Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

உலகில் மிக நீள­மான கால்­களைக் கொண்ட பெண்

ரஷ்­யாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் உலகில் மிக நீள­மான கால்­களைக் கொண்ட பெண்­ணாக விளங்­கு­கிறார்.

Ekaterina-Lisina3

29 வய­தான எக்­கெத்­த­ரினா லிசினா எனும் இந்த யவதி 6 அடி 9 அங்­குல உய­ர­மா­னவர்.  


Ekaterina-Lisinaஇவரின் கால்கள் ஒவ்­வொன்­றி­னதும் நீளம் 52.2 அங்­கு­லங்கள் (132.8 சென்­ரி­மீற்றர்) ஆகும். 


எக்­கெத்­த­ரினா லிசினா, மிக உய­ர­மா­ன­வர்­களைக் கொண்ட குடும்­பத்தைச் சேர்ந்­தவர். அவரின்  சகோ­தரர் 6 அடி 6 அங்­குல உய­ர­மா­னவர்.

 

அவரின் தந்தை 6 அடி 5 அங்­குல உய­ர­மா­னவர். தாய் 6 அடி 1 ஒரு அங்­குல உய­ர­மா­னவர். 


கூடைப்­பந்­தாட்ட விளை­யாட்டு வீராங்­க­னை­யான எக்­கெத்­த­ரினா லிசினா, 2008 ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் நடை­பெற்ற ஒலிம்பிக் கூடைப்­பந்­தாட்டப் போட்­டி­களில் ரஷ்­யாவின் சார்பில் பங்­கு­பற்­றினார்.

 

அப்­போட்­டி­களில் ரஷ்ய அணி வெள்ளிப் பதக்­கத்தை வென்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.


மொட­லா­கவும் பணி­யாற்­றிய எக்­கெத்­த­ரினா லிசினா, ஏற்­கெ­னவே உலகில் மொடலிங் துறை­யி­லுள்ள மிக உய­ர­மான பெண்­ணாக விளங்­கினார்.


தற்­போது உலகின் மிக நீள­மான கால்­களைக் கொண்ட பெண்­ணாக கின்னஸ் சாதனை நூல் வெளி­யீட்­டா­ளர்­களால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ளார். 


எனினும், தற்­போது உயிர்­வாழும் உலகின் மிக உய­ர­மான பெண் எக்­கெத்­த­ரினா லிசினா அல்லர். சீனாவைச் சேர்ந்த சுன் ஃபாங் எனும் 7 அடி 3 அங்­குல உய­ர­மான பெண்ணே தற்­போது உலகின் மிக உய­ர­மான பெண்­ணாவார்.

 

ஆனால், கால்­களின் நீளத்தைப் பொறுத்­த­வரை, எக்­கெத்­த­ரினா லிசி­னாவே சாத­னை­யா­ள­ராக விளங்கு­கிறார்.


பிறக்­கும் ­போதே தனது கால்கள் நீள­மாக இருந்­த­தாக லிசினா கூறு­கிறார். 16 வயதில் சக வகுப்பு மாண­வி­க­ளை­ விட மிக உய­ர­மா­ன­வ­ராக அவர் விளங்­கினார்.


மிக உய­ர­மா­ன­வ­ராக இருந்­ததால் பாட­சா­லையில் மாண­வர்­களின் கேலி­க­ளுக்கும் வெருட்டல்களுக்கும் தான் ஆளானதாகவும் ஆனால், தேவையானபோது அவர்களை எதிர்கொள்வதற்காக தனது சகோதரனை தான் அழைத்ததாகவும் எக்கெத்தரினா லிசினா தெரிவித்துள்ளார்.

Ekaterina-Lisina-2

Ekaterina-Lisina1

 

http://metronews.lk/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

‘பர்ப்பிள்‘ பணித்திட்டம் முதல் ‘ஐஃபோன் X‘ வரை

ஐபோன்

 

'ஆப்பிள்' நிறுவனத்தின் ஐஃபோன் செல்பேசி வெளியிட்டின் 10-ஆவது ஆண்டாகிய இந்த ஆண்டு, இது வரை வழங்கப்படாத அளவுக்கு மிகப் பெரியதொரு மேம்பாடோடு புதிய ஐஃபோன் வெளியாகும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.

முன்பக்கம் முழுவதும் காட்சித்திரையாக அமைகின்ற சீரமைக்கப்பட்ட வடிவமைப்போடு, முகத்தை ஸ்கேன் செய்து அடையாளமாக ஏற்கும் அமைப்பு மற்றும் உயர் தொழில்நுட்ப மெய்நிகர் வசதிகளோடு இந்த புதிய ஐஃபோன் வெளியாகும் என பலரிடமும் எதிர்பார்ப்பு எழுந்தது.

பல்வேறு வசதிகளையுடைய இந்த புதிய ஐஃபோனின் விலை அதிகமாக இருக்கும் என்று பல ஆய்வாளர்கள் ஊகம் வெளியிட்டனர்.

ஸ்மார்ட் ஃபோன் எல்லா இடங்களிலும் காணப்படும் ஒரு பொருளாக இவ்வுலகில் மாறிவிட்ட நிலையில். ஒரு தசாப்த காலத்திற்கு முன்னால், ஸ்வீவ் ஜாப் இதனை எவ்வளவு ஆச்சரியமூட்டும் வகையில் வெளியிட்டார் என்பதையும், இந்த செல்பேசி சந்தையில் பெரும் மாற்றங்களை கொண்டு வருமா? என்பது பற்றி வேறுபட்ட கருத்துக்கள் எந்த அளவுக்கு நிலவியது என்பதையும் மறந்துவிடுவது எளிதானது.

புதிய ஐஃபோன் வெளியாகும் வேளையைக் குறிப்பதற்காக, இந்த ஐஃபோன் கடந்த வந்த 10 முக்கிய தருணங்களை தொகுத்து வழங்குகின்றோம்.


01.2004: 'பர்ப்பிள்' பணித்திட்டம் பிறப்பு

‘பர்ப்பிள்‘ பணித்திட்டம் முதல் ‘ஐஃபோன் X‘ வரை

பர்ப்பிள் குறியிடப்பட்ட வடிவமைப்புடைய ஃபோனை ஆகஸ்ட் 2005 ஆம் ஆண்டு 'ஆப்பிள்' நிறுவனத்தின் வடிவமைப்பாளர்கள் உருவாக்கினர்

முதலில் ஐமேக் பின்னர் ஐபாடு ஆகியவற்றின் வெற்றிக்கு பின்னர், தன்னுடைய அடுத்த திருப்புமுனை தயாரிப்பு பொருளாக 'டேப்ளட்களை' ஆப்பிள் நிறுவனம் வடிவமைக்க தொடங்கியது.

பர்ப்பிள் குறியிடப்பட்ட வடிவமைப்புடைய ஃபோனை ஆகஸ்ட் 2005 ஆம் ஆண்டு 'ஆப்பிள்' நிறுவனத்தின் வடிவமைப்பாளர்கள் உருவாக்கினர்.


02. ஜூலை 2008: முதல் ஐஒஎஸ் ஆப் (App) ஸ்டோர் செல்பேசி மென்பொருட்கள் (ஆப்ஸ்) வெளியீடு

மோ

மூன்றாவது நபருடைய ஐஃபோன் செல்பேசி மென்பொருட்களில் ஒன்று இன்னும் ஆப்பிள் ஸ்டோரில் உள்ளது

முதலாவது ஐஃபோன் வெளியானபோது, ஒற்றை காட்சி திரையை நிரம்பும் அளவுக்குக்கூட செல்பேசி மென்பொருட்கள் (ஆப்ஸ்) இருக்கவில்லை

ஆனால், இப்போது, ஐஒஎஸ் இயங்குதளத்தில் மட்டும் செயல்படக்கூடிய 20 லட்சத்திற்கு மேலாகவே அமெரிக்க செல்பேசி மென்பொருட்கள் உள்ளன.


03.செப்டம்பர் 2008: "ஹெடிசி ட்ரீம்" வெளியீடு

ஹெடிசி ட்ரீம்

தொடக்கத்தில் வெளியான ஆன்டிரியாய்டு ஃபோன் தொடுதிரை வசதிகளை கொண்டிருக்கவில்லை

"ஹெடிசி ட்ரீம்" செல்பேசி வெளியீடு, ஒன்றை காப்பி செய்து ஒட்டுவது, தெருப் பார்வை வசதி மற்றும் பல்லூடக செய்தி சேவை உள்பட ஐஃபோனில் இல்லாத அம்சங்களை வழங்கியது.


04.பிப்ரவரி 2010: 'சிறி' செல்பேசி மென்பொருள் "சிறி நிறுவனத்தால்" வெளியீடு

சிறி

தேடுதல் கருவி சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தை “சிறி” செல்பேசி மென்பொருள் இட்டுசென்றது

இந்த மெய்நிகர் உதவி செல்பேசி மென்பொருள் முதலில் ஐஒஎஸ் இயங்குதளத்தில் வெளியானபோது, மிகவும் தெளிவற்ற கலிஃபோர்னிய ஆய்வு நிறுவனத்தில் இருந்து வெளியான குறைவான விவரங்கள் அடங்கிய செல்பேசி மென்பொருளாக 'சிறி' வசதி இருந்தது. இந்த செல்பேசி மென்பொருளை உருவாக்க கலிஃபோர்னிய ஆய்வு நிறுவனம், அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் ஒரு பகுதி நிதி ஆதரவையும் பெற்றிருந்தது.


05.ஜூன் 2010: முதலாவது சுய புகைப்படம் எடுக்கும் ஐஃபோன்

ஐஃபோன் 4

ஐஃபோன் 4யின் முன்பக்க கேமரா 0.3 மெகாபிக்ஸல் புகைப்படங்களை மட்டுமே எடுக்கக்கூடியதாக இருந்தது

2003 ஆம் ஆண்டு 'சோனி எரிக்சன்' நிறுவனம் தயாரித்திருந்தாலும். ஐஃபோன் 4 இரண்டு பக்கங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ள முதல் செல்பேசியாக இருந்தது.


06.அக்டோபர் 2011: ஸ்டீவ் ஜாப் மரணம்

ஸ்டீவ் ஜாப்ஸ்

மிகவும் அரிய வகை புற்றுநோயால் ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்தார்

2011 ஆம் ஆண்டு அப்டோபர் 4 ஆம் தேதி டிம் குக் 4S ஐஃபோனை வெளியிட்டபோது, ஜஃபோன் அரங்கேற்ற நிகழ்வு பற்றி பெரும் விமர்சனங்களை சந்தித்தார்.

அவர் மிகவும் சோகமாக தோன்றியதாக பிபிசியும் குற்றஞ்சாட்டியிருந்தது.

தன்னுடைய ஆலோசகரும், நண்பருமான ஸ்டீவ் ஜாப் மரணத்தின் வாயிலில் இருந்ததை டிம் குக் உணர்ந்திருந்தார் என்பது அப்போது வெளிப்படவில்லை.

4S ஐஃபோன் வெளியான அடுத்த நாள் அதாவது அக்டோபர் 5 ஆம் தேதி ஸ்டீவ் ஜாப் இறந்தார்.


07.ஏப்ரல் 2012: இன்ஸ்டாகிராமை ஒரு பில்லியன் டாலருக்கு வாங்கியது ஃபேஸ்புக் நிறுவனம்

இன்ஸ்டாகிராம்

 

ஐஃபோன் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய பாதிப்பில் குழப்பங்கள் உருவாக்கியது என்பதற்கு ஆதாரம் தேவைப்படுமானால், இன்ஸ்டாகிராம் வாங்கப்பட்டதை கூறலாம்.

