Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
‘சூழும் துன்பங்கள் அவன் பரம்பரைக்கே கேடு’
 

image_2971227003.jpgபலரைக் காதலிப்பதும், பின்பு அவர்களைக் கைவிடுவதும், தங்களுக்கான உயர் தகுதி எனச் சிலர், வீம்புடன் சொல்வதுண்டு. வாழ்க்கையே ஒருகோலம். இதில், ஏது தவறுகள் எனச் சொல்வதில் ஆண், பெண் பேதமே கிடையாது.

இது நாகரீக உலகம். எவரும் எப்படியும் பழகலாம்; பிரிந்து விடலாம். இதில் மற்றையவர்கள் தலையிட ஏது உரிமை என்று விறைப்பாகச் சொல்பவர்கள், காலம் உருண்டோட, தேகம் சுருண்டு, இளைத்தபின் பழைய வினைகளால் வீழ்ந்து விடுவர்.

பாவம் புரிபவர்கள் அதன் பலனை அனுபவிக்கவும் தயாராக வேண்டும். கொடுக்கல் வாங்கல் என்பதே, செய்யும் வினைகளின் ஓட்டங்களால் நிகழ்வனவாகும்.

கற்பு எனும் சன்மார்க்கத்தையே கேலிக்குரியதாகக் கருதினால், சூழும் துன்பங்கள் அவன் பரம்பரைக்கே கேடு.

எங்கள் கலாசாரத்தின் மூலவேரே, நல்ல கணவன் மனைவி பிணைப்புத்தான். நல்ல குடும்பங்களே, உன்னத உலகைச் சமைக்கின்றன. இதில் உள்ள இன்பம், மாறும் போதையூட்டும் உறவுகளில் கிடையவே கிடையாது.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

5000 ஆண்டு வரை, எந்தத் திகதியைக் கூறினாலும் அதன் கிழமையைக் கூறும் சிறுவன்

 
5000 ஆண்டு வரை, எந்தத் திகதியைக் கூறினாலும் அதன் கிழமையைக் கூறும் சிறுவன்
 

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது பஹீம் துபாயில் 7 ஆம் தரம் படிக்கிறார்.

அபார ஞாபக சக்தி கொண்டவரான முகம்மதுபஹீமை அவரது பெற்றோர் 4 வயது முதல் ஊக்கப்படுத்தினர்.

இந்த நிலையில், தற்போது ஒன்று முதல் 5000 ஆண்டு வரை, எந்தத் தேதியைக் கூறினாலும் அதன் கிழமையைக் கூறுகிறார்.

இதேபோல் உலக நாடுகளின் கடிகார நேரத்தையும் கூறுகிறார். எந்த நாட்டைக் கேட்டாலும், அதன் தலைநகர், கொடி, மொழி, நாணயத்தைக் கூறுவார்.

பன்னாட்டு எண் முறை, அனைத்து அலைபேசி நிறுவனங்களின் பெயர், மாடல், தயாரிப்பு திகதி, மென்பொருள் குறித்தும் கூறுகிறார்.

எங்கெல்லாம் சென்றாரோ அந்த இடத்தின் பெயர், தேதி, நேரத்தை ஞாபகத்தில் வைத்து உள்ளார்.

இவருக்குச், சிறந்த ஞாபக சக்தியாளர் என்ற முறையில், 5000 ஆண்டுகளுக்கான திகதியைச் சொன்னால் கிழமையைச் சொல்லும் திறனுக்காக இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம் கிடைத்துள்ளது.

http://newuthayan.com

  • தொடங்கியவர்

நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்: 22-8-1989

சூரிய குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிகத் தொலைவில் உள்ள கோளான நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்ட நாள். மேலும் இதே நாளில் நடந்த பிற முக்கிய நிகழ்வுகள் • 1848 - நியூ மெக்சிகோ ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது. • 1864 - 12 நாடுகள் இணைந்து ஹென்றி டியூனாண்ட் தலைமையில் ஜெனீவாவில் செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தார்கள்.

 
 
நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்: 22-8-1989
 
சூரிய குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிகத் தொலைவில் உள்ள கோளான நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்.

மேலும் இதே நாளில் நடந்த பிற முக்கிய நிகழ்வுகள்

• 1848 - நியூ மெக்சிகோ ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

• 1864 - 12 நாடுகள் இணைந்து ஹென்றி டியூனாண்ட் தலைமையில் ஜெனீவாவில் செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தார்கள்.

• 1911 - பாரிசில் களவெடுக்கப்பட்ட மோனலிசா ஓவியம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

• 1932 - தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதித்தது.

 

 

சென்னை தினம் கொண்டாட்டம் தொடங்கிய நாள்: 22-8- 2004

 

சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினமாகும். இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூறப்பட்டு வருகிறது. பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டிசோசா, மெட்ராஸ் மியூசிங்ஸின்

 
 
 
 
சென்னை தினம் கொண்டாட்டம் தொடங்கிய நாள்: 22-8- 2004
 
சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினமாகும். இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூறப்பட்டு வருகிறது.

பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டிசோசா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.

முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004-ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

உலக நாயகிகள்!

ன்ட்ராய்ட் மட்டுமல்ல ஹாலிவுட்டில் டாப் ஹீரோயின்ஸ் பட்டியல் கூட அப்டேட் ஆகிக்கொண்டே  இருக்கும். இந்த வருடமும் சென்ற வருடமும் கவர்ந்த ஹீரோயின்கள், சில ஆச்சர்ய வரவுகள் எனக் கலவையாக நீள்கிறது சமீபத்திய பட்டியல். அப்படிப்பட்ட சீனியர்- ஜூனியர்களின் அப்டேட் இங்கே...

52p1.jpg

ஜெனிஃபர் லாரன்ஸ் Jeniffer Lawrance

`ஹங்கர் கேம்ஸ்’ இரண்டு பாகங்கள், `ஜாய்’, `பேசஞ்சர்ஸ்’ என வரிசையாகப் படங்கள் மிக்ஸட் ரிவியூஸ் வந்தாலும் ஜெனிஃபர் லாரன்ஸ் தன் நடிப்புக்கான வரவேற்பை அப்படியே தக்கவைத்துக்கொண்டே இருக்கிறார். டேரன் ஆர்னோவ்ஸ்கி இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் `மதர்’ பட ட்ரெய்லருக்கே நிறைய பாராட்டுகள் குவிந்திருக்கின்றன. `பெரிய ஹீரோயினாக்கும் சோலோவாதான் நடிப்பேன்’ என இல்லாமல், `ரெட் ஸ்பேரோ’ படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்திலும், `எக்ஸ்மேன்: டார்க் ஃபீனிக்ஸ்’ படத்தில் துணைக் கதாபாத்திரமாகவும் தொடர்ந்துகொண்டிருக்கிறார் ஜெனி!


52p2.jpg

காரா டெலிவிங்னே Cara Delevingne

`வலெரியன்’ படம் ரிலீஸ் ஆகி, நல்ல ரீச். அதன் பிறகு `துலிப் ஃபீவர்’, `லண்டன் ஃபில்ட்ஸ்’ இரண்டிலும் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துவிட்டு, சின்ன பிரேக் எடுத்திருக்கிறார். இப்போது செம ஃப்ரீ என்பதால், நியூடு மாடலிங் பெயின்ட்டிங்கை ஆர்வமாகக் கற்றுக்கொண்டிருக்கிறார். காராவின் ரீ என்ட்ரிக்காக ஹாலிவுட் வெயிட்டிங்!


52p3.jpg

எம்மா ஸ்டோன் Emma Stone52p11.jpg

இந்த வருடம் எம்மாவின் படம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், `சென்ற வருடம் வெளியான `லா லா லேண்ட்’ படத்தில் `எம்மாவின் பெர்ஃபாமென்ஸ் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிக்குது’ எனச் சிலிர்க்கிறார்கள் ரசிகர்கள். அதற்கான ஆஸ்கர் விருதும் வென்றவர் என்பதால், அவரின் கரியர் கிராஃப் உச்சத்தில்தான் இருக்கிறது. அதனால் செப்டம்பரில் வெளியாகவிருக்கும் `பேட்டல் ஆஃப் தி செக்சஸ்’ படத்துக்கு இப்போதிருந்தே தவ வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் விசிறிகள். எம்மாவோ, இப்போது `தி ஃபேவரைட்’ பட ஷூட்டிங்கில் பிஸி!


52p4.jpg

சோஃபியா பௌடெல்லா Sofia Boutella

டாம் க்ரூஸுக்கே டஃப் கொடுத்த சோஃபியாவும் டாப் லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறார். `மம்மி’ படம் எதிர்மறையான விமர்சனங்கள் பெற்றாலும் மம்மியாக நடித்த சோஃபியாவுக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. இப்போது சின்னத்திரை ரசிகர்களையும் ஈர்க்க `ஃபாரன்ஹீட் 451’ சீரிஸில் நடித்துக்கொண்டிருக்கிறார். கூடவே, `மிஷன் இம்பாசிபிள்; ரோக் நேஷன்’ படக் கதாசிரியர் இயக்கும் `ஹோட்டல் அர்டிம்ஸ்’  படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார் சோஃபியா!


52p5.jpg

கேல் கடோட் Gal Gadot

இப்போ கேல் கடோட்தான் ஹாலிவுட்டின் டாப்.  காரணம், இவர் முதன்முதலில் மெயின் லீடாக நடித்த படத்தின் அதிரடி வெற்றிதான். `ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ படத்தின் சில பாகங்கள், `நைட் அண்ட் டே’, `டிரிப்பிள் 9’, `பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ்’ எனப் பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்திருந்தார் கேல். அந்த நேரத்தில் `வொண்டர் வுமன்’ கதாபாத்திரத்தை மையமாக வைத்துப் படமாக்க முடிவெடுக்கிறது டிசி காமிக்ஸ். இஸ்ரேலைச் சேர்ந்த கேல் கடோட்,  ஹாலிவுட்டில் `வொண்டர் வுமனாக’ அசத்த, பாக்ஸ் ஆபீஸ் அதிரும் அளவுக்கு கலெக்‌ஷனை அள்ளியது. விரைவில் வரவிருக்கும் `ஜஸ்டிஸ் லீக்’, `வொண்டர் வுமன் - 2’ என அடுத்தடுத்த படங்கள் மூலமாகவும் அட்டகாசம் செய்யக் காத்திருக்கிறார் கேல் கடோட்!


