Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

அடி தூள்... வெறும் கைகளால் சிறுத்தையைச் சமாளித்த இளம் பெண்..!

 மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மோரினா மாவட்டத்தில் இருக்கிறது அந்தக் கிராமம். காடுகளின் மடியில் அமைந்திருக்கும் அழகான கிராமம். 25 வயது ஆஷாவின் சொந்த ஊர் அங்கிருந்து சில கிலோமீட்டர்கள். திருமணமாகி வந்ததுதான் இந்த ஊர். இரண்டு வயது குழந்தையைத் தூக்கிக் கொண்டு தன் அம்மாவின் வீட்டுக்குப் போய்கொண்டிருந்தார். அவருடன் சூரியனும் வீடுதிரும்பிக்கொண்டிருந்த மாலை வேளை. ஊர் எல்லையைத் தாண்டும்வரை அறிமுகமான முகங்களை கடந்து வந்த ஆஷாவுக்கு, சிறிது தூரம் தாண்டியதும் கண்ணில்பட்ட அந்த முகம் அத்தனைப் பரிச்சயமில்லை. அது சிறுத்தையும் முகம்.

சிறுத்தையை

 

கோப்புப் படம்

புதர்களின் உள்ளிருந்து திடிரென வில்லன் என்ட்ரி கொடுத்த சிறுத்தையைக் கண்டதும் ஆஷாவுக்கு பயம் தொற்றிக்கொண்டது. கையில் இரண்டு வயது குழந்தை. இரண்டு பேரையும் சுற்றி சுற்றி வந்த சிறுத்தை ஒரு கட்டத்தில் பாய்ந்திருக்கிறது. குழந்தையைக் காப்பாற்றியே தீருவேன் என நினைத்த ஆஷாவுக்கு தைரியம் வந்தது. வெறும் கைகளாலே சிறுத்தையை தாக்கியிருக்கிறார். அதன் கழுத்தைப் பிடித்து கடிக்க முடியாமல் தடுத்திருக்கிறார். இத்தனையும் நடக்கும்போதே உதவிக்கு குரலையும் எழுப்பியிருக்கிறார். சிறுத்தை ஆஷாவின் கைகளில் நல்ல காயங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் கடிக்கவில்லை. அதற்குள் அருகில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் சத்தம் கேட்டு உதவிக்கு ஓடிவர, வில்லன் எஸ்கேப்.

அந்தப் பகுதி காடுகளில் சிலர் சிறுத்தையைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் யாரையும் தாக்கியதாக இதுவரை எந்தச் சம்பவமும் பதிவாகவில்லை. அபப்டியிருக்க, ஆஷா சிறுத்தையையே எதிர்த்தது பெரிய விஷயமாக அவர்களால் பாராட்டப்பட்டது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ஆஷாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். “நான் நடந்துப் போய்க் கொண்டிருந்தேன். வயலைத் தாண்டியதும் எங்கிருந்தோ என் மீது சிறுத்தை பாய்ந்தது” என பயம் விலகாமல் நடந்தச் சம்பவத்தை விவரித்திருக்கிறார் ஆஷா.

விஷயம் வன அதிகாரிகளுக்கு சொல்லப்பட, அவர்கள் விரைந்து வந்திருக்கிறார்கள். நடந்ததை எல்லாம் விசாரித்திருக்கிறார்கள். சம்பவம் நடந்த இடத்தில்Pugmarks எதுவும் இல்லை என்கிறார்கள். (Pugmarks என்பது காட்டு விலங்குகளின் காலடித்தடம்.) வந்தது சிறுத்தைதானா என்பதில் வன அதிகாரிகளுக்கு சந்தேகம். ஆனால் கிரமாத்தினர் சிறுத்தைதான் என ஊர்ஜிதமாக சொல்கிறார்கள். ஆஷா உடம்பில் உள்ள காயங்களும் சொல்கின்றன.

இப்போது ஆஷா அந்தப் பகுதியின் வீரமங்கையாக பார்க்கப்படுகிறார். தைரியத்துக்கு அடையாளம் என்கிறார்கள். இவை எதுவும் புரியாமல் அந்த இரண்டு வயது குழந்தை மருத்துவமனையில் சிரித்துக் கொண்டிருக்கும். ஆஷா விரும்பியதும் அதுதான்.

 

சிறுத்தை:

பெண் சிறுத்தை ஒரு பிரசவத்தில் 2 முதல் 5 குட்டிகளைப் பெற்றெடுக்கும். குட்டியின் வாசனைகூட வெளியில் தெரியாத அளவுக்கு தடுப்பு வேலிகளை தாய் அமைக்குமாம். 18 மாதங்கள் முதல் இரண்டு வருடங்களுக்குப் பிறகு, தாயிடம் இருந்து தனியாக செல்வதற்கு சிறுத்தைக் குட்டி பழகிவிடும். பிற குட்டிகளுடன் சேர்ந்து திரியும். தாய் பூனை, தன் குட்டிப் பூனைகளுடன் மெல்லிய உறுமல் ஒலியுடன் பேசும். இதேபோலத்தான் சிறுத்தையும் தன் குட்டிகளுடன் பேசுமாம். ஆறு மாதத்தில் தன் குட்டிக்கு எப்படி வேட்டையாடுவது என்றும், பிற மிருகங்களிடம் இருந்து தப்பிப்பது பற்றியும் தாய் சிறுத்தை பயிற்சி கொடுக்கும். எனினும், பெரும்பாலான சிறுத்தைக் குட்டிகள் சிங்கங்கள், கழுதைப்புலிகளுக்கு இரையாகிவிடும் பரிதாபமும் நிகழ்கிறது.

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உலகத் தலைவர்: 27 வயதில் அமைச்சர் 31 வயதில் பிரதமர்?

 

 
27CHDKNAUSTRIA-ELECTION

பழுத்த அனுபவசாலிகள்தான் உலகத் தலைவர்களாக வேண்டுமா என்ன? பல சந்தர்ப்பங்களில் திறமையுள்ள இள வயது க்காரர்கள்கூட உலகத் தலைவர்களாகி ஆச்சரியமூட்டியிருக்கிறார்கள். இந்த வரிசையில் ஆஸ்திரியாவின் செபாஸ்டின் குர்ஷ் 31 வயதில் பிரதமரானால் (அந்த ஊரில் வேந்தர் என்கிறார்கள்), உலகின் இளம் தலைவர் என்கிற அந்தஸ்தைப் பெறுவார்.

அண்மையில் ஆஸ்திரியாவில் நடைபெற்ற தேர்தலில் செபாஸ்டின் குர்ஷினுடைய கன்சர்வேட்டிங் மக்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் பதவிக்கு அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதரக் கட்சிகளுடன் சேர்ந்து அந்தப் பதவியை கைப்பற்றுவதில் அவர் முனைப்புக் காட்டி வருகிறார். 27 வயதிலேயே முக்கிய துறையான வெளியுறவுத் துறையைக் கவனித்து வந்தவர் செபாஸ்டின் குர்ஷ். இதன்மூலம் ஐரோப்பிய நாடுகளின் இளம் வெளியுறவுத் துறை அமைச்சர் என்ற அந்தஸ்தை ஏற்கெனவே பெற்றிருந்தார். ஆனால், தற்போது பிரதமரானால், உலகிலேயே இளம் உலகத் தலைவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராகி விடுவார்.

வட கொரியாவின் அதிபராக இருக்கும் ஜிம் ஜாங் உன்தான் இதுவரை உலகின் இளம் தலைவராக இருந்து வருகிறார். 36 வயதான அவர், அதிபர் பதவியை ஏற்கும்போது 30 வயதுதான் ஆனது. அந்தச் சாதனையை செபாஸ்டின் குர்ஷ் முறியடிக்க முடியாது என்றாலும், தற்போதைய நிலையில் உள்ள உலகத் தலைவர்களில் மிகவும் இள வயதுக்காரர் என்கிற பெருமையைப் பெறலாம். இதற்கு முன்பு ஐரோப்பாவின் குட்டி நாடான சான் மரினோவின் தலைவர்களில் ஒருவரான வெனிஷா அம்ரோஸியோ இந்தப் பெருமையைப் பெற்றிருந்தார். அவர் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர்வரை சான் மரினோவின் தலைவராக இருந்தபோது அவரது வயது 28தான். கிம் ஜாங் உன்னுக்கு பிறகு உலகின் இளம் தலைவராக வெனிஷா பார்க்கப்பட்டார். ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் முதல் தேதியில் அவரது சுழற்சி முறை பதவி முடிவுக்கு வந்ததால், தற்போது பிரதமராகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ள செபாஸ்டினுக்கு உலகின் இளம் தலைவர் என்ற அந்தஸ்து கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகின் இளம் தலைவர்களில் ஒருவராக இருக்கும் கிம் ஜாங் உன் சர்ச்சைக்குரிய தலைவராகவே பார்க்கப்படுகிறார். ஐரோப்பாவின் பெரிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன் (39 வயது), கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (45 வயது) போன்ற இளம் தலைவர்கள் மக்கள் செல்வாக்குமிக்கவர்களாக விளங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் செபாஸ்டின் குர்ஷுக்கு இடம் கிடைக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

இன்ஸ்டாகிராமைக் கலக்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவி, போனிகபூர் தம்பதியின் புகைப்படம்!

 

 
sridevi-and-boney

 

ஸ்ரீதேவி, போனி கபூர் தம்பதியின் சமீபத்திய அந்நியோன்யமான புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் படு பரபரப்பாக வலம் வந்து கொண்டிருப்பதோடு. இருவர் மீதான விமர்சனங்களையும் தூண்டி விட்டுள்ளது. அப்படியெந்த விதத்தில் அந்த புகைப்படம் ஸ்பெஷல்? என்று கேட்கத் தோன்றலாம். மனைவியின் மீது காதல் மிகுந்த கணவன், அவளது கன்னத்தில் முத்தமிட்டு அதைப் புகைப்படமாக்கி ரசிப்பது அப்படியொன்றும் கொலை பாதகமில்லை. இங்கே ஸ்ரீதேவி & போனி கபூர் அப்படி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஸ்ரீதேவி தனது இன்ஸ்டாகிராமில் பதிய, அதற்குத் தான் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது.

