Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

 

மின்னணுத்தோல்: உடலில் ஒட்டிக்கொண்டு டிவி பார்க்கலாம்

உங்கள் உடலின் தோல் மீது நீங்கள் தொலைக்காட்சியை பார்க்க முடிகிற உலகை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்....

இது ஏதோ அறிவியல் கற்பனைக்கதையல்ல. ஜப்பான் விஞ்ஞானிகள் வடிவமைத்திருக்கும் மின்னணு தோல் அதை சாத்தியமாக்கும் திறன் வாய்ந்தது.

இந்த மின்னணு தோல் உலகின் மிக மெல்லிய, நெகிழ்வான மின்கடத்தியாக கருதப்படுகிறது.

இதை இரண்டாவது தோலைப்போல அணியலாம். அலங்காரத்துக்காக தோலில் ஒட்டிக்கொள்ளும் செயற்கை பச்சைக்குத்தல் ஓவியம் போன்றது இது.

அதேசமயம் தோலின் அசைவுக்கேற்ப மின்சாரத்தை கடத்தும் ஒளி உமிழும் டியோடுகள் இதில் உள்ளன.

இது மனித தோல் செல்லைவிட பத்து மடங்கு மெல்லிசானது. இறகைவிட எடைகுறைந்தது; லேசானது.

இதை பயன்படுத்தி மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க முடியுமென விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

தொலைக்காட்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு நடவடிக்கைகள் முதல் ஆரோக்கியத்தை கண்காணிப்பது என்கிற அத்தியாவசியத்தேவை வரை இந்த மின்னணுத்தோல் பலவற்றை சாத்தியமாக்கவல்லது என இதை உருவாக்கிய விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்! #HBDJackiechan #VikatanExclusive

ப்ரல் 7, 1954-ல் பிறந்தவர் 'ஜாக்கி சான்'. ஹாங்காங்கைச் சேர்ந்த இவர் ஒரு மார்ஷியல் ஆர்ட்டிஸ்ட், ஆக்டர், டைரக்டர், தயாரிப்பாளர், ஸ்டன்ட் மேன், சிங்கர் என சினிமாவில் என்னென்ன துறைகள் உள்ளனவோ அனைத்திலும் தன் திறமையை வளர்த்துக்கொண்டார். 1960-ல் அவரது சினிமா பயணத்தைத் தொடங்கி 150-க்கு மேல் படங்கள் நடித்திருக்கிறார். அந்த ஜாம்பவானைப் பற்றி சில விஷயங்கள்!

ஜாக்கி சான்

* ஜாக்கியின் உண்மையான பெயர் 'சான் காங்-சாங்'. என்ன பாஸ் வாயிலேயே நுழையலையா? சார்கஸ் என்பவர், சீன அரங்கத்திற்கு ஸ்பையாக வேலை பார்த்து வந்தபோது 'லிலி'யைச் சந்தித்தார். அவர் ஒரு ஸ்டேஜ் பெர்ஃபார்மர். அது மட்டுமின்றி அபின் போன்ற போதைப்பொருள் டீலர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சார்லஸ், லிலியைக் கைதுசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின் உண்மை உணர்ந்து லிலியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் சார்லஸ். இந்தத் தம்பதியினருக்கு பிறந்தவர் ஜாக்கி சான். இவருக்கு ஏழு வயது இருக்கும்போது ஜாக்கியை ஹாங்காங்கிலேயே விட்டுவிட்டு ஆஸ்திரேலியா சென்றுவிட்டனர் பெற்றோர்கள். காரணம் வேலையின்மை. ஜாக்கி சான் படித்த பள்ளி ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதிகாலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கும் வகுப்பு, நள்ளிரவில்தான் முடியும். அதற்கு நடுவில் அவரது அப்பா சிறு வயதில் சொல்லிக்கொடுத்த குங்ஃபூவை ரெகுலராகப் பயிற்சி செய்து வந்தார். அதுமட்டுமில்லாமல் நாடகம், இசை, போன்ற துறைகளிலும் ஈடுபாடு அதிகமாக இருந்தது. தன்னுடைய ஏழாவது வயதில் 'பிக் அண்ட் லிட்டில் வாங் இன் டின் பார்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தன்னுடைய 17-வது வயதில் 'புரூஸ் லீ' நடித்த 'ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி', 'என்டர் தி ட்ராகன்' படத்தில் நடித்த எதிரிகளுள் ஜாக்கியும் ஒருவர். புரூஸ் லீயின் இறப்பிற்குப் பின் புதிய புரூஸ் லீ என்று ஜாக்கியைப் புகழ்பாடினர். 

* இவரது சிறப்பம்சங்கள் என்று லிஸ்ட் எடுத்தால் ஏராளமான விஷயங்களைப் பட்டியலிடலாம். சண்டையில் எப்படி பாஸ் காமெடி பண்ணுவது?னு கேள்வி கேட்கிறவங்களுக்கு மத்தியில் அதிலேயும் ட்ரேட் மார்க்காக ஆனார் ஜாக்கி. ப்ரூஸ் லீ, டோனி ஜா, டானி யென் போன்ற ஆக்‌ஷன் நடிகர்களின் படங்களில் சண்டைக்காட்சிகள் எல்லாமே வேற லெவலில் இருக்கும். ஆனால் இவர் அவர்கள் லிஸ்டில் இல்லாமல் தனக்கென்று ஓர் அடையாளத்தை உண்டாக்கிக்கொண்டார். ஆம்... இவர் படங்களில் காமெடி கலந்த சண்டைக் காட்சிகள் ஏராளம். ரசிகர்களை நெகிழ வைப்பதில் ஆரம்பித்து சிரிக்க வைப்பது வரை ஜாக்கியை விட்டால் வேறு ஆளே கிடையாது. அந்த அளவிற்கு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். குங்ஃபூ வகைகளுள் ஒன்றான ட்ரங்கன் பாக்ஸிங்கில் கிங் இவர். 'ட்ரங்கன் மாஸ்டர்' படம் பார்த்தவர்களுக்குத் தெரியும்.

ஜாக்கி சான்

* 1984-ல் 'வீல்ஸ் ஆன் மீல்ஸ்' எனும் படத்தில் உலகக் குத்துச்சண்டை சாம்பியனான பென்னி தி ஜெட் அர்குய்டெஸ் என்பவருக்கும் ஜாக்கிக்கும் சண்டைக் காட்சி இடம் பெற்றது. அதில் உண்மையிலேயே ஜாக்கியை அர்குய்டெஸ் அடித்துவிட்டார். அதில் கோபமான ஜாக்கி அவரைச் சண்டைக்கு அழைத்தார். அந்தக் காட்சி படத்திலும் இடம் பெற்றதையடுத்து  மிகுந்த வரவேற்பையும் பெற்றது. அதைத் தொடர்ந்து 1988-ல் வெளியான ஜாக்கியின் 'ட்ராகன்ஸ் ஃபார் எவர்' படத்திலும் அர்குய்டெஸ் இடம் பெற்றார். 

* ஜாக்கி, தான் நடிக்கும் எல்லாப் படங்களிலுமே சண்டைக் காட்சிகளிலும், ஸ்டன்ட் காட்சிகளிலும் டூப் போடாமல் உண்மையிலேயே அந்தக் காட்சியை தத்ரூபமாக நடிப்பதில் வல்லவர். 1986-ல் அவர் நடித்த படத்தில் கிளைகளைப் பிடித்து ஏறும் காட்சி ஒன்று இடம்பெற்றது. முதல் டேக்கில் திருப்தியடையாத ஜாக்கி இரண்டாவது டேக்கில் கிளைகளை பிடிக்க முடியாமல் 40 அடிக்கு மேலிருந்து கீழே ஒரு பாறையில் தவறி விழுந்துவிட்டார். அதன் விளைவாகத் தலையில் எலும்பு முறிந்து காதிலிருந்து ரத்தம் வரத் தொடங்கியது. சிகிச்சையின் முடிவில் வலதுகாதின் செவித்திறன் லேசாகக் குறைந்துவிட்டது. ஹாலிட்டில் இவர் செல்லமாக 'மிஸ்டர்.பெர்ஃபெக்ட் (Mr. Perfect) என்று அழைக்கப்பட்டார். 'ட்ராகன் லார்ட்' என்ற படத்தில் 10 நிமிடம் இடம் பெறும் காட்சிக்காக ஜாக்கி பல டேக்குகளை எடுத்தார். அதற்காக கின்னஸிலும் பெயர் பெற்றார். ஆனால் ஜாக்கிக்கு ஹாலிவுட்டில் மிகுந்த ஈடுபாடு இல்லை. 'ரஷ் ஹவர்', 'ஷாங்காய் நூன்' போன்ற ப்ளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்த பிறகு 'அமெரிக்கன் காமெடி என்ன ரகம்? என்றே எனக்குத் தெரியவில்லை' என ஒரு ப்ரஸ்மீட்டில் குறிப்பிட்டார்.

ஜாக்கி சான்

இப்படி இவரது புகழ்பாடும் தருணங்கள் ஏராளமாக உள்ளன. இப்படி நடிப்புக்கென்றே தன்னை அர்ப்பணித்த ஜாக்கிக்கு ஹேப்பி பிறந்தநாள்!  

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

'மகளுக்காக.........?' - ஒரு பிச்சைக்காரரின் ரெண்டு வருஷக் கனவு! #மகளதிகாரம்

’இரண்டு வருஷமாச்சு சார். இன்னைக்குத் தான் நிறைவேத்த முடிஞ்சது..’, பெற்ற மகளின் ஆசையை நிறைவேற்றிய மகிழ்ச்சி அந்தத் தந்தையின் கண்களில் தெப்பமாகத் தேங்கியிருந்தது. வங்கதேசத்தில், வாகன நெருக்கடி நிறைந்த சிக்னலில் பிச்சை எடுக்கும் ஒருவர் சொல்வது இது!