52p6.jpg

எம்மா வாட்சன் Emma Watson

இந்த வருடம் வெளியான `பியூட்டி அண்ட் தி பீஸ்ட்’, `தி சர்க்கிள்’ இரண்டு படங்கள் மூலம் தனது இருப்பைத் பதிவுசெய்தார் எம்மா வாட்சன். `பியூட்டி அண்ட் பீஸ்ட்ஸ்’ படம் எம்மாவுக்குப் பெரிய பூஸ்ட். படங்கள் மூலமாக மட்டுமல்ல, தொடர்ந்து பெண் உரிமைகளுக்காகக்  குரல்  கொடுத்துவருபவர் என்கிற அடையாளமும் எம்மாவை ரசிகர்களிடத்தில் இன்னும் நெருக்கமாகக் கொண்டுசேர்த்திருக்கிறது. அடுத்து நடிப்பதற்கு கைவசம் எந்தப் படமும் இல்லை. ஆனால், எம்மாவின் கவலையெல்லாம் தன் அம்மா, பிறந்தநாள் பரிசாகக் கொடுத்த மோதிரம் தொலைந்துவிட்டதைப் பற்றித்தான்!


52p7.jpg

சார்லிஸ் தெரோன் Charlize Theron

`மேட்மேக்ஸ் ஃபியூரி ரோட்’, `த ஹன்ட்ஸ்மென்: விண்டர்ஸ் வார்’ இரண்டும் பெரிய ஹிட் , `லாஸ்ட் ஃபேஸ்’ மட்டும் ஃப்ளாப் என இருந்த சார்லிஸ் தெரோனின் ட்ராக் லிஸ்ட்டில் மறுபடி ஒரு ஹிட் `அடாமிக் ப்ளான்ட்’ படத்தால் இணைந்திருக்கிறது. படத்தில் ஆக்‌ஷனில் அதிரடி காட்ட, மறுபடி சார்லிஸை ஃப்ரெஷ்ஷாக ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். இப்போது ஆக்‌ஷன் காண்பித்தவர் அடுத்து நடித்துக்கொண்டிருப்பது ஒரு காமெடிப் படத்தில். சார்லிஸின் காமெடி வெடியான `துலி’ 2018 ரிலீஸ்.


52p8.jpg

ஸ்கார்லட் ஜோஹன்சன் Scarlatt Johanson

`கோஸ்ட் இன் தி ஷெல்’, `ரஃப் நைட்’ என இந்த  வருடம் ஸ்கார்லெட் நடித்து வெளியானவை இரண்டு படங்கள்தான். இனி இந்த வருடம் முழுக்க எந்தப் படமும் கிடையாது. அடுத்த வருடமும் ஸ்கார்லெட் நடிப்பில் வெளியாக இருப்பது `அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ படம் மட்டுமே. அதிலும் குட்டியூண்டு ரோல்தான். ஆனாலும், இவர்தான் லீடிங்! காரணம் ஸ்கார்லெட்டுக்காக வெறித்தனமான காத்திருக்கும் அகில உலக ரசிகர்கள்!  


52p9.jpg

எமிலியா க்ளார்க் Emilia Clarke

திரைப்படங்களைவிட `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ போராளிகளுக்கு எமிலியா க்ளார்க் பயங்கரப் பரிச்சயம். `வாய்ஸ் ஃப்ரம் த ஸ்டோன்’, `அபோ சஸ்பிக்‌ஷன்’ இரண்டு படங்களிலும் லீட் ரோல். படங்கள் சுமாரான ரிவ்யூஸ் பெற்றாலும் எமிலியாவின் நடிப்பு, பரவலாக எல்லோரையும் கவர்ந்தது. படம் இல்லை என்றால் என்ன, இருக்கவே இருக்கிறது `ஜி ஓ டி’. ஆறு சீஸன்கள் முடிந்து ஏழாவது சீஸனிலும் அசத்திக்கொண்டிருக்கிறார் எமி.


52p10.jpg

அலெக்ஸான்ரா டடாரியோ Alexandra Daddario

`சான் ஆண்டர்ஸ்’ படத்தில் ட்வைன் ஜான்சனுக்கு மகள், `தி சாய்ஸ்’, `பே வாட்ச்’  படங்களில் துணைக் கதாபாத்திரம் என, சில வருடங்களாகவே சைடு ரோலில் நடித்துக்கொண்டிருந்தவருக்கு `தி லே ஒவர்’ படம்  மூலம்  மெயின் லீட் ரோல் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து தனது நடிப்பால் கவர்ந்துவருபவருக்கு, இந்த வருடம் முழுக்க பேக் டு பேக் ஷூட்டிங்தான். எல்லா படங்களிலும் அம்மணியின் பர்ஃபாமென்ஸ் அள்ளுமாம்!

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

மீன் பிடிக்கக் குதிரையில் கடலுக்குச் செல்லும் ஆச்சர்ய மீனவர்கள்..!

 
 

பெல்ஜியத்தின் வடமேற்குக் கடற்கரைப் பகுதி. அது ஓஸ்ட்டியூன்கிர்க ( OostDuinkerke ) எனும் சிறு கடற்கரை கிராமம். உலகின் எல்லா கடற்கரை கிராமங்கள் போன்றுதான் இதுவும். கடலும், கடல் சார்ந்த வாழ்வையும் கொண்டது. ஆனால், இன்று உலகளவில் இந்தக் கிராமம் குறித்து பேச ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது. அது அழகான கடலும், சுவையான இறாலும், பேரழகான குதிரைகளும், அன்பான மனிதர்களும், அவர்களுக்கிடையேயான ஆச்சர்ய உறவுகளையும் கொண்ட ஒரு கதை. 

குதிரையின் முதுகில் அமர்ந்து மீன் பிடிக்கும் மீனவர்கள்

அதிகாலை நேரத்திலேயே அடித்துப் பிடித்து கிளம்பும் அவசரம் இல்லா ஓர் இடம் அது. மொத்த கிராமமும் அமைதியான உறக்கத்தில் இருக்கிறது. அங்கு சில வீடுகளில் மட்டும் சின்னச் சின்ன சத்தங்கள் எழும்புகின்றன. அந்தச் சத்தம் வரும் திசையில் பயணத்து, அந்த இடத்தை அடைந்தால், அங்கு குதிரையும், மனிதனும் தயாராகிக் கொண்டிருக்கும் காட்சியை நம்மால் பார்க்க முடிகிறது. அந்தக் குதிரை ரொம்பவே அழகாக இருக்கிறது. பந்தயங்களில் பறந்தோடும் வகையிலான குதிரை அல்ல அது, அதே சமயம் மூட்டைகளைச் சுமக்கும் கோவேறுக் கழுதை வகையறாவும் இல்லை. இந்தக் குதிரை சற்றே வித்தியாசமாக இருக்கிறது.  சின்னத் தலை, குட்டையான கால்கள், அந்தக் கால்களில் பாதத்தின் அருகே அழகான முடி, பெரிய கழுத்து, உறுதியான தோள்கள், அழகான கண்கள் என அழகும், உறுதியும் ஒருசேர சேர்ந்து காணப்படுகிறது. 

இயற்கையின் வழியில் மீன் பிடிக்கும் பெல்ஜியம்காரர்கள்

அந்தக் குதிரை, குதிரை வண்டியில் பூட்டப்படுகிறது. வண்டியில் சில கூடைகள், மீன் வலைகள், மஞ்சள் நிறத்தில் ரெய்ன் கோட் போன்ற ஒரு உடுப்பு, ரப்பர் பூட்ஸ், கயிறு, சல்லடைகள் எனச் சில பொருள்கள் இருக்கின்றன. அந்தக் கிராமத்திலிருந்து விடியற்காலை நேரத்தில், அப்படியான குதிரை வண்டிகளில் வீட்டிலிருந்து கிளம்பி தார்ச்சாலைக்கு வந்து சேர்கிறார்கள். அவர்கள் அப்படியே வரிசையாகக் கடற்கரை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறார்கள். மொத்தத்தில் 18 அல்லது 19 பேர் இருப்பார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் கதைகளைப் பேசியபடியே நகரத் தொடங்குகிறார்கள். அவர்கள் கடற்கரை அடைய தோராயமாக இன்னும் ஒரு மணி நேரம் ஆகலாம். 

இயற்கை வழியில் மீன் பிடி

ஆங்கிலத்தில் ஷ்ரிம்ப் ( Shrimp ) எனச் சொல்லப்படும் ஒரு வகை இறால் மீனைப் பிடிக்கத்தான் இவர்கள் இந்தக் குதிரைகளில் போய்க் கொண்டிருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இப்படியாகக் குதிரைகளில் கடலுக்குச் சென்று இறால்களைப் பிடிக்கும் பழக்கம் ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்திருக்கிறது. ஆனால், காலப் போக்கில் அவை அழிந்துவிட்டன. ஆனால், பெல்ஜியத்தின் ஓஸ்ட்டியூன்கிர்க பகுதியில் மட்டும் இந்த நூற்றாண்டுகால பழக்கம் இன்னும் எஞ்சியிருக்கிறது. 

பெல்ஜியத்தில் குதிரை கொண்டு மீன் பிடிக்கும் தொழில்முறை

பெல்ஜியத்தின் இந்தக் கடற்கரைப் பகுதிகளில் கிராங்கன் ( Crangon ) எனும் இறால் வகை அதிகளவில் கிடைக்கும். கடற்கரைக்கும் செல்லும் இந்தக் குதிரைகளிலிருந்து, அது கட்டப்பட்டிருக்கும் வண்டிகள் கட்டவிழ்க்கப்படும். முதுகின் இருபுறத்திலிருந்து 10 மீட்டர் தூரத்துக்குக் கயிறு கட்டப்பட்டு அதன் முடிவில் வலை இணைக்கப்பட்டிருக்கும். அதன் முதுகின் இருபக்கமும் கூடைகளைக் கட்டிவிட்டு அதன்மீது ஏறி அமர்வார்கள் அந்த மீனவர்கள். மெள்ள, மெள்ள குதிரையைக் கடலுக்குள் செலுத்துவார்கள். குதிரைகளுக்குக் கடல் அவ்வளவு விருப்பமானவை அல்ல. அந்தக் குதிரைகளைக் கடலுக்குள் செலுத்த குறைந்தது ஓராண்டு காலமாவது அவைகளுக்குப் பயிற்சியளிக்கப்பட வேண்டும். இருந்தும் ஒவ்வொரு முறையும் கடலுக்குள் செல்லும்போது அவை பயப்படவே செய்யும். ஆனால், குதிரை ஓட்டும் அவர்களின் தைரியம்தான் குதிரைகளுக்கும் தைரியம் கொடுக்கும். அந்த தைரியத்தின் அடிப்படையில் கடலுக்குள் செல்லும். 