இந்த விற்பனை அறிவிக்கப்பட்டபோது, இந்த செல்பேசி மென்பொருள் உருவாகி 18 மாதங்களே ஆகியிருந்தது.

13 பணியாளர்களை மட்டுமே கொண்டிருந்த இன்ஸ்டாகிராம் வாங்கப்படுவது அறிவிக்கப்படும் ஒரு வாரத்திற்கு முன்னர் வரை ஐஒஎஸ் இயங்குதளத்தில் மட்டுமே செயல்படும் செல்பேசி மென்பொருளாக இருந்து வந்தது.


08.ஜூலை 2012: அவ்தென்டெக் நிறுவனத்தை வாங்கியது ஆப்பிள்

டச் ஐடி

அவ்தென்டெக் தொழில்நுட்பத்தை ஐஃபோனோடு இணைப்பதற்கு ஓராண்டு பிடித்தது

2012 ஆம் ஆண்டு கைரேகை உணர்வறி சில்லு தயாரிக்கும் அவ்தென்டெக் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் வாங்கியது சாம்சங் நிறுவனத்திற்கு சில முக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தியது.


09.ஆகஸ்ட் 2013: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஸ்டீவ் பால்மெர் அறிவிப்பு

ஸ்டீவ் பால்மெர்

ஐரோப்பாவில் இரட்டை இ,லக்க பங்கு சந்தை பங்குகளை கொண்டிருந்தாலும், ஐஃபோனை தாண்டி சென்றதாக தெரியவில்லை

1997 ஆம் ஆண்டு, தோல்வியை சந்தித்த ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு தயாரிப்பின் 150 மில்லியன் பங்குகளை வாங்கியதன் மூலம் மைக்ரோசாப்ட் உதவி அளித்தது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் முதலில் சரியாக புரிந்து கொள்ளாத, பின்னர் அதனை இணைப்பதற்கு போராடிய தயாரிப்பு ஒன்றை வெளியிட்டதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் அதற்கு கைமாறு செய்தது.


10.ஜூலை 2016: 'போக்கிமான் கோ' விளையாட்டு ஆப் வெளியீடு

போக்கோமன் கோ

 

 

இந்த விளையாட்டு வெளியானதன் மூலம், உண்மையான உலகின் பார்வை கலந்த வரைகலை படங்கள் மக்கள் பலரை கவர முடியும் என்பதை இந்த செல்பேசி விளையாட்டு வெளிப்படுத்தியது.

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சிகாகோ உரையில் விவேகானந்தர் என்ன சொன்னார்?

 
விவேகானந்தர்

1893ஆம் ஆண்டு, அமெரிக்காவில் சிகாகோவில் மதங்களுக்கான உலக நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றி இப்போது 125 ஆண்டுகள் நிறைவடைகிறது. விவேகானந்தரின் இந்த எழுச்சிமிக்க உரை, சர்வதேச நாடுகளில் மத்தியில் இந்தியாவை வலுவான நாடாக அறியச்செய்தது.

விவேகானந்தரின் இந்த உரை பற்றி பரவலாக அனைவரும் குறிப்பிடுவதை அனைவரும் அறிவோம். ஆனால் அந்த உரையில் இடம்பெற்ற கருத்துகள் பற்றி அனைவருக்கும் தெரியுமா என்பது சந்தேகமே. எனவே, சுவாமி விவேகானந்தரின் வரலாற்று சிறப்புமிக்க உரையின் முக்கிய கருத்துகளை சுருக்கமாக பார்க்கலாம்.

1. எனது அருமை அமெரிக்க‍ சகோதர, சகோதரிகளே! நீங்கள் நேசத்துடன் என்னை வரவேற்ற பண்பு என் மனதை நிறைத்துவிட்டது. உலகின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரை மற்றும் அனைத்து மதங்களின் அன்னையின் சார்பாக நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துக்களின் சார்பாக உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

2. இந்த மன்றத்தில் பேசிய சில பேச்சாளர்கள், உலகில் சகிப்புத்தன்மை என்ற கருத்து கீழ்த்திசை நாடுகளிலிருந்து பரவி வருகிறது என்பதை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

விவேகானந்தர்

3. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதிப்பது, அவற்றை ஏற்றுக் கொள்ளும் பண்புகளை உலகத்திற்கு கற்பித்த மதத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமையடைகிறேன். உலகளாவிய சகிப்புத்தன்மையை மட்டும் நாங்கள் நம்பவில்லை, அதோடு எல்லா மதங்களும் உண்மை என்பதையும் ஒப்புக் கொள்கிறோம்.

4. உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைபடுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், மதத்தலங்கள் அழிக்கப்பட்டு, பின்னர் தென்னிந்தியாவிற்கு தஞ்சம் கோரி வந்த இஸ்ரேல் மரபினர்களுக்கு புகலிடம் கொடுத்த புனித நினைவுகளை கொண்டவர்கள் நாங்கள் என்று பெருமைப்படுகிறேன்.

விவேகானந்தர்

5. பாரசீக மதத்தைச் சேர்ந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்துக் கொண்டிருக்கும் மதத்தைச் சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன்.

6. என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள்தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை குறிப்பிட விரும்புகிறேன்.

"எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்

இறுதியிலே கடலில் சென்று

சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்

பின்பற்றும் தன்மை யாலே

துங்கமிகு நெறி பலவாய் நேராயும்

வளைவாயும் தோன்றி னாலும்

அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை

அடைகின்ற ஆறே யன்றோ!"

7. இதுவரை நடந்துள்ள மாநாடுகளில் மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தச் சபை, கீதையில் உபதேசிக்கப்பட்டுள்ள பின்வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளை தேர்ந்தெடுக்கின்றனர், சிக்கல்களில் உழல்கின்றனர், ஆனால் இறுதியில் என்னையே அடைகின்றனர்.

விவேகானந்தர்

8. இனவாதம், மதசார்பு இவற்றால் உருவான கொடூர விளைவுகள், அழகிய இந்த உலகை நெடுங்காலமாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை வன்முறையால் நிரப்பியுள்ளன. உலகம் ரத்த வெள்ளத்தால் சிவந்துவிட்டது. எத்தனை நாகரீகங்கள், எத்தனை நாடுகள் அழிக்கப்பட்டன என்பதையும் சரியாக சொல்லிவிடமுடியாது.

9. இதுபோன்ற ஆபத்தான அரக்கர்கள் இல்லை என்றால், மனித சமுதாயம் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் அவற்றிற்கான காலம் முடிந்துவிட்டது. இந்த மாநாட்டின் குரலானது அனைத்து விதமான மத வெறிகளுக்கும், வெறித்தனமான கொள்கைகளையும், துயரங்களையும் அழிக்கும் என்று நான் நம்புகிறேன். அது வாளால் ஏற்பட்டாலும் சரி, பேனாவினால் ஏற்பட்டாலும் சரி.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

Need For Speed ரேஸர் இப்போ இந்தியாவின் நம்பர் 1 ரேஸர்! #Mira

 
 

தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் ஆவதுபோல் ரொம்ப ஈஸியான விஷயமல்ல இது. உலகத்திலேயே மிகவும் கஷ்டமான விஷயம். இந்தியாவிலிருந்து இரண்டு பேர்தான் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார்கள். இப்போது மீரா எர்தாவும்.

‘இந்தியாவின் முதல் ஃபார்முலா-1 கார் ரேஸர்’ என கூகுளில் டைப் செய்தால், நரேன் கார்த்திகேயனுக்குப் பிறகு மீரா எர்தாவின் பெயர்தான் வரும். குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் மீரா எர்தா. சின்ன வயதில் மொபைல்போனில் ‘Need for Speed’ எனும் கார் ரேஸ் கேமை விளையாடிக்கொண்டிருந்த மீரா, இப்போது இந்தியாவின் குறைந்த வயது ஃபார்முலா கார் ரேஸர்களில் ஒருவர். 

mira

மீராவுக்கு எட்டு வயசு இருக்கும்போது, 3-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் குட்டிப் பாப்பா. ஒரு விடுமுறை நாளில், புனேவில் உள்ள கோ-கார்ட் ட்ராக்குக்கு குழந்தை மீராவைக் கூட்டிச் சென்றார் தந்தை கிரித். ‘‘கார் இவ்வளவு ஸ்பீடா நிஜத்துலேயும் போகுமா டாடி?’’ என்று மழலை வார்த்தைகளில் மீரா கேட்க, ‘‘நீகூட ஸ்பீடா கார் ஓட்டலாம்!’’ என்று ஒரு கோ-கார்ட் காரில் உட்காரவைக்கப்பட்டாள். கார் டிரைவிங்கில் மீராவுக்கு அதுதான் முதல் அனுபவம். இப்போது +2 படிக்கும் மீராவுக்கு, 18 வயது.

இதுவரை பெண்களே கலந்துகொள்ளாத இந்த ஃபார்முலா ரேஸில், நிஜமான கார்களை வைத்து மீரா மெர்சல் காட்டிவருகிறார் என்பதுதான் ஹைலைட்டான விஷயம். பொதுவாக, ஆண்கள் மட்டுமே கலக்கிக்கொண்டிருக்கும் எந்தத் துறையிலுமே பெண்கள் நுழைவது மிகவும் கடினம். அதிலும் ரேஸிங்! `இது ஆண்களுக்கானது மட்டுமே' என்ற நிலையை, இப்போது முழுவதுமாக நொறுக்கிக்கொண்டிருக்கிறார் மீரா. “ட்ராக்கில் மீராவின் காரைப் பார்த்தாலே ஜெர்க் ஆகும் பசங்க இருக்கிறார்கள்'' என்றார்கள் இருங்காட்டுக்கோட்டை ரேஸ் ட்ராக்கில்.

‘‘எல்லாமே பசங்கதான். அதுவும் புரொஃபஷனல் ரேஸர்ஸ். ஆரம்பத்துல ‘பசங்ககூட மோதப்போறே... உனக்கு எதுக்கு இந்த வேலை... இது ஒண்ணும் மொபைல்போன்ல கேம் விளையாடுற விளையாட்டு இல்லை’னு எல்லோரும் பயமுறுத்தினாங்க. அவங்க சொன்னது உண்மைதான். கார்களைக்கூட ஈஸியா ஹேண்டில் பண்ண ஆரம்பிச்சுட்டேன். ஆனா, சில பசங்களோட கிண்டல்களை... அப்பப்பா! சமாளிக்க முடியலை. அப்புறம் என் ஆர்வத்தைப் பார்த்துட்டு பசங்களே என்னை உற்சாகப்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. எல்லா பசங்களையும் தப்பா நினைக்கக் கூடாதில்லையா!’’ என்று இந்தியில் பேசிய மீரா, இந்தியாவில் இருக்கும் எல்லா ரேஸ் ட்ராக்குகளிலும் டயர் பதித்துவிட்டார்.

mira

விஜயகாந்த் ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால், இதுவரை மீரா கலந்துகொண்ட ரேஸ்களின் எண்ணிக்கை 80. அதில் போடியம் ஏறியது 60 தடவை. கார் கோளாறால் போடியம் ஏறாமல் இருந்தது 5 முறை. அதில் மறக்க முடியாத ரேஸ் 2013-ம் ஆண்டில் நடந்தது. காரணம், கடைசி இடத்திலிருந்து ரேஸைத் தொடக்கிய மீரா, முதல் இடத்தில் வந்து ரேஸை நிறைவுசெய்ததை ரேஸ் உலகமே கொண்டாடியது. அதற்குப் பிறகு, தன் வாழ்வில் இந்த மாதிரி மெடிக்கல் மிராக்கிள்கள் எதுவும் நடக்கவில்லை என்கிறார்.

