Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வலைபாயுதே

twitter.com/Aruns212 
 கம்ப்யூட்டரில்  New folder என்ற பெயரில் எத்தனை ஃபோல்டர்கள் இருக்கின்றனவோ, அத்தனையும் நம் சோம்பேறித்தனத்திற்கான சான்றுகள்.

twitter.com/nilakumaran29
 இந்த டக்வொர்த் லூயிஸும்- வீட்டம்மாவும் ஒண்ணு தான். எப்படிக் கணக்குப் போடுறாங்கன்னு கடைசி வரைக்கும் நமக்குப் புரியவே புரியாது.

p114a.jpg

twitter.com/thirumarant 
இன்று சீமான் தமிழுணர்வை வெச்சி வியாபாரம் பண்ண நினைக் கிறார்னா, அந்தத் தமிழுணர்வுக்கு முக்கிய காரணமே கருணாநிதி, அவர் வசனங்கள், மேடைப் பேச்சு தான்...

facebook.com/Araathu R
எங்கு பார்த்தாலும் பொருளாதார மந்தநிலை அப்பட்டமாகத் தெரிகிறது. டாய்லெட்டில் ஏ.சி போட்டிருந்த நிறுவனங்களில் எல்லாம் ரிசப்ஷனில்கூட ஏ.சி ஓடுவதில்லை இப்போது. மால் களில் மக்கள் வெறுமையுடன் எங்கோ போகிறார்கள். இந்த சென்செக்ஸ் மட்டும் எப்படி வீழாமல் நிற்கிறது? மெனக்கெட்டு தாங்கிப் பிடித்துக்கொண்டு இருக்கிறார்களா? தங்கள் தேவை முடிந்ததும் கை கழுவி விடுவார்களா? தற்போதைய நிலைமைக்கு 20,000-க்கும் கீழே செல்ல வேண்டும்.

twitter.com/urs_patturosa
மிகச்சிறந்த வாழ்க்கை என்பது சுக பிரசவத்தில் ஆரம்பித்து இயற்கை மரணத்தில் முடிகிறது.

twitter.com/Kozhiyaar
 பயணங்களில் என்னைத் தூங்காமல் வைத்திருப்பதும், படுக்கையில் என்னைத் தூங்க வைப்பதும் ராஜாவின் இசையே!!

twitter.com/palanikannan04 
வழக்கம்போல அந்த ஊசிப்போன பட்டாசு பாக்ஸை மறுபடியும் விட்டத்துல போட்ருப்பானுவ. பாகிஸ்தானின் கனவு மறுபடியும் கனவாகவே போச்சி.

p114b.jpg

twitter.com/manipmp
ஞாயிற்றுக்கிழமை தவிர எல்லா நாளும் ஒரே மாதிரிதான் இருக்கு. நாள்களின் பெயர்தான் வேறு.

twitter.com/iammuthalib
 மூடிய இமைகள் கர்ப்பம் தரித்த குறு வயிறு!

twitter.com/sudhansts 
 கடவுளிடம் என் வறுமை நிலையைப் புரியவைக்கவே சிறப்பு தரிசனம் வழிபாட்டைத் தவிர்த்து வருகிறேன்.

twitter.com/introvert_offl 
 உனக்காகவே வாழ்வேன் என்று வாக்குக்கொடுக்கிறது காதல், எனக்காக வாழவேண்டும் என்ற ஏக்கத்தைத் தருகிறது திருமணம்.

p114c.jpg

twitter.com/manipmp 
 வாக்கிங் போக பழகிக்கொள்வது கடினமாகவும், நிறுத்திக்கொள்வது எளிதாகவும் இருக்கின்றது.

twitter.com/LordZha 
சீமான் பேட்டிகள்ல கவனிச்சா, ஓட்டு வாங்கி ஆட்சியமைக்கிற ஐடியாவே இருக்காது. ஒப்படைச்சிடுங்க, எங்ககிட்ட குடுத்துடுங்கன்னேதான் சொல்லிட்டிருப்பார்.

twitter.com/seenuramasamy
 ஜீரண சக்தியே உண்ணும் உணவைத் தீர்மானிக்கிறது. அரசோ, மதமோ,மொழியோ இனமோ அல்ல, பட்டினிதான் உலகின் முதல் மனிதவதை.

twitter.com/twittornewton
 தொப்பை இல்லாத ஜிம் ட்ரெயினரை விட  தொப்பை இல்லாத புரோட்டா மாஸ்டர் ஆச்சரியம் அளிக்கிறார்.

twitter.com/CreativeTwitz 
 இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் நடந்தா, மழை வருது, நாம ஏன் விவசாயத்தை செழிக்க வைக்க தினமும் மேட்ச் நடத்தக் கூடாது?

செல்லூர் சிந்தனைகள்

p114d.jpg

twitter.com/Baashhu
 பாகிஸ்தான் கேர்ள்ஸ் பக்கம் அடிக்கடி கேமராவைத் திருப்பி நம் நாட்டுப்பற்றைக் குறைக்கும் முயற்சிகள் நடக்கலாம். போர் ஆமா போர்ர்ர்ர்!

twitter.com/ThePayon
 ஆயிரம் எருமைகள் மொட்டை மாடியில் ஓடுவதுபோல் இடியின் சத்தம்.


ட்ரெண்டிங்

சூப்பர் ஹீரோக்கள் படங்கள் ஏராளம் பார்த்திருக்கிறோம். சூப்பர் ஹீரோயின்? ஹாலிவுட்டோ... பாலிவுட்டோ... கோலிவுட்டோ... அநியாயத்தை தட்டிக் கேட்க ஒரு வேலாயுதம்தான் வருவான். வேலம்மாக்கள் வந்ததில்லை. அந்தக் குறையை போக்க வந்தவள்தான் `வொண்டர் வுமன்’. அதிகம் அறியப்படாத பெண் இயக்குநர். அடையாளம் தெரியாத ஹீரோயின் எனப் பட வெளியீட்டுக்கு முன் இருந்த விஷயங்களை ஒரே இரவில் உடைத்திருக்கிறாள் வொண்டர் வுமன்.  சென்னை முதல் சான் ஃபிரான்ஸிஸ்கோ வரை பாக்ஸ் ஆபீஸில் பாம் வெடிக்கிறது. ட்விட்டர், ஃபேஸ்புக் என எந்தப் பக்கம் போனாலும் ஹீரோயின் கேல் கடோட் (Gal gadot) பற்றித்தான் பேச்சு. படப்பிடிப்பின்போது கேல் ஐந்து மாதம் கர்ப்பமாம். கிராஃபிக்ஸில் அதை மறைத்திருக்கிறார்கள். குழந்தையையும் படத்தையும் சுமந்து குறையின்றி டெலிவரி செய்திருக்கிறார் இந்த இஸ்ரேல் அழகி. உண்மையாகவே, வொண்டர் வுமன்!

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

டொனால்ட் டிரம்பை விட சிறப்பாக செயற்படுவேன் என்கிறது ரோபோ சோபியா (Video)

டொனால்ட் டிரம்பை விட சிறப்பாக செயற்படுவேன் என்கிறது ரோபோ சோபியா (Video)

ஜெனிவாவில் மனிதனைப்போன்ற உருவமுள்ள ரோபோ ஒன்று விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சோபியா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ரோபோ, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை விட தான் சிறப்பாக செயற்படுவேன் என சவால் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிரிக்கும் ஆற்றல் கொண்ட இந்த ரோபோவின் கண்கள் மிகவும் கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ரோபோ 60 வகையான முகபாவனைகளை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

இந்த ரோபோவிற்கு மிகவும் மேம்பட்ட செயற்கை நுண்திறன் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கை நுண்திறன் காரணமாக ரோபோவினால் மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என கூறப்பட்டுள்ளது.

Hanson Robotics இன் நிறுவனரும் டிஸ்னியில் பணியாற்றியவருமான இந்த ரோபோவை உருவாக்கியுள்ளார்.

உயிரிழந்த முன்னாள் ஹொலிவுட் நடிகையான Audrey Hepburn ஐப் போன்ற தோற்றத்தில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

2

3

5

6

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

பிளாஸ்டிக் மீது போர் தொடுக்கும் ஆசிய நாடுகள்

திரும்பிய பக்கமெல்லாம் பிளாஸ்டிக். ஆழ்கடலின் அடியிலும் பிளாஸ்டிக் கழிவுகள்.

