Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

165953_662294880539724_66828603432458922

735173_662294873873058_67840538188817843

10620631_662294883873057_641113791323823

bicycle-highway-autobahn-germany-2

சைக்கிள் நெடுஞ்சாலை!
சைக்கிள்கள் செல்வதற்காகவே ஜெர்மனியில் முதன் முறயாக 5 கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலை அமைக்கபட்டுள்ளது.

எதிர் காலத்தில் இது 100  கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலை ஆக விஸ்தரிக்கப்படும்.

Hamm இல் இருந்து   Duisburg வரை இது அமையும். 10 நகரங்கள் ஊடாக பயணிக்கலாம்.

இந்த திட்டம் நிறைவேறும்போது ஒரு நாளைக்கு 50 000 கார்கள் குறைவாக இருக்கும் தெருக்களில் என்று எதிர் பார்க்கிறார்கள்.

4 பல்கலைகழகங்களை ஊடறுத்து அந்த பாதை அமையும்.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஸ்டார்ஸ் 2015

 
one_2679178f.jpg
 

இவர்கள் கடந்த ஆண்டின் ‘செய்தி நாயகர்’கள். இவர்களைப் பற்றிய ‘சுருக்’ அறிமுகம் இங்கே...

1_2679136a.jpg

6_2679134a.jpg

2_2679137a.jpg

3_2679138a.jpg

4_2679139a.jpg

5_2679140a.jpg

  • தொடங்கியவர்

இதுதான் சோம்பேறி நாயா

 

  • தொடங்கியவர்

1346_662310567204822_5159303167021306774

இயற்கையின் நடனம்!

  • தொடங்கியவர்

சொல்வனம்

ஈரம் காய்ந்த குப்பைகள்

குடிக் கடையிலிருந்து வீட்டுக்குச் செல்ல
ஆயத்தமாகிறான் அவன்
தெருவின் ஒவ்வோர் அடியையும்
திறந்துவைக்கிறான்
அவனைப் பின்தொடர்ந்து வரும்
தவளைக் குஞ்சிற்காக
பாதம் படும் இடமெல்லாம்
ஏதேதோ அகப்படுகிறது
முக்கால்வாசி ஈரம் காய்ந்த குப்பைகளே இருந்தன
பெரிதும் சிறிதுமாய் சில
புதிதுமாய் பழையதுமாய் சில
முடிந்தவரை கால்களில் தள்ளிவிட்டு நடக்கத் தொடர்கிறான்
சிறிது தூரம் கடந்தவுடன் ஆள் வருகிறது
அவனைக் கூட்டிச்செல்ல
மேலும் போக வழி தெரியாமல்
கத்திக்கொண்டிருந்தது தவளைக்குஞ்சு.

  • தொடங்கியவர்

p36e.jpg

பாலிவுட்டின் கலெக்‌ஷன் குயின் தீபிகா படுகோன் `பாஜிராவ் மஸ்தானி' படத்துக்குப் பிறகு எந்தப் படமும் ஒப்புக் கொள்ளவில்லை.  `அடுத்தடுத்து படம் நடிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்குக் கிடையாது. எப்போதும் பிஸியாக இருக்க வேண்டும் என, என் தேதிகளை நிரப்ப விரும்பவில்லை. கேட்கும் கதைகளில், எது என்னைச் சந்தோஷப்படுத்துகிறதோ, அதைத்தான் தேர்வுசெய்வேன். அதற்காகக் காத்திருக்கிறேன்’ என்கிறார் தீபிகா. கோலிவுட்டுக்கு வந்துட்டுப்போம்மா தீப்ஸ்!

p36c.jpg

மெஸ்ஸி, ரொனால்டோ, உசேன் போல்ட்... என எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு 32 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் சிறந்த விளையாட்டு வீரர் விருதைப் பெற்றிருக்கும் முதல் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். `2015-ம் ஆண்டில் பங்கேற்ற 56 போட்டிகளில் 53 போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கும் செரீனாதான் உலகின் நம்பர் 1 வீரர். 34 வயதில் இதுபோன்ற சாதனைகள் அசாத்தியமானது' என புகழ்ந்திருக்கிறது `ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட்' பத்திரிகை. பெண் சிங்கம்!

  • தொடங்கியவர்
வலைபாயுதே V 2.0
 

facebook.com/nelsonxavier08: முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாட்ஸ்அப் ஆடியோ வந்ததும், அதை ஒளி(லி)பரப்புவது பற்றி நிறையக் குழப்பங்கள். எந்தவித அதிகாரபூர்வத் தகவல்களோடும் அந்த ஆடியோ வெளியிடப்படவில்லை. மாநிலச் செய்தித் தொடர்பு துறையோ அல்லது அ.தி.மு.க தலைமை அலுவலகமோ, ஆடியோவுடன் எந்தச் செய்திக் குறிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், அரசின் மாநிலச் செய்தித் தொடர்பு அலுவலக முகவரியில் இருந்து, FTP மூலமாக வெறும் ஆடியோ மட்டும் அனுப்பப்பட்டிருந்தது.

வழக்கமான அறிக்கை / கடிதம் / அரசு வீடியோ / புகைப்படம் / குறைந்தபட்சம் ஜெயா டி.வி மைக்குடனான பேட்டி என எதுவும் இல்லாமல் வெளியாகியிருந்தது ஆச்சர்யமான ஒன்று.

வாட்ஸ்அப்பில் அரசின் அறிக்கையை /கோரிக்கையை வெளியிடுவது சட்டபூர்வமாகத் தொடங்கியிருக்கிறதா, அதன் உறுதித்தன்மை என்ன... இப்படி நிறையக் கேள்விகள்.

எல்லாவற்றையும்விட... `இப்படி இறங்கிவந்து இந்த டோனில் பேசியிருப்பது நம் முதலமைச்சர்தானா?’ என்ற சந்தேகம்தான் மிகப் பெரியதாக இருந்தது.

p109a.jpg

facebook.com/priya.sivashankaran: மிகச் சிறந்த பழிவாங்கல் என்பது, சனி-ஞாயிறுகளில் காலங்கார்த்தால எழுந்துகொள்ளும் குழந்தைகள், நம்மையும் அப்போதே எழுப்பி
விடுவதுதான்!

facebook.com/kirthikat: உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஆகம விதிகளில் பெண்களின் நிலை என்ன? உலகின் மிகப் பெரும் பான்மையான எல்லா மதங்களிலும் வேறுபாடு இல்லாமல் தாழ்த்தப்படுவது பெண் சமூகம்தான்!

facebook.com/elango.kallanai: `ஒரு படி நெல்லுக்கு மூணு படி உப்பு’னு ஊருக்குள் விற்றுக்கொண்டு வருகிறார்கள். எப்போதும் காலையில் இதை எங்க ஊரில் கேட்க முடியும். நல்ல பண்டமாற்றுதானே! கடல்புற மக்கள் விவசாய மக்களிடம் கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற எண்ணம் ஏற்படும். ஆனால், ஒரு படி யூரியா - டி.ஏ.பி உப்புக்களை கொடுத்து, எத்தனை படி நெல்லை நம்மிடம் இருந்து கொள்ளையடித்துக்கொண்டிருந்தன இந்த கம்பெனிகள். நிலம் பாழாகியும், புகையால் சீரழிந்தும் இன்னும் மக்கள் பெரிதாக மாறவில்லை. சம்சாரிகளுக்கு இந்த உப்புக்களை மதச்சடங்குகளுக்கு ஒப்பாக மாற்றிவைத்துள்ளார்கள். முறையற்ற பண்டமாற்றத்தை ஒழிக்க, ஒரு தலைமுறையினர் போராட வேண்டும். உப்பு என்றால் உப்பு மட்டுமே இருக்க வேண்டும். அதுதான் நமக்கு விடப்பட்ட சவால்!

twitter.com/MrElani: எனக்குத் தெரிஞ்சு தமிழ்நாட்டுல ஃபுட்பால் ஆடுற ஆளுங்க... நார்த் மெட்ராஸ், கோயம்புத்தூர், ராஜ்கிரண் ஃபேமிலி!

twitter.com/vinodhkrs: வாழ்க்கையில எவ்ளோ பெரிய ஆளானாலும், இட்லியை மட்டும் ஸ்பூன்ல எடுத்துச் சாப்பிடுற பழக்கத்துக்கு ஆளாகிடக் கூடாது ஆண்டவா!

twitter.com/rajathinksu: நம் நேர்மையின்மைக்கும் ஒழுங்கின்மைக்கும் நாம் தேடும் பரிகாரம்தான் சகாயம்!

twitter.com/ThirutuKumaran:  வீடு வரை WiFi... வீதி வரை 3G... காடு வரை 2G... கடைசி வரை No Signal!

p109b.jpg

twitter.com/Sakthivel_Talks: தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்டும் அல்ல... டீக்கடைகளில் தரப்படும் தேநீரின் அளவும் குறைந்துகொண்டே போகிறது. அண்ணே... கொஞ்சம் தண்ணியாச்சும் ஊத்தித்தாண்ணே!

twitter.com/thoatta: ஸ்மைலிகள் அதிகமாகிருச்சு; ஆனா, சிரிப்புகள் குறைஞ்சிருச்சு :(

twitter.com/MrElani : டி.ஆர்-ட்ட பிடிச்ச விஷயமே, எந்த ஒரு பிரச்னையிலும் தன் மகனை விட்டுக் கொடுத்தே பேசினது இல்லை. ஃபாதர்னா ஃபாதர்... அப்டி ஒரு ஃபாதர்!

twitter.com/arattaigirl: `என்னைப் பிடிக்குமா?’ என்பதில் தொடங்கி, `என்னைத் தவிர வேறு யாரையும் உனக்குப் பிடிக்கக் கூடாது’ என்பதில் பயணிக்கிறது காதல்!

twitter.com/karthiykj: அம்மாவின் ஆணைக்கு இணங்க, சென்னை ஃபுட்பாலில் வெற்றி பெற்றது #ISL

twitter.com/withkaran: கமல்: ஏது... ‘எந்திரன்’ பட்ஜெட் 350 கோடியா? இவனைவெச்சு எப்படியும் `மருதநாயகம்’ எடுத்துப் புடணும். லைகா போற பக்கம்லாம் ஆளைப் போடு!

p109c.jpg

twitter.com/krajesh4u: `சாம்பார்ல உப்பு இல்லை’னு சொன்னதுக்கு, `ஏன்... நீ இதுவரை உப்புனது போதாதா?’னு ரிப்ளை. நாட்டுல யாருக்குமே சகிப்புத் தன்மை இல்லை!

twitter.com/Manmathan033: `நாயே...’னு கூப்பிட்டா நாலு பேரு திரும்பிப் பார்க்கிறாங்க... நாய் மட்டும் அது பாட்டுக்குப் போவுது!

p109d.jpg

twitter.com/kaviintamizh: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்... பிறகு, போதிய ஆதாரம் இல்லை என சூதே வெல்லும்!
 

  • தொடங்கியவர்
தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் - தெரிந்ததும், தெரியாததும்!
 
