Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: நவம்பர் 26
 

1944: ஜேர்மனியின் வி-2 ரொக்கட் மூலம் பிரிட்டனில் வர்த்தக நிலையமொன்று தாக்கப்பட்டதில் 168 பேர் பலி.


1944: பெல்ஜியத்தின் மீது ஜேர்மனி வி-2 ரொக்கட் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தது.


1949: டாக்டர் பி.ஆர். அம்பேத்காரினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பை இந்திய நாடாளுமன்றம் அங்கீகரித்தது.


1950: கொரிய யுத்ததத்தில் தென்கொரியா மற்றும் ஐ.நா. படைகளுக்கு எதிராக சீனா பாரிய தாக்குதல்களை ஆரம்பித்தது.


1954: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தார்.


1965:அஸ்டெரிஸ்-1 செய்மதியை சஹாரா பாலைவனத்தில் வைத்து ஏவியதன் மூலம் செய்திமதியை ஏவிய மூன்றாவது நாடாகியது பிரான்ஸ்.

 

1983: லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் 6800 தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டன.

 

1990: விண்கலங்களை ஏற்றிச்செல்லும் டெல்டா –ii ரொக்கட் தனது முதல் பறப்பை ஆரம்பித்தது.

 

2008: மும்பையில் தொடர் தாக்குதல்களில்  175 பேர் பலி, 300 இற்கும் அதிகமானோர் காயம்.

http://www.tamilmirror.lk/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நாம் வீசியெறிந்ததை எடுத்து வர நாய்கள் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகின்றன? #KnowScience

 
 

மாலை நேரம். பூங்காவின் மேல் வானம் ஆரஞ்சு போர்வை போர்த்தியிருந்தது. “மணி… தோ… தோ!” என்று ஒரு குரல் புதருக்கு அப்பால் கேட்டது. சடாரென அந்தப் புதரின் இலைகளைக் கிழித்து கொண்டு மஞ்சள்நிற டென்னிஸ் பந்து ஒன்று பறந்துவந்து விழுந்தது. பின்னாடியே புதரைச் சுற்றிக்கொண்டு பிரவுன் நிற நாய் ஒன்று வந்தது. அதுதான் ‘மணி’யாக இருக்கக் கூடும் என்று நினைக்கும் போதே, அதை உறுதிசெய்யும் வகையில் பிரவுன் மணி அந்த டென்னிஸ் பந்தை கவ்விக் கொண்டு, குரல்வந்த திசையை நோக்கி ஓடியது. இதேபோல் ஒருமுறை இருமுறை அல்ல; பதினான்கு முறை அதுவும் விடாமல், சளைக்காமல் செய்தது.

நாய்கள்

 

ஒவ்வொருமுறை பந்தை கவ்விக்கொண்டு தன் எஜமானனை நோக்கித் திரும்ப ஓடும்போது அதன் முகத்தில் இருந்த பேரார்வம், மகிழ்ச்சி, போன்றவற்றை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. மணி அந்தப் பூங்காவை விட்டுச் சென்ற பின்னும், அதன் இந்தச் செயல் நம் கண் முன்னே ஓடிக் கொண்டே இருந்தது. மணி மட்டும் அல்ல, எதற்காக அனைத்து நாய்களும், இந்த விளையாட்டை விளையாடப் பேரார்வம் காட்டுகின்றன என்ற கேள்வியும் தான். அதுவும் செஞ்சுரி அடித்த கோலி போலக் குறையாத அந்த உற்சாகம் எதனால் தோன்றுகிறது?

இன்று பெரும்பாலானவர்கள், தங்கள் நாய்களை எதையாவது எடுத்து வரப்பழக்கி விடுகின்றனர். காலையில் செய்தித்தாள்களை, பால் பாக்கெட்களை எல்லாம் கவ்விக் கொண்டு வீட்டிற்குள் வரும் நாய்களைப் பல இடங்களில் நாம் பார்த்திருப்போம். இப்படி ஒரு பொருளை எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்று நாம் பயிற்சி அளிக்கிறோம் என்றாலும், அவை காட்டும் பேரார்வம், சலிக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்து வரும் பொறுமை, சில சமயம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இதற்கு விடைகாண, அறிவியல் அகராதியை மட்டுமல்ல, நாய்களின் வரலாற்றையும் கொஞ்சம் புரட்ட வேண்டும்.

ஒரு பொருளை எடுத்துக்கொண்டு வந்து தன் எஜமானனிடம் சேர்க்க வேண்டும் என்ற எண்ண ஓட்டம், அதன் ஜீன்களிலேயே புதைந்துபோன ஒரு விஷயம். கற்காலத்தில் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த மனிதர்கள், ஒரு சில நேரங்களில் வேட்டைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும். புயல், வெள்ளம், பெருமழை போன்ற நாட்களில் வேட்டைக்குச் செல்ல முடியாது. குகைகளிலேயே முடங்கிக் கிடைக்க வேண்டியது தான். அப்போது உணவுக்கு என்ன செய்வது? அதற்காக நாய்களைப் பழக்கினான். சாதாரண நாட்களில், மாமிசங்கள், காய்கள், பழங்களைக் காட்டுக்குள் வீசி எறிந்தான். நாய்கள் அவற்றைத் தேடி எடுத்துவந்தன. பின்னர், இயற்கை பேரிடர் நாட்களில், நாய்கள் தாமாகவே காட்டிற்குள் சென்று, மிருகங்கள் வேட்டையாடியது போக, மீதமிருக்கும் மாமிசங்கள், உண்ணத் தகுந்த பழங்கள் மற்றும் காய்களை எடுத்து வரத் தொடங்கின. அதை வைத்து மனிதன் பசியை போக்கிக் கொண்டான்.

நாய்கள்

இதில் இருந்த ஒரேயொரு பிரச்னை, அனைத்து நாய்களும் இந்த வேலையைச் செய்ய தயாராயில்லை. குறிப்பிட்ட இனங்கள் மட்டுமே இந்த வேலையை விரும்பிச்செய்தன. இதைப் பார்த்த கற்கால மனிதன் அந்த இனநாய்களை மட்டும் இனப்பெருக்கம் செய்ய அனுமதித்தான். மற்ற இன நாய்களை விரட்டிவிட்டான். ஏனென்றால், அந்தவகை நாய்கள்தானே அவனுக்கு வேண்டும்? இனப்பெருக்கம் செய்து பிறந்த நாய்கள், இயற்கையாகவே இந்த வேலையைச் செய்யத் தயாராகவும், பேரார்வம் மிக்கதாகவும் இருந்தன. இந்த வேட்டையாடும் இன நாய்களுக்குள் கலப்பின இனப்பெருக்கம் செய்ய வைத்து நாய்கள் சாம்ராஜ்யத்தை மேலும் வலிமை படுத்தினான்.

 

இப்போது நாம் வளர்க்கும் பெரும்பாலான நாய்கள், கற்காலத்தில் மாமிசங்களை, உணவுகளைக் காட்டில் இருந்து எடுத்து வந்த இனங்கள்தான். இதனால்தான், இயல்பிலேயே நம் நாய்கள் வீசியெறிந்த பொருட்களை எடுத்துவர ஆர்வம் காட்டுகின்றன.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

26/11 மும்பை தாக்குதல்: தீவிரவாதி கசாப்பை அடையாளம் காட்டிய இளம்பெண் யார்?

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்த வாரம்: சிறந்த புகைப்படங்கள்

கடந்த வாரம் உலக அளவில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் சிறந்த புகைப்படங்களை உங்களுக்கு வழங்குகின்றோம்.

ரோஹிஞ்சா

வங்கதேச மியான்மர் எல்லையை உறவினர்களோடு கடந்து சென்ற சில மணிநேரங்களில் ஓய்வெடுக்கும் ரோஹிஞ்சா அகதி அல்மோர் யுகான். அவர்களின் கோடாம் பாரா கிராமம் மியான்மர் ராணுவத்தால் தாக்கப்பட்டபோது தன்னுடைய ஒரு மகனையும், இரண்டு உறவினர்களையும் இழந்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் யுகான் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் தன்னுடைய பதவியில் இருந்து விலகிய கெஸியா டுக்டாலெவுக்கு அடுத்ததாக ஸ்காட்லாந்து தொழிலாளர் கட்சியின் தலைமை பதவிக்கு கடுமையான போராட்டத்திற்கு பின்னர், ரிச்சர்ட் லியோனார்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

ஆகஸ்ட் மாதம் தன்னுடைய பதவியில் இருந்து விலகிய கெஸியா டுக்டாலெவுக்கு அடுத்ததாக ஸ்காட்லாந்து தொழிலாளர் கட்சியின் தலைமை பதவிக்கு கடுமையான போராட்டத்திற்கு பின்னர், ரிச்சர்ட் லியோனார்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே துணை அதிபர் எமர்சன் முனங்காக்வா

ஜிம்பாவேயின் புதிய அதிபராக பதவியேற்பதற்கு முந்திய நாள் மாலை, துணை அதிபர் எமர்சன் முனங்காக்வா தலைநகர் ஹாராரேயில் ஆதரவாளர்களின் மத்தியில் உரையாற்றினார்.

ஒளி வேலை

லாட்வியாவில் ஸ்டார்ரோ ரீகா விளக்கு விழாவில் காணப்படுகிற, பின்லாந்து கலைஞரான அலெக்ஸாண்டர் ரீச்செஸ்டின் ஒளி வேலைப்பாடு.

உலக அளவில் தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்கப்படும் கறுப்பு வெள்ளிக்கிழமையன்று, நியூ யார்க்கில் பொருட்களின் விற்பனை தொடங்குவதற்காக மேசி பல்பொருள் அங்காடிக்கு வெளியே கூடியிருக்கும் மக்கள்.

உலக அளவில் தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்கப்படும் ‘கறுப்பு வெள்ளிக்கிழமை‘ அன்று, நியூ யார்க்கில் பொருட்களின் விற்பனை தொடங்குவதற்காக மேசி பல்பொருள் அங்காடிக்கு வெளியே கூடியிருக்கும் மக்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்னால், சௌதி அரேபியாவில் இருந்து கொண்டு தன்னுடைய பதவி விலகலை அறிவித்து, பிறகு இடைநீக்கம் செய்த லெபனான் பிரதமர் சாட் ஹாரி, இந்த அறிவிப்புக்கு பின்னர் முதன்முதலில் பெய்ரூட் திரும்பினார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னால், சௌதி அரேபியாவில் இருந்து கொண்டு தன்னுடைய பதவி விலகலை அறிவித்து, பிறகு இடைநீக்கம் செய்த லெபனான் பிரதமர் சாட் ஹாரி, அவர் வெளியிட்ட அறிவிப்புக்கு பின்னர் முதன்முதலில் பெய்ரூட் திரும்பினார்.

கரீபியன் சூறாவளியால் நிகழ்ந்த அழிவுகள் உள்ளத்தை உருக்குபவையாக உள்ளன என்று வேல்ஸின் இளவரசர் விவரித்துள்ளார். செப்டம்பர் மாதம் வீசிய இர்மா மற்றும் மரியா சூறாவளிகளால் நிகழ்ந்த சேதங்களை பார்வையிடுவதற்கு மேற்கொள்ளும் 3 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக அவர் டோமினிக்காவில் பயணம் மேற்கொண்டார்.

கரீபியன் சூறாவளியால் நிகழ்ந்த அழிவுகள் உள்ளத்தை உருக்குபவையாக உள்ளன என்று வேல்ஸின் இளவரசர் விவரித்துள்ளார். இர்மா மற்றும் மரியா சூறாவளிகளால் நிகழ்ந்த சேதங்களை பார்வையிடுவதற்கு மேற்கொள்ளும் 3 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக அவர் டோமினிக்காவில் பயணம் மேற்கொண்டார்.

