Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

முதலிடத்தை வென்ற ஊனமுள்ள ரைனோவின் படம் (புகைப்படத் தொகுப்பு)

 

தான் பார்த்த விடயங்கள், மனிதகுலத்தின் மீதான அவரது நம்பிக்கையை நீக்கிவிட்டதாக ப்ரென்ட் ஸ்டிர்டன் தெரிவிக்கிறார்.

தான் பார்த்த விடயங்கள், மனிதகுலத்தின் மீதான அவரது நம்பிக்கையை நீக்கிவிட்டதாக ப்ரென்ட் ஸ்டிர்டன் தெரிவிக்கிறார்.

 

 

சுற்றுச்சூழல் குற்றத்தை விவரிக்கும் அதிர்ச்சியளிக்கும் புகைப்படம், இந்த ஆண்டின் வனவிலங்கு புகைப்படக் கலைஞர்களின் (WPY) போட்டியில் முதலிடம் பிடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஹ்லுஹுலுய் (hloo-hloo-i) இம்ஃபொலொஜி வனச் சரணாலயத்தில் ஒரு கறுப்பு நிற காண்டாமிருகம் சரிந்த நிலையில் இருப்பதை, தென்னாப்பிரிக்கரான ப்ரெண்ட் ஸ்டிர்டனால் படம் பிடித்துள்ளார்.

வேட்டைக்காரர்கள் ஓசையின்றி சுடுகின்ற துப்பாக்கி மூலம் அந்த விலங்கைக் கொன்ற பின்னர் அதன் முன்புற கொம்பை வெட்டி எடுத்து சென்றுள்ளனர்.

காண்டாமிருக உடல் பாகங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வது தொடர்பான புலனாய்வின் ஒரு பகுதியாக இந்த படத்தை ஸ்டிர்டோன் எடுத்துள்ளார்.

தனது விசாரணையின்போது இதுபோல முப்பதுக்கும் அதிமான குற்றச் சம்பவங்களை புகைப்படக் கலைஞர் பார்வையிட்டார். அனுபவங்கள் மன சோர்வை வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.

"எனக்கு முதல் குழந்தை பிப்ரவரியில் பிறக்கவுள்ளது. எனக்கோ 48 வயதாகிறது. புகைப்பட நிருபராக மற்ற பணிகள் மீது நான் நம்பிக்கை இழந்ததன் காரணமாகவே இவ்வளவு இடைவெளி எடுத்துக் கொண்டேன் என நினைக்கிறேன்." என்று அவர் கூறுகிறார்.

லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் தமது படத்துக்கான விருதை ஒரு நள்ளிரவு நிகழ்ச்சியின்போது பெற்றுக் கொண்ட ஸ்டிர்டான், யாருடைய உத்தரவின்பேரிலோ காண்டாமிருகத்தின் கொம்பை வெட்டிய செயலை ஊள்ளூர்வாசிகள் சிலர் செய்திருக்க வேண்டும் என்று நம்புகிறார்.

ஒரு இடைத்தரகருக்கு விலங்கின் இரண்டு கொம்புகளை விற்பது வழக்கமான நடைமுறை. அந்த தனி நபர் பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு வெளியே குறிப்பாக, மொசாமிபீக் வழியாக சீனா அல்லது வியட்நாமுக்கு அவற்றைக் கடத்துவார் என்று அவர் கூறுகிறார்.

அந்த ஆசிய நாடுகளில், காண்டாமிருகத்தின் கொம்புக்கு தங்கம் அல்லது கோகேயினை விட அதிக விலை மதிப்பு உள்ளது.

ஒரு வித தவறாக வழிநடத்தப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் காண்டாமிருகத்தின் கொம்பு, அதன் கால் விரல் நகங்கள் போன்றவை புற்றுநோய் முதல் சிறுநீரக கல் அகற்றும் சிகிச்சைக்கு பயன்படும் என கருதப்படுவதால் அவற்றின் உடல் உறுப்புகளை வைத்து வர்த்தகம் நடைபெறுகிறது.

இது பற்றி ப்ரெண்ட் ஸ்டிர்டன் பிபிசியிடம் கூறுகையில், "விருதை வெல்லவும், இதுபோன்ற படத்தை தேர்வுக் குழு அங்கீகரிக்கவும் - நாம் வித்தியாசமான காலத்தில் வாழ்கிறோம் என்பதையும் இது உண்மையான பிரச்னை என்பதையும் விளக்க வேண்டியிருக்கிறது" என்றார்.

மேலும், அழிவின் ஆறாவது கட்டத்தில் இவை இருப்பது உண்மை. இந்த காண்டாமிருகங்கள் மட்டுமின்றி பல அரியவகை உயிரினங்களையும் நாம் மிக வேகமாக இழந்து வருகிறோம். இந்த படத்தை தேர்வு செய்ததற்காக தேர்வுக் குழுவுக்கு நன்றியுடையவனாவேன். ஏனென்றால், இந்த பிரச்னையை மாற்றுக் களத்துக்கு கொண்டு செல்ல இந்த விருது உதவும் என்றார் ப்ரெண்ட்.

முதலிடத்தை வென்ற ஊனமுள்ள ரைனோவின் படம்

இந்த ஆண்டின் வனவிலங்கு புகைப்படக்காரர் தேர்வுக் குழு தலைவரான லுவிஸ் ப்ளேக்வெல் கூறுகையில், காண்டாமிருகத்தின் படம் தேர்வுக் குழு மத்தியில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தியது என்றார். இந்தப் படத்தை பார்த்து மக்கள் வெறுப்படையலாம், அதிர்ச்சி அடையலாம். ஆனால், அது உங்கள் கவனத்தை ஈர்த்து அது பற்றி மேலும் அறிய உங்களைத் தூண்டும். அதன் கொம்பு வெட்டப்பட்ட கதையின் பின்னணியை அறியும் ஆர்வத்தை ஏற்படுத்தும். அதை அறிந்து கொள்வதில் இருந்து நீங்கள் பின்வாங்க முடியாது. உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்த்த உங்களை அது தூண்டும் என்று லுவிஸ் ப்ளேக்வெல் கூறினார்.

இளம் மேற்கத்திய கொரில்லாவுக்கு சீமை பலாக்காய் வழங்கியபோது எடுத்த அமைதியான படம், இந்த ஆண்டின் இளம் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதுக்குத் தேர்வாகியுள்ளது.

 

இந்த படத்தை எடுத்தவர் நெதர்லாந்தை சேர்ந்த டேனியல் நெல்சன். 15 முதல் 17 வயதுடையவர்களின் பிரிவின்கீழ் இவரது படம் தேர்வாகியுள்ளது.

இந்த கொரில்லாவின் வயது ஒன்பது. இதை காங்கோ குடியரசின் ஒட்ஸாலோ தேசிய பூங்காவில் பராமரிப்பாளர்கள் கேக்கோ என்று அழைக்கின்றனர். கொரில்லாவை பார்க்க அவர்கள் நெதர்லாந்து புகைப்படக் கலைஞரை அழைத்துச் சென்றனர்.

மேற்கத்திய கொரில்லாக்கள் மிகவும் ஆபத்தானவை. இறைச்சி, எபோலா வைரஸ் போன்ற குறிப்பிடத்தக்க நோய் சிகிச்சைக்காக சட்ட விரோதமாக அவை வேட்டையாடப்படுவதால் அவற்றின் எண்ணிக்கை சுருங்கி வருகிறது. மேலும், சுரங்கங்கள் மற்றும் பனை எண்ணெய் தோட்டங்களுக்காக அவை வாழ்ந்த இடங்கள் அழிக்கப்படுகின்றன.

தற்போது 18 வயதாகும் டேனியல், இளம் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருது பற்றி தனது ஆறாவது வயதிலேயே அறிந்திருந்ததாகக் கூறுகிறார். அது பற்றி கேள்விப்பட்ட உடனேயே அதனால் ஈர்க்கப்பட்டதாகவும், அப்போது முதல் வனச்சரணாலங்களைச் சுற்றி வருவது, படம் எடுப்பது மற்றும் வனப் பராமரிப்பு ஆகியவை தமது வாழ்வின் ஆசைகளாயின என்று அவர் கூறுகிறார்.

வரி

டபிள்யூபிஒய் பிரிவு வெற்றியாளர்களை மற்றவர்களை அறிவோம்.

Contemplation

இந்த படம் கான்டம்ப்ளேஷன் என்று அழைக்கப்படுகிறது. இதை எடுத்தவர் பீட்டர் டெலானி. விலங்கு ஓவியங்கள் பிரிவில் இந்த படம் தேர்வாகியுள்ளது. உகாண்டாவின் கிபாலே தேசிய பூங்காவில் உள்ள வனத்தில் ஓய்வெடுக்கும் ஒரு மனிதக் குரங்கு படத்தில் உள்ளது. பீட்டர் அடிப்படையில் அயர்லாந்துவாசி. ஆனால், டபிள்யூபிஒய் மீதான ஆர்வத்தால் ஆஃப்ரிக்காவுக்கு வந்து, அங்கு தமது புகைப்படத் தொழிலைத் தொடர்கிறார்

வரி Crab surprise

'க்ராப் சர்ப்ரைஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம், ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் கில்லிகனால் எடுக்கப்பட்டது. முதுகெலும்பில்லாத உயிரினங்கள் பிரிவைச் சேர்ந்த உயிரினம் இவை என கோரப்பட்டுள்ளது. டாஸ்மானியாவின் கிழக்கு கடல் பகுதியில் உள்ள மெர்குரி கனவாயில் சிலந்தி நண்டுகளின் தொகுப்புக்குள் ஒரு ஆக்டபஸ் நுழைந்து தமது இரையைத் தேர்வு செய்வதாக இந்த படம் உள்ளது.

வரி பெருங்கூட்டம்

'டோனு வூ' அமெரிக்கா இந்த படத்தை ஒரு பெரிய கூட்டம் என்று அழைக்கிறார். பாலூட்டிகளின் நடத்தையை இந்த படம் விளக்குகிறது. விந்தணு திமிங்கலங்களை படம் பிடிப்பதில் டோனு சிறந்த நிபுணர். இலங்கையின் வடகிழக்கு கடல் பரப்பில் இந்த திமிங்கலங்களின் கூட்டம் காணப்பட்டது. இதுபோன்ற நிகழ்வை கேமிராவில் படம் பிடிப்பது மிக, மிக அரிதானது.

வரி முதலிடத்தை வென்ற ஊனமுள்ள ரைனோவின் படம்

வழக்கத்துக்கு மாறான இந்த படம், தி ஐஸ் மான்ஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. பிரான்ஸை சேர்ந்த லாரன்ட் பல்லெஸ்டா இந்த படத்தை கிழக்கு அண்டார்டிகாவில் ப்ரெஞ்ச் அறிவியல் தளமான டுமொன்ட் டி உர்விலே அருகே உள்ள கடலுக்கடியில் எடுத்தார். பனிப்பாறையின் அடிப்பகுதியை படத்தில் காணலாம். பல படங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பு இது. பூமியின் சுற்றுச்சூழல் பிரிவில் இந்த படம் தேர்வாகியுள்ளது.

வரி முதலிடத்தை வென்ற ஊனமுள்ள ரைனோவின் படம்

பனை எண்ணெய் தோட்டத்தில் பிழைத்தவர்களை விளக்கும் இந்த படம், பெர்டீ கெகோஸ்கியால் எடுக்கப்பட்டது. சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞருக்கான ஒற்றைப் பட விருது இவருக்கு இவர் தேர்வாகியுள்ளார். போர்னியோ தீவில் உள்ள கிழக்கு சபாவில் இந்த படம் எடுக்கப்பட்டது. பனை எண்ணெய் தோட்டத்தில் மீள் நடுகைக்காக இந்த பகுதி சுத்தம் செய்யப்படும்போது, மூன்று தலைமுறை யானை கூட்டத்தை புகைப்படக் கலைஞர் படம் பிடித்துள்ளார். இந்த தோட்டப்பகுதிக்குள் விலங்குகள் வரும்போது அவை பெரும்பாலும் சுடப்படும் அல்லது விஷம் வைத்து கொல்லப்படும் என்கிறார் பெர்டீ.

