Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

திருட வந்தவன் விட்டுச் சென்றது எதை? - ஜென் கதை #ZenStory

 
 

ற்றுக்கொடுப்பது எளிதான காரியமல்ல. அதிலும் எதையும் எளிமையாக, புரிகிற மாதிரி கற்றுக்கொடுப்பது ஒரு கலை. அதனால்தான் அவர்களை `ஆசான்கள்’ (Masters) என்கிறோம். அந்த வகையில் ஜென் துறவிகள் பிரமாதமான ஆசிரியர்கள். அவர்கள் செய்கிற ஒவ்வொரு காரியமும் அர்த்தம் பொதிந்தவை. அந்த நிகழ்வில் தொடர்புடையவருக்கு ஒரு விஷயத்தை உணர்த்தினால், கேட்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் வெவ்வேறுவிதமான அர்த்தங்கள் தெரியவரும். ஒரு ஜென் குட்டிக்கதையில், ஜென் துறவி கற்றுக்கொடுத்ததையும் அது உணர்த்தும் வெவ்வேறு அர்த்தங்களையும் பார்க்கலாம். 

ஜென்

ரியோகான் டைகு (Ryokan Taigu) ஜப்பானில் வாழ்ந்த ஒரு ஜென் துறவி. கவிஞர், கையெழுத்தழகியல் (Calligraphy) நிபுணரும்கூட. ஒரு மலையடிவாரத்தில், சின்னஞ்சிறு குடிசையில் வசித்தார். அது ஒரு முன்னிரவு நேரம். அவர் குடிசைக்குள் ஒரு திருடன் நுழைந்தான். நெடுந்தூரம் பயணம் செய்த களைப்பு. அதையும் மீறி அந்தக் குடிசையில் ஏதாவது தனக்குக் கிடைத்துவிடாதா என அவன் கண்கள் அங்கும் இங்கும் ஏக்கத்துடன் அலைபாய்ந்தன. அவன் கண்ணில்பட்டவை எல்லாம் மண்பானை, மண் பாத்திரங்கள், கிழிந்த பாய், சில ஓலைச்சுவடிகள்... அவ்வளவுதான்.

 `வீடு என்றால் ஏதாவது இருக்கவேண்டும்தானே? இது என்ன... இந்தக் குடிசையில் எனக்கு உபயோகப்படும்படி ஒன்றுகூடவா இல்லை?’ அவன் அந்தக் குடிசையையே தலைகீழாகப் புரட்டிப்போடுவதுபோல மூலை, முடுக்கெல்லாம் தேட ஆரம்பித்தான். அவனுக்குப் பயன்படும் பொருள் ஒன்றுகூட இல்லை. 

அந்த நேரத்தில் துறவி ரியோகான் குடிசைக்குள் நுழைந்தார். அவரைப் பார்த்து திகைத்து நின்ற அந்த மனிதனைப் பார்த்தார். அவன் திருட வந்திருக்கிறான் என்பது அவருக்குப் புரிந்துபோனது. 

ஜென் கதை

``என்னைப் பார்ப்பதற்காக வெகு தூரத்தில் இருந்து வந்திருக்கிறாய் போலிருக்கிறது. பரவாயில்லை. உட்கார்.’’

திருடன், ரியோகானின் இந்த உபசரிப்பை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவரை முறைத்துப் பார்த்தான்.   

``என்ன... உனக்குப் பயன்படுகிற மாதிரி ஒரு பொருள்கூட இந்தக் குடிசையில் கிடைக்கவில்லையா?’’ 

அவன் இல்லை என்பதுபோலத் தலையை அசைத்தான். 

``நீ வெறும்கையுடன் திரும்பிப் போவது எனக்குப் பிடிக்கவில்லை. என்ன செய்யலாம்?’’ என்ற ரியோகான் ஒரு கணம் யோசித்தார்.

பிறகு முகம் மலர்ந்தவராக, ``இதோ நான் அணிந்திருக்கும் இந்த உடை உனக்குப் பிடித்திருக்கிறதா... இதைப் பரிசாகப் பெற்றுக்கொள்ள உனக்கு விருப்பமா?’’ என்று கேட்டார். 

திருடன் அவர் சொன்னதைக் கேட்டு ஆச்சரியமடைந்தான். அவர் அணிந்திருந்த உடையை உற்றுப் பார்த்தான். நன்கு துவைத்த, சுத்தமான, காவி நிற உடை. `இதுவாவது கிடைத்ததே’ என்று மகிழ்ந்தான். 

``விருப்பம்தான். கொடுங்கள்!’’ 

ரியோகான் ஒரு கணமும் யோசிக்கவில்லை. உடனே உடையைக் களைந்து அவனிடம் நீட்டினார். அவன் வாங்கிக்கொண்டு வெளியே நடையைக் கட்டினான். 

ஜென் - துறவி

அவன் போனதும், ரியோகான் அப்படியே நிர்வாணமாகத் தரையில் அமர்ந்தார். குடிசையின் ஜன்னல் வழியே வானில் தெரிந்த நிலவைப் பார்த்தார். ``பாவம்... அவனுக்கு இந்த அழகான நிலாவைக் கொடுத்திருக்கலாம்.’’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். இந்த நிகழ்வை அவர் ஒரு கவிதையாகவும் எழுதினார்... 

`திருடன் 
ஜன்னலில் விட்டுச் சென்றான்
நிலவை.’

 

வந்த திருடனுக்கு துறவியிடம் எதுவும் இல்லை என்று தெரிந்தது. ஆனாலும் அவர் அணிந்திருந்த ஒற்றை ஆடையாவது தனக்குப் பயன்படும் எனக் கொண்டுபோய்விட்டான். ரியோகானுக்கோ முற்றும் துறந்த மனநிலை. அவன் ஏமாறக் கூடாது என விரும்பினார்; ஆடையைக் கொடுத்தார்.  இது ஒரு பார்வை. திருடனால் திருட முடியாத எத்தனையோ உலகில் இருக்கின்றன. நிலவு, காற்று, சூரியன், இயற்கை இவையெல்லாம் நிரந்தரமானவை. யாராலும் அழிக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாதவை. அதாவது, நிரந்தரமானவை. மனித வாழ்க்கையோ நிலையற்றது. மனிதர்களின் சொத்து, பொருள்கள், பணம்... ஏன் உடுத்தும் ஆடைகூட அவர்களுக்கு நிரந்தரமானதல்ல. நிரந்தரமற்ற வாழ்க்கையை வாழும் மனிதர்கள், நிரந்தரமற்ற பொருள்களையே விரும்புகிறார்கள். இது மற்றொரு பார்வை. இன்னும் தேடத் தேட பல அர்த்தங்கள் புரியக்கூடும். ஜென் துறவிகளின் கற்பிக்கும் கலை அத்தனை மேன்மையானது.

http://www.vikatan.com/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

இந்தோனீஷியாவின் கம்பங் பெலங்கியில் உள்ள ஓர் குடிசைப்பகுதிதான் இது. வானவில் நிறங்களை கொண்ட முழுமையான ஓர் மாற்றத்தை இது கண்டுள்ளது.

  • தொடங்கியவர்

உலகக் கட்டுமானத் திருவிழா

 
Desktop_3168619f.jpg
 
 
 

உலக அளவிலான சர்வதேச இலக்கியத் திருவிழாக்கள், திரைப்பட விழாக்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். அதுபோல கட்டுமானத் துறைக்கும் உலக அளவிலான சர்வதேசத் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. பல பிரிவுகளின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் இந்தத் திருவிழாவில் கலந்துகொள்கின்றன.

1_3168629a.jpg
சிறந்த வீடு - பல்மோ டி மல்லோர்கா, ஸ்பெயின்

கட்டுமானத் துறை தொடர்பாகக் கருத்தரங்களும் இந்தத் திருவிழாவை ஒட்டி நடத்தப்படும். உலக முழுவதிலுமுள்ள பல முக்கியமான கட்டுமான நிறுவனங்கள் தங்களது எதிர்காலத் திட்டங்களையும் இந்தத் திருவிழாவின் வழியாக காட்சிப்படுத்துகின்றன. முதலாவது உலகக் கட்டுமானத் திருவிழா 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி ஸ்பெயின் நகரமான பார்சிலோனாவில் நடந்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த பால் ஃபின்ச் முதல் திருவிழாவின் இயக்குநராகப் பணியாற்றினார்.

2_3168628a.jpg
சிறந்த உள் அலங்கார வடிவமைப்பு - ஹெய்கே ஸ்டோர், சீனா

அந்தத் திருவிழாவில் 63 நாடுகளைச் சேர்ந்த 722 கட்டுமானத் திட்டங்கள் 11 பிரிவுகளின் கீழான போட்டிகளில் பங்குபெற்றன. 70 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்தக் கட்டுமானத் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.

3_3168627a.jpg
சிறந்த ரிசார்ட் - ஃபுஷெங்யூ ஹாட் ஸ்பிரிங், சீனா

2009, 2010, 2011 ஆண்டு கட்டுமானத் திருவிழாக்கள் பார்சிலோனாவில் தொடர்ந்து நடத்தப்பட்டன. 2009-லிருந்து நவம்பர் மாதத்தில் விழா நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு போட்டிப் பிரிவுகள் 11-லிருந்து 15ஆக உயர்த்தப்பட்டன. கலந்துகொண்ட நாடுகளும் அதிகமாயின.

4_3168626a.jpg
சிறந்த பள்ளி - தென் மெல்போர்ன் பள்ளி, ஆஸ்திரேலியா

2010 திருவிழாவில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்தன. போட்டிப் பிரிவுகளும் உயர்த்தப்பட்டன. 2011-ம் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த இறுதித் திருவிழாவில் 700 கட்டுமானத் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதுதான் அதுவரை நடந்ததில் மிகப் பிரம்மாண்டமான திருவிழாவாக இருந்தது.

5_3168625a.jpg
சிறந்த புற அமைப்பு - கொபுபகோ ரிசர்வ், நியூசிலாந்து

2012-ம் ஆண்டிலிருந்து திருவிழா சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்தது. 2013,2014, 2015, 2016 ஆகிய தொடர்ந்த நான்கு ஆண்டுகள் உலகக் கட்டுமானத் திருவிழா சிங்கப்பூரிலேயே நடந்தது. இந்தாண்டு நவம்பரில் இந்தத் திருவிழா ஜெர்மனியில் பெர்லினில் நடக்கவுள்ளது.

