Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

இவர்கள் நல்ல மீமர்கள்!

 

 

லாய்த்தலும், கலாய்த்தல் நிமித்தமும் மட்டும்தானா மீம்கள்? `இல்லை ப்ரோ!’ என்கிறார்கள் இந்த இளைஞர்கள். தமிழ் இலக்கணம், அறிவியல், இயற்கை விவசாயம் மாதிரியான `கடுப்பேத்தறார் மைலார்ட்’ சப்ஜெக்ட்டுகளை எல்லாம் மீம்கள் வழி எளிதாக எல்லாருக்கும் புரிய வைக்கிறார்கள் இந்த மிரட்டல் மீமர்கள். அந்த அட்டகாசர்களின் பின்னணியும் அவர்களுடைய படைப்புகளில் சில சாம்பிள்களும் இங்கே...

96p2.jpg

96p1.jpg

96p3.jpg

சதீஷ் குமார்

ல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் இவரும் ஆரம்பத்தில் போட்டதெல்லாம் கலாய் மீம்ஸ்தான். ஒருகட்டத்தில் என்னடா இது என சலிப்பு வர டூட்டை மாற்றினார். திருக்குறள், பொன்னியில் செல்வன், ஆத்திச்சூடி என்று தமிழ் ஒருபுறம், அறிவியல் ஒருபுறம் என்று மீம்ஸாகப் போட்டுத் தள்ள ஆரம்பித்தார். ‘கலாய்ச்சு மீம்ஸ் போடுறப்போ ஒரு கெத்துனு நெனைச்சுக்கிட்டிருந்தேன். இப்போ கிடைச்சிருக்குது திருப்தி’ என்கிறார் சதீஷ். இவரது பொன்னியில் செல்வன் மீம்ஸ்களுக்கு உலக லெவல் ஃபாலோயர்ஸ்.


96p5.jpg

96p6.jpg

96p7.jpg

96p4.jpg

சந்தோஷ்

விவசாய  மீம்கள்தான் சந்தோஷின் அடையாளம். ஆரம்பத்தில் இயற்கை விவசாயம் குறித்துச் சொன்னபோது எவரும் சரியாகக் கண்டுகொள்ளவில்லையாம். பிறகுதான் மீம் போட https://www.facebook.com/LearnAgri என்ற  ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். நண்பர்கள் சேர, விவசாயம் குறித்த மீம்ஸுக்கு ஏகப்பட்ட லைக்ஸ். அவர்கள் பக்கத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, விவசாயத்தில் அனுபவமுள்ள 50 பேர் கொண்ட வாட்ஸ்அப் குழுவில் விளக்கம் கேட்டு மீம்ஸ் மூலம் அவற்றை அனைவருக்கும் பரப்புகிறார்கள்.


96p9.jpg

96p10.jpg

96p8.jpg

கிருஷ்ணகுமார்

திருச்செங்கோட்டில் உள்ள கல்லூரியில் உதவிப்பேராசிரியர். ஒரு வருடமாக மீனிங்ஃபுல் மீம்களால் கலக்குகிறார். திருக்குறள், கவிதைகள் என்று இவர் போடும் மீம்களுக்குத் தனி ரசிகர்கூட்டம். ‘பசங்களுக்குப் புரியற மாதிரியும் இருக்கணும். அதுக்கு தகுந்த மாதிரி போட்டோஸும் வேணும்கிறது சவால். ஆனா, பிடிச்சிருக்கு’ என்கிறார்.  


96p13.jpg

96p11.jpg

96p12.jpg

ஐயன் கார்த்திகேயன், விக்னேஷ் காளிதாசன்

காஞ்சிபுரம் பள்ளி வேன் விபத்து, துருக்கியில் கருப்பு ரோஜா பூக்கிறது, நீடா அம்பானி 315 கோடி ரூபாய் மதிப்பிலான போன் வைத்திருக்கிறார் என்பதுபோன்ற வாட்ஸ்அப் புரளிகளுக்கு ஓர் எல்லையே இல்லாமல் போய்விட்டது. தமிழனா, இந்தியனா என்பதையெல்லாம் ஒரு ஃபார்வேர்டை வைத்துத்தான் தீர்மானிக்கிறார்கள். இதற்கு ஒரு முடிவுகட்ட ஐயன் கார்த்திகேயன், விக்னேஷ் காளிதாசன் இருவரால் ஆரம்பிக்கப்பட்ட பக்கம்தான் https://www.facebook.com/youturn.in/. இவர்களுக்கு ஒரு மெசேஜ் தட்டிவிட்டால், அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அவற்றிற்கு மீமாகப் பதில் சொல்கிறார்கள். ஒரு விஷயத்திற்கு விளக்கம் தேவைப்பட்டால், அதற்குச் சம்பந்தப்பட்ட துறையின் கதவைத்தட்டிப் பதில் கேட்டு முறையாகப் பதில் பெற்று மீம் போடுவது இவர்களது ஸ்பெஷாலிட்டி! 

http://www.vikatan.com/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நுளம்பினைக் கொன்று படம் போட்டவரின் கணக்கை முடக்கியது ட்விட்டர்


நுளம்பினைக் கொன்று படம் போட்டவரின் கணக்கை முடக்கியது ட்விட்டர்
 

தன்னைக் கடித்த நுளம்பினைக் கொன்று அதன் படத்தினை ட்விட்டரில் பதிவேற்றியவரின் கணக்கினை, ட்விட்டர் முடக்கிய சம்பவம் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த ட்விட்டர் பாவனையாளர் ஒருவர் @nemuismywife என்ற முகவரியில் இயங்கி வந்தார். அவர் கடந்த 20-ஆம் திகதியன்று தனது வீட்டில் ஓய்வாக அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த பொழுது, தன்னைக் கடித்த நுளம்பு ஒன்றினை அடித்துக்கொன்றார்.

பின்னர் அதனைப் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் கணக்கில் பதிவேற்றினார். அந்தப் பதிவில் அவர், ”நான் ஓய்வாக அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, என்னைக் கடிப்பதற்காக எங்கிருந்து வந்தாய்? சாவு! (நீதான் இப்பொழுது செத்து விட்டாயே)” என்று தெரிவித்திருந்தார்.

சிறிது நேரம் கழித்து அவருக்கு டிவிட்டரில் இருந்து தகவல் ஒன்று வந்தது. அதில் அவர் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்பும் தகவலை பதிவேற்றியதால், அவருடைய கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டு விட்டதாகவும், இனி அதனை மீட்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர் உடனே @DaydreamMatcha என்ற முகவரியில் வேறொரு ட்விட்டர் கணக்கினை ஆரம்பித்தார். அதில் அவர், ”நான் என்னுடைய முந்தைய கணக்கில் நுளம்பு ஒன்றினைக் கொன்றதாக தகவல் தெரிவித்து பதிவு இட்டவுடன் என் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரம்பு மீறலா?” என்று கோபமாகக் கேட்டிருந்தார்.

அவரது இந்த ட்வீட்டுக்கு 27,000 பேர் லைக் இட்டிருந்தார்கள். 31,000 பேர் அதனை ரீட்வீட் செய்திருந்தார்கள்.

பொதுவாக வெறுப்பு மற்றும் வன்முறையைப் பரப்பும் தகவலைப் பகிரும் ட்விட்டர் கணக்குகள் அதன் நிர்வாகத்தால் முடக்கப்படும். இதற்கு ஒரு தானியங்கி வழிமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால், ட்விட்டரின் இந்த நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சிக்கப்படுகிறது.

 

mosquito

http://newsfirst.lk/tamil

  • தொடங்கியவர்

இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

 

இந்தியாவின் முக்கியமான இடங்களின் பொக்கிஷமான புகைப்படங்கள் சிலவற்றை பார்ப்போம்.

 

இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

 

போர் காலங்களில் புகைப்படம் எடுக்கும் வழக்கம் தொடங்கிய காலகட்டத்தின் ஆரம்பக்கால புகைப்பட கலைஞர்களில் ஒருவர் பெலிஸ் பீட்டோ. கிரீமியா போரில் புகைப்படங்களை எடுத்த அவர், இந்தியாவிற்கு வந்தார். 1857 இல் நடைபெற்ற இந்திய சிப்பாய்க் கலகத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ‘ஆக்ரா போர்’ நிகழ்ந்த இடத்தில் எடுக்கப்பட்ட தாஜ்மஹாலின் புகைப்படம் இது. தொடரும் புகைப்படங்கள் பீட்டோவின் புகைப்பட பொக்கிஷங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றில் சில…

 

இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

புந்தியின் மஹாராவ் ராஜா ராம் சிங் சாஹிப் பஹதூரின் இந்த உருவப்படத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பு அவரை "காட்டுத்தனமானவர்" என விவரிக்கிறது. ராணி விக்டோரியாவுக்கு சொந்தமான நான்கு தொகுதிகள் கொண்ட புகைப்படக் கலை அச்சிடல்களில் (Photogravure) இருந்து எடுக்கப்பட்டது இந்த புகைப்படம்.

 

இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

பாம்பே (மும்பை)யின் கிர்கெளம் சாலையின் இந்த புகைப்படம், வண்ணப் புகைப்படங்களின் ஆரம்பக்கால செயல்முறையான ஃபோட்டோக்ரோம் (photochrom) தொழில்நுட்பத்திற்கு ஒரு உதாரணம். கருப்பு-வெள்ளை புகைப்பட நெகடிவ்களில் இருந்து “வண்ண கற்கள்” (tint stones) மூலமாக வண்ணப் புகைப்படங்கள் இந்த செயல்முறையில் உருவாக்கப்படுகின்றன.

 

இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

நவநாகரீக ஆடைகள் உடுத்தும் லினிரியின் ராஜா ஷாஹிப்பின் `புக்ரி` தலைப்பாகை, வெள்ளி கம்பிகளை பின்னிப் பிணைத்தது போல் அழகாக காணப்படுகிறது. அவருடைய ஆடைகள் அற்புதமான வேலைப்பாடுகளை கொண்டுள்ளது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் அரசர்களின் அதிகாரம் மட்டுப்பட்டாலும், அவர்களது வெளித்தோற்றமும், கெளரவமும் வழக்கம் போலவே பராமரிக்கப்பட்டது.

 

இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

1856 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்த பாம்பே துறைமுகத்தின் இந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் உயரமான கொடிமரங்களைக் கொண்ட இந்த கப்பல்கள், கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை காட்டுகின்றன. 1855 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்திய பிராந்தியங்கள் மற்றும் தொல்பொருட்கள் பற்றி ஆய்வு செய்வதற்காக, வரைபடங்களை உருவாக்குபவர்களை அனுப்புவதற்கு பதிலாக புகைப்படக்காரர்களை கிழக்கிந்திய கம்பெனி அனுப்பியது

இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

புகைப்படங்களின் வெளிப்பாடு காலங்களை சுருக்குவது என்பது, நிலையான புகைப்படங்கள் ஓவியங்களை விட அதிகமானபோதே சாத்தியமானது. வண்ணமில்லா புகைப்படமாக இருப்பதால், ஜெய்பூரின் இந்தத் தெரு இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. 1875-76களில் ஜெய்பூர் வருகை தந்த வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு அளிக்கும்விதமாக ஜெய்பூரில் உள்ள கட்டிடங்களின் வெளிப்புறங்களில் இளஞ்சிவப்பு வர்ணம் பூசப்பட்டது.

