Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்: செத்துப் பிழைக்கும் தவளைகள்

 

 
thavalai_3136081f.jpg
 
 
 

உணவும், தண்ணீரும் இல்லாமல் உங்களால் எத்தனை நாட்கள் உயிர் வாழ முடியும் ? இது அவரவர் உடல்நிலையைப் பொறுத்தது என்றாலும் எப்படிப்பட்டவராக இருந்தாலும் பத்துப் பதினைந்து நாட்களுக்கு மேல் தாங்க முடியாது. மிகவும் கடுமையான போராட் டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வைராக்கியமாக மேலும் சில நாட்கள் கடத்துவார்கள். அதற்கும் கூட ஓர் எல்லை உண்டு. ஆனால், சில தவளைகள் பல மாதங்கள் உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல், ஜீவ சமாதி யாகி, திரும்பவும் சில மாதங்கள் கழித்து உயிர்த்தெழுகின்றன என்றால் நம்ப முடிகிறதா ?

தவளை இனங்களில் மரத்தவளை (Wood frog ) என்றொரு தவளை இனம் உள்ளது. வட அமெரிக்காவில் காணப்படும் இந்த வகை தவளைகள்தான் இறந்து போய் மீண்டும் உயிர் பிழைக்கும் அதிசயத் தன்மையைப் பெற்றிருக்கின்றன.

அப்பலாச்சியன் மலைத்தொடரின் தென் பகுதியில் தொடங்கி வடக்கு கரோலினா மாகாணத்தின் தாழ்நிலங்கள் வரை இந்த மரத்தவளைகள் காணப்படுகின்றன. கடந்த நூற்றாண்டில்தான் இந்த வகைத் தவளைகள் உயிரியல் அறிஞர்களின் கவனத்தைப் பெற்றிருக்கின்றன. அளவுக்கு அதிகமான குளிரைத் தாங்கி மரணத்தை வெல்லும் இந்தத் தவளைகளின் ஆற்றல்தான் அது உயிரியல் அறிஞர்களின் கவனத்தை ஈர்ப்பதற்குக் காரணம். சரி, மரத்தவளை மரணத்தை எப்படி வெல்கிறது?

மரத்தவளை 50 மில்லி மீட்டர் முதல் 70 மில்லி மீட்டர் வரை நீளம் உள்ளது. ஆண் தவளைகளைவிடப் பெண் தவளைகளே அதிக நீளம் உடையவை. பழுப்பு வண்ணத்தில், கருமையான கண்களுடன் மரத்தவளைகள் உள்ளன. பெரிய மரங்களிலும், கிளைகளிலும், மரப்பட்டை இடுக்குகளிலும், பெரிய பெரிய இலைகளுக்கு அடியிலும் இவை வாழ்வதால் இதனை மரத்தவளைகள் என்று சொல்கிறார்கள். இன்னொரு காரணமும் இருக்கிறது, அதன் பழுப்பு நிறம் மரத்தின் நிறத்தை ஒத்திருப்பதாலும் அதனை மரத்தவளை என்கிறார்கள்.

மரத்தவளைகள் காடு வாழ்பிராணி வகையைச் சேர்ந்தவை. தேங்கி நிற்கும் நீர் நிலைகளில் இவை குஞ்சு பொரிக்கின்றன. குளம், குட்டைகள் போன்ற பெரிய நீர் நிலைகள் மரத்தவளைகளுக்குத் தேவைப்படுவதில்லை. சாதாரணமாக உள்ள பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில்கூட இத்தவளைகள் குஞ்சு பொரித்துவிடும். சதுப்பு நிலங்கள், சிறிய நீர்க்குட்டைகள் போன்ற நீர் நிலைகளில் மரத்தவளைகள் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. காடுகளில் இருக்கக்கூடிய சிறுசிறு பூச்சிகள்தான் மரத்தவளைகளின் உணவு. குட்டித் தவளைகள் பாசிகளை உணவாகக் கொள்கின்றன.

பெரிய மரத்தவளையானது கோடைக் காலத்தில் வெப்பத்தைத் தாக்குப் பிடிப்பதற் காக நல்ல ஈரப்பதமுள்ள இடத்துக்கு இடம் பெயர்ந்துவிடுகின்றன. காடுகளில் இருக்கக்கூடிய சேற்று நிலங்கள், நீர் தேங்கிய பள்ளங்கள் ஆகிய இடங்களைத் தேடிக் கோடையில் சென்றுவிடுகின்றன.

samadhi_3136082a.jpg

குளிர்காலங்கள்தான் மரத்தவளை களுக்கு மரண அவஸ்தையைத் தருகின்றன. கோடைக் காலத்தில் காடுகளின் குளு,குளு பகுதியில் வசித்துக் குதூகலிக்கும் தவளைகள், குளிர் காலத்தைக் கொடுமையாக உணர்கின்றன. குளிர் என்றால் சாதாரணக் குளிர் அல்ல. காற்றைக்கூட உறைய வைக்கும் குளிர். இந்தக் கொடூரக் குளிரில்தான் மரத்தவளைகள் மரணத்தை வெல்லும் சாகசம் செய்கின்றன’.

மரத்தவளைகள் தங்களுடைய ரத்தம் உறைவதையும், திசுக்கள் சுருங்குவதையும் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியைப் பெற்றிருக்கின்றன. பெரும் குளிரைத் தாங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கு அவற்றின் திசுக்கள் செயலாற்றுகின்றன. குளிர்காலம் தொடங்கும்போது, தவளையின் கல்லீரலில் இருக்கக்கூடிய கிளைக்கோஜன், அதிக அளவில் குளூக்கோஸாக மாற்றப்படுகிறது. இந்தக் குளூக்கோஸுடன் தவளையின் திசுக்களில் உள்ள யூரியாவும் சேர்ந்து கிரையோபுரொட்டக்டன்ஸ் (cryoprotectants) என்ற பொருளாக மாறிவிடுகிறது. இந்தக் கிரையோபுரொட்டக்டன்ஸ் என்ற பொருள்தான் குளிரால் சுருங்கிடாதவண்ணம் செல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.

குளிர் காலத்தில் மரத்தவளையின் உடம்பில் உள்ள நீர் 65 சதவீதம் உறைந்து விடும். இதயத் துடிப்பும் நின்றுவிடும். (பனிப்படர்வுக்குக் கீழ் உறைந்து வாழும் தவளையின் இந்த வாழ்க்கை நிலையைக் குளிர்கால உறக்கம் என்று குறிப்பிடுகிறார்கள்.)

குளிர் காலம் முடிந்து கோடைக் காலம் தொடங்கும்போது, ‘எனக்கு என்ன ஆச்சு? நான் எங்கே இருக்கேன்’ என்று திருதிருவெனக் கண்விழித்து பார்க்கும் தவளை, தன் மேலே படிந்திருக் கும் பனித்துகள்களை உதறிவிட்டு சுவாசிக்கத் தொடங்கிவிடும். ‘கிரையோ புரொட்டக்டன்ஸ்’தான் தவளையை அழிவிலிருந்து காப்பாற்றக் காரணம்.

மாணவர்களே! நீண்ட உறை குளிரில் பனிக்கட்டிகளுக்கு அடியில் உயிர்வாழும் தவளையின் திசு அமைப்பை, மனித உடம்புக்கும் கொண்டுவரும் ஆராய்ச்சி யில் வெற்றி பெற்றுவிட்டால், பனிச்சரிவில் சிக்கி உயிரிழக்கும் ராணுவ வீரர்களைகூடக் காப்பாற்றி விடலாம் இல்லையா ?

(காரணங்களை அலசுவோம்)

http://tamil.thehindu.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அரேபியர்களின் சர்ச்சைக்குள்ளானது நைக் நிறுவனத்தின் புதிய விளம்பரம்!

பிரபல காலணி தயாரிப்பு நிறுவனமான ‘நைக்’ அண்மையில் வெளியிட்ட இணையதள விளம்பரம் ஒன்று, அரேபியர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த விளம்பரத்தில் முஸ்லிம் பெண்கள் ஸ்கேட்டிங், குத்துச்சண்டை, வாற்சண்டை, ஐஸ் ஸ்கேட்டிங் நடனம், குதிரையேற்றம், உதைபந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

விளம்பரத்தின் முற்பகுதியில், சிறு தயக்கத்துடன் வெளிவரும் முஸ்லிம் பெண்ணொருவர் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுகிறார். மற்றொரு பெண் வீதியில் ஸ்கேட்டிங்கில் ஈடுபடுகிறார். வீதியில் செல்லும் பலரும் அவரை ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். ஆனால் மெல்ல மெல்ல அந்தத் தயக்கங்களை அவர் ஒதுக்கித் தள்ளுகிறார்.

பின்னணியில் ஒரு பெண் குரல், “அவர்கள் உன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? என்ன பேசுவார்கள்? ஒருவேளை, எல்லோருடைய எதிர்பார்ப்பையும் நீ தகர்த்துவிட்டதாகச் சொல்லக்கூடும்” என்று கூறுகிறது.

பின்னர், குத்துச் சண்டை, பெலே நடனம், ஐஸ் ஸ்கேட்டிங் நடனம், வாற்சண்டை போன்ற விளையாட்டுக்களில் முஸ்லிம் பெண்கள் கலந்துகொண்டு வெற்றியடைவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

விளம்பரத்தின் இறுதியில், ஒரு சிறு குழந்தை ஐஸ் ஸ்கேட்டிங் நடன அரங்கில் தயங்கியபடியே காலெடுத்து வைக்கிறது.

முடிவாக, நைக் நிறுவனத்தின் தாரக மந்திரமான Just Do It (இதைச் செயற்படுத்துவோம்) என்ற வாசகத்துடன் விளம்பரம் நிறைவுறுகிறது.

இந்த விளம்பரம் வெளியாகி இரண்டே நாட்களில் நான்கு இலட்சம் தடவைகள் பார்க்கப்பட்டுள்ள அதேவேளை, இது குறித்து ஆதரவும், எதிர்ப்புமான விமர்சனங்கள் பரவி வருகின்றன.

அரேபியாவில் உள்ள பெண்களை அசிங்கப்படுத்திவிட்டது நைக் என்று ஒரு சாராரும், அரேபியாவில் விளையாட்டின்பால் ஆர்வமுள்ள பெண்கள் சந்திக்கும் சவால்களை உடைத்தெறிய இந்த விளம்பரம் தூண்டுகிறது என்று ஒரு சாராரும் வாதிட்டு வருகின்றனர்.

இந்த விளம்பரத்தில் முஸ்லிம் பெண்கள் ஸ்கேட்டிங், குத்துச்சண்டை, வாற்சண்டை, ஐஸ் ஸ்கேட்டிங் நடனம், குதிரையேற்றம், உதைபந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

விளம்பரத்தின் முற்பகுதியில், சிறு தயக்கத்துடன் வெளிவரும் முஸ்லிம் பெண்ணொருவர் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுகிறார். மற்றொரு பெண் வீதியில் ஸ்கேட்டிங்கில் ஈடுபடுகிறார். வீதியில் செல்லும் பலரும் அவரை ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். ஆனால் மெல்ல மெல்ல அந்தத் தயக்கங்களை அவர் ஒதுக்கித் தள்ளுகிறார்.

பின்னணியில் ஒரு பெண் குரல், “அவர்கள் உன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? என்ன பேசுவார்கள்? ஒருவேளை, எல்லோருடைய எதிர்பார்ப்பையும் நீ தகர்த்துவிட்டதாகச் சொல்லக்கூடும்” என்று கூறுகிறது.

பின்னர், குத்துச் சண்டை, பெலே நடனம், ஐஸ் ஸ்கேட்டிங் நடனம், வாற்சண்டை போன்ற விளையாட்டுக்களில் முஸ்லிம் பெண்கள் கலந்துகொண்டு வெற்றியடைவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

விளம்பரத்தின் இறுதியில், ஒரு சிறு குழந்தை ஐஸ் ஸ்கேட்டிங் நடன அரங்கில் தயங்கியபடியே காலெடுத்து வைக்கிறது.