6_3168624a.jpg
ஆண்டின் சிறந்த கட்டிடம் - சுஜச்சின் தேசிய அருங்காட்சியகம், போலந்து

இந்த ஆண்டு உலகக் கட்டுமானத் திருவிழா நுழைவுச் சீட்டுகள் விற்பனை இணையத்தில் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 80 பிரிவுகளின் கீழ் கட்டுமானத் திட்டங்களுக்கான போட்டிக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. உலகக் கட்டுமானத் திருவிழா இதுவரை நடந்ததில் மிகப் பிரம்மாண்டமான திருவிழாவாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7_3168623a.jpg
சிறந்த எளிமைக் கட்டுமானம் - ஹாங்காங் கட்டுமானப் பள்ளி வளாகம், ஹாங்காங்

2016-ம் ஆண்டு உலகக் கட்டுமானத் திருவிழாவில் வெற்றிபெற்ற கட்டுமானத் திட்டங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. சிறந்த பள்ளி, சிறந்த எதிர்கால வீடு, சிறந்த புறவெளி அமைப்பு, ஆண்டின் சிறந்த கட்டிடம், சிறந்த உள் கட்டமைப்பு, சிறந்த உள்லங்காரம், சிறந்த எதிர்காலக் கட்டிடம் போன்ற பல பிரிவுகளின் கீழ் கட்டுமானத் திட்டங்கள் விருதுபெற்றன. அந்தக் கட்டிடங்களில் சிலவற்றின் ஒளிப் படங்களை இங்கே காணலாம்,

8_3168622a.jpg
சிறந்த எதிர்காலக் கட்டுமானம் - இஸ்தான்புல் புதிய விமான நிலையம், துருக்கி

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

29.05.1953: எவரெஸ்ட் சிகரத்தை முதல் முறையாக மனிதன் எட்டிய தினம் இன்று! 

 

 
everest

 

உலகின் மிக உயரமான சிகரம் இமயமலைத் தொடரிலமைந்துள்ள எவரெஸ்ட் ஆகும். 

நியூசிலாந்தைச் சேர்ந்த மலையேறும் ஆர்வம் கொண்ட சர். எட்மண்ட் ஹிலாரி அவர்களும் ஷெர்பா டென்சிங் நோர்கே ஆகிய இருவரும் இந்த உலகின் மிகவும் உயரமான மலைச் சிகரத்தை 1953ஆம் ஆண்டும் மே மாதம் 29ஆம் தேதி அடைந்தார்கள்.

நியுசிலாந்தில் தேனி வளர்க்கும் தொழிலைச் செய்து வந்த சர் எட்மண்ட் ஹிலாரியும், அவரின் நேபாள ஷெர்பா டென்சிங் நோர்கேயும் அறுபத்து நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 8848 மீட்டர் அதாவது 29 ஆயிரம் அடி இருக்கும் இச்சிகரத்தின் மீது ஏறியது மிகப் பெறும் சாதனையாக பார்க்கப்பட்டது.  

பிரிட்டிஷ் அரசியாக இரண்டாம் எலிசபத் முடிசூட்டப்பட்ட நாளில் இவர்கள் உலகின் உச்சத்தை அடைந்த செய்தி லண்டனை எட்டியது.

அன்று முதல் இன்று வரை எவரெஸ்ட் சிகரத்தில் 5000இற்கும் அதிகமானோர் ஏறியிருக்கிறார்கள். மனித முயற்சிக்கு இயற்கை அளிக்கும் இந்த உயரமான சவாலை எதிர் கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதன் பிறகு கணிசமாக அதிகரித்தது.

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

''ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்'' - ஹார்வர்டில் என்ன பேசினார் மார்க்?

 

மார்க்

ஹார்வர்டு பல்கலைகழக்கத்தின் முன்னாள் மாணவன் இன்றைய உலகின் தவிர்க்க முடியாத நபர் மார்க் சக்கர்பெர்க்கை பேச அழைக்கிறோம் என்ற சத்தம் ஒலித்தது தான்...அடுத்த நொடியே அனைவரும் மார்க்கை பார்க்கின்றனர்... 13 வருட ஹார்வர்டு அனுபவங்களை கொட்டப்போகிறார் என்ற எதிர்பார்ப்போடு அனைவரும் பார்த்து கொண்டிருக்கின்றனர்... ஹார்வர்டில் மழை பெய்கிறது. மேடைக்கு எதிரே இருந்த அனைவரும் ரெயின் கோட் அணிந்தும், குடை பிடித்துக் கொண்டும் உரையை கேட்க துவங்குகின்றனர்.

மேடை ஏறுகிறார் ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க்...

வணக்கம், பிரசிடெண்ட் ஃபாஸ்ட், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், நண்பர்கள், பெருமைக்குரிய பெற்றோர்கள், ஆட் போர்டு உறுப்பினர்கள் மற்றும் உலகின் சிறந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் மாணவர்களே....

நான் உங்களுடன் இன்று இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் செய்த சிலவற்றை என்னால் செய்ய முடியவில்லை. இன்று இந்த உரையை நான் வெற்றிகரமாக முடித்தால் ஹார்வர்டில் நான் ஒரு விஷயத்தை ஒழுங்காக முடித்திருக்கிறேன் என்று சொல்லலாம். வாழ்த்துக்கள் 2017ன் மாணவர்களுக்கு...

நான் ஒரு அதிர்ஷ்டமில்லாத பேச்சாளன். நான் ஹார்வர்டை விட்டு வெளியேறியதால் மட்டும் இதனை சொல்லவில்லை. வெவ்வேறு தலைமுறைகளை சேர்ந்த இருவரும் இங்கு ஏதோ ஒரு காரணத்தால் ஒன்றாக இருக்கிறோம்.. பத்து வருடங்களுக்கு முன்னாள் நாங்கள் இங்கே நடந்திருக்கிறோம். இதே பாடங்களை படித்திருக்கிறோம். Ec10 வகுப்பில் உறங்கியிருக்கிறோம். நாங்கள் இங்கே வர பல்வேறு முயற்சிகளை எடுத்திருக்கிறோம். இன்று நான் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் இந்த தலைமுறையிடம் இருந்து என்ன கற்றுக்கொண்டேன் மற்றும் எப்படி இந்த உலகை நாங்கள் கட்டமைத்து வருகிறோம் என்பவை தான் அது.

அதற்கு முன்பு கடந்த இரண்டு நாட்களாக சில நல்ல நினைவுகளை ஹார்வர்டு எனக்கு தந்தது. ஹார்வர்டில் நீங்கள் படிக்க போகிறீர்கள் என்ற இமெயில் உங்களுக்கு கிடைத்த நாள் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறது? நான் சிவிலைசேஷன் கேம் விளையாடிக்கொண்டிருந்த நேரம் அது. நான் மாடியிலிருந்து கீழே ஓடுகிறேன். என் தந்தையை துரத்த மற்றும் சில காரணங்களுக்காக... அவரது நோக்கம் நான் இந்த கடிதத்தை திறப்பதை வீடியோ எடுப்பது தான். ஆனால் உண்மையில் அது ஒரு சோகமான வீடியோ... என் பெற்றோர்களுக்கு ஹார்வர்டில் நான் படிக்க வேண்டும் என்பது தான் ஆசை.

ஹார்வர்டில் உங்களது முதல் வகுப்பு நினைவிருக்கிறதா? என்னுடையது கம்ப்யூட்டர் சயின்ஸ் 121. நான் வகுப்புக்கு தாமதமாக வருகிறேன். இன்னும் சொல்லப்போனால் என் டி-ஷர்ட்டின் உள்பக்கம் வெளியே உள்ளது கூட தெரியாமல் வந்திருக்கிறேன். இதனால் என்னிடம் யாரும் பேசவில்லை. ஒருவரைத் தவிர, கே.எக்ஸ் ஜின் இன்று அவர் ஃபேஸ்புக்கில் பெரிய பொறுப்பில் இருக்கிறார், 

ஆனால் ஹார்வர்டில் எனது சிறந்த நினைவுகள் என்றால் பிரிசில்லாவுடனான சந்திப்பு தான், நான் கேலி இணையதளமான ஃபேஸ்மேஷை வடிவமைக்கிறேன். பல்கலைக்கழக நிர்வாகம் என்னைப் பார்க்க வேண்டும் என்று கூறுகிறது. நான் வெளியேற்றப்படுவேன் என்று எல்லாரும் நினைக்கிறர்கள். என் நண்பர்கள் பார்ட்டிக்கு என்னை அழைக்கிறார்கள். அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும் அந்த பார்ட்டியில் பிரிசில்லாவை சந்தித்தேன். முதலில் பாத்ரூமுக்கு செல்லும் வரிசையில் பிரிசில்லாவை சந்தித்தேன். அப்போது கூறியது இன்னமும் நினைவிருக்கிறது. மூன்று நாட்களில் என்னை கல்லூரியை விட்டு அனுப்பிவிடுவார்கள். நாம் உடனடியாக டேட்டிங் செல்வோம் என்று கூறினேன். இப்போது யார் வேண்டுமானாலும் இங்கு அந்த வரிகளை பயன்படுத்தலாம். 

mark  மார்க்

எதுவும் முடிந்துவிடவில்லை. நான் எனக்காக எல்லாவற்றையும் செய்ய துவங்கினேன். நான் பிரிசில்லாவை காதலிக்க துவங்கினேன், ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கெலாம் ஃபேஸ்மேஷ் தான் ஃபேஸ்புக் சாம்ராஜ்யம் உருவாகக் காரணம். ஃபேஸ்மேஷ் இல்லாமல் பிரிசில்லாவை கண்டுபிடித்திருக்க மாட்டேன். பிரிசில்லா என் வாழ்வில் மிகவும் முக்கியமானவள். இங்கு என் நாட்களை கட்டமைத்ததில் அவளது பங்கு அதிகம். 

இங்கு தான் நாம் அனைவரும் வாழ்நாள் நட்பை துவங்குகிறோம். சிலர் தங்கள் குடும்பத்தை இங்கிருந்து தான் துவங்குகிறார்கள். இந்த இடத்துக்கு நான் மிகுந்த மதிப்பளிக்கிறேன். நன்றி ஹார்வர்டு.

இன்று நான் ''நோக்கம்'' பற்றி பேசப்போகிறேன். இந்த பட்டமளிப்பில் விழாவில் உங்களுக்கான நோக்கம் பற்றி பேசுவது என் நோக்கமல்ல. நாம் மில்லினியல்கள். நான் கணிப்புகளுடன் கூடிய முயற்சிகளை செய்ய வேண்டும். அதனை விட்டுவிட்டு என் நோக்கம் என்ன என்று கண்டறிகிறேன் என்றால் அது மட்டும் போதாது. இங்கே நமக்கு மிகப்பெரிய சவால் என்னவென்றால் நோக்கமுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும்.

