம் பார்க்கும் மல்டிபிள்  தியேட்டர் காம்ப்ளக்ஸ் அமையவுள்ளது. தற்போது கட்டப்பட்டு வரும் புரோசான் மாலில் இந்த 9 ஸ்கிரீன்களுடன் இந்த காம்பளக்ஸ் கட்டப்படவுள்ளது.

kovai%20.jpg

கோவையில் ஏற்கனவே புரூக்பீல்ட்ஸ், அவினாசி ரோட்டில் உள்ள ஃபன் ரீபப்ளிக்  என இரண்டு மால்கள் உள்ளன. இந்த மால்களில் 5,6 திரையரங்கங்கள் உள்ளன. தற்போது கோவை சத்தி சாலையில் புரோசான் மால் மிக விரைவாக கட்டப்பட்டு வருகிறது. கோவை பேருந்து நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மால் அமையவுள்ளது.

kovai%201.jpg

இந்த மாலில்தான் தற்போது 9 திரையரங்கங்களுடன் ஐநாக்ஸ் நிறுவனம் சார்பில் மல்டிபிள் தியேட்டர் காம்ப்ளக்ஸ் அமையவுள்ளது. ரசிகர்களை கவரும் வகையில் அற்புதமான உட்புற அலங்காரத்துடன் இந்த மல்டிபிள் காம்ப்ளக்ஸ் தியேட்டர் அமையவுள்ளன. அந்த வகையில் தமிழகத்திலேயே மிகப் பெரிய மல்டிபிள் தியேட்டர் காம்ப்ளக்ஸ் என்ற பெருமையை புரோசான் மால் பெறவுள்ளது. 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று.....

டிசம்பர் - 29

 

634varalaru-29-12-2015.jpg1170 : இங்­கி­லாந்து, ஆயர் தோமஸ் பெக்கெட் அவ­ரது தேவா­ல­யத்தில் வைத்து இரண்டாம் ஹென்றி மன்­னனின் நான்கு ஆத­ர­வா­ளர்­களால் படு­கொலை செய்­யப்­பட்டார்.

 

1835 : மிசி­சிப்பி ஆற்றின் கிழக்­கே­யுள்ள செரோக்கீ இன மக்­களின் நிலங்கள் அனைத்­தையும் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்குக் கொடுக்கும் ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

 

1851 : அமெ­ரிக்­காவின் முத­லா­வது இளைய கிறிஸ்­த­வர்­களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பொஸ்­டனில் அமைக்­கப்­பட்­டது.

 

1876 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஒஹையோ மாநி­லத்தில் ரயில் பாலம் இடிந்து வீழ்ந்­ததில் 92 பேர் கொல்­லப்­பட்டு 64 பேர் காய­ம­டைந்­தனர்.

 

1890 : அமெ­ரிக்­காவின் தென் டகோட்டா மாநி­லத்தில் ஐக்­கிய அமெ­ரிக்கப் படைகள் பெண்கள் குழந்­தைகள் உட்­பட 400 ஆதி­கு­டி­களை படு­கொலை செய்­தனர்.

 

1911 : சுன் யாட்-சென் சீனக் குடி­ய­ரசின் முத­லா­வது அதி­ப­ரானார்.

 

1911 : மொங்­கோ­லியா கிங் வம்­சத்­திடம் இருந்து விடு­தலை பெற்­றது.

 

1930 : இந்­தி­யாவின் அல­காபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரை­யாற்­றிய கவி­ஞரும், தத்துவவிய­லா­ள­ரு­மான முஹ­மது இக்பால் முஸ்­லிம்­க­ளுக்­கென தனி­நாடு கோரிக்­கையைக் கொண்ட தனது இரு ­நா­டுகள் கொள்­கையை முன்­வைத்தார்.