05-1393999264-originalnandi.jpg
ராஜராஜன் காலத்து நந்தி மாமன்னன் ராஜராஜனால் உருவாக்கப்பட்ட இந்த நந்தி, வராகி அம்மன் சன்னதி அருகில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது நந்தி மண்டபத்தில் இருக்கும் ஒற்றைக்கல் நந்தி நாயக்கர்களால் உருவாக்கப்பட்டது.
 
  • தொடங்கியவர்

முகங்கள் 2015

 
p_2679039f.jpg
 

2015-ம் ஆண்டின் 10 முகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். இந்தப் பட்டியல் சாதனையாளர்கள் அல்லது தலைசிறந்தவர்கள் அல்லது வெற்றியாளர்கள் என்பன போன்ற பட்டியல் அல்ல; கடந்த ஆண்டில் தாக்கங்களை உருவாக்கியவர்களின் பட்டியல்; இவை 2015-ன் முகங்கள், அவ்வளவே.

தமிழர் கண்களினூடே இந்தியாவைப் பார்க்கிறோம். தேசிய அளவில் தாக்கங்களை உண்டாக்கிய தமிழக முகங்களையும் தமிழக அளவில் தாக்கங்களை உண்டாக்கிய தேசிய முகங்களையுமே நாம் பட்டியலிடுகிறோம். கடந்த ஆண்டின் பட்டியலோடு இந்தப் பட்டியலை ஒப்பிட்டால் நாம் கடந்துவந்த இந்த ஆண்டின் பயணம் எத்தகையது என்பது புரியும்.

கடந்த ஆண்டின் பட்டியலில் இடம்பெற்றவர்களின் வரிசை இது: நரேந்திர மோடி, அமித் ஷா, மைக்கேல் டி குன்ஹா, கைலாஷ் சத்யார்த்தி, ஜெயலலிதா, சத்ய நாதெள்ளா, கார்த்தி சுப்புராஜ், மேரி கோம், சதீஷ் சிவலிங்கம், ஜெயமோகன். கடந்த பட்டியலிலும் இந்தப் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கும் ஒரே முகம் ஜெயலலிதா.

நாடு முழுவதும் பேசப்பட்டார், கடந்த ஆண்டைப் போலவே. முந்தைய இரு ஆண்டுகளின் பட்டியலில் மோடியின் முகம் இப்படித் தொடர்ந்தது. அவரவர் செயல்பாடுகளே ஆண்டின் பட்டியலில் முகங்களைத் தீர்மானிக்கின்றன. முந்தைய ஆண்டுகளைப் போல, மாற்றங்களின் ஆண்டு, நம்பிக்கைகளின் ஆண்டு என்றெல்லாம் 2015-ஐ அறுதியிட்டு நிர்ணயிக்க முடியவில்லை. கடந்து சென்ற ஆண்டு எப்படிப்பட்டதாக இருந்தாலும் வந்திருக்கும் புத்தாண்டு நம்பிக்கையின் ஆண்டு. வாசகர்களுக்கு எமது இதயங்கனித்த வாழ்த்துகள்!

தன்னார்வலர்கள் - மீட்பர்கள்

8_2679032a.jpg

இவர்கள்: ஒரு நூற்றாண்டு காணாத மழை - வெள்ளத்தைத் தமிழகத் தலைநகரம் எதிர்கொண்டபோது, உரிய முன்னேற்பாடுகள் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத அரசாட்சியின் கீழ் மக்கள் பரிதவித்து நின்றபோது, லட்சக்கணக்கானோரின் உயிர்களைத் தம் உயிரைப் பணயம் வைத்து மீட்டார்கள். வெள்ளத்தில் வீட்டை உடைமைகளோடு விட்டுவிட்டு, ஒரு பிடி சோறுக்கும் ஒரு வாய்த் தண்ணீருக்குமாய்த் தவித்து நின்றவர்களுக்கு ஓடோடி வந்து உதவியளித்தார்கள். ஒரு அரசாங்கம் ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்தார்கள்.

இவர்கள்: பசியால் ஒரு பெரிய கலகம் / பெரும் வன்முறை ஏற்படும் ஆபத்தைத் தவிர்த்தார்கள்.

இவர்கள்: ஒரு பேரிடரில் பணியாற்றுவது தொடர்பாக எந்தக் கல்வியையும் பெற்றிராவிட்டாலும், கையில் எந்தச் சாதனங்களும் இல்லையென்றாலும் சக மனிதர் மீதான அன்பும் அக்கறையும் இருந்தால் போதும்; நம்மால் மக்களைக் காக்க முடியும் என்பதைத் தம் செயல்பாடுகளால் உணர்த்தினார்கள். சமூகவலைதளங்களை எப்படி மக்கள் தமக்கான ஊடகமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தார்கள். நம்முடைய அமைப்பில் உள்ள பல ஓட்டைகளை அம்பலப்படுத்தினார்கள்.

இவர்கள்: உலகம் முழுவதும் நகரமயமாதல் மனித உறவுகளைச் சிதைத்துக்கொண்டிருக்கும் சூழலில், மனித உணர்வுகளின் மேன்மைகளையும் விழுமியங்களையும் பற்றி உலகம் பேச ஒரு வாய்ப்பை உருவாக்கித் தந்தார்கள்.

நயன்தாரா சேகல் - அறத்தின் சீற்றம்

9_2679010a.jpg

இவர்: வளர்ச்சியின் பெயரால் ஆட்சிக்கு வந்த ஒரு கட்சி அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆரம்பித்து எல்லா இடங்களிலும் சூழவைத்த வெறுப்பு நெருப்பு தொடர்பான விவாதம் நாட்டின் கடைக்கோடியையும் போய்ச் சேர முக்கியப் புள்ளியாக இருந்தார். அதுவரை அறிவுத்தளத்தில், மிகச் சிறுபான்மையினரிடம் மட்டுமே பேசப்பட்டுவந்த விவகாரத்தை, ‘சாகித்ய அகாதெமி’ விருதைத் திருப்பி அளித்ததன் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் பேசவைத்தார்.

இவர்: “இந்தியப் பண்பாட்டு பன்முகத் தன்மையை அரசு பாதுகாக்கவில்லை” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியவர். 50-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும் படைப்பாளிகளும் இவரைத் தொடர்ந்து தங்கள் விருதுகளைத் திருப்பி அளித்தனர். தொடர்ந்து அரசை நோக்கி அவர்களைக் கேள்வி கேட்க வைத்தார்.

இவர்: கோவிந்த பன்சாரே, நரேந்திர தபோல்கர், எம்.எம்.கல்புர்கி என்று முற்போக்குச் சிந்தனையாளர்கள் தொடர்ச்சியாகக் கொல்லப்படும் அவலத்துக்கு முடிவுக்கு வர அரசை நிர்ப்பந்தித்தார். மாட்டிறைச்சியின் பெயரால் நடந்த கொலைகள் பொதுவெளியின் கவனத்துக்கு இதன் தொடர்ச்சியாக வந்தன.

இவர்: அறிவுஜீவிகள், எழுத்தாளர்களால் என்ன செய்து கிழிக்க முடியும்; அவர்களு டைய வார்த்தைகள் தனித்தீவுப் புலம்பல்கள் எனும் மாயையை உடைத்தார்.

இவர்: சகிப்புத்தன்மை இந்நாட்டின் உயிர்நாடி என்பதை இந்நாடு மீண்டும் உணர வழிவகுத்தார்.

அப்துல் கலாம் - வெகுஜனாதிபதி!

10_2679031a.jpg

இவர்: நேருவுக்குப் பின் குழந்தைகளால் அதிகம் நேசிக்கப்பட்ட ஆளுமை. இந்த ஆண்டு மறைந்தபோது தேசத்தையே கண்ணீர் விட வைத்தார்.

இவர்: ஒரு ஏழைக் கடலோடிக் குடும்பத்தில், நாட்டின் எல்லையோரக் கிராமத்தில் பிறந்தவர்; ஜனாதிபதியாக உயர்ந்தவர். எல்லாப் பாகுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு இந்நாட்டை நாம் நேசித்தால், இந்நாடு நம்மை உச்சத்தில் வைத்து உச்சி முகரும் எனும் நம்பிக்கையைக் கோடிக்கணக்கானோரிடம் தன் வாழ்க்கையால் நிரூபித்தவர்.

இவர்: இந்நாட்டின் பன்மைத்துவம் பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமே உரியது அல்ல; சிறுபான்மையினத்தவருக்கும் அது ரத்தத்தில் ஊறியது என்பதைத் தன் வாழ்க்கையால் உணர்த்தியவர். தான் உண்மையென நம்பிய விழுமியங்களில் உச்சபட்ச நேர்மைக்கு சமகால உதாரணராகத் திகழ்ந்தவர்.

இவர்: பொதுப் பணத்தைத் தன் பணமாய்க் கருதி சிக்கனமாகப் பயன்படுத்தியவர். தன் பணத்தைப் பொதுப் பணமாய்க் கருதி அள்ளி வழங்கி மகிழ்ந்தவர். பதவியால் பெருமைப்படாமல் பதவிக்குப் பெருமை சேர்த்தவர். கற்றுக்கொள்வதிலும் கற்றுத்தருவதிலும் இறுதிவரை சளைக்காமல் ஓடியவர்.

இவர்: கனவுகளை விதைத்தவர். விண்வெளி ஆராய்ச்சித் துறைக் கண்டுப்பிடிப்புகளில் கிடைத்த வெற்றியையும் இலகு ரக செயற்கைக்கால் கண்டுபிடிப்பில் கிடைத்த வெற்றியையும் சமமாகப் பாவித்தவர். இதுவரையிலானவர்களில் அதிகமான மக்களைச் சந்தித்து உரையாடிய வெகுஜனாதிபதி.

இவர்: ஒரு நல்ல தலைவருக்கான தேவையையும் அரசியல் அறவறட்சியையும் இந்நாட்டு அரசியல்வாதிகளுக்குத் தன் இறப்பின் மூலம் பாடம் கற்பித்துவிட்டுப்போனார். மக்களின் ராஷ்டிரபதி!

நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் - இருவர்!

6_2679034a.jpg

இவர்கள்: வெறுப்பு அரசியல் தீயாக மூண்டுகொண்டிருந்தபோது பகை மறந்து கை கோத்ததன் மூலம் வெறுப்புத் தீக்கு ஒரு முடிவு கட்டினார்கள். கூடவே மோடி அலையையும் முடிவுக்குக் கொண்டுவந்தார்கள்.

இவர்கள்: நாடு முழுவதும் காவிக் கொடியைப் பறக்கவிடும் கனவோடு ஒவ்வொரு மாநிலத் தேர்தலையும் மக்களவைத் தேர்தலைப் போல எதிர்கொண்டுவந்த பிரதமரை எதிர்கொள்ள ‘மகா கூட்டணி’ எனும் தேர்தல் தந்திரத்தை ஏனையக் கட்சிகளுக்கு வழியாக்கினார்கள்.