வரி முதலிடத்தை வென்ற ஊனமுள்ள ரைனோவின் படம்

'தி க்ரிப் ஆஃப் தி குல்ஸ்' எனப்படும் பருத்த அலகு கொண்ட ஆலா வகை பறவையை இத்தாலியைச் சேர்ந்த எகடெரினா பீ படம் பிடித்துள்ளார். தனது கேமிராவில் அவற்றின் காட்சிகள் பதிவதற்காக ரொட்டித் துண்டுகளை வீசி அவற்றை விளையாடச் செய்து படம் எடுத்துள்ளார். எகடெரினாவின் வயது வெறும் ஐந்தரை மட்டுமே.

வரி

உலக புகைப்படத் துறையில் தனக்கே உரித்தான பெருமை போட்டிகளில் ஒன்று டபிள்யூபிஒய்.

1964-ஆம் ஆண்டில் தொடங்கியது முதல் பிபிசியின் வனவிலங்கு இதழில் அதன் படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பங்கேற்கும் கலைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், இந்த ஆண்டு 92 நாடுகளில் இருந்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தற்போதைய போட்டியை லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் நடத்தியது.

சிறந்த படங்களின் கண்காட்சி, தெற்கு கென்சிங்டனில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. அடுத்த ஆண்டுக்கான போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் வரும் திங்களன்று தொடங்குகிறது.

http://www.bbc.com/

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

க்ரியேட்டிவாகச் சாதிக்க பெண்களால் முடியும்!

முதல் புன்னகையில் தொடங்கி விடைபெறும் நொடியின் கையசைப்பு வரை ஸ்வாதி பேசிய வார்த்தைகளில் ஒரு ரிதத்தை உணரமுடிகிறது. அந்த அழகுணர்வுதான் அவரின் புகைப்படங்களிலும் வெளிப்படுகிறது. உற்சாக வண்ணத்துப்பூச்சியாக வலம்வரும் டிராவல் போட்டோகிராபர், சேலத்தைச் சேர்ந்தவர். பி.எஸ்ஸி., விஸ்காம் பட்டதாரி. இப்போது பெங்களூரில் மீடியா மேனேஜ்மென்ட்  படித்துக்கொண்டிருக்கிறார்.  அதோடு, ‘ஸ்கெட்ச் கரியர் பெங்களூர்’ நிறுவனத்தில் போட்டோகிராபி பயிற்சியாளராக வும் இருக்கும் ஸ்வாதி, பெங்களூரு மாடல்களுடன் போட்டோஷூட்டில் பிஸி. நேரம் கிடைக்கும்போது பெண்களுக்கு இலவச போட்டோகிராபி வகுப்புகளும் எடுக்கிறார்.

p50a.jpg

p50b.jpg

``மீனுக்காக ஒற்றைக்காலில் காத்திருக்கும் கொக்குபோல, நான் எதிர்பார்க்கிற அந்த ஒரு ஷாட் கிடைக்க நாள் கணக்காகவும் காத்திட்டிருப்பேன்’’ என்கிற ஸ்வாதி, தன் டிராவல் போட்டோகிராபி புகைப்படங்களுடன் தன் எழுத்திலேயே வெளியான கட்டுரைகளையும் காட்டுகிறார். ஆம்... இந்தப் பெண் பேனாவும் பிடிக்கிறார்.

``பள்ளி, கல்லூரிக் காலங்களில் நான் நிறைய நாடகங்களில் நடிச்சிருக்கேன். எதையாவது எழுதிட்டிருப்பேன். மீடியாதான் என் இலக்கா இருந்துச்சு. ப்ளஸ் டூ லீவில் போட்டோகிராபி வொர்க்‌ஷாப்ல கலந்துகிட்டேன். எழுத்தைப்போலவே கேமராமீதும் எனக்கு ஆர்வம் அதிகமாச்சு.

வித்தியாசமான போட்டோக்களுக்காக டிராவல் பண்ண ஆரம்பிச்சேன். குட்டிக் குட்டி கிராமங்கள் உள்பட தமிழ்நாடு முழுக்கப் பயணிச்சிருக்கேன். அந்த மக்களோட வாழ்க்கை முறை, பாரம்பர்யத்தையெல்லாம் கேமராவில் பதிவு செய்வதோடு, என் மனதில் குறிச்சுக்கிட்டேன். புகைப்படங்களுடன் என் எழுத்திலும் அவற்றையெல்லாம் வெளிப்படுத்தினேன்’’ என்பவர், தன் வொர்க்கிங் ஸ்டைல் பற்றியும் பகிர்ந்தார்.

``வழக்கமா போட்டோகிராபர்கள் காலையில் 6 மணியிலிருந்து 9 மணிவரை, மாலையில் 3 மணியிலிருந்து 6 மணி வரை உள்ள `கோல்டன் ஹவர்ஸ்’ல புகைப்படங்கள் எடுத்துக் குவிப்பாங்க. என்னைப் பொறுத்தவரை புகைப்படத்துக்கு லைட்டிங் மட்டுமே இலக்கணமில்லை. ஒவ்வொரு படத்திலும் ஒரு ஜீவன் இருக்கணும்னு நினைப்பேன். அதில் ஒன்லைன் ஸ்டோரி இருக்கணும். கேமராவை ரெடி செய்றதுக்கு முன்னாடி, அந்த மனுஷங்ககிட்ட நிறைய பேசி அவங்களோட உணர்வுகளைப் பெற நம்மைத் தயாராக்கிக்கணும். அதனாலதான் திருமண விழா புகைப்படங்களைக்கூட டாக்குமென்டரி உணர்வு களோட கோவையாகவும் கலவையாகவும் என்னால எடுக்க முடியுது’’ என்ற ஸ்வாதி, விவசாயிகள் முதல் மாடல்கள் வரையிலான தன் கேமரா அனுபவங்களைப் பகிர்ந்தார்.

p50c.jpg

p50d.jpg

``சமீபத்தில் கும்ப கோணத்துல விவசாயிகள் வாழ்க்கையைப் பற்றிய ஒரு போட்டோஷூட்டுக்காகப் போயிருந்தேன். உலகத்துக்கே சோறு போடுற அவங்க வீட்டுக்குழந்தைகள் எலும்பும் தோலுமா இருந்ததைப் பார்த்தப்போ மனசுக்கு ரொம்ப வேதனையாகிடுச்சு. ‘நீங்க எடுத்துட்டுப் போற போட்டோவைப் பார்த்தாச்சும் அரசாங்கம் எங்களுக்கு உதவ வருதான்னு பாப்போம்மா...’னு அவங்க சொன்னப்போ, என் பொறுப்பை இன்னும் அழுத்தமா உணர்ந்தேன். என் புகைப்படங்களால் அப்படி ஒரு நல்லது நடந்தா அதைவிட நிறைவு வேறில்லை எனக்கு.

p50e.jpg

பணிபுரியும் நிறுவனத்தில் நான் எடுக்கிற போட்டோகிராபி வகுப்புகளில் ஆண்கள்தான் அதிகளவில் இருக்காங்க. பெண்கள் அபூர்வமாகத்தான் வர்றாங்க. ஆனா, வாசல்ல கோலம் போடுறதுல தொடங்கும் கலை உணர்வு என்பது இயல்பில் பெண்களுக்கே அதிகம். அவங்க போட்டோகிராபியில இறங்கினா க்ரியேட்டிவிட்டியில் ஆண்களைவிடக் கலக்குவாங்க. அதனால, வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் பெண்களுக்கு இலவச போட்டோகிராபி வகுப்புகள் எடுக்கிறேன். மாடல் போட்டோகிராபி செய்யும்போது அந்த மாடல்ஸ், ‘ஒரு பெண் போட்டோகிராபர்கிட்ட வேலைபார்க்கிறதைப் பாதுகாப்பா உணர்றோம்’னு சொல்வாங்க. அதனால இங்க எல்லா துறைகளிலும் பெண்கள் பெருகும்போது, ஆண் மையச் சூழல்ல அவங்கச் சந்திக்கிற பிரச்னைகள் குறையும்னு நம்புறேன்’’ என்பவர், தன் எதிர்காலத் திட்டங்களைக் கூறும்போது குரலில் உற்சாகம் பொங்குகிறது...

p50f.jpg

``பக்காவா ஒரு போட்டோ ஸ்டுடியோ ஆரம்பிக்கணும். ஃபேமிலி போட்டோ எடுக்க வர்றவங்களுக்கு கான்செப்ட் போட்டோகிராபி பண்ணிக்கொடுக்கணும். கிராஃபிக் டிசைன், போட்டோகிராபி பயிற்சி வகுப்புகள் எடுக்கணும். என் ஸ்டுடியோவில் பெண்களைப் பெரும்பான்மையா பணியமர்த்தணும். இப்படியெல்லாம் நான் தன்னம்பிக்கையுடன் யோசிக்க என் அம்மாதான் காரணம். எனக்குக் கிடைக்கிற பாராட்டுகள் எல்லாமே ஓவர் டு அம்மா” என்று தன் அம்மா உமாதேவியைக் கட்டிக்கொள்கிறார் ஸ்வாதி!


p50g.jpg

‘`அம்மாதான் எல்லாம்!”

ஸ்வாதியின் அம்மா உமாதேவி, ஒரு சிங்கிள் மதர். ஓவியம், ஆடை வடிவமைப்பு என்று கலக்குபவர். தன் மகளின் ஆசைக்கு அணைபோடாத அம்மா. ``சமுதாயத்துல வித்தியாசமான ஒரு பாதையில நடைபோடுற பெரும்பாலான பெண்களுக்கு முதுகில் தட்டிக்கொடுத்து முன்னேறிச் செல்லச் சொல்லும் வீடு கிடைச்சிருக்கும். இங்கே என் அம்மாதான் என் வீடு... என் உலகம்’’ என்கிறார் ஸ்வாதி.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

முகபாவங்களின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன்களை நாய்கள்

  • தொடங்கியவர்

வாட்ஸ்அப் கலக்கல்: கடன் நட்பை முறிக்குமா?

 
memes5%202
1
3
Morning%20rice
IMG-20171016-WA0007
memes1
memes13
memes6
  • தொடங்கியவர்

இது இயற்கையின் தீபாவளி... இன்றிரவு மிஸ் பண்ணிராதீங்க! #Orionid

 
 

ஓரியான் விண்கற்கள் பொழிவு Orionid

இந்தியா தீபாவளியைக் கொண்டாடி ஓய்ந்திருக்கிறது. அடுத்து இயற்கை கொண்டாடப்போகிறது. இந்தியாவில் மட்டும் இல்லை; உலகம் முழுவதும். இயற்கை ஒரு பேரதிசயம்தான். அது எப்பொழுதாவது தனது அழகை வெளிக்காட்டும். அதுவும் பரந்த ஆகாய வெளியில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வும் நமக்கு பரவச அனுபவத்தை அள்ளிக்கொடுக்கும். அப்படி ஒரு  நிகழ்வு இன்று முதல் அடுத்த இரண்டு நாள்களுக்கு நடைபெற இருக்கிறது. ஓரியானிட் (Orionid) விண்கற்கள் பொழிவு எனப்படும் இதை வரும் 23-ம் தேதி வரை இரவு வானத்தில் காணமுடியும்.

 

எப்படி ஏற்படுகிறது இந்த விண்கற்கள் பொழிவு:

ஓரியான் விண்கற்கள் பொழிவு


இதன் வரலாறு ஹேலி வால்நட்சத்திரத்தில் இருந்து தொடங்குகிறது. நம்மில் பலரும் ஹேலி வால்நட்சத்திரம் பற்றிய தகவல்களை கேள்விப்பட்டிருக்கக்கூடும். வான்வெளியில் சுற்றிவரும்  ஹேலி வால்நட்சத்திரம் 75 வருடங்களுக்கு ஒரு முறை நமது சூரிய மண்டலத்தில் நுழையும். இது கடந்த 1986-ம் ஆண்டு நமது சூரிய மண்டலத்தில் தென்பட்டது. அப்பொழுது பூமியில் இருந்தும் பார்வைக்கு புலப்பட்டது. ஹேலி வால்நட்சத்திரம் 2061-ம் ஆண்டில் மீண்டும் நமக்கு காட்சியளிக்கும்.