ஒருமுறை ஜான் ஜென்னடி நாசா விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு ஒருவர் துடைப்பத்தை கொண்டு சுத்தம் செய்து கொண்டிருக்கிறார். அவரைப் பார்த்து கென்னடி என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்க... அதிபர் அவர்களே நான் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப உதவிக்  கொண்டிருக்கிறேன் என்கிறார்.

நம்மைவிட நமது நோக்கம் மிகப்பெரியது. அது நமக்கு தேவையும் கூட..அது நம்மை முன்னேற்றி செல்லும். உண்மையான மகிழ்ச்சியை தரும். இன்று பட்டம் பெறும் போது இதனை சொல்வது முக்கியமானதாக தோன்றுகிறது. நோக்கம் என்பது உங்கள் வேலை, உங்கள் தேவாலயம், உங்கள் சமூகம் ஆனால் இன்று தொழில்நுட்பமும், தானியங்கி தன்மையும் வேலைகளை காலி செய்கின்றன. சமூகத்தின் ஒரு கூட்டமைப்பில் உள்ளவர்கள் குறைகிறார்கள். நிறையே பேர் தொடர்புகளற்றும், அழுத்தத்தோடும் இருக்கிறார்கள். 
நான் தற்போது அமெரிக்கா முழுக்க பயணித்து வருகிறேன். குழந்தைகளுடனும், சிறார்களுடனும் பேசி வருகிறேன். அவர்கள் கூறுவது பள்ளிப்படிப்புக்கு பின்பு நாங்கள் எதாவது ஒரு நல்ல இடத்துக்கு செல்ல வேண்டும் என்பதைத் தான், அதேபோல் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்கள் தங்களது பழைய வேலை திரும்ப கிடைக்காது. மற்றும் அவர்களுக்கான இடங்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள்.

mark

இந்த சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவது தான் இன்றைய தலைமுறையின் சவால். புதிய வேலைகளை மட்டும் உருவாக்க வேண்டாம். ஆனால் புதுப்பிக்க கூடிய நோக்கங்களை உருவாக்கி அதன் படி நடக்க வேண்டும்.

எனக்கு இன்னமும் அந்த இரவு நினைவிருக்கிறது. ஃபேஸ்புக்கை அறிமுகம் செய்த நாள். கிர்க்லேண்ட் ஹவுஸில் என நண்பர் கே.எக்ஸுடன் இருந்தேன். அன்று எங்களுக்கு ஹார்வர்டை எப்படி இணைப்பில் வைத்திருக்க வேண்டும் என்பது தான் நோக்கமாக இருந்தது. ஆனால் ஒருநாள் உலகத்தை யாராவது ஒருவர் இணைப்பார்கள் என்றும் தோன்றியது. அந்த ஒருவர் நாங்கள் தான் என்பது அப்போது தெரியவில்லை. அப்போது இதனைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. பெரிய டெக் நிறுவனங்கள் இதனை செய்யும் என்று நினைத்தோம். ஆனால் எங்களிடம் ஐடியா ரொம்ப தெளிவாக இருந்தது. உலகை இணைக்க வேண்டும் என்பது தான் அது. அதனை நோக்கி தான் தினந்தோறும் நகர்கிறோம்...நகர்வோம்...

எனக்கு தெரியும் இந்த ஹார்வர்டில் இதே போன்று பல கதைகள் இருக்கும். நீங்கள் உறுதியாக இல்லை என்றால் வேறொருவர் செய்துவிடுவார். அப்படி யாரும் செய்யவில்லை என்றால் நீங்கள் கட்டாயம் செய்யுங்கள். 

ஆனால் நோக்கம் என்பது உங்களுக்கானதாக இல்லாமல், மற்றவர்களுக்கு உதவுவதாக அமைய வேண்டும். நீங்கள் கவனித்து பாருங்கள். எனக்கு நிறுவனத்தை அமைப்பது நோக்கமில்லை. ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். எங்களுடன் அனைத்து மக்களும் இணைய வேண்டும். அவர்கள் எங்கள் மீது அக்கறை கொள்ள வேண்டும். அதுவே நான் என்ன உருவாக்கி கொண்டிருக்கிரேன் என்பதை சொல்லும்.

இந்த இரண்டு வருடங்களில் நிறைய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கை விலைக்கு கேட்டன. நான் விற்பதாய் இல்லை. எனது நோக்கம் நிறைய மக்களை இணைப்பது தான். அதற்கான நாங்கள் முதல் நியூஸ் ஃபீடை உருவாக்கினோம். அது இந்த உலகம் எப்படி மாறி வருகிறது என்பதை சொல்லித் தருகிறது. 

எல்லாரும் விற்பதை நோக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் எந்த நோக்கத்துக்காக உருவாக்கினோம் என்பதை பார்க்கவில்லை. இது ஒரு ஸ்டார்ட்-அப். கனவுகள் ஒருநாள் நிறைவேறும் அதுவரை காத்திருப்போம். ஒரு கோபமான விவாதத்தில் எனது ஆலோசகர் ஃபேஸ்புக்கை விற்கும் முடிவை நான் எடுக்கவில்லை என்றால் எனது எல்லா முடிவுகளை வாழ்நாளில் தவறாகும் வாய்ப்புள்ளது என எச்சரித்தார். அது தான் ஃபேஸ்புக்கின் கடினமான காலம். நான் நாங்கள் செய்வதில் நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால் நாங்கள் தனிமையாய் இருப்பதாய் உணர்ந்தோம். 22 வது இளைஞனாக எதை செய்வது என்று தெரியாமல் இருந்தேன். இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்பது பற்றி எந்த ஐடியாவும் இல்லை. 

இப்போது வருடங்கள் கடந்துள்ளன. எது நோக்கம் என்று தெரிந்துள்ளது. அதனை நோக்கி பயணிக்கிறோம். 
இன்று நான் பல இடங்களில் உலகை உருவாக்குவதற்கான நோக்காம் பற்றி பேசுகிறேன். சரியான திட்டங்களை உருவாக்க வேண்டும். அனைவருக்கும் சம உரிமை அளிக்க வேண்டும். சுதந்திரமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் நோக்கம்.
முதலில் பெரிய அர்த்தமுள்ள திட்டங்களை எடுத்துக்கொள்வோம். நமது தலைமுறை பல கோடி வேலைகளை தானியங்கி தன்மை என்ற பெயரில் காலி செய்கிறது. 

அனைத்து தலைமுறைகளும் அவர்களுக்கான வேலைகளை வரையறுத்துள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மனிதனை நிலாவில் நிலைநிறுத்த வேலை பார்க்கின்றனர். போலியோவை ஒழிக்க மில்லியன் பேர் தன்னார்வ தொண்டர்களாக பணிபுரிகின்றனர். ஹோவர் அணையைக் கட்டி முடிக்க பல லட்சம் பேர் உழைக்கின்றனர். மனிதனின் எல்லா உழைப்புக்கு பின்னாளும் ஒரு நோக்கம் இருக்கிறது. இவர்கள் வெறும் வேலையை மட்டும் பார்க்கவில்லை. தங்கள் நாட்டுக்கு பெருமையையும் சேர்த்து சேகரிக்கிறார்கள். 
இப்போது நமக்கான நேரம் நமக்கு பெரிய அணைகளை கட்ட தெரியாது, அல்லது மில்லியன் மக்களை ஒரு விஷயத்துக்காக ஒருங்கிணைக்க தெரியாது. ஆனால் ஒரு ரகசியத்தை கூறுகிறேன். ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் போது அவர்களுக்கு எதுவுமே தெரியாது என்பது தான் உண்மை. ஃபேஸ்புக் ஆரம்பிக்கும் போது எனக்கும் தெரியாது என்னால் உலகில் உள்ள மக்களை இணைக்க முடியும் என்று.

சிறந்தவர்களாக இருப்போம். ஆனால் தவறான புரிதல் உள்ளவராக நம்மை தயார்படுத்தி கொள்வோம். பெரிய திட்டங்கள் உள்ளவரை நகைச்சுவையாக பார்ப்பது எப்போதும் உள்ள விஷயம். கஷ்டமான வேலைகளை செய்பவர்களும் கூட சவால்களை சரியாக புரிந்து கொள்ளாததற்காக குற்றம்சாட்டப்படுகின்றனர். நீங்கள் வேகமாக இருக்கிறீர்கள் என்ற குற்றம் சாட்டப்பட்டால் இன்னும் வேகமாக முன்னேறுங்கள் ஏனேனில் குற்றம் கூறுபவர்கள் உங்கள் வேகத்தை குறைக்க முயல்கிறார்கள்.

 

இந்த சமூகத்தில் பெரும்பாலும் நாம் பெரிய விஷயங்களை ஆரம்பிக்கத் தவறுகிறோம். காரணம் தவறு இழைத்துவிடுவோமே என்ற பயம் தான். ஆனால் உண்மை என்னவென்றால் இதில் எந்தத் தவறுமே நாம் ஒரு விஷயத்தை ஆரம்பித்ததற்குத் தடையாய் இருந்ததில்லை. 


எதற்காக நாம் காத்திருக்கிறோம், இந்த தலைமுறை வேலைகளை வரையறை செய்ய வேண்டிய நேரமிது. பருவநிலை மாற்றங்களை தடுப்பது எப்படி என்பதைப் பேசுவதற்கு முன்னால் பூமியை அழிக்காமல் பாதுகாப்பது எப்படி என்றும், பல லட்சம் பேரை இணைத்து சோலார் அமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து பேசுவோம். நோயை குணப்படுத்துவதைப் பற்றி பேசாமல் நோயே வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசுவோம். அது தான் அர்த்தமுள்ளதாக இருக்கும். ஜனநாயகத்தை நாகரீகமாக்குவோம். ஆன்லைனில் வாக்களிக்க வைப்போம். கல்வியை தனிப்பட்ட முறைக்கு வடிவமைப்போம் அது அனைவரையும் கல்வி கற்க வைக்கும். 

