Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

12469407_965516630163698_564032867572978


திறமையான, முன்னணி இளைய நடிகர் ஜீவாவின் பிறந்தநாள்.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

'தூக்கி அடிச்சிருவேன் முதல் அறிவிருக்கா வரை'... 2015 சர்ச்சை வார்த்தைகள்!

 

றுத்த கடலையக் கொட்டினா அள்ளிடலாம், வார்த்தையக் கொட்டினா அள்ள முடியுமா, அப்படி அள்ள முடியாத,2015 ஆம் ஆண்டு பஞ்சாயத்துக்குள்ளான சினிமா பிரமுகர்களின் வார்த்தைகள் இதோ...

எவனா இருந்தாலும் வெட்டுவேன்: ஆம்பள இசை வெளியீட்டு விழாவில் விஷால் சொன்னதாக சொல்லி பத்த வச்சிட்டியே பரட்ட ஆர்யா மொமெண்ட். என்னை அறிந்தால், ஐ  ஆகிய  பெரிய படங்கள் வருகையில் உன் படத்தை வெளியிடுகிறாயே என ஆர்யா கேட்டதற்கு விஷால், எவனா இருந்தாலும் வெட்டுவேன் என சொல்லியதாகச் சொல்லி அஜித் ரசிகர்களைக் கொஞ்சம் சீண்டி விட்டு நெட்டில் ரவுசு கட்டினார்கள். பிறகு அதெல்லாம் இல்லீங்க நான் அப்படிச் சொல்லவே இல்லை என விஷால் இன்னொரு நிகழ்ச்சியில் அப்ரூவர் ஆனது வேறு கதை.

பாயும் புலி, பாகுபலி எனக் கேட்கிறது: பாயும் புலி படத்தின் இசை வெளியீட்டில் பாயும்புலி எனச் சொல்லும் போதெல்லாம் என் காதில் பாகுபலி என விழுகிறது என்று லிங்குசாமி சொன்னதுதான் தாமதம் நெட்டிசன்கள் வெச்சு செஞ்சாங்க.

இது அட்டகாசமான ‘புலி’: புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர் மூச்சு விடாமல் முப்பது நிமிடங்கள் பேசிய புலி மந்திரம் நம் வீட்டில் மூணு வயது சுட்டிகளுக்கும் மனப்பாடம். இது அதிசய புலி, அட்டகாசமான புலி, இது புலி...

’நாய்’ : சினிமாவுலயும் அரசியல் செஞ்சு , எதிர்கட்சிக்காரரான விஷாலைப் பார்த்து ராதாரவி நாய் என ஒற்றை வார்த்தையைச் சொல்லி பஞ்சாயத்தானதை நாம் மறக்க முடியுமா?

நான் போன் பண்றேன் சிரிக்கிறார்ங்க: நடிகர் சங்கத் தேர்தல் பிரச்சாரத்தில் சிம்பு பேசிய டயலாக், நான் விஷாலுக்கு போன் பண்றேன் சிரிக்கிறாருங்க. என சொல்ல அடடே ட்ரெண்டானது.

controvercy.jpg

நான் 16 வயசுலயே நடிக்க வந்தவன்: அதே மேடையில் சிம்பு பேசிய டயலாக், நான் 16 வயசுலயே நடிக்க வந்தவன், இன்னிக்கு வந்த உனக்கென்ன தெரியும் நடிகர் சங்கம் பத்தி என காரசாரமாக காய்ச்சி ஊற்றிய சிம்பு தான் மீண்டும் வைரல்..

தூக்கி அடிச்சிருவேன்: கேப்டன் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து எப்போப் பார்த்தாலும் போற பக்கமெல்லாம் வந்து எக்குத் தப்பா கேள்வி கேட்டுகிட்டு, தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ என கூற, ஐயோ பத்திக்கிச்சு.

சகிப்புத்தன்மை: அமீர்கான் இந்தியாவில் மதச் சகிப்புத்தன்மை இல்லை அதனால் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறி சமூக வலைதளங்களின் வாய்க்கு அவல் கொடுத்தார்.

அறிவிருக்கா: இந்த வருடத்தின் டாப் ட்ரெண்ட் சர்ச்சை வார்த்தைகளில் முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தை. இளையராஜா டிவி நிருபரைப் பார்த்து அறிவிருக்கா, அறிவிருக்குங்கறத எந்த அறிவ வெச்சு நீ சொல்ற எனக் கேட்டு மீடியாக்களை கொந்தளிக்க வைத்தார்.

தூ: யார் என்ன ட்ரென்ட் உருவாக்கினாலும் கேப்டன் ட்ரெண்டே தனி தான். பத்திரிகையாளர்களைப் பார்த்து  தூ என சொல்லிவிட்டு 2015ம் ஆண்டை இனிதே முடித்து வைத்தார்.

இவர்கள் சொன்ன சில வார்த்தைகளைத் தவிர்த்து மற்ற அனைத்துமே சமூக அளவில் கொஞ்சம் சர்ச்சைகளை உருவாக்கக் கூடியவைதான். 2016ஆம் ஆண்டிலாவது ரோல் மாடல்களாக இருக்க வேண்டிய இவர்கள் தங்கள் இருக்கும் அந்தஸ்து மற்றும் பொறுப்புகள் உணர்ந்து வார்த்தைகளை பக்குவமாக கையாளுவார்கள் என நம்புவோம்.

  • தொடங்கியவர்

குச்சிமிட்டாய் பாடல் - அரண்மனை 2

  • தொடங்கியவர்

இந்த 20 வயசுப் பொண்ணுகிட்ட இருக்கிற 'தில்' உங்ககிட்ட இருக்கா?

 

இந்தியாவிலேயே வண்டி ஓட்டக் கூடிய மிகவும் உயரமான, கஷ்டமான சாலை - இமயமலையில் இருக்கும் கார்துங் லா (கடல் மட்டத்திலிருந்து 18,380 அடி உயரம்); இந்தியாவிலேயே மிகவும் சின்ன ஸ்கூட்டர் - ஸ்கூட்டி ஜெஸ்ட் (110 சிசி)- இவை இரண்டையும் சம்பந்தப்படுத்தி இருக்கிறார், இந்தியாவின் ஒல்லி கில்லி பொண்ணு அன்னம் ஹஷீம்.

tvs_vc2.jpg


இந்தியாவின் ‘ஒண்ணே ஒண்ணு; கண்ணே கண்ணு’ பைக் ஸ்டன்ட் பெண், 20 வயது அன்னம் ஹஷீம். ‘பைக் ஓட்டணும்னு ஆசை; ஆனா, இந்த ஆம்பளைங்க பார்க்கிற கேலிப் பார்வை ரொம்பக் கஷ்டமா இருக்குங்க’ என்று கண்ட கண்ட காம்ப்ளக்ஸ்களில் கன்னம் சுருக்கும் பெண்கள், அன்னம் ஹஷீமின் அப்பாச்சி பைக் ஸ்டன்ட்களைப் பார்த்தால்,  பைக் ஆக்ஸிலரேட்டரைத் தேடித் தேடி முறுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இப்போ விஷயம் அதுவல்ல! கான்பூரைச் சேர்ந்த அன்னம் ஹஷீம் - ஸ்கூட்டி ஜெஸ்ட் ஸ்கூட்டரில், இமயமலையின் கார்துங் லா சாலையில் தனி ஒருத்தியாகப் பனிப் பயணம் செய்து, தனது நியூ இயரைக் கொண்டாடியிருக்கிறார். எப்படி வந்தது அன்னத்துக்கு இந்த ஐடியா?

tvs_vc3.jpg

‘‘இந்தியாவில் பல மாநிலங்கள்ல ஸ்டன்ட் பண்ணியிருக்கேன். ரொம்ப நாளா பைக் ரைடு பண்ணணும்னு ஆசை. பைக்கில் இமயமலைப் பயணம் நிறைய பேரு அச்சீவ் பண்ணிட்டாங்க! ஆனா, இதுவரை ஸ்கூட்டரில் யாருமே அப்படிப் பண்ணியதில்லை. அதான் கிளம்பிட்டேன்!’’ என்று சொல்லும் அன்னம் ஹஷீமுக்கு, டிவிஎஸ் கம்பெனியில் இருந்தே இந்தப் பயணத்துக்காக ஒரு ஜெஸ்ட் ஸ்கூட்டரைப் பரிசளித்திருக்கிறார்கள்.

tvs_vc1.jpg


‘பல்ஸர் வெச்சிருக்கேன்; கொடைக்கானல் ஹில்ஸ் ஏறுமா’ என்பதெல்லாம் இந்தியாவின் பல பைக் ரைடர்களின் சந்தேகமாக இருக்கிறது. ‘பல்ஸர் என்ன... ஸ்கூட்டியிலேயே இமயமலைகூடப் போகலாம்’ என்று நிரூபித்திருக்கிறார் அன்னம். ஆட்டு மந்தை டிராஃபிக்கில் மாட்டியது, ஆளரவமற்ற இருட்டில் ரைடிங் செய்தது, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சுத் திணறியது, மைனஸ் டிகிரி குளிரில் விறைத்தது, ராணுவத்தினரிடம் சிக்கி விழி பிதுங்கியது என்று எக்கச்சக்க 'த்ரில்' அனுபவங்களை தனது நான்கு நாள் பயணத்தில் கொண்டு வந்திருக்கிறார் அன்னம் ஹஷீம்.

‘‘பொதுவாக மலை ஏற்றங்களில் வாகனங்களின் இன்ஜின் திறன் (சிசி) குறைய ஆரம்பிக்கும். ஏற்கெனவே குறைவான பவர் கொண்டது ஸ்கூட்டி ஜெஸ்ட். ஆனால் ஆச்சரியம்... பனிப் பாதைகளில் அதன் வேரியோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ரொம்பவும் திணறவில்லை. புது ஸ்கூட்டர் என்பதால், பஞ்சர் பிரச்னை, ஸ்டார்ட்டிங் டிரபுள் என்று எந்த மெக்கானிக்கல் பிரச்னைகளையும் கொடுக்கவில்லை ஜெஸ்ட். நான் சந்தித்த பிரச்னைகளில் ரொம்பவும் பயந்து போனது ராணுவத்தினிரடம் சிக்கியதுதான்.

ஒன்வே போன்ற சாலையில் சென்ற ட்ரக்குகளை முந்திச் செல்ல முயன்றபோது, திடீரென துப்பாக்கிக் குண்டுச் சத்தம்... என்ன என்று விசாரித்தால், அது இந்திய ராணுவத்தினரின் ட்ரக்குகள். துப்பாக்கி முனையில்,  அவர்களிடம் நான் வந்த உண்மையைச் சொன்னபிறகு, எனக்கு வாழ்த்துச் சொல்லி அனுப்பினார்கள்.

ஒரு நாள் பயணத்துக்கே நமக்கு நாக்கு வெலவெலக்கிறது. ஆனால் ராணுவத்தினர் நமக்காகச் செய்யும் தியாகங்கள்... ஹேட்ஸ் ஆஃப் இந்தியன் மிலிட்டரி!’’ என்று உடல் சிலிர்க்கிறார் அன்னம் ஹஷீம்.

ஹேட்ஸ் ஆஃப் அன்னம் ஹஷீம்!

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

ஜனவரி - 04

 

636Whitehall.jpgகிமு 46 : டைட்டஸ் லபீனஸ் ருஸ்­பீனா என்ற நகரில் இடம்­பெற்ற சமரில் ஜூலியஸ் சீசரைத் தோற்­க­டித்தார்.

 

1493 : கொலம்பஸ் தான் கண்­டு­பி­டித்த புதிய உலகை விட்டுப் புறப்­பட்டார்.

 

1642 : இங்­கி­லாந்து மன்னன் முதலாம் சார்ள்ஸ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைக் கைது செய்ய தனது படை­வீ­ரர்­களை அனுப்­பினார்.

 

1698 : லண்­டனில் அரச குடும்­பத்தின் வாசஸ்­த­ல­மாக விளங்­கிய வைட்ஹோல் மாளிகை பெரும்­ப­குதி தீயினால் அழிந்­தது.

 

1717 : நெதர்­லாந்து, இங்­கி­லாந்து, பிரான்ஸ் ஆகி­யன கூட்டு ஒப்­பந்தம் ஏற்­ப­டுத்­தின.

 

1762 : ஸ்பெயி­னுக்கு எதி­ராக இங்­கி­லாந்து போர் பிர­க­டனம் செய்­தது.

 

1847 : சாமுவேல் கோல்ட் தனது முத­லா­வது சுழல் துப்­பாக்­கியை அமெ­ரிக்க அர­சுக்கு விற்றார்.

 

636Burj_Khalifa---varalaru.jpg1889 : இலங்­கையில் சப்­ர­க­முவ மாகாணம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1912 : பிரித்­தா­னியக் கால­னித்­துவ நாடு­களில் சாரணர் இயக்கம் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

1948 : பர்மா ஐக்­கிய இராச்­சி­யத்­தி­லி­ருந்து சுதந்­திரம் பெற்­றது.

 

1951 : சீனா மற்றும் வட கொரியப் படைகள் சியோல் நகரைக் கைப்­பற்­றின.

 

1958 : 14 வய­தான பொபி ஃபிஷர், ஐக்­கிய அமெ­ரிக்­காவின் சது­ரங்க சம்­பியன் போட்­டியில் வெற்றி பெற்றார்.

 

1958 : சோவியத் ஒன்­றி­யத்­தினால் விண்­வெ­ளிக்கு அனுப்­ப­ப்பட்ட உல­கின் முத­லா­வது செயற்கைக் கோள் ஸ்புட்னிக் 1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் வீழ்ந்­தது.

 

1959 : லூனா 1 சந்­தி­ர­னுக்கு மிக அண்­மையில் சென்ற விண்­க­ல­மா­கி­யது.

 

1990 : பாகிஸ்­தானில் சிந்து மாகா­ணத்தில் பய­ணிகள் ரயில் ஒன்றும் சரக்கு ரயில் ஒன்றும் மோதி­யதில் 300 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1998 : அல்­ஜீ­ரி­யாவில் மூன்று வெவ்வேறு நிகழ்­வு­களில் 170 பொது­மக்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

 

2004 : நாசாவின் ஸ்பிரிட் கலம்  செவ்வாய் கிர­கத்தில் தரை­யி­றங்­கி­யது.

 

2007 : அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றத்தின் முதல் பெண் சபா­நா­ய­க­ராக நான்சி பெலொசி.

 

2010 : ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நிர்மாணிக்கப்பட்ட உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலீபா உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=636#sthash.v2kaNYg3.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
இன்று ஜிடி நாயுடு நினைவு தினம்...சிறப்பு பகிர்வு
 

ஜிடி நாயுடு என்று பரவலாக அறியப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடுவின் நினைவுதினம் இன்று. தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவரான ஜிடி நாயுடு கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் மார்ச் 23, 1893ம் ஆண்டு பிறந்தார். விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர், தொழிலதிபர். இவர் இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படுகிறார்.