ஹேலி வால்நட்சத்திரம் மட்டுமின்றி இதுபோன்ற பல வால்நட்சத்திரங்கள் அனைத்தும் ஒரு பாதையில் பயணிக்கும்போது தனது வழியில் பெரும் சிதறல்களை விட்டுச்செல்லும். வால்நட்சத்திரங்களின் சிதறல்கள் இருக்கும் பாதையில் பூமி பயணிக்கும் வேளையில் அதன் சிதறல்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்பொழுது விண்கற்கள் பொழிவு ஏற்படும். அப்படி தற்பொழுது ஹேலி வால்நட்சத்திரத்தின் பாதையில் நுழையவிருக்கிறது பூமி. அப்பொழுது ஹேலி வால்நட்சத்திரத்தின் சிதறல்கள் வளிமண்டலத்தில் நுழையும். இதுபோன்ற சமயங்களில் சிதறல்கள் வளிமண்டலத்தில் நுழைவது தொடர்ச்சியாக நிகழும்.


எப்பொழுது காண முடியும்:

ஓரியான்


ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தின் 20-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை இரவு நேரங்களில் ஓரியானிட் விண்கற்கள் பொழிவை காண முடியும். நள்ளிரவு 11.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை ஒவ்வொரு நாளும் இதைக் காணலாம். 21-ம் தேதி இந்தப் பொழிவு அதிக அளவில் இருக்கும். நள்ளிரவு வானத்தில் தூசிகளும் அதிகமான வெளிச்சம் இல்லாத தெளிவான வானத்தில் இதைக் காண முடியும். வால்நட்சத்திரத்தின் சிதறல்கள் அதிகபட்சமாக  238,000 கி.மீ வேகத்தில் வளிமண்டலத்தில் நுழையும். அப்படி நுழையும்பொழுது காற்று உராய்வின்பொழுது ஏற்படும் வெப்பத்தின் காரணமாக எரிந்து சிதறும். அது நம் கண்களுக்கு வானவேடிக்கைபோல தெரியும்.

தற்போதைய நிலையில், அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் 20 முதல் 25 வரையிலான எண்ணிக்கையில் சிதறல்கள் வளிமண்டலத்தில் நுழையும் வாய்ப்பு இருக்கிறது. 

NASAVerifizierter Account @NASA 13 Std.vor 13 Stunden
 
 

Be dazzled by the Orionid meteor shower, peaking Oct 20-21! Watch before dawn in a dark area. May see ~20 meteors/hr http://go.nasa.gov/2xVSOPr DMn51zOXkAAztL7.png

 
 
நகர்ப்புறங்களில் இருந்து வெளிப்படும் அதிக வெளிச்சத்தால் இதைப் பார்ப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கும். எனவே, கிராமப்பகுதிகளில் இருப்பவர்கள் இதைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதை வெறும் கண்களிலேயே நம்மால் பார்க்க முடியும் இதற்குத் தனியாக தொலைநோக்கிகள் எதுவும் தேவைப்படாது. அதேபோல இதைப் பார்ப்பதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு கிடையாது.
 

ஒரு வருடத்தில் இது மட்டுமின்றி இதுபோல பல விண்கற்கள் பொழிவுகள் வெவ்வேறு மாதங்களில் நிகழ்கின்றன. இதற்கு முன்னால் இதுபோன்ற ஒன்றை பார்த்திராதவர்களுக்கு இது நிச்சயமாக ஒரு புது அனுபவமாக இருக்கும். தீபாவளியன்று வான வேடிக்கைகளை ரசித்திருப்போம். அதேபோல இயற்கை நிகழ்த்தும் இந்த வானவேடிக்கையும் பார்த்துவிடுங்கள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஒட்டுமொத்த #பிக்பாஸ் பிரபலங்களையும் விஜய் நட்சத்திரங்களையும் வறுத்தெடுத்த தீவிர ரசிகன்!

  • தொடங்கியவர்

எல்லோருக்குமான ஓர் இடம்

 

 
One%20Pager%20-%20Thaalvaaram01

தாழ்வாரம் இல்லாமல் அந்தக் காலத்தில் வீடுகள் இருந்ததில்லை, ஆனால், தாழ்வாரத்துக்கு இந்தக் கால வீடுகளில் இடமே இல்லை! பள்ளிக்கூடம், கல்லூரி, அரசு அலுவலகம், வணிக வளாகம் ஆகிய இடங்களில் மட்டும் அதிர்ஷ்டவசமாகச் சில தாழ்வாரங்கள் இக்காலத்தில் அமைந்துவிடுகின்றன.

வீடுகள் அனைத்தும் அடுத்தடுத்து வரிசையாகக் கட்டப்பட்ட காலத்தில், வீடுகளின் முகப்பில் ஓடுகளைச் சரித்து இறக்கி, தூண்களால் தாங்கிப் பிடிக்குமாறு கட்டுவார்கள். அந்த இடம்தான் தாழ்வாரம். மேலே கூரை, வீதிப் க்கம் திறந்தவெளி என்ற அமைப்புடன் தாழ்வாரம் அமைந்திருக்கும். பெரும்பாலான வீடுகளில் தாழ்வாரப் பகுதியில் திண்ணைகளும் அமைக்கப்பட்டன.

புதுச்சேரியில் எல்லா வீடுகளின் முன்புறத்திலும் தாழ்வாரம் அமைத்துக் கட்டுவதைப் பொதுவான மரபாக வைத்திருந்தார்கள். மத்தியதர வர்க்கத்தினர் கட்டும் வீடுகளில் தாழ்வாரமும் அதன் கீழ் திண்ணையும் நிச்சயம் இருந்தன. சில வீடுகளில் தாழ்வாரங்களில் வேய்ந்துள்ள ஓடுகளைச் சுண்ணாம்புக் காரையால் மெழுகி மறைத்திருப்பார்கள். ஓடுகளைக் குரங்குகள் பிய்த்து கலைத்துவிடாமலிருக்க இந்த ஏற்பாடு.

One%20Pager%20-%20Thaalvaaram02
 

வீடுகளுக்கு வரும் நண்பர்கள், உறவினர்கள், விருந்தினர்கள் அமர்ந்து பேசவும் மதிய வேளைகளில் உண்ட பிறகு இளைப்பாறவும் தாழ்வாரமும் அதன் கீழுள்ள திண்ணையும் உகந்தவை. வெயிலோ மழையோ நேரடியாக மேலே விழாமல் காக்கக்கூடியவை. வேடிக்கை பார்ப்பதற்குத் தாழ்வாரமும் திண்ணையும் நல்ல தோது.

‘திண்ணை என்பது தெருவில் உயர்ந்தது’ என்ற (கவிதை!) விளக்கம் ஒன்று போதும். தாழ்வாரம் என்பது நான்கு புறங்களிலும் சுவர்களற்ற வரவேற்பறை, மூத்தவர்களின் விவாதக் களம், குழந்தைகளின் படிப்பறை, மூணு சீட்டு முதல் ஆடு-புலி ஆட்டம்வரை ஆடுவதற்கான மனமகிழ் மன்றம், தலைச்சுமையாகக் காய்கறி, பழங்கள், புடவை உள்ளிட்ட துணிகளைக் கொண்டுவரும் வியாபாரிகள் தலைச்சுமையை இறக்கிவைத்து சாவகாசமாக வியாபாரம் செய்ய சந்தை மேடை- இப்படிப் பல வகையிலும் பயன்பட்ட அபூர்வ அமைப்பு.

திண்ணையில் தலையணையைப் போல் சற்று உயர்த்திக் கட்டிய சிமெண்ட் அல்லது காரை திண்டும் இருக்கும். தாழ்வாரத்தை ஒட்டிய சுவரிலேயே சிறிய அல்லது பெரிய ஜன்னல்களை அமைத்து வீதியோடு தொடர்பு வைத்துக்கொள்வதும் உண்டு. தாழ்வாரத்தின் சிறப்பே அது வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு வயதினருக்கு வெவ்வேறு வகையில் பயன்பட்டதுதான்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

29 ஆண்டுகளாக கடலில் சுற்றி கரை ஒதுங்கிய கடிதம்: ஜோர்ஜியாவில் ஆச்சர்யம்

 

29 ஆண்டுகளாக கடலில் சுற்றி கரை ஒதுங்கிய கடிதம்: ஜோர்ஜியாவில் ஆச்சர்யம்

சிறுமி எழுதிய ஒரு கடிதம் ஒன்று 29 ஆண்டுகளாக கடலில் சுற்றி தற்போது ஒரு தம்பதியினரின் கையில் கிடைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிரண்டா என்னும் சிறுமி ஒருவர் 29 ஆண்டுகளுக்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதி கடலில் விட்டுள்ளார். இத்தனை வருடமாக கடலில் சுற்றிய அந்த கடிதம் தற்போது வேறொருவரின் கைகளில் கிடைத்துள்ளது.

1988 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் எடிஸ்டோ என்னும் கடற்கரைக்கு சென்ற 8 வயதான மிரண்டா என்னும் சிறுமி தன் வீட்டு முகவரியை ஒரு காகிதத்தில் எழுதி பாட்டிலுள் வைத்து கடலில் வீசியுள்ளார். இந்த கடிதமானது தற்போது 29 வருடங்களுக்கு பிறகு ஜோர்ஜியாவில் உள்ள ஒரு கடற்பகுதியில் கிடைத்துள்ளது. இந்த கடிதத்தை கைப்பற்றிய டேவிட், லிண்டா தம்பதியினர் சமுகவலைத்தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த கடிதம் எழுதிய மிரண்டா தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

லாக்மே ஃபேஷன் வீக் 2017 பாலிவுட் தேவதைகளின் ராம்ப் வாக்!

 

 
0001sradha_kaboor

 

சென்சேஷனலான திரைப்படங்கள் மூலமாக மட்டுமல்ல, வர்ண ஜாலத்தில் மெய் மறக்கச் செய்யும் அனுபவங்களுடன் தனது ஃபேஷன் ஷோக்களுக்காகவும் புகழ்பெற்றது பாலிவுட். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற லாக்மே ஃபேஷன் வீக் 2017 க்காக கம்பீரமான சிவப்பு, அமர்த்தலான கருப்பு, அசர வைக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நிற ஷேட்களுடனான ஆடைகள், மிருதுவான ஐவரி, குளுமை தரும் ஐவரி என அத்தனை நிறங்களிலும் பறந்து விரிந்த கவுன்களை ஆடையென அணிந்து வந்து அனைவரது தூக்கத்தையும் கெடுத்திருக்கிறார்கள் என்று தான் எண்ணிக் கொள்ள வேண்டும். கீழே லாக்மே ஃபேஷன் வீக்கில் பாலிவுட் தேவைதைகள் ராம்ப் வாக்கிய... அதாவது ஒய்யார நடையிட்ட புகைப்படங்களைக் கண்டால், உங்களுக்கே புரியக் கூடும்.

நவீன ரகத்தில் வடிவமைக்கப்பட்ட டிஸைனர் ஆடைகளுக்காக மட்டுமல்ல அவற்றில் பயன்படுத்தப்பட்ட கிரியேட்டிவ்வான வண்ணங்களின் சங்கமமும் கூடத்தான் லாக்மே ஃபேஷன் 2017... என்பதை உணர்த்தும் வகையில் சுமார் 14 மாடலிங் அழகிகள் மேடையில் அவரவர் பிரத்யேக டிஸைனர்கள் வடிவமைத்த ஆடைகளுடன் படு ஸ்டைலாக ராம்ப் வாக் செய்தனர். மாடலிங் அழகிகளோடு, பாலிவுட் ஸ்டார்களும் கண்களைக் கொள்ளை கொண்டது அழகு!

1. வண்ணங்களின் மீதான காதல்...

0000_colour_love.jpg

2. வாணி கபூர்:

000_vani_kaboor.jpg

லாக்மே ஃபேஷன் வீக் 2017 க்காக படு ஃப்ரெஷ் ஆன இளஞ்சிவப்பு நிற வெட்டிங் கவுனில் வலம் வரும் வாணி கபூர்.

3. நர்கிஸ் ஃபஹ்ரி...

000_nargis_fakri.jpg

டிஸைனர் அனுஸ்ரீ ரெட்டியின் கைவண்ணத்தில் உருவான, மென்மையான மஞ்சளில், தங்க நிறச் சரிகை வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான வெட்டிங் கவுனில் வலம் வந்தார் நடிகை நர்கிஸ் ஃபஹ்ரி.

4.திஷா பதானி...

 

000_disha_patani.jpg

டிஸைனர் ரீத்து குமாரின் கைவண்ணத்தில் உருவான வெள்ளையில் இளஞ்சிவப்பு பூக்கள் எம்பிராய்டரி செய்யப்பட்ட கேஷுவல் கவுனில் திஷா பதானி.

5. சித்ராங்கதா சிங்... 