ஆசியாவின் வாடிக்கையாளர் சார்ந்த பொருளாதார வளர்ச்சியால் பிளாஸ்டிக் உற்பத்தி ஆசிய நாடுகளில் பலமடங்கு அதிகரித்தது.

ஆனால் தற்போது அரசுகளும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட மற்றவர்களும் பிளாஸ்டிக்கால் கடலில் ஏற்படும் மோசமான மாசை குறைப்பதற்கான பெரும் முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.

தமது மாசுகளை அகற்றும் நடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக சில ஆசிய நாடுகள் ஐநாவிடம் உறுதி அளித்துள்ளதாக ஐநா சுற்றுச்சூழல் இயக்குநர் எரிக் சோல்ஹெய்ம் தெரிவித்தார்.

குப்பைகளை கையாளும் தனது வழிமுறைகளை மேம்படுத்தப்போவதாக சீனா கூறியுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் திட்டம் ஒன்றை தாய்லாந்து கொண்டுவருகிறது.

இந்தோனேஷிய அரசு பிளாஸ்டிக் கழிவுகளை கையாள்வது குறித்து குழந்தைகளுக்கு கற்பிக்கிறது.

இவையெல்லாம் முன்னேற்றம் தான் என்றாலும் இவை போதுமானதல்ல என்கிறது கிரீன்பீஸ் அமைப்பு.

  • தொடங்கியவர்
‘அனுபவ ஞானம் வாழும் முறையைக் கற்றுத்தரும்’
 

image_9127e6ef51.jpgஅறிவையும் உணர்வையும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப, பயன்படுத்துதல் வேண்டும். திருமண வீடொன்றுக்குச் செல்கின்றீர்கள். அங்கு நீங்கள் எல்லோரையும் போல, மகிழ்ச்சியுடன் கலந்துபேசிக் கொண்டாட வேண்டும். இதைவிடுத்து, மூளையை வேறு திசையில் திருப்பி, தேவையற்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடக்கூடாது. 

மரணச் சடங்குக்குச் சென்றால், அங்குள்ள உறவினர்களுடன் உணர்வுபூர்வமாகத் துயரத்தைப் பகர்ந்து கொள்ள வேண்டும்.  

எங்கள் அறிவைச் செய் தொழிலில் மட்டுமல்ல, பிறருக்கு ஆலோசனை வழங்குதல், நூல்களைப் படித்தல் எனப் பலவழிகளில் பயன்படுத்த வேண்டும்.   

மனிதர்கள் மீதும், உயிர்கள் மீதும் அன்பு செலுத்துதலுக்குக் கல்வி அறிவைப் பாவிக்க வேண்டியதில்லை. இவை இயல்பாக வரும் உணர்வுகள்.  

ஆனால் சில சமயங்களில் அறிவையும் உணர்வையும் இணைத்தும் பயன்படுத்த வேண்டும். அனுபவ ஞானம் வாழும் முறையைக் கற்றுத்தரும். 

  • தொடங்கியவர்

"கணவன் மனைவி விவாகரத்து வழக்கு"

நீதிபதி : "உங்க மனைவியை விவாரத்து செய்ய காரணம் என்ன?"

அப்பாவி கணவர்: "அய்யா! நான்
ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கேன். நீங்களும் வெந்த புண்ணில் வேல பாய்ச்சாதீங்க. எந்த கேள்வியா இருந்தாலும் முதலில் வக்கீலை என் மனைவியிடம் கேக்க சொல்லுங்க.அப்பரம் நீங்களே விவாகரத்துக்கான காரணத்த புருஞ்சுப்பீங்க.

சரி என்று நீதிபதி கூற,அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை அந்த பெண்ணிடம் ஆரம்பித்தார்.

வக்கீல் : அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?

பெண் : அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க.

வக்கீல் : அது இல்ல மேடம், உங்களுக்கிடையில் என்ன தகராறு?"

பெண் : எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?

வக்கீல் : அடடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது.

பெண் : தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்.

வக்கீல் : உங்கள் கணவர் மீது கருத்து வேறுபாடு ஏதாவது இருக்கா?

பெண் : அவரு கருப்புதாங்க.நானும் கறுப்புதான்.அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க.

வக்கீல் : உங்க வீட்டுக்காரரோட என்ன சண்டை?

பெண் : வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை? மாசம் ஒன்னாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கு போயிடறாரு.

வக்கீல் : (கோபத்துடன்) இதோ பாருமா,உனக்கு விவாகரத்து வேணுமா?

பெண் : அய்யோ வேணாங்க.எங்கிட்ட ஏற்கனவே மூனு "விவாஹா பட்டு" இருக்குங்க.நீங்க வேற வாங்கி தந்தா என் கணவர் சந்தேக படுவாருங்க.

இதற்கு மேல் வக்கீலால் தாங்க முடியவில்லை. (மிகவும் சத்தமாக கோவத்துடன்) “உங்க வீட்டுக்காரர் எதுக்காக விவாகரத்து கேட்கிறார்?"

பெண் : ஓ..அதுவா? என்னோட பேசறப்ப எல்லாம் மாரடைப்பு வந்துடுதாம்.நீங்க இப்ப எங்கூட நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க.உங்களுக்கென்ன மாரடைப்பா வந்திரிச்சு? இதுக்கு போயி விவாகரத்து கேக்குறாருங்க.

கடைசியில் அந்த வக்கீல் நெஞ்சில் கை வைத்தபடி மாரடைப்பால் கீழே விழுந்தார்.

Bild könnte enthalten: 2 Personen, Personen, die lachen, Text
  • தொடங்கியவர்

உலகின் விளிம்பில் இருக்கும் ஒற்றை மாணவர் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் தேடும் ஸ்காட்லாந்து

 

உலகின் விளிம்பில் இருப்பதாக விவரிக்கப்படும் ஸ்காட்லாந்து தீவான ஃபௌலாவில் இருக்கும் ஒரே ஒரு மாணவன் படிக்கும் பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியர் தேவையாம் !

ஃபௌலா துவக்கப்பள்ளிபடத்தின் காப்புரிமைKATE HOPPER / FOULA PRIMARY

ஷெட்லாந்திலுள்ள ஃபௌலா துவக்கப்பள்ளியில் மூன்றரை ஆண்டுகள் இந்த பொறுப்பில் வேலைசெய்த பின்னர் ஆசிரியர் ஜேன் ஸ்மித் வேலையை விட்டு செல்ல இருப்பதால் புதிய ஆசிரியரை தேர்வு செய்ய முயற்சிகள் நடைபெறுகின்றன.

இந்த பணிக்கு ஆண்டுக்கு 49,133 பவுண்டு ( சுமார் 40 லட்சம் இந்திய ரூபாய்கள்) ஊதியம் என்றும், மூன்று படுக்கையறை விடுதி வாடகைக்கு உள்ளது என்றும் விளம்பரம் கொடுக்கப்படுகிறது.

இதற்கு விண்ணப்பம் அனுப்ப வியாழக்கிழமை கடைசி நாளாகும். தென் ஆப்ரிக்கா மற்றும் அஜர்பைஜான் போன்ற தொலைவான நாடுகளில் இருந்தும் இந்த பணிக்கு ஆர்வம் காட்டப்படுகிறது.

ஷெட்லாந்து பெருநிலப்பகுதியின் மேற்கில் இருந்து, 20 மைல் தொலைவில் ஃபௌலா உள்ளது. ஐக்கிய ராஜ்ஜியத்தில் மிக தொலைவில் மக்கள் வாழும் தீவுகளில் ஒன்று பௌலாவாகும்.

 

இங்கு மொத்தம் 32 பேர்தான் வசிக்கின்றனர். 'த எட்ஜ் ஆப் த வேல்டு' ( உலகின் விளிம்பு) என்ற 1937 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மைக்கேல் பவலின் திரைப்படம் இங்குதான் எடுக்கப்பட்டது.