 

1937 : ஐரிஷ் சுதந்­திர நாடு புதிய அர­சி­ய­ல­மைப்பை அறி­மு­கப்­ப­டுத்தி அயர்­லாந்து குடி­ய­ரசு எனப் பெயரை மாற்­றி­யது.

 

1940 : இரண்டாம் உலகப் போரில் லண்டன் நகரின் மேல் நாசி ஜேர்­ம­னியர் தீக்­குண்­டுகள் வீசி­யதில் 200 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1972 : அமெ­ரிக்­காவின் புளோ­ரி­டாவில் மயாமி விமான நிலை­யத்தில் அமெ­ரிக்க விமானம் ஒன்று வீழ்ந்­ததில் 101 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1975 : நியூயோர்க் நகர விமான நிலை­யத்தில் குண்டு ஒன்று வெடித்­ததில் 11 பேர் கொல்­லப்­பட்டு 74 பேர் காய­ம­டைந்­தனர்.

 

1987 : 326 நாட்கள் விண்­வெ­ளியில் பய­ணித்த சோவியத் விண்­வெளி வீரர் யூரி ரொமா­னின்கோ  பூமிக்குத் திரும்­பினார்.

 

1989 : ஹொங்கொங் வியட்­நா­மிய அக­தி­களை பல­வந்­த­மாக வெளி­யேற்­றி­யதை அடுத்து அங்கு கல­வரம் மூண்­டது.

 

1993 : உலகின் மிகப்­பெ­ரிய செம்­பி­னா­லான புத்தர் சிலை ஹொங்­கொங்கில் அமைக்­கப்­பட்­டது.

 

1996 : குவாத்­த­மா­லாவில் அந்­நாட்டு அர­சுக்கும் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கும் இடையில் சமா­தான ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டதால் 36 ஆண்டுகால உள்­நாட்­டுப்போர் முடி­வுக்கு வந்­தது.

 

1997 : ஹொங்­கொங்கில் கோழி­க­ளுக்கு தொற்­றுநோய் பர­வி­யதை அடுத்து அங்­கி­ருந்த அனைத்து 1.25 மில்­லியன் கோழி­களும் கொல்­லப்­பட்­டன.

 

1998 : கம்­போ­டி­யாவில் 1970களில் ஒரு மில்­லியன் மக்கள் கொலை செய்­யப்­பட்­ட­மைக்கு கெமர் ரூஜ் தலை­வர்கள் மன்­னிப்புக் கேட்­டனர்.

 

2001 : பெருவின் தலை­நகர் லீமாவில் வர்த்­தக நிலை­ய­மொன்றில் பெரும் தீ பர­வி­யதால் 291 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

2013 : போர்ம்­யூலா வன் காரோட்­டத்தில் 7 தட­வைகள் சம்­பி­ய­னான மைக்கல் ஷுமாக்கர், பனிச்­ச­றுக்­கலில் ஈடு­பட்­டி­ருந்­த­போது படு­கா­யம­டைந்தார்.­ அதன்பின் 6 மாதங்கள் கோமா நிலையில் இருந்த அவர் இன்னும் தனது வீட்­டி­லி­ருந்து சிகிச்­சை­பெற்று வருகிறார்.

 

2013 : ரஷ்யாவில் வொல்கோகார்ட் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.

 

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=634#sthash.XFPNYsnx.dpuf
  • தொடங்கியவர்

அதிரடி வியூகத்தால் உயர்ந்த திருபாய் அம்பானி!

 

மும்பையில் ஒற்றை அறைகொண்ட மச்சு வீட்டில் குடியிருந்த ஒருவர், தான் மரணிக்கையில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்போடும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராகவும் உயருவார் என்று எவரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

வெறும் 50,000 ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டு,  இன்று இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாய் உயர்ந்து நிற்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தை துவக்கி, மிகப்பெரும் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட திருபாய் அம்பானி பிறந்த தினம் டிசம்பர் 28.