000_chitrangada_singh.jpg

நேஹா அகர்வாலின் பிரத்யேக டிஸைனான பழங்குடித் தேவதைத் தனமான ஒரு அடர் நீல வண்ண நீண்ட கவுனில் ஓவியம் போல ஒய்யாரமாக வலம் வந்தார் நடிகை சித்ராங்கதா சிங்...

6. ஸ்ரீதேவி & குஷி கபூர்...

000_sridevi_kushi.jpg

தங்களது குடும்ப நண்பரான மனிஷ் மல்ஹோத்ராவின் ஆர்ப்பாட்டமில்லாத ஃபுளோரல் கவுனில் குஷி கபூரும், ஐவரி நிற பிரின்ஸஸ் டாப் உடையில் ஸ்ரீதேவியும் மனிஷுடன் கை கோர்த்து ராம்ப் வாக் செய்தது கம்பீர அழகுடனிருந்தது.

7. ஷ்ரத்தா கபூர்...

000shradha_kaboor.jpg

ராகுல் மிஸ்ரா வடிவமைத்த செர்ரி பிளாஸம் நிறத்து பார்ட்டி வியர் நீளக் கவுனில் ஒரு தேவதையாகவே ஜொலித்தார் நடிகை ஷ்ரத்தா கபூர்...

8. மலாய்க்கா அரோரா...

 

000_malaika_arora_khan.jpg

 

 

 

 

 

ரித்தி மெஹராவின் முழு அடர் சிவப்பு நிற டிஸைனர் உடையில் மலாய்க்கா அரோரா ராம்ப் வாக்கிய ஒவ்வொரு நொடியும் பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. 

9. க்ரிதி செனான்...

0000_kriti_sanon.jpg

டிஸைனர் அர்பிதா மேதாவின் கருப்பும், ரோஸும் கலந்த லெஹங்கா உடையில் மாடல் க்ரிதி செனான் நிச்சயம் அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டிருப்பார் என நம்பலாம்.

10. கல்கி கோச்சலின்...

000_kalki_kochelin1.jpg

 

டிசைனர் நிகிதா மாசல்கரின் ஐவரி நிற பார்ட்டி அவுட்ஃபிட்டில் படு கிளாமர் லுக்கில் அசத்தினார் நடிகை கல்கி கோச்சலின்.

11. இலியானா டி குரூஸ்...

 

0000_illeana_d_cruz.jpg

டிஸைனர் நான்ஸி லுகருவாலாவின் அடர் கறுப்பு நிற வெட்டிங் கவுனில் இழையோடிய தங்கம் மற்றும் வெள்ளி நிறப் பூச்சரிகை வேலைப்பாடு கொண்ட ஆடையில் பார்வையாளர்களை மெர்சலாக்கினார் நடிகை இலியானா டி குரூஸ்.

12. தியா மிர்ஸா...

000_diya_mirza.jpg

டிஸைனர் குஸும் மற்றும் கரிஷ்மா லுகருவாலாவின் வடிவமைப்பில் தயாரான ஃபேபியான லேபிளுடன் கூடிய கிரீமி நிற கவுனில் என்றும் 16 ஆக ஒட்டுமொத்த பார்வையாளர்களின் விருப்பத்தையும் அள்ளிக் கொண்டார் நடிகை தியா மிர்ஸா.

13. பூமி பெமினேஹர்...

000_bhumi_pednekar.jpg

ருசேரு லேபிளின் கீழ் வடிவமைக்கப்பட்ட அடர் சிவப்பு நிற உடையுடன் கம்பீரமாக வலம் வந்த நடிகை பூமி பெட்னேஹர் தான் ஷோ டாப்பராம்.

14. அதிதி ராவ் கிதாரி...

000_aditi_rao.jpg

ஜெயந்தி ரெட்டியின் ராயல் கிரியேஷன் சார்பாக வடிவமைக்கப் பட்ட கரும்பட்டும், வெள்ளிச்சரிகை வேலைப்பாடுகளும் ஊடாடிய நீண்ட கவுண் அதிதியின் அழகைப் பன்மடங்காக்கிக் காட்டியது.

15. ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்...

கடைசியாக ராம்ப் வாக் செய்த நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் டிஸைனர் மனிஷ் மல்ஹோத்ராவின் கருப்பு நிற ஃஃபுளோரல் டிஸைன் கவுனில் ராம்ப் வாக் செய்த விதம் பலரையும் ஈர்ப்பதாக இருந்தது.

000_aditya-jacqueline.jpg

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

நாசாவின் அப்பல்லோ-7 விண்கலம் அட்லாண்டிக் கடலில் பத்திரமாக இறங்கிய தினம் (அக்.22, 1968)

 

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தால் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டமான அப்பல்லோ திட்டத்தில் 7-வது விண்கலம் பூமியை 163 தடவைகள் சுற்றிய பினன்ர் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கிய தினம்.

 
 
நாசாவின் அப்பல்லோ-7 விண்கலம் அட்லாண்டிக் கடலில் பத்திரமாக இறங்கிய தினம் (அக்.22, 1968)
 
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தால் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டமான அப்பல்லோ திட்டத்தில் 7-வது விண்கலம் பூமியை 163 தடவைகள் சுற்றிய பினன்ர் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கிய தினம்.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

* 1692 - மந்திரம் செய்ததற்காக அமெரிக்காவில் வழங்கப்பட்ட கடைசி தூக்கு தண்டனை.

* 1875 - அர்ஜெண்டினாவுக்கான முதலாவது தொலைத்தொடர்பு இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.

* 1964 - பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவுச் செய்தது.

* 2001 - பி.எஸ்.எல்.வி. சி-3 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

புதுமைப் பயணம்: நடுக்காட்டில் ஒரு நட்சத்திர உலா!

 

 
17chgowbubles%20of%20borbeaux

ஓர் அடர்ந்த காடு. அந்தக் காட்டுக்குள் அச்சமின்றி இரவில் தங்க வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என்னது, இரவில் காட்டுக்குள் இருப்பதா என்றுதானே எதிர்க்கேள்வி கேட்பீர்கள். ஆனால், பிரான்சில் அப்படி ஒரு வாய்ப்பை விரும்பி கேட்டுச் செல்கிறார்கள். எதற்காகத் தெரியுமா? நள்ளிரவில் நட்சத்திரங்களையும் முழுநிலவையும் ரசிப்பதற்காக செல்பவர்களின் பட்டியல் பிரான்சில் அதிகரித்து வருகிறது. இப்படி வருபவர்களின் கனவை நனவாக்க ‘தி பப்பிள்ஸ் ஆஃப் போர்தோ’ (The Bubbles of Bordeaux) என்ற புதிய ‘அவுட்டோர் கேம்பிங்’ யோசனையும் பிரான்சில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த ‘கேம்பிங்’ பயணம் என்பது குமிழுக்குள் வசித்தபடி இயற்கையை ரசிப்பது. குமிழுக்குள் வசிப்பதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது இந்தப் புதுமையான பயணம். பிரான்ஸ் நாட்டின் போர்தோ, செயின்ட் எமிலியோன் காட்டுப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதுமை கேம்பிங், வெளிப்புறம் முழுமையாகத் தெரியும்படியான குமிழுக்குள் இருந்தபடி நட்சத்திரங்களை ரசிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு பாதுகாப்பாகத் தூங்கும் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. குளியலறை, மின்சாரம் போன்ற வசதிகளும் இந்தக் குமிழ்களுக்குள் இருக்கின்றன. சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆடம்பர வசதிகளுடன் இவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தக் குமிழ்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில், சுவையான ஒயின்களும் திராட்சைகளும் பிரபலம். அதனால், இங்கு அமைக்கப்பட்டுள்ள ஐந்து குமிழ்களுக்கும் ‘காபர்நெட்’, ‘மெர்லோட்’, ‘முஸ்காடெல்’, ‘வெர்டோட்’, ‘செமிலோன்’ என்ற பிரபல ஒயின்கள், திராட்சை வகைகளின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல், பாதி வெளிப்படைத் தன்மைவாய்ந்த குமிழ்களும் உள்ளன. இரண்டில் விருப்பமானவற்றைப் பயணிகள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இங்கு தங்கும் பயணிகளுக்குச் சுவையான பிரெஞ்சு உணவுகள் பரிமாறப்படுகின்றன. இந்த போர்தோ குமிழ்களில் ஒரு நாள் தங்குவதற்கான கட்டணம் 180 யூரோ (1.37 லட்சம் ரூபாய்).

பிரான்சில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் குமிழ்களில் நட்சத்திரங்களை ரசிக்கும் பயணம் பிரபலமாகிக்கொண்டிருக்கிறது. தெற்கு பிரான்சில் போன்ட்-செயின்ட்-எஸ்ப்ரிட்டில் அமைந்திருக்கும் ‘மேஸோன் புல்’ (Maison Bulles) குமிழ்களில் தொலைநோக்கியில் நட்சத்திரங்களை ரசிக்கிறார்கள். ஐஸ்லாந்தில் பயணிகள் ‘பப்பிள் லாட்ஜ்’ஜில் (Bubble Lodge) ‘அரோரா பொரியலிஸ்’ என்னும் துருவ ஒளித் தோற்றத்தை ரசிக்கிறார்கள். தெற்கு பின்லாந்தில் அமைந்திருக்கும் நெல்லிம் வைல்டர்நெஸ் ஹோட்டலில், பயணிகள் கண்ணாடிக் குமிழ்களில் துருவ ஒளித் தோற்றத்தை ரசிக்கிறார்கள்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஆரோக்கியம் அளிக்கும் செடிகள்

 
shutterstock527880916

வீடு என்றால் முற்றத்துச் செடிகளையும் சேர்த்ததுதான். சிறிய வீடென்றாலும் கழிவுநீர் செல்லும் வழியில் செடிகள் இல்லாமல் இருக்காது. அதனால் முன்பெல்லாம் வீடு கட்டும்போது செடி கொடிகள் வைப்பதற்குக்கென்று இடம் விட்டுத்தான் வீடு கட்டுவார்கள். பின்வாசல் முற்றத்தில் காய்கறித் தோட்டம் பெரும்பாலான வீடுகளில் இருக்கும். இன்றைக்குள்ள இடப்பற்றாக்குறையால் வாங்கும் இடத்தை முழுவதும் ஆக்கிரமித்து வீடு கட்ட வேண்டியிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் மாடியில் தோட்டம் அமைத்துக்கொள்கிறோம்.

வீட்டுக்குள்ளே வளரக்கூடிய சில செடிகளும் இன்றைக்கு நர்சரிகளில் கிடைக்கின்றன. வீட்டை அலங்கரிப்பதோடு அல்லாமல் அவை உடலுக்கும் மனத்துக்கும் ஆரோக்கியத்தையும் அளிக்கின்றன.

shutterstock598860164
 

அவற்றுள் பிரசித்தி பெற்றவை ஸ்பைடர் பிளாண்ட் , ஃபேர்ன்ஸ், ஐவி, கமுகு மரம், கோல்டன் போதோஸ், கற்றாழை, பீஸ் லில்லி, மார்ஜினட்டா, ஸ்நேக் பிளாண்ட், சைனீஸ் எவர்க்ரீன் ஆகியவை. இந்தச் செடிகள் வீட்டில் உள்ள மாசுக்களைச் சுத்தமாக வெளியேற்றும். வீட்டுக்கு அழகையும் கொடுக்கும்.

இவற்றுக்குக் குறைவாகத் தண்ணீர் விட்டாலேயே போதுமானது. தண்ணீரைத் தெளித்தாலே போதும். வாரம் ஒருமுறை மிதமான சூரிய ஒளி படுமாறு பால்கனியிலேயோ மொட்டை மாடியிலோ வைத்தால் போதும்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்

 

பெண்களின் முகத்தின் குறிப்பறிந்து அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை நாம் அறிய முடியும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

 
 
பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்
 
‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். அதாவது நமது மனதின் நிலையை அப்படியே படம் பிடித்துக்காட்டும் கண்ணாடி தான் நமது முகம். ஒருவர் சந்தோஷமாக இருந்தால், அவரது முகம் மலர்ச்சியாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் புன்னகை நிறைந்ததாக இருக்கும். அதுபோல் அவர் சோகமாக இருந்தால் அவரது முகம் ‘களை இழந்து’ சோகத்தை வெளிப்படுத்துவதாக காட்சியளிக்கும்.