வெள்ளை மாளிகையில் ஆண்டுதோறும் நடைபெறும் வான்கோழியை கொல்லாமல் மன்னித்துவிட்டு நன்றி செலுத்தும் பாரம்பரிய நிகழ்வை இந்த ஆண்டு முதல்முறையாக அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறைவேற்றியுள்ளார். 1863-ல் அதிபர் ஆபிரகாம் லிங்கன் தொடங்கி இந்தப் பாரம்பரியம் இருந்து வருகிறது.

வெள்ளை மாளிகையில் ஆண்டுதோறும் நடைபெறும் வான்கோழியை கொல்லாமல் மன்னித்துவிட்டு நன்றி செலுத்தும் பாரம்பரிய நிகழ்வை இந்த ஆண்டு முதல்முறையாக அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறைவேற்றியுள்ளார். 1863-ல் அதிபர் ஆபிரகாம் லிங்கன் தொடங்கி இந்தப் பாரம்பரியம் இருந்து வருகிறது.

வடக்கு வேல்ஸ்விலுள்ள கன்வே கோட்டைக்கு அருகிலுள்ள எல்எம்எஸ் ஜூபிலி வகுப்பு ரயில், பருத்தி பஞ்சு போன்று புகையை வெளியேற்றி செல்கிறது.

வடக்கு வேல்ஸிலுள்ள கன்வே கோட்டைக்கு அருகிலுள்ள எல்எம்எஸ் ஜூபிலி வகுப்பு ரயில், பருத்தி பஞ்சு போன்று புகையை வெளியேற்றி செல்கிறது.

பிரிஸ்போனிலுள்ள காப்பாவில் அஸ்திரேலியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே நடைபெறும் முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் நீச்சல் குளத்தில் மகிழ்ச்சியோடு நீராடும் கிரிக்கெட் ரசிகர்கள். 1954-55யில் இருந்து வெறுமனே 4 முறை மட்டுமே அவர்களின் நாட்டு புல்தரை மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ள இங்கிலாந்து ஆட்டக்காரர்களுக்கு மிகவும் கடினமான கடமை முன்னால் உள்ளது.

பிரிஸ்போனிலுள்ள காபாவில் ஆஸ்திரேலியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே நடைபெறும் முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் நீச்சல் குளத்தில் மகிழ்ச்சியோடு நீராடும் கிரிக்கெட் ரசிகர்கள்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

பற… பற… புதுவைப் பறவைகள்!

 

19CHVANPondyUusuteri04JPG
 

நெடுங்கால் உள்ளான்களின் நீர் தவம்

19CHVANPondyUusuteri03JPG

ஏரியில் இரை தேடும் சங்குவளை நாரைகள்.

19CHVANPondyUusuteri04JPG
 

நெடுங்கால் உள்ளான்களின் நீர் தவம்

புதுச்சேரிக்குச் சுற்றுலா வருபவர்கள் தவறாமல் சென்றுவரும் பகுதிகளில் ஊசுடு ஏரியும் ஒன்று. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கடல்போல் காட்சியளிக்கும் குளிர்ந்த நீர்ப்பரப்பு, அதன் மேற்புறத்தை தங்கள் அழகால் நிறைக்கும் பறவைகள், மன பாரத்தை மறந்து உள்ளம் மகிழ்ந்து களிக்க அழகிய படகுப் பயணம் என இந்த ஏரி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தத் தவறுவதில்லை. இங்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. புதுச்சேரியின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விவசாயிகளின் உயிர்நாடியாகவும் இந்த ஏரி விளங்குகிறது.

19CHVANPondyUusuteri01JPG

வெற்றி! வெற்றி!

புதுச்சேரி மாநிலத்தின் மிகப்பெரிய, பழமை வாய்ந்த ஏரி ஊசுடு. சோழ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த ஏரிக்கு மதகுகளும் கால்வாய்களும் கட்டினான் என்று திருவக்கரைக் கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியிலிருந்து மேற்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த ஏரி. மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 15.54 சதுர கி.மீ. ஏரிக் கரையின் மொத்த நீளம் 7.2 கி.மீ. மொத்தக் கொள்ளளவு 54 கோடி கனஅடி. சங்கராபரணி ஆறு,வீடூர் அணையிலிருந்து ஊசுட்டேரிக்கு நீர் வருகிறது.மேலும் சுத்துக்கேணி கால்வாய் மூலம் செஞ்சியாற்றிலிருந்தும் ஏரிக்குப் பெருமளவில் நீர் வருகிறது. இதனால் பாசன வசதிபெறும் நிலங்கள் தோராயமாக 1,500 ஹெக்டேர்.

பறவை சரணாலயம்

மிகப்பெரிய ஏரியான ஊசுடு, 800 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டது. இதில், 410 ஹெக்டேர் தமிழகப் பகுதியிலும் 390 ஹெக்டேர் புதுச்சேரிப் பகுதியிலும் அமைந்துள்ளது. புதுச்சேரியில் தொடங்கி கிழக்குப் பகுதியில் தமிழக எல்லைப் பகுதியான விழுப்புரம் மாவட்ட வானூர், காசிப்பாளையம். மணவெளி, பெரம்பை ஆகிய பகுதிகள்வரை ஏரி பரவியுள்ளது. 2008-ல் புதுச்சேரி அரசும் 2014-ல் தமிழக அரசும் ஊசுடு ஏரியைப் பறவை சரணாலயமாக அறிவித்தன.

19CHVANPondyUusuteri02JPG

இது இளம் சங்குவளை நாரை!

உணவு மற்றும் இனப்பெருக்கத்துக்காக நூற்றுக்கணக்கான பறவை வகைகள் நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர், ஜனவரியில் அதிகளவில் வருகின்றன. ஏராளமான பட்டாம்பூச்சிகளும் இங்கு வலம் வருவதைப் பார்க்க முடியும்.

கோவையில் உள்ள சாலிம் அலி ஆய்வு நிறுவனம் ஊசுடு ஏரியை ஆய்வுசெய்து 168 பறவை இனங்கள் இங்கு வருவதாகவும், 29 பறவை இனங்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவை என்றும் தெரிவித்துள்ளது. நாமக்கோழி என்கிற நீர்ப்பறவை இனம் இங்குதான் அதிகளவில் இனப்பெருக்கம் செய்கிறது. இப்பகுதியில் பறவைகள் கள்ளவேட்டைக்கு உள்ளாவதும் உண்டு. அதைத் தடுக்கப் பல காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பேசும் படம்

 

 
26CHLRDNOVOTG

செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீராங்கனை யானா நவோட்னா, புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். விம்பிள்டன் உள்ளிட்ட கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பல பதகங்கள் பெற்று சாதனைப்படைத்தவர் நவோட்னா.

கடந்த வாரம் உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன.துயரம், மகிழ்ச்சி,பெருமிதம்,போராட்டம் என உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது.

 

26CHLRDZIMB

ஜிம்பாப்வே நாட்டின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில் 40 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த அதிபர் முகாபேவை பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராடி வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களில்ஒரு பகுதி.

 

 

 

26chlrdBOXING

உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டைப் போட்டி அசாம் மாநிலத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் 51 கிலோ பிரிவுவில் உக்ரேன் வீராங்கனையை வீழ்த்தி பட்டத்தை வென்றார் இந்திய வீராங்கனை ஜோதி குலியா.

 

 

 

26chlrdMANUSHI-01

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லார் இந்த ஆண்டுக்கான உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1997ல் பிறந்த இவர் தற்போது மருத்துவ மாணவி. 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியப் பெண் ஒருவர் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

 

 

 

26chlrdjyothi

உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டைப் போட்டி அசாம் மாநிலத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் 51 கிலோ பிரிவுவில் உக்ரேன் வீராங்கனையை வீழ்த்தி பட்டத்தை வென்றார் இந்திய வீராங்கனை ஜோதி குலியா.

 

26chlrdmugabe

ஜிம்பாப்வே நாட்டின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில் 40 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த அதிபர் முகாபேவை பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராடி வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களில்ஒரு பகுதி.

 
19CHLRDIRAQ

ஈரான் - ஈராக் எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் போது கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மகளை மடியில் வைத்தபடி அழுகிறார் ஒரு தாய்.

 

19CHLRDNORTH%20CHENNAI

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தபோது மழைநீருடன் கழிவுநீர் கலந்தது. வடசென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் குடியிருப்புகளில் புகுந்த கழிவுநீர்.

19CHLRDTRUMP

உலகின் பல்வேறு பகுதிகளில் தன்பால் ஈர்ப்பாளர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி பேரணி நடத்திவருகிறார்கள். தலைநகர் டெல்லியில் நடந்த பேரணியில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.

19chlrddelhi

தலைநகர் டெல்லியை அச்சுறுத்திய காற்று மாசுவைச் சரிசெய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளி மாணவர்கள் முகமூடி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

நவம்பர் – 27

 

1807 : நெப்­போ­லி­யனின் படை­க­ளி­ட­மி­ருந்து தப்­பு­வ­தற்­காக போர்த்­துக்கல் அரச குடும்­பத்­தினர் தலை­நகர் லிஸ்­ப­னி­லி­ருந்து தப்பிச் சென்­றனர்.

1895 : பாரிஸில் அல்­பிரட் நோபல், நோபல் பரி­சுக்­கான திட்­டத்தை தெரி­வித்து தனது சொத்­துக்­களை நோபல் பரி­சுக்­கான மூல­த­ன­மாக அறி­வித்தார்.

varalru.jpg1935 : இரத்­ம­லானை விமான நிலை­யத்­துக்கு முத­லா­வது விமானம் மத­ரா­ஸி­லி­ருந்து (தற்­போ­தைய சென்னை) வந்­தி­றங்­கி­யது.

1944 : இரண்டாம் உலகப் போர்: ஸ்டஃபோர்ட்­ஷ­யரில் ஆங்­கி­லேய விமா­னப்­படைத் தளத்தின் ஆயுதக் கிடங்கில் ஏற்­பட்ட பெரும் விபத்தில் 70 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1971 : சோவி­யத்தின் மார்ஸ் 2 விண்­கலம் தனது துணை விண்கோள் ஒன்றை செவ்வாய்க் கோளில் இறக்­கி­யது. செவ்­வாயில் இறங்­கிய முத­லா­வது கலம் இது­வாகும்.

1983 : போயிங் – 747 விமா­ன­மொன்று ஸ்பெயின் தலை­நகர் மாட்ரிட் அருகே வீழ்ந்து நொருங்­கி­யதில் 183 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1989 : கொலம்­பி­யாவில் பறந்­து­கொண்­டி­ருந்த அவி­யன்கா எயார்லைன்ஸ் விமா­னத்தில் குண்­டு­வெ­டித்­ததால் விமா­னத்­தி­லி­ருந்த 107 பேரும் பலி­யா­கினர். கொலம்­பி­யா­வி­லுள்ள போதைப்­பொருள் கடத்தல் அமைப்­பொன்று இத்­தாக்­கு­த­லுக்கு உரிமை கோரி­யது.

1999 : நியூ­ஸி­லாந்தின் முத­லா­வது பெண் பிர­த­ம­ராக தொழிற்­கட்­சியைச் சேர்ந்த ஹெலன் கிளார்க் தெரிவு செய்­யப்­பட்டார்.

2001 : ஹபிள் விண்­வெளித் தொலை­நோக்கி மூலம் ஓசிரிஸ் கோளில் ஆவி­யா­கக்­கூ­டிய நிலையில் ஐத­ரசன் மண்­டலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. சூரிய குடும்­பத்­திற்கு வெளியே உள்ள கோள் ஒன்றில் வளி மண்­டலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது இதுவே முதல் தடவை.

2005 : பிரான்ஸில் முத­லா­வது பகு­தி­ய­ளவு முக­மாற்றுச் சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டது.

2006 : கன­டாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட கியூபெக் மாகா­ணத்தைச் சேர்ந்­த­வர்கள் கன­டா­வுக்­குட்­பட்ட தனி­யான “தேச இனம்” என்ற அங்­கீ­கா­ரத்தை கன­டிய நாடா­ளு­மன்றம் வழங்­கி­யது.