போனி கபூர், ஸ்ரீதேவியை மணப்பதற்கு முன்பே அவருக்கு மோனா கபூர் என்றொரு மனைவி இருந்தார். மோனாவின் தோழியாக போனி குடும்பத்துக்கு நெருக்கமானவர் தான் ஸ்ரீதேவி. தங்களது நட்புக்காலத்தில் போனிக்கு ரக்‌ஷாபந்தன் பண்டிகையன்று ராக்கி கட்டி தன்னை அவரது சகோதரியாகக் காட்டிக் கொண்டு பாசத்தைப் பரிமாறும் நிலையிலிருந்த ஸ்ரீதேவி பிற்பாடு மோனாவுக்குப் போட்டியாக மாறியதை விதி என்பதா? அல்லது சதி என்பதா? சூழல் நெருக்கடி என்பதா? நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள், அது உங்களது உரிமை. ஆனால், நான் அதைப் பற்றியெல்லாம் யாரிடமும் விவாதிக்கத் தயாரில்லை அது தேவையுமில்லை என்பது ஸ்ரீதேவியின் மனநிலை. அந்த மனநிலையுடன் இருப்பதால் மட்டுமே அவரால் போனியுடனான தனது திருமண காலத்தில் தங்களைச் சுழற்றி அடித்த பல்லாயிரக்கணக்கான விமர்சனக் கணைகளில் இருந்து பெரிதாக மனக்காயங்களின்றி தப்பமுடிந்தது என்பது ஸ்ரீதேவியை நன்கு அறிந்த அவரது நெருங்கிய நண்பர்களின் கருத்து!

போனிக்கு, மோனாவுடனான திருமணத்தில் அர்ஜூன் கபூர் என்ற மகனும், அன்ஷுலா கபூர் என்ற மகளும்; ஸ்ரீதேவியுடனான திருமணத்தில் ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்களுமாக மொத்தம் 4 வாரிசுகள் உள்ளனர். 

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

தளபதியும் வாலியும்! - கவிஞர் வாலி பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

Vaali%202_15561.jpg

தமிழ்த் திரைப்பட இசைத் துறையில், பீஷ்மரைப் போல் சகல நுட்பங்களையும் அறிந்தவர். கட்சி மாச்சாரியங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோருக்கும் இனியவராய் அவர் தனது தமிழ்க் கவிதைப் பயணத்தை மேற்கொண்டார். தமிழும், ஆன்மிகமும் கலந்த கவிச்சிற்பி வாலி. அவரது பிறந்த நாள் அக்டோபர், 29. நெருப்பாய் சிவந்த மேனியும் நெற்றிக் குங்குமமும், நித்தம் முத்தமிடும் வெற்றிலைச் சிவப்பும், எளிதில் எதிராளியின் பலத்தையும் தன்னகத்தே பெற்றிடும் ஆற்றல்மிக்கவர்.

 

* கடல்களில் தீவுகளும், தீபகற்பங்களும் சகஜம். நதிகளில் அப்படி வாய்ப்பது அபூர்வம். ஆனால், காவிரியை தென்கரையாகவும், கொள்ளிடத்தை வடகரையாகவும் கொண்ட திருவரங்கம்தான் கவிஞர் வாலியின் சொந்த ஊர். 

* திருவரங்கம் இரண்டு ரங்கராஜன்களைத் தந்தது. அந்த இருவருமே அந்தப் பெயர்களை பெருமாளுக்கே கொடுத்துவிட்டு, வேறு பெயர்களில், பார் புகழ உயர்ந்தார்கள். ஒருவர் எழுத்தாளர் சுஜாதா. இன்னொருவர் கவிஞர் வாலி. ஆம். வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்.

* ரங்கராஜன், வாலி ஆன கதையை அவரது வாக்கியங்களிலேயே வாசியுங்கள். 'நானும் இந்த நூற்றாண்டும்' என்னும் அவரது நூலிலிருந்து... 

'எட்டாம் வகுப்பு படிக்கும்போதே நான் ஓவியங்கள் வரையத் தலைப்பட்டேன். எவரைப் பார்த்தாலும்... அவரைப் போலவே படம் வரையும் ஆற்றல் என்னுள் இயல்பாக ஏற்பட்டிருந்தது. புகழ் வாய்ந்த ஓவியர்களான மணியம் சந்திரா இவர்களது படங்களை 'கல்கி' பத்திரிகையில் கண்டு நான் பித்தாகிப் போன நாட்கள் உண்டு. அதேப்போல் ஆனந்தவிகடனில் பணிபுரிந்த மாலி என்னும் மகத்தான ஓவியன் மேல் எனக்கு மாளா காதல்.

நான் சின்னச் சின்ன சித்திரங்கள் வரையும்போதெல்லாம், பாபு என்னும் பள்ளித்தோழன் பக்கத்திலிருந்து பரவசப்படுவான்.  இருப்பினும் என்றென்றும் நான் அவனை மறக்க இயலாதவாறு அவன் ஒரு காரியத்தை செய்து வைத்தான். மாலியைப் போல நான் ஒரு சிறந்த சித்திரக்காரனாக விளங்கவேண்டும் என்று ஆசைப்பட்டு அவன்தான் எனக்கு 'வாலி' என்று பெயர் சூட்டினான். அதன்பிறகு, எங்கள் ஊரில் உள்ள ஆட்டுக்குட்டிகூட என்னை வாலி என்றே அழைக்கத் தொடங்கியது.

பேசும் சினிமாவும், நானும் பிறந்தது ஒரே ஆண்டில்தான் (1932) இதனால்தானோ என்னவோ ஒருவித சகோதரத்துவத்தோடு சினிமா என்னை சுவீகரித்துக் கொண்டது. பட்டுக்கோட்டையும், கண்ணதாசனும் பட உலகில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது நான் பாட்டெழுதப் புகுந்தேன். அவர்களோடு போட்டியிட்டு வெற்றி பெறுவது அசாத்தியம் என்று எனக்குத் தெரிந்தது. எத்தனையோ கவிஞர்கள் கோடம்பாக்கத்தில் கடைவிரித்தால், கொள்முதலுக்கே கட்டுப்படியாகாது என்று ஊர் திரும்பி விட்டார்கள். நான் ஒருவன் மட்டுமே கப்பல்களுக்கு நடுவே கட்டுமரத்தோடு கடலில் இறங்கினேன்.

கதைப்பித்தும், ஓவியப்பித்தும் என்னை ஆட்டிப் படைத்த இளம்பிராயத்திலேயே நான் எனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கினேன். அதன் பெயர் 'நேதாஜி' என்றும் குறிப்பிடுகின்றார்’

* கரூருக்கு அருகே உள்ள வாங்கல் என்னும் குக்கிராமம்தான் வாலி அவர்களின் தந்தையின் பூர்வீகம். வாங்கல் ஶ்ரீனிவாச அய்யங்கார் என்று அழைக்கப்பட்டார்.  தாயாரின் பெயர் பொன்னம்மாள்.

* பள்ளி நாட்களில் வாலியின் கவித்துணுக்கு ஒன்றை வாசித்து விட்டு, ''தமிழ்தான் உனக்கு சோறு போடும். ஆனா, அது எப்போ போடும்னு சொல்ல முடியாது எழுதுவதை நிறுத்தாதே" என்று புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தியிடம் வாழ்த்து பெற்ற பெருமை இவருக்குண்டு.

* கொள்ளிடக்கரையில் 'கழுதை மண்டபம்' என்று ஒரு பழங்கால கட்டடம் உண்டு. தனது விடுமுறைகளில், கவிதை எழுதுவதற்கு அந்த இடத்தையே தேர்வு செய்துபோய் கவிதைகள் எழுதுவார். அப்போது எழுதப்பட்ட பாடல்கள் பின்னாளில் புகழ்பெற்றன. அவற்றில் ஒன்றுதான் ''கற்பனையென்றாலும், கற்சிலையென்றாலும் கந்தனே உனை மறவேன்" என்ற பக்தி ரசம் சொட்டும் பாடல்.

* திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதற்கு, வருவதற்குமுன் திருச்சி வானொலி நிலையத்தில் 1950-களில் கவிஞர் வாலி பணியாற்றி இருக்கின்றார். ''எருமை மாட்டை தண்ணியிலே போட்டா விலை பேச முடியும். முதல்ல புறப்பட்டு மெட்ராஸ் வாருமய்யா" என்று அன்புக் கட்டளையிட்டவர் டி.எம்.எஸ்.

* தமிழின் பால் மாறாத காதலும், பல ஆயிரம் தமிழ்க் கவிதைகளும் எழுதிக் குவித்த கவிஞர் வாலி, பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம் மற்றும் வடமொழியையே கற்றவர். கவிதையின் பாலும் தமிழின் மீதும் இருந்த பற்றுதலால் கவிஞரானார்.

Vaali%201_15254.jpg

* கவிஞர் வாலியை தனது ஸ்கூட்டரில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு படக்கம்பெனியாக அலைந்து திரிந்து வாய்ப்புத் தேடித் தந்தவர் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன். இவரை 'கோபி' என்றே செல்லமாய் அழைப்பார். திரைப்பட பாடல் எழுத கவிஞர் வாலி எடுத்த முயற்சிகள் ஏராளம். சென்னைக்கும், ஶ்ரீரங்கத்துக்கும் அலைந்த அலைச்சல் அநேகம்.

* 1958 ல் கெம்பராஜ் அரஸ் இயக்கிய 'அழகர் மலைக்கள்ளன்' படத்தில் 'நிலவும் தாரையும் நீயம்மா. உலகம் ஒரு நாள் உனதம்மா" என்ற பாடல்தான் கவிஞர் வாலி எழுதிய முதல் பாடல். பாடலைப் பாடியவர் பி.சுசீலா.

* தளபதி என்ற பெயருக்கும் வாலிக்கும் ரொம்ப ராசி. மணிரத்னம் இயக்கி ரஜினிகாந்த் நடித்த தளபதியில் அவரது பாடல்வரிகள் ஹிட் என்பது எல்லாரும் அறிந்தது. வாலி அவர்களின் முதல் நாடகத்தின் பெயர் என்ன தெரியுமா? தளபதி!

* ''பேராசை பிடித்த பெரியார்" என்று பெரியாரைப் பாராட்டி அவரது புகழ் பாடும் நாடகத்தையும் அரங்கேற்றி, பெரியாரிடம் பாராட்டு பெற்றவர். இந்த நாடகத்தில் நாம் தமிழர் இயக்கத்தை நடத்திய ஆதித்தனாரும் ஒரு பாத்திரமாகப் படைக்கப்பட்டிருந்தார். இவர் தான் பெரியார்! இவரை எவர்தான் அறியார்" என்று வாலி அவர்கள் எழுதிய பாடலை தந்தை பெரியார் பெரிதும் பாராட்டினார்.

* ''வாலி! நீ நினைக்கிற மாதிரி சினிமா பிரவேசம் அவ்வளவு சுலபமானது இல்லே..." என்று அறிவுரை கூறியவர் ஜாவர் சீத்தாராமன். பின்னாளில் அவர் கதை வசனம் எழுத, வாலி பாடல்கள் எழுத ஏ.வி.எம். தயாரித்த படம் உயர்ந்த மனிதன்.