 

இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

19 ஆம் நூற்றாண்டின் சிறந்த புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான சாமுவேல் பார்ன் எடுத்த புகைப்படம் இது. கங்கை நதியின் மீது அமைந்துள்ள மணிகர்னிகா காட்டின் இந்த புகைப்படம், இந்திய காலநிலையை உணர்த்துகிறது. வறட்சியான காலங்களில், கேமராக்களின் கண்ணாடி தகடுகளில் புழுதி படிந்து புகைப்படம் எடுப்பதில் சிரமம் ஏற்படும். ஈரப்பதம் அதிகமான காலத்தில், கேமராவின் மர பாகங்களில் பூஞ்சை வளரும். வெயில் காலத்தில் வெப்பத்தால் கேமாரவில் உள்ள ரசாயனங்கள் சீர்குலையும். தகடுகளை கழுவுவதற்கு உடனடியாக நீர் கிடைக்காமல் போவதும் புகைப்படக் கலைஞர்கள் எதிர்கொண்ட பிரச்சனை.

இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

புவியியலை ஆய்வு செய்வதோடு, இந்திய மக்களையும் படம் எடுக்குமாறு அதிகாரபூர்வ புகைப்படக் கலைஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. டார்ஜிலிங்கில் வரிசையாக அமர்ந்திருக்கும் பெளத்த இசைக் கலைஞர்களின் இந்த புகைப்படமானது, பழங்குடியினரையும், பழக்கவழக்கங்களையும் பதிவு செய்வதற்கான முயற்சிகளுக்கான ஒரு சிறந்த உதாரணம்.

இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி (முன்பு திருச்சினோபோலி) உலகின் பழமையான பாறைப் படிமங்களின் ஒன்றாகும். சாமுவேல் பார்னுக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்திய இந்த பாறைகள், இங்கிலாந்து ராணுவத்தின் ஆரம்ப வெற்றியாகவும் கருதப்பட்டது. இந்த புகைப்படமானது, தொன்மை மற்றும் நவீன காலணி வரலாற்றின் கலவையாக காணப்படுகிறது.

இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

தமிழ் பாணியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீரங்கநாதசுவாமி ஆலயம் உலகில் உள்ள மாபெரும் மத வளாகங்களில் ஒன்று. இங்கிலாந்தின் ஆதிக்கத்தின்கீழ் இந்தியா இருந்தபோது எடுக்கப்பட்ட போர்னின் புகைப்படங்கள் பிரபலமானவை. ஏனெனில் அவை இந்தியாவின் கலாசார வரலாற்றுடன் தொடர்புடையவை.

 

 

 

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

மீனம்மா… மீனம்மா…

 

 
1jpg

# மீன்கள் முதுகெலும்புடைய நீர்வாழ் உயிரினம். மீன்கள் சுமார் 50 கோடி ஆண்டுகளாக பூமியில் வசித்துவருகின்றன. மீன்கள் செவுள்கள், நுரையீரல் மூலம் தண்ணீரிலுள்ள ஆக்சிஜனை எடுத்துக்கொள்கின்றன. இதுவரை சுமார் 30 ஆயிரம் மீன்கள் கண்டறியப்பட்டுள்ளன. இன்னும் கண்டறியப்படாத மீன்கள் ஏராளமாக இருக்கின்றன.

# மீன்கள் குளிர் ரத்தப் பிராணிகள். வாழும் சூழலுக்கு ஏற்ப உடலின் வெப்பம் இருக்கும். அதனால்தான் வெப்பக் கடலிலும் ஆர்டிக் கடலிலும் கூட மீன்களால் வாழ முடிகிறது. உப்புக் கடல்கள், நல்ல நீர் நிலைகளான ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகளில் மீன்கள் வாழ்கின்றன.

   

# தலை, உடல், வால் என்று மூன்று பகுதிகளைக் கொண்டவை மீன்கள். உடல் முழுவதும் செதில்களால் மூடப்பட்டிருக்கும். இவை நீந்துவதற்கும் வால் திரும்புவதற்கும் உதவியாக இருக்கின்றன.

# மிகச் சிறிய மீன்களில் இருந்து மிகப் பெரிய மீன்கள் வரை காணப்படுகின்றன. மிகச் சிறிய மீன் சிறிய கோபி. மீன் 13 மில்லி மீட்டர் நீளம்தான் இருக்கும். இது பிலிப்பைன்ஸ் நாட்டில் காணப்படுகிறது. கடல்களில் வசிக்கும் திமிங்கிலச் சுறா மீன்களில் மிகப் பெரியது. சுமார் 60 அடி நீளம் இருக்கும்.

2jpg
 

# சில மீன்கள் சிவப்பு, மஞ்சள், நீலம் போன்ற கண்கவர் வண்ணங்களில் காணப்படுகின்றன. சில மீன்களின் உடலில் கோடுகளும் புள்ளிகளும் இருக்கின்றன.

# மீன்களுக்கு பார்வைத் திறன், உணர் திறன், சுவை திறன் போன்றவை சிறப்பாக இருக்கின்றன. மீன்களால் வலியை உணர்ந்துகொள்ளவும் முடியும்.

# மீன்கள், மீன் முட்டைகள், மெல்லுடலிகள், கடல் தாவரங்கள், பாசிகள், பூச்சிகள், நீர்ப் பறவைகள், தவளைகள், கடல் ஆமைகள் போன்றவை மீன்களின் உணவுகள்.

# சில மீன்கள் கடலின் மேல் பகுதியிலும் சில மீன்கள் கடலின் ஆழத்திலும் வசிக்கின்றன. மேல் பகுதியில் வசிக்கும் மீன்களால் ஆழத்தில் வசிக்க இயலாது. ஆழத்தில் வசிக்கும் மீன்களால் மேல் பகுதியில் வசிக்க முடியாது.

# மீன்கள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை. பெரும்பாலான மீன்கள் முட்டைகளை வெளியே இடுகின்றன. சுறா மீன்கள் முட்டைகளை உடலுக்குள்ளே வைத்து, 2 அடி நீளம் வரை வளர்ந்த பிறகு மீன்களாக வெளியே அனுப்புகின்றன.

3jpg
 

# மீன் பிடித்தல் முக்கியமான தொழிலாக இருக்கிறது. பொழுதுபோக்குக்காகவும் மீன் பிடித்தல் நடைபெறுகிறது. மனிதர்களின் உணவுகளில் மீன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

# தண்ணீருக்கு மேலே நீண்ட தூரம் தாவிச் செல்லும் பறக்கும் மீன், தரையில் நடந்து செல்லும் நடக்கும் மீன், தண்ணீரைப் பீய்ச்சியடித்து வேட்டையாடும் வில்வித்தை மீன், ஒளி உமிழும் மீன், மின்சாரம் உற்பத்தி செய்யும் மீன், பிற மீன்களைச் சுத்தம் செய்யும் மீன் என்று வித்தியாசமான குணங்கள் கொண்ட மீன்களும் இருக்கின்றன.

# சுமார் 1000 வகை மீன்கள் அழிந்து வரக்கூடிய ஆபத்தான் நிலையில் இருக்கின்றன. மீன்களைப் பற்றிய படிப்புக்கு இக்தீயாலஜி (ichthyology) என்று பெயர்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

கிளிக் தொழில்நுட்ப காணொளி

இன்ஸ்டாகிராமில் ஒரு பிழையை கண்டுபிடித்த ஃபின்லாந்து நாட்டை சேர்ந்த சிறுவன், எதிர்காலத்தில் இணையத்தில் உள்ள தகவல்களை பாதுகாக்க உதவி செய்யவுள்ள `குவாண்டம் என்கிரிப்ஷன்`, கண்களின் வெள்ளைப் பகுதியில் இருக்கும் பிலிருபின் அளவை கண்டறியும் செயலி, நிஜ உலகை டிஜிட்டல் படங்களின் வழியாக காணும் தொழில்நுட்பம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய காணொளி.

  • தொடங்கியவர்

கின்னஸில் இடம்பிடித்த மணல் கோட்டை - தோல்வியில் கிடைத்த வெற்றி

 

கின்னஸில் இடம்பிடித்த மணல் கோட்டை - தோல்வியில் கிடைத்த வெற்றி

உலகின் மிக உயரமான மணல் கோட்டை ஜெர்மனியில் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மணல் சிற்பக் கலைஞர்கள் குழுவினரால் குறித்த கோட்டை கட்டப்பட்டுள்ளது.

இந்த குழுவினரின் முதலாவது முயற்சி தோல்வியடைந்த நிலையில், தோல்வியை கண்டு துவளாமல் மீண்டும் தமது உழைப்பை செலவளித்து குறித்த கோட்டையை உருவாக்கியுள்ளனர்.

அத்துடன் தோல்வியில் கிடைத்த பாடங்களை கொண்டு அமைக்கப்பட்ட இந்த கோட்டை தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சுமார் ஒரு மாதக்கால முயற்சியின் பயனாக இம்மணல் கோட்டை நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இம்மணல் கோட்டையை தயாரிப்பதற்கு சுமார் ஆயிரம் தொன் மணல் பயன்படுத்தப்பட்டுள்ளது சுமார் 16 தசம் 68 மீற்றர்களுக்கு எழுந்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

தோல் நோய், சொரியாசிஸ், வாதநோய் நீக்கும் தேங்காய் எண்ணெய்! #InternationalCoconutDay

 
 

‘அணில் ஏறி தென்னை அசையுமா?‘, ‘தென்னையை நட்டா இளநீரு’, ‘தென்னையை விதைச்சவன் தின்னுட்டுச் சாவான் பனையை விதைச்சவன் பாத்துட்டுச் சாவான்' என்பதுபோன்ற பழமொழிகள் தென்னையின் பெருமையை பறைசாற்றுகின்றன. சர்வதேச தேங்காய் தினமான இன்று நாமும் தென்னையில் விளையும் தேங்காயின் பெருமைகளைச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது.

தேங்காய் பால்

1998-ம் ஆண்டு ஆசிய பசிபிக் தேங்காய் உற்பத்தியாளர்கள் மாநாடு வியட்நாமில் நடைபெற்றது. அப்போது ஆண்டுதோறும் செப்டம்பர் 2-ம் தேதி சர்வதேச தேங்காய் தினம் (International Coconut Day) கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டது. தென்னையின் முக்கியத்துவம், தேங்காயின் பலன்களை எடுத்துக்கூறி அதன் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்விதத்தில் மக்களிடையே விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

கோவில் பூஜையிலும், திருவிழாக்களிலும், ஹோமங்களிலும் தேங்காய்க்கு முக்கிய இடம் உண்டு. நம் இந்தியக் கலாசாரத்தில் தவிர்க்க முடியாத அளவுக்கு தேங்காய் திகழ்கிறது. பூலோகத்தின் கற்பக விருட்சமாகவும் விளங்குகிறது. தேங்காய் மற்றும் அதுசார்ந்த பொருட்களின் பயன்கள், மருத்துவக் குணங்கள் என்னென்ன என்று பார்ப்போமா?

 

இளநீர்

காலையில் கண்விழித்ததும் இளநீரை குடிச்சா, அன்றைக்கு முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். ஆனால், இளநீரை வெறும் வயிற்றில் பருகக் கூடாது. ஏனென்றால் அதில் உள்ள அமிலத்தன்மை நமது வயிற்றில் புண்ணை உருவாக்கக்கூடும். எனவே ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும். மேலும், இது ஜீரணக்கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. சிறுநீரகம் மற்றும் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். நமது உடலில் ஏற்படும் நீர் - உப்பு பற்றாக்குறையை சரி செய்கிறது.

இளநீர்

தேங்காய்

இளநீர் முற்றினால் அதைத் தேங்காய் என்று சொல்கிறோம். நமது உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து வளர்சிதை மாற்றத்துக்கு உதவக்கூடியது. எய்ட்ஸ் நோயாளிகளின் உடலைத் தாக்கும் வைரஸ்களின் பெருக்கத்தை பெருமளவில் கட்டுப்படுத்தக்கூடியது தேங்காய்.