Gopalswamy_D__Naidu.jpg

இவரைப் பற்றி சில சுவாராஷ்யமான தகவல்கள்...

இளம் வயதில் ஜிடி நாயுடு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துக்கொண்டார்.

தொழிலாளியாக இருப்பது வெறுத்துப் போன ஜிடி நாயுடு வேலையை விட்டுவிட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தித் தொழிற்சாலையை நிறுவினார்.

இவருடைய அபிரிதமான வர்த்தகத் திறமை குறுகிய காலத்திலேயே திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார்.

மும்பை சென்று பருத்தி வியாபாரத்தை தொடர்ந்தார். மும்பை பருத்தித் தரகர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கையிருப்பை முழுவதும் இழந்து ஊர் திரும்பினார். ஆனால் மனந்தளராத ஜிடி நாயுடு அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்கு சேர்ந்தார்.

ஸ்டேன்ஸ் துரை நாயுடுவின் திறமையைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் ஒரு பேருந்தைக் கடனாக கொடுத்து தவணை முறையில் கடனைத் திருப்பி அடைத்தால் போதும், அதுவரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை தனக்கு அளிக்க வேண்டும் என்றார்.

முதலாளியும் தொழிலாளியுமாக இருந்து முதன் முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கினார் நாயுடு.

gd%20naidaa.jpggd%20naidu%281%29.jpg

 

 

 

 

 

 

 

 


தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார். அந்நாளிலேயே பிரயாணிகளுக்கான வசதிகள், ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் போன்று வசதிகளை செய்து காட்டியவர் நாயுடு.

முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்.

motorbikeusedbyGDNAIDU-1024x768%281%29.j



பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் இவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்து லட்சம்  கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார். இதற்கு நாயுடு கூரிய காரணம்: ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.’ என்றார்.

தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார் ஜிடி நாயுடு.

ஜிடி நாயுடு கண்டுபிடிப்புகள் இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் பல வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார். விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில.

gd%20naidu%20with%20bike.png

 

ஜிடி நாயுடு பற்றி அறிஞர்கள் கருத்து:

‘இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்’ என்றார் பெரியார்.

‘நாயுடுவின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள் ஒரு அளப்பரிய மதிப்புடைய கருவூலங்கள்’ என்றார் அறிஞர் அண்ணா.

"கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் ஜிடி நாயுடுவைக் கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்" என்று மனம் திறந்து பாராட்டினார் சர். சி. வி. ராமன்.

ஜிடி நாயுடுவின் கண்டுபிடிப்புகள் சில மற்றும் விருதுகள்

AppleComputermadein1984-1024x768%281%29.

 

FirstelectricmotormadebyGDNAIDU-1024x768

 

MechanicalCalculator-1024x768.jpg

 

ProjectionTVEarly-768x1024.jpg

 

HugeearlyComputer-768x1024%281%29.jpg

 

AwardsreceivedbyGDNAIDUandhiscompany-102

 

  • தொடங்கியவர்
2015 டாப் 25 பரபரா
 
 

 

`மை நேம் இஸ்  கண்ணீர் செல்வம்!’

p52a.jpg

‘துளசி வாசம்கூட மாறும்... ஆனா, இந்த தவசி வாசம் மாறாதுடா!’ என எந்நாளும் தும்பைப் பூவாட்டம் பணிவு வணக்கத்துடன் வலம்வந்தார் பன்னீர்செல்வம். ‘முதல்வர் நான்தான். ஆனா, அதைப் பத்தி நான் பேச மாட்டேன்’ என அவர் போட்ட ஆலுமா டோலுமாவுக்கு ஆல்-இந்தியாவே அடக்க முடியாமல் சிரித்தது. லெட்டர் பேடு தொடங்கி ஐ.டி கார்டு வரை ‘முதலமைச்சர்னா அது அம்மாதான்... அதுவரைக்கும் நான் சும்மாதான்!’ எனக் கண்ணீர் வடித்துக் கதறினார். முதலமைச்சராகப் பதவியேற்கும் போது கதறி அழுது பண்ணின காமெடி பத்தாது என, `பிரேமம்’ நிவின் பாலி டைப்பில் அவர் வளர்த்த தாடி தனி எபிசோடு. அம்மா விடுதலை யானதும் மொட்டை போட்டு நேர்த்திக் கடன்கள் அடைத்து `நல்லவேளை ரிலீஸாகிட்டாங்க’ என எஸ்கேப் ஆனார்.  `வாட்ஸ்அப்’ அம்மாவின் செல்லப்பிள்ளை பன்னீர்செல்வம் தான், இந்த ஆண்டின் பெஸ்ட் சென்டிமென்ட் செல்லக்கிளி!

தீச்சட்டி மினிஸ்டர்ஸ்!

p52_2.jpg

`தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க’ என கண்ணு சிவக்கச் சொன்னது கறுப்பு எம்.ஜி.ஆர் என்றாலும், மாவட்டச் செயலாளர்கள் முதல் மந்திரிகள் வரை பலரையும் மாத்தி மாத்தித் தூக்கியடித்தது மேடம்தான். ஐ.டி கம்பெனிகளில்கூட நோட்டீஸ் பீரியடு உண்டு. ஆனால், அமைச்சர்கள், ஜெயா டி.வி ஸ்க்ரோல் நியூஸ் பார்த்துத்தான், தான் `மந்திரியா... எந்திரியா?’ என அறிய முடியும். நான்கு வருடங்களில் 22 முறை மியூஸிக்கல் சேர் நடத்தியது எல்லாம் கொக்கரக்கோ கும்மாங்கோ. `இன்னும் ரெண்டுவாட்டி எக்குத்தப்பா எந்திரிக்கவெச்சா ராசி நம்பர் 24 வந்துடும்’. இத்தனை கலவரத்திலும் ஜெயிலுக்குப் போன அம்மாவை மீட்க, அலகு குத்தி, குண்டம் எடுத்து, தாடி வளர்த்து தர்மத்தைத் தூக்கிநிறுத்த அண்டர் கவர் ஆபரேஷன்களில் உருண்டு புரண்ட அமைச்சர்களை மீம்ஸ் பொங்கலில் கொதிக்கவிட்டது, தாறுமாறு தமிழ்நாடு. கோர்ட் பக்கம் கணக்கில் ஒரு சைபரை காக்கா தூக்கிக்கொண்டு போக, ஒருவழியாக முடிவுக்கு வந்தது அமைச்சர்களின் வேண்டுதல் மேளா. இருந்தாலும் அந்தத் ‘தெய்வத்தை மனிதன் தண்டிக்கலாமா?’வை நினைச்சா, இப்பக்கூட இடுப்பு அளவு தண்ணீரில் தத்தளிக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங்!

அட்டாக் அழகிரி!

p52_3.jpg

உண்மையிலேயே அழகிரி விமானம் ஏறி வெளிநாடுதான் போகிறாரா... இல்லை ஏர்போர்ட் வாசல்ல பேட்டி கொடுத்துட்டு, எகிறிக்குதித்து திரும்பவும் வீட்டுக்கே திரும்பிவிடுகிறாரா என ரொம்ப நாளா டவுட். ‘கலைஞர்தான் அடுத்த சி.எம்.’, ‘விஜயகாந்தோட கூட்டணி சேர்ந்தா... வெளங்காது’, ‘ஸ்டாலின் பயணமா, ஹாஹாஹா காமெடி டைம்’னு அசால்ட் பேட்டிகள் அள்ளிவிட்டு ஆட்டையைக் கலைத்தார் ‘அ’னா.  `அய்யோ அழகிரியில கண்டம்’னு ஆளாளுக்குச் சிதறி ஓட, ‘உடன்பிறப்பே நான் செங்கல்பட்டு தாண்டியாச்சு... தொண்டர் படை என்னாச்சு?’ என போன இடமெல்லாம் சல்லடைபோட்டுத் தேடினார் அழகிரி. ‘ஆமா, லண்டன்ல இருந்துதான் பேசுறேன். என்னாது ஸ்டாலின் நடைப்பயணம் போறாரா...  வாவ் வாட் எ ஃபன்?’ என செம கலாய் கலாய்த்தார். தொலைக்காட்சி கேமராக்கள் அளவுகூட தொண்டர்களைக் காணோம் என்பதில் அண்ணனுக்கு அவ்வப்போது வியர்த்துக்கொட்டியது. ‘முடியட்டும்... விடியட்டும்’ என ஸ்டாலின் வேர்க்க விறுவிறுக்க நடந்தால், ‘ஆமாமா முடிஞ்சிரும்... முடிஞ்சுட்டாலும்...’ என ‘அது... இது... எது’ நடத்தினார் பழகிரி!

ஒன்மேன் காமெடி சேனல்!

p52_4.jpg

’முருகன்தான் நம் முப்பாட்டன், தமிழகம்தான் நம் மதம். ஸ்டார்ட் மியூஸிக்... இனி நாமெல்லாம் இதைத்தான் ஃபாலோ பண்ண வேண்டும்’ என சீமான் போட்ட ஸ்டாண்ட்அப் காமெடியில் மதுரை முத்து, ஈரோடு மகேஷுக்கு எல்லாம் எக்கச்சக்கமாகப் புரையேறியது. ‘இந்தத் தண்ணி இருக்கே... தண்ணி, அதைக் கண்டுபிடிச்சவன் தமிழன்தான். ஆயிரம் வருஷம் முன்னாடியே சொல்லிட்டான், இந்த வெந்நீ இருக்கே... வெந்நீ அதையும் அவன்தான் கண்டுபிடிச்சான். காலையில குளிக்கலைன்னாலும் தமிழன்டா!’ என முஷ்டியை மடக்கி முகத்துக்கு நேராக நீட்டி, ‘ஆமாவா இல்லையா... சொல்லு சொல்லு’ என அச்சுறுத்த `அய்யோ... அம்மா’ என அலறி ஓடியது தம்பிமார் படை.  பச்சை சட்டையும் கையில் வேலுமா மீசைவெச்ச முருகனாட்டம் வந்து நின்றவர், ‘எம் பாட்டன் ராவணனை ஜண்டுபாம் விளம்பரத்துல நடிக்கவெச்சுட்டாங்க ப்ரோ. இதைத் தட்டிக்கேக்கணும்’ என அல்லோலகல்லோலப்படுத்திய சீமான், இந்த ஆண்டின் ஒன்மேன் காமெடி சேனல்!

பேய், பிசாசு, ஹிட்டு, மணி... மணி!

p52_5.jpg

சுவிஸ்ல இருந்து சுடுகாட்டுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டை மாத்திப் படமெடுக்க ஆரம்பிச்ச கோடம்பாக்கம் கோஷ்டி கானாவின் கோரப்பிடியில், இந்த ஆண்டும் சிக்கித் தவித்தது சினிமா உலகம். ‘காஞ்சனா’ கலெக்‌ஷனில் தொடங்கியது இந்தப் பூச்சாண்டி ஆட்டம்.  இது சிரிப்பு மூட்டுற பேய், இது செக்ஸியான பேய், இது காமெடிப் பேய், இது கலாய்க்கிற பேய் என விதவிதமாகப் பயமுறுத்தியது பேய்ப் படக் கொடுமைகள். ஜம்மெனப் பாட்டு எழுதிக்கொண்டிருந்த பா.விஜய் `ஸ்ட்ராபெரி’ பேயுடன் பூச்சாண்டி காட்ட, `டார்லிங்’ பேயோடு கட்டிப்பிடி கலகலப்பூட்டினார் பால்வாடி ஜி.வி.பிரகாஷ். `நானும் பேய்தான்’ என நயன்தாராவையும் விட்டுவைக்காத பேய்களுக்கு மத்தியில், `கொஞ்சம் பயப்படுங்க பாஸ்’ என்ற லோ பட்ஜெட் பேய்களும் அச்சுறுத்தியது.  ‘டார்லிங் 2’, ‘அரண்மனை 2’னு `அடுத்த வருஷமும் கன்ட்னியூ ஆகுதுஜி’னு பீதி கெளப்புதுக இளம் இயக்குநர்கள் பட்டாளம்!

காங்கிரஸ் குர்குரே...

p52_6.jpg

ஸ்கூல் பையன்களைப்போல தலைவர் நாற்காலிக்குக் கீழே தாறுமாறு பட்டாசு கொளுத்தும் கதர் பழக்கம் இந்த ஆண்டும் தொடர்ந்தது. `காங்கிரஸுக்கு இளங்கோவன்தான் தலைவர். ஆனா, அதைப் பத்தி எங்களுக்கு எதுவும் தெரியாது’ என ஒட்டுமொத்த காங்கிரஸ் கோஷ்டிகளிலும் கலகலப்பு. ஜெயலலிதா - மோடி சந்திப்பைப் பற்றி எக்குத்தப்பாக இளங்கோவன் வார்த்தைகள் விட, கடுப்புக் காவடி தூக்கினார்கள் ர.ரத்தங்கள். கொடும்பாவி கொளுத்தி, ஊர்வலம் போய், சத்தியமூர்த்தி பவன் மீது கல் வீசி அம்மா ஆக்‌ஷன் படம் ஓட்டினார்கள். `வெளியில மட்டும்தான் வில்லங்கம’்னு லேசா அசந்து இளங்கோவன் தூங்க, அவர் மூக்குக்குள் குச்சியைவிட்டு ஆட்டினார் தங்கபாலு. ‘கோவனை ஆதரிக்கிறார் இளங்கோவன். இது சாமிக்குத்தம்’ என டெல்லி வரை போய் வத்திவைத்தார். அடுத்த ரெண்டு வாரத்திலேயே வர்த்தகர் அணித் தலைவர் வசந்தகுமாரை பார்சல் கட்டிப் பதவியைவிட்டு இறக்கினார் ஈ.வி.கே.எஸ். போதாக்குறைக்கு விஜயதரணியோடும் பஞ்சாயத்தைக் கூட்ட, ஏற்கெனவே ஓவர் மேக்கப்பில் சிவந்திருக்கும் விஜயதரணி இன்னும் சிவந்தார்!