2009 : ரஷ்­யாவில் ரயி­லொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 28 பேர் பலியானதுடன், 96 பேர் காயமடைந்தனர்.

2013 : இலங்கை யுத்தத்தில் கொல்லப்பட்டோர், காணாமல் போனோர், சேதமடைந்த சொத்துகள் தொடர்பான கணக்கெடுப்பு ஆரம்பமாகியது.

http://metronews.lk

  • தொடங்கியவர்

வேல்முருகன், ‘வேல் மைதீன்’ ஆனது எப்படி? - மதுரை இளைஞரின் சாதனைக் கதை #MotivationStory

 

சிலர் எறும்பு கடித்தாலே துடிதுடித்துப் போய்விடுவார்கள்; கை, கால்களில் லேசாகக் கீறல் விழுந்தால்கூட பதற்றமாகிவிடுவார்கள். நம்மில் சாதாரண உடல் உபாதைகளுக்கே துவண்டுபோய் மூலையில் முடங்கிவிடும் மனிதர்கள் அநேகம் பேர். எப்பேர்ப்பட்ட இடர் வந்தாலும் தாங்கிக்கொண்டு, வாழ்க்கையை அதன் போக்கில் வாழும், தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் போய்க்கொண்டே இருப்பவர்கள்தான் சாதனையாளர்களாகத் தனித்துத் தெரிகிறார்கள். மதுரை மாவட்டம், பரவையைச் சேர்ந்த இளைஞர் வேல் மைதீன் ஒரு சாதனையாளர். அவரை அப்படிக் குறிப்பிடுவதுதான் பொருத்தமாக இருக்கும். சரி... யார் இந்த வேல் மைதீன், இவர் கதை என்ன?

வேல் மைதீன்

 

வேல் மைதீன்... பட்டதாரி. ஒரு விபத்தில் வலது கை மணிக்கட்டுக்குக் கீழே இருக்கும் பகுதியைப் பறிகொடுத்தவர். ஆனால், மனம் மட்டும் துவளவில்லை. விபத்தால் மாற்றுத்திறனாளியாகவே உருமாறிவிட்டாலும், வாழ்க்கையின் மீதான பிடிப்புக் கொஞ்சம்கூடக் குறையவில்லை. மண்பாண்டங்கள் தயாரிப்பு, அவரின் பரம்பரைத் தொழில். ஒறைக்கையால் மண்பாண்டப் பொருள்களை தயாரித்து விற்பனைக்கு அனுப்புகிறார். இப்போது கார்த்திகை தீபம் நெருங்குவதால், அகல்விளக்குத் தயாரிப்பில் தீவிரமாக இருக்கிறார். மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்த அவரை ஒரு காலை நேரத்தில் சந்தித்தோம். 

“மண்பாண்டப் பொருள்கள் தயாரிப்பது எங்க பாரம்பர்யத் தொழில். 13 வயசுலயே மண்பாண்டப் பொருள்கள் செய்யக் கத்துக்கிட்டேன். மதுரை, வெள்ளச்சாமி நாடார் காலேஜுல படிச்சேன். டிகிரி முடிச்ச பிறகு, மதுரைல இருக்குற ஒரு தனியார் கம்பெனியில சில வருஷம் வேலை பார்த்தேன். அங்கே வேலை பார்க்கும்போதுதான் 2011-ம் வருஷம் ஒரு விபத்து நடந்தது. அதுல என் வலது கையோட மணிக்கட்டுக்குக் கீழே துண்டாகிப் போச்சு. முதல்ல வாழ்க்கையே இருண்டு போனது மாதிரி உணர்ந்தேன். வலது கை இல்லாம என்ன செய்யப் போறோம்னு மலைப்பா இருந்தது. ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ, என்னைப் பார்க்க வந்த மேனேஜர், “நீ பாட்டுக்கு கையை மெஷினுக்குள்ள குடுத்துட்டே. உன்னால என் புரமோஷன் போச்சு’’னு சொன்னார். எனக்கு மனசு உடைஞ்சு போச்சு. ஆறுதல் சொல்லக்கூட மனம் இல்லாதவங்க இருக்குற கம்பெனியில வேலை பார்க்கப் பிடிக்கலை. வெளியில வந்துட்டேன். அப்புறம் நஷ்டஈடு கேட்டு, அந்த கம்பெனிக்கு வருஷக் கணக்குல அலையா அலைஞ்சேன். ஒண்ணும் கிடைக்கலை.

வீட்டுலேயே முடங்கிக்கிடந்தேன். அப்போதான் என் நண்பன் ரசூல் மைதீன் உதவிக்கு வந்தான். வாழ்க்கைன்னா என்னனு புரியவெச்சான். டூவீலர், கார் டிரைவிங் எல்லாம் எனக்கு அத்துப்படி. ஒத்தக்கையாலயே வண்டி ஓட்டிக் காட்டுவேன். கை போனா, வாழ்க்கையே போயிடுச்சுனு அர்த்தம் இல்லைனு எனக்குப் புரியவெச்சான். அவன் கொடுத்த நம்பிக்கைக்கு நன்றிக் கடனாத்தான் `வேல் முருகன்’கிற என் பெயரையே `வேல் மைதீன்’னு மாத்திக்கிட்டேன்.

வேல் மைதீன் சாதனைக் கதை

இப்போ நான் செய்யற மண்பாண்டப் பொருள்கள் தொழிலை அந்தப் பெயராலதான் செய்யறேன். ஆனா, அது இன்னைக்கு வரைக்கும் அவனுக்குத் தெரியாது’’ சொல்லிவிட்டு மகிழ்ச்சியோடு சிரிக்கும் அவரது புன்னகையில் நட்பின் பலம் புரிகிறது.

“குருவிக் கலயம், எல்லாவிதமான மண் விளக்குகள், சமையல் பானை, மத்தாப்பு கலயம், ஈமச்சடங்கு கலயம்னு 20 வகையான பொருள்களைத் தயாரிக்கிறேன். ஒவ்வொரு சீசனுக்கும் ஏத்த மாதிரி பொருள்களைத் தயாரிச்சு, கிட்டத்தட்ட 13 மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்புறேன். இப்போ கார்த்திகை தீபம் நெருங்குறதால அகல் விளக்குகள் தயாரிக்கிறேன். கார்த்திகை சீசன் முடிஞ்சதும், பொங்கல் பானை தயாரிக்க ஆரம்பிச்சுடுவேன்.

மின் செலவு, விற்பனைக்கான செலவு, பொருள்களைக் காயவெச்சு பராமரிக்கறது போக, ஒரு நாளைக்கு 200 ரூபாய் லாபம் கிடைக்கிறதே அதிகம். அதனாலேயே மீதி நேரங்கள்ல கம்ப்யூட்டர்ல வேலை செய்யறேன். அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு முயற்சி செய்யறேன். ஒரு படம் டைரக்ட் பண்ணணும்னு ஆசையிருக்கு. என் படத்துக்கு நானே திரைக்கதையும் எழுதிவெச்சிருக்கேன். எனக்குப் பெரிய ஆசை இருக்கு... சொன்னா சிரிக்கக் கூடாது’’ என்றவர் தொடர்ந்தார்... “டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளராகணும்கிறது என்னோட ஆசை. அது என்னவோ அந்த மேடையில மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கிறதே இல்லை.’

வேல் மைதீன் சாதனைக் கதை

“இந்தச் சமூகம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசைகளே இருக்கக் கூடாதுனுதான் நினைக்குது. ஒருநாள் ஒரு துணிக்கடைக்குப் போயிருந்தேன். ஒரு சட்டையை எடுத்தேன். கடையில இருந்தவர், “இந்தச் சட்டை பிசிக்கலி ஃபிட்ஆக இருக்கறவங்களுக்குத்தான் நல்லாயிருக்கும். உங்களுக்கு எதுக்கு?’’னு கேட்டார். நான் செய்யற மண்பாண்டத் தொழிலுக்கு உதவுமேனு ஒரு கைவண்டி வாங்குறதுக்காக லோன் கேட்டு பேங்குக்குப் போனேன். “உனக்கு எல்லாம் எதுக்கு வண்டி?’’னு லோன் இல்லைன்னுட்டாங்க. எங்களைப்போல மாற்றுத்திறனாளிகளுக்கு அராசங்கம் கைகொடுத்தா போதும். தமிழ்நாடு நலவாரியம் கொடுக்குற உதவிப் பணம்கூட கடந்த அஞ்சு மாசமா கிடைக்கலை. அதுக்காக வேலையை விட்டுட்டு அலைஞ்சுக்கிட்டிருந்தா அடுத்த நாள் என் குடும்பம் பட்டினியாத்தான் கிடக்கணும். இந்தச் சக்கரத்துல மண் சுழலுற மாதிரிதான், பிரச்னைகளுக்கு நடுவுல நானும் சிக்கிச் சுழலுறேன். அது கிடக்கட்டும். கார்த்திகைக்கு இன்னும் பத்து நாள்தான்... நிறையா வேலை இருக்கு’’ என்று சிரித்துக்கொண்டே விடைகொடுக்கிறார் வேல் மைதீன். 

 

அவர் கைவண்ணத்தில் விளக்குகள் உருவாகிக்கொண்டிருந்தன. நமக்கென்னவோ அந்த விளக்குகள் வீசப்போகும் ஒளியைவிட, அவரின் தன்னம்பிக்கை பாய்ச்சும் ஒளி அதிகம் என்று தோன்றியது.

 

https://www.vikatan.com

 

  • தொடங்கியவர்

இது சுரேஷ் ரெய்னா பாஸ்... உரசாதீங்க...! ஒரு ரசிகனின் புலம்பல் #HBDRaina

 
 
 

ஊருக்குள்ளே கிரிக்கெட் பார்க்கிறவங்க தோனி ரசிகராகவோ, கோலி ரசிகராகவோ மட்டும்தான் இருப்பாங்கனு தப்புக்கணக்கு போட்டுடாதீங்க பாஸ். இங்கே ரமேஷ் பவாருக்கும் ரசிகர்கள் இருக்காங்க, குல்தீப் யாதவுக்கும் ரசிகர்கள் இருக்காங்க. அதுமாதிரி... நான் ஒரு சுரேஷ் ரெய்னா ரசிகன். இப்படித்தான் `நான் சுரேஷ் ரெய்னா ரசிகன்'னு சொன்னால் `நீ யார் ரசிகன்'னு கேட்டு `சுரேஷ் ரெய்னா'னு சொன்னா... எல்லோரும் மூணு செகண்டாவது எக்ஸ்ட்ரா பார்ப்பாங்க. அதான் தலைவனோட மாஸ், தெறி, மெர்சல். அதனாலேயே அடிக்கடி வெளியே சொல்லிக்கிறதில்லை. ஆனா, இப்போ அதற்கான கட்டாயம் ஏற்பட்டிருக்கு. என் தலைவனுக்காக குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்திருக்கு. இது ரெய்னா சார், உரசாதீங்க...

ரெய்னா

 

இப்போ அணியில் இடம் கொடுக்காமல் என் தலைவனை டபாயக்குறீங்களே, உண்மையில் எந்த இடத்தில் இறக்கிவிட்டாலும் அடிச்சு வெளுக்குற அசகாய சூரன் எங்க சின்னத்தல. அதுதான் பெரிய ஆப்பாகவும் அமைஞ்சிடுச்சு. கோலி எல்லாம் வர்றதுக்கு முன்னாடி ஒன்-டவுனில் இறங்கி பிரிச்சு மேய்வார். முதல்ல ரெய்னாவே பெரிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்தான், அப்புறம்தான் இந்த மிடில் ஆர்டர், ஃபினிஷர் எல்லாம். அதான் எந்த இடத்துல இறக்கிவிட்டாலும் நல்லா விளையாடுறார்னு ஐந்தாவது, ஆறாவது விக்கெட்டுக்கு இறக்கிவிட்டீங்க. அப்பவும் சீரும் சிறப்பும் செம்மையான சம்பவங்களாத்தான் செஞ்சார். என்ன, பெரிய ஸ்கோர்கள் அடிக்க முடியலை. கவனிக்கப்படாம போயிட்டார். இதே ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸுக்காக ஒன் டவுன்தான் இறங்குவார். 25 பந்துக்கு 87 ஞாபகம் இருக்குல்ல? சேவாக்கே கண்ணாடியை கழட்டிட்டு ஆச்சர்யமா பார்த்தார். 