இந்த பள்ளியில் இரண்டு மாணவர்கள் உள்ளனர். ஆனால், நடப்பு கல்வி பருவக்காலம் முடிந்த பின்னர் ஒரு மாணவர் லிர்விக்கிலுள்ள உயர்நிலை பள்ளிக்கு சென்று விடுவார்.

இது பற்றி 38 வயதான ஸ்மித் பிபிசி வானொலியில் ஒலிபரப்பாகும் "குட்மானிங் ஸ்காட்லாந்து" நிகழ்ச்சியில் பேசுகையில், "ஃபௌலாவில் கழித்த நாட்களை மிகவும் விரும்புவதாகவும், அவை ஆச்சரியமானவைகளாக இருந்தன" என்று தெரிவித்தார்.

"நான் வேலை செய்த பெரும்பாலான நேரங்களில் ஒரேயொரு மாணவரே இருந்தார்" என்று அவர் கூறியுள்ளார்.

ஆசிரியர் ஜேனி ஸ்மித்படத்தின் காப்புரிமைSAM RATTER Image captionவேலையில் இருந்து செல்ல இருக்கும் ஆசிரியர் ஜேனி ஸ்மித்

"அந்த மாணவர் துவக்கப்பள்ளியில் மேல் நிலையில் இருந்ததால், நாங்கள் ஃபெர் இஸ்லிக்கு சென்று பார்க்கவும், பெருநிலப்பகுதியில் பல பயணங்களை மேற்கொள்ளவும் முடிந்தது. இது அருமையாக இருந்தது" என்று அவர் குறிப்பிட்டார்.

சரியான சாலைகளை இழந்த உணர்வு

அக்டோபர் மாதத்தில் இந்த வேலையில் இருந்து விலகுகின்ற தன்னுடைய முடிவை பற்றி கூறுகையில், "இந்த பணிக்கு வந்த தொடக்கத்தில் இரண்டு ஆண்டுகளே இந்த பணியை செய்ய போவதாக வந்தேன். இது என்னுடைய சுய விபரக் குறிப்பில் சிறப்பானதாக இருக்கும் என்று எண்ணினேன். பின்னர் நானாகவே இங்கிருந்து வேலைசெய்வதை தொடர்ந்தேன்" என்று அவர் குறிப்பிடுகிறார்.

"இப்போது பெருநிலப்பகுதிக்குள் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணர்கின்றேன். சாலைகள், சரியான சாலைகள், 5வது கியரில் காரை ஓட்டுவது போன்ற சிறிய விடயங்களை இழந்திருப்பதாக உணர்கிறேன். ஃபௌலாவில் இவற்றை இரண்டாவதாக நீங்கள் எண்ணினால், மிக நன்றாகவே செயல்படுகிறீர்கள்" என்கிறார் ஸ்மித்.

இந்த பணியிடத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார் என்று குறிப்பிடும்போது, "நேர்மையாக கூற வேண்டுமென்றால், இந்த பணி ஒரு சிறிய விஷயம்தான். சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்பவராக, தனிமையான இடத்தில் வாழக்கூடியவராக இருக்க வேண்டும்” என்று பணியைவிட்டு செல்லும் இந்த ஆசிரியர் கூறுகிறார்.

 

"பெருநிலப்பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டவராக நாம் இருக்கலாம். படகோ, விமானமோ இல்லாமல் மூன்று வார காலம் இருந்ததுதான், நான் பெருநிலப்பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டு இருந்த அதிக காலம் என்று கருதுகிறேன்" என்று அவர் நினைவுகூர்கிறார்.

"இத்தகைய சூழ்நிலையை தாக்குப்பிடித்து வாழ்பவராக இருக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

புதிய கருத்துக்களோடு, ஆர்வமாக வருகின்ற சிறந்த ஒருவரை, ஃபௌலாவில் வாழப்போவதை விரும்புகின்ற ஒருவரை நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று அவர் கூறுகிறார்.

ஃபௌலாவில் இருந்து பெருநிலப்பகுதி செல்வதற்கு விமானப் பயணநேரம் 15 நிமிடங்கள், படகு பயணம் இரண்டரை மணி நேரமாகும்.

அனுபவமும் தகுதியும், தனிமையில் இனிமை காணும் மனோநிலையும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் !

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கொரில்லா உலகம்!

 
gorilla_1_3172218g_3172302f.jpg
 
 
 

பார்ப்பதற்கு மனிதர்களைப் போலவே இருக்கும் விலங்கு கொரில்லா. மனிதர்களின் மூதாதையர் குரங்குகள் என்று படிக்கும்போதெல்லாம் கொரில்லாக்கள் நம் கண் முன்னே வந்து நிற்கும். அப்படிப்பட்ட கொரில்லாக்கள் பற்றிய சுவையான தகவல்களைப் பார்ப்போமா?

# நன்கு வளர்ந்த கொரில்லாக்கள் சராசரியாக 6 அடி உயரமும் 150 கிலோ எடையும் இருக்கும்.

# கொரில்லாக்கள் இரண்டு கைகளையும் விரித்தால் சுமார் 8 அடி வரை நீளும்.

# கொரில்லாக்களின் கால்களைவிட கைகள் மிக நீளமானவை.

# கொரில்லாக்களால் மனிதர்களைப் போலவே கைகளை ஊன்றாமல் நடக்க முடியும். ஆனால், அவை அவ்வாறு நடக்க விரும்புவதில்லை.

# கொரில்லாக்களுக்குக் கோபம் வந்தால் கைகளைத் தூக்கி நெஞ்சில் அடித்துக்கொண்டு சத்தமிடும்.

# கொரில்லாக்கள் சராசரியாக 50 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

# கொரில்லாக்கள் உடல் அசைவுகள், சத்தத்தின் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும்.

gorilla_2_3172219g_3172301a.jpg

# கொரில்லாக்கள் மனிதர்களைப் போலச் சிரிக்கவும் செய்யும். சத்தம் போட்டு அழும். ஆனால், அழும்போது கண்ணீர் வராது.

# கொரில்லாக்கள் மதியம், இரவில் சில மணி நேரம் தூங்கும் பண்புடையவை. தூங்குவதற்கு வசதியாகச் சிறிய மரங்களில் படுக்கைகளைத் தயார் செய்துகொள்ளும். படுக்கைகள் மெத்தை போன்று இருக்கும்.

# கொரிலாக்கள் கிழங்கு, பழம், இலை, தழை, எறும்பு, கரையான் போன்றவற்றை விரும்பிச் சாப்பிடும்.

# கூட்டமாகவே வாழும் இயல்புடையவை கொரில்லாக்கள். இளம் வயது கொரில்லாக்களுக்கு உணவு சேகரிக்கும் முறை, குட்டிகளைப் பராமரித்தல், தங்கும் வீடு கட்டும் முறை போன்றவற்றை மூத்த கொரில்லாக்கள் கற்றுக் கொடுக்கும்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

அதிசய வாழைமரம்

அதிசய வாழைமரம்
  •  

புத்தளத்தம் – மதுரன்குளிய பிரதேசத்தில் அபூர்வ வாழைமரம் ஒன்று வளர்ந்துள்ளது.

குறித்த அதிசய வாழை மரத்தில் வாழைப்பொத்தி இன்றி வாழைச்சீப்பு வளர்ந்துள்ளதாக வீட்டுத் தோட்ட உரிமையாளர் தெரிவித்துள்ளார்

இந்த வாழை மரத்தின் கன்று நட்டப்பட்டு 10 மாத காலப்பகுதியில் வாழை மரம் வளர்ந்துள்ள நிலையில் வாழைப்பொத்தி இன்றி வாழை சீப்பு வளர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

vvvv.jpg

uthayan

  • தொடங்கியவர்
 

முத்தத்தின் விலை ரூ.20 ஆயிரம்!