* கண்ணதாசன் தமிழ்த்திரை இசையில் சாதனை படைத்தவர். ஆனால் அவருக்கு மிகச் சரியான இணைகோடாகத் திகழ்ந்தவர் கவிஞர் வாலி. இந்த இரண்டு தண்டவாளங்களின் மேல்தான் திரை இசை என்னும் ரெயில், பயணம் செய்தது.

* 1967ல் தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. அவற்றில், 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் இடம் பெற்ற வாலி இயற்றிய ''நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்'' என்ற பாடலும் ஒரு காரணம் என்பதை அறுபதுகளின் மத்தியில் இருந்தவர்கள் அறிவார்கள்.

* சென்னை தி.நகர் சிவா விஷ்ணு ஆலயத்துக்கு எதிரே இருந்த கிளப் ஹவுசில் கவிஞர் வாலி நான்கு ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்குதான் நகைச்சுவை நடிகர் நாகேஷை கவிஞர் வாலி சந்தித்தார். பக்கத்து, பக்கத்து அறையில் இருந்ததால், மிக நெருங்கிய நண்பர்களானார்கள்.

vaali_15402.jpg* கவிஞர் வாலி முதன்முதலாக எழுதி, 'நன்றாக இல்லை' என்று நிராகரிக்கப்பட்ட பாடல்தான், பின்னாளில் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது. அந்த பாடல்தான். படகோட்டியில் இடம் பெற்ற 'கொடுத்ததெல்லாம் கொடுத்தார்' பாடல். படகோட்டி படத்தின் தலைப்பே வாலி அவர்கள் கூறியதுதான். அடிமைப் பெண்ணில் இடம் பெற்று ஜெயலலிதா பாடிய 'அம்மா என்றால் அன்பு' பாடலை இயற்றியவர் வாலி.

* வாலி எழுதிய அநேகப் பாடல்களை கண்ணதாசன் எழுதியதாகவே எண்ணிடும் தவறான நிலை அடிக்கடி நிலவும். ''அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே!'' பாடலை எழுதியவர் கண்ணதாசன் அல்ல. வாலியே. இப்படி அநேகம் உண்டு.

* கவிஞர் வாலி அவர்கள், தனது நாடகமொன்றில் கதாநாயகியாக நடித்த திலகம் என்பவரை, கீழ்த்திருப்பதி கோயிலில் காதல் திருமணம் செய்து கொண்டவர். ஆச்சாரமான வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், எந்த மூடநம்பிக்கையும் இல்லாதவர். கந்தவேள் முருகனையும், அம்மனையும் தனது இஷ்டதெய்வமாக வழிபட்டார்.

* 'நானும் இந்த நூற்றாண்டும்' என்னும் நூலில் தன் வாழ்வின் சரிதத்தை எந்தவித சமரசமும் இல்லாமல், சத்ய சோதனையைப் போல், உள்ளது உள்ளபடி எழுதினார். அதில் அவர் கையாண்டுள்ள எழுத்துநடையும், சுவாரசியமான, பிரமிக்கத்தக்க சம்பவங்களும், ஒரு நாவலைப் போல் சுவையானவை.

* மெல்லிசை மன்னரையும் முக்தா சீனிவாசனையும் எப்போதும் நன்றியோடு தனது நூலில் நினைவு கூறுகின்றார். நூல் முழுவதும் அவருக்கு சிறு உதவி செய்தவர்களைக் கூட நன்றி பாராட்டி எழுதுகின்றார்.

* திரைப்படத் துறையில் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் என்று பல தலைமுறையைப் பார்த்தவர். அரசியலிலும், பெரியார், அண்ணா காமராஜர், எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா என்று சகலருடன் நல்லிணக்கமான உறவை வளர்த்தவர். குழந்தையைப் போல் எல்லோருடனும் இனிமையாகப் பழகியதால்தான், திரை இசையில் வியக்கவைக்கும் சாதனைகளை ஆற்ற முடிந்தது. 

* கவிஞர் வாலி எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ்பெற்றவை. ஆனந்த விகடன் இதழில், தான் பழகிய ஆளுமைகள் பற்றி  வாலி எழுதிய‌ 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெரும் புகழ்பெற்றது.  இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

http://cinema.vikatan.com

 

அக்டோபர் 29: கவிஞர் வாலியின் பிறந்தநாள் இன்று...

மூன்று தலைமுறைகள் தாண்டியும் முத்திரை பதித்த கவிஞர் வாலியை நினைவுகூரும் பிறந்தநாள் சிறப்பு வீடியோ பதிவு...

  • தொடங்கியவர்

 

சக்கர நாற்காலியில் இருந்துகொண்டே பாராகிளைடிங் செய்யும் தன்னம்பிக்கை பெண்

தனக்கு இருக்கும் தசைநார் தேய்வு நோயை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சக்கர நாற்காலியில் இருந்துகொண்டே பாராகிளைடிங் மற்றும் நகைச்சுவையாளராக வலம்வரும் பாகிஸ்தானை சேர்ந்த கத்தார் வாழ் பெண் பற்றிய காணொளி.

  • தொடங்கியவர்

நவீன தொழில்நுட்பங்களால் ஆட்டோ பயணத்தை மாற்றியமைத்த அண்ணாதுரை

  • தொடங்கியவர்

சிரிப்பை ஏற்படுத்தும் கிரிக்கெட் வீரர். ... பவத் அகமத் என்ற கிரிக்கெட் வீரரின் ஞாபக மறதி தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.

 

 

 

  • தொடங்கியவர்
‘நாடுகளுக்குள் சமரசம்; வீட்டில் எதற்குக் கலவரம்’
 

image_3a0fb49646.jpgதனது கணவனைப் பற்றி, மனைவி தரக்குறைவான அபிப்பிராயத்தைப் பிள்ளைகளிடம் விதைப்பதும் அதேவழியில் கணவனும், ‘விட்டேனா பார்’ எனும் விதமாகப் பிள்ளைகளின் தாயாரான மனைவியிடமே, பிள்ளைகளின் பாசத்தைக் கூறுபோடும் விதமாக, நஞ்சு ஊறிய வார்த்தைகளைக்  கொட்டுவதும் மகா பாதகமாகும். 

இந்த நடத்தைகளால், இளவயதிலேயே பிள்ளைகள், பெற்றோரை மதிக்காமல் விட்டுவிடுகின்றனர். அத்துடன், அவர்களுடைய பாஷைகள் கேட்கக்கூசும் அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி விடலாம். 

பிள்ளைகளைத் தங்கள் பக்கம் சேர்க்க, வீட்டுக்குள்ளேயே உரிமைப் போரை நடாத்துவது நகைப்புக் கிடமானது. பெற்றோர், தங்கள் யுத்தத்தைப் பிள்ளைகளுக்குத் தெரியாமல் வைத்துக் கொள்ளலாம். இதில் ஏது சிரமம் இருக்கப் போகிறது? 

இதைவிட, நல்ல வார்த்தைகளைப் பேசி, அன்புடன் நடந்தால் குடும்பம் கோவிலாகி விடும் என்பதை, இவர்கள் உணர வேண்டும். நாடுகளுக்குள் சமரசம்; வீட்டில் எதற்குக் கலவரம். 

  • தொடங்கியவர்

1964 : சிறிமா – சாஸ்­திரி உடன்­ப­டிக்கை கையெ­ழுத்­தி­டப்­பட்­டது

வரலாற்றில் இன்று…
ஒக்டோபர் – 30

 

1485 : ஏழாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினார்.

1502 : போர்த்துக்கேயர் கடலோடியான வாஸ்கொட காமா, இரண்டாவது தடவையாக இந்தியாவின் கோழிக்கோட்டை சென்றடைந்தார்.

1831 : ஐக்கிய அமெரிக்காவில் அடிமை கிளர்ச்சி செய்த நாட் டர்னர், வேர்ஜீனியா மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.

1905 : ரஷ்ய மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் ரஷ்யாவின் முதலாவது அரசியலமைப்பை அறிவித்து பிரதிநிதிகள் அவையை நிறுவினார்.

varalru.jpg1918 : ஒட்டோமான் பேரரசு கூட்டுப் படைகளுடன் உடன்பாட்டுக்கு வந்ததில் மத்திய கிழக்கில் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

1920 : அவுஸ்திரேலியக் கம்யூனிஸ்ட் கட்சி சிட்னியில் அமைக்கப்பட்டது.

1922 : முசோலினி, இத்தாலியின் பிரதமரானார்.

1925 : ஜோன் லோகி பயர்ட் பிரித்தானியாவின் முதலாவது தொலைக்காட்சி ஒளிபரப்பியை அமைத்தார்.

1941 : மேற்கு உக்ரைனில் 1,500 யூதர்கள் நாஸிகளினால் பெல்செக் வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர்.

1945 : ஐ.நா.வில் இந்தியா இணைந்தது.

1657: பிரிட்டனிடமிருந்து ஜமைக்காவை மீளக் கைப்பற்றும் முயற்சியில் ஸ்பெய்ன் தோல்வியுற்றது.

1961 : சோவியத் ஒன்றியம் 50 மெகாதொன் அளவுள்ள “சார் பொம்பா” என்ற அணுகுண்டை பரிசோதனைக்காக வெடிக்க வைத்தது. இதுவே வெடிக்கப்பட்ட மிகப்பெரிய அணுகுண்டாகும்.

1961 : சோவியத் முன்னாள் அதிபர், ஜோசப் ஸ்டாலினின் உடல் மொஸ்கோவின் கிரெம்ளினில் லெனின் நினைவகத்திலிருந்து அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது.

Nilam.jpg1964 : இலங்கையின் மலையகத் தமிழர்களை நாடு கடத்த உதவிய சிறிமா–சாஸ்திரி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

1970 : வியட்நாமில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 293 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.

1972 : சிகாக்கோவில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதியதில் 45 பேர் கொல்லப்பட்டனர்.

1973 : ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் பொஸ்பரஸ் பாலம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அமைக்கப்பட்டது.

1985 : சலேஞ்சர் விண்ணோடம் தனது கடைசி வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்தது.

1991 : மத்திய கிழக்கு அமைதி மாநாடு மட்ரிட் நகரில் ஆரம்பமானது.

1995 : கனடாவில் இருந்து பிரிந்து செல்ல கியூபெக் மாநிலத்தில் நடத்தப்பட்ட மக்கள் வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக கியூபெக் மக்கள் வாக்களித்தனர்.