இது ஆபரேஷன் புலி!

p52_7.jpg

`சின்னதம்பி’ பிரபுவுக்கு அப்புறம் `தாலி’ன்னா என்னனு தெரியாத இன்னொருத்தர், சுப்பிரமணியன்சுவாமி. கல்யாணம் பண்ணிவைக்க தாலி எடுத்துக் குடுக்கச் சொன்னா, அதை அப்படியே வாங்கி, பொண்ணு கழுத்துல கட்டப்போயி இவர் பண்ணின சேட்டையைப் பார்த்தா சின்னதம்பியே சிரிச்சுடுவாப்ல! ‘எனக்கு அமெரிக்க உளவாளிகள்கிட்டருந்து தகவல் வந்துடுச்சேய்ய்’னு ட்விட் போட்டார்னா... அடுத்த ட்வென்டி ஃபோர் ஹவர்ஸ் நல்ல டைம்பாஸ் கியாரன்டி. `அவாளுக்கு உடம்புக்கு முடியலை. சீக்கிரமே எவிடென்ஸை ரிலீஸ் பண்றேன்’, `மீனவா... எதுக்கு மீன் பிடிக்கறா? அதனாலதான இலங்கை மிலிட்டரி சுடறா’னு சுப்பிரமணியன்சுவாமி ஆண்டு முழுக்க போட்ட டண்டணக்கா எல்லாமே கடுப்ஸ். `யுனிவர்சிட்டி ஸ்டூடன்ட்லாம் பூரா நக்ஸலைட்டு. தூக்கி உள்ள போடுங்க’னு போர் அடிக்கும்போது போருக்கு அழைப்பது, `மசூதிகள் மதம் சார்ந்த இடம் இல்லை’ என்று உளறிவைக்க, `கேஸ் போட்டு கேட்டை மூடுறா’ என்றது இஸ்லாமியர் தரப்பு. `அம்மாவுக்கு அல்சர்... தொண்டையில ஆபரேஷன்’ என சாமி அலும்பு பண்ண, `இந்தா புடிங்கோ கிஃப்ட்டு’ என அவதூறு வழக்கை பார்சல் பண்ணியது அம்மா குரூப்ஸ்!

டூ மினிட்ஸ்ல திரும்பி வந்துட்டேன்!

p52_8.jpg

ஒன்ஸ் அப்பான் எ டைம் மேகிதான் குட்டிப் பாப்பாக்களுக்குப் புடிச்ச தீனி,  அன்ஃபார்ச்சுனேட்லி அதுல இருந்தது எக்கச்சக்க ஆணி.  மோனோசோடியம் குளுக்கோமேட், ஈயம், இத்தாலி, பிரேசில், ஹிட்லர்... என எக்கச்சக்க விஷயங்களை மேகி பாக்கெட்டுக்குள் இருந்து பரிசோதனைக் கூடங்களில் எடுக்க எடுக்க... எவரெடி பேட்டரி தவிர எல்லாமே வந்தது.  `போடுறா தடையை... மூடுறா கடையை’ என உயர் நீதிமன்றம் குதிக்க, `துரோகிடா இந்த மேகி’ என ஆல் இந்திய அம்மாக்கள் ஊரெல்லாம் மேகியைப் போட்டு எரிக்க...  ஒன் மினிட்னு நெஸ்லே கம்பெனி  320 கோடி ரூபா ஸ்டாக்கை ராவோட ராவா ஒரு பாக்கெட்கூட மிச்சம் இல்லாமல் அழிச்சு,  எரிச்சு, கரிச்சு சாம்பலாக்கி ஊதியது.  ஆனா பாருங்க... அங்கே வெச்சான் ட்விஸ்ட்டு. அப்படியே ஜஸ்ட் லைக் தட் சத்தமே இல்லாமல் கோர்ட்டில் போராடி வக்கீல்களை வெச்சு வாதாடி தரச்சான்று வாங்கிட்டாங்க மறுபடியும். இப்போ `மேகியைப்போல் உத்தமமான பண்டம் உலகத்திலேயே இல்லை’ என இந்திய அரசே சொல்லிடுச்சு. `நம்ம மேகி நல்ல மேகின்னா, அதை ஏன் பாஸ் அர்ஜென்டா எரிச்சீங்க?’னு யாருமே கேக்கலை கடைசிவரைக்கும்!

மீம்ஸ் டார்லிங்!

p52_9.jpg

மீம்ஸ் மச்சான்களின் ஆல்டைம் டார்லிங்காக வலம்வந்தார் கேப்டன். டெல்லிக்குப் போய் ஜெயா டி.வி நிருபரிடம் `தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க’ என நாக்கைக் கடிக்க, ஆண்டு முழுக்க கேப்டனின் பிரஸ்மீட் எல்லாம் வைரல் வகையறாக்கள். சுந்தர் பிச்சை சி.ஈ.ஓ ஆகிவிட்டார் என மைக்கை நீட்ட, `கூகிள்... கூகிள்...’ எனக் கூவி கேப்டன் ரகளை கூட்டினார். `யோகா டே கொண்டோடுவோம், வாங்க ப்ரண்ச்’ எனத் தொண்டர்களைத் திரட்டி பண்ணினது எல்லாம், `கெத்தவிடாத மாமா, கெத்தவிடாத மாமா’ மொமன்ட்ஸ். யோகா செய்துகொண்டே காட்டிய நவரச பாவனைகளில் நூறு சிவாஜி, முந்நூறு ஏவி.எம்.ராஜன்கள் தெரிந்தார்கள். அதே விஜயகாந்த், அப்துல் கலாம் மரணத்துக்குப் போய் கதறி அழுததும் டியூட் மனதைக் கலங்கடித்தது. `பாருங்கடா பாசத்தலைவன்’னு அதுக்கும் போட்டான் தமிழன் ஒரு மீம்ஸ். மழை வெள்ளத்தில் முழங்கால் தண்ணியில் வேட்டியை மடிச்சுக்கட்டி இறங்கி, ‘ஏய் புள்ள... இந்தா பால்பாக்கெட்டை எடுத்துப் பாதிக்கப்பட்டவருக்குக் கொடு’னு நிவாரண வேலைகளிலும் லைக்ஸ் அள்ளத் தவறலை பாசக்கார கேப்டன்!

 அதிர்ஷ்டக்கார ஆர்.கே நகர்!

 p52_10.jpg

அதிர்ஷடக்கார மக்கள் என்றால், அது ஆர்.கே நகர் மக்கள்தான்! அம்மாவை அரியணையில் ஏற்ற, ஆர்.கே நகர் தேர்தலுக்காக அமைச்சர்கள் எல்லோரும் வரிசையில் போய், ‘தங்கமே... உன்னத்தான் தேடி வந்தேன்’ எனப் போய் நிற்க, ஏரியா மக்கள் எல்லாம், ‘ச்சூ ச்சூ பக்கத்து வீடு பாருப்பா’ எனத் துரத்தியடித்தார்கள். ஆனாலும் அடிமைவம்ச அமைச்சர்கள் ஆல் வேலைகளுக்கு எண்டு கார்டு போட்டு அதிரடி ஆக்‌ஷனில் இறங்கி, ஆர்.கே நகர் சாக்கடைகளுக்கு எல்லாம் சென்ட் அடித்து, ரோட்டுக்கு எல்லாம் பெயின்ட் அடித்து, மக்களுக்கு ஃபேன் பிடித்துக் குஷிப்படுத்தினார்கள். ‘நான்தான் உங்கள் அன்புச் சகோதரி அம்மா ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன்’ எனக் கைகூப்பி மாண்புமிகு மதர் ஒரு பக்கம் நிற்க, டிராஃபிக் ராமசாமி இன்னொரு பக்கம் டூப்ளிகேட் காந்தியுடன் தெருத் தெருவாக லைவ் ஷோ பண்ணி மக்களுக்கு என்டர்டெயின்மென்ட் வழங்க, தேர்தல் நாளில் மாண்புமிகு மக்கள் குத்துன குத்துல அம்மா ரெக்கார்டு பிரேக் பண்ணாங்க. ஆனா, அதுக்கு அப்புறம் அவங்களை ஆளையே காணோம்!

`நாங்களும் முதல்வர்தான்’!

p52_11.jpg

ஒபாமா போஸ்டரை ரீமேக் பண்ணி `மாற்றம் முன்னேற்றம்’ என முதல்வர் வேட்பாளர் வண்டியில்  முதல் ஆளாக கர்ச்சீஃப் போட்டு இடம்பிடிச்சது அன்புமணி. தைலாபுரத்தில் இருந்து தாறுமாறாகக் கிளம்பின எக்ஸ்பிரஸ், அப்படியே நாள்பட நாள்பட பேசஞ்சர் ஆகி பஞ்சர் ஆனது. எப்போது எல்லாம் தமிழன் டயர்டாகிறானோ, அப்போது எல்லாம் விதவிதமா காமெடி போஸ்டர்கள் அடித்துக் கலக்கினர் மாம்பழக்காரர்கள். `முதல் நாள் முதல் கையெழுத்து’ என ஒன் சைடு நோட் முழுக்கக் கையெழுத்து  போட்டுப் பழகினார் சின்ன டாக்டர். இவரோட தகிடத் தகிடவைப் பார்த்து சும்மா இருக்குமா சுகர்ஃப்ரீ கூட்டம்?  நாங்களும் முதல்வர் வேட்பாளர்தான் என ஸ்டாலின் இறங்க... ‘அப்படியா மை சன்... சொல்லவேல்ல?’ என லந்து பண்ணி மீம்ஸ் போட்டார் கலைஞர். `முடியட்டும்... விடியட்டும்’ என ஸ்டாலின் வாக்கிங் கிளம்ப, ஊழலை ஒழித்து முடித்து டயர்டான மதுரைக்கார மச்சான், மாநாடு போட்டு மஸ்து காட்டினார். இந்தத் தமாசுகளுக்கு நடுவில் சீமான் மூங்கில் தெப்பத்தில் முதல்வர் கனவுடன் களத்தில் இறங்க... `நீ யாருப்பா, வண்டிக்கு புதுசா இருக்கு?’ என ஒரு சவுண்டு. திரும்பிப் பார்த்தால் வைகோ.  திருமா, `தா.பா-வைக் கூப்பிடுங்க. இதுதான் கூட்டணிச் சாப்பாடு’ என சாம்பார் வாளியோடு களம் இறங்க... ஆக மொத்தம் 2015-ல் தமிழ்நாட்டுக்கு 215 முதல்வர் வேட்பாளர்கள்!

அர்னால்டு  இல்லைன்னா அக்‌ஷய்குமார்!

p52_12.jpg

‘அண்ணே, எப்பண்ணே வருவீங்க?’ என்று அர்த்தராத்திரியில் கும்பலாக யாரோ போனடிக்க... ‘கண்ணா நான் எப்போ வருவேன்னு எனக்கே தெரியாது. `கபாலி’ல பதில் சொல்றேன்’ என சூப்பர்ஸ்டார் கலங்கடிக்க... `நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்கன்னு எங்களுக்குத் தெரியும். நாங்க வந்திருக்கறது வசூல் பண்ண’ எனப் பற்றவைத்தது `லிங்கா’வினால் வாழ்வு இழந்த விநியோகஸ்தர்கள் சங்கம். வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம், ரஜினி வீட்டு வாசலில் பிச்சை எடுக்கும் போராட்டம் என ரவுண்டுகட்ட, அவர் ஏதோ தொகை கொடுத்து செட்டில் பண்ண... அதன் பிறகும் வந்த கூட்டத்தைக் கண்டு அரண்டு, கபாலி ஷூட்டிங்குக்கு மலேசியா பறந்தார் ரஜினி. சென்னையே வெள்ளத்துல கிடக்க, ‘இந்த ஏழை மக்களுக்கு ஏதாவது செய்யணும்’ என 10 லட்ச ரூபாயை அள்ளித் தந்தார். ‘ஓ மை தலைவா, அடுத்த மாச மளிகைச் செலவுக்கு என்ன பண்ணுவீங்க? இந்தாங்க கை செலவுக்கு’ என ரசிகர் ஒருவர் 10 ரூபாயை மணியார்டர் அனுப்பினார்.  ‘2.0’ எடுப்போமா ஃபிரெண்ட்ஸ், அர்னால்டுதான் வில்லன்’ என ஷங்கர் ஸ்டேட்டஸ் போட, ‘செஞ்சிருவேன்’ என அர்னால்டு ஆஃப்லைனில் கிளம்ப... ‘அர்னால்டு இல்லைனா அக்‌ஷய்குமார்... கூல்ல்ல்’ என கிளம்பிவிட்டது ஷங்கர் டீம்!

இன்னும் கத்து... டி.ஆர்.பி ஏத்து!

p52_13.jpg

டி.வி ஷோவில் நாலுவாட்டி தலையைச் சிலுப்பி காரசாரமாகக் கத்தினால் போதும், நீங்களும் ஆகலாம் சமூக ஆர்வலர். ஈஸி ரூட் போட்டுத் தந்து,  தலைமைக்கு தட்கல் போட்டது புது பாணி. போன வருடம் வரை  பேசித் திரிந்த பலர் கட்சியில் குட் பொசிஷனில் செட்டில் ஆகிவிட, இதுதான்டா செம ரூட் என ஆளாளுக்குக் கருத்து சொல்ல இறங்கியது, இந்த ஆண்டில் உருவான புதிய தொழில் வாய்ப்பு. கருத்துக் கதகளி ஆடி நாவால் நடனம் புரியும் சமூக ஆர்வலர்கள்தான் தமிழ் செய்தி சேனல்களின் அலாவுதீன் பூதங்கள். `உரச உரச தீப்பொறி பறக்கும்... வெறி ஏத்த ஏத்த  டி.ஆர்.பி தெறிக்கும்’ எனக் கொண்டாடித் தீர்த்தன செய்தி சேனல்ஸ். ‘மழை வர்றதுக்கு அம்மா என்ன பண்ணுவாங்க, வருண பகவான்ட்ட போன்லயா சார் பேச முடியும்?’ என அதிர்ச்சி கிளப்பிய சி.ஆர்.சரஸ்வதி, அ.தி.மு.க-வின் ரிவால்வர் ரீட்டா. அவரோடு ஜோடிபோட்ட ஆவடி குமார் அ.தி.மு.க-வின் அதிர்ச்சி வைத்தியத் தோட்டா. ‘இவரு நம்ம கட்சிதாண்ணே... ஏய்ய்ய்ய் இல்லடா இவரு அவிய்ங்க கட்சிடா... ஏய்ய் இவரு அந்தக் கட்சியும் இல்லடா... அதுக்கும்மேல’ என கட்சிக்காரர்களைக் கதறவிட்டார் சுமந்த் ராமன்!

 பஞ்சர் பம்பரம்!

p52_14.jpg

`ஓப்பன் தி டாஸ்மாக்குமா’ பாட்டுக்கு எதிராக ‘குளோஸ் தி டாஸ்மாக்குமா’ என்று போராட்டப் பாட்டு பாடி ஆக்‌ஷன் அவதார் எடுத்தார் வைகோ. `நடையா நடந்து கிடையாய்க் கிடந்து உசிர உட்டு போராட்டம் பண்ணாலும் லைக் என்னமோ நாலைஞ்சுதான் கிடைக்குது’ என நொந்துபோயிருந்த நேரத்தில், `ப்ரோ, உங்க பையன் சிகரெட்டு விக்குறாப்லயாமே’ என நத்தம் விசுவநாதன் புண்ணுக்குள் புகைவிட்டு ஆட்டினார். `என்னதான் ஆச்சு இந்த ஊருக்கு?’ என வைகோவின் முக்கால் தூக்கத்தில் முகேஷ் கனவில் வந்து கிலியைக் கூட்டினார். ஒருவழியாக மக்கள்நலக் கூட்டு இயக்கத்தை அமைத்துவிட்டுத் திரும்பிப் பார்த்தால், தாயகத்தில் இருந்து பத்து, பதினைந்து கிளிகள் பறந்துபோயின. வழக்கம்போல இந்த ஆண்டும் வைகோவின் பம்பரத்தில் எக்கச்சக்க ஆக்கர் குத்தி என்டர்டெயின்ட்மென்்ட் பண்ணியது அறிவாலயம்!