இவர்கள்: வெளியாட்களைக் கொண்டுவந்து உள்ளூர் அரசியலைத் தீர்மானிக்கும் தேசிய ஆதிக்க அரசியலுக்குச் சரியான பதிலடி கொடுத்தார்கள். கூடவே சமூகநீதி எவ்வளவு பெரிய ஆயுதம் என்பதையும் தங்கள் வெற்றியின் மூலம் உணர்த்தினார்கள்.

சானியா- சாய்னா - தங்கத் தாரகைகள்

7_2679033a.jpg

இவர்கள்: ஆண்கள் கிரிக்கெட்டை மட்டுமே கொண்டாடிக்கொண்டிருந்த ஒரு தேசத்தின் கவனத்தை டென்னிஸ், பேட்மின்டனை நோக்கியும் இழுத்தவர்கள். இரட்டையர் டென்னிஸ் போட்டியில் 2015-ல் மட்டுமே 10 சாம்பியன் பட்டங்களைப் பறித்து உலகின் முதல்நிலை வீராங்கனையாக ஜொலிக்கிறார் சானியா. உலக பேட்மின்டன் வரலாற்றில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் சாய்னா. இந்தோனேஷியாவில் இந்தாண்டு இதைச் சாதித்தார் இவர். உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டவர் மிக சீக்கிரம் மீண்டும் துள்ளியெழுந்து முதல் இடத்தைத் தனதாக்கினார். அர்ஜுனா, பத்ம, ராஜீவ் காந்தி கேல் ரத்னா என விருதுகள் இவர்களைத் தேடி வருகின்றன.

இவர்கள்: இந்தியாவில் விளையாட்டில் ஊக்கத்தோடு ஈடுபடும் பெண்களுக்கு ஊக்கசக்தி.

சசிபெருமாள் - தியாகத் திருவுரு

1_2679030a.jpg

இவர்: ஒரு அரசாங்கமே கொடுமையான சமூக அவலங்களுக்கு வித்திடும் மது விற்பனையில் ஈடுபடுவதைக் கண்டித்து மக்கள் தன்னெழுச்சியோடு நடத்திய போராட்ட வரலாற்றின் தொடக்கப் புள்ளி. காந்தியர். காந்தியமும் அஹிம்சையும் செத்துவிடக் கூடியவை அல்ல என்பதைத் தன் உயிரைக் கொடுத்து மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்தியவர்.

இவர்: ஏழை. கிராமவாசி. பள்ளிக்கூடக் கல்வியை முழுமையாக முடிக்காதவர். ஆனால், இதயத்தில் அறத்தைக் கேடயமாகப் பொருத்திக்கொண்டு சர்வ வல்லமை மிக்க ஒரு கடுமையான அரசாங்கத்தை எதிர்த்து நின்று யுத்தம் நடத்தினார். போராளிகள் கடைசிவரை சளைப்பதில்லை என்பதை உணர்த்தினார்.

இவர்: மறைந்திருக்கலாம். தமிழகத்தில் மதுவிலக்கு வந்தே தீரும். அரசின் மதுக் கடைகள் மூடப்பட்டே தீரும். தேர்தலைத் தீர்மானிக்கப் போகும் ஆயுதம் அதுதான். மது ஆலை வைத்திருக்கும் கட்சிக்காரர்களும் மதுவிலக்கைப் பேசும் நிர்ப்பந்தம் உருவாகியிருக்கிறது. இச்சூழலை உருவாக்கியவர் சசிபெருமாள். மதுவுக்கு எதிரான யுத்தத்தில் என்றும் நினைவில் வாழ்வார்.

தனியாள் காய்ச்சி விற்றால் கள்ளச் சாராயம், கம்பெனிகள் காய்ச்சி அரசாங்கம் விற்றால் நல்ல சாராயமா? மது ஒழிய வேண்டும், ஒழிப்போம்!

சுந்தர் பிச்சை - இணைய நாயகன்

2_2679036a.jpg

இவர்: ரூ. 4.35 லட்சத்து கோடி வருவாய், 57 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள், உலகின் அபிமான தேடுபோறி ‘கூகுள்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி இவர்.

இவர்: இந்திய இளைஞர்கள் தொழில்நுட்பத் துறையில் அடித்தட்டு வேலைகளை மட்டுமே நிரப்ப வல்லவர்கள் எனும் பகடியை உடைத்தவர்களில் உச்சம் சென்றவர். ‘டைம்’ பத்திரிகையின் ‘2015-ன் மனிதர்’ தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் இவரும் ஒருவர்.

இவர்: இந்திய நிர்வாகவியலின் புதிய அடையாளம் இவர். இந்தியாவின் 125 கோடி மக்களையும் இணைக்க திட்டமிடப்பட்டிருக்கும் ‘டிஜிட்டல் இந்தியா’வுக்கு மோடி ஆலோசனையும் ஒத்துழைப்பும் இவரிடம் கேட்டார். பல்வேறு திட்டங்களின் வாயிலாக இந்திய கிராமங்களை இணையம் சென்றடைய உதவுகிறார் இவர்.

இவர்: கடைக்கோடி கிராமச் சிறுவருக்கும் ஹார்வர்டு பேராசிரியருக்கும் ஒரே மாதிரியான சமமான தொழில்நுட்பத்தை கொண்டுசேர்க்க வேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர் இவர்.

ஜெயலலிதா - தனிப்பெருந்தேவி!

3_2679040a.jpg

இவர்: ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதைத் தாண்டி இந்த ஆண்டில் இவருடைய பல நடவடிக்கைகள் தேசம் முழுவதும் பேசப்பட்டன. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு முதல்வர் பதவியை இழந்திருந்த சூழலிலும் ‘மக்கள் முதல்வர்’ என்ற பெயரில் ஒரு மாநிலத்தில் உச்ச அதிகாரம் இவர் கண்ணசைவில் இருந்ததையும் மக்களுக்குச் செல்லும் வெள்ள நிவாரணப் பொருட்களில்கூட இவருடைய ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டதையும் சர்வதேச ஊடகங்கள் வரை எழுதின.

இவர்: ஆட்சியில் இருந்தபோதே சிறை சென்ற முதல் முதல்வராக இருந்தபோதும், கட்சிக்குள் சின்ன முணுமுணுப்புக்கூட இல்லாமல் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.

இவர்: வரலாறு காணாத ஒரு பெருவெள்ளத்தை மாநிலம் எதிர்கொண்ட சூழலிலும்கூட செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை; மக்களிடையே ‘வாட்ஸ்அப்’ உரை நிகழ்த்தினார். எல்லாவற்றையும் தாண்டியும் சென்னையிலிருந்து டெல்லி வரை இவர் செல்வாக்கு நீள்கிறது.

உங்களுக்கு வரும் துன்பங்களை எல்லாம் நானே சுமக்கிறேன்… எத்துயர் வரினும் அதையும் இத்தாயின் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள்!

ஹர்திக் படேல் - சாதீப் பிழம்பு..

4_2679037a.jpg

இவர்: மூன்று நாட்கள் குஜராத் மாநிலத்தையே முற்றிலுமாக ஸ்தம்பிக்க வைத்தார்; சாதி இந்நாட்டில் இன்னும் எவ்வளவு வல்லமையோடும் உயிர்ப்போடும் இருக்கிறது எனும் அபாயத்தை மீண்டும் நாட்டுக்கு ஒருமுறை உணர்த்தினார். இடஒதுக்கீடு தொடர்பாக நாட்டில் மீண்டும் ஒருமுறை பெரிய அளவில் விவாதத்தை உருவாக்கினார்.

இவர்: வளர்ச்சி / நவமுதலாளித்துவ முகமாகப் பார்க்கப்பட்ட நரேந்திர மோடியும் இந்துக்கள் அனைவரும் இந்துக்கள் என்று இந்துத்வ அரசியல் பேசும் பாஜகவும்கூட குஜராத்தில் சாதியை எவ்வளவு நுட்பமாகக் கையாண்டார்கள் எனும் உண்மை வெளிவர உதவினார்.

இவர்: ஓட்டு அரசியலுக்காக வலுவான சமூகங்களுக்கும்கூட இடஒதுக்கீட்டை வழங்கும் கேலிக்கூத்தை அரசியல்வாதிகள் தொடர்வது, ஏனைய சமூகங்களிடம் ஒருகட்டத்தில் எத்தகைய வெப்பத்தையும் அழுத்தத்தையும் உண்டாக்கும் என்பதை வெளிக்கொண்டுவந்தார்.

இவர்: பெருநிறுவனங்களின் மேலாதிக்கம் பாரம்பரிய வணிகச் சமூகங்களை எப்படி நசுக்கிக்கொண்டிருக்கிறது என்பதைக் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் - விஸ்வநாதம்!

5_2679035a.jpg

இவர்: இந்தியத் திரையுலகின் மகத்தான பொக்கிஷங்களில் ஒன்றாகத் திகழ்ந்தவர் இந்த ஆண்டு மறைந்தார்.

இவர்: கர்னாடக இசைப் பாணி பாடல்களால் சூழப்பட்டிருந்த தமிழ்த் திரையுலகில் மெல்லிசையைக் கொண்டுவந்தவர். கர்னாடக இசை, நாட்டுப்புற இசை, மேற்கத்திய செவ்வியல் இசை, பாப் இசை, டிஸ்கோ இசை என இசையின் அனைத்துக் கூறுகளையும் தனது பாடல்களின் வழி எளியோருக்கும் கொண்டுசென்றவர்.

இவர்: ராமமூர்த்தியோ, இளையராஜாவோ… ஆளுமைகளோடு சேர்ந்து பணியாற்றுவதில் உற்சாகமாகக் கை கோத்த ஆளுமை.

இவர்: மூன்று தசாப்தம் தமிழ் இசையுலகில் ராஜாங்கம் நடத்தியவர். தனது எளிமைக்காகவே அனைவராலும் விரும்பப்பட்டவர். என்றும் தன் இசையால் வாழ்வார்!

  • தொடங்கியவர்

ஜனவரி 3: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று

ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட மன்னர்களில் வீரபாண்டிய கட்டபொம்மன்
குறிப்பிடத்தக்கவர். பாஞ்சாலங்குறிச்சியில் 1760-ஆம் ஆண்டு ஜனவரி 3-ல் திக்குவிசய
கட்டபொம்முவுக்கும் ஆறுமுகத்தம் மாளுக்கும் மகனாகப் பிறந்தார். ஊமைத்துரை,
துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈஸ்வரவடிவு, துரைக்கண்ணு என இரு
சகோதரிகளும் இருந்தனர்.

அழகிய வீரபாண்டியபுரம் என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஓட்டப் பிடாரம் பகுதியில்
ஆட்சிசெய்த ஜெகவீரபாண்டியனின் அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு
இருந்தார். பிறகு, 1791-ல் வீரபாண்டிய கட்டபொம்மன் அரியணை ஏறினார். அவரது ஆட்சிக்
காலத்தில்தான் திருநெல்வேலிச் சீமை, கிழக்கு இந்தியக் கம்பெனியின் அதிகார வரம்புக்குள்
வந்தது.