இவையெல்லாம் சாத்தியப்படும் வளையத்துக்குள் இருப்பவை. சமூகத்தில் அனைவருக்கும் பெரிய செயல்களை செய்ய வாய்ப்பளிப்போம். அது செயலுக்காக அல்லாமல் நோக்கத்துக்காக இருக்கட்டும். நிறைய பெற்றோர்கள் ஒரு நிலையான வேலைக்கு தங்கள் குழந்தைகள் செல்ல வேண்டும் என்பதை தான் விரும்புகிறார். ஆனால் நாம் எல்லாம் தொழில்முனைவோர்கள். நாம் திட்டங்களை உருவாக்குகிறோம் அல்லது அதில் நமக்கான இடத்தை உருவாக்குகிறோம். அது தான் சிறந்தது. இந்த தலைமுறை தான் தொழில்முனைதலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. 

நான் முதன் முதலில் ஃபேஸ்புக்கை உருவாக்கவில்லை. கேம்கள், சாட் சிஸ்டம், மியூஸிக் லேயர் என பலவற்றை உருவாக்கினேன். நான் மட்டுமல்ல. ஜே.கே.ரெளலிங் ஹாரி பாட்டரை எழுதுவதற்கு முன்னால் 12 முறை நிராகரிக்கப்பட்டுள்ளார். மிகப்பெரிய வெற்றிகளை தோல்விகள் இல்லாமல் பெற முடியாது. ஆனால் இன்று சொத்துகளில் உள்ள சமநிலையின்மை அனைவரையும் காயப்படுத்துகிறது. 
இறுதியாக 2017ன் மாணவர்களே! நீங்கள் ஒரு நோக்கமுள்ள உலகில் பட்டம் பெற போகிறீர்கள். இதனை உருவாக்குவது உங்கள் விருப்பம். நீங்கள் நினைக்கலாம் என்னால் இதனை செய்ய முடியுமா என்று?

நினைவில் கொள்ளுங்கள், நான் உங்களிடம் கூறியிருக்கிறேன். நான் படித்த வகுப்பில் ஆண்கள், பெண்களுக்கு என்ற கிளப் இருந்தது. ஒரு நாள் நான் அவர்களிடம் கல்லூரியைப் பற்றி வகுப்பு முடிந்தவுடன் பேசி கொண்டிருந்தேன். டாப் மாணவர்களில் ஒருவன் கையை உயர்த்தி கேள்வியைக் கேட்டான், கடந்த வருடம் அவனது பிறந்தநாள் அன்று காலை உணவுக்கு அழைத்தேன், அவன் வரவேண்டும் என்று நினைத்தேன். அதனால் அழைத்தேன். அவன் மாணவர்கள் படும் அவதி குறித்து பேசினான். நான் உடைந்து போனேன். அவன் தனது நாட்டை தனக்கு பாரமாக பார்க்கிறான். அவனது கனவுகளை சிதைத்து அவனை கல்லூரிக்குள் கொண்டு செல்பவர்கள் பற்றி நினைவு கூறுகிறான். ஆனால் அதற்கு அவன் வருந்தவில்லை. அவன் அவனைப் பற்றி நினைக்கவில்லை. அவனுக்கு பெரிய நோக்கமுள்ளது. அவன் மக்களோடு இருக்க விரும்புகிறான். 

இது தற்போது உள்ள சூழலுக்கு எதையோ சொல்ல வருகிறது. அவன் பெயரை நான் கூறப்போவதில்லை அது அவனுக்கு ரிஸ்க்காக அமையும். அந்த கதவை விட்டு வெளியேறுவதற்கு முன்னால் ஒன்றை நினைத்துக் கொண்டேன். நான் என் மகளை ஒவ்வொரு நாளும் தூங்க வைக்கும் போது அவளது எதிர்காலம் குறித்து நினைக்கிறேன். 

எனக்கு நம்பிக்கை இருக்கிறது உங்களது தைரியம் உங்கள் வாழ்க்கையை அழகாக்கும். வாழ்த்துக்கள்... 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

'சுவாதி கொலை வழக்கு'... திரைப்படத்தின் ட்ரெய்லர்!

 

Swathi_1_20586.JPG

எப்போதும் போல அன்றும் பரபரப்பாக இயங்கத் தொடங்கியது நுங்கம்பாக்கம் ரயில் நிலையம். ஆனால், அன்று காலை நடந்த கொலை சம்பவத்தால் தமிழ்நாடே அதிர்ச்சியடைந்தது. ஐ.டி நிறுவனத்தில் பணி புரியும் சுவாதி என்ற பெண் பட்டப்பகலில், மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் ஒரு ரயில் நிலையத்தில் கொலை செய்யப்படுகிறார். பின்னர் கொலை செய்தவர் என்று குற்றம் சுமத்தப்பட்டு ராம்குமார் என்றொரு நெல்லையைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்படுகிறார். அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, விசித்திரமாக மின்சாரக் கம்பியைக் கடித்து ராம்குமார் 'தற்கொலை' செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. கடைசி வரை விடை கிடைக்காமலேயே முடித்துவைக்கப்பட்ட 'சுவாதி கொலை வழக்கு', தற்போது அதே பெயரில் திரைப்படமாக வரவுள்ளது.

உளவுத்துறை, ஜனனம், வஜ்ரம் திரைப்படங்களை இயக்கிய எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கியிருக்கும் 'சுவாதி கொலை வழக்கு' படத்தில் அஜ்மல் புலனாய்வு செய்யும் காவலராக நடித்துள்ளார். 

கடைசிவரை யார் குற்றவாளி? என்றே தெரியாமல் மூடப்பட்ட, சுவாதி கொலை வழக்கின் திரைப்படத்தில் என்ன விடை கொடுத்துள்ளார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

 

 

  • தொடங்கியவர்

 

அழிவின் விளிம்பில் ஆயிரக்கணக்கான தாவரங்கள்

லண்டனில் உள்ள கியூ கார்டன்ஸ் தாவரவியல் பூங்காவின் வருடாந்த கணிப்பின்படி சென்ற ஆண்டில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் தாவர வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொருளாதார முக்கியத்துவம் மிக்க செடிகள், பிரபலமான பூச்செடிவகைகள், மருத்துவம் மற்றும் தளபாட உற்பத்திக்கான மரங்கள் ஆகியவை இவற்றில் அடக்கம்.

இருந்தபோதிலும் மிகவும் பெறுமதி மிக்க தாவரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 2 Personen

  • தொடங்கியவர்

கூகுளாலேயே இது முடியாதாம்!

பிரௌசரில் தப்பா டைப் பண்ணினாலும் அதற்கு ஒரு ரிசல்ட் காட்டுவதுதான் கூகுளின் ஸ்டைல். கடவுளிடம் கிடைக்காததுகூட கூகுளிடம் கிடைக்கும். அப்படிப்பட்ட கூகுளே ஒரு விஷயத்தில் கைவிரித்துவிட்டது. ஆம்! தன் ஊழியர்களின் சம்பள லிஸ்ட்டை தங்களால் வெளியிட முடியாது; அதற்கு நிறைய கால அவகாசமும், பணமும் செலவாகும் என்று ஒரு வழக்கிலிருந்து அப்ஸ்காண்டு ஆகிவிட்டது கூகுள். 

google_00577.jpg

 

கூகுள் நிறுவனம் சிலிக்கான் வேலி எனும் பகுதியில் அமைந்திருக்கிறது. சமீப காலமாக சிலிக்கான் வேலியின் பெண்/ஆண் ஊழியர்களுக்கு இடையில் சம்பளப் பாகுபாடு இருந்து வருவதாக வந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ‘லேபர் டிபார்ட்மென்ட்’ எனும் கவர்ன்மென்ட் அமைப்பு, கூகுளின்மேல் ஒரு சமூகநல வழக்கு தொடர்ந்தது. ‘‘கூகுள் பெண் ஊழியர்களைப் பாரபட்சமாக நடத்துவதாக எங்களுக்கு ஒரு தகவல் வந்துள்ளது. ஆண் ஊழியர்களுக்கும் பெண் ஊழியர்களுக்கும் கூகுளில் நிறைய வேற்றுமைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இது பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடு. எனவே, கூகுள் தன்னுடைய ஊழியர்களின் சம்பள லிஸ்ட்டை வெளியிட வேண்டும்!’’ என்பதுதான் அது.

இந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்துக்கு வந்தது. ‘‘எங்கள் நிறுவனத்தில் பெண்/ஆண் என்கிற வேறுபாடுகள் சம்பள விஷயத்தில் கிடையாது. சிலருக்கு அவர்களின் வேலை அடிப்படையில் வேண்டுமானால் ஊழியப் பணத்தில் வித்தியாசம் வரலாம். ஏற்கெனவே லேபர் டிபார்ட்மென்ட் கேட்டுக்கொண்டபடி ஒரு லிஸ்ட் கொடுத்துள்ளோம். அது போதவில்லை என்கிறார்கள். எங்களின் முழுமையான ஊழியர் சம்பளப் பட்டியலை வெளியிட 500 மணி நேரமும், 1 லட்சம் டாலரும் செலவழியும். இப்போதைக்கு அது எங்களால் இயலாது!’’ என்று ‘நோ ரிசல்ட்’ போர்டு மாட்டிவிட்டது கூகுள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘பசு தாயையும்விட மேலானது’
 

பசுக்களை நம்பியே இந்த உலகில் மனித இனம் ஜனனித்துக்கொண்டிருக்கின்றது.  

ஓரிரு மாதங்கள் அல்லது இரண்டு வயதுவரை மட்டுமே, தாய்மார் சிசுவுக்கு தாய்ப்பால் ஊட்டுகின்றார்கள். 

மேலும், தாய்ப்பால் ஊட்டும் தாய்மாரின் விகிதம் சரிந்து கொண்டேயிருக்கின்றது. இதனால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அதன் தாயாருக்கும் பாதிப்பு ஏற்படும் என்பது தெரிந்த விடயமே. 

எனவே, எமக்கு உயிரூட்டும் பசுக்களை வளர்ப்பதும் அன்புடன் அவைகளைப் பேணுவதும் நன்றி மறவாத எமது கடமையாகும். 

மனிதன் பிறந்தது முதல், பசுவின் உதிரத்தினுடான பாலை உடன் பருகி, உயிர்வாழும் மனிதன், இறுதித்தருவாயில் அவனது ஆன்மா சிரமமின்றிப் பிரிய பசுவின் பாலைத்தான் அவன் வாயில் பருக்குகின்றார்கள். பசு தாயையும்விட மேலானது. இதனை ஒரு விலங்காகக் கருதவேண்டாம்.