அதேபோல், ஹைதராபாத்தில் நடந்த JK Tyre ரேஸில், 7-ம் வகுப்பு படித்த சின்னப் பொண்ணு மீரா, 33.523 விநாடியில் பெஸ்ட் லேப் வந்தார். அதற்கடுத்து வந்த, எந்த ஜாம்பவான்களும் இந்தச் சாதனையை முறியடிக்கவில்லை! இப்படி ரேஸ் ட்ராக்கில் மெர்சல் பண்ணுவது மட்டுமல்ல... விவேகமாக இருப்பதும் மீராவின் ஸ்பெஷாலிட்டி. “ஆம்! இதுவரை ஒரு தடவைகூட ட்ராக்கிலோ, ரோட்டிலோ ஆக்சிடென்ட் பண்ணியதில்லை'' என்கிறார் மீரா.

mira

பொதுவாக, ‘Race it; Break it; Fix it; Race it’ என்பதுதான் ரேஸிங் விதி. ஆணானப்பட்ட ராஸி, ஹாமில்ட்டன், வெட்டல் போன்றோரே க்ராஷ் செய்யும் சம்பவங்கள் ரேஸின்போது அடிக்கடி நடந்தேறும். நாம் என்னதான் கவனமாக இருந்தாலும், மற்ற ரேஸர்களின் கவனக்குறைவாலும் கார் மோதல் நடக்கும் என்றாலும், அதையும் தாண்டி விழிப்புடனே கார் ஓட்டுவதாகச் சொல்கிறார் மீரா. புனே, டெல்லி, கோவை, சென்னை என எந்த ட்ராக்காக இருந்தாலும், ரேஸுக்கு முன்பு பல தடவை கன்னாபின்னாவெனப் பயிற்சி எடுப்பாராம். ‘‘எந்த விளையாட்டுக்குமே பயிற்சி ரொம்ப முக்கியம். இது நம்மால் முடிந்த விபத்துகளைக் குறைக்கும்’’ என்பது மீராவின் டிப்ஸ். ட்ராக்கில் ‘ஆக்சிடென்ட்டே ஆகாத மீரா’ என்று செல்லமாகப் பெயரெடுத்திருக்கிறாராம்.

இன்னொரு பெருமையும் மீராவுக்கு வரவிருக்கிறது. அது, ‘குறைந்த வயதில் BMW FB02 கார் ஓட்டும் பெண், இந்தியாவில் மீரா மட்டும்தான்!

 

இன்னும் நிறைய பெருமை சேருங்க!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வைரலாகும் 'ஜிமிக்கி கம்மல்' பாடலின் ’கல்பனா அக்கா’ வெர்ஷன்..!

 
 

ஜிமிக்கி கம்மல் பாடலைப் பாடும் கல்பனா அக்கா
 

மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான, 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற, 'ஜிமிக்கி கம்மல்' பாடல், திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே வெளியாகிப் பிரபலமானது. இந்நிலையில், கடந்த வாரம் ஓணம் தினத்தன்று எர்ணாகுளத்திலுள்ள ஒரு கல்லூரி மாணவிகள், 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு நடனமாடியிருந்தனர். அந்த நடனம் வீடியோவாக வெளியாகி, கேரளா மற்றும் தமிழகத்தில் பெரிய ஹிட் அடித்து, தற்போதுவரை வைரலாகிவருகிறது. மேலும், 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு பல தரப்பினரும் நடனமாடி, தொடர்ந்து இணையதளத்தில் பதிவேற்றம்செய்துவருவதால், அந்தப் பாடல் பெரும்பாலானோரை முணுமுணுக்கச் செய்துள்ளது.

 

இந்நிலையில், தமிழ்ப் பாடல்களை புது ஸ்லாங்கில் பாடிப் பிரபலமான 'கல்பனா அக்கா' எனச் சொல்லப்படும் கல்பனாவும், 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு அவருடைய வெர்ஷனை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவும் தற்போது வைரலாகிவருகிறது.  'கடும் முதுகுவலி உள்ளவர்கள், ’ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு நடனம் ஆடினால் எப்படி இருக்கும்?' என்று ஒரு சேரிலேயே உட்கார்ந்துகொண்டு பெரிய ஜிமிக்கி கம்மலை அணிந்துகொண்டு, பாடலுக்கு வாயசைத்துக்கொண்டிருக்கிறார். 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சர் ராபர்ட் ராபின்சன்

 
bookpng

நோபல் பெற்ற இங்கிலாந்து வேதியியலாளர்

இங்கிலாந்து நாட்டின் விஞ்ஞானியும் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான சர் ராபர்ட் ராபின்சன் (Sir Robert Robinson) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

1. இங்கிலாந்தின் செஸ்டர்ஃபீல்ட் பகுதியில் பிறந்தார் (1886). தன் ஊரின் அருகில் உள்ள ஒரு சிறு நகரில் ஆரம்பக்கல்வி கற்றார். பின்னர் செஸ்டர்ஃபீல்ட் கிராமர் பள்ளியில் பயின்றார். அப்போது கணிதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். ஆனால் ஜவுளித் துறைக்கு மிகவும் தேவைப்படும் வேதியியல் பயில்வதற்காக, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்துக்கு தந்தை அனுப்பி வைத்தார்.

2. 1905-ல் அந்தப் பிரிவில் முதல் மாணவராகத் தேர்ச்சிபெற்று பி.எஸ்சி. பட்டம் பெற்றார். வீட்டிலேயே தந்தை உருவாக்கியிருந்த சிறிய சோதனைக் கூடத்தில், விடுமுறை நாட்களில் வேதியியல் சோதனைகளை மேற்கொண்டார்.

3. அதன்பிறகு விக்டோரியா பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியலில் மேற்படிப்பு பயின்று, 1910-ல் டி.எஸ்சி. பட்டம் பெற்றார். பின்னர் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகச் சேர்ந்தார். அங்கு ஒருவகைப் படிகக் கலவையான கேட்டகோலின் (catechol) பல்வேறு தொகுப்புகள், என்கோலேட்சின் (enolates) சி-அல்கைலேஷன்ஸ் (C-alkylations) மற்றும் ஆஸ்திரேலியாவில் யூகலிப்டஸ் மரங்களிலிலிருந்து பெறப்படும் எடுஸ்மின் (eudesmin) ஆகியவற்றை ஆராய்ந்தார்.

4. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் கட்டுரைகள் வெளியிட்டு பிரபலமடைந்தார். அறிவியல் முன்னேற்றத்துக்கான பிரிட்டிஷ் அசோசியேஷனிலிருந்தது வந்த அழைப்பை ஏற்று அங்கு சென்று பிரபல வேதியியலாளர்களைச் சந்தித்தார். அவர்களுடன் இணைந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

5. லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியல் துறையின் தலைவராக 29 வயதில் நியமிக்கப்பட்டார். உலகப்போர் தொடங்கியபோது இவரது பங்கேற்பும் கோரப்பட்டது. பைக்ரிக் அமிலம், டி.என்.டி. டிராபினோன் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றார். மார்ஃபின் மற்றும் பென்சிலின் உள்ளிட்டவற்றின் மூலக்கூறு அமைப்புகளையும் கண்டறிந்தார்.

6. பிரபல வேதியியலாளர்களுடன், இயற்கை ஆதாரங்களை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டிருந்த ஆலோசனைக் குழுவில் 1917-ல் இணைந்தார். கரிமப்பொருளான ஆக்டனலை செயற்கையாகத் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்தார். லிவர்பூல் துறைமுக அதிகாரிகள் கேட்டுக்கொண்டபடி, எரியும் எண்ணெய்யால் ஏற்படும் தீயை அணைப்பதற்கான வழிமுறையைக் கண்டறிந்து கூறினார்.

7. 1920-ல் பிரிட்டிஷ் சாயப்பொருட்கள் நிறுவனத்தின் இயக்குநராக இணைந்தார். மீண்டும் கல்வித்துறைக்கு திரும்ப முடிவு செய்து, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியல் துறையில் பேராசிரியராகச் சேர்ந்தார்.

8. அங்கு பல இளம் விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆல்கலாய்டுகள் மற்றும் தாவர நிறமிகள் உட்பட இயற்கைப் பொருள்களின் தொகுப்பு மற்றும் கட்டமைப்புகள் குறித்த பல்வேறு விஷயங்களைக் கண்டறிந்தார். மேலும் கொழுப்பு அமிலங்களை ஒன்றிணைக்கும் விரிவான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

9. இந்த ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுடிப்புகளுக்காக 1947-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார். பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்திலும், அடுத்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார். இறுதியாக ஷெல் கெமிஸ்ட்ரி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். ராயல் சொசைட்டி, வேதியியல் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

10. 1939-ல் சர் பட்டமும், 1949-ல் ஆர்டர் ஆஃப் மெரிட் கவுரவத்தையும் பெற்றார். 20-ம் நூற்றாண்டின் இணையற்ற கரிம வேதியியலாளர்களில் ஒருவரும் கரிம வேதியியல் துறைக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியவருமான சர் ராபர்ட் ராபின்சன் 1975-ம் ஆண்டு தமது 89-வது வயதில் மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
“குரங்கு செல்ஃபி” சர்ச்சை முடிவுக்கு வந்தது
 

image_1025664773.jpgஇந்தோனேசியாவில் புகைப்படக்காரர் ஸ்லேட்டரின் கெமராவில் குரங்கு தன்னைத் தானே எடுத்துக்கொண்ட புகைப்படம் தொடர்பான காப்புரிமைப் பிரச்சினை, நீதிமன்றத்தின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், புகைப்படத்தின் மூலம் பெறப்படும் வருமானத்தில் 25% தொகையை,  இந்தோனேசியக் குரங்குகளுக்குச் செலவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு இந்தோனேசிய ஜாவா காடுகளில் டேவிட் ஸ்லேட்டரின் கெமராவால் எடுக்கப்பட்ட கருங்குரங்கு ஒன்றின் செல்ஃபி புகைப்படம், உலக அளவில் மிகப் பிரபலமானது. டேவிட் ஸ்லேட்டர் எடுத்த அந்த குரங்கின் செல்ஃபி புகைப்படம் சுமார் 5 கோடிக்கு அதிகமானோரால் பகிரப்பட்டது.

இந்நிலையில், டேவிட்டின் அந்த குரங்கின் செல்ஃபி புகைப்படங்களை, விக்கிமீடியா தனது பொதுத் தளத்தில் வெளியிட்டது. தன்னுடைய அனுமதி இல்லாமல் தனக்குச் சொந்தமான புகைப்படத்தை பொதுவெளியில் விக்கிமீடியா வெளியிட்டது தவறு என்றும், அதனால் அப்படத்தை நீக்க வேண்டும் என்றும் டேவிட் வலியுறுத்தினார்.

ஆனால், விக்கிபீடியாவோ இந்தப் புகைப்படம் குரங்கு எடுத்தது. அதனால், டேவிட்டுக்கு அதன் காப்புரிமை சாராது. எங்கள் தளத்தில் அந்தப் புகைப்படத்தை வெளியிட்டதில் எந்தத் தவறும் இல்லை என்றது.