மீட்பர் ஐ.ஏ.எஸ்!

p52_15.jpg

`ரட்சகன் பார்ட்-2 எடுக்குறோம். அதுல இயேசுவையே ஹீரோவாக்குறோம்; பின்னுறோம்; தூக்குறோம்’ என முழிச்சிட்டிருக்கும்போதே ஆன்மிக ஆபரேஷன் செய்தார் உமாசங்கர் ஐ.ஏ.எஸ். ஜீவிக்கிறார், ரட்சிக்கிறார், காக்கிறார் என வீதி வீதியாகப் பிரசங்க பூஸ்ட் குடித்த மதயானையாக வலம்வந்தார். பேசிக்கொண்டிருக்கும்போதே `ஒன் மினிட்.. வாட்ஸ்அப்ல இயேசு வந்திருக்கார’் என திடுக்கிடவைத்தார். `பூகம்பம் வரும்னு எனக்கு பத்து வருஷத்துக்கு முன்னாலயே தெரியும்; சுனாமி வரும்னு ஒன் வீக் பிஃபோர் ஐ நோ’ என அவர் போட்ட போடு, சிவில் சர்வீஸ் சிரிகிரி. `ஏன் பாஸ், அதான் தெரியுமே... அப்ப முன்னாடியே சொல்றதுக்கு என்ன?’ எனக் கேட்டால், ‘உத்தரவு வரலை’ என பவ்யப் பந்து வீசினார். `ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி இப்படி எல்லாம் பண்ணலாமா?’ எனக் கேட்டால், `கேட்டவர் மேல் கெட்ட ஆவியை ஏவி, அட்டகாசம் பண்ணிவிடுவாரோ’ எனப் பயந்தே, யாரும் அவர் ஏரியா பக்கம் நுழையவில்லை!

அலுங்குற குலுங்குற!

p52_16.jpg

‘அடிடா அவனை... புடிடா இவனை என கடைசிவரைக்கும் ஓடி ஓடிப் பிடிச்சதெல்லாம் அப்பாவி பொதுமக்களையா கோப்ப்பால்?’ என  ஊரே முறைக்க, வருஷம் பூரா `நாங்க ரொம்ப பிஸி’ என காவலுக்கு நின்றது என்னமோ டாஸ்மாக் வாசலில்தான்.  கையில் தடியும் கண்களில் நெருப்புமாக `டாஸ்மாக்கை மூடு...’ என நின்ன பசங்களைப் போட்டு மிதிமிதினு மிதிச்ச பாதங்களுக்கு கோல்டன் பூட் விருது மட்டும்தான் கொடுக்கவில்லை. ஏமாந்தவங்களைப் போட்டு நொங்கின நேரம் போக டைம்பாஸுக்கு டிராஃபிக் ராமசாமியாட்டம் யாராவது சிக்கினால், மொத்தமாகத்  தூக்கிட்டுப் போய் பண்ணினது எல்லாம் கும்பமேளா. சாதி சங்க டீலிங் என்றால் பம்முவது... அப்பாவிகள் என்றால் கும்முவது இதுதான் இந்த வருஷம் லோக்கல் போலீஸோட புரொஃபைல்! 

`வாக்கிங் போனா வாக்குகளை அள்ளிரலாம்!’

p52_17.jpg

அர்த்தராத்திரியில் உங்க ஏரியாவில் கறுப்பு கூலிங்கிளாஸோட கும்பலா ஒருத்தர் நடந்துபோனா, அவர்தான் மு.க.ஸ்டாலின். அவர் போறது ஆட்சியைப் பிடிக்க! இந்த வாக்கிங் ஜர்னியில் ஆன் தி வே ஆளைப்பிடிச்சு `போய்யா’னு தள்ளுறது, மெட்ரோ ரயில்ல பக்கத்துல வந்த உடன்பிறப்பைப் பாசத்தோட அறைஞ்சிட்டு அடுத்த நாளே ` `ஏன் ஷேவிங் பண்ணலை?’னு கன்னத்தைத் தடவிக் கேட்டேன்’ என சால்ஜாப்பு சமோசா விற்றார். செல்ஃபி எடுக்க வந்த ஆட்டோ டிரைவரை அறைய, மீடியா மீட்டரில் எக்கச்சக்கச் சூடு. ‘அடிக்கிற கைதான் அணைக்கும்... அடுப்புல சோறா கொதிக்கும்?’னு அடிச்சவரை அடுத்த நாள் கூப்பிட்டுச் சிரிச்சபடியே செல்ஃபி எடுத்தது `வேதாளம்’ அஜித்தின் டிரான்ஸ்ஃபர்மேஷனுக்கு இன்ஸ்பிரேஷன்். ‘பத்து எண்றதுக்குள்ள’ ரெய்டு. அன்புமணி போட்ட மாற்றம் முன்னேற்றத்தை அப்படியே லைட்டா மாத்தி ‘நமக்கே நாமே’வாக்கி  ஹைவேஸ்ல போகும்போதே `முடியட்டும்... விடியட்டும்’னு மாத்தி மக்களைச் சந்திச்சு, கத்தைக் கத்தையா கம்ப்ளைன்ட் காகிதங்கள் வாங்கி வந்து கோபாலபுரத்தில் குவித்திருக்கிறார். `ம்... இவ்ளோ கஷ்டப்பட்டு என்ன பிரயோஜனம்? இவர்தான் அடுத்த முதல்வர் வேட்பாளர் என கலைஞர் சொல்ல மாட்டேங்கிறாரே பாஸூ... தமாசு தமாசு’ எனச் சிரிக்கிறது எதிரி முகாம்!

நாட்டாமையையே மாத்திட்டாங்க!

p52_19.jpg

`சண்டக்கோழி’ விஷாலுக்கும் `சண்டமாருதம்’ சரத்துக்கும் சண்டை. அதை ஊரே வேடிக்கை பார்த்தது. மேடைக்கு மேடை கிழிகிழி எனக் கிழித்து ஏகப்பட்ட என்டர்டெயின்மென்ட் வழங்கி னார்கள் நடிகர்கள். ‘சண்டையை, சினிமாவுல பார்த்திருக்கேன்; டி.வி-யில பார்த்திருக்கேன்; திருட்டு வி.சி.டி-யில பார்த்திருக்கேன். நேர்ல பார்த்திருக்கேனா... பார்த்திருக்கேனா?’ எனப் பரவசப்பட்டுப் பார்த்து மகிழ்ந்தது பப்ளிக். கேமராவை விஷால் சட்டைக்குள் மட்டும்தான் வைக்கலை... மத்தபடி ஆயிரம் கேமராக்கள் சூழ ஆர்ப்பாட்டமாக நடந்த தேர்தல், ஜாலி சரவெடி.  ‘ஜி எனக்கும் ஒரு ஓட்டு குடுங்க, வந்து குத்திடறேன்’ என ஆவேச சர்பத் குடித்து ஆல்டைம் பிஸியாக இருந்தான் டாஸ்மாக் தமிழன். பேட் பாய் ராதாரவி மேடை எல்லாம் பேட் வேர்ட்ஸ்களை அள்ளித் தெளிக்க, விஷால் - கார்த்தி குட் பாய்ஸ் குழு சத்தம் இல்லாமல் சரத்துக்கு வைத்தது ஆப்பு. டபிள்யூடபிள்யூஎஃப் சண்டை போட்ட மகாபாரத எனிமீஸ் இருவரும், முடிவுக்குப் பிறகு பாசக்கரம் நீட்டி `லாலாலா’ பாடியது விக்ரமன் பட உய்யலாலா!

ஐயோ... எவ்ளோ பெர்ய்ய்ய பலூன்!

 

p52_18.jpg

`இரண்டு லட்சத்து நாப்பதாயிரத்து சொச்சம் கோடிஜி... எறங்குச்சுன்னா பதிமூணு லட்சம் பேருக்கு வேலைஜி.. அப்படியே தட்டுல வெச்சு தகிட தகிடன்னாங்கஜி. நம்பி விசாரிச்சா... ‘அம்புட்டும் வரும்ம்ம்... ஆனா, வராது’னுன்றானுங்கஜி’ என எல்லாருக்கும் செப்டம்பரிலேயே ஏப்ரல் ஃபூல் கொண்டாடியது அம்மா அரசு. ‘அம்மாவின் பர்த் டேட் 24, வரப்போற துட்டு ரெண்டு லட்சத்து நாப்பது... டூ ஃபோர்... டூ ஃபோர்... எப்பூடி?’ என நியூமராலஜி வெறி பிடித்துத் திரிந்தது அ.தி.மு.க வட்டாரம். `அடேங்கப்பா யாரு ப்ரோ அவங்க? எனக்கே பார்க்கணும்போல இருக்கே’ என மோடிக்கே மெர்சல் குடுத்தது அம்மாவின் அப்ரைசல் மாநாடு. `உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி தமிழ்நாட்டை வல்லரச்சாக்கின எங்கள் தெய்வத்தின் தெய்வமே’ என்கிற போஸ்டர் செலவு மட்டும் ஒரு கோடி இருக்கும். கலர்கலராக விட்ட ஜிகினா ஜிம்கானா, ஒரே வாரத்தில் புஸ்ஸ்ஸ்ஸ்.  `அஞ்சு வருஷமா நமக்கு வந்த மொத்த முதலீடே ஆறாயிரம் கோடிதான். எப்படி ஒரே வருஷத்துல இரண்டு லட்சம் பாசிபிள்? இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ என உலக வங்கியே கிறுகிறுத்ததுதான், இந்த ஆண்டின் பெஸ்ட் ஃபன்னி பீப்பிள் மொமன்ட்!

 வான்ட்டடா ஏறின வாட்ஸ்அப் வண்டி!

p52_20.jpg

எஸ்கேப் ஆன யுவராஜுக்கும் இதுதான், முதலமைச்சருக்கும் இதேதான். அவ்ளோ ராசி இந்த வாட்ஸ்அப் வண்டி. எந்தப் பக்கம் பத்தவெச்சாலும் பத்திக்கிற ஏடாகூட இன்ஜின் மாதிரி அவ்வளவும் ஆயிரம் சிசி அதிரடி. ‘வாரா வாரம் வர்ற தமிழ் சினிமாகூட ஒரு வெள்ளிக்கிழமை மிஸ்ஸாகலாம். ஆனா, ஒருமுறைகூட மிஸ்ஸாகாம ரிலீஸாச்சு யுவராஜ் ஆடியோ. கோகுல்ராஜ் கொலை எல்லாம் மறந்து ‘பன மரத்துல வவ்வாலா... யுவராஜூக்கு சவாலா?’ என ரசிகர் மன்றம் ஆரம்பிச்சு, கொடூரத்தைக் கிளப்பியது கொங்கு வட்டாரம். சரண்டர் ஆவதைக்கூட லைவ் அப்டேட்டா வாட்ஸ்அப்ல போட்டு, போலீஸுக்குத் தண்ணி காட்டிய யுவராஜ்தான், இந்த வருடத்தின் வாட்ஸ்அப் வாட்டர் ஹீட்டர். `மழை பேஞ்சு ஊரெல்லாம் தண்ணி’ என ஊரே தகிட தகிட போட, பத்து நாட்கள் கழித்து சாவகாசமாக ‘அன்புச் சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்’ என லேட்டாக வந்தார் மேடம். வாட்ஸ்அப்பில் கிடந்த கூட்டம் நிவாரண உதவிகளில் மும்முரமாக இருக்க, நிவாரண உதவி பண்ணவேண்டிய முதலமைச்சர், வாட்ஸ்அப்பில் செம மொக்க போட்டார். சர்வதேச லெவலில் செம கலாய் கலாய்த்தார்கள். `வதந்தி பரப்புவதாக இருந்தாலும் இவனுங்கதான் ஃபர்ஸ்ட், உதவினு ஓடி வந்தா ஓடோடி செய்றதுலயும் இவனுங்களேதான் பெஸ்ட்...’ என சென்னை வெள்ளத்தில் சுறுசுறுப்பு காட்டின வாட்ஸ்அப் பாய்ஸ்தான் இந்த ஆண்டின் புரியாத புதிர்!

தமிழ்நாட்டின் செல்லக்குரல்!

p52_21.jpg

இந்த ஆண்டின் பெஸ்ட் கிழிகிழிகிழி டி.ஆர்தான். மேடையால இவருக்கு அழகா... இல்ல, இவரால அந்த மேடைக்கு அழகானு புரியாம, மேடையே கன்ஃப்யூஸ் ஆகுற அளவுக்குப் போட்டுத்தாக்கி பொங்கல் வைத்தவர்களில் அண்ணன்தான் சாம்பியன். `அவர் கையில எதை வேணா குடுங்க, ஆனா மைக்கை மட்டும் குடுத்துராதீங்க’ என மைக்கே கதறி அழுதது. ஏறிய மேடை எல்லாம் ஏடாகூடமாகியது. வாயைத் திறந்தால் செம்பரம்பாக்கம் ஏரியை மிட்நைட்டில்  திறந்துவிட்டதுபோல, காதுல குருவி குய்ய்ய்னுச்சு! இந்தப் பேச்சுவார்த்தை ஒருகட்டத்தில் ஓவராப்போய், மீட்டிங் வந்தவன் பூரா பக்கத்துல இருப்பவரிடம், `வொய் ப்ளட்... சேம் ப்ளட்’ சொல்லும் அளவுக்கு முற்றியது. த்ரிஷா மீட்டிங்கில் தொடங்கிய அட்ராசிட்டி, `புலி’ படப் பாடல் வெளியீட்டில் விஸ்வரூபம் எடுத்தது. `இது ஆக்ரோஷப் புலி’, `இது அடங்காப் புலி’, `இது அன்்டார்டிகா புலி’... என அவர்போட்ட போடில் ஆப்பிரிக்கப் புலிகளே அலறி ஓடின. அவர் பாணியில் அவ்வளவு மழை வெள்ளத்திலும், `இது கொடூர மழை’, `இது கோபக்கார மழை’, `இது டார்ச்சர் மழை’, `இது டக்கர் மழை’னு வாட்ஸ்அப்பில் வறுத்தெடுத்தது கொலைகாரக் கும்பல்!