1932 -ம் ஆண்டு குஜராத் மாநிலம் சோர்வாத் நகரில் பிறந்தார் அம்பானி. நடுத்தரக் குடும்பம். இவரது கையில் செல்வம் புரளவில்லை. ஆனால் மனதில் நம்பிக்கையும், திறமையும் வற்றாத ஜீவநதி போல் ஊற்றெடுத்தது. தனது 16 வயதில் ஏமன் சென்ற அம்பானி, அங்கு பெட்ரோல் பங்கில் வேலை செய்தார். சிறிது காலம் கழித்து அப்பெட்ரோல் பங்கிலேயே நிர்வாகம் பார்க்கத் தொடங்கினார். பின்னர் இவர் 1958ல் இந்தியா திரும்பி,  சொந்தமாக தொழில் செய்யத் தொடங்கினார். 1966 ல் இவர் ரிலையன்ஸை தோற்றுவித்த பிறகு நடந்ததெல்லாம் உலகம் அறியும்.

rel_vc1.jpg



சோதனயை வென்றவர்

தனது 16 வயதிலேயே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார் அம்பானி. இதனால் இவரது வலது கரம் செயலிழந்தது. இவர் என்றுமே இயலாமை என்ற வார்த்தையைப் பற்றி நினைத்தது இல்லை. தனது குறைகளை துச்சமாய் நினைத்து, வெற்றியை மட்டும் தனது இலக்காய் நிர்ணயித்துப் பயணித்தார். “உன் rel_vc3.jpgகனவுகளை நீ நனவாக்கத் தவறினால், பிறர் அவர்களது கனவுகளை நிறைவேற்ற உன்னைப் பயன்படுத்திக் கொள்வார்கள்” என்று கூறிய அம்பானி, தனது கனவுகளை விரைந்து நனவாக்கினார்.

ஆனால் தொடர்ந்து கனவு காண்பதை மட்டும் அவர் நிறுத்தவேயில்லை. 1958-ல் தனது நண்பர் சம்பக்லால் தமானியுடன் இணைந்து ‘மஜின்’ என்ற நிறுவனத்தைத் துவக்கினார் அம்பானி. 50,000 ரூபாய் முதலீட்டில் 350 சதுரடியில் தொடங்கப்பட்டது இந்நிறுவனம். மிகவும் அதிரடியான வியூகங்களோடு செயல்படுவாராம் அம்பானி. விலையேற்றங்களை முன்னரே கணித்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுவதில் இவர் வல்லவர். சற்றே நிதானமாக வியாபாரம் செய்பவரான தமானி, அம்பானிக்கு ஈடுகொடுக்க முடியாததால் மஜின் கூட்டு நிறுவனம் பிரிய நேரிட்டது.

66ல் தோன்றிய மாபெரும் சாம்ராஜ்யம்

அப்பிரிவே ரிலையென்ஸ் என்னும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்திற்கு வித்திட்டது. 1966-ல் டெக்ஸ்டைல் சந்தையில் அடியெடுத்து வைத்தது ரிலையன்ஸ். தனது அண்ணன் மகனான விமலின் நினைவாக ‘விமல்’ என்ற பெயரில் தங்களது பொருட்களை தயாரித்து வெளியிட்டனர். கூடிய விரைவில் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும் பெயரானது விமல். அதன்பிறகு பாலியஸ்டரை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தார். அன்றைய காலகட்டத்தில் இவர் இறக்குமதி செய்த பொருட்கள் எல்லாம் குறைந்தபட்சம் 300 சதவிகித லாபத்தை ஈட்டித் தந்தன. இறக்குமதியில் மட்டுமின்றி ஏற்றுமதியிலும் கவனம் செலுத்தினார் அம்பானி.