முடிவாக, நைக் நிறுவனத்தின் தாரக மந்திரமான Just Do It (இதைச் செயற்படுத்துவோம்) என்ற வாசகத்துடன் விளம்பரம் நிறைவுறுகிறது.

இந்த விளம்பரம் வெளியாகி இரண்டே நாட்களில் நான்கு இலட்சம் தடவைகள் பார்க்கப்பட்டுள்ள அதேவேளை, இது குறித்து ஆதரவும், எதிர்ப்புமான விமர்சனங்கள் பரவி வருகின்றன.

அரேபியாவில் உள்ள பெண்களை அசிங்கப்படுத்திவிட்டது நைக் என்று ஒரு சாராரும், அரேபியாவில் விளையாட்டின்பால் ஆர்வமுள்ள பெண்கள் சந்திக்கும் சவால்களை உடைத்தெறிய இந்த விளம்பரம் தூண்டுகிறது என்று ஒரு சாராரும் வாதிட்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தட்டசுச்சுப் பொறியின் தந்தை ஆர்.முத்தையா பிறந்த தினம்: பிப்.24 1886

 

தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழில்நுட்பங்களையும் உருவாக்கியவரான ஆர்.முத்தையா 1886-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் பிறந்தார். முத்தையா அவர்கள் தாம் கண்டுபிடித்த தட்டச்சை "ஸ்டாண்டர்ட்" பெரிய தட்டச்சு என்று குறிப்பிட்டார். அது சிறப்பான பல அம்சங்களை உடையது.

 
 
 
 
தட்டசுச்சுப் பொறியின் தந்தை ஆர்.முத்தையா பிறந்த தினம்: பிப்.24 1886
 
தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழில்நுட்பங்களையும் உருவாக்கியவரான ஆர்.முத்தையா 1886-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் பிறந்தார். முத்தையா அவர்கள் தாம் கண்டுபிடித்த தட்டச்சை "ஸ்டாண்டர்ட்" பெரிய தட்டச்சு என்று குறிப்பிட்டார். அது சிறப்பான பல அம்சங்களை உடையது.

தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால் அவை எல்லாவற்றையும் நான்கு வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அமைக்க முடியாது. எனவே, பல எழுத்துக்களுக்குப் பொதுவான உள்ள சில குறியீடுகளைத் தனித்தனி விசைகளில் அமைத்து அவைகளைத் தேவையான எழுத்துக்களுடன் சேர்த்து அச்சடிக்கக் கூடிய விசைப்பலகையை அமைக்க வேண்டும். அப்படியானால், இரண்டு விசைகளை அழுத்திய பின்பே அச்சை நகரச் செய்ய வேண்டும்.

பல பரீட்சைகள் செய்து கடைசியாக நகரா விசையைக் கண்டுபிடித்தார். அதாவது "வி" என்ற எழுத்திலுள்ள விசிறியை அடிக்கும் பொழுது அச்சு நகராது. எஞ்சியுள்ள "வ" வை அடித்த பின் தான் அச்சு நகரும். மெய்யெழுத்துக்களும் இப்படியே அச்சாகின்றன. இவர் உண்டாக்கிய நகரா விசையையே இன்றும் தட்டச்சு உற்பத்தியாளர்கள் உபயோகிக்கிறார்கள்.

இந்த மூன்று நகரா விசைகளும் விசைப்பலகையின் வலப் பக்கம் இருக்கின்றன. முறையான விசைப்பலகைப் பயிற்சி பெற்றவர்கள் இந்த மூன்று விசைகளையும் வலக்கையின் சிறு விரலால் இயக்குவர். முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பில் க’, த’ போன்ற எழுத்துக்களுக்கு ஒரு விசிறியும், ண’, ன’ போன்ற எழுத்துக்களுக்கு வேறு ஒரு விசிறியும் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும். இவர் தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

மேலும், இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:

• 1875 - ஆஸ்திரேலியக் கிழக்கு கரையில் எஸ்.எஸ்.கோத்தன்பேர்க் என்ற கப்பல் முழ்கியதில் 102 பேர் கொல்லப்பட்டனர்.

• 1881 - சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

• 1918 - எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது.

• 1920 - நாசிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

• 1945 - எகிப்தியப் பிரதமர் அகமது மாஹிர் பாஷா நாடாளுமன்றத்தில் வைத்துக் கொல்லப்பட்டார்.

• 1999 - கிழக்கு சீனாவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 61 பேர் கொல்லப்பட்டனர்.

• 2009 - வாட்ஸ் ஏப் நிறுவனம் ஜான் கௌமால் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

ஆப்பிள் அப்பத்தா...டேப்லெட் சின்னாத்தா...கேட்ஜெட்ஸ் தந்த மாற்றங்கள்! #DigitalLife

கேட்ஜெட்ஸ் வந்தா பின்னால நம்ம பழக்கவழக்கங்கள்ல என்னென்ன மாற்றங்கள் வந்திருக்குன்னு யோசிச்சா, நம்ப முடியாத மாற்றங்கள் நம்பித்தான் ஆகவேண்டியிருக்குங்கற கணக்கா இருக்கு. நல்லதும், கெட்டதுமா இருக்கற இந்தப் பழக்கங்கள்ல பலதை நாமளும் பண்றோம்ங்கறதுதான், உண்மை.

கேட்ஜெட்


முதல்ல எல்லாம் யாராவது விருந்தாளிகள் வீட்டுக்கு வந்தா, உட்காருங்க... என்ன சாப்டறீங்கன்னு கேட்போம். அவங்களும் உள்ள வந்ததுமே, ‘மச்சான் இல்லையா.. மதினி இல்லையா’ன்னு ஆட்களைத்தான் கேப்பாங்க” இப்ப, வந்ததுமே அவங்க போனை எங்க சார்ஜ் போடலாம்னுதான் பார்க்கறாங்க.

‘உன் நண்பனைப் பற்றிச் சொல்.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ன்னு யாரோ போனில்லாத காலத்துல சொல்லிருக்காங்க. இப்பல்லாம், உன் போனை ஓபன் பண்ணிக் காட்டு, உன்னைப் பத்திச் சொல்றேன்தான் நடக்குது.

பயணம் போறவங்க, தண்ணி பாட்டிலை எடுத்து வெச்சுக்கறாங்களோ இல்லையோ, பவர் பேங்கை எடுத்து வெச்சுக்க மறக்கறதில்லை. ஹெட்போன் மாட்டிகிட்டு, வேலை செஞ்சுட்டிருக்கறப்ப நம்ம மேனேஜர் நம்மகிட்ட வந்து நின்னா, எழுந்து நிக்கறதை விட, ஹெட்போனை கழட்டறதுதான் மரியாதையான செய்கை.

கல்யாணம், காதுகுத்துன்னு போனா குழந்தைகள் அம்மாவையோ, அப்பாவையோ தொந்தரவு பண்ணினாலோ.. அல்லது தியேட்டர்ல படம் பார்க்கறப்ப குட்டீஸ் குறும்பு பண்ணினாலோ டக்னு நம்ம போனைக் குடுத்து கேம் விளையாடச் சொல்லிட்டு நாம நிம்மதியாகிடறோம்.


பக்கத்து வீட்ல சர்க்கரை, காபித்துளெல்லாம் கடன் கேட்கறதில்ல.. Wi Fi பாஸ்வேர்ட்தான். 

புருஷன்கிட்ட ‘என்னங்க.... எனக்கு அந்த புடவை ரொம்பப் பிடிச்சிருக்கு.. வாங்கித்தர்றீங்களா’ கெஞ்சலெல்லாம் இல்லை. போன்ல ஆர்டர் பண்ணி வீடு தேடி வரவெச்சுக்கறாங்க. புடவையக் கட்டிகிட்டு அவங்க நிக்கற அழகுல மயங்கறதவிட, க்ரெடிட் கார்ட் பார்த்த பின்னாடி, புருஷன் மயங்கறதுதான் அதிகம்.

முன்னாடியெல்லாம் ஊருக்குப் போறப்ப, பக்கத்துவீட்ல ‘பார்த்துக்கோங்க’ன்னு சொல்லிட்டு போவோம். அல்லது கூர்க்காகிட்ட சொல்லுவோம். இப்ப சிசிடிவி மாட்டிக்கறதால அந்த வேலையை அதுவே பார்த்துக்குது.

குழந்தைகள், ‘அப்பா என்ன பொம்மை வாங்கிட்டு வந்தீங்க’ன்னு கேட்கற காலம்போய், ‘புதுசா என்ன கேம் டவுன்லோட் பண்ணினீங்க?’ன்னு கேக்கறாங்க. 

கேட்ஜெட்

குழந்தைகள்கிட்ட பெரியவங்க கூட விளையாடணும்னா, எக்ஸ் பாஸ்ல கேரக்டர்ஸ் பேரை அப்பத்தா, மாமான்னு வெச்சு ‘அவங்ககூடத்தான் விளையாடறேன்மா’ங்குதுங்க! 

பொண்ணு பார்க்கறதெல்லாம், ஸ்கைப்லதான். நோ பஜ்ஜி, சொஜ்ஜி டிராமாஸ்! பொண்ணுக்கு ஆடத்தெரியுமா பாடத்தெரியுமான்னு கேக்கறதில்ல.. பொண்ணுகிட்ட ஆண்ட்ராய்ட் இருக்கா, ஆப்பிள் இருக்காதான்!

உடம்பு சரியில்லைன்னா, கை வெச்சுப் பார்க்கறதில்ல... எலக்ட்ரானிக் தெர்மா மீட்டர்னு, கேட்ஜட் கைவசம் வெச்சிருக்காங்க. 

கூடவே இருக்கற ஃப்ரெண்டுக்கு, வாட்ஸ்அப்லதான் வாழ்த்து. வழி தெரியலைன்னா, நிறுத்தி ஆளுகளைக் கேட்கறது மாறி, ஜிபிஎஸ்ஸைத்தான் நம்பறோம். அப்படிப் போய், ஒன்வேன்னு தெரியாம ட்ராஃபிக் கான்ஸ்டபிள் காலுக்குள்ளயே போய் நிறுத்தறதுவேற நடக்குது!

காந்திகூட இப்ப இருந்திருந்தா, தண்டி யாத்திரையை ஃபேஸ்புக் ஈவன்டாகவும், உப்புச் சத்தியாகிரத்தை ட்விட்டர் ஹேஷ்டேக்லயும்தான் கொண்டாடிருப்பார். திருப்பூர் குமரனின் போராட்டத்தை ஃபேஸ்புக்கில் லைவ் செய்திருப்பார்கள். ஆனால், நேரில் சென்று ஆதரவு தராமல் லைக் மட்டும் போட்டு ஆதரவு தெரிவித்திருப்பார்கள்.

என்ன சொல்லுங்க பாஸ்.. லவ்வரை நேர்ல கண்ணுக்கு கண்ணு பார்த்து, கை கோர்த்து பேசறப்ப வர்ற ஃபீலை மட்டும் மாத்த கேட்ஜெட் வர்ல. காதல் வாழ்க!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஆதியோகி இப்படித்தான் இருக்கிறார்! (வீடியோ)

sivan_Isha_16562.jpg

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

sivan_Isha_1a_16254.jpg

இந்தச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணிக்கு திறந்துவைக்கிறார். தற்போது, ஈஷா மையத்தில் நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளனர். மிகப்பிரமாண்டமாய்க் காட்சியளிக்கும் இந்தச் சிலையை ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர்.

 


படங்கள்: தி.விஜய்

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்னிக்கி யாரெல்லாமோ டபுள் செஞ்சுரி அடிக்கான்... ஆனா, விதை சச்சின் போட்டது!