The Day

"இன்னைக்குத் தாங்க எங்களுக்கு ரொம்ப சந்தோஷமான நாள். என் பொண்ணு சந்தோஷமா இருக்கா. அது தானங்க ஒரு தகப்பனுக்கு வேணும். முழுசா இரண்டு வருஷத்துக்குப் பின்ன இன்னைக்குத் தான் மகளுக்கு புதுத்துணி எடுக்கக் கடைக்குப் போனோம். 60 ஐந்து டாக்கா (வங்காளதேசத்தில் 1டாக்கா= 0.80 இந்திய பைசாக்கள்) நோட்டுகளைக் கொடுத்தேன். 'பிச்சைக்காரனா நீ?' எனக் கொந்தளித்த கடைக்காரனிடம் மல்லுக்கட்டவா முடியும். மனுஷன் உண்மையத்தான சொல்லிருக்கான்.

ஆமாங்க. பத்து வருஷத்துக்கு முன்ன, இப்படியெல்லாம் பிச்சையெடுப்பேன்னு நான் நினைச்சுக்கூடப் பார்த்ததில்ல. எப்படியோ இன்னைக்கு கஷ்டப்பட்டு எம்புள்ளைக்கு புதுத்துணி எடுத்தாச்சு. இந்த நாள் முழுக்க எம்பொண்ணு கூட தாங்க. இரண்டு பேரும் சேர்ந்து இன்னைக்கு முழுக்க விளையாடப்போறோம். என்ன.. ஒரு நாள் சம்பாதிக்க முடியாமப் போகும். ஆனா இதெல்லாம் பார்த்தா ஒரு நாள் முழுக்க பிள்ளைங்க கூட இருக்குற சந்தோஷம் கிடைக்குமா? பக்கத்து வீட்டுல கேட்டு ஓசியில போன் வாங்கிட்டு வந்தேன். அதுல கேமராலாம் இருக்கு. வாழ்க்கையில மறக்கவே முடியாத இந்த நாளை போட்டோ புடிச்சு வைக்க ரொம்ப ஆசை. இது மாதிரி நிறைய போட்டோ என் மகள வச்சு எடுக்கணுங்க. அதுக்காகவே ஒரு நாள் போன் வாங்கணும்.

எந்த மனுஷனுக்கு ஆச இல்ல. எனக்கும் இருந்துச்சு. பத்து வருஷத்துக்கு முன்ன நடந்த ஒரு ஆக்சிடென்ட்டுல கை மட்டும் போயிடுச்சு. உசுரோட தான் இருக்கோமான்னு என முதல்ல நம்பிக்கை இல்லாமத்தான் மீண்டு வந்தேன். இப்போ தினமும் நாலு சிக்னல்ல நின்னு பிச்சை எடுத்திட்டு இருக்கேங்க. ஒவ்வொரு நாளும் எனக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு, நான் பிச்சை எடுக்குறத கண்ணுல தண்ணி வச்சுட்டு பாத்துட்டே நிக்கும் எம்புள்ள. ஆனா, ஒரு நாளும் தனியா விட்டுப்போகாதுங்க. அப்பா ரோட்ல நிக்கும் போது எதுவும் ஆயிடக்கூடாது எனக் கடைசி வரை கூடவே தான் இருக்கும்.

'சுமையா'. இதுதான் என் மகளுக்கு நான் வச்ச பேரு. என்னைக்குமே என்னை சுமையா நினைக்காம அவ தான் பாத்துக்குறா. ஒவ்வொரு நாளும் பிச்சை எடுத்து முடிச்சு வீட்டுக்கு போகும் போது, கடைவீதிக்கு போயிட்டு தான் போவோம்.  மழை இரண்டு பேருக்கும் பிடிச்ச விஷயம். மழை வந்தா முழுசா நின்னு விளையாடாம நகர மாட்டோம். இந்த மாதிரி ஒவ்வொரு நாளும் நிறைய சந்தோஷம் இருந்துட்டே தான் இருக்குது. சில நாள் மட்டும் பீஸ் கட்டாம ஸ்கூலுக்கு போக முடியலையேன்னு புள்ளைங்க வருத்தப்படுவாங்க. வாழ்க்கை தான் ஒவ்வொரு மனுஷனுக்கும் பாடம் சொல்லித்தர்ற ஸ்கூல்ன்னு சொல்லி தேத்துவேன்.

நிறைய நேரம் புள்ளைங்க ஆசைய நிறைவேத்த முடியலையேனு வருத்தம் இருக்கத்தான் செய்யுது. ஆனா எவ்ளோ கஷ்டம் வந்தாலும் ராத்திரி புள்ளைங்க வந்து நம்மள கட்டிப்பிடிச்சு தூங்கும்போது வரும் பாருங்க ஒரு சந்தோஷம், எல்லா கஷ்டமும் நொடியில பறந்து போய்டும். வாழ்க்கை எப்படியிருக்கும்ன்னுலாம் யோசிச்சுக்கிட்டே இருக்கக்கூடாதுங்க. இந்த நாள்.... நானும் என் மகளும் ரொம்ப சந்தோசமா இருக்கோம். இன்னைக்கு நான் தான் ராஜா, என் சுமையா தான் என் இளவரசி. இதாங்க எங்க ராஜாங்கம். சந்தோஷத்த எப்பவும் கூட வச்சிருக்கேன். இன்னைக்கு நாள் நிறைவா இருந்துச்சு.  நாளைக்கு பிச்சை எடுக்க கிளம்பணும்" என எழுந்துச் சென்றனர் ராஜாவும், இளவரசியும்!

'பேரன்பும்...பேருவகையும்.. நம் நிறைவில்தான் இருக்கிறது' என சொல்லாமல் சொல்லிச் சென்றாள் சுமையா!

நன்றி: கௌசர் உசேம், GMB ஆகாஷ்

 

Yesterday, I was able to buy a new dress for my daughter after two years. While I handed sixty pieces of five taka note to the seller, he yelled at me by asking if I am a beggar. My daughter held my hand and cried to leave the shop by saying that she did not want to buy any dress. I wept off her tears with one hand. Yes, I am a beggar. Ten years ago I had never thought in my nightmares that I have to live by begging from people. The night coach fell from the bridge and unbelievably I was alive. I was alive by becoming a disable. My youngest son often ask me where had I left my other hand. And my daughter Sumaiya feed me every day by saying she knows how difficult it is to do all work with one hand.

After two years my daughter is wearing a new dress, that’s why today I brought her with me to play for some time. May be I will not be able to earn anything today, but I wanted to roam around with my little girl. I secretly borrowed this mobile phone from my neighbor without informing my wife. My daughter has no picture and I want to make this day memorable for her. When one day I will have a phone I will take a lot of pictures of my children. I want to keep good memories. It’s very difficult to send my children to school, but I am educating them all. Sometimes they cannot attend exam because giving exam fees is not always possible by me. On those days they feel very sad then I tell them, sometimes we can miss exams because the biggest exam is life which we are giving every day.

Now I will go for begging. I will place my daughter in a signal where she will wait for me. I will look at her from distant while begging. I feel shame while she looks at me when I lend my one hand to others. But she never leaves me alone. Because there are big cars, she thinks accident can happen again, these cars could run on me and I would die. Whenever I managed to get some money I return to home by holding my daughter’s hand. We do bazaar on our way and my daughter always carry that bag. During rain we love to get wet and talk about our dreams. In someday I do not get any money, on those days we return to home silently. On those days I feel like to die but at night when my children fall in sleep by holding me I feel being alive is not a bad thing. Only bad is when my daughter waits for me in the signal by keeping her head down. When I cannot look at her eye while begging. But today is different. Because today my daughter is very happy. Today this father is not a beggar. Today this father is a king and here is his princess.

- MD. Kawsar Hossain

 

Bild könnte enthalten: 1 Person, steht und im Freien

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பறந்து வந்த மெத்தை : காணொளி

ஆஸ்திரேலியாவில் முன்னால் சென்ற வாகனத்திலிருந்து மெத்தை பறந்து வந்து ஒரு ஓட்டுநர் மீது விழுந்த காட்சி இது.

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்: கப்பல் உடைந்தால் மிதக்குமா?

 
ship_3150892f.jpg
 
 
 

மேகங்களுக்கிடையே பறந்து கொண்டிருக்கும் விமானங்கள் விபத்தாகி, உடைந்து நொறுங்கி, விழுகிற சோகமான சம்பவங்களை அடிக்கடி பார்க்கிறோம் அல்லவா? இது போலவே கப்பல்களும் விபத்துகளைச் சந்திக்கின்றன. இப்படி உடைந்து கடலில் நொறுங்கிப் போகிற கப்பல்களைத் தேடும் பல வீரர்கள் ஈடுபடுவதையும், விழுந்துபோன விமானம் அல்லது கப்பல் பாகத்தைக் கண்டெடுப்பதையும்கூடச் செய்திகளாகப் பார்க்கிறோம்.

கப்பலில் உடைந்துபோன பாகங்கள் கடல் மேல் மிதக்கத்தானே வேண்டும். ஈஸியாகத் தேடிவிடலாமே! ஏன் கப்பலைக் கண்டுபிடிக்க ரொம்ப நாட்கள் எடுத்துக்கொள்கிறார்கள்? இல்லை அப்படி மிதக்க வாய்ப்பில்லை. கப்பலின் பாகங்கள் உறுதியான உலோகங்களால் செய்யப்படுவதால் அவை கடலில் மூழ்கிவிடும். அதற்கும் சாத்தியமில்லை. காற்றறைகள் நிரம்பிய கப்பலின் பகுதிகள் எடை குறைந்து இருப்பதால் முழுவதுமாக மூழ்காது. கடலின் நடுப்பகுதியில் மிதந்துகொண்டேயிருக்கும்.

ஏன், உடைந்த கப்பல்கள் முழுமையாக மூழ்குவதுமில்லை, முழுமையாக மிதப்பதுமில்லை? இங்குதான் அறிவியலின் அடுத்த விளையாட்டு ஆரம்பமாகிறது.

கடலில் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அழுத்தமும் அதிகரிக்கிறது. 10 மீட்டர் ஆழத்தில் ஒரு பொருள் கடல் நீரில் மூழ்கியிருந்தால் அதன் மீது ஒரு கிலோ கிராம் எடை கூடுதலாகச் செலுத்தப்படுகிறது.

கடல் நீரில் நீச்சலடிக்கும் ஒரு வீரர் 50 கிலோ எடை கொண்டவராக இருந்தால், 20 மீட்டர் ஆழத்தில் அவர் மூழ்கும்போது அவருடைய எடை 60 கிலோவாக மாறிவிடும். இதற்குக் காரணம் கடல் நீரின் அழுத்தம்தான்.