மிள்காய் விளைச்சல் அதிகமாக இருந்ததால் வளைகுடா நாடுகளுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்தார். லாபத்தை இன்னும் அதிகரிக்க பாலியஸ்டரை தானே தயாரிக்க நினைத்தார் அம்பானி. அதற்கான கனரக இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து பாலியஸ்டர் தொழிற்சாலையை உருவாக்கினார். உலக வங்கியிலிருந்து அத்தொழிற்சாலையை பார்க்க வந்த வல்லுநர்கள், 'வெறும் 14 மாதங்களில் இவர்கள் இத்தொழிற்சாலையை அமைத்த விதம் அபாரமானது. உலகத்தரத்தில் இத்தொழிற்சாலை அமைந்துள்ளது' என்று சான்றளித்தனர். இதுதான் அம்பானியின் தொலைநோக்குப் பார்வை. சக போட்டியாளர்களைவிட பல அடிகள் முன்னர் இருப்பார் அம்பானி.

சக மனிதனையும் உயர்த்தினார்

அம்பானி தான் மட்டும் உயர வேண்டும் என்று நிணைத்தவரல்ல. தன் நிறுவனத்தின் பங்குதாரர்கள் முதற்கொண்டு பணிபுரியம் ஊழியர்கள் வரை அனைவருக்கும் வாய்ப்புகள் rel_vc4.jpgஏற்படுத்திக்கொடுத்தவர் அம்பானி. ஊழியர்களின் சம்பளத்தை சீராக உயர்த்திக்கொண்டே இருப்பார். சலுகைகளை ஐப்பசி மாத வருணன் போல் வாரி வழங்குவார். 1986ல் இவர் நடத்திய பங்குதாரர்கள் மாநாட்டிற்கு,  உலகமே வியக்கும் வகையில் சுமார் 30,000 பங்குதாரர்கள் பங்கேற்று பிரம்மிக்கவைத்தனர். பாலியஸ்டர் உற்பத்தியில் இவர் எடுத்த முயற்சிகள் பெரும் லாபத்தை ஈட்டியது. இதனால் ‘பாலியஸ்டர் பிரின்ஸ்’ என்று அழைக்கப்பட்டார். 1990களுக்குப் பிறகு ரிலையன்ஸ் கண்டதோ அசுர வளர்ச்சி. டெக்ஸ்டைல் மட்டுமல்லாது பெட்ரோலியம், தொலைத்தொடர்பு என ஒவ்வொரு துறையிலும் கால்பதித்தது ரிலையன்ஸ் நிறுவனம். கால்பதித்த ஒவ்வொரு துறையிலும் விருட்சமடைந்து இன்று உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் சக்தியாய் நிற்கிறது ரிலையன்ஸ்.

உலக வணிக சந்தையில் ஒரு பெரும் இடம்பிடித்த ரிலையன்ஸை தனது ஒற்றை மூளையால் செதுக்கிய திருபாய் அம்பானி, தனது மூளை ஒத்துழைக்காமல் போக மீண்டும் வலிப்பு ஏற்பட்டு தனது 69வது வயதில் காலமானார். 2002-ம் ஆண்டு ஜூலை 6-ம் நாள் இயற்கை எய்தினார் திருபாய் அம்பானி.

இன்று அவரது மகன்கள் முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் ரிலையன்ஸ் என்ற பேனரில் பல்லாயிரம் கோடிகளில் வணிகம் செய்து லாபம் ஈட்டலாம். ஆனால் இந்த விருட்சத்தின் விதையை விதைத்தவர் திருபாய் அம்பானி. அவரது பெயரை ரிலையன்ஸின் ஒவ்வொரு செங்கலும் மறவாமல் உச்சரித்துக்கிண்டிருக்கும்.

  • தொடங்கியவர்

580334_1061743310542664_1891070982558474

நவீன வாழ்கை

  • தொடங்கியவர்

“நயன்தாரா பிடிக்கும்!”

 

சர்ப்ரைஸ் சமந்தாசார்லஸ்

 

மந்தா, இப்போ செம சமத்து டார்லிங். விஜயுடன் `தெறி’, சூர்யாவுடன் `24’, தனுஷுடன் `வடசென்னை’ என பொண்ணு ரொம்ப பிஸி!