2010 பிப்ரவரி 24. அப்போது மம்தா பானர்ஜி ரயில்வே மினிஸ்டர். அன்று அவர் நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்துகொண்டிருந்தார். வழக்கமாக, பட்ஜெட் விவரங்கள்தான் பத்திரிகைகளில் மறுநாள் தலைப்புச் செய்தியாகும். ஆனால், அந்த இடத்தை ஆக்கிரமத்திருந்தார் சச்சின் டெண்டுல்கர். மம்தாவின் ரயில்வே பட்ஜெட் முதல் பக்கத்தில் பெட்டிச் செய்தியானது.

கிரிக்கெட் கிரவுண்டுகளில் குவாலியர் அவ்வளவு பிரமாதமான ஸ்டேடியம் இல்லை. ஆனால், இந்த மும்பை மைந்தன் அந்த மத்தியப் பிரதேச நகருக்கு வரலாற்று முக்கியத்துவத்தைக் கொடுத்திருந்தார். கேப்டன் ரூப் சிங் ஸ்டேடியத்தில் அன்று கிரிக்கெட் பார்த்தவர்களுக்கு, வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளை அள்ளிக் கொடுத்திருந்தார். சச்சின் அன்றி வேறு எவரால் இது சாத்தியம்?சச்சின் 200

அப்படி என்ன செய்தார்?
சிம்பிள்... ஒன் டேயில் டபுள்செஞ்சுரி. 200 அடித்த முதல் வீரர். அதுவும் இந்தியர். வேர்ல்ட் ரிக்கார்ட். படைத்தது நம் சச்சின். ஒருநாள் கிரிக்கெட் ஃபார்மட் தோன்றி 40 ஆண்டுகள் கழித்து, தனிநபர் ஒருவர் இரட்டைச்சதம் அடித்திருக்கிறார். நீண்ட காத்திருப்பு. நெடுநாள் பேசும் சாதனை. அதைப் படைத்தபோது சச்சின் வயது 36. கிரிக்கெட்டில் 20 ஆண்டுக் கால அனுபவம். கிட்டத்தட்ட இது ஓய்வை நெருங்கும் தருணம். இத்தருணத்தில் ஒரு உலக சாதனையா? ஆஃப் சைட், லெக் சைட் மட்டுமே தெரிந்த ரசிகனில் இருந்து, கிரிக்கெட்டை அக்குவேறு, ஆணி வேறாகப் பிரித்து மேயும் ஹர்ஷா போக்ளே வரை ஓஹோவெனப் புகழ்ந்தனர்.

பர்னல் வீசிய 46-வது ஓவரில் ‘ஷார்ட் ஃபைன் லெக்’ திசையில் ஒரு ‘ப்ளிக்’. அணிக்குக் கிடைத்தது இரண்டு ரன்கள். சச்சின் 195 நாட் அவுட். அரங்கம் ஆர்ப்பரித்தது. பாகிஸ்தானின் சயீத் அன்வர், ஜிம்பாப்வேயின் சார்லஸ் கோவன்ட்ரி இருவரும் சச்சினுக்கு வழி விட்டு நின்றனர். ‘ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த முதல் வீரர்’ - வர்ணனையாளர்கள் அலறினர். தென் ஆப்ரிக்க விக்கெட் கீப்பர் மார்க் பெளச்சர், வேகமாக வந்து சச்சினுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்கிறார். பொதுவாக பேட் கையில் இருக்கும்போது பெரிதாக உணர்ச்சிகளை வெளிக்காட்டாத சச்சின் இந்தமுறையும் ஆர்ப்பரிக்கவில்லை. அவருக்குத் தெரியும். இதோ இன்னொரு மைல்கல். அதுவும் மிக அருகில். 

திக் திக் திக் நிமிடங்கள்
சச்சின் சதத்தை நெருங்கினாலே அவரது ரசிகனுக்கு உள்ளூற உதறும். இரட்டைச் சதத்தை நெருங்குகிறார். அதுவும் முதன்முறையாக... சொல்லவா வேண்டும்? 200 அடித்தால் உலக சாதனை. அடிப்பாரா? அடித்து விடுவார். இன்னும் முழுமையாக நான்கு ஓவர்கள் இருக்கின்றன. ஒருவேளை, 99 ரன்களில் அவுட்டாவது போல 199 ரன்களில் அவுட்டாகி விட்டால்? குழப்பம். அந்தத் தருணத்தில் எதிர்முனையில் இருந்த தோனி, விட்டு விளாசி, டென்ஷனை குறைக்கிறார். ஓகே. ரிலாக்சாக இருந்தால் ஈஸியாக அடித்து விடலாம். 49-வது ஓவர். ஸ்டெயின் வீசிய அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி. அடித்தது தோனி. பரவாயில்லை. இன்னும் ஒரு ஓவர் இருக்கிறது. இரண்டு பந்து கிடைத்தாலே போதும். அச்சோடா... கடைசி பந்தில் தோனி ரன் எடுத்து விட்டார்... அடேய்...

கடைசி ஓவர்... லெங்லெவ்டட் வீசிய முதல் பந்தில் சிக்ஸர். ‘டேய்... போதும்டா... சச்சினுக்கு ஸ்ட்ரைக் கொடு’ - இங்கிருந்து கத்தினான் ரசிகன். அடுத்த பந்தில் சிங்கிள். ஸ்ட்ரைக்கர் எண்டில் சச்சின். அதுவும் 199 ரன்களில்... கிரிக்கெட்டில் இதை விட டென்ஷனான தருணம் வேறு இருக்கிறதா என்ன? பாயின்ட் திசையில் சிங்கிள். அப்பாடா... 200. வழக்கம்போல ஹெல்மெட்டைக் கழற்றி அமரரான தந்தைக்கு அர்ப்பணம் செய்து, முதல் இரட்டைசதத்தைக் கொண்டாடினார் சச்சின். மைதானத்தில், டிவியில் இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் கண்களில் திரைகட்டியது நீர். மனதில் நிம்மதி.

சச்சின் 200

என்னென்ன வார்த்தைகளில் புகழ வேண்டுமோ அத்தனை வார்த்தைகளிலும் புகழாரம். ‘Endulkar’ என தலைப்பிட்ட பத்திரிகை ‛IMMORTAL AT 200’ என உச்சிமுகர்ந்தது. வரிசைகட்டி நின்றன வாழ்த்துகள். ‘‘சாதனைகள் முறியடிக்கப்படுவதற்கே. யாரோ ஒருவர் (சார்லஸ் கோவன்ட்ரி) என் சாதனையை ‘பிரேக்’ செய்ததாகக் கேள்விப்பட்டேன். அவர் யாரென்றே தெரியாது. தற்போது மும்பையைச் சேர்ந்த என் நண்பன் முறியடித்திருப்பது மகிழ்ச்சி’’ என்றார் சயீத் அன்வர். ‘‘ஜிம்பாப்வே - வங்கதேசம் மோதலுக்கும், இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதலுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கிறது. சில நாள்கள் அந்த சாதனையில் இருந்ததில் மகிழ்ச்சி. 200 ரன்கள் என்ற இமாலய சாதனைக்கு சச்சினை விட தகுதியானவர் வேறு யாருமில்லை’’ என்றார் கோவன்ட்ரி.

ஒருவகையில் கோவன்ட்ரி சொல்வது அத்தனை உண்மை. 20-20 ஆதிக்கம் பெறத் தொடங்கிய காலம். ஒண்டே மேட்ச்சில் 200 என்பது அசாதாரணம் இல்லை. சச்சின் அதை வலுவான தென் ஆப்ரிக்க அணியிடம் அடித்ததுதான் விஷயம். ‘பேட்டிங் பவர்பிளே’ எடுத்த 35-வது ஓவரில் ஸ்டெய்ன், சச்சினை அவுட்டாக்க எல்லா வழிகளிலும் முயற்சித்தார். ‘யார்க்கர்’ வீச முயல, அது ‘ஃபுல் டாஸ்’ ஆக, அதை சச்சின் ‘ஸ்கொயர் லெக்’ திசையில் பவுண்டரி அடித்தார். அடுத்த இரண்டு பந்துகளில் ரன் இல்லை. ஐந்தாவது பந்தில் ‘மிட் விக்கெட்’ - ‘ஸ்கொயர் லெக்‘ இடையே ஒரு ‘ஃப்ளிக்’. பந்து பவுண்டரிக்குச் செல்ல, ஸ்டெய்ன் தோள்களைச் சிலுப்பி, விரக்தியில் தலையை அசைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

சச்சின் 200

காலிஸ் பந்துவீசும் முன் ஸ்லிப்பில் இருந்தவர்களை எல்லாம், 15 யார்டு வட்டத்துக்குள் கேட்ச் பிடிக்கும் பொசிஷனில் நிறுத்தினார். தென் ஆப்ரிக்கா ஃபீல்டிங் பற்றி சொல்லவா வேண்டும்? பட்டினி கிடக்கும் நாய் எலும்பைக் கவ்வுவது போல பாய்வார்கள் தென் ஆப்ரிக்க ஃபீல்டர்கள். அடுத்தடுத்து அதே லெங்த்தில், அதே திசையில் போட்டால்  எப்படியும் சச்சின் சிக்குவார் என்பது காலிஸ் கணிப்பு. அனுபவம். ஆனால், சச்சின் தன் ‘ட்ரைவ்’-களால், தென் ஆப்ரிக்க ஃபீல்டர்களை ஓட விட்டுக் கொண்டே இருந்தார். சந்தித்த 147 பந்துகளில் எதிரணிக்கு ஒரு ‘சான்ஸ்’ கூட கொடுக்கவில்லை. ஒவ்வொரு பந்தையும் அவ்வளவு கவனமாக எதிர்கொண்டார். ஒவ்வொரு ரன்னையும் அவ்வளவு நுணுக்கமாக எடுத்தார். 111 ரன்கள் எடுத்தபின்புதான், ‘லாங் ஆன்’- ல் ஒரு சிக்ஸர்  பறக்க விட்டார். இன்னும் ஏராளம் இருக்கிறது அந்த இன்னிங்ஸ் பற்றிச் சொல்ல.

சச்சினுக்குப் பின், சேவாக், ரோகித் சர்மா (இரண்டுமுறை), கிறிஸ் கெய்ல், மார்ட்டின் குப்டில் இரட்டைச்சதம் அடித்து விட்டனர். T-20 ஆதிக்கம் செலுத்தும் இந்தக் காலத்தில் இனி, ஒண்டே ஃபார்மட்டில் டபுள் செஞ்சுரி என்பது சாதாரணம். யார் வேண்டுமானாலும் எளிதாக அடிக்கலாம். ஆனால், அதற்கான விதை சச்சின் தூவியது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

'நாமெல்லாம் கேரட் தின்று வளர்ந்த பரம்பரை!' அனிமேஷன் முயல் வேட்டை #Zootopia

Zootopia


கற்காலத்தில் இருந்து கணினி யுகம் வரை பல்லாயிரம் ஆண்டுகளாக மனித குலம், நாகரிகத்தை நோக்கி மெள்ள மெள்ள நகர்ந்துகொண்டிருக்கிறது. ஆனாலும், நிறம், இனம், மதம் என்று பல்வேறு காரணங்களால் மனிதர்களிடையே உள்ள பாகுபாடுகளும் பரஸ்பர வெறுப்புகளும் இன்னமும் மறையவில்லை. கற்காலத்தின் காட்டுமிராண்டித்தனங்கள் எப்போதும் வேண்டுமானாலும் விழித்துக்கொள்ளும் ஆபத்து நாகரிகத்தின் அடியில் உயிர்ப்புடன் இருக்கிறது. இவ்வாறான பாகுபாடுகள், வேறுபாடுகள், பகைமைகள் என்று எதுவும் இல்லாமல் அன்புடன் ஒற்றுமையாக வாழ்ந்தால் அந்த உலகம் எப்படி  இருக்கும்? அது சாத்தியமானால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறதுதானே? அவ்வாறான ஓர் உணர்வை, விலங்குகளின் கதை வழியாக அழுத்தமாகவும் ஜாலியாகவும் பதியவைக்கிறது, ஜூடோபியா (Zootopia).