தேங்காய் எண்ணெய்

காயம் பட்டால் அந்த இடத்தில் தேங்காய் எண்ணெய் தடவுவதால் கிருமித்தொற்றில் இருந்து விடுபடலாம். மாதம் ஒருமுறை அல்லது இருமுறை தேங்காய் எண்ணெய்க் குளியல் மேற்கொள்வதால் உடல் களைப்பிலிருந்து மீளலாம். பெண்களின் கூந்தலுக்கு மிகச்சிறந்த பொக்கிஷம் தேங்காய் எண்ணெய். நீண்டநாள் ஆகியும் ஆறாத தீக்காயப் புண்களை ஆற்றும் தன்மை படைத்தது.

தேங்காய் எண்ணெய்

செய்யக்கூடாதவை

நல்லெண்ணெயை வாயில் வைத்துக்கொண்டு 'ஆயில் புல்லிங்' செய்வதுபோல தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தக்கூடாது.

 
 
தேங்காய்ப் பால்

தேங்காய்ப் பாலில் உள்ள புரதச் சத்தானது, தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது. இது உடல் எடையைக் குறைத்து, கெட்டக் கொழுப்பை நீக்கக்கூடியது. தேங்காய்ப் பாலில் கசகசா, பால், தேன் சேர்த்து தினமும் பருகி வந்தால் 'வறட்டு இருமல்' குணமாகும். அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்களை ஆற்றுவதில் இவை முக்கியப் பங்கு வகிக்கிறது.

தைலங்கள்

தேங்காய் எண்ணெயைக் கொண்டு பல்வேறு வகையான தைலங்கள் தயாரிக்கப்படுகின்றன. தோல் நோய்க்கு கரப்பான் தைலமும், சொரியாசிஸ் நோய்க்கு வெப்பாலை தைலமும், வாத வலிக்கு கற்பூராதி தைலமும், பொடுகுக்கு பொடுதலை தைலமும், தீராத புண்களுக்கு மத்தன் தைலமும் பயன்படுகிறது.

நீரா பானம்

மலராத தென்னம்பாளையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான பானமே 'நீரா பானம்' ஆகும்.இந்த பானத்தை விற்பதற்கு தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

தேங்காய் நார்

பிற பயன்கள்

தேங்காய், தேங்காய் எண்ணெய், தேங்காய்ப்பால், இளநீர், நீரா பானம், தைலங்கள் என்று மட்டுமல்லாமல் இன்னும் பல பொருள்களைத் தந்து உதவுகிறது. தென்னை ஓலையைக் கொண்டு கூரை வேயலாம். இளம் ஓலைகளால் திருவிழா மற்றும் திருமண விழாக்களில் தோரணம் செய்து தொங்கவிட்டு அலங்கரிக்கப்படும்.தேங்காய் நாரைக் கொண்டு கயிறு திரிக்கலாம். கொட்டாங்குச்சியைப் பயன்படுத்தி கைவினைப்பொருள்களை உருவாக்கலாம். தென்னைப் பயிர் சாகுபடி இன்றளவும் நமது கிராமங்களில் முக்கியத் தொழிலாக விளங்குகிறது.

தென்னம் பயிர், வறுமைக் குறைப்புக்கு முக்கியப் பங்காகத் திகழ்கிறது என்பதை உணர்த்தவே செப்டம்பர் 2 'சர்வதேச தேங்காய் தினமாக' கொண்டாடப்படுகிறது

vikatan

  • தொடங்கியவர்
‘சீராக வாழ்ந்தால் அதுதான் சொர்க்கம்’
 

image_403761de60.jpgதொடர்ந்து அனுபவித்து வரும் களிப்பூட்டிய வாழ்க்கை தெவிட்டி, உண்மையைத் தேடி, சந்நியாசியானவர்கள் அநேகர். 

அதேசமயம், தங்கள் வாழ்க்கையில் அல்லல்பட்டு, நொந்து வாழ்க்கையை வெறுத்துத் துறவை மேற்கொண்டவர்களும் ஏராளம்.  

வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள் எல்லாமே எமக்குச் சார்பானவையாக அமைந்து விடுவதில்லை. இது யதார்த்தமான உண்மை. இதைப் புரிந்துகொண்டால் எதையும் சமாளிக்கும் இயல்பு உருவாகலாம். மனதைப் பக்குவப்படுத்துவது எளிதுமல்ல; ஆனால் எம்மை ஆசுவாசப்படுத்தாது விட்டால் வாழ்க்கையை எங்கனம் எதிர்கொள்ள முடியும் ஐயா. 

 வாழ்க்கை கோரமானதோ, அல்லது காரமானதோ எனச் சதா எண்ணிக் கலவரப்பட்டால் நிலையான அமைதியை உருவாக்க முடியுமா? 

சீராக வாழ்ந்தால் அதுதான் சொர்க்கம். பெரிதாகக் கற்பனைசெய்து, உங்களை நீங்களே பயமுறுத்தல் வேண்டாம். 

பயணத்தின்போது, வாகனத்தின் கண்ணாடியூடாகப் பாருங்கள்! வரண்ட நிலங்கள், இயற்கை வனப்புகள் எதிர்த்திசையாக ஓடுவதுபோல் தோற்றம்காட்டும். ஆனால், வண்டி வளைந்து, வளைந்து ஓடி, தனது இடத்தை நாடும். பார்வைகளில் மயங்க வேண்டாம். 

  • தொடங்கியவர்

14 குழந்தைகளின் தாய் கோடீஸ்வரியானது எப்படி?

14 குழந்தைகளின் தாயான தம்மி உம்பேல், தனது பிள்ளைகள் யாரையும் பள்ளிக்கே அனுப்பவில்லை. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது, இன்றைய சூழலில் சில குழந்தைகள் இருந்தாலே கல்விக் கட்டணம் அதிகம். 14 குழந்தைகளை பெற்றால் எப்படி படிக்க வைப்பது என்று தோன்றுகிறதா?

தம்மி உம்பேல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதம்மி உம்பேல்

இது ஒரு ஏழைத் தாயின் கதை என்று நினைக்கவேண்டாம். இது கோடீஸ்வரியான ஒரு தாய் மற்றும் அவரின் 14 குழந்தைகள் பற்றிய தற்கால நிகழ்வு.

வர்ஜீனியாவில் வசிக்கும் தம்மியின் இயற்கை ஒப்பனைப் பொருட்கள் தொழிலின் மதிப்பு 17 லட்சம் அமெரிக்க டாலர்! இவர் இதுவரை தனது தொழிலுக்காக வங்கிக் கடனோ, வேறு முதலீட்டுக் கடன்கள் எதையுமோ பெறவில்லை என்பது ஒரு சிறப்பு.

14 குழந்தைகளுக்கு தாயான தம்மி உம்பேலின் கணவர் டாக்டர். அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். கோடீஸ்வரக் குடும்பத்தில் ஒரு தொலைகாட்சிப் பெட்டி கூட இல்லை என்பது ஆச்சரியமளிக்கும் கூடுதல் தகவல்.

தம்மி உம்பேல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதம்மி உம்பேல்

குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி

உம்பேல் தன் குழந்தைகளை பள்ளிக்கே அனுப்பாமல் வீட்டிலேயே படிக்க வைக்கிறார். அவரின் குழந்தைகளில் நான்கு பேர் கல்லூரிகளில் பயில்கின்றனர். மருத்துவம், பொறியியல், இணையப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் அவர்கள் கல்வி கற்கின்றனர்.

மீதமுள்ள பத்து குழந்தைகளுக்கும் வீட்டில் தானே கற்றுக் கொடுக்கிறார் தம்மி உம்பேல்.

பல்வேறு இடங்களுக்கு சென்று, இயற்கையில் விளையும் பொருட்களை ஆராய்ந்து, புரிந்துகொண்டு, அவற்றை தனது தயாரிப்புக்கு பயன்படுத்துவதற்காக இவர் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

சரி, அப்போது குழந்தைகளுக்கு எப்படி கற்றுக் கொடுப்பார் தம்மி?

தொழில் விரிவாக்கம் மற்றும் குடும்பம் குழந்தை என அனைத்தையும் ஒரே நேரத்தில் சிறப்பாக நிர்வகிக்கிறார் இவர். தொழிலுக்காக பல நாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையிலும், குழந்தைகளை தன்னுடனே அழைத்துச் செல்கிறார்.

பல்வேறு இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதும் கல்வியின் ஓர் அங்கம் என்று தாம் நம்புவதாக தம்மி கூறுகிறார்.

தம்மி உம்பேல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இயற்கை ஒப்பனை பொருட்கள் வணிகம்

'தொழிலை பராம்பரிய முறையில் நடத்தவே விரும்புகிறேன். அதன்படி முதலில் பணம் சம்பாதிக்கவேண்டும், பிறகு முதலீடு செய்யவேண்டும். அதன்படியே நான் செயல்படுகிறேன். நான் இதுவரை கடன் வாங்கி தொழில் செய்வது பற்றி யோசித்துக்கூட பார்த்ததில்லை` என்கிறார் தம்மி உம்பேல்.

தொடக்கத்தில் ஆடைகள் விற்பனை செய்யும் நிறுவனத்தையே நடத்தினார் இவர். ஆனால் அதில் அதிக முன்னேற்றம் கிடைக்காததால், தொழிலை மாற்றிக்கொண்டார்.

'ஷியா டெரா ஆர்கெனிக்' நிறுவனத்தை துவங்கிய உம்பேல், பழங்குடி இனக் குழுக்கள் மற்றும் எகிப்து, மொராக்கோ, நாமீபியா அல்லது தன்ஜானியா போன்ற நாடுகளில் உள்ள சிறு குழுக்களிடமிருந்து மூலப்பொருட்களைக் பெற்று இயற்கை ஒப்பனைப் பொருட்களை தயாரிக்கிறார்.

17 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மூலம், மேற்கத்திய நாட்டு மக்களுக்குப் பல பொருட்களை அறிமுகப்படுத்தினார்.

குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொடுப்பார்கள்.படத்தின் காப்புரிமைUNKNOWN Image captionகுழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொடுப்பார்கள்.

பல கிராமங்களுக்கு பயணம்

சரும சிகிச்சைக்காக தற்போதும் இயற்கையான பொருட்களை பயன்படுத்தும் கிராமங்களுக்கு சென்று ஆராய்ந்து, தனது தொழிலை விரிவுபடுத்தினார்.

'வாழ்வாதாரத்திற்கே சிரமங்களை எதிர்கொண்டிருந்த அந்த இடங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சித்தேன். இயற்கையின் நன்கொடையான பல்வேறு மூலிகைகள் அங்கிருப்பதை நான் உணர்ந்தேன், ஆனால் அவை மக்கள் அணுகக்கூடிய சந்தையில் இருந்து வெகுதொலைவில் இருந்தன` என்கிறார் தம்மி.

வர்ஜீனியாவில் உள்ள உம்பெலின் நிறுவனம், ஆன்லைன் வர்த்தகம் மூலமாக விற்பனையில் ஈடுபட்டுள்ளது. நாடு முழுக்க 700 கடைகளும் உள்ளது.

போலி தாயாரிப்புகளே போட்டி

'இயற்கை பொருட்கள் என்ற பெயரில் பல போலி பொருட்கள் சந்தையில் உலா வருகின்றன, இதனால் அசலுக்கும் போலிக்கும் உள்ள வேறுபாட்டை அறிவதில் வாடிக்கையாளருக்கு சிக்கல் எழுகிறது' என்கிறார் தம்மி.

