Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஆச்சர்யம்... சென்னையை ஆராயும் பிரெஞ்சுப் பெண்!

பயணங்களின் ரசிகைநிவேதிதா லூயிஸ்

 

ரின் ஹார்ட்... இருபத்தைந்து வயதே ஆன இளம் பிரெஞ்சுப் பெண். சென்னை நகரையும், அதன் தொன்மையையும், நதிகளையும், கரையோரத்து மக்களையும் ரசித்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறார். விரல்நுனியில் சென்னை குறித்த வரலாற்றுக் குறிப்புகளையும், நதியோர மானுடவியல், சமூகவியல் பரிணாம வளர்ச்சி குறித்த தகவல்களையும் வைத்திருக்கும் ஆச்சர்ய மனுஷி! 

20p1.jpg

பிறந்தது, வளர்ந்தது, குடும்பம்?

``பிறந்தது பிரான்ஸின் நார்மண்டி கடற்கரையோரம் உள்ள மிகவும் அழகான கிராமம். அம்மா அப்பா இருவரும் கணினிப் பொறியாளர்கள். ஒரு தம்பி. பதினாறு வயது வரை கிராமத்திலேயே வளர்ந்தேன். என் அத்தை ஒருவர் சீனாவில் இருந்தார். அவர் அங்கிருந்து வந்து சொல்லும் கதைகள், தூர தேசங்கள் மீதான ஈர்ப்பை அதிகரித்தன. பதினாறு வயதுக்குப்பின் என்னை சொந்த ஊரில் இருந்து இரண்டு மணி நேரப் பயண தூரத்தில் இருந்த வேறொரு ஊரின் பள்ளி விடுதியில் சேர்த்தார்கள். அதன் பின்புதான் எனக்கான தேடல் தொடங்கியது!''

என்ன படித்தீர்கள்?

``உங்கள் ஊரைப் போலத்தான் எங்கள் ஊரிலும்! சமூகவியலும் மானுடவியலுமே என் மனதுக்குப் பிடித்தவை. ஆனால், பொறியியல் படித்தால் வேலைவாய்ப்பு உறுதி என்று தாயும் தந்தையும் வற்புறுத்தியதால், டூர்ஸ் நகரப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். முதலில் மனம் லயிக்கவில்லை. பிறகு,   நகர்ப்புறத்திட்டமிடல் மீது கொஞ்சம் ஆர்வம் வந்தது. அதனுடன் தொடர்புடைய சமூகவியல், மானுடவியல் குறித்தும் படிக்க ஆசைப்பட்டேன். மாணவர் பரிமாற்றத் திட்டம் மூலம், இரண்டாம் ஆண்டில்தான் இந்தியா வர வாய்ப்பு கிட்டியது. ஆர்கஸ் எனும் மாணவர் பரிமாற்றத் திட்டம் இந்தியா மற்றும் பிரெஞ்சு அரசுகளுக்கிடையே  உள்ளது. அதில் 50% உதவித்தொகை கிடைக்கும்...''

20p2.jpg

சென்னையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? அடுத்து என்ன திட்டம்?

``அதிக தூரம் பயணிக்க வேண்டும், புதிய நாடுகளைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம்தான் காரணம். அப்போது பிரெஞ்சு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த திரிபுரசுந்தரி  (மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டி) அறிமுகமானார். அதோடு, நதிகள் மற்றும் மக்களுக்கிடையேயான உறவு குறித்து ஆராய அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு வழங்குவது தெரிந்ததும், சென்னை வந்தேன். இதற்குப் பிறகு, சென்னையின் நதிகளையும், வேறு நாட்டின் நதி ஒன்றையும், அவற்றின் கரையோர நாகரிக பரிணாம வளர்ச்சிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்ய ஆசை. படிப்பு முடிந்த பிறகு சைக்கிளில் உலகைச் சுற்றி வர ஆசைப்படுகிறேன். நான் நிறைய கனவுகள் காண்பவள்!''

சென்னை உங்களைக் கவர்ந்ததா?

``இந்தியா வருவதற்கு முன்னரே அது குறித்து நிறையப் படித்துவிட்டேன். யானைகளும் பாம்புகளும் பாம்பாட்டிகளும் நிறைந்த நாடு என கற்பனை செய்திருந்தேன் (சிரிப்பு). இந்தியா மிகவும் மாசு நிறைந்த, அழுக்கான நாடு என்றே படித்திருந்தேன். இங்கோ, எல்லாமே தலைகீழ்! சென்னையும் அதன் மக்களும் மனதுக்கு மிகவும் பிடித்துப்போனார்கள். அன்பும் கருணையும் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். வலிய வந்து உதவுகிறார்கள். `சென்னையும் அதன் நதிகளும், அவை சார்ந்த நாகரிக வளர்ச்சியும்' என்ற தலைப்பையே ஆய்வு செய்யத் தேர்ந்தெடுத்தேன்...''

அடையாறு, கூவம் - இரண்டில் உங்களைக் கவர்ந்த நதி எது?

``அடையாறை மிகவும் பிடிக்கும். கூவத்தின் கரையில் அதிகம் கோயில்களே எனக்குக் காணக் கிடைத்தன. அடையாறு மாறுபட்ட பல கோணங்களை அளித்தது.''

சென்னை குறித்த ஆய்வில் உங்களை மிகவும் பாதித்த கதை ஏதேனும் உள்ளதா?

``ஆம்... சைதாப்பேட்டையின் தோபிகாட். அடையாற்றின் கரையில் அமைந்த சென்னையின் இரண்டாவது பெரிய துணி துவைக்கும் இடம் அது. நான் வந்த புதிதில் அங்கே நேரில் சென்று படங்கள் எடுத்திருக்கிறேன். ஆனால், இன்று அது இல்லை. காற்றில் கரைந்தாற்போல ஆகிவிட்டது. 2015 பெருவெள்ளத்துக்குப் பிறகு அங்கிருந்தவர்களை செம்மெஞ்சேரியில் குடியமர்த்தியது அரசு. அவர்களுக்குப் போதிய வாழ்வாதாரம் தரப்படவில்லை, பெண்கள், அருகே இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வேலை தேடிக்கொள்கிறார்கள். ஆண்கள் நிலை மிகவும் மோசம். கடன் வாங்கித் திருப்பித் தரமுடியாமல் காணாமல் போகிறார்கள். தவறான வழிகளில் செல்கிறார்கள். அவர்களைக் குறித்த அக்கறை யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இருக்கத்தான் இடம் கொடுத்தாயிற்றே என்று அரசு எண்ணுகிறது. ஆனால், வாழ வழி?''

20p3.jpg

மொழி உங்களுக்குத் தடை போடுகிறதா?

``மாண்டரின், ஸ்பானிஷ், போர்த்துகீசியம், பிரெஞ்சு, ஆங்கிலம் வரிசையில் இப்போது தமிழும் கற்றுக்கொண்டேன். யாரிடம் என்று நினைக்கிறீர்கள்? ஆட்டோக்காரர்களிடம்! முதலில் கற்றது மூன்றே வாக்கியங்கள்... `லெஃப்ட்டுக்காப் போ, ரைட்டுக்காப் போ, ஸ்ட்ரைட்டாப் போ…' (சிரிக்கிறார்).  இப்போது தமிழ் போர்டுகளை என்னால் படிக்க முடியும்!''

ஒரு பெண் - அதிலும் வெளிநாட்டவர் என்பதால், ஏதேனும் இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறீர்களா?

``சென்னைவாசிகள் அன்பானவர்களே. ஒரு சில கசப்பான அனுபவங்களும் உண்டு. நகரத்துப் பேருந்துகளில் பாலியல் தொல்லைகள் அதிகம். அதற்குப் பயந்தே ஸ்கூட்டி வாங்கி இருக்கிறேனாக்கும். காலில் மெட்டி வேறு போட்டுக்கொள்கிறேன்... `என் பாய் ஃப்ரெண்டு வீட்டில் இருக்கிறான்' என்று ஆட்டோக்காரர்களிடம் கதை சொல்லிக் கொள்கிறேன்!'' (சிரிக்கிறார்).

20p4.jpg

தனிமைப் பயணங்கள் கடினம் தானே?

``பயணங்களை நான் மிகவும் விரும்பு கிறேன். இந்தியாவிலேயே இமயமலை, அந்தமான் தீவுகள், கேரளா, மும்பை, டெல்லி போன்ற இடங்களுக்கும், சீனா, மொரோக்கோ, அர்ஜென்டினா, பிரேசில், தாய்லாந்து முதலிய நாடுகளுக்கும் தனியாகப் பயணித்து இருக்கிறேன். வாழ்க்கையைப் புதிய பரிணாமத்தில் பார்க்க எனக்கு இந்தப் பயணங்கள் உதவு கின்றன. மனதைரியமும் துணிச்சலும் தேடலும் இது போன்ற பயணங்களால் ஏற்படுகின்றன.''

டீமானிட்டைசேஷன் காலத்தில் இன்னலுக்கு ஆளானீர்களா?

``நவம்பர் 8-க்குப் பின், மூன்று வாரங்கள் கழித்து ஒரு நிகழ்ச்சிக்காக பாண்டிச்சேரி செல்லவேண்டி இருந்தது. வங்கியில் பணம் எடுக்க முடியவில்லை, வெறும் 115 ரூபாயில் பயணம் கிளம்பியாயிற்று. பேருந்துக்கு நூறு ரூபாய் கொடுத்து நிமிர்ந்தால், கையில் இருந்த பதினைந்து ரூபாய்க்கு செல்ல வேண்டிய இடத்துக்கு ஒரு ஆட்டோகூட கிடைக்கவில்லை. ஏ.டி.எம் எதுவும் இயங்க இல்லை. கார்டைத் தேய்க்க முடிந்த கடைகளில் மட்டுமே சாப்பிட்டேன். பின்னர் நண்பர் ஒருவரின் உதவியுடன் கொஞ்சம் பணம் கையில் கிடைத்து சென்னை வந்து சேர்ந்தேன்! கொஞ்சம் பயங்கரமான அனுபவம்தான் அது!''

20p5.jpg

சென்னையில் பாதுகாக்கப்படவேண்டிய புராதன சின்னம் எது என நினைக்கிறீர்கள்?

``ஒன்று அல்ல... பல! சென்னையின் நீர்நிலைகள். இங்கு பலருக்கு அடையாறு என்ற நதி இருப்பதே தெரியவில்லை. பக்கிங்ஹாம் கால்வாயைத் தெரியவில்லை. சென்னையில் எங்கு நீர் இருந்தாலும், அது `கூவம்' என்றே அழைக்கப்படுகிறது! சென்னை நகரத்து  மாஸ்டர் ப்ளானில் அடையாறு நதி `ரெக்ரியேஷன் ஏரியா' (பொழுதுபோக்கு இடம்) என்றே குறிப்பிடப்படுகிறது. அப்படியானால், அதன் முக்கியத்துவம் என்ன, அதன் நிலை என்ன என்பது உங்களுக்குப் புரிகிறது அல்லவா? நீர்நிலைகளைப் பாதுகாத்தல் மிகமிக அவசியம். நீர்நிலைகள் மாசுபடுவது பற்றியும், அவற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் என் ஆய்வுமுடிவுகள் வாயிலாக அரசுக்குத் தகவல்கள் பகிர்வேன்...''

ஆய்வு தவிர என்ன செய்கிறீர்கள்?

``இங்கு வந்த முதல் வருடம் முழுக்கச் சுற்றியாயிற்று. ஒரு இடம் மிச்சம் வைத்ததாக நினைவில்லை. இப்போது ஹெரிட்டேஜ் நடைகள், பயணங்கள் என சுவையான நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. அவை புது விதமான அனுபவத்தைத் தருகின்றன…''

இந்தியப் பெண்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?

``சுதந்திரமாக இருக்கப் பழகுங்கள். நிறைய பயணப்படுங்கள். வாழ்க்கை குறித்த தேடல் உங்களிடம் எப்போதும் இருக்கட்டும்!''

http://www.vikatan.com

20 hours ago, யாயினி said:

மிகவும் அழகாக இருக்கிறது இந்தப்பக்கம்..இயற்கை முதல் எனக்கு பிடித்த நிறைய விடையங்கள் அடங்கியுள்ளது..பகிரவுக்கு நன்றியோடு தொடர்ந்து இன்னும் நிறைய பகிர நல் வாழ்த்துக்கள் நவீனன்.✔️

நன்றி யாயினி, உங்கள் கருத்துக்கு.

இங்கு  எதுவும் எழுதா விட்டாலும் பலர் தவறாமல் பார்க்கும் ஒரு திரி என்பது உண்மை.

என்னால் இயன்றவரை தொடர்வேன்.

மீண்டும் நன்றி..:)

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அமெரிக்க அதிபருக்கு ஆஸ்கர் அர்ச்சனை!

 

லகமே எதிர்பார்க்கும் சினிமா விருதுகளில் ஆஸ்கர் முக்கியமானது. ஆஸ்கர் மேடையில் எப்போதும் உலகின் ஏதாவது ஒரு பிரச்னைக்கு எதிராக சர்ச்சை வெடிக்கும். சென்ற முறை டி காப்ரியோ பேசிய உரை, குளோபல் வார்மிங்கின் விளைவுகள் பற்றி ஓங்கி ஒலித்தது. இந்த முறையும் ஆஸ்கர் மேடையில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. நிகழ்ச்சி தொடங்கிய 10-வது நிமிடத்தில், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராகத் தனது குரலை முதலில் பதிவுசெய்தார்.

o32.jpg

ஆஸ்கர் விருதுகளைச் சில வருடங்களாகவே ட்ரம்ப் மோசமாக விமர்சித்து வந்தார். ‘அகாடமி விருதுகள் அர்த்தமற்றவை. அவை வெள்ளை இன மக்களுக்கானவை’ எனக் கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கு, தக்க பதிலடி கொடுத்தார் ஜிம்மி கிம்மெல். ‘‘நன்றி அதிபர் ட்ரம்ப் அவர்களே!  ‘இந்த நாடு பிளவுபட்டிருக்கிறது. நீங்கள் ஒற்றுமை பற்றி பேசுங்கள்’ என்று என்னிடம் நிறைய பேர் கூறினார்கள். ஆனால், நான் ஒருத்தன் பேசி ஒன்றும் ஆகப்போவது இல்லை. இன்று ஒட்டுமொத்த அமெரிக்காவும், 225 நாடுகளும் இதனைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. அவர்கள் நம்மை வெறுக்கிறார்கள்” என்றார்.