2016-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டிய பட்டியலில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ள இந்தத் திரைப்படம், 'அனிமேஷன்' பிரிவில் கோல்டன் குளோப் விருதைப் பெற்றுள்ளது. ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலிலும் உள்ளது.

நாகரிக வளர்ச்சியும் சமூக நல்லிணக்கமும் மேம்பட்டிருக்கும் காலம். இரையை வேட்டையாடும் விலங்குகளும் அவற்றுக்கு இரையாகும் விலங்குகளும் தங்களின் பாரம்பரிய குணங்களை மறந்து ஒற்றுமையாக வாழும் உலகம் அது. அந்த உலகத்தில், ரூடி என்கிற சிறிய முயல்குட்டிக்கு இளம் வயது முதலே ஒரு கனவு இருக்கிறது. காவல்துறையில் பணிபுரிய வேண்டும் என்பதே அது. 'ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா' என்று துரைசிங்கமாக முழங்க விரும்பும் அந்த முயல்குட்டியின் உயரம் ஒன்றரை அடிகூட இல்லை. ஆனால், ரூடிக்கு அதெல்லாம் ஒரு தடையே இல்லை. தீமையை எங்குப் பார்த்தாலும் தட்டிக் கேட்கிறது. உதை வாங்கினாலும் தன் கனவை மாற்றிக்கொள்ள அது தயாராக இல்லை. இந்த உலகத்தின் நல்ல மாற்றங்களுக்கு தானும் ஒரு காரணமாக இருக்க என வேண்டும் நினைக்கிறது. ஆனால், ரூடியின் பெற்றோர்களுக்கு கவலை. 'நாமெல்லாம் கேரட் தின்று வளர்ந்த பரம்பரை. நமக்கு எதற்கு பொல்லாப்பு? இருக்கிற இடம் தெரியாம வளரணும்டா செல்லம்' என்று பழைய நடைமுறையை விளக்கி அறிவுறுத்துகிறார்கள்.

ரூடி அதையெல்லாம் காதில் வாங்காமல் கடுமையான பயிற்சிகளைத் தாண்டி காவல் துறையில் இணையும் தகுதியைப் பெற்றுவிடுகிறது. மிடுக்கான நடையுடன் நகரத்தை நோக்கி செல்கிறது. காட்டெருமை, யானை என்று பிரமாண்டமான அளவில் உள்ள காவல் துறை பணியாளர்களுக்கு இடையில், அப்பாவி ரூடி இன்னமும் சிறியதாக தெரிகிறது. அதை அலட்சியமான புன்னகையுடன் பார்க்கும் அதிகாரி 'பார்க்கிங் டிக்கெட்'  பணியைத் தருகிறார். சாகச உலகை எதிர்பார்த்து வந்த ரூடிக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும், அந்தச் சாதாரண பணியிலும் சிறப்பாகப் பணிபுரிகிறது. போகும் வழியில் நிக் என்கிற நரி ஏமாற்றுச் செயல்களை செய்து, பணம் சம்பாதிப்பதை பார்த்து கண்டிக்கிறது. ஆனால், ஆதாரம் எதுவும் இல்லாததால் அதை எதுவும் செய்யமுடியவில்லை.

'தன்னுடைய கணவரை காணோம்' என்று கண்ணீரும் கம்பலையுமாக வந்து நிற்கிறது ஒரு நீர்க்கரடி. 'இந்த கேஸையாவது என்னிடம் தாருங்களேன்' என கெஞ்சுகிறது ரூடி. அனுமதி மறுக்கப்படுகிறது என்றாலும், துணை மேயரின் பரிந்துரையின் பேரில் அந்த வழக்கை கையாள அனுமதி தருகிறார் தலைமை அதிகாரி. '48 மணி நேரத்துக்குள் இதைக் கண்டுபிடிக்க வேண்டும். இல்லையென்றால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஓட வேண்டும், சின்ன முயலே சம்மதமா?" என்கிறார்.

'டீல்' என்று சொல்லிவிட்டு, 'சிங்கம் ஒன்று புறப்பட்டதே' என்று கெத்தாக கிளம்புகிறது. ஆனால், எங்கிருந்து ஆரம்பிப்பது என்று குழப்பம். காணாமல்போனது ஒரு விலங்கு மட்டுமல்ல, மொத்தம் 14 விலங்குகள்.  நரியான நிக்கின் உதவியைக் கேட்கிறது. அது அலட்டலாக மறுக்க, அதன் வாயில் இருந்தே பிடுங்கிய வாக்குமூலத்தின் மூலம் மடக்கி தன்னுடன் வரவைக்கிறது. விலங்குகள் காணாமல்போனதற்கு பின்னால் மிகப்பெரிய சதித்திட்டம் இருக்கிறது. ரூடியும் நிக்கும் இணைந்து சில பல சாகசங்களுக்குப் பின்னால் உண்மையைக் கண்டுபிடிக்கின்றன. ஆனாலும் அது பாதி உண்மை மட்டுமே என்று தெரியவருகிறது. தவறான ஆள் கைது செய்யப்பட்ட சூழலில் உண்மையான சதிகாரன் வேறு. அந்தச் சதித்திட்டம் என்ன, முயலும் நரியும் இணைந்து அதை எவ்வாறு கண்டுபிடித்தார்கள், உண்மையான குற்றவாளி யார் என்கிற விறுவிறுப்பான காட்சிகளுடன் மீதமுள்ள படம் நிறைகிறது.

ஒரு அனிமேஷன் திரைப்படம் சிறப்பாக அமைவது முதன்மையானது அதன் கற்பனை. இரண்டாவது காரணம், அதன் உருவாக்கம். இந்த வகையில் ஜூடோபியா திரைப்படத்தை உருவாக்கிருப்பதை அதிகம் விளக்காமல் ஒரே வரியில் சொல்லிவிடலாம். அனிமேஷன் திரைப்படங்களின் பிதாமகரான 'வால்ட் டிஸ்னி'யின் அனிமேஷன் ஸ்டூடியோ இதை உருவாக்கியிருக்கிறது என்பதே இதன் சிறப்பை விளக்க போதுமானதாக இருக்கும். வண்ணமயமான, அபாரமான உருவாக்கம். வரைகலைநுட்பத்தின் உச்சத்தை இந்தத் திரைக்கதையின் கற்பனைக்கு மிகச் சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள். மிக ஜாலியான, சுவாரஸ்யமான இந்தத் திரைப்படத்தை இயக்கி இருப்பவர்கள் Byron Howard மற்றும் Rich Moore.

துறுதுறுப்பான ரூடியின் தோற்றமும் சாகசங்களும் நம்மை கவர்கின்றன. விசாரணைக்காக முயலும் நரியும் ஒரு மாஃபியா தாதாவைச் சந்திக்கின்றன. 'காட்பாதர்' மார்லன் பிராண்டாவை நினைவுப்படுத்தும் காட்சிகளாக அந்தப் பாத்திரம் அமைந்திருப்பது ரகளையான நகைச்சுவை. நரியான 'நிக்' ஏமாற்றிப் பிழைப்பது போலத் தெரிந்தாலும், அதற்குப் பின்னாலும் ஒரு சோகமான பிளாஷ்பேக் இருக்கிறது. ஆம். ரூடியைப் போலவே அதுவும் இளம் வயதில் காவல் துறையில் சேர விரும்பியது. ஆனால், நரி என்றாலே ஏமாற்றுக் குணமுடையதாக இருக்கும் என்கிற முன்தீர்மான எண்ணத்தினால் வெளியே துரத்தப்படுகிறது. 'போங்கடா' என்று ஏமாற்றும் தொழிலில் குதித்திருக்கிறது நரி.

எந்தவோர் இனத்தையும், சமூகத்தைச் சார்ந்த நபரையும் முன்தீர்மானத்தோடு அணுகக் கூடாது என்கிற செய்தி மிக அழுத்தமாக நம்முன் வந்து விழுகிறது. இதுபோல சமூக மாற்றத்துக்கும் நல்லிணத்துக்கும் அடிப்படையான பல விஷயங்கள், பிரச்சாரத் தொனி இல்லாமல் இயல்பாக திரைப்படத்தில் கலந்திருக்கிறார்கள்.

சிறுவர்களுக்கான சினிமாக்களில் தனித்த இடம் ஜூடோபியாவுக்கு தனி இடம் உண்டு.

 ஜூடோபியா (Zootopia) படத்தின் டிரைலர்:

 

 

.

 

 

  • தொடங்கியவர்
மிருகங்களைவிட மனிதனே மோசமானவன்
 

article_1487598131-u-iyuo978.jpgவேட்டையாடுதல் என்பது, மிருகங்கள் தங்கள் உணவுக்காக மட்டும் செய்யும் கருமம் ஆகும். 

ஆனால், மனிதர்கள் செய்யும் வேட்டைகளோ படுபயங்கரமானதும் எல்லைகள் அற்றதுமாகும். அரசியல், தொழில், பணம் என்பவற்றை அடைய, இவர்கள் செய்யும் அடாவடித்தனமான வேட்டை பற்றி இயம்புதல் அரிது.

 இன, மத, மொழியைச் சாட்டாக வைத்துச் செய்யும் யுத்தங்களை, நடத்தும் நாடுகள் செய்யும் அக்கிரமங்களுக்கு என்ன நாமம் சூட்டலாம். 

பெண்கள் மீதான வன்முறை, பாலியல் வன்முறைகள், தொழிலாளர்கள், சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகள் எல்லாமே பகிரங்கமாக நடந்துகொண்டிருக்கும் வேட்டைகள்தான். 

மிருகங்களைவிட மனிதனே மோசமானவன். இவன் தனது சுயநலனுக்காக எதனையும் செய்வான். அவன் இயற்கையை அழிப்பதற்கு அச்சப்படவேயில்லையே.

இது, கடவுளை மிரட்டும் செயல்போல் இருக்கின்றது.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: அரசியல் செய்ய விரும்பு

 

 
main_3137210f.jpg
 
 
 

8_3137211a.jpg

7_3137212a.jpg

6_3137213a.jpg

5_3137214a.jpg

4_3137215a.jpg

3_3137216a.jpg

2_3137217a.jpg

1_3137218a.jpg

 

  • தொடங்கியவர்

பிலிப்பைன்ஸ்: மக்கள் எழுச்சி நாள்- பிப்ரவரி 25-1986

பிலிப்பைன்ஸ் நாட்டில் பிப்ரவரி 25-ம் தேதி மக்கள் எழுச்சி நாளாக 1986 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1992 - அசர்பைஜானின் நகர்னோ- கரபாக் பகுதியில் ஆர்மேனிய ராணுவத்தினர் 613 குடிமக்களைப் படுகொலை செய்தனர். * 1994 - மேற்குக் கரை நகரான ஹெப்ரோனில் மசூதி ஒன்றில் இஸ்ரேலியரான பரூக் கோல்ட்ஸ்டெயின் என்பவர் சுட்டதில் 29 பாலஸ்தீனர்கள்

 
பிலிப்பைன்ஸ்: மக்கள் எழுச்சி நாள்- பிப்ரவரி 25-1986
 
பிலிப்பைன்ஸ் நாட்டில் பிப்ரவரி 25-ம் தேதி மக்கள் எழுச்சி நாளாக 1986 முதல்  கொண்டாடப்பட்டு வருகிறது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1992 - அசர்பைஜானின் நகர்னோ- கரபாக் பகுதியில் ஆர்மேனிய ராணுவத்தினர் 613 குடிமக்களைப் படுகொலை செய்தனர்.
 