பெண்களின் முகத்தின் குறிப்பறிந்து அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை நாம் அறிய முடியும். அதுபோல ஒருவரின் கண்களின் மூலமும் அவர் என்ன மனநிலையில் இருக்கிறார், அவர் பேசுவது உண்மையா? பொய்யா? என்பது போன்ற தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.

ஒருவர் தனது உடல்மொழிகளை மறைத்தாலும் கண்களின் இயல்பை மறைக்க முடியாது என்பது மனநல அறிஞர்களின் கருத்தாகும். ஒவ்வொரு உணர்ச்சிகளுக்கும் ஏற்ப கண்களில் உள்ள விழித்திரை அகலாகமாக விரிகிறது. காதல் வசப்பட்டிருப்பவர் கண்களில் அன்பும், காமமும் வெளிப்படும்.

201710221214071958_1_expressfeelings._L_styvpf.jpg

மகிழ்ச்சியாக இருப்பவர் கண்கள் சிரிப்பது போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும். சோகத்தில் இருப்பவர் கண்கள் கலங்கிப்போய் சுருங்கி இருக்கும். பயத்தில் இருப்பவர் கண்கள் வெளிறிப்போய் காட்சியளிக்கும். இவ்வாறு ஒவ்வொரு உணர்ச்சிகளுக்கும் ஏற்ப கண்களும் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

அந்த கண்களின் மாறுபாட்டிற்கு ஏற்ப முகமும், உடலும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. நாம் ஒருவரை சந்தித்த உடன் அவர் முகத்தை வைத்தே, ‘என்ன இன்று மிகவும் உற்சாகமாக இருக்கிறீர்களே? என்ன விசேஷம்?’ என்று கேட்பதுண்டு. அதுபோல அவரது முகம் வாட்டமாக இருந்தால், ‘என்ன பிரச்சினை?’ என்று விசாரிப்பதும் உண்டு.

எனவே தான் ஒருவரிடம் ஒரு காரியத்திற்காக செல்லும் போது முதலில் அவரது முகத்தைப்பார்த்து அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டு அதற்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும் என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள்.

குழந்தைகளே, உங்கள் பெற்றோரிடம் உங்களுக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றால், முதலில் அவர்கள் முகத்தைப்பார்த்து அவர்கள் மனநிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்படுங்கள்.
 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

ஐந்து முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ஒரே மேடையில்!

ஒரே மேடையில் ஐந்து முன்னாள் அதிபர்கள்படத்தின் காப்புரிமைREUTERS Image captionஒரே மேடையில் ஐந்து முன்னாள் அதிபர்கள்

இந்த ஆண்டு, அமெரிக்காவை புரட்டிப்போட்ட சூறாவளிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் கலைநிகழ்ச்சியில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஐந்து பேர் ஒரே மேடையில் கலந்துகொண்டனர்.

டெக்சஸ் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் பங்கேற்றனர்.

ஹார்வி, இர்மா மற்றும் மரியா சூறாவளிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நடத்தப்பட்ட `தி ஒன் அமெரிக்கன் அப்பீல்` என்ற இந்த நிகழ்ச்சி, இதுவரை, 31 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம், ஹார்வி சூறாவளியால் பில்லியன் கணக்கான டாலர் சேதம் ஏற்பட்டு, டெக்சஸ் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட போதே, இதற்கான முறையீட்டை தலைவர்கள் வைத்தனர்.

லேடி காகாபடத்தின் காப்புரிமைREUTERS

தற்போது, புளோரிடா, போர்ட்டோ ரீக்கோ மற்றும் வெர்ஜின் தீவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் இந்த திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது.

"முன்னாள் அதிபர்கள் என்ற முறையில், எங்கள் சக அமெரிக்கர்கள் மீண்டுவர நாங்கள் உதவ வேண்டும் என நினைத்தோம்", என்று முன்னாள் அதிபர் ஒபாமாவின் பதிவு செய்யப்பட்ட செய்தி மூலம், நிகழ்ச்சிக்கு செல்பவர்களுக்கு விளக்கினார்.

"மக்கள் இங்கு துன்புறுத்தப்படுகிறார்கள். ஒரு டெக்சஸ் வாசியாக கூறுகிறேன். இங்கு தண்ணீரை விட, நிறைய அன்பை டெக்சஸ் வைத்துள்ளது", என்றார் ஜார்ஜ் புஷ்.

நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு, தேசிய கீதத்திற்காக ஐந்து முன்னாள் அதிபர்களும் மேடையில் ஒன்றாக தோன்றினர்.

பின்னர், `அமெரிக்கர் என்பதில் பெருமைகொள்வோம்` என்ற லீ கிரீண் உட்டின் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியில் பாடகி் லேடி காகாவும் பங்கேற்று பாடினார்.

ஐந்து முன்னாள் அதிபர்கள்படத்தின் காப்புரிமைREUTERS

தற்போதைய அதிபர் டிரம்ப், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், இந்த நிகழ்ச்சியின் "சிறப்பான பணியைப் பாராட்டியும், தனது மிகுந்த நன்றிகளைத் தெரிவித்தும்" அவர் ஒரு செய்தி அனுப்பியிருந்தார்.

கடந்த வாரம், முன்னாள் அதிபர்கள் ஒபாமா மற்றும் புஷ் ஆகியோர் ஆற்றிய உரைகள், தற்போதைய அதிபர் டிரம்ப் மீதான மறைமுக விமர்சனமாகவே பார்க்கப்படுகின்றன.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

 

பெரு நாட்டில் இனிமேல் கஞ்சாவும் ஒரு மருந்து

  • தொடங்கியவர்

அரிய வகை பழங்கால பொருட்கள்

CORNERSHOP13

CORNERSHOP

 

 

CORNERSHOP2

CORNERSHOP3

 

CORNERSHOP6

 

CORNERSHOP7

CORNERSHOP8

 

விலை மதிப்பிட முடியாத வரலாற்று பொக்கிஷங்களை தற்போதுள்ள தலைமுறையினருக்கும் பார்ப்பதற்கு ஓர் அரிய வாய்ப்பு கிட்டியுள்ள வேளையில், பழங்காலப் பொருட்களை சேகரித்து, நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சேர்த்து பாதுகாத்து வருகிறோம்.

 

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

இளைஞர்களுக்குப் பஞ்சம்!

 

 
Bulgaria%20villa

ஆள் ஆரவாரமின்றி வெறிச்சோடிய ஒரு கிராமம்.

இளைஞர்கள் இல்லாத நாடு எப்படியிருக்கும்? இந்தக் கேள்விக்கான பதிலை அனுபவபூர்வமாக உணர வேண்டுமென்றால் பல்கேரியாவுக்குத்தான் செல்ல வேண்டும். ஏனென்றால், இளைஞர்களின் எண்ணிக்கை அங்கே அதலபாதாளத்தில் சென்றுவிட்டதால், என்ன செய்வதென்றே தெரியாத கவலையில் மூழ்கியிருக்கிறார்கள் அந்த நாட்டு சீனியர் சிட்டிசன்கள்!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பல்கேரியாவில் 1989-ம் ஆண்டு நிலவரப்படி மக்கள்தொகை 90 லட்சம். ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 70 லட்சமாகக் குறைந்துவிட்டது. வேலை தேடி இளைஞர்கள் அதிக அளவில் வெளிநாடுகளுக்குச் சென்றதே பல்கேரிய மக்கள்தொகை சரிவுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இளைஞர்கள் இல்லாத நாடு என்ன மாதிரியான பின்னடைவைச் சந்திக்கும் என்பதற்கு பல்கேரியா சிறந்த உதாரணமாக மாறிவிட்டது.

இன்றைய நிலையில், பல்கேரியாவில் உள்ள பெரும்பாலான கிராமங்கள், நிசப்தமாகக் காணப்படுகின்றன. திருமணம் செய்ய இளையோர் இல்லாததால், குழந்தை பிறப்பும் குறைந்துவிட்டது. தாங்கள் சிறுவர்களாக இருந்தபோது மக்கள் நிரம்பி வழிந்த கிராமங்களில், தற்போது பேச்சுத் துணைக்குக்கூட ஆள் இல்லையே என்கிற மனக்குறையில் இருக்கிறார்கள் சீனியர் சிட்டிசன்கள்.

பல்கேரியாவில் மக்கள்தொகை குறையக் குறைய, ஒவ்வொரு கிராமமும் தனித்தீவுபோல மாறி வருகிறது. சில ஊர்களில் வீதிக்கு ஒருவர் என்ற நிலையில் சில கிராமங்களில் மக்கள்தொகை குறைந்துவிட்டது. ஆட்கள் இல்லாததால் நிரந்தரமாகக் கடைகள்கூட இல்லை என்ற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. கிராம மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருள், மருந்து தேவைகளைப் பூர்த்திசெய்ய இலகுரக வாகனத்தின் உதவியுடன் நடமாடும் மளிகை மற்றும் மருந்துக் கடையைச் சில தன்னார்வலர்கள் நடத்துகின்றனர்.

Bulgaria%20populationn
 

ஒவ்வொரு கிராமமாகத் தங்கள் மளிகைக் கடையை ஓட்டிச் செல்லும் இவர்கள், அங்குள்ள மக்களுக்குத் தேவையான பொருட்களை ஓரளவு கட்டுப்படியாகும் விலைக்குக் கொடுக்கின்றனர். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, பல்கேரியாவில் உள்ள கிராமங்கள் ஒரு நூற்றாண்டுவரை பின்தங்கி விட்டதாகவே கருதப்படுகிறது.

பல்கேரியாவில் கோலோச்சிய கம்யூனிஸ்ட்கள், 1989-ல் வீழ்ச்சியைச் சந்திக்கத் தொடங்கிய பிறகு பல்கேரியா பாதிக்கப்படத் தொடங்கியது. கிராமங்களிலிருந்து வேலைவாய்ப்புக்காக மக்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்தனர். இதனால், கிராமங்களில் மக்கள்தொகை படிப்படியாகக் குறையத் தொடங்கி, தற்போது மிக மோசமான நிலையை எட்டியிருக்கிறது.

இளைஞர்களைக் கிராமங்களில் தக்கவைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளையும் பல்கேரியா அரசு எடுக்காமல் விட்டுவிட்டது. விளைவு, நாட்டின் வரலாறே தடம் தெரியாமல் அழித்துக்கொண்டிருக்கிறது. ஒரு புறம் மக்கள்தொகை குறைவு; இன்னொருபுறம் இளைஞர்கள் குறைவு என மத்தளம்போல இரண்டு பக்கமும் அடிவாங்கிக்கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால், இன்னும் 20 ஆண்டுகளில் பல்கேரியாவின் மக்கள்தொகை 50 லட்சத்துக்கும் இறங்கிவிடும் என்று அடிக்கப்பட்டுள்ள அலாரத்தால், அந்த நாடு ஆடிபோய்க்கிடக்கிறது.

இளையோர் இல்லாத நாடு தங்களின் அடையாளத்தை இழந்துவிடும் என்பதற்கு பல்கேரியா ஓர் உதாரணமாக மாறிவருகிறது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஐந்து முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ஒரே மேடையில்!

  • தொடங்கியவர்

பறவைக் கட்டிடங்கள்

15jkrMashhad%20City%20Entrance%20Iran

மாஷாட் சிட்டி, ஈரான்

இருபதாம் நூற்றாண்டுக்குப் பிறகு கட்டுமானத் துறையில் புதிய புதிய வடிவமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. வழக்கமான கட்டுமானத்துக்கு மாறாக பலவகையான உருவமைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டன.

         
15jkrAvis%20Magica%20Skyscraper%20Concep

அவிஸ் மேஜிகா, அமெரிக்கா

 

நொறுங்கிய வடிவமைப்பு, வளைவுக் கட்டிடம், வானுயர் கட்டிடம் போன்றவை அதற்கு உதாரணங்கள். இது வடிவற்ற வடிவம் (Deconstructivism) என அழைக்கப்பட்டது. பிரெஞ்சு தத்துவவியலாளர் ழாக் தெரிதா இதை உருவாக்கினார்.

15jkrBird-Shaped%20House%20Czech%20Repub

பேர்டு ஹவுஸ், சிலி

 

இந்தப் புதிய முறையில் பீட்டர் ஈஸ்மேன், ஃப்ராங்க் கெரி, ஷாகா ஹதித் ஆகிய முன்னணிக் கட்டிடக் கலைஞர்கள் கட்டிடங்களை எழுப்பினார்கள். இந்த வகையில் ஷூ தயாரிப்பு நிறுவனத் தலைமையகக் கட்டிடத்தை அதுபோல் ஷூ வடிவத்தில் உருவாக்கலாம்.