1999 : இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபகரும் அமைச்சருமான சௌமியமூர்த்தி தொண்டமான் காலமானார்.

2006 : ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன.

2012 : நீலம் சூறாவளியினால் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தால் 10 பேர் உயிரிழந்ததுடன் சுமார் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.

2014 : பலஸ்தீனத்தை சுவீடன் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தது. பலஸ்தீனத்தை அங்கீகரித்த முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடு சுவீடன் ஆகும்.

2015 : ருமேனிய தலைநகர் புக்காரெஸ்ட்டில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 64 பேர் உயிரிழந்ததுடன் 147 பேர் காயமடைந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

மாதவிடாய் காலத்தில் மதுவிற்கு 25 சதவிகிதம் தள்ளுபடி

மாதவிடாய் காலத்தில் பெண்களை அங்கீகரிக்கும் வகையில் இஸ்ரேலில் உள்ள மதுபான நிலையம் ஒன்று அவர்கள் அருந்தும் மதுவிற்கு 25 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

Local_News.jpg

வாழ்க்கையின் 25 சதவிகித காலத்தை மாதவிடாயில் கழிக்கும் பெண்களுக்கு ஓர் இரவிற்காவது அவர்களுக்கு சாதகமான ஒன்றை பெற தகுதியானவர்களே என்கிறனர் அன்னா லூலூ மதுபான நிலைய உரிமையாளர்கள்.

பிளட்டி ஹவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சாதகமாக ஒரு செயலை செய்ய வேண்டும் என்ற அங்கீகாரத்தின் வெளிப்பாடு என கூறுகின்றனர்.

இந்த திட்டத்தின் நோக்கம் என்பது தள்ளுபடி அளித்தல் கவனத்தை ஈர்த்தல் மற்றும் உங்களை நாங்கள் அங்கீகரிக்கிறோம், தற்போது நீங்கள் உள்ள சூழலை நாங்கள் அறிவோம், உங்களுக்கு சாதகமாக ஒரு செயலை செய்கிறோம், என்பதை விளக்கும் வகையில் ஒருவரை நடத்துதல் என்று குறித்த அன்னா லூலூ மதுபான நிலைய உரிமையாளர் மொரன் பாரிர் தெரிவித்துள்ளார்.

தான் மது கேட்டபோது பணியாளருக்கு அவர் கேட்பது சிவப்பா அல்லது வெள்ளை ஒயினா என்ற சந்தேகம் வந்தது என்றும் அதன் மூலமாகத்தான் இந்த யோசனை தனக்கு தோன்றியதாக பாரிர் கூறுகிறார்.

இந்த சலுகை, திங்கள், செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அளிக்கப்படுகிறது.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

 

விளையாட்டில் பாலின சமத்துவத்திற்கு போராடிய 10 வயது மாணவியர்

ரியோ டி ஜெனிரோவிலுள்ள ஒரு பள்ளியில் மாணவியர் குழு ஒன்று கால்பந்து விளையாட விரும்பியது.

ஆனால், மாணவியரோடு கால்பந்து விளையாட விரும்பாத மாணவர்கள், அவர்கள் கால்பந்து ஆட்டத்தில் கலந்து கொள்வதற்கு பதிலாக கால்பந்து விளையாடும்போது குதுகல மங்கையராக இருக்கலாம் என்று பரிந்துரைத்தனர்.

 

“கேள் பவர்” என்ற மாணவியருக்கான கால்பந்து அணி ஒன்றை உருவாக்கிய இந்த 10 வயது மாணவியர், கால்பந்து மைதானத்தில் உள்ளே இறங்கி அதனை ஆக்கிரமித்து, மாணவர்களோடு ஒரு கால்பந்து ஆட்டத்தையும் விளையாடியுள்ளனர்.

  • தொடங்கியவர்

கரிப்பு மனிதர்கள்

 
00LeadBigsize2jpg

அனைத்து படங்களும் அகஸ்தியம்பள்ளி உப்பளம், வேதாரண்யம்

‘உப்பு உப்போய்' என்று கத்திக்கொண்டு கறுப்பு ஏறிய மர வண்டியில் வெள்ளை கல் உப்பை குவித்து வைத்துத் தள்ளிவரும் உப்புக்காரர் அழிந்துவிட்ட காலம் இது. கல் உப்பு உற்பத்தியாகும் இடத்தை நான் பார்த்தும் பல ஆண்டுகள் கடந்துவிட்டன. சிறுசிறு வெள்ளைப் பிரமிடுகளைப் போல் கல் உப்பு குவியல் குவியலாக குவிக்கப்பட்டிருந்த காட்சியை வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளியில் முதன்முறையாகப் பார்த்தபோது வியப்பில் ஆழ்ந்து நின்றேன்.

       
2-3jpg

பொன் மாலைப் பொழுதில்...

 

அதை படமெடுக்கும் எண்ணத்துடன் -------க்குடி வடக்கிலிருந்த அகஸ்தியம்பள்ளி உப்பளத்தை நோக்கி வண்டியில் சென்றேன். வண்டியிலிருந்து இறங்கும்போது முதுகுவலி பின்னியெடுக்கும். அதையெல்லாம் யோசிக்காமல் உப்பளத்தில் ஃபிலிம் கேமராவை கையில் எடுத்து முதன்முதலாகப் பதிவு செய்த உப்பளக் காட்சியில் வெண்மை நிறம் மிதமிஞ்சிப் பதிவாகியிருந்தது.

ஒளிப்பட மொழியில் அதை ‘ஓவர் எக்ஸ்போசிங்’ என்போம். ஒளிப்படங்களில் தூய வெண்மை என்பது ‘ஹைலைட்’டாகக் கருதப்படுகிறது. ஒளிப்படத்துக்கு அது முக்கியம். அதேநேரம் வெண்மை மிதமிஞ்சினால் படம் ரசிக்க முடியாததாகிவிடும்.

5-1jpg

மணல் காற்றால் மறைக்கப்பட்ட உப்பு மலையிலிருந்து மணலை நீக்குகிறார் ஒரு தொழிலாளி.

 

 

தட்டிப்போன வாய்ப்பு

உப்பின் வெண்மை, அளத்தின் தண்ணீர் பிரதிபலிக்கும் வெண்மை, வானத்தில் வெண்மை நிறம் தோய்ந்த மேகங்கள், உப்பளத் தொழிலாளிகள் உடுத்தியிருக்கும் வேட்டியின் பழுப்பு நிறமேறிய வெண்மை, இப்படி எல்லாமே வெண்மை, வெண்மையின் சார்பு நிறங்களாக இருக்கும். ஆரம்பகால ஒளிப்படக் கலைஞருக்குப் படம் எடுப்பதில் இது பெரிய சவால்.

இந்த நிற அம்சங்கள் எல்லாவற்றையும் சமப்படுத்தி ஃபிலிம் கேமராவில் சரியாகப் படமெடுக்கும் கலையைக் கற்பதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொண்டது. இதைத் தாண்டி நான் போகும்போது பல நேரம் அளம் வெறுமை நிறைந்து, யாருமில்லாமல் காற்று வாங்கும். சில நேரம் அளத்தில் வேலை நடைபெற்றாலும் உப்பு இருக்காது. எல்லாமே இருக்கும் நாளில் படமெடுக்கத் தேவையான ஒளி இருக்காது. ஒளி கூடிவரும் நாளில் அமைப்பான காட்சி கிடைக்காது.

4-8jpg

சுமை பகிர்தல்

 

காட்சி அமைந்தால் வண்ணக் குறைபாடுகள் இருக்கும். இப்படி ஏதாவது ஒன்று இல்லாமலே தட்டிப் போனது.

 

மனதில் இறங்கிய பிறகு

இதையெல்லாம் மனதில் அசைபோட்டு, கல்லூரி கோடை விடுமுறையை உப்பளத்தைப் பற்றிய என்னுடைய அறிதலுக்கான தளமாக மாற்றிக்கொண்டேன். படம் எடுப்பதைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல் அங்கே போய் எல்லாவற்றையும் கவனிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் அளத்தின் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிறங்கியது. உப்பளத் தொழிலாளர்கள் உழைக்கும் நேரத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடன் தொடர்ந்து பேசி இணக்கமான ஒரு சூழலை உருவாக்கிக்கொண்டேன்.

6-7jpg

அளத்திலேயே பாக்கெட்டில் அடைக்கப்படும் கல்உப்பு

 

ஒளியின் தன்மையை உள்வாங்க ஆரம்பித்தபோது எந்த நேரத்தில் உப்பளங்கள் வண்ணங்களுடன் திகழும், அதன் முழுக் காட்சிப் பரிமாணம் எந்த நேரத்தில் வெளிப்படும் என்பதெல்லாம் புரிய ஆரம்பித்தது. தொடர் பயணமும் மணிக்கணக்கான காத்திருத்தலும் ஒளிப்படக் கலையின் மீதான காதலும் இதம் தரும் ஒளிப்படங்களைப் பதிவு செய்ய வழியமைத்தன. இந்தப் படங்கள் முழுமையான பதிவு என்று சொல்ல முடியாது. அதேநேரம், இது மனதுக்கு நெருக்கமான பதிவு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அனைத்து படங்களும் வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளி உப்பளத்தில் எடுக்கப்பட்டவை.

 

 

8-6jpg

வெள்ளைப் பிரமிடும் அதன் கர்த்தாக்களும்

 

3-4jpg

உழைக்கும் கரங்கள்

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கால்பந்து ஜாம்பவான் மரடோனா பிறந்த தினம்: 30-10-1960

 

கால்பந்து போட்டியின் ஜாம்பவான் என்று கருதப்படும் அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த மரடோனா இதே தேதியில் 1960-ம் ஆண்டு பிறந்தார்.

 
கால்பந்து ஜாம்பவான் மரடோனா பிறந்த தினம்: 30-10-1960
 
அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர். இவர் எந்தவொரு காலக்கட்டத்திலும் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று பரவலாகக் கருதப்படுகிறார். நூற்றாண்டின் சிறந்த பிஃபா வீரர் விருதுக்காக இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் முதலாவதாக வந்து இந்த விருதை பீலேவுடன் பகிர்ந்து கொண்டார்.

மரடோனா தனது தொழில்வாழ்க்கையில் கால்பாந்து கிளப்பில் இருந்த காலத்தில் அவர் அர்ஜென்டினா ஜூனியர்ஸ், போகா ஜூனியர்ஸ், பார்சிலோனா, சீவில்லா, நியூவெல்ஸ் ஒல்ட் பாய்ஸ் மற்றும் நப்போலி போன்ற மன்ற அணிகளுக்காக விளையாடி ஒப்பந்தப் பண அளவில் உலக சாதனை செய்துள்ளார்.