மேலும் இந்தப் பிரச்சினைக்கு காப்புரிமை பொருந்தாது. காரணம், புகைப்படம் எடுப்பவர் அதற்கான ஒளி, தேவைப்படும் கோணம் போன்றவற்றை எல்லாம் யோசிப்பார். இதெல்லாம் சேர்ந்துதான் ஒரு புகைப்படத்துக்கு ஒருவர் காப்புரிமை கோர முடியும். வெறுமனே குரங்கிடம் கெமராவைத் தந்து விட்டு, அது எடுத்துக்கொண்ட படங்களுக்கு ஒருவர் காப்புரிமை கோர முடியாது. காப்புரிமை என்பது ஒருவரின் உழைப்புக்குத் தரப்படும் வெகுமதி அல்ல. அவரை மேலும் ஊக்கப்படுத்தும் ஒரு தூண்டுதல்தான். இதை டேவிட் புரிந்துகொள்ள வேண்டும் என்று காப்புரிமை வல்லுநர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

அந்தப் புகைப்படத்துக்கான காப்புரிமை பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது. இதன் காரணமாக டேவிட் பெருட் இழப்புகளை சந்தித்தார். காப்புரிமை தொடர்பான இந்த வழக்கு கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் நடந்து வருவதால் இங்கிலாந்தில் வசிக்கும் டேவிட் விமான போக்குவரத்து செலவுக்கு பணம் இல்லாததால் வழக்கு விசாரணையில் அவர் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் காப்புரிமைப் பிரச்சினை தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இதில் தீர்ப்பு வழங்கியுள்ள நீதிமன்றம், செல்ஃபி புகைப்படம் எடுக்கப்பட்ட கேமராவுக்குச் சொந்தக்காரரான டேவிட் ஸ்லேட்டர், புகைப்படம் மூலம் வரும் வருமானத்தில் 25% பணத்தை இந்தோனேசியாவில் உள்ள கொண்டை வால் குரங்குகளைக் காப்பாற்ற அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

எனினும் இதுகுறித்துப் பேசிய ஸ்லேட்டரின் சட்டத்தரணி ஆண்ட்ரூ, செல்ஃபி புகைப்படம் இதுவரை எவ்வளவு வருமானத்தை ஈட்டியுள்ளது என்றோ மீதமுள்ள 75% வருமானத்தை ஸ்லேட்டரே வைத்துக் கொள்வாரா என்பது குறித்த கேள்விகளுக்கோ பதிலளிக்க மறுத்துவிட்டார்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

 

ஐஃபோன் 10 : முகமறியும் தொழில்நுட்பம்

பத்து வருடங்களுக்கு முன்னதாக ஐபோன் எமது உலகை மாற்றியமைத்தது.

இப்போது ஆப்பிளின் புதிய அறிமுகம் வளரும் போட்டியை சமாளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முகமறியும் தொழில் நுட்பம் உட்பட பலவிதமான புதிய வசதிகளுடன் ஐஃபோன்10 ஊடக தலைப்புகளில் இடம்பிடித்துள்ளது.

இந்த உயர் தொழில்நுட்ப கைபேசி உங்களுக்கு வேண்டுமானால், அதற்கு நிறைய பணமும் கொடுத்தாக வேண்டும்.

ஐஃபோனின் புதிய அறிமுகம் குறித்த பிபிசியின் காணொளி.

  • தொடங்கியவர்

ஷேன் வார்னின் 48-வது பிறந்த தினம்: தன் பாணியில் வாழ்த்து தெரிவித்த சேவாக்

 

 
sehwag-warne

சேவாக் பகிர்ந்த படம்.   -  பட உதவி: ட்விட்டர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 708 விக்கெட்டுகளைச் சாய்த்து உலக பேட்ஸ்மென்கள் பலரை நடுங்க வைத்த லெஜண்ட் ஷேன் வார்னுக்கு இன்று 48-வது பிறந்த தினம்.

அதிரடி இன்னிங்ஸ்கள் பலவற்றை ஆடிய சேவாக், தற்போது ட்விட்டரில் வார்த்தை அதிரடி ஜாலங்களை நிகழ்த்தி வருகிறார்.

வார்னுக்கு இன்று பிறந்ததின வாழ்த்துக்கள் தெரிவித்த சேவாக், வார்ன் கையில் கட்டுடன் தன்னுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வாசகம் ஒன்றை வாழ்த்துச் செய்தியாக ட்வீட் செய்துள்ளார்.

அதாவது, “இப்படித்தான் உங்கள் கையில் பிளாஸ்டர் சுற்றியிருக்க வேண்டும் என்று பேட்ஸ்மென்கள் பலர் உங்கள் பந்து வீச்சை எதிர்கொள்ளும் போது விரும்பியிருப்பார்கள். ஹேப்பி பர்த் டே லெஜண்ட்” என்று கூறியுள்ளார்.

1993-ம் ஆண்டில் ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிரான சிறந்த பேட்ஸ்மெனாகக் கருதப்படும் மைக் கேட்டிங்குக்கு அவர் இன்னமும் கூட திகைக்கும் அந்தப் பந்தை வீசி பவுல்டு செய்தார். லெக் ஸ்டம்புக்கு வெளியே வீசி திருப்பினார் மைக் கேட்டிங்கிற்கு என்ன நடந்தது என்று புரியும் முன்பே ஆஃப் ஸ்டம்பைப் பதம் பார்த்த பந்து. இது இங்கிலாந்து மண்ணில் ஷேன் வார்ன் வீசிய முதல் பந்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இத்தகைய லெஜண்ட் நம் சச்சின் டெண்டுல்கர் பற்றி கூறியது என்ன தெரியுமா? “சச்சின் டெண்டுல்கர் என் பந்துகளை மேலேறி வந்து அடிக்கும் காட்சி இன்னமும் என்னை கனவிலும் அச்சுறுத்துகிறது” என்றார்.

சச்சின் டெண்டுல்கர் ஷேன் வார்னை பல விதங்களிலும் ஆடியுள்ளார். மேலேறி வந்து ஆன் திசை, ஆஃப் திசையில் வெளுப்பது, நின்ற இடத்திலிருந்தே பெரிய ஸ்லாக் ஸ்வீப், பெடல் ஸ்வீப், நகர்ந்து கொண்டு கட் ஷாட், புல் ஷாட், கவர் டிரைவ்கள், சாதாரண ஸ்வீப் என்று அனைத்து விதமான ஷாட்களையும் வார்னுக்கு எதிராக ஆடியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
‘திடசங்கற்பம் கொள்வதே அழகு’
 

image_42f6c7b348.jpgஒருவரைக் கிண்டலடித்து ஓரம் கட்டியவர்கள், அவன் மேன்மையானதும் சற்றும் கூசாமல் அவன் காலடியில் விழுவது ஒன்றும் புதுமையல்ல. சுயநலத்தில் கட்டிஎழுப்பப்பட்ட உலகமாக இன்று மாறிவிட்டது. எந்த அரச பதவியில் அமர்ந்தாலும் அதில் ஒட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள், ‘எப்போது ஐயா கூச்சப்பட்டார்கள் சொல்லுங்கள்’.  

ஆனால், மானம், மரியாதை, சுயகௌரவம் உள்ள ஏழைகளின் மனவலிமை, கூடுவிட்டுக்கூடு பாயும் காசுக்காரர் பலரிடம் இந்தக் குணாம்சம் கிடையவே கிடையாது. 

நியாயபூர்வமாகக் கிடைப்பதைவிட, வேறு எந்த மாயத் திரவியங்களும் எமக்குத் தேவையற்றது எனத் திடசங்கற்பம் கொள்வதே அழகு.  

நற்குணம் காசு ஈட்டித்தர மாட்டாது என்று சொல்பவர்களுக்குத் தங்கள் ஆத்மா வலுக்குன்றுவதை உணர்வதேயில்லை. மேலதிக தேவைகளைவிட, உள்ளத்தை மேவிப்பூட்டுதலே மேன்மையானது. 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று….

செப்டெம்பர் – 14

 

1752 : கிற­கோ­ரியன் நாட்­காட்­டியை பிரித்­தா­னியா ஏற்­றுக்­கொண்­டது. இதன்­படி புதிய நாட்­காட்­டியில் 11 நாட்­களை அது இழந்­தது. 


1812 :  நெப்­போ­லி­யனின் படைகள் மொஸ்­கோ­வினுள் நுழைந்­தன. ரஷ்யப் படைகள் நகரை விட்டு வில­கி­யதும் மாஸ்­கோவில் தீ பரவ ஆரம்­பித்­தது.


1829 : ஒட்­டோமான் பேர­ரசு ரஷ்­யா­வுடன் அமைதி உடன்­ப­டிக்­கையில் கையெ­ழுத்­திட்­டது. ரஷ்ய – துருக்­கியப் போர் முடி­வுக்கு வந்­தது.


1847 : மெக்­ஸிக்கோ நக­ரத்தை 'வின்ஃபீல்ட் ஸ்கொட்' தலை­மை­யி­லான அமெ­ரிக்கப் படைகள் கைப்­பற்­றின.


Nur_Muhammad_Taraki---varalaru1886 : தட்­டச்சுப் பொறியின் நாடா கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.


1901 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி வில்­லியம் மெக்­கின்லி செப்­டெம்பர்  6 இல் இடம்­பெற்ற கொலை­ மு­யற்­சியின் பின்னர் இறந்தார்.


1917 : ரஷ்யா அதி­கா­ர­பூர்­வ­மாகக் குடி­ய­ர­சா­னது.


1954 : சோவியத் ஒன்­றியம் அணு­வா­யுதச் சோத­னையை மேற்­கொண்­டது.


1959 : சோவி­யத்தின் லூனா 2 விண்­கலம் சந்­தி­ரனில் மோதி­யது. சந்­தி­ரனின் தரையை அடைந்த முத­லா­வது விண்­கலம் இதுவே.


1960 : எண்ணெய் ஏற்­று­மதி செய்யும் நாடு­களின் கூட்­ட­மைப்பு (ஒபெக்) உரு­வாக்­கப்­பட்­டது.


1962 : கொங்கோ மக்­க­ளாட்சிக் குடி­ய­ரசில் இரா­ணுவத் தள­பதி ஜோசப் மோபுட்டு இரா­ணுவப் புரட்­சியை மேற்­கொண்டு பிர­தமர் பத்­ரிஸ்­லு­மும்­பாவை பத­வியில் இருந்து கலைத்தார்.


1979 : ஆப்­கா­னிஸ்தான் ஜனா­தி­பதி நூர் முஹம்­மது தராக்கி, மக்கள் ஜன­நா­யகக் கட்­சித்­த­லைவர் ஹஃபி­ஸுல்லா அமீனின் கட்­ட­ளைப்­படி படு­கொலை செய்­யப்­பட்டார். ஹஃபி­ஸுல்லா அமீன் புதிய ஜனா­தி­ப­தி­யானார்.


1982 : லெப­னானின் ஜனா­தி­ப­தி­யாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பசீர் ஜெமாயெல் படு­கொலை செய்­யப்­பட்டார்.


1984 : ஜோ கிட்­டிங்கர் வாயு பலூனில் அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தை கடந்த முதல் மனிதர் என்ற பெரு­மையைப் பெற்றார்.


1997 : இந்­தி­யாவின் மத்­திய பிர­தேச மாநி­லத்தில் ரயி­லொன்று ஆற்றில் வீழ்ந்­ததால் 81 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1999 : கிரி­பட்டி, நௌரு, டொங்கா ஆகி­யன ஐ.நா. அவையில் இணைந்­தன.


2003 : சுவீ­டனில் இடம்­பெற்ற மக்கள் வாக்­கெ­டுப்பில் யூரோ நாண­யத்தை ஏற்றுக் கொள்ளும் தீர்­மானம் நிரா­க­ரிக்­கப்­பட்­டது.


2003 : ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் எஸ்­தோ­னியா  இணை­வ­தற்கு  அந்­நாட்டில் இடம்­பெற்ற பொது வாக்­கெ­டுப்பில் அங்­கீ­காரம் வழங்கப் பட்­டது.