* 1994 - மேற்குக் கரை நகரான ஹெப்ரோனில் மசூதி ஒன்றில் இஸ்ரேலியரான பரூக் கோல்ட்ஸ்டெயின் என்பவர் சுட்டதில் 29 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 125 பேர் காயமடைந்தனர்.
 
ஆத்திரமடைந்த பாலஸ்தீனர்கள் கொலையாளியை அடித்துக் கொன்றனர். இதனையடுத்து நிகழ்ந்த வன்முறைகளில் 26 பாலஸ்தீனர்களும் 9 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.

* 2006 - உலகின் மக்கள் தொகை 6.5 பில்லியனைத் தாண்டியது.
 
* 2007 - ஈசாவின் ரோசெட்டா விண்ணுளவி (Rosetta Space Probe) முதன் முதலாகச் செவ்வாய்க் கோளை 150 மைல் உயரத்தில் மிக அருகே சுற்றிவந்து அதன் சுழல்வீச்சில் (Mars Fly-by) அப்பால் எறியப்பட்டது.
 
 

முதன்முதலாக பிரிதிவி ஏவுகணை ஏவப்பட்ட நாள்- பிப்ரவரி 25-1988

இந்தியா அணுஆயுத்தை சுமந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை தயாரித்தது. முதன்முதலாக பிரிதிவி என்ற ஏவுகணையில் மாதிரி அணுஆயுதத்தை வைத்து சோதனை நடத்தப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1836 - சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார். * 1837 - தாமஸ் டெவன்போர்ட் மின்சாரத்தில் இயங்கும் மோட்டாருக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார். * 1921 - ஜார்ஜியாவின் தலைநகர் திபிலீசி ரஷ்யாவின் கம்யூனிஸ்ட்

 
 
முதன்முதலாக பிரிதிவி ஏவுகணை ஏவப்பட்ட நாள்- பிப்ரவரி 25-1988
 
இந்தியா அணுஆயுத்தை சுமந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை தயாரித்தது. முதன்முதலாக பிரிதிவி என்ற ஏவுகணையில் மாதிரி அணுஆயுதத்தை வைத்து சோதனை நடத்தப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1836 - சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.
 
* 1837 - தாமஸ் டெவன்போர்ட் மின்சாரத்தில் இயங்கும் மோட்டாருக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.
 
* 1921 - ஜார்ஜியாவின் தலைநகர் திபிலீசி ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் படைகளினால் கைப்பற்றப்பட்டது.
 
* 1925 - சோவியத் ஒன்றியத்திற்கும் ஜப்பானுக்கும் இடையில் தூதரக உறவு ஆரம்பிக்கப்பட்டது.
 
* 1932 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் குடியுரிமையைப் பெற்றார்.
 
* 1945 - இரண்டாம் உலகப் போர்: துருக்கி ஜெர்மனி மீது போரை அறிவித்தது.

* 1948 - செக்கோசிலவாக்கியாவின் ஆட்சியை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது.
 
* 1956 - சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக்கால நிர்வாகத்தைக் கண்டனம் செய்தார்.
 
* 1980 - சூரினாமில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.
 
* 1986 - பிலிப்பைன்ஸ் அதிபர் பேர்டினன்ட் மார்க்கோஸ் மக்கள் புரட்சியை அடுத்து ஆட்சியைக் கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். கொரசோன் அக்கீனோ அதிபரானார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

பூனைகளுக்கான ஐந்து நட்சத்திர விடுதி..!

 

 

உலகில் முதல்முறையாகப் பூனைகளை பராமரிப்பதற்கான ஐந்து நட்சத்திர விடுதி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றுள்ளது. 

3CF43BA400000578-0-Living_like_an_aristo

3CF43B8200000578-0-Staff_play_with_cats_

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு ஒரேவிதமான வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தும். அதனால் அவற்றிக்கு விடுமுறை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். எனும் தொனிப்பொருளில், கேட்ஸோனியா எனும் ஐந்து நட்சத்திர விடுதியானது பூனைகளை பராமரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

3CF43A2E00000578-0-The_website_adds_Cats

கேட்ஸோனியா விடுதியானது 35 ஆடம்பர அறைகளை கொண்டுள்ளதோடு, பூனைகள் விளையாடுவதற்கான வசதிகள்,  மிகச் சிறந்த பராமரிப்பு, பூனைகளுக்கான மசாஜ், குளியல், ஆரோக்கியமான உணவு, சரியான ஓய்வு போன்ற வசதிகளை கொண்ட இடமாக அமைக்கப்பட்டுள்ளது.

3CF43A2E00000578-0-The_website_adds_Cats

3CF43B7E00000578-0-A_pet_owner_holds_a_m

குறித்த விடுதியில் 3 மணித்தியாலயத்திலிருந்து 1 வருடம் வரை பூனைகளை விட்டு செல்லலாம். மேலும் ஒரு இரவுக்கான பராமரிப்பிற்கு 400 ரூபாவிலிருந்து அறைகள் வழங்கப்படுவதோடு, அதிகக் கட்டணம் கொண்ட அறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு கெமரா பொறுத்தப்பட்டுள்ளதோடு, பூனையின் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பூனைகளைக் கெமராவின் மூலம்  கவனித்துக்கொள்ளுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

ட்ரம்ப்பை பதவியை விட்டு விலக்க ஒன்றுகூடும் சர்வதேச சூனியக்காரர்கள் (படங்கள் இணைப்பு)

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிரான குரல்கள் இன்னும் ஒலித்துக்கொண்டு வரும் நிலையில், அமெரிக்காவின் மாந்திரீகர்கள் மற்றும் சூனியக்காரர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ட்ரம்ப் பதவி விலகவேண்டும் என்பதற்காக ஒரு பூஜையை நடத்தியுள்ளனர். உலகளாவிய ரீதியில் உள்ள மாந்திரீகர்களும் இந்தப் பூஜையில் தத்தமது நாடுகளில் இருந்தபடியே கலந்துகொண்டுள்ளனர்.

4_Witches.jpg

நான்கு கட்டங்களாக நடத்தப்படவுள்ள இந்தப் பூஜையின் முதற்கட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சூனியக்காரர்களாகக் கருதப்படும் பலர் கலந்துகொண்டனர். பெரும் செலவில் இந்தப் பூஜை மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டுள்ளது.

4_Witches-2.jpg

தாம் எடுக்கும் இந்த முயற்சி விளையாட்டுத்தனமானது அல்ல என்றும், இந்தப் பூஜையின் பலனாக ட்ரம்ப் உடனடியாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் பூஜையை நடத்திய சூனியக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

4_Witches-3.jpg

பூஜையின் அடுத்தடுத்த கட்டங்கள் மார்ச் 26, ஏப்ரல் 24 மற்றும் மே 23ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

4_Witches-1.jpg

மேலும், சூனியம் மற்றும் மாந்திரீகம் என்பனவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் யாரும் இதில் கலந்துகொள்ளலாம் என்று கூறும் இவர்கள், பூஜைகளை நடத்துவதற்கான வழிமுறைகளை இணையதளம் வழியாக விளக்கம் அளித்தும் உள்ளனர்.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: தீபா பேரவை- அத்தையின் பதவிக்கும் ஆசைப்படு!

 

 
தீபா | கோப்புப் படம்: வி.கணேசன்.
தீபா | கோப்புப் படம்: வி.கணேசன்.
 
 

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்ற புதிய அமைப்பைத் தொடங்கியதோடு, இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்றும் சூளுரைத்துள்ளார். இதுகுறித்த நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Syam

'எம்ஜிஆர் அம்மா தீபா பேர... வை ' னு யாரோ சொல்லிருக்காங்க போல.

Usman Sawkat

இன்றிலிருந்து என் அரசியல் பயணம் தொடங்கியுள்ளது #தீபா..!

walk_3137653a.jpg

அருண் அருண்

இரட்டை இலை சின்னத்தை மீட்பதே என் குறிக்கோள்... #தீபா

தனிக்கட்சி ஆரம்பிச்சிட்டு இரட்டை இலைய எப்படிமா நீங்க வாங்க முடியும்?

Aswin Ravi

நான் MGR அம்மாவா மாறினேன் - தீபா.

hqdefault_3137651a.jpg

Arun Pandian

மதிப்புமிகு தீபா அவர்களுக்கு தற்போது ஒரு கட்சியோ பேரவையோ தேவை கிடையாது. அவருக்கு உடனடித் தேவை சிறந்த அரசியல் ஆலோசகர்கள்தான்.

Pugazhendhi Gopalakrishnan

ஜெயலலிதா கொடநாட்ல போய் தங்குனாங்க.

தீபா தி.நகர்லயே சாயங்காலம் வரைக்கும் தூங்கறாங்க...

Kesaven Guptha

எம் ஜி ஆர் அம்மா பெயர் சத்யபாமா தானே... இவங்க ஏன், 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்று பேர் வைக்கிறாங்க...?

.jpgsathya_3137652a.jpg

ThaaruMaaru Arul‏@arulgud

MGR-AMMA-DEEPA (MAD) பேரவை தொடங்கினார் ஜெ.தீபா. #செய்தி

இந்த பொண்ணு வேற குறுக்கயும் மறுக்கயும் ஓடிட்டு திரியுது.

T S Manikandan‏@maninilas

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற புதிய கட்சி தொடக்கம் -ஜெ. தீபா

சர்க்கரை பொங்கலும் வடகறியும் மாதிரி கட்சி பேரு சூப்பரா இருக்கு!

நாடு எங்க போகுது??‏@Piramachari

தீபா கட்சி ஆரம்பிச்சதுகூட பரவாயில்லை.

கட்சி ஆரம்பிங்கன்னு சொல்லி காலங்கார்த்தால அவங்க வீட்டு வாசல்ல நின்னவங்க அரசியல் வறட்சிய நினைச்சாதான்!

Umamaheshvaran Panneerselvam

பீட்சா- இட்லிப்பொடி- கருவாட்டுக்கொழம்பு பேரவை

பிரகாசு தமிழீழம்

ஒரு கட்சியின் சின்னத்தை இன்னொரு கட்சி கைப்பற்ற முடியும் என்ற எண்ணம் எவ்வளவு பெரிய அறிவிலித்தனம்.

Poornachandran Gunasekaran

தல தளபதி தோனி பேரவை.

அருண் அருண்

தீபாவை அம்மாவாக்குவோம் என்று வீட்டு வாசல்ல நின்னவங்க எல்லாம், எம்.ஜி.ஆருக்கே அம்மாவாக்கிய மனநிறைவுடன் வீட்டுக்கு செல்லும் நேரமிது. -MAD பேரவை

Manohar Rs

தன் பெயரிலேயே கட்சி துவங்கிய ஒரே உலகத் தலைவர் தீபா தாம்ல.. 'MGR அம்மா தீபா பேரவை'

Shan Karuppusamy

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை

மூணு பேருக்கு எதுக்கு தாயி பேரவை...?

deepa1_3137649a.jpg

Jothimani‏@jothims

ஒரு கட்சி ஆரம்பித்தால் முதலில் தலைவர்/ பொதுசெயலாளர் நியமிப்பார்கள். அது என்ன தீபா முதலில் பொருளாளராக தன்னை நியமித்துக்கொண்டுள்ளார்? #MAD

SlimShady‏@BlueRain_2016

எம்ஜிஆர் ஜெயலலிதா தீபா பேரவை. பெயரில் நல்ல வேளை அண்ணா, திராவிடம் இல்லை.

தேனீ‏@stephensteven33

தீபா பேரவைன்னு பேரு வெச்சதால பிற்காலத்துல இனி யாரும் தன்னோட கட்சிக்கு சொந்தம் கொண்டாட முடியதுல்ல?

எதையும் பிளான் பண்ணி பண்ணனும்..!