  • தொடங்கியவர்

பிக்பாஸ்ல இவங்க எல்லாம் கலந்துகிட்டா எப்படி இருக்கும்? #VikatanFun

 

விஜய் டி.வியில் உலகநாயகன் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான விளம்பரம் தூள் பறக்கிறது. பதினான்கு நபர்கள், நூறு நாள்கள் ஒரே வீட்டில் அடைந்து இருக்கணும், முப்பது கேமராக்கள் அவர்களைக் கண்காணிக்குமாம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் பெயர்களை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தைத் தெறிக்கவிடும் சில செலிபிரிட்டிகள் எல்லாம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், தமிழகம் கொஞ்சகாலம் நிம்மதியாக இருக்குமேன்னு தோணுச்சு. லிஸ்ட் தர்றேன்...உங்களுக்கும் அப்படி தோணுதான்னு செக் பண்ணுங்க மக்களே..!

பிக்பாஸ்

முதல் ஆளா சுப்பிரமணிய சுவாமியை அந்த வீட்டுக்குள் அனுப்பலாம். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு நியூஸ் பேப்பர், போன் என்று எந்த சமாசாரமும் தரப்படாது என ரூல்ஸ் இருக்கிறது. அதனால், அவருக்கு நாட்டுநடப்பு தெரியப் போவதில்லை. அதனால் ட்வீட் போட்டு தமிழகத்தைக் கலவர பூமியாக்குவது தவிர்க்கப்படும். போக, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமலோடு ஏற்கெனவே லடாய். இதுதான் சாக்கு என கமலும் போட்டுத் தாக்குவார், பார்ப்பவர்களுக்குக் கொண்டாட்டம்தான். 

 

அடுத்ததாக, 'பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மற்றொரு பிரபலம் பா.ஜ.கவை சேர்ந்த ஹெச்.ராஜா. இவரும் அடிக்கடி கருத்து சொல்கிறேன் பேர்வழி ட்விட்டரில் பஞ்சாயத்து பண்ணுகிறார். டிவி ஷோக்களில் சண்டை போடுகிறார்.  ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி மத்திய அரசின் மாட்டுக்கறி தடை வரை காமாசோமாவென கருத்து சொல்லி கடுப்பாக்கும் அவரை, 'வருமுன் காப்போம்' திட்டத்தின் கீழ் அந்த வீட்டுக்குள் அனுப்பலாம். 
 
அடுத்த போட்டியாளராக கொஞ்சமும் யோசிக்காமல் வைகோவை அறிவிக்கலாம். ஜாமீன் வேணாம் என ஜெம்மென இருந்தவர், ரஜினி வாய்ஸ் கொடுப்பது தெரிந்ததும், 'கேட்டை திற' என வெளியே வந்துவிட்டார். தி.மு.க, அ.தி.மு.கவை ஒழிக்க ம.ந.கூவை அமைத்தது போல, ம.ந.கூவை அழிக்க ரஜினியோடு கூட்டு சேர்ந்தாலும் சேர்வார். இந்த விபரீதம் நடக்காமல் இருக்க அவரைக் கொஞ்ச காலம் உள்ளே அனுப்பி வைக்கலாம். 
 
அகில உலக ஒப்பற்ற விஞ்ஞானி செல்லூர் ராஜூவை கூட இந்த போட்டியில் இழுத்துவிடலாம். வைகை அணையில் தண்ணீர் ஆவியாக விடாமல் தடுக்க தெர்மாகோல் டென்ட் போட்டு பதினாலு லட்சத்தை வீணடித்தார். அடுத்து வங்காள விரிகுடாவுலயும் இதை பண்ணப்போறோம்னு கோடிக்கணக்குல வீணடிச்சா என்ன பண்ணுறது? அவர் அப்படி பில்லைத் தீட்டாம இருக்கணும்னா இந்த ஷோவுக்குத்தான் அனுப்பணும். உள்ளே போனதும் கமல் தீட்டு தீட்டுனு தீட்டுவார்.
 
பெண்களுக்கும் சம சதவிகிதம் கொடுக்கணுமில்ல. அ.தி.மு.கவை சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதியை கடைசி ஆளாக சேர்க்கலாம். 'இன்று ஒரு தகவல்' மாதிரி முன்னாடி எல்லாம் கோழி கூவ ஆரம்பிச்ச நேரத்துக்கெல்லாம் மொத்த மீடியாவும், 'இன்னைக்கு மேடம் என்ன சொல்லுவாங்க?' என இவங்க முகத்துக்கு முன்னால மைக்கை நீட்டுன காலம் இருந்துச்சு. ஆனால், இப்போ அமைதியா இருக்காங்க. ஆனால், ஒருவேளௌ இது பாயுறதுக்கு முன்னால பண்ற பதுங்கலா இருந்தா? மடைதிறந்த வெள்ளமாக அவர் மறுபடியும் சொற்பொழிவு ஆத்துறதுக்கு முன்னாடி பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக்கி உள்ளே அனுப்பிடணும். ஆனா உள்ளேயும் ஒரு விவாத நிகழ்ச்சி நடக்கப்போறது உறுதி. 
 
என்ன மக்களே? நான் சொன்ன போட்டியாளர்கள் அனைவரும் ஒரே வீட்டுக்குள் இருந்தால் எப்படி சுவாரஸ்யமாக இருக்கும்?. நினைக்கும்போதே உச்சி மண்டை கசகசன்னு வேர்க்குதே. ஆண்டவா! 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

டிரினிடாட் டொபாகோ தீவுக்கு இந்தியர்கள் சென்ற நாள்: மே 30- 1845

மேற்கிந்திய தீவுகளில் உள்ள டிரினிடாட் டொபாகோ தீவுக்கு இந்தியர்கள் 1845-ம் ஆண்டு மே மாதம் 30ந்தேதி வந்திறங்கினர். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1431 - நூறாண்டுகள் போர்: பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் ரோவென் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீ வைக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள். * 1539 - தங்கம் கண்டுபிடிக்கும் நோக்கில் ஹெர்னாண்டோ டி சோட்டோ 600 படையினருடன்

 
 
 
 
டிரினிடாட் டொபாகோ தீவுக்கு இந்தியர்கள் சென்ற நாள்: மே 30- 1845
 
மேற்கிந்திய தீவுகளில் உள்ள டிரினிடாட் டொபாகோ தீவுக்கு இந்தியர்கள் 1845-ம் ஆண்டு மே மாதம் 30ந்தேதி வந்திறங்கினர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1431 - நூறாண்டுகள் போர்: பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் ரோவென் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீ வைக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள்
 
* 1539 - தங்கம் கண்டுபிடிக்கும் நோக்கில் ஹெர்னாண்டோ டி சோட்டோ 600 படையினருடன் புளோரிடாவை அடைந்தான்.
 
* 1588 - 30,000 பேர்களுடன் ஸ்பானிய ஆர்மாடா என்ற 130 ஸ்பானியப் போர்க்கப்பல்களின் கடைசிக் கப்பல் ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து புறப்பட்டட்து.
 
* 1635 - முப்பதாண்டுப் போர்: பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
 
* 1815 - இலங்கையிலிருந்து காயப்பட்ட போர்வீரர்களை ஏற்றி வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆர்னிஸ்டன் என்ற கப்பல் தென்னாபிரிக்காவுக்கு அருகில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 378 பேரில் 372 பேர் கொல்லப்பட்டனர்.

* 1845 - டிரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் வந்திறங்கினர்.
 
* 1883 - நியூயோர்க் நகரில் புரூக்ளின் பாலம் இடிந்து விழப்போவதாக எழுந்த வதந்தியை அடுத்து இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 12 பேர் இறந்தனர்.
 
* 1913 - முதலாம் பால்க்கன் போர்: லண்டன் உடன்பாடு, 1913 எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது. அல்பேனியா தனி நாடாகியது.
 
* 1942 - இரண்டாம் உலகப் போர்: 1000 பிரித்தானிய போர் விமானங்கள் ஜெர்மனியின் கொலோன் நகரில் 90-நிமிடங்கள் குண்டுமாரி பொழிந்தன.
 
* 1966 - முன்னாள் காங்கோ பிரதமர் எவரீஸ்டே கிம்பா மற்றும் பல அரசியல் தலைவர்கள் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள்.

* 1971 - செவ்வாய்க் கோளின் 70 விழுக்காட்டைப் படம் பிடிப்பதற்காகவும் அதன் வளிமண்டலத்தை ஆராயவும் என மரைனர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது.
 
* 1972 - இஸ்ரேலின் விமானநிலையத்தில் ஜப்பானிய செம்படையினர் தாக்குதல் மேற்கொண்டதில் 24 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1981 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியின் போது அதிபர் சியாவுர் ரகுமான் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
* 1987 - கோவா தனி மாநிலமாகியது.
 
* 1998 - வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
 
* 2003 - எயார் பிரான்சின் கொன்கோர்ட் விமானம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.
 
 
  • தொடங்கியவர்

இது தான் கிராமத்து கிரிக்கெட்....!

Peed, Byes Clean, பூவா தலையா, நடு ஸ்டிக் தூக்கியாச்சு,..இதுவே இவர்களின் கிரிக்கெட் மொழிகள்..

  • தொடங்கியவர்
மோடி - பிரியங்கா சோப்ரா ஜெர்மனியில் சந்திப்பு
 

image_522c65843e.jpgஇளையதளபதி விஜய் நடித்த “தமிழன்” திரைப்படத்தில் அறிமுகமாகி, பின்னர் பொலிவுட், ஹொலிவுட் என பிரபலம் அடைந்த நடிகை பிரியங்கா சோப்ரா, இந்திய பிரதமர் மோடியை இன்று காலை சந்தித்துள்ளார்.

ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், இந்திய பிரதமரை பெர்லின் நகரில் மரியாதை நிமித்தமாக பிரியங்கா சோப்ரா சந்தித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுப்பயணத்திலும் தனக்காக நேரம் ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி கூறிய அவர், தற்செயலாக நடந்த இந்த சந்திப்பு தன்னை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தியதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ரா,  “பே வாட்ச்” திரைப்படத்தை ப்ரமோஷன் செய்வதற்காக ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

சென்னைக்கு மிக அருகில் இப்படியொரு அழகான தீவு இருக்குனு தெரியுமா? #ChennaiTravel

சென்னைவாசியோ, சென்னையின் பூர்வகுடியோ... வீக்  எண்ட் அவுட்டிங் என முடிவானதும் பெரும்பாலும் டிக் அடிப்பது மெரினா அல்லது பெசண்ட் நகர், ஏதாவது ஓர் ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர். ”சென்னைல வேற என்னப்பா இருக்கு...” என்ற சலிப்பு வருவது உண்மைதான். ஆனால், இந்தப் படத்தை பாருங்கள். 