2008 : ரஷ்யாவின் ஏரோபுளொட் விமானம் ரஷ்யாவின் பேர்ம் கரை விமான நிலையத்தில் விபத்துக்குள் ளாகியதில் அதிலிருந்த 88 பயணிகளும் கொல்லப்பட்டனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

கற்பனைக்கு றெக்கை முளைத்தால்...

 

 
ExhibitHiRes-817024-20161019

படம்: நரசிம்மன்

போட்டோகிராஃபி சொசைட்டியின் உறுப்பினர்கள் 3 பேரின் ஒளிப்படங்கள் ஒவ்வொன்றும் கண்களுக்கு மட்டுமில்லாமல் காண்பவர்களின் கற்பனையையும் றெக்கை விரித்து பறக்க வைக்கின்றன. இந்த மூவரின் (ஜெ.ரமணன், கே.நரசிம்மன், வி.ஜெ.ரித்விக்) படைப்புகளை `கிரியேட்டிவ் விஷன்ஸ்’ என்னும் பெயரில் லலித் கலா அகாடமியில் காட்சிக்கு வைத்திருக்கின்றனர்.

   

ரமணனின் ஒளிப்படங்கள் அனைத்தும் சர்ரியலிசம் வகையைச் சேர்ந்தவை. பார்ப்பவர்களை மாய உலகத்துக்குள் சஞ்சரிக்க வைக்கின்றன. 2 இன்ச் அளவுக்கே உள்ள சிறிய கல்லின் தோற்றம் பாறை அளவுக்கு பெரிதாக்கப்பட்டு அந்தரத்தில் மிதக்கிறது. அதற்கு மேலாக ஒரு மனித உருவம். இந்த உலகத்தில் புவியீர்ப்பு விசையே இல்லாமல் போனால் எப்படி இருக்கும் எனும் கேள்விக்கு பதிலாய் இந்த ஒளிப்படம் விநோதமான கற்பனைக்கு சாட்சியாக உள்ளது. பிவிசி பைப்பின் ஒரு முனையில் லென்ஸைப் பதித்து அடுத்த முனையிலிருந்து கேமராவில் இவர் ‘க்ளிக்’ செய்திருக்கும் படத்துக்கு ஆத்மாவின் பயணம் என்னும் தலைப்பு கனகச்சிதம்!

3a

படம்: ரமணன்

 

‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்னும் பழிவாங்கும் போக்கில் உலகம் சென்றால் என்னாகும்? புகைப்பிடித்தல், மது, போர் போன்றவற்றால் நாளைய உலகத்தின் நிலை எப்படி இருக்கும்? இயற்கையை அதன் போக்கில் விடாமல், மனிதர்கள் அதன் வழியில் தலையிட்டால், கல்கி வருவார் பின்னே; ஊழி வரும் முன்னே என்பதை முத்தாய்ப்பாக அறிவிக்கின்றன ரமணனின் ஒளிப்படங்கள்.

நமது கற்பனைக்கு எட்டாத நிறங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் இயற்கையின் கோலங்களை தரிசனப்படுத்துகின்றன ரித்விக்கின் ஒளிப்படங்கள். சில நேரங்களில் சில நிலங்களின் தன்மை, வண்ணம், திண்மை என பன்முகங்களில் நிலங்களின் செழிப்பு ரித்விக்கின் கேமராவின் வழியே நம் கண்களில் விரிகின்றன.

golden%20river

ரித்விக்

 

மலை, வனம், நிலம், வான், கடல் என பலவற்றின் துணை கொண்டு காலத்தை கணிக்கும் ஓர் அசாதாரண காட்சி அனுபவத்தை நரசிம்மனின் ஒளிப்படங்கள் நமக்கு அளிக்கின்றன.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

கடைக்குச் சென்ற பெண்­ணுக்கு திடீர் பிர­சவம்: குழந்­தையை ஏந்­திக்­கொண்டு வீடு நோக்கி நடந்தார்

motherசீனாவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் கடைத் தெரு­வுக்குச் சென்­றி­ருந்­த­போது எதிர்­பா­ராத வித­மாக குழந்தை பெற்ற நிலையில், அக்­கு­ழந்­தை­யையும் தூக்கிக் கொண்டு வீடு நோக்கி நடந்து சென்ற சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றது.


சீனாவின் தென் பிராந்­திய நக­ரான யுன்ஃ­புவில் பெண்­ணொ­ருவர் பழங்கள் மற்றும் மரக்­க­றி­களை வாங்க முற்­பட்­ட­போது அப்பெண் நின்ற நிலை­யி­லேயே குழந்தை பிறந்­தது. 


திடீ­ரென அவரின் பனிக்­குடம் உடைய, அப்பெண் வீரிட்டார். சில விநா­டி­களில் குழந்­தை­யொன்று அவரின் கால்­க­ளுக்­கி­டையில் விழுந்­ததைப் பார்த்து அங்­கி­ருந்­த­வர்கள் அதிர்ச்­சி­ய­டைந்­தனர்.


 அவர்கள் அம்­பியூலன்­ஸுக்கு அழைப்பு விடுத்­த­தை­ய­டுத்து, அம்­பியூலன்­ஸுடன் தாதி­யர்­களும் அங்கு வந்­தனர்.

 

அத்­தா­தி­யர்கள் தொப்­புள்­கொ­டியை துண்­டிக்க உத­வினர். 30,40  வய­துக்­கி­டைப்­பட்­ட­ரென கரு­தப்­படும் இப்­பெண்ணை மேல­திக மருத்­துவ சோத­னை­க­ளுக்­காக அரு­கி­லுள்ள வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்ல மருத்­துவ ஊழி­யர்கள் முன்­வந்­தனர். 


எனினும், அப்பெண்  அதற்கு மறுத்தார். மாறாக, தனது குழந்­தையை ஒரு கையிலும் பொருட்கள் அடங்கிய பையை மறுகையிலும் ஏந்திக்கொண்டு தனது வீடு நோக்கி அவர் நடந்து சென்றார்.
 

mother-2

http://metronews.lk

  • தொடங்கியவர்
 

இன்பாக்ஸ்

 

56p1.jpg

* கலகக்காரர் கங்கனா ரனாவத், சிலநாள்களுக்கு முன் முன்னாள் பாய் ஃப்ரெண்ட் ஹிரித்திக் ரோஷன் மீது அடுக் கடுக்கான புகார்களைச் சொல்லி அதிரவைத்தார். ஹிரித்திக் திரும்பிப் பொங்க வக்கீல்கள்மூலம் இருவரும் மோதிக் கொண்டனர். இந்த நிலையில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆதித்யா பஞ்சோலி மீதும் குற்றம் சுமத்தியிருக்கிறார் கங்கனா. ‘`ஆதித்யாவைத் தந்தைபோல நினைத் திருந்தேன். ஆனால், அவர் என்னை வீட்டில் பூட்டிவைத்து அடிமையைப் போல் நடத்தினார். பாலியல் தொந்தரவுகளும் அதிகம்’’ என்று சொல்ல அதிர்ந்துபோய் இருக்கிறது பாலிவுட். அதிரடிக்காரி...


56p2.jpg

* இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜார்ஜ் திடீரென்று சென்றவாரம் வைரலானார். விஷயம் இதுதான்... இளவரசர் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துள்ளார். லண்டனில் உள்ள கெனிங்ஸ்டன் மாளிகையில் அரச குடும்பம் வசிக்கிறது. அங்கிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள பள்ளியில் ஜார்ஜ் சேர்க்கப் பட்டுள்ளார். இங்கு படிக்க, ஆண்டுக்கு 18 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. 560 குழந்தைகள் மட்டுமே இந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். ஃபீஸ் கம்மியாருக்கே!


56p3.jpg

* யுவராஜ்சிங்கை இனி சர்வதேசப் போட்டிகளில் பார்க்க முடியாது எனப் புலம்புகிறது யுவிஆர்மி. ஃபிட்னஸ் டெஸ்ட்டான யோயோ-வில் ஏற்கெனவே தோல்வியடைந்து விட்ட யுவராஜ் சிங்கை இப்போது மேலும் அவமானப்படுத்தி இருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம். ஆஸ்திரேலிய தொடருக்கான பரிசீலனைப் பட்டியலில் முதல் 74 வீரர்களில் கூட யுவராஜ் சிங்கின் பெயர் இல்லை. இதனால் யுவராஜ் சிங் இனி இந்திய அணிக்காக விளையாட மாட்டார் என ஃபீலிங் எமோஜிக்கள் நிரம்பிவழிகின்றன. மிஸ் யூ யுவி!


56p4.jpg

* காற்றுவெளியிடை காலைவாரினாலும் அடுத்த படத்திற்குப் பரபரப்பாகத் தயாராகிவிட்டார் மணிரத்னம். படத்தில் விஜய்சேதுபதிதான் ஹீரோவாம். அவரோடு ஜோதிகா, அர்விந்த் சாமி, நானி, ஃபஹத்பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி ஆகியோரும் இருக்கிறார்களாம். அவருடைய ஆஸ்தான கலைஞர்களான ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ்சிவன் என டெக்னிஷியன் டீமும் ரெடி! தமிழ்-தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராக இருக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சீக்கிரமே தொடங்குமாம்!  இந்தப்படை போதுமா?


* துபாய்-ஹைதராபாத்-சென்னை. இதுதான் ரஜினிகாந்த்-அக்ஷய்குமார்-ஷங்கர்-லைகா கூட்டணியில் தயாராகிவரும் ‘2.0’வின் ரிலீஸ் பிளான். அக்டோபரில் துபாயில் ஆடியோ ரிலீஸ், நவம்பரில் ஹைதராபாத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று சென்னையில் ட்ரெயிலர். இதைத்தொடர்ந்து ஜனவரி 25ம் தேதி படம் ரிலீஸ். பிளானிங் பக்கா!


* சைலன்ட்மோடில் இருந்த சன் பிக்ஸர்ஸ் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கவுள்ளது. அடுத்தடுத்து இரண்டு பிரம்மாண்டப் படங்களுக்கான அறிவிப்புகள் வரவிருக்கின்றன. ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ‘காஞ்சனா-3’ படத்தைத் தயாரிக்க இருக்கிறார்கள். அதற்குப் பிறகு விஜய் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படமும் சன் பிக்ஸர்ஸ்தான்! வர்லாம்... வர்லாம் வா...

  • தொடங்கியவர்

பெரிய அளவில் மோட்டார் கண்காட்சி

 

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறும் , ஜெர்மனி, பிராங்க்பர்ட் நகரின் உலகப் பிரபல்யம் பெற்ற மோட்டார் கண்காட்சி, இந்த வருடம் கோலாகலமாக ஆரம்பித்துள்ளது .

பெரிய அளவில் மோட்டார் கண்காட்சி

புத்தம் புதிய வொல்வோ , ஜுவுகார், லான்ட் ரோவர் , பீ எம் டபிள்யூ  என்று சகல் புகழ் பெற்ற கார் உற்பத்தி நிறுவனங்களும் , அடுத்த எட்டு வருடங்களுக்கான மின்சாரக் கார்களை அறிமுகப்படுத்த இருக்கின்றன .