கோலிக்கு முன்னாடியே எங்க ஆளு கேப்டனா ஜொலிச்சு, பல டீம்களின் சோலியை முடிச்சிருக்கார். பங்களாதேஷ் கிட்டே வெறும் 105 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, ஒட்டுமொத்த இந்தியாவையுமே பதைபதைக்க வெச்சு, பதிலுக்கு 58 ரன்னுக்கு டீமையே முடிச்சு பழிக்குபழி வாங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். எல்லோத்தையும் மறந்துட்டீங்கள்ல..! ரெய்னா அளவுக்கு பார்டனர்ஷிப் கொடுக்க இப்போ யார் டீம்ல இருக்கா, சொல்லுங்க பார்ப்போம். 

ரெய்னா பேட்டிங் ஆடுறதை பார்க்குறதே செம த்ர்லிங்கான அனுபவம். ஏன்னா, என் தலைவனுக்கு பயம்னாலும் என்னனு தெரியாது, `ஃபார்ம்'னாலும் என்னனு தெரியாது. கடைசி மேட்ச்லதான் அரைசதம் அடிச்சிருப்பார், அடுத்த மேட்ச்லேயே டக் அவுட் ஆகிடுவார். இப்படி, ரெய்னா ஒவ்வொருமுறை களத்துல இறங்கும்போதும், ரசிகர்களுக்கு கம்பி மேல நடக்குற மாதிரி கிலியாத்தான் இருக்கும். அந்த அனுபவமெல்லாம் கிடைக்கவிடாம பண்ணிட்டீங்களேய்யா. பத்து ரன்னுக்குள்ள ஒரு கேட்ச் சான்ஸ் கொடுப்பார். அதை விட்டாய்ங்க, எதிர் டீம் செத்தாய்ங்க. ஜெர்ஸியோடு ஸ்லீவை ஏத்திவிட்டு, முட்டி போட்டு பேட்டை சுத்துனா, ஒண்ணு அவுட் ஆஃப் ஸ்டேடியம் இல்லனா அவுட் பை கேட்ச். அப்படி அசுரத்தனமா ஆடியே டி-20, ஒருநாள், டெஸ்ட்னு மூணு ஃபார்மாட்களிலும் சதம் அடிச்சவரு எங்க தல.

ரெய்னா 

களத்துக்குள்ள செம ஸ்டைலிஷான ஆள். தலைமுடியை மேல்நோக்கி கோதிவிட்டு சிரிக்கும்போது, அழகு சும்மா அள்ளும். விக்கெட் விழுந்ததும் முதல் ஆளாக முயல்குட்டி மாதிரி துள்ளி குதிச்சு ஓடி  வந்து கட்டிபிடி வைத்தியம் கொடுக்கும்போது என்ன அம்சமா இருப்பார் தெரியுமா? `இன் சைடு அவுட்' ஷாட் ஆடும்போது, தலைவனை பார்க்க கண் கோடி வேணும். ஆதார் கார்டுலேயே அழகா இருப்பாப்ல. இவ்வளவு ஏன், இப்பத்தான் `கோலிடி', `பாண்டியாடி' எல்லாம், அப்பலாம் `ஹே ரெய்னாடி'தான். ட்விட்டர் தெறிக்கும், ஃபேஸ்புக் நொறுக்கும். `மேட்ச்ல ஆடுறதே இல்ல, ஆனால், நாளுக்கு பத்து போட்டோ இன்ஸ்டாகிராம்ல போடுறார். எதுக்கு...'னு நீங்க கடுப்பாகலாம். வாய்ப்பு மட்டும் கொடுத்து பாருங்க, உங்க வாய்க்கு எல்லாம் பேட்டாலேயே பூட்டு போட்டுடுவார். 

 

இத்தனை ஸ்பெஷல் அயிட்டங்கள் இருந்தும் எங்க தலைவனை ஏன் அணியில் சேர்க்கலை? ஆர்.சி.பி கோட்டாதானே! ரெய்னாவை மட்டும் பழிவாங்குறது எந்த விதத்துல நியாயம் ஆஃபிஸர்ஸ்? அரைக்குழி பந்து (ஷார்ட் பால்) போட்டால் அடிக்கமுடியாமல் திணறுவார்தான், கீப்பர் கிட்ட சமத்தா கேட்ச் கொடுத்துட்டு சைலண்டா கிளம்பிடுவார்தான். அட, யானைக்கும் அடி சறுக்கும்லப்பா. இறுதியாக ஃபீல்டிங்கில் ஃப்ளாஷின் வேகத்தோடும் பேட்டிங்கில் சூப்பர்மேனின் பலத்தோடும் பவுலிங்கில் பேட்மேனின் சாதுர்யத்தோடும் செயல்படும் சுரேஷ் ரெய்னாவை அணியில் சேர்க்காமல் இருப்பது, இந்திய கிரிக்கெட் அணிக்கு பேரிழப்பு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஸாரி பாஸ், நான் கொஞ்சம் எமோஷன் ஆகிட்டேன்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text

கிரிக்கெட் இரசிகர்களுக்கு மூன்று வருடங்களின் முன்னர் இந்த நாள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது

 

பிலிப் ஹியூஸ்க்கு அஞ்சலி செலுத்திய வார்னர்!!

  • தொடங்கியவர்

படா பானி... போலீஸ் பஜார்... வார்ட்ஸ் ஏரி... ஷில்லாங்கில் என்ன விசேஷம்?

 
 

ஷில்லாங்

வடகிழக்கு மாநிலங்கள் என்றால் பள்ளிக்காலங்களில் இருந்தே கொஞ்சம் அலர்ஜிதான். அந்த முகங்கள் மட்டுமல்ல; மாநிலங்களின் பெயர்களும் தலைநகரங்களுமே மனதில் பதியாது. பின்னர், லாட்டிரி சீட்டு புண்ணியத்தில் பெயர்கள் வசப்பட்டன. ஆனால், அதிலும் பூட்டான் என்ற ஒரு நாடு சேர்ந்து அடி வாங்கித் தந்தது தனிக்கதை. அந்த வடகிழக்கு மாநிலத்தில் ஒன்றான மேகாலயாவுக்கு செல்கிறேன் என்பதே கொஞ்சம் கிக் ஆக இருந்தது. உண்மையில், இந்தப் பயணம் நினைத்தை விட கூடுதல் மகிழ்ச்சி என்றே சொல்வேன்.

 

மேகாலயா என்பது அஸ்ஸாமிலிருந்து 1970களில் தனியே பிரிந்த ஒரு மாநிலம். முழுக்க முழுக்க மலை நகரங்கள். மொழியிலிருந்து கலாசாரம் வரை அனைத்து விதத்திலும் அஸ்ஸாமிடமிருந்து வேறுபட்டிருக்கிறது மேகாலயா. இவர்கள் தனியே பிரிந்துச் சென்றது சரிதான் என் நினைக்கிறேன். கிருஸ்துவ மதம் அதிகம் பரவியிருக்கும் இந்த மாநிலத்தில் பல மொழிகள் பேசப்படுகின்றன. அதில் முக்கியமானது காசி(Khasi). இதற்கு வரிவடிவம் கிடையாது. ஆங்கில எழுத்துக்களையே எழுத பயன்படுத்துகிறார்கள். மொழியிலிருந்து மதம் வரை ஆங்கிலேயர்களின் பாதிப்புகள் அதிகம் தெரிகின்றன. இந்த மாநிலத்தின் ஆட்சிமொழியே ஆங்கிலம்தான். அதனால் மொழிப்பிரச்னை இல்லை. இந்தியும் பேசுகிறார்கள். மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கை “Scotland of the east” எனச் சொல்லியிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள். இன்னமும் இந்த நிக் நேம் பரவலாக பல இடங்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது. 

மேகாலயா

எப்படிச் செல்வது:

ஷில்லாங்கில் விமான நிலையம் இருக்கிறது. ஆனால் பயணிகள் விமானம் அஸ்ஸாமிலிருக்கும் கெளஹாத்திக்குத்தான் அதிகம் செல்கின்றன. அங்கிருந்து கார் மூலம் சென்றால் மூன்று மணி நேரத்தில் ஷில்லாங். கிட்டத்தட்ட 100 கிமீ. பாதிக்கும் மேற்பட்ட தூரம் நான்கு வழிப்பாதைதான். ஆனாலும், மலைவழிப்பாதை என்பதால் தலைச் சுற்றி போகிறது. கைவசம் ஒரு எலுமிச்சைப் பழத்தை வைத்துக்கொள்வது நல்லது. “Why bro”என்பவர்கள் 7அப்பையோ ஸ்ப்ரைட்டையோ வாங்கிக்கொள்ளுங்கள்.

விமானம் தரையிறங்கிய சமயம் இரண்டுங்கெட்டான் நேரம்; அப்போது சாப்பிட முடியவில்லை. ஷில்லாங் செல்லும்வரை பொறுமையில்லை என்பவர்கள் Nongpoh என்னும் ஊரை நினைவில் கொள்ளுங்கள். அங்கே Jiva என்றொரு சைவ விடுதி இருக்கிறது. தொல்லைதராத, அதிக பணம் கோராத நல்ல உணவு விடுதி. 

படா பானி

தமிழக டாப் அருவிகள் ஆல்பம்

செல்லும் வழியில் ‘படா பானி’ என்றொரு ஏரி வரும். அங்கே வண்டியை நிறுத்தி படங்கள் எடுத்துக்கொள்ளலாம். பின், குளிருக்காக கொண்டு சென்றிருக்கும் Pull over வகையிலான எதாவது ஒன்றை அணிந்துக் கொள்ளுங்கள். அந்த இடத்திலிருந்து ஷில்லாங் குளிர் தொடங்கிவிடும். காரில் சென்றால், விண்டோவைத் திறந்துவிடுங்கள். ஷில்லாங்கில் இதுதான் விண்டோ ஏ.சி.

நீங்கள் சென்னைவாசி என்றால் ஷில்லாங் போகும் முன் ஒரு ஹோம் ஒர்க் செய்துகொள்ளுங்கள். ஃப்ரிட்ஜைத் திறந்து உள்ளே முகத்தை வைத்துப் பாருங்கள். அதுதான் ஷில்லாங் பகல். அடுத்து, ஃப்ரீஸரைத் திறந்து முகத்தை உள்ளே வைக்கவும். அதுதான் ஷில்லாங் இரவு. இந்த குளிருக்கு ஏற்ற உடைகளை மறக்காமல் கொண்டு செல்லவும். (இது திசம்பர் மாதம் வரையிலான பருவநிலை. அதன்பின், வெயில் அதிகமானால் கம்பெனி பொறுப்பாகாது)

எங்கே தங்குவது:

ஹோட்டல் பைன்வுட்


நான் தங்கியிருந்த இடம் Pinewood hotel. 120 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட இந்த ஹோட்டல் வெள்ளைக்காரர்கள் கட்டி, மகிழ்ந்த இடம். சல்மான்கான் முதல் அமிதாப் வரை ஷில்லாங் வந்தால் இங்கேதான் தங்குவார்களும். “அப்ப விலை” என ஷாக் ஆக வேண்டாம். மேகாலயா அரசு நடத்தும் ஹோட்டல் என்பதால் 3000 ரூபாய் முதல் அறைகள் உண்டு. திட்டமிட்டு பயணிப்பவர்களுக்கு சரியான இடம். திடீர் டூரிஸ்ட்களுக்காக நிறைய பட்ஜெட் விடுதிகளும் உண்டு.