அத்துடன் நிற்காமல், நிகழ்ச்சியின் நடுவே தனது செல்போனை திரையில் இணைத்து அதிபர் ட்ரம்ப்புக்கு லைவ் ட்வீட் செய்தார். ‘‘என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ட்ரம்ப்... நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு மணி நேரம் ஆகிறது. உங்களின் ட்வீட்டை காணவில்லை” என நக்கல் செய்தார். அடுத்து #merylsayhi என்ற ஹேஷ்டேக் மூலம், ஏற்கெனவே கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா மேடையில் ட்ரம்ப்பை விளாசிய மெரில் ஸ்ட்ரீப்பை நினைவுபடுத்தி ட்ரோல் செய்தார்.

இன்னொரு பக்கம், ஆஸ்கர் மேடையில் நிற்க வேண்டியவரை வீட்டில் அமரவைத்திருக்கிறார் ட்ரம்ப். ஆம்! சிறந்த ஆவண குறும்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஒயிட் ஹெல்மெட்’ படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் காலித் கதீப், சிரியாவில் வசிப்பவர். ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வரக்கூடாது என்று ட்ரம்ப் தடை விதித்ததால், மூன்று நாட்கள் விமான நிலையத்தில் போராடிப் பார்த்துவிட்டு வீடு திரும்பி இருக்கிறார் காலித். இதேபோல், சிறந்த அயல்நாட்டு மொழிப் படத்துக்கான விருது ‘சேல்ஸ் மேன்’ திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் ஃபர்ஹாடி இந்த விருதை வாங்காமல் புறக்கணித்தார். இதற்குக் காரணமும் ட்ரம்ப் பிறப்பித்த தடை உத்தரவுதான்.

ட்ரம்ப்... எதிர்ப்புகள் உங்கள் மீது அதிகரித்தே வருகின்றன. ஆஸ்கர் மேடை அதற்கு ஒரு சாட்சி!     

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஸ்மார்ட்போன்களில் வாழும் மூன்று புதிய நுண்ணுயிர்கள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி

நம் கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ஸ்மார்ட்போன்களில் 3 புதிய நுண்ணுயிர் கிருமிகள் வாழ்வது தெரியவந்துள்ளது.

 
ஸ்மார்ட்போன்களில் வாழும் மூன்று புதிய நுண்ணுயிர்கள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி
 
பூனே:
 
நாம் அன்றாடம் கையில் வைத்து பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் மூன்று விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் உயிர் வாழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேற்கத்திய நாடுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு ஆய்வுகளில் நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான கிருமிகள் மற்றும் பாக்டீரியா உள்ளிட்டவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.  
 
கழிவறைகளில் காணப்படுவதை விட பலமடங்கு பாக்டீரியா மற்றும் கிருமிகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கழிவறைகளில் வழக்கமாக இரண்டு அல்லது மூன்று வகையான கிருமிகள் மட்டுமே இருக்கும் ஆனால் ஸ்மார்ட்போன்களில் சராசரியாக 10-12 வகையான கிருமிகள் இருப்பது முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றில் சில கிருமிகளை எவ்வித கிருமி நாசினிகளாலும் அழிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் மத்திய அரசின் தேசிய செல் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஸ்மார்ட்போன் திரையில் மூன்று விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிவியல் இலக்கியத்தில் இதுவரை இல்லாத இரண்டு வித பாக்டீரியா மற்றும் பூஞ்சை (ஃபங்கஸ்) இருப்பது பயோடெக்னாலஜி துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
3026366B-C786-44C9-96CF-600584F92D84_L_s
 
இந்தியாவை பொருத்த வரை நிலைமை இன்னும் கட்டுக்குள் இருக்கும் போதும், வாடிக்கையாளர்கள் இது போன்ற கிருமிகளில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க ஸ்மார்ட்போன் திரைகளை அவ்வப்போது மெல்லிய துணியை கொண்டு சுத்தம் செய்வது நல்லது என கூறப்படுகிறது. எனினும் ஸ்மார்ட்போன்களை சுத்தம் செய்யும் போது அவற்றை ஆஃப் செய்து வைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
 
மேற்கண்ட தகவல்கள் பிரபல செய்தி நிறுவனமான பிடிஐக்கு அறிவியல் ஆய்வாளர் பல்லவி பாக்லா வெளியிட்ட கட்டுரை தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

வருகிறது செம சம்மர்... மின்சாரமே தேவைப்படாத இந்த ஏஸி நம்மை காப்பாற்றும்..! #EcoCooler

மின்சார eco cooler

வெயில்காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்று நினத்தாலே நமக்கு வேர்வை வழிய ஆரம்பித்துவிடுகிறது. வெயிலின் வெப்பத்தை குறித்த  கவலையைவிட  வெயில் காலத்தில் ஏசி பயன்பாட்டால் எகிறும் கரண்ட் பில்லை குறித்து கவலை  நம்மில் பலருக்கு இருக்கும். அதற்கு தீர்வாக வந்துள்ளது Eco - Cooler. 

மின்சாரமே இல்லாமல் உங்கள் அறையை குளுமையாக வைத்துக்கொள்ள உதவும்.இதனை செய்ய 500 ரூபாய்க்குள் தான் செலவு ஆகும் என்பதுதான் நம்பமுடியாத உண்மையும் கூட.

Grey Dhaka எனப்படும் விளம்பர நிறுவனத்தில் பணிபுரியும் Ashis Paul என்பவரால் உருவாக்க பட்டதே இந்த eco-cooler.

"என் மகனுக்கு வீட்டில் வந்து பாடம் சொல்லி தரும் ஆசிரியர் அவனுக்கு, காற்றின் அழுத்தத்தில் ஏற்படும் மாற்றம் வெப்பநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை சொல்லிக்கொடுக்கும் பொழுதுதான் எனக்கு இந்த யோசனை தோன்றியது" என்று கூறிகிறார் ஆஷிஷ்.

மின்சார eco cooler

eco-cooler இயங்கும் முறை மிக எளிதான ஒன்று. அறைக்குள் நுழையும் காற்றை குறுகலான பாதைகளில் வழியே வர வழி செய்ய வேண்டும். உதாரணத்திற்கு வாயை அகலமாக வைத்து உள்ளங்கையில் காற்றை ஊதி பாருங்கள் வெப்பமான காற்றை உணரலாம், அதே உதடுகளை குவித்து வைத்து ஊதினால் குளிர்ச்சியான காற்று வெளிப்படும். இதே முறைதான் eco-cooler பயன் படுத்துகிறது.

Grey Dhaka நிறுவனம் இந்த eco-coolerஐ பங்களாதேஷை தேர்ந்தெடுத்து அங்கே உள்ள ஏழை மக்களுக்கு இந்த eco-collerஐ வழங்கியுள்ளனர். பங்களாதேஷில் தகர குடிசையில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். வெயில் காலங்களில் அந்த தகர குடிசைகளுக்குள் இருப்பது அடுப்பில் அமர்ந்து இருப்பது போல் இருக்கும். ஆனால் இப்பொழுது அந்த மக்கள்ககளின் நிலை மாறியுள்ளது.

ஏசி என்பது ஓர் அறையை குளிர வைத்து, பூமியை சூடாக்கும் என ஒரு வாட்ஸப் ஃபார்வர்ட் பிரபலம். வாட்ஸப்பில் வரும் எல்லாமே பொய் இல்லை என்பதற்கு இது ஒரு சரியான உதாரணம். வெயிலை சமாளிக்கவோ, அல்லது புதிதாக ஒன்றை முயற்சி செய்து பார்க்கவோ, அல்லது விடுமுறை நாளில் டைம் பாஸ் செய்யவோ.. எதாவது ஒரு காரணத்துக்காக இதை முயற்சி செய்து பாருங்கள்.

வர்தா புயல் காரணமாக வீழ்ந்த மரங்கள் அதிகம். அதனால் இந்த ஆண்டு கோடை முன் எப்போதும் இருந்ததை விட தீவிரமாக இருக்கும் என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள். கெட் ரெடி ஃபோக்ஸ்

eco cooler செயல்படும் முறையை இந்த வீடியோவில் காணலாம்.

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

பத்தோடு11- உலக விந்தைகள் அனைத்தும் உங்களுக்காக

  • தொடங்கியவர்

ஒரே நாளில் குறைந்த செலவில் வீடு கட்டும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியது அமெரிக்க நிறுவனம் (Video)

 

 
 

ஒரே நாளில் குறைந்த செலவில் வீடு கட்டும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியது அமெரிக்க நிறுவனம் (Video)
 

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஏபிஸ் கோர் (Apis Cor) எனும் நிறுவனம் பாரம்பரிய முறையில் கட்டமைக்கப்படும் வீடுகளை அச்சடிக்கும் புதிய முறைமையை அறிமுகம் செய்துள்ளது.

3D பிரின்டிங் மூலம் குறைந்த பொருட்செலவில் வீடுகளை அச்சடிக்க புதிய இயந்திரத்தை ஏபிஸ் கோர் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

ஏபிஸ் கோர் 3D பிரின்டிங் இயந்திரத்தின் முதல் வீடு ரஷ்யாவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

வெறும் 24 மணி நேரத்தில் நீர் வசதி, மின்சாதனம் உள்ளிட்ட சகல வசதிகளுடன் புத்தம் புதிய வீட்டை அச்சடிக்க முடியும்.

நான்கு அறைகள் கொண்ட வீட்டினை அச்சடிக்க 10,134 டொலர்கள் (இலங்கை மதிப்பில் 15,32,765 ரூபாய்) செலவாகும் என ஏபிஸ் கோர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகில் முதன்முறையாக 3D பிரின்ட்டர் மூலம் அச்சடிக்கப்படும் இது போன்ற வீடுகள் 175 ஆண்டுகளுக்கு தாங்கும் என்றும் அனைத்து வித வானிலைகளையும் தாங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த வீடு கான்கிரீட் மூலம் கட்டமைக்கப்படுகிறது. கட்டமைக்கப்படும் போதே கதவு, ஜன்னல்கள், உள்கட்டமைப்புகளை அமைப்பது மற்றும் பெயின்ட் அடிப்பது உள்ளிட்டவை ஒவ்வொரு கட்டங்களில் செய்யப்படுகின்றது.

வீடு கட்டும் வழிமுறையில் முதன் முறையாக அச்சடிக்கும் வழக்கம் கண்டுபிடிக்கப்பட்டு வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யா மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் இந்த திட்டத்தை கொண்டு செல்ல ஏபிஸ் கோர் முடிவு செய்துள்ளது.

1

 

34
2

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்

கட்டுப்பாடான செயல்கள் கட்டாயம்
 

article_1488774540-images.jpgவிடியவிடிய பேஸ்புக்குடன் சங்கமிப்பதும் கணினியிலும் கைபேசியிலும் எந்நேரமும் விளையாட்டில் ஈடுபடுவதுகூட ஒருமன மயக்கம்தான். எல்லாவற்றுக்கும் ஒரு நேரகாலம் வேண்டும்.

இந்நிலையில் இப்படி இயங்குவதை இறுமாப்பாக, அதை ஒரு சாதனை போல் பேசுகின்றனர்.

நேர விரயம் ஒருவரின் கல்வியை, உடல்நிலையை, முன்னேற்றத்தைப் பின்னோக்கிச் செல்லவைக்கும்.

படிக்கும் வயதில், விழிபிதுங்க, ஒரே திசையில், ஒளியூட்டும் வண்ணத்திரையை வைத்த கண் மூடாமல், புலன்களைப் பேதலிக் வைப்பது நல்லதேயல்ல.

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை நல்ல முறையில் பயன்படுத்த எத்தனையோ வழிகள் உண்டு. கண்டபடி மூளைக்கு ஒவ்வாத வழிகளில் பயணிப்பது வாழ்வில் தவறுகளை வலிந்து திணிப்பதேயாகும். திட்டமிட்ட கட்டுப்பாடான செயல்கள் கட்டாயம் வெற்றிகளைப்  பெற்றுத்தரும்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

“அது என் பிரச்னை அல்ல - குட்டிக்கதையுடன் மிஸ்டர் K! #MondayMotivation


மிஸ்டர் K-யிடம் நான் மிக மதிக்கும் விஷயம், பிரச்னைகளை அவன் கையாளும் விதம். யாருடைய பிரச்னையையும் அவன் கேட்டு, ’இது என் பிரச்னை அல்லவே” என்று ஒதுங்கிக்கொண்டதில்லை.

மிஸ்டர் K

அலுவலகத்தில், வீட்டில், நண்பர்களிடத்தில் பொதுவெளியில் என்று சின்னதும் பெரியதுமாகப் பல பிரச்னைகளை நாம் சந்தித்தபடி கடந்துகொண்டுதான் இருக்கிறோம். நமக்கு மட்டும் அல்ல. நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொருத்தருக்கும் அவரவர் அளவிலான பிரச்னைகள் இருக்கும். 

மிஸ்டர் K , எங்கே என்ன பிரச்னை என்றாலும் அவனால் முடிந்ததைச் செய்வான். எதுவுமே செய்ய முடியாவிட்டாலும், ஒரு விஷயத்தைச் செய்வான். அது, அந்தப் பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்பது.

Listening

“Listening. இதுவே பாதி பிரச்னைகளைத் தீர்த்துவிடும். நாம் சொல்வதைக் காதுகொடுத்து ஒருத்தர் கேட்கிறார் என்பதே, சம்பந்தப்பட்டவர்களுக்கு பெரிய ஆறுதலாக இருக்கும். ஆனால், அவங்க பிரச்னையைப் புரிஞ்சுக்கிறதுக்காக கேட்கணுமே தவிர, அவங்களுக்குப் பதில் சொல்றதுக்குன்னே கேட்கக்கூடாது” - என்பான். பிரச்னைகளைக் கையாள, அவன் சொன்ன  சில யோசனைகள்:

1. கூலாக இருங்கள்!   

எந்த ஒரு பிரச்னையையும், இலகுவான மனநிலையில் எதிர்கொண்டாலே அதை எதிர்கொள்ளும் பக்குவம் வந்துவிடும். புரிகிற மாதிரி சொல்ல வேண்டுமென்றால், இன்னொருவருக்கு பிரச்னை என்றால் அதற்கு நாம் கருத்து சொல்ல முடிகிறது. நமக்கு என்றால்? அடுத்தவருக்கு ஈஸியாக அட்வைஸ் சொல்ல நம்மால் எப்படி முடிகிறது?  நம் மனது லேசாக இருப்பதால்.