1797-ல் ஆலன்துரை என்ற ஆங்கிலேயேர் பாஞ்சாலங் குறிச்சிக்கு வந்தார். அவரைப் போரில்
கட்டபொம்மன் தோற்கடித்தார். அதன் தொடர்ச்சியாக, கப்பம் கட்ட மறுத்த கட்டபொம்மனிடம்
ஆங்கிலேய கலெக்டர் ஜாக்சன் விளக்கம் கேட்டார்.

'அந்நியனுக்குக் காவடி தூக்குவதைவிட, தூக்குக் கயிறே மேல்’ என்ற மன உறுதியுடன் நெஞ்சை
நிமிர்த்தித் தண்டனையை ஏற்றுக்கொண்ட கட்டபொம்மன், அக்டோபர் 16, 1799-ல் கயத்தாறு
என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.

581893_1048712058520917_8791456878953656

  • தொடங்கியவர்

2015-ன் இயற்கைப் பேரிடர்கள்!

 

2015-ல் உலகம் பல பருவநிலை மாற்றங்ளைச் சந்தித்தது. விளைவு... பல இயற்கைப் பேரிடர்கள்!  இவற்றின் காரணமாக பல உயிர்கள் அழிந்தாலும், “மனிதம்” உயிர்பெற்றுள்ளது. அதை அப்படியே தக்க வைத்துக் கொள்ள வேண்டியது நம் பொறுப்பு.

உலகெங்கும் நிகழ்ந்த பேரழிவுகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய சில இங்கே...

மத்திய கிழக்கு பனிப் புயல்

hu_vc1.jpg


6 ஜனவரி 2015 அன்று ஹுதா பனிப்புயல் மத்திய கிழக்கு நாடுகளைத் தாக்கியது. இதனையடுத்து 1000 கணக்கான மக்கள் தொடர் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டனர். சிரியாவில், ஏறத்தாழ 10 நபர்கள் குளிர் தாங்காமல் இறந்து போனார்கள்.

தென் ஆப்பிரிக்கா வெள்ளம்

souvc1.jpg

டிசம்பர் 2014-ல் தொடங்கிய தொடர்மழை காரணமாக தென் ஆப்பிரிக்காவில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 1,35,000 பேர் பாதிக்கப்பட்டனர். 400% அதிகப்படியான மழை பெய்ததால் 30 வருடத்தில் ஏற்படாத அளவுக்கு  சையர் (Shire) ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பொலிவியா வெள்ளம்

ஜனவரி முதல் ஏப்ரல் வரை 32,000 குடும்பங்கள் பெருமழை காரணமாக பாதிக்கப்பட்டனர். பலர் இறக்க,19000 ஹெக்டேர் நிலப்பரப்பிலுள்ள பயிர்கள் நாசமாயின. ஏறத்தாழ 5,240 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.

irop.jpg

தென் கிழக்கு ஐரோப்பா வெள்ளம்

பிப்ரவரி தொடக்கத்தில் ஆரம்பித்த மழையின் காரணமாக, அல்பானியாவில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. இதன் விளைவாக 42,000 மக்கள் பாதிக்கப்பட்டதோடு, 3,500 கால்நடைகள் அழிந்து போயின.

ஹைத்தி வெள்ளம்

ஏப்ரல் மாதக் கடைசியில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கத்தால் 9000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. 5 குழந்தைகள் உட்பட 6 பேர் இறந்து போனார்கள். 8770 வீடுகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன.

ரஷ்யா காட்டுத்தீ

hithis1.jpg

கடும் வெயிலின் காரணமாக ஏற்பட்ட வெப்பத்தினால் ரஷ்யாவிலுள்ள சைபீரியாவிலுள்ள தக்காசியாவில் பெரும் காட்டுத்தீ ஏற்பட்டது. ஏறத்தாழ 1000 வீடுகள், ஒரு பள்ளிக்கூடம், 2 மருத்துவமனைகள் எரிந்து சாம்பலாயின. 30 பேர் இறந்தனர்; 5000 பேர் பாதிக்கப்பட்டனர்

நேபாள பூகம்பம்:

 25 ஏப்ரல் 2015 அன்று 7.8 ரிக்டர் அளவிலான பெரும் பூகம்பம் நேபாள தலைநகரான காத்மண்டுவைத் தாக்கியது.1000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் இடிபாடுகளில் சிக்கி இறந்து போயினர். 

nepal.jpg

பாகிஸ்தான் வெள்ளம்

ஏற்கனவே பருவகால மழை சற்று முன்னதாகவே பெய்ததால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் 26 ஏப்ரல் அன்று,  பாகிஸ்தானை ஒரு பெரும்புயல் தாக்கியது. 44 பேர் இறந்ததோடு 200 பேருக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டனர். பலத்த மழை மற்றும் பனிப்பாறை உருகியதால் ஏற்ப்பட்ட வெள்ளத்தினால் ஏறத்தாழ 2,85,000 பேர் பாதிக்கப்பட்டனர். 14 செப்டம்பரில் பாகிஸ்தான் தேசியப் பேரிடர் மேலாண்மை கழகம் வெளியிட்ட முடிவில், 15,72,191 பேர் பாதிக்கப்பட்டதாகவும்,238 பேர் இறந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.

சென்னை வெள்ளம்

நவம்பர் 8,9,12,13,15,23 ஆகிய தேதிகளில் சென்னையில் கனமழை பெய்தது. பிறகு டிசம்பர் 1 அன்று, கிட்டத்தட்ட 50 செ.மீ கனமழை பெய்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 29000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டதால் சென்னை மூழ்கியது. கடந்த 30 வருடங்களில் இப்படியொரு கனமழையை சென்னை காணவில்லை. இந்த பேரிடரிலிருந்து சென்னை இன்னமும் மீளவில்லை. அனைத்து தொழிற்துறைகளும், மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதிலிருந்தும் சென்னைக்கு உதவிகள் வந்து குவிந்தன.

chennai.jpg


கடலூர் வெள்ளம்

8 நவம்பர் அன்று கடலூரில் பெய்ய ஆரம்பித்த கனமழை காரணமாக பெரு வெள்ளம் ஏற்ப்பட்டது. இதன் விளைவாக 122 பேர் இறந்து போயினர். 70,000 கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பல கோடி மதிப்பிலான பொருட்களும், கட்டடங்களும் நாசமாயின. சென்னையை விட பல மடங்கு பாதிப்பை சந்தித்தது கடலூர் தான். ஏறத்தாழ 437 மி.மீ மழை பெய்ததாக ஆய்வு மையம் தெரிவிக்கிறது. ஆனால், கடலூர் மாவட்டத்திற்கு அந்த அளவிற்கு நிவாரணங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நியூட்டனின் 3-ம் விதிப்படி “ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு ”என்பதற்கேற்ப “இயற்கையை நாம் அழித்தால் இயற்கை நம்மை அழிக்கும்” என்று நிரூபணம் ஆகியுள்ளது. எனவே, இனியாவது இயற்கையோடு ஒன்றி வாழப் பழகுவோம்! 

  • தொடங்கியவர்

1512421_1048711938520929_912027158203664


ஜனவரி 3: பார்மலா 1 கார் பந்தயத்தின் ஹீரோ மைக்கேல் சூமாக்கர் (Michael Schumacher)
பிறந்த தினம் இன்று.

இவர் ஏழு முறை (1994, 1995, 2000, 2001, 2002, 2003, 2004 ஆகிய வருடங்கள்) உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

  • தொடங்கியவர்

பார்த்திபனின் "பீப்" பாடல்

 

 

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

 

 

ஆசை...

p84_1%281%29.jpg

``நியூஸ் பேப்பர்ல ஒரு நகைக்கடை விளம்பரம் வந்திருக்கே... அதைக் கொண்டுவா” என்றான். முகம் மலர ஆவலோடு ஓடிப்போய் எடுத்து வந்தாள். ``அதை தேங்காய் எண்ணெய்க் கிண்ணத்தின் கீழே வை. ஆயில் ஒழுகினாலும் நல்லா உறிஞ்சிக்கும்’’ என்றான்.

 


மழை... பள்ளி!

p82_2%281%29.jpg

``ஹைய்யா... மழை பெய்யுது. ஸ்கூல் போக வேணாம்... லீவு’’ என்றான் மகன் மகிழ்ச்சியாக.
``குடிசைக்குள்ள வெள்ளம் பூந்துடுச்சு. வாடா உங்க ஸ்கூல்ல போய்த் தங்கலாம்’’ என்றார் அப்பா!

 


லிஸ்ட்

p84_3%281%29.jpg

``இந்த மாச லிஸ்ட் எழுதுங்க... ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், டி.வி, சமையல் பாத்திரங்கள், சோபா...’’ மயங்கிச் சாய்ந்தான் கணவன் !

 


பலா(லே) பலன்!

p84_4.jpg

ஜோதிடர் கணித்த ராசி பலன்களைப் பொய்யாக்கி,  12 ராசி நேயர்களையும் பாதித்தது சென்னை மழை வெள்ளம்!

 


பிழைப்பு

p84_5.jpg

``ஏகப்பட்ட சொத்தோடு சந்தோஷமா நான் இருக்க வழி சொல்லுங்க   குருவே...’’ எனக் கேட்ட சீடனிடம் சாமியார் சொன்னார், ``500 கிலோ மீட்டர்  தள்ளிப்போய் நீயும் ஒரு ஆசிரமம் வெச்சுப் பொழச்சுக்க!"

 


ஏமாற்றியவன்!

p84_6.jpg

ஹோட்டலில் சாப்பிட்டு காசு தராமல் ஏமாற்றியவனை, காவல் நிலையத்தில் ஒப்படைத்தான் சூரி. மதியம் அவன் கடையில் இருந்து பிரியாணி பார்சல், காவல் நிலையத்துக்குப் போனது!

 


கோரிக்கை

p84_7.jpg

அலுவலகங்களில் விண்ணப்பங்கள் குவிந்தன... “தயவுசெய்து எங்களைத் தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றுங்கள்!”

 


டேஸ்ட்

p84_8.jpg

``இதென்ன இப்படி ஒரு கலர்? டிசைனும் கேவலமா இருக்கு’’ என இவன் நிராகரித்த சட்டையை, சற்று நேரத்தில் ``சூப்பரா இருக்குல்ல?’’ எனத் தேர்ந்தெடுத்தான் வேறு ஒருவன்!

 


சேவை

p84_9.jpg

`மழைத் தண்ணியைச் சேமிச்சுவைங்க… நிலத்தடி நீர் ரொம்பக் குறைஞ்சுபோச்சு’ எனச் சுற்றுவட்டாரக் கிராமங்களில் தமுக்கடித்துச் சொல்ல ஏற்பாடு செய்த குளிர்பான கம்பெனிக்கு, சமூக சேவைக்கான விருது கிடைத்தது!

 


எப்பூடி..?

p84_10.jpg

``என் சர்க்கிள்ல இருக்கிற ஒரு கடையிலகூட இந்த வாரம் `புக்' கிடைக்காமப் பண்ணிட்டேன் சார்’’ என மேலதிகாரியிடம் பெருமையாகப் பேசிவிட்டு போனை வைத்தார் இன்ஸ்பெக்டர். பல லட்சம் பேர் படித்துக்கொண்டிருந்தார்கள் `ஆன்லைனில்’!