கேங்ஸ் ஆஃப் ரத்த பூமி!

p52_22.jpg

``டேய், தல படம் நாலு நாள் வசூல் ரெண்டாயிரம் கோடிடா... தளபதி படம் மொத நாள் வசூலே நாலாயிரம் கோடிடா’ என ஆன்லைனில் வசூல் பணியாரம் விற்றது இரண்டு கோஷ்டிகளும். ஒண்ணு, தல அஜித்தின் தற்கொலைப் படைத் தம்பிகள், இன்னொன்று விஜய்ணாவின்  வெறி `தெறி’ ரசிகர்படை. மீம்ஸ்தான் இவங்களோட பிம்பிலிக்கா பிளாப்பி பிரம்மாஸ்திரம். ஃபர்ஸ்ட் லுக் வந்தாலும் டிரெய்லர் வந்தாலும் ஒரே ட்ரீட்மென்ட்தான். ` `புலி’ படத் தோல்விக்கு தல ரசிகர்களின் பொய்ப் பிரசாரம் தாண்ணே காரணம்’ என தளபதி தரப்பு கண்ணீர் வடித்து கமிஷனர் ஆபீஸ் போக, அதையும் கலாய்த்து மீம்ஸ் போட்டுக் கொக்கரித்தது தல ரசிகர் வட்டாரம். `இருங்கடி வெச்சிக்கிறோம்’ என வேதாளத்துக்குக் காத்திருந்து வெச்சி செஞ்சது தளபதி கூடாரம். ‘டேய், என் தலயப்பத்தி தப்பாப் பேசின, கிழிச்சிருவேன்... வெச்சு உறிச்சிருவேன்’ என ஒரு தல ரசிகை வாட்ஸ்அப்பில் வாயடிக்க, சம்பந்தப்பட்ட புள்ளையைக் கண்டுபிடித்து `ஐயாம் சாரி’ கேட்க வைத்தது தளபதி சங்கம். இவங்க இப்படி கத்தி எடுத்து சண்டைபோட, கமுக்கமா காசு பார்த்தது என்னமோ கோடம்பாக்கம் கோப்பால்கள்தான்!

இவருக்கு வாய்ல கண்டம்!

p52_23.jpg

ஜனவரி மாசம் அம்மா டி.வி-யில் பட்டிமன்ற  பலூன் ஊதியவர், வருஷக் கடைசியில் மழை அடிச்சு ஊத்தியதும், ‘‘எனது ஜன்னலை திறந்து பார்க்கும்போது, மக்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து வெட்கப்படுகிறேன். மக்கள் செலுத்திய வரிப் பணம் எங்கே? எனக்கு அரசு நிர்வாகம் செய்தது என்ன? எனது சக மக்களுக்கு செய்தது என்ன?’’ என ஆக்‌ஷன் ஹீரோவாக, `என்ன ராஜா அங்க சத்தம்?’ என ஓ.பி.எஸ்-ஸைவிட்டு அம்மா ஒரண்டை இழுக்க, ‘‘அது பேட்டியும் இல்ல அறிக்கையுமில்ல, மை ஃபிரெண்டுக்கு எழுதின இமெயில், கடிதம் ஃபுல்லா எங்கயுமே தமிழக அரசுனு சொல்லவேயில்லையே பாஸ்’’ என ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர் அடிச்ச பல்டி, சிரிச்சாபோச்சு அதிர்வேட்டு. சகிப்பின்மை மேட்டர்ல ஊடால புகுந்து, `என் விருது என் உரிமை’னு கமல் கொடுத்த வாய்ஸுக்கு வட இந்தியா வரைக்கும் கேட்டது சிரிப்பொலி!

ஸ்டிக்கர் டக்கர்!

p52_24.jpg

`நம்ம முதுகுலயும் ஒட்டிட்டாய்ங்களோ!’ என தமிழ்நாட்டு மக்கள் முதுகை அப்பப்போ தடவிக்கிட்டே திரியும்  அளவுக்கு அடிச்சுத் தெறிச்சது அம்மா ஸ்டிக்கர். ஜெ. ஆட்சிக்கு வந்த முதல் வருடம், `சமச்சீர் கல்விக்குப் பூட்டைப் போடு’னு ஆர்டர் போட்டு, புத்தகத்தில் எங்கெல்லாம் சூரியன் படம் வருதோ, அங்கெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டினாங்க. அந்தச் சூரிய ஸ்டிக்கரின் ரீமேக்தான் இப்போதைய மழை ஸ்டிக்கர். ஊரான் வீட்டு நெய்யை தன் வீட்டு பொங்கப்பானையில் அள்ளிப்போட்டு, ‘எப்பூடி?’ எனக் குதூகலித்தது அம்மாவின் அடிமைப் படை. சாதி, மதம், ஐ.டி-க்காரர், அயர்ன் வண்டிக்காரர் என எல்லோரும் ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ எனக் களம் இறங்கினால், ‘அம்மா ஸ்டிக்கர் ஒட்டிக்கணும்’ என எதிர்ப் பாட்டு, எகத்தாளப் பாட்டுப் பாட, ஒட்டுமொத்த தமிழ்நாடும் `கடுப்புநாடு’ ஆனது. அப்புறமா, ‘ஸ்டிக்கர் ஒட்டினவங்கமேல கடும் நடவடிக்கை’னு சொன்னாங்க. ‘யாருய்யா சொன்னது?’னு கேட்டா ‘ஸ்டிக்கர் ஒட்டினவங்களே சொன்னாங்களாம்’. தட் ‘தேவாவே சொன்னார்’ மொமன்ட்!

பீப் பாய்ஸ்!

p52_25.jpg

‘தங்கமகன்’ டிரெய்லரும் பீப் சாங்கும் ஒரே நேரம் ரிலீஸ். பீப் சாங் பீபீ ஊத... சிம்புவைத் தேடியது போலீஸ். வாட் எ சேஞ்சோவர் மாமா! ‘அதுல அனிருத்தும் கூட்டாளி’ எனச் செய்திகள் கிளம்ப, ‘ஐயாம் அப்பாவி’ என  இங்கிலீஷ்ல பாடிக்கிட்டே கனடா பாத்ரூம்ல ஒளிஞ்சிருக்கார்  ஒல்லிபெல்லி. ‘புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்’ என ஆளாளுக்குக் கொதிக்க, `என் புள்ள பொறந்ததுலேர்ந்து நடிகன் சார்’னு டி.ஆர் மறிக்க... `அனிருத்தைச் சிறையில அடைச்சா, கம்பிக்குள்ள புகுந்து வெளியே வந்துருவாப்ல’னு மக்கள் கிண்டல்ஸ் ஆஃப் ராக் ஸ்டார் பண்ணினர்.  ‘இது என் பிரைவேட் சாங்குங்க. இதை யாரோ திருடி ரிலீஸ் பண்ணிட்டாங்கங்க. நான் இது மாதிரி எக்கச்சக்கமா  வச்சிருக்கேங்க’ என ஒஸ்தி காட்ட முயன்ற சிம்புவைத் தெறிக்கவிட்டனர் போராட்டக் குழுவினர். `அட்ரா... அவள ஒதடா... அவள’னு பாட்டு போட்டவன்லாம் நிம்மதியாயிருக்கான். என் கெரகம், நான் மாட்டிக்கிட்டேன்’ என, `தனுஷைப் புடிங்க, செல்வராகவனைப் புடிங்க’ என சிம்பு முட்டிதேய போட்ட சென்டிமென்ட் குத்துக்கு ஆல் ஏரியா நோ ரெஸ்பான்ஸ். ஆனா, பீப் சாங் மேட்டர்ல பிரியாணி சாப்பிட்டது கவர்மென்ட்தான். பேரிடர் மேட்டர்ல நெட்டிசன்ஸ் அம்மா அண்ட்  கோவைக் கொத்துக்கறி போட, அப்படியே பீப் மேட்டரைப் பெரிசாக்கி, தன் சைடுக்குப் பாத்தி கட்டிக்கிட்டது எல்லாம் சாணக்கிய சகுனித்தனம்!

  • தொடங்கியவர்

கொழுப்பை கரைக்க... எடையை குறைக்க!

 

 

p10a.jpg

 

 

 

p10b.jpg

டலில் கொழுப்பு அதிகம் சேரும் இடங்களில், வயிற்றுக்கு அடுத்த நிலையில் இருப்பது தொடைகளும் அதன் பின்பகுதியும். குறிப்பாக, உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு தொடையும், பின் பகுதியும் பெரிதாகி அழகைக் கெடுத்துவிடும். ஆண்களைவிட பெண்களுக்குதான் இந்தப் பிரச்னை மிக அதிகம். தொடை மற்றும் பின்புறத் தொடைப் பகுதிக்கான பயிற்சிகளை முறையாகச் செய்தால், அந்தப் பகுதிகளில் கொழுப்பு குறைவதுடன் தசைகள் வலுவடையும்.


p10c.jpg

ஸ்குவாட் (Squat)

காலை அகட்டிவைத்து நேராக நின்று, இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி, உள்ளங்கை வானத்தைப் பார்ப்பதுபோல், விரல்களைக் கோத்துக்
கொள்ள வேண்டும். மெதுவாக இரண்டு கைகளையும் நெஞ்சுக்கு நேராக இறக்கி, நாற்காலியில் அமர்வதுபோல  அமர்ந்து எழுந்திருக்க வேண்டும். இந்தப் பயிற்சியை 10 முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.

பலன்கள்: குவார்டர்செப்ஸ் எனப்படும் முன்பக்கத் தொடையில் இருக்கும் தசைகள் வலுவடையும். கொழுப்பைக் கரைக்கும்.


p10d.jpg

ஹை நீ அப்ஸ்  (High knee ups)

நேராக நின்று, வலது கால் முட்டியை இடுப்புக்கு செங்குத்தாக உயர்த்த வேண்டும். இந்த நிலையில் ஐந்து விநாடிகள் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். பின்னர், இடது கால் முட்டியை மடக்கி, இதே பயிற்சியைச் செய்ய வேண்டும். இடது கால், வலது கால் என இரண்டிலும் பயிற்சி செய்வது ஒரு செட். இதுபோல், 10 செட்கள் செய்ய வேண்டும்.

பலன்கள்: முன்பக்கத் தொடையில் இருக்கும் தசைகள் வலுவடையும். மூட்டு வலியைத் தடுக்கும்.


p10e.jpg

ஃபார்வர்டு லீன் லெக் கர்ல் (Forward lean leg curl)

சுவர் அல்லது மேஜையின் மேற்புறத்தில் இரண்டு கைகளையும் வைத்து, ஏணி போல சாய்ந்து நிற்க வேண்டும். வலது காலை 45 டிகிரி அளவுக்குப் பின்புறமாக உயர்த்தி, ஐந்து விநாடிகள் நின்று, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். பின்னர், இதே போல இடது காலுக்கும் செய்ய வேண்டும். மொத்தம் 10 செட்கள் செய்ய வேண்டும்.

பலன்கள்: கொழுப்பு கரைந்து, ஹார்ம்ஸ்ட்ரிங் (Harmstring)  எனப்படும் பின்பக்க தசைகள் வலுவடையும்.


p10f.jpg

சிங்கிள் லெக் பெல்விக் ப்ரிட்ஜிங் (Single leg pelvic bridging)

தரையில், மேட் விரித்து மல்லாந்து படுக்க வேண்டும். கைகள் பக்கவாட்டில் இருக்கட்டும். பாதம் தரையில் பதியும்படி கால்களை மடக்கி, ஒரு காலை மட்டும் செங்குத்தாக உயர்த்தவும். பிறகு, இடுப்பை மேலே உயர்த்த வேண்டும். இந்த நிலை பெல்விக் பிரிட்ஜ். இந்த நிலையில், சில நொடிகள் அப்படியே இருக்க வேண்டும். பின்னர், பழைய நிலைக்குத் திரும்பி, இடது காலை மேலே உயர்த்த வேண்டும். பின்னர் படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். மூட்டு வலி, இடுப்பு வலி இருப்பவர்கள் இந்தப் பயிற்சியைத் தவிர்க்க வேண்டும்.

பலன்கள்: பின்பக்கத் தொடையில் உள்ள கொழுப்புகள் கரையும், பின்தொடை உறுதியாகும்.


p10g.jpg

லையிங்  ஹாஃப் லெக் சிசர்ஸ் (Lying half leg scissors)

தரையில் மல்லாந்து படுத்து, கால்களை இடுப்புக்குச் செங்குத்தாக மேலே உயர்த்த வேண்டும். இப்போது, கால்களை நன்கு அகட்டி, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதுபோல 10 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: அடக்டார் (Adductor) எனப்படும் தொடையின் உள்பகுதித் தசைகள் வலுவடையும்.


p10h.jpg

வைடு ஸ்குவாட் (Wide squat)

இதுவும் ஸ்குவாட் பயிற்சியைப் போன்றதே. கால்களை நன்றாக அகட்டி நிற்க வேண்டும். பாதங்கள் இரண்டும் எதிரெதிர் திசையில் இருக்கும்படி தரையில் பதிக்க வேண்டும். கையை அடிவயிற்றுப் பகுதிக்கு அருகே வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, நாற்காலியில் அமர்வது போல அமர்ந்து எழுந்திருக்க வேண்டும். இந்தப் பயிற்சியை 10 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: அடக்டார் தசைகள் வலுவடையும் உடல் எடை குறையும்.

  • தொடங்கியவர்

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் - தெரிந்ததும், தெரியாததும்!

05-1393999425-vinyagarsannathi.jpg

 

விநாயகர் சன்னதி தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் பின்னாட்களில் மராட்டிய மன்னர்களால் கட்டப்பட்ட விநாயகர் சன்னதி.
  • தொடங்கியவர்
1971 : முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
2016-01-05

வரலாற்றில் இன்று...

ஜனவரி - 05

 

637vararu.jpg1554 : நெதர்­லாந்தில் ஐன்ட்­ஹோவென் என்ற இடத்தில் பர­விய தீயினால் 75 சத­வீத  வீடுகள் சேத­மா­கின.

 

1757 : பிரான்ஸின் பதி­னைந்தாம் லூயி கொலை முயற்சி ஒன்­றி­லி­ருந்து தப்­பினான்.

 

1781 : அமெ­ரிக்கப் புரட்சிப் போரின்­போது வேர்­ஜீ­னி­யாவில் ரிச்மண்ட் நகரம் பிரித்­தா­னியக் கடற்­ப­டை­யி­னரால் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டது.

 

1854 : அமெ­ரிக்­காவின் சான் பிரான்­சிஸ்­கோவில் நீராவிக் கப்பல் ஒன்று மூழ்­கி­யதில் 300 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1896 : வில்ஹெம் ரொண்ட்ஜென் ஒரு வகைக் கதிர்­வீச்சைக் கண்­டு­பி­டித்­த­தாக ஆஸ்­தி­ரிய பத்­தி­ரிகை ஒன்று செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது. இதற்கு பின்னர் எக்ஸ் கதிர் எனப் பெய­ரி­டப்­பட்­டது.

 

1900 : ஐரிஷ் தலைவர் ஜோன் எட்வர்ட் ரெட்மண்ட் பிரித்­தா­னி­யாவின் ஆட்­சிக்­கெ­தி­ராகக் குரல் எழுப்­பினார்.