பெரிய அளவில் மோட்டார் கண்காட்சி

இப்பொழுது ஊடகங்களுக்கு அனுமதிக்கப்பட்டாலும் , வெளியார் இந்த மாதம் 16ந் திகதி தொடக்கம் கார்களை நேரில்  பார்க்க அனுமதிக்கப்படவுள்ளர்கள் . இந்தக் கண்காட்சி 24ந் திகதி வரை தொடரும்.தனி பாட்டரிகளில் இயங்கும் கார்கள் , ஹைப்ரிட் கார்கள் என்று நவீன கார்கள் பார்வைக்கு விடப்படவுள்ளன

IBC

  • தொடங்கியவர்

ஹொலிவுட்டில் நீ.....ளக் கால் பதிக்கும் லிசினா! (படங்களுடன்)

 

 

உலகின் நீளமான கால்களை உடைய பெண் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரான ரஷ்யாவின் ‘எகெதெரினா லிசினா’ (29), ஹொலிவுட் திரையுலகில் ‘கால்’ எடுத்து வைக்கிறார். இத்தகவலை அவர் இன்று நடைபெற்ற நேர்காணல் ஒன்றின்போது தெரிவித்தார்.

Lisina1.jpg

அவரை நேர்கண்ட தொகுப்பாளர்கள் ஏணி மீது ஏறியபடி நேர்கண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆறு அடி ஒன்பது அங்குல உயரமுள்ள லிசினாவின் கால்களின் நீளம் மட்டும் 52.4 அங்குலம். இந்தச் சாதனை(!)க்காகவே அவரது பெயர் 2018க்கான கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார்.

Lisina3.jpg

இந்த விசேட அம்சமே அவரை ஹொலிவுட்டில் கால் பதிக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. 

ஒலிம்பிக்கில் கூடைப் பந்தாட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்குச் சொந்தக்காரரான இவர், ‘ரக்பி கேர்ள்ஸ்’ என்ற புதிய ஹொலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Lisina4.jpg

லிசினாவுக்குத் திருமணமாகி ஆறு வயதில் ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையிலேயே அவருக்கு திரைப்பட வாய்ப்பு கதவைத் தட்டியிருக்கிறது.

Lisina5.jpg

 

 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

‘ஹார்வி’ புயலில் கரையொதுங்கிய புதிய ஜந்து!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மானிலத்தில், அண்மையில் வீசிய ஹார்வி புயலில், உயிரற்ற இராட்சத கடல்வாழ் உயிரினமொன்று கரையொதுங்கியுள்ளது.

7_Sea_Creature.jpg

டெக்ஸாஸின் மத்திய நகரில் உள்ள கடற்கரையிலேயே கண்கள் அற்ற, கூர்மையான பற்கள் கொண்ட, நீண்ட உருளை போன்ற தோற்றம் கொண்ட, வால் பகுதி சிதைந்த இந்தக் கடல்வாழ் உயிரினம் ஒதுங்கியுள்ளது.

இதை முதன்முதலில் ப்ரீத்தி தேசாய் என்ற அமெரிக்க வாழ் இந்தியப் பெண்ணே கண்டிருக்கிறார். 

“அது ஒரு நீர் நாய் (சீல்) என்றே நான் நினைத்திருந்தேன். எனினும் அருகில் சென்று பார்த்தபோது, இதுவரை நான் கண்டிராத, கேள்விப்பட்டும் இராத இந்த உயிரினத்தைக் கண்டேன். 

“இது என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆவலில்தான் இந்த ஜந்துவின் புகைப்படத்தை ட்விட்டரில் தரவேற்றினேன். எனினும் இதுவரை உருப்படியான ஒரு தகவலும் கிடைக்கவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார் ப்ரீத்தி!

இந்த வித்தியாசமான உயிரினம் விலாங்கு மீன் வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்பட்டபோதும், இதுவரை உலகில் அடையாளம் காணப்பட்ட விலாங்கு இனங்களில் இதுபோன்ற உயிரினம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

இணையத்தில் வெளியான செரினா வில்லியம்ஸின் வீடியோ (வீடியோ இணைப்பு)

 

உலக புகிழ் பெற்ற அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸிற்கு கடந்த 1 ஆம் திகதி பெண் குழந்தை பிறந்துள்ளமை யாவரும் அறிந்த விடயமாகும்.

அவர் பிறந்த குழந்தைக்கு அலெக்ஸிஸ் ஒலிம்பியா ஓஹானியன் என பெயரிட்டுள்ளதோடு, செரினா தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில், தான் கருவுற்றிருந்த காலம் முதல் குழந்தை பிறந்தநாள் வரை நடந்தவைகளை அனைத்தையும் ஒரு வீடியோ தொகுப்பாக வெளியிட்டுள்ளார்.

குறித்த வீடியோ தற்போது இணையத்தள பயன்பாட்டாளர்கள் மத்தியில் வைரலாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது. செரினா 3 மாத இடைவெளிக்கு பின்னர் அனைத்து டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

முத்தமிட ஒரு திருவிழா
==================
கிழக்காசியாவில் உள்ளவர்கள் பொதுவாக ஒருவரை அடுத்தவர் பொது இடங்களில் முத்தமிடமாட்டார்கள்.

அது மேலைநாட்டு கலாச்சாரமாக அங்கு பார்க்கப்படுகின்றது.

ஆனால், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அபா பகுதியை சேர்ந்த மக்கள் நண்பர்களை
குடும்பத்தவரை முத்தமிடுவதை பழக்கமாக கொண்டுள்ளனர்.

முத்தமிடுவதற்கு தொன்றுதொட்டு கொண்டாடப்படும் ஒரு விழாவையும் அவர்கள் வைத்திருக்கிறார்கள்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

  • தொடங்கியவர்

டெர்மினேட்டர் தெரியும்... இந்த 23 சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களின் கதை தெரியுமா?

அறிவியல் பேசும் சயின்ஸ் ஃபிக்ஷன் வகை தமிழ்ப் படங்கள் குறைவுதான் என்றாலும், ஹாலிவுட்டில் வருடத்திற்கு 10 படங்களாவது வந்து விடுகின்றன. 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் அதிரி புதிரி ஹிட்டடித்த டெர்மினேட்டர், மேட்ரிக்ஸ், ஜுராசிக் பார்க் படங்களைத் தமிழில் ரசித்த நாம், 21ஆம் நூற்றாண்டில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த, திரும்பத் திரும்பப் பார்க்க வைத்த நிறையப் படங்களை மிஸ் செய்திருப்போம். சயின்ஸ் ஃபிக்ஷன் என்றாலே சாகச படங்கள் தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், கற்பனையும் தாண்டி, நிஜத்தோடு ஒத்துப்போகும் பல அறிவியல் அம்சங்களைக் கொண்டு படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் பல கல்லாவை நிரப்பியிருக்கின்றன, மக்களின் மனத்தையும் கொள்ளை கொண்டிருக்கின்றன. நமக்குத் தெரிந்த அவதார், ஸ்டார் வார்ஸ், ஸ்டார் ட்ரெக் தாண்டி, 21ஆம் நூற்றாண்டில் அறிவியலைக் கருவாகக் கொண்டு சாதித்த படங்களின் பட்டியல்தான் இது.

Another Earth (2011)

கரு: பல அண்டக் கோட்பாடு

ஹாலிவுட் சயின்ஸ் ஃபிக்ஷன் - Another Earth (2011)

பூமியைப் போன்றே அச்சு அசலாகக் கிரகம் ஒன்று நமக்கு மிக அருகில் கண்டுபிடிக்கப்படுகிறது. அது ஓர் இளம் பெண் மற்றும் ஓர் இசையமைப்பாளரின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே கதை.

Coherence (2013)

கரு: குவாண்டம் இயற்பியல்/Schrödinger's Cat

Coherence (2013)

நண்பர்கள் குழு ஒன்று மாலை நேரப் பொழுதை மது மற்றும் உணவுடன் கொண்டாடி மகிழ்கிறது. அப்போது, வானில் ஒரு வால் நட்சத்திரம் தோன்ற, யாரும் எதிர்பாராத வித்தியாசமான சம்பவங்கள் பல நடைபெறுகின்றன.

Cloverfield (2008)

கரு: நிலநடுக்கம்/துரத்தும் அசுரன்

Cloverfield (2008)

நண்பர்கள் குழு ஒன்று துரத்தும் அசுரனிடமிருந்து தங்கள் உயிர்களைக் காத்துக்கொள்ள நியூயார்க் நகரம் முழுவதும் ஓடுகிறார்கள். பிழைத்தார்களா, நிலநடுக்கம் ஏற்படுத்தும் அந்த அசுர மிருகம் அழிந்ததா?

The Martian (2015)

கரு: விண்வெளிப் பயணம்

The Martian (2015)

வானவியல் நிபுணரான மார்க் வாட்னே செவ்வாய் கிரகத்தில் மாட்டிக்கொள்கிறான். அறிவியல் யுக்திகளைப் பயன்படுத்தி, அவனை மெலிசா லெவிஸ் மற்றும் அவரது குழு எப்படிக் காப்பாற்றுகிறது என்பதே கதை.

Signs (2002)

கரு: ஏலியன்ஸ் வருகை

Signs (2002)

சொந்தமாகப் பண்ணை ஒன்றை வைத்திருக்கும் குடும்பம் அது. திடீரெனப் பண்ணையில் வித்தியாசமான அறிகுறிகள் தோன்றுகின்றன. அழையா விருந்தாளியாக வருகின்றன ஏலியன்கள்.

The Mist (2007)

கரு: வினோத மிருகங்களின் வேட்டை

The Mist (2007)

பனிப்போர்வையில் வினோத மிருகங்கள் மறைந்து வந்து மக்களை வேட்டையாடுகிறது. ஒரு சிலர் ஊருக்குள் இருக்கும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் தஞ்சம் புகுந்து தப்பித்தார்களா அவர்கள்?

The Prestige (2006)

கரு: மேஜிக்கிற்கு பின்னால் மறைந்திருக்கும் அறிவியல்

The Prestige (2006)

புகழ்பெற்ற மேஜிக் நிபுணர் ஒருவரின் இரண்டு சிஷ்யர்கள் தங்களுக்குள் யார் சிறந்தவர் என்று போட்டி போட்டு கொள்கின்றனர். இதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் போகத் தயார். முடிவில் யார் வென்றார்?

A.I: Artificial Intelligence (2001)

கரு: ரோபோட் சிறுவன்

A.I: Artificial Intelligence (2001)

பாசத்தின் சுவையை ருசித்து விட்ட ரோபோட் சிறுவன் ஒருவன், தான் மனிதனானால் தன் தாயின் அன்பு மீண்டும் தனக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறான். ரோபோட்கள் சூழ் உலகில் அதற்காக அவன் எடுக்கும் முயற்சிகள்தான் கதை.

Interstellar (2013)

கரு: அண்டம் விட்டு அண்டம் பாயும் விண்வெளிப் பயணம்

Interstellar (2013)

மனித இனத்தைக் காப்பதற்காக, வாழ்வாதாரம் தேடி அண்டம் விட்டு அண்டம் வேறு கிரகங்களுக்குச் செல்கிறது ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று. வார்ம்ஹோல் மற்றும் கருந்துளை தாண்டிய பயணம் வெற்றியைத் தேடி தந்ததா?

Edge Of Tomorrow (2014)  

கரு: சாவை வெல்லும் அறிவியல்

Edge Of Tomorrow (2014)

ஏலியன்களை எதிர்த்துப் போராடும் இராணுவ வீரன் ஒருவனுக்கு, ஒவ்வொரு முறை அவன் இறக்கும் போதும், மீண்டும் முதலிலிருந்து அந்த நாளைத் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி ஏலியன்களை வீழ்த்தினானா?

Sunshine (2007)  

கரு: அழிவின் விளிம்பில் சூரியன்

Sunshine (2007)

2057ஆம் ஆண்டில், சூரியன் அழியும் தருவாயில் இருக்கிறது. சர்வதேச விண்வெளி வீரர்கள் குழு ஒன்று அணுக்கருப் பிளவு குண்டு ஒன்றை வைத்து சூரியனுக்கு ஒளியூட்டும் முயற்சியில் களம் இறங்குகிறது. வெற்றி கிட்டியதா?