ஆழம் அதிகரிக்க அதிகரிக்க கடல் நீரின் அழுத்தம் வெவ்வேறு விகிதங்களில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுபோல நீரில் உள்ள பொருள்களும் மிக அதிகமான அழுத்தத்துக்கு உள்ளாகின்றன. ஓர் உதாரணம் பாருங்கள்.

காபி குடிக்கிற கண்ணாடி டம்ளரைக் கடலில் ஐந்து கிலோ மீட்டர் ஆழத்துக்கு எடுத்துச் சென்றால், அது உடைந்து நொறுங்கிவிடும். கடலின் அழுத்தம் அப்படி. தண்ணீரில் ஈர்ப்பு விசை அதிகரித்து, மூலக்கூறுகளின் தீவிர அழுத்தம் காரணமாகத் தண்ணீர் மிக அதிக அழுத்தம் உள்ளதாக மாறிவிடுகிறது.

இந்த தண்ணீரின் அழுத்தம் என்பது சாதாரண விஷயம் இல்லை. இவ்வாறு தண்ணீர் அழுத்தப்பட்டு நிற்பதால்தான் உலகம் பாதுகாப்பாக இருக்கிறது. ஒரு வேளை தண்ணீர் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு முழு கன அளவை அடைந்தால், கடல் நீர் மட்டம் உலக அளவில் பல மீட்டர் உயர்ந்துவிடும். பல லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலப்பரப்பு நீரில் மூழ்கிவிடும்.

தண்ணீரின் இவ்வளவு அழுத்தத்தையும் மீறி இரும்பு மட்டும் எப்படி மூழ்கிறது? தண்ணீரைவிட அழுத்தமாக இரும்பு இருக்கிறது. ஒரு வேளை தண்ணீரில் இப்போது இருப்பதைப்போல, எட்டு மடங்கு அடர்த்தியை அதிகரிக்கச் செய்ய முடியுமானால் தண்ணீர் மீது இரும்பை மிதக்க விட முடியும். ஆனால், அது சாத்தியமில்லை. வலுக்கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்று முயற்சித்தால்கூட 100 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட ஆழத்தில்தான் அது சாத்தியம்.

அந்த வகையில் பார்த்தால், உடைந்த கப்பல்களின் உதிரி பாகங்கள் நீருக்கு அடியில்தான் மூழ்கிக் கிடக்குமே தவிர, அவை எங்கோ ஒரு பகுதியில் மிதந்துகொண்டிருக்க வாய்ப்பில்லைதானே! ஆனால், உடைந்து போன பாகங்கள் கடலின் பாதி ஆழத்தில் மிதக்கின்றனவே, அது எப்படி?

இரண்டு காரணங்கள் அல்லது நிபந்தனைகளின் அடிப்படையில் இவை மிதக்கின்றன.

முதல் காரணம், கடலின் ஆழங்களில் அழுத்தம் அதிகரிக்கும்போது அங்கு அதே ஆழத்தில் மிதக்கும் பொருள்களின் அழுத்தமும் அதிகரிக்கிறது. எனவே தண்ணீருக்கும், பொருளுக்கும் அழுத்த மாறுபாடு ஏற்படுவதில்லை. எனவே பொருள் தொடர்ந்து மிதக்கிறது.

இரண்டாம் காரணம், கப்பல்களின் காற்றறைகளில் உள்ள காற்று வெளியே போவதற்கு வழி இல்லாமல் போகும்போது குறைந்த ஆழம் வரை மட்டுமே மூழ்கி அதே ஆழத்தில் தொடர்ந்து மிதக்கும்.

கடலில் ஆழமும் அழுத்தமும் செலுத்துகிற விசைகளையும், தடைகளையும் தாண்டிதான் ஜீவராசிகள் வாழ்கின்றன. கப்பல்கள் தொடர்ந்து பயணம் செய்கின்றன.

(காரணங்களை அலசுவோம்)

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

வால்ட் டிஸ்னி மிக்கி மௌஸின் படத்தை வரைந்த தினம்: ஏப்ரல் 7, 1928

உலகப் புகழ் பெற்ற ஓவியரும், மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியரும் வால்ட் டிஸ்னி தன்னுடைய கற்பனை கதாபாத்திரமான மிக்கி மௌஸ் படத்தை 1928 ஆண்டு இதே நாளில் வரைந்தார். இதையடுத்து அவர் டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றையும் உருவாக்கினார். மேலும் இதே தேதியில்

 
வால்ட் டிஸ்னி மிக்கி மௌஸின் படத்தை வரைந்த தினம்: ஏப்ரல் 7, 1928
 
உலகப் புகழ் பெற்ற ஓவியரும், மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியரும் வால்ட் டிஸ்னி தன்னுடைய கற்பனை கதாபாத்திரமான மிக்கி மௌஸ் படத்தை 1928 ஆண்டு இதே நாளில் வரைந்தார். இதையடுத்து அவர் டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றையும் உருவாக்கினார்.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்

* 1521 - பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் சேபு தீவை அடைந்தார்.

* 1795 - பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது.

* 1827 - ஆங்கிலேய வேதியியலாளர் ஜோன் வோக்கர் தான் கண்டுபிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்டார்.

* 1906 - ஸ்பெயின், மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் மொரோக்கோ வந்தது.

•  1935- திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பிறந்த தினம்.

* 1946 - பிரான்சிடம் இருந்தான சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.

* 1948 - சீனாவில் ஷங்காயில் பௌத்தமத தலம் ஒன்று எரிந்ததில் 20 புத்த குருக்கள் கொல்லப்பட்டனர்.

* 2001 - மார்ஸ் ஒடிசி விண்கலம் ஏவப்பட்டது.

* 2003 - அமெரிக்கப் படைகள் பக்தாத் நகரைக் கைப்பற்றினர். சதாம் உசேனின் அரசு இரு நாட்களின் பின்னர் வீழ்ந்தது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

நோய்களைக் குறைக்க காடுகளுக்கு போங்க

ஜப்பானில் 1982-ம் ஆண்டு `ஷின்ரின்-யோக்கு' (Shinrin-yoku) என்னும் பெயரில் தேசிய சுகாதாரத் திட்டத்தை ஜப்பான் அரசு நிறுவியது. மரங்களுடன் நேரத்தை செலவிடுவதே இந்த 'ஷின்ரின் யோக்கு' ஆகும். உலக சுகாதார மையம் அமைக்கப்பட்ட நாளான ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

forest

இந்த உலகம் அறிவியல் ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக எத்தனையோ மாற்றங்களைக் கண்டு வந்தாலும், அந்த மாற்றங்கள் அனைத்தும் வளர்ச்சியை நோக்கித்தான் பயணிக்கிறது என்று உறுதியாகக் கூற முடியாது. ஒன்றை மட்டும் உறுதியாக கூற முடியும், நம்முடைய முன்னோர்களுக்கு இருந்த உடல் ஆரோக்கியம் தற்போதுள்ள தலைமுறைகளுக்கு இருப்பதில்லை.

மன அழுத்தம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி 2020-ம் ஆண்டுகளில் மனித வாழ்க்கையை முடக்கும் நோய்களில் மன அழுத்தம் தான் முதலிடத்தில் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னரே மன அழுத்தத்தை கையாள்வதற்கு ஜப்பானியர்கள் கடைபிடிக்கும் வழிமுறைகள் புதுமையானது மட்டுமல்ல, மிகவும் எளிமையானதுகூட. மரங்கள் சூழ்ந்திருக்கும் காடுகளில் ஜாக்கிங்கோ, உடல்பயிற்சியோ தான் செய்யவேண்டும் என்று அவசியமில்லை. நீங்கள் ரிலாக்ஸாக இயற்கையுடன் இணைந்திருந்தாலே போதுமானது என்கிறது ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு.

jadhav payeng

காடுகளுக்குச் சென்று மரங்களுடன் நேரம் செலவிடுவதால், உடல் மற்றும் உளவியல் ரீதியாக ஏற்படும் பல்வேறு பலன்களை ஜப்பானிய விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். காடுகள், ரத்த அழுத்தத்தையும், மன உளைச்சலுக்குக் காரணமான ஹார்மோன்களின் உற்பத்தியையும் குறைக்கின்றன. மனஅழுத்தத்தைக் குறைத்து, ஆற்றலை அதிகரிக்கச் செய்கின்றன. காடுகளில் தூய்மையான காற்றைச் சுவாசிக்கலாம் என்பது ஒருபுறம் இருந்தாலும், அங்குள்ள மரங்கள் பிடோனிஸிட்ஸ் (Phytonicides) எனப்படும் ஒருவகையான  எண்ணெயை வெளியேற்றுகிறது. அது உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. நாமும் மன அழுத்தத்தை குறைக்க காடுகளை நோக்கி பயணிக்கலாமே... சென்னையில் வசிப்பவர்கள் குறைந்த பட்சம் மாதம் ஒருமுறை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குச் சென்று வரலாமே...

  • தொடங்கியவர்

விக்ரம் போடும் 'ஸ்கெட்ச்' - கலக்கல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் நடிக்கும் 'ஸ்கெட்ச்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இது விக்ரமின் 53-வது படமாகும். இந்தப் படத்தை விஜய் சந்தர் இயக்குகிறார். எஸ்.எஸ்.தமன் படத்துக்கு இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தை தயாரிக்கிறார். 

Sketch poster

தமிழ்த் திரை உலகில் தன்னுடைய இயல்பான நடிப்பாலும், வித்தியாசமான கதாபாத்திரங்களாலும் உச்சத்தை அடைந்தவர் விக்ரம். அவர் கடைசியாக நடித்து வெளிவந்த 'இருமுகன்' படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. பொதுவாக ஒருபடத்துக்கு இரண்டு ஆண்டுகள் வரை செலவிடும் விக்ரம், இந்த முறை ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் டீசர் வெளியானது.

இது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் விக்ரமின் 53-வது படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. 'ஸ்கெட்ச்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை விஜய் சந்தர் இயக்குகிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். 

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஏப்ரல் 08
 
 

article_1428472231-ISISTRAILOFTERROR.jpg1929: இந்திய சுதந்திர போராட்டத்தின்போது பகத் சிங், பதுகேஷ்வர் தத் ஆகியோர் டெல்லி சட்டசபையில் குண்டுவீசினர்.