 

1905 : யாழ்ப்­பா­ணத்தில் இருந்து வெளி­யான மோர்னிங் ஸ்டார் வாரப் பத்­தி­ரி­கை­யாக பெரிய அளவில் வெளி­வர ஆரம்­பித்­தது.

 

1918 : ஜேர்மன் தொழி­லா­ளர்­களின் அமை­திக்­கான சுதந்­திரக் குழு (நாஸிக் கட்சி) அமைக்­கப்­பட்­டது.

 

1940 : பண்­பலை வானொலி முதல் த­ட­வை­யாக செயற்­ப­டுத்­திக் ­காட்­டப்­பட்­டது. 

 

1945 : போலந்தின் புதிய சோவியத் சார்பு அரசை சோவியத் ஒன்­றியம் அங்­கீ­க­ரித்­தது.

 

1967 : இலங்கை வானொலி, இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பனம் எனப் பெயர் மாற்றம் பெற்­றது.

 

1971 : உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அவுஸ்­தி­ரே­லியா – இங்­கி­லாந்து அணி­க­ளுக்­கி­டையில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் மெல்­பேர்னில் நடை­பெற்­றது.

 

1974 : பெருவின் தலை­ந­க­ரான லிமாவில் நிகழ்ந்த பூகம்­பத்­தினால் நூற்­றுக்­க­ணக்­கான வீடுகள் சேத­ம­டைந்­தன. 6 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1991 : சோமா­லி­யாவில் வன்­மு­றைகள் தீவி­ர­ம­டைந்­ததால் அமெ­ரிக்கத் தூத­ரக ஊழி­யர்கள் ஹெலி­கொப்டர் மூலம் வெளி­யேற்­றப்­பட்­டனர்.

 

1993 : பிரிட்­டனின் ஷெட்லண்ட் தீவுக்கு அருகில் எண்­ணெய்­தாங்கி கப்­ப­லொன்று மூழ்­கி­யதால்  84,000 தொன் மசகு எண்ணெய் கடலில் பர­வி­யது.

 

1976 : கம்­போ­டியா சன­நா­யகக் கம்­பூச்­சியா என கெமர் ரூச் அர­சினால் பெயர் மாற்றம் பெற்­றது.

 

1997 : ரஷ்யப் படைகள் செச்­சி­னி­யாவில் இருந்து வெளி­யே­றின.

 

2000 : அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் கட்­சியின் தலைவர் குமார் பொன்­னம்­பலம் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

2005 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் கலி­போர்­னி­யாவைச் சேர்ந்த மைக்கல் பிரவுண் தலை­மை­யி­லான வானியல் ஆராய்ச்சிக் குழு­வினர் சூரியக் குடும்பத்தில் ஏரிஸ் என்ற புதிய குறுங் கோள்  ஒன்றைக் கண்டுபிடித்தனர்.

 

2007 : நிட்டம்புவையில் பஸ் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 60 பேர் காயமடைந்தனர்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=637#sthash.m0eFDvwC.dpuf
  • தொடங்கியவர்

 

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் முழு தர்பூசணியையும் அப்படியே சாப்பிடும் 10 வயது சிறுவனின் வீடியோ
 
  • தொடங்கியவர்

தாஜ்மகாலை கட்டிய ஷாஜஹான் பிறந்த தின சிறப்பு பகிர்வு...

 

ஜனவரி 5: இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை கட்டிய ஷாஜஹான் பிறந்த தினம் இன்று..

வரலாற்று ஆசிரியர்கள் இவரின் ஆட்சியை முகலாய மன்னரகளிலேயே பொற்கால ஆட்சி என குறிக்கிறார்கள். ஜஹாங்கீர் பெற்ற மூன்றாவது பிள்ளை இவர். இவரின் அண்ணன் அப்பாவுடன் சண்டையிட்டு அவரின் கோபத்துக்கு உள்ளான காலத்தில் இவர் அமைதி காத்து நல்ல பெயர் சம்பாதித்து கொண்டார்.

sajakahan_1.jpg



ஆசப் கானின் மகளை இவர் மணந்தார் ;அவருக்கு முன்னமே மனைவிகள் இருந்தாலும் மும்தாஜ் என பிற்காலத்தில் அழைக்கப்பட இருக்கும் அவரின் மகளை மணந்தார். ஏழு பிள்ளைகளை பெற்று தந்து அவள் இறந்து போனாள்; அவள் மறைந்த அடுத்த நாளே இவர் முடி வெள்ளையாகி விட்டதாம் .அப்பாவுக்கு எதிராக புரட்சி செய்து அதில் தோல்வி கண்டார்; அப்பா ஜகாங்கீர் இறக்கும் தருவாயில் அவரின் மனைவி நூர்ஜஹான் ஆட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைத்ததை முறியடித்து அரசர் ஆனார், அவரின் நினைவாக தாஜ்மகாலை கட்ட வைத்தார் ஷாஜஹான்;

கூடவே முத்து மசூதியை ,செங்கோட்டையை, இன்றைக்கு பழைய டெல்லி என அழைக்கப்படும் பகுதியை உருவாக்கினார் .அவரின் மயிலாசனம் உலகப்புகழ் பெற்றது ;தங்கம், வைரம், வைடூரியம், ரத்தினங்கள், மரகதம் ஆகியவற்றால் இழைக்கப்பட்டது அது இவரின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் தாரா ஷுகோ ஆனால் தொடர்ந்து அவுரங்கசீப் இவரின் கடுப்பிற்கு உள்ளானார், இவர் உடல்நலம் சரியில்லாத பொழுது இவரை மறைத்து வைத்துக்கொண்டு ஷுகோ ஏமாற்றுவதாக நினைத்து பிள்ளைகள் போர் தொடுக்க இறுதியில் அவுரங்கசீப் அப்பாவை சிறை வைத்தார்; அவர் படுத்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் தாஜ்மகால் மட்டுமே தெரியும் வண்ணம் படுக்க விட்டது மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்ட சலுகை ,நீர்க்கடன் செய்யும் நாட்டில் குடிக்க நீர் கூட இல்லாமல் தவிக்க விடுகிறானே இவன் என புலம்பினார்;

அவர் அன்பு மகள் மட்டுமே வந்து பார்த்து செல்வாள் ;கருப்பு தாஜ்மகால் ஒன்றை எதிரில் உருவாக்கி அதில் தன்னை புதைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் அவர் .அது வீண் செலவு என மறுத்தார் அவரின் மகன் .ஒருநாள் காலை அவரின் ,மனைவியின் கல்லறை இருந்த திசை நோக்கி பார்த்தபடியே இறந்துகிடந்தார் அவர்.

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12419082_965996576782370_352658592203939


இந்தியாவின் அழகு நடிகை, ஹிந்தியின் முன்னணி நடிகை, தமிழிலும் கோச்சடையானில் 'நடித்த' தீபிகா படுகோனின் பிறந்தநாள் இன்று

  • தொடங்கியவர்

2015 டாப் மீம்ஸ் ரவுண்ட் அப்

 

2015 ஒரு வழியாக முடியபோகிறது. என்ன தான் பேஸ்புக் வந்த காலம் முதல் மீம்கள் வலம் வந்தாலும், இந்த ஆண்டு மீம் ஆண்டு என்று கூறும் அளவிற்க்கு எதற்க்கெடுத்தாலும் மீம்களாய் மொய்த்தன. என்ன தான் அத்தனைக்கும் இருந்தாலும், குறிப்பிட்டு கூறும் அளவிற்க்கு பல நாட்கள் வைத்து ஓட்டப்பட்ட பிரபல மீம்கள் ஒரு பார்வைக்கு.

பாகுபலி:
இந்த ஆண்டின் பிரம்மாண்ட படமாகவும், இந்திய திரையுலகிற்க்கு மைல்கல்லாக விளங்கிய ஒரு திரைப்படம் பாகுபலி. நம் ஆட்கள் அதை கூட விட்டு வைக்காமல், "கட்டப்பா என் பாகுபலியை கொன்றார்?", பிரபாஸ் சிவனை தூக்குவதை மக்கள் வாடர் கேன் தூக்கும் படி என பல விதமாக கலாய்த்து கிளப்பி விட்ட மீம்களை இப்பொழுது பார்த்தாலும் குபீர் சிரிப்பு வருவதை தவிர்க்க முடியாது.

வாலு:
சில ஆண்டுகளாக திரையிட தவித்த ஒரு திரைப்படம் வாலு. ஆனல் 2015 இல் மட்டும் நூற்றுக்கணக்கான மீம்கள் வந்து ஓட்டோ ஓட்டு என ஓட்டின. இறுதியாக படத்தை நடிகர் விஜய் அவர்கள் வெளியிட்ட பிறகாவது நிற்க்கும் என பார்த்தால், அதன் பின்னறும் பல மீம்களை உருவாக்கி இணையத்தில் வலம் வரச் செய்தனர் மீம் கிரியேட்டர்ஸ்.

என்னம்மா நீங்க:
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில் தமாஷாக வந்த ஒரு வசனமே "என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களே மா". அடுத்த சில தினங்களிலேயே அது வைரல் ஆகி அனைத்து மீம்களுக்கும் தலைமையாய் சில தினங்கள் திகழ்ந்தது.

சிவாஜி தாத்தா:
நகைக்கடையை திறக்க வந்த அமிதாப் பச்சன், விக்ரம் பிரபு வின் வசனத்தால் மீம் ராஜ்ஜியத்தின் "காட்பாதர்" ஆனது நம் மக்களின் திறமையே. பல இடங்களிலும் கௌண்டர் கொடுக்க "நீங்க சிவாஜி தாத்தா மாதிரி இருக்கீங்க" என கூறி வந்தனர் டீனேஜர்கள்.

 

meemmmmms%281%29.jpg

 

தூக்கி அடிச்சிடுவேன்:
சாதாரனமாகவே நமது கேப்டன் தான் மீம் உலகின் அரசன். ஒரு செய்தியாளர் சந்திப்பில் "காண்டான" நமது கேப்டன் "தூக்கி அடிச்சிடுவேன் பத்துக்கோ" என செய்தியாளார் ஒருவரை அச்சுறுத்தியது ஏனோ நமது மக்கள் கண்களில் காமெடியாக பட்டு விட்டது. சில மீம்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அச்சுறுத்தும் வகையில் இந்த வசனம் பயன்படுத்த பட்டதே உச்ச கட்டம்.

அட்டாக் புலி:
புலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்க்கு வருகை தந்திருந்த பல்கலை வித்தகர் டி. ராஜேந்திரன் அவர்கள், தனது பானியில் புலி படத்தை புகழ்ந்தது பல வாரங்கள் பல ரூபங்களில் வலம் வந்தது. ஓயாமல் பேசும் ஆசிரியர்களுக்கு கவுண்டர் கொடுக்க கூட இந்த வசனங்கள் பயன்பட்டதாக மாணவர்கள் பலரது ரெவ்வியு.

செஞ்சிருவேன்:
தனுஷின் மாரி திரைப்படத்தில் வந்த செஞ்சிருவேன் பன்ச் டைலாக் அந்த படத்தில் எதிரொலித்ததை விட சமூக தலங்களில் எதிரொலித்து பட்டையை கிளப்பின. இன்றளவும் யாரையும் விளையாட்டக மிரட்ட. செஞ்சிருவேன் என கூறுவது பழக்கமாகவே ஆகி விட்டது.

இருட்டுலயே வாழ்ரவன்
தனி ஒருவன் திரைப்படத்தில் வில்லனாக வந்த அரவிந்த் சாமி அவர்கள் பாடலில் கூறிய வசனத்தை சீரியஸாக காமெடி ஆக்கிய நம் ஊர் பசங்க, நான் இருட்டுலயே வாழ்ரவன் என்பதை பெரிய அளவில் டிரெண்ட் செய்து விட்டனர்.

ரெயின் ரமணன்:
மழையால் பலரும் அவதிப்பட்டாலும், அந்த அவதியிலிருந்து சிறிதே நம்மை காப்பற்ற வந்தது தான் ரெயின் ரமணன் மீம்கள். இந்தாண்டு வந்ததிலேயே அதிகமாக வந்த, அதிகமாக பகிரப்பட்ட மீம்களே ரமணன் அவரின் மீம்கள். சென்னை வானிலை மைய இயக்குனரான ரமணன் இந்தாண்டு அடைந்த பிரபலம் கொஞ்சமல்ல. அடுத்த அமெரிக்க ஜனாதிபதி ரமணன் என கூறும் அளவிற்க்கு அவரது மீம்கள் வந்துள்ளன.

காத்திருக்கிறோம்:
நாஞ்சில் சம்பத் அவர்கள் பிரபல செய்தியாளார் ரங்கராஜ் பாண்டே அவர்களுடன் கலந்து கொண்ட உரையாடல் திடீரென வந்து அனைத்து சமூக தலங்களையும் நிரப்பி உள்ளது. "அம்மாவிற்காக காத்திருக்கிறோம்" என அவர் கூறிய ஒரு டைலாக் அனைத்து இடங்களையும் நிரப்பியுள்ளது. அரசியல் மீம் முதல், குழந்தைகள் மீம் வரை "காத்திருக்கிறோம்" பிரபலமாகியுள்ளது.

ஆஹான்:

என்ன தான் அத்தனை மீம்கள் வந்தாலும் இந்த ஆண்டின் ஸ்டார் மீம் "ஆஹான்" தான். பட்டிதொட்டி முதல், ஸ்டார் ஹோட்டல் வரை "ஆஹான்" அனைவரையும் கடுப்பேத்தவும் செய்தது, மகிழ்விக்கவும் செய்தது.

இந்த ஆண்டு இந்த மீம்களுடன் இனிதே முடிந்தாலும் அடுத்த ஆண்டு என்னென்ன மீம்கள் வரும் என நினைத்தாலே நம்மை கலங்கைக்கதான் செய்கிறது.
 

meemmmmms%281%29.jpg

 

  • தொடங்கியவர்

1003607_10154211778084578_11621237268672

323 பந்துகளில் 1,009 ரன்கள்: 15 வயது மும்பை பள்ளி மாணவர் வரலாற்றுச் சாதனை!

  • தொடங்கியவர்

மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய நீர்வீழ்ச்சி சீனாவில் திறக்கப்பட்டது. யுனான் மாகாணத்தில் அமைக்கப்பட்ட இந்த நீர்வீழ்ச்சி, 12.5 மீட்டர் உயரமும் 400 மீட்டர் அகலமும் கொண்டது.
Niulan நதியில் உள்ள நீரை Dianchi ஏரிக்குத் திசை திருப்பும் விதத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனைச் சுற்றிலும் பூங்கா அமைத்து, பொதுமக்கள் பார்வைக்கு இலவசமாகத் திறக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை இரண்டு வருடங்களில் முடித்திருக்கிறார்கள். இது ஆசியாவிலேயே மிகப் பெரிய செயற்கை நீர்வீழ்ச்சி ஆகும்.