குதிரை மீதமர்ந்து மீன் பிடிக்கும் பெல்ஜியம்காரர்கள்

கரையிலிருந்து பின்னால் கட்டப்பட்டிருக்கும் வலைகளை இழுத்தபடியே கடலுக்குள் நடக்க ஆரம்பிக்கும். குதிரை கழுத்தளவு மூழ்கும் அளவுக்கு நடக்கும். கடல் அலைகளின் ஓட்டத்தையும், காற்றின் திசையையும் கணக்கிட்டு குதிரைகளைச் செலுத்த வேண்டும். பெரும்பாலும், அதிகாலை நேரங்களில் குறைந்த அலையின் போதுதான் இறால்களைப் பிடிக்க சரியான சமயம். அரை மணி நேரம் கடலிலிருந்து கரைக்கு வருவார்கள். சிறிது நேரம் குதிரைக்கு ஓய்வு கொடுப்பார்கள். அதே நேரத்தில் வலையில் சிக்கிய இறால்களைச் சிறு சல்லடையில் போட்டு சலிப்பார்கள். அதில் சின்ன இறால்கள் மற்றும் வேறு சிறு உயிரினங்கள் கீழ் விழும். அதை மீண்டும் கடலுக்குள் தூக்கியெறிந்து விடுவார்கள். பின்னர், ஓய்வுக்குப் பிறகு மீண்டும் கடலுக்குள் செல்வார்கள். இப்படியாக, ஒரு நாளைக்கு மூன்று தடவை செய்வார்கள். ஒரு நாளைக்கு 20 கிலோ இறால்கள் வரைப் பிடிக்கிறார்கள். வருடத்தின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் முழுவீச்சில் இந்த வேலைகளைச் செய்கிறார்கள். 

 

இன்று நவீன தொழில்நுட்பங்கள் மீன்பிடித்தொழிலில் பல சிக்கல்களை ஏற்படுத்தி வரும் சூழலில், பாரம்பர்ய முறைகளே இயற்கைக்கு உகந்ததாகவும் , இயற்கை வளங்களை ஒரேயடியாகச் சுரண்டாமல் பாதுகாக்கும் வழியாக இருக்கின்றன. அப்படியாக இருந்து வந்த இந்த மீன்பிடி முறை 1990களில் வெறும் 4 பேரால் மட்டுமே செய்யப்பட்டு வந்தது. பின்னர், பெல்ஜியம் அரசு இதற்கெனத் தனிக் கல்லூரி படிப்பை அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, இன்று ஒரு பெண் உட்பட 19 பேர் இந்த முறையைக் கற்றுத் தேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இதைத் தங்கள் நாட்டின் பெருமையாகக் கருதுகிறார்கள் பெல்ஜியம்காரர்கள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தருமமிகு... பெருமைமிகு சென்னைக்கு வயசு 378 #Chennai378

 
 

சென்னை எழும்பூர் Chennai378

ஏறத்தாழ 378 ஆண்டுகளுக்கு முன் தமிழகக் கடற்கரை ஓரம் இருந்த ஒரு சிறு மீனவக் குப்பத்தில் இருந்துதான் சென்னையின் சரித்திரம் துவங்குகிறது.

விறுவிறுப்பான சினிமா போல அமைந்த சென்னையின் கதை இது...

வாணிபம் செய்ய இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் தென்னிந்தியாவில் குடிபெயர்ந்த இடம் நிசாம் பட்டினம் மற்றும் பெத்தபள்ளி. அது வட ஆந்திர மாநிலத்தின் பகுதி.

அங்கு நிலவிய தட்ப வெப்பநிலை அவர்களுக்கு ஒத்துவரவில்லை. அங்கிருந்து சிறு சிறு படகுகளில் தங்கள் மூட்டை முடிச்சுகளை ஏற்றிக் கொண்டு பழவேற்காட்டுக்கு வடக்கே சில கிலோமீட்டர் தூரத்தில் ஆறுமுகப் பட்டினத்தை 1626 -ல் அடைந்தனர். அங்கும் துறைமுக வசதி சரியாக இல்லை.

ஆறுமுகப் பட்டினத்தில் கிடங்கின் தலைவனாகப் பணியாற்றி வந்த பிரான்சிஸ் டே என்பவர் 1637-ல் இடம் தேடி பாண்டிச்சேரி வரை கடற்கரையோரமாகப் பயணித்தபோது, பழவேற்காட்டுக்குத் தெற்கே இருந்த இடம் நெசவுப் பொருள்களை மலிவாக வாங்கவும் கிடங்கு அமைப்பதற்கு ஏற்றதாகவும் இருப்பதைக் கண்டார்.

அந்த இடம் கிழக்கே கடலாலும், வடக்கே கூவம் ஆற்றாலும், தெற்கே அடையாறு ஆற்றாலும் மேற்கே பின்னாளில் எழும்பூர் ஆறு என அழைக்கப்பட்ட ஆற்றாலும் சூழப்பட்டிருந்தது. மூன்று பக்கத்திலும் இயற்கை அரண்கள் இருந்ததால் இந்த இடம் பிரான்சிஸ் டேக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. டே தேர்ந்தெடுத்த அந்த இடம்தான் ‘சென்னைப் பட்டினம்’. தேர்ந்தெடுத்த ஆண்டு 1637.

இங்குத் தொழில் தொடங்க அனுமதி பெற அப்போது தொண்டை மண்டலத்தை ஆண்ட நாயக்கர்களை அணுகினார்கள். அவர்கள் தாங்கள் தேர்வு செய்திருந்த நிலப்பகுதியைச் சொன்னதும் வேங்கடபதி சந்தோஷமாகச் சம்மதித்தார். ஆங்கிலேயர் மூலமாகப் பாதுகாப்பையும் அதே சமயத்தில் வருவாயையும் ஈட்ட முடியும் என்ற திருப்திதான் வேங்கடபதி நாயக்கரின் மகிழ்ச்சியான ஒப்புதலுக்குக் காரணம்.

1639-ல் ஆகஸ்ட் 22-ம் தேதி ‘நாயக்கர்கள் - டே’ ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆண்டுக்கு 1,200 வராகன் கிஸ்தி கட்டுவதற்கு ஆங்கிலேயர்கள் ஒப்புக்கொண்டனர். இதைத்தான் சென்னை பிறந்த ஆண்டாகக் கொண்டாடுகிறார்கள்.

கடற்கரையோரமெங்கும் சிறுசிறு மீனவக் குப்பங்கள் திருவொற்றியூர் முதல் திருவல்லிக்கேணி வரை இருந்தன. இப்பொழுது ‘செயின்ட் ஜார்ஜ் கோட்டை’ இருக்கும் இடம் அப்போது மதுரசேனன் என்ற மீனவனின் வாழைத் தோட்டமாக இருந்தது. அதனருகே நரிமேடு எனும் குன்று இருந்தது. அதனருகே சிறு தீவு (இப்போது தீவுத் திடல்). கடற்கரை ஓரமாக நின்று பார்த்தால் நகரி மலையின் உச்சி தெரியும். கப்பல் மாலுமிகளுக்கு அந்த நாள்களில் அதுதான் கலங்கரை விளக்கம். நரிமேட்டில் இருந்த நரிகளை வேட்டையாடுவது ஆங்கிலேயர்களின் பொழுதுபோக்கு. அதை அடிப்படையாக வைத்து எழுத்தாளர் விநாயக முருகன், ‘வலம்’ என ஒரு நாவலே எழுதியிருக்கிறார்.

தீவுத்திடல்

பிராட்வே சாலை இருக்கும் இடத்தில் சிறு கால்வாய் ஓடிக் கொண்டிருந்தது. கால்வாய்க்கு மேற்கே விளை நிலங்கள். அவற்றின் பாசனத்துக்கு உதவியாக ஏரிகள் இருந்தன.

‘பூவிருந்தவல்லியிலிருந்து சென்னையை உள்ளடக்கிய தொண்டை மண்டலப் பகுதியை சந்திரகிரி அரசன் கீழ் வேங்கடபதி நாயக்கர் ஆண்டுவந்தார். அவர் ஆங்கிலேயர்களுக்கு நான்கு சிற்றூர்களைத் தந்தார்’ என்று மெக்கன்சி பதிவுசெய்துள்ளார். அவை முறையே மதறாஸ் குப்பம், சென்னைக் குப்பம், ஆர் குப்பம், மேலுப்பட்டு.

பண்டகச் சாலைக் கட்டட வேலை, 1640- ஆண்டு மார்ச் முதல் தேதி தொடங்கப்பட்டது. இக் கட்டடத்தின் ஒரு பகுதி ‘செயின்ட் ஜார்ஜ் தின’த்தில் கட்டி முடிக்கப்பட்டதால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்று பெயரிட்டனர். பணப்பற்றாக்குறை காரணமாக மெதுவாகவே வளர்ந்தது கோட்டை. 14 ஆண்டுகள் கழித்து 1653-ல் கோட்டை முழுமையடைந்தது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னப்பட்டினம் என்றும் தெற்குப் பகுதி மதறாஸ் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பட்டினங்களையும் ஒன்று சேர்த்து ஆங்கிலேயர்கள் மெட்றாஸ் என்றனர். சென்னை, மதறாஸ் இரண்டுமே மக்களால் சொல்லப்பட்டு வந்தது. 1653-ல் மதறாஸ் என்ற ஒரு சிறு பிராந்தியத்தின் பெயர் தென்னிந்தியாவுக்கான பெயராக மாறியது. மதறாஸ் மாகாணம் என அழைக்கப்பட ஆரம்பித்தது. பின்னர் 1702-ல் முகலாயர்களாலும் 1741-ல் மராட்டியர்களாலும் தாக்குதலுக்கு ஆளானது. 1746-ல் பிரெஞ்சு ஆட்சியர்களின் கைக்கு மாறியது.

மீண்டும் ஆங்கிலேயர்கள் ஆட்சியைப் பிடித்தனர். அதன் பிறகு 1758-ல் மீண்டும் பிரெஞ்சு ஆட்சி. ஆனால், இரண்டே மாதங்களில் ஆங்கிலேயர்கள் மீட்டனர். அதன்பிறகு இந்தியா சுதந்திரம் அடையும் வரை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர் வசமாகவே இருந்தது.

சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று 1968-ம் ஆண்டு பெயர் சூட்டப்பட்டது. அதே போல் மெட்றாஸ் என்ற பெயரும் 1997-ல் சென்னை என்று மாற்றப்பட்டது.

சேத்துப்பட்டு

30 ஆயிரம் மக்கள் தொகையுடன் உருவான சென்னை நகரம், இன்று சுமார் 50 லட்சம் பேர்களோடு மகத்தான பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மக்கள் தொகை மட்டுமின்றி மக்களின் கண்ணோட்டத்திலும் மகத்தான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதும் மறுக்க முடியாது.

‘சென்னை’ என்று பெயர் பெற்றதற்கும் இருவேறு கருத்துகள் உள்ளன. வேங்கடபதி நாயக்கரின் தந்தை சென்னப்ப நாயக்கரின் நினைவாக சென்னப் பட்டனம் என்று பெயர் வந்ததென்றும் இங்கிருக்கும் சென்ன கேசவ பெருமாள் கோயில் பகுதி ‘சென்ன கேசவபுரம்’ என அழைக்கப்பட்டதாகவும் அந்த இடம்தான் சென்னை என்று மாறிப்போனதென்றும் பெயர்க் காரணங்கள் நிலவுகின்றன.