அந்த ஹோட்டலுக்கு அருகிலே இருக்கிறது வார்ட்ஸ் ஏரி. அதிகாலையில் (இங்க 5.30க்கே சூரியன் வந்துவிடும்) இந்த ஏரியைச் சுற்றி ஒரு நடை நடந்தால்... வாவ். குடும்பத்துடன் செல்பவர்களுக்கு ஏற்ற போட்டிங்கும் உண்டு. அதிக அட்வென்ச்சர் இந்த ஏரியில் சாத்தியமில்லை. ஆனால், நிம்மதியான, அமைதியான போட்டிங் அழகு.

ஷாப்பிங்:

ஷில்லாங்

ஷில்லாங்கில் போலிஸ் பஜார் என்றொரு இடம் உண்டு. நகரின் ‘நடுப்பகுதி’ என நினைக்கிறேன். அங்கே, ஏகப்பட்ட கடைகளும், உணவு விடுதிகளும் உண்டு. ஷில்லாங் மக்களின் விருப்ப உணவு போர்க் தான். முட்டை, சிக்கன், போர்க் என விதவிதமான உணவுகள் குறைந்தவிலையில் கிடைக்கின்றன. நூடுல்ஸ் ஒரு தட்டும், முட்டை ஒன்றும் சேர்த்து 40 ரூபாய்தான்.

ஷில்லாங்கில் வாங்க வேண்டிய பொருள்கள் என்றால் கம்பளி ஆடைகளும், கைவினைப்பொருள்களும் தான். இந்தக் கடையில் அவை நிறையவே கிடைக்கின்றன. மற்றபடி, ஷில்லாங் மார்க்கெட்டையும் ஃபிட்ஜெட் ஸ்பின்னரும், பவர் ரேஞ்சர் பொம்மையும்தான் ஆக்ரமித்திருக்கின்றன. 

மற்ற இடங்களில் காலாவதியாகிவிட்ட மாருதி 800தான் இன்னமும் அங்கே அங்கே காலா பட ஹீரோ. டாக்சியில் இருந்து தனிநபர் பயன்பாட்டுக்கு வரை மாருதி கார்களே அதிகம். அரசாங்கமே ஷேர் ஆட்டோ முதல் பேருந்து வரை அனைத்துவிதமான பயண வாகனங்களையும் நடத்துவது சிறப்பு. வீட்டுக்கு இரண்டு கார்கள் வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் டிராஃபிக் தான். ஷில்லாங் நகரம் குளிரில் மட்டுமல்ல; டிராஃபிக்கிலும் பெங்களூருக்கு அக்கா. 

ஷில்லாங்கை அக்கா எனச் சொல்ல ஒரு காரணமிருக்கிறது. மேகாலயாவைப் பொறுத்தவரை வீட்டின் கடைக்குட்டி பெண் தான் பவர்ஃபுல். பெற்றோர்களை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் அவருக்கே. அதனால், வீட்டின் மொத்த சொத்தும் அந்தப் பெண்ணுக்குத்தான். பெண் வாரிசு இல்லையென்றால் மட்டுமே, ஆண்களுக்கு சொத்தாம். 

 

எந்நேரமும் “நசநச”வென இருக்கும் சிரபுஞ்சியிலிருந்து தெளிந்த நீராக தரைவரை தெளிவாக தெரியும் ஏரி வரை மேகாலயாவில் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம். அவை அடுத்தக் கட்டுரையில்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person

குங்ஃபூ மன்னன் புரூஸ் லீ பிறந்தநாள் பகிர்வு!

 
 

குங்ஃபூ மன்னன், சண்டைக் கலையின் வித்தகன், இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன் புரூஸ் லீ-யின் 77-ம் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

புரூஸ் லீ

 

குங் பூ என்றதுமே இன்றைக்கும் பலரது நினைவுக்கு வருவது புரூஸ் லீதான். நவம்பர் 27, 1940-ல் கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தார் லீ. இவர் பிறந்த மருத்துவமனையில் வேலைபார்த்த நர்ஸின் பெயரையே அவருக்கு முதல் பெயராக வைத்தனர். இதோடு அவர் தந்தையின் பெயரான லீயும் சேர்ந்தது. லீயின் தந்தை ஒரு திரைப்பட நடிகர் என்பதால், புரூஸ் லீ-க்கு சிறுவயதிலேயே குங்ஃபூ கலையை கற்றுக்கொள்ள வழிவகை செய்தார். ஆனால், லீ மற்றவர்களுடன் வேண்டாத சண்டையில் ஈடுபடுவதைக் கண்ட அவரது தந்தை லீயை நியூயார்க் நகரத்துக்கு அனுப்பிவைத்தார்.

நியூயார்க் நகரில் தனது அன்றாட வாழ்க்கைக்காக குங்ஃபூ கலையையே தனது தொழில் ஆக்கினார் லீ. குங் பூ கலையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்த லீ, டி.வி ஷோக்களிலும், ஹாலிவுட் படங்களிலும் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளில் அனைவரையும் அசரவைத்தார். அவரது நுட்பமான வேகம் நிறைந்த சண்டைக் காட்சிகளை எத்தனை பிரேம்கள் வைத்துப் படம் பிடிக்க முயற்சி செய்தாலும் முடியாது திணறியது ஹாலிவுட். ஹாலிவுட் உலகின் சண்டை மன்னனாக நீங்கா இடம்பிடித்தார் லீ. அயராத உழைப்பும் திறமையும் இருந்தால் போதும், எந்த மலையையும் எட்டிப்பிடிக்கலாம் என்பதை உலகுக்கு தன் வாழ்க்கையையே பாடமாக்கிக் காட்டியவர் புருஸ் லீ.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

அமெரிக்க நடிகை மெகன் மார்க்கெலை திருமணம் செய்கிறார் இங்கிலாந்து இளவசர் ஹேரி

இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் பேரனும் இளவசருமான ஹேரிக்கும் அவரது தோழியும் அமெரிக்க நடிகையுமான மெகன் மார்க்கெல்லுக்கும் இடையிலான திருமண அறிவிப்பை பிரிட்டிஷ் அரச குடும்பம் அறிவித்துள்ளது. அமெரிக்க தொலைக்காட்சி தொடரான சூட்ஸ்-இல் தமது கதாபாத்திரத்தால் ரகிகர்களைக் கவர்ந்தவர் மெகன் மார்க்கெல். இந்த காதல் ஜோடியின் திருமணம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளது.

  • தொடங்கியவர்

தென்னாபிரிக்க அழகி 2017 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாகத் தெரிவு

 

 

தென்னாபிரிக்க அழகி 2017 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாகத் தெரிவு
 

தென்னாபிரிக்காவைச் சோ்ந்த 22 வயதான டெமி லெய்க் நெல் பீட்டர்ஸ் 2017 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவா்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது.

இதில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 92 போட்டியாளா்கள் பங்கேற்றனா். முதலிடத்தை தென்னாபிரிக்காவைச் சோ்ந்த டெமி லெய்க்கும், இரண்டாவது இடத்தை கொலம்பியா நாட்டு அழகியும், மூன்றாவது இடத்தை ஜமைக்கா நாட்டுப் பெண்ணும் தட்டிச்சென்றனர்.

பிளானட் ஹாலிவுட் ரிசார்ட் அண்ட் கேசினோ என்ற இடத்தில் இந்த 66 ஆவது மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அழகிகளுக்கு அறிவுத்திறன், நீச்சல் உடை, மாலை நேர உடை என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

பின் இறுதி சுற்றுக்கு 10 அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த 22 வயதான நெல் பீட்டர்ஸ் பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்றார்.

இவருக்கு 2016 இல் பட்டம் வென்ற பிரான்சைச் சேர்ந்த பிரபஞ்ச அழகி ஐரீஸ் மகுடம் சூட்டினார்.

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற டெமி லெய்க் நெல் பீட்டருக்கு நியூயார்க் நகரில் அபார்ட்மென்ட் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

627819-miss-universe-2017-afp

1511769154823

Demi-Leigh Nel-Peters, Miss South Africa 2017 is crowned Miss Universe at the conclusion of the three-hour special programming event on FOX at 7:00 PM ET live/PT tape-delayed on Sunday, November 26th from the AXIS at Planet Hollywood Resort & Casino in Las Vegas, NV. / AFP PHOTO / Miss Universe Organization / David Becker / RESTRICTED TO EDITORIAL USE /  MANDATORY CREDIT:  "AFP PHOTO / THE MISS UNIVERSE ORGANIZATION / DAVID BECKER"/  NO MARKETING / NO ADVERTISING CAMPAIGNS /  DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS

http://newsfirst.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத பெளன்ஸரும் பிலிப் ஹியூஸ் மரணமும்...! #RIPHughesy

 

2014-ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி. இடம்: சிட்னி மைதானம். தெற்கு ஆஸ்திரேலியாவுக்கும், நியூ சவுத் வேல்ஸுக்கும் இடையேயான போட்டி. முதல் இன்னிங்ஸை தெற்கு ஆஸ்திரேலியா சிறப்பாக தொடங்கியிருந்தது. 49-வது ஓவரின் மூன்றாவது பந்து. வேகப்பந்துவீச்சாளர் சீன் அபாட் கைகளிலிருந்து பந்து வெளியேறியது மட்டும்தான் அனைவருக்கும் தெரியும். அடுத்த நொடி நடந்தது 21-ம் நூற்றாண்டில், கிரிக்கெட் உலகில் நடந்த மிகப்பெரிய சோகம். ஆம், அந்த பந்து பெளன்ஸராக எகிறியது. தடுக்க முயன்ற தொடக்க வீரர் பிலிப் ஹியூஸின் தலையை பதம்பார்த்தது. அப்படியே நிலைகுலைந்து சரிந்தார் ஹியூஸ். 63 ரன்களுடன் நாட் அவுட்டாகமல் இருந்த ஹியூஸ் அதன்பின் கண் முழிக்கவே இல்லை. மருத்துவமனையில் நவம்பர் 27-ம் தேதி மரணமடைந்தார். ஆஸ்திரேலியா மட்டுமல்ல கிரிக்கெட் உலகமே கண்ணீர் வடித்தது. ஜென்டில்மேன் கேம் டேஞ்சரஸ் கேம் ஆனது.

பிலிப் ஹியூஸ்

 

பிலிப் ஹியூஸ் நம்பிக்கையான கிரிக்கெட் வீரர். 1988 நவம்பர் 30-ம்  தேதி ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் பிறந்தவர். சிறுவயதில் ரக்பி வீரராக கலக்கியவர், பின்னாளில் சிறந்த கிரிக்கெட் வீராரக தன்னை வளர்த்துக் கொண்டார். 17-வது வயதில் சிட்னி கிரேட் கிரிக்கெட்டில் 141 ரன்கள் விளாசி திறமையை நிரூபித்தார். அப்போதுதான் ஆஸ்திரேலிய தேசிய அணியின் தேர்வுக்குழுவின் பார்வை அவர் மீது பட்டது. 

ஹியூக்ஸ்

2009-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில், முதல் போட்டியில் சந்தித்த நான்காவது பந்தில் டக் அவுட்டானார். அடுத்த இன்னிங்ஸில் 75 ரன் குவித்து தன் தேர்வை நியாயப்படுத்தினார். அடுத்த டெஸ்ட்டில் 2 இன்னிங்ஸிலும் சதம். ஆனாலும், ஷார்ட் பிட்ச் பந்துகளை சந்திக்க தடுமாறுவதாக ஆஷஸ் தொடரிலிருந்து நீக்கப்பட்டார். உள்ளே வெளியேவாக இருந்த ஹியூஸ் 2013-ம் ஆண்டு இலங்கை தொடரில் இரண்டு சதமடித்து மிரட்டினார். 2014-ல் பாகிஸ்தானுக்கு எதிரான டி-20 போட்டியில் விளையாடிய ஹியூஸ்  6 ரன்கள் மட்டுமே எடுத்தார். அந்த போட்டியில் சீன் அபோட்டும் இவரோடு ஆடினார்.