தனது சர்வதேச விளையாட்டு வாழ்கையில் அர்ஜென்டினா அணிக்காக 1977 முதல் 1994 வரை 91 போட்டிகளில் விளையாடி 34 கோல்களை அடித்துள்ளார். 1986-ம் ஆண்டின் உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணியின் தலைவராக இருந்து இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனிக்கு எதிராக வெற்றிப் பெற தலைமை தாங்கிய போட்டியுடன் சேர்த்து நான்கு பிஃபா உலக கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக தங்கப் பந்து விருதையும் பெற்றார்.

இந்த போட்டிகளின் காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறுவதற்கு காரணமாக இவர் அடித்த இரண்டு கோல்கள், இரண்டு வேறுபட்ட காரணங்களுக்காக கால்பந்து வரலாற்றில் இடம் பெற்றது. தண்டம் விதிக்கப்படாத முறையில் முதலில் அடித்த கோல் "கடவுளின் கை" என்று அறியப்பட்டது, அதே வேளையில் இங்கிலாந்தின் ஆறு வீரர்களை தாண்டி 60 மீட்டர் தொலைவிலிருந்து அடிக்கப்பட்ட இரண்டாவது கோலானது கண்ணைக் கவரும் விதத்தில் இருந்ததால் 20-ம் நூற்றாண்டின் சிறந்த கோல் என்று பொதுவாக அறியப்படுகிறது.

விளையாட்டு வீரர்களில் சர்ச்சைகளில் அதிகமாக சிக்கிக் கொள்ளும் நபர் என்றும் செய்திகளில் அதிகமாக பேசப்படும் நபர் என்றும் பல்வேறு காரணங்களுக்காக மரடோனா அறியப்பட்டார். இத்தாலியில் நடைபெற்ற போதைப் பொருள் சோதனையில் கோகைன் போதைப் பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதால் 1991-ம் ஆண்டில் கால்பந்து விளையாட்டிலிருந்து 15 மாதங்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டார், மற்றும் எபெட்ரின் பயன்படுத்திய காரணத்திற்காக அமெரிக்க ஒன்றியத்தில் 1994-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியிலிந்து வெளியேற்றப்பட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பபட்டார்.

1997-ம் ஆண்டில் தனது 37-வது பிறந்தநாள் முதல் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, கோகைன் தவறாக பயன்படுத்தியதன் விளைவாக மோசமான உடல்நிலை மற்றும் அதிகப்படியான உடல் எடையினால் பாதிக்கப்பட்டார். 2005-ம் ஆண்டில் வயிற்றில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை எடை கூடுவதை தடை செய்வதற்கு உதவியது. கோகைன் பழக்கத்திலிருந்து விடுபட்ட பிறகு அர்ஜென்டினாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இவர் மிகவும் பிரபலமானார்.

இவரது வெளிப்படையான பேச்சு நிருபர்கள் மற்றும் விளையாட்டு உறுப்பினர்களுடன் சச்சரவை சில நேரங்களில் ஏற்படுத்தும். மேலாண்மையில் அவருக்கிருந்த முன்னனுபவம் குறைவு எனினும், 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளராக பதவியேற்றார்.
 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

ஆப்பிள் தோட்ட விவசாயிகளுக்கு உதவி செய்த ஒபிலியா புயல் (Photos)

 


ஆப்பிள் தோட்ட விவசாயிகளுக்கு உதவி செய்த ஒபிலியா புயல் (Photos)
 

அயர்லாந்தில் ஏற்பட்ட ஒபிலியா புயலால் விவவசாயிகள் நன்மை அடைந்துள்ளனர்.

ஒபிலியா புயல் அங்கு மிக மோசமான சேதங்களை உண்டுபண்ணியிருக்கிறது.

கட்டிடங்கள், வீடுகளின் மேற்கூரைகள் இதனால் சேதமடைந்துள்ளன.

ஆனால் டிப்பெயரி பகுதி ஆப்பிள் தோட்ட விவசாயிகளுக்கு மட்டும் ஒபிலியா புயல் உதவி செய்திருக்கிறது.

இந்த சீசனில் ஆப்பிள்கள் அதிகமாக தோட்டத்தில் விளைந்திருந்தன. இதனைப் பறிப்பது என்பது பல வாரங்களுக்கு செய்ய வேண்டிய கடினமான பணி என்று அவர்கள் நினைத்திருந்தனர்.

ஆனால், ஒபிலியா புயல் ஒரே இரவில் அனைத்து ஆப்பிள்களையும் நிலத்தில் தள்ளிவிட்டது.

மழையில் ஆப்பிள்கள் அடித்துச் செல்லப்படவில்லை.

போர்வை விரித்ததுபோல் நிலமே தெரியாதபடி ஆப்பிள்களால் தோட்டம் மூடப்பட்டிருந்தது.

மேலும், இந்த புயலால் பழங்கள் எந்த விதத்திலும் சேதமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

apple 1apple 2apple 3

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

 

மருதாணியால் ஒரு மணிமகுடம்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது முடியை இழப்பது மிகவும் கடினமான மற்றும் வருந்தத்தக்க ஒன்றாகும். ஆனால், மருதாணியின் மூலம் அவர்களின் தலையில் ஓவியம் வரைவது ஒரு மாற்று வழியாக அமைந்துள்ளது.

  • தொடங்கியவர்
பூமித்தாயைக் கொடுமைப்படுத்தாதீர்கள்!
 

image_1c8a2fa4c7.jpgகொட்டும் மழையிலும் நீர், நிலத்தில் உறிஞ்சப்பட வேண்டும். ஆனால், இன்று நகரத்தில் நிலங்கள் பூராவும், கட்டடங்கள் உருவாகி விட்டன. மேலும் கட்டடத்தின் முற்றங்களைக் கூட, சலவைக்கல் அல்லது சீமெந்துக் கலவை மூலம் மெழுகி விடுகின்றார்கள்.

இதனால், உஷ்ணம் பெருகி, மனிதர்களை வதைக்கின்றது. பெருவிருட்சங்களை அழித்து, அழகுக்காக குறோட்டன், நாகதாளி என என்னென்னவோ செடிகளை வளர்த்து அழகுபார்க்கின்றார்கள்.

கிணறு மூலமோ, ஆழ்துளைக் குழாய் மூலமோ நீர் பெற முடியாதுள்ளது. நிலத்தின் ஈரத்தன்மையைப் பேணாமல், பூமியிலிருந்து நீரை எப்படி எடுக்க முடியும்? மரங்கள் மூலம் பசுமை பெற்ற மனிதன், வளிபதனப்படுத்தி மூலம் விறைத்துப் போகின்றான்.

வீசு தென்றல் எங்கே? மழை ஏன்  நிலத்தில் விழ மறுக்கின்றது?இயற்கையை அழித்து இன்பம் காண முடியாது. ஏரியை, குளத்தை அழித்து வீடு கட்டுகின்றார்கள். பூமித்தாயைக் கொடுமைப்படுத்தாதீர்கள்!

  • தொடங்கியவர்

ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட கதை! #FeelGoodStory

 

டுபாட்டோடு, ஆத்மார்த்தமாக, அர்ப்பணிப்பு உணர்வோடு செய்கிற எந்தச் செயலுக்கும் பலன் உண்டு. சில நேரங்களில் அது, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத உயரத்தைத் தந்து, நம்மைத் திக்குமுக்காடச் செய்துவிடும். `கடமையைச் செய்... பலனை எதிர்பாராதே!’ என்கிற கூற்றைப் பின்பற்றுபவர்களில் பலருக்கும் கிடைக்கவேண்டிய பாராட்டோ, அங்கீகாரமோ, பலன்களோ கிடைக்காமல் போவதற்குக் காரணம், கடமையைக் `கடனே’ என்று செய்வதுதான். இதற்கு உதாரணங்களாக வரலாற்றில் ஏராளமான நிகழ்வுகளும், சம்பவங்களும், கதைகளும் உள்ளன. இங்கிலாந்தைச் சேர்ந்த டெய்ஸி ஆஷ்ஃபோர்டின் (Daisy Ashford) கதை நம்ப முடியாதது; ஆனால், உண்மை. அதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. டெய்ஸி ஆஷ்ஃபோர்டு முழு ஈடுபாட்டோடு செய்த ஒரு வேலை அவருக்கு வாரி வழங்கியது கொஞ்ச நஞ்சமல்ல. அப்படி என்ன செய்தார் டெய்ஸி... அவருக்குக் கிடைத்தது என்ன... பார்க்கலாமா? 

கதை

 

லண்டனின் தென்மேற்குப் பகுதியில் இருக்கிறது பீட்டர்ஷாம் (Petersham) கிராமம். அந்தக் கிராமத்தில்தான் இருந்தாள் குட்டிப்பெண் டெய்ஸி ஆஷ்ஃபோர்டு... ஒன்பது வயது துறுதுறுச் சுட்டி. இயற்கையின் வனப்பெல்லாம் கொட்டிக்கிடந்த கிராமம் அது. பக்கத்திலேயே தேம்ஸ் நதி ஓடிக்கொண்டிருந்தது. `மார்கரெட் மேரி ஜூலியா டெல்வின் (Margaret Mary Julia Devlin) என்று டெய்ஸிக்கு முழு நீளமான ஒரு பெயரைச் சொல்கிறது அவரின் வரலாற்றுக் குறிப்பு. டெய்ஸியின் அப்பா வில்லியம் ஆஷ்ஃபோர்டு ராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்தவர். அவருக்கும் அம்மா எம்மாவுக்கும் (Emma) டெய்ஸியின் மேல் அலாதிப் பிரியம். அதனாலேயே அவளைப் பொத்திப் பொத்தி வளர்த்தார்கள். அந்தச் சிறு பெண்ணைப் பள்ளிக்கு அனுப்ப மனமில்லாமல், வீட்டிலேயே ஆரம்பக் கல்வியைக் கற்றுக்கொடுத்தார்கள். டெய்ஸிக்குக் கதை என்றால் கொள்ளைப் பிரியம். படிக்கிற நேரம் போக, அம்மாவிடமும் அப்பாவிடமும் `கதை, கதை...’ என்று கேட்டுத் துளைத்தெடுப்பாள். அவர்கள் சொல்பவை மட்டுமல்ல... அவளே சில கதைகளையும் புனைந்து அம்மா அப்பாவுக்கும் சொல்வாள். 