 

காதலில் உருகி அன்பில் கனிந்து ராக்கெட் வேகத்தில் பெண்ணின் கன்னத்தில் இதம் சேர்க்கும் முத்தத்திற்கு விலை சொல்ல முடியுமா? அன்பால் விளைந்திருந்தால் பதிலுக்கு அதே வேகத்தில் ரிடர்ன் ஆக சான்ஸ் உண்டு. வலுக்கட்டாயமாக நிகழ்ந்தால்..? அபராதம்தான். பீகாரின் பெகுசராய் மாவட்டத்திலுள்ள இப்ராகிம்பூர் கிராமம்தான் சம்பவம் நடந்த இடம். தெருவில் அந்த இளம் பெண் நடந்துவந்த போதுதான் நிகழ்ந்தது அந்த விபரீதம்.
5.jpg
எதிரே நடந்து வந்த முகமது இர்ஷத் என்ற வாலிபர், மின்னல் வேகத்தில் அவர் கன்னத்தில் இரண்டு முறை முத்தம் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார். ஷாக்கான அந்தப்பெண் உடனே தன் பெற்றோரிடம் சொல்ல, உடனே ஊர்கூடியது. பஞ்சாயத்தில் முகமதுவுக்கு ரூ.20 ஆயிரம் ஃபைன் விதிக்கப்பட்டது.

தேவசேனையாக கர்ஜித்த இளம்பெண், ஊரறிய முகமது முத்தம் கொடுத்துவிட்டு ஃபைன் கட்டிவிட்டால் சரியாபோச்சா? எனக்கு மேரேஜ் எப்படி ஆகும்? என கண்ணைக் கசக்கியபடி போலீசில் புகார் கொடுத்துவிட்டார். முத்தத்திற்கு விலையாக பணமா? கல்யாணமா என டாஸ் போட்டு பார்த்துக் கொண்டிருக்கிறார் முத்த வாலிபர்!   

www.kungumam.co

  • தொடங்கியவர்

விந்தணு அல்லது கரு முட்டை கொடை அளிப்பவர்கள், வாடகைத் தாய் அல்லது காதலர்கள் போன்றோரை க் கண்டுபிடிக்க உதவும் செயலி

  • தொடங்கியவர்

விபத்தில் சிக்கிய பாலஸ்தீன குழந்தைக்கு பாலூட்டிய யூதப்பெண்

 


விபத்தில் சிக்கிய பாலஸ்தீன குழந்தைக்கு பாலூட்டிய யூதப்பெண்
 

விபத்திற்குள்ளான பாலஸ்தீனப் பெண்ணின் கைக்குழந்தைக்கு யூதப்பெண் ஒருவர் பாலூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கைக்குழந்தையுடன் உள்ள அந்தப் பெண்ணுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இஸ்ரேல் நாட்டில் உள்ள இன் கரீம் என்னும் பகுதியில் பாலஸ்தீன பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் சென்ற கார் விபத்திற்குள்ளானது.

விபத்தில் அந்த பெண் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அவரின் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர்களின் பச்சிளங் குழந்தை சிறிய காயங்களுடன் உயிர் தப்பியது.

படுகாயமடைந்த பாலஸ்தீனப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் குழந்தையை அந்த மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனிடையே பசி தாங்க முடியாமல் அக்குழந்தை அழத் தொடங்கிவிட்டது. குழந்தையின் தாய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், அவரால் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை. இதனால் பசியில் துடிக்கும் குழந்தைக்கு செவிலி போத்தலில் பால் கொடுக்க முயன்றுள்ளார்.

ஆனால், அதைக் குழந்தை குடிக்க மறுத்துவிட்டதால், அவரே அந்த குழந்தைக்குப் பாலூட்டியுள்ளார்.

நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் இந்தக் காட்சியைப் பார்த்த குழந்தையின் உறவினர்கள் கண்கலங்கி குறித்த செவிலிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் யூத இனத்தவரான உலா என்ற பெயருடைய அந்த செவிலி, பாலஸ்தீன பெண்ணின் குழந்தைக்குப் பாலூட்டிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

21-ம் நூற்றாண்டின் விதானம்

 

  • 08jkr_Smithsonian__3173365g.jpg
     
  • விதானம் மாற்றப்படவுள்ள கலைக்கூடத்தின் உட்பகுதி
    விதானம் மாற்றப்படவுள்ள கலைக்கூடத்தின் உட்பகுதி
  • ரென்விக் கலைக்கூடம்
    ரென்விக் கலைக்கூடம்
  • 08jkr_renwick_2_3173368g.jpg
     
 

அமெரிக்காவில் வாஷிங்டன் நகரத்திலுள்ள பிரபலமான அருங்காட்சியகம் ஸ்மித்சோனியன் கலை அருங்காட்சியகம். அமெரிக்காவின் மிகப் பழமையான அருங்காட்சியகமான இது ரென்விக் என்னும் கலைக்கூடத்தையும் கொண்டுள்ளது. இந்தக் கலைக்கூடத்தின் விதானத்தை மாற்றியமைக்க அதன் நிர்வாகம் திட்டமிடப்பட்டது.

ஐரோப்பியத் தேவாலயங்கள் இம்மாதிரியான விதான வடிவமைப்புக்குப் பெயர்போனவை. வாடிகன் நகரில் சிஸ்டின் சேப்பல் என்னும் போப்பின் இல்லத்தின் விதான வடிவமைப்பு உலகப் புகழ்பெற்றது. வட்ட வடிவத்தில் குவிந்த விதானங்கள், சதுர விதானங்கள் எனப் பல வகை உள்ளன. சிஸ்டின் சேப்பல் குவிந்த விதானம் கொண்டது. இந்த விதானம் முழுவதிலும் இத்தாலிய ஓவியரான மைக்கெல் ஏஞ்சலோ தன் ஓவியங்களால் அழகுபடுத்தியுள்ளார். பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்கும் இந்த நூற்றாண்டில் அதுபோலொரு விதான வடிவமைப்பு சாத்தியம் இல்லாத ஒன்றாகவே உள்ளது. இருந்தும் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கும் பழமையான விதான வடிவமைப்புகளை முன் மாதிரியாகக் கொண்டு ரென்விக் கலைக்கூடத்தின் விதானத்தை வடிவமைக்க முயன்றிருக்கிறார்கள்.

Last_Page_bottom___3173372a.jpg

08jkr_renwick1_3173371a.jpg

08jkr_renwick_3173367a.jpg

ரென்விக் கலைக்கூடத்தின் விதானத்தை வடிவமைக்க ஒரு திறந்த போட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி பல்வேறு கட்டுமான வடிவமைப்பு நிறுவனங்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டன. கலந்துகொண்டவற்றுள் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த ஃப்ரீபேண்பக் என்னும் நிறுவனம் தற்காலிக விதான வடிவமைப்பை உருவாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சான்பிராசிஸ்கோவிலுள்ள பேலஸ் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், பிரின்ஸ்டன் பல்கலைக்கழக நூலகக் கட்டிடம், சின்சினட்டி யூனியன் டெர்மினல், நியூயார்க் நகர ஃபெடரல் ஹால் உள்ளிட்ட ஒன்பது கட்டிடங்களில் உள்ள விதானத்தை முன் மாதிரியாகக் கொண்டு ரென்விக் கூடத்துக்கான விதானத்தை மாதிரியை உருவாக்கியிருக்கிறார்கள் ஃப்ரீபேண்பக் கட்டுமான நிறுவனத்தினர். நானூறு நூற்றாண்டுக்கு முன்பான விதான அமைப்பை 21-ம் நூற்றாண்டின் தொழில்நுட்பத்தைக் கொண்டு மீண்டும் உருவாக்கவிருக்கிறோம் என ஃப்ரீபேண்பக் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

புதிய கிரகத்துக்கு பெங்களூரு மாணவி பெயர்: அமெரிக்க ஆய்வக அறிவிப்பால் குவியும் பாராட்டு

 
சாஹிதி பிங்காலி
சாஹிதி பிங்காலி
 
 

பால்வெளி மண்டலத்தில் கண்டறியப்படும் புதிய கிரகத்துக்கு, சர்வதேச அறிவியல் போட்டியில் வென்ற பெங்களூரு மாணவியின் பெயர் சூட்டப்படும் என அமெரிக்க ஆய்வகம் தெரிவித்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்த சாஹிதி பிங்காலி அங்குள்ள இன்வென்ட்சர் அகாடெமியில் பியூசி 2-ம் ஆண்டு (12-ம் வகுப்பு) படித்து வருகிறார். அறிவியல் துறையில் ஆர்வம் மிகுந்த சாஹிதி, தேசிய, சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விருதுகளை குவித்துள்ளார். சமீபத்தில் அமெரிக்காவின் மாசசூசட்ஸ் லிங்கன் ஆய்வகம் நடத்திய சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்பு போட்டியில் பங்கேற்றார்.

உலகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் மிகப்பெரும் அறிவியல் போட்டியான இதில், சாஹிதி சமர்ப்பித்த கட்டுரை ஆய்வாளர்களால் முதல் மூன்று இடங்களுக்குள் தேர்வு செய்யப் பட்டுள்ளது. உலகமெங்கும் மாசடைந்து வரும் நீர் நிலைகளை தூய்மையாக பாதுகாப்பது தொடர்பான நவீன முறையை சாஹிதி கண்டறித்துள்ளார். இதன் மூலம் ஆறு, ஏரி, குளங்களில் உள்ள நீரின் தூய்மை தரத்தை செல்போன் ஆப் மூலமாக கண்காணிக்க முடியும்.

பெங்களூருவில் மாசடைந் துள்ள வர்தூர் ஏரியை சோதித்து, அதைத் தூய்மைப்படுத்துவது தொடர்பாக சாஹிதி ஆய்வு செய்துள்ளார். இந்த கண்டு பிடிப்பை ஏற்றுக்கொண்ட மாசசூசட்ஸ் லிங்கன் ஆய்வகம், பால் வெளி மண்டலத்தில் அடையாளப்படுத்தப்படும் சிறிய கிரகத்துக்கு சாஹிதி பிங்காலியின் பெயரை சூட்டப் போவதாக அறிவித்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள அவரது குடும்பத்தாரும், பள்ளி நிர்வாகமும் சாஹிதிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இதேபோல ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட‌ சமூக வலைத் தளங்களிலும் சாஹிதியின் சாதனைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

குட்டி பிரபஞ்ச அழகியாக ஒடிசா சிறுமி தேர்வு

 

ஜார்ஜியா நாட்டின் பதுமி நகரில் நடைபெற்ற போட்டியில், குட்டி பிரபஞ்ச அழகியாக (லிட்டில் மிஸ் யுனிவர்ஸ்) பத்மாலயா நந்தா தேர்வாகி, சரித்திரம் படைத்து இருக்கிறாள்.

 
 
குட்டி பிரபஞ்ச அழகியாக ஒடிசா சிறுமி தேர்வு
 
புதுடெல்லி:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுமி பத்மாலயா நந்தா. இவள், கட்டாக் நகரில் ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள், ஜார்ஜியா நாட்டின் பதுமி நகரில் நடைபெற்ற போட்டியில், குட்டி பிரபஞ்ச அழகியாக (லிட்டில் மிஸ் யுனிவர்ஸ்) தேர்வாகி, சரித்திரம் படைத்து இருக்கிறாள். இந்த போட்டியில், இந்திய சிறுமி ஒருவர், பட்டம் வெல்வது இதுவே முதல்முறை ஆகும்.

இந்த போட்டியின் முதல் சுற்று, ஆன்லைனில் நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததில், 75 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 10 பேர் இறுதி செய்யப்பட்டு, போட்டிக்கு அழைக்கப்பட்டனர்.

ஒவ்வொருவரும் பல சுற்று போட்டிகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த போட்டிக்கு நடுவர்களே கிடையாது. பார்வையாளர்கள் ஆன்லைன் மூலம் ஓட்டுபோட்டு வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.

அந்த அடிப்படையில், பத்மாலயா நந்தா, குட்டி பிரபஞ்ச அழகி ஆனாள். அவளுக்கு தங்க கிரீடம் சூட்டப்பட்டது. அடுத்த ஆண்டு போட்டி நடைபெறும்வரை, அந்த கிரீடத்தை அவள் பயன்படுத்திக்கொள்ளலாம். கிரீஸ் நாட்டில் செப்டம்பர் மாதம் நடைபெறும் குட்டி உலக அழகி போட்டியில் பத்மாலயா நந்தா கலந்துகொள்கிறாள். 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

நாலுகெட்டு வீடு

 
  • 07JKR_NALUKETTU_3173374g.jpg
     
  • _07JKR_VADAKKATH_T_3173375g.jpg
     
 

கேரளத்தில் பல பரம்பரைகளாக மரபுவழி மாறாமல் வாழ்ந்துவரும் குடும்ப வீடே நாலுகெட்டு வீடு. திருச்சூர், ஆலப்புழா, தளசேரி போன்ற இடங்களில் இந்த நாலு கெட்டு வீடுகளை அதிகமாகப் பார்க்கலாம்.

நான்கு அறைகளைக் கொண்டும் வீட்டின் நடுப் பகுதியில் நடு முற்றம் கொண்டும் இந்த வீடு அழகாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. முன்பகுதியில் மரத் தூண்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். முன்பகுதியில் விருந்தினர்கள் அமர்வதற்காக மரப் பலகையால் ஆன இருக்கை வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த இருக்கை வளைவான மரப்பகுதி கொண்டு அழகாக்கப்பட்டிருக்கும்.

இதை ‘சாருபடி’ என அழைக்கிறார்கள். இந்த வீட்டின் உள்பகுதி வடக்கினி (வடக்கு), படிஞாற்றுனி (மேற்கு), கிழக்கினி (கிழக்கு), தெக்கினி (தெற்கு) ஆகிய நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு பகுதிகளும் நடுமுற்றத்தில் வந்து முடியும். பொதுவாகக் கேரள வீடுகளில் முன் வாசலுக்கு நேர் எதிராகப் பின் வாசல் இருக்கும். பெரும்பாலும் எல்லா அறைகளிலும் ஜன்னல்கள் இருக்கும். இந்த நடுமுற்றம் மூலம் வெளிச்சமும் காற்றும் வீட்டுக்குள் தாராளமாக வரும்.

வீட்டைச் சுற்றி சுற்று வராந்தாவும் இருக்கும். இந்த வராந்தா முழுவதையும் மர வேலைப்பாடுகளால் ஆன சாருபடி சுற்றியிருக்கும். வீட்டு உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்காக ஒரு குளம் இந்த வீட்டுக்கு அருகிலேயே இருக்கும். இந்தக் குளத்தை அணுகுவதற்கான பாதை இந்தச் சுற்று வராந்தாவிலிருந்து பிரிந்துசெல்லும்.

ஜன்னல்களும் கதவுகளும் பலா, மா, தேக்கு ஆகிய மரங்களின் பலகைகளால் உருவாக்கப்படும். இந்த நாலுகெட்டு வீடுகளில் சமையலறையிலிருந்து நீர் எடுக்கக் கூடிய வகையில் ஒரு கிணறு இருக்கும். இந்தக் கிணற்றின் அடித்தளத்தில் நெல்லிப் பலகை அமைந்திருக்கும். அந்தப் பலகை 30-40 வருடங்கள் ஆனாலும் சேதமடையாமல் உறுதியாக இருக்கும்.

நடுமுற்றத்திலும் வேலைப்பாடுகள் கொண்ட நான்கு மரத் தூண்களால் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். நடுவில் துளசி மாடம் இருக்கும். வீட்டின் உள்கட்டமைப்பு பாரம்பரியம் மாறாமல் பிரம்மாண்டமாய் அமைந்திருப்பது வியக்கச்செய்கிறது. எல்லோரும் கூட்டுக் குடும்பங்களாக வாழ்வதற்கே இந்தக் கட்டமைப்பில் வீடுகள் கட்டப்பட்டன.

நாலுகெட்டு வீடு போலவே எட்டு அறைகளும் இரண்டு நடுமுற்றமும் கொண்டு அமைக்கப்பட்டவை எட்டுக்கெட்டு வீடுகள் எனவும், பதினாறு அறைகளும் நான்கு நடுமுற்றமும் கொண்டு அமைந்திருப்பது பதினாறுகெட்டு வீடு என்றும் அழைக்கப்படுகிறது.கேரள வீடுகளே தனி அழகு. இயற்கைச் சூழல் அழிந்துவரும் இந்தக் காலகட்டத்தில் இயற்கையோடு இணைந்து வாழ நாலு கெட்டு வீடுகளே சிறந்தவை.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

8a.jpg
மெகா பீச்பால்!