ஆலம்பரை

பேங்காக்கோ, மொரீஷியஸோ... என்கிறீர்களா? இந்த இடம் இருப்பது சென்னையில் இருந்து 110 கிமீ தொலைவில். ரியல் எஸ்டேட்காரன் மாதிரி சொல்வதென்றால் சென்னைக்கு மிக அருகில்...இன்னும் சரியாக சொன்னால், சென்னை  மகாபலிபுரத்தில் இருந்து  50 கிமீ 

ஆலம்பறை கிராமத்தில் முதலில் நம்மை வரவேற்பது 1000 ஆண்டுகள் பழமையான  முகலாயர்களின் துறைமுகம் .இதை 1700-ம் நூற்றாண்டில் செங்கல்  மற்றும்  எலுமிச்சை பழச்சாறு கொண்டு உறுதியாக கட்டியது  முகலாய பேரரசு .பின்னார் 1750 களில் கடைசி நவாப்புக்கும் ஆங்கிலேயர்க்கும் நடந்த போரில் இந்த கோட்டை இடிக்கப்பட்டு தற்போது அதனுடைய சிதைந்த பாகங்களே எஞ்சி இருக்கின்றன

மூன்று புறமும் தண்ணீரால்  சூழப்பட்டுள்ள இக்கோட்டையின் பின் புறத்தில் ஆறு கடலுடன் கலக்கும் காட்சியை பார்க்கலாம். ஆறு, கடல் என தண்ணீரால் சுழப்பட்ட இங்கு   500க்கும் மேற்ப்பட்ட மக்கள் வாழ்க்கின்றனர். மீன் பிடித்தல் இவர்களுக்கு பாரம்பரிய  தொழில். கோட்டையில் இருந்து 20 நிமிட தூரத்தில் அமைந்துள்ளது வெள்ளை நிறம் மணல்களை கொண்ட இளைட்  தீவு. மிக அழகான தனிமை வாய்ந்த  இந்தத் தீவு சட்டென நம் மனதை இலகுவாக்குக்கிறது. 

பார்க்கும் திசை எல்லாம் தண்ணீர். அதில் ஒரு கரையில் கம்பீரத்தோடு விளங்கும் கோட்டை, வெளிநாட்டு தீவினை போன்று அழகுற காட்சி அளிக்கும் தனித்தீவு என இங்கு வரும்  சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த  பொழுது போக்கும் இடமாகவும் புகைப்படங்கள்  எடுக்கும் ஸ்பாட்டாகவும் விளங்கிறது இந்த இடம்  .

 

இனி என்ன நீங்களும்... வீக் கேண்டில் உங்க குடும்பம் ,நண்பர்களுடன் ஜாலியா ஒர் விசிட் போய்ட்டு வாங்க!! 

 

 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பிசிஃபிக் பெருங்கடலில் சிக்கிய அபூர்வ சுறா

  • தொடங்கியவர்

ஜானி டெப் - டிகாப்ரியோ, ரொனால்டோ - மெஸ்ஸி : இதுவும் தல தளபதி சண்டைதான்! #Fanfights

 

ந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் ஒருவருக்கு நிகராய் இன்னொருவர் இருக்கத்தான் செய்கிறார். அந்தந்தத் துறையில் கில்லியாக இருக்கும் இவர்களின் ஆதரவாளர்கள் சண்டையும் ரொம்பவே பிரசித்தம். அப்படி நமக்கு பரிச்சயமான நான்கு ஜோடிகள் இவர்கள்தான், இவர்களைப் பற்றிய ஓர் அலசல்!

அஜித் - விஜய் :

தல தளபதி

தல தளபதிதான் தமிழ்நாட்டின் ஹாட் டாபிக். தமிழ்நாட்டை 'தல நாடு' என்று கொண்டாடும் ஒரு கூட்டம், 'எங்க தளபதிதான்டா கெத்து' என்று காலரைத் தூக்கிவிடும் ஆட்கள் ஒரு பக்கம். அஜித்தை எடுத்துக் கொண்டால் அவரிடம் நடிப்பைவிட அவரின் பெர்சனல் வாழ்க்கையை வைத்துத்தான் பலபேர் ரசிகர்களாக இருப்பார்கள். அதுபோக அவரின் உதவும் சுபாவம், தன்னம்பிக்கை, இது எல்லாத்தையும்விட அவர் பைக், கார் ஓட்டும் ஸ்டைல் இவை எல்லாவற்றையும் வைத்துத்தான் அஜித்துக்கு ரசிகனாக இருப்பார்கள். இந்தப் பக்கம் விஜய்யை எடுத்துக் கொண்டால் அவரது சிம்ப்ளிஸிட்டி, மேடைப் பேச்சு, நடிப்பு. அவைகளை  அவர் டான்ஸ் ஆடும் ஸ்டைல்தான் அவருக்கு வெறித்தனமான ரசிகனாக இருக்க காரணமாக இருக்கும். இந்த இருவருக்குமான ரசிகர்களுக்கு இடையிலான சண்டை என்றும் ஓயாது. இவங்க ரெண்டு அணிகளும் அடிச்சிக்கிட்டா கூட பரவாயில்லை. இவர்கள் மற்ற நடிகர்களின் நடிப்பையும், அவரின் ரசிகர்களையும் கலாய்ப்பதுதான் கொஞ்சம் ஓவர் பாஸ். ஒரே ஒரு ஆறுதலான விஷயம் விஜய்யின் நடிப்பை அஜித் ரசிகர்கள் பாராட்டுவதும், அஜித்தின் மாஸ் கலந்த நடிப்பை விஜய்யின் ரசிகர்கள் பாராட்டுவதும்தான். சண்டையே இல்லாமல் இருந்தாலும் போர் அடிக்கும். உருவத்தை வைத்து கிண்டல், கேலி செய்யாமல் ஜாலியா அடிச்சிக்கிட்டா நல்லா இருக்கும். அந்த ரசிகர் சண்டைகளை எல்லாம் அடுத்த நிமிஷமே மறந்து போயிடுங்க ஃப்ரெண்ட்ஸ்.

தோனி - கோலி :

தோனி கோஹ்லி

தமிழ் சினிமாவில் தல தளபதி சண்டை எப்படியோ கிரிக்கெட்டில் தோனி - கோலி சண்டை அப்படி வேற லெவல். சாதாரணமாக ஒரு மீம் போடும்போது கூட தோனியை அஜித்துடனும், கோலியை விஜய்யுடனும்  ஒப்பிட்டுத்தான் சிலர் போடுவார்கள். இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களுள் தோனியும் ஒருவர். எந்தத் தருணத்திலும், வெற்றியோ, தோல்வியோ அவரது முகத்தில் லீவே எடுக்காத அந்த சிரிப்பு, அவரது அவுட் ஆஃப் தி பாக்ஸ் சிந்தனைகள், பல இளைஞர்களின் ரோல் மாடல். சுருக்கமாகச் சொன்னால் ஒரு தலைவனாக டீமை எந்த வித டென்ஷனுமின்றி வழி நடுத்துவது எப்படி என்று தோனியிடம் கற்றுக் கொள்ளலாம். இவரின் ரசிகர்கள் பட்டாளத்துக்கும் அதுதான் காரணம்.

மறுபக்கம் கோலி, இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமே இவர்தான். தோற்கும் தருவாயில் எந்த ஒரு வீரராக இருந்தாலும் அவருக்குப் பதற்றம் ஏற்பட்டுவிடும். ஆனால், எந்தவிதப் பதற்றமும் இல்லாமல், தன்னால் இயன்றவரை கடைசிப் பந்துவரை போராடித் தன் அணியை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வார் கோலி. அது மட்டுமின்றி தான் விளையாடும் எல்லாப் போட்டிகளிலுமே எதாவது ஒரு சாதணயை புரிந்துகொண்டேதான் இருப்பார். சச்சினுக்குப் பிறகு எல்லா சாதனைகளையும் படைப்பது நம்ம கோலிதான். சுருக்கமாகச் சொல்லப்போனால் எதாவது ஒரு சாதணையை உடைப்பதோ,  இல்லை புதிதாய் ஏதாவது ஒரு சாதனையைப் படைப்பதோ, அப்படியே நம்ம சின்ன வயது சச்சின், நம்ம கோலி. என்னதான் ஒரு வீரனை மற்ற வீரனோடு ஒப்பிடக் கூடாதென்றாலும், சச்சினை நினைவுப்படுத்தும் கோலியின் அருமை பெருமைகளை தாராளமாக எடுத்துச் சொல்லலாம். அதனாலேயே இவருக்குப் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உருவானார்கள். வெறும் சண்டைகளை மட்டுமே போடாமல், இவர்களை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு அன்றாட வாழ்வின் செயல்களில் பிரதிபலித்தால் நல்லாயிருக்கும்.

ரொனால்டோ - மெஸ்ஸி :

ரொனால்டோ மெஸ்ஸி

இது ஃபுட்பாலில் நடக்கும் முரட்டுத் தனமான சண்டை. பார்சிலோனா - அர்ஜென்டினாவுக்காக விளையாடும் லியோனல் மெஸ்ஸியோ, ரியல் மாட்ரிட் - போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடும் கிறிஸ்டியானா ரொனால்டோவோ, இந்த இருவரில் யார் சிறந்த வீரர்? இதை நான் சொன்னால் கமென்ட்டில் ரசிகர் சண்டை அனல் பறக்கும். ரொனால்டோவை எடுத்துக்கொண்டால் அவர் காலுக்குப் பந்து சென்றுவிட்டால் எந்தத் திசையில் போகிறார் என்றே கணிக்க முடியாது, தலையை நோக்கி வரும் பந்தை ஹெட்டிங் செய்வதற்காக 44 செ.மீ வரை பறப்பார். எல்லாத்தையும் பண்ணி கோல் போட்டுவிட்டு இவர் நிற்கும் ஸ்டைலுக்காவே ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். மறுபக்கம் மெஸ்ஸி, இவரது புயல் வேக ஓட்டத்துக்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது. உசேன் போல்டின் சொந்தக்காரர் போல சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் ஓடுவார். அதேபோல் அவ்வளவு சாதாரணமாக இவரிடமிருந்து பந்தைப் பறித்துச் செல்ல முடியாது. அவ்வளவு டாக்டிக்கலாக விளையாடும்  திறன் கொண்டவர். முக்கியமாக இவர் கோல் போடுவது மட்டுமின்றி மற்றவர்களையும் கோல் போட வைப்பார். அதற்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உலகம் முழுவதும் திரண்டது. 'எதற்கெடுத்தாலும் எங்களை ஒப்பிடுவது எங்களுக்கே போர் அடிக்கிது'னு ரொனால்டோ ஒரு பக்கம் சொல்ல, 'ரொனால்டோவுடன் ஒரே அணியில் இணைந்து ஒரு முறையாவது விளையாட விரும்புகிறேன்' என்று சொல்லும் மெஸ்ஸி ஒரு பக்கம் ஜில்லிட வைக்கிறார்.  