1938: கொபி அனான், நோபல் பரிசு பெற்ற முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்

1950: இந்தியாவும் பாகிஸ்தானும் லியாகத் - நேரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

1961: பாரசீக வளைகுடாவில் எம்.வி. தாரா கப்பலில் ஏற்பட்ட வெடிப்புச்சம்பவத்தில் 281 பேர் பலி.

1970: எகிப்தில் இஸ்ரேலிய விமானங்கள் குண்டுவீசியதால் 46 பாடசாலை சிறார்கள் பலி.

1973: உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிக்காஸோ காலமானார்.

1985: சுமார் 2000 பேர் பலியான போபால் விச வாயு கசிவுக்கு சம்பவத்திற்காக யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கு எதிராக இந்தியா வழக்குத் தொடுத்தது.

1992: இதய சத்திர சிகிச்சைக்கான குருதி பரிமாற்றத்தின் மூலம் தனக்கு எயிட்ஸ் நோய் ஏற்பட்டதாக ஓய்வு பெற்ற அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான ஆர்தர் ஆஷ் அறிவித்தார்.

2000: அரிசோனாவில் அமெரிக்கக் கடற்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 19 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

2004: டார்பூர் மோதலை முடிக்கு கொண்டுவரும் முகமாக சூடான் அரசாங்கத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

2005: பாப்பரசர் 2 ஆம் அருளப்பர் சின்னப்பரின் இறுதிக்கிரியையில் சுமார் 40 லட்சம் பேர் பங்குபற்றினர்.

2008: காற்றாலைகளை ஒருங்கிணைக்கும் உலகின் முதலாவது கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் பஹ்ரைனில் நிறைவுபெற்றன.

2013: சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் இணைவு. இவர்கள், அல்-நுஸ்ரா முன்னணியுடன் இணைந்து 'இஸ்லாமிய ஈராக் மற்றும் ஆஸ்-ஷாம் அரசு' என்ற பெயரில் இயங்குவதாக அறிவித்தனர்.

2013:  ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் மார்கரெட் தாட்சர் உயிரிழந்தார். (பி. 1925)

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஐநா-வின் அமைத்திக்கான இளம் தூதராகிறார் மலாலா

பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடி, ஓர் புரட்சியை விதைத்து மரணத்தையும் எதிர்த்து மீண்டு வந்தவர் மலாலா யூசுப்சாய். ஐநா-வின் அமைதிக்கான தூதராகப் பதவியேற்கிறார் மலாலா. ஐநா-வின் இளம் தூதர் என்ற பெருமையும் இவரையேச் சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மலாலா

 

பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய் தனது 11-வது வயதிலேயே பெண் கல்வி குறித்து பல மேடைகளிலும் பிரசாரம் செய்தவர். தொடர்ந்து பள்ளிகளையும், கல்லூரிகளையும் தாக்கி வந்த தலிபான்களை எதிர்த்து மேடை பிரசாரமும் கட்டுரைகளும் எழுதி தனது எதிர்ப்பை பதிவு செய்துவந்தார். தலிபான்களின் கடும் கண்டனங்களுக்கு ஆளான மலாலா, 2012-ம் ஆண்டு தீவிரவாதிகளால் பள்ளி செல்லும் வழியில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்குப் போராடி, ஒரு வருட கால சிகிச்சைக்குப் பின்னர் மீண்டு வந்தார்.

பல எதிர்ப்புகளும் கொலை மிரட்டல்களும் தொடர்ந்து வந்தாலும் பெண் கல்வியை வலியுறுத்தி இன்றும் போராடி வருகிறார் மலாலா. இந்த இளம் பெண்ணின் சாதனையைப் பாராட்டி 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற பெருமைக்கும் உரியவரானார்.

தற்போது மலாலாவை மேலும் பெருமைப்படுத்தும் வகையில் ஐநா, அமைதிக்கான இளம் தூதராக அவரை நியமிக்கவிருக்கிறது. தற்போது பிரிட்டனில் கல்வி பயின்று வரும் மலாலா, வளரும் உலக நாடுகளில் பெண் கல்வியை வளர்க்க நிதி திரட்டி உதவி வருகிறார்

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வெது வெதுப்பான அந்தக் கல்... மனிதனுக்கு கிடைத்ததா? சூஃபி கதை

புகழ்பெற்ற நகரமான அலெக்சாண்டிரியாவிலுள்ள நூல் நிலையம் தீப்பற்றி எரிந்தது. அந்த விபத்தில் பல புத்தகங்கள் எரிந்துவிட்டாலும், அதிர்ஷ்டவசமாக உலகின் மிகப்பெரிய புதையல் பற்றிய ரகசியம் அடங்கிய ஒரே ஒரு புத்தகம் மட்டும் எரியாமல் தப்பித்துவிட்டது. அந்தப் புத்தகம் ஓர் ஏழை மனிதனிடம் கிடைத்தது.

சூஃபி

புத்தகத்தைப் புரட்டிப் பார்த்த அந்த மனிதன், அதிலுள்ள வாக்கியத்தைப் படித்தான்.`கருப்புக் கடலின் கரையில், உலகின் விலைமதிப்பற்ற ஒரு கல் உள்ளது. தொட்டதையெல்லாம் தங்கமாக்கும் பரிசுவேதி என்னும் அந்தக் கல்லைத் தேடி பல நுற்றாண்டுகளாகவே ஆய்வாளர்கள் தேடி வருகின்றனர்.சாதாரண பூலாங்கல் போன்ற வடிவில்தான் அது இருக்கும் . மற்றக் கற்களைத் தொட்டால் குளிர்ச்சியாக இருக்கும் ஆனால், இந்தக் கல்லைத் தொட்டால் சற்று வெதுவெதுப்பான உஷ்ணத்தோடு இருக்கும். இந்தக் கல் கருப்புக் கடற்கரையின் மேற்குப் பகுதியில் கற்களோடு கற்களாக கலந்து இருக்கும்’ என்று புதையலைப் பற்றிய அனைத்து ரகசியங்களும் அதில் கூறப்பட்டிருந்தது.ஏழை மனிதனுக்கு அளவில்லா ஆனந்தம். உடனே அந்தக் கல்லைக் கண்டுபிடிக்க முடிவு செய்தான். அதற்கு முன்பாக, தனக்கென்று இருக்கும் ஒரே ஒரு வீட்டையும், தனது உடைமைகளையும் விற்றுவிட்டு அதில் கிடைத்த பணத்தையும், பல மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு கருப்புக்கடலில் இருக்கும் அந்த அதிசயக் கல்லைத் தேடிப் புறப்பட்டான்.

கருப்புக் கடலின் ஓரம் ஒரு சிறிய குடிசையைக் கட்டிக்கொண்டான். அடுத்ததாக புதையலைத் தேடத் தொடங்கினான். தினமும் காலையில் அங்குள்ள மணலில் இறங்குவான், கையில் கிடைக்கும் கற்களை எடுத்துத் தொட்டுப் பார்ப்பான். அது குளிர்ச்சியாக இருக்கும் உடனே கடலில் எரிந்துவிடுவான். அடுத்தக் கல்லை எடுத்துப் பார்ப்பான், குளிர்ச்சியாக இருந்தால் கடலில் தூக்கி எரிந்துவிடுவான். எடுத்த கல்லே மறுபடியும் கையில் வந்துவிடக்கூடாது அல்லவா ?அதனால் அதைக் கடலில் தூக்கி எரிந்துவிடுவான்.. பசிக்கும்போது மட்டும் சிறிது சாப்பிட்டுவிட்டு மீண்டும் இருட்டும் வரை தனது தேடுதல் பயணத்தை தொடருவான். இப்படியாகத் தொடர்ந்து பல மாதங்கள் அந்த விலைமதிப்பற்றக் கல்லைத் தேடிக்கொண்டே இருந்தான். உணவு தீர்ந்துவிட்டால், அருகில் இருக்கும் கிராமத்திற்கு  சென்று சில மாதங்களுக்குத் தேவையான உணவு வகைகளை வாங்கி வருவான்.

சூஃபி

இரண்டு வருடங்கள் கழிந்தது, கையில் இருந்த காசும் கரைந்து விட்டது, இருக்கும் உணவுப் பொருட்களோ சில வாரங்களுக்கு மட்டுமே வரும். அனைத்திற்கும் மேலாகத் தேடும் அவனது ஆவலும் குறைந்துகொண்டே வந்தது. இனி என்ன செய்வது? ஊருக்குச் சென்று விடலாமா? இருக்கும் செல்வத்தையும் இழந்து விட்டோமே, இனி என்ன செய்ய? என்று சிந்தித்துக்கொண்டே ஒரு கல்லை எடுத்து தனது உள்ளங்கையில் வைத்து அழுத்தினான். அது வெது வெதுப்பாக இருந்தது. தேடிவந்த பரிசுவேதி என்னும் விலைமதிப்பற்ற கல்தான் அவன் கைகளில் இருக்கின்றது என்பதை அவன் மனம் உணரும் முன்பே வழக்கம் போல கடலில் எரிந்து விட்டான்.

ஆன்மிகத்தில் ஈடுபடும் மக்களிலும் சிலர் இப்படித்தான். கடவுளுக்காக அவர்கள் புரியும் சேவைகள் அனைத்தையும் உணர்வுப் பூர்வமாக அல்லாமல் வெறும் செயல்களாகப் புரிகின்றனர். பின்பு இறைவன் என்னிடம் மனம் இரங்கவில்லையே என்று புலம்புகின்றனர்.
உள்ளத்தால் உணராமல் வெறும் கற்பனைகளில் மூழ்கி கற்பனையில் மட்டும் வாழ்வதை வாழ்க்கை என்று சூஃபிகள் கூறுவதில்லை. விழிப்பு உணர்ச்சி என்று கூறப்படும் அந்த நிதர்சனத்தைக் கண நேரமாவது மனிதன் உணர வேண்டும் என்பதை உணர்த்துவதற்குத்தான் இந்த சூஃபி கதை.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மொய்ப்பணம் வாங்க மெஷின்கள் தயார்

ஜிம்பாப்வேவில் திருமணத்தில் மொய்ப்பணம் தரும் கலாச்சாரம் புதிய தொழில்நுட்ப மேம்பாட்டை காண்கிறது

  • தொடங்கியவர்

விமான கண்டுபிடிப்புக்கும், வாக்குவம் கிளீனருக்கும் என்ன தொடர்பு?