பட புரொமோஷனுக்கு சாதாரணமாக எல்லோரையும் கூட்டி ஃபங்ஷன் வைப்பார்கள். ஆனால், அண்மையில் ‘பே வாட்ச்’ படத்திற்காக பாரமவுண்ட் நிறுவனம் லண்டனில் மெகா சைசில் பீச்பால் ஒன்றையே உருவாக்கினர். அதன் மெகா சைஸ், கின்னஸ் சாதனையில் இடம்பெற உதவியிருக்கிறது. லண்டன் முழுக்க இப்போது பீச்பாலைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது!

சர்ச்சையில் தவளை!

டெக்சாஸின் அசல் வேட்டைக்காரரான மார்க்கஸ் ராங்கெல்லிடம் சிக்கியுள்ளது பிரமாண்ட தவளை. சிங்கத்தைப் பிடித்துவிட்டது போல மார்க்கஸ் போஸ் கொடுக்கும் படத்திலுள்ள தவளையின் சைஸ், படத்தில் பார்ப்பது போல் பெரியது அல்ல என சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. படேஸ்வில்லே பகுதியில் பிடிபட்ட மெகா புல்ஃப்ராக் தவளையின் எடை 13 பவுண்டுகள்.

சொதப்பிய கொள்ளை!

அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள எவரெட்டில் நடந்த ஃபிளாப்பான கொள்ளை அது. கோஸ்டல் வங்கியின் ஏடிஎம் ஸ்டீல் தகடுகளை நெருப்பு மூலம் திருடர்கள் உடைத்தார்கள். ஜஸ்ட் மிஸ்ஸாகி ஸ்டீலோடு சேர்ந்து கரன்சியும் சாம்பலாகிப் போனது திருடர்களுக்கே செம ஷாக். இப்போது அந்த டுபாக்கூர் திருடர்களை போலீஸ் தேடி வருகிறது.

லைசென்ஸ் இல்லாத பார்பி ஜீப்!

கலிஃபோர்னியாவின் ஹன்டிங்டன் பீச். க்யூட் பார்பி ஜீப்பில் ரவுண்ட் அடித்த டேவி (3) என்ற சுட்டியிடம் லைசென்ஸ், ஆர்.சி.புக் கேட்டு பீதி கிளப்பியிருக்கிறார் ஆபீசர் ஒருவர். சுட்டியின் தாய் பலமுறை கேட்டும் பெயரைச் சொல்லாமல் எஸ்கேப் ஆகிவிட்டார் ஆபீசர். கமிஷன் கேட்கலியா?

தண்ணீர் மனிதர்!

அரசு காசுக்கு நீர் விற்கும் நிலைமையில் இந்த செய்தி. மத்தியப் பிரதேசத்தின் டாப்ரா ரயில்வே ஸ்டேஷன். ‘தண்ணீர் பாட்டில் வாங்கச் சென்ற என்னைத் தடுத்து அந்த மனிதரே ஜன்னலில் கேனில் தண்ணீர் கொண்டு வந்து தாகம் தீர்த்தார். அவர் பெயர் கூட தெரியவில்லை...’  என தண்ணீர் மனிதரை நெஞ்சம் நெகிழ பாராட்டுகிறார் ரயில் பயணியான ராகவ் காகார். ஆனால், இந்த சம்பவத்தை மறக்காமல் போட்டோ  எடுத்துவிட்டார். வரலாறு முக்கியம் அமைச்சரே! 

டிரெயினில் பட்டம்!

நியூயார்க்கின் ஹன்டர் கல்லூரி மாணவர் ஜெரிச் மார்கோவுக்கு, அன்று படிப்பு முடிந்து டிகிரி வாங்கும் நாள். ஆனால், 45 நிமிடம் டிரெயின் லேட்டானதால், அவருடைய நண்பர்களோடு இணைந்து கம்பார்ட்மென்டிலேயே பட்டம் வாங்கும் ஃபங்ஷனை நடத்தி பெற்றோர்களிடம் ஆசி பெற்றுவிட்டார். டைமிங் முக்கியம்.

www.kungumam.co

  • தொடங்கியவர்

ஒரு கல்... பல சாதனைகள்!

 

ரு சிறிய கல்லை வைத்து என்ன செய்யலாம்?

p51a.jpg

‘‘ஊரையே திரும்பிப் பார்க்கச் செய்யலாம்’’ என்கிறார் ராக்கி பியான் (Rocky Byun). தென் கொரிய நாட்டின் தலைநகர் சியோலைச் சேர்ந்தவர். ஒற்றைக் கல்லின் முனையில் சைக்கிள், வாஷிங்மெஷின், லேப்டாப், முட்டை என எந்தப் பொருளையும் சாய்வான கோணத்தில் நிற்கவைத்து அசத்துகிறார்.

p51b.jpg

p51c.jpg

‘‘புவியீர்ப்பு விசையோடு போட்டிப் போட்டு ஜெயிக்க எனக்கு ஒன்பது வருடங்கள் பிடித்தன.  பயிற்சியின்போது உடைந்த கண்ணாடி பாட்டில்கள், வீணான பொருட்களுக்குக் கணக்கே இல்லை. ஆனாலும் மனம் தளராமல் முயன்றேன். யாரும் செய்யாத, வித்தியாசமான விஷயத்தைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வமே இதற்குக் காரணம். புவியீர்ப்பு விசை என்னுடைய உழைப்புக்குச் செவிசாய்த்து என்னிடம் சரணடைந்துவிட்டது’’ என்கிறார் புன்னகையுடன்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

கல்வியும், ஆன்மீகப் பயிற்சியும் அளிக்கும் பாரம்பரிய இந்திய மகளிர் பள்ளிக்கூடம்

 
வாரணாசி பள்ளிபடத்தின் காப்புரிமைPAROMITA CHATTERJEE

இந்தியாவின் புனித நகரமான வாரணாசியிலுள்ள மகளிர் உறைவிடப் பாரம்பரியப் பள்ளிக்கூடம் ஒன்று, அந்த நகரத்திலேயே ஒரேயொரு மகளிர் பள்ளிக்கூடம் என்ற வரலாற்றால் சிறப்பு பெறுகின்றது.

மா அனந்தமாயி கான்யாபீத், சிறுமியருக்கான ஒரு பெண் துறவியர் மடம்போல உள்ளது. நாட்டிலுள்ள இளம் பெண்களுக்கு கல்வி மற்றும் ஆன்மீகப் பயிற்சி வழங்குகின்ற சில இடங்களில் இது ஒன்றாகும்.

பல வழிகளில் இதனை ஒரு குருகுலம் என்று கூறலாம். மாணவர்கள் தங்களுடைய குருவுக்கு அல்லது ஆசிரியருக்கு அருகில் வாழும் உறைவிடப் பள்ளிக்கூடம் போன்றதுதான் குருகுலம். புகைப்படக் கலைஞர் பரோமிதா சட்டர்ஜி இந்த அசாதரணமான ஆசிரமத்தை அல்லது ஆன்மீக தியான இடத்தை பார்வையிட்டார்.

வாரணாசி பள்ளிபடத்தின் காப்புரிமைPAROMITA CHATTERJEE

இந்து மதத்தின் மத தலைநகரான வாரணாசியில் 69 ஆண்டுகள் பழமையான இந்தப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்த நகரத்தை கடந்து ஓடும் இந்தியாவின் மிகவும் புனிதமான ஆறான கங்கையில் மூழ்கி நீராட ஒவ்வொரு நாளும், ஆயிரக்கணக்கான புனித பயணியர் வருகின்றனர்.

வாரணாசி பள்ளிபடத்தின் காப்புரிமைPAROMITA CHATTERJEE

வங்கதேசத்தில் பிறந்து, புனித பயணியாக இந்தியாவில் பரவலாக பயணம் மேற்கொண்ட மா அனந்தமாயி என்பவரால் இந்தப் பள்ளிக்கூடம் நிறுவப்பட்டது.

வாரணாசி பள்ளிபடத்தின் காப்புரிமைPAROMITA CHATTERJEE

இந்தப் பள்ளிக்கூடத்தின் வழக்கமான நாள் அதிகாலை 4 மணிக்கே தொடங்கிவிடுகிறது. அந்த நாளின்போது, மாணவியர் முறையான கல்வியையும், ஆன்மீகப் பயிற்சியையும் பெறுகின்றனர்.