2014 டிசம்பரில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தது. எப்படியாவது இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துவிட வேண்டுமென உள்ளூர் தொடரில், தெற்கு ஆஸ்திரேலியாவுக்காக  அசத்திக் கொண்டிருந்தார். ஆனால், சீன் அபாட்டின் அந்த பெளன்ஸர், இந்த நூாற்றாண்டின் மறக்க முடியாத விபத்தாக மாறிவிட்டது. 

ஹியூக்ஸ்

ஹியூஸ் மயங்கி விழுந்தார்; சீன் அபோட் மன அழுத்தத்துக்கு ஆளானார்; ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கதறி அழுதார்;  சிட்னியில் சதமடித்து மயங்கி விழுந்த இடத்தில் மண்டியிட்டு முத்தமிட்டார் டேவிட் வார்னர். சிட்னி ஸ்கோர்கார்டு, 63 ரிட்டயர்டு ஹர்ட் என காட்டாமல், 63 நாட் அவுட் என்று ஹியூஸின் நினைவுகளை நாட் அவுட்டாக வைத்திருந்தது. மைக்கேல் க்ளார்க் தன் சுயசரிதையில், பால்ய நண்பனைப் பற்றி நெகிழ்ந்துள்ளார். 

ஹியூஸின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்றது. அதில் அன்றைய நாளில் மொத்தம் 23 பெளன்ஸர்கள் வீசப்பட்டன. அதில் 20 பெளன்ஸர்களை ஹியூஸ் சந்தித்துள்ளார். எந்த உள்நோக்கத்தோடும் அவை வீசப்படவில்லை. போட்டியின் தேவைக்காக வீசப்பட்டது என்றது விசாரணை அறிக்கை. ஹெல்மெட் பழைய மாடல். அதில் பாதுகாப்பு வசதி  குறைவு என காரணங்கள் நீண்டன. எல்லாவற்றையும் தாண்டி ஹியூஸ் இப்போது இல்லை. கனமான நினைவுகளுடன் ஆஸி மூன்று ஆண்டுகளைக் கடந்துவிட்டது. 

2014 ஹியூஸ் மறைவுக்கு பின் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில், மிச்செல் ஜான்சன் வீசிய பெளன்ஸர் விராட் கோலியின் ஹெல்மெட்டை தாக்கியது. அடுத்த நொடி 11 ஆஸி வீரர்களும் ஓடி வந்து கோலியை நலம் விசாரித்தனர். ஏனெனில், பிலிப் ஹியூஸை அவர்கள் மறக்கவில்லை. தற்போது நடைபெற்றுவரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியினர், ஹியூஸ் நினைவாக ஜெர்ஸியில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடினர். 

இன்றும் ஒவ்வொரு வீரரும் ஹெல்மெட் அணியும் போது, பெளன்ஸரை எதிர்கொள்ளும்போது அந்த வீரர்களின் நினைவில் ஹியூஸ் வாழ்வார். ஹியூஸ் என்றும் 63 நாட் அவுட்தான்.

https://www.vikatan.com

 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

நவம்பர் – 28

 

1520 : தென் அமெ­ரிக்கா ஊடாகப் பய­ணித்த போர்த்­து­கேய நாடுகாண் பயணி மகலன், பசுபிக் சமுத்­தி­ரத்தை அடைந்தார்;. இவரே அத்­லாந்திக் சமுத்­தி­ரத்தில் இருந்து பசிபிக் சமுத்­தி­ரத்தை அடைந்த முத­லா­வது ஐரோப்­பியர் ஆவார்.

1729 : அமெ­ரிக்­காவின் மிசி­சிப்­பியில் குழந்­தைகள், பெண்கள் உட்­பட 239 பிரெஞ்சு இன மக்­களை நட்சே இந்­தி­யர்கள் கொன்­றனர்.

1821 : ஸ்பெயி­னிடம் இருந்து பனாமா பிரிந்து, பாரிய கொலம்­பி­யா­வுடன் இணைந்­தது.

varalaru-1-500x335.jpg1843 : ஹவாய் இராச்­சி­யத்தை ஐக்­கிய இராச்­சியம், பிரான்ஸ் ஆகி­யன சுதந்­தி­ர­ம­டைந்த தனி நாடாக அங்­கீ­க­ரித்­தன. பின்னர் இது அமெ­ரிக்­காவின் ஒரு மாநி­ல­மா­கி­யது.

1893 : நியூ­ஸி­லாந்தில் முதற்­த­ட­வை­யாக பெண்கள் வாக்­க­ளித்­தனர்.

1905 : ஐரிஷ் தேசி­ய­வாதி ஆர்தர் கிறிபித், அயர்­லாந்தின் விடு­த­லைக்­காக சின் ஃபெயின் என்ற அர­சியல் கட்­சியை உரு­வாக்­கினார்.

1942 : அமெ­ரிக்­காவின் மசாசெட்ஸ் மாநி­லத்தில் பொஸ்டன் நகரில் இர­வு­வி­டுதி ஒன்றில் இடம்­பெற்ற தீயினால் 491 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1943 : இரண்டாம் உலகப் போரில் ஜேர்­ம­னி­யையும், ஜப்­பா­னையும் ஒடுக்­கு­வது பற்றி, அமெ­ரிக்க ஜனா­தி­பதி பிராங்­கிளின் ரூஸ்வெல்ட், பிரித்­தா­னியப் பிர­தமர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஆகிய மூவரும் தெஹ்­ரானில் சந்­தித்துப் பேசி­னார்கள்.

1944 : இரண்டாம் உலகப் போர்: அல்­பே­னியா அல்­பே­னியப் பார்ட்­டி­சான்­க­ளினால் விடு­விக்­கப்­பட்­டது.

1958 : சாட், கொங்கோ குடி­ய­ரசு, காபோன் ஆகி­யன பிரெஞ்சு ஆட்­சியின் கீழ் சுயாட்சி பெற்­றன.

1960 : பிரான்­ஸி­ட­மி­ருந்து மௌரிட்­டா­னியா சுதந்­திரம் பெற்­றது.

1964 : செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்­க­லத்தை நாசா ஏவி­யது.

jaffna-university.jpg1975 : போர்த்­துக்­கல்­லிடம் இருந்து சுதந்­திரம் பெறு­வ­தாக கிழக்குத் திமோர் பிர­க­டனம் செய்­தது.

1979 : நியூ­ஸி­லாந்து விமா­ன­மொன்று அந்­தார்ட்­டிக்­காவின் எரெபஸ் மலையில் மோதி­யதில் அதில் பயணம் செய்த அனைத்து 257 பேரும் கொல்­லப்­பட்­டனர்.

1980: ஈரான்- ஈராக் யுத்­தத்தில் ஈராக்­கிய கடற்­ப­டையின் பெரும் பகுதி ஈரா­னிய கடற்­ப­டை­யி­னரால் அழிக்­கப்­பட்­டது.

1987 : தென் ஆபி­ரிக்­காவின் விமா­ன­மொன்று இந்து சமுத்­தி­ரத்தில் வீழ்ந்­ததில் அதில் பயணஞ் செய்த அனைத்து 159 பேரும் கொல்­லப்­பட்­டனர்.

1989 : பனிப்போர்: செக்­கஸ்லோ வாக்­கி­யாவின் தனி­யா­திக்க உரி­மையை விட்­டுத்­த­ரு­வ­தாக அந்­நாட்டின் கம்­யூனிஸ்ட் கட்சி அறி­வித்­தது.

1990 : ஐக்­கிய இராச்­சிய தலைமை அமைச்சர் மார்­கரெட் தட்சர் தனது பத­வியை விட்டு வில­கினார்.

1990 : சிங்­கப்பூர் பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து லீ குவான் யூ வில­கினார். கோ சொக் டொங் புதிய பிர­த­ம­ரானார்.

1991 : ஜோர்­ஜி­யா­விடம் பிரி­வ­தாக தெற்கு ஒசே­ஷியா பிர­க­டனம் செய்­தது.

1994 : ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் இணை­வ­தற்கு எதி­ராக நோர்வே மக்கள் வாக்­க­ளித்­தனர்.

2006 : நாசாவின் நியூ ஹரைசன்ஸ் தானி­யங்கி விண்­கலம் புளூட்­டோவின் முத­லா­வது படத்தை
அனுப்­பி­யது.

2012 : யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் ஆர்ப்­பாட்­டத்தை கலைப்­ப­தற்­காக பொலிஸார் நடத்­திய தாக்­கு­தலில் மாண­வர்கள் பலர் காய­ம­டைந்­தனர்.

2014 : நைஜீ­ரி­யாவின் கெனோ நகரில் பள்­ளி­வா­ச­லொன்றில் நடத்­தப்­பட்ட குண்டுத் தாக்­கு­த­லொன்றில் 120 பேர் பலியானதுடன் 260 பேர் காயமடைந்தனர்.

 

2016 : பொலிவியாவில் கால்பந்தாட்டப் போட்டியொன்றுக்காக பிரேஸில் கால்பந்தாட்ட அணியொன்றினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானம் கொலம்பியாவில் விபத்துக்குள்ளானதால் விமானத்திலிருந்த 77 பேரில் 71 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

யவனனின் பலவீனமே சதுர்யனின் பலம்! #MotivationStory

 
 

Motivation story

ர் ஊரில் சதுர்யன் என்ற சிறந்த பலசாலி ஒருவர் வாழ்ந்து வந்தார். 60 வயதைத் கடந்து விட்டாலும், அந்த சுற்றுவட்டாரத்தில், அவருடன் சண்டையிட்டு வெல்ல யாராலும் முடியவில்லை. வெளியூரில் இருந்தெல்லாம் ஏகப்பட்ட பலசாலிகள்  சதுர்யனை வெல்வதற்காக வந்து, தோற்று ஓடியிருக்கிறார்கள். சதுர்யனின் புகழ் நாடெங்கும் பரவியது. ஏராளமான மாணவர்கள் அவரிடம் சீடர்களாக சேர்ந்தனர். 

 

அந்த ஊருக்கு யவனன் என்ற இளைஞன் புதிதாகக் குடிவந்தான். அவனும் நல்ல உடற்கட்டுடன் பலசாலியாக இருந்தான். சதுர்யன் அளவுக்கு இல்லையென்றாலும் கூட,  ஓரளவுக்குப் பெயர் பெற்றவனாகவே இருந்தான். எப்படியாவது சதுர்யனை சண்டையில் வீழ்த்தி,  'மிகச்சிறந்த பலசாலி' என்று பெயரெடுக்க வேண்டும் என்று விரும்பினான் யவனன். 

ஒருநாள் யவனன், தன் விருப்பத்தை சதுர்யனின் சீடன் ஒருவனிடம் சொல்லி அனுப்பினான்.

சதுர்யனும் சண்டையிட ஒப்புக்கொண்டார். அந்தநாள் வந்தது. களத்தில் சதுர்யனும், யவனனும் சண்டையிடுவதற்கு ஆயத்தமானார்கள். 

சதூர்யனை வெல்வது எளிதல்ல என்பது யவனனுக்குத் தெரியும். மனதளவில் அவரைச் சிறுமைப்படுத்தி, உளவியல் ஊனத்தை உண்டாக்கி வென்றுவிடவேண்டும் என்று திட்டத்தோடு இருந்தான் யவனன்.

யவனன்

முதலில், கொடிய வார்த்தைகளால் சதுர்யனைச் சீண்டினான். சதுர்யனோ "யாருக்கோ சொல்" என்பதுபோல் நின்றுகொண்டிருந்தார்.

அடுத்தாக, கீழே கிடந்த சகதியை அள்ளி சதுர்யனின் மீது வீசினான். எந்தவித சலனமும் இல்லாமல் நிதானமாக இருந்தார் சதுர்யன்.