சரி... இலகுவான மனநிலையில் எப்படி இருக்க முடியும்? கஷ்டம்தான். ஆனால் “வருந்தும் அளவுக்கு இது ஒரு பிரச்னையா” என்று உட்கார்ந்து யோசித்தால், பாதிக்கு மேலான பிரச்னைகள் ‘அடப்போடா’ என்று தோன்றும். 

2. சம்பந்தமில்லாததை விலக்குங்கள்

பிரச்னைக்கு என்னென்ன கண்ணிகள் இருக்கிறது என்று ஐந்து நிமிடம் உட்கார்ந்து யோசியுங்கள். ஒரு காகிதத்தில் எழுதுங்கள். கிளை கிளையாய் பல பிரச்னைகள் ஓடும். சம்பந்தமில்லாதவற்றை ஒவ்வொன்றாய் விலக்குங்கள் அல்லது தீருங்கள். இப்போது பூதாகரமாக இருக்கும் பிரச்னை, பூச்சி சைஸுக்கு ஆகிவிடும்.

3. நகைச்சுவை முக்கியம்! 

‘என்னடா இது.. சம்பந்தமில்லாம’ என்று  நினைக்காதீர்கள்  “ பிரச்னைகளைப் பேசறப்பக்கூட ரொம்ப ஜாலியா, ஹ்யூமர் சென்ஸோட பேசறவங்க அதை ஈஸியா கையாள்வாங்க’ என்பது அறிஞர்கள் வாக்கு. ஆகவே எந்தச் சந்தர்ப்பத்திலும் ஹ்யூமர் சென்ஸைக் கைவிடாதீர்கள். 

4. விளைவுகளைப் பட்டியலிடுங்கள்

தீர்வுகாண வேண்டிய பிரச்னைக்கான விளைவுகளைப் பட்டியலிடுங்கள். உதாரணமாக ‘இன்னைக்கு ஆஃபீஸ் போகணுமா? என்று முடிவெடுக்க வேண்டியதுதான் பிரச்னை’ என்றால், என்னென்ன பின்விளைவுகள் என்று மனதுக்குள் பட்டியலிட்டாலே “அப்ப போயிடலாம்” என்றோ “அவ்வளவுதானே.. லீவு போட்டுக்கலாம்” என்றோ சட்டென்று ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம். அதைவிடுத்து என்னென்ன நடக்குமோ என்று சிந்தனையை வளர்த்துக்கொண்டே இருந்தால், ஒன்றும் ஆகப்போவதில்லை.

 

 

மிஸ்டர் K

”எல்லாவற்றையும் விட முக்கியமானது.. பிறர் பிரச்னையை நம் பிரச்னையாக நினைத்து அவர்களுக்கு யோசனை சொல்வதும்.. அல்லது உதவியாய் இருப்பதும். எல்லா சூழலிலும் இது நமக்கும் பெரிய படிப்பினையாக இருக்கும். அல்லது நாம் பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது அவர்கள் உதவி, நம் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார்கள்” என்றான் பக்கத்தில் இருந்த மிஸ்டர் K. 

 “’எனக்கே ஆயிரம் ப்ராப்ளம்ஸ்பா. இதுல அடுத்தவன் பிரச்னையை ஏன் நான் என் பிரச்னையா நினைக்கணும்?’ -இதுதான் படிப்பவர்கள் மனதில் ஓடும் மிஸ்டர் K. அதுக்கேதும் ‘எல்லாருக்கும் தெரிஞ்ச’ குட்டிக்கதை வெச்சிருப்பியே?”

“சொல்றேன். ஒரு வீட்டில் எலி ஒண்ணு இருந்துச்சு. ஒருநாள், அந்த வீட்டு அம்மணி ஒரு பெரிய பெட்டி கொண்டு வந்து, எலி சுத்தற அறைக்குள்ள வெச்சாங்க.  எலி, அதோட தலை உள்ள போற அளவுக்கு லைட்டா ஒரு துளை போட்டு எட்டிப்பார்த்துச்சு.

பார்த்தா.. அதுக்கு பெரிய அதிர்ச்சி. உள்ள இருந்தது ஒரு எலிப்பொறி.

உடனே தவ்விக்குதிச்சு வெளில ஓடிச்சு. முதல்ல அதோட கண்ல பட்டது, வீட்ல இருந்த கோழி. அதுகிட்ட சொல்லிச்சு. கோழி ‘கொக்க்கொக்க்கொ’ன்னு சிரிச்சுட்டே சொல்லிச்சு. “எலிப்பொறி எதுக்கு வைப்பாங்க? உன்னைப் பிடிக்கத்தான். எனக்கென்ன? அது என் பிரச்னை அல்ல!” - சொல்லிட்டுப் போய்டுச்சு.

பக்கத்துல நின்னுட்டிருந்த வெள்ளைப் பன்றியும் அதையே சொல்லிச்சு. “அது உன் பிரச்னை”


அடுத்ததா, அதோட கண்ல பட்டது.. அந்த வீட்ல இருந்த ஆடு. அதுவும் ரொம்ப அசால்டா,  “அது என் பிரச்னை அல்ல. உன் பிரச்னை”ன்னு சொல்லிட்டுப் போய்டுச்சு.

எலிக்கு ரொம்ப சோகமா போச்சு. ‘அவ்ளதான் நாம’ன்னு பயந்துட்டிருந்தது.

இதுக்கு நடுவுல என்ன ஆச்சுன்னா,  எலிப்பொறி இருந்த பெட்டிக்குள்ள எலி எட்டிப்பார்க்க லைட்டா ஒரு துளை போட்டுச்சுல்ல.. அது வழியா ஒரு பாம்பு உள்ள போய், அதோட வால்.. எலிப்பொறில டபார்ன்னு அடிச்சு மாட்டிகிச்சு!   

சத்தம்கேட்ட அந்த வீட்டம்மா, ‘எலி மாட்டிகிச்சு’ன்னு நெனைச்சு பெட்டியத் திறக்கவும், பாம்பு கொத்தவும் சரியா இருந்தது. ஓடி வந்த கணவன், வைத்தியரைக் கூப்டான்.

வந்து பார்த்த வைத்தியர் விஷமுறிவுக்கு மருந்து கொடுத்துட்டு, “ஒண்ணும் சொல்ல முடியாது. எதுக்கும் நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். நல்ல கறிச்சோறா போடுங்க”ன்னுட்டுப் போய்ட்டார். மொதல்ல பலியானது கோழி. அதை சமைச்சு சிக்கன் செஞ்சு குடுத்தாச்சு. ம்ஹும். படுத்த படுக்கைதான்.

நோய்வாய்ப்பட்ட அந்தம்மாவைப் பார்க்க சொந்தக்காரங்க வரவே, எல்லாருக்கும்  சாப்பிட ரெடியாச்சு.. பீஃப் பிரியாணி. ஆக..   'அது உன் பிரச்னை’ன்னு தட்டிக்கழிச்ச பன்றிக்கும் உயிர் போச்சு.  “நல்லா குணமானா, உனக்கு கெடா வெட்டறேன் தாயி”ன்னு அவங்க கணவன்  வேண்டிக்கிட்டான். அந்தம்மாவும் குணமாச்சு. ஆடும் அவுட்டு!

எல்லாத்தையும் பார்த்துட்டிருந்த எலிக்கு என்னடா இதுன்னு தோணிச்சு. “என் பிரச்னைன்னு உங்ககிட்ட வந்தேன். ஆனா அது இப்ப உங்க எல்லார் பிரச்னையாவும் மாறிடுச்சே”ன்னு வருத்தமும் பட்டுகிச்சு. 
அதுனால....”


மிஸ்டர் K தொடரும் முன் சொன்னேன்: ”யாராவது பிரச்னைன்னு நம்மகிட்ட வந்து சொன்னா.. அதை நம்ம பிரச்னையா நினைச்சு அக்கறையா பதில் சொல்லணும்”

"ரைட்டு!” என்று டாடா காட்டினான் மிஸ்டர் K. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

1964: கஸியஸ் கிளே, முஹமட் அலி ஆனார்

1521 : போர்த்துகேய கடலோடி பேர்டினண்ட் மகலன் பசுபிக் சமுத்திரத்தின் குவாம் தீவை அடைந்தார்.


1788 : பிரித்தானிய குற்றவாளிக் கைதிகளைக் குடியமர்த்தும் திட்டத்தில் முதற்படியாக முதலாவது தொகுதி கைதிகள் அடங்கிய கப்பல் அவுஸ்திரேலியாவின் நோர்போக் தீவை அடைந்தது.


varau231790 : தமிழகத்தின் மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.


1836 : அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் அலாமோ நகரை மெக்சிக்கோ படைகள் தாக்கிக் கைப்பற்றின.


1869 : திமீத்ரி மென்டெலீவ் தனது முதலாவது ஆவர்த்தன அட்டவணையை சமர்ப்பித்தார்.


1902 : ஸ்பெய்னின் றியல் மட்ரிட் கால்பந்தாட்ட கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.


1940 : குளிர்காலப் போர்: பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் தற்காலிகப் போர் ஓய்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.


1946 : வியட்நாம் போர்: ஹோ சி மின் பிரான்ஸுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி வியட்நாமை பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோசீனக் கூட்டமைப்பினுள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக பிரான்ஸ் ஏற்றுக் கொண்டது.


1953 : ஸ்டாலினின் மறைவையடுத்து சோவியத்தின் பிரதமராகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை செயலாளராகவும் கியோர்கி மாலென்கோவ் பதவியேற்றார்.


1957 : ஐக்கிய இராச்சியக் குடியேற்ற நாடுகளான கோல்ட் கோஸ்ட் மற்றும் பிரித்தானிய டொகோலாந்து ஆகியன இணைந்து கானா குடியரசு என்ற பெயரில் சுதந்திரம்  பெற்றன.


1964 : அமெரிக்க குத்துச்சண்டை ஜாம்பவான் கஸியஸ் கிளே தனது பெயரை உத்தியோகபூர்வமாக முகமது அலி என மாற்றிக் கொண்டார்.


1964 : 2 ஆம் கொன்ஸ்டைன்டைன்  கிறீஸ் நாட்டின் மன்னரானார்.


1967 : தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.


1967 :  சோவியத் யூனியனின் முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் மகள் ஸ்வெட்லானா அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார்.


1975 : ஈரானும் ஈராக்கும் தமது எல்லை தொடர்பாக உடன்பாட்டிற்கு வந்தன.


1987 : பிரித்தானியாவின் எம்எஸ் ஹெரால்ட் என்ற கப்பல் கவிழ்ந்ததில் 193 பேர் கொல்லப்பட்டனர்.


2007 : இந்தோனேஷியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற இரண்டு அடுத்தடுத்த பூகம்பங்களினால் 70 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.


2008 : ஈராக்கின் பாக்தாத் நகரில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 68 பேர் உயிரிழந்தனர். 

http://metronews.lk

  • தொடங்கியவர்

நகர வாழ்க்கை வெறுத்து... இயற்கையோடு இணைந்துவிட்ட இங்கிலாந்து ஜோடி..!

அவசரம்... நிற்க, நடக்க, உட்கார, சாப்பிட, சிரிக்க, அழ, பேச, படுக்க, தூங்க, குளிக்க, காதலிக்க என அவசரத்தைத் தவிர எந்த அழகியலையும் உணரத் தவறுகிறோம் நகர வாழ்க்கையில். அமைதியான சூழல், அளவான வீடு, கடனில்லா வாழ்க்கை, நிம்மதியான தூக்கம், உண்மையான சிரிப்பு என ஒரு அழகான வாழ்க்கைக்குள் போய்விடத்தான் எல்லோரும் நினைக்கிறோம். அதற்கான வாய்ப்புகள் சிலருக்கு அமைவதில்லை, வாய்ப்புகள் அமையும் பலரும் நகர வாழ்க்கையின் நெருக்கடிகளுக்குப் பழகிப் போய் தங்கள் சுயத்தையும், சுகத்தையும், சிரிப்பையுமே மறந்து வாழ்கிறார்கள். 

தாங்கள் வாழ நினைத்த, வாழ ஆசைப்பட்ட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறார்கள் ஒரு பிரிட்டன் தம்பதி. 

வாழ்க்கை மகிழ்ச்சி சந்தோஷம் விவசாயம்

பிரிட்டனின் நார்த் டிவோன் பகுதியிலிருக்கும் டர்கா பள்ளத்தாக்கு. அடர்ந்து, நெடிந்து வளர்ந்திருக்கும் மரங்களின் நடுவே இருக்கிறது அந்தக் குடிசை. சுற்றி கொஞ்சம் நிலத்தில் காய்கறிகள் பயிரிடப்பட்டிருக்கின்றன. ஆடுகளும், கோழிகளும், வாத்துகளும் அந்தக் குடிசையைச் சுற்றி மேய்ந்துக் கொண்டிருக்கின்றன. சில தூரம் தள்ளியிருக்கும் ஓடையிலிருந்து நீரை அள்ளி வருகிறார் கேட். தோட்டத்தில் காய்கறிகளைப் பறித்துக் கொண்டிருக்கிறார் ஆலன் பாரோ. இவர்களைத் தாண்டி வீட்டின் முன்புறத்தைப் பார்ப்போம். 
மண்ணும், காய்ந்த புற்களும் கொஞ்சம் சுண்ணாம்பும் கலந்தே மொத்த வீடும் கட்டப்பட்டிருக்கிறது. வீட்டின் முகப்பு, வளைந்து, நெளிந்து கோணல், மாணலாக வெட்டப்பட்ட ஒரு மரத்துண்டைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே லாண்டர்ன் விளக்குகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஈரம் நிறைந்த மண்ணைக் கடந்து வீட்டிற்குள் போனால் கொஞ்சம் கதகதப்பாய் இருக்கிறது. எந்தப் பொருளும் ஒரு ஒழுங்கற்ற நிலையிலேயே இருக்கின்றது. எதுவும், எங்கும் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், அந்த ஒழுங்கீனம் அத்தனை அழகாக இருக்கிறது. 

மாற்று வாழ்க்கை      வாழ்க்கை மகிழ்ச்சி சந்தோஷம் விவசாயம்

                                                                                                                                                                 ஒழுங்கீனத்தின் அழகியல்...