லியானர்டோ-டி-காப்ரியோ - ஜானி டெப் :

லியானர்டோ டிகாப்ரியோ ஜானி டெப்

இது ஹாலிவுட் சினிமாவில் நடக்கும் பஞ்சாயத்து. தமிழ் சினிமாவில் தல-தளபதி சண்டை போல் ஹாலிவுட்டில் டி-காப்ரியோ - ஜானி டெப் சண்டை. 'டைட்டானிக்' படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார் லியானர்டோ டி காப்ரியோ. போர் அடிக்கும் காதலர்களுக்கு அந்தப் படம்தான் இன்னமும் சிறந்த என்டர்டெயின்மென்டாக இருக்கிறது. இவரிடம் அழகு, நடிப்பு இரண்டுமே தாறுமாறாக கொட்டிக் கிடக்கிறது, அதனாலேயே பெண் ரசிகர்கள் பட்டாளத்தையும் உண்டாக்கிக் கொண்டார். ரொமான்ஸ் படத்தில் ஆரம்பித்து ஆக்‌ஷன், த்ரில்லர், சயின்ஸ் ஃபிக்‌ஷன் என இவர் தொடாத ஜானர்களே இல்லை. இவரின் விடா முயற்சிக்கு கிடைத்த பரிசுதான் ஆஸ்கர் விருது. 'ரெவனென்ட்' படத்திற்காக இவருக்கு ஆஸ்கர் கிடைத்தது. இவர் ஆஸ்கர் வாங்கிய போது அவரைவிட அவரின் ரசிகர்கள்தான் அதிகமாகச் சந்தோஷப்பட்டனர். இந்தப் பக்கம் நம்ம கேப்டன் ஜேக் ஸ்பாரோ, ஆம் அந்தப் பெயரை சொன்னால்தான் பலருக்கும் இவரை அடையாளம் தெரியும். இவர் இதுவரை போடாத கெட்-அப்களே இல்லை. ஆங்கில சினிமாவின் கமல்ஹாசன் என்றால் அது நம்ம ஜானி டெப்தான். நடிப்புக்கென்றே தன்னை அர்ப்பணித்த மனிதர். அது மட்டுமின்றி நிஜ வாழ்க்கையில் இவர் தங்கம். ஏன்னு கேட்குறீங்களா? 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' பட ஷூட்டிங்கின் போது ஓய்வு நேரங்களில் கேப்டன் ஜேக் ஸ்பாரோ வேடமிட்டு அங்கிருக்கும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் சென்று அவர்களை குஷிப்படுத்தினார். இருவருமே தனது இலக்கை நோக்கிச் சரியாகப் பயனிக்கிறார்கள். ரசிகர்கள் நாம் ஏன் அடிச்சிக்கணும்? சிந்திக்கணும் மக்களே சிந்திக்கணும்..!

 
 

ஆக, ஒவ்வொரு நபருக்கும் திறமையகளும், தனித்துவமும் இருக்கின்றன. அதைப் பார்த்து ரசித்து, அதை நம் வாழ்வில் சண்டை போடுவதைத் தவிர மற்ற விஷயங்களுக்கு எடுத்துக்கொண்டு, அவர்களை மாதிரியே இலக்கை நோக்கிப் போய்க்கொண்டே இருப்போம். 'கைகளில் இருக்கும் ஐந்து விரல்களுமே ஒரே மாதிரி இல்லை... மனிதர்களில் மட்டும் எப்படி..?' என்கிற காட்டுமொக்கைத் தத்துவத்தையே திரும்பவும் சொல்ல வைக்காமல், நீங்களே புரிந்துகொண்டு அடித்துக் கொள்ளாமல் நம் திறமை எதில் இருக்கிறதோ, அதில் சிறந்து விளங்கலாமே..!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பெல்லி டான்ஸும் பரதம் போன்றதே: ஆண் பெல்லி டான்ஸரின் கதை

இந்தியாவின் ஆண் பெல்லி டான்ஸரான இஷான் இலால் உடை வடிவமைப்பாளரும் கூட.


“மகிழ்ச்சியோ சோகமோ நடனமாடவே விரும்புவேன்”, என்கிறார் அவர்.

நடனம், உடைவடிவமைப்பு மூலமே தன்னை வெளிப்படுத்துவதாக கூறுகிறார்.

நடனம் என்பது உணர்வுநிலை என்பவர் உடையலங்காரம் என்பது தனக்கு உணவு போன்றது என்கிறார்.

நடனத்தின் மீதான நாட்டம் சிறுவயது முதலே இருந்ததாக கூறும் இஷான், பலமுறை டியூஷனுக்கு செல்லாமல் கதக் நடனம் பயில சென்றதாக தெரிவித்தார்.


இந்திய மரபுநடனங்களைப்போலவே பெல்லி டேன்ஸும் மிகவும் அழகானது என்கிறார் அவர்.


அதேசமயம் தான் நடனமாடுவதை தன் குடும்பம் விரும்பவில்லை என்றும் நடனம் தடுக்கப்பட்ட செயல் என்றும் பெண்களுக்கானது என்றும் ஆண்களுக்கானதல்ல என்றும் குடும்பத்தவர் கூறியதாக தெரிவித்தார்.


நடனமாடினால் நீ ஆணே அல்ல என்று அவமதித்ததாகவும் தன் பெற்றோர் தன்னை அவமானமாக கருதுவதால் தன்னிடம் பேசுவதில்லை என்றும் கூறினார்.

அதேசமயம் தன் பெற்றோரை தான் நேசிப்பதாகவும் மதிப்பதாகவும் அவர்கள் தரப்பை புரிந்துகொள்வதாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.


தன் குடும்பத்தவர் சமூகத்தை கண்டு அஞ்சுவதாகவும் மதக்கட்டளைகளுக்கு பயப்படுவதாகவும் கூறும் இஷான், “நான் பழமையைவிரும்பும் முஸ்லிம் குடும்பத்திலிருந்து வந்தவன்”, என்கிறார்.


அதே சமயம் நம்மை மற்றவர்கள் ஏற்கவேண்டுமென விரும்பினால் முதலில் நம்மை நாம் ஏற்றுக்கொள்ள பழகவேண்டும் என்கிறார்.


“என் முன் இரு தேர்வுகள் இருந்தன. பொய் தோற்றத்தோடு போலி வாழ்க்கை வாழ்வது அல்லது எனக்கு பிடித்ததை செய்தபடி நான் நானாகவே நிம்மதியாக வாழ்வது. இதில் நாம் வாழப்போவது ஒரே ஒரு முறை மட்டுமே என்பதால் நான் நானாகவே வாழ முடிவெடுத்தேன் என்கிறார் இஷான்.

  • தொடங்கியவர்

ஜூலியஸ் ஆக்செல்ராட்

 
 
 
 
sci_3169582f.jpg
 
 
 

நோபல் பெற்ற உயிரி வேதியியலாளர்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரி வேதியலாளர் ஜூலியஸ் ஆக்செல்ராட் (Julius Axelrod) பிறந்த தினம் இன்று (மே 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏழ்மையான யூதக் குடும்பத்தில் (1912) பிறந்தார். சிறுவயதிலேயே அறிவியலில் ஆர்வம் கொண்டி ருந்தார். பள்ளிக்கல்வி முடிந்த பிறகு, நியூயார்க் கல்லூரியில் பட்டம் பெற்றார். மருத்துவராக வேண்டும் என்ற ஆசை, இவரது யூதப் பின்னணி காரணமாக நிராசையானது.

* நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சோதனைக்கூட தொழில்நுட்ப வல்லுநராக சிறிது காலம் பணி யாற்றினார். பின்னர், நியூயார்க் நகர சுகாதார, மனநலத் துறை யில் வேலை கிடைத்தது. அங்கு பணியாற்றிக்கொண்டே, இரவு நேரத்தில் பயின்று அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

* கோல்டுவாட்டர் நினைவு மருத்துவமனையின் பல்கலைக்கழக ஆய்வு அசோசியேட்டாக நியமிக்கப்பட்டார். அங்கு பிரபல உயிரி வேதியலாளர்களுடன் இணைந்து, வலி நிவாரணிகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை ஆராய்ந்தார். ஆஸ்பிரின் அல்லாத வலி நிவாரணிகளைப் பயன்படுத்துவோருக்கு ஒருவித ரத்த நோய் ஏற்படுவது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

* தொடர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில், ரசாயன அசிட மினோஃபென், வலி நிவாரணப் பண்புகளைக் கொண்டிருப்பது புலப்பட்டது. இது பாராசிட்டமால், டைலெனால், பானடால் உள்ளிட்ட மருந்துகளாக மார்க்கெட் செய்யப்பட்டு, நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அசிடமினோஃபென் உலக அளவில் மிகவும் பிரபலமான வலி நிவாரணியாகப் புகழ்பெற்றது.

* பெதாஸ்தாவில் உள்ள தேசிய இதய நிறுவனத்தின் வேதியியல் பிரிவின் அசோசியேட்டாக 1949-ல் நியமிக்கப்பட்டார். 1953-ல் சீனியர் கெமிஸ்டாக பதவி உயர்வு பெற்றார். முழுமையான நரம்பு மண்டலம், அதன் முக்கிய நரம்பியல் கடத்திகள், எபினஃபிரைன், நார்பைன்ஃபிரைன் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

* தேசிய மனநல மருத்துவ நிலைய ஆய்வுக்கூடத்தில் மருந்தியல் பிரிவுத் தலைவராக 1955-ல் நியமிக்கப்பட்டார். 1984-ல் ஓய்வு பெறும்வரை அங்கு பணியாற்றினார். இதற்கிடையில், மூளையில் உள்ள கேட்டகோலமைன் தொடர்பான ஆராய்ச்சியில் 1950-ல் ஈடுபட்டார்.