'நாம் இவ்வளவு அசிங்கப்படுத்துகிறோம், ஆனாலும் எதுவும் நடக்காதது போல் இருக்கிறாரே? இப்படி இருந்தால் நாம் எப்படி வெல்வது'  என்று ஆத்திரப்பட்ட யவனன் சதுர்யனின் மீது காரி உமிழ்ந்தான். 

அதையும் துடைத்துவிட்டு பொறுமையாக இருந்தார் சதுர்யன். எரிச்சலுற்ற யவனன் அவரைத் தாக்க ஆரம்பித்தான். 

அதற்காகவே காத்திருந்தவராக யவனனின் அத்தத் தாக்குதல்களை எளிதாகச் சமாளித்துப் போட்டியில் வென்றார் சதுர்யன். 

சதுர்யனின் சீடர்கள் கொண்டாடினர். ஆனாலும் அவர்களுக்கு தன் குருவின் செயல்பாடுகளில் குழப்பமும், கேள்வியும் இருந்தது. 

"எவ்வளவு பெரிய பலசாலி நீங்கள். ஆனால், அந்த இளைஞன்  உங்களை எவ்வளவு அசிங்கப்படுத்தியும், ஏன்  அமைதியாக இருந்தீர்கள்?" 

இளைஞன்

மிகவும் பொறுமையாகப் பேச ஆரம்பித்தார்  சதுர்யன்,

"உங்களுக்கு ஒருவர் நூறு பொற்காசுகள் பரிசாகத் தருகிறார். ஆனால், அதை நீங்கள் அவரிடம் வாங்கிக் கொள்ளவில்லை. இப்போது அந்த பொற்காசுகள் உங்களிடம் இருக்குமா? இல்லை அவரிடம் இருக்குமா?"

"வாங்கிக் கொள்ளவில்லை என்றால் நம்மிடம் எப்படி இருக்கும். அவரிடம்தான் இருக்கும் குருவே ".

"பிறர் உங்களைக் கடும் சொற்களால் திட்டினாலும், வேறு வகைகளில் அவமானப்படுத்தினாலும், அதை நீங்கள் ஏற்றுக்கொண்டால்தான் உங்களுக்கு வந்து சேரும். இல்லையென்றால் அது உங்களைச் சேராது" என்றார் அமைதியாக.

"சரி குருவே! போட்டியில் உங்கள் உத்தி வித்தியாசமாக இருந்தது. அந்த இளைஞன் சுதாரிக்கவியலாத அளவுக்கு நுட்பமாக செயல்பட்டீர்கள். அதுபற்றியும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம்"

"சண்டையிடும்போது முதலில் எதிராளியின் பலவீனத்தை அறிந்து கொள்ளவேண்டும். 'எதிராளியை தாழ்த்திப்பேசி அதன் மூலம் வெற்றி பெற்றுவிடலாம், அதுதான் தன் பலம்' என்று நம்பிக் கொண்டிருந்தான் அந்த இளைஞன். ஆனால், உண்மையில் அதுதான் அவனது பலவீனம். அதை நான் எளிதாக உணர்ந்துகொண்டேன். இறுதியாக அவன் தன்னளவில் நம்பிக்கை குறைந்து சோர்ந்து போயிருந்தான். அதனால்தான் என்னால் எளிதாக வெல்ல முடிந்தது" என்றார்.

குரு

 

"குருவே நீங்கள் உடலளவில் மட்டும் அல்ல, மனதிலும், அறிவிலும்கூட பலம் வாய்ந்தவர். அதனால்தான் யாராலும் இன்னும் உங்களை வெல்ல முடியவில்லை"! என்று கூறி அவரது பாதம் தொழுதார்கள் சீடர்கள்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலக அழகி மனுஷி சில்லருக்கு யாருடன் நடிக்க ஆசை தெரியுமா?

 

உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்டுள்ள இந்தியாவின் மனுஷி சில்லர், தனக்கு எந்த நடிகரின் திரைப்படத்தில் நடிக்க விருப்பம் என்பதைக் கூறியுள்ளார். 

மனுஷி சில்லர்

 

சீனாவின் சான்யா சிட்டியில், நவம்பர் 18-ம் தேதி உலக அழகிப் போட்டி நடைபெற்றது.  அதில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லர் (20) உலக அழகியாகப் பட்டம் சூட்டப்பட்டார். மருத்துவக் கல்லூரி மாணவியான இவர், இறுதிப்போட்டியில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்ஸிகோ நாடுகளின் அழகிகளைத் தோற்கடித்து பட்டம் வென்றார்.  இவர், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பிரபலமாகிவருகிறார். 

 

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மனுஷி சில்லர், தனக்கு எந்த நடிகரின் படத்தில் நடிக்கப் பிடிக்கும் என்பதுகுறித்து மனம்திறந்து பேசியுள்ளார். `எனக்கு, இந்தித் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அமீர் கானின் திரைப்படத்தில் நடிக்க விரும்புகிறேன். அவர் திரைப்படங்களில் தோன்றும் கதாபாத்திரங்கள் மிகவும் நன்றாகவும் சவாலானதாகவும் இருக்கின்றன. அவரது திரைப்படங்கள், மக்களிடம் நேர்மறையான முறையில் கனெக்ட் ஆகிறது என்று நினைக்கிறேன்' என்று கூறியுள்ளார். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

சீறும் எரிமலை- அச்சத்தில் அழகிய பாலி தீவு (புகைப்படத் தொகுப்பு)

இந்தோனீசியாவின் பாலி தீவில் ஏற்பட்ட எரிமலை சீற்றம் தீவிரமடைந்ததையடுத்து அப்பகுதி சுற்றிலும் உள்ள மக்களுக்கு உயர்மட்ட எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.

எரிமலை

எரிமலையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் சுற்றுலா பயணி

எரிமலை

பேரழிவுக்கான சாத்தியமும், உடனடி ஆபத்தும் இருப்பதினால் நான்காம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

 

எரிமலை

எரிமலை சீற்றத்தில் இருந்து பாதுகாக்க பிராத்தனையில் ஈடுபடும் பாலி இந்துக்கள்

சீறும் எரிமலை

எரிமலையில் மேற்பரப்பின் அருகே உள்ள பாறைகள் உருகுவதாகவும், அடர் தீக்குழம்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்

எரிமலை

எரிமலையை படம் எடுக்கும் சிறுவன்

எரிமலை

இந்தோனீசிய தீவில் தீவிர நிலையில் 130 எரிமலைகள் உள்ளன

எரிமலை

தற்காலிக வீடுகளை அமைக்கும் மக்கள்

சீறும் எரிமலை

1963ஆம் ஆண்டு, கடைசியாக அகுங் மலை சீற்றமடைந்த போது, ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்

எரிமலை

மலை உச்சியின் மேலிருந்து 3,400 மீட்டர் (11,150 அடி) வரை கரும்புகை சூழ்ந்துள்ளது.

எரிமலை

எரிமலை வெடிப்பின் சத்தம், மலை உச்சியிலிருந்து 12 கிலோ மீட்டர் வரை கேட்கப்பட்டது

எரிமலை

10 கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது

எரிமலை

எரிமலையின் சீற்றம் அதிகரித்துள்ளதால், பெரிய வெடிப்பு ஏற்படும் என்ற அச்சமுள்ளது

எரிமலை

எரிமலை சீற்றத்தில் இருந்து பாதுகாக்க பிராத்தனையில் ஈடுபடும் பாலி இந்துக்கள்

சீறும் எரிமலை

சீற்றத்திற்கு முன்பு அகுங் எரிமலை

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

 

தங்கம் விற்பனைக்கு வரி துபை அரசின் திட்டத்தால் தங்க வியாபாரிகள் கவலை

உலகின் தங்க நகரம் என்றழைக்கப்படும் துபையில், வாங்கப்படும் தங்கத்துக்கு வரி கிடையாது. ஆனால், அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் தங்கத்துக்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ள துபை அரசின் நடவடிக்கை, தங்க வியாபாரத்தை பாதிக்குமா ?

  • தொடங்கியவர்

இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் பதவியை விட்டு விலகிய நாள் (நவ.28, 1990)

மார்க்ரெட் தாட்சர் இங்கிலாந்தின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் ஆவார். இவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் மூலமாக மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருடைய சோசலிச வெறுப்பு மற்றும் தொழிற்சங்கங்கள் மீதான அவரின் அடக்குமுறைகள்

இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் பதவியை விட்டு விலகிய நாள் (நவ.28, 1990)
 
மார்க்ரெட் தாட்சர் இங்கிலாந்தின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் ஆவார். இவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் மூலமாக மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருடைய சோசலிச வெறுப்பு மற்றும் தொழிற்சங்கங்கள் மீதான அவரின் அடக்குமுறைகள் காரணமாக இங்கிலாந்தின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்டவர். இவரால் செயலாக்கப்பட்ட கொள்கைகள் தாட்சிரிசம் என அழைக்கப்பட்டது.

1987-ம் ஆண்டும் மூன்றாவது முறையாக பிரதமரான இவர் அந்த காலக்கட்டத்தில் விதித்த கம்யூனிட்டி சார்ஜ் என்ற வரி மக்களிடையே இவர்மீது வெறுப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து 1990-ம் ஆண்டு இதே நாள் தமது பதவியிலிருந்து விலகினார். 

இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:

* 1975 - கிழக்குத் திமோர் போர்ச்சுக்கல்லிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
* 1979 - நியூசிலாந்து விமானம் எரெபஸ் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த 257 பேரும் இறந்தனர்.
* 1987 - தென்னாபிரிக்காவின் விமானம் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 159 பேரும் இறந்தனர்.
• 1990 - லீ குவான் யூ சிங்கப்பூர் தலைமை அமைச்சர் பதவியை விட்டு விலகினார். கோ சொக் டொங் புதிய தலைமை அமைச்சரானார்.
• 1991 - தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
• 1994 - ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய நோர்வே மக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
• 2006 - நாசாவின் நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.

செவ்வாய்க் கோளை நோக்கி நாசா விண்வெளி மையம் ‘மரைனர்-4’ விண்கலத்தை செலுத்திய நாள் (நவ.28, 1964)

 

செவ்வாய், வெள்ளி, மெர்க்குரி ஆகிய கோள்களை ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தினால் ஆளில்லா தானியங்கி விண்கலத்தை விண்ணுக்கும் அனுப்பும் திட்டமான மரைனர் திட்டத்தின் கீழ் மரைனர் 4- என்ற விண்கலம் செவ்வாயை நோக்கி அனுப்பப்பட்டது.

செவ்வாய்க் கோளை நோக்கி நாசா விண்வெளி மையம் ‘மரைனர்-4’ விண்கலத்தை செலுத்திய நாள் (நவ.28, 1964)
 
செவ்வாய், வெள்ளி, மெர்க்குரி ஆகிய கோள்களை ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தினால் ஆளில்லா தானியங்கி விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான மரைனர் திட்டத்தின் கீழ் மரைனர்-4 என்ற விண்கலம் செவ்வாயை நோக்கி அனுப்பப்பட்டது.

இந்த மரைனர் திட்டத்தின் கீழ் 10 விண்கலங்கள் அனுப்பப்பட்டன. அதில் ஏழு மட்டுமே வெற்றிகரமாக அமைந்தன. மற்ற மூன்றும் தொலைந்து போயின.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

பூமி என்னும் சொர்க்கம்  உடலைத் துளைக்கும் நியூட்ரினோக்கள்

 

 
22CHSUJEARTH

சூரியனிலிருந்து வரும் எக்ஸ் கதிர்கள், சூரியத் துகள்கள் (Solar Wind) ஆகியவற்றைப் பூமியின் காற்று மண்டலமும் பூமியின் காந்தப் புலமும் தடுத்துவிடுகின்றன. சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் பெரும்பாலும் தடுக்கப்பட்டுவிடுகின்றன. சூரிய ஒளியுடன் சேர்ந்து கிட்டத்தட்ட சரி சமமாக அகச்சிவப்புக் கதிர்களும் பூமியை வந்தடைகின்றன. இவை தவிர, சூரியனிலிருந்து நியூட்ரினோ எனப்படும் துகள்கள் பெரும் எண்ணிக்கையில் வருகின்றன.