15jkrHouse%20on%20the%20Flight%20of%20Bi

ஃபிளைட் ஆஃப் பேரு, போர்ச்சுகல்

 

அதுபோல ஹைதராபாத்தில் உள்ள மீன் ஆராய்ச்சி நிறுவனக் கட்டிடம் மீன் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாதிரி விலங்குகள் உருவங்களிலும் கட்டிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

15jkrSantiago%20Calatravas%20Quadracci%2

சாண்டிகோ கலட்ரவாஸ் பெவிலியன், அமெரிக்கா

 

பறவை உருவில் உள்ள கட்டிடங்கள் அபூர்வமாக இருந்தன. இப்போது அந்த வடிவிலும் கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அம்மாதிரிக் கட்டிடங்களின் ஒளிப்படத் தொகுப்பு இது.

15jkrThe%20Birds%20Nest%20Beijing%20Nati

பேர்டு நெஸ்ட் ஸ்டேடியம், சீனா

15jkrWuxi%20Grand%20Theater%20Chinaj

கிராண்ட் தியேட்டர், சீனா

15jkrZoomlion%20Headquarters%20Exhibitio

ஸூம்லைன் சென்டர், சீனா

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

புதுமை உலகம்: சக்கரம் இல்லாத கார்!

 
renault

எதிர்காலத்தில் கார்கள் எப்படி இருக்கும் என்ற கேட்டால், தரையிலிருந்து அப்படியே மேலே பறக்கும் என்றுகூட பதில் வரலாம். சக்கரம் இல்லாமல் கார்கள் வரும் என்று யாரும் நிச்சயம் சொல்லமாட்டார்கள். ஆனால், சீனாவைச் சேர்ந்த யூஜென் கய் என்ற இளம் பெண், சக்கரம் இல்லாமல் காந்த சக்தியை மட்டுமே கொண்டு இயங்கும் கார் ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த காருக்கு சர்வதேச அளவில் வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

புதுமையான முறையில் உருவாக்கப்பட்டுள்ள சக்கரமே இல்லாத இந்த காரை திருப்பாமலேயே எந்தத் திசையில் வேண்டுமானாலும் ஓட்டலாம். சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இருக்கையில் இருந்தபடி வாகனத்தை எந்த திசையிலும் கட்டுப்படுத்தலாம். அது மட்டுமல்ல, ஒரு சிறிய கேபினை போன்று உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில் எத்தனை கேபின்களை வேண்டுமானாலும் இணைக்கலாம். ஒரு கேபினிலிருந்து இன்னொரு கேபினில் உள்ளவருடன் ஸ்பீக்கர் வழியாக பேசவும் செய்யலாம்.

“இதனை டாக்சியாக உலகம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள முடியும்” என்கிறார் இந்த காரை உருவாக்கிய யூசென் கய்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…
ஒக்டோபர் – 23

 

கி.மு. 42 : மார்க் அன்டனியின் படையினர் ரோமப் பேரரசன் புரூட்டஸின் இராணுவத்தை தோற்கடித்தனர். இறுதியில் புரூட்டஸ் தற்கொலை செய்து கொண்டான்.

1707 : பெரிய பிரித்தானியாவின் முதல் நாடாளுமன்றம் கூடியது.

1739 : பிரித்தானியப் பிரதமர் ரொபேர்ட் வால்போல் ஸ்பெயின் மீது போரை அறிவித்தார்.

article-2052493-0E816A3900000578-334_6341906 : அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டூமொண்ட் பாரிஸ் நகரில் ஐரோப்பாவின் முதலாவது காற்றை விடப் பாரமான வானூர்தியைப் பறக்க விட்டார்.

1911 : முதற்தடவையாக விமானமொன்று போரில் பாவிக்கப்பட்டது: இத்தாலிய விமானி ஒருவர், லிபியாவில் இருந்து புறப்பட்டு துருக்கிய இராணுவ நிலைகளை அவதானித்தார்.

1912 : முதலாம் பால்க்கன் போர்: சேர்பியாவுக்கும் ஒட்டோமான் பேரரசுக்கும் இடையில் போர் ஆரம்பமானது.

1915 : நியூயோர்க் நகரில் சுமார் 33,000 பெண்கள் வாக்குரிமை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1917 : ரஷ்யாவில் அக்டோபர் புரட்சிக்கு லெனின் அழைப்பு விடுத்தார்.

1941 : யுக்ரைனின் ஒடேசா நகரில் 19,000 யூதர்கள், ருமேனிய இராணுவ அதிகாரி நிக்கலாய் டெலியானு தலைமையில் ருமேனியா மற்றும் ஜேர்மன் படையினரால் உயிருடன் எரிக்கப்பட்டனர். அடுத்த நாள் மேலும் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.

1942 : ஐக்கிய அமெரிக்க வான்படையின் தாக்குதலுக்கு அமெரிக்கப் பயணிகள் விமானம் ஒன்று இலக்கானதில் அதில் பயணம் செய்த அனைத்துப் 12 பேரும் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ரால்ஃப் ரைஞ்சர் என்ற பிரபலமான இசை மேதையும் அடங்குவார்.

1944 : இரண்டாம் உலகப் போரில் மிகப்பெரும் கடற்படைப் போர் பிலிப்பைன்ஸில் ஆரம்பமாகியது.

1944 : இரண்டாம் உலகப் போரில் சோவியத்தின் செம்படைகள் ஹங்கேரியை அடைந்தன.

1946 : ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதலாவது கூட்டத் தொடர் நியூயோர்க் நகரில் ஆரம்பமாகியது.

1956 : ஹங்கேரியில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராகவும் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். ஹங்கேரியப் புரட்சி நவம்பர் 4 இல் அடக்கப்பட்டது.

1958 :கனடாவின் நோவா ஸ்கோசியாவில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 174 நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களில் 100 பேர் மட்டும் நவம்பர் 1 வரையில் மீட்கப்பட்டனர்.

1973 : சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் இடம்பெற்ற யோம் கிப்பூர் போர் ஐ.நாவின் தலையீட்டை அடுத்து முடிவுக்கு வந்தது.

1983 : லெபனானில் பெய்ரூத் நகரில் அமெரிக்க கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 241 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். அதே நாளில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் பிரெஞ்சு இராணுவத்தினர் 58 பேர் கொல்லப்பட்டனர்.

1989 : கம்யூனிஸ ஹங்கேரியன் மக்கள் குடியரசு, ஹங்கேரியன் குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.

1998: இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு மற்றும் பலஸ்தீன தலைவர் யஸீர் அரபாத் ஆகியோருக்கு இடையில் “அமைதிக்காக நிலம்” என்ற உடன்பாடு எட்டப்பட்டது.

2001 : வட அயர்லாந்தில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் ஐரிஷ் குடியரசு இராணுவம் ஆயுதக் களைவில் ஈடுபட்டது.

2002 : மொஸ்கோவில் நாடக அரங்கு ஒன்றில் செச்னிய தீவிரவாதிகளினால் 700 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

2004 : பிரேஸில், வி.எஸ்.பி. 30 எனும் தனது முதலாவது விண்கப்பலை விண்ணுக்கு ஏவியது.

2004 : வடக்கு ஜப்பானில் பூகம்பம் தாக்கியதில் 35 பேர் கொல்லப்பட்டு 2,200 பேர் படுகாயமடைந்தனர்.

2011 : துருக்கியில் இடம்பெற்ற பூகம்பத்தில் 582 பேர் உயிரிழந்தனர்.

2011 : லிபிய யுத்தம் முடிவடைந்ததாக லிபிய தேசிய இடைக்கால நிர்வாக சபை அறிவித்தது.

http://metronews.lk

  • தொடங்கியவர்

குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிட இதெல்லாம் செய்யலாம் பெற்றோர்களே! #GoodParenting

குழந்தை

பெற்றோர் இன்றைக்கு எதிர்கொள்ளும் சவாலே குழந்தையைச் சாப்பிட வைப்பதுதான். சாப்பிட அழைக்கும் ஒவ்வொரு முறையும் விதவிதமான காரணங்களால் மறுக்கிறது குழந்தை. உணவு போதுமான அளவு கிடைக்காவிட்டால், குழந்தைகளுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் போய்விடும். அதனால் அவர்களின் வளர்ச்சி நிச்சயம் பாதிக்கும்.  

 

“குழந்தைகள் சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர் எனப் புகார் சொல்வதாக அல்லாமல், ஏன் அவ்வாறு தவிர்க்கின்றனர் என்பதை யோசிப்பதே இந்தப் பிரச்னைக்குச் சரியான தீர்வாகும்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி. மேலும் அவர் கூறுகையில், 

கிருஷ்ணமூர்த்தி“குழந்தைகள் சரியாக சாப்பிடாததற்கு என்னென்ன காரணங்கள் என முதலில் பார்ப்போம். இன்றைய குழந்தைகளின் கவனத்தை ஈர்க்க, டிவி, செல்போன், வீடியோ கேம்ஸ் உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அதனால், அவர்களுக்குப் பசியின் மீது கவனம் இருப்பதில்லை. இந்தப் பழக்கத்தால் அவர்கள் உடல் களைத்துப்போகும் விதமனாக ஆடும் விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை. இதனால், சரியான நேரத்தில் பசி உணர்வு வருவதில்லை. 

நமது லைஃப் ஸ்டைலும் வெகுவாக மாறிவிட்டது. முன்பெல்லாம், இரவு 9 மணிக்கு வீட்டினர் தூங்கச் சென்றுவிடுவர். ஆனால், இப்போது இரவு 11 மணி வரை குழந்தைகளே டிவி பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதனால், காலையில் எழுந்திருப்பதும் தாமதமாகிறது. பல குழந்தைகள் காலை உணவை வேண்டா வெறுப்பாகவே சாப்பிடுகின்றனர். இதற்கு காரணம், படுக்கையிலிருந்து எழுந்த ஒரு மணி நேரத்திலேயே சாப்பிடுவது. காலையில் எழுந்து உடற்பயிற்சிகள் செய்து, நிதானமாக புறப்பட்டால் பசியெடுக்கும் அளவான நேரம் இருக்கும். அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. 

குழந்தை

குழந்தைகளுக்குச் சாப்பிடும் முறையைப் பழக்கப்படுத்தும் விதமும் ஒரு காரணம். குழந்தை பிறந்த ஆறு மாதம் தொடங்கி ஒரு வருடத்திற்குள் அனைத்துவிதமான உணவுகளையும் சாப்பிட பழக்க வேண்டும். இதைப் பல பெற்றோர் முறையாக செய்வதில்லை. இதனால், குழந்தை வளார்ந்த பிறகும் உணவுப் பழக்கத்தைச் சீராக மேற்கொள்வதில்லை. 

இவை போன்று காரணங்களால் குழந்தைகள் சாப்பிடுவதில் சுணக்கம் காட்டுகின்றனர். இதனால், குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய ஊட்ட சத்துகள் போதுமான அளவில் கிடைப்பதில்லை. இது, குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியையும் பாதிக்கச் செய்யும். எனவே, பெற்றோர் குழந்தைகளைச் சாப்பிட வைக்கும் முறைகளைச் சற்று மாற்றலாம். 

பழங்களைச் சாப்பிட வைப்பதற்கு, பப்பாளி, கொய்யா, மாம்பழம் போன்ற பல வண்ணங்களில் உள்ள பழங்களை நறுக்கி, ஏதேனும் ஓர் அழகான உருவம் செய்து தட்டில் வைத்தால் குழந்தை ஆர்வத்துடன் சாப்பிடும். 

வாழைப்பூ மற்றும் வாழைத் தண்டில் ஏராளமான சத்துகள் இருக்கின்றன. ஆனால், குழந்தை இவற்றை விரும்பிச் சாப்பிடாது. எனவே, இவற்றை அடையாகவோ, வடையாகவோ செய்துகொடுக்கலாம். 

கொத்த மல்லி, புதினாவை ஒதுக்கும் குழந்தைக்கு அவற்றை அரைத்து, சாதத்துடன் கலந்துகொடுக்கலாம் அல்லது பிரட் மீது தடவி ஆரோக்யமான சாண்ட் விச் செய்துகொடுக்கலாம்.

காய்கறி என்றாலே வெறுப்புடன் பார்க்கும் குழந்தைக்கு, காய்கறிகளை வேக வைத்து, மிக்ஸியில் அரைத்து சாதத்துடன் கலந்துகொடுக்கலாம்.