T.A.Punithan‏@punithanadv

சசிகலாவை எதிர்ப்பது தவிர தீபா என்பவருக்கு இருக்கும் அரசியல் தகுதி என்ன? தமிழக பிரச்னைகளில் அவரது கருத்துக்கள் யாது?

Samygopal‏@samygopal

தீபா! நீங்க அம்மாவின் வாரிசுதான். ஆனால் அரசியலுக்கல்ல.

இடும்பாவனம் கார்த்தி‏@idumbaikarthi

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை!

ஏம்மா! இதெல்லாம் ஒரு பேராம்மா?

ennamma_3137650a.jpg

ஊருக்கே வில்லன் ‏@ItzVillan

கட்சியை உருவாக்கின எம்ஜிஆர் தன் பேரை சேர்க்கல அதுக்கப்புறம் ஜெயலலிதாகூட தன் பேரை சேர்க்கல. ஆனால் தீபா மூணுபேரையும் ஒரேநேரத்தில் சேர்த்திட்டாங்க.

Avatar‏@chennaidubokors

சசி, பன்னீர், எடப்பாடி, தீபா, தீபக் தமிழ்நாடு இன்னும் எத்தனை கொடுமையைத்தான் தாங்கும்?

ஞானராஜா ‏@gnanaraja3

தீபா தனி இயக்கம் தொடங்கியாச்சி. அதிமுக மூன்று பிரிவாக செயல்படுவது நல்லதல்ல. பன்னீர், தீபா இணைந்தால் வலுசேர்க்கும்.

சேதுபதி‏@Sethu_Twitz

ஏதோ எம்ஜியார் அம்மா தீபா பேரவையாம்

நமக்கு கூட்டணி வைக்க ஒரு கட்சி சிக்கிருச்சு!

vaiko_3137654a.jpg

சௌம்யா ‏@arattaigirl

அத்தையின் பதவிக்கும் ஆசைப்படு. #தீபா

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

சுரங்கத்தில் விவசாயம் - காணொளி

ஒரு விவசாயப் பண்ணையை படம் பிடிக்கும் போது நீங்கள், உழவு இயந்திரம், பரந்த நிலப்பரப்பு, திறந்த வெளிக்காற்று என்று பலவற்றை சிந்திப்பீர்கள்.
 

  • தொடங்கியவர்

சூப்பர் சாமியார் ஆவது எப்படி? - குதூகல குண்டாலினி குறிப்புகள்!

'ஆதியோகி' காலம் தொட்டு 'மர்மயோகி' காலம் வரை சர்ச்சைக்குள்ளாகும் விஷயங்கள் இரண்டுதான். ஒன்று சினிமா, இன்னொன்று சாமியார்கள். கமண்டலம், புகை மண்டலம் எல்லாம் பழைய ஸ்டைல். இன்று ஆரோ சவுண்டு சிஸ்டம், 3டி, லேசர் ஷோ என சாதி, மத பாரபட்சம் இல்லாமல் கலர்ஃபுல் கார்ப்பரேட் சாமியார்கள்தான் ட்ரெண்ட். சூப்பர் சாப்பாடு, காஸ்ட்லி கார்கள் என ஜம்மென வாழும் அவர்களைப் பார்க்கும் பலருக்கும் காதில் புகை வரத்தான் செய்கிறது. டோன்ட் ஒர்ரி பாஸ். கீழே இருக்குற விதிகளை கடைபிடிச்சா நீங்களும் ஆகிடலாம் அடுத்த சாமியார்.

சாமியார்

* சாமியாராக முதல் தேவை ஒரு பெயர். அது கண்டிப்பாய் சின்னதாக இருக்கக் கூடாது. 'நந்தா' பின்பெயராய் இருந்தால் எக்ஸ்ட்ரா ஓட்டுக்கள் விழும். பெயருக்கு முன்னால் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் 'வள்ளல்', 'குரு', 'பகவான்' என ஏதாவது ஒன்றைப் போட்டுக்கொள்ளலாம். உங்கள் பெயரைச் சொல்லும்போதே சொல்பவருக்கு நடுமுடி நட்டமாய் நிற்கவேண்டும். பக்தர்களோடு இன்னும் நெருங்க, 'சித்தப்பா, தாய்மாமா' என உறவுமுறை வைத்துக்கொள்ளலாம். 

* அடுத்ததாக ஏதாவது ஒரு நிறத்தை தத்தெடுக்க வேண்டும். சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள் போன்ற கலர்களுக்கு எல்லாம் ஏற்கெனவே கிராக்கி என்பதால் சாம்பல் கலர், சாக்கு கலர் போன்ற யாருமே சீண்டாத கலர்களை தேர்ந்தெடுத்து கும்பலாய் யூனிபார்ம் தைத்துக்கொள்ள வேண்டும்.

* நெக்ஸ்ட் 'கெண்டைக் காலில் இருக்கும் குண்டாலினியை எழுப்புவது எப்படி?', 'பின் கபாலத்தில் இருக்கும் பூச்சாண்டியை விரட்டுவது எப்படி?' உள்ளிட்ட டிப்ளமோ டிகிரி கோர்ஸ்களை மைக் வைத்து சொல்லித் தர வேண்டும். 'இப்போ பாத்துக்கிட்டீங்கன்னா சார்... இங்க பாடத் தெரியாதவங்களையும் பாட வைப்போம், ஆடத் தெரியாதவங்களையும் ஆடவைப்போம்' என வித்தை காட்டவேண்டும்.

சாமியார்

* லைட்டாக கூட்டம் சேரத் தொடங்கியவுடன் யோசிக்காமல் ஆசிரமம் தொடங்கிவிட வேண்டும். ஊருக்கு ஒதுக்குப்புறமாக காட்டுப் பகுதியில் இருந்தால் சாதா சாமியாராக இருந்து சூப்பர் சாதா சாமியார் ஆகும்போது ஆசிரமத்தையும் பெரிதாக கட்டிக்கொள்ளலாம். அதனால் காட்டுப்பகுதிகளைத் தேர்ந்தெடுத்தல் நலம். 

* ஜலதோஷம் தொடங்கிய மூன்றாவது நாள்... அதாவது காய்ச்சல் தொடங்கிய இரண்டாவது நாள் தொண்டையில் இருந்து வரவா வேணாமா? என யோசித்து யோசித்து வருமே வாய்ஸ்... அதுதான் இனி உங்களின் நிரந்தரக் குரல். முகத்தை சாந்தமாக வைத்துக்கொண்டு அந்த சளி பிடித்தக் குரலில் பேசினால் சிலிர்த்துப் போய் சில்லறைகள் குவியும்.

* கார்ப்பரேட் ஆவதற்கு முதல் படி... ஸ்கூல், காலேஜ் கட்டுவது. சுற்றி இருக்கும் வனப் பரப்புகளை எல்லாம் காம்பவுண்ட் வளைத்துப் போட்டால் 'ஆன்மிக வள்ளல்' 'கல்வி வள்ளல்' ட்ரான்ஸ்பர்மேஷன் ஆகிவிடலாம். 'ஏழு உலகங்களும் போற்றும் எட்டாவது வள்ளலே', என்றும் 'தித்திப்பு குறையாத எங்களின் குலோப் ஜாமூனே' என அரசியல் கட்சிகள் போல அடிப்பொடிகளைவிட்டு கோஷங்கள் போட்டுக்கொள்ளலாம். 

* பேச்சு மட்டுமில்லை. எழுத்தும் முக்கியம். 'குழாயைத் திற தண்ணி வரட்டும்', 'அதுக்கு மட்டும் ஆசைப்படாத', 'புஜபல பராக்கிரம கலகல குல்பியானந்தா - An Untold Story' போன்ற தலைப்புகளில் எழுதித் தள்ளவேண்டும். முக்கியக் குறிப்பு: எழுதுவதுதான் முக்கியம். புரிவது அல்ல. அடிச்சோட்டுறா பசுபதி!

சாமியார்

* கிண்டர்கார்டன் குழந்தைகளுக்கே எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டிகள் இருக்கும்போது கோடிகளில் புரளும் கார்ப்பரேட்களுக்கு இருக்க வேண்டாமா? உங்கள் வசதிகேற்றபடி சுமார் குரலில் பாடவோ (தீம் மியூசிக் போட்டு அட்ஜஸ்ட் செய்துவிடலாம்), அபிநய விரல்களால் ஆடவோ (லைட் எபெக்ட்ஸ் போட்டு மழுங்கடித்துவிடலாம்) செய்யவேண்டும். கொன்னக்கோல் தெரிந்தால் இன்னும் வசதி. #தின்னத்தா தின்னத்தா தகிதம்ததா!

* ஆசிரமம் கட்டியாயிற்று. வற்றாமல் வாளியில் அள்ளி ஊற்றும் கல்வி வள்ளலாகவும் மாறியாகிவிட்டது. இதை எல்லாம் நிர்வாகம் செய்ய? 'கணக்கு வழக்கு' மிக முக்கியம் அமைச்சரே!! அண்ணன், தம்பி, மகன், மச்சான் என இருக்கும் சொந்தக்காரர்கள் அனைவருக்கும் ஏதாவது பொறுப்பு கொடுத்து பக்கத்து பெர்த்திலேயே படுக்கப் போட்டுவிட வேண்டும். சொந்தம் சோறு போடும்.

* காலண்டரில் பண்டிகை வரும் நாட்களை எல்லாம் முன்னாலேயே குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். அது அழிந்துபோன மாயன் காலத்து பண்டிகையாக இருந்தாலும் சரி. மாயன்தான் மூத்தகுடி என சொல்லி அதற்கு ஒரு விழா எடுத்தால் கலெக்‌ஷன் கடல் தாண்டி கொட்டும்.

* சமையலறை திறப்பு விழாவோ, சிலை திறப்பு விழாவோ அந்துஸ்துக்கேற்ற வகையில் வார்டு கவின்சிலர் தொடங்கி டொனால்ட் ட்ரம்ப் வரை சிறப்பு விருந்தினராக கூப்பிட வேண்டும். இந்த ஏரியாவில் போட்டி அதிகமென்பதால் உங்கள் மொத்தக் க்ரியேட்டிவிட்டியையும் காட்டியே ஆகவேண்டும் பாஸ்.

* 'பிரிக்க முடியாதது' எனக் கேட்டால் சிவாஜி இப்போது சாமியாரும் சர்ச்சையும் என மம்மி பிராமிஸ் செய்வார். எனவே ஆடியோ, வீடியோ, ஸ்க்ரீன்ஷாட், கொலை, கொள்ளை என எதிலாவது நம் பெயர் அடிபட்டுக்கொண்டே இருக்கவேண்டும். தியாகம்தான் உன்னை உயர்த்தும் குமாரு! 

  • தொடங்கியவர்

 

கிளிக் தொழில்நுட்ப காணொளி

வையர் இணைப்பு இல்லாமல், சார்ஜ் செய்யும் வசதி, இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள பொறி மற்றும் 55 பவுண்ட் எடை கொண்ட குண்டு துளைக்காத கேடயம் உள்ளிட்டவை அடங்கிய காணொளி.

  • தொடங்கியவர்

இரட்டை சதமும். சச்சினின் உறக்கமில்லா இரவும்!

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, 200 ரன்கள் எடுத்த அன்றைய தின இரவு தான் உறங்கவில்லை என்று சச்சின் தனது சுய சரிதையில் கூறியுள்ளார்.

Sachin tendulkar

அதில் அவர், 'அன்றைய தினம் மிகவும் அசதியாக இருந்தது. ஆனால், தூக்கம் வரவில்லை. அன்றைய இரவில் எனக்கு மொபைல் மூலம் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறினேன். அதற்கே இரண்டு மணி நேரம் ஆனது. மேலும், எனது வாழ்க்கையில் முக்கியமான ஆட்டத்துக்குப் பிறகு எனது வீட்டுக்கு செல்வதை நினைத்து மகிழ்ச்சியடைந்தேன்.