சந்தையில் நிலவும் போட்டிச் சூழலில் நிலைத்து நிற்பது கடும் சவால் என்று கூறினாலும், தனது தயாரிப்புகளில் தரத்தில் சமரசம் செய்துக் கொள்ளாமல் இருப்பதே தன்னுடைய தாரக மந்திரம், எந்த நேரத்திலும் அதை கடைபிடிப்பதே தனது வெற்றியின் ரகசியம் என்கிறார் தம்மி உம்பெல்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

டெய்லர் ஸ்விப்டின் பாடல் புதிய சாதனை படைத்தது

பாடகி டெய்லர் ஸ்விப்டின் லுக் வட் யூ மேட் மீ டூ எனும் பாடல், புதிய சாத­னை­களைப் படைத்­துள்­ளது.

taylor_1

கடந்த 24 ஆம் திகதி இப்­பா­டலின் லிரிக் வீடியோ அனி­மேஷன் காட்­சி­க­ளுடன் வெளியா­கி­யது. இவ்­வீ­டியோ 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் 1.9 கோடி தட­வைகள் பார்­வை­யி­டப்­பட்­டது. 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் அதிக தட­வைகள் பார்­வை­யி­டப்­பட்ட அனி­மேஷன் லிரிக் வீடியோ இது­வாகும்.

 

இவ்­வ­ருட முற்­ப­கு­தியில் வெளியான சம்திங் லைக் திஸ் எனும் லிக் வீடியோ 24 மணித்­தி­யா­லங்­களில் 90 லட்சம் பேரினால் பார்­வை­யி­டப்­பட்­ட­மையே இது­வரை சாத­னை­யாக இருந்­தது.

taylor_13
கடந்த 27 ஆம் திகதி லுக் வட் யூ மேட் மீ டூ பாடலின் உத்­தி­யோ­க­பூர்வ வீடியோ வெளியி­டப்­பட்­ட­வுடன் 24 மணித்­தி­யா­லங்­களில் 4.32 கோடி தட­வைகள் பார்­வை­யி­டப்­பட்­ட­மையும் புதிய சாத­னை­யாகும். 


2015 ஒக்­டோ­பரில் ஹெலோ எனும் பாடல் வீடியோ 24 மணித்­தி­யா­லங்­களில் 2.77 தட­வைகள் பார்­வை­யி­டப்­பட்­டமை முந்­தைய சாத­னை­யாக இருந்­தது. 27 வய­தான டெய்லர் ஸ்விப்ட், லுக் வட் யூ மேட் மீ டூ    பாடலை  ஜெக் அன்­ட­னோவ்­வுடன் இணைந்து எழு­தி­யுள்ளார். இப்­பா­டலின் உத்­தி­யோ­க­பூர்வ வீடி­யோவை ஜோசப் கான் இயக்­கி­யுள்ளார். நேற்­று­வரை 9 கோடிக்கும் அதிக மான தட­வைகள் இவ்­வீ­டியோ பார்­வை­யி­டப்­பட்­டி­ருந்­தது.

http://metronews.lk

  • தொடங்கியவர்

செரீனா வில்லியம்ஸுக்கு பெண் குழந்தை பிறந்தது: டென்னிஸ் நட்சத்திரங்கள் வாழ்த்து

 

 
b

 

பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு டென்னிஸ் நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸூக்கு, ரெட்டிட் நிறுவனத்தின் உரிமையாளரான அலெக்ஸ் ஒஹானியானுடன் கடந்த டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்ததால் செரீனா கடந்த சில மாதங்களாக டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவில்லை. கடந்த புதன்கிழமை இரவு புளோரிடா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதைத் தொடர்ந்து செரீனா வில்லியம்ஸுக்கு சக டென்னிஸ் வீரர்களும், வீராங்கனைகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்று ஆட்டத்தில் கலந்துகொள்ள வந்த செரீனாவின் சகோதரி வீனஸ் வில்லியம்ஸுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதும், தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

இதுபற்றி தனது ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள ரபேல் நடால், “வாழ்த்துகள் செரீனா. உங்களுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார். செரீனா வில்லியம்ஸின் பயிற்சியாளரான பாட்ரிக் மவுரடொக்ளோ ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பெண் குழந்தையை பெற்றெடுத்த செரீனா வில்லியம்ஸ்க்கு வாழ்த்துகள். விரைவில் உடல் நலம் பெற வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டு வீராங்கனையான கார்பைன் முகுருசா உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

உணவு விடுதியல்ல… இது இன்னொரு வீடு...

கருணைவேல், சொர்ணலட்சுமி… இவர்களைத் தெரியுமா?

கோவையிலிருந்து சுமார் 79 கிலோ மீட்டர் தொலைவில் ஈரோடு மாவட்டம் சீனிபுரத்தில் உள்ள யு.பி.எம் உணவகத்திற்கு சென்றவர்களால் மறக்க முடியாத பெயர்கள் கருணைவேல், சொர்ணலட்சுமி.

அந்த உணவகத்தில் ஆடம்பரமான ஜோடனைகள் இல்லை…

குளிர்சாதன வசதி இல்லை…

இருந்தும் கூட்டம் குறைவதில்லை…

விலைமிகுந்த கார்கள் அந்த உணவகத்தின் முன்னே அணிவகுத்து நிற்கின்றன...

வார இறுதி நாட்களில் பல கிலோமீட்டர்கள் பயணித்து அங்கே வருபவர்கள் பலர்…

ஒரு நேரத்தில் 50 பேர் வரை அமர்ந்து உணவருந்தும் வகையில் உள்ளது கூரை வேய்ந்த அந்த உணவகம்.

20 பேர் வரை உண்ட களைப்பு நீங்க ஓய்வெடுக்கும் வகையில் மற்றொரு பகுதி இருக்கிறது.

பகல் 12.30 மணியிலிருந்து, பகல் 3 மணி வரைதான் அந்த உணவகம் இயங்குகிறது.

500 ரூபாயும் சில நேரங்களில் 700 ரூபாயும் என ஒரு சாப்பாட்டிற்காகப் பெறப்படுகிறது.

பகல் 11 மணிக்கே தொலைபேசி மூலம் முன்பதிவு செய்துவிட வேண்டும்.

பணியாளர்கள், முதலாளி என்று அனைத்துமே கருணைவேலும், சொர்ணலட்சுமியும்தான்

 
full_3cdc4c2a22
 
 

அன்பு கலந்த உணவு

60 வயதுகளைத் தொட்டுவிட்ட கருணைவேல், 53 வயதைக் கடக்கும் சொர்ணலட்சுமி தம்பதியினருக்கு ஒரு மகன், மகள் இருந்தனர், ஆனால் அவர்களது மகன் இறந்து விட்டார். அந்த துக்கத்தை மறக்க உணவருந்த வருவோர் எல்லாம் தங்கள் பிள்ளைகள்தான் என்ற உணர்வோடு உணவு பரிமாறத் துவங்கினர்.

தலை வாழை இலையிட்டு, உப்பில் தொடங்கி, ரத்தப்பொரியல், குடல், தலைக்கறி, ஈரல், கொத்துக்கறி, சுக்கா, நல்லி எலும்பு, கால் பாயா, சிக்கன், பெப்பர் சிக்கன், சிக்கன் குழம்பு, நாட்டுக்கோழி, வான்கோழி, புறாக்கறி, காடை, மீன், லெக்பீஸ், பிரியாணி, முட்டை, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, உப்புமீன் இப்படிப் பரிமாறிவிட்டு, தொட்டுக்கொள்ள சோறு வைக்கிறார்கள்.

எந்த அவசரமும் இன்றி நிதானமாய் சாப்பிடலாம். உண்டு களைப்பாறி பின்னரும் உண்ணலாம். இறுதியாய் வாடிக்கையாளர் கொடுக்கிற பணத்தை எண்ணிப் பார்ப்பதில்லை என்பதிலும் உறுதியாய் இருக்கிறார் கருணைவேல்.

அன்பு கலந்து வகை வகையாய் பரிமாறியவரை ஏமாற்ற யாருக்குத்தான் மனம் வரும். அந்த நம்பிக்கை கருணைவேலுக்கும் சொர்ணலட்சுமிக்கும் இருக்கிறது.

 
full_17aa4a9464
 
 

பிரபலங்களின் பிரியமான உணவகம்

பொள்ளாச்சி, கோவை, ஈரோடு பகுதிகளில் திரைப்பட படப்பிடிப்புகள் நடந்தால், இயக்குநர்கள், நடிகர்கள் தொடங்கி அனைவரும் விரும்புவது அந்த யு.பி.எம் (UBM) உணவகம் தான்.

படப்பிடிப்புக்கு வரும்போதே பெரிய கேரியரில் வகைவகையான உணவுகளைக் கொண்டு வந்து சக நடிகர்களையும் சாப்பிட வைப்பதில் கில்லாடியான நடிகர் பிரபுவுக்கு பிரியமான உணவகமும் இந்த யு.பி.எம் உணவகம் தான்.

அசைவ உணவு வகைகளை அவ்வளவு சுவையாகச் சமைக்கும் சொர்ணலட்சுமி, சைவம் மட்டுமே சாப்பிடுவார் என்பதுதான் சுவாரஸ்யம்.

 
full_58c3ece1f2
 
 

25 ஆண்டுகளாய் அலுப்பில்லாத அன்புப் பயணம்

1992 ஆம் ஆண்டுகளில் நார் ஆலை தொழிலாளர்களுக்கு சிறிய உணவகத்தை தொடங்கி, 6 ஆண்டுகளுக்குப் பின்னர் யு.பி.எம் உணவகமாய் பரிணமித்து தற்போது வரை எந்த சங்கடமோ, சஞ்சலமோ இன்றி தங்கள் பணியைத் தொடர்வதாகக் கூறுகின்றனர் கருணைவேல், சொர்ணலட்சுமி தம்பதியினர்.

 
full_c1f62d34ac
 
 
என்னதான் இருந்தாலும் வீட்டுல சாப்பிட்ட மாதிரி இல்லை என்பது பெரும்பாலான உணவு விடுதிகளில் சாப்பிடுபவர்கள் கடைசியாக உதிர்க்கிற வார்த்தை. அந்த வார்த்தை இங்கே வருபவர்களுக்கு மறந்தும் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம் என்கிறார் கருணை வேல். வீட்டில் விருந்து சாப்பிட்ட மனநிலையோடுதான் வாடிக்கையாளர்கள் செல்ல வேண்டும், என்பதால்தான், நாங்களே பார்த்துப் பார்த்து சமைக்கிறோம், நாங்களே கேட்டுக் கேட்டு பரிமாறுகிறோம் என்கிறார்கள் அந்த தம்பதியினர்.

அனைவரையுமே தன் குழந்தைகளாக அன்போடு உபசரிக்கும் இந்த தம்பதியருக்கு கர்பிணி பெண்கள் மீது அலாதி பிரியம், அதாவது, தாய் வீட்டின் உபசரிப்போடு ஒரு குட்டி வளைகாப்பு செய்து ஆசிர்வதித்த பினரே அவர்களை அனுப்பி வைக்கின்றனர்.

பணம் என்பதை விட, அன்பு கலந்த சேவைதான் நோக்கம் என்று நெக்குருகும் கருணைவேல், சொர்ணலட்சுமி தம்பதியினர் நடத்துவது வழக்கமான உணவு விடுதி அல்ல… அன்பும், அக்கறையும் நிறைந்திருக்கும் இன்னொரு வீடு...

https://tamil.yourstory.com

 

  • தொடங்கியவர்

யூ டியூப் முதல் டியூஷன் வரை... பெண்களுக்கான எளிய தொழில் வாய்ப்புகள்!