``கலகலன்னு நிறையப் படங்கள் பண்ணிட்டு இருந்தேன். எது ஹிட்... எது ஃப்ளாப்? எதுவும் தெரியாது. தமிழ், தெலுங்கு இரண்டிலும் பிஸியாக ஓடினேன். ஒருநாள் கௌதம் வாசுதேவ் மேனன் சார் `நீ ரொம்பத் தப்புப் பண்ற. நீ செலெக்ட் பண்ற படங்கள் சரியில்லை’னு சொன்னார். என்னை ஒரு முழு நடிகையா மாத்தினவர் அவர். அவர் சொன்னது எனக்கு ரொம்ப டிஸ்டர்பிங்கா இருந்தது. சரியான கதைகளைத் தேர்ந்தெடுத்தேன். அவர்தான் இந்த மாற்றத்துக்குக் காரணம்.’’

‘‘ `சமந்தா இப்போ நல்லா நடிக்கிறாங்க'னு நிறைய பாசிட்டிவ் ரிவியூஸ் வருதே?’’

‘‘எல்லா பாராட்டுகளும் என் டைரக்டர்ஸுக்குத்தான். ராஜமௌலி சார், த்ரிவிக்ரம் சார், ஏ.ஆர்.முருகதாஸ் சார், கௌதம் வாசுதேவ் மேனன் சார்னு நல்ல டைரக்டர்ஸ்கூட வொர்க் பண்ண கிடைச்ச வாய்ப்புகள்தான், என்னை ஒரு நல்ல நடிகையா மாத்தியிருக்கு.’’

p76a.jpg

‘‘விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ்னு தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் படம் பண்றீங்க. எப்படி இருக்கு அந்த அனுபவம்?’’

‘‘பெரிய நடிகர்களோடு நடிக்கிறதுதான் ஈஸியான விஷயம். செம புரொஃபஷனலா இருப்பாங்க. ஈகோ, பந்தா எதுவுமே இருக்காது. நடிகைகளுக்கு நல்ல மரியாதை கொடுப்பாங்க. விஜய், தனுஷ், சூர்யானு திரும்பத் திரும்ப படம் பண்றேன்னா, அவங்களுக்கு என்னோட வொர்க் எதிக்ஸ் பிடிச்சிருக்குன்னுதானே அர்த்தம்? எனக்கும் அவங்களோடு வேலைசெய்றது ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனால்தான் அவங்களோடு அடுத்தடுத்து படங்கள் நடிக்கிறேன்.''

‘‘உங்கள் ரோல்மாடல் யார்?’’

‘‘ரேவதி மேடம்!’’

‘‘இப்போதைய நடிகைகளில் யார் நல்லா நடிக்கிறாங்க?’’

‘‘நயன்தாரா! அவங்க சரியான படங்களை செலெக்ட் பண்ணி ரொம்ப நல்லா நடிக்கிறாங்க. அவங்க கேரக்டர்ஸ் ஒவ்வோரு படத்திலும் அழகழகா, வித்தியாசமா அமையுது.’’

‘‘உங்க நண்பர் நடிகர் சித்தார்த் வெள்ள நிவாரணங்களில் நேரடியா இறங்கி வேலைசெய்தார். அவர்கிட்ட பேசினீங்களா?’’

‘‘நிச்சயம் பாராட்டப்படவேண்டிய விஷயம். சித்தார்த் மட்டுமா... நிறையப் பேரு ஹெல்ப் பண்ணியிருக்காங்க. எல்லோருமே இங்கே ஹீரோஸ்தான்.’’

‘‘நீங்களும் சித்தார்த்தும் ட்விட்டர்ல சண்டை போட்டுக்கிட்டீங்கனு ஒரு நியூஸ் வந்ததே?’’