வாரணாசி பள்ளிபடத்தின் காப்புரிமைPAROMITA CHATTERJEE

இங்கு கல்வி கற்பதற்கு ஐந்து வயது சிறுமியர் முதல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர். அவர்கள் வயதுக்கு வரும் வரை இந்த ஆசிரமத்தின் வழிகாட்டுதலில் வைக்கப்படுகின்றனர். முற்பகல் 10 மணிக்கு பாட வகுப்புகள் தொடங்கி, மாலை 4 மணி வரை நடைபெறுகின்றன.

வாரணாசி பள்ளிபடத்தின் காப்புரிமைPAROMITA CHATTERJEE

வேதங்கள் உள்பட முற்கால இந்து நூற்கள், நாளைக்கு இருமுறை கற்றுக்கொடுக்கப்படுகிறது. சமஸ்கிருத இலக்கணம், ஆங்கிலம், இந்தி, கணிதம், வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் சமூகவியல் போன்ற பல பாடங்களும் இந்த குழந்தைகளுக்கு கற்றுதரப்படுகின்றன.

வாரணாசி பள்ளிபடத்தின் காப்புரிமைPAROMITA CHATTERJEE

ஒரு நாள் பாடங்கள் கற்றுக்கொடுக்கப்பட்ட பின்னர் இரண்டு மணிநேர விளையாட்டு நேரமும் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இசை, வீட்டு வேலைகள், கலை மற்றும் கைவினைப் பொருட்கள், தையல், பூ வேலைப்பாடு, சமையல் மற்றும் பின்னல் பயிற்சிகளும் வழங்கப்படுவதாக இந்தப் பள்ளியின் இணையதளம் தெரிவிக்கிறது.

வாரணாசி பள்ளிபடத்தின் காப்புரிமைPAROMITA CHATTERJEE

இந்த சிறுமியர் தங்கி, தூங்குகின்ற பொது தங்குமிடங்களும், விடுதி வசதிகளும் சொகுசானவை அல்ல.

வாரணாசி பள்ளிபடத்தின் காப்புரிமைPAROMITA CHATTERJEE

இந்த மாணவியர் வளர்ந்து பள்ளியில் படிக்கின்றபோது வெள்ளை சேலையை பள்ளியின் சீருடையாக வைத்து கண்டிப்பான ஆடைமுறையை இந்த பள்ளி பின்பற்றுகிறது. அனைத்து காலகட்டங்களிலும் அவர்கள் தங்கள் தலைமுடியை சிறியதாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

வாரணாசி பள்ளிபடத்தின் காப்புரிமைPAROMITA CHATTERJEE

பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், வெளி உலகிற்கு சென்று, அவர்கள் விரும்புகிற வேலையை தெரிவு செய்யலாம் என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

வாரணாசி பள்ளிபடத்தின் காப்புரிமைPAROMITA CHATTERJEE

இதில் கல்வி கற்றோர், இந்த நிறுவனத்தையே தங்களுடைய முழு வாழ்க்கையும் கழிக்கின்ற வீடாக கொண்டால், அவர்களுக்கு விதிவிலக்குகள் உள்ளன.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

80 வருட சேவை: 96 வயது பாட்டி!

  • தொடங்கியவர்
 
 
 
Bild könnte enthalten: 1 Person, Text

 

 

 

ஒரு குட்டிக்கதை.

அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான்.

அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான்.

நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.

திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது.

இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.

வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான்.

உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், ''என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?'' என்றார் அரசர்.

''ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை.

ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்து கொண்டு விருந்துக்கு வருவேன்'' என்றான் மிகவும் பவ்வியமாக.

அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக் கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!

அப்போது மன்னர் அவனிடம், ''விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய்.
அதைவிட, முக்கியமான ஒன்று...
இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது.

உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது'' என்றார்.

கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,
மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான்.

அவனது மனம் சற்றே சலனப்பட்டது.

'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்து விட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!' என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக் கொண்டான்.

வீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை.

அடிக்கடி கீழே விழுந்து விடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை.

அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.
அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது.

மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர்.

அவனைக் 'கந்தல் பொதி கிழவன்' என்றே அழைத்தனர்.

இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார்.

அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.

ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது.

பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது.

அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியொரு மூட்டை இருக்கிறது.

அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன.

அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம்.

நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்து விடுகிறது.

அரண்மனைகளில்
கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர்.

அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.

மனதில் இருக்கிறது மகிழ்ச்சி.

வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது.

நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை.

நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன.
அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை.

வீட்டையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும் இருக்கின்றனர்.

இல்லத்தை மட்டுமல்ல, உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால், அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும் கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்; வெளிச்சத்தை வழங்காது.

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை.

மகிழ்ச்சியாக இருப்போம்...1f49d.png?1f514.png?

  • தொடங்கியவர்

நானோகார் பந்தயம்

  • தொடங்கியவர்
Bild könnte enthalten: 1 Person
 

அப்பச்சி வைத்திருந்த மஞ்சப்பை எல்லாம் பிளாஸ்டிக் பையானபோது நாம் கலங்கவில்லை.

செவ்வந்தியும் சாமந்தியும் தவழ்ந்த பூஜை அறைகளில் பிளாஸ்டிக் பூக்கள் கடவுள்களை அலங்கரித்த போது நாம் பதறவில்லை.

அத்தனை சூட்டையும் தாங்கிய வாழையிலை, ஹோட்டல்களில் பிளாஸ்டிக் இலைகளாக மாறியபோது நாம் கவலைப்படவில்லை.

பார்சல் டீ காபி வாங்க கூஜாவை தூக்கிக் கொண்டு அலைவதை அவமானமாக பார்த்து, பிளாஸ்டிக் பையில் டீ வாங்கிய போது நாம் அதை உணரவில்லை.

நிமிர்ந்து குடிக்கிற இளநீரை வசதிக்காக பிளாஸ்டிக் ஸ்ட்ரா போட்டு குடித்தபோது நமக்கு அது பெரிய விஷயமாக இல்லை.

இலைதழை தின்று கொண்டிருந்த ஆடு,மாடுகள் பிளாஸ்டிக்கை மென்று விழுங்கியபோது நமக்கு எந்த குற்ற உணர்வுமில்லை.

மண்பானையையும், எவர்சில்வரையும் ஒதுக்கிவிட்டு, பிளாஸ்டிக் குடங்களில் நீர்பிடித்தபோது நமக்கு எந்த வலியுமில்லை.

ஒவ்வொருநாளும் கொட்டுகிற குப்பைகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்களாய் இருந்தபோதும் நமக்கு எந்த பதற்றமுமில்லை.

இப்போது அரிசியில்தானே பிளாஸ்டிக் வந்திருப்பதாக சொல்கிறார்கள். பதற வேண்டியதில்லை. நம்முடைய மூளை பிளாஸ்டிக் ஆகிறவரை ஏதும் பிரச்னையில்லை !

  • தொடங்கியவர்

திருட்டுக்கு நன்றி!
1a.jpg
நன்றி மறப்பது நல்லதல்ல. ஆனால் இப்படியா? அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் மைர் பிளேட் என்ற பெண்மணியின் வீட்டிற்குள் சிசிடிவி கேமராவுக்கு பெப்பே காட்டிவிட்டு உள்ளே நுழைந்த திருடி ஒருத்தி, ஒரு அட்டைப்பெட்டி நிறைய பொருட்களை லபக்கியிருக்கிறாள். போகும்போது ‘தேங்க்யூ’ என நோட் எழுதி வைத்திருக்கிறாளே... அதுதான் அதிரிபுதிரி காமெடி!

ஷாக் கொடுத்த ஃபிஷ்!