19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளலார் அவர்கள், சென்னையை தருமமிகு சென்னை எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஏராளமான மொழிகளும் இனங்களும் கலந்து குலாவி பெரு நகரமாக வளர்ந்திருக்கும் சென்னை பெருமைமிக்கதும் கூடத்தான்.

 

எது எப்படியோ சென்னையை இப்போது நினைத்துப் பார்த்தால் பெருமையாக இருக்கிறதல்லவா? வணக்கம் சென்னை.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

முதலில் கோழி வந்ததா அல்லது முட்டை வந்ததா... இந்தாங்க அறிவியல்பூர்வமான பதில்!

 
 

முட்டை

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் சிரித்துக்கொண்டே ஏதாவது பதில் சொல்லி சமாளித்து விடுவார்கள். ஏலியன்கள் இருக்கிறார்களா… எப்படி பிரபஞ்சம் உருவானது… காலப் பயணம் சாத்தியமா… இதுபோன்ற விடைத் தெரியாத கேள்விகளில் கொஞ்சம் எளிமையான கேள்வி கோழி -முட்டைதான்.

எல்லாருக்கும் இந்தக் கேள்வியில் இருக்கும் குழப்பம் இதுதான். ஒரு கோழி முட்டை ஒரு கோழியிலிருந்து வருகிறது என வைத்துக் கொண்டால், அப்போது அந்த கோழி எப்படி வந்திருக்கும்? அதுவும் ஒரு கோழி முட்டையிலிருந்து தானே வந்து இருக்க வேண்டும்.

கோழி தான் முதல் என்றால்:

கோழி முட்டையின் ஓடு உருவாதற்கு  ovocledidin  (oc-17)  என்ற புரதச்சத்து காரணமாக இருக்கிறது. இது கோழியிலிருந்து மட்டும்தான் கிடைக்கிறது. ஆகவே கோழி இருந்தால் மட்டுமே oc-17 என்ற புரதச்சத்து உருவாகி கோழி முட்டையை உருவாக்குகிறது.

 

முட்டை தான் முதல்:

பொதுவாக இனப்பெருக்கத்தின்போது இரு உயிரினங்களின்  டி.என்.ஏ மூலக்கூறுகள் இரட்டித்து பெருகி, சந்ததிகளுக்கு கடத்தப்படுகிறது. இதில் இரட்டித்துப் பெருகும்போது சில சமயங்களில் முழுவதும் இரட்டிப்பது இல்லை. அது சிறிய சிறியதாக பல ஆயிரம் ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

எடுத்துக்காட்டாக, ஆண் - பெண் இணைந்து ஒரு குழந்தையை பெற்று எடுக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தை 100 சதவிகிதம் பெற்றோரின் DNA குணாதிசயத்தை பெற்றிருக்கும் என்று சொல்ல முடியாது. அது 10 சதவீதம் வேறொரு குணாதிசயத்தைப் பெற்றிருக்கலாம்.

டார்வின் சொன்ன ‘குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்’ என்பதும் இது போல கொஞ்சம் கொஞ்சமாக டி.என்.ஏ இரட்டிப்பு ஆனதுதான். இப்படி பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஓர் உயிரினத்தின் டி.என்.ஏ மாறுபட்டு புதிய உயிரினம் உருவாகிறது.

ஆக, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கோழி போல் உருவம் கொண்டிருந்த ஒரு உயிரினத்தின் டி.என்.ஏ மாற்றமடைந்து, இப்போது நமக்குத் தெரிந்த கோழி இனமே உருவாகி இருக்கிறது.

 

இன்னும் எளிதான எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்தக் கோழி போன்ற உயிரினத்துக்கு Mr.X என பெயர் வைத்துக்கொள்வோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக Mr. X இடும் முட்டைகள் டி.என்.ஏ மாற்றமடைந்து கடைசியில் இன்று காணும் நமக்கு தெரிந்த கோழி வருகிறது.

இப்படிப் பார்த்தால் கோழி போன்ற உயிரினத்திலிருந்து முழுவதுமான பரிணாம வளர்ச்சி பெற்ற முட்டை வந்திருக்க வேண்டும். அதிலிருந்து  நாம் காணும் கோழி வந்துள்ளது. 

Mr.x ->   Mr.x முட்டை(நன்கு பரிணாம் அடைந்தது ) >>  கோழி..

ஆக ,முட்டையிலிருந்து தானே கோழி!

டார்வின் கொள்கைபடி குரங்கிலிருந்து மனிதன் வந்தான். குரங்கு டி.என்.ஏ.வில் இருந்து வேறுபட்டு,  கருவிலிருந்து பிறக்கின்ற குழந்தையை, மனிதக் குழந்தை என்றுதானே அழைக்கிறோம். கருவை முட்டையாகவும், குழந்தையை கோழியாகவும் வைத்துக் கொள்வோம்.ஆக, பல டி.என்.ஏ மாற்றங்கள் அடைந்து பிறக்கின்ற கோழியை, முட்டையிலிருந்து வந்தது எனக் கூறுவதுதான் சரியானதாக இருக்கும்.

 

இனி மேல் யார் கேட்டாலும் முதலில் வந்தது முட்டை தான் எனத் தைரியமாக கூறுங்கள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று

ஓகஸ்ட் – 22

 

1639 : பிரித்­தா­னியக் கிழக்­கிந்­தியக் கம்­ப­னி­யினர் தமி­ழ­கத்தின் மதராஸ் நக­ரத்தை (தற்­போ­தைய சென்னை) அமைத்­தனர்.


1642 : இங்­கி­லாந்தின் முதலாம் சார்ள்ஸ் மன்னன் ஆங்­கில நாடா­ளு­மன்­றத்தை "துரோ­கிகள்" என வர்­ணித்தான். ஆங்­கி­லேய உள்­நாட்டுப் போர் ஆரம்­ப­மா­னது.


varalaru-chennia1770 : பிரித்­தா­னிய கட­லோடி ஜேம்ஸ் குக் தலை­மை­யி­லான குழு­வினர் ஆஸ்­தி­ரே­லி­யாவின் கிழக்குக் கரையை அடைந்­தனர்.


1780 : கப்டன் ஜேம்ஸ் குக்கின் கப்பல் இங்­கி­லாந்து நோக்கி திரும்­பி­யது. (இப்­ப­ய­ணத்­தின்­போது ஹவாயில் குக் கொல்­லப்­பட்டார்).


1798 : ஐரியக் கிளர்ச்­சிக்கு ஆத­ர­வாக பிரெஞ்சுப் படைகள் அயர்­லாந்தில் தரை­யி­றங்­கின.


1831 : வேர்­ஜீ­னி­யாவில் நாட் டர்னர் எனும் கறுப்பின அடிமை தாக்­கு­தலை ஆரம்­பித்தான். 50 வெள்­ளை­யி­னத்­தி­னரும், பல நூற்­றுக்­க­ணக்­கான கறுப்­பின அமெ­ரிக்­கர்­களும் கொல்­லப்­பட்­டனர்.


1848 : நியூ மெக்­ஸிக்கோ ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுடன் இணைக்­கப்­பட்­டது.


1860 : பிரித்­தா­னியக் கடற்­ப­டையின் உத­வி­யுடன் கரி­பால்­டியின் படைகள் சிசி­லியில் இருந்து இத்­தா­லியின் பெரு­நி­லப்­ப­ரப்­பினுள் நுழைந்­தனர்.


1864 : 12 நாடுகள் இணைந்து ஹென்றி டியூனாண்ட் தலை­மையில் ஜெனீ­வாவில் செஞ்­சி­லுவைச் சங்­கத்தை ஆரம்­பித்­தனர்.


varalaru-japankorea1875 : சக்­காலின் மற்றும் கூரில் தீவுகள் தொடர்­பாக ரஷ்­யா­வுக்கும் ஜப்­பா­னுக்கும் இடையில் சென் பீட்­டர்ஸ்­பேர்க்கில் உடன்­பாடு எட்­டப்­பட்­டது.


1902:  தியோடர் ரூஸ்வெல்ட்,  மோட்டார் வாக­ன­மொன்றில் பயணம் செய்த முத­லா­வது அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யானார்.


1910 : கொரியா – ஜப்பான் இணைப்பு ஒப்­பந்தம் கையெ­ழுத்­தா­னது. இரண்டாம் உலகப் போர் முடியும் வரையில் கொரியா ஜப்­பானின் ஆட்­சியின் கீழ் இருந்­தது.


1911 : பாரிஸ் நகரில் திரு­டப்­பட்ட மோனா லிசா ஓவியம் மீண்டும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.


1914 : முதலாம் உலகப் போர்: பெல்­ஜி­யத்தில், பிரித்­தா­னி­யாவும் ஜேர்­ம­னியும் முதன் முதலில் நேர­டி­யாகப் போரில் ஈடு­பட்­டன.


1932 : தொலைக்­காட்சி சேவையை முதன் முத­லாக பிபிசி சோதித்­தது.


1941 : இரண்டாம் உலகப் போர்: ஜேர்மன் படைகள் ரஷ்­யாவின் சென் பீட்­டர்ஸ்­பேர்க்கை அடைந்­தனர். லெனின்­கிராட் மீதான முற்­றுகை ஆரம்­ப­மா­னது.


1942 : இரண்டாம் உலகப் போரில் ஜேர்­ம­னிக்கு எதி­ராக பிரேஸில் போர் பிர­க­டனம் செய்­தது. 


1944 : ருமே­னி­யாவை சோவியத் ஒன்­றியம் கைப்­பற்­றி­யது.


1949 : கன­டாவில் 8.1 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் ஏற்­பட்­டது.

"
1962 : பிரெஞ்சு ஜனா­தி­பதி சார்ள்ஸ் டி கோல் மீதான கொலை முயற்சி தோல்­வி­ய­டைந்­தது.


1972 : ரொடீ­சியா (ஸிம்­பாப்வே) அதன் இன­வாத கொள்கை கார­ண­மாக சர்­வ­தேச  ஒலிம்பிக் அமைப்பில் இருந்து வெளி­யேற்­றப்­பட்­டது.


1978 : சண்­டி­னீஸ்டா தேசிய விடு­தலை முன்­னணி எனும் கிளர்ச்சி அமைப்பின் படைகள் நிக்­க­ரா­கு­வாவின் தேசிய அரண்மனையைக் கைப்பற்றின.