டெய்ஸிக்கு எதையும் சட்டெனக் கிரகித்துக்கொள்ளும் திறமை இருந்தது. வீட்டுக்கு வருகிற விருந்தினர்கள், உறவினர்கள், அப்பாவின் நண்பர்கள் அத்தனைபேரின் உருவங்களையும் நடவடிக்கைகளையும் அப்படியே உள்வாங்கிக்கொள்வாள். அவர்களைப்போல் நடித்துக்காட்டுவாள். நான்கு வயதிலேயே அழகாக, சுவாரஸ்யமாகக் கதை சொல்லும் ஆற்றல் டெய்ஸிக்கு வந்துவிட்டது. அவள் சொல்லச் சொல்ல, அதைக் கேட்டு அப்பா அந்தக் கதையை எழுதினார். அந்தக் கதையின் பெயர் `தி லைஃப் ஆஃப் பாதர் மெக்ஸ்வைனி’ (The Life of Father McSwiney). ஒரு குழந்தையின் திறமை பளிச்சிடுவதும், மேலும் மேலும் வளர்வதும் பெற்றோரின் கையில்தான் இருக்கிறது. டெய்ஸியின் அப்பாவும் அம்மாவும் அவள் சொல்கிற கதைகளை விழிகள் விரியக் கேட்டார்கள்; மனதாரப் பாராட்டினார்கள்; வீட்டுக்கு வருகிறவர்களிடமெல்லாம் தங்கள் செல்லத்தின் பெருமையை எடுத்துச்சொன்னார்கள். டெய்ஸியின் கதை சொல்லும் ஆற்றல் படிப்படியாக வளர்ந்தது. 

குழந்தைப் பருவ டெய்ஸி

அது 1890-ம் ஆண்டு. பனிக்காலம். அப்போது டெய்ஸியின் குடும்பம் லீவிஸ் (Lewes) என்ற இடத்தில் இருந்தது. இங்கிலாந்தில் சிறு குழந்தைகளாக இருந்தாலும், அவர்களுக்குத் தனி அறை கொடுத்திருப்பார்கள். அவர்கள் சுதந்திரமாக, தங்கள் தனித்துவத்தை இழக்காமல் வளர வேண்டும் என்கிற எண்ணம்தான் அதற்குக் காரணம். ஒன்பது வயது டெய்ஸி, அந்தப் பனிக்காலத்தில் தனி அறையில் இருந்தாள். பகல் நேரத்தில்கூட அதிகமாக வெளியே வர முடியாது. வாட்டியெடுக்கும் பனி அவளை அறைக்குள்ளேயே முடக்கிப்போட்டிருந்தது. சும்மாவும் அவளால் இருக்க முடியவில்லை. படித்த புத்தகங்களையே எத்தனை முறைதான் படிப்பது? புதிதாக எதையாவது எழுத வேண்டும் என்கிற ஆசை அவளை உந்தித் தள்ளியது. தான் பார்த்த மனிதர்கள், வீட்டுக்கு வந்தவர்கள் அத்தனை பேரையும் மனக்கண்ணில் கொண்டுவந்தாள். அவர்களை வைத்து ஒரு பெரிய கதையாக (நாவல்) எழுதினால் என்ன என்கிற எண்ணம் தோன்றியது. உடனே அவள் கைக்குக் கிடைத்தது ஒரு எக்சர்ஸைஸ் நோட் புக்தான். அவள் யோசிக்கவே இல்லை. ஒவ்வோர் அத்தியாயமாக தான் நினைத்த கதையை அந்த நோட்டுப் புத்தகத்தில் வடிக்க ஆரம்பித்தாள். 

அதன்பிறகு பனிக்காலம் டெய்ஸிக்குக் கடினமானதாக இருக்கவில்லை. குடும்பத்தோடு சாப்பிட அவள் ஹாலுக்கு வரும் நேரம் தவிர, தன் அறையிலேயே பழியாகக் கிடந்தாள். தான் நினைத்த கதையை ஆர்வத்தோடு எழுதினாள். அவ்வப்போது எழுதிய பக்கங்களைப் படித்துப் பார்ப்பாள். கற்பனையை விரிப்பாள். மறுபடி எழுத ஆரம்பிப்பாள். ஒருவழியாக தான் எழுத நினைத்த முழுக் கதையையும் எழுதி முடித்துவிட்டாள் டெய்ஸி. ஆனால், அதை என்ன செய்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. யாரிடமாவது காட்ட வேண்டும் என்றுகூட அப்போது அவளுக்குத் தோன்றவில்லை. அதை அப்படியே ஒரு மேஜை இழுப்பறையில் வைத்தாள்; மூடினாள்; பிறகு அப்படியே மறந்து போனாள். 

டெய்ஸி ஆஷ்ஃபோர்டு

எல்லோருக்கும், எல்லாக் காலங்களிலும், எல்லாமும் பிடிப்பதில்லை. டெய்ஸிக்கும் அதுதான் நடந்தது. டீன் ஏஜ் பருவத்திலேயே எழுதுவதை நிறுத்திவிட்டாள் டெய்ஸி. அது என்னவோ புனைகதைகளின் மேலிருந்த ஈர்ப்பு அவளுக்குக் குறைந்துபோய், ஒரு கட்டத்தில் காணாமலேயே போய்விட்டது. வாழ்க்கை, பணிச்சூழல் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக டெய்ஸியின் குடும்பம் இடம்பெயர்ந்துகொண்டே இருந்தது. பெக்ஸ்ஹில் (Bexhill) என்கிற இடத்துக்குப் போனது; பிறகு லண்டனுக்குப் போனது. அங்கே ஒரு நிறுவனத்தில் செக்ரட்டரியாகப் பணிபுரிந்தார் டெய்ஸி. பிறகு, முதல் உலகப்போரின்போது தென்கிழக்கு இங்கிலாந்தில் இருக்கும் டோவர் என்கிற இடத்தில் ஒரு கேன்டீன்கூட வைத்து நடத்தினார். வாழ்க்கை அதுபாட்டுக்கு வேகமெடுத்துப் போய்க்கொண்டே இருந்தது. 

அது, 1917-ம் ஆண்டு. டெய்ஸிக்கு 36 வயது. லீவிஸில் இருந்த அம்மா இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது. பழைய நினைவுகளைச் சுமந்தபடி லீவிஸுக்குப் போனார். அம்மாவின் இறுதிச் சடங்குகள் முடிவடைந்தன. மிக நெருங்கியவர்களைத் தவிர, ஒவ்வொருவராக விடைபெற்றுப் போனார்கள். டெய்ஸியும் அவருடைய சகோதரியும் தாங்கள் இருந்த பழைய அறைகளுக்குப் போய், தாங்கள் விட்டுச் சென்ற பொருள்களைப் பார்த்து நெகிழ்ச்சியோடு பேசிக்கொண்டார்கள். அம்மா தங்கள் பொருள்களை இத்தனை ஆண்டுகாலம் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறாரே என வியந்தார்கள். டெய்ஸி, தன் மேஜையைத் துழாவியபோது அவர் ஒன்பது வயதில் எழுதிய அந்த நாவல் கிடைத்தது. முழுக்க முழுக்க பென்சிலால் எழுதப்பட்ட நாவல். அதை எடுத்து படிக்கப் படிக்க டெய்ஸிக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. நிறைய எழுத்துப் பிழைகள்... ஒவ்வோர் அத்தியாயமும் முழு பாராவாக இருந்தன. அதையும் தாண்டி, தான் எழுதிய எழுத்து அவருக்கே புதிதாக இருந்தது. 

புத்தகம்

டெய்ஸிக்கு ஒரு தோழி இருந்தார். பெயர் மார்கரெட் மக்கின்ஸி (Margaret Mackenzie). அந்த நேரத்தில் குளிர் ஜுரத்தால் பாதிக்கப்பட்டு வீட்டில் படுக்கையில் இருந்தார் மார்கரெட். தன் தோழியின் வீட்டுக்குப் போனார் டெய்ஸி. ``மார்கரெட்... உனக்கு உடம்பு சரியில்லைதான். உன் நிலைமை எனக்கும் புரியுது. ஆனா, எனக்கு ஓர் உதவி செய்யேன்... நேரம் கிடைக்கும்போது, இதைப் படிச்சுட்டு எப்பிடி இருக்குனு சொல்லேன். நான் ஒன்பது வயசுல இதை எழுதினேன். இப்போ படிக்கும்போதும் புதுசா இருக்கு’’ என்று சொல்லி தன் நாவலைக் கொடுத்தார். அந்தக் கடுமையான ஜுரத்திலும் மார்கரெட்டை அந்த நாவல் ஈர்த்ததுதான் ஆச்சர்யம். தான் படித்ததோடு நிற்காமல், தனக்குத் தெரிந்த பலருக்கும் அந்தக் கையெழுத்துப் பிரதியைப் படிக்கக் கொடுத்தார் மார்கரெட். பல கைகளுக்கு மாறியது அந்த நாவல். கடைசியாக நாவலாசிரியர், ஃப்ராங்க் ஆர்தர் ஸ்வின்னர்டோன் (Frank Arthur Swinnerton) என்பவரிடம் போய்ச் சேர்ந்தது. அவருக்கு அதை ஒரு புத்தகமாகக் கொண்டு வரலாமே என்று தோன்றியது. 

முதல் வேலையாக ஒரு பதிப்பாளரைப் பிடித்தார். அந்தப் பதிப்பகத்தின் பெயர் சாட்டோ & வைண்டஸ் (Chatto & Windus). அதுவும் சாதாரண நிறுவனம் கிடையாது. பிரபல பதிப்பாளர்களான `ரேண்டம் ஹவுஸ்’-ன் கிளை அது. அவர்கள் அதைப் புத்தகமாகக் கொண்டுவர ஒப்புக்கொண்டார்கள். `ஆனால், ஆசிரியர் புதியவராயிற்றே... பிரபல எழுத்தாளர்கள் யாராவது அணிந்துரை எழுதித்தந்தால் நல்லது’ என்றும் சொன்னார்கள். அதற்கும் ஒருவரைப் பிடித்தார் ஃப்ராங்க். அவர் `பீட்டர் பேன்’ என்ற பிரபல நாவலை எழுதிய ஜே.எம்.பேரி (J.M.Barrie). 1919-ம் ஆண்டு, பேரியின் அணிந்துரையோடு, டெய்ஸியின் `தி யங் விசிட்டர்ஸ்’ (The Young Visiters) என்ற அவரின் நாவல் வெளியானது. நாவல் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அந்த வருடத்தின் `பெஸ்ட் செல்லர்’ என்கிற பெயரையும் வாங்கியது. முதல் வருடத்திலேயே 18 பதிப்புகள் விற்பனையாயின. அதற்குப் பிறகும் பல ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. டெய்ஸிக்கு அந்த நாவலின் மூலமாகக் கிடைத்த ராயல்டி தொகையே பல லட்ச ரூபாய்கள்.1920-ம் ஆண்டு ஜேம்ஸ் டெல்வின் என்பவரை மணந்துகொண்டார் டெய்ஸி. 