 
 

இப்போது பெண்களும் ஆண்களுக்கு நிகராக சமமான இடத்தை எல்லா இடங்களிலும் பெற முடியும். இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய பெரிய நிறுவனங்களில் பெரும்பாலும் சி.இ.ஓ-வாக பெண்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். ஆனாலும் பெண்களில் பெரும்பாலானோர் இன்னமும் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடைக்கிறார்கள். அவர்கள், தங்களால் குடும்பத்துக்கு நிதியளவில் ஏதேனும் உதவியாக இருக்க முடியுமா எனச் சிந்திப்பவர்கள். அவர்களால் நிச்சயம் ஆண்களுக்கு நிகராகச் சம்பாதிக்க முடியும். 

பணம் - பெண்

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதில் திறமையானவர்கள் பெண்களே. அதிலும், வேலைக்குப் போகும் பெண்கள், வீடு, அலுவலகம் என இரண்டு இடங்களிலும் அனைத்தையும் சமாளிப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், பெண்களின் திறமை, உழைப்பு எல்லாம் பெரும்பாலும் வீணாகிவிடுகின்றன. பெண்கள் நினைத்தால் தங்களுடைய திறமையைப் பயன்படுத்தி நன்றாகச் சம்பாதிக்கவும் முடியும். 

அதற்கு, உங்களிடம் உள்ள திறமைகளை அடையாளம் காணுங்கள்; அவற்றை எப்படி வருமானம் பார்க்கும் வகையில் மாற்ற முடியும் எனத் திட்டமிடுங்கள். வருமானமாக வரும் பணத்தை எப்படியெல்லாம் மேலும் பெருக்கலாம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். பெண்கள் செய்யக்கூடிய தொழில்வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம். 

1) ட்யூஷன் க்ளாஸ்:

நீங்கள் நன்றாகப் படித்துத் தேர்ந்தவர்கள் என்றால், உங்களால் அதைப் பிறருக்குக் கற்றுத்தர முடியுமென்றால் நிச்சயம் நீங்கள் ஒரு ட்யூஷன் சென்டரை ஆரம்பிக்கலாம். அதிகம் தேவையெல்லாம் ஒரு மொட்டைமாடியும் ஒரு கரும்பலகையும்தான். ஆனால், எல்லோரையும்போல சாதாரணமான ட்யூஷனாக இல்லாமல் வித்தியாசமாகச் செய்ய வேண்டும். படிப்பை மட்டுமே சொல்லித்தரமால் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் சுயமாகச் சிந்திக்கத்தூண்டும் சில அம்சங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு விளையாட்டுகளை அறிமுகப்படுத்த வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் விரும்பி வருவார்கள்.

2) யூடியூப் சேனல்:

பெண்கள் பலரும் யூடியூப் சேனலில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். நன்றாகச் சமைப்பவர்கள் சமையல் குறிப்பு வீடியோக்களையும், ஒப்பனைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் அழகுக் குறிப்புகளையும், குழந்தை வளர்ப்பில் தேர்ந்தவர்கள் குழந்தை வளர்ப்பு தொடர்பான குறுப்புகளையும் வீடியோக்களாகப் பதிவிட்டு, யூடியூப் சேனல்கள் ஆரம்பித்து யார் வேண்டுமானாலும் கலக்க முடியும். தேவையெல்லாம் கூகுள் அக்கவுன்ட்டும் நல்ல கேமரா திறன்கொண்ட மொபைலும்தான்.

யூடியூப்

3) டேட்டா என்ட்ரி மற்றும் காப்பி பேஸ்ட்:

இணையதளங்களில் காப்பி-பேஸ்ட் வேலைகள் நிறையவே உள்ளன. அவற்றை வீட்டிலிருந்தே செய்வதன் மூலம் கணிசமாகச் சம்பாதிக்க முடியும். அவர்கள் சொல்லும் இணையதளத்தின் லிங்க்கை ஓப்பன் செய்து, அந்த லிங்க்கை காப்பி செய்து அவர்களுடைய இன்டர்ஃபேஸில் பேஸ்ட் செய்தால் போதும். உங்களுக்கு நன்றாக டைப்பிங் செய்ய வருமென்றால், வீட்டில் ஓய்வு நேரத்தில் டைப்பிங் செய்து வருமானம் ஈட்டலாம்.  

4. ஃபேன்சி ஸ்டோர்:

உங்களுக்கு நல்ல விற்பனை அறிவும் ஆர்வமும் இருந்தால் ஃபேன்சி ஸ்டோர் வைக்கலாம். ஃபேன்சி பொருள்கள் எங்கிருந்து மலிவாக வாங்கலாம் என்பதைத் தெரிந்துகொண்டு, அங்கிருந்து வாங்கி வீட்டின் அருகே சிறிய கடை அமைத்து விற்பனை செய்யலாம். ஃபேன்சி பொருள்களை சென்னை பாரிமுனையில் மொத்தமாக வாங்கலாம்.  

இப்படி பல வழிகளில் பெண்கள் சம்பாதிக்கலாம் என்றாலும், சம்பாதித்தப் பணத்தை எப்படிப் பெருக்குவது எனத் தெரியாவிட்டால், வரும் வருமானம் போகும் இடம் தெரியாமல் போய்விடும். தங்களுடைய சம்பாத்தியத்தை எப்படியெல்லாம் திட்டமிட்டுப் பெருக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பணம்முதலீட்டில் வயது மிகவும் முக்கியம். அதாவது முதலீட்டுக் காலம் முக்கியம். நீங்கள் எவ்வளவு விரைவில் முதலீடு செய்ய தொடங்குகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களின் இலக்குகளை விரைவில் அடையலாம். கணவரது வருமானம் குடும்பச் செலவுகளுக்கு உதவுகிறது எனில், குடும்பத்தின் சில அவசியமான அவசரமான பணத் தேவைகளில் உங்களது முதலீடானது பேருதவியாக இருக்கும். 

ஆனால், வருமானத்தை வீட்டில் ஒளித்துவைக்க வேண்டாம். டிமானிட்டைசேஷன் நடவடிக்கையை மறந்திருக்க மாட்டீர்கள். எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே வங்கி, அஞ்சலகம் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுடைய முதலீட்டு முடிவுகளை கணவருடன் ஆலோசித்து எடுங்கள். பணத்தைக் கையாள்வதில் கணவர் திறமையானவராக இல்லையெனில், நீங்களே அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். 

வங்கி, அஞ்சலகம் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய மூன்றிலும் இருக்கும் அனைத்து முதலீட்டுத் திட்டங்களையும் தெரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய தேவையைப் பொறுத்து முதலீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுங்கள். முதலீட்டாளர் விழிப்புஉணர்வு முகாம்கள் அல்லது கூட்டங்களில் முடிந்தவரை பங்கேற்க முயற்சிசெய்யுங்கள். 

 

வருமானம், சேமிப்பு மற்றும் முதலீடு இவை மூன்றைப் பற்றியும் நீங்கள் ஒரு தெளிவுக்கு வந்துவிட்டால், உங்களால் விண்ணையும் தொட முடியும் பெண்களே!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகம் முழுவதும் கடலில் பயணிக்கும் பெண்கள் குழு (காணொளி)

  • தொடங்கியவர்

புகைப்படங்களில் இந்த வாரம்: 26 ஆகஸ்ட் - 1 செப்டம்பர்

கடந்த வார நிகழ்வுகளின் சிறந்த புகைப்படங்களில் சிலவற்றை செய்திக் குறிப்போடு உங்களுக்குத் தொகுத்து வழங்குகிறோம்.

20வது ஆண்டு நினைவு நாளில் இளவரசி டயானாவின் மாளிகை வாசலில் மலரஞ்சலி

இங்கிலாந்து இளவரசி டயனாவின் 20ஆவது ஆண்டு நினைவு தினத்தில் பொது மக்கள் அவர் குடியிருந்த மாளிகை முன் மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 

லண்டனின் மேற்கு பகுதியிலுள்ள நாட்டிங் ஹில்லில், ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவின் கடைசி நாளான ஆகஸ்ட் 17 ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பல்வண்ண ஆடைகளுடன் திரண்டனர்.

லண்டனின் மேற்கு பகுதியிலுள்ள நாட்டிங் ஹில்லில், ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவின் கடைசி நாளான ஆகஸ்ட் 17 ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பல்வண்ண ஆடைகளுடன் திரண்டனர்.

 

50 சண்டைகளில் தோல்வியை தழுவாதவர் என்று பெருமைக்கு சொந்தக்காரரான குத்துச்சண்டை வீரர் ஃபிலாய்ட் மேவேவேர்.

குத்துச்சண்டை வரலாற்றிலேயே சிறந்தது என்று சொல்லத்தக்க ஒரு போட்டியில் 10ஆவது சுற்றில் கோநோர் மெக்கிரகோரை வீழ்த்தியதன் மூலம், 50 போட்டிகளில் தோல்வியைத் தழுவாதவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் குத்துச்சண்டை வீரர் ஃபிலாய்ட் மேவெதர்.

 

ஸ்பெயினில் தக்காளி திருவிழா

ஸ்பெயினின் சிறிய நகரான புனோனில் ஆண்டுதோறும் நடைபெறும் தக்காளி விழாவில் உலக நாடுகளை சேர்ந்த மக்கள் கூடி ஒருவர் மீது ஒருவர் தக்காளி வீசி மகிழ்ந்தனர். 1945 ஆம் ஆண்டு நடைபெற்ற உணவு சண்டை ஒன்றே இந்நிகழ்வுக்கான தொடக்கம்.

 

இஸ்லாமியரின் புனித இடமான மெக்கா கிராண்ட் மசூதியில் காபாவை சுற்றி வந்து புனித பயணத்தை தொடங்கியுள்ளனர்.

ஆண்டுதோறும் சௌதி அரேபியாவுக்கு செல்லும் ஹஜ் புனிதப் பயணத்தை உலக நாடுகளிலுள்ள சுமார் 2 மில்லியன் முஸ்லிம்கள் தொடங்கியுள்ளனர். புதன்கிழமை சூரியன் மறைந்த பின்னர் இஸ்லாமியரின் புனிதத் தலமான மெக்கா கிராண்ட் மசூதியில் உள்ள காபாவை சுற்றி யாத்ரீகர்கள் சுற்றத் தொடங்கினர்.

 

ஷிபரி கயிறு காட்சியில் அரங்கேற்றம் நடத்தும் 'பேர்னிங் மேன்' கலைஞர்கள்

புயலுக்கு நடுவே கலை: நிவாடாவிலுள்ள பிளாக் ராக் பாலைவனத்தில் ஷேன் பிட்சர் என்பவர் ஏற்பாடு செய்த கலை மற்றும் இசை விழாவின்போது ஒரு பாலைவனத் தூசிப் புயல் வீசியது. அப்போது நடைபெற்ற 'ஷிபரி கயிறு காட்சி' எனப்படும் ஒரு கலை நிகழ்ச்சி.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் 'ல விற்றா பெல்லா' முதியோர் பராமரிப்பு இல்லத்தில் குடியிருந்த அனைவரும் மீட்கப்பட்டனர்

புயலால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் 'ல விடா பெல்லா' முதியோர் பராமரிப்பு இல்லத்தில் முதியோர் வெள்ளப்பெருக்கில் சிக்கியிருக்கும் இப்புகைப்படம் சமூக ஊடகங்களில் பெருமளவு பகிரப்பட்ட பின்னர், அவர்கள் மீட்கப்பட்டனர். முழங்கால் அளவு மட்டுமே முதலில் இருந்த வெள்ளப்பெருக்கு, அடுத்த 15 நிமிடத்தில் இடுப்பளவு வந்திருந்தது.