``ப்ளீஸ் வேண்டாம். இப்போதைக்கு என் கவனம் முழுக்க முழுக்க சினிமாவில் மட்டும்தான் இருக்கு. மற்ற விஷயங்கள் பற்றி யோசிக்க நேரம் இல்லை!’’


சமந்தா டிட் பிட்ஸ்!

* சமந்தா என்றால் 'கடவுள் அவர்கள் கோரிக்கையைக் கேட்டார்' என அர்த்தம்.

* சமந்தாவுக்கு, டேவிட், பிரபு என இரண்டு அண்ணன்கள்.

* ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் பி.காம் படித்திருக்கிறார்.

* மெரினா, பெசன்ட் நகர் என சென்னை கடற்கரைகளில் நள்ளிரவில் நடப்பது சமந்தாவின் ரிலாக்ஸ் ரெசிப்பி.

* அசைவப்  பிரியர். தினமும் மீன் சாப்பிடப் பிடிக்கும்.

  • தொடங்கியவர்

1465112_1148970965121998_129178124341473

Happy Birthday to India's 1983 ICC Cricket World Cup winning wicket-keeper, Syed Kirmani!

  • தொடங்கியவர்

ராஜேஷ் கன்னா

 
 
rajesh_kannan_2674957f.jpg
 

பிரபல இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா (Rajesh Khanna) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் (1942) பிறந்தார். இயற்பெயர் ஜதின் கன்னா. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, மாமாவுக்கு தத்து கொடுக்கப்பட்டு பம்பாயில் வளர்ந்தார். 10 வயது முதல், நாடகங்களில் நடித்தார். புனே வாடியா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

l அகில இந்திய அளவில் 1965-ல் நடத்தப்பட்ட யுனைடெட் புரொட்யூசர்ஸ் நடிப்புத் திறன் போட்டியில் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். அதில் முதல் பரிசு வென்ற இவருக்கு 1966-ல் ‘ஆக்ரி கத்’ என்ற திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்துவந்தார்.

l ‘ஆராதனா’ (1969) திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் பிரபலமானார். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 15 தொடர் வெற்றிப் படங்களை தந்து ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்து பெற்றார்.

l இந்தியத் திரையுலகிலேயே மிகச் சிறந்த பாடல்களை வழங்கியது ராஜேஷ் கன்னா கிஷோர் குமார் ஜோடி என்பார்கள். ‘கிஷோர் குமார் எனது ஆன்மா. நான் அவரது உடல்’ என்பார் ராஜேஷ் கன்னா. இவரது படங்களில் இடம் பெற்ற ‘மேரே சப்னோங் கே ரானி’, ‘கோரா காகஸ் கா யே மன் மேரா’, ‘ரூப் தேரா மஸ்தானா’, ‘குன் குனா ரஹே ஹை பௌரே’ உள்ளிட்ட சூப்பர்ஹிட் பாடல்கள் ரசிகர்களை கொள்ளை கொண்டன.

l தென் இந்திய ரசிகர்களை 1969-1991 காலகட்டத்தில் ராஜேஷ் கன்னா அளவுக்கு கவர்ந்தவர்கள் யாரும் இல்லை என்றார் சரோஜாதேவி. தென்னிந்திய திரையுலகினர் இவரை ‘இந்தித் திரையுலகின் சிவாஜி’ என்றனர். ராஜீவ் காந்தி இவரது ரசிகராக இருந்து பின்னர் நண்பரானார்.

l அடுத்தவர்களின் தேவை அறிந்து, தானே ஓடிச்சென்று உதவும் மனம் படைத்தவர். 1973-ல் இந்தி நடிகை டிம்பிள் கபாடியாவை மணந்தார். இவர்களது மகள்களான ட்விங்கிள் கன்னா, ரிங்கி கன்னாவும் நடிகைகள்.