சிவப்பும், வெள்ளையும் கலந்த நிறத்திலிருக்கும் முடி சிக்குகளால் நிறைந்திருக்கிறது. பச்சை நிற ஸ்வெட்டர், பிரவுன் நிற ரப்பர் பூட்ஸ், சற்றே குண்டான உருவத்தோடு இருக்கும் கேட், 

"இப்படியொரு வாழ்க்கையில் வாழத் தான் நான் நீண்ட காலம் ஆசைப்பட்டேன். நம் தாத்தா, பாட்டிகள் வாழ்ந்த காலம் மாதிரியான ஒரு வாழ்க்கை. எல்லோரும் முன்னோக்கி ஓடிக் கொண்டிருக்கையில், நான் கொஞ்சம் ஓடாமல் நின்றேன். இப்போது பின்னோக்கி நடக்கத் தொடங்கியிருக்கிறேன்..." என்கிறார் சின்ன சிரிப்போடு. 

47 வயதான ஆலனும்,  45 வயதான "கேட்"டும் இங்கு வந்து 19 மாதங்கள் ஆகின்றன. இந்த வீட்டைக்கட்ட இவர்களுக்கு ஆறு வாரம் பிடித்திருக்கிறது. மண், காய்ந்த புற்கள், சுண்ணாம்பு, பழைய மரப் பட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு இதை உருவாக்கியிருக்கிறார்கள். இதைக் கட்டி முடிக்க மொத்தம் இரண்டாயிரம் யூரோக்கள் செலவாகியிருக்கின்றன. தண்ணீருக்கான பைப் லைன்கள், கரண்ட் போன்ற வசதிகள் இதில் இல்லை. சோலார் பேனல்கள் கொண்டு அதிலிருந்து குறைந்த அளவிலான மின்சாரத்தை எடுக்கின்றனர். இன்றைய தேதிக்கு மனிதனின் அத்தியாவசங்களாக இருக்கும் பெரும்பாலான பொருட்கள் இவர்களிடத்தில் இல்லை. ஒரேயொரு துருப்பிடித்த பழைய கேஸ் ஸ்டவ் வைத்திருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் அதைப் பயன்படுத்துவதில்லை. 

வாழ்க்கை மகிழ்ச்சி சந்தோஷம் விவசாயம்    வீடு

                                                                          தற்சார்பு வாழ்க்கையில் ஆலன் மற்றும் கேட் தம்பதி...

இவர்களின் வீட்டைவிட்டு சற்று தூரத்திலிருக்கும் ஒரு மாற்றுத் திறனாளிப் பெண்ணுக்கு "கேர் டேக்கராக" இருக்கிறார் கேட். அவசர காலத்தில் அவரைத் தொடர்பு கொள்ள ஒரு மொபைல் போனை வைத்திருக்கிறார். அதையும் அந்தப் பெண்ணின் வீட்டில் தான் சார்ஜ் செய்து கொள்கிறார் கேட். 

இந்த வாழ்க்கையை நோக்கிய ஆசையும், கனவும் இருந்தாலும் கூட இவர்கள் இப்படி வாழ மற்றுமொரு முக்கிய காரணமும் இருக்கிறது. எம்.சி.எஸ் ( Multiple Chemical Sensitivity) என்ற உடல் மற்றும் மன குறைபாட்டால் கேட் பாதிக்கப்பட்டிருக்கிறார். நகர வாழ்க்கையும், அந்த சூழலும் பெரும் மன அழுத்தத்தை கேட்டுக்கு கொடுத்திருக்கிறது. மேலும், நவீன கருவிகள், தொழில்நுட்பங்களைப் பார்க்கும் போது ஒருவித ஒவ்வாமை கேட்டிற்கு ஏற்பட்டிருக்கிறது. 

இந்த அழகான வாழ்க்கையிலும் இந்தத் தம்பதியினருக்கு ஒரு பிரச்னை எழுந்திருக்கிறது. இவர்கள் குடிசைக் கட்டியிருக்கும் நிலம் இவர்களுக்கு சொந்தமானது என்றாலும் கூட, இப்படியொரு குடிசையைக் கட்ட அரசிடம் முறையான அனுமதி பெறவில்லை. இந்த வருட இறுதிக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது. தற்போது, அதை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

"இயற்கையோடு இயைந்த வாழ்க்கை எங்களுடையது. ரொம்பவே நிம்மதியாக இருக்கிறோம். நாங்கள் பொதுச் சமூக வாழ்க்கையிலிருந்து மொத்தமாக வெறுத்து, ஒதுங்கி வாழவில்லை. அதே சமயம் எங்களுக்கு உடன்படாத வாழ்க்கை முறையிலிருந்து விடுபட்டு, எங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்கிறோம். இது என்னுடைய புது வாழ்க்கை, கொஞ்சம் புதுமையானதும் கூட" என்று தன் ஆட்டுக்குட்டியை வருடியபடியே சொல்கிறார் கேட். அது அவர் கைகளில் இருந்து துள்ளி குதித்து ஓட, அதைப் பார்த்து சிரித்தபடியே.

மகிழ்ச்சி சந்தோஷம் விவசாயம்

  அழகான ஆட்டுக்குட்டியோடு கேட்...

"இது எங்கள் கூடு, எங்கள் கலை, எங்கள் வாழ்க்கை... எங்களின் எல்லாமும்..." என்று சொன்னபடியே தோட்டத்திலிருக்கும் காய்கறிகளைப் பறிக்க நடக்கிறார் கேட். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

90களில் ஹிட் ஆன பாடல்கள் தெரியும்.. மொபைல்கள் தெரியுமா? #MobileMania

"டேய் எங்கண்ணன் புதுசா மொபைல் வாங்கியிருக்கான்டா. இன்னிக்கு சாயங்காலம் வீட்டுக்கு வந்தேன்னா பார்க்கலாம். அதுல "ஸ்நேக்" கேம் இருக்கு."

" என்னடா சொல்ற?! நிஜமாவா? வித் ஆன்டனாவா? வித் அவுட் ஆன்டனாவா? பிக்சர் மெஸேஜ் எல்லாம் இருக்கா?"

" வித் அவுட் ஆன்டனாடா..."

" என்னடா டேய்... வித் அவுட் ஆன்டனா வாங்கக் கூடாதுடா. செல்போன் ஹீட், அந்த வேவ்ஸ் எல்லாம் போனுக்குள்ளயே இருக்குமான்டா. கேன்சர் வந்துடும்னு சொல்றாங்க. சரி... ஸ்நேக் கேம்ல எவ்வளவு ஸ்கோர் எடுத்த?" ... ஒரு பெரிய கும்பலாகப் போய் அந்த நோக்கியா 1100வைப் பார்த்தது, கிட்டத்தட்ட அடுத்த 3 மாதங்களுக்கான  ஹாட் டாபிக்கானது. 

கலர் கலரான பேனல்கள் வாங்கப் போவது, சிலிகான் பவுச் வாங்குவது, "ஹார்டின்" பேக் லைட் பிக்ஸ் செய்வது, ஸ்டிக்கரிங் செய்வது என அந்த செல்போன்கள் அண்ணன்களால் பூஜிக்கப்படும். கேம் விளையாடுவதற்கோ, பெருமைக்காக நண்பனுக்கு போன் பண்ணவோ அண்ணன்களுக்குத் தெரியாமல் செல்போனை சுடுவது சுவாரஸ்யமான விளையாட்டு. ஸ்கூல் ஆன்வல் டே நிகழ்ச்சிக்கு அண்ணன்களின் கை,கால்களில் விழுந்து கெஞ்சிக் கதறி, போராடி செல்போனை வாங்கிக் கொண்டு ப்ரெண்ட்ஸ் முன்னாடி சீன் போட்டது மாஸ் நினைவுகள். இப்படி ஒவ்வொரு காலத்துல செல்போனை அனுபவிச்சவங்களுக்கு, ஒவ்வொரு விதமான "நாஸ்டால்ஜிக்" மொமண்ட்ஸ் கண்டிப்பா இருக்கும். 

என்னதான் இன்னிக்கு "தொடு திரை தொழில்நுட்பம்" (அதாங்க... டச் ஸ்கிரீன்) எல்லோரையும் தொட்டிருக்குன்னாலும், அந்த ரப்பர் பட்டன்கள தொட்ட சுகம் தனி தான். அப்படி முதன்முதலா வந்த செல்போன்ல இருந்து... 2000ற்கு முன்னாடி வரைக்கும் வந்த சில முக்கிய செல்போன்களின் தொகுப்பு இது: 

1983 - மோட்டோரொலா டைனாடாக் (Motorola DynaTac) - 8000 X:

செல்போன்களோட காட்பாதர் இந்த டைனாடாக். 1973ல மோட்டோரொலாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மார்டின் கூப்பர், ஒரு மாதிரி செல்போனை கண்டுபிடிக்கிறார். ( ஒரு மாதிரியான செல்போன் இல்லை!!! மாதிரி - Prototype) . பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, 1983ல விற்பனைக்கு வந்தது. 

முழுசா சார்ஜ் ஆக பத்து மணி நேரம் ஆகும். அதுக்காக பத்து மணி நேரம் எல்லாம் பேச முடியாது. அதிகபட்சம் அரை மணிநேரம்தான் டாக் டைம். எடை கிட்டத்தட்ட 800 கிராம் இருந்தது. இந்த "செல்போனை" செல்லமா "செங்கல் போன்"னு தான் அந்தக் காலத்துல சொல்லியிருக்காங்க. ஒரே விஷயம் அந்த கால கோடீஸ்வரர்கள் மட்டும்தான் இதை வாங்கியிருப்பாங்க காரணம் அன்னிக்கே இதோட விலை 4,000 அமெரிக்க டாலர்கள். 

செல்போன் மொபைல் பழைய போன்கள்           செல்போன் மொபைல் பழைய போன்கள்

                                                                                                               செல்போன்களுடன் மார்டின் கூப்பர்

1989 - மோட்டோரொலா மைக்ரோடாக் (Motorola MicroTac) - 9800 X:

"அட போங்கப்பா ... செங்கல் போன பாக்கெட்லேயே வைக்க முடியில"ன்னு அலுத்துக்கிட்டவங்களுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்டது இந்த மைக்ரோடாக். இதுல "மவுத் பீஸ்" , கீ பேடோடு மடித்து வைக்கும் மாடலில் வடிவமைக்கப்பட்டது. வருங்காலத்துல வந்த ஃப்ளிப் போன்களோட முன்னாடி... சாரி, முன்னோடி இவர்தான். 

"இந்த போன நீங்க ஜாலிய உங்க பாக்கெட்லேயே வச்சுக்கலாம்" ன்னு சொல்லி ஏக விளம்பரம் கொடுக்க, விற்பனையில் பட்டையக் கிளப்பியது.

செல்போன் மொபைல் பழைய போன்கள்

1992 - மோட்டோரொலா இண்டர்நேஷனல் (Motorola International) - 3200:

"இதென்னப்பா சுடுகாட்லருந்து எடுத்து வந்த எலும்பு மாதிரி இருக்கு..." என்று கமெண்ட் செய்த ஜெர்மானியர்கள் இதை "எலும்பு" போன் என்றே அழைத்தார்கள். 21 பட்டன்கள் இதில் இருந்தன. 750mAh பேட்டரி பவர் இருந்தது. 5 மணி நேரம் சார்ஜ் செய்தால் போதும். செல்போன்ல பேசாம சும்மா சீன் மட்டும் போட்டா 8 மணி நேரம் சார்ஜ் நிக்கும். பேசுனா ஒரு மணி நேரம் தாங்கும். ஜி.எஸ்.எம். டெக்னாலஜியில வந்த முதல் செல்போன் இதுதான். 

செல்போன் மொபைல் பழைய போன்கள்      செல்போன் மொபைல் பழைய போன்கள்

1992 - நோக்கியா 1011:

"வர்லாம் வா...வர்லாம் வா... நோக்கியா"ன்னு எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த நோக்கியா வரலாற்றுல மாஸ் என்ட்ரி கொடுத்த தருணம். 10-11-1992 அன்று ஒரு செல்போனை அறிமுகப்படுத்த நோக்கியா அந்த மாடலுக்கு பேர் வைக்க ரொம்பவெல்லாம் யோசிக்கல. அறிமுகப்படுத்தும் நாளையே மாடல் நம்பராக வைத்தது. அப்படி பிறந்தவன் தான் "நோக்கியா 1011". ஆனா, இந்த மாடல்ல நோக்கியாவோட அடையாளமா இருக்கும் அந்த "தனன்னா னே தன..." (ஓ... இசைய எழுதனா கேட்க முடியாதுல்ல!!) ரிங்டோன் இதில் இடம் பெறவில்லை.

செல்போன் மொபைல் பழைய போன்கள்

 1996 - மோட்டோரொலா ஸ்டார்டாக் (Motorola StarTac):

முதன்முதலில் வந்த பக்காவான ஃப்ளிப் போன் இதுதான். 88 கிராம் எடை கொண்டிருந்தது. முதமுதலாக வைப்ரேஷன் மோடு அறிமுகப்பட்டுத்தப்பட்டது இதில்தான். நெட்வொர்க் ரேஞ்ச் இருப்பதை பச்சை இண்டிகேட்டர் மூலம் காட்டும். கிட்டத்தட்ட 60 மில்லியன் செல்போன்கள் விற்பனையாகின. 

செல்போன் மொபைல் பழைய போன்கள்

1996 - நோக்கியா 8110:

முதல் ஸ்லைடர் மாடல் போன். ஸ்லைடரை மேலே தூக்கினாலே கால் ஆன் ஆகிவிடும். கொஞ்சம் வளைந்த மாதிரி இருப்பதால் செல்லமாக "வாழைப்பழ போன்" என்ற பெயரைப் பெற்றது. 

    செல்போன்                                           செல்போன் மொபைல் பழைய போன்கள்

 

நோக்கியா 9000 கம்யூனிகேட்டர்:

8 எம்பி மெமரியோடு வந்த செல்போன். கொஞ்சம் ஜேம்ஸ் பாண்ட் கேட்ஜெட் ஸ்டைலில் இருக்கும் இதுதான் உலகின் முதல் ஸ்மார்போன் என்கிறார்கள். 