  • தொடங்கியவர்
வலைபாயுதே V 2.0
 
 

 

facebook.com/nelson xavier08:  ஊடகத்தில் இருந்து சொல்கிறேன்... காவல் துறையும் ராணுவமும் அதிகாரிகளும் காப்பாற்றிய உயிர்களைவிட, களத்தில் இருந்த இளைஞர்களும் தன்னார்வலர்களும் மீட்ட உயிர்கள் மிக அதிகம். சென்னையும் கடலூரும் இந்த அளவுக்குத் தப்பிப் பிழைத்திருப்பதற்கு மனிதநேயம் உள்ள மக்கள் சமூகத்தின் உழைப்பு அளப்பரியது. கேமரா கண்களால் அளந்துவிட முடியாதது.
இது, நம் மக்களின் நேரடி வெற்றி; நாம் தேர்ந்தெடுத்த மக்களாட்சியின் தோல்வி!

twitter.com/manipmp: புவி வெப்பமடைவதைவிட போன் சூடாகிறதை நினைச்சாத்தான் கவலையா இருக்கு!

twitter.com/laksh_kgm: `வெள்ளத்தில் போனது எவ்வளவு இருக்கும்?’

`ரூபாய் மதிப்பில் தெரியவில்லை. ஆனால், அது என் 20 ஆண்டுகால உழைப்பு!’

twitter.com/withkaran: இன்று `பீப்' சாங்கை ஆதரிப்பவர்களின் குழந்தைகள் நாளைக்கு வீட்ல வந்து, `என்ன `பீப்'புக்கு இன்னிக்கு சாம்பார் வெச்ச?'னு கேட்கும். அப்ப புரியும் கஷ்டம்!

twitter.com/PARITHITAMIL: கடவுளே... பெருசா எதுவும் வேண்டாம். ஒரு லெக்சஸ் காரும், அதை ஓட்ட ஸ்காட்லாந்து மதுவும், இவற்றோடு ஓர் இந்திய நீதிபதியும்!

p12a.jpg

twitter.com/g_for_Guru: ரொம்ப ஃபாஸ்ட்டா `Insurance is a subject matter of solicitation'ங்கிற மாதிரி அ.தி.மு.க-வினரின் பேட்டியில் முதல் ஒரு நிமிடத்தை ஓட்டிவிடலாம். :-(

twitter.com/ZhaGoD: போதுமான ஆதாரம்னா செத்தவன் வந்து சாட்சி சொல்லணும்போல. # சல்மான் கான்.

twitter.com/withkaran: தமிழ்நாட்டுல மழை வரும், புயல் வரும், வெள்ளம் வரும். ஆனா, அம்மா மட்டும் கார்டனைவிட்டு வெளிய வர மாட்டாங்க!

twitter.com/kthirumani: ` எங்கே போனாங்க அந்த `கிளீன் இந்தியா’?’ ஒண்ணுமே இல்லாத தெருவை கூட்டி போட்டா எடுத்தாங்க. இப்போ வாங்கய்யா... சென்னையில உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கு!

twitter.com/_Hari_twits: சாலை என்பது பாதசாரிகளுக்கும் உண்டு என்பதை, பைக், கார் மற்றும் பிற வாகனங்களை இயக்குபவர்கள் உணருவதே இல்லை!

twitter.com/udanpirappe: சிம்புவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் -T.R # அப்போ நீங்க சிம்பு மேல தான் நடவடிக்கை எடுக்கணும் சென்றாயன்!

p12b.jpg

facebook.com/umamaheshwaran.panneerselvam:

ஆந்திரா மாநிலத்தில் கடந்த அக்னி நட்சத்திர வெயிலின்போது கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்தார்கள். உச்சி வெயில் மண்டையைப் பிளந்த காலத்தில், மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என செய்தி கூறியது அரசு. அதையும் மீறி கட்டடப் பணிகளில், கல்குவாரிகளில் வடமாநிலப் பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். அதில் கணக்கில் வராத மரணங்கள் நிகழ்ந்தன.

அப்போதே இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தோம். தமிழ்நாடு அரசு, `தமிழ்நாட்டில் எத்தனை பேர் Migrant workers என்ற கணக்கெடுப்பு வைத்திருக்கிறதா... இங்கே வரும் புலம்பெயர் வேலையாட்கள் அனைவரின் தகவல்களையும் வைத்திருக்கிறதா... அவர்களை மலிவான சம்பளத்துக்கு வேலைக்கு எடுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதலாளிகளுக்கு என ஏதேனும் நெறிமுறைகள், குறைந்தபட்ச சம்பள நிர்ணயம் ஏதாவது செய்திருக்கிறதா?' என விவாதித்துக்கொண்டிருந்தோம்.

இன்று வெள்ளத்தில் எத்தனை மக்கள் இறந்துள்ளார்கள் என்ற சரியான புள்ளிவிவரம் இதுவரை வெளியிடப் படவில்லை. காணாமல்போனவர்கள் எல்லாம் இறந்தவர்களாகக் கருதப்பட்டு, அவர்களது குடும்பத்துக்கு நிவாரணம் ஏதேனும் வழங்கப்படுமா என்றும் தெரியவில்லை.

தமிழ்நாட்டு மக்களுக்கே இந்த நிலைமை எனும்போது, எத்தனை Migrant workers இங்கே இன்னும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், எத்தனை பேர் அடித்துச் செல்லப்பட்டார்கள் என்ற தகவலுக்கு எங்கே போவது?

அவர்களது குடும்பம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் எல்லாம் தீவிரமாகப் பயன்படுத்தும் குடும்பமாக இருக்க வாய்ப்பு இல்லை. இவரைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என பதிவேற்றம் செய்தாலும், யார் எங்கே சென்று தேடுவார்கள், என்ன பெயர், என்ன நிறுவனத்தில் வேலை என்ற தகவல்கள் யாருக்கும் தெரியாது.

p12c.jpg

2000-ம் ஆண்டுக்குப் பிறகான காலகட்டத்தில் சென்னையின் கட்டுமானப் பணிகள், உணவகங்களில் வேலை என வடநாட்டு, வடகிழக்கு மாநிலத்தவர்களின் பங்களிப்பு அளப்பரியது. அவர்களைப் பற்றி இனிமேலாவது Database உருவாக்க வேண்டும். இங்கே வரும் ஆட்களைப் பதிவுசெய்யாமல் வேலைவாங்கும் நிறுவனங்களைத் தண்டிக்க வேண்டும்.

`வாக்காளப் பெருமக்கள்’ என அன்புடன் அழைக்கப்பட்டவர்களே சென்னை வெள்ளத்தில் செத்து மிதக்கும்போது, இங்கே வாக்கே இல்லாத பெருமக்களைப் பற்றி யார் கவலைப்படப்போகிறார்கள்?

facebook.com/suguna.diwakar:

சென்னையின் இப்போதைய பிரமாண்டப் பிரச்னை  குவிந்து கிடக்கும் குப்பைகள். வெளி மாவட்டத் துப்புரவுப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டபோதும் போதுமானதாக இல்லை. பிரதான சாலைகளில் குப்பைகள் அள்ளப்படுகிறதே தவிர, தெருக்களிலோ, உள்சாலைகளிலோ அள்ளப்படுவது இல்லை. ஆமாம், ஆடம்பரமாக ஆரம்பிக்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம் என்ன ஆனது? கமல்ஹாசன்கூட அதன் தூதுவர்களில் ஒருவர் என்று ஞாபகம்!

facebook.com/chellis1:

சென்னைவாசிகள் கொஞ்ச நாளைக்கு சூப்பர் மார்க்கெட், பெரிய கடைகள் போன்ற பெரிய வளாகங்களில் பொருட்கள், மளிகை, காய்கறிகள், பழங்கள் வாங்கு வதைத் தவிர்த்து தள்ளுவண்டிக் காரர்களிடமும், சிறு பலசரக்குக் கடை களிலும் வாங்கி, இந்த வெள்ளத்தில் நஷ்டம் அடைந்த சிறு தொழில் வியாபாரிகளைக் கைதூக்கிவிடலாம்!
 

  • தொடங்கியவர்

எளிய முறையில் பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியை!

  • தொடங்கியவர்

நண்பேன்டா....!

 

ரோட்டில் குரங்கு ஒன்று நாய் குட்டியை பாசத்துடன் வளர்த்து வருகிறது.

monky%201.jpg

ஈரோடு முத்து வேலப்ப வீதியில் சுற்றி திரிந்த ஒரு ஆண் குரங்கு,   பிறந்து ஒரு மாதமே ஆன நாய்குட்டியுடன் பழகி வருகிறது. குரங்கு,  நாய் குட்டியுடன் பாசத்துடன் பழகுவதை கண்ட மக்கள்,  நாய்குட்டியை பிரித்து கொண்டு செல்ல முயற்சித்தனர். ஆனால் குரங்கு நாய் குட்டியுடன் மாயமாக மறைந்து விட்டதாம். தற்போது மீண்டும் அதே பகுதியில் குரங்கு, நாய் குட்டியுடன் தென்படத் தொடங்கியுள்ளது.

monky%20.jpg

நாய்க்குட்டி மீது பரிதாபப்பட்டு அதற்கு பிஸ்கட், திராட்சை பழங்களை போட்டால் அதனை  குரங்கு எடுத்து சாப்பிட்டு விடுகிறதாம். கடந்த 3 நாட்களாக குரங்கின் பிடியில் இருந்து நாய்க்குட்டியை விடுவிக்க மக்கள் போராடி வருகின்றனர். குரங்கோ எந்த நேரமானாலும் அந்த நாய்குட்டியை விட்டு பிரிவதில்லை. மக்கள் குரங்கை விரட்டினாலும், அந்த குரங்கு பொதுமக்களை தாக்க வருகிறதாம்.

குரங்கு, நாய்க்குட்டியை வைத்துள்ளது குறித்து வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர்தான் குரங்கிடம் இருந்து நாயை மீட்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • தொடங்கியவர்

ஜனவரி 3: இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு

 

ஜனவரி 3: இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு..

சாவித்திரிபாய் புலே மகாராஷ்ட்ராவில் பிறந்த இவர் கல்வி வாய்ப்பில்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே பிறந்தார் . ஜோதிபாய் புலே எனும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய தீரர் இவரின் கணவர் ஆனார் . அவர் இவருக்கு கல்வி பயிற்றுவித்தார் .

இவர் கற்றுத்தேர்ந்ததும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை தாங்களே பிள்ளைகளுக்கு savithiripule.jpgதருவோம் என்று ஒரு பள்ளியை தொடங்கினார் ஜோதிபாய். அதில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக சாவித்திரி ஆனார்.  நடந்து போகிற பொழுது ஆதிக்கசாதியினர் கற்களையும் சாணத்தையும் வீசினர் ,ஜோதிபாயிடம் இவர் அதைச்சொல்லி புலம்பியதும் "அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு போ ! பின் அங்கே போய் நல்ல சேலையை அணிந்து கொள் !"என்றார் அவ்வாறே செய்தார் இவர் .