விமான கண்டுபிடிப்பு தொழில்நுட்பம்

அந்தப் பாதை வழியாகச் செல்லும் ஆட்கள் "என்னடா தம்பிகளா எப்ப பார்த்தாலும் மரப்பலகையை வச்சுகிட்டு என்ன செய்துகிட்டு இருக்கீங்க" என அந்த இரண்டு இளைஞர்களைப் பார்த்து கேட்பது வழக்கம். அதற்கு அந்த இளைஞர்களின் பதில், "பறவைகள் பறப்பதுபோல வண்டியைச் செய்து வானத்தில் பறக்கப் போகிறோம்" என்று ஒரே பதிலை சொல்வது அவர்களின் வழக்கம். இதனைக் கேட்போரும், "சரி தம்பிகளா, நல்லா பறங்க" எனச் சொல்லிவிட்டு, சிறிது தூரம் தள்ளிப்போய், "பாத்தியாப்பா வானத்தில் பறக்க போறானுங்களாம்" எனக் கேலி செய்தவர்கள் ஏராளம். ஆனால் அதற்காக அந்த இளைஞர்கள் தங்களது கண்டுபிடிப்பை நிறுத்தவில்லை, மேலும் தொடர்ந்தனர். தங்களது முயற்சியில் உறுதியாக இருந்தனர். அந்த முயற்சியின் பயனாக 1899-ம் ஆண்டு தொடங்கிய கண்டுபிடிப்பு 1903-ம் ஆண்டு வெற்றிகரமாக முடிந்தது. இரண்டு இளைஞர்களும் ஒன்றாக அந்தரத்தில் பறந்தனர். அந்த விமானத்தின் பெயர் 'ப்ளையர்'. அந்த வெற்றிக்குப் பின்னால் அவர்களின் வாழ்க்கை உச்சத்திற்கு போனது. அவர்கள்தான் வில்பர் ரைட் மற்றும் ஆர்வில் ரைட் என்ற சகோதரர்கள். இந்தக் கண்டுபிடிப்பான விமானம்தான் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது மிகப்பெரிய கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.

முதன்முதலில் வானில் பறந்த நபர் நீங்கள் நினைப்பதுபோல ரைட் சகோதரர்கள் அல்ல. இன்னொருவர் 'கிளைடர்' என்ற இயந்திரம் இல்லாத கருவியின் மூலம் பறந்து காட்டியதைப் படித்தபோதுதான் ரைட் சகோதரர்களுக்கு அந்த எண்ணம் உதயமானது. ரைட் சகோதரர்களுக்கு முன்னரும் ஒருவர் வானில் பறந்துள்ளார். ஆனால் இயந்திரம், இறக்கை எல்லாம் பொருத்தி வெற்றிகரமாக வடிவமைத்து சகோதரர்கள் வானில் பறந்தது வெறும் 12 நிமிடங்கள்தான். வேகம் வெறும் 30 கி.மீ.தான். கிட்டத்தட்ட 120 அடி மட்டுமே அவர்களால் பயணம் செய்ய முடிந்தது. இந்தப் பயணத்துக்கு பின்னால் அவர்களின் வாழ்க்கைப்பாதை ஏறுமுகம்தான். இவர்கள் சாதித்ததற்கு காரணம், பல அறிஞர்களின் முயற்சிகளிலிருந்து படிப்பினைகளை கற்றுக் கொண்டதுதான். முன்உந்தல், மேல்எழுதல், திசை திருப்புதல் என்ற மூன்று விஷயங்களைக் கண்டறிந்தனர். வாகனம் தயாராகிவிட்டது, அதை இயக்குவதற்கும் முன்நோக்கி உந்துவதற்கும், இறக்கை மூலம் மேல் எழும்புதலுக்கும் இயந்திரம் தேவை என்பதை உணர்ந்து பெட்ரோல் பூட்டிய இயந்திரத்தினை வடிவமைத்து இந்த முதல் முயற்சியினை மேற்கொண்டனர்.

வாக்குவம் கிளீனர்

விமானம் பறப்பதற்கான தத்துவம் காற்றழுத்த மாற்றம்தான். ஒரு பொருள் அழுத்தம் அதிகமான இடத்திலிருந்து அழுத்தம் குறைவான இடத்தை நோக்கி நகரும். இந்தத் தொழில்நுட்பத்தில்தான் விமானம் இயங்குகிறது. இதனைக் கண்டறியும் நோக்கத்தில்தான் நான்கு ஆண்டுகளைச் செலவழித்தார்கள். இதற்காகவே அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், விமானம் இயங்கக் காரணம் இத்தத்துவம் என்றாலும், அது வானில்பறக்க கூட நான்கு வகை விசைகள் முக்கியம். மேல் நோக்கிய உந்துவிசை, கீழ் நோக்கிய இழுவிசை, முன்நோக்கிய தள்ளுவிசை, மற்றும் பின்னோக்கிய இழுவிசை என நான்கு விஷயங்களும் விமானம் இயங்குவதற்கு மிக முக்கியம். நாம் ஸ்பிரே செய்யும் ஒவ்வொரு கருவியும் செயல்படுவது இந்தத் தத்துவத்தில்தான். பொதுவாக அலுவலகங்களிலும், வீடுகளிலும் உபயோகிக்கும் வாக்குவம் கிளீனர் கூட இயங்குவதும் இந்தத் தொழில்நுட்பத்தில்தான். இந்தத் தொழில்நுட்பம் புதிதான ஒன்றல்ல, முன்னால் இருந்தே மனிதர்களின் வாழ்வோடு ஒட்டிதான் அனைத்துத் தத்துவங்களும் அடங்கியுள்ளன. ஆனால், அதை எவ்வாறு தனக்கு சாதகமாக்கிக் கொள்வது என்பதில்தான் கண்டுபிடிப்பின் ரகசியம் அடங்கியுள்ளது. அந்த ரகசியத்தை ரைட் சகோதர்கள் தெளிவாகக் கண்டறிந்ததுதான் வெற்றிக்குக் காரணம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

உலகின் முதல் கப்பல் சுரங்கம்

நார்வேயின் ஸ்டட் தீபகர்ப்ப கடற்பகுதி கொந்தளிப்பான வானிலைக்கும் ராட்சச அலைகளுக்கும் பேர் போனது.


இந்த பகுதியில் கப்பல்களின் பயணநேரத்தை குறைத்து, அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டம் ஒன்று தயாராகியுள்ளது.


கடும்பாறைகளாலான இந்த தீபகற்பத்திற்கு உள்ளே அடியாழத்தில் "உலகின் முதல் கப்பல் சுரங்கம்" உருவாக்கப்படவிருக்கிறது.


ஆழ்கடலிலிருந்து விலகி, அமைதியான இரண்டு கடற்பகுதிகளுக்கு இடையில் இந்த சுரங்கம் குடையப்படுகிறது.


இந்த கப்பல் சுரங்கம் வழியாக 20,000 டன் எடையுள்ள கப்பல்கள் வரை செல்ல முடியும்.


உலக அளவில் கப்பல்கள் செல்ல பிரம்மாண்ட கால்வாய்கள் இதற்கு முன்பு வெட்டப்பட்டிருந்தாலும், கப்பல்கள் செல்லக்கூடிய சுரங்கம் அமைக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல் முறை என்கிறது நார்வே.


இந்த சுரங்கத்திற்காக சுமார் எண்பது லட்சம் டன் கற்பாறை வெடிவைத்து தகர்த்து எடுக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.


2023 ஆம் ஆண்டுக்குள் இந்த சுரங்கத்தை வெட்டி முடிக்க முடியுமென நார்வே நம்புகிறது

  • தொடங்கியவர்
Bild könnte enthalten: eine oder mehrere Personen
 

ஏப்ரல், 8: 'எழுத்து சிங்கம்’ ஜெயகாந்தன் நினைவு தினம்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயகாந்தன் மறைந்த பொழுது பகிர்ந்த பொக்கிஷ பகிர்வு

சென்னைக்கு வந்த புதிதில் பல நாட்கள் அவரது வீட்டைக் காண்பதற்காகத் தயங்கித் தயங்கி அந்த வீதியில் நடந்திருக்கிறேன். கொட்டகை போட்ட மாடியில் இருந்து படி வழியாக ஜெயகாந்தன் கீழே இறங்கி வருவதை தெருவில் பராக்கு பார்ப்பதுபோல கண்டிருக்கிறேன். நெருங்கிப் போய் அறிமுகம் செய்துகொள்ளும் தைரியம் வர நீண்ட நாட்களானது.

மரணத்தைப் பற்றி அவருக்குப் பயமே இல்லை. அவருடன் பேசும்போது ஒருமுறை சொன்னார்...

'வயதானால், சாவு நிச்சயம். அது வரும்போது வரட்டும். இருக்கிற வாழ்க்கையை இன்பமாக அனுபவிப்பதுதான் முக்கியம்’ எனச் சொல்லிவிட்டு, தனது மீசையைத் திருகியபடியே 'இன்பம் என்றால் என்னவென்றே பலருக்கும் தெரியாது. அது பொன்னால் கிடைப்பது இல்லை, புகழால் கிடைப்பது இல்லை, பெண்ணோ, பொருளோ தருவது இல்லை. தன்னை அறிதலில் ஓர் இன்பம் இருக்கிறது பாருங்கள்... அந்த இன்பமே உயர்வானது. தன்னை அறிந்தவன் தவறுகளை மறைத்துக்கொள்ள மாட்டான். சரி, தவறு என்பதெல்லாம் அவரவர் வாழும் சூழ்நிலையும் வளர்ந்த விதமும் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் உருவாக்கியவை. உங்கள் சரி, எனக்குத் தவறு. மீறுதல் ஓர் உரிமை, ஓர் எழுச்சி. அதைச் செய்து பார்த்தவன்தான் உணர முடியும். வேடிக்கை பார்ப்பவனால் ஒருபோதும் மீறலைப் புரிந்துகொள்ள முடியாது’ என்றார்.