குறிப்பாக, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில், எனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறை மிகவும் தனிமையாக இருந்தது. அந்த சூழலும் என்னை தூங்க விடவில்லை' என கூறியுள்ளார்.

 

 

மிகச்சிறந்த ராணுவம் உருவாக்கப்படும் - ட்ரம்ப்

trump_1_12236.jpg

வாஷிங்டனில் நடைபெற்ற அரசியல் நடவடிக்கை தொடர்பான மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், அமெரிக்க வரலாற்றில், இதுவரையில் இல்லாத அளவிற்கு சிறந்த ராணுவம் உருவாக்கப்படும். தற்காப்பு மற்றும் தாக்குதல் பிரிவில் ராணுவம் மேலும் மேம்படுத்தப்படும். இருப்பினும் நாம், எப்போதும் நம்முடைய ராணுவத்தை பயன்படுத்த போவதில்லை என்று நம்புகிறேன். நம்நாட்டில் யாரும் குழப்பம் ஏற்படுத்த போவதில்லை என்றும் தெரிவித்தார். மார்ச் மாதம் ட்ரம்ப் அரசின் பட்ஜெட் வெளியாகவுள்ள நிலையில், அவருடைய பேச்சு, ராணுவத்திற்கு பட்ஜெட்டிற்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும்  பட்ஜெட்டில் அமெரிக்க மக்களுக்கு வரிகள் குறைப்பு அறிவிப்பும், ஏழை மக்களுக்கு இலவச சட்ட உதவிகள் உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

http://www.vikatan.com/

அமெரிக்காவில் வாழ அச்சப்பட்ட இந்திய பெண்

sunayana_2_13147.jpg

சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரின் மனைவி சுனாயானா பேசியுள்ளார். அமெரிக்காவில் பணிபுரிந்த இந்தியாவைச் ஶ்ரீனிவாசை, கடந்த புதன்கிழமை கன்சாஸ் நகரில் அமெரிக்கர் ஒருவர் சுட்டுக் கொலை செய்தார். அவரை சுட்டுக்கொலை செய்த அமெரிக்கர், இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள் என்று கூறினார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இறந்த ஶ்ரீனிவாஸின் மனைவி சுனாயானா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அமெரிக்காவில் நாம் பாதுகாப்பாக இருக்க முடியுமா என்று தன் கணவரிடம் கேட்டதற்கு, 'நல்ல விஷயங்கள் நடக்கும்' என்று ஶ்ரீனிவாஸ் கூறியதை சுனாயானா நினைவு கூர்ந்தார். மேலும் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்க அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

  • தொடங்கியவர்
 

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p99d.jpg

twitter.com/thoatta: ஒரு மாத இடைவெளியில், ஒரு மாநிலத்தின் மக்கள் எப்படி இருக்கணும்னும் மாநில அரசியல்வாதிகள் எப்படி இருக்கக் கூடாதுன்னும் தமிழகம் காட்டியிருக்கு!

twitter.com/pgovi1: அதிகார வெறியில் நிலை தடுமாறும் முன், பாழடைந்த ஒரு கோட்டையைப் பார்த்துவிட்டு வாருங்கள்!

twitter.com/Senthilbds: கூனி வாழ்ந்தால் `கோடி' நன்மை # அரசியல்... :)

twitter.com/ikrthik: பிழை அழகு...இடது வலது செருப்புகளைக் கால் மாற்றி அணியும் குழந்தைகள்!

p99a.jpg

twitter.com/Kozhiyaar: `ஊர் பக்கம் வந்தா வீட்டுக்கு வாங்க' என்பது, எந்த வகை விருந்தோம் பலில் சேரும்?

twitter.com/Piramachari: தினகரன், மன்னிப்புக் கடிதம் கொடுத்தார் - செய்தி யாருகிட்ட?

ஜெ.கிட்ட மன்னிப்புக் கடிதம் கொடுத்து கட்சியில் சேர்ந்த சசிகலாகிட்ட #  ரைட்டு!

twitter.com/kannan0420: கொடுக்கிற சம்பளத்துக்கு ரெண்டு ஸ்டேட்டுக்கு வேலைபார்க்கணும். இதுல வாரம் ஒருக்கா ஒருத்தர் முதலமைச்சர் ஆகணும்னு வந்துடுறாங்க... ஆளுநர் டைரிக் குறிப்பிலிருந்து.

twitter.com/saravananucfc: மினி மம்மியோட கோபம், ஓ.பி.எஸ்ஸுக்கு அடுத்து ஸ்டாலினைவிட கமல் சார் மேலதான் இருக்கும்னு தோணுது.

twitter.com/JenniferBlessy: `சிங்கம்’ படத்தை ம்யூட்ல பார்த்தாகூட லைட்டா சவுண்டு கேட்குது!

‏twitter.com/thoatta: இன்னிக்கும் இழுத்தடிச்சா, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சரைக் கண்டெடுக்கிற பொறுப்பை, ஆளுநர்கிட்ட இருந்து விஜய் டிவி-க்கு மாத்திட வேண்டியதுதான்!

twitter.com/Rajleaks: ஓட்டு போட்டதுக்குச் சிரிக்கவாச்சும் வெக்கிறாய்ங்களே!# டெமாக்ரசிடா.

twitter.com/meenammakayal : அரசியல்னா நான் ஏதோ ஆவணப்படம் மாதிரி இருக்கும்னு நினைச்சேன். பரவாயில்ல கமர்ஷியலாத்தான் இருக்கு.

p99b.jpg

facebook.com/rita.juliet.31: மண்ணெண்ணெ வேப்பெண்ணெ விளக்கெண்ணெ... யாரு சி.எம் ஆனா எனக்கென்ன?

facebook.com/dhileepan.keesan: ரிக்கார்டு டான்ஸுக்குப் பேர்போன ஊர் `எடப்பாடி' என்பதை மட்டும் சொல்லிக்கொண்டு...

facebook.com/boopath23: குழந்தையின் அழுகையை நிறுத்த, அப்போ பால்புட்டியைக் கொடுத்தாங்க. அப்புறம் பொம்மையைக் கொடுத்தாங்க. இப்போ ஸ்மார்ட்போனைக் கொடுக்கிறாங்க.

facebook.com/manushya.puthiran: ஒரு நாளைக்கு எத்தனை தரம்டா தர்மம் வெல்லும்... தர்மம் டயர்டு ஆகிடாது?

p99c.jpg

facebook.com/jeevan.rajaram: `யார் நிறைய பரோட்டா தின்கிறாங்களோ அவங்கதான் முதல்வர்’னு அறிவிச்சு போட்டி வைக்கலாம் # ISNKK.

facebook.com/uma.gowri.98: அழகு தமிழில் எதுகை மோனை, நக்கல் நையாண்டிகளோடு எவ்வளவு சுவாரஸ்யங்கள் இருந்திருக்கும் இப்போது நடந்த சம்பவங்கள் # ஐ மிஸ் யூ கலைஞர்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

500 கிலோ எகிப்திய பெண்ணுடன் நடனமாட விருப்பம் தெரிவித்த ஹ்ரித்திக் ரோஷன்!

500_kg_22213.jpg

கிப்தை சேர்ந்த இமான் அகமது என்ற 37 வயது பெண் உடல் பருமன் நோயால் அவதிப்பட்டு வருகிறார். 500 கிலோ எடைக் கொண்ட இவர், உடல் எடைக் குறைப்பு சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது இவருக்கு கடுமையான டயட் கட்டுப்பாடு மற்றும் பிசியோதரப்பி சிகிச்சை மூலம் 12 நாட்களில் 50 கிலோ எடை குறைந்துள்ளார் இமான்.


தான் முழுவதும் குணமடைந்தால் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் உடன் டான்ஸ் ஆடவேண்டும் என்று விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.  இதைக் கேழ்விப்பாட ஹ்ரித்திக் ரோஷனும் எனக்கும்hrithik_22408.jpg இமானுடன் டான்ஸ் செய்யவேண்டும் என்று ஆசை உள்ளது என்று தெரிவித்துள்ளார். தான் இந்தியாவிற்கு திரும்பியதும் மருத்துவமனைக்குச் சென்று இமானை சந்திக்க உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார் ஹ்ரித்திக்ரோஷன். சமீபத்தில் ஹ்ரித்திக் அமா இமான் சிகிச்சைகாக 10 லட்சம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


''இமான் சீக்கிறம் குனமடைந்துவிட்டால் கண்டிப்பாக அவருடன் டாஸ் செய்வேன். அதுமட்டுமல்ல அவருடன் டான்ஸ் செய்து தோற்கவேண்டும் என்று விரும்புகிறேன்'' என்று தெரிவித்துள்ள ஹ்ரித்திக், ''அதற்கு முன்  அவரின் போராட்டத்திற்கு  எல்லோரும் ஆதரவாக இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
 
 
 

உலகமெங்கும் உள்ள கோளரங்கங்களில் சிறந்தவற்றின் ஒளிப்படத் தொகுப்பு

 
 
 
 
Desktop_3137359f.jpg
இந்திய அறிவியல் தினம் பிப்ரவரி 28-ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இந்திய அறிவியல் துறை மெச்சத்தக்க வகையில் வளர்ந்துள்ளது. இந்திய அறிவியல் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து 104 செயற்கைக்கோள்கள் தாங்கி விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி-சி37 இது. மட்டுமல்லாமல் இந்தியாவில் பரவலாக உள்ள கோளரங்கங்களும் அறிவியல் மையங்களும் அறிவியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன. இவற்றுள் கொல்கத்தாவிலுள்ள பிர்லா கோளரங்கம் குறிப்பிடத்தக்கது. உலகின் மிகப் பெரிய கோளரங்கங்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது. இதைப் போல உலகமெங்கும் உள்ள கோளரங்கங்களில் சிறந்தவற்றின் ஒளிப்படத் தொகுப்பு:
 
 
adler_america_3137358f.jpg
அட்லர் கோளரங்கம், அமெரிக்கா
 
jappan_3137357f.jpg
நகோயா சயின்ஸ் மியூசியம், ஜப்பான்
 
spain_3137356f.jpg
த சிட்டி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், ஸ்பெயின்
hayden_america_3137350f.jpg
ஹெய்டன் கோளரங்கம், அமெரிக்கா
argentinca_3137351f.jpg
கலீலியோ கலிலி, அர்ஜெண்டினா
canada_3137352f.jpg
எச்.ஆர். மெக்மில்லன் ஸ்பேஸ் சென்டர், கனடா
russia_3137353f.jpg
பார்னல் கோளரங்கம், ரஷ்யா
 
england_3137354f.jpg
பீட்டர் ஹாரிஸன் கோளரங்கம், இங்கிலாந்து
 
 

 

 

 

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

தனி மனிதனுக்கு இல்லை எல்லாருக்கும் தான் - கமல் ட்விட்!

07-1449478419-kamal-hassan-%E0%AE%A8%E0%

‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், "பூமியின் இயற்கை வளத்தையும் ஏழையர் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும், பின்னர் பெரு நஷ்டமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல், மற்றொரு பதிவில், "இயற்கையானது குறிப்பிட்ட ஒரு மனிதனுக்காக எந்த வளங்களையும் வழங்கவில்லை. அது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான வளங்களை மட்டுமே வழங்குகிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், "இயற்கை மற்றும் ஏழைகளின் வாழ்வாதாரத்தை அழித்து தொடங்கப்படுகிற எந்த ஒரு திட்டமும், நல்ல திட்டம் இல்லை என்றும், அது செயல்படுத்தும் நிறுவனம் வெற்றியை நோக்கிச் செல்லாது" என்றும் குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக, "தமிழக மக்கள் ஜாக்கிரதையாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்" என்றும், கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

 

 

பரத்தின் வித்தியாசமான நடிப்பில் பொட்டு ட்ரெய்லர்!