252235_663403237095555_82353861935565004

10625007_663403233762222_628154851307759

947016_663403227095556_42065032075504882

6422_663403257095553_1759178317113970605

12508915_663403267095552_268369601088648

  • தொடங்கியவர்

மார்க் சக்கர்பெர்க்கின் 2016 நியூ இயர் ரெசலூஷன் என்ன தெரியுமா?

 
புதுவருடம் என்றாலே ஏதாவது உறுதிமொழி எடுத்து, அதனை ஆண்டு முழுவதும் செயல்படுத்த நினைப்போம். அதில் பிரபலங்களும் விதிவிலக்கல்ல.
 
அந்த லிஸ்டில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் புதுவருட உறுதிமொழிகள் இரண்டும் வித்தியாசமானவை மற்றும் சுவாரஸ்யமானவை. சென்ற வருடம் முழுவதும், மாதம் இரண்டு புத்தகங்களை படிக்க உள்ளேன் எனக் கூறி, அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிய மார்க்,  இந்த வருடம் வித்தியாசமான உறுதி மொழியை எடுத்துள்ளார்.
 
1724328_10102571182127201_75941833691889
 
முதல் உறுதிமொழி,  இந்த வருடம் தனது குரல் கட்டளைகளை கேட்டு ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில்  இயங்கும் தானியங்கி ரோபோவை வடிவமைக்க உள்ளதாகவும், அது தனது வேலை மற்றும் வீட்டில் தனது பணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ள மார்க், இதனை செய்து முடிப்பதே இந்த வருடத்தின் முதல் கோல் என நிர்ணயித்துள்ளார். இந்த ரோபோவை,  'அயர்ன் மேன்' படத்தில் வரும் ஜார்விஸ் கதாப்பாத்திரத்தை போல வடிவமைக்க உள்ளதாகவும்,  தனது குழந்தை மேக்ஸோடு வீட்டில் இல்லாத நேரங்களில்,  மேக்ஸை கவனிக்க இது உதவும் என்றும் கூறியுள்ள மார்க் வெப்பநிலை, மியூஸிக்,  வெளிச்சம் முதலியவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இந்த வருடம் முழுவதும் அவரது அனுபவங்களை பதிவுகளாக பகிர இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
10260003_10102579344275191_2437322757038
 
இரண்டாவது உறுதிமொழி,  சென்ற வருடம் முழுவதும் புத்தகம் படித்ததை போல இந்த வருடம் முழுவதும் ஒடப் போகிறேன். இது உடல்நலம் தொடர்பான உறுதிமொழி. தினமும் 10 நிமிடம் சீரான வேகத்தில் ஓட இருப்பதாகவும், இந்த வருடத்தில் 365 மைல் தூரம் ஓட இருப்பதாகவும் சபதமெடுத்துள்ளார். இதில் இணைய விரும்புபவர்களுக்கு A Year of Running என்ற  குரூப்பையும் துவங்கியுள்ளார். 
 
இந்த வருடத்தின் இரண்டாவது  உறுதி மொழியை  இந்தியாவில்  எடுத்த புகைப்படத்தை வைத்து பதிவிட்டுள்ளார். உறுதி மொழிகளை தவறாமல் கடைபிடிக்கும் மார்க்,  இந்த வருடம் எந்தெந்த ஊர்களில் எல்லாம் ஓட போகிறாரோ? அவர் உருவாக்கியுள்ள ஃ பேஸ்புக் குரூப்பில்  இணைந்து ஊடுபவர்களில் சிலரை, மார்க் லைக் செய்தும் பாராட்டுகிறார்.
  • தொடங்கியவர்
வலைபாயுதே V 2.0

 

facebook.com/palaapattarai:  ``அப்பா, சண்டே என்னையும் அண்ணாவையும் மாலுக்குக் கூட்டிட்டுப் போறீங்களா?’’ பள்ளி திறந்த சோகத்தில் சின்னவன் என்னிடம் கேட்டான்.

``இல்ல கண்ணு, சென்னை பூரா மழை பேஞ்சு கழுத்தளவு தண்ணி நிக்குது. சாப்பாடு, தண்ணி எதுவுமே கிடைக்கலை. நியூஸ் பார்க்கலியா நீ?’’ என்று கேட்டுவிட்டு, ஆதாரம் காட்ட, கலைஞர் செய்திகள் வைத்துக் காண்பித்தேன். இடுப்பளவு நீரில் சென்னை மக்கள் அங்கும் இங்கும் துன்பப்படும் செய்திகளைப் பார்த்ததும், என்னிடமிருந்து ரிமோட்டைப் பிடுங்கி, ``இந்த சானல் பாருங்கப்பா...’’ என்று ஜெயா நியூஸ் வைத்தான்.

அம்மா படத்தை வைத்துக்கொண்டு அமைச்சர்கள் உட்கார்ந்திருக்க, `இதைவிட எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சென்னைக்கு ஒரு துளிகூட பாதிப்பே இல்லை. தமிழ்நாடு அரசு தயார் நிலையில் இருக்கிறது’ எனச் செய்தி சொல்லி சென்னை சாலை களைக் காண்பித்தார்கள், படுசுத்தமாக காய்ந்துபோய், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது சிங்காரச் சென்னை.

``எந்த மாலுக்குப் போகலாம்னு டிசைட் பண்ணி வைங்க. ஈவினிங் ஸ்கூல்லேர்ந்து வந்த உடனே எனக்கு சொல்லணும்’’ என்று கட்டளையிட்டுச் சென்றிருக்கிறான்.

கார்ட்டூன் மட்டும் பார்த்திட்டிருந்த புள்ளப்பூச்சிங்களுக்கெல்லாம் கொடுக்கு முளைக்க வெச்சிட்டீங்க ளேய்யா!

p13a.jpg

facebook.com/saravana karthikeyanc:

தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்பது என்பது தேசத்துக்கான அடையாள மரியாதை. அதைச் செய்வதால் மட்டுமே தேசப்பற்று என்றோ, அதைச் செய்யாவிடில் தேசப்பற்றே இல்லை என்றோ பொருளில்லைதான். ஆனால், அந்தக் குறைந்தபட்ச மரியாதையை சிரமேற்கொள்வதில் என்ன சிக்கல்? அதைக் கேள்வி கேட்டு ஏன் விதண்டாவாதம் செய்ய வேண்டும்? கிட்டத்தட்ட எல்லாவற்றையும் எதிர்க்கும் நோய்க்கூறு மனநிலையே இது. சமூக வலைதளங்களில் கொஞ்ச காலம் இருந்தால், இந்த நோய் பீடிக்கும் போலிருக்கிறது.

facebook.com/jill.kamatchirajan: என் பிள்ளைக்கும் என் அப்பாவுக்கும் இடையே, நான் ஒரு கால ஊஞ்சல். என்னை ஒரு கலைடாஸ்கோப்பாக மாற்றி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்களா?

ஒரு வட்டத்தின் இரண்டு முனைகளில் ஒவ்வொருவர் நிற்கின்றனர். நான் ஒருவரில் தொடங்கி மற்றொருவரை அடைய பாதி தூரம் ஓடியபோது இருவரும் ஒரே புள்ளியில்...
இதுதான் கால சூத்திரமா? இதுதான் பிரபஞ்ச ரகசியமா?

twitter.com/kiramaththan: டுபாக்கூர் ஏஜென்ட்கிட்ட சிக்கி துபாய்க்குப் போக முடியாத பார்த்திபன், வெற்றிகரமா துபாய்க்குப் போய்ட்டு வந்த வடிவேலுவை ஓட்டுறதுதான் முரண்.

twitter.com/chevazhagan1: ஒரு கிணற்றுத்தவளையின் அதிகபட்சக் கனவு, பாம்புகளற்ற கிணறு!

twitter.com/IamRajmuthu: ஒரு பக்கத்தில் தன் பிரச்னைகளை எழுதிவிடுபவர்கள்தான், அதிகமாக தற்கொலை செய்கிறார்கள்.

p13b.jpg

twitter.com/SATHRIYAN_:  சிங்கப்பூர்காரன் பில்டிங் மேல வயல் கட்டுறான். இந்தியாக்காரன் வயல் மேல பில்டிங் கட்டுறான்!

 twitter.com/Ohmslaw_: ``மச்சி டேய்... தென்னைமரத்துல ஏறிப் பார்த்தா, லேடீஸ் காலேஜ் தெரியுதுடா.’’

``அப்படியே ரெண்டு கையும் விட்டுப்பாரு... மெடிக்கல் காலேஜ் தெரியும்.’’

twitter.com/jeranjit:  தூரத்தில் ரயிலொன்று கூவிச் செல்கிறது. ‘சின்னத்தாயவள் தந்த ராசாவே...' அனிச்சையாக மனதில் ஒலிக்கிறது.

p13c.jpg

twitter.com/Raj_leaks:  நோயுடன் கடக்கும் இரவைவிட நோயாளியுடன் கடக்கும் இரவு மிக நீண்டது.

twitter.com/teakkadai: அர்னால்ட் `எந்திரன் -2’-ல நடிக்கிறதுகூட பரவாயில்லை. ஆனா, விஜய் அவார்ட்ஸுக்கு கூட்டிவந்து பெஸ்ட் வில்லன் அவார்டெல்லாம் கொடுப்பாங்களே... செத்தோம்.

twitter.com/jeranjit: என்ன பேசப்போகிறோம் என்பதைக் கேட்காமலேயே `சில்றை இல்லப்பா' என்றுவிடுகிறார்கள் இந்தப் பெண்கள்.

twitter.com/i_Soruba: `நீ ரொம்ப ஒழுங்கா?' எனக் கேட்பவர் கடந்துவிடுகிறார். நமக்குத்தான் முன்ஜென்மத் தவறுகள்வரை ஞாபகம் வந்து தொலைக்கிறது.

p13d.jpg

twitter.com/BoopatyMurugesh:  நண்பருக்கு அமெரிக்காவில் இருக்கும் ஃபேஸ்புக் தோழி 'Iphone6' அனுப்பியிருக்கு. என் லிஸ்ட்ல உள்ள பக்கிக Candy Crush ரெக்வஸ்ட் தான் அனுப்புதுங்க :-(

twitter.com/ashokcommonman:  சிஸ்டம் பாஸ்வேர்டு, லேப்டாப் பாஸ்வேர்டு, மொபைல் பாஸ்வேர்டு்னு நான் லவ் பண்ண எல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. கையறு நிலை!

twitter.com/iVenpu:  தொடர்ந்து இரண்டாவது நாளாக வெயில். அதிர்ச்சியில் சென்னை மாணவர்கள் :)

  • தொடங்கியவர்

உலக அழகி டூ உலக நாயகி- அசத்தும் பிரியங்கா சோப்ரா!

12400801_1018976598161354_42233418356566

12494667_1018976664828014_42716740873332

placeholder

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

10639361_966002280115133_242520230642300

மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் மார்லன் சாமுவேல்ஸின் பிறந்தநாள்

  • தொடங்கியவர்

 உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களாக எப்போதுமே பிரேசில் வீரர்களே தெனாவட்டாகத் திரிவார்கள். இப்போதெல்லாம் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அர்ஜென்ட்டினாவின் லியோனல் மெஸ்ஸியுமே மாறி மாறி முதல் இடம் பிடித்து வருகின்றனர். `இருக்கட்டுமே... ஆனால் இவர்களின் `பீக் சீஸன்' கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அடுத்த ஆண்டு நெய்மார் முதல் இடத்தைப் பிடித்துவிடுவார். அவர் தொடர்ந்து நீண்டகாலம் நம்பர் ஒன்னாக இருப்பார்' என்று ஆருடம் சொல்லியிருக்கிறார் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ. அப்பிடீன்றீங்க?

p40a.jpg

dot1.jpg இந்த ஆண்டு அதிக விக்கெட்டுகளை எடுத்து உலகின் நம்பர் 1 பந்து வீச்சாளராக முதல் இடம் பிடித்திருக்கிறார் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வின். 2015-ம் ஆண்டில் இதுவரை  8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் அஷ்வின் 55 விக்கெட்டுகளைச் சாய்த்திருக்கிறார். இதுவரை 31 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி 15 முறை 5 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தியிருக்கிறார். `அஷ்வின்தான் உலகின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர். அவரால்தான் எங்களால் தொடர்ந்து வெற்றிபெற முடிகிறது. அவர் எங்கள் அணியின் பொக்கிஷம்’ எனப் புகழ்கிறார் கேப்டன் விராட் கோஹ்லி. இது சுத்தி அடிக்கிற பந்து... இது சுத்த விடுற பந்து!

dot1.jpg பார்க்க ஒன்றுபோலவே தெரியும் பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் ஆகிய இரண்டு விளையாட்டுகளிலும் ஸ்கோர் செய்யும் ஒரே வீரர் பங்கஜ் அத்வானி. எகிப்தில் நடந்த ஸ்னூக்கர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சீனாவின் ஜுவா ஜிண்டாங்கை வீழ்த்தி, வெற்றி பெற்றிருக்கிறார் பங்கஜ். இந்த  வருடம் இவர் வெல்லும் மூன்றாவது பட்டம் இது. ‘ஒரே நேரத்தில் பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் இரண்டிலும் ஜொலிப்பதில் மகிழ்ச்சி. விளையாடுவதைவிட, ஜெயிப்பதைவிட நாட்டுக்காகப் பதக்கங்கள் குவிப்பதில்தான் கூடுதல் மகிழ்ச்சி’ என்கிறார் பங்கஜ். பின்னி எடுங்க பாஸ்!

dot1.jpg ட்விட்டரில் நாஸ்டால்ஜிக் நினைவுகளை ஷேர் செய்து, லைக்ஸ் அள்ளுவது அமிதாப் ஸ்டைல். ஆனால், இந்த முறை சொன்னது சோகம்... ‘நான் தற்போது 25 சதவிகித கல்லீரலுடன் தான் உயிர் வாழ்கிறேன். 18 ஆண்டுகளுக்கு முன்பு ‘கூலி’ படப்பிடிப்பில் நடந்த விபத்தில், சிகிச்சைக்காக 200 கொடையாளி களிடம் இருந்து 60 பாட்டில்  ரத்தம் எனக்கு ஏற்றப்பட்டது. அப்போது யாரோ ஒருவரின் ரத்தத்தில் இருந்து பரவிய ஹெப்படைடிஸ் பி வைரஸ், என் கல்லீரலைச் சிதைத்துவிட்டது. யாருக்கும் இதுபோன்ற நிலை வரக் கூடாது. எனவே, குடிக்காதீர்கள். நோய்த்தொற்றை அலட்சியம் செய்யாதீர்கள்’ என அறிவுரை சொல்லியிருக்கிறார் அமிதாப். கெட் வெல் சூன் அமிதாப் ஜி!