தைவான் பாட்டி ஒருவர், பேரன் தனக்கு ஆசையாய் வாங்கிக்கொடுத்த பையில் கடைக்குப் போய் மீன் வாங்கி வந்தார். பாட்டியை விசிட் செய்த பேரனுக்கு, தான் பரிசளித்த பையிலிருந்த மீனைப் பார்த்து படு ஷாக். பின்னே... அவர் கிஃப்ட் கொடுத்த லூயிஸ் விட்டன் பேக்கின் விலை ரூ.80 ஆயிரமாயிற்றே!

50 ஆண்டு புத்தகம்!

நியூஜெர்சியின் பில்லிஸ்பர்க் நூலகத்திற்கு வந்த அப்பழைய நூலைப் பார்த்ததும் லைப்ரரியனுக்கே பயங்கர ஷாக். ஐசியூவில் சேரும் நிலையிலிருந்த அந்நூலை முதன்முதலில் இரவல் கொடுத்தது 1967ம் ஆண்டு. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று, ரீஎன்ட்ரியான புத்தகத்திற்கு ஃபைன் விதித்தால், உறுப்பினர் கட்டவேண்டியது 1,800 டாலர்கள்!

ஷாக் கொடுத்த மனைவி

மேரேஜுக்கு பொண்ணு கிடைக்கல. என்ன செய்யலாம்? சீன எஞ்சினியரான ஸெங் ஜியாஜியாவுக்கு இதுதான் யோசனை. விரக்தியானவர் சூப்பர் ஃபாஸ்ட்டாக ஒரு ரோபோவை உருவாக்கி அதற்கு யிங்யிங் என பெயர் சூட்டி திருமணம் செய்து கொண்டார்! 

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூன் 12
 

article_1434087426-Kok300.jpg1665: முன்னாள் டச்சு குடியேற்ற பிரதேசமாக இருந்த நியூயோர்க்கில் மாநகர நிர்வாகத்தை இங்கிலாந்து  ஏற்படுத்தியது.

1889: வட அயர்லாந்தில்  இடம்பெற்ற ரயில் விபத்தினால் 78 பேர் பலி.

1898: ஸ்பெய்னிடமிருந்து பிரிந்து பிலிப்பைன்ஸ் சுதந்திர பிரகடனம் செய்தது.

1943: உக்ரேனில் ஜேர்மனிய படைகளல் 1180 யூதர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

1964: தென்னாபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

1975: இந்திய பிரதமர் இந்திரா காந்தி ஊழல் வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டார்.

1991: மட்டக்களப்பில்; 152 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

1991: ரஷ்ய ஜனாதிபதியாக பொரிஸ் யெல்ட்சின் பதவியேற்றார்.

1994: போயிங் 777 விமானம் முதல் தடவையாக பறந்தது.

1999: நேட்டோ தலைமையிலான ஐநா அமைதிப் படை கொசோவோவினுள் நுழைந்தது.

2003: தமிழர் விடுதலை இயக்கம் என்ற அமைப்புக்கு, தமிழக அரசு தடை விதித்தது.

2005: அருளானந்தம் சுரேஸ் ஜோக்கிம் ten bin bowling என்ற விளையாட்டினை ரொரண்டோவில் உலக சாதனைக்காக 100 மணித்தியாலங்கள் தொடர்ந்து விளையாடி தனது முப்பதாவது கின்னஸ் உலக சாதனையினை நிலைநாட்டினார்.

2006: கூகுள் எர்த், லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது.

2006: காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

இந்த 4 தவறுகளைத் திருத்தினால், நம் நாள் நன்றாக அமையும்! #MondayMotivation


தவறுகள் செய்வது மனித இயல்பு. ஒரு தவறு நேர்ந்துவிட்டால் அதை எண்ணி சோர்வடையாமல் அதை திருத்துவது எப்படி என்ற சிந்தனை மட்டுமே நம் மனதில் இருக்க வேண்டும். அதே சமயம், தவறுகளைக் களைந்தால்தான் வெற்றியும் கிட்ட வரும். உங்கள் நாள் நன்றாக அமைய, அப்படி களைய வேண்டிய முக்கியத் தவறுகளாக,  எழுத்தாளர் ரிச்சர்டு என் ஸ்டீபன்சன் (Richard N. Stephenson) சுட்டிக் காட்டுபவை இவை.  

Monday Motivation தவறுகளைத் திருத்துங்கள்


1. பழையதைப் பின்பற்றாதீர்கள்! 

எப்போதும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்காமல் புதிதாகச் சிந்தியுங்கள். எந்த வேலையாக இருந்தாலும், வார நடுவில் சலிப்பு தட்டுவதற்குக் காரணம் அதன் பழைமையே. புதிதாக முயற்சி செய்து பாருங்கள். ஒருவேளை அது தவறாக முடிந்தாலும், 'சரி இன்று ஏதோ ஒரு புது முயற்சி செய்தோம்' என்கிற திருப்தியாவது மிஞ்சும். 

இன்று நிறைய பேர் செய்யும் பொதுவான தவறு, தங்களுக்கென வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்துக்கொள்ளாமல் இருப்பது. உங்களுக்கென ஒரு குறிக்கோளை முடிவு செய்து அதை அடைவதற்காண சாத்தியக்கூறுகளை கண்டறிந்து, அடுத்த அடுத்த நிலைகளுக்கு உங்களை நீங்களே நகர்த்திக்கொள்ள வேண்டும். புது விஷயங்களைத் தெளிவாகக் கற்றுத் தேர்ந்து சிறந்த முடிவுகளை தைரியமாக எடுங்கள்.

2. 'என்னால் முடியுமா?' என்ற அவநம்பிக்கையைச் சுமக்காதீர்கள்! 

இன்று பலருக்கும் தன்னம்பிக்கை இல்லை. 'என்னால் முடியுமா?' என்று யோசிக்காமல், 'என்னால் ஏன் முடியாது?' என்று சிந்தியுங்கள். உங்களைச் சுற்றி ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு, 'அதுதான் என் உலகம். அதைச்சுற்றிதான் என் சிந்தனைகள் இருக்கும்' என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். 'என்னால் என்ன வேலை இயலும்? அதை எந்த அளவிற்கு கச்சிதமாக முடிக்க இயலும்' என்று உங்களுக்கு நீங்களே சுயமதிப்பீடு செய்து தன்னம்பிக்கையுடன் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துங்கள்.

3. நம்பிக்கை இழக்கச்செய்யும் உறவுகளைப் பொருட்படுத்தாதீர்கள்! 

பாசிட்டிவிட்டி என்பது அனைவரின் வாழ்விலும் மிக முக்கியமாக இருக்க வேண்டிய ஒன்று. என்ன துயரம் நேர்ந்தாலும் 'இது நிரந்தரம் அல்ல, இதுவும் கடந்து போகும்' என்ற உணர்வு இருப்பது மிகவும் முக்கியம். இது போன்ற பாசிட்டிவ் சூழல்களை அமைப்பதில் பெரும் பங்கு, நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு உண்டு. நண்பர்கள், உறவுக்காரர்கள், உடன் வேலை செய்பவர் என யாராக இருந்தாலும், ஒருவரிடையே வெளிப்படும் நெகட்டிவிட்டி நம்மையும் சோர்வடைய செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. விமர்சனங்களோ, கருத்துக்களோ ஊக்கப்படுத்தும் வகையில் சொல்லப்படாவிட்டால் அது நம்மிடையே இருக்கும் பாசிட்டிவிட்டியை குறையச் செய்யும். எனவே இவ்வாறு இருக்கும் உறவுகளின் கருத்துகளை மட்டும் அல்ல, அவர்களையும் பொருட்படுத்தக்கூடாது. முடிந்தவரை இவர்களிடமிருந்து உங்களை விலக்கிக்கொள்வதே நல்லது.

4. அறிவை தேக்கநிலையில் வைக்காதீர்கள்! 

உலகச் செய்திகள், தொழில், வேலை சார்ந்த நாட்டு நடப்புகள் பற்றிய அறிவு முழுவதுமாக  இல்லை என்றாலும், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருக்காதீர்கள். அறிவு, பிறரிடம் உங்களுக்கான மரியாதையைப் பெற்றுத் தரும் பெரும் சொத்து. அதைத் தேக்க நிலையில் வைக்காதீர்கள். 

தவறுகள் கழித்தால் வெற்றியின் வாசல் கிட்ட நெருங்கும்!

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.