தவித்த வாய்க்கு தீண்டத்தகாதவர் என சொல்லி தண்ணீர் மறுத்த கொடுமையை எண்ணி தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை அமலில் இருந்தது ; அந்த மழிக்கும் பணியை செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்க செய்தார் .விதவை மறுமணங்களை தொடர்ந்து நடத்திக்காட்டினார் சாவித்ரிபாய் புலே.  சாவித்திரிபாய் நல்ல கவிஞரும் கூட. மராத்தியத்தின் நவீன கவிதைப்போக்கு இவரில் இருந்தே துவங்குகிறது. இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி என்று பல்வேறு தளங்களில் அவரின் கவிதைகள் பயணித்தன

1852ல்  இவர் தொடங்கி வைத்த 'மஹிளா சேவா மண்டல்' (பெண்கள் சேவை மையம்) மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது. 1876-1878 பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்குத் தமது கணவரோடு கடுமையாக உழைத்ததோடு மக்களின் துயரங்கள் தீர்வதற்கான  பல்வேறு  ஆலோசனைகளையும் முன்வைத்தார் அவர். பல மையங்களில் ஜாதி வேற்றுமை பாராட்டி ஒடுக்கப்பட்ட என்று மறுக்கப்பட்ட நிலையில்  இருவரும் இலவச உணவு பரிமாறினர்.

மகாராஷ்ட்ராவை ப்ளேக் நோய் தாக்கிய பொழுது ஆங்கிலேய அரசு நோய்த்தொற்று பரவாமல் இருக்க கடுமையான ப்ளேக் சட்டங்களை போட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்றவர்களை பிரித்து வைத்தது. மருத்துவம் படித்து ராணுவத்தில் வேலைபார்த்து கொண்டிருந்த  இவரின் மகன் யஸ்வந்த் தென் ஆப்பிரிகாவில் இருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். அவரை ஹடாஸ்பூரில் ஊருக்கு வெளியே மருத்துவமனை துவங்க வைத்தார் சாவித்திரி பாய்.

தானே பல பேரை தூக்கிக்கொண்டு வந்து அறுபத்தி ஆறு வயதில் உயிர் காக்கப்போராடினார். அப்படி பத்து வயது சிறுவன் பாண்டுரங் பாபாஜியை காக்க தூக்கிக்கொண்டு வந்த பொழுது நோய் தொற்று ஏற்பட்டு இவர் மரணமடைந்தார். அந்த சிறுவன் பிழைத்துக்கொண்டான்.  வாழ்வே சேவையாகிப்போன அவரின் பிறந்த நாள் இன்று.

அவரின் கவிதை கீழே :

போ கல்வி கல்
சொந்தக்காலில் நில், சோராமல் உலை
உழை-ஞானத்தை,செல்வதை சேர்
அறிவில்லாமல் போனால் அனைத்தும் அழியும்
ஞானமில்லாமல் விலங்காகி போவோம் நாம்
இன்னமும் சோம்பலுற்று அமர்ந்திருக்காதே, போ, போய் கல்வி பெறுக !
ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட நம்மவர்களின் துயரங்கள் துடைத்திடுக
கற்க ஒரு பொன்னான வாய்ப்பு இது
கற்று, ஜாதியின் சங்கிலிகளை அறுத்திடுக

  • தொடங்கியவர்

dot1.jpg`இந்தியா-பாகிஸ்தான் அரசியல் மட்டும் எனக்குப் புரிவதே இல்லை. நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் சென்று வேலை செய்கிறார்கள் என்றால், மற்ற நாட்டினரும் இங்கே வந்து வேலை செய்யலாம்தானே? கலையிலும் விளையாட்டிலும் அரசியலுக்கு இடமே இல்லை’ - பாகிஸ்தான் நடிகர் ஃபாவத் கானுடன் நடித்ததைப் பற்றி கேட்டதற்குத்தான் இப்படிச் சூடாகிவிட்டார் சோனம் கபூர்.   கூல்டௌன் பேபி!

p56a.jpg

dot1.jpg உங்க ஸ்மார்ட்போன் மெமரியில் இடம் இருக்கிறதா? அப்ப உடனே `கிளாஷ் ஆஃப் கிளான்ஸ்' டௌன்லோடு செய்யுங்கள். ஆங்க்ரி பேர்ட்ஸ், டெம்பிள் ரன் வரிசையில் மொபைல் கேம்களில் அடுத்து ட்ரெண்டில் இருப்பது இதுதான். `வாட்ஸ்அப்ல இருக்கியா?’ என்பதுபோல, `கிளான்ல இருக்கியா?’ எனக் கேட்கும் அளவுக்கு நம்ம ஊரில் பிரபலம் ஆகிவிட்டது கேம். அதற்கு ஏற்ப, இந்த ஆண்டு அதிகம் வைரல் ஆன வீடியோக்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருப்பது கிளாஷ் ஆஃப் கிளான்ஸின் விளம்பரம் என அறிவித்திருக்கிறது யூடியூப். லைஃப் கேட்டுடாதீங்க பாஸ்!

dot1.jpg`ஈஸ்டர்ன் ஐ’ என்ற பிரிட்டிஷ் பத்திரிகை நடத்திய ஓட்டெடுப்பில், மூன்றாவது முறையாக  `ஆசியாவின் கவர்ச்சிப் பெண்’ என்ற பட்டம் வென்றிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. `குவான்டிகோ’ சீரியல், பாலிவுட் படங்கள், என தினம் 16 மணி நேரம் உழைக்கிறாராம் பிரியங்கா. இந்த முறையும் பட்டியலில் நம்பர் 1. `மனதளவில் மகிழ்ச்சியாக இருந்தால், அழகு தானாக வரும்’ எனச் சிரிக்கிறார் பிரியங்கா. அந்தச் சிரிப்புதாங்க...

dot1.jpg  காற்று மாசு அடைந்திருப்பதை  `ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ்’ மூலம் அளப்பார்கள். இதன் மதிப்பு 200-ஐ தாண்டினால் ஆபத்து. 301-500 என்றால் `அவ்வளவுதான் போச்சு’. சென்ற வாரம் சீனா தலைநகர் பீஜிங்கின் ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் 253-ஐ தொட, நகரம் முழுவதும் ரெட் அலெர்ட் அறிவிக்கப்பட்டது; பள்ளிகள் மூடப்பட்டன. சாலையில் கார்கள் தேவையின்றி ஓடவில்லை. போராடி மாசு அளவைக் குறைத்தது சீனா. இதே ஆபத்து  டெல்லிக்கும் இருப்பதால், போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால். ஒற்றைப்படை எண் கொண்ட வாகனங்கள் ஒரு நாள்,  இரட்டைப்படை எண் வாகனங்கள் அடுத்த நாள் என ஜனவரி 1-ம் தேதி முதல் இயக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார். மேலும், புதிய டீசல் கார்கள் வாங்க இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது. தடை நல்லது!

dot1.jpg ஃபோர்ப்ஸ் இதழின் `டாப் 100 இந்தியப் பிரபலங்கள் பட்டியல்’ சென்ற வாரம்  வெளியானது. முதல் இடம் பிடித்திருப்பது ஷாரூக் கான். நம்ம ஊர் பிரபலங்களில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 14-வது இடம். கமலுக்கு 46-வது இடம், ரஜினிகாந்துக்கு 69-வது இடம் கிடைக்க... ஆச்சர்ய என்ட்ரி தனுஷ். 37-வது இடத்தில் இருக்கிறார். ஸ்ருதிஹாசன் 61-வது இடத்தையும், சூர்யா 71-வது இடத்தையும், ஆர்யா 80-வது இடத்தையும், பிரபுதேவா 88-வது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். தல, தளபதிகூட இல்லேன்னா இது போங்குப்பா!

p56d.jpg

dot1.jpg `பாக்ஸ் ஆபீஸில் வசூல்ராஜா’, `விமர்சனங்களில் நடிப்பு ராஜா’ என மலையாளத்தில் ப்ருத்வி ராஜின் கிராஃப் பக்கா. கைவசம் ஒன்பது படங்கள் வைத்திருக்கும் ப்ருத்விராஜின் கால்ஷீட் 2018-ம் ஆண்டு வரை ஃபுல். இந்த வருடம் வெளியான இவரது 6 படங்களில், 4 படங்கள் செம ஹிட்.   கலெக்‌ஷன் தலைவன்!

p56b.jpg

dot1.jpg சச்சின்-200 டெஸ்ட் போட்டிகள் விளையாடிச் செய்த சாதனையை, 32 டெஸ்ட் போட்டிகளிலேயே செய்திருக்கிறார் அஷ்வின் ரவிச்சந்திரன். சச்சின், ஷேவாக்... இருவரும் டெஸ்ட் போட்டிகளில் 5 முறை `மேன் ஆஃப் தி சீரிஸ்’ விருதை வென்றதே இதுவரை இந்திய அளவில் சாதனை. இருவருமே ஓய்வுபெற்றுவிட்ட நிலையில் அஷ்வின் இப்போது 5 முறை `மேன் ஆஃப் தி சீரிஸ்’ விருதை வென்று அசத்தியிருக்கிறார். இதற்கு இடையே ட்விட்டரில் `ஃபாரின் பிட்ச்சில் எல்லாம் உன்னால் விக்கெட் எடுக்க முடியாது' என ரசிகர் ஒருவர் சீண்ட `போய் புள்ளக்குட்டியைப் படிக்க வை... உன்னைக் கேட்டுத்தான் நான் கிரிக்கெட் ஆட வந்தேனா?’ என அஷ்வின் ரிப்ளை தட்ட, ட்விட்டரில் செம ரகளை. சமாதானம்... சமாதானம்!

dot1.jpg அனிருத்தும் சிம்புவும் சேர்ந்து உருவாக்கிய பாடல் ஒன்று நெட்டில் லீக் ஆகி கலவரப்படுத்தியிருக்கிறது. பச்சையாக கெட்டவார்த்தைகளைப் போட்டு பாடல் பாடிவிட்டு, அந்த வார்த்தைகள் வரும் இடத்தில் எல்லாம் `பீப்’ சத்தத்தால் அமுக்கி யிருக்கிறார்கள். இருந்தாலும் அந்த வார்த்தைகள் அப்படியே கேட்பதாகப் பொங்கியிருக்கிறார்கள் நெட்டிசன்ஸ். விளையாட்டாகச் செய்த பாடல் லீக் ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள். இன்னொரு புறம், படமே இல்லாத சிம்பு, தனுஷின் `தங்கமகன்’ டிரெய்லர் வெளியீடு அன்று வேண்டுமென்றே வெளியிட்டதாகவும் சொல் கிறார்கள். இதெல்லாம் எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா?

p56c.jpg

dot1.jpg `மோஸ்ட்லி சன்னி... பார்ட்லி க்ளவுடி’ - சன்னி லியோன் வாழ்க்கையைத் தழுவி திலீப் மேத்தா எடுத்திருக்கும் டாக்குமென்டரி படத்தின் பெயர் இது. திரைப்படத்தின் நீளத்துக்கு ஓடும் டாகுமென்டரியாம். `இந்தப் படம் பார்த்த பிறகு நீங்கள் அவரைப் பார்க்கும் விதமே மாறியிருக்கும். நிச்சயம் நெகிழ்ச்சியான விஷயங்களும் இருக்கும். சன்னி தன் கடந்தகால வாழ்க்கையைப் பற்றி என்றுமே வருத்தப்பட்டது கிடையாது. அவர் எடுத்த சில சரியான முடிவுகள்தான், இன்று வெற்றிகரமான மனிதராக சினிமாவில் மாற்றியிருக்கிறது’ என்கிறார் திலீப்.  கெட் ரெடி ஃபோக்ஸ்!