செல்போன்

நோக்கியா 5110:

எல்லா சிறப்புகளையும் விட்டுத் தள்ளுங்கள். இந்த செல்போன் இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த படைப்பு. ஒரே காரணம், இதில்தான் முதன் முதலில்  "ஸ்நேக்" கேம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

செல்போன்

1999 - நோக்கியா 3210 :

செல்போன் வரலாற்றில் அதிரிபுதிரி ஹிட்டான ஒரு போன். 160 மில்லியன் செல்போன்கள் விற்பனையாகின. பிக்சர் மெஸேஜ் வசதி முதன்முதலில் கொண்டுவரப்பட்டது இதில்தான். வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் ஆன்டனாவுக்கு "பை,பை" சொன்ன முதல் போன். அதுவரை பணக்காரர்களின் சொத்தாக மட்டுமே இருந்த செல்போனை, நடுத்தர வர்க்கத்தின் கைகளுக்கு கொண்டு சேர்த்த சிகப்பு சிறப்பு இதற்கு உண்டு.

செல்போன்         செல்போன்

இதையெல்லாம் பார்க்கும்போது, கையிலருக்கும் டச் போன் மறைந்து இதுல ஏதாவது ஒண்ணு வந்துடக் கூடாதான்னு தோணுதுல்ல??? சேம் பீலிங்!!!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கணினி கண்டுபிடித்த கதை!

 
 
computer_3138701f.jpg
 
 
 

மனிதர்கள் எப்படி எண்களைக் கணக்கிட ஆரம்பித்தார்கள், கணக்கிடுவதை எளிமையாக்கப் பல்வேறு வழிமுறைகளை எப்படிக் கையாண்டார்கள் என்பதையெல்லாம் பார்த்தோம். மனிதர்கள் இப்படி எண்களைக் கணக்கிட ஆரம்பித்ததுதான் கம்ப்யூட்டர் எனும் கணினியைக் கண்டறிவதில் கொண்டுவந்து நிறுத்தியது, தெரியுமா? இன்றைக்குக் கணக்கிடுவதற்கு மட்டுமில்லாமல், எதற்கெடுத்தாலும் கணினியைத்தான் நாம் தேடுகிறோம்.

கணினியைக் கண்டறிவதற்கு அடிப்படையாக இருந்தவை கணக்கிடும் கருவிகள்தான். ஏற்கெனவே நாம் பார்த்த, ‘அபாகஸ்' எனும் மணிச்சட்டம் மட்டுமே பல நூற்றாண்டுகளுக்கு நவீன கணக்கிடும் கருவியாகவும் எண்ணும் கருவியாகவும் ஆதிக்கம் செலுத்திவந்தது. அதற்குப் பிறகு சில புத்திசாலி விஞ்ஞானிகள் புதிய கணக்கிடும் கருவிகளைக் கண்டறிந்தார்கள்.

ஜெர்மன் கணிதவியலாளர் வில்ஹெம் ஷிக்கார்ட் 1623-ல் கணக்கிடும் கடிகாரத்தைக் கண்டுபிடித்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக அந்தக் கடிகாரமும், அது தொடர்பான ஆவணங்களும் எரிந்துவிட்டன. கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்குப் பிறகு 1935-ல் கணக்கிடும் கடிகாரம் தொடர்பான ஷிக்கார்டின் செய்முறைக் குறிப்பு கிடைத்தது. அதன் அடிப்படையில் ஒரு மாதிரி உருவாக்கப்பட்டது.

ppl_3138699a.jpg

கணினியின் முன்மாதிரி

ஷிக்கார்டுக்குப் பின்னர் கணக்கிடும் கருவியை பிளெய்சி பாஸ்கல் கண்டறிந்தார். அவரை கவுரவிக்கும் வகையில் அந்தக் கருவிக்குப் ‘பாஸ்கலைன்' என்று பெயர் வைக்கப்பட்டது.

பாஸ்கல் ஒரு குழந்தை மேதை. குறிப்பாகச் சிறு வயதிலேயே கணிதத் துறையில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். கூம்புகளைப் பற்றிய ஒரு கணித ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியபோது அவருடைய வயது அதிகமில்லை, வெறும் 16 தான். இந்தக் கட்டுரை அவரைப் பெரிதாகப் பிரபலப்படுத்தியது.

பாஸ்கலுக்கு 19 வயதானபோது கூட்டலையும் கழித்தலையும் மேற்கொள்ளக்கூடிய கருவியை வடிவமைக்கும் நிலையை அவர் எட்டியிருந்தார். அவர் கண்டுபிடித்த அந்தக் கணக்கிடும் கருவியே 400 ஆண்டுகளுக்குப் பிறகு கணினியை உருவாக்குவதற்கான அடிப்படையாக இருந்தது என்று சொன்னால், ஆச்சரியமாகத்தான் இருக்கும். அந்தக் கருவியே படிப்படியாக வளர்ச்சி பெற்று கணினிக்கு அடிப்படையாக மாறியது.

ஏனென்றால் பாஸ்கலின் கணக்கிடும் கருவியைப் போலவே, கணினியின் ஆரம்ப கால மாதிரிகளில் சக்கரங்கள், பல்சக்கரங்கள் போன்ற இயந்திர பாகங்கள் பொருத்தப்பட்டிருந்தன.

pascaline_3138700a.jpg

2000 கிலோ கணினி

கணிதத் தேர்வின்போது மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தும் கையடக்கக் கணக்கீட்டுக் கருவி (Calculator), கணக்கிடும் வேலையை மட்டுமே செய்யும். அதிலிருந்து மாறுபட்ட அமைப்புடன் கண்டறியப்பட்ட ஆரம்பகாலக் கணினியாகக் கருதப்படுவது 1835-ல் சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய பகுப்பாய்வுக் கருவி (analytical engine)தான். இது நீராவியால் இயங்கியது. துளைகளைக் கொண்ட அட்டைகளைச் சொருகியதன் மூலம் இந்தக் கருவியின் நிரல் (Program) இயங்கியது.

உண்மையான கணினியின் தோற்றம் கொண்ட கணினிகள் 1900-களில் உருவாக்கப்பட்டன. மின்சாரம் மூலம் இயங்கிய இந்தக் கருவிகள் கணக்கீடுகளைச் செய்தன. இந்தக் கருவிகள் மிகப் பெரிய அளவைக் கொண்டவையாகவும், எளிதில் சூடேறுவதாகவும் இருந்தன. அது மட்டுமில்லாமல் திடீர் திடீரென செயல்பாட்டை நிறுத்தியும் கொண்டன. இந்தக் கணினிகள் மிகப் பெரிய இடத்தை அடைத்துக்கொண்டதுடன் விலையும் அதிகமாக இருந்தன. ‘ஐ.பி.எம். 650' என்றழைக்கப்பட்ட ஆரம்பகாலக் கணினியின் எடை 2,000 கிலோ. அன்றைய மதிப்பில் அதன் விலையோ 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (3 கோடி ரூபாய்).

இந்தக் கணினிகள் எண்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கின. பொதுவாகவே மின்கருவிகள் இரண்டு நிலைகளில்தான் இயங்க முடியும். பூஜ்ஜியம் என்றால் செயல்படாத நிலை, ஒன்று என்றால் செயல்படும் நிலை. இந்த இரண்டு எண்களை அடிப்படையாகக் கொண்டே இன்றைக்கும் கணினிகள் இயங்குகின்றன.

அளவு குறைந்தது, விலையும் குறைந்தது

கணினி உருவாக்கத்தில் அடுத்த மிகப் பெரிய நகர்வு 1950-களில் நடைபெற்றது. புதிய கணினியின் அளவு மிகச் சிறிதாக இருந்தது. அதற்கு ‘டிரான்சிஸ்டர்' என்று பெயர் வைக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு கணினியின் அளவு குறைந்தாலும்கூட, விலை மட்டும் குறையவே இல்லை.

நவீனக் கணினிகள் ‘மைக்ரோசிப்' என்ற சிறிய மின்சுற்றுப்பட்டையைக் கொண்டு உருவாக்கப்பட்டதால் அளவில் சிறியதாகவும், வேகமாக இயங்கக்கூடியதாகவும், விலை குறைந்ததாகவும் மாறின. இன்றைக்கு கணினியின் அளவு மிகச் சிறியதாகவும், வாங்கக்கூடிய விலை கொண்டதாகவும் மாறியிருப்பதற்குக் காரணம் மைக்ரோசிப்புக்கு அடுத்த நிலையான ‘மைக்ரோபுராசசர்' கண்டுபிடிக்கப்பட்டதுதான்.

இதுதான் மனித இனம் எண்களைக் கண்டறிய ஆரம்பித்து கணினியைக் கண்டறிந்தது வரையிலான சுருக்கமான நிஜக் கதை.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

கடிக்க கூடாத இடத்தில் கடித்த எறும்பால் துடித்த இஷாந்த் ஷர்மா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

 
 
 

பெங்களூர்: இஷாந்த் ஷர்மாவின் அந்த ஒரு முகபாவனை தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகிவருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் படு பயங்கரமாக சொதப்பி வருகிறது. புனேயில் நடைபெற்ற டெஸ்ட்டிலும், பெங்களூரில் நடந்து வரும் 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சிலுமாக சேர்த்து மொத்தம் 3 இன்னிங்சுகளிலும் இந்தியாவால் தலா 200 ரன்களை கடக்க முடியவில்லை.

இதையடுத்து பெங்களூர் டெஸ்டில் ஸ்லெட்ஜிங் மூலம், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை நிலைதடுமாற வைக்க முயற்சி செய்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா.

 

 
 
 
சீறிய இஷாந்த்
 
You__6LVJ453E_crop_org_resize_640x360.jpg
 
 
 
 
00:00 / 00:00
 
oneindia_tamil__HLUC4GYZ.jpg
 
 
: Ad ends in...
You__6LVJ453E_crop_org_resize_640x360.jpg
01:32
Video will
play after ad
 
 
 

சீறிய இஷாந்த்

குறிப்பாக ஆஸி. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மேட் ரென்ஷாவுக்கு எதிராக கடும் சீற்றத்தை வெளிப்படுத்தினார் இஷாந்த் ஷர்மா.

 

பல வகை முகபாவங்கள்

இஷாந்த் ஷர்மா தனது முகபாவங்களை அஷ்ட கோணலாக மாற்றி, ஸ்லெட்ஜிங் செய்தது இணையத்தில் வைரலாகியுள்ளது. அவரது முகபாவங்கள் சிரிப்பு காட்டுவதாகவும் உள்ளது. சில நேரங்களில் அதிர்ச்சியூட்டுவதாகவும் உள்ளது. இதை இணையத்தில் எப்படி கலாய்க்கிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள்.

 
View image on TwitterView image on Twitter

There's plenty happening out there this morning! #INDvAUS

 
 

இரு துருவங்கள்

இஷாந்த் ஷர்மா கொடுத்த முக பாவனைக்கு, ஆஸி. பேட்ஸ்மேன் மேட் ரென்ஷா காட்டும் பதில் 'ஒழுங்கு'.

 

When you have to be in the office at 11 but you wake up at 11.

 
 

லேட்டாயிடுச்சா

காலை 11 மணிக்கு ஆபீசில் இருக்க வேண்டும் என்ற நிலையில், தூக்கத்தில் இருந்தே 11 மணிக்குதான் கண் விழித்தால் அந்த ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கும் என கூறுகிறது இந்த டிவிட்.

 
 
C6ISaq_VAAAQFV2.jpg

Ishant Sharma s Acting is better than his bowling ...
#INDvAUS

 
 

நடிப்பு நல்லா வருது

பந்து வீச்சு துறையை விட்டுவிட்டு நடிப்பு துறையை இஷாந்த் தேர்ந்தெடுக்கலாம் என்று கூறுகிறது இந்த டிவிட். அதற்கான காரணத்தை இக்குட்டி வீடியோவை பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

 
View image on TwitterView image on Twitter

Ishant Sharma before and after having paan paraag?#INDvAUS

 
 

குட்கா மேன்

ஒரு பிரபல குட்கா விளம்பரத்தை ஒப்பிட்டு இஷாந்த்தின் சேஷ்டையை கேலி செய்கிறது இந்த டிவிட்.

 

திங்கள்கிழமை கடுப்புகள்

ஞாயிறுவிடுமுறையை முடித்துவிட்டு திங்கள்கிழமைக்கு வேலைக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் கிளம்புவோர் முகம் எப்படி கடுப்படிக்கும்? எனவே திங்கள்கிழமைக்கு ஒரு முகம் இருந்தால் அது இப்படித்தான் இருக்கும் என்று கிண்டல் செய்கிறது இந்த டிவிட்.

 
  •  
  •  

அந்த இடத்தில் எறும்பு கடித்தால்..

எக்கு-தப்பான இடத்தில் எறும்பு கடித்தால் இப்படித்தான் ரியாக்ஷன் கொடுப்போம் என்று கலாய்க்கிறது இந்த டிவிட்.

http://tamil.oneindia.com

  • தொடங்கியவர்

காற்றை விற்று காசாக்கும் விசித்திரம்..!