1985: இங்கிலாந்தின் மன்செஸ்டர் நகரில் விமானமொன்று தீப்பற்றியதால் 55 பேர் உயிரிழந்தனர்.
2006: ரஷ்ய, யுக்ரைன் எல்­லையில் விமா­ன­மொன்று விபத்­துக்­குள்­ளா­னதால் 170 பேர் உயி­ரி­ழந்­தனர்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

 

இப்பிடியும் திருக்குறளை கேட்கலாமா? சிரிக்காம சிந்திங்க!!! - 22-08-2017

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

  • தொடங்கியவர்

சென்னையின் நூற்றாண்டு வரலாற்றை தாங்கி நிற்கும் கட்டடங்கள்..! அன்றும் இன்றும் - சிறப்பு புகைப்படத்தொகுப்பு #madrasday

 
 

சென்னையின் நூற்றாண்டு வரலாற்றை தாண்டி நிற்கும் பிரபல கட்டடங்களின் புகைப்படத்தொகுப்பு இது. அப்போதும் இப்போதும் அந்த கட்டடங்கள் எப்படி இருந்தன/இருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன இந்தப் புகைப்படங்கள்.  சென்னை எவ்வளவு மாறிவிட்டது... அந்தக் கட்டடங்கள் எப்படி மாறாமல் இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது... வாவ்...!  

chen_1_20493.jpg
அன்று: செகண்ட் லைன் பீச்சின் அன்றைய தோற்றம்,
இன்று: ஏசு அழைக்கிறார் ஜெப கோபுரம்.

chen_1a_20216.jpg

history0708-vc1_20226.jpg
chen_2_20455.jpgஅன்று: தபால் தந்தி நிலைய தலைமை அலுவலகம்,
இன்று: தந்தி இல்லை... தபால் நிலைய தலைமை அலுவலகம் மட்டும்தான்.

chen_2a_20001.jpg

history0708-vc1_20226.jpg

chen_3_20211.jpg
அன்று: பாரீஸ் கார்னரின் பரந்த சாலையும் உயர்ந்த கோபுரமும்,
இன்று: பாரிமுனை நெருக்கடியில் காப்பீட்டுக்கழகம்.

chen_3a_20358.jpg

history0708-vc1_20226.jpg

chen_4_10198.jpgஅன்று: காற்று வீசும் பாரி கம்பெனி,
இன்று: மூச்சுத் திணறும் பாரி கம்பெனி.

chen_4a_10325.jpg

history0708-vc1_20226.jpg

chen_5_10463.jpgஅன்று: குளிர் கூவம் கடந்தால் தீவுத்திடல்,
இன்று: குமட்டலைக் கடந்தால் தீவுத்திடல்.

chen_5a_10009.jpg

history0708-vc1_20226.jpg

chen_6_10182.jpg

அன்று: சென்னை பல்கலைகழகத்தில் இருக்கும் சிலை,
இன்று:
சென்னை பல்கலைகழகத்தில் இருக்கும் சிலை.
chen_6a_10368.jpg

history0708-vc1_20226.jpg

chen_7_10087.jpg

சென்னை மெரினா பீச் ரோட்டில் இருக்கும் விவேகானந்தர் இல்லம்...

chen_7a_10235.jpg

history0708-vc1_20226.jpg

chen_8_10243.jpg
சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளம்...

chen_8a_10376.jpg

history0708-vc1_20226.jpg

chen_9_10488.jpg
சென்னை அண்ணாசாலையில் உள்ள LIC...

chen_9a_10042.jpg

history0708-vc1_20226.jpg

chen_10_10169.jpg
சென்னை வாலாஜா சாலை சந்திப்பு...

chen_10a_10306.jpg

history0708-vc1_20226.jpg

chen_12_10452.jpg
சென்னை துறைமுகம் அருகே உள்ள கட்டடம்...

chen_12a_10599.jpg

history0708-vc1_20226.jpg

chen_13_10200.jpg
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அமீர் மஹால்...

chen_13a_10335.jpg

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

சிராந்தி ராஜபக்ச அழகு ராணிப் போட்டியில் பங்கேற்ற காட்சிகள்

  • தொடங்கியவர்

லியோனிட் ஹர்விக்ஸ்

 

21CHRGNHURWICZ
 
 

போலந்து நாட்டைச் சேர்ந்த பொருளியல் அறிஞரும் பொருளியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான லியோனிட் ஹர்விக்ஸ் (Leonid Hurwicz) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

ரஷ்யாவில், மாஸ்கோவில் போலந்தைச் சேர்ந்த யூதக் குடும்பத்தில் பிறந்தார் (1917). இவர் பிறந்து சில காலம் கழித்து குடும்பம் வார்ஷா திரும்பியது. 1938-ல் வார்சா பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்று, எல்.எல்.எம். பட்டம் பெற்றார். இரண்டாம் உலகப்போர் தொடங்கிய பிறகு, குடும்பம் நாசிக்களின் துன்புறுத்தலுக்கு ஆளாகியது.

பெற்றோரும் சகோதரனும் சிறை பிடிக்கப்படவே இவர் அகதியானார். பின்னர் போர்ச்சுகல் சென்றார். 1939-ல் லண்டன் சென்று, லண்டன் பொருளியல் கல்லூரியில் பயின்றார். அதன்பிறகு அமெரிக்காவுக்குச் சென்றார்.

அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும் சிகாகோ பல்கலைக்கழகத்திலும் பொருளியலில் பட்டம் பெற்றார். 1940-ல் அமெரிக்காவில் இவரது குடும்பம் இவருடன் இணைந்தது. 1941-ல் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப அமைப்பில் உதவி ஆராய்ச்சியாளராக இணைந்தார்.

இரண்டு ஆண்டுகள் சிகாகோ பல்கலைக்கழகத்தின் வானியல் அமைப்பில் பொருளாதாரத் துறையில் புள்ளியியல் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் ஐயோவா மாநிலக் கல்லூரியில் பொருளாதாரத்தில் அசோசியேட் பேராசிரியராக நியமனம் பெற்றார்.

யேல் பல்கலைக்கழகத்தின் பொருளியல் ஆராய்ச்சிகளுக்கான கோவல்ஸ் அறக்கட்டளையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். ஆதார ஓதுக்கீடு கோட்பாடு (theory of resource allocation), நவீன பரவலாக்கப்பட்ட ஒதுக்கீட்டு வழிமுறைகள் (modern decentralized allocation mechanisms) ஆகியவற்றைக் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

கோட்பாட்டு பொருளாதாரம், நலன்புரி பொருளாதாரம், பொருளாதாரக் கோட்பாடு, பொருளாதாரக் கட்டமைப்பின் வழிமுறைகள், தொழில்நுட்பங்கள், இலக்குகள், கேம் தியரி, சமூகத் தேர்வு இலக்குகளை நடைமுறைப்படுத்துதல் மற்றும் மாதிரிப் பொருளாதார நிறுவனங்கள், கணிதப் பொருளாதாரம் என அனைத்துக் களங்களிலும் ஒப்பீடு மற்றும் பகுப்பாய்வுகளை மேற்கொண்டார்.

பல பொருளியல் இதழ்களின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார். ‘தி தியரி ஆஃப் எகனாமிக் மிஹேவியல்’, ‘தியரி ஆஃப் ஃபிர்ம்’ மற்றும் ‘இன்வெஸ்ட்மென்ட்’ உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.

‘கேம் தியரி’ என்ற பகிர்வுக் கொள்கையை பொருளியலில் பயன்படுத்தியவர்களுள் முன்னோடி இவர்தான். இவரது கோட்பாட்டை மேலும் வலுவூட்டி தற்போது அது நடைமுறை சந்தைச் சூழல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பொருளியலில் பொறிமுறை வடிவமைப்புக் கோட்பாட்டுக்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்ததற்காக 2007-ம் ஆண்டு பொருளியலுக்கான நோபல் பரிசை எரிக் மாஸ்க்கின் மற்றும் ரோஜர் மையெர்சன் ஆகியோருடன் இணைந்து வென்றார்.

தனது 90-வது வயதில் இந்தப் பரிசை வென்றார். பொருளியல் தவிர மொழியியல், தொல்லியல், உயிர் வேதியியல் மற்றும் இசையிலும் ஆர்வம் கொண்டிருந்தார். மேலும் வானவியல் குறித்த ஆராய்ச்சிகளும் மேற்கொண்டார்.

அமெரிக்க கலை, அறிவியல் அகாடமியின் ஃபெலோ, அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினர், அமெரிக்க பொருளாதார அசோசியேஷனின் ஃபெலோ உள்ளிட்ட பல அமைப்புகளில் செயல்பட்டார். அரசியல் அறிஞர், சமூக அறிவியல் அறிஞர், பொருளியல் அறிஞர் எனப் போற்றப்பட்ட லியோனிட்ஹர்விக்ஸ் தனது 91-வது வயதில் மறைந்தார்

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
‘அழகிய வடிவம் ஒளிவீசும்’
 

image_47f22a3bac.jpgஇந்த வாழ்க்கையில் எமக்கு கிடைக்கும் வெற்றிகள், தோல்விகள் அதனால் வருகின்ற இன்ப துன்பங்கள், எமக்குள் பல உருவங்களை வழங்கிவிடுகின்றன. 

அவைகள் நிரந்தரமானவைகள் அல்ல. சிலர் எங்களைப் பாராட்டலாம்; கேலி, கிண்டல் செய்யலாம். அவை, அவர்களால் உருவாக்கப்பட்ட எம்மைப்பற்றிய வடிவங்கள். இவற்றில் போலியானவையும் நிஜமானவையும் இருக்கும். 

ஆனால் நான், என்னைப்பற்றி, என்ன உண்மையான உருவம் கொண்டுள்ளேன் என்பதை உணரவேண்டும். அல்லவா? 

எங்களுக்குள் உறங்கிக் கிடக்கும் போலியான கெட்ட குணங்களை அறவே அகற்றினால் மட்டுமே, எங்களது அழகிய வடிவம் ஒளிவீசும்.  

அதை உங்களால் சுவீகரிக்க முடியும். எவரையும், இந்த முழு உலகையும் கவரும் ஆற்றல்கள் உங்களுக்கு உண்டு. நம்புங்கள். 

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று ஓகஸ்ட் 23
 

image_aab9b567b1.jpg1541: பிரெஞ்சு கடலோடியான  ஜாக் கார்ட்டியர் கனடாவின் கியூபெக் நகரத்திற்கு அருகில் தரையிறங்கினார்.

1765: பர்மா – சியாமிய யுத்தம் ஆரம்பமாகியது.

1839: ஹொங்கொங்கை பிரிட்டன் கைப்பற்றியது. சீனாவுடனான யுத்தத்திற்கு தயாராகுவதற்கான தளமாக ஹொங்கொங்கை பிரிட்டன் பயன்படுத்தியது.

1914: ஜேர்மனிக்கு எதிராக ஜப்பான் போர் பிரகடனம் செய்தது.

1938: அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் இன்னிங்ஸ் ஒன்றில் இங்கிலாந்து வீரர் லென் ஹட்டன் 364 ஓட்டங்களைப் பெற்று  புதிய சாதனை படைத்தார்.

1939: ஜேர்மனயும் சோவியத் யூனியனும் மோதல்தவிர்ப்பு உடன்படிக்கை செய்துகொண்டன.

1989: அவுஸ்திரேலியாவில் 1645 விமானிகள் ராஜினாமா.