Pottu

சவுக்கார் பேட்டை படத்தை இயக்கிய வடிவுடையான் இயக்கத்தில் பரத் நடித்துள்ள படம் பொட்டு. இந்தப் படத்தில் இனியா, ஸ்ருஷ்டி டாங்கே, நமீதா, தம்பி ராமையா,ஊர்வசி,மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரர் பின்னணியில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். பரத் பல வித கெட் அப்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.


இந்தநிலையில், இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். விரைவில், இந்தப்படம் வெள்ளித் திரையில் மிரட்ட உள்ளதாம். 

 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
ஒரு பெரியவர் சொன்ன கதை இது
 
 

article_1486443304--9po.jpgஒரு பெரியவர் சொன்ன கதை இது. திருமணமாகியும் பல வருடங்களாகக் குழந்தை பிற்காமையினால் ஓர் ஆச்சிரமத்திலிருந்து ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்து வளர்த்தனர். 

சில வருடங்களுக்குள் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துவிட்டது. சில மாதங்களுக்குப் பின்னர் இந்தத் தம்பதியினர், ‘எமக்குத்தான் குழந்தை பிறந்துவிட்டதே’ என எண்ணி, வளர்த்த பிள்ளையை அதே ஆச்சிரமத்தில் மீண்டும் சேர்த்து விட்டனர். 

ஆனால், துர்அதிஷ்டவசமாக அவர்களுக்குப் பிறந்த பிள்ளை இறந்துவிட்டது. அவர்கள் மீண்டும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்வதற்காக வைத்தியரிடம் சென்றனர், தாய்மையாகும் பாக்கியம் இனிமேல் கிடையாது என, வைத்தியர் கையை விரித்துவிட, மீண்டும் அதே ஆச்சிரமத்துக்குச் சென்று, முன்னர் ஒப்படைத்த குழந்தையை மீண்டும் பெற்றுக்கொண்டனர் 

அந்தப் பிள்ளை இவர்களிடம் கேட்ட முதற்கேள்வி, “அம்மா, தம்பிப்பாப்பா சுகமாக இருக்கிறானா”? தூய அன்பின் வியாபகம் எங்கே இருக்கின்றது பார்த்தீர்களா?

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பரிசு... குழந்தைகளுக்குள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும்? #GoodParenting

தந்தையுடன் மகிழ்ச்சியில் பெண் குழந்தை

''பரிசு... பொருளாக, வார்த்தையாக, சிறிது நேரம் உடன் செலவிடுவதாக என எதுவாகவும் இருக்கலாம். இத்தகைய பரிசுகள் அனைவரையும் உற்சாகப்படுத்தும். குழந்தைகளையோ மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டுசெல்லும்'' என்கிறார், குழந்தைகள் நல ஆர்வலர் பிரீத்தா நிலா. பெற்றோர் கொடுக்கும் பரிசு, குழந்தைகளுக்குள் எத்தகைய மாற்றங்களை உண்டாக்கும் என்பதையும் விளக்குகிறார். 

''பரிசு என்றாலே, குழந்தைகள் முகம் புன்னகையில் மலரும். சந்தோஷத்தில் அவர்கள் உள்ளம் தவழும். பரிசுகள் குழந்தைகளை மேலும் உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தும். கடையில் வாங்கிக்கொடுப்பதைத் தாண்டி, அதிக பொருட்செலவு இல்லாமல், பெற்றோர்கள் தங்கள் கைகளால் செய்துக்கொடுக்கும் பரிசுகளைக் குழந்தைகள் அதிகம் விரும்புவார்கள். அது, காகிதத்தில் வரைந்த ஓவியம், களிமண்ணால் செய்த சிறு பொம்மை, அட்டைப்பெட்டியில் செய்த வீடு என எதுவாகவும் இருக்கலாம். சிறு உண்டியல் கொடுத்து சேமிக்கக் கற்றுக்கொடுப்பது, வண்ணப் பென்சில்கள், அழிப்பான் வாங்கிக் கொடுப்பது, குழந்தைக்குப் பிடித்த துறை சார்ந்த முன்னேற்றத்துக்கு உதவும் பொருளாக என இருக்கலாம். இவற்றை கொடுக்க அதிக பொருட்செலவோ, நேரமோ தேவையில்லை. 

பெற்றோர் கொடுக்கும் பரிசுப் பொருட்களின் விலையை மதிப்பீடு செய்யும் பழக்கம் குழந்தைகளுக்கு இருக்காது. அன்பையும் பாசத்தையும் மட்டுமே பார்ப்பார்கள். அதனால், என்ன பரிசு, எவ்வளவு விலையுள்ள பரிசு கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. ஆனால், அந்தப் பரிசு அவர்களின் வளர்ச்சிக்கு சிறிய பங்கை ஆற்றும் வகையில் இருக்க வேண்டும். அன்பான ஒரு கைகுலுக்கல், கட்டியணைத்தல், முத்தமிடுதல், சிறிது நேரம் குழந்தைகளோடு செலவிடுவது ஆகியவையும் உயர்ந்த பரிசுகளே. இதனால், சிறு தாவரங்கள், செடிகள், பறவைகள் போன்ற உயிர்ப்புள்ள செயல்பாடுகள் மீது குழந்தைகள் அளவற்ற அன்பைச் செலுத்துவார்கள். 

வண்ணம் தீட்டி மகிழும் சிறுவன்

தன் வளர்ப்பால் செடியில் ஒரு பூ மலர்வது, குருவி முட்டையிட்டு குஞ்சுப் பொறிப்பதைப் பார்ப்பதும் அர்த்தமுள்ள செயல்பாடுகளைச் செய்ய குழந்தைகளைத் தூண்டும். தன் பொழுதுபோக்கும்கூட பயனுள்ள விதத்தில் இருக்க வேண்டும் என்ற சிந்தனையைத் தூண்டும். குழந்தைக்கு வாசிக்கும் பழக்கம் பிடிக்கும் என்றால், அவர்களை நல்வழிப்படுத்தும் புத்தகங்களை வாங்கிக் கொடுக்கலாம். வாசிப்பு பழக்கமே இல்லாத குழந்தைகளுக்கும் புத்தகங்களைப் பரிசாக கொடுத்து வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கலாம். சகோதர, சகோதரிகள் அல்லது வீட்டுக்கு அருகில் உள்ள நண்பர்களுடன் இணைந்து ஆளுக்கு ஒரு புத்தகம் படித்து, தான் படித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள பழக்கப்படுத்தலாம். இவையெல்லாம் கூட்டுமனப்பான்மையை வளர்க்கும். ஒருவர் கற்ற அறிவு, மற்றவர்களிடம் பரவ வழிசெய்யும். 

பரிசுப் பொருள்கள் குழந்தைகளை வளர்ச்சிப்படுத்தும். அதேசமயம் அந்தப் பரிசு வெற்றிக்கு மட்டுமே கொடுப்பது, குழந்தைகளால் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் செய்யவும் வழிவகுக்கலாம். அதனால், வெற்றிக்கு ஆடம்பர பரிசும் ஆர்ப்பாட்டங்களும் வேண்டாம். தோல்விக்கு ஊக்கமில்லா அமைதியான நிசப்தமும் வேண்டாம். காரணம் பார்த்து குழந்தைகளுக்குப் பரிசுக் கொடுப்பதைத் தவிர்த்து, அடிக்கடி பரிசுக் கொடுக்கலாம். அந்தப் பரிசு குழந்தைகளின் வெற்றி, தோல்வி இரண்டிலுமே சமநிலையில் இருக்க வேண்டும். இதுபோன்ற பரிசுதான் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாது; மகிழ்ச்சியையும் குறைக்காது. இதனால், குழந்தைப் பருவத்தை அவர்களால் மகிழ்ச்சியுடனும் அன்புடனும் கழிக்க முடியும்'' என்கிறார் பிரீத்தா நிலா. 

மற்ற குழந்தைகளுடன் தன்னையும், தனக்குக் கிடைக்கும் பரிசுப் பொருள்களையும் ஒப்பீடு செய்து பார்க்காத வகையில் குழந்தையின் மீது அன்பு செலுத்த வேண்டியது பெற்றோர் கடமை. பரிசு வாங்கி மகிழ்ச்சி அடைவது போலவே, 'வெற்றிபெற்ற, சோர்வடைந்த நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் பரிசுக் கொடுக்கும் பழக்கத்தைக் குழந்தைகளிடம் ஏற்படுத்தினால், அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மதுரையில் தொடரும் பிரமாண்ட பிரியாணி திருவிழா!

_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0

மதுரையில் பிரமாண்டமான முறையில் பிரியாணி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த வடக்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற முனியாண்டி சாமி கோயிலில், கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக, பிரியாணி திருவிழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று பிரமாண்டமான முறையில் பிரியாணி சமைத்து அனைவருக்கும் வழங்கி அந்த வட்டாரத்தையே மணக்கச் செய்தார்கள். இந்நிலையில், மதுரை தெற்குவாசல் பள்ளிவாசல் கந்தூரியை முன்னிட்டு, ஐம்பதுக்கும் மேற்பட்ட தேக்சாவில் பிரமாண்ட பிரியாணி தயாரிக்கும் பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. காலை முதல், மட்டன் பிரியாணியும், தால்சால்னாவும் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட உள்ளன.

சாமானிய பெண்ணிற்கு பிரதமர் மோடி கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

shilpi adiyogi scarf

சிவராத்திரி தினத்தன்று கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த விழாவில் 112 அடி ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்து பேசினார் பிரதமர் மோடி. அந்த நிகழ்விற்காக ஈஷா யோகா மையத்திற்கு வந்த அவருக்கு, ஜக்கி வாசுதேவ் ஆதியோகி சிவன் பதித்த ஒரு அங்கவஸ்திரத்தை பரிசாக அளித்தார். நிகழ்ச்சி முழுவதும் அதை அணிந்திருந்தார் மோடி. இந்நிலையில், பிரதமர் தோளில் போட்டிருந்த அங்கவஸ்திரம் வேண்டும் என டிவிட்டரில் ஷில்பி திவாரி என்ற ஒரு பெண் பிரதமரிடம் கேட்டிருந்தார். விவரத்தை கேட்டறிந்த மோடி அந்த பெண்ணிற்கு, தான் அணிந்திருந்த அங்கவஸ்திரத்தை அவரின் கையெழுத்திட்ட கடிதத்தோடு அனுப்பி வைத்துள்ளார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

26.02.2014: ஈழத்து கலைஞர் கே. எஸ். பாலச்சந்திரன் இறந்த தினம் இன்று!

 

 
K

 

கே. எஸ். பாலச்சந்திரன் என்று அறியப்படும் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் 10 சூலை 1944 அன்று யாழ்ப்பாண மாவட்டம், கரவெட்டியில் பிறந்தார். இவர் கரவெட்டி விக்னேசுவராக் கல்லூரியிலும், யாழ் மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றார். இளமைக் காலத்தில் உதைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், இறகுப்பந்தாட்டம் உட்பட்ட பல்வேறு விளையாட்டுக்களில் ஈடுபட்டார்.

ஈழத்தின் அறியப்பெற்ற பல்துறைக் கலைஞர். நகைச்சுவை, வானொலி, நாடகம், நடிப்பு, திரைப்படம், தொலைக்காட்சி, எழுத்து எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர். ஈழத்து கலைத்துறைகளில் நெடுங்காலம் செயற்பட்ட இவர், பின்னர் கனடாவிற்கு குடிபெயர்ந்து தொடர்ந்து இயங்கி வந்தார்.

உடல்நலக் குறைபாட்டால் 26.02.2014 அன்று மரணமடைந்தார்.

http://www.dinamani.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.