மைதா மாவைப் பயன்படுத்தி சமைப்பதைத் தவிர்த்து, அதற்குப் பதில் கோதுமை மாவினைப் பயன்படுத்தலாம். சப்பாத்தியுடன், வேக வைத்து அரைத்து காய்கறி துவையலைத் தடவிக் கொடுக்கலாம். ருசி புதிதாக உள்ளது என குழந்தை விரும்பிச் சாப்பிடும். 

இப்படி, நமது வழக்கமான நடவடிக்கைகளில் ஏதேனும் வித்தியாசப்படுத்திக்கொடுக்கும்போது, அடுத்தது புதிதாக என்ன செய்யப் போகிறார்கள் எனும் ஆர்வம் குழந்தைக்கு ஏற்படும். அந்த ஆர்வம் நிறைவாக சாப்பிடத் தூண்டும்." என்றார்.

 

ஆரோக்கியமான உணவு முறைக்கு அடுத்த தலைமுறையைப் பழக்குவோம். குழந்தைகளை ஊக்கத்துடன் வளர்ப்போம். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

நம் ஊர் நம் கதைகள் - கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு வரலாற்றுப் பயணம்!

 

 

ம் நாட்டில் விளையும் உப்புக்கு முதன்முதலில் வரி விதித்தது யார்? ஆங்கிலேயர் என்பது உங்கள் பதிலானால், தவறு. விடை: கட்டுரையின் முடிவில்!

வரலாற்று ஆர்வலர் நாவலாசிரியர் வெங்கடேஷ் தலைமையில் மரக்காணம் வரை சென்று திரும்புவதாகத் திட்டம் தீட்டினோம். காலை 6 மணிக்குத் திருவான்மியூரிலிருந்து பயணம் தொடங்குவதாக ஏற்பாடு. வருவதாக வாக்களித்துவிட்டு, காலை 6:30 வரை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒருவரைத் தவிர, மற்ற எட்டு பேரும் ஒருவர் பின் ஒருவராக திருவான்மியூர் பேருந்து நிலையத்தின் எதிரே குழுமினோம்.

192p1.jpg

இந்தியாவின் முதல் பெருங்காப்பியம் என்று சொல்லப்படும் ராமாயணத்தை எழுதிய ஆதிகவி வான்மீகி முனிவர் தங்கியதாக ஒரு சாராரும், ஜீவசமாதி அடைந்ததாக மற்றொரு சாராரும் நம்பும் 1300 வருடங்களுக்கு முந்தைய கோயில், திருவான்மியூரின் கிழக்குக் கடற்கரைச் சாலை தொடக்கத்தில், அதன் நடுவே அமைந்திருக்கிறது. வான்மீகி தங்கிய ஊர் என்பதை குறிக்கும்பொருட்டே, திரு-வான்மீகி-ஊர் என்று அழைக்கப்பட்ட ஊர் பெயர் மருவி, இன்று திருவான்மியூராகி இருக்கிறது. அத்தனை பரபரப்புக்கும் நடுவே அமைதியாக நிற்கிறார் வான்மீகி. மருந்தீசுவரர் கோயிலின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயிலில் பௌர்ணமி பூஜைகள் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.

காலைச் சிற்றுண்டியை மகாபலிபுரத்தில் முடித்துக் கிளம்பிய சிறிது தொலைவில், சாலையோர மண்டபம் ஒன்று, கேட்பாரற்று அமைதியாக நிற்கிறது. ஒரு சிறிய மண்டபத் தில் என்ன இருந்துவிட முடியும் என்ற அசட்டையுடன் நுழைந்தவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.

192p2.jpg

17-18-ம் நூற்றாண்டின் நாயக்கர் கால வேலைப்பாடு கொண்ட மண்டப நுழைவாயி லின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்குத் தூண்களில் ஐரோப்பிய ‘ஹேட்’ மற்றும் பட்டன்கள் வைத்த கோட் உடை, ஹை ஹீல்ஸ் சகிதம், கையில் கையுறை மற்றும் வாக்கிங் ஸ்டிக்குடன் டச்சுக்காரர்களின் சிற்பங்கள். இருவரும் அந்தக் காலத்தின் பிரபுக்களாகவோ, விஓசி என்ற `வெரீனிக்டு ஊஸ்ட்-இண்டிஸ்ச் கம்பெனி’ என்ற டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏஜெண்டு களாகவோ இருந்திருக்கலாம். இங்கிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில், 17-18-ம் நூற் றாண்டில் கோலோச்சிய டச்சுக்காரர்களின் சதராஸ் கோட்டையில் வசித்தவர்களாக இருந்திருக்கலாம். அதே காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்த மண்டபத்துக்கு பொருள் உதவி செய்தவர்களாக இருந்திருக்கலாம். அங்கொன்றும் இங்கொன்றுமாக தூண்களில் கஜுராஹோவுக்குப் போட்டியாகச் சில சிற்பங்கள்.

192p4.jpg

அவற்றைப் பார்த்துவிட்டு, கிளம்ப யத்தனிக்கையில் தற்செயலாகக் கண்ணில் பட்டன, கூரையில் வடிக்கப் பட்ட சிற்பங்கள். அத்தனையும் கிரகணங்களைக் குறிக்கும் வண்ணம் அமைந்திருந்தன. `கிரகண மண்டபம்’ என்ற பெயர் இதற்கு வரக் காரணம், கூரைச் சிற்பங்கள். நிலவையும் கதிரவனையும் விழுங்கத் தயாராக சர்ப்பங்கள், மானை வேட்டையாடும் புலி, இருதலை கொண்ட கண்டபெருண்டப் பட்சி, மனித முகம்கொண்ட தேள், சிங்க உடல் மனிதத் தலையுடன் புருஷ மிருகம், கண்ணப்ப நாயனார், குட்டியுடன் ஒரு குரங்குக் குடும்பம், எலியை வேட்டையாடும் பாம்பு, இரு மீன்கள், ஆமை, முயலை விழுங்க முயற்சி செய்யும் முர்ரே ஈல் எனப்படும் விலாங்கு மீன் என அசத்தலான சிற்பங்கள். இவற்றுடன் உடலற்ற ராகுவின் சிற்பம் ஒன்று. இந்த மண்டபத்தின் சிற்பங்கள் அனைத்தும் கிரகணங்கள், ராசி, போன்றவற்றில் அன்றைய தமிழனின் ஈடுபாட்டைச் சொல்கின்றன.

இடைகழிநாட்டையும், காயல்களையும் கடந்து தொடர்ந்த பயணத்தின் அடுத்த நிறுத்தம் - மரக்காணம் பூமீசுவரர் கோயில். சிறுபாணாற்றுப்படை ஒயிம நாட்டின் எயிர்பட்டணம் என்றே மரக்காணத்தைக் குறிக்கிறது. முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட `பெரிப்ளஸ் ஆஃப் எரித்ரியன் சீ’ என்ற கிரேக்க மாலுமியின் நூலில் `சோபட்டணம்’ என்று மரக்காணம் சொல்லப்பட்டிருக்கிறது. அத்தகைய பழைமை வாய்ந்த கடல் வாணிப நகரமான எயிர்பட்டணத்தின் பூமீசுவரர் கோயில், சோழர் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

192p5.jpg

முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் மற்றும் குலோத்துங் கனின் கல்வெட்டுகள் கோயில் கருவறையைச் சுற்றி அழகு சேர்க் கின்றன. பெரிதாக கல்வெட்டுகள் படிக்கத் தெரியாவிடினும், `ஸ்ரீ இராஜ ராஜ’ என்ற எழுத்துகளைத் தேடிப் பிடிக்கும் நொடி தோன்றும் உணர்ச்சிப் பிரவாகத்தை வார்த்தைகளில் வர்ணிக்க முடிவதில்லை.  பாவை விளக்கு ஒன்று அழகாக ஒளிர்ந்து கொண்டிருந்த கருவறையில், அருள் பாலிக்கிறார் பூமீசுவரர். சிவன் சந்நிதியில் பாவை விளக்கும், அம்மன் சந்நிதி முன் நந்தியும் அமைந்திருப்பது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு. வெளிப்பிராகாரத்தில் பிச்சாண்டவர், மகாவிஷ்ணு, பிரம்மா, குடையின் கீழ் துர்கை என்று அழகாகச் சிலைகள். மகாவிஷ்ணுவின் சிலைக்கு மேல் பூதகணங்கள் செதுக்கிய குறும்புக்கார சிற்பி ஒருவன்,

ராஜராஜனை அழகாகச் சிற்பமாக வடித்திருக்கிறான். சிவன் கோயில் இல்லாத ஊரில் உணவருந்த வந்த சிவபக்தர் வணங்க என்று நெல் அளக்கும் மரக்கால் ஒன்றைக் கவிழ்த்து, அதில் விபூதியிட்டு அதுவே சிவம் என்று சொல்லிய பெண்ணின் ஆசைக்குத் தலைவணங்கி மரக்காலே பூமீசுவரராக அவ்விடத்தில் இருந்து அசைக்க முடியாமல் மாறியதாக ஸ்தல புராணம் சொல்கிறது. அதிலிருந்து வந்த பெயரே - மரக்கா-ணம். மன்மதனும் கண்வ முனிவரும் வணங்கிய கோயில் இது.

வெளியேறும்போதுதான் கவனிக்கிறோம், கொடிமரத்தின் அருகில் வாளால் தன் தலையைத் தானே துண்டிக்கும் போர் வீரனின் சிற்பம்கொண்ட அரிகண்டம் எனும் வீரர் கல். போருக்குச் செல்லும் முன் வெற்றிவாகை சூடும் ஆசையில் இவ்வாறு உயிர் தியாகம் செய்வது ஒரு காலத்தில் வாடிக்கையாக இருந்திருக்கிறது.

192p6.jpg

உப்பளங்களை ரசித்தவாறு, வெடால் கிராமத்தின் வசந்த நாயகி சமேத வடவாமுக அக்னீசுவரர் கோயிலை அடைகிறோம். பிற்கால பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட செங்கல் கோயிலான இதை மாற்றமின்றி அப்படியே திருப்பணி செய்திருக்கின்றனர் சோழர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான வெடால் ஏரிக்கரையில் கஜபிருஷ்ட வடிவ விமானத்துடன் கம்பீரமாக நிற்கிறது கோயில். விமானத்தின் நடுவே மேலிருந்து கீழ் இரண்டாகப் பிளந்து திருப்பணிக்காகக் காத்து நிற்கிறது. கோயிலின் முன் மிகப்பெரிய வட்ட வடிவிலான க்ரந்த கல்வெட்டு. கோயிலைச் சுற்றியும் கல்வெட்டுகள். வலது காலை இடது காலின் மீது வைத்து அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தி. ஓர் ஓரமாக ஜ்யேஷ்தா தேவி, சப்த கன்னியர் கல் ஒன்று. கோயில் திறக்காமல் இருந்ததால், உள்ளே செல்ல முடியவில்லை.

அங்கிருந்து சென்றது - வாயலூர் திருப்புல்லீசு வரர் மற்றும் வைகுண்டவாசப்பெருமாள் கோயில். எந்தவித விமானமும் இன்றி கஜ பிருஷ்ட வடிவில் இருக்கின்றன சிவன் மற்றும் பெருமாள் சந்நிதிகள். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயிலின் முகமண்டபத்தில், அழகிய கோலாட்டம் ஆடும் பெண்கள் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. வெண்ணைத் திருடும் கிருஷ்ணர், புத்தர், குழலூதும் கிருஷ்ணர் என்று அழகிய சிற்பங்கள் கண்ணைப் பறிக்கின்றன. கி.பி 400-ம் ஆண்டு மகேந்திரவர்ம பல்லவரால் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், சமஸ்கிருதம், பாலி என பல மொழிகளில் பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்திரக்கூடர்களின் கல்வெட்டுகள் இருக்கின்றன.