ஹார்வி புயல் தற்போது வெப்பமண்ட தாழ்வழுத்தமாக தரங்குறைந்துள்ளது. ஆனாலும், அடுத்த இரண்டு நாட்கள் லூசியானாவில் இருந்து கென்டகி வரை கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெக்ஸாஸின் தென் கிழக்கிலும், தென் மேற்கு லூசியானாவிலும் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹார்வி புயல் தற்போது வெப்பமண்டலத் தாழ்வழுத்தமாக குறைந்துள்ளது. ஆனாலும், அடுத்த இரண்டு நாட்கள் லூசியானாவில் இருந்து கென்டகி வரை கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் கிழக்கு டெக்ஸாசிலும் தென் மேற்கு லூசியானாவிலும் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வணிக தலைநகரான மும்பையில் பெய்த பருவமழையால் இடுப்பளவுக்கு தண்ணீர் பெருகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த செவ்வாய்கிழமை விமான பயணங்கள், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பையில் பெய்த பருவமழையால் இடுப்பளவுக்கு தண்ணீர் பெருகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த செவ்வாய்கிழமை விமானப் பயணங்கள், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

சூடான் மக்கள் விடுதலை படைக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள், உகாண்டாவுக்கும், தெற்கு சூடானுக்கும் எல்லையில் இருக்கின்ற கயா நகரில் அரச படைக்கு எதிராக ஆயுதத் தாக்குதல் நடத்தினர்.

சூடான் கிளர்ச்சிப் படையினர், உகாண்டா மற்றும் தெற்கு சூடான் எல்லையில் இருக்கின்ற கயா நகரில் அரச படைக்கு எதிராக ஆயுதத் தாக்குதல் நடத்தினர்.

சூடான் மக்கள் விடுதலை படைக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள், உகாண்டாவுக்கும், தெற்கு சூடானுக்கும் எல்லையில் இருக்கின்ற கயா நகரில் அரச படைக்கு எதிராக ஆயுதத் தாக்குதல் நடத்தினர்.

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

32 வருடங்களின் பின் புளியங்கூடலில் கோலாகலமாக இடம்பெற்ற மாட்டுவண்டிச் சவாரி

 

32 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை புளியங்கூடலில் மாட்டுவண்டி சவாரி போட்டி கோலாகலமாக இடம்பெற்றது.

32 வருடங்களின் பின் புளியங்கூடலில் கோலாகலமாக இடம்பெற்ற மாட்டுவண்டிச் சவாரி

இன்று மதியம் புளியங்கூடல் புதுவெளி சாவரித்திடலில் குறித்த மாட்டுவண்டி சவாரிபோட்டி இடம்பெற்றது.

வடக்கு மாகாணத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் கொண்டுவரப்பட்ட சுமார் 36 சோடி மாடுகள் குறித்த மாட்டுவண்டி சவாரி போட்டியில் பங்குபற்றின.

32 வருடங்களின் பின் புளியங்கூடலில் கோலாகலமாக இடம்பெற்ற மாட்டுவண்டிச் சவாரி

குறித்த போட்டியில் பங்குபற்றிய மாடுகள் கிட்டத்தட்ட 10 தொடக்கம் 18 இலட்சம் ரூபா பெறுமதியுடையது என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

புளியங்கூடல் மகாமாரி விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் புளியங்கூடல் மக்களின் பெரும் பங்களிப்புடன் இடம்பெற்ற குறித்த மாட்டுவண்டி சவாரியில் முதல் இடத்தை  பெறுபவர்களுக்கு அரைப்பபவுண் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

32 வருடங்களின் பின் புளியங்கூடலில் கோலாகலமாக இடம்பெற்ற மாட்டுவண்டிச் சவாரி

அத்துடன் முதல் மூன்று இடங்களை பெறும் போட்டியாளர்களுக்கும் பெறுமதியான பரிசில்கள் வழங்கப்பட்டன.

இதேவேளை குறித்த மாட்டுவண்டி சவாரியில் பங்குபற்றும் மாடுகளை துன்புறுத்தல் என்பது தடை செய்யப்பட்டதாகவும், அவ்வாறு துன்புறுத்தப்படும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

32 வருடங்களின் பின் புளியங்கூடலில் கோலாகலமாக இடம்பெற்ற மாட்டுவண்டிச் சவாரி

 

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்
‘வலிந்து மோதுபவரை இழுத்து வீழ்த்துக’
 

image_04cdc764e5.jpgஉண்மைகளை, நியாயம் நீதிகளைப் புரிந்து கொண்டவர்கள், அதை மக்கள் நலன் பொருட்டு, ஒன்றையுமே வெளிப்படுத்தாது, மௌனம் காப்பவர்கள் பொய்யர்கள் ஆகின்றார்கள். 

நல்லதைத் தெரிந்து வைத்து, அதைத் தனக்குள்ளே முடக்கி வைத்தால், யாது பயன் ஐயா? எமக்கு எதற்கு வீண் வம்பு என எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தப்பித்து விடமுடியாது. 

குற்றமிழைத்தவன் எனத் தெரிந்தும் அவன் பொருட்டு, எந்த நீதிபதிகளும் நீதியில் இருந்து பிறழமுடியாது. சமூக நீதிக்களத்தில் உறுப்பினர்கள் சாதாரண மக்கள்தான். எனவே, தவறுகளைத் தட்டிக்கேட்கும் உரித்து உடையவர்களும் மக்களேயாவர். 

உண்மைகளை வெளிப்படுத்த விரும்புபவர்களுக்கு உறுதுணையாக நிற்க, மக்கள் அச்சப்படுகின்றார்கள்.எல்லோருக்கும் சட்டப் பாதுகாப்பு இருக்கின்றதா? 

இஷ்டப்படி நடப்பது துஷ்டர்களின் செயலாகி விட்டது. துஷ்டரை அடக்கி ஒடுக்க, எல்லோரும் சேர்ந்தியங்க வேண்டும். வலிந்து மோதுபவரை இழுத்து வீழ்த்துக. 

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று:செப்டெம்பர் 04
 

1666: இலண்டன் மாநகரில் மூன்று நாட்களாக இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் 13,000 இற்கும் அதிகமான வீடுகள் தீக்கிரை.

1781: லொஸ் ஏஞ்சலஸ் நகரம் ஸ்பானிய ஆளுநரான ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் அமைக்கப்பட்டது.

1870: பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் பதவியிலிருந்து அகற்றப்பட்டான்.

1939: இரண்டாம் உலகப் போர்: நேபாளம் ஜெர்மன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தது.

1939: இரண்டாம் உலகப் போர்: ஐரோப்பியப் போரில் ஜப்பான் நடுநிலையை அறிவித்தது.

1951: கண்டங்களுக்கிடையேயான முதலாவது நேரடித் தொலைக்காட்சி ஜப்பானில் இடம்பெற்ற அமைதி மாநாட்டில் இருந்து கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஒளிபரப்பப்பட்டது.

1956: வன்தட்டு நினைவகத்தைக் கொண்ட உலகின் முதலாவது கணினியை ஐ.பி.எம் அறிமுகப்படுத்தியது.

1963: சுவிஸ் எயார் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்த 80 பேரும் உயிரிழந்தனர்.

1970: சல்வடோர் அலெண்டோ சிலி நாட்டின் ஜனாதிபதியானார்.

1978: அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1996: கொலம்பிய புரட்சி இராணுவப் படையினர் கொலம்பியாவின் இராணுவ முகாமொன்றைத் தாக்கினர். மூன்று வாரங்கள் நீடித்த இக்கரந்தடிப் போரில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

கொட்டாவி விடும்போது மூளையில் என்ன நடக்கிறது?

 

இதைப் படிக்கும்போது உங்களுக்குக் கொட்டாவி வரலாம். அது பார்த்தால் தொற்றிக்கொள்வதுதானே.

கொட்டாவி விடும் குழந்தைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

மூளையில் நடக்கும் எந்த வினை கொட்டாவியைத் தூண்டுகிறது என்று தற்போது விஞ்ஞானிகள் ஆராய்கிறார்கள்.

மூளையில், உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதியில் கொட்டாவியைத் தூண்டும் வேலை நடப்பதாக நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.

பிரைமரி மோட்டார் கார்ட்டெக்ஸ் எனப்படும் உடலியக்கத்தைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதியே டௌரெட்ஸ் சின்ட்ரோம் எனப்படும் தசைச் சொடுக்கு நோய்க்கும் ஓரளவு காரணமாக இருக்கிறது.

எனவே, தொற்றிக்கொள்கிற கொட்டாவிகளைப் புரிந்துகொள்வது டௌரெட்ஸ் சின்ட்ரோமைப் புரிந்துகொள்ளவும் உதவும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மற்றவர்களுடைய சொற்கள், செயல்களைப் போலவே செய்வதை எக்கோஃபெனோமினா (எதிரொலிப் புலப்பாடுகள்) என்கிறார்கள்.

இந்த எதிரொலிப் புலப்பாட்டின் ஒரு வகைதான் மற்றவரைப் பார்த்து நாம் விடுகிற கொட்டாவியும். டௌரெட்ஸ் சின்ட்ரோம், வலிப்பு, ஆட்டிசம் போன்றவற்றிலும் இந்த எதிரொலிப் புலப்பாடுகள் இருக்கின்றன.

இத்தகைய புலப்பாடுகள் நிகழும்போது, மூளையில் என்ன நடக்கிறது என்பதை சோதிக்கும் ஆராய்ச்சிக்கு 36 பேர் தங்களை உட்படுத்திக்கொண்டனர். மற்றவர்கள் கொட்டாவி விடும்போது இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று விஞ்ஞானிகள் கவனித்தார்கள்.

கரண்ட் பயாலஜி என்ற சஞ்சிகையில் வெளியான இந்த ஆய்வுக் கட்டுரையில் சிலர் கொட்டாவி விடுவதில் தவறில்லை என்கிறார்கள். சிலர் அதைக் கட்டுப்படுத்தும்படியும் சொல்கிறார்கள்.

ஒவ்வொருவரது முதன்மை மோட்டார் கார்ட்டெக்ஸ் எப்படி வேலை செய்கிறது, அது எப்படி உணர்ச்சிவசப்படுகிறது என்பதைப் பொறுத்துதான் குறிப்பிட்ட நபர் கொட்டாவி விடுவதற்கான தூண்டுதலும் அமைகிறது.

மண்டைக்கு வெளியே இருந்து மூளையைத் தூண்டும் 'எக்ஸ்டர்னல் டிரான்ஸ்க்ரானியல் மேக்னடிக் ஸ்டிமுலேஷன்' (டி.எம்.எஸ்.) என்ற கருவியைக் கொண்டு மோட்டார் கார்ட்டெக்ஸ் உணர்ச்சிவசப்படும் அளவை அதிகரிக்க முடியும். இதன் மூலம் கொட்டாவி விடுவதையும் அதிகரிக்க முடியும். தங்கள் கொட்டாவி ஆராய்ச்சியில் இந்தக் கருவியை விஞ்ஞானிகள் பயன்படுத்தினர்.

கொட்டாவி ஆராய்ச்சியில் டி.எம்.எஸ். கருவி பயன்படுத்தப்படுகிறது.படத்தின் காப்புரிமைSUPPLIED Image captionகொட்டாவி ஆராய்ச்சியில் டி.எம்.எஸ். கருவி பயன்படுத்தப்படுகிறது.