 

சுவாசிப்பதற்கு தேவையான காற்றை லீட்டர் கணக்கில் விற்கும் விசித்திர நிகழ்வு பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.

download.jpg

சுவிட்சர்லாந்தில் உள்ள பெரும்பான்மையானவர்கள், அல்ப்ஸ் மலைக்கு சென்று தூய்மையான காற்றை சுவாசிக்க முடியாத குறையை தீர்ப்பதற்காக, போத்தலில்  காற்றை லீற்றர் கணக்கில் அடைத்து வைத்து விற்பனை செய்து, உலகிலேயே மிகவும் விலை மதிப்பு மிக்க காற்றை பிரிட்டனிலிருந்து ஜான் கிரின், என்பவர் விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

gettyimages-468166246.jpg

குறித்த காற்றானது, அல்ப்ஸ் மலையில் ரகசியமான இடத்திலிருந்து பிடிக்கப்படுவதோடு, தரமான போத்தலில் அடைத்து உலக முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுவதாக ஜான் கிரீன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு மூன்று லீற்றர் காற்றின் விலையானது 247 அமெரிக்கா டொலர்கள்,  முழுவதும் வாங்கமுடியாது என்பதால் அரைவாசி காற்றின் விலையானது, 166 அமெரிக்கா டொலர்களுக்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

swiss-alps-1488472771-article-0.jpg

போத்தலில் கிடைக்கும் அல்ப்ஸ் காற்றை உடனடியாக சுவாசிப்பதைவிட, சில மணித்தியாலங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து சுவாசித்தால், அல்ப்ஸ் காற்றை சுவாசிக்கும் அனுபவம் கிடைக்கும் எனவும் அறிவிக்க்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வியாபாரத்தில் பெறப்படும் நிதியிலிருந்து, 25% வருமானம் உலகின் சுத்தமான குடிநீர் திட்டத்துக்கு பயன்படுத்தும் என கிரீன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு கானா: மார்ச் 6- 1957

 
 
 

கானா ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அக்ரா. இந்நாட்டின் அலுவல் மொழி ஆங்கிலம் ஆகும். கானா, ஐக்கிய இராச்சியத்திடமிருந்து 1957-ல் விடுதலை அடைந்தது. கானாவே, குடியேற்ற ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற முதல் ஆபிரிக்க நாடாகும். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1836 - டெக்சாசில் அலாமோ நகரை மெக்சிகோ படைகள் தாக்கிக்

 
 
 
 
பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு கானா: மார்ச் 6- 1957
 
கானா ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அக்ரா. இந்நாட்டின் அலுவல் மொழி ஆங்கிலம் ஆகும். கானா, ஐக்கிய இராச்சியத்திடமிருந்து 1957-ல் விடுதலை அடைந்தது. கானாவே, குடியேற்ற ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற முதல் ஆபிரிக்க நாடாகும்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1836 - டெக்சாசில் அலாமோ நகரை மெக்சிகோ படைகள் தாக்கிக் கைப்பற்றினர். * 1869 - திமீத்ரி மென்டெலீவ் தனது முதலாவது ஆவர்த்தன அட்டவணையை சமர்பித்தார். * 1940 - குளிர்காலப் போர்: பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் தற்காலிகப் போர் ஓய்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. * 1945 - ருமேனியாவில் கம்யூனிச அரசு பதவிக்கு வந்தது. * 1946 - வியட்நாம் போர்: ஹோ சி மின் பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒப்பந்தத்தினபடி பிரான்ஸ் வியட்நாமை பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோசீனக் கூட்டமைப்பினுள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஏற்றுக்கொண்டது.

* 1953 - ஸ்டாலினின் மறைவையடுத்து சோவியத்தின் பிரதமராகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை செயலாளராகவும் கியோர்கி மாலென்கோவ் பதவியேற்றார். * 1957 - ஐக்கிய இராச்சியக் குடியேற்ற நாடுகளான கோல்ட் கோஸ்ட் மற்றும் பிரித்தானிய டொகோலாந்து ஆகியன இணைந்து கானா குடியரசு என்ற பெயரில் விடுதலை பெற்றன. * 1964 - காசியஸ் கிளே தனது பெயரை அதிகார பூர்வமாக முகமது அலி என மாற்றிக் கொண்டார்.

* 1975 - ஈரானும் ஈராக்கும் தமது எல்லை தொடர்பாக உடன்பாட்டிற்கு வந்தன. * 1987 - பிரித்தானியாவின் எம்எஸ் ஹெரால்ட் என்ற கப்பல் கவிழ்ந்ததில் 193 பேர் கொல்லப்பட்டனர். * 2007 - இந்தோனீசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற இரண்டு அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் 70 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

பழைய சோறு, ஆரோக்கிய காலை உணவு... சத்துகளும் சான்றுகளும்! #BestBreakfast

அறுபது வயதைக் கடந்த பிறகும், திடகாத்திரமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்... `உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் என்ன?’ என்று. சட்டென்று  `பழைய சோறு, கம்பங் களிதான்... வேற என்ன? என்று பதில் சொல்வார். பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டுவந்த பழக்கம், நம் பாரம்பர்யத்துக்கு உண்டு. சமீபத்தில், அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Association,) பழைய சோற்றின் பெருமைகளையும் பலன்களையும் பட்டியலிட்டிருந்தது. அதன்பிறகு விழித்துக்கொண்ட இன்றைய தலைமுறை, கூகுளில் பழைய சாதத்தைத் தேட ஆரம்பித்திருக்கிறது.  

பழைய சோறு

`பழைய சாதம்’, `பழைய சோறு’, `பழஞ்சோறு’, `ஏழைகளின் உணவு’ `ஐஸ் பிரியாணி’... என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த உணவு, அமெரிக்கர்களுக்கும் பிற நாட்டினருக்கும் வேண்டுமானால் அதிசயமாக இருக்கலாம். நம் முன்னோர்களுக்கு அன்றாடம் பார்த்துப் பார்த்துப் பழகிப்போன இதம் தரும் காலை உணவு. `மதியம் வடித்து, மீந்துபோன சாதத்தில் நீர் ஊற்றிவிடுவார்கள். அடுத்த நாள் அது பழைய சாதமாகிவிடும்’ என்று இதன் எளிய செய்முறையை விளக்கலாம்தான். `இதுகூடத் தெரியாதா எங்களுக்கு?’ என்று சிலர் கோபப்படவும்கூடும். ஆனால், எதைச் சொன்னாலும் செய்முறை விளக்கம் கேட்கும் இளைய தலைமுறைக்கு, பீட்சா, பர்கரிலேயே காலம் தள்ளிக்கொண்டிருக்கும் இளைய பட்டாளத்துக்காகவாவது இதைச் சொல்லித்தான் ஆகவேண்டியிருக்கிறது. பழைய சோறு கிடக்கட்டும்... சோற்றை ஊறவைத்திருக்கும் தண்ணீர் அத்தனை ருசியானது; எத்தனையோ மருத்துவக் குணங்களைக்கொண்டது. 

கிராமங்களில், வெயிலில் வாடி வதங்கி வருபவர்கள், உரிமையோடு கேட்கும் பானம் அது! `கொஞ்சம் நீச்சத்தண்ணி இருந்தா குடு தாயி...’ என்பார்கள். நீச்சத்தண்ணி என்றால், `பழைய சோற்றுத் தண்ணீர்’, `நீராகாரம்’ என்று அர்த்தம். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; குளிர்ச்சியோடு, எனர்ஜியையும் சேர்த்துத் தரும் அற்புத ஆகாரம்தான், நீராகாரம். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு அறிமுகமான காபி, நீராகாரத்தை மெள்ள மெள்ள ஓரங்கட்டிவிட்டது. அதோடு, இந்தப் பழைய சோற்றுத் தண்ணீர், மற்ற பானங்கள்போல அல்ல. பழச்சாறுகள், இளநீர், டீயைப்போல இதை பாட்டிலில் அடைத்துக் கையோடு எடுத்துப்போக முடியாது. சாதம் கலந்திருக்கும் என்பதால், புட்டிகள் ஏற்றவை அல்ல. இதுவும் தமிழர்கள் நீராகரத்தை மறந்துபோக ஒரு காரணம்.

தனியாக ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரூட்டவேண்டியதில்லை என்பது இதன் சிறப்பு. அடுக்களையில் ஓர் ஓரமாக பாத்திரத்தில் வைத்து மூடி வைத்தாலே போதும். காலையில், குளிரக் குளிர பழைய சோறு தயார். மண் பாத்திரத்தில் வைத்திருப்பது கூடுதல் சிறப்பு. தமிழகத்தில் மட்டும் அல்ல கேரளாவிலும் பாரம்பர்யம் மிக்க உணவு இது. தொட்டுக்கொள்ள ஒரு வெங்காயம், பச்சைமிளகாய் அல்லது ஊறுகாய் போதும். 

பழைய சோறு கஞ்சி

பழைய சோற்றில் லேசாக புளிப்புச் சுவை ஏற்படக் காரணமும் உண்டு. சாதத்தில் உருவாகும் லேக்டிக் ஆசிட் பாக்டீரியாதான் (Lactic Acid Bacteria) புளிப்புச் சுவையைத் தருகிறது. அதோடு, மிக அதிக அளவில் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவற்றை அள்ளி அள்ளித் தருகிறது இந்த அட்டகாசமான சாதம். உதாரணத்துக்கு ஒரே ஒரு விஷயம்... வடித்த சாதத்தில் 3.4 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதுவே, பழைய சாதமாகும்போது, இரும்புச்சத்தின் அளவு 73.91 மி.கிராமாக இருக்கும். ஆக, காலையில் சாப்பிட ஏற்ற சத்தான உணவு பழைய சோறு. 

அதே நேரத்தில், எல்லா உணவுக்கும் ஓர் கால அளவு உண்டு... இல்லையா? அது, பழைய சோற்றுக்கும் பொருந்தும். `அதிகபட்சம் பழைய சாதம் ஆக வேண்டும் என்பதற்காக, நீரூற்றிய 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடுவதுதான் ஆரோக்கியம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். பழைய சாதம் சாப்பிட்டால் தூக்கம் வரும், உடல்பருமன் உண்டாகும் என்பதெல்லாம் உண்மையல்ல; இது, எல்லா உணவுகளுக்குமே பொருந்தக்கூடியது. சர்க்கரைநோயாளிகள் மட்டும் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு அளவோடு சாப்பிடலாம். 

அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் பட்டியலிட்டிருக்கும் பழைய சோற்றின் நன்மைகள்... 

* உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இதில் இருக்கின்றன. 

* காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும். 

* இந்த உணவு, நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும்; உடல் சோர்வை விரட்டும். 

* ரத்த அழுத்தம் சீராகும்; உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச்செய்யும். 

ஃப்ரெஷ்ஷாக உணர வைக்கும்

* முழு நாளைக்கும் நம்மை ஃப்ரெஷ்ஷாக உணரவைக்கும். 

* ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும். 

* எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம். 

* புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும். 

* வனப்பைத் தரும்; இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும். 

பழைய சோறு இருக்கும் இடம், ஆரோக்கியம் குடியிருக்கும் இடம். தமிழர் பாரம்பர்யம் ஆரோக்கியத்தைப் போற்றிப் பாதுகாத்துவந்தது என்பதை நிரூபிக்கும் மற்றுமோர் ஆதாரம், பழைய சோறு. பாரம்பர்யத்தைப் போற்றுவோம்! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

2g...3g...4g...5g தெரியும்? அதன் வித்தியாசங்கள் என்ன தெரியுமா?

லக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே! இந்தியாவில் 4G நெட்வொர்க் சேவை முதன் முதலில் வெளிவந்தபோது இருந்த பரபரப்பைவிட, ரிலையன்ஸ் தனது ஜியோ சிம்களின் மூலம் இலவச 4G சேவையை அறிமுகப்படுத்தியபோது ஏற்பட்ட பரபரப்பு தான் அதிகம். இந்தியா முழுவதும் தற்போது பத்து கோடி மக்களுக்கு மேல் ஜியோ சிம் கார்டுகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். 4G என்பது மிக விரைவான நெட்வொர்க் சேவை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதற்கு முந்தைய 3G அல்லது அதற்கும் முன்னால் பயன்படுத்தப்பட்ட 2G நெட்வொர்க்குகளுக்கும், 4G நெட்வொர்க்கிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியுமா? G என்பது GENERATION என்கிற ஆங்கில சொல்லைக் குறிக்கும். அதாவது தலைமுறை! முதன்முதலாக அறிமுகமான 0G தொலைத் தொடர்பு சேவைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு தலைமுறை தொலைத் தொடர்பு சேவையும் தனித்தனி பெயரிடப்பட்டுக் குறிக்கப்பட்டன.  அதனைப் பற்றிய அலசலே இந்த தொகுப்பு.

5G

1G சேவை :

G என்கிற ஆங்கில எழுத்தைக் கண்டதும் அனைவரும் அது இன்டர்நெட் வசதியைக் குறிக்கிறது என்றே நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அது அவ்வாறு இல்லை. முதன் முதலில் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் சேவைதான் 1G சேவை. 1980-களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவையானது அனலாக் சிக்னல்கள் மூலம் ஒருவருடன் ஒருவர் ஒயர் இல்லாமல் பேசும் வசதியை மட்டுமே உருவாக்கிக் கொடுத்தது. அமெரிக்காவில் இந்த சேவை அறிமுகமானபோது 2.4 முதல் 14.4 kbps வேகத்தை மட்டுமே கொண்டதாக இருந்தது.  அன்று இந்த 1G சேவையைப் பயன்படுத்திய அலைபேசிகள் அளவில் மிகப் பெரியதாகவும், குறைந்த பேட்டரி சேமிப்புத் திறனை மட்டுமே கொண்டதாக இருந்தன.

2G சேவை :

2G மொபைல்

பின்லாந்து நாட்டில் 1991-ம் ஆண்டு தான் முதன்முதலாக 2G சேவை தொடங்கப்பட்டது. முதன் முதலில் ஒயர் இல்லாமல் இன்டர்நெட் வசதியைப் பயன்படுத்திய சேவை இதுதான். இதில் போனில் தொடர்பு கொண்டு பேசவும் செய்யலாம். 2G சேவையில் தான் குறுஞ்செய்திகளை அனுப்பும் SMS வசதி, படங்கள் மற்றும் காணொளியை அனுப்பும் MMS வசதி எனப் பல சிறப்பம்சங்கள் அறிமுகமாகின. இன்று நாம் பயன்படுத்தும் அதிவேகமான இன்டர்நெட் சேவைகளுக்கு விதை போட்டது இந்த 2G தான். இதில்தான் முதன் முதலாக சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டன. இப்போதிருக்கும் இன்டர்நெட் வேகத்தோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்த இன்டர்நெட் வேகத்தை கொண்டு விளங்கியது 2G சேவை.

3G சேவை :

2G சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமானதையடுத்து, அதிக இன்டர்நெட் வேகத்தின் தேவை அதிகமானது. இதன் காரணமாக சிக்னல்களை சிறு கூறுகளாகப் பிரித்து அனுப்பும் 'பாக்கெட் ஸ்விட்சிங் முறை' அறிமுகப்படுத்தப்பட்டு, 3G சேவை உருவானது. 3G சேவையிலும் பல சிறப்பம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் இன்டர்நெட் வேகம் இன்னும் அதிகமாக இருந்தது. நம் இந்திய நாட்டுக்கு மிக தாமதமாக தான் 3G வந்து சேர்ந்தது என்றாலும், ஜப்பான் நாட்டில் 2001-ம் ஆண்டே இந்த சேவை அறிமுகமானது. வீடியோ கான்ஃப்ரன்ஸ் வசதி, ஜி.பி.எஸ் வசதி ஆகியவை இதற்குப் பிறகுதான் சாத்தியமானது. ஒயர் இல்லாத வேகமான இன்டர்நெட் சேவையை உலகம் கண்டது 3G மூலமாக தான்.