1990: சோவியத் யூனியனிலிருந்து பிரிவதாக ஆர்மேனியா பிரகடனம் செய்தது.

1990: வளைகுடா யுத்தத்தை தவிர்ப்பதற்காக ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுஸைன் மேற்குலக 'விருந்தினர்கள்' பலருடன் தொலைக்காட்சியில் தோன்றினார். அவர்கள் பணயக்கைதிகள் என மேற்குநாடுகளால் விமர்சிக்கப்பட்டது.

1990: தாம் ஒன்றிணையப்போவதா கிழக்கு ஜேர்மனியும்மேற்கு ஜேர்மனியும் அறிவித்தன.

1996: அமெரிக்கர்களுக்கு எதிராக ஒசாமா பின்லேடன் போர்ப் பிரகடனம்.

2000: பஹ்ரெய்னில் இடம்பெற்ற விமான விபத்தில் 143 பேர் பலி.

2011: லிபியாவில் தேசிய இடைக்கால கவுன்ஸிலின் படைகள் பொப் அல் அஸீஸா நகரை கைபற்றியதன் பின்னர் கேணல் கடாபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

சென்னை என்னும் பழம்பெரும் மாநகரம் #Chennai378

 

நம்ம மெட்ராஸ்-க்கு இன்றோட 378 வயசு ஆகுது. நட்புக்காக ஒரு தினம், நன்றி சொல்ல ஒரு தினம், கட்டிப்பிடிக்க ஒரு தினம் அப்படின்னு பல்வேறு தினங்கள் கொண்டாடும்போது, நம்மை வாழவைக்குற நம்ம மெட்ராஸோட பிறந்தநாளைப் பெரிய அளவுல கொண்டாட பெருமைப்படணும்.

இந்தப் பழம்பெரும் மாநகரத்தோட பாரம்பர்யம், கலசாரம், மரபு, வரலாறு, தனிச்சிறப்புகள் இவை எல்லாவற்றையும் பற்றி மக்கள் தெரிஞ்சுக்க, முதன்முதலாக ஆகஸ்ட் 22 அன்று 'மெட்ராஸ் டே' கொண்டாடணும்னு தொடங்கியது வரலாற்றாசிரியர் திரு.முத்தையா என்பவர். இப்போ பல வருடங்களுக்குப் பிறகு 'மெட்ராஸ் டே' என்பது, சென்னையில் ஒரு வாரம் அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.      
அது என்ன தாத்தா, அப்பா, பேரன்?   

1639 ஆகஸ்ட் 22 அன்று விஜயநகர அரசரிடமிருந்து பிரிட்டிஷுடைய ஈஸ்ட் இந்தியா கம்பெனி, 'மதராசப்பட்டினம்' கிராமத்தை வாங்குச்சு, அந்த நாளிலிருந்து மெட்ராஸ் பிறப்பு கணக்கிடப்படுது.    

1956இல் 'மெட்ராஸ் பிரெஸிடென்சி' பிரிக்கப்பட்டு மெட்ராஸ் (தமிழ்நாடு), கேரளா, கர்நாடகம், ஆந்திரா என நான்கு மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. 1969இல் மெட்ராஸ் பிரெஸிடென்சி-க்குத் தமிழில் 'அறிஞர் அண்ணா' தமிழ்நாடு என்று பெயர்சூட்டி, இப்போ 48 வருஷம் ஆயிடுச்சு. தமிழ்நாட்டுத் தலைநகரமான நம்ம மெட்ராஸ்க்கு 'சென்னை' என்று பெயர்மாற்றப்பட்டு, இப்போ பேரனுக்கு 21 வருஷம் ஆகுது.

'நம்ம சென்னை' சென்னையில நமக்கு ரொம்ப பழக்கப்பட்ட, உடனே ஞாபகம் வரக்கூடிய இடங்களில் சில,

mMG_4071_14486.jpg

சென்னையின் தூரங்கள் இங்கிருந்துதான் கணக்கிடப்படுகின்றன - முத்துசாமி பாலத்திலுள்ள ஜுரோ மைல்கல்!

central_%282%29_14446.jpg

சுமார் மூன்றரை லட்சம் மக்கள் தினசரி பயன்படுத்தும், 144 வருட பழைமை வாய்ந்த சென்னை சென்ட்ரல்

TRIPLICANE_14384.jpg

108 திவ்ய பிரபந்தங்களில் ஒன்றான பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி!

teynampet_signal_15062.jpg

சென்னையின் வெகுநேர ரெட் சிக்னல் கொண்டவற்றில் ஒன்றான தேனாம்பேட்டை சிக்னல்!

t.nagar_15166.jpg

ஓயாமல் ஷாப்பிங் செய்பவருக்குக்கூட உட்கார இடம் இல்லாத பிஸி தியாகராய நகர்!

MYLAPOE_15359.jpg

தினந்தோறும் திருவிழா போல காட்சி அளிக்கும் கபாலீஸ்வரர் கோயில், மயிலாப்பூர்!

mount_road_15596.jpg

மாநகரத்தின் முதல் உயரமான கட்டடம் LIC பில்டிங், அண்ணா சாலை!

koyampedu_15292.jpg

ஆசியாவிலே மிகப் பெரிய பேருந்து முனையமான கோயம்பேடு பஸ் ஸ்டான்ட்!

egmore_15011.jpg

பதினொரு பிளாட்பாரம் கொண்ட எழும்பூர் ரயில் நிலையம்!

BEASANT_NAGAR_15348.jpg

தத்துவஞானி 'அன்னி பெசன்ட்' நினைவாக அவர் பெயர் கொண்ட பெசன்ட் நகர்!

anna_nagar_15595.jpg

அறிஞர் அண்ணா பவள விழா நினைவாக அண்ணா நகரில் கட்டப்பட்ட அண்ணா வளையம்!

origin_copy_15473.jpg

பொழுதுபோக்குக்கும் சரி, போராட்டத்துக்கும் சரி நம்ம மெரினாவை மிஞ்ச முடியாது! மெரினா கடற்கரை!

ROYAPURAM_15259.JPG

மிகப் பெரிய மீன்பிடித் துறைமுகத்தைக் கொண்ட ராயபுரம்!

chetpet_15358.jpg

நகரத்தில் எஞ்சியிருக்கும் இயற்கை நீர்வளங்களில் ஒன்றைக் கொண்ட செட்பெட்!
ஹாப்பி மெட்ராஸ் டே!!

naepiar_bidge_15133.jpg

செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் மெரினா கடற்கரையையும் இணைக்கும் சுமார் 145 வருடம் பழைமையான நேப்பியர் பாலம்!

valuva_kottam_15385.jpg

திருவள்ளுவரின் நினைவாகக் கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டம்!

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
தனித்தீவில் 20 வருடங்களாக வசிக்கும் முதியவர்
 

பாலைவனத் தீவில் 20 வருடங்களாக, யாருடைய உதவியும் இன்றி வாழ்ந்துவரும் முதியவர் ஒருவர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் ரெஸ்டோரேஷன் ஐலன்ட் எனப்படும் தீவில் இவர் வசித்து வருகிறார்.

image_8f00cb6295.jpg

டேவிட் கிலெஷீன் என்ற 73 வயதுடைய இந்த முதியவர், ஆரம்ப காலங்களில் பணக்காரராக இருந்த போதிலும் பங்குச் சந்தை சரிவின் காரணமாக சொத்துக்களை இழந்தவர் எனக் கூறப்படுகிறது.

1997 ஆம் ஆண்டு இந்தத் தீவுக்கு ஒரு நாய்க்குட்டி ஒன்றுடன் வந்து குடியேறியிருக்கிறார் டேவிட். அதன் பின்னர் தனக்குத் தேவையான உணவுகளை தானே தயாரித்து, உண்டு வாழ்ந்து வருகிறார்.

image_63ea205259.jpg

இது குறித்து அவர் கூறுகையில்,

“இங்கே விஷமான பாம்பு வகைகளும் ஆபத்தான பூச்சியினங்களும் இராட்சத முதலைகளும் வாழ்கின்றன. எனினும் உலகின் வேறு இடங்களில் உள்ளதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் போன்று இவை ஆபத்தை விளைவிக்கக் கூடியவை அல்ல.

நாம் இயற்கையோடு ஒன்றித்து வாழ வேண்டும். இங்கே எனக்கு பாதுகாப்பு உள்ளதாக நான் கருதுகிறேன். ஆதலால் இந்த இயற்கையை நான் பெரிதும் நேசிக்கிறேன். எனக்கு ஆபத்து ஏற்படாது என்ற நம்பிக்கையுடன் நித்திரைக்குச் செல்கிறேன்”
என்றார்.

இவர் பாலைவனப் பகுதியில் தனித்து வாழ்வதால் அதிகாரிகளால் அங்கிருந்து சென்றுவிடுமாறும் பணிக்கப்பட்டிருக்கிறார்.

எனினும் தனது மரணம் இங்கேயே நிகழ வேண்டும் என்றும் இந்த உலகத்தின் சுவர்க்கமே இந்தத் தீவுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

image_77741d21d2.jpgimage_228edd3b3d.jpg

 

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

153 கிலோ எடையில் ராட்சத சமோசா - லண்டனில் உலக சாதனை

இங்கிலாந்தில் முஸ்லீம் தொண்டு நிறுவனம் ஒன்று 153.1 கிலோ எடையுள்ள மிகப்பெரிய சமோசா செய்து உலக சாதனை படைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
 
153 கிலோ எடையில் ராட்சத சமோசா - லண்டனில் உலக சாதனை
 
லண்டன்:

இங்கிலாந்து தலைநகரான லண்டனில் உள்ள முஸ்லீம் தொண்டு நிறுவனம் ஒன்று உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டது. நேற்று லண்டனில் உள்ள ஒரு மசூதியில் பலர் இணைந்து உலகின் மிகப்பெரிய சமோசா செய்துள்ளனர்.

அவர்கள் 153.1 கிலோ எடையுள்ள, ஆசியாவில் பிரபல திண்பண்டமான சமோசா செய்து உலக சாதனை படைத்துள்ளனர். சமோசாவை கின்னஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர். அனைத்தும் சரியாக இருந்த பின்னர் உலகின் மிகப்பெரிய சமோசா என சான்றிதழ் வழங்கினர்.

இந்த ராட்சத சமோசாவை செய்வதற்கு 15 மணி நேரம் ஆனது. சோதனைக்கு பின்னர் சமோசாவை ஆதரவற்றவர்களுக்கு வழங்கியதாகவும் தொண்டு நிறுவனத்தினர் கூறினர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

'இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்!