எனது வீடே ஜெயகாந்தனின் ரசிகர்களாக இருந்தார்கள். விகடனிலும் தினமணி - கதிரிலும் வெளியான அவர் கதைகள், தொடர்கள் குறித்த வாதப்பிரதிவாதங்கள் வீட்டில் நடக்கும்.

ஓர் எழுத்தாளன் குறித்து இப்படி வியந்து வியந்து பேசுகிறார்களே என ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டிருப்பேன். அப்படித்தான் ஜெயகாந்தன் கதைகளை ஆசையோடு வாசிக்கத் தொடங்கினேன்.

பள்ளி நாட்களில் எனது அண்ணனின் வகுப்பு ஆசிரியராக இருந்த எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி, ஜெயகாந்தனின் நண்பர். ஜெயகாந்தன் போலவே மீசையும் வைத்திருப்பார். பேசுவதும் அப்படியே இருக்கும். தமிழ் ஆசிரியராக இருந்த அவரது வீட்டில் ஜெயகாந்தனுடன் எடுத்த புகைப்படம் இருக்கும். ஜெயகாந்தனைப் பற்றி அவர் பேசத் தொடங்கினால், வியப்பான செய்திகள் வந்துகொண்டே இருக்கும். அதில் ஒன்று, மிக மோசமாக சினிமா பாடல் ஒன்றை எழுதிய கவிஞனை அடிப்பதற்காக பாண்டிபஜாரில் ஜே.கே. துரத்திக்கொண்டு ஓடினார் என்பது. அதைச் சொல்லும்போது தனுஷ்கோடி ராமசாமி நடித்தே காட்டுவார். ஒரு நாடகம் பார்ப்பதுபோலவே இருக்கும். அத்துடன் ஜெயகாந்தன் மிகுந்த கோபக்காரர். அரசியல் தலைவர்கள்கூட அவரைக் கண்டு பயப்படுவார்கள் எனச் சொல்லிச் சொல்லி, 'ஜே.கே. என்றாலே கலகக்காரர்’ என்ற பிம்பம் மனதில் உருவாகியிருந்தது. நேரில் கண்டு பழகியபோது அவர் எத்தனை அன்பும் அக்கறையும்கொண்ட மகத்தான மனிதர் என உணர்ந்தேன்.

ஜெயகாந்தன் ஒரு ரசவாதி. வாசிக்கும் எவரையும் தன் எழுத்தின் வலிமையால் உருமாற்றிவிடுவார். ஜே.கே-யின் சிந்தனைகள், படிப்பவர் மனதில் ஆழமாக உறைந்துவிடக் கூடியவை. உரத்த சிந்தனையும் உணர்ச்சிபூர்வமான அனுபவங்களும் ஒன்றிணைந்த கதைகளை அவர் எழுதினார். சமூகத்தின் போலியான மதிப்பீடுகள், கற்பிதங்கள், வரம்புகளைக் கடுமையாக விமர்சனம் செய்த எழுத்து அவருடையது. சென்னைத் தமிழை இலக்கியமாக்கிய பெருமை அவரையே சாரும். பிளாட்பாரத்தில் வாழும் அடிநிலை மக்களின் வாழ்க்கையை, அதன் அவலங்களை உரக்கச் சொன்னவர் ஜெயகாந்தன்.

'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலில் வரும் ஹென்றிக்கு நிகரான ஒரு கதாபாத்திரம், இன்று வரை தமிழில் எழுதப்படவே இல்லை. ஜெயகாந்தன் எழுத்தின் உச்சம் இந்த நாவல்.

பேச்சிலும் ஜெயகாந்தன் நிகரற்றவர். அவரைப்போல மேடையில் கம்பீரமாக, உணர்ச்சிபூர்வமாகப் பேசக்கூடிய எழுத்தாளர் எவரும் இல்லை.

'கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும் சர்வாதி காரத்தையும், நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும் சத்யாகிரகத்தாலும் சந்திக்கும்’ என ஜெயகாந்தன் பேசிய உரையே இதற்குச் சான்று. பாரதியைப் பற்றி ஜே.கே. பேசும்போது கூட்டம் கண்ணீர் சிந்தும் என்பார்கள்.

ஜே.கே. ஒரு பன்முகப்பட்ட கலைஞன் என தனுஷ்கோடி ராமசாமி வியந்து பேசும்போது, வாழ்வில் ஒருமுறையாவது ஜே.கே-யைச் சந்தித்துவிட முடியாதா என ஏங்கியிருக்கிறேன்.

80-களில் ஒருமுறை, மதுரையில் ஜெயகாந்தன் பேச இருக்கிறார் எனக் கேள்விப்பட்டுச் சென்றிருந்தேன். மேடையில் நின்று அவர் கைகளை வீசிப் பேசுகிற விதம், அனல் தெறிக்கும் சொற்கள், ஆவேசமூட்டும் குரல், வாதங்களை எடுத்துவைக்கும் ஞானம்... ஜெயகாந்தனின் அந்தப் பேச்சை என்னால் மறக்கவே முடியவில்லை. ஞானோபதேசம் போல கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஜெயகாந்தனைப் போல தன் வாழ்நாளிலே சகல விருதுகளும் அங்கீகாரங்களும் நண்பர்கள் பட்டாளமும் பெருமையும் புகழும் அடைந்த இன்னோர் எழுத்தாளன் இலக்கிய உலகில் கிடையாது. ஒரு கம்யூனிஸ்ட்டாகவே அவர் எப்போதும் இருந்தார். இடதுசாரிகளின் நிலைப்பாட்டை விமர்சனம் செய்திருக்கிறார். ஆனால், இடதுசாரிச் சிந்தனைகளை அவர் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததே இல்லை.

எழுத்தாளன் என்பவன் கதைகள், கட்டுரைகள் மட்டும் எழுதுகிறவன் அல்ல...அவன் ஒரு சிந்தனையாளன்; களப் போராளி; போராட்டக் குணமுள்ளவன் என அவனது சமூகக் கடமைகளை உணர்த்தியவர் ஜெயகாந்தன்.

ஒரு களப் போராளியாக அவர் எத்தனையோ போராட்டங்களில் நேரடியாக இறங்கிச் செயல்பட்டிருக்கிறார். பணத்தாலோ, அதிகாரத்தாலோ, எழுத்தை விலைக்கு வாங்க முடியாது. எழுத்தாளன் மிகுந்த சுயமரியாதைகொண்டவன். அவனது திமிர், ஞானத்தால் உருவானது. சுயசிந்தனையும் சுயமரியாதையும் கொண்டவன், எவனுக்கும் அடிபணிந்து போக மாட்டான் என, எழுத்தாளர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு ஜெயகாந்தனே அடையாளமாக இருந்தார். அவர் உருவாக்கித் தந்த அங்கீகாரமும் கௌரவமும்தான் இன்றும் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டுதலாக உள்ளன.

தனது வலிகள், வேதனைகள், தோல்விகள் குறித்து ஜெயகாந்தன் ஒருபோதும் புலம்பியவர் அல்ல. மாறாக அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டு எழுத்து சாமுராய் போல அவர் ஆவேசத்துடன் பெருங்கோபமும் பேரன்பும்கொண்ட கலைஞனாகவே எப்போதும் நடந்துகொண்டார்.

ஜே.கே. ஓர் அழியாச்சுடர். அந்த வெளிச்சம்தான் என்னைப் போன்ற ஒருவனை ஏதோ ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் இருந்து எழுதுவதற்கு அழைத்து வந்தது.

எனது 'உலக சினிமா’ நூல் வெளியீட்டு விழாவுக்கு ஃபிலிம் சேம்பரில் காரைவிட்டு இறங்கி உள்ளே வரும்போது ஜெயகாந்தன் எனது கைகளைப் பற்றிக்கொண்டு, 'உலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு. உலக சினிமாவைப் புரிந்துகொண்ட உனக்கு, சினிமா உலகை எளிதாகப் புரிந்துகொள்ள முடியாது’ என்றார். எவ்வளவு பெரிய உண்மை, எத்தனை எளிதாகச் சொல்லிவிட்டார்.

அன்று மேடையில் அவர் பேசிய உரை அற்புதமானது. அவரோடு ஒரே மேடையில் அமர்ந்திருக்கிறேன், பேசுகிறேன் என்பது, ஒரு கனவு நனவாகிவிட்டதைப்போல சந்தோஷமாக இருந்தது.

இன்னொரு நாள் மதியம் அவரைக் காணச் சென்றிருந்தேன். வீட்டின் மாடியில் இருந்த கொட்டகையில் யாரோ ஒரு பேராசிரியருடன் பேசிக்கொண்டிருந்தார். உரத்த குரலில் சண்டை போடுவதுபோலவே இருந்தது அந்தப் பேச்சு. கண்கள் சிவக்க, உதடு துடிக்க மீசையை முறுக்கியபடியே ஜெயகாந்தன் சொன்னார்... 'தம் மொழி மீது அன்புகொண்டவர்களுக்குப் பிற மொழி மீது வெறுப்பு வராது. எனக்குத் தமிழ் மீது அபிமானம் உள்ளது; பற்று இல்லை. பற்றானது, விட்டுப்போவதாகும். ஆனால், அபிமானம் விட முடியாதது. தேசமே கடன் வாங்கும்போது, மொழி கடன் வாங்குவது சரியானதே!’

எதிரில் இருந்த பேராசிரியர் வாய் அடைத்துப்போய் உட்கார்ந்திருந்தார். அவரது சபை, படித்தவர்களின் சபையாக மட்டும் இருந்தது இல்லை. ரிக்ஷாக்காரர் தொடங்கி பேராசிரியர் வரை அத்தனை பேரும் சமமாக அமர்ந்து அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். சாக்ரடீஸ் தனது சிந்தனைகளை மாணவர்களுடன் உரையாடுவார். அவர்கள் அது குறித்து விவாதிப்பார்கள் என வாசித்திருக்கிறேன். அதை ஜெயகாந்தன் வடிவில் நேரில் பார்த்திருக்கிறேன்.

எழுத்து, பேச்சு, செயல்பாடு... என தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டுக்காக தன் மொத்த வாழ்க்கையை அர்ப்பணித்த மகத்தான கலைஞன் ஜெயகாந்தன்.