4G சேவை :

4G Smartphones

3G சேவையைவிட அதிக இன்டர்நெட் வேகம் கொண்டதாக மேம்படுத்தப்பட்டு 4G சேவை உருவானது. முதன்முதலாக 2009-ம் ஆண்டு தென்கொரியாவில் இது அறிமுகமானது. அதிவேக இன்டர்நெட் வசதி, துல்லியமான வீடியோ கால்கள், நொடிப்பொழுதில் மெயில் அனுப்புவது என தொலைத் தொடர்பு உலகத்தையே மாற்றி அமைத்தது 4G சேவை. ஒரு நொடிக்கு 100 மெகா பைட் வேகம் வரை 4G சேவைகள் இன்று இயங்கி வருகின்றன. லைவ் ஸ்ட்ரீமிங், மொபைல் டி.வி என இன்டர்நெட் மூலம் நினைத்துப் பார்க்க முடியாத சேவைகளை அளித்தது 4G சேவை.

5G :

4G சேவை தான் வந்துவிட்டதே, இனி இன்டர்நெட் உலகில் சாதிக்க என்ன இருக்கின்றது? என்று எண்ணுபவர்களுக்கு பல ஆச்சரியங்களுடன் வரவிருக்கிறது 5G சேவை. இச்சேவை அறிமுகமான பிறகு, இன்டர்நெட் மூலம் நடக்கும் தகவல் பரிமாற்றத்தில் எழுபது விழுக்காட்டிற்கு மேல் வீடியோவால் தான் நடக்குமாம். மேலும், அனைத்து தகவல்களும் கிளவுட் வசதியில் சேமிக்கப்படும். எனவே, மெமரி கார்டு, பென் டிரைவ் போன்ற சாதனங்கள் தேவையற்றுப் போகும். மேலும், சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு என்பது சில நொடிகளில் நடந்து முடியும். சமீபத்தில் நடந்து முடிந்த உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G சேவை அறிமுகமாகியிருக்கிறது. இதன்மூலம் தகவல் தொலைத் தொடர்பில் ஒரு புதிய சாதனையே நிகழ்த்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மீத்தேனும் கிடையாது அணு உலையும் கிடையாது... அற்புத நாடு பூட்டான்! #Bhutan

இந்தியாவின் அருகில் உள்ள நாடு பூட்டான். ஆசியாவின் 'ஸ்விட்சர்லாந்து ' எனச் சொல்வார்கள். பணமும் பவிசும் இல்லாத எளிமை நிறைந்த மக்கள். அரசும் எளிமையானது.  மன்னர் ஆட்சி முறைதான். மக்கள் மகிழ்ச்சி மட்டுமே அரசின் இலக்கு. மீத்தேனும் கிடையாது... அணு ஆயுதமும் தயாரிக்காது... எந்த நாட்டுடனும் போர் புரிந்ததில்லை. விவசாயம்தான் முக்கியத் தொழில்.

மகிழ்ச்சியான மக்கள் நிறைந்த நாடு பூடான்

இந்த நாட்டில் மக்களின் மகிழ்ச்சியைப் பாதுகாக்க  'Happiness' என்ற தனித்துறை இயங்குகிறது. மேற்கத்திய கலாசாரத்தை விரும்பும் நம் நாட்டில், ஐபோன் இல்லையென்றால் வருத்தப்படுகிறார்கள்.  அதனை வாங்குவதற்கு பணத்தைப் புரட்டுகிறார்கள். பின்னர். அதனை பாதுகாக்க படாத பாடுபடுகிறார்கள். மனதுக்குப் பிடித்ததைச் செய்தாலும்கூட, மன அழுத்தமே நமக்கு ஏற்படுகிறது. 

பூட்டான் மக்களோ... விலை உயர்ந்த எந்த வாழ்க்கை முறைக்கும் ஆசைப்படுவதில்லை. எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்கள்.

பூடான்

மக்களிடம் பொய் , புரட்டு இல்லை. அடுத்தவர்களுக்கு முடிந்தவரை நன்மை செய்கிறார்கள். 'நாம் சந்தோஷமாக இருந்தால்தானே மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருக்க முடியும்' என்பதையும் புரிந்துகொண்டிக்கிறார்கள். இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை மட்டுமே வாழ்கிறார்கள். டி.வி. பார்ப்பதைக்கூட மக்கள் விரும்புவதில்லை. சமூக வலைதளங்கள் பக்கம்கூடப் போவதில்லை. ட்வீட், ரீட்வீட், ஃபேஸ்புக். லைக்ஸ் கமென்ட்ஸ் இதுவெல்லாம் நமது சந்தோஷத்தை பாதிக்கக் கூடிய விஷயமாம். பூட்டான் மக்கள் பார்வையில் சமூக வலைதளங்கள் ஒரு 'நான்சென்ஸ்'!.. இன்னொரு விஷயம் தெரியுமா? இந்த நாட்டு மக்கள் உழைப்பைக் கொட்டிக் கொடுக்கத் தேவையே இல்லை. தமிழகத்தில் மீத்தேன் திட்டத்தையும் அணுஉலை திட்டங்களையும் கொண்டு வரும் மத்திய அரசு, பூட்டானில் நீர்மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்கிறது. 

பூடான்

அதனால், கடந்த சில ஆண்டுகளாக பூட்டான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துக்கொண்டே வருகிறது. தங்கள் நாட்டில் குவிந்து கிடக்கும் இயற்கை வளத்தைக் காப்பதோடு, நாட்டின் வளத்தை பொருளாதாரத்துக்கு உகந்த வகையில் எப்படி மாற்ற முடியும் என்பதில் பூட்டானியர்கள் மிகத் தெளிவு. சுற்றுலா முக்கியத் தொழில். இந்த நாட்டில் நீர் மின் திட்டத்தில் முதலீடு செய்யும் இந்தியா, அங்கே மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி கேட்டால், தூதரக உறவையே முறித்துக்கொள்ளும் பூட்டான்.

நாட்டில் 50 சதவீத வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்டவை. காடுகளை அழித்து விட்டு இஷ்டத்துக்கு கட்டடங்கள் கட்டிவிட முடியாது. பொதுவாகவே புத்த மதம் அமைதியை விரும்புகிறது. காடுகள் மட்டும்தான் அமைதியைத் தர முடியும் என்பது பூட்டானின் நம்பிக்கை. எங்கு நோக்கினாலும் வனச் சரணாலயங்கள் இருக்கின்றன. பூட்டானில் 'விலங்குகள் கொலை' பற்றியெல்லாம் யோசித்துக்கூட பார்த்துவிட முடியாது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விஷயத்தையும் பூட்டானியர்கள் செய்துவிடுவதில்லை. ஒரு திட்டத்தால் மக்கள் மகிழ்ச்சி பாதிக்கிறதா... அந்த விஷயத்தை அரசு யோசித்துக்கூட பார்ப்பதில்லை. 

பூடான்

பூட்டான் மக்கள் தங்களைத் தாங்களே சந்தோஷமாக வைத்துக் கொள்கிறார்கள். அரசாங்கம் மக்களின் சந்தோஷத்தை, மகிழ்ச்சியை ஆராய்வதற்காக ஜிடிபி போல Gross National Happiness (GNH) என்ற அளவீடு வைத்திருக்கிறது.. ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும், 'நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா...' என்ற கேள்வி கண்டிப்பாக எழுப்பப்படும். ஆய்வின்படி, கடந்த 2015ம் ஆண்டு, 35 சதவீத மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் 47.9 சதவீத மக்கள் மிதமான மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். வெறும் 8.08 சதவீத மக்கள்,  'நாங்கள் சந்தோஷமாக இல்லை' எனக் கூற, அதிர்ந்துவிட்டதாம் பூட்டான் அரசு. கவலையில் உள்ள மக்களையும் மகிழ்ச்சியாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

பூடான்

பூட்டான் இயற்கையாகவே மலைகள் சூழ்ந்த நாடு. நாட்டில் 70 சதவீதம் காடுகள். ஆசியாவிலேயே வனம் நிறைந்த நாடு இதுதான். விலங்கினங்களும் ஏராளம். அடிக்கடி அவற்றை எதிர்கொள்ளவும் செய்கிறார்கள். அந்த வழக்கம், பூட்டான் மக்களை துணிவுமிக்கவர்களாகவும் மாற்றியிருக்கிறது. அடிக்கடி வனங்களுக்குள் சுற்றுலா செல்வதும் மக்களின் பழக்கம். இதனால், ஒவ்வொரு முறையும் மனம் புத்துணர்வு பெறுகிறதாம்.

பூட்டானை பொறுத்தவரை மக்களும் மன்னரும் ஒன்றுதான். வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர், பூட்டானுக்கு ஒரு முறை விசிட் செய்துள்ளார். திம்புவில் ஒரு இடத்தில் குழந்தைகளுடன் இளைஞர் ஒருவர் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.  அவர் பூட்டான் இளவரசர் எனத் தெரிந்து ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார்.  மன்னர் வீட்டுக் குழந்தைகளும் சமானியர்களாகவே வாழ்கின்றனர். பூட்டான் அரச குடும்பத்தினர் சாதாரணமாக சாலையில் நடந்து போகலாம். தாங்கள் விரும்பிதைச் செய்யலாம். மக்களும் மன்னரைக் கண்டு வியப்பதில்லை. மன்னரும் மக்களை அணுகத் தயங்குவதில்லை. 

பூடான்

அடுத்தபடியாக உறங்குவதிலும் பூட்டான் மக்கள் வஞ்சனை வைப்பதில்லை. நல்ல உறக்கம் நம்மை மகிழ்ச்சியாக இருக்க வைக்கும். நமது பணித்திறனை அதிகரிக்கும்.. அதனால் 8 மணி நேரம் நிம்மதியாக உறங்குகின்றனர்.  பூட்டான் உலகமயமாக்கலுக்கெல்லாம் இன்னும் பலியாகாத நாடு. வெளிநாட்டுத் தலைவர்கள் பூட்டானுக்குச் சென்றால், அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளுடன் பூடான் கலாசார உணவான செவ்வரிசி உணவும் கண்டிப்பாகப் பரிமாறப்படும். 

 கடந்த 2008ம் ஆண்டு பூட்டானில் முதன்முறையாக அதிபர் பதவிக்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. நம்ம ஊரு அரசியல்வாதிகள், 'உங்களுக்கு அதைச் செய்வேன்... இதைச் செய்வேன்' என அள்ளி விடுவார்கள். ஆனால், பூட்டான் தேர்தலில் போட்டியிட்ட தலைவர்கள் அளித்த வாக்குறுதி என்ன தெரியுமா?

'உங்களின் மகிழ்ச்சி பாதுகாக்கப்படும்!'

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

காற்றில் பரவும் நஞ்சு - காணொளி

உலக சுகாதாரத்தை பாதிக்கும் மிகவும் மோசமான அச்சுறுத்தலாக காற்றின் மாசு உருவாகியிருப்பதாக உலக சுகாதார நிறுவன தலைவர் எச்சரித்துள்ளார்.

எச் ஐ வி மற்றும் எபோலாவை விட மோசமான காற்று என்பது ஒரு பெரிய பரந்துபட்ட பிரச்சினை என்று மார்க்கிரட் ஷான் பிபிசியிடம் கூறியுள்ளார்.

பெரிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மரணங்களுக்கு விஷத்தனமையுடைய மாசு காரணமாகின்றது.

பிபிசி இந்த வாரத்தில் தரவுள்ள தொடர்ச்சியான இவை குறித்த அறிக்கைகளில் முதலாவது இது.

நமது சுவாசத்தை மேம்படுத்துவதற்கான வழியை இது ஆராய்கிறது. இதில் போக்குவரத்தால் ஏற்படும் மாசடைதலை குறைப்பதற்கான வழிகளை இங்கு ஆராய்கிறோம்.

  • தொடங்கியவர்

ஃபேஸ்புக்கில் முதன்முறையாக 'Dislike' ஆப்ஷன்...!

FB

வெகு நாட்களாக ஃபேஸ்புக் பயனர்கள் எதிர்பார்க்கும் அப்டேட் என்றால் அது 'Dislike' ஆப்ஷன்தான். ஃபேஸ்புக்கில் சமூக வலைதளங்களில் போடப்படும் ஒரு போஸ்டுக்கு 'டிஸ்லைக்' கொடுப்பதற்கான அப்டேட் வராதா என்று பலர் நினைத்திருக்கலாம். ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இது தெரியாமல் இல்லை. எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று இதுநாள் வரை அதற்கான அப்டேட் கொடுக்காமல் இருந்தார்கள். தற்போது, 'மெஸன்ஜர்' அப்பில் மட்டும் இந்த வசதியை அறிமுகம் செய்யவுள்ளது ஃபேஸ்புக்.

உலக அளவில் கிட்டத்தட்ட 100 கோடி பேர் மெஸன்ஜர் பயன்படுத்துகிறார்கள். மெஸன்ஜரில் இந்த 'டிஸ்லைக்' அப்டேட் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்து ஃபேஸ்புக் நிறுவனம், ஃபேஸ்புக் சமூக வலைதளத்திலும் அந்த அப்டேட்டை கொடுக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

சில மாதங்களுக்கு முன்புதான், ஃபேஸ்புக்கில் பதியப்படும் ஒரு போஸ்ட்டுக்கு, பல வகை 'எமோஜி' ரியாக்‌ஷன் கொடுக்கும் வண்ணம் அப்டேட் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், 'டிஸ்லைக்' ரியாக்‌ஷன் அப்டேட் கொடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இது பற்றி ஃபேஸ்புக் நிறுவனம், 'நாங்கள் மெஸன்ஜரை பயன்படுத்துவதற்கு இனிமையாகவும் சந்தோஷமாகவும் இருக்க பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த புது அப்டேட்டும் அதைப் போன்ற ஒன்றுதான்.' என்று தெரிவித்துள்ளது. 

விரைவில், ஃபேஸ்புக்கில் பதியப்படும் ஒரு போஸ்டுக்கு 'டிஸ்லைக்' கொடுக்க முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஹார்ட் அட்டாக் வரப்போகிறதா..? கண்டுபிடிக்கும் 10-ம் வகுப்பு மாணவரின் அசத்தல் கருவி!