  • தொடங்கியவர்
தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் - தெரிந்ததும், தெரியாததும்!
 
05-1393999398-tanjorepainting.jpg
 
தஞ்சாவூர் ஓவியம் நாயக்கர் காலங்களில் தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றி எண்ணற்ற ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவிய பாணியை பின்பற்றியே இப்போது பிரபலமாக அறியப்படும் தஞ்சாவூர் ஓவியம் வளர்ச்சியடைந்துள்ளது.
  • தொடங்கியவர்

2015: உலுக்கிய சுற்றுச்சூழல் சர்ச்சைகள்

 
 
3_title_2680443f.jpg
 

கடந்து சென்ற 2015-ம் ஆண்டு உக்கிரமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை சந்தித்தது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகரித்துவருவது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு புறம் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவதையும் இது சுட்டிக்காட்டுகிறது. கடந்த ஆண்டு தமிழகம் சந்தித்த முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகள், ஒரு பார்வை:

 

வேண்டாம் இந்த பாதரசக் கழிவு

சர்ச்சைக்கு இடமாகி கொடைக்கானலில் ஏற்கெனவே மூடப்பட்டுவிட்ட ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் பாதரச தெர்மாமீட்டர் நிறுவனம் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மாசுபாடு, அப்பகுதி மக்களை பாதித்து உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இந்தப் பிரச்சினை மீண்டும் உலகின் கவனத்துக்கு வந்தது. அது பரவலான கவனத்தைப் பெற்றதற்கு ராப் பாடகி சோஃபியா அஷ்ரஃப் பாடிய ‘கோடைக்கானல் வோன்ட்’ என்ற பாடலும் முக்கிய காரணம். பாதரச ஆலை இருந்த பகுதியில் மண்ணில் பாதரசக் கழிவு கலந்திருந்த விகிதம் பிரிட்டனில் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச அளவைப்போல 20 மடங்கு அதிகம் என்ற தகவல், யுனிலீவர் நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையிலிருந்தே தெரிய வந்திருக்கிறது.

 

விலை போகும் தண்ணீர்

8_2680438a.jpg

உள்ளூர் மக்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பால் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கோக்கோ கோலாவின் குளிர்பான ஆலைக்கு ஒதுக்கப்பட்ட 71 ஏக்கர் நிலத்துக்கான ஒப்பந்தத்தை தமிழக அரசு ஏப்ரல் மாதம் ரத்து செய்தது. ஆனால், அதேநேரம் நெல்லை மாவட்டத்தின் பெருமையான தாமிரபரணி ஆற்றில் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் கோக்கோ கோலா ஆலை, ஒரு நாளைக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீரை நீண்டகாலமாக எடுத்துக் கொண்டிருக்கிறது. அதே பகுதியில் லிட்டருக்கு ரூ. 3.75 கட்டணத்தில் பெப்சி நிறுவனமும் தண்ணீர் எடுக்க புதிதாக அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, உள்ளூர் மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.

 

அரசுக்கு எதிரான குரல்

10_2680445a.jpg

எந்த ஒரு பெரும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னாலும் சுற்றுச் சூழல் சீர்கேடு, மாசுபாடு தொடர்பாக மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்பது சட்ட நடைமுறை. இந்த நடைமுறை பெரும்பாலும் சடங்காகச் சுருங்கிவிடும் நிலையில், செய்யூர் சிறப்புப் பொருளாதார மண்டலம், அரியலூர் சிமெண்ட் ஆலை, அரியலூர் ராம்கோ சிமெண்ட் ஆலை, பெரம்பலூர் எம்.ஆர்.எஃப். ஆலை விரிவாக்கம், ராமநாதபுரம் ஒ.என்.ஜி.சி. இயற்கை எரிவாயுத் திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும், உள்ளூர் மக்களும் கடந்த ஆண்டு பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், தங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்தது கவனத்தைப் பெற்றது.

 

முற்றுப்புள்ளி இல்லா மணல் கொள்ளை

9_2680437a.jpg

மணல் கொள்ளைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பரவலான ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்பும் எழுந்தன. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள களத்தூர் கிராமத்தில் பாலாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிராக 350-க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் தொடர்ந்து பல மாதங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. கடும் அடக்குமுறையை எதிர்கொண்ட இப்பகுதி மக்களில் 18 பேர் ஜூன் மாதம் கைது செய்யப்பட்டனர்.

தாமிரபரணி ஆறு, வாலாஜாபேட்டை வன்னிமேடு, திருச்சி லால்குடி, அன்பில் ஆகிய பகுதிகளில் ஆற்றில் மணல் அள்ளவும், மணல் குவாரி அமைப்பதற்கு எதிராகவும் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். அத்துடன் முந்தைய ஆண்டில் தென் மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் தாது மணல் எடுக்கும் பிரச்சினையில் மட்டும் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் செய்த மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.

 

மனிதர்கள் உருவாக்கிய பேரழிவு

1_2680446a.jpg

நமக்கு நினைவு தெரிந்த நாட்களில் சென்னை சந்தித்த மிகப் பெரிய பேரழிவு, டிசம்பர் 1-ம் தேதி வந்த வெள்ளம்தான். நூறு வருடங்களில் இல்லாத மழையே இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டாலும், நவம்பர் 15, நவம்பர் 23 என அதற்கு முன்னதாக இரண்டு சிறு வெள்ளங்கள் தலைகாட்டிப் போனதற்குப் பிறகு அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது சென்னைவாசிகளுக்குத் தெரியும். இரவில், கடும் மழையில் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்பட்டது காரணமாகக் குறிப்பிட்டாலும், கடந்த 40 ஆண்டுகளில் சென்னை மாநகரம் கண்மூடித்தனமாக 20 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதே மோசமான பொருள்சேதம், உயிர்சேதத்துக்குக் காரணம் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள். புவியியல் ஆராய்ச்சிகளின்படி தட்டையான நிலப்பரப்பைக் கொண்ட சென்னை, சதுப்புநிலங்கள், இயற்கைக் கால்வாய்கள் என வெள்ள வடிகால்களை பரவலாகக் கொண்டிருந்தது. அந்த வடிகால்கள் அழிக்கப்பட்டதே தற்போதைய மோசமான பேரழிவுக்குக் காரணம்.

குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிகளில் சுனாமி, தானே என அடுத்தடுத்து பேரிடர்களை எதிர்கொண்டுவரும் கடலூரை மீட்பதிலும், எதிர்கால பேரிடர்களில் இருந்து அந்த ஊரை பாதுகாப்பதிலும் என்னவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதும் பதில் இல்லாத கேள்வியில் ஒன்றே.

 

ஏரியை மூட தீர்ப்பாயம் தடை

2_2680444a.jpg

சென்னையின் நீர்நிலைகள் அழிக்கப்பட்டதும் ஆக்கிரமிக்கப் பட்டதும்தான் வெள்ளத்துக்குக் காரணம் என்ற நிலையில், தற்போது எஞ்சியுள்ள போரூர் ஏரியை அழிவிலிருந்து தடுக்க இந்த ஆண்டின் மத்தியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் உள்ளூர் மக்களும் திரண்டனர். இதற்கிடையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னக அமர்வு, போரூர் ஏரியில் எந்தவிதமான கட்டுமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்வதை டிசம்பர் மாதம் தடை செய்துள்ளது. போரூர் ஏரியில் கரையை பலப்படுத்துவதாகச் சொல்லி போடப்பட்டுள்ள மண்ணை பொதுப் பணித் துறை அகற்ற வேண்டும் என்பதுடன், ஏரியிலிருந்து தனியார் தண்ணீர் எடுப்பதற்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

 

பல்லாயிரம் கோடி கிரானைட் முறைகேடு

5_2680441a.jpg

மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் குவாரி தோண்டிய முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் 2014-ல் நியமித்தது. சகாயம் தனது 600 பக்க அறிக்கையை டிசம்பர் மாதம் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையுடன் பல்வேறு பிரச்சினைகளை விவரிக்கும் 7,000 இணைப்புகளையும், 100 ஒளிப்பட ஆதாரங்களையும் அவர் அளித்துள்ளார். அறிக்கையில் சி.பி.ஐ. விசாரணை கோரி இருப்பதாக சகாயம் சார்பிலான வழக்கறிஞர் வி. சுரேஷ் கூறியுள்ளார். கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டது தொடர்பான விசாரணைக்கு உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக முன்வராத நிலையில், இரவு முழுக்க சம்பவ இடத்திலேயே சகாயம் தங்கியது பரவலான கவனத்தைப் பெற்றது.

 

மீத்தேன் போனது, ஷேல் வாயு வந்தது

6_2680440a.jpg

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி படுகையிலிருந்து மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு எழுந்த கடுமையான எதிர்ப்பை அடுத்து, கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் தனது செயல்பாடுகளை 2014 இறுதியில் நிறுத்திக்கொண்டது. மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு அனுமதி அளிப்பதை முழுமையாக நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் அரசாணை அக்டோபர் 8-ம் தேதி வெளியிடப்பட்டது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த டெல்டா மாவட்ட விவசாயிகளை கலக்கமடைய வைத்தது ஷேல் வாயு. டெல்டா பகுதியில் 30 இடங்களில் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் ஷேல் வாயு துரப்பணம் குறித்து ஆய்வு நடத்தியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே, போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் வாடும் டெல்டா விவசாயிகளுக்கு வேறு பல பிரச்சினைகளும் இப்படி சேர்ந்துகொண்டுள்ளன.

 

நகராத நியூட்ரினோ

7_2680439a.jpg

தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட இந்திய நியூட்ரினோ ஆய்வகப் பணி கடந்த ஏழு மாதங்களாக எந்த நகர்வும் இல்லாமல் இருந்து வருகிறது. இந்தத் திட்டத்துக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்காததே, இதற்கு முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல் நியூட்ரினோ ஆய்வகத்தில் எந்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ளக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் 2015 மே மாதம் பணிகளுக்குத் தடை விதித்தது. இந்த ஆராய்ச்சித் திட்டம் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடும், கதிரியக்கமும் வெளிப்படும் என்று சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள், அரசியல் வாதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

 

கைவிடப்படாத வழக்குகள்

4_2680442a.jpg

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து வருகிறது. இந்தக் காலத்தில் 2.27 லட்சம் பேருக்கு எதிராக 380 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் 248 வழக்குகளை மாநில அரசு திரும்பப் பெற்றது. ஆனால், இன்னும் 132 வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை. வெடிமருந்து வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்குகள் இதில் உள்ளன. இந்த வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி கூடங்குளம் போராட்டக் குழுவைச் சேர்ந்த முகிலன் டிசம்பர் மாத மத்தியில் காவல்துறையில் சரணடைந்தார்.