'கடவுள் ரொம்பக் கேவலமான கொலைகாரன். 'சாவு’னு ஒண்ணு இருக்கும்போது பாசம் என்ற ஒண்ணை உண்டாக்குவானா?’ என ஜெயகாந்தன் கதையில் ஒரு பெண் குருவி கேட்கும். ஜே.கே-யின் மறைவு உருவாக்கிய வலியில், அதே குருவியைப்போலவே நானும் தவித்துக்கொண்டிருக்கிறேன்!

  • தொடங்கியவர்

படப்பை கோவிலில் ''கேக்'' பிரசாதம்

  • தொடங்கியவர்

பிறப்பிலேயே எச் ஐ வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர் அழகிப் பட்டம் வென்றுள்ளார்.

  • தொடங்கியவர்

‘நான் சந்தித்த சிறந்த மனிதர்களில் ஒருவர் தோனி...’ புகழாரம் சூட்டும் இம்ரான் தாஹிர்

Imran tahir

தென் ஆப்ரிக்கா அணியின் இம்ரான் தாஹிர் இந்த ஐபிஎல் சீசனில், ஸ்மித் தலைமையிலான புனே அணியில் விளையாடுகிறார். முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி கலக்கினார் தாஹிர். அவரது அணியில் தான் முன்னாள் இந்திய கேப்டன் தோனியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தாஹிர், 'எனக்கு தோனியின் மேல் மிகுந்த மரியாதை உள்ளது. அவர் நாட்டுக்காக நிறைய சாதித்திருக்கிறார். நான் சந்தித்ததிலேயே மிகவும் சிறந்த மனிதர்களில் ஒருவர் தோனி. நான் இந்தியாவில் நன்றாக விளையாடுவதற்கு அவர் மிகவும் உதவிகரமாக இருக்கிறார். அவர் ஒரு சகாப்தம் என்பதை முன்னரே நிரூபித்துள்ளார்.

அவருடன் தொடர்ந்து விளையாடுவது குறித்து மிகவும் ஆர்வமாக உள்ளேன். நெட்டில் பயிற்சி செய்யும் போது அவருடன் நான் நிறைய பேசிவருகிறேன். நெட்டில் கூட அவருக்கு நான் பந்து வீச விரும்பவில்லை. ஏனென்றால், அப்போதும் என் பந்தை சிக்ஸருக்கு அவர் அடித்து தள்ளுகிறார்' என்று கூறியுள்ளார். 

நன்றி: IPL

  • தொடங்கியவர்

5 நாள்களில் 1000 கி.மீ பறந்த ‘திருச்சி ராணி’! 27 வருட சாதனை முறியடிப்பு #VikatanExclusvie

புறா ஒன்று ஐந்து நாட்களில் 1000 கிலோ மீட்டர் தூரம் கடந்துள்ளது. அந்தப் புறாவுக்கு, ‛திருச்சி ராணி’ எனும் பட்டம் வழங்கிக் கொண்டாடி மகிழ்கின்றனர் திருச்சிவாசிகள். இது 27 வருடங்களுக்குப் பிறகு நடந்த சாதனை எனச் சொல்லி மெய் சிலிர்க்கிறார்கள்.

புறா திருச்சி ராணி

ஒவ்வொரு வருடமும், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம்வரை, திருச்சி ரேசிங் பீஜியன்ஸ் கிளப் சார்பில் புறா ரேஸ் நடத்துவது வழக்கம். அப்படித்தான் பந்தய புறாக்களை, வழக்கம் போல வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, கிளம்பினார்கள் திருச்சி ரேசிங் பீஜியன்ஸ் கிளப் உறுப்பினர்கள். 7 நாட்களில் 1000 கிலோமீட்டரைக் கடந்து, வளர்ப்பவர் வீட்டுக்கு முதலில் வரும் புறா வெற்றி பெற்றதாக அறிவிப்பார்கள். அந்த வகையில் திருச்சியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட புறாக்கள், கடந்த மார்ச் 12-ம் தேதி மகாரஷ்டிரா மாநிலம், பல்ஹர்ஷா எனும் ஊரில் இருந்து பறக்கவிடப்பட்டன.

பந்தய தூரம் மிகத் தொலைவு என்பதால், கடந்த 27 வருடங்களாக திருச்சியில் இருந்து விடப்பட்ட எந்தப்புறாவும் ஜெயிக்கவில்லை. இப்படி இருக்க, 7 நாட்கள் கடக்கவேண்டிய 1000 கி.மீ தூரத்தை, ஐந்தே நாட்களில் கடந்து திருச்சி ராணி எனும் பட்டத்தை வென்றுள்ளது திருச்சி ஶ்ரீரங்கம் ஆர்.எஸ் சாலையைச் சேர்ந்த ஆறுமுக அருள் குமரனின் புறா. இந்த வெற்றியை, திருச்சி ரேசிங் பீஜியன்ஸ் கிளப் உறுப்பினர்கள், பந்தய புறா வளர்ப்பவர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

அருள் குமரனை நேரில் சந்தித்தோம்.

“எங்க அப்பா, பறவைகள் மீது ரொம்ப பிரியமாக இருப்பார். அதனால் எனக்கும் அந்தப் பழக்கம் வந்தது. வடக்கு வாசலைச் சேர்ந்த என் நண்பன் ஶ்ரீதர், வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம், அவனைப்போலவே புறா வளர்க்கணும்னு நினைப்பேன். படித்ததால் அந்த ஆசை, பலவருடங்கள் தள்ளிப்போனது. கல்லூரி படிப்பை முடித்த நான், ஸ்மார்ட் ஆட் எனும் இவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ஆரம்பித்து நடத்தி வருகின்றேன்.

இதனால் கடந்த 5 வருடத்துக்கு முன்னாள், ஆர்வத்தோடு 5 ஜோடி சாதாரண புறாக்களை வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். அடுத்து பந்தய புறாக்கள் வளர்ப்பில் கவனம் செலுத்தினேன். புறாக்களுக்கு, தினமும் காலையும் மாலையும் கம்பு, திணை, சோளம், கோதுமை என தானியங்கள் உணவளிக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு மாதமும், 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை செலவானது. கொஞ்சம் சிரமப்பட்டாலும், கவலைப் படவில்லை. புறாக்கள் பெருகி, இப்போது 100 புறாக்களுக்கு மேல் உள்ளது.

திருச்சி புறா

‘புறாக்களைத் தூது’ விடுவது நமது பழைய பாரம்பர்யம், இப்போது, புறா இனங்களை காப்பாற்றிட இதுபோன்ற புறா பந்தயங்கள் நடத்தப்படுகிறது. ஒரு புறா நமது வீட்டுக்கு மேல் அரை மணி நேரம் பறந்தால், அது பந்தயத்துக்கு தகுதியான புறா. அடுத்து புறாவை மெல்ல மெல்ல, 100, 200 என பல்வேறு வகையிலான கிலோமீட்டர் தூரங்களில் விட்டால், நமது வீட்டுக்கு வந்துவிடும்படி பயிற்சி மேற்கொண்டோம். அடுத்து 500, 650 கிலோமீட்டர் தூரங்களை ஒரு புறா கடந்தால் அது 1000 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள தகுதியான புறா. ஒவ்வொரு போட்டியின் போதும், நாம் வளர்க்கும் 5 பந்தய புறாக்களை, கிளப்பில் கொடுக்க வேண்டும். அந்தப் புறாக்கள், பந்தய தூரத்தைக் கடந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன், உடனே கிளப்புக்கு தகவல் கொடுக்க வேண்டும். அப்படி முதலில் வந்த புறா ஜெயித்ததாக அர்த்தம்.

அப்படித்தான் இந்தப் புறா முதலில் வெற்றி பெற்றது. இதேபோல், என் இன்னொரு புறா, 1000 கி.மீட்டரை 7 நாள் கழித்து கடந்து வந்தது. மற்ற புறாக்கள் வரவே இல்லை. இப்படியான போட்டிகளில் கலந்துகொள்ளும், புறாக்கள் பல தடைகள் இருக்கும். காற்று பலமாக வீசினால், புறா பறக்கும் திசை மாறலாம், அதேபோல், வெயில் அதிகமாக இருந்தாலோ, காற்றாலைகள், வேட்டைக்காரர்கள் விரித்த வலைகள், ஏவுகணைகள் அனுப்பும்போது, பறவைகள் வந்துவிடக்கூடாது என ரசாயனக்கலவை தூவுவார்கள். அந்தப் பவுடர் பட்டாலோ, வயல்வெளிகளில் மருந்துகள் தெளித்திருந்தாலோ இவை பறவைகளை பாதிக்கும். இப்படியான பத்துக்கும் மேற்பட்ட தடைகளைக் கடந்து, உரிய நேரங்களில் வந்து சேரும் புறா வெற்றி பெற்றதாக எடுத்துக்கொள்ளப்படும். கடந்த 27 வருடங்களுக்குப் பிறகு, பந்தய நாட்களை விட இரண்டு நாட்கள் முன்னதாகவே வந்து, என் புறா, எனக்குப் பெருமை தேடிக்கொடுத்துள்ளது” என்றார் மெய்சிலிர்க்கிறார் அருள்.

புறா வளர்ப்பின் மூலம் திருச்சிக்கு பெருமை சேர்த்த அருள் குமரனுக்கும் , திருச்சி ராணிக்கும் வாழ்த்துச் சொல்லி விடை பெற்றோம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கணவர் இறந்த செய்தியை நேரலையில் படித்த செய்தி வாசிப்பாளர்

சத்தீஸ்கரில் ஐபிசி என்ற சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றும் சுப்ரித் கவுர் என்பவர் அவருடைய கணவர் இறந்த செய்தியை வாசித்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. சுப்ரித் கவுர் என்பவர் ஐபிசி சேனலில் 9 ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக இருந்து வருகிறார். அவருக்கும் ஹர்சாத் கவடே என்பவருக்கும் ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

supreet gaur

இன்று காலையில் சுப்ரித் கவுர் நேரலையில் செய்தி வாசிக்கும்போது, நிருபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக நேரலையில் இணைந்தார். அவர், 'மகாசமுந்த் மாவட்டத்தில் ரெனால்ட் டஸ்டர் வாகனம் விபத்துக்குள்ளானது. அந்த வாகனத்தில் பயணம் செய்த ஐந்து பேரில் 3 பேர் உயிரிழந்தனர்' என்று தகவலை தெரிவித்தார். இருப்பினும் இறந்தவர்கள் குறித்த தகவலை தெரிவிக்கவில்லை. ஆனாலும், நிருபர் தெரிவித்த தகவலைக் கொண்டு தனது கணவர் தான் இறந்தார் என்று கவுர் தெரிந்துகொண்டார். இருப்பினும் கவுர் அமைதியாக செய்தி முழுவதையும் வாசித்து முடித்தார். பிறகு வெளியே வந்துதான் அழுதிருக்கிறார்.