* கேட்டகோலமைன் நியூட்ரோ டிரான்மிட்டர்ஸ் வெளியீடு மற்றும் மறுபயன்பாடு குறித்த ஆராய்ச்சிகளுக்காக ஜெர்மன் விஞ்ஞானி சர் பெர்னார்ட் காட்ஸ், ஸ்வீடன் விஞ்ஞானி உல்ஃப் வான் யூலர் ஆகியோருடன் இணைந்து 1970-ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். அமெரிக்க கலை, அறிவியல் அகாடமியின் ஃபெல்லோவாக 1971-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* கேட்டகால்-ஓ-மெதில் டிரான்ஸ்ஃபெரேஸ் என்சைம்களைக் கண்டறிந்து பிரித்தெடுத்தார். இந்தக் கண்டுபிடிப்பு, ஒட்டுமொத்த நரம்பியல் அமைப்பு குறித்த புரிதலுக்கும், பல்வேறு ஆராய்ச்சிகளுக்கும் துணைநின்றது. பினியல் சுரப்பியின் செயல்பாடுகளை விளக்கியதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கினார். இவை மத்திய நரம்பு மண்டலம் முழுவதும் தாக்கங்கள் ஏற்படுத்துவதை நிரூபித்துக் காட்டினார்.

* அறிவியல் இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதினார். பல இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். கெயர்டன் அறக்கட்டளையின் சர்வதேச விருது உட்பட பல விருதுகளைப் பெற்றார்.

* அமெரிக்க தேசிய மனநல மருத்துவ நிலைய ஆய்வுக்கூடத்தில் வாழ்நாள் இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, உயிரி வேதியியல் களத்திலும் உயிரி மருத்துவத் துறையிலும் மகத்தான பங்களிப்பை வழங்கிய ஜூலியஸ் ஆக்செல்ராட் 92-வது வயதில் (2004) மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

சக வீரர்களுக்காக குளிர்பானம் ஏந்திய டோனி : ரசிகர்களை நெகிழ வைத்த சம்பவம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும், தற்போதைய வீரருமான மகேந்திரசிங் டோனி மைதானத்திலிருந்த இந்திய அணியின் வீரர்களுக்கு குளிர்பானங்கள் கொண்டுவந்த புகைப்படம் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.

DBFbjkMUIAA-qTr.jpg

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் பங்களாதேஷ் அணிக்கெதிரான பயிற்சி போட்டியின் போதே டோனி குளிர்பாணங்களுடன் மைதானத்துக்குள் நுளைந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் மைதானத்தில் ஆரவாரம் செய்தனர்.

உலகில் முன்னணி கிரிக்கெட் வீரரான டோனியின் இந்த செயல் அனைவரையும்  நெகிழ வைத்துள்ளது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

 

நேர்முகத் தேர்வு: இப்படியும் சில கேள்விகள்!

நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் சில கேள்விகள் பல சந்தர்பங்களில் தொடர்புடையதாக இல்லாமலும் எரிச்சலூட்டும் வகையிலும் இருக்கின்றன என்று விமர்சனங்கள்.

  • தொடங்கியவர்

உங்கள் காதலியை அதிகம் புரிந்துகொள்ளவைக்கும் நான்கு டிப்ஸ்!

 
 

காதலி

இந்த மாதிரியான கட்டுரையை இன்னும் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு எழுதினாலும் அதன் தன்மை மாறாது. ஏனென்றால், இதெல்லாம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே வள்ளுவர் எழுதியதுதான். உங்கள் காதலியைக் கவர்வது எப்படி? அதாவது, எப்படியோ ஒரு லவ்வர் செட் செய்துவிட்ட புது லவ்வர் பாய்ஸுக்கான ஜில்ஜில் டிப்ஸ்கள் இவை.

நம்பர் 1:

குத்திக்காட்டாதீர்கள். அவர்கள் தப்பே செய்திருந்தாலும் எடுத்தவுடனே `எனக்குத் தெரியும் நீ இப்படித்தான் செய்வே'ன்னு என ஆரம்பிக்காதீர்கள். வேறு ஒருவர் குத்திக்காட்டுவதைவிட, நீங்கள் குத்திக்காட்டுவதுதான் அவருக்கு அதிகம் வலிக்கும். உங்களைக் காதலிக்கத் தொடங்கிய பெண், இந்த உலகத்தில் வேறு யாரைவிடவும் உங்களைத்தான் அதிகம் நம்புவார்.  

நம்பர் 2:

அதிகமாக வழியாதீர்கள். உலகத்திலேயே உங்களுக்கு அதிகம்  பிடித்த நபர் உங்கள் காதலியாகத்தான் இருப்பார். அதுவும் உங்கள் லவ் `சைவக் காதலா'க இருந்தால் சொல்லவே வேண்டாம். கல்யாணம் வரை அநியாயத்துக்கு ஜொள்ளின் உச்சத்துக்குப் போய் புகழ்ந்துகொண்டே இருப்பீர்கள். இப்படி இருப்பது, உங்களின் காதல் வாழ்க்கைக்கு நிச்சயமாக ஒருநாள் இடைஞ்சலைக் கொண்டுவரும். முடிந்தவரை இயல்பாக இருங்கள். குறிப்பாக, உங்கள் காதலியுடன் இருக்கும்போது நீங்கள் நீங்களாகவே இருங்கள். இம்ப்ரெஸ் செய்வதாக நினைத்து அளவுக்கு அதிகமாக வழிந்துவைத்தால், இதுதான் உங்கள் குணம் என நினைத்துக்கொள்வார். என்றாவது ஒருநாள் உங்களின் நிஜ முகம் தெரியவரும்போது அதிர்ச்சியடைவார். நீங்கள் நீங்களாக இருப்பதைத்தான் எந்தப் பெண்ணும் விரும்புவார். 

நம்பர் 3:

அக்கறை. சுயமான முடிவுகளை எடுப்பதைப் பெண்கள் விரும்பினாலும், தன் மீது அக்கறையுள்ள ஆணைத்தான் எந்த ஒரு பெண்ணும் விரும்புவார்.  காதலி என்பவர், உங்களின் நிரந்தரத் தோழி; பிரியவே கூடாது என நீங்கள் நினைக்கும் வாழ்க்கைத்துணை. மேற்சொன்னது உண்மையாக இருக்கும்பட்சத்தில் உங்களைப் பற்றிய விஷயங்களைவிட அவர் குறித்த விஷயங்களை  நீங்கள் அதிகம் அறிந்துவைத்திருக்கவேண்டும். அவரின் பிறந்த நாள் தொடங்கி அனைத்து விவரங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என விரும்புவார். அதை சரியான நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார். "தெருவில் விற்றுக்கொண்டு போனது. உனக்குப் பிடிக்கும்னு வாங்கிட்டு வந்தேன்" என்பது, எழுதும்போது சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், அதுதான் அவருக்கு 'க்ளவுட் 9'.

நம்பர் 4:

 

இடைவெளி. உங்கள் காதலி மீதான அக்கறை எப்படி உங்கள் காதலுக்கு ஆக்ஸிஜனோ, அதேபோல் உங்களுக்குள் போதுமான இடைவெளி இருப்பதையும் அவர் விரும்புவார். இருவரும் இருக்கிறீர்கள் அப்போது ஒரு கால் வருகிறது. அவர் பேசி முடித்தவுடனே க்யூரியாசிட்டி உந்தித்தள்ள "போனில் யார்?" என்று கேட்பது உங்கள் காதலிக்கு சர்வநிச்சயமாகக் கோபம் வரவழைக்கும் கேள்வி. உங்களிடம் சொல்லவேண்டியதாக இருந்தால் அவரே சொல்வார். அந்த இடைவெளியை அவருக்கு வழங்காமல் 'யார்... என்ன?' என்பது போன்ற கேள்விகளை நீங்கள் எழுப்பினால், அதுதான் உங்கள் காதலுக்கு நீங்களே வைக்கும் டைம்பாம். உங்கள் மொபைலின் பேட்டன் லாக் முதல் மெயில் பாஸ்வேர்டு வரை காதலிக்குத் தெரிந்திருந்தாலும், அவருக்கான ஸ்பேஸை நீங்கள் கொடுத்தே ஆகவேண்டும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘ஆன்மாவைக் கௌரவிப்போமாக’
 

image_5b0f994a19.jpgதங்களுக்கு வேண்டப்பட்டவர்களைக் கண்டால் மட்டுமே, முகம் மலரப் புன்முறுவல் செய்வதே பலரதும் குணாம்சமாகும். மற்றப்படி எவரையும் கண்டு கொள்வதேயில்லை. 

ஆனால், எவரைப் பார்த்தவுடன் முகம் மலர, புன்முறுவல் பூப்பதும் தங்கள் கைகளை அசைப்பதும் குழந்தைகளின் இயல்பாகும். நட்புப் பூணுவதில் இவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 

மேலை நாட்டவர்களில், முகம் தெரியாத நபர்களைக் கண்டாலும், வந்தனம் செய்வது அந்நாட்டவர்களின் பரந்த மனதின் உயர் வெளிப்பாடாகும்.ஒருவரை ஒருவர் கண்டு கொண்டால் அவர்களின் ஆன்மாவைக் கௌரவிப்போமாக. 

முறுவல் செய்தால் என்ன குறைந்துவிட்டது.பேதம்பார்க்கும் குணம் இதனால் அற்றுப் போய்விடும்.அன்பின் வெளிப்பாடு புன்முறுவல்தான்.      

  • தொடங்கியவர்

#சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்: புகைப்பழக்கத்தில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா?

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் அடிப்படையில், புகைப்பழக்கத்தில் சீனா முதலிடத்தில் உள்ளது.

புகை

 உலகம் முழுவதிலும் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அநேக மக்களின் மரணங்களுக்கு புகைப்பழக்கம் ஒரு காரணியாக இருப்பதாக, மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் கூறிவருகின்றனர். இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் (WHO), புகைப்பழக்கம் அதிகம்கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.  மே 31ஆம் தேதி, உலக புகையிலை தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு இந்த ஆய்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன் அடிப்படையில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவில் தனி நபர், ஒரு வருடத்தில் 4,124 சிகரெட்டுகளைப் புகைப்பது தெரியவந்துள்ளது. பெலாரஸ் 2-வது இடத்திலும் லெபனான் 3-வது இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில், இந்தியா 159-வது இடத்தில் உள்ளது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

31.05.1981: யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட தினம் இன்று! 

 

 
Jaffna_Library

 

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி நள்ளிரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் நடத்தப்பட்டது.

இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.

இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் அப்போதைய இலங்கை அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, அவர்களது தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.    

http://www.dinamani.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.