 
 

'இம்சை அரசன் 24-ம் புலிகேசி'-யின் ஃபர்ஸ்ட் லுக்

கடந்த 2006-ம் ஆண்டு, வடிவேலு கதாநாயகனாக நடித்து வசூலை வாரிக்கொட்டிய திரைப்படம், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி'. இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' தயாரித்தது. ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்த சிம்புதேவன், இந்தப் படத்தை இயக்கினார். தற்போது, இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவன்தான் இந்தப் பாகத்தின் இயக்குநர். எஸ் பிக்சர்ஸுடன் இணைந்து லைக்கா நிறுவனமும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. மேலும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

'இம்சை அரசன் 24-ம் புலிகேசி'-யின் ஃபர்ஸ்ட் லுக்

...

  • தொடங்கியவர்

உலகைச் சுற்றும் நாடோடிக் குடும்பம்

நமது வேலையை விட்டுவிட்டு உலகை சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது நம்மில் பலருக்கு கனவு. ஆனால், பதினேழு வருடமாக உலகைச் சுற்றும் ஒரு குடும்பம் இன்னமும் தமது சொந்த ஊருக்கு திரும்பவில்லை. இரண்டாயிரமாம் ஆண்டில் ஆர்ஜண்டீனாவை விட்டு ஒரு பாரம்பரிய கார் ஒன்றில் புறப்பட்ட ஸாப்ப் குடும்பத்தினர் வழியிலேயே ஒவ்வொரு கண்டத்திலுமாக நான்கு குழந்தைகளையும் பெற்றிருக்கிறார்கள். சுமார் இருபது வருடங்களுக்கு பின்னர் இவர்கள் இப்போது இங்கிலாந்துக்கு வந்திருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

மேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்: 23-8-1990

 

மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் அக்டோபர் மாதம் 3-ந்தேதி ஒன்றாக இணைவதாக 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ந்தேதி முடிவெடுத்தது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியினர் லண்டன் மீது குண்டு வீச்சை ஆரம்பித்தனர். * 1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று இங்கிலாந்தில்

 
மேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்: 23-8-1990
 
மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் அக்டோபர் மாதம் 3-ந்தேதி ஒன்றாக இணைவதாக 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ந்தேதி முடிவெடுத்தது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியினர் லண்டன் மீது குண்டு வீச்சை ஆரம்பித்தனர். * 1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று இங்கிலாந்தில் பாடசாலை ஒன்றின் மேல் வீழ்ந்ததில் 61 பேர் பலியானார்கள் * 1948 - ஏ. கே. செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் வெளியிடப்பட்டன. * 1952 - அரபு லீக் அமைக்கப்பட்டது.

* 1966 - லூனார் ஆர்பிட்டர் 1 முதன் முதலாக சந்திரனின் சுற்றுவட்டத்தில் இருந்து எடுத்த பூமியின் படங்களை லூனார் ஆர்பிட்டர் 1 அனுப்பியது. * 1973 - இண்டெல்சாற் தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது. * 1975 - லாவோசில் கம்யூனிசப் புரட்சி வெற்றி பெற்றது. * 1990 - ஆர்மேனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.

* 1990 - மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் அக்டோபர் 3 இணையவிருப்பதாக அறிவித்தன. * 2000 - பஹ்ரேய்னில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 143 பேர் கொல்லப்பட்டனர். * 2006 - நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் பதவியேற்றார்.

 

 

 

மகாத்மா காந்தி பற்றிய முதல் வரலாற்றுப்படம் வெளிவந்த நாள்: 23-8-1948

 

மகாத்மா காந்தி பற்றிய முதல் வரலாற்றுப்படம் தமிழிலும் தெலுங்கிலும் 1948-ம் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 23-ந்தேதி வெளியிடப்பட்டன. இந்தப் படத்தை ஏ.கே. செட்டியார் தயாரித்திருந்தார். இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1541 - பிரெஞ்சு நாடுகாண் பயணி ஜாக் கார்ட்டியேர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தார். * 1555 - நெதர்லாந்தில் கால்வினிஸ்துகளுக்கு முழுமையான உரிமைகள் வழங்கப்பட்டன.

 
 
 
 
மகாத்மா காந்தி பற்றிய முதல் வரலாற்றுப்படம் வெளிவந்த நாள்: 23-8-1948
 
மகாத்மா காந்தி பற்றிய முதல் வரலாற்றுப்படம் தமிழிலும் தெலுங்கிலும் 1948-ம் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 23-ந்தேதி வெளியிடப்பட்டன. இந்தப் படத்தை ஏ.கே. செட்டியார் தயாரித்திருந்தார்.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1541 - பிரெஞ்சு நாடுகாண் பயணி ஜாக் கார்ட்டியேர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தார். * 1555 - நெதர்லாந்தில் கால்வினிஸ்துகளுக்கு முழுமையான உரிமைகள் வழங்கப்பட்டன. * 1784 - மேற்கு வட கரோலினா (தற்போது கிழக்கு டென்னசி) பிராங்கிளின் என்ற பெயரில் தனி நாடாக அறிவித்தது. இது ஐக்கிய அமெரிக்காவால் ஏற்கப்படவில்லை. * 1821 - மெக்சிகோ, ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைந்தது. * 1839 - சீனாவின் கிங் சீனர்களுடன் போரிடுவதற்காக ஐக்கிய இராச்சியம் ஹாங்காங்கை கைப்பற்றியது.

* 1914 - முதலாம் உலகப் போர்: ஜப்பான் ஜெர்மனியுடன் போரை அறிவித்தது. * 1929 - பாலஸ்தீனத்தில் அரபுக்கள் யூதர்களைத் தாக்கி அவர்களில் 133 பேரைக் கொன்றனர். * 1939 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பின்லாந்து, உக்ரைன், போலந்து ஆகியவற்றை தமக்கிடையே பகிர்வது என்றும் இரகசிய முடிவெடுக்கப்பட்டது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

தருமமிகு... பெருமைமிகு சென்னைக்கு வயசு 378 #Chennai378

 

சென்னை எழும்பூர் Chennai378

ஏறத்தாழ 378 ஆண்டுகளுக்கு முன் தமிழகக் கடற்கரை ஓரம் இருந்த ஒரு சிறு மீனவக் குப்பத்தில் இருந்துதான் சென்னையின் சரித்திரம் துவங்குகிறது.

விறுவிறுப்பான சினிமா போல அமைந்த சென்னையின் கதை இது...

வாணிபம் செய்ய இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் தென்னிந்தியாவில் குடிபெயர்ந்த இடம் நிசாம் பட்டினம் மற்றும் பெத்தபள்ளி. அது வட ஆந்திர மாநிலத்தின் பகுதி.

அங்கு நிலவிய தட்ப வெப்பநிலை அவர்களுக்கு ஒத்துவரவில்லை. அங்கிருந்து சிறு சிறு படகுகளில் தங்கள் மூட்டை முடிச்சுகளை ஏற்றிக் கொண்டு பழவேற்காட்டுக்கு வடக்கே சில கிலோமீட்டர் தூரத்தில் ஆறுமுகப் பட்டினத்தை 1626 -ல் அடைந்தனர். அங்கும் துறைமுக வசதி சரியாக இல்லை.

ஆறுமுகப் பட்டினத்தில் கிடங்கின் தலைவனாகப் பணியாற்றி வந்த பிரான்சிஸ் டே என்பவர் 1637-ல் இடம் தேடி பாண்டிச்சேரி வரை கடற்கரையோரமாகப் பயணித்தபோது, பழவேற்காட்டுக்குத் தெற்கே இருந்த இடம் நெசவுப் பொருள்களை மலிவாக வாங்கவும் கிடங்கு அமைப்பதற்கு ஏற்றதாகவும் இருப்பதைக் கண்டார்.

அந்த இடம் கிழக்கே கடலாலும், வடக்கே கூவம் ஆற்றாலும், தெற்கே அடையாறு ஆற்றாலும் மேற்கே பின்னாளில் எழும்பூர் ஆறு என அழைக்கப்பட்ட ஆற்றாலும் சூழப்பட்டிருந்தது. மூன்று பக்கத்திலும் இயற்கை அரண்கள் இருந்ததால் இந்த இடம் பிரான்சிஸ் டேக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. டே தேர்ந்தெடுத்த அந்த இடம்தான் ‘சென்னைப் பட்டினம்’. தேர்ந்தெடுத்த ஆண்டு 1637.

இங்குத் தொழில் தொடங்க அனுமதி பெற அப்போது தொண்டை மண்டலத்தை ஆண்ட நாயக்கர்களை அணுகினார்கள். அவர்கள் தாங்கள் தேர்வு செய்திருந்த நிலப்பகுதியைச் சொன்னதும் வேங்கடபதி சந்தோஷமாகச் சம்மதித்தார். ஆங்கிலேயர் மூலமாகப் பாதுகாப்பையும் அதே சமயத்தில் வருவாயையும் ஈட்ட முடியும் என்ற திருப்திதான் வேங்கடபதி நாயக்கரின் மகிழ்ச்சியான ஒப்புதலுக்குக் காரணம்.

1639-ல் ஆகஸ்ட் 22-ம் தேதி ‘நாயக்கர்கள் - டே’ ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆண்டுக்கு 1,200 வராகன் கிஸ்தி கட்டுவதற்கு ஆங்கிலேயர்கள் ஒப்புக்கொண்டனர். இதைத்தான் சென்னை பிறந்த ஆண்டாகக் கொண்டாடுகிறார்கள்.

கடற்கரையோரமெங்கும் சிறுசிறு மீனவக் குப்பங்கள் திருவொற்றியூர் முதல் திருவல்லிக்கேணி வரை இருந்தன. இப்பொழுது ‘செயின்ட் ஜார்ஜ் கோட்டை’ இருக்கும் இடம் அப்போது மதுரசேனன் என்ற மீனவனின் வாழைத் தோட்டமாக இருந்தது. அதனருகே நரிமேடு எனும் குன்று இருந்தது. அதனருகே சிறு தீவு (இப்போது தீவுத் திடல்). கடற்கரை ஓரமாக நின்று பார்த்தால் நகரி மலையின் உச்சி தெரியும். கப்பல் மாலுமிகளுக்கு அந்த நாள்களில் அதுதான் கலங்கரை விளக்கம். நரிமேட்டில் இருந்த நரிகளை வேட்டையாடுவது ஆங்கிலேயர்களின் பொழுதுபோக்கு. அதை அடிப்படையாக வைத்து எழுத்தாளர் விநாயக முருகன், ‘வலம்’ என ஒரு நாவலே எழுதியிருக்கிறார்.

தீவுத்திடல்

பிராட்வே சாலை இருக்கும் இடத்தில் சிறு கால்வாய் ஓடிக் கொண்டிருந்தது. கால்வாய்க்கு மேற்கே விளை நிலங்கள். அவற்றின் பாசனத்துக்கு உதவியாக ஏரிகள் இருந்தன.