l மொத்தம் 180 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் பெரும்பாலானவை சூப்பர் ஹிட். ‘ஆராதனா’, ‘அமர்பிரேம்’, ‘ஆனந்த்’, ‘கடீ பதங்’, ‘ராஸ்’, ‘சச்சா ஜூட்டா’, ‘ராஜா ராணி’ குறிப்பிடத்தக்கவை. 1980-களில் ‘ஸ்வர்க்’, ‘அவதார்’ போன்ற திரைப்படங்களில் தன் வயதுக்கேற்ற கேரக்டரில் நடித்தார்.

l தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல பிறமொழி இயக்குநர்கள் இவரை வைத்து தங்கள் மொழி ஹிட் படங்களை இந்தியில் ரீமேக் செய்தனர். இதில் கே.பாலசந்தர், தர், கே.ராகவேந்திரா, ஐ.வி.சசி குறிப்பிடத்தக்கவர்கள்.

l தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரித்துள்ளார். 3 முறை ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். 2005-ல் ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

l சினிமாவைவிட்டு 1990-களில் விலகியவர், காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் வென்று மக்களவை உறுப்பினரானார். ஷீர்டி பாபாவின் பக்தர். இந்தி திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கன்னா 70-வது வயதில் (2012) மறைந்தார். மறைவுக்குப் பிறகு, பத்மபூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

  • தொடங்கியவர்

12401953_1148968705122224_42406549815496

Happy Birthday to one of Pakistan's finest ever spinners, Saqlain Mushtaq!

  • தொடங்கியவர்

அதிசய எதிரொலிகள்!

 
echo_2667867f.jpg
 

பொருட்களே இல்லாத அறையில் சத்தம் எழுப்பி, அதன் எதிரொலியைக் கேட்டு குதூகலித்திருக்கிறீர்களா? எதிரொலி எப்படி ஏற்படுகிறது? ஒலி அலைகள் ஏதேனும் ஒரு பொருள் மீது மோதி, திருப்பி அனுப்பப்படும்போதே எதிரொலி உண்டாகிறது. உலகில் சில இடங்களில் எழுப்பப்படும் சத்தங்கள் மிகவும் அதிசயத்தக்க வகையில் எதிரொலிக்கின்றன. அப்படிப்பட்ட சில எதிரொலித் தகவல்கள்:

# இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டுஷயர் என்ற இடத்தில் உள்ள பள்ளத்தாக்கில் ஏதேனும் ஒரு சத்தம் எழுந்தால், அது 20 முறை திரும்பக் கேட்குமாம்.

# சிலித் தீவில் உள்ள குகையில் தகரத்தை அசைத்தால், அதனால் உண்டாகும் சிறிய சத்தம் பீரங்கியில் தோன்றும் வெடி சத்தத்தைப் போல அதிகமாகிவிடுமாம்.

# லண்டனில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல் ஆலயத்தின் ஒரு முனையில் நின்றுகொண்டு கிசுகிசுவென பேசினாலும், 30 மீட்டருக்கு அப்பால் உள்ள இன்னொரு முனையில் தெளிவாகக் கேட்குமாம்.

# மான்டோனா என்ற இடத்தில் ஆற்று வெள்ளத்தின் ஓசை, எதிரொலியால் சங்கு ஊதுவது போலவும், நரி ஊளையிடுவது போலவும் கேட்குமாம். பல ஆண்டுகளுக்கு முன்பு இதை பேய் பிசாசுகள் எழுப்பும் சத்தம் என்று நினைத்து அஞ்சினார்களாம்.