`மாரடைப்பு...’ உலகம் முழுக்க நிகழும் மரணங்களில் பெரும்பாலானவற்றுக்கு இதுதான் காரணம். யாருக்கு, எந்த வயதினருக்கு, எப்போது வரும் என்று சொல்ல முடியாத இந்த இதய வலி என்கிற எமன், அமைதியாக உயிரைப் பறித்துச் சென்றுவிடும். `இரவில் உறங்கப் போனவர், காலையில் எழுந்திருக்கவில்லை’ எனச் சொல்லப்படும் பெரும்பாலான இறப்புகள் நிகழ்வது ஹார்ட் அட்டாக்கால்தான் (Silent Heart Attack). உலகம் முழுக்க இருக்கும் மருத்துவ நிபுணர்கள், மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் என வலியுறுத்துபவை... இதயத்தில் வலி ஏற்படுதல், மூச்சுவிட சிரமப்படுவது, அதீத வியர்வை... உள்ளிட்டவை. 

ஹார்ட் அட்டாக்

சத்தமே இல்லாமல் உயிரைப் பறிக்கும் மாரடைப்பு மரணங்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருவது, உடனே நாம் கவனிக்கவேண்டிய, கவலைப்படவேண்டிய அபாயம். இந்த அபாயத்தைக் கண்டறிய ஒரு புதுமையான கருவியை உருவாக்கி, மருத்துவ உலகையே திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறார் ஆகாஷ் மனோஜ் என்ற மாணவர். இவர் படிப்பது 10-ம் வகுப்பு, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது நாம் பெருமைகொள்ளவேண்டிய தகவல்கள்.

ஹார்ட் அட்டாக்

ஆகாஷ் மனோஜ் ஒரு புதிய தொழில்நுட்பக் கருவியை வடிவமைத்திருக்கிறார். இதைக்கொண்டு மாரடைப்பு வருவதற்கான அபாயத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம். இந்த முறையில், உடலில் எங்கேயும் துளையிட வேண்டிய (Non-invasively) அவசியம் இல்லை என்பதுதான் இதன் சிறப்பே. இந்தக் கருவி முக்கியமாக கிராமப்புற மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். மாரடைப்பு வருவதைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு முன்கூட்டியே சிகிச்சை கொடுக்க உதவியாக இருக்கும். 
 
சரி... மாரடைப்பு எப்படி ஏற்படுகிறது? பொதுவாகச் சொல்லப்படும் காரணம், இதயத்தின் தசைகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் வெகுவாகக் குறைந்து போவது அல்லது முழுமையாக நின்றுபோவது. இதயநோய்களின் உச்சக்கட்டம்தான் மாரடைப்பு. இதைக் கண்டுபிடிக்க ஒரு கருவியை வடிவமைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஆகாஷ் மனோஜை மனதாரப் பாராட்டலாம். 

ஆகாஷ் மனோஜ் இப்போது இருப்பது நியூடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ராஷ்ட்ரபதி பவனில். ஆண்டுதோறும் புதிய திறமைசாலிகளை ஊக்குவிக்கும்விதமாக, 2013-ம் ஆண்டிலிருந்து இங்கே ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்குப் பெயர் `இன்னோவேஷன் ஸ்காலர்ஸ் இன்-ரெசிடென்ட்ஸ் புரோகிராம்’ (Innovation Scholors In-resident Programme). இந்தத் திட்டத்தின் கீழ் ஆகாஷ் மனோஜ், `மாரடைப்புக்கு துளையிடா முறையில் சுய பரிசோதனை செய்வது’ (Non Invasive self diagnosis of silent heart attack) என்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்காக கௌரவிக்கப்பட்டிருக்கிறார். 

``இன்றைய நாட்களில் மாரடைப்பு என்பது இறப்பு வரை ஒருவரைக் கொண்டு போய்விடும் ஆபத்தான ஒன்று. பலபேருக்கு மாரடைப்பு வருவதற்கான அறிகுறியே தெரிவதில்லை. அவர்களைப் பார்த்தால் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பதாகவே நமக்குத் தோன்றும். என் தாத்தா அப்படித்தான் மிக ஆரோக்கியமாகவே இருந்தார். திடீரென்று ஒருநாள் அவருக்கு மாரடைப்பு வந்து நிலைகுலைந்து போனார்’’ என்கிற ஆகாஷுக்கு இந்த நிகழ்வுதான் மாரடைப்பைக் கண்டுபிடிக்க ஒரு மாதிரிக் கருவியை உருவாக்கி, அதை ராஷ்டிரபதி பவனில் காட்சிக்கு வைக்கும் அளவுக்கு தூண்டுதலாக இருந்திருக்கிறது. 

துளையிடா முறையில் சுய பரிசோதனை செய்யும் மாதிரிக் கருவி

ஆகாஷ் மனோஜின் மாதிரிக் கருவியின் மூலம் , ஒரு சிறு துளை கூடப்போடாமலேயே மாரடைப்பை ஏற்படுத்தும் ரத்தத்திலுள்ள  எஃப்.ஏ.பி.பி.3 (Fatty Acid Binding Protein -3 ) என்ற வேதிப்பொருளின் அளவினைக் கண்டறியலாம். எஃப்.ஏ.பி.பி.3 என்பது கொழுப்பு அமிலங்களுடன் சேர்ந்திருக்கும் ஒரு வகையான புரோட்டீன் ஆகும். இதன் அளவை வைத்து இதயத் தசைகளுக்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டத்தின் அளவையும் கண்டறிய முடியும். இந்த எஃப்.ஏ.பி.பி.3  மற்றும் அல்புமின் புரோட்டின் கரைசலோடு, சிலிக்கான் ஜவ்வையும் (Silicone Membrane)  உள்ளடக்கியதுதான்  மனோஜின் கருவி. சிலிக்கான் ஜவ்வு, தோலில் உள்ள ரத்த நுண்குழாய்களைக் (Capillaries) காண்பிக்கும். அல்ட்ரா வயலெட் (Ultra Violet) கதிர்களை தோலின் மீது செலுத்தும்போது ரத்தத்திலுள்ள எஃப்.ஏ.பி.பி.3  அளவை கருவியில் பொறுத்தப்பட்டுள்ள சென்சாரின் உதவியுடன் தெரிந்துகொள்ளலாம். 

எளியவர்கள், அதிகம் படிப்பில்லாதவர்கள்கூட இந்தக் கருவியைப் பயன்படுத்தலாம். தங்களுக்கு மாரடைப்பு அபாயம் இருக்கிறதா என்பதை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். தேவைப்பட்டால் மருத்துவர்களிடம் போய் சிகிச்சை பெறலாம். இதயநோய் நிபுணராக வேண்டும் என்பது மனோஜின் விருப்பம். விருப்பம் நிறைவேற ஆகாஷ் மனோஜை மனமார வாழ்த்தலாம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

எத்தியோப்பிய பச்சை மாமிச விருந்து: அறுசுவையா? ஆபத்தா?

சமைக்காத பச்சை மாமிசம் என்பது எத்தியோப்பியர்களின் விருப்ப உணவு.

ஆனால் அது ஆபத்தானது என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கிறார்கள்.

உணவு விடுதிகள் முதல் கொண்டாட்ட விருந்துகள் வரை பச்சை மாமிச உணவு எத்தியோப்பியாவில் மிகவும் பிரபலம்.

இந்த பழக்கம் எப்படி தோன்றியது என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் இல்லை.

போர்க்காலத்தில் இராணுவத்தினர் சமைக்க முடியாமல் பச்சை மாமிசம் சாப்பிட நேர்ந்ததே இந்த பழக்கம் உருவாக காரணமாக இருக்கலாமென கருதப்படுகிறது.

  • தொடங்கியவர்

இத்தனை பெருமைகளை உடையது ஐ.என்.எஸ்.விராட்! #INSViraat

இந்தியாவின் இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விராட் இன்றுடன் தனது கடற்பயணத்தை முடித்துக் கொள்கிறது. அந்த கப்பலின் நீண்ட நெடிய பயணத்தை பார்க்கலாம். 

இந்த விமானம் தாங்கிக் கப்பல் ஐஎஸ்எஸ் விராட்

ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலை பிரிட்டன்தான் கட்டியது. இந்த கப்பல் பிரிட்டன்- இந்தியா என இரு நாடுகளுக்கும் சேர்த்து 56 வருடங்கள் உழைத்திருக்கிறது. 

இரண்டாம் உலகப் போருக்கு முன்னரே இந்தக் கப்பல் கட்டப்படத் தொடங்கப்பட்டு விட்டது நீராவியில் இயங்கும் பழமையானக் கப்பல். பயணத்தின் போது, கப்பலினுள் வெப்பம் 60 டிகிரி செல்சியஸ் வரை  அதிகரிக்கும் என விராட்டில் பணியாற்றியவர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

1959ல்- பிரிட்டன் கடற்படையில், ஹெச்.எம். எஸ். ஹெர்மஸ் என்ற பெயருடன் இந்தக் கப்பல் இணைந்தது. 

கடந்த 1984ம் ஆண்டு பிரிட்டன் கடற்படை ஹெர்மஸ் கப்பலுக்கு ஓய்வளித்தது. அந்தக் கப்பலை பழுதுபார்த்து இந்தியா வாங்கியது. ஐ.என்.எஸ். விராட் என பெயர் சூட்டப்பட்டு1987ம் ஆண்டு மே 12ம் தேதி, இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. 

ஐ.என்.எஸ். விராட் கப்பல் கிட்டத்தட்ட 2,250 நாட்கள் கடற்பயணம் மேற்கொண்டிருக்கிறது. சுமார் 5,88,228 நாட்டிகல் மைல் (கிட்டத்தட்ட 11 லட்சம் கி.மீ) பயணம் செய்திருக்கிறது. இது  27 முறை உலகை சுற்றி வந்ததற்கு சமம். 

இந்திய கடற்படையில் 29 ஆண்டுகள் ஐ.என்.எஸ் விராட் பணியாற்றியுள்ளது. இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெறும் கடைசி பிரிட்டன் தயாரிப்பு கப்பல் இது.

இலங்கைக்கு இந்திய அமைதிப்படை சென்ற போது,  ஐ.என்.எஸ். விராட் பணியாற்றியது. பிரிட்டன் கடற்படையில் பணியாற்றிய போது, பாக்லாந்து தீவுகளுக்காக அர்ஜென்டினாவுடன் இங்கிலாந்து போரிட்டது. அந்த போரில் ஹெச்.எம். எஸ். ஹெர்மஸ் திறம்பட பணியாற்றியது. 

ஐ.என்.எஸ். விராட் கப்பலில் Sea Harriers, White Tigers ரக போர் விமானங்கள் Seaking 42B, Seaking 42C and Chetak  ரக ஹெலிகாப்டர்கள் இடம் பெற்றிருந்தன. 

இதில் Sea Harriers போர் விமானத்துக்கு ரன்வே தேவையில்லை. நின்ற இடத்தில் இருந்து அப்படியே வானில் பறக்கும் தன்மை கொண்டது. கடந்த 2016ம் ஆண்டு Sea Harriers போர் விமானங்கள் கடற்படையில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டது. இதுவும் பிரிட்டன் தயாரிப்புதான். 

ஐ.என்.எஸ். விராட்டில் இருந்து போர் விமானங்கள் 22,034 மணி நேரம் பறந்துள்ளன. 

கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த சர்வதேச போர்க்கப்பல் பயிற்சியில் ஐஎன்ஸ் விராட் பங்கேற்றது. 

உலகின் மிகப் பழமையான விமான தாங்கிக் கப்பல் என்ற வகையிலும் கடற்படையில் நீண்ட காலம் சேவை புரிந்த கப்பல் என்ற வகையிலும் ஐ.என்.எஸ். விராட் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுகிறது. 

விராட்

கடந்த 2016ம் ஆண்டு ஜுலை மாதம் மும்பையில் இருந்து கொச்சிக்கு ஐஎன்ஸ் விராட் கடைசியாக அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டது. பின்னர், கொச்சியில் இருந்து இழுவைக் கப்பல் மூலம் இழுத்து மும்பை கொண்டு வரப்பட்டது. 

மும்பை கப்பல் கட்டும் துறையில் இன்று மாலை 5.45 மணிக்கு நடைபெறும் விழாவில் கப்பலுக்கு  விடை கொடுக்கப்படுகிறது. நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்திய கடற்படைத் தளபதி எஸ். லம்பா, பிரிட்டன் கடற்படைத் தளபதி அட்மிரல் பிலிப் ஜோன்ஸ் மற்றும் ஐஎன்எஸ் கப்பலில் காமெண்டராக பணியாற்றிய 22 கடற்படை அதிகாரிகளில் 21 பேர் பங்கற்கின்றனர்.

இந்த கப்பலை வாங்கி மியூசியமாக மாற்ற ஆந்திர அரசு முயற்சித்தது. ஆனால், அதற்கு 1000 கோடி தேவைப்படும் என்பதால் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.  

விராட்

நிறுவனங்கள்  வாங்க முன்வராத பட்சத்தில், குஜராத் மாநிலம் ஆனந், கொண்டு செல்லப்பட்டு  4 முதல் 6 மாதங்களுக்குள் கப்பலை உடைக்கத் திட்டமிட்டுள்ளனர். 

கடற்படை உலகில், ஐஎஸ்எஸ் விராட்டின் செல்லப் பெயர் 'Grand old lady'.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

915 சில்லறைக் காசுகளை விழுங்கிய ஆச்சரிய ஆமை

COMPRESSED_23521.jpg

தாய்லந்தின் கிழக்கு கடற்கரையை ஒட்டி இருக்கும் சிறு நகரம் "சி ராச்சா". இங்கிருக்கும் ஒரு குளத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறது "பேங்க்" (Bank) என்கிற பெண் ஆமை. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மூடநம்பிக்கையின் காரணமாக குளத்தில் சில்லறைக் காசுகளை வீசி செல்கின்றனர். வீசப்படும் காசுகளை பல நாட்களாக "பேங்க்" விழுங்கி வந்திருக்கிறது. 

சமீபத்தில் உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்ட பேங்கை பரிசோதித்த போது தான் இந்த விஷயம் மருத்துவர்களுக்குத் தெரிந்தது. உடனடியாக, 5 பேர் கொண்ட மருத்துவக் குழு பேங்கிற்கு 4 மணி நேரம் ஆபரேஷன் செய்து, 915 சில்லரைக் காசுகளை வெளியில் எடுத்தனர். அடுத்த 2 வாரங்களுக்கு நீராகாரம் மட்டுமே பேங்கிற்கு தரப்படும். கிட்டத்தட்ட 5 கிலோ அளவிற்கான எடை வயிற்றிலிருந்து நீக்கப்பட்டதால், சுகமாக நீந்திக் கொண்டிருக்கிறது பேங்க். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

இது நல்லாதான் இருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.