புத்தகம்

 

புத்தகமாக மட்டுமல்ல... அவரின் `தி யங் விசிட்டர்ஸ்’ நாவல் நாடகமாக, இசை நிகழ்வாக, இருமுறை திரைப்படமாக, தொலைக்காட்சித் தொடராக எடுக்கப்பட்டு வசூலில் பட்டையைக் கிளப்பியது. பணத்தை ராயல்டி என்கிற பெயரில் மழையாகப் பொழிந்தது என்றும் சொல்லலாம். அதற்குப் பிறகு அவர் புதிதாக எதையும் எழுதவில்லை என்றாலும், ஆரம்பகாலத்தில் ஆத்மார்த்தமாக அவர் எழுதிய படைப்புகளே இறுதிக்காலம் வரை அவர் வாழ்க்கையை வளமாக வாழ வழி செய்துகொடுத்தன. ஒரு பத்திரிகைக்குப் பேட்டியளித்தபோது டெய்ஸி இப்படிச் சொன்னாராம்... ``எனக்குச் சுத்தமான காற்றும் ராயல்டி செக்குகளும் மிகவும் பிடித்தவை!’’. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

2015 : ரஷ்ய விமானம் வெடித்துச் சித­றி­யதால் 224 பேர் பலி!

வரலாற்றில் இன்று…
ஒக்டோபர் – 31

 

1517 : மார்ட்டின் லூதர், கிறிஸ்­தவ சீர்­தி­ருத்தம் தொடர்­பான தனது 95 கொள்­கை­களை ஜேர்­ம­னியின் விட்­டன்பேர்க் தேவா­லய வாசலில் வெளி­யிட்டார்.

1803 : கெப்டன் ட்றைட்பேர்க் தலை­மையில் பிரித்­தா­னியப் படை­யினர் பண்­டா­ர­வன்­னி­யனின் படை­களைத் தாக்­கினர்.

1863 : நியூ­ஸி­லாந்தில் நிலை கொண்ட பிரித்­தா­னியப் படைகள் “வைக்­காட்டொ” என்ற இடத்தில் தாக்­கு­தலை நடத்­தி­யதைத் தொடர்ந்து மவோரி போர்கள் மீண்டும் ஆரம்­ப­மா­கின.

1876 : இந்­தி­யாவின் கிழக்குக் கரையில் இடம்­பெற்ற மிகப்­பெரும் சூறா­வளி கார­ண­மாக 200,000 பேர் வரை இறந்­தனர்.

Metrojet-Flight-9268.jpg1913 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் முத­லா­வது நெடுஞ்­சா­லை­யான லிங்கன் நெடுஞ்­சாலை திறக்­கப்­பட்­டது.

1924 : உலக சேமிப்பு நாள் இத்­தா­லி யின் மிலானோ நகரில் சேமிப்பு வங்­கி­களின் உலக அமைப்­பினால் அறி­விக்­கப்­பட்­டது.

1931 : தமிழின் முதல் பேசும் பட­மான “காளிதாஸ்” வெளி­யா­னது.

1941 : இரண்டாம் உலகப் போரில் ஐஸ்­லாந்­துக்கு அருகில் அமெ­ரிக்கக் கப்பல் ஒன்றை ஜேர்­ம­னியின் படகு தாக்கி மூழ்­க­டித்­ததில் 100 அமெ­ரிக்கக் கடற்­ப­டை­யினர் கொல்­லப்­பட்­டனர்.

1941 : இங்­கி­லாந்தில் தொழிற்­சாலை ஒன்று தீப்­பற்­றி­யதில் 49 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1954 : அல்­ஜீ­ரி­யாவில் பிரெஞ்சு ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக அல்­ஜீ­ரிய தேசிய விடு­தலை முன்­னணி போராட்­டத்தை ஆரம்­பித்­தது.

1956 : ஐக்­கிய இராச்­சியம் மற்றும் பிரான்ஸ் சூயஸ் கால்வாயைத் திறக்க வற்­பு­றுத்தி எகிப்தின் மீது குண்­டு­களை வீசின.

1961 : ஸ்டாலினின் உடல் மொஸ்­கோவில் உள்ள லெனினின் நினை­வ­கத்தில் இருந்து அகற்­றப்­பட்­டது.

1963 : இண்­டி­யா­னாவில் பனிக்­கட்டி சறுக்கல் களி­யாட்ட விழா ஒன்றின் போது இடம்­பெற்ற வெடி விபத்தில் 74 பேர் கொல்­லப்­பட்டு 400 பேர் காய­ம­டைந்­தனர்.

1968 : வியட்நாம் போர்: பாரிஸ் சமா­தானப் பேச்­சுக்­களில் முன்­னேற்றம் ஏற்­பட்­டதைத் தொடர்ந்து வட வியட்நாம் மீதான அனைத்துத் தாக்­கு­தல்­க­ளையும் நவம்பர் 1 இலி­ருந்து நிறுத்­து­வ­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி லின்டன் ஜோன்சன் அறி­வித்தார்.

varalaru-1-indra-Gandhi-356x400.jpg1973 : அயர்­லாந்தில் டப்ளின் நகர சிறை ஒன்றில் இருந்து வெளி­யே­றிய மூன்று ஐரியக் குடி­ய­ரசு இரா­ணு­வத்­தினர் அங்கு தரை­யி­றங்­கிய கடத்­தப்­பட்ட ஹொலி­கொப்டர் ஒன்றில் தப்­பிச்­சென்­றனர்.

1984 : இந்­தியப் பிர­தமர் இந்­திரா காந்தி இரண்டு சீக்­கியப் பாது­கா­வ­லர்­களால் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார். அதன் பின்னர் டில்­லியில் இடம்­பெற்ற கல­வ­ரத்தில் சுமார் ஆயி­ரக்­க­ணக்­கான சீக்­கி­யர்கள் கொல்­லப்­பட்­டனர்.

1994 : அமெ­ரிக்க விமானம் ஒன்று கடும் பனி கார­ண­மாக இண்­டி­யானா மாநி­லத்தில் விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 68 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1996 : பிரே­ஸிலில் விமா­ன­மொன்று வீழ்ந்து நொருங்­கி­யதில் அதில் பயணஞ் செய்த 98 பேரும் தரை­யி­லி­ருந்த 2 பேரும் கொல்­லப்­பட்­டனர்.

1999 : எகிப்­திய விமா­ன­மொன்று அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தில் வீழ்ந்­ததில் அதில் பயணஞ் செய்த 217 பேரும் கொல்­லப்­பட்­டனர்.

2000 : சிங்­கப்பூர் போயிங் – 747 ரக விமானம் தாய்­வானில் விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 83 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2000 : சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் தங்­கி­யி­ருக்­கப்­போகும் முதல் தொகுதி விண்­வெளி வீரர்­க­ளுடன் ரஷ்­யாவின் சோயுஸ் விண்­கலம் விண்­வெ­ளிக்கு ஏவப்­பட்­டது.

2000 : வடக்கு அங்­கோ­லாவில் தனியார் அண்­டோனொவ் விமானம் வெடித்துச் சித­றி­யதில் 50 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2003 : 22 ஆண்­டுகள் ஆட்­சியின் பின்னர் மலே­ஷியப் பிர­தமர் மஹதிர் பின் மொஹமத் தமது பத­வியைத் துறந்தார்.

2011 : உலக சனத்­தொகை 700 கோடி எண்­ணிக்­கையை அடைந்­தது.

2012 : திவி­நெ­கும சட்­ட­மூ­லத்தின் சில சரத்­துகள் அர­சி­ய­ல­மைப்­புக்கு முரணானவை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் தொடர்ச்சியாக உயர்நீதிமன்ற நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க பின்னர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

2015 : ரஷ்யாவின் மெட்ரோஜெட் 9268 விமானம், எகிப்தின் சினாய் பிராந்தியத்தில் வெடித்துச் சிதறியதால் விமானத்திலிருந்த 224 பேரும் கொல்லப்பட்டனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

வைரலான ஸ்டீபன் ஹாக்கிங் கட்டுரையில் அப்படி என்ன இருக்கிறது?

“என்னுடைய ஆராய்ச்சிகள் மட்டுமல்லாது, அனைவரின் ஆராய்ச்சிகளும் இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் இலவசமாக, தடையின்றி படித்துக்கொள்ளும் வசதி செய்து தரப்பட வேண்டும்.”    

ஸ்டீபன் ஹாக்கிங்

 

உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் வார்த்தைகள் இவை. இளம் வயதில் மோட்டார் நியூரான் நோய் தாக்கி தன் உடலின் செயல்பாட்டை இழந்தார். இருந்தபோதும், அறிவியல் மேல் அவருக்கிருந்த காதல் கொஞ்சமும் குறையவில்லை. தன் 24ம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு பயின்று வந்தபோது 134 பக்கங்கள் கொண்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதினார். “விரிவடையும் பேரண்டத்தின் பண்புகள்” (Properties of expanding universes) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அது நம் அண்டத்தின் மீது நமக்கு அப்போதிருந்த இருந்த அறிவை மேலும் அகலப்படுத்தியது. எண்ணற்ற பல விடையில்லா கேள்விகளுக்கு விடைகள் தானாகப் புலப்பட்டது. முனைவர் பட்டம் பெற இதையே தன் ஆய்வறிக்கையாகச் சமர்ப்பித்தார். இது நடந்த வருடம் 1965.

சென்ற வாரம் வரை, இந்த ஆய்வறிக்கையைப் படிக்க, நகல் எடுக்க ஒரு மாணவன் 65 பவுண்டுகள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்திற்குக் கட்டணமாக செலுத்த வேண்டும். தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இதை இலவசமாகப் படித்துக்கொள்ள, தரவிறக்கம் செய்ய அனுமதியளித்துள்ளது. தன்னுடைய இணையத்தளத்திலேயே இந்த ஆய்வுக் கட்டுரையின் ஸ்கேன் செய்த நகலை வெளியிட்டுள்ளது. வெளியான ஒரு வாரத்திலேயே, 20 லட்சம் வியூஸ்களைத் தாண்டியுள்ளது இந்தக் கட்டுரை. இதுவரை, சுமார் 5 லட்சம் பேர் இதைத் தரவிறக்கம் செய்துள்ளார்கள்.

அப்படி என்ன இருக்கிறது அந்தக் கட்டுரையில்?    