"இந்த உணர்ச்சிவசப்படுதலை குறைக்க முடிந்தால் டௌரட்ஸ் சிண்ட்ரோம் விளைவுகளையும் குறைக்க முடியும் அது தொடர்பான ஆராய்ச்சியில்தான் ஈடுபட்டிருக்கிறோம்," என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்ட ஜார்ஜினா ஜாக்சன் (அறிதல்சார் நரம்பு இயக்கவியல் பேராசிரியர்).

கார்ட்டெக்ஸ் உணர்ச்சிவசப்படுதலில் ஏற்படுகிற மாற்றம் எப்படி நரம்புக் கோளாறுகளுக்கு இட்டுச் செல்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் அதை சரி செய்யவும் வாய்ப்பு உள்ளது என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்ட மற்றொரு விஞ்ஞானி ஸ்டீபன் ஜேக்சன்.

"மூளையில் ஏற்படும் சமநிலை மாற்றங்களை சரி செய்ய டி.எம்.எஸ். கருவியைக் கொண்டு செய்யக்கூடிய, மருந்தில்லாத, ஆளுக்கேற்ப செயல்படும் சிகிச்சை முறையை உருவாக்க முயல்கிறோம்," என்று அவர் கூறினார்.

கொட்டாவியை ஆராய்வதில் டி.எம்.எஸ். என்பது புதுமையான முறை என்கிறார் ஆண்ட்ரூ கேல்லப் என்ற உளவியலாளர். பிறரைத் தம்போல் நினைக்கும் குணத்துக்கும் கொட்டாவி விடுவதற்கும் உள்ள தொடர்புகளை ஆராய்ந்தவர் இவர். கொட்டாவி ஆராய்ச்சியில் கிடைத்த தரவுகள் இந்த இரண்டுக்கும் தொடர்பு இல்லை என்று காட்டுவதாகக் கூறுகிறார் இவர்.

 

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

27 மதுபான குவளைகளை இரண்டு கைகளில் சுமந்து சென்று சாதனை!

 
 
27 மதுபான குவளைகளை இரண்டு கைகளில் சுமந்து சென்று சாதனை!
 

ஜேர்மனியில் 27 மதுபானக்குவளைகளை இரண்டு கைகளில் சுமந்து சென்று ஓலிவர் ஸ்ட்ரமும்பெல் என்பவர் சாதனை படைத்துள்ளார்.

27 குவளைகளில் மதுபானத்தை நிரப்பி ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் சுமந்து 40 மீற்றர் தூரம் வரை நடந்து சென்று குவளையில் உள்ள மதுபானம் சிந்தாமல் சிதறாமல் பத்திரமாக மேசையில் இறக்கி வைத்து சாதனை படைத்தார்.

இவர் சுமந்து சென்ற மொத்த குவளைகளும் 69 கிலோ கிராம் நிறை கொண்டது.

இதற்கு முன்பாக 29 குவளைகளை சுமந்து சென்று அதில் 2 ஜக்குகள் தவறி விழுந்தது.

இதையடுத்து இரண்டாம் கட்ட முயற்சியில் அவர் வெற்றி பெற்றார்.

 

http://newuthayan.com

 

 

  • தொடங்கியவர்

கவனம் ஈர்க்கும் இளைஞர்கள்: டாலர் இளவரசர்கள்!

 

 
richjpg

ளம் வயதிலேயே ஒரு நிறுவனத்தை உருவாக்கி, அதைச் சிறப்பாக வழிநடத்தி, அதன் மூலம் செல்வச் சீமான்களாக உயர்ந்த இளைஞர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இன்றும் உலக பணக்காரர்களில் முன்னணியில் இருக்கும் பில்கேட்ஸ் உலகின் 400 கோடீஸ்வரர்களுள் ஒருவராக இடம்பிடித்தபோது அவருடைய வயது 31-தான். அவரைப் போலவே இன்றைய கால கட்டத்திலும் பல இளைஞர்கள் செல்வச் சீமான்களாக உலகில் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள்.

 

மார்க் ஸுக்கர்பெர்க்

கம்ப்யூட்டர் கண்டறியப்பட்ட காலத்தில் தனது தனித்துவமான சிந்தனை மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் இடம்பிடித்ததைப் போல், சமூக வலைதள யுகத்தில் ஃபேஸ்புக்கை உருவாக்கிய மார்க் ஸுக்கர்பெர்க், தற்போதைய இளம் வயது பணக்காரர்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார். 2004-ம் ஆண்டில், தனது 19-வது வயதில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, ஃபேஸ்புக்கை அவர் வடிவமைத்தார். அதை மேம்படுத்த கூடுதல் கவனம் தேவைப்பட்டதால், கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்டார் மார்க். பல்கலைக்கழக அளவில் சமூக வலைத்தளமாக அறிமுகம் செய்யப்பட்ட ஃபேஸ்புக்கை, தற்போது உலகம் முழுவதும் 200 கோடிப் பேர் பயன்படுத்திவருகிறார்கள். தற்போது 33 வயதாகும் மார்க், ஃபேஸ்புக் மூலம் சேர்த்த சொத்தின் மதிப்பு மட்டும் 7,100 கோடி டாலர்.

 

லுகாஸ் வால்டன்

இளம் பணக்கார இளைஞர்களின் பட்டியலில் 2-ம் இடத்தில் இருப்பவர் லுகாஸ் வால்டன். இவர் வால்மார்ட் என்ற பன்னாட்டு விற்பனை நிறுவனத்தை உருவாக்கிய சாம் வால்டனின் பேரன். தந்தை ஜான் வால்டன் 2005-ம் ஆண்டில் மறைந்ததையடுத்து, அவரது சொத்தின் பெரும்பகுதி லுகஸ் வால்டனுக்குக் கிடைத்தது. அந்த வகையில் தற்போது அவரின் சொத்து மதிப்பு 1,100 கோடி டாலர்.

 

டஸ்டின் & ஸ்காட் டன்கன்

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் டஸ்டின் மாஸ்கோவிட்ஸ். மார்க் ஸுக்கர்பெர்க் ஃபேஸ்புக்கைத் தொடங்கியபோது, ஆரம்ப காலத்தில் அவரோடு பணியாற்றினார் டஸ்டின். பின்னர் மென்பொருள் புராஜெக்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான அஸானாவைத் தொடங்கினார். இன்றைய நிலையில் இவரின் சொத்து மதிப்பு 1,007 கோடி டாலர். அமெரிக்கத் தொழிலதிபரான ஸ்காட் டன்கன் (Scott Duncan) இந்தப் பட்டியலில் 4-ம் இடத்தில் இருக்கிறார். எண்டர்பிரைஸ் புராடக்ட்ஸ் நிறுவனத்தைத் தொடங்கிய டேன் டன்கனின் மகன்தான் இவர். தந்தை மறைவுக்குப் பின்னர் அவரது சொத்தின் பெரும்பகுதி ஸ்காட் வசம் வந்தது. அந்த வகையில் இவரின் சொத்து மதிப்பு 570 கோடி டாலர்.

 

பாபி & ஸ்பீகல்

ஸ்நாப்சாட் செயலியின் தாய் நிறுவனமான ஸ்நாப் கார்ப்பரேஷனைத் தொடங்கியவர்களில் ஒருவரும் அதன் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரியுமான பாபி மர்பி இந்தப் பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறார். ஸ்நாப் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது பங்குகளை அமெரிக்கச் சந்தையில் பட்டியலிட்டபோது, இளம் வயதில் பில்லியனர் ஆக உயர்ந்தார். இவரது சொத்து மதிப்பு 400 கோடி டாலர். ஸ்நாப் கார்ப்பரேஷனைத் தொடங்கியவர்களில் ஒருவரான ஈவான் ஸ்பீகலும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 1990-களில் பிறந்த ஈவான், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, பாபி மர்பியுடன் இணைந்து ஸ்நாப் கார்ப்பரேஷனைப் பரீட்சார்த்த முறையில் ஆரம்பித்தார். இன்று அந்த நிறுவனத்தின் வளர்ச்சியே அவரை இளம் தலைமுறைக் கோடீஸ்வரராக மாற்றியிருக்கிறது. இவரது சொத்து மதிப்பு 400 கோடி டாலர். 

 

நாதன்

ஏர்பிஎன்பி என்ற ஆன்லைன் நிறுவனத்தின் தலைவர்களின் ஒருவரான நாதன் பிளசார்சியக் என்பவர் 380 கோடி டாலர் சொத்து மதிப்புடன் இந்தப் பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறார். இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இவரது நிறுவனம் செயல்பட்டுவருகிறது. ஒரு வீடு அல்லது விடுதி ஆகியவற்றை வாடகைக்கு விடுவது தொடர்பான பணிகளை மட்டுமே செய்யும் ஆன்லைன் நிறுவனம் இது. கடந்த 2009-ம் ஆண்டுதான் நாதன் தன் நண்பர்களுடன் இணைந்து இந்நிறுவனத்தைத் தொடங்கினார். 

குடும்பச் சொத்துக்கள் மூலம் உலக பில்லியனர் இளைஞர்களாக இணைந்தவர்களைவிட, சொந்த முயற்சியாலும் புத்திக்கூர்மையாலும் முன்னேறிய இளைஞர்களே அதிக அளவில் பில்லியனர்களாக வலம்வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தனித்துவமான சிந்தனையும் எதிர்காலத்தை ஆளும் விஷயங்களைக் கணிக்கும் திறனும் உள்ள இளைஞர்களே அடுத்த தலைமுறை பில்கேட்ஸ் மற்றும் மார்க் ஸுக்கர்பெர்க் ஆக வலம் வருவார்கள்

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

  • தொடங்கியவர்

கால் வைக்கும் இடமெல்லாம் பசுமை... சென்னையில் இப்படி ஒரு சுற்றுலா இடமா?

 
 

 

சென்னையில் உள்ள முக்கியமான சுற்றுலா இடங்கள்னு சொன்னா, மெரினா கடற்கரை ,மகாபலிபுரம், வள்ளுவர்கோட்டம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்...என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், பலரும் கேள்விப்படாத இடம்தான், இந்த தியோசோஃபிகல் சொசைட்டி (Theosophical society). 

adayar


 

தியோசோஃபிகல் சொசைட்டி 1875-ம் ஆண்டில் அன்னி பெசன்ட் அம்மையாரால் நிறுவப்பட்டது. சென்னை நகரத்தின் பிரபலமான சுற்றுலா இடங்களில் ஒன்றான தியோசோஃபிகல் சொசைட்டி 200-க்கும் அதிக ஏக்கர் பரப்பளவில் அடையாரில் அமைந்துள்ளது.

adayar

 

மெட்ராஸ் தினத்தைக் கொண்டாடும் வகையில், வாண்டர்மைல் (wandermile) நிறுவனம் நேச்சர் வாக் என்னும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்த நடைப்பயணத்தின்போது, பசுமையான மரக்காடு, பாரம்பர்ய பழைய கட்டடங்கள், பலவிதமான தாவரங்கள் மற்றும் விலங்குகள் என இவை அனைத்தையும் கண்டறிவதற்கான அற்புதமான இடமாக தியோசோஃபிகல் சொசைட்டி அமைந்துள்ளது. இந்த நடைப்பயணத்தில் 20பேர் கலந்துகொண்டனர்.

banyan

 

பசுமையின் மத்தியில் அமைந்திருக்கும் தியோசோஃபிகல் சொசைட்டியில், பல்வேறு கோயில்கள் அமைந்துள்ளன. இங்குள்ள ஆலமரம் சுமார் 450 ஆண்டுகள் பழைமையானவை..

banyan tree

 


தியோசோஃபிகல் சொசைட்டி வளாகத்தில் நூலகம், பழைய குடியிருப்புக் கட்டடங்களும் அமைந்துள்ளன. அன்னி பெசன்ட் கல்லறை இங்குதான் அமைந்துள்ளது. இந்த நகரத்தில், நன்கு பராமரிக்கப்படும் பசுமையான இடங்கள், பறவைகள், பட்டாம்பூச்சிகள் ஆகியவற்றை ஆராய விரும்பும் இயற்கை ஆர்வலர்களுக்கு இந்த நடைப்பயணம் புதிய அனுபவமாக இருக்கும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

27 வருடங்களாக ஆண்கள் இல்லாமல் பெண்கள் மட்டுமே வாழும் விசித்திர கிராமம்.