Donnie Darko (2001)

கரு: துரத்தும் மாயத்தோற்றங்கள்

Donnie Darko (2001)

பதின்வயது சிறுவன் ஒருவனைத் துரத்துகிறது முயல் வடிவில் மாயத்தோற்றங்கள். விபத்து ஒன்று ஏற்படுகிறது. அதை நிகழ்த்தியது யார், அதிலிருந்து இவன் தப்பித்தானா? உண்மையில் அந்த முயல் வடிவ மனிதன் இருக்கிறானா?

Ex Machina (2014)

கரு: உயிர்பெறும் செயற்கை நுண்ணறிவு

Ex Machina (2014)

இளம் புரோகிராமர் ஒருவருக்கு வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடிக்கப்போகும் செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒரு பெண் ரோபோவை சோதனை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த ரோபோ ஆபத்தானதா? இவன் என்ன செய்தான்?

Minority Report (2002)

கரு: எதிர்காலம் அறியும் திறன்

Minority Report (2002)

எதிர்காலத்தில் என்ன குற்றம் நடக்கப்போகிறது என்பதை முன்னரே அறிந்து தடுக்கிறது குழு ஒன்று. அதிலிருக்கும் அதிகாரி ஒருவரே அடுத்த கொலையை செய்யப்போகிறார் என்று தகவல் கிடைக்கிறது. இதை எப்படித் தடுப்பார்கள்?

Looper (2012)

கரு: டைம் ட்ராவல் செய்து கணக்கை முடிப்போம்

Looper (2012)

2074ஆம் ஆண்டு ஒருவனைக் கொல்ல வேண்டும் என்றால், அவனை இறந்த காலத்திற்கு அனுப்புவார்கள். அங்கே அவனைக் கொல்ல ஒரு கூலிப்படைக்காரன் தயாராக இருப்பான். ஜான் என்ற கூலிப்படைக்காரன் ஒருவனுக்கு அப்படி எதிர்காலத்தில் இருந்து வரும் அசைன்மென்ட் அவனாகவே இருந்தால்?

Gravity (2013)

கரு: விண்வெளியில் விபத்து

Gravity (2013)

சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பழுது பார்க்கும் போது விபத்து ஒன்று நிகழ்ந்து விடுகிறது. தப்பிப் பிழைத்து விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் அந்தப் பெண், பல போராட்டங்கள் தாண்டி பூமி வந்து சேர்ந்தாளா?

Inception (2010)

கரு: கனவுக்குள் கனவு

Inception (2010)

மற்றவர் கனவுக்குள் உங்களால் ஊடுருவ முடிந்தால்? அதன் மூலம் அவர்கள் மனதில் ஓர் அழியா எண்ணத்தை விதைக்க முடிந்தால்? மனமாற்றம் செய்ய முடிந்தால்? ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறதே? இங்கே என்ன சிக்கல்?

District 9 (2009)

கரு: ஏலியன்களின் கூடாரம்

District 9 (2009)

பூமியில் தங்கிவிட்ட ஒரு வேற்றுலக இனத்தைத் துரத்தும் முயற்சி நடக்கிறது. அதை நிறைவேற்ற வரும் அதிகாரி ஒருவர் இப்போது அந்த ஏலியன்களின் உதவியால் உயிர் வாழ வேண்டிய நிலை. தப்பித்தாரா? ஏலியன்கள் சென்றதா?

Primer (2004)

கரு: கால விளையாட்டு

Primer (2004)

நான்கு இளைஞர்கள் கார் கேரேஜ் ஒன்றில் எலக்ட்ரானிக் சாதனங்களைத் தயார் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில், அவை பல விந்தைகளை நிகழ்த்தும் என்று புரிந்து கொள்கிறார்கள். ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

Source Code (2011)

கரு: விதியை மாற்றும் அறிவியல்

Source Code (2011)

ஓடும் ரயிலில் குண்டுவெடிப்பு நடக்கிறது. நவீன உபகரணங்களுடன் குண்டுவெடிப்புக்கு 8 நிமிடங்கள் முன்னர் சென்று குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஓர் இராணுவ வீரனைத் தயார் செய்கிறார்கள். கண்டுபிடிக்க முடிந்ததா?

Her (2013)

கரு: கணினி காதல்

Her (2013)

தனிமை வாட்டியெடுக்கும் எழுத்தாளர் ஒருவன், கணினியைச் செயல்படுத்தும் மென்பொருள் ஒன்றின் மேல் காதல் கொள்கிறான். பெண் குரலில் வசீகரிக்கும் அதன் வேலையே இப்படிப்பட்ட மனிதர்களுக்கு உற்றதுணையாக செயல்படுவதுதான். இதனால் ஏற்படும் சிக்கல்கள் தான் கதை.

Eternal Sunshine Of The Spotless Mind (2004)

கரு: அழிக்க முடியாத நினைவுகள்

Eternal Sunshine Of The Spotless Mind (2004)

காதல் ஜோடி ஒன்று மனஸ்தாபம் காரணமாகப் பிரிகிறார்கள். காதல் நினைவுகளை அறிவியல் கொண்டு அழித்து விடுகிறார்கள். யாரென்று தெரியாமல் மீண்டும் சந்திக்கும் போது காதல் மீண்டும் பூக்கிறது. இந்தக் காதலாவது வென்றதா?

Children of Men (2006)

கரு: அழியத் தொடங்கும் மனித இனம்

Children of Men (2006)

 

2027ல் மொத்த மனித இனமும் மலடாகி விடுகிறது. பரபரப்பான கலவர சூழலில் ஒரு பெண் கற்பமாகிறாள். அவரைப் பாதுகாப்பாக ஒரு சரணாலயத்திற்கு கொண்டுசெல்ல பொறுப்பேற்கிறான் முன்னாள் சமூகப் போராளி ஒருவன். குழந்தை பிறந்ததா? மனித இனம் தழைத்ததா?

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஐ-போன் X ன் விலை பற்றி குவியும் மீம்கள்

ஹோம் (முகப்பு) பட்டனே இல்லாத மற்றும் உரிமையாளரை கண்டறியும் வகையிலான முக அடையாள அமைப்பு முறையை பயன்படுத்தும் ஐபோன் X ஸ்மார்ட்ஃபோனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது.

இந்த அம்சங்கள் குறித்தும், ஆப்பிள் அலை பேசிகளின் அசாதாரண விலை பற்றியும் சமூக ஊடகங்களில் பலதரப்பட்ட மீம்களை காணமுடிந்தது.

மீம்ஸ்படத்தின் காப்புரிமைFACEBOOK மீம்ஸ்படத்தின் காப்புரிமைFACEBOOK மீம்ஸ்படத்தின் காப்புரிமைTWITTER/JOHN CENA

சண்டைக் களத்தில் `யு காண்ட் சி மி` என தனது எதிரியிடம் அதிகமாக கூறும் ஜான் சீனா, தன்னால் இந்த முக அடையாள அம்சத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மீம்ஸ்படத்தின் காப்புரிமைTWITTER/MUHAMMAD SALMAN

இதற்கு முன் வெளியான ஐஃபோன் 7-ல் ஒயர்களை கொண்ட ஹெட்ஃபோன்களை பயன்படுத்த வேண்டிய தேவையில்லை; எனவே அடுத்தடுத்து இந்த அம்சங்களும் ஐஃபோனில் இடம்பெறும் வாய்ப்பு உள்ளது என நகைச்சுவையாக கூறும் பதிவு இது.

 

மீம்ஸ்படத்தின் காப்புரிமைFACEBOOK

பொதுவாக ரெட்மி அலைபேசிகள் அதிகமாக சூடாகிவிடுகின்றன என்ற குறைபாடு இருக்கும் நிலையை சுட்டிக்காட்டி ஐஃபோனையும் விமர்சிக்கிறது இந்த மீம்.

மீம்ஸ்படத்தின் காப்புரிமைFACEBOOK மீம்ஸ்படத்தின் காப்புரிமைFACEBOOK

ஆப்பிள் அலை பேசிகள் விலையுயர்ந்த ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்ததே எனவே ஒவ்வொரு வகை ஐஃபோன்கள் வெளியிடப்படும்போதும் கிட்னியை விற்றுதான் ஐஃபோன் வாங்க முடியும் என்ற மீம்மை நாம் நிச்சயமாக பார்க்க முடியும். அதைக் கிண்டலடிக்கிறது ஒரு மீம்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

தொடர்ந்து வைரல் ஆகும் ஜிமிக்கி கம்மல்! நடிகர்கள், அரசியல் தலைவர்கள் நடனமாடும் வீடியோ பதிவு.

  • தொடங்கியவர்

ஃபெரீத் முராத்

 
14CHRGNFERID
 

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மருத்துவர், மருந்தியலாளர், மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான ஃபெரீத் முராத் (Ferid Murad) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

அமெரிக்காவில் இந்தியானா மாகாணத்தில் பிறந்தார் (1936). அறிவுக்கூர்மை மிக்க மாணவராகத் திகழ்ந்தார். சிறுவயது முதலே தன் பெற்றோரைப் போலவே கடுமையான உழைப் பில் நம்பிக்கை கொண்டிருந்தார்.

பள்ளிப் பருவத்திலேயே தான் ஒரு மருத்துவராக வேண்டும் என முடிவு செய்தார். ஆனால், மருத்துவக் கல்லூரியில் சேர்க்கும் அளவுக்கு பெற்றோருக்கு வசதி இல்லாததால், கல்வி உதவித் தொகைப் பெற பல இடங்களில் முயற்சி செய்தார்.

கிரீன்கேஸ்டிலில் இருந்த டிபாவ் பல்கலைக்கழகத்தில் உதவித்தொகைப் பெற்று, வேதியியல் பயின்றார். பட்டப் படிப்பு படிக்கும்போதே நைட்ரிக் ஆக்சைட் குறித்த தனது ஆராய்ச்சிகளைத் தொடங்கிவிட்டார். பின்னர், கேஸ் வெஸ்டன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் மருந்தியலில் எம்.டி., பி.எச்டி. பட்டம் பெற்றார். தேசிய சுகாதார அமைப்பில் மருத்துவ அசோசியேட்டாகவும் மூத்த அறுவை சிகிச்சை உதவியாளராகவும் இணைந்தார்.

1970-ல் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட மருத்துவ மருந்தியல் பிரிவில் மருத்துவத்திலும் மருந்தியலிலும் அசோசியேட் பேராசிரியராக நியமனம் பெற்றார். பின்னர் அதன் மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் கிளினிகல் ஃபார்மாலஜியின் இயக்குநராக உயர்ந்தார்.

ரத்த நாளங்களைப் பாதிக்கும் நோய்களுக்குப் பயன்பட்டு வந்த நைட்ரோகிளசரின் குறித்து விரிவாக ஆராய்ந்தார். இதன் அபார செயல்திறனால் மென்தசை செல்கள் தளர்கின்றன என்பதைக் கண்டறிந்தார். இதை அடிப்படையாகக் கொண்டு, நைட்ரிக் ஆக்சைட் மற்றும் பிற நைட்ரஜன் உள்ளடங்கிய கலவைகள் எவ்வாறு சவ்வுகள் உள்ளே சென்று மற்ற செல்களைச் செயல்பட வைக்கின்றன என்பதை எடுத்துக்காட்டினார்.

நைட்ரோகிளிசரின்கள் மூலம் தூண்டப்படும்போது, என்சைம்களால் உருவாகும் சுழற்சிமுறை கியோனோஸின் (cyclic guanosine) மோனோ பாஸ்பேட் குறித்து ஆராய்ந்தார்.