dot1.jpgசர்ச்சைகளின் சிஷ்யப் பிள்ளை ராம் கோபால் வர்மா, தனது சுயசரிதையை எழுதி முடித்திருக்கிறார். ‘கன்ஸ் & தைஸ்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் புத்தகத்தில் நிழல் உலக தாதாக்கள், அவர் வாழ்வில் வந்த முக்கியமான பெண்கள்... என பல ட்விஸ்ட்கள். ‘இந்தப் புத்தகத்தை அயன் ராண்ட், அமிதாப் பச்சன், புரூஸ் லீ, நடிகை ஊர்மிளா மற்றும் ஆபாசப்பட நடிகை டோரி பிளாக் ஆகியோருக்கும், சில கேங்ஸ்டர்களுக்கும் சமர்ப்பிக் கிறேன். அவர்கள்தான் என் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்’ என டீஸராக ட்விட்டியிருக்கிறார் ராம் கோபால் வர்மா. படமா எடுப்பீங்களாஜி?

p40b.jpg

dot1.jpg`மேரி கோம்’ ஆக நடித்து லைக்ஸ் குவித்த பிரியங்கா சோப்ரா, அடுத்து `கல்பனா சாவ்லா’ அவதாரம் எடுக்க இருக்கிறார். ஹரியானாவின் சிறிய கிராமத்தில் பிறந்து,
நாசா விண்வெளி வீராங்கனையாக உயர்ந்து, விண்வெளி ஆராய்ச்சியின் போதே உயிர்விட்ட கல்பனா சாவ்லாவாக நடிக்க இப்போதே பயிற்சிக்குத் தயாராகிவிட்டார் பிரியங்கா. பின்னி எடுக்குது பொண்ணு!

dot1.jpgஅப்பாவாகப் போகிறார் யுவன் ஷங்கர் ராஜா. முஸ்லிமாக மதம் மாறிய யுவன் ஷங்கர் ராஜா, கடந்த ஜனவரி மாதம் ஸஃப்ரன் நிஸாரை காதல் திருமணம் செய்துகொண்டார். நிஸார் வயிற்றில் இப்போது குட்டிப் பாப்பா எட்டிப் பார்க்கிறது.`அடுத்த ஆண்டு பாப்பா வந்துவிடும். நான் இசையமைக்கும் படங்களும் அடுத்த ஆண்டுதான் அதிக அளவில் ரிலீஸாக இருக்கின்றன' மகிழ்வுடன் பேசுகிறார் யுவன். புதுப் பாப்பாவுக்கு வெல்கம்!

dot1.jpg ஹாலிவுட் நடிகர்களுக்கும் அரசியல் ஆசை உண்டு என்பதை நிரூபிக்க அர்னால்டுக்கு அடுத்து வில் ஸ்மித்தும் தயார். `வெறும் நடிகனாக மட்டும் இருந்துவிட்டுப் போக எனக்கு விருப்பம் இல்லை. இந்தச் சமூகத்துக்குப் பயன்தரும் ஏதேனும் செய்ய வேண்டும். அமெரிக்க அரசியலில் எனக்காக ஓர் இடம் காத்திருப்பதுபோல் தோன்று கிறது. விரைவில் அரசியலில் இறங்கு வேன்’ என்று அதிரடி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் வில் ஸ்மித். நடிகர்கள் நாடாள்வது குளோபல் ட்ரெண்டா?

p40c.jpg

dot1.jpg ‘ஆணாதிக்கம் நிறைந்த இந்த உலகில் ஒரு பெண் சாதிப்பது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது இன்னொரு பெண்ணுக்கு மட்டுமே தெரியும். இந்த டிஜிட்டல் யுகத்தில்கூட அடிப்படைத் தேவைகளுக்கு பெண்கள் போராட வேண்டியிருக்கிறது. விளையாட்டில்கூட ஆண்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை அதிகம்; பெண்களுக்குக் குறைவு. ஒரு பெண் தனது மனதில்படும் விஷயங்களைப் பேசினால், அவளை வேறுவிதமாகச் சித்திரித்துவிடுகிறார்கள். அதே சமயம் ஓர் ஆண் தனது மனதில் தோன்றும் விஷயங்களைப் பேசினால், அவரைக் கொள்கைவாதியாகப் பார்க்கிறார்கள்’ என பொங்கித் தீர்க்கிறார் சானியா மிர்ஸா. அழகுப் பொண்ணைப் புலம்பவிடாதீங்க கைஸ்! 

dot1.jpg ‘எனக்கு மீண்டும் இளமை எல்லாம் வேண்டவே வேண்டாம்’ என்கிறார் ஏஞ்சலினா ஜோலி. ‘தற்போது நான் மெனோபாஸ் நிலையில் இருக்கிறேன். அதில் எனக்கு மகிழ்ச்சிதான். இதற்காக நான் முகம் சுளிக்க மாட்டேன். நான் தினமும் பக்குவம் அடைந்துவருகிறேன் என்பது எனக்குச் சந்தோஷம்தானே. இதை அனுபவிக்க எந்தப் பயமும் தயக்கமும் இல்லை. நான் மீண்டும் இளமையாக மாற ஆசைப்படவில்லை’ என போல்டாகப் பேட்டி தட்டியிருக்கிறார் ஜோலி! # அசல் ஏஞ்சல்!

dot1.jpgதமிழில் க்யூட் ஹிட்டடித்த ‘ஓகே கண்மணி'யை, இந்தியில் தெறி ஹிட்டடித்த, ‘ஆஷிக்-2' படத்தின் ஆதித்யா ராய்கபூர் - ஷ்ரத்தா கபூர் ஜோடியை வைத்து ரீமேக் செய்யவிருக்கின்றனர். ‘அலைபாயுதே’ படத்தை ‘சாத்தியா’ என இந்தியில் ரீ மேக்கிய ஷாத் அலிதான்  ‘ஓகே கண்மணி'யையும் இயக்கவிருக்கிறார்.தயாரிப்பு மணிரத்னம். ஒ.கே பியாரி!

  • தொடங்கியவர்

12509297_965998103448884_861848988984269

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான பிரெண்டன் குருப்புவின் பிறந்தநாள்.
Happy Birthday Brendon Kuruppu.
தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் எடுத்திருந்தார் குருப்பு.

  • தொடங்கியவர்

 

ஒரே நேரத்தில் 10 சட்டியில் சமைக்கும் பெண்

  • தொடங்கியவர்

10405601_1045254238866699_33031553519230

காட்டிலே கல்யாணம்!

தன் மகளுக்கு மாப்பிள்ளை தேடி அலைந்துகொண்டிருந்த யானை ஒன்று, கடைசியாக ஒரு நல்ல மாப்பிள்ளையைக் கண்டுபிடித்தது.

''இவன் என் ஒரே பையன். பட்டணத்தில் ஒரு சர்க்கஸ் கம்பெனி யில் வேலை செய்கிறான். நீங்கள் போங்கள். நான் என் நண்பர் களுடன் கலந்து யோசனை செய்துவிட்டு, உங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன்'' என்று சொல்லிற்று மாப்பிள்ளை யானையின் தந்தை. அதன் நண்பனான ஒட்டைச்சிவிங்கி பெண் யானையின் தந்தை யிடம், ''நான் இதை நல்லபடியாக முடித்து வைக்கிறேன். கவலைப் படாமல் போய் வாருங்கள். கூடவே, என் பெண்ணுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை இருந்தால் கடிதம் எழுதுங்கள்'' என்று சொல்லி அனுப்பிற்று.

பெண் யானையின் தந்தைக்கு மறுநாள் கடிதம் வந்தது. ''என் பிள்ளைக்கு உங்கள் பெண்ணைக் கலியாணம் செய்துகொள்வதற்குச் சம்மதம்தான். ஆனால், ஒரு நிபந்தனை. உங்கள் பெண்ணுக்குத் தங்க ஒட்டியாணம் போட வேண்டும். என் நண்பர் ஒட்டைச்சிவிங்கியின் ஆலோசனையின் பேரில்தான் இதை எழுதியிருக்கிறேன்...''

''தங்க ஒட்டியாணமா..!'' என்று சொல்லிக்கொண்டே மூர்ச்சையாகிக் கீழே விழுந்தது அம்மா யானை.

மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று அப்பா யானை கவலைப்பட்டுக்கொண்டு இருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் இதன் சிநேகித ஒட்டைச்சிவிங்கி வந்தது. விஷயத்தை அறிந்த அது, ''கவலைப்படாதீர்கள். இதற்கு ஒரு வழி செய்கிறேன்'' என்று கூறிப் பெண் யானையின் தந்தையிடம் ரகசியமாக ஏதோ சொல்லிற்று.

மறுநாள், மாப்பிள்ளை வீட்டு நண்பனான விஷமக்கார ஒட்டைச்சிவிங்கிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், ''உங்கள் பெண்ணுக்குத் தகுந்த மாப்பிள்ளை இருந்தால் சொல்லும்படி கேட்டீர்களே, அருமையான மாப்பிள்ளை இருக்கிறார். நீங்கள் உடனே கிளம்பி வாருங்கள்'' என்று எழுதியிருந்தது பெண் யானையின் தந்தை. ஒட்டைச்சிவிங்கி சந்தோஷத்துடன் தன் மனைவி, மகளுடன் இந்த யானையின் வீட்டுக்கு வந்தது. யானை, பிள்ளை வீட்டாரை ஒட்டைச்சிவிங்கிக்கு அறிமுகப்படுத்தியது.

சற்று நேரம் கழித்து, ''என் பையன் உங்கள் பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ளச் சம்மதித்துவிட்டான். ஆனால், ஒரு நிபந்தனை, உங்கள் பெண்ணுக்கு அவளுடைய நீண்ட கழுத்து மறையும்படி தங்கச் சங்கிலி போடவேண்டும்'' என்று பிள்ளை ஒட்டைச்சிவிங்கியின் தந்தை சொல்லிற்று. ''அநியாயமாக இருக்கிறதே! இப்போது தங்கம் விற்கிற விலையில்...'' என்று பதறியது பெண் ஒட்டைச்சிவிங்கியின் தந்தை.

''ஒரு அநியாயமும் இல்லை. பக்கத்து வீட்டு யானையாரை தன் பெண் இடுப்புக்கு ஒட்டியாணம் போடச் சொல்லி மாப்பிள்ளை யானையைத் தூண்டியது நீங்கள்தானே! அப்படியிருக்கும்போது, நீங்களும் உங்கள் பெண்ணுக்குக் கழுத்துச் சங்கிலி போடுவதுதானே நியாயம்!'' என்று ஒரே போடாகப் போட்டது மாப்பிள்ளை ஒட்டைச்சிவிங்கியின் தந்தை.

விஷமக்கார ஒட்டைச்சிவிங்கி தன் தவற்றை உணர்ந்து திருந்த, ஒரே பந்தலில் இரண்டு திருமணங்களும் ஜாம் ஜாமென்று விமரிசையாக நடந்தன.

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று.....

ஜனவரி - 06

 

638National_DC-6B_N8227H_%284762204041%21066 : இங்­கி­லாந்தின் மன்­ன­ராக ஹாரல்ட் கோட்­வின்சன் முடி­சூடிக் கொண்டார்.

 

1838 : சாமுவேல் மோர்ஸ் மின்­னியல் தொலைத்­தந்­தியை முதன் முறை­யாக வெற்­றி­க­ர­மாக சோதித்தார்.

 

1887 : எதி­யோப்­பி­யாவின் ஹரார் நகர மன்னன் இரண்டாம் அப்-­தல்லா எதி­யோப்­பி­யாவின் இரண்டாம் மெனெலிக் மீது போர் தொடுத்தார்.

 

1900 : தென் ஆபி­ரிக்­காவின் லேடிஸ்மித் நகரை போவர்கள் தாக்­கினர். 1,000 பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர்.

 

1907 : மரியா மொண்ட்­டி­சோரி தொழி­லா­ளர்­களின் குழந்­தை­க­ளுக்­காக தனது முத­லா­வது பாட­சா­லையை ரோமில் ஆரம்­பித்தார்.

 

1912 : நியூ மெக்­ஸிகோ 47ஆவது மாநி­ல­மாக ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுடன் இணைந்­தது.

 

1928 : தேம்ஸ் ஆறு லண்­டனில் பெருக்­கெ­டுத்­ததில் 14 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1929 : அன்னை தெரேசா இந்­தி­யாவின் வறிய மற்றும் நோயுற்­ற­வர்­க­ளுக்கு சேவை செய்­வ­தற்­காக கல்­கத்­தாவைச் சென்­ற­டைந்தார்.

 

1940 : போலாந்தின் பொஸ்னான் நகரில் நாசி ஜேர்­ம­னி­யி­னரால் பலர் கொல்­லப்­பட்­டனர்.

 

1950 :  மக்கள் சீன குடி­ய­ரசை ஐக்­கிய இராச்­சியம்  அங்­கீ­க­ரித்­தது.

 

1953 : முத­லா­வது ஆசிய சோஷ­லிஸ மாநாடு பர்­மாவில் ஆரம்­ப­மா­கி­யது. 

 

1959 : பிடெல் காஸ்ட்ரோ, கியூபாவின் தலை­நகர் ஹவா­னாவை அடைந்தார்.

 

1960 : ஈராக்கில் அர­சியல் கட்­சிகள் பதி­வு­செய்­யப்­ப­டு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டது.

 

1960 : அமெ­ரிக்­காவின் நியூயோர்க்­கி­லி­ருந்து புளோ­ரிடா நோக்கி சென்­று­கொண்­டி­ருந்த விமா­ன­மொன்று குண்­டு­வெ­டிப்பால் தகர்க்­கப்­பட்­டது. இதனால் 34 பேர் இறந்­தனர்.

 

1992 : ஜோர்­ஜி­யாவில் இரா­ணுவப் புரட்­சியின் கார­ண­மாக ஜனா­திபதி ஸேவியட் கம்­சா­கு­ரி­டியா நாட்­டை­விட்டு தப்பிச் சென்றார். 

 

1994 : அமெ­ரிக்க பிகர் ஸ்கேட்டிங் நட்­சத்­தி­ர­மான நான்சி கேரிகன், அமெ­ரிக்க பிகர் ஸ்கேட்டிங் சம்­பி­யன்ஷிப் போட்­டி­யின்­போது தாக்­கப்­பட்டு அவரின் முழங்கால் சேத­மாக்­கப்­பட்­டது. அவர் மீது பொறாமை கொண்ட சக போட்­டி­யாளர் ஒரு­வரின் ஏற்­பாட்டில் இத்­தாக்­குதல் இடம்­பெற்­ற­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டது.

 

2005 : அமெ­ரிக்­காவில் கறுப்­பி­னத்­த­வர்­களின் உரி­மை­க­ளுக்­காக பாடு­பட்ட மூவர் 1964 ஆம் ஆண்டு கொல்­லப்­பட்­டமை தொடர்­பாக எட்கார் ரே கிலென் என்­பவர் சந்­தே­கத்தின் பேரில் கைதானார். 

 

2007 : இந்­தி­யாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் பிற மாநிலத்தவரைக் குறிவைத்து உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டனர்.

0                                                                                                                                                                                                                                                                                                                                                                             

2009: பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியம் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டது. 

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=638#sthash.ZtwapEUX.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.