நியூட்ரினோ வேறு, நியூட்ரான் வேறு. நியூட்ரான்கள் அணுத்துகள்கள். அவை அணுவுக்குள் அடங்கியிருப்பவை. பொதுவில் நியூட்ரான்கள் தனியே உலவுவது கிடையாது. நியூட்ரினோக்கள் நியூட்ரான்களை விட மிக மிகச் சிறியவை.

நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் முதலியவை அப்படி அவை இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பிறகே அவற்றுக்குப் பெயர் வைக்கப்பட்டன.

ஆனால் நியூட்ரினோக்கள் அப்படியல்ல. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரபல விஞ்ஞானி ரூதர்போர்ட் அணுவுக்குள் புரோட்டான் இருப்பதைக் கண்டுபிடித்துக் கூறியதைத் தொடர்ந்து, விஞ்ஞானிகள் பலரும் அணுவை ஆராய ஆரம்பித்தனர். அப்போது அணு ஆராய்ச்சி தொடர்பான விளைவுகள் சமன்பாடுகள் வடிவில் விளக்கப்பட்டன. குறிப்பிட்ட ஆராய்ச்சி தொடர்பான சமன்பாட்டை எழுதும்போது கணக்கு உதைத்தது. இது ஏன் என்பது புரியவில்லை. விஞ்ஞானிகள் குழம்பி நின்றனர்.

வோல்ப்காங் பாலி என்ற விஞ்ஞானி 1930-ம் ஆண்டில் இதற்குத் தீர்வு கூறுகையில் நுண்ணியத் துகள் ஒன்று இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டால் கணக்குச் சரியாக வரும் என்று கூறினார். அவர் சொன்ன அந்தக் கற்பனையான துணுக்குதான் நியூட்ரினோ. அப்படி ஒரு துகள் இருக்கிறதா என்பது சந்தேகமே என்றும் அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றும் பாலி அப்போது கூறினார்.

அந்தக் கற்பனையான துகள் உண்மையில் இருக்கிறதா என்று கண்டறிய நீண்டகாலம் யாரும் முயலவில்லை. பின்னர் அமெரிக்காவில் இரு விஞ்ஞானிகள் பெரும்பாடுபட்டு பாதாளச் சுரங்கத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு, நியூட்ரினோக்கள் இருக்கின்றன என்று கண்டுபிடித்தனர். ஆனால் அந்த நியூட்ரினோக்கள் அணு உலைகளிலிருந்து வெளிப்படுபவை. தவிர அவை எதிர் நியூட்ரினோக்கள்.

பின்னர் சூரியனிலிருந்து நியூட்ரினோக்கள் வெளிப்படுவதாக அறியப்பட்டது. சூரியனில் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்று சேர்ந்து ஹீலியம் அணுவாக மாறுகின்றன. இது அணுச்சேர்க்கை என்று அழைக்கப்படுகிறது. இந்த அணுச்சேர்க்கையின்போது ஏராளமான நியூட்ரினோக்கள் வெளிப்படுகின்றன. இவை மிக வேகத்தில் பூமிக்கு வந்துசேருகின்றன. இரு அமெரிக்க விஞ்ஞானிகள் இந்தச் சூரிய நியூட்ரினோக்களைக் கண்டுபிடித்தனர். அத்துடன் சூரியனிலிருந்து எவ்வளவு சூரிய நியூட்ரினோக்கள் பூமிக்கு வந்து சேர வேண்டும் என்று கண்டறிய முற்பட்டனர். அவர்கள் அதில் ஈடுபட்டபோது நியாயமாக வந்து சேர வேண்டிய எண்ணிக்கையில் அவை வரவில்லை என்று தெரியவந்தது உலகெங்கிலும் பல இடங்களில் ஆராய்ச்சி நடத்தியபோதிலும் சுமார் 30 ஆண்டுக்காலம் விஞ்ஞானிகள் தீர்வு கிடைக்காமல் திண்டாடினர்.

கடைசியில் சூரிய நியூட்ரினோக்கள் சூரியனிலிருந்து கிளம்பிய பின்னர், நடு வழியில் வேறு வகை நியூட்ரினோக்களாக மாறி விடுகின்றன என்று கண்டுபிடித்தபோது பிரச்சினை தீர்ந்தது. நியூட்ரினோக்களில் மூன்று வகைகள் உள்ளன.

நியூட்ரினோக்கள் மிகவும் நுண்ணியவை என்பதால் அவை எந்தப் பொருளாக இருந்தாலும் ஊடுருவிச் சென்றுவிடுகின்றன. ஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் நம் உடலைத் துளைத்துச் செல்கின்றன.

நியூட்ரினோக்கள் தீங்கு விளைவிக்காதவை. அவை பூமியையும் துளைத்துக் கொண்டு மறுபுறம் சென்றுவிடுகின்றன. பல பூமிகளைப் பக்கம் பக்கமாக அடுக்கி வைத்தாலும் அவை அனைத்தையும் நியூட்ரினோக்கள் துளைத்துச் சென்று விடும். நியூட்ரினோக்கள் எந்தக் கருவியிலும் சிக்காதவை. எதையும் ஊடுருவிச் செல்பவை. அப்படிச் செல்லும்போது சில நேரம் அவை அணுக்கள் மீது மோதிச் செல்லலாம். அப்போது ஏற்படுகிற விளைவுகளை வைத்துதான் நியூட்ரினோக்கள் பற்றி அறிய முடிகிறது.

நியூட்ரினோக்கள் சூரியனிலிருந்து மட்டுமன்றி நட்சத்திரங்களிலிருந்தும் அண்டவெளியிலிருந்தும் வருகின்றன. நியூட்ரினோக்கள் பற்றி மேலும் ஆராய்வதற்கான ஆராய்ச்சிக்கூடங்கள் மிக ஆழமான சுரங்கங்களில் அல்லது குன்றுகளுக்கு அடியில்தான் அமைக்கப்படுகின்றன. சூரியனிலிருந்தும் விண்வெளியிலிருந்தும் வருகிற வேறு வகையான கதிர்களையும் துகள்களையும் பாறைகளும் மண்ணும் தடுத்து நிறுத்திவிடும். எனவே ஆராய்ச்சிக் கருவிகளுக்கு நியூட்ரினோக்கள் மட்டுமே வந்து சேரும் என்பதால்தான் இப்படிப் பாதாள சுரங்கங்களில் ஆராய்ச்சிக்கூடங்கள் அமைக்கப்படுகின்றன.

உலகில் ஆழமான ஏரிக்கு அடியிலும் கடலுக்கு அடியிலும் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடங்கள் உள்ளன. அண்டார்டிகாவில் பனிக்கட்டிக்கு அடியிலும் ஐஸ் க்யூப் எனப்படும் ஆராய்ச்சிக்கூடம் உள்ளது. தமிழகத்தில் தேனிக்கு அருகே ஒரு குன்றுக்கு அடியில் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இயற்கையில் வரும் நியூட்ரினோக்களை ஆராய்வதுடன், செயற்கையாக நியூட்ரினோக்களை உண்டாக்கி அவற்றை ஓரிடத்திலிருந்து பாதாளம் வழியே பிற இடங்களுக்கு அனுப்பியும் ஆராய்ச்சி நடத்துகிறார்கள்.

எதிர்காலத்தில் தகவல் தொடர்புக்கு நியூட்ரினோக்கள் உதவலாம் என்று கருதப்படுகிறது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

2017 பிரபஞ்ச அழகுராணியாக தென் ஆபிரிக்காவின் டெமி லே நெல் பீட்டர்ஸ் தெரிவு; இலங்கையின் கிறிஸ்டினா பீரிஸ் முதல் 16 பேர் குழுவில்

Miss-Universe-Sri-Lanka-2017-Christina-P2017 மிஸ் யூனிவர்ஸ் – Miss Universe  (பிரபஞ்ச அழகுராணி) போட்டியின் இறுதிச் சுற்று அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. 92 அழகுராணிகள் இப்போட்டிகளில் பங்குபற்றினர்.

இலங்கையின் சார்பில் கிறிஸ்டினா பீரிஸ் பங்குபற்றி முதல் 16 பேரில் ஒருவராகத் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

Miss-Universe-Sri-Lanka-2017-Christina-P

 

தென் ஆபிரிக்காவின் டெமி லே நெல் பீட்டர்ஸ் முதலிடம் பெற்று மிஸ் யூனிவர்ஸ் 2017 அழகுராணியாக முடிசூட்டப்பட்டார். ஜெமெய்க்காவின் டேவினா பென்னட் இரண்டாமிடத்தையும் கொலம்பியாவின் லோரா கொன்ஸாலெஸ் 3 ஆம் இடத்தையும் பெற்றனர்.

Miss-Universe-Sri-Lanka-2017-Christina-P

 

 

http://metronews.lk

  • தொடங்கியவர்

மறைந்து போன கிராமிய விளையாட்டுகள் பம்பரம்

 

 
s12

நல்ல கருவை மரத்தில் உருண்டையாக உள்ள கிளையை வெட்டி செதுக்கி ஆணிக் கொண்டையை சீவி பம்பரம் செய்வார்கள். கடையில் வாங்குவதில்லை. கடையில் வாங்கும் பம்பரம் லேசாக இருக்கும். ஓங்கிக் குத்த சரிப்படாது. நல்ல கருவை கொப்பில் செய்தது என்றால் சற்று கனமாக இருக்கும். ஓங்கி குத்த சீராக இருக்கும். இதனால் இவர்களே தயாரித்த பம்பரத்தைத்தான் பயன்படுத்துவார்கள்.

அந்தக் குறுகிய மைதானத்தில் வட்டமாக ஒரு குச்சியை எடுத்து கோடு போட்டுக் கொள்வார்கள். எல்லாரும் ஒரே சமயத்தில் பம்பரத்தைச் சுழல விட்டு "கோஸ்' எடுப்பார்கள். கடைசியாக "கோஸ்' எடுப்பவர்கள் தன்னுடைய பம்பரத்தை வட்டத்திற்குள் வைக்க வேண்டும். மற்றவர்கள் தங்களுடைய பம்பரத்தை ஆணியில் தொடங்கி மேல் மட்டம் வரையிலும் இறுக்கமாக நூலால் சுற்றி கோட்டுக்குள் இருக்கும் பம்பரத்தைக் குறி பார்த்து ஓங்கிக் குத்துவார்கள். 

பம்பரம் குத்துப்பட்டு வெளியே வந்ததும் தரையில் பம்பரத்தைச் சுழலவிட்டு "கோஸ்' எடுப்பார்கள். திறமையான விளையாட்டுக்காரர்கள் இரண்டு மூன்று சுற்று "நூல் கவுரை' சுற்றி பம்பரத்தை ஆடவிட்டு "கோஸ்' எடுப்பவர்களும் உண்டு. கோட்டுக்குள் இருக்கும் பம்பரத்தின் மேல் பராக்கிரமசாலிகள் குத்து வாங்கிய தடம் பதிந்திருக்கும். அதைப் பார்த்ததும் சோகமாக ஆகிவிடுவார்கள். தனக்கு ஏற்பட்ட மாபெரும் இழிவாக, அவமானமாகக் கருதுவதை அவரின் முகக் குறிப்பிலிருந்து எளிதில் கண்டுகொள்ளலாம். சிலர் ஓங்கி பம்பரத்தைக் குத்துகிற குத்தில், கோட்டுக்குள் இருக்கும் பம்பரம் இரண்டாகப் பிளந்து விடுவதுமுண்டு.

 

 

http://www.dinamani.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.