1988-ல் அப்பாட் சோதனைக்கூடத்தின் மருந்து கண்டுபிடிப்பு மையத்தின் துணைத் தலைவராகப் பதவி ஏற்றார். 1997-ல் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் இணைந்து ஒருங்கிணைந்த உயிரியியல், மருந்தியல் மற்றும் உடலியல் துறைகளைப் புதிதாகத் தொடங்கி வைத்தார்.

2011-ல் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உயிரிவேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியியல் துறையின் பேராசிரியராகப் பணியாற்றினார். தனது ஆராய்ச்சிகள் குறித்த கட்டுரைகளையும் ‘எ ஷாட் ஹிஸ்டரி ஆஃப் சிஜிஎம்பி குன்னைல்ல சைக்லஸ் அன்ட் சிஜிஎம்பி - டிபென்டென்ட் புரோட்டீன் கைனசெஸ்’, ‘டிஸ்கவரி ஆஃப் நைட்ரிக் ஆக்சைஸ் சிகனலிங் பாத்வே அன்ட் டார்கெட்ஸ் ஃபார் டிரக் டெவலப்மென்ட்’ உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.

கார்டியோ வாஸ்குலர் அமைப்பில் சமிக்ஞை மூலக்கூறாக நைட்ரிக் ஆக்சைட் இருப்பது குறித்த இவர்களது கண்டுபிடிப்புகளுக்காக 1998-ம் ஆண்டு ராபர்ட் எஃப் ஃபர்ச்கோட் மற்றும் லூயிஸ் ஜே. இக்னாரோ ஆகியோருடன் இணைந்து, மருத்துவம் அல்லது உடலியங்கலியலுக்கான நோபல் பரிசை வென்றார்.

தலைசிறந்த ஆசிரியர், ஆராய்ச்சியாளர், சிறந்த நிர்வாகி, அறிவியல் ஆலோசகராக விளங்கியவரும், மருத்துவம், மருந்தியல், உடலியல் துறைகளுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான ஃபெரீத் முராத் இன்று 82-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எப்போதுமே சிவப்பு விளக்கு எரியும் சிக்னல்! குழந்தைகளுக்கான இரவுக் கதை #BedTimeStory

 

கதைகளே குழந்தைகளுக்கு நல்ல நண்பன். புதிய உலகத்தைத் திறக்கச் செய்ய எளிய வழி கதை சொல்வதுதான். ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தைக்குக் கதை சொல்லுங்கள். அப்படி சொல்வதற்கு உதவியாக இதோ அழகான ஒரு கதை! சாலையில் நாம் அதிகம் எதிர்கொள்ளும் போக்குவரத்து சிக்னலை வைத்து சூப்பரான கதை உங்களுக்காக!

கதை

எப்போதுமே சிவப்பு விளக்கு எரியும் சிக்னல்! 

விழியன்

”மாமா, இவன்கூடப் போய்ட்டு வரவா?” என்று கேட்டான் மணி. அவன் காட்டியது லோகநாதன் என்ற லோகுவைத்தான். மணி கிராமத்திலிருந்து தன் மாமாவுடன் சென்னைக்கு வந்திருக்கின்றான். ஏழாம் வகுப்பு படிக்கும் மணி தன்னால் சரியாகப் படிக்கமுடியவில்லை என்று விடுமுறை விட்டதும் வீட்டிலேயே முடங்கி இருந்தான். ஊருக்குப் போன அவன் மாமா ஒரு மாசம் சென்னையில என்கூட இருந்துட்டு வா என அழைத்து வந்திருக்கிறார். மாமா, சென்னை போரூர் சிக்னல் அருகே டீக்கடை வைத்திருக்கிறார். அவரே முதலாளி; அவரே டீ மாஸ்டர்; அவரே அந்தக் கடையில் எல்லாமும். ஒரு இந்திப் பேசும் இளைஞன் மாமாவின் உதவிக்கு இருக்கிறார். 

மணி, கடைக்கு வெளியே வந்து சிக்னலைப் பார்ப்பதிலேயே நேரத்தை கடத்துவான். காலை ஏழரை மணிக்கு ஆரம்பிக்கும் பரபரப்பு இரவு பத்து மணி வரை குறையவே குறையாது. மேம்பாலம் திறக்கப்பட்டாலும் நெரிசல் குறையவில்லை. மாமாவின் கடை குன்றத்தூர் சாலையில் இருந்தது. சிக்னலில் இருந்து ஐம்பது அடிகள்தான். அங்கிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி சின்ன அறை எடுத்துயிருந்தார் மாமா. மூவரும் அங்கேதான் தங்கினார்கள். மாமா திருமணமே செய்துகொள்ளவில்லை.

மணி எப்போது சிக்னலைப் பார்த்தாலும் அவனுக்குச் சிவப்பு நிற விளக்கு மட்டுமே தெரியும். அவனுக்கு அப்படி ஒரு ராசி என நினைத்துக்கொள்வான். அவனுக்கு நிறையக் குழப்பங்கள் இருந்தன. மேலே படிக்கலாமா இல்லை விட்டுவிடலாமா, இங்கயே ஏதாச்சும் வேலையில் சேர்ந்திடலாமா என்று கூட யோசனை இருந்தது. சென்னை அவனுக்குப் பிடிக்கவில்லை. அதுவும் எந்நேரமும் நெரிசலும் கூட்டமுமாக இருந்த போரூர் சிக்னல் அவனுக்குச் சுத்தமாகவே பிடிக்கவே இல்லை. ஊரில் விட்டுவிடுங்கள் என மாமாவை கேட்க நினைத்த நாளில் தான் லோகுவை சந்தித்தான். அவன் அப்பா ஒரு ஷேர் ஆட்டோ ஓட்டுநர். அந்த நாள் அவர் டீ சாப்பிட வரும்போது லோகுவும் வந்திருந்தான். பார்த்ததுமே புன்னகைத்தான். அவனாக வந்து பேசினான். அன்றிலிருந்து தினமும் வந்துவிடுவான். ”மாமா, இவன் கூட போய்வரவா?” என்று கேட்டதும் 'போய் வா' என்றார் மாமா. லோகுவின் அப்பாவை நன்றாகத் தெரியும் என்பதால் அந்த நம்பிக்கை.

கதை

லோகுவும் மணியும் ஷேர் ஆட்டோவில் முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டனர். போரூர் சிக்னலில் இருந்து பூந்தமல்லி வரை ஓடும் ஷேர் ஆட்டோ அது. மதிய வேளையில் சவாரி குறைவாகவே இருக்கும். வெயில் வேறு அதிக்கப்படியாக இருந்ததால் மக்கள் யாரும் வெளியே வரவே அஞ்சினார்கள். மணிக்கு இந்தப் பயணம் மிகவும் பிடித்து இருந்தது. தினமும் இதுவே பழக்கமாகிவிட்டது. போரூரில் இருந்து பூந்தமல்லி, பூந்தமல்லியில் இருந்து போரூர். இப்போது எல்லா நிறுத்தமும் மணிக்கும் அத்துப்படியானது. லோகு இடைவிடாது பேசிக்கொண்டே இருப்பான்.

ஒருநாள் பூந்தமல்லியில் இருந்து கிளம்பும்போது ஷேர் ஆட்டோ நிரம்பி வழிந்தது. “இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க ஏத்திக்க முடியுமா?” என ஆட்டோவில் இருந்த ஒருவர் கேட்க லோகுவும் மணியும் இறங்கினார்கள். “பின்னாடி நம்ம பசங்க யாராச்சும் வருவாங்க, காலியா இருக்க ஆட்டோல வந்திடுங்க. இல்லைன்னா இங்கயே இருங்க ஒரு மணிநேரத்தில வந்திட்றேன்” என்றார் லோகுவின் அப்பா. அங்கேயே காத்திருந்தார்கள். கால் மணி நேரம் கழித்து “என்னடா லோகு இங்கே இருக்க, வா போகலாம்” என அவனுக்குத் தெரிந்த ஆட்டோக்காரர் இருவரையும் அழைத்துக்கொண்டார். ராமச்சந்திரா ஸ்டாப்பிங்கில் இருவரும் இறங்கிக்கொண்டனர். அங்கிருந்து போரூர் சிக்னல் சுமார் ஒரு மைல் தூரம் இருக்கும். “நடந்து போகலாம் மணி” என்றான் லோகு. மாலை நேரம் மழை வரும்போல இருந்தது. சில்லெனக் காற்று வீசிக்கொண்டிருந்தது. ராமச்சந்திரா காம்பெளண்ட் சுவர் கடந்ததும் வலது பக்கம் ரெட்டேரி இருக்கும். தூரத்தில் ஒரு மேம்பாலம். அது தாம்பரம் பைபாஸ் சாலை.

“லோகு, நீ எப்படிடா சந்தோஷமாவே இருக்க?” என்று மணி கேட்டான். அதற்கு அவன் சிரித்தான்.
..
“லோகு, நீ பெரியவனாகி என்ன செய்யப்போற?”

லோகு விரல்களை நீட்டினான். 'அதோ' என நீட்டினான். அவன் சுட்டியது மேம்பாலத்தை அல்ல, அதனைத் தாண்டிய மேகத்தை. இல்லை மேகத்தையும் தாண்டிச்சென்ற விமானத்தை.
“அதுவரைக்கும் பறப்பேன் மணி. அதுக்கும் மேல” என்றான்.

'ஜிவ்...' என்று இருந்தது மணிக்கு. புது ரத்தம் பாய்ச்சியதுபோல இருந்தது. அவன் சிந்தனையில் மாற்றம் நிகழத் தொடங்கியது. அன்று இரவு மணியைக் கட்டாயப்படுத்திப் பூந்தமல்லி சுந்தர் தியேட்டருக்கு அழைத்துச்சென்றான் லோகு. அவன் அப்பாவின் ஷேர் ஆட்டோவில் லோகுவின் குடும்பத்தினர் வந்திருந்தனர். அன்று இரவு லோகுவில் வீட்டில்தான் உறங்கினான். அவ்வளவு சின்ன வீடு. ஆனா இவனுக்கு இவ்வளவு பெரிய கனவா என வியந்தான். மறுநாள் ஊருக்குக் கிளம்புகிறான் மணி.

“மாமா, நீங்க வரவேண்டாம், நானே தனியே போறன்” என்றான். வரும்போது பயந்த பையனா இவன் என வியந்தார் மாமா. “என்னடா சென்னை பிடிச்சிருக்கா?” என்று கேட்டார். “ரொம்பவே” என்றான்.

இரவு 10.30க்குப் பூந்தமல்லியில் பேருந்து, விடியற்காலை ஊருக்குப் போய்விடலாம். மாமா வந்து ஏற்றிவிடுவதாக இருந்தது. ஆனால் லோகு ஏற்றிவிடுவதாக அவன் அப்பாவுடன் வந்திருந்தான். லோகுவை ஒருமுறை கட்டியணைத்துக்கொண்டான். “இந்தா அம்மா உனக்கு ஏதோ கொடுத்திருக்காங்க” எனப் பொட்டலத்தை நீட்டினான். கடையை விட்டு வெளியே வந்ததும் சிக்னலைப் பார்த்தான் மணி.

“பச்சை”

போலாம் ரைட் !

 umanath

 

விழியன்: சிறுவர்களுக்கான கதைகளை எழுதி வருபவர். இவர் எழுதிய மாகடிகாரம் எனும் சிறுவர் நூல் விகடன் விருது பெற்றது. குழந்தை வளர்ப்புத் தொடர்பாகவும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.