# வேல்ஸ் எனும் இடத்தில் உள்ள இரும்புப் பாலத்தை ஒரு முறை தட்டினால் அதிலிருந்து 576 சத்தங்கள் எழுமாம்.

# சிலி நாட்டில் 30 மீட்டர் உயரமுள்ள ஓர் கட்டிடத்தின் கீழ் அறையில் மூச்சுவிட்டாலும்கூட, அந்த ஓசை 36 மீட்டர் உயரத்தில் உள்ள மேல் மாடியில் தெளிவாகக் கேட்குமாம். டயோனீஷியஸ் என்ற அரசன் தன் பகைவர்களை இக்கட்டிடத்தில் அடைத்து வைப்பாராம். அவர்கள் ஒருவரோடு ஒருவர் கிசுகிசுவென பேசிக்கொள்வதை மேல் மாடியில் இருந்து கேட்பாராம்.

  • தொடங்கியவர்
இடது கை பழக்கமுள்ளவர்களை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!!

 

26-1451121211-1top10interestingfactsabou



ஆகஸ்ட் 13
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 13ஆம் நாள் உலக இடது கை பழக்கம் உள்ளவர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது.


சிறந்த கலைஞர்கள்
இடது கை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்கிறார்கள். கலை, இசை, நடிப்பு என எந்த படைப்பாற்றல் துறையாக இருப்பினும் இவர்கள் அதில் சிறந்து விளங்குகிறார்கள்.

மெக்கின்டோஷ் வடிவமைப்பாளர்களில் ஐந்தில் நால்வர் இடது கை பழக்கமுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலமானவர்கள்
வலது கை பழக்கமுள்ளவர்களோடு ஒப்பிடுகையில் சராசரி சதவீதத்தில் இடது கை பழக்கமுள்ளவர்கள் தான் அதிகம் பிரபலமாக இருக்கிறார்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெஞ்சமின் பிராங்க்ளின்,பில் கேட்ஸ், லியோனார்டோ டாவின்சி என இந்த பட்டியல் நீள்கிறது.

 

சமநிலை
உடலளவிலும் கூட சமநிலையை கட்டிப்பாட்டில் வைத்திருப்பதில் இவர்கள் மேலோங்கிக் காணப்படுகிறார்கள்.

வலது கை பழக்கமுள்ளவர்களால் இடது கையில் வேலை செய்வது கடினம், ஆனால், இடது பழக்கம் உள்ளவர்கள் எளிதாக வலது கையிலும் வேலை செய்வார்கள்.


மல்டி டாஸ்கிங்
இடது கை பழக்கமுள்ளவர்களது மூளை சிறந்து செயல்படுகிறதாம். இதனால் இவர்கள் மல்டி டாஸ்கிங்கிலும் சிறந்து காணப்படுகிறார்கள்.


குடிப் பழக்கம்
உலகளவில் 12 நாடுகளை சேர்ந்த 25000 பேரை வைத்து நடத்திய ஆய்வில், வலது கை பழக்கம் உள்ளவர்களை விட, இடது கை பழக்கம் உள்ளவர்கள் தான் அதிகம் குடிக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.


கோபம்
இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு விரைவாக கோபம் வந்துவிடும். இவர்களது மூளை வேகமாக செயல்படுவது தான் இதற்கான காரணம் என கூறப்படுகிறது.


பார்வை
தண்ணீருக்கு கீழேயும் கூட நல்ல பார்வை திறன் இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு இருக்கிறது.

வாழ்நாள்
வலது கை பழக்கம் உள்ளவர்களை விட இடது கை பழக்கம் உள்ளவர்கள் சராசரியாக 9 வருடங்கள் குறைவாக தான் உயிர் வாழ்கிறார்கள்.


ஐ. க்யூ
அறிவியல் ரீதியாகவே இடது கை பழக்கம் உள்ளவர்கள் புத்திசாலிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள செயின்ட். லாரன்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டது

. ஐ. க்யூ அளவு 140க்கு மேல் உள்ளவர்களில் அதிகமானவர்கள் இடது கை பழக்கம் உள்ளவர்கள் தான். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், சார்ல்ஸ் டார்வின், மற்றும் பெஞ்சமின் பிராங்க்ளின் போன்ற அனைவரும் இடது கை பழக்கம் உள்ளவர்கள் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.