192p7.jpg

அடுத்துச் சென்ற இடம் சதராஸ் என்ற சதுரங்கப்பட்டணம் கோட்டை. கல்பாக்கம் அணு உலை குடியிருப்பின் அருகில் உள்ள இந்தப் புராதனக் கோட்டை, இப்போது தொல்லியல் துறையின் சீரான பராமரிப்பில் உள்ளது. சம்புவராயர்களால் ராஜநாராயண பட்டணம் என வழங்கப்பட்ட இந்த இடத்தில், 17-18-ம் நூற்றாண்டில், வாணிபத்துக்காக டச்சுக்காரர்களால் கட்டப்பட்டதே சதராஸ் கோட்டை. உப்பு, முத்து, மஸ்லின் துணி, குதிரைகள், பருத்தி, வாசனைப் பொருள்கள் என இங்கிருந்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்தனர் டச்சுக்காரர்கள். தேவாலயம், குதிரை லாயம், பணியாளர் இல்லம், கிணற்றுடன் சமையலறை, அலுவலக அறைகள், தானியம் சேமிக்கும் கிடங்கு, கல்லறை, கடற்கொள்ளையரைக் கழுவில் ஏற்றும் தூக்குமேடை, கோட்டை அரண், மணிக்கூண்டு என சகலமும் உண்டு, இந்தச் செங்கல் கோட்டையுள். வெடிமருந்து சேமிக்கும் அறை ஒன்று சிதில மடைந்து கிடக்கிறது. 1670 முதல் 1790 வரை உள்ள 19 கல்லறைகள் இங்கு உள்ளன. அதில் இரண்டு அடுக்காக தாய்-சேய் சுமை தாங்கிக் கல்லறை ஒன்றும் உண்டு.

மதிய உணவு இடைவேளைக்குப் பின் பயணம் தொடர்ந்தது. மகாபலிபுரத்தின் வலியன்குட்டை மற்றும் பிடாரி ரதங்கள்... பல்லவர்களின் கல் குவாரி இருந்த இடம் அதன் அருகிலேயே உள்ளது. ரதங்களுக்குச் செல்லும் வழியிலேயே கையில் பாசாங்குசம் ஏந்திய பிள்ளையார் காட்சி தருகிறார். இந்தப் பிள்ளையாரை வணங்கிவிட்டுத்தான் சிற்பிகள் உள்ளே நுழைந்து பணியைத் தினமும் தொடங்கி யிருக்கின்றனர். முடிக்கப்படாத இரு ரதங்கள், உளியின் அடையாளங்களுடன் காட்சி தருகின்றன. அதற்கு அப்பால், பல்வேறு நிலைகளின் வெட்டப்பட்ட பாறைகள். அத்தனை தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் உளிகொண்டு பாறைகளில் சிறு துவாரங்கள் அமைத்து, அவற்றுள் மூங்கில் கழிகள் செருகி, உள்ளே தண்ணீர் ஊற்றியிருக்கின்றனர். அழுத்தம் தாளாமல், பாறை விரிசல் அடைந்ததும், சீராக உடைத்திருக்கிறார்கள். பல்லவர்களின் கைவண்ணம் கண்டு வியந்தபடி சாளுவன்குப்பம் முருகர் கோயிலை அடைந்தது குழு. சாளுவ மன்னன் நரசிம்ம தேவராயனின் காலத்தில் பெயர் மாற்றமடைந்த திருவிழிச்சில் எனும் ஊரில்தான் இருக்கிறது, 2004-ம் ஆண்டு சுனாமி வெளிக்கொணர்ந்த முருகர் கோயில். புலிக்குகையின் அருகில் இருக்கும் கோயிலில், தரைமட்டத்துக்குப் பத்து அடிக்குக் கீழ் வேல், பலிபீடம், அர்த்த மண்டபம், கருவறை என முற்றிலும் செங்கல்லால் கட்டப்பட்டிருக்கிறது. கி.பி 4-5 முதல் 11-12 வரை இதன் காலம் இருக்கலாம் எனக் கணிக்கின்றனர். ராஜ ராஜனின் கல்வெட்டும் சில பல்லவர் காலத்துக் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன.

192p8.jpg

புலிக்குகைக்கு அடுத்து பயணித்தது குழு. குகையின் சிற்பங்களையும், அதிரணசண்ட மண்டபத்தின் நாகரி மற்றும் பல்லவ கிரந்த கல்வெட்டுகளை ரசித்தபடி வெளிவந்தால், அழகிய மகிஷாசுரமர்த்தினி பலத்தை கண்டு பூரிப்பு அடைந்தது. வாட்டிய வெயிலின் தாக்கம் அதிகரிக்க, கோவளம் கார்மெல் தேவாலயத்துடன் அன்றைய பயணத்தை நிறைவு செய்வதாக முடிவானது. 1808-ம் ஆண்டு, பெரும் செல்வந்தரான டிமாண்டேயினால் கட்டப்பட்டது, உத்தரிய மாதா தேவாலயம். டிமாண்டே காலனி புகழ் டிமாண்டேதான் அது. தற்போது பேயாக உலவுவதாகக் கதை திரிக்கப்படும் டிமாண்டேயின் வாழ்க்கை சோகம் நிறைந்தது. ஒரே மகனை 20 வயதில் பறிகொடுத்த டிமாண்டேயின் மனைவி, மன நிம்மதி தேடி கோவளம் கடற்கரைக்கு அடிக்கடி வர, அவர் மனம் தெளிவடைய வேண்டி, டிமாண்டே கட்டிய ஆலயம் இது. முற்றிலும் புனரமைக்கப்பட்டு விட்டாலும், டிமாண்டேயின் கல்லறையும், சிறு குழந்தையைத் தொட்டிலில் இட்டு, பூமாலையால் ஆட்டியபடி உள்ள சலவைக்கல் சிற்பமும் கண்ணைக் கவர்கின்றன. டிமாண்டேயின் கல்லறையில், `வலக்கை செய்வதை, இடக்கை அறியாமல் இருக்கட்டும்’ என்ற விவிலிய வார்த்தைகள் பொறிக்கப் பட்டிருக்கின்றன. இன்றளவும், மயிலை பேராயத்தின் மிகப்பெரும் கொடையாளர், டிமாண்டேதான்.

மரக்காணத்தின் உப்பளங்களுக்கு முதன் முதலில் வரி விதித்தது முதலாம் ராஜேந்திர சோழன். வரியை அரசுக்கு நேரடியாகச் செலுத்தாமல், மரக்காணம் பூமீசுவரர் கோயிலில் தினமும் இரு விளக்குகள் அணையாமல் எரியுமாறு பார்த்துக்கொள்ளச் சொல்லி, அதை பூமீசுவரர் கோயில் கல்வெட்டிலும் வடித்தான் ராஜேந்திரன்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சன்னி ரிங்

இதுவரை சன்னி லியோன் பற்றி என்னவெல்லாம் நினைத்திருந்தீர்களோ அதை எல்லாம் டெலீட் செய்யுங்கள். சமீபத்தில் இந்தியில் அவர் நடித்து வரும் படத்தின் பாடல் காட்சியை ஷூட் செய்து கொண்டிருந்தார்கள். வரிகள்படி ஹீரோவின் உதட்டுடன் தன் உதட்டை சன்னி அயர்ன் செய்ய வேண்டும்.
27.jpg
‘ஒரு நிமிடம்...’ என டைரக்டரிடம் அனுமதி வாங்கிவிட்டு தன் விரலில் இருந்த மோதிரத்தைக் கழற்றி உதவியாளரிடம் கொடுத்தார். அதன் பிறகே அக்காட்சியில் நடித்தார்! அந்த மோதிரம்... யெஸ். திருமண மோதிரம். தன்னுடன் நடித்த porn starஉம் இப்போதைய தனது மேனேஜருமான டேனியல் வெப்பரை மணந்திருக்கிறார் சன்னி. அந்த மணநாள் ரிங்குடன் ‘அப்படி இப்படி’ நடிக்க அவர் விரும்பவில்லையாம். 

 

 

விளையும் பயிர்...

இங்குள்ள ஓர் உடை, ஈருடைகளில் இருப்பவர் யாரென்று தெரிகிறதா? ‘நம்ம’ ஸ்ரீதேவியின் மகள்தான்! ஆனால், மூத்தவரான ஜான்வி கபூர் அல்ல. இளையவரான குஷி கபூர்! சமூக வலைத்தளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் தன் அம்மா, அக்காவைவிட குஷி கபூர்தான் ஃபேமஸ். காரணம், அடிக்கடி இவர் பதிவிடும் தனது க்ளாமர் புகைப்படங்கள்.
26.jpg
அந்தவகையில் தன் நண்பர்களுடன் சமீபத்தில் விடுமுறையைக் கழித்தார் குஷி கபூர். அப்போது குஷியாக இவர் எடுத்த படங்கள் இப்போது வைரலாகி இருக்கின்றன. அக்கா ஜான்வி கபூர், விரைவில் ஹீரோயினாகிறார். தங்கை குஷி கபூர்? இன்னும் தேதி குறிக்கப்படவில்லை. ஆனால், ஒட்டுமொத்த ஜென் இசட்டும் குஷியின் திரைப் பிரவேசத்துக்காகத்தான் ஆவலாகக் காத்திருக்கிறார்கள். வாம்மா... மின்னல்!   

 

என்ன வயது அழகே!

இப்படித்தான் தலைப்பு வைக்க வேண்டும்! பின்னே... 44 வயது; 15 வயது பிள்ளைக்குத் தாய்... என வலம் வரும் மலைக்கா அரோரா சமீபத்தில் எடுத்த போட்டோ ஷூட் இது!
24.jpg
இனி க்ளாமருக்கும் வயதுக்கும் தொடர்பிருப்பதாக யாரேனும் சொன்னால்... பிச்சு பிச்சு! டெயில் பீஸ்: யார் இந்த மலைக்கா அரோரா என்று கேட்பவர்களுக்கு மட்டும். மணிரத்னத்தின் ‘உயிரே’வில் ‘சைய சைய சையா சையா...’ என ரயிலில் ஒரு நடிகை குத்தாட்டம் போட்டார் அல்லவா... அவர்தான் இவர்!

.kungumam

  • தொடங்கியவர்

போக்குவரத்து விதிமீறல்: கையெடுத்து கும்பிட்ட காவல் அதிகாரி; மன்னிப்பு கேட்ட வாகன ஓட்டி

 

 
motor%20cyclejpg

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனந்தபூரில் மடகசிரா போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் சுபகுமார். இவர் போக்குவரத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு நபர் 4 பேரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

அவரை இன்ஸ்பெக்டர் சுபகுமார் தடுத்து நிறுத்தினார்.

ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்றாலே ரூ. 500 அல்லது ரூ. 1,000 என அபராதம் செலுத்த வேண்டி வரும். ஹெல்மெட் இல்லையென்றாலோ, போதிய வாகன ஆவணங்கள் இல்லையென்றாலோ அபராத தொகை மேலும் கூடும்.

ஆனால், சுபகுமார் அபராதம் விதிக்கவிலை, குரலை உயர்த்தி கண்டிக்கவில்லை மாறாக கையெடுத்து கும்பிட்டார். இதனைக் கண்டு முதலில் அதிர்ச்சி அடைந்த அந்த குடும்பத் தலைவர், அதன் பின்னர் தான் செய்த தவறை உணர்ந்து போலீஸ் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டார். இனி ஒருபோதும் போக்குவரத்து விதிகளை மீற மாட்டேன் என உறுதி அளித்தார்.

இது குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுபகுமார், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறு தொடர்ந்து நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். ஆனாலும், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் இவ்வாறாக அத்துமீறும் நபர்களைப் பார்க்கும்போது சில நேரங்களில் விரக்தியாக இருக்கிறது. அன்றையதினமும் எனக்கு அப்படிப்பட்ட விரக்தியே ஏற்பட்டது. அந்த வேளையில் எனக்கு அவரைத் திட்ட வேண்டும் எனத் தோன்றவில்லை. எனவேதான் கைகூப்பி புத்தியுரைத்தேன். அன்று, அவருக்கு நான் அபராதம்கூட விதிக்கவில்லை. மேலும், குழந்தைகள் முன்னால் கண்டிப்புடன் நடந்து கொள்ள விரும்பவில்லை" எனக் கூறியுள்ளார்.

தலைக் கவசம் உயிர்க் கவசம் என்பது வாசித்து கடந்து செல்வதற்கான வார்த்தைகள் அல்ல வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய நெறி என்பதை அனைவரும் உணர்ந்து செயல்படுவோம்.

போலீஸ்காரர் என்றாலே கறார் நபராகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. சில நேரங்களில் அன்பால்கூட தவறுகளைத் திருத்த முடியும் என நிரூபித்திருக்கிறார் இன்ஸ்பெக்டர் சுபகுமார்.

http://tamil.thehindu.com

http://tamil.thehindu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.