இதுகுறித்து தெரிவித்த சக ஊழியர்கள், 'அவர் மிகவும் தைரியமான பெண். கவுரின் கணவர் இறந்தது அவர் செய்தி வாசிக்கும்போதே எங்களுக்கு தெரியும். ஆனால், இதுகுறித்து அவரிடம் தெரிவிப்பதற்கு எங்களுக்கு தைரியம் இல்லை' என்றனர்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

முதல் மரண தண்டனை பெற்ற முதற்பெண்: ஏப்ரல் 8- 1899

மார்த்தா பிளேஸ் என்ற பெண்மணிக்கு 1899-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி மின்இருக்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. உலகிலேயே முதன்முதலாக ஒரு பெண்ணுக்கு மின் இருக்கையில் தண்டனை பெற்றவர் இவர்தான். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள ராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட்டான்.

 
 
முதல் மரண தண்டனை பெற்ற முதற்பெண்: ஏப்ரல் 8- 1899
 
மார்த்தா பிளேஸ் என்ற பெண்மணிக்கு 1899-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி மின்இருக்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. உலகிலேயே முதன்முதலாக ஒரு பெண்ணுக்கு மின் இருக்கையில் தண்டனை பெற்றவர் இவர்தான்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள ராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட்டான்.
 
* 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானாவில் மான்ஸ்ஃபீல்ட் என்ற இடத்தில் கூட்டமைப்பு படைகள் கூட்டுப் படைகளை தோற்கடித்தன.
 
* 1866 - ஆஸ்திரியா- ஹங்கேரிக்கு எதிராக இத்தாலியும் புரூசியாவும் அணி திரண்டன.
 
* 1867 - முதலாவது உலக கண்காட்சி பாரிஸ் நகரில் ஆரம்பமானது.
 
* 1899 - மார்த்தா பிளேஸ் என்பவர் மின் இருக்கையில் மரண தண்டனை பெற்ற முதற்பெண்.
 
* 1919 - பஞ்சாபில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால் மகாத்மா காந்தி டெல்லி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

* 1929 - டெல்லி மத்திய அரசு கட்டிடத்தில் பகத் சிங், மற்றும் பத்துகேஷ்வர் தத் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களையும் குண்டுகளையும் வீசி தாமாகவே சரணடைந்தனர்.
 
* 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் பிலிப்பைன்சின் பட்டான் மாநிலத்தைக் கைப்பற்றினர்.
 
* 1950 - இந்தியாவும் பாகிஸ்தானும் லியாக்கட்-நேரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
 
* 1957 - எகிப்தில் சூயஸ் கால்வாய் மீளத்திறக்கப்பட்டது.

* 1973 - சைப்பிரசில் 32 குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன.
 
* 1985 - போபாலில் நச்சு வாயுக் கசிவினால் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்ட நிகழ்வுக்காக இந்தியா யூனியன் கார்பைட் நிறுவனத்துக்கெதிராக வழக்குத் தொடர்ந்தது.
 
* 2000 - அரிசோனாவில் அமெரிக்கக் கடற்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 19 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
 
* 2004 - சூடான் அரசுக்கும் இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.
 
  • தொடங்கியவர்

Bild könnte enthalten: Blume, Pflanze, Text und Natur

இந்த பூவுக்கு ஊரில் என்ன  பெயர் சொல்வார்கள்? யாரும் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

இது எங்கள் வீட்டில் இருந்தது. மிக நல்ல வாசனை வரும் இந்த பூவில்

  • தொடங்கியவர்

கிளிக் தொழில்நுட்ப காணொளி

அமேசான் நிறுவனத்தின் விண்வெளி பயண திட்டம், ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ப்ரோ கணினி, ரோபோ உதவியாளர் உள்ளிட்டவை அடங்கிய காணொளி.

  • தொடங்கியவர்

73 வயது பாட்டியை மரணத்திலிருந்து காப்பாற்றிய ஃபிட்னஸ் ட்ராக்கர்!

ஃபிட்னெஸ்

வயதான ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்றால், அவரை முறையாகப் பாதுகாக்கவேண்டியது அவசியம். யாருமே உடன் இல்லாதபோது, அவருக்கு ஏதாவது நிகழ்ந்தால்... அவரை காப்பாற்றுவது கடினம். ஆனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி, இந்த விஷயத்தை சரியாகக் கையாண்டுவருகிறது. அமெரிக்காவில் உள்ள 73 வயது பாட்டி ஒருவரை, சரியான நேரத்தில் ஃபிட்னஸ் ட்ராக்கர் காப்பாற்றியுள்ளது என்றால் நம்புவீர்களா? 

பாட்ரிஷியா லவ்டர் என்கிற 73 வயது பாட்டி, அமெரிக்காவில் வசித்துவருகிறார். அவர், சைனஸ் மற்றும் நிமோனியாவால் பாதிகப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவருக்கு திடீரென இதயத்துடிப்பு அதிகரித்துள்ளது. வழக்கமாக 60-70 என்ற அளவில் இருக்கும் இதயத்துடிப்பு திடீரென 140 என்ற அளவுக்கு சென்றுள்ளது. இதனால் படபடப்புக்குள்ளாகி இருக்கிறார். இதயத்துடிப்பு அதிகரிப்பதை அவர் அணிந்திருந்த ஃபிட்னஸ் ட்ராக்கர் உணர்த்தியிருக்கிறது. என்ன செய்வதென்று அறியாமல் அவசர உதவி எண் 911-ஐ அழைத்துள்ளார்.

fitnessfitness tracker

'அந்த நேரத்தில், அவர் அவசர உதவியை அழைக்கவில்லை என்றால், உயிருக்கு ஆபத்தாகியிருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு நுரையீரலில் ரத்த அடைப்பு ஏற்பட்டு உடல்நிலை மோசமாகியுள்ளது' என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  ''எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. சரியான நேரத்தில் எனது இதயத்துடிப்பு அதிகரிப்பதை ஃபிட்னஸ் ட்ராக்கர் மூலம் அறிந்தேன். அப்போதுதான், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்பது எனக்குத் தோன்றியது'' என்றார் பாட்டி.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அவர் முழுமையாகக் குணமடைந்தார். ஃபிட்னஸ் ட்ராக்கர்கள் என்பது உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புஉணர்வுக்கும் தொடர்ச்சியான ட்ரக்கிங்கிற்கும் மட்டுமல்லாமல், இதுபோன்ற பாதுகாப்பு விஷயங்களுக்கும் பயன்படுகிறது.

இதுபோன்ற சம்பவங்கள், சமீபத்தில் நிறைய நடந்து வருகின்றன. தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்த ஒரு பெண்னின் இதயத்துடிப்பு 210 வரை அதிகரித்து மயக்கமடைய, அவர் மருத்துவமனையில் அனுமதிக்க ஃபிட்னஸ் ட்ராக்கர் உதவியது.


 

யாருமே உதவிக்கு இல்லாத நேரத்தில், இந்த தொழில்நுட்பங்கள் சரியாக உதவிசெய்து உயிரைக் காப்பாற்றுகின்றன. புதிய தொழில்நுட்பங்கள், மக்களுக்கு எளிதில் புரியும்படியும், உபயோகிக்க எளிதாகவும்  இருக்கவேண்டியது அவசியம். மக்களும் தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்தினால், பல உயிர்கள் காக்கப்படும்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

காற்றாலைக் கட்டிடம்

windmill_3152005f.jpg
 
 
 

உலகின் மிக உயர்ந்த வானுயர் கட்டிடங்கள் வளைகுடா நாடுகளில்தான் அதிகம் உள்ளன. துபாயிலுள்ள புர்ஜ் கலீபா கட்டிடத்துக்கு இவற்றில் முதலிடம். இது அல்லாது சவுதி அரேபியா, கத்தார், ஓமன், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இதே போன்ற வானுயர் கட்டிடங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று பஹ்ரைனில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டிடம்.

பஹ்ரைனில் இரண்டாவது உயர்ந்த கட்டிடம் இது. பஹ்ரைன் தலைநகர் மனாமாவின் கடற்கரைக்கு அருகில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தின் மற்றுமொரு சிறப்பு இது உலகின் முதல் காற்றலை வானுயர் கட்டிடம். இந்தக் கட்டிடமும் அமெரிக்காவின் பழைய உலக வர்த்தக மையம்போல் இரு கோபுரக் கட்டிடம். இங்கிலாந்தைச் சேர்ந்த அட்கின்ஸ் கட்டுமான நிறுவனம் இந்தக் கட்டிடத்தை உருவாக்கியுள்ளது. 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கட்டிடப் பணிகள் 2008-ம் ஆண்டு நிறைவுற்றன. 240 மீட்டர் உயரம் கொண்ட இந்தக் கட்டிடம், 50 மாடிகளைக் கொண்டது.

windmill_2_3152006a.jpg

இந்த இரு கோபுரங்கங்களும் பாலம்போல் மூன்று இணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று இணைப்புகளின் நடுவில் காற்றாலை விசிறி பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வோர் இயந்திரமும் 225 கிலோ வாட் மின் உற்பத்தித் திறன் கொண்டது. இந்தக் காற்றாலை டென்மார்க்கைச் சேர்ந்த நார்வின் ஏஎஸ் என்னும் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது.

பெர்சி வளைகுடாவில் வீசும் காற்றைப் பயன்படுத்தி மின்னாற்றலாக மாற்றும் முயற்சியாக இந்தக் காற்றாலை நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தின் மொத்த மின் தேவையின் 15 சதவீதம் இந்தக் காற்றாலை மின்சாரத்தால் பூர்த்தி செய்யப்படுகிறது.

http://tamil.thehindu.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.