ஆராய்ச்சிக் கட்டுரை

Photo Courtesy: Cambridge University/Stephen Hawking

விரிவடைந்து கொண்டே இருக்கும் நமது பேரண்டத்தின் பல்வேறு பண்புகளை குறித்து அலசி ஆராய்கிறது இந்த ஆய்வுக் கட்டுரை. அண்டம் விரிவடைவதால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் விளைவுகள் என்னென்ன என்பதைச் சுற்றி பல்வேறு கோட்பாடுகள் மற்றும் விளக்கங்களை முன்வைக்கும் இது, இயற்பியல் உலகில் ஓர் அசாத்திய மைல்கல். இதன் ஒவ்வொரு பகுதியும் எதைக் குறித்துப் பேசுகிறது என்று காண்போம்.

முதல் பகுதி, நம் அண்டம் விரிவடையும் நிகழ்வு எவ்வாறு ஹோயல்-நர்லிகர் அவர்களின் ஈர்ப்புவிசை கோட்பாட்டை (Hoyle-Narlikar theory of gravitation) பாதிக்கிறது என்று விளக்குகிறார். இரண்டாம் பகுதியில், ஒரே இயல்புடைய சமநிலையற்ற பிரபஞ்சம் விரிவடைவதால் இயல்பான அதன் பண்புகளில் என்னவெல்லாம் மாற்றங்கள் நிகழும் என்பது குறித்து விவரிக்கிறார். இதே பகுதியில், சமீபத்தில் உணரப்பட்ட ஈர்ப்புவிசை அலைகள் குறித்தும் அப்போதே பேசியுள்ளார். மூன்றாம் பகுதியில் ஈர்ப்புவிசை அலைகள் அணுகுகோட்டுவிரிவின் அடிப்படையில் (asymptotic expansion) நம் அண்டத்தில் எவ்வாறு பரவுகிறது என்று விளக்குகிறார். இறுதிப் பகுதியில் விரிவடையும் அண்டங்கள் ஒரு மையப்பகுதியில் குவிந்து (Singularity) நிலைகுலையும் தன்மையைப் பற்றி விளக்குகிறார்.

ஸ்டீபன் ஹாக்கிங்

Photo Courtesy: Hawking.org

இந்த ஆராய்ச்சி முழுவதும் இலவசமாக இணைய உலகத்தில் பகிரப்பட்டதை குறித்துக்கருத்துத் தெரிவித்த ஸ்டீபன் ஹாக்கிங், “இதன் மூலம் இளைய சமுதாயத்தை என் ஆராய்ச்சிகள் ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன். நான் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் போது, என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது ஐசக் நியூட்டன், ஜேம்ஸ் கிளெர்க் மேக்ஸ்வெல் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றோரின் ஆராய்ச்சிகள்தான். இப்பேரண்டத்தில் நாம் எந்தப் புள்ளியில் இருக்கிறோம், எவ்வாறு இருக்கிறோம், மாபெரும் அண்டத்தின் தன்மையை உணர்வது போன்ற புரிதல்களை இந்த ஆராய்ச்சியின் மூலம் பெற்றுவிட முடியும்” என்று தெரிவித்தார்.

ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் இந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் மேலும் ஒரு சிறப்பு அம்சம், இது முழுக்க முழுக்க தட்டச்சு செய்யப்பட்ட ஒரு புத்தகம். 1966ம் ஆண்டில் எழுதப்பட்டதால், அப்போது தட்டச்சில் பல கணிதக் குறியீடுகள் கிடையாது. எனவே, அவை மட்டும், தேவையான இடத்தில் கைகளால் எழுதப்பட்டுள்ளன.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சென்னை 2 சிங்கப்பூர்

  • தொடங்கியவர்

தீவகப் பகுதியை நாடிவரும் வெளிநாட்டுப் பறவைகள்

 
தீவகப் பகுதியை நாடிவரும் வெளிநாட்டுப் பறவைகள்

தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் வெளிநாட்டுப் பறவை இனங்கள் யாழ். தீவகப் பகுதியில் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி, சாட்டி, வேலணை, மண்டைதீவு போன்ற பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி இப் பறவை இனங்கள் அதிகமாக வருகை தருகின்றன.

இதனால் வெளிநாட்டிலிருந்து வரும் பறவையினங்களை இரசிப்பதற்காக பலரும் குறித்த இடத்திற்கு வருவதோடு அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

IMG-2d9309cbb45bcd9557f0ad103dbca183-V.j

IMG-4d9f35fd39cc01cc7ce5f5270d6c53e9-V.j

IMG-8b40484faa093c52796aca3c71bbb7e4-V.j

IMG-9f1c544ba0208665c76f808c91c7b023-V.j

IMG-47ed28d78953de36752b654d4db1786b-V.j

IMG-57d2a209b95ae5d31f541c83ed43b4ac-V.j

IMG-98b5f1a6372bd94c63762761b41c3576-V.j

IMG-1872afa88f5617f51f6a71075e6979da-V.j

IMG-04322f1b735b28b443042c503c3df41d-V.j

IMG-5887e7d36afaad50b4bc0aeddd2ee70a-V.j

IMG-42195c666248673864b96832c7d8182f-V.j

IMG-62267b4e9b38f0916c3554676a3c41d0-V.j

IMG-98367bb01a1df1bd04a180acc0a650a5-V.j

IMG-a83437c1bdd9e30fecac10115f80fba8-V.j

IMG-fb3679c210e1e8620fe1bdae627f1d75-V.j

 

http://newuthayan.com

  • தொடங்கியவர்

300 வருட ஆல மரத்திற்காக நிலத்தை விட்டுத்தரும் விவசாயிகள்

பஞ்சாபில் 300 வருடம் பழமையான ஆல மரத்தை பாதுகாப்பதற்காக, தங்களது சொந்த நிலங்களை விட்டுக்கொடுக்கும் விவசாயிகள் பற்றிய காணொளி.

  • தொடங்கியவர்

மெல்லத் திறக்கும் கதவு!

 
13chgowSan%20Marco

மிதக்கும் நகரம் என்றழைக்கப்படும் வெனிஸ் நகரின் அடையாளம் ‘புரோகுராட்டி வெக்கி’ (Procuratie Vecchie). இது வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடம்.

500 ஆண்டுகளாக இத்தாலிய அரச குடும்பம், அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது, இந்தக் கட்டிடத்தைப் பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்க முடிவுசெய்திருக்கிறது இத்தாலிய அரசு. வெனிஸ் நகரில் பியாசா சான் மார்கோவில் அமைந்திருக்கும் இந்தக் கட்டிடம், கலை நிகழ்ச்சிகள், ஓவியக் காட்சிகள், கருத்தரங்குகள், அரசு நலத் திட்டங்களுக்காகப் பயன்படவிருக்கிறது.

பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் சர் டேவிட் சிப்பர்ஃபீல்ட், இந்தக் கட்டிடத்தைப் புனரமைக்க உள்ளார். 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம், வெனிஸ் நகரின் மிக நீளமான (500 அடி) கட்டிடம் என்ற பெயரைப் பெற்றது. வெனிஸ் நகரத்துக்குச் சுற்றுலா செல்லும் பயணிகள் அனைவரும் இந்தக் கட்டிடத்தின் பின்னணியில்தான் அதிகமான ஒளிப்படங்களை எடுத்திருக்கின்றனர்.

இரண்டு நூற்றாண்டுகளாக, இந்தக் கட்டிடம் உலகின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ‘ஜெனரலி குழும’த்தின் தலைமை அலுவலகமாக இயங்கிவந்தது. இந்தக் குழுமம்தான் தற்போது இந்தக் கட்டிடத்தைப் புனரமைப்பதற்கு நிதி உதவியும் அளித்திருக்கிறது. 2020-ம் ஆண்டுக்குள், இந்தக் கட்டிடம் புனரமைக்கப்பட்டு, பொது மக்களின் பார்வைக்குத் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 500 ஆண்டுகளாக இந்தக் கட்டிடத்தின் உள்ளே செல்ல முடியாத மக்களுக்கு, இனி அந்தக் கட்டிடத்தைச் சுற்றிப் பார்க்க இதன் மூலம் வாய்ப்பும் கிடைக்கவிருக்கிறது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

80 வயது மகனை கவனித்துக்கொள்ளும் 98 வயது தாய்

coltkn-10-31-fr-01150309342_5680682_3010

இங்கிலாந்தில் தனது 80 வயது மகனை கவனித்துக்கொள்வதற்காக 98 வயது தாய் ஒருவர் மகனுடன் பராமரிப்பு நிலையத்தில் தங்கி வருகிறார்.

டொம் கீட்டிக்கு மேலும் பராமரிப்பு மற்றும் உதவிகள் தேவைப்படுவதால் கடந்த ஆண்டு தொடக்கம் லிவர்பூலில் இருக்கும் பராமரிப்பு நிலையம் ஒன்றில் தங்கி வருகிறார். இந்நிலையில் முதிய தாய் தனது மூத்த மகனை பராமரிப்பதற்காக அதே பராமரிப்பு இல்லாத்தில் சேர்ந்துள்ளார்.

தற்போது அந்த தாயும் மகனும் ஒரே பராமரிப்பு நிலையத்தில் விளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டும் காலத்தை செலவிடுகின்றனர். டொம் திருமணம் முடிக்காத நிலையில் தனது தாயுடனேயே வாழ்ந்து வந்துள்ளார்.

“ஒவ்வொறு இரவும் நான் டொம்மின் அறைக்கு சென்று நல்லிரவு கூறுவேன், அங்கு சென்று நான் அவருக்கு காலைவந்தனம் கூறுவேன்” என்று அந்த தாய் குறிப்பிட்டார். டொம் ஓய்வு பெறும் முன் கட்டட நிறுவனம் ஒன்றில் அழகுபடுத்துபவராக பணியாற்றி இருப்பதோடு அவரது தாய் தாதியாக பணியாற்றியுள்ளார். 

http://www.thinakaran.lk

  • தொடங்கியவர்

 

சென்னை TO சீனா: அசத்தும் குட்டி மெஸ்ஸி ஜோஷ்வா !

4 வயதில் இருந்ததே கால் பந்து ஆட்டம் மேல் கவனம் செல்ல, நம்ம குட்டி மெஸ்ஸி ஜோஷ்வா தான் பயணத்தை தொடங்கினர். நடுத்தர குடும்பத்தை சேர்த்த இவர் தான் தனித்துவ திறமையால் கோடம்பாக்கம் விஸ்டம் கிளப்பில் அழைக்கப்பட்டார். பின்னர் பல பல வெற்றிகளை கண்டார். அவரின் இந்த முயற்சி அவரை சீனாவுக்கு அழைத்து சென்றது. இறுதிவரை கால் பந்து ஆட்டத்தில் நல்ல நிலைக்கு வருவதே என்று முடித்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.