  • தொடங்கியவர்

ஜனவரி 4: ஆப்பிளில் அறிவியலைக் கண்டவரின் பிறந்த நாள் இன்று!

 

நியூட்டனை இயற்பியலின் பிதாமகர்களில் ஒருவர் என்று தான் இவரை சொல்ல வேண்டிருக்கிறது . பள்ளிக்காலத்தில் மக்குப்பையனாக அம்மாவின் அன்புக்கு ஏங்கிக்கொண்டு இருந்த இவர் இவ்வளவு பெரிய மேதையாக உருவெடுப்பார் என்றால் அப்பொழுது யாரும் நம்பி இருக்க மாட்டார்கள் தான் .

மண்டையின் மீது ஆப்பிள் விழுந்தது ;புவி ஈர்ப்பு விசை கண்டுபிடிப்பு நிகழ்ந்தது .அது பூமி சூரியனை சூற்றி வருகிறது என்பதை சந்தேகமின்றி நிரூபித்தது .இவர் எழுதிய Philosophiæ Naturalis Principia Mathematica நூல் தான் மெக்கானிக்ஸ் துறையின் வேதமானது . சூரிய ஒளியில் எழு வண்ணங்கள் உள்ளன என நிரூபிக்கவும் செய்தார் .பயன்படுத்த தகுந்த தொலைநோக்கியையும் நியூட்டன் வடிவமைத்தார் .

sirisaknewtown_1.jpg



ஹாலி தன்னுடைய வானியல் சார்ந்த குழப்பங்களுக்கான விடையை தேடிக்கொண்டு இருந்த பொழுது அதை நியூட்டன் ஏற்கனவே கண்டுவிட்டதை கண்டு பூரித்தார். அதை வெளியே கூட வெளியிடாமல் தன்னுடைய வேலையில் மூழ்கி இருந்தார் நியூட்டன். ஒரே சமயத்தில் தனித்தனியாக கால்குலஸ் எனும் அற்புதத்தை லிப்னிட்ஸ் மற்றும் நியூட்டன் கண்டார்கள். யார் அதை கண்டுபிடித்தது என்று சண்டை வேறு போட்டுக்கொண்டார்கள். நியூட்டன் பிறருக்கு அதை சொல்லித்தரவோ,எளிமையாக்கவோ மறுக்க லிப்னிட்ஸ் அதை அன்போடு செய்தார்.

உலகின் பெருமைக்கு உரிய ட்ரினிட்டி கல்லூரியின் மிக முக்கிய பொறுப்பில் இருந்த பொழுது அரசர் முதலிய யாருடைய பரிந்துரைக்கும் அடிபணிந்து பட்டம் வழங்க உறுதியாக மறுத்தார். அரசாங்க கஜானாவின் பொறுப்பாளராக இருந்து கள்ளப்பணம் புழக்கத்தில் ஈடுபட்டுவர்களை தூக்கு மேடைக்கு அனுப்பிய கறாரான இன்னொரு முகமும் அவருக்கு இருந்தது.

இறுதி வரை நியூட்டன் திருமணமே செய்து கொள்ளவில்லை . அவருக்கு உடலுறவு கொள்வதற்கான பயமான எரோடோபோபியா இருந்ததாக சொல்வார்கள் .தன்னை அறிவெனும் கடலின் ஓரத்தில் கிளிஞ்சல் பொறுக்கும் சிறுவனாகவே சொல்லிக்கொண்டார் அவர் . அவர் கூச்ச சுபாவம் கொண்டவாரகவே இருந்தார். தன்னை ரஷ்ய மன்னர் சந்திக்க விரும்பிய பொழுது ஹாலியை தான் அதற்கு அனுப்பி வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினராக அவரை நியமித்த பொழுது ஒரே ஒரு முறை தான் அவர் பேசினார் ; அது என்ன தெரியுமா ? "ஒரே புழுக்கமாக இருக்கிறது. ஜன்னலைத் திறக்க சொல்லுங்கள் ப்ளீஸ் !"

அலெக்சாண்டர் போப்பின் கவிதை தாங்கிய கல்லறையின் மீது தான் நியூட்டன் மீளாத்துயில் கொண்டிருக்கிறார்

இயற்கை மற்றும் இயற்கையின் ரகசியங்கள் இருளில் மூழ்கி இருந்தன கடவுள் நியூட்டனை அனுப்பினார் உலகத்தின் ரகசியங்கள் மீது ஒளி பாய்ந்தன!

  • தொடங்கியவர்

பனிக்காலத்தில் 'பளிச்'னு மின்னலாம்..!

 

 

னிக்காலத்தில் சருமத்தைப் பாதுகாக்க ஆலோசனைகள் தருகிறார், தேனியைச் சேர்ந்த அரோமா தெரபிஸ்ட் துர்காதேவி... 

p106a.jpg

‘‘சரும வறட்சிதான் பனிக்காலத்தின் பிரதான பிரச்னை. அதற்கான தீர்வுகளை வெளிப்பூச்சாக மட்டுமில்லாமல், உள் உணவுகளாகவும் பார்ப்போம்.

red-dot%287%29.jpg பனியால் பிளவுபட்டிருக்கும் சருமத்தில், தக்காளிப் பழக்கூழுடன் தயிர் கலந்து தடவி, சிறிது நேரம் காயவிட்டுக் கழுவினால்... வறட்சி நீங்கும்.

red-dot%287%29.jpg தினமும் 500 மில்லிகிராம் விட்டமின் `சி' சத்து, உடலில் சேர வேண்டும். பனிக்காலத்தில் இது மிகமுக்கியம். ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காயில் விட்டமின் `சி' சத்து உள்ளது.

red-dot%287%29.jpg குறிப்பாக, குளிர் சீஸனில் கிடைக்கும் கமலா ஆரஞ்சைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி பளபளக்கும். அதன் தோலைக் காயவைத்து பவுடராக்கி, தண்ணீரில் குழைத்து முகம், கை, கால்களில் தடவி, சிறிது நேரத்துக்குப் பிறகு கழுவினால், சருமம் ஜொலிக்கும்.

red-dot%287%29.jpg பாலாடை அல்லது பாலாடையுடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து... முகம், கை, கால்களில் தேய்த்து, ஊறிய பிறகு குளித்தால், சருமம் பளபளப்பாகும்.

red-dot%287%29.jpg பாலாடையுடன் கசகசாவை ஊறவைத்து அரைத்து முகம், கை, கால்களில் பூசி, சிறிது நேரத்துக்குப் பிறகு குளித்தால்... சருமம் மென்மையாகும்.

red-dot%287%29.jpg மக்காச்சோள மாவுடன் தயிர் கலந்து தினமும் உடம்பில் தடவி காயவிட்டு, பின்னர் கழுவி வர... சருமம் மின்னுவது சர்வநிச்சயம்.

red-dot%287%29.jpg இந்த சீஸனில் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவல்ல கிளிசரின் அதிகம் சேர்த்த சோப்பைப்p106b.jpg பயன்படுத்தலாம், அல்லது சோப்பைத் தவிர்த்து பால், தயிர் போன்றவற்றை உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்கலாம்.

red-dot%287%29.jpg பனிக்காலத்தில் உடலுக்கு கடலை மாவு, பயத்தம் மாவு தேய்த்துக் குளிக்கக்கூடாது. அது சருமத்தில் இருக்கும் கொஞ்சநஞ்ச எண்ணெய்ப் பசையையும் எடுத்துவிடும்.

red-dot%287%29.jpg மிகவும் வறண்ட சருமம் உடையவர்களுக்கு பனிக்காலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்பு போன்றவை ஏற்படலாம். இவர்கள் தினமும் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து உடலில் தேய்த்துக் குளித்து வரலாம்.

red-dot%287%29.jpg சரும நோய்களைத் தவிர்க்க, மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.

red-dot%287%29.jpg பனிக்காலத்தில் வறண்ட சருமத்துக்கு ஏற்றதாக சிம்பிள் மேக்கப் செய்துகொள்வது நல்லது.

red-dot%287%29.jpg ஒரு டம்ளர் வெந்நீரில் அரை மூடி எலுமிச்சைச் சாறு, ஓரிரு ஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேனி மினுமினுப்பாவதோடு தேவையற்ற சதை குறைந்து உடம்பும் ‘சிக்’ ஆகும்.

red-dot%287%29.jpg இந்த சீஸனில் பொதுவாக ஜீரணம் தாமதமாகும் என்பதால், கொழுப்புமிக்க உணவுகளைத் தவிர்க்கலாம். பால், பழங்கள், காய்கறிகள் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். காய்கறி சூப், கோழி சூப், மிளகு ரசம் அருந்தலாம்.

red-dot%287%29.jpg பப்பாளி, ஆப்பிள் பழங்கள் தொடர்ந்து சாப்பிடுவதும், அதிகம் தண்ணீர் குடிப்பதும் சருமத்துக்கு ஆரோக்கியம் தரும். குறிப்பாக, வறண்ட சருமத்தினருக்கு இது மிக உகந்தது.’’

  • தொடங்கியவர்

ஜனவரி 4: கண் பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கிய லூயி பிரெயில்
பிறந்த தினம் இன்று

சிறுவனாக அப்பாவின் பட்டறையில் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது ஊசி குத்தி ஒரு
கண்பார்வை போனது ; இன்னொரு கண்ணிலும் பார்வை பரிவுக்கண் நோய் தாக்கப்பட்டு
போனது . மனம் தளர்ந்து போகாமல் இசையை கற்றார் இவர் ; இவரின் ஆர்கன் இசை
ஒலிக்காத தேவாலயங்களே இல்லை என்கிற அளவுக்கு தேறினார் .

பிரெஞ்சு படைகள் இரவில் செய்திகளை புள்ளிகளை கொண்டு பரிமாறிக்கொள்ளும் முறையை
பற்றி கேள்விப்பட்டார் அதையே சில புத்தகங்களை வாசிக்க பயன்படுத்த ஆரம்பித்தார் .
ஆறு புள்ளிகளை கொண்டு தடவி வாசிக்கிற முறையில் தன் கண்ணை குத்திய
ஊசியைக்கொண்டே முறையை உருவாக்கினார் . அவர் உயிருடன் இருக்கும் வரை இம்முறை
அமலுக்கு வரவில்லை .அவர் காசநோயால் இறந்து இரண்டு வருடங்கள் கழித்தே அம்முறை
அமலுக்கு வந்தது .இருளில் இருந்த அவரைப்போன்ற நண்பர்களுக்கு வெளிச்சத்தின்
சாளரங்களை திறந்துவிட்ட அவரை நினைவு கூர்வோம்

3686_1048711578520965_193259773415708162

  • தொடங்கியவர்

10649467_965628070152554_820867981475754

அட ஆச்சர்யம்!

வெவ்வேறு வருடத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.