 

27 வருடங்களாக ஆண்கள் இல்லாமல் பெண்கள் மட்டுமே வாழும் விசித்திர கிராமம்.

சமூகத்தில் ஆண்களின் துணையில்லாமல் வாழும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்பது நாம் காலம் காலமாக அறியப்படுகிற ஒரு கருத்து. ஆனால் ஒரு கிராமத்தில் ஆண்களின் துணையே வேண்டாம் என்று பெண்களும் மற்றும் அவர்களின் குழந்தைகளும் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் சவாலான வாழ்க்கை அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

27 வருடங்களாக ஆண்கள் இல்லாமல் பெண்கள் மட்டுமே வாழும் விசித்திர கிராமம்.

கென்யாவின் வடக்குப் பகுதியில் உள்ள குக்கிராமத்தில் சம்புரு என்ற பழங்குடி இனத்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அங்கு பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் அந்த வீரர்களும், அவ்வூரில் உள்ள ஆண்களும் அங்கிருக்கும் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியும், அடித்தும் துன்புறுத்தியுள்ளனர். குழந்தை திருமணம், பெண்ணுறுப்பு சிதைவு, போன்ற கொடுமைகளை சந்தித்துவந்த அந்த பெண்கள் சார்பில் குரல் கொடுக்க ஆரம்பித்தவர் தான் ரபேகா லோலோசோலி. சம்புரு இனப்பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நாங்கள் வாழ ஆண்களின் துணை தேவையில்லை என்று முழங்கினார்.

27 வருடங்களாக ஆண்கள் இல்லாமல் பெண்கள் மட்டுமே வாழும் விசித்திர கிராமம்.

இவர் தொடர்ந்து போராடி உமோஜா என்ற ஒரு புதிய கிராமத்தை உருவாக்கினார். ஸ்வஹிலி மொழியில் உமொஜா என்றால் ஒற்றுமை என்று அர்த்தம். பெண்கள் மற்றும் ,குழந்தைகள் வசிக்கும் இந்தக் கிராமத்திற்குள் நுழைய ஆண்களுக்கு அனுமதியில்லை. இங்கிருக்கும் பெண்கள், பாரம்பரிய நகைகள் செய்து விற்பதும், இங்கே வரும் பெண் சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து அதிலிருந்து கிடைக்கும் பணத்தையும் தங்களின் வாழ்வாதத்திற்காக பயன்படுத்தியும் வந்துள்ளனர். கல்வியே தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று ரபேகா அந்த ஊரில் ஒரு பள்ளிக்கூடத்தை ஆரம்பித்துள்ளார். அந்த பள்ளியில் அக்கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் படித்து வருகிறார்கள். பெண்களை மதிக்கும் சமூகம் வளரவேண்டும் என்பதே அப்பள்ளியின் தாரக மந்திரம் என்று கூறப்படுகிறது.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

இரும்புப் பெண்ணின் காதல் கதை!

 

- ஜி.மகேஷ்

கொடைக்கானலிலிருந்து 13 கி.மீ. தொலைவில் இருக்கும் ஒரு மலைக் கிராமம்தான் பெருமாள் மலை. கடந்த சில மாதங்களாக இங்குதான் வசித்து வருகிறார் இந்திய ராணுவ கருப்புச் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகளாக உண்ணாவிரதமிருந்து போராடிய இரும்புப் பெண் இரோம் ஷர்மிளா. அண்மையில் அவர் கொடைக்கானல் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டார்.
32.jpg
மணிப்பூரிலிருக்கும் அவருக்கு ஏன் கொடைக்கானலில் திருமணம்? அது ஒரு சுவாரஸ்யமான கதை. சீனாவின் தூண்டுதலுடன் வடகிழக்கு மாநிலங்களில்  அவ்வப்போது போராட்டங்கள் வெடித்து வந்ததால் மணிப்பூர் உள்ளிட்ட 7 வடகிழக்கு மாநிலங்களில் அண்டை நாட்டவரின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் 1958ம் ஆண்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

இதனால் இந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் முழுக்க முழுக்க பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டனர். இந்தச் சட்டத்தின் மூலம், சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டுக்குள் நீதிமன்ற அனுமதி இல்லாமல் பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட முடியும். சந்தேகப்படும் நபர்களையும் கைது செய்ய முடியும். அவர்கள் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாது.
32a.jpg
பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரங்களை இச்சட்டம் வழங்குவதால் மனித உரிமைகள் அதிக அளவில் மீறப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்துததான் தனது 28 வயதிலிருந்து 16 ஆண்டுக்காலம் இரோம் ஷர்மிளா தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். உணவு, தண்ணீர் குடிக்க மறுத்த அவரை, தற்கொலைக்கு முயன்றதாக அரசு கைது செய்தது.

2006ம் ஆண்டு டில்லியில் உண்ணாவிரதம் இருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்; பின், விடுவிக்கப்பட்டார். மணிப்பூர் திரும்பிய அவர் மீண்டும் கைதானார். உணவருந்தாததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர்மீது தற்கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனினும், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இரோம் ஷர்மிளா கைவிடவில்லை.
32b.jpg
மணிப்பூர் மாநிலத் தலைநகரான இம்பாலில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவமனையில் கைதியாக இருந்த அவருக்கு, வலுக்கட்டாயமாக மூச்சுக் குழாய் வழியாக உணவு செலுத்தப்பட்டுவந்தது. தொடர்ந்து, 16 ஆண்டுகளாகப் போராடி வரும் இரும்புப் பெண் என வர்ணிக்கப்பட்ட இரோம் ஷர்மிளா கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் “எனது உண்ணாவிரதத்தால் மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை பொய்த்துவிட்டது.

எனவே அரசியலில் இணைந்து அதன்மூலமாக எனது போராட்டத்தைத் தொடருவேன். சட்டப்பேரவைத் தேர்தலில் குரால் தொகுதியில் இருந்து சுயேச்சையாகப் போட்டியிடுவேன். இதில் வெற்றி பெற்று முதல்வரானால் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை நிச்சயம் ரத்து செய்வேன்...’’ என்று அறிவித்தார். எந்த ஓர் அரசியல்கட்சியின் பின்னணியும் இல்லாமல் மிக நீண்ட போரட்டத்தை நடத்திய இந்த இரும்புப் பெண் அரசியலுக்கு வந்ததை உள்ளூர் அரசியல்வாதிகள் விரும்பவில்லை.

2017 தேர்தலில் பதவியிலிருந்த முதலமைச்சரை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்டார். வெறும் 90 ஓட்டுகள் மட்டுமே பெற்று பரிதாபமாகத் தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து மணிப்பூரை விட்டு வெளியேறி, தென்னிந்தியாவில் ஒரு மலைக்கிராமத்தில் அமைதியாக வாழ்வது என முடிவெடுத்தார். கொடைக்கானல் வந்து சேர்ந்தார். இந்த முடிவுக்கு மற்றொரு காரணம், காதல்!

உலகின் பல பாகங்களில் இருந்தும் அவரது தொடர் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு கொடுத்த பலரில் ஒருவர்தான் டெஸ்மோன்ட் கூட்டின்ஹோ. கோவாவை பூர்வீகமாகக் கொண்ட இவர், ஓர் எழுத்தாளர். பிரிட்டிஷ் குடிமகன். தாய்லாந்தில் பணிபுரியும் மனித உரிமை ஆர்வலர். சந்தித்துக் கொள்ளாமலேயே கடிதங்களில் தொடங்கிய நட்பு, காதலாக மலர்ந்தபோது இரோம் தனது போராட்டத்தின் வெற்றிக்குப் பின்னரே திருமணம் என அறிவித்தார்.

இதனை ஏற்று டெஸ்மோன்ட் கடந்த சில ஆண்டுகளாக இரோம் ஷர்மிளாவுக்கு உதவியாக அவருடன் இருந்தார். கொடைக்கானலுக்கு வந்த பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். பதிவுத் திருமண விதிகளின் படி 30 நாட்கள் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அப்படி இவர்கள் பதிவாளரிடம் விண்ணப்பம் செய்து காத்திருந்தார்கள். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் விதிகளின்படி எவருக்காவது ஆட்சேபணை இருந்தால் அறிவிக்க வேண்டும் என்ற நோட்டீஸ் தகவல் பலகையில் ஒட்டப்பட்டது.

இது நடைமுறைச் சம்பிரதாயம். யார் எதிர்க்கப் போகிறார்கள் என்று இருவரும் நினைத்தனர். ஆனால், எதிர்பாராத இடத்திலிருந்து பிரச்னை எழுந்தது. மகேந்திரன் என்பவர், ‘இவர்கள் இங்கு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தால் மலைவாழ் மக்களின் அமைதி கெடும்; சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். எனவே, திருமணத்தை நடத்த அனுமதிக்கக் கூடாது’ என வழக்குத் தொடர்ந்தார். இதற்குச் சில அரசியல்வாதிகளின் ஆசியும் இருந்தது. 

போராட்டங்களையே வாழ்க்கையாக ஏற்ற இரோம் இதுபற்றி கவலைப்படவில்லை. பத்திரிகையாளர்களையும் சந்திக்கவில்லை. ஒரு மாத சஸ்பென்ஸுக்குப் பின்னர், குறிக்கப்பட்ட திருமண நாளுக்கு ஒருவாரம் முன்னதாக, மனுதாரர் எழுப்பியிருக்கும் ஆட்சேபணைகளை ஏற்க சட்டவிதி களில் இடமில்லை என்று கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, முடிவு செய்யப்பட்ட நாளான ஆக. 17ல் திருமணம் பதிவு செய்யப்பட்டது. உண்மையிலேயே மிக மிக எளிமையான திருமணம். விருந்தினர் யாரும் அழைக்கப்படவில்லை.

உறவினர்களும் உடன் இல்லை. பதிவு ஆவணங்களில் கையெழுத்திட்டவுடன் திருமணம் முடிந்தது. பாராட்டுரை, தேநீர் விருந்து எதுவும் கிடையாது. ஏன், ஒரு சாக்லேட் கூட விநியோகிக்கப்படவில்லை. பேன்ட், குர்தா, கழுத்தில் ஓர் அங்கி, டிரிம் செய்யப்படாத தாடி முகத்துடன் மாப்பிள்ளையும்;
பாரம்பரிய மணிப்பூர் ஆடையுடன் மணப்பெண்கள் கையில் அணியும் ஓர் அகலமான உலோக வளையுடன் மணமகளும், தாங்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து பதிவாளர் அலுவலகத்துக்கு நடந்தே வந்தார்கள்.

மணமகன் தன் அடையாளச் சான்றான பாஸ்போர்ட்டை மறந்துவிட்டார். அதைப்போய் எடுத்துவரும் வரை ஷர்மிளா பதிவாளர் அலுவலகத்தில் தனியே காத்திருந்தார். மாலை மாற்றி இருவரும் கையெழுத்திட்டதும் திருமணம் முடிந்தது. அணிந்த மாலையுடன் கைகளைக் கோர்த்துக் கொண்டு தம்பதியினர் நடந்தே சென்றதை சாலையில் இருந்த பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

www.kungumam.co.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.