‘பூவிருந்தவல்லியிலிருந்து சென்னையை உள்ளடக்கிய தொண்டை மண்டலப் பகுதியை சந்திரகிரி அரசன் கீழ் வேங்கடபதி நாயக்கர் ஆண்டுவந்தார். அவர் ஆங்கிலேயர்களுக்கு நான்கு சிற்றூர்களைத் தந்தார்’ என்று மெக்கன்சி பதிவுசெய்துள்ளார். அவை முறையே மதறாஸ் குப்பம், சென்னைக் குப்பம், ஆர் குப்பம், மேலுப்பட்டு.

பண்டகச் சாலைக் கட்டட வேலை, 1640- ஆண்டு மார்ச் முதல் தேதி தொடங்கப்பட்டது. இக் கட்டடத்தின் ஒரு பகுதி ‘செயின்ட் ஜார்ஜ் தின’த்தில் கட்டி முடிக்கப்பட்டதால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்று பெயரிட்டனர். பணப்பற்றாக்குறை காரணமாக மெதுவாகவே வளர்ந்தது கோட்டை. 14 ஆண்டுகள் கழித்து 1653-ல் கோட்டை முழுமையடைந்தது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னப்பட்டினம் என்றும் தெற்குப் பகுதி மதறாஸ் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பட்டினங்களையும் ஒன்று சேர்த்து ஆங்கிலேயர்கள் மெட்றாஸ் என்றனர். சென்னை, மதறாஸ் இரண்டுமே மக்களால் சொல்லப்பட்டு வந்தது. 1653-ல் மதறாஸ் என்ற ஒரு சிறு பிராந்தியத்தின் பெயர் தென்னிந்தியாவுக்கான பெயராக மாறியது. மதறாஸ் மாகாணம் என அழைக்கப்பட ஆரம்பித்தது. பின்னர் 1702-ல் முகலாயர்களாலும் 1741-ல் மராட்டியர்களாலும் தாக்குதலுக்கு ஆளானது. 1746-ல் பிரெஞ்சு ஆட்சியர்களின் கைக்கு மாறியது.

மீண்டும் ஆங்கிலேயர்கள் ஆட்சியைப் பிடித்தனர். அதன் பிறகு 1758-ல் மீண்டும் பிரெஞ்சு ஆட்சி. ஆனால், இரண்டே மாதங்களில் ஆங்கிலேயர்கள் மீட்டனர். அதன்பிறகு இந்தியா சுதந்திரம் அடையும் வரை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர் வசமாகவே இருந்தது.

சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று 1968-ம் ஆண்டு பெயர் சூட்டப்பட்டது. அதே போல் மெட்றாஸ் என்ற பெயரும் 1997-ல் சென்னை என்று மாற்றப்பட்டது.

சேத்துப்பட்டு

30 ஆயிரம் மக்கள் தொகையுடன் உருவான சென்னை நகரம், இன்று சுமார் 50 லட்சம் பேர்களோடு மகத்தான பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மக்கள் தொகை மட்டுமின்றி மக்களின் கண்ணோட்டத்திலும் மகத்தான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதும் மறுக்க முடியாது.

‘சென்னை’ என்று பெயர் பெற்றதற்கும் இருவேறு கருத்துகள் உள்ளன. வேங்கடபதி நாயக்கரின் தந்தை சென்னப்ப நாயக்கரின் நினைவாக சென்னப் பட்டனம் என்று பெயர் வந்ததென்றும் இங்கிருக்கும் சென்ன கேசவ பெருமாள் கோயில் பகுதி ‘சென்ன கேசவபுரம்’ என அழைக்கப்பட்டதாகவும் அந்த இடம்தான் சென்னை என்று மாறிப்போனதென்றும் பெயர்க் காரணங்கள் நிலவுகின்றன.

19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளலார் அவர்கள், சென்னையை தருமமிகு சென்னை எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஏராளமான மொழிகளும் இனங்களும் கலந்து குலாவி பெரு நகரமாக வளர்ந்திருக்கும் சென்னை பெருமைமிக்கதும் கூடத்தான்.

 

எது எப்படியோ சென்னையை இப்போது நினைத்துப் பார்த்தால் பெருமையாக இருக்கிறதல்லவா? வணக்கம் சென்னை.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
பண்பாடு உள்ள மனிதர்களுடன் பழகும்போது…
 

image_f4cac247e1.jpgபண்பாடு உள்ள மனிதர்களுடன் பழகும்போதுதான், எங்களுடைய பலவீனங்களும் தவறுகளும் புரிய ஆரம்பிக்கின்றன. 

எல்லாமே தெரிந்தும்கூட, எதுவுமே தெரியாத மாதிரியும் தற்புகழ்ச்சி, மமதையின்றி சகலருடனும் சரிசமனாக, வேற்றுமை பாராது பழகும் தன்மை எல்லோருக்கும் முடியுமான காரியமே அல்ல! இதற்கு நல்ல மனப்பக்குவம் இயல்பாக உருவாக வேண்டும். 

என்னுடன் பழகிய பலர், மாமனிதர்களாகத் தெரிந்தார்கள். நான் இளைஞனாக இருந்த காலத்தில், ஒரு சமயம், தெருவில் நடந்துகொண்டிருந்த போது, என்னைத் தெரிந்திருந்த நீதிபதி ஒருவர், தமது மோட்டார் வாகனத்தை நிறுத்தி, “வாரும்..வாரும்” என அழைத்து, தனது வாகனத்தில் ஏற்றி, உரிய இடத்தில் சேர்த்தார். அந்த உயரிய பதவியில் இருந்தவர், என்னுடன் மிகவும் சகஜமாகப் பேசுவார். இப்படி எல்லோராலும் முடியாது அல்லவா? 

எக்கணமும் நீ மிக எளிய, சாதாரணமானவன் என, மனது சொல்லிக்கொண்டிருப்பதற்கு நல்லோர் தொடர்பே காரணம்.  

  • தொடங்கியவர்

உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த அதிசயக் குழந்தை!

உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த அதிசயக் குழந்தை!
 

முழு சூரிய கிரகணத்தின் போது குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

பெற்றோர்கள் இந்தக் குழந்தைக்கு வித்தியாசமாகப் பெயரிட்டுள்ளனர்.

அந்த நாட்டின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கிரீன்வில்லே மருத்துவமனையில் ப்ரீடம் யுபங்ஸ் என்பவர் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையிலேயே, சூரிய கிரகணம் நடைபெற்ற நேரத்தில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அமெரிக்காவின் 14 மாகாணங்களில் 99 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் நடைபெற்ற முழு சூரிய கிரகணத்தை அனைவரும் பார்த்து களிப்படைந்தனர்.

சூரிய கிரகணத்தின் போது பிறந்த குழந்தை என்பதால், கிரகணத்தை ஆங்கிலத்தில் குறிக்கும் ‘எக்லிப்ஸ்’ என்ற வார்த்தையையே குழந்தைக்கு பெயராகச் சூட்டியுள்ளனர்.

சூரிய கிரகணத்தின் போது பிறந்து அதே வார்த்தையை பெயராக பெற்றுள்ளதால், செல்லக் குழந்தை எக்லிப்ஸ்சுக்கு மருத்துவமனை நிர்வாகம் சிறப்பு உடை ஒன்றைப் பரிசாக அளித்துள்ளது.

http://newuthayan.com

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 24
 

1349: ஜேர்மனியின் மேய்ன்ஸ் நகரில், ஒருவித கொள்ளை நோய்க்கு காரணம் எனக்கூறி சுமார் 6,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

1608: இந்தியாவுக்கு இங்கிலாந்தின் முதலாவது உத்தியோகபூர்வ பிரதிநிதி அனுப்பப்பட்டார்.

1814: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி. மீது படையெடுத்த இங்கிலாந்து துருப்புகள், வெள்ளை மாளிகைக்கு தீ வைத்தன.

1931: பிரான்ஸ், சோவியத் யூனியனுக்கிடையில் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1949: நேட்டோ அமைப்பை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் அமுலுக்குவந்தது.

1954: அமெரிக்காவில் கம்யூனிஸட் கட்டுப்பாட்டுச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி சட்டவிரோதமாக்கப்பட்டது.

1991: சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பதவியிலிருந்து மிகைல் கொர்பசேவ் விலகினார்.

1995: வின்டோஸ் 95 மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது.

2004: ரஷ்ய விமானமொன்று செச்சினய தற்கொலை பேராளியினால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டதால், 89 பேர் பலியாகினர்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

சவூதி வீதியில் மக்­க­ரினா பாட­லுக்கு நட­ன­மா­டிய சிறுவன் பொலி­ஸாரால் தடுத்­து­வைப்பு

சவூதி அரே­பிய வீதி­யொன்றில் நட­ன­மா­டிய 14 வயது சிறு­வனை அந்­நாட்டு பொலி­ஸாரினால் தடு­த்து வைத்து விசா­ரிக்­கப்­ப­டு­கிறான்.

Macarena---boy-in-soudi

1990களில் வெகு பிர­சித்­த­மா­கி­யி­ருந்த “மெக்­க­ரினா’ பாட­லுக்கு ஜெத்தா நகர வீதி­யொன்றில் இச்­சி­றுவன் நட­ன­மாடும் காட்சி டுவிட்­டரில் வெளி­யாகி ஏரா­ள­மா­னோரால் பகி­ரப்­பட்­டி­ருந்­தது.


இந்­நி­லையில், மேற்­படி சிறு­வனை தாம் தடுத்­து­வைத்­துள்­ள­தாக சவூதி அரே­பிய பொலிஸார் நேற்றுமுன்­தி­னம்­தெ­ரி­வித்­துள்­ளனர். பொது இடத்தில் முறை­யற்ற வித­மாக நடந்­து­கொண்­டமை, போக்­கு­வ­ரத்­துக்கு இடையூறு ஏற்­ப­டுத்­தி­யமை ஆகிய குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக இச்­சி­றுவன் விசா­ரிக்­கப்­ப­டு­வ­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.


சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யா­கிய 45 செக்கன் நேரம் கொண்ட மேற்­படி ஒளிப்­ப­திவில், சமிக்கை விளக்­கொன்­றினால் வாக­னங்கள் நிறுத்­தப்­பட்­டி­ருந்த வேளையில், பாத­சா­ரிகள் கட­வை­யொன்­றுக்கு ஊடாக நடந்து கொண்­டி­ருந்த இச்­சி­றுவன் மக்­க­ரினா பாடலுக்கு நட­ன­மாடும் காட்சி பதி­வா­கி­யுள்­ளது.


இந்த நட­னத்­துக்கு சவூதி அரே­பி­யாவின் போதைப்­பொருள் கட்­டுப்­    பாட்­டுக்­கான தேசிய குழு தடை விதித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. போதைப்­பொருள் துஷ்­பி­ர­யோ­கத்தை இது ஊக்­கு­விப்­ப­தாக அக்குழு குற்றம் சுமத்தியிருந்தது என சவூதி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இச்சிறுவனின் பெயர் மற்றும் அவன் சார்ந்த நாட்டின் விபரம் வெளியிடப்படவில்லை.
http